Digital Time and Date

Welcome Note

Saturday, October 24, 2015

இனி ஒரே செல்போனில் 2 சிம்களிலும் வாட்ஸ்-அப் பயன்படுத்தலாம்!

ன்று செல்பாேன் பயன்படுத்தும் அனைவரும் அலுவலக எண், தனிப்பட்ட உபயோகம் என  ஒருவரே பல எண்களை பயன்படுத்துவது சாதாரணமான விஷயமாக உள்ளது . இதனால் இன்று இரண்டு சிம்கள் பொருத்தக் கூடிய டூயல் சிம் மொபைல்களைதான் பெரும்பாலானாேர் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் இந்த போன்களில் உள்ள பிரச்னை, இருக்கும் இரண்டு எண்களில் எதாவது ஒரு எண்ணில் இருந்து மட்டும்தான் வாட்ஸ்-அப் செயலியைப் பயன்படுத்த முடியும். மற்றொரு எண்ணைக் கொண்டு, அதே மொபைலில் வாட்ஸ்-அப் பயன்படுத்த முடியாது. இதனால், வாட்ஸ்-அப் பயன்பாட்டுக்காக மட்டும் வேறொரு புது மொபைலை நாடும் நிலை உள்ளது.


ஆனால் தற்போது, ஒரு மொபைலில் இரண்டு நம்பர்களுக்கும் தனித் தனியாக வாட்ஸ் அப் பயன்படுத்தும் விதமாக புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நீங்கள் டூயல் சிம் மொபைல் பயன்படுத்துபவர் என்றால், டிசா (Disa) என்ற இந்த செயலியின் மூலம், உங்கள் மொபைலில் உள்ள இரண்டு எண்களுக்கும், தனித்தனியாக வாட்ஸ்-அப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

டிசா செயலியை பயன்படுத்தும்  வழிமுறைகள் கீழே...

முதலில் டிசா செயலியை தரவிறக்கம் (download) செய்து இன்ஸ்டால் செய்து காெள்ளுங்கள்.
அதில் ‘+’ என்ற தேர்வை அழுத்தி, உங்கள் மற்றொரு எண்ணை (அதாவது வாட்ஸ் அப் பயன்படுத்தாத எண்) '+91' என குறியீட்டோடு தரவும். (உதாரணம்: +91 82208*****)

அடுத்து வெரிஃபை செய்வதற்கான கட்டம் வரும். இதைத் தாண்டினால் ஒரே நேரத்தில் இரண்டு எண்களுக்கு தனித்தனியாக வாட்ஸ் அப் பயன்படுத்த உங்கள் மொபைல் தயாராகிவிடும். நீங்கள் ஏற்கெனவே வைத்துள்ள வாட்ஸ்-அப் இல்லாமல், டிசா செயலிக்குள் இன்னொரு வாட்ஸ்-அப் பக்கம் உருவாகிவிடும்.

ஆனால் தற்போது டிசா செயலியில் உள்ள வாட்ஸ்-அப் மூலம் செய்திகள், புகைப்படங்கள்  மற்றும் வீடியாே ஆகியவற்றை மட்டுமே  அனுப்ப  முடியும். வாட்ஸ்-அப் கால்கள் (Whatsapp call) செய்ய முடியாது. அதே போல ஆண்ட்ராய்டு ஃபோன்களில் மட்டுமே தற்போது  இந்த செயலியை  பயன்படுத்த முடியும்.

டிசா செயலியை பதிவிறக்கம் செய்ய இந்த லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்: https://goo.gl/bW2ELo


--மு.ஜெயராஜ்
vikatan 

Saturday, April 26, 2014

மருத்துவ ரகசியம்!.


 
அரைஞாண் நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு. எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால்,திருஷ்டி படகூடாதுன்னு கட்டிவிடுறோம்னு சொல்லுவாங்க..உண்மையிலேயே இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமா?

நிச்சயமாக இல்லை அந்த அரைஞாண் கயிற்றின் ரகசியத்தை நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஒரு மருத்துவ ரகசியமே அடங்கியுள்ளது அந்த ரகசியம்......

ஆண்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறை என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆண்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந்நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாக மாறியது.

இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது. உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை 'குடல் இறக்க நோய்' ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள். இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன.இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள்.

இப்போது வெள்ளி,தங்கத்தில் அறுணாக் கொடி கட்டுகிறார்கள் தான். அது பகட்டுக்கு. சில விசயங்கள் நாகரீக மாற்றங்களுக்குட்பட்டு மாறிவிட்டாலும் இன்றும் கறுப்புக் கயிற்றில் முத்து மணிகள் சில கோர்த்து அறுணாக் கொடி கட்டத்தான் செய்கிறார்கள்.நம் முன்னோர்கள் பாரம்பரியத்தை நம் பிள்ளைகளுக்கு ஆதாரத்தோடு கற்பிப்போம்...

உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் தெரிந்து கொள்ள பகிருங்கள் நண்பர்களே....!

Friday, April 25, 2014

ஹிந்து - குறித்து இஸ்லாம்!

ஹிந்து - ஹிந்துஸ்தான் - ஹிந்துத்துவா என்ற பெயர்கள் இப்பொழுது இந்தியா முழுவதும் பிரச்சினைக்குரிய பெயர்களாக சில அரசியல்வாதிகளாலும், சில மதவாதப் பேர்வழிகளாலும் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு விட்டன.
ஹிந்து என்ற வார்த்தை ஹிந்து மத வேதங்களான எந்த வேதங்களிலும் கிடையாது. அது பகவத்கீதை, மஹாபாரதம், இராமாயணம், பவிஷ்ய புராணம் அல்லது ரிக், யஜூர், சாமம், அதர்வணம் போன்ற நான்கு வேதங்களிலும் ஹிந்து என்ற மூன்று எழுத்தே இல்லை என்று வாதிடுகிறார்கள். வாதிடுபவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. வரலாற்று ஆய்வாளர்களும், சரித்திர வித்தகர்களும் தான்.

ஹிந்த் என்ற வார்த்தையை தீர்க்கமான ஆதாரமாக இஸ்லாம் தான் நிரூபித்துக் காட்டியுள்ளது. இவற்றிற்கு ஆதாரமாக முஸ்லிம்களின் புனிதமிக்க ஆலயமான 'கஅபா'வின் ஒரு முனைக்கு (ருக்னுல் ஹிந்த்) ஹிந்த் முனை என்று ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் அவர்கள் திருக் கபாவின் அருகில் நின்று ஒரு மாலைப்பொழுது தமது ஜூப்பாவைத் திறந்த வண்ணம் இந்தியாவின் திசை நோக்கி நின்று இப்படி கூறியுள்ளார்கள். நான் ஹிந்த்துவிலிருந்து (தவ்ஹீத்) ஏகத்துவ தென்றலை உணர்கின்றேன். என்றும், மேலும் ஒரு முறை கூறியுள்ளார்கள். நான் ஹிந்த்வில் இருக்கிறேன் என்னில் ஹிந்த் இருக்கிறது என்று கூறியுள்ளார்கள்.

மேலும், நபிகளாரின் தோழர்கள் இந்தியாவிற்கு வந்து தமது வணிகத்தை முடித்துக் கொண்டு, இந்தியாவில் இருந்து கொண்டு வந்த புளியை நபிகளாருக்கு முன்னால் வைத்தார்கள். நபிகளார் அவர்கள் தமது விரலால் புளியைத் தொட்டு தமது நாக்கில் வைத்துக் கொண்டே இது (தமருல் ஹிந்த்) இந்துஸ்தானத்தின் பேரிச்சம் பழமா? என்று கேட்டுள்ளார்கள்.
ஒரு முறை கஃபு இப்னு சுஹைர் என்ற கவிஞர் நாயகத் தோழர் நபிகளாரை வர்ணித்துப்பாடும் போது 'தங்களின் திருவதனம் அல்லாஹ்வினால் உருவாக்கப்ட்ட ஹிந்துஸ்தானத்தின் வாளாகும்' என்
றார்கள். ஆக 'ஹிந்த்' என்ற வார்த்தை நபிகள் நாயகம் அவர்களின் காலத்திலேயே புழங்கப்பட்டதாக வரலாறு உண்டு.

ஹிஜிரி 10ஆம் ஆண்டு காலித் அவர்கள் நஜ்ரான் நாட்டிலிருந்து வந்த போது அவர்களுடன் 'பனூஹாரிஸ்' கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு குழுவும் வந்திருந்தது. அவர்களைக் கண்டதும் இவர்கள் அல்ஹிந்த்விலிருந்து வந்தவர்கள் போன்றுள்ளதே என்றார்கள்.

இஸ்லாமிய தொடக்க காலத்தில் நபிகளாரின் எதிரியாக இருந்த அபூசுஃப்யான் (பின்னாளில் இவர் இஸ்லாத்தை தழுவினார்) அவர்களின் மனைவியாருக்கு 'ஹிந்தா' என்று தான் பெயர் வைக்கப்பட்டிருந்தது. அரேபிய பாலைவனத்திலிருந்து வணிகக் கூட்டங்கள் அடிக்கடி இந்தியா சென்று வந்ததன் நினைவாக அப்பெண்ணுக்கு 'ஹிந்தா' என பெயரிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் தென் கிழக்கே உள்ள இந்தோ-ஏசியா என்ற நாடு பூர்விகத்தில் ஹிந்து நாடாகவே இருந்தது. இஸ்லாத்தின் பக்கம் அநாட்டு மக்கள் ஈர்க்கப்பட்டதன் பின் ஹிந்தோனேசியா என்று மறுவி, தற்பொழுது இந்தோனேசியா என அழைக்கப்படுகிறது. இன்றும் அந்நாட்டில் பூர்விகக் கலை நிகழ்ச்சிகளில் இராமாயணம், மஹாபாரதம் போன்ற நாடகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

உலகில் ஆதி மனிதன் ஆதம் தோன்றிய இடம் இந்தியா தான். கடல்கோள் நிகழ்வுக்கு முன்பு கடலால் பிரிக்கப்படாத நிலப்பகுதியாக இருந்தது தான் தமிழகம் என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை.

தற்போது உள்ள இலங்கையில் ஆதம் மலை என்று அழைக்கப்பட்டு வரும் அம்மலையின் மீது தான் மனித குலத்தின் முதல் மனிதன் ஆதம் அவர்களை சுவனத்தில் இருந்து இறைவன் பூமிக்கு இறக்கியதாகவும், அவர்கள் பாதச்சுவடுகள் அங்குள்ள குன்றின் மீது பதிந்துள்ளதாகவும், யூத, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்கள் நம்புகின்றனர். ஆதம் அவர்கள் தோன்றிய இடமாகக் கருதப்படும் இடத்திலுள்ள பாதச்சுவடுகளை, இந்துக்கள் சிவனொளி பாதம் என்றும், பௌத்தர்கள் ஸ்ரீபுத்த பாதமென்றும் கூறி வழிபடுகின்றனர். அதே போல் ஆதம் மலைக்கு அருகாமையில் கால்கோள் நிகழ்ந்ததால், நிலம் பிரிக்கப்பட்டு தற்போது கடல் தோன்றியுள்ள பகுதியை, ஆதம்பாலம் என்றும், அதனை ஒட்டியுள்ள ராமேஸ்வரம் நிலப்பகுதியில் ஆதம் அவர்களின் வம்சாவழிகளான ஆபில், காபில் ஆகியோர் அடக்கம் செய்யப்பட்ட இடமும் உள்ளது.

அரேபிய வணிகர்கள் இலங்கைக்கு வந்து திரும்பும் பொழுது சேர நாட்டை ஆண்ட மன்னர் சேரமான் பெருமாள் அரபு வணிகர்களுடன் சேர்ந்து அரேபியா சென்று இஸ்லாத்தை ஏற்று, முஸ்லிமான முதல் இந்து மன்னர் என வரலாறு கூறுகிறது. எனவே இந்தியாவிற்கும் இஸ்லாமியர்களுக்கும் நீண்ட தொடர்பு பண்டைய காலத்தில் இருந்தே இருந்து வருகிறது என்பதனை இத்தகைய வரலாறுகள் மூலம் அறிய கொள்ளலாம்.
ஆதார நூல்கள்:

1. சோழச் சுடரொளி, குந்தவை நாச்சியார், ஏ.கே.ராசன்
2.. சமுதாய வீதியில் சன்மார்க்கப்பித்தன், எஸ்.எம்.கனிசிஷ்தி
3.. மறைக்கப்பட்ட வரலாறும், மறைக்கப்படும் உண்மைகளும், அனிஸ்தீன்
4. .சேரமான் பெருமாள், சி.எம்.என்.சலீம்
5.. விடுதலைப்போரில் முஸ்லீம்கள், வி.என்.சாமி
கட்டுரையாளர் : வைகை அனிஷ் அவர்களுக்கு நன்றி!

Sunday, April 20, 2014

பிரிட்டனில் வேகமாக வளரும் இஸ்லாம்



பிரித்தானியாவில் மாத்திரம் வருடாந்தம் 5000 பேர் இஸ்லாத்தை தமது மார்க்கமாக ஏற்றுக் கொள்வதாக அந்நாட்டிலிருந்து வெளியாகும் 'த சன்' பத்திரிகை தெரிவிக்கிறது. அதிலும் குறிப்பாக இவர்களில் அரைவாசிப் பேர் வெள்ளையர்கள் எனவும், அவர்களில் 75 வீதமானோர் பெண்கள் எனவும் அப் பத்திரிகை மேலும் தெரிவிக்கிறது. இவ்வாறு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நான்கு பெண்களுடன் 'த சன்' பத்திரிகை மேற்கொண்ட நேர்காணலின் முக்கிய பகுதிகளை வாசகர்களுக்காக தமிழில் தருகிறோம்.
அலானா புளொக்லீ (21)
 

பிரித்தானியாவின் க்ளஸ்கோ நகரில் வசிக்கும் ஊடகவியல் கற்கை மாணவியான இவர் 2010 ஜூன் மாதம் முஸ்லிம் இளைஞர் ஒருவரைச் சந்தித்ததன் மூலம் இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டõர். தான் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டமை பற்றி அவர் இப்படிக் கூறுகிறார்.
"நான் ஒரு கிறிஸ்தவ பெண் என்ற போதிலும் மதமோ, தேவாலயமோ எனது வாழ்வில் பெரும் பங்கு வகித்ததில்லை.
18 வயதாக இருந்த போது ஹோட்டல் ஒன்றில் நிர்வாகியாகப் பணியாற்றும் மொரோக்கோவைச் சேர்ந்த அப்துல் எனும் முஸ்லிம் இளைஞரைச் சந்தித்தேன்.
 

ஹோட்டல் ஒன்றில் தேநீர் விருந்துக்காக செல்ல வருமாறு அவர் அழைத்தார். அந்த முதல் சந்திப்பு முடிந்ததும் மீண்டும் ஒரு முறை சந்திக்கலாம் என்று அவர் அழைப்பு விடுத்தார். இவ்வாறு சுமார் 3 தடவைகள் சந்தித்த பின்னர் நாங்கள் இருவரும் ஒன்றாக வாழ வேண்டும் என விரும்பினோம்.
இருப்பினும் அப்துலின் வாழ்க்கை முறைபற்றி நான் அறிந்து கொள்ள விரும்பினேன். அதனால் இஸ்லாம் பற்றி அதிகமாகத் தேடிப் படித்தேன். அப்போதுதான் நான் இஸ்லாத்தைத் தழுவ வேண்டும் என விரும்பினேன்.
கடந்த வருடம் முதல் நான் ஹிஜாப் அணியத் தொடங்கியுள்ளேன். இந்த வருட ஆரம்பத்தில்தான் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.
நான் இப்போது இஸ்லாமிய பெருநாள்களை கொண்டாடுகிறேன். அதேபோன்று கிறிஸ்மஸின் போது எனது பெற்றோருடன் இணைந்து ஹலாலான இரவு உணவையும் அருந்துகிறேன்.
நான் இஸ்லாத்தின் வரையறைகளை விரும்புகிறேன். நான் சுவர்க்கம் செல்வேன் என்றும் எதிர்பார்க்கிறேன்.
ஜெய்ன் செம்ப் (28)
 

கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இஸ்லாத்தைத் தழுவி தனது பெயரை "ஆமினா'வாக மாற்றிக்கொண்ட ஜெய்ன் செம்ப் பிரித்தானியாவின் மென்செஸ்டர் நகரில் சமூக ஒத்துழைப்பு பொலிஸ் அதிகாரியாகக் கடமையாற்றுகிறார்.
 

கடமையின்போது கூட ஹிஜாப் அணிந்து வீதியில் வலம்வரும் இவர், வெள்ளிக்கிழமைகளில் பள்ளிவாசலுக்கு தொழுகைக்காகச் செல்ல வேண்டும் என்பதற்காக மேலதிக நேரங்களிலும் பணியாற்றுகிறார். "டுவிட்டர்' இணையத்தளம் மூலமõக முஸ்லிம்களோடு கருத்துப் பரிமாறல்களில் ஈடுபட்ட போதே தனக்கு இஸ்லாம் அறிமுகமானதாகக் குறிப்பிடும் ஜெய்ன் செம்ப் உள்ளூர் பள்ளிவாசல் ஒன்றின் "டுவிட்டர்' கணக்கை நிர்வகிக்கும் முஹம்மது மன்சூர் என்பவரே இஸ்லாம் பற்றி தனக்கு அதிகம் தெரிந்துகொள்ள உதவியவர் என்றும் குறிப்பிடுகிறார்.
இனி இஸ்லாம் பற்றி ஜெய்ன் சொல்வதைக் கேளுங்கள்.
 

இஸ்லாம் பெண்களை "சமையலறை அடிமைகளாகவே' வைத்திருக்கிறது என்றே நான் முன்பு எண்ணியிருந்தேன். ஆனால் இப்போதுதான் இஸ்லாம் எந்தளவு தூரம் சகிப்புத் தன்மை உடையது, மற்றவர்களுக்கு மதிப்பளிக்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது.
 

எனது கேள்விகளுக்கு விடையளிக்கக் கூடிய வேறு எந்தவொரு சமயத்தையும் என்னால் அந்தத் தருணத்தில் காண முடியவில்லை. இஸ்லாத்தைத் தவிர அதனால்தான் இஸ்லாத்தின் மீதான ஈர்ப்பினால் நான் காதலில் வீழ்ந்துவிட்டேன். நான் இஸ்லாத்தை எனது வாழ்க்கைநெறியாக ஏற்றுக் கெண்டுள்ள போதிலும் எனது குடும்பத்தினரும் சக பணியாளர்களும் என்னை விட்டும் பிரிந்து சென்று விடவில்லை. எனது கணவரும் இரு பிள்ளைகளும் கத்தோலிக்கர்களாகவே இருக்கிறார்கள். அவர்களும் இஸ்லாத்தைத் தழுவவேண்டும் என்று நான் ஒருபோதும் நிர்ப்பந்திக்கப்போவதில்லை.
நான் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து எனது குடும்பத்தினர், உறவினர்கள் சந்தோஷமடைகிறார்கள். நான் ஹிஜாப் அணிந்தே பொலிஸ் கடமையை ஆற்றுகிறேன். இது எனக்கும் என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் ஒரு புது அனுபவம். பொலிஸில் கடமையாற்றும் முஸ்லிம் பெண்கள் கடமையின் போது "ஹிஜாப்' அணிவது குறித்த ஒழுங்கு விதிகள் சிலவற்றை நான் தற்போது தயாரித்துக் கொண்டிருக்கிறேன்.நான் என்னைப் பற்றி வெளிப்படையாகக் கூறிக்கொள்வதன் மூலமாக முஸ்லிம் பெண்கள் பொலிஸில் பணியாற்ற முடியும் என்பதை வெளிப்படுத்த விரும்புகிறேன். இதன் மூலம் இஸ்லாம் தொடர்பான தவறான அபிப்பிராயங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம் என எண்ணுகிறேன்.
க்ளையர் ஈவன்ஸ் (24)
 

சிலருக்கு காதல்தான் இஸ்லாத்தைத் தெரியப்படுத்துகிறது. ஆனால் இவரது வாழ்வில் ஏற்பட்ட "காதல் முறிவு' தான் இவருக்கு இஸ்லாத்தை பற்றி அறியும் ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது.
 

பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸ் நகரில் வசிக்கும் க்ளைமர் ஈவன்ஸ், கடந்த வருடம் ஜூலை மாதம் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.
 

நான் காதலித்த முஸ்லிம் நபர் என்னைக் கைவிட்டுச் சென்ற போது இஸ்லாம் மிக மோசமானதும் இரக்கமற்றதுமான மார்க்கம் என்றே நான் கருதினேன்.ஆனால் எனது தாயார்தான் அது தப்பான எண்ணம் என்பதை எனக்குப் புரிய வைத்தார். நான் காதலித்த நபர் இஸ்லாத்தின் அடிப்படைகள் எதனையும் தனது வாழ்வில் கடைப்பிடிக்கவில்லை என்பதை தாய் தான் எனக்கு விளக்கிக் கூறினார்.
 

அதன் பிற்பாடுதான் இஸ்லாம் அமைதியும் சமாதானத்தையும் ஊக்குவிக்கும் மார்க்கம் என்பதை நான் உணர்ந்துகொண்டேன்.
இஸ்லாத்தைத் தழுவும் வரைக்கும் எந்தவொரு மதத்தையும் நான் வாழ்வில் பின்பற்றியிருக்கவில்லை. நான் கடவுள் மீது நம்பிக்கை கொள்ளவுமில்லை. நான் இப்போது எனது தலையை மறைத்துக்கொள்கிறேன். ஹிஜாப் அணிகிறேன். இது எனது வாழ்வில் நான் எடுத்த மிகப்பெரும் தீர்மானம். எனது தந்தை நான் ஹிஜாப் அணிவதை விரும்பவில்லை. அதனால் அவரோடு இருக்கும் காலங்களில் மாத்திரம் நான் ஹிஜாப் அணிவதை தவிர்த்துக்கொள்கிறேன்.
 

நான் இஸ்லாத்தைத் தழுவிய ஆரம்ப காலங்களில் பல்வேறு விதமான தேவையற்ற விமர்சனங்களை எதிர்கொண்டேன். ஆனால் கடந்த ஆறு மாத காலமாக எனக்குள் மிகுந்த நம்பிக்கை வளர்ந்து வருகிறது. இப்போது நான் தினமும் தொழுகிறேன். வாரத்தில் ஒரு தடவை பள்ளிவாசலுக்கும் செல்கிறேன்.
 

நான் எனது பெயரை சாபிர் என மாற்றிக்கொண்டுள்ளேன். இருப்பினும் "க்ளையர்' எனும் எனது பழைய பெயரையும் பயன்படுத்துகிறேன்.எனது வாழ்க்கைத் துணையையும் நான் இப்போது தேர்ந்தெடுத்திருக்கிறேன். அவரும் முஸ்லிம்தான். ஆனால் நாங்கள் இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
 

இஸ்லாம் என்னை ஒரு சாந்தமான பெண்ணாக மாற்றியிருக்கிறது. இப்போதுதான் எனது வாழ்வில் முதன்முறையாக ஒரு பூரண திருப்தியைக் காணுகிறேன்.
 

நான் இஸ்லாத்தைத் தழுவியதால் முன்பிருந்த வாழ்க்கையில் அனுபவித்த எவற்றையும் இழந்துவிடவில்லை. ஆனால் இப்போது பன்றி இறைச்சி சாப்பிடுவதை தவிர்த்துவிட்டேன்.
ஆயிஷா ஒலுமைட் (24)
 

2009இல் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த சமயம் இஸ்லாத்தைத் தழுவிய இவரது இயற்பெயர் இயூனிஸ். பிரட்டனின் எடின்பேர்க் நகரைச் சேர்ந்த இவர் தான் இஸ்லாத்தைத் தழுவிய கதையை இப்படிச் சொல்கிறார்.
 

"இஸ்லாத்தைத் தழுவ முன்பு நான் ஒரு கிறிஸ்தவ பெண்ணாகவே இருந்தேன். எனது குடும்பம் மேற்கு ஆபிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. அங்கு இஸ்லாமும் கிறிஸ்தவமும் பின்பற்றப்படுகின்ற போதிலும் பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் பாடத்தைக் கற்ற போதுதான் இஸ்லாம் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது.
ஆரம்பத்தில் இஸ்லாம் மிகவும் தீவிரப்போக்கு கொண்ட மார்க்கம் என்றே நான் எண்ணியிருந்தேன். ஆனால் நான் குர்ஆனைப் படிக்க ஆரம்பித்த போது என்னையறியாமலேயே அதில் வீழ்ந்து விட்டேன்.
இயற்கை மற்றும் விஞ்ஞானம் தொடர்பில் குர்ஆன் கூறும் விளக்கங்களால் நான் ஆகர்ஷிக்கப்பட்டேன். விஞ்ஞானம் தொடர்பில் உங்களால் விளக்க முடியாத பல்வேறு கேள்விகளுக்கும் குர்ஆனும் இஸ்லாமும் எனக்கு விடை தந்தன.
 

15 வயதாக இருக்கும் போதே நான் மொடலிங் துறைக்குள் நுழைந்தேன். உதைபந்தாட்டம், மெய்வல்லுனர் துறைகளில் ஈடுபõடு காட்டிய போதிலும் "நவநாகரீக மொடலிங்' துறையிலேயே கூடுதலாக எனது கவனத்தைச் செலுத்தினேன். ஆனால், நான் இஸ்லாத்தைத் தழுவிய பின்புதான் அழகு என்பதன் உண்மையான அர்த்தத்தை உணர்ந்து கொண்டேன்.
ஆரம்பத்தில் நான் ஒரு நவநாகரீக பெண்ணாக இருந்துவிட்டு பின்னர் முஸ்லிம்களோடு எவ்வாறு இணைந்துகொள்வது என்பது பற்றி சற்று சங்கடப்பட்டேன். ஆனால் எனது முஸ்லிம் சகோதரி ஒருவர்தான் எனக்கு வழிகாட்டினார். இஸ்லாம் ஒரு போதும் தீவிரப் போக்குடைய மார்க்கம் அல்ல எனவும் இஸ்லாத்தை தீவிரப் போக்குடைய மார்க்கமாக பார்ப்பது தவறு என்றும் அவர் சொன்னார்.
 

நான் இப்போது எனது வாழ்வில் 99 வீதமான நேரத்திலும் தலையை மறைத்துக்கொள்கிறேன். நான் இப்போது அரை நிர்வாண ஆடைகளை அணிவதை தவிர்த்துவிட்டேன்.
 

நான் தினமும் தொழுகிறேன். அவ்வப்போது பள்ளிவாசலுக்கும் செல்கிறேன். விரைவில் குடும்ப வாழ்வை ஆரம்பிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் நான் ஒருபோதும் முஸ்லிமல்லாத ஒருவரை திருமணம் முடிக்கப்போவதில்லை.

அண்ண கொஞ்சம் இத படீங்கன

யாரை ஊடகம் அலை அலை என்று சொல்கிறதோ அவருக்கு தேர்தல் பயத்தால் பேதி அலைதான் உள்ளது

1)2002 இல் 45301 கோடியாக இருந்த குஜராத் அரசின் கடன் தொகை 2013 இல் 138978 கோடியாக உள்ளதுதான் குஜராத் இதைத்தான் அலை அலை என்கிறார்களோ?

2)மஹூவாவில் சிமென்ட் ஆலையே அமைப்பதற்கு 4000 ஹெக்டர் விவசாய நிலங்களை நிர்மாவுக்கு மோடி விவசாய எதிர்ப்பையும் மீறி வழங்கினாரே இதைத்தான் அலை அலை என்கிறார்களோ?

3)குஜராத்தில் 31.8 சதிவிகிதம் ஏழைகள் இருக்கிறார்கள் என்று திட்டகமிஷன் கூறுகிறதே இதைத்தான் அலை அலை என்கிறார்களோ?

4)1990 முதல் 2010 வரை மற்ற மாநிலங்களை விட குஜராத் அரசு செலவழித்த தொகை மிக மிக குறைவு என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது இதைத்தான் அலை அலை என்கிறார்களோ?

5)குஜராத்தில் 65 சதவிகித கிராம மக்களுக்கு கழிப்பிடங்கள் இல்லாததால்,பொது இடத்தில் மலஜலம் கழிப்பதால் மஞ்சக்காமாலை வயிற்றுப்போக்கு,மலேரியா போன்ற நோய்களால் மக்கள் அவதிப்படுகிறார்கள் என்று புள்ளிவிவரம் கூறுகிறதே இதைதான் இதைத்தான் அலை அலை என்கிறார்களோ?

6)குஜராத்தில் இரண்டுவேளை உணவுக்கு லாட்டரி அடிக்கிறார்கள்.ஊட்டச்சத்து குறைப்பாடும்,குறைவான கூலியும், பாதுகாப்பற்ற குடிநீரும் மக்களை கடும் வாழ்வாதார நெருக்கடியில் தள்ளி இருக்கிறது என்று ஏழை பற்றிய திட்டகமீஷனி ன் உலக புகழ்பெற்ற வரையறை கூரிகிறதே இதைதான் குஜராத் வளர்ச்சி இதைத்தான் அலை அலை என்கிறார்களோ?

7)ஏழை மக்கள் இருந்தும் அதானி,அம்பானிகள்,எஸ்ஸார்,ஸ்டீல் குழுமங்களுக்கு குஜராத் மாநிலத்தின் நிதி தொடர்ந்து சென்றுகொண்டு இருக்கிறதே இதைத்தான் அலை அலை என்கிறார்களோ?

8)தங்களின் வாழ்வாதாரங்களின் சூழ்நிலைகளை சொல்வதற்காக பெண்கள் குழந்தைகள் என்று 5000 மக்கள் காந்தி நகருக்கு 350 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரை சென்று மோடியிடம் முறையிட்டார்கலே காதில் வாங்காமல் அவர்களுக்கு சொந்தமான ஹெக்டார் இடங்களை கார்ப்போரேட்களுக்கு வாங்கி கொடுத்தாரே இதைத்தான் அலை அலை என்கிறார்களோ?

9)வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளும்,கூலி தொழிலாளர்களும் மோடி ஆட்சிகாலத்தில் மட்டும் 16000 பேர் தற்கொலை செய்து கொண்டார்களே இதைத்தான் அலை அலை என்கிறார்களோ?

10)மக்களை விட கார்ப்போரேட்களுக்கு சேவை செய்யும் மோடிக்கு அதானி தனக்கு சொந்தமான பல விமானங்களில் ஒன்றை பிரச்சாரத்திற்கு கொடுத்து உள்ளாரே இதைத்தான் அலை அலை என்கிறார்களோ?

-Editor Alaudeen