Digital Time and Date

Welcome Note

Monday, March 26, 2012

உலக பயங்கரவாத தீவிரவாதிகளுடன் தொடர்புடைய ஹிந்துத்துவா அமைப்புகள் !!!! உண்மையே உறக்க சொல்லுவோம் !!!!

உலக பயங்கரவாத தீவிரவாதிகளுடன் தொடர்புடைய ஹிந்துத்துவா அமைப்புகள் !!!! உண்மையே உறக்க சொல்லுவோம் !!!!

நார்வேயில் இளைஞர்கள் முகாமில் நுழைந்து குண்டுவெடிப்பை நிகழ்த்தி, 76 பேரை கூட்டுப் படுகொலை செய்த வலதுசாரி கிறிஸ்தவ பயங்கரவாதியான ஆண்டேர்ஸ் பெஹ்ரிங் ப்ரெவிக் தனது கொள்கை பிரகடன அறிக்கையில் (manifesto) இந்தியாவில் செயல்படும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு புகழாரம் சூட்டியுள்ளான்.

இந்தியாவில் செயல்படும் தேசீயவாதிகள் ஒன்றுப்பட்டு தற்போதைய ஜனநாயக அரசை வீழ்த்தாவிட்டால் இந்தியா அழிந்துபோகும் என ப்ரெவிக் எச்சரிக்கை விடுத்துள்ளான். நார்வேயில் தாக்குதல் நடத்துவதற்கு சற்று முன்பு ‘முஸ்லிம் எதிர்ப்பாளர்’ என தன்னை சுயமாக அழைத்துக்கொள்ளும் இவன்’ 2080: ஒரு ஐரோப்பிய சுதந்திர பிரகடனம்’ என்ற தனது கொள்கை பிரகடனத்தை ஆன்லைனில் பிரசுரித்துள்ளான்.

அதில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி, எ.பி.வி.பி ஆகிய ஹிந்துத்துவா இயக்கங்களிடம் இருந்து நிறைய முஸ்லிம் விரோத கொள்கைகளை தான் பெற்று கொண்டதாக கூறியுள்ளான். முஸ்லிம்களை இந்தியாவை விட்டு துரத்துவதற்காக ஹிந்துத்துவா நடத்தும் போரில் ஹிந்துத்துவா தேசீயவாதிகளுக்கு ப்ரெவிக் தனது ராணுவ ரீதியிலான ஆதரவை தெரிவித்துள்ளான்.

இவனது 1500 பக்கங்களைக் கொண்ட கொள்கை பிரகடன அறிக்கையில் 100க்கும் அதிகமான பக்கங்களை இந்தியாவில் ஹிந்துத்துவா இயக்கங்களைக் குறித்து புகழாரம் சூட்டுவதற்கு ஒதுக்கியுள்ளான். மேலும் அந்த அறிக்கையில் இந்தியாவை எப்படி ஹிந்து நாடாக மாற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் ஹிந்துத்துவா செயல்படுகின்றன என்பது பற்றியும் விரிவாக தெரிவித்துள்ளான்.

மேலும் இவன் ஹிந்துதுவாவுக்கு சில ஆலோசனைகளையும் அந்த அறிக்கையில் சொல்லி இருக்கிறான். அதாவது இந்தியாவில் சீக்கிய, புத்த, ஜைன மதங்களைச் சார்ந்தவர்களை ஹிந்துக்களாக மாற்றிவிட்டு ஹிந்து நாட்டை உருவாக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து முஸ்லிம்களை துரத்த வேண்டும் இல்லை மதம் மாற்றவேண்டும் என்றும் ஆலோசனை கூறியுள்ளான்.இந்திய அரசு முஸ்லிம்களை தாஜா செய்து ஹிந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றுவதற்கு மிஷனரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக ப்ரெவிக் தனது கொள்கை பிரகடன அறிக்கையில் புலம்புகிறான்.

ரகசியமாக ராணுவ பலத்தை பெருக்குவதன் மூலமே ஆட்சியை தகர்க்க முடியும் என்பது ப்ரெவிக்கின் கண்டுபிடிப்பாகும். இதற்காக இந்தியாவிலும், ஐரோப்பாவிலும் செயல்படும் ஹிந்துத்துவா மற்றும் வலதுசாரி கிறிஸ்தவ இயக்கங்கள் பரஸ்பரம் ஒத்துழைத்து செயல்படவேண்டும். ஏறத்தாழ ஒரே லட்சியத்திற்காக இரு பிரிவினரும் பாடுபடுகின்றனர். முஸ்லிம் ஆதிக்கத்திலிருந்து நாட்டை பாதுகாக்கவேண்டும். தற்போதைய மதசார்பற்ற சக்திகளிடமிருந்து ஆட்சியை கைப்பற்ற 100 ஆண்டுகள் கொண்ட ஒரு திட்டத்தை ப்ரெவிக் தயாராக்கியுள்ளான்.

இந்த லட்சியத்தை அடைவதற்காக இந்தியாவில் ஹிந்துத்துவாவாதிகள், இஸ்ரேலில் யூதர்கள், சீனாவில் புத்தமதத்தவர்கள் ஆகியோருடன் தனது அமைப்பு இணைந்து செயல்படும் என ப்ரெவிக் கூறுகிறான். முஸ்லிம்களுக்கு வாக்குரிமையை மறுக்கவேண்டும் போன்ற ப்ரெவிக்கின் நெறிமுறைக்கட்டளைகள் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் குரு கோல்வால்கரின் ‘punch of thoughts’ என்ற நூலில் இருந்து பெறப்பட்டதாக கருதப்படுகிறது. மேலும் அரசியல் கோமாளி சுப்ரமணீயம் சுவாமி டி.என்.எ. பத்திரிகையில் எழுதிய சர்ச்சைக்குரிய கட்டுரையிலும் இதே கோரிக்கையை முன் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவைச் சார்ந்த ஹிந்துத்துவா தலைவர்கள் உள்ளிட்டவர்களின் 8 ஆயிரம் மின்னஞ்சல் முகவரிகளை ப்ரெவிக்கிடமிருந்து போலீஸ் கண்டுபிடித்துள்ளது. -

— with Al Majeed and Al Majeed.

Refer your Friends for free online income & Get free Referral Bonus. Start Sharing your link Now!

<a href="http://www.rupeeinbox.com/register.asp?ref=5305016-11989"><img src="http://www.RupeeInbox.com/images/banners/160x600.gif" border="0"></a>

Sunday, March 25, 2012

இனி உங்களுக்கு விருப்பமான BSNL நம்பரை online-ல் தேர்வு செய்யலாம்


தனியார் Mobile நிறுவனங்கள் வந்த பிறகு BSNL (Bharat Sanchar Nigam Limited) நிறுவனம் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது. இவ்வளவு நாள் தூங்கிக் கொண்டிருந்த BSNL நிறுவனத்திற்கு புத்துணர்ச்சி வந்துள்ளது. BSNL நிறுவனம் ஒரு புதிய சலுகையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது உங்களுக்கு விருப்பமான BSNL நம்பரை இனி நீங்கள் Online-ல் தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்த வசதியை முதன் முதலில் நவம்பர் 1, 2011- ல் ஆந்திராவில் அறிமுகப்படுத்தியது BSNL நிறுவனம். மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்ற இந்த வசதியின் மூலம் 1.2 லட்சம் பேர் புதிதாக சேர்ந்தனர். இந்த மாபெரும் வரவேற்ப்பை அடுத்து இந்த வசதியை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தி உள்ளது BSNL நிறுவனம். இந்த வசதியின் மூலம் 20 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என BSNL கணித்துள்ளது.
BSNL நிறுவனத்தின் சேர்மன் R.K. Upadhyay அறிவிப்பு கீழே
“Enthused by the success of the scheme in Andhra Pradesh, BSNL has now decided to launch the scheme all over the country. BSNL will set targets for the scheme after watching the initial response. We expect that the scheme will attract more than 20 lakh new subscribers”
ஆன்லைனில் விருப்பமான BSNL நம்பரை தேர்வு செய்ய:
சென்னை வாடிக்கையாளர்கள்-http://sancharsoft.bsnl.co.in/auction/vacant_nos/ch/gsm_choice.asp
தமிழ்நாட்டின் இதர பகுதியினர் -http://sancharsoft.bsnl.co.in/auction/vacant_nos/tn/gsm_choice.asp
இதர மாநிலத்தில் வசித்தால் –http://sancharsoft.bsnl.co.in/auction/vacant_nos/choose_ur_no.html
நீங்கள் இருக்கும் பகுதிக்கு ஏற்ப உள்ள link-ல் click செய்து BSNL தளத்திற்கு செல்லவும். அங்கு இடது புறத்தில் நம்பர்களின் பட்டியல் இருக்கும். இதில் ஒவ்வொரு link-ல் சுமார் 98,000 நம்பர்களுக்கு மேல் உள்ளது. அதில் உங்கள் பிடித்த விருப்பமான நம்பரை தேர்வு செய்த பின்னர் மேலே உள்ள RESERVE NUMBER என்பதை click செய்யவும்.
அதில் உள்ள Reserve Number அழுத்தியவுடன் உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்களுடைய தொடர்பு மொபைல் எண்ணை கொடுத்து கீழே உள்ள Submit என்ற பட்டனை அழுத்தவும்.
உங்கள் மொபைல் எண்ணுக்கு 7 இலக்க பின் நம்பர் SMS வரும், ஒருவேளை SMS வரவில்லை என்றால் அங்கு கொடுத்துள்ள 7 இலக்க PIN நம்பரை அதில் type செய்து கொள்ளவும். அந்த PIN நம்பரும் முக்கியமானது குறித்து வைத்து கொள்ளுங்கள்.
அந்த PIN நம்பரை கொடுத்து Submit பட்டனை அழுத்தினால் உங்கள் நம்பர் பதிவு செய்யப்படும்.
இனி நீங்கள் அருகில் இருக்கும் BSNL அலுவலகத்தை 72 மணி நேரத்திற்குள் சென்று பதிவு செய்யப்பட மொபைல் எண்ணையும், அந்த PIN நம்பரையும் கொடுத்து மற்றும் எப்பொழுதும் போல ID PROOF, ADDRESS PROOF கொடுத்து உங்கள் எண்ணை வாங்கிக் கொள்ளுங்கள்.
SMS மூலமாகவும் BSNL நம்பரை பதிவு செய்யலாம்:
NLIST <Space> Circle Code <space>1-5 digits 
Example: NLIST<space>CHN<space>00117
என்ற பார்மட்டில் BSNL வாடிக்கையாளர்கள் – 53734, மற்ற வாடிக்கையாளர்கள் – 9494453734 என்ற எண்ணுக்கும் SMS அனுப்பி உங்களுக்கு விருப்பமான BSNL நம்பரை பதிவு செய்து கொள்ளலாம்.

கூகுள் க்ரோம்: அட்டகாசமான தமிழ் FM நீட்சி! GOOGLE CHROME


கூகுள் க்ரோம் உலாவியில் இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கும் பொழுது, பின்புலத்தில் தமிழ் FM மற்றும் ஆன்லைன் ரேடியோ சேனல்களில் பாடல்களையோ அல்லது மற்ற நிகழ்ச்சிகளையோ காது குளிர கேட்டபடி டென்ஷன் இன்றி பணிபுரிய ஒரு அட்டகாசமான தமிழ் FM நீட்சி!
Install பொத்தானை அழுத்தி, உங்கள் கூகுள் க்ரோம்
உலாவியில் பதிந்து கொள்ளுங்கள்.
க்ரோம் உலாவியில், வலது மேல் மூலையில்
இந்த நீட்சி நிறுவப்பட்டதற்கான அறிவிப்பு வந்திருப்பதை கவனிக்கலாம்.
இனி அந்த ரேடியோ ஐகானை க்ளிக் செய்து நீங்கள்
விருப்பமான FM மற்றும் ஆன்லைன் ரேடியோ
சேனலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் சேனல்
ஒளிபரப்பு, விண்டோஸ் மீடியா ப்ளேயரில் திறக்கும். 
அவ்வளவுதான்!. இந்த பயனுள்ள நீட்சிக்கான சுட்டி கீழே..,

விடை தெரியாத கேள்விகள்


கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்பாடு பெருகிவரும் இந்நாளில், சில கேள்விகளுக்கு இன்னும் எனக்கு விடை தெரியவில்லை. அன்றாடம் செய்தித் தாள்களில் செய்திகளைப் படிக்கும் போது, இன்னும் ஏன் இவை இவ்வாறு நடக்கின்றன என்று நொந்து கொள்கிறேன். அவற்றை உங்களில் பலரும் எண்ணி இருப்பீர்கள். இதோ, அவற்றைப் பார்ப்போம்.
1. இது உண்மையா என்று சந்தேகம் இருந்த போதும், இது போன்ற இணைய வழி மோசடிகள் நடைபெற்று வருகின்றன என்று செய்திகள் வந்த போதும், ஏன் இன்னும் சிலர், தங்களுக்கு வந்த இமெயில் வழியாகச் சிக்கி, பல ஆயிரம் ரூபாய்களை இதுவரை சந்திக்காத, பேசி அறியாதவர்கள் கூறும் அக்கவுண்ட்டில் செலுத்துகிறார்கள்?
2. வைரஸ் குறித்த பொய்யான எச்சரிக்கை செய்திகளைப் பெற்ற பின்னரும், அவை பொய்யென்று அறிந்து, ஆனால் உண்மை யான வைரஸ் தொகுப்பும் பரவலாம் என்று அறிந்த பின்னரும், ஏன் வைரஸுக்கு எதிரான முக்கிய நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்கின்றனர்?
3. இனி ஐ.பி.வி.6 வழியில் தான் இணைய முகவரிகள் அமைக்கப்படும், வேறு வழியில்லை என்று பலமுறை தகவல்கள் தரப்பட்டும், ஏன், இதுவரை இந்த புதிய இணைய முகவரி கட்டமைப்பு குறித்து யாரும் சரியான நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்கின்றனர்.
4. என் கம்ப்யூட்டரில் உள்ள ஸ்பேம் மெயில்களுக்கான எதிரான ஆண்ட்டி ஸ்பேம் தொகுப்பு, சில ஸ்பேம் செய்திகளை மட்டும் தடுத்துவிட்டு, அதே போல தோற்ற மளிக்கின்ற மற்ற ஸ்பேம் மெயில்களை ஏன் விட்டுவிடுகிறது?
5. ஆங்கிலம் மற்றும் தமிழ் தவிர, அல்லது நான் விரும்பித் தேர்ந்தெடுத்த மொழிகள் தவிர, மற்ற மொழிகளில் வரும் மெயில்கள் ஏன் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுவதில்லை?
6. பொய்யான ஏமாற்றும் தகவல்களுக்கு ஏமாறும் பலரின் பிரவுசர்களில், இவற்றைப் பற்றிக் கூறித் தடுக்கும் snopes.com என்ற தளத்தின் பெயர் பேவரிட் தளமாக ஏன் இல்லை என்று எனக்குத் தெரியவில்லை?
7. பிரைவசி செட்டிங்குகள் குறித்து ஏன் இளைஞர்கள் கூட கவலைப் படுவதில்லை?
8. பல நிறுவனங்கள், ஏன், தகவல் தொழில் நுட்பத் துறையில் இயங்கும் பல நிறுவனங்களும், அவ்வப்போது இணையத்தில் இருந்து மோசமான வைரஸ் மற்றும் பிற கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் குறித்தோ, அவை வரும் வழிகள் குறித்தோ ஏன் எச்சரிப்பதில்லை?
9. மேலே குறித்த வைரஸ்கள் அல்லது மற்ற புரோகிராம்கள் பரவுகையில், இதே நிறுவனங்கள், சில அடிப்படை பாதுகாப்பு வழிகளையோ, அல்லது பேட்ச் பைல் களையோ தங்கள் நிறுவன ஊழியர் களுக்கு அளிப்பதில்லை; அறிவுரை கூடத் தருவதில்லை, ஏன்?
10. மூன்று வயதுக் குழந்தைக்குக் கூட கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன் பாட்டினை எளிதாகக் கற்றுக் கொடுக்க முடிகிறது. ஆனால், அவசியம் தேவைப் படும் 70 வயதுக்கும் மேலானவர்களுக்குக் கற்றுக் கொடுக்க முடிவதில்லை@ய, ஏன்?
11. இலவசமாக அப்டேட் செய்திடும் வசதியினைத் தந்த பின்னரும், பலர் ஏன் இன்னும் 20 ஆண்டுகளுக்கு முன்னால் வந்த அதே ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் போதும் என எண்ணிப் பயன்படுத்தி வருகின்றனர்?
12. பலவீனமான வழிகளைக் கண்டறிந்து அவை மூலம் வைரஸ்கள் மற்றும் பிற புரோகிராம்களை அனுப்புவது தெரிந்த பின்னரும், புதிதாகத் தரப்படும் புரோகிராம்கள் மற்றும் வழிமுறைகள் ஏன், அதே தவறுகளைத் தாங்கி வருகின்றன?
13. பாஸ்வேர்ட்களை மாற்றி அமைக்கையில், அதன் பாதுகாப்பு குறித்து கேட்கப்படும் கேள்விகள், பயனாளர் சார்ந்தவர்கள் அறியும் வகையில் எளிதாகவே உள்ளன?
14. பரவி கெடுதல் விளைவிக்கும் வைரஸ் குறித்த தகவல்கள் வந்த பின்னரும், இன்னும் பல நிறுவனங்களின் தலைவர் கள், எச்சரிக்கைகளை நம்பாமல், ஏன் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று உள்ளனர்?
15. ஏன் அனைத்து கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் புரோகிராம்களும், பயனாளர் அறியாமல், தாங்களே தங்களைப் புதுப்பித்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்படுவதில்லை?