Digital Time and Date

Welcome Note

Monday, May 7, 2012

2011 ஆண்டின் அமெரிக்காவின் 12 பெரிய பொய்கள்.





2011ஆம் ஆண்டில் அமெரிக்க அரசாங்கம் வெளியுலகுக்கு கூறிய பெரும்
பொய்களை அமெரிக்காவின் பிரபல செய்திச்சஞ்சிகையான Foreign Policy வெளியிட்டுள்ளது.ஒபாமா நிர்வாகம் தனது ஆட்சியைத்தக்க வைத்துக்கொள்ளும் நோக்கிலேயேபெரும் பொய்களை கூறியதாக அக்கட்டுரையை எழுதிய அரசியல் ஆய்வாளரான டேவிட் K ரோத்கெப்ட் தெரிவித்துள்ளார். இவற்றில் கூடுதலானவைகள் வெளிநாடுகள் பற்றியதாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 2011ஆம் ஆண்டின் அமெரிக்காவின் பெரும் 12பொய்கள் ஒழுங்குமுறையில் கீழே தரப்பட்டுள்ளது.


1."ஈராக்போர் 9வருடங்களின் பின்னர் நிறைவடைந்துவந்துள்ளது."


அமெரிக்காவுக்கும்,ஈராக்குக்கும் இடையில் 1990ஆம் ஆண்டுமுதல் பாதுகாப்பு ஒப்பந்தம் இருந்துவந்தது.இதனை நோக்கும் போது இன்னும் பலவுரடங்களுக்குமத்தியகிழக்குப் பகுதியை அமெரிக்கா போரை நடத்தும் கொள்கையைக் கொண்டுள்ளதாக விளங்குகின்றது.


2."ஈராக்கில் அமெரிக்காவின் நோக்கம் வெற்றியடைந்துள்ளது."


அமெரிக்காவின் சில நடவடிக்கைளால் ஈராக் பிளலுபடுத்தப்பட்டுள்ளது,
ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன,ஊழல்கள் நடைபெற்றுள்ளன.
அமெரிக்கா இதுவரை ஈராக்குக்காக ஒருடிரில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும்அதிகமாக செலவளித்துள்ளது,ஆயிரக்கணக்கான அமெரிக்கப்படை வீரர்கள் ஈராக்கில் கொல்லப்பட்டுள்ளனர்,பலநூறு ஆயிரக்கணக்கான ஈராக்கிய பொதுமக்கள் அமெரிக்க இராணுவத்தால் கொள்ளப்பட்டுள்ளது.ஈராக் போரில்அமெரிக்கா உண்மையாகவே பாரிய தோள்வியடைந்துள்ளது.


3."ஆப்கானிஸ்தானில் நாங்கள் வெற்றியடைந்து வருகின்றோம்."


இக்கூற்று அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளரால் கூறப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் தீவிர நடவடிக்கைளில் அமெரிக்கா ஈடுபட்ட வருவதுடன்,பாகிஸ்தானின் அணுத்திட்டங்களுக்கும் அமெரிக்கா அச்சுறுத்தலாக விளங்குகின்றது.

4."பாகிஸ்தான் அமெரிக்காவின் நட்பு நாடு, ஆப்கானிஸ்தான் அமெரிக்காவின்பங்காளர்."

 பாகிஸ்தானின் அல்லது ஆப்கானிஸ்தானின் நம்பத்தகுந்த வட்டாரங்கள்இப்படித்தெரிவிக்கவில்லை.உலக அரங்கில் பாகிஸ்தான் மற்றும்ஆப்கானிஸ்தானிடம் அமெரிக்க சிறுமைப்படுத்தப்படாமல் இருப்பதற்காகவே இத்தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.


5."சீனாவின் வளாச்சி அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக அமையாது."


 இது உண்மையாக அமைய வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலரி கிளின்டன் தனது பிரர்த்தனையில் வேண்டியதாக,இக்கட்டுரை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.




6. "குடியரசுவாதிகளாலும் பிரச்சினை,ஜனநாயகவாதிகளாலும் பிரச்சினை.."


 அமெரிக்கா அரசாங்கத்துக்கு அரசியல் குழுக்களால் ஒரு பிரச்சினையும்
 இல்லை.மாறாக பணம் இல்லாமையே பிரச்சினையாகும்.


7. "மில்லியன் கணக்கான மக்களுக்கு தொழில் வழங்குவதற்காகவே
    வரி வசூலிக்கப்படுகின்றது."
  
 இம் முட்டாள்தனமான திட்டத்திக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு ஆதாரமாவது முன்வைக்கப்படவில்லை.


8."அடுத்த மகாநாடு ஐரோப்பியத் தலைவர்கள் எழுந்துநிற்கும்  மகாநாடாகஅமையும்."


 இது வெறுப்படையச்செய்த ஒரு விடயமாகும்.ஏனெனில் அமெரிக்கா 
 பொருளாதாரச் சந்தை இன்னும் பாரிய நிதிநெருக்கடியில் உள்ளது.



9."ஒபாமா நிர்வாகம் நிர்வாகம் நிதிச் சேவைகளில் கடுமையான திருத்தங்களைகொண்டுவர குழுவொன்றை நியமித்துள்ளது."


2008ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய நிதிநெருக்கடியிலிருந்து இன்னும் அமெரிக்கா மீளவில்லை.


10. "9வீதமான அமெரிக்கர்களே காங்கிரஸை அங்கீகரித்துள்ளனர்."




11."லிபியாவின் மீதான இராணுவநடவடிக்கைகள் சிலநாட்களில்     அல்லதுசிலவாரங்களில் முடிவடையும்."


 லிபியாவின் மீதான இராணுவநடவடிக்கைள் பிழையான அணுகுமறையாகும்.இது பல மாதக்கணக்கில் நீடித்தது.


12. "நான் இஸ்ரேலுடன் அன்பு வைக்கின்றேன்".


 இப்படியான கூற்றொன்றை அமெரிக்க அரசியலில் ஈடுபட்டுள்ள உள்ள எவரும் இதனை உறுதியாகக் கூறவில்லை.அப்படியாக ஒருவரும் எண்ணவுமில்லை.எனினும் " வாக்குகளைப் பெறவும்,பணங்களை பெறவும் நான் அமெரிக்க யூதனாக வேண்டியதுடன்,இஸ்ரேலின் மீது அன்புவைப்பவனாகவும் நினைக்கவேண்டும்". என்பதே அவர்களின் எண்ணமாகும் என இக்கட்டுரையின்ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் முதலவாது நீருக்கடியில் பள்ளிவாசல் சவூதியர்களால் அமைக்கப்பட்டுள்ளது.




வரலாற்றில் முதன்முறையாக உலகில் முதலாவது நீருக்கடியில் பள்ளிவாசல் சவூதிஅரேபியாவின் தனியார் சுழியோடிகள் குழுவொன்றினால் அமைக்கப்பட்டுள்ளது. முதலாவது நிரூக்கடியில் பள்ளிவாசல் அமைக்கப்பட்டு முடிந்ததுடன், அதில் தாம் தொழுகையை நிறைவேற்றியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.ஜோர்தான் எல்லைப்பகுதிக்கு அண்மையாக தபூக் நகரின் வடமேற்கு கடற்பரப்பில் இப்பள்ளிவாசல் அமைக்கப்பட்டுள்ளது.மணல் நிரப்பப்பட்ட பெரிய பிளாஸ்திக் குழாய்கள் பயன்படுத்தப்பட்டு சுழியோடிகளால் இவ் அடையாளப் பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளதாக அரேபிய நாளிதழ் ஒன்று தெரிவிக்கின்றது.

நீருக்கடியில் பள்ளிவாசலின் நிர்மாணப் பணியின் போது, இறுதிப் பகுதிகளைஇணைக்கும் போது நண்பகல் தொழுகைக்கான நேரம் வந்ததாகவும்,பின்னர்வரலாற்றில் முதலாவது நீருக்கடியில் பள்ளிவாசலில் தாம் கூட்டாக நண்பகல் தொழுகையை நிறைவேற்றியதாகவும் சுழியோடியான ஹம்தான்பின் ஸாலித் மசூதி தெரிவித்தார்.

மார்க்கக் கட்டளையும் மார்க்கம் படித்தவளின் நிலையும் !!

திருமணம் என்பது நபி (ஸல்) அவர்களின் வழிமுறையில் உள்ளதாகும்.இன்று திருமணம் பற்றிப் பேசுவதற்குப் பல பேர் ஒன்று கூடிப் பேசுவது என்னவென்றால், மாப்பிள்ளைக்கு இரண்டு லட்சம் தொகை, நூறு பவுன் நகை, மாருதி கார் என்றெல்லாம் மாப்பிள்ளையின் பெற்றோர் கேட்பார்கள். மாப்பிள்ளை யின் சொந்த பந்தங்களுக்கெல்லாம் பெண் வீட்டார் விருந்து வைக்க வேண்டும் என்ற நிபந்தனயும்  உண்டு.

இப்போது வல்ல நாயனின் கிருபையால் ஏகத்துவக் கொள்கை வளர்ந்து விட்ட இந்தக் காலத்தில், "நான் வரதட்சணை வாங்க மாட்டேன்; மஹர் கொடுத்துத் தான் திருமணம் செய்வேன்'' என்று ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஆண்கள் கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு ஏகத்துவத்தின் மூலம் வல்ல நாயன் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளான்.

ஆனால் வரதட்சணை வேண்டாம், மஹர் கொடுக்கிறேன் என்று சொல்லக் கூடிய ஆண்கள் தேடிப் போவது, மார்க்கம் தெரியாத பணக்காரப் பெண்களையும், அழகான பெண் களையும் தான். அழகு மற்றும் செல்வத்தில் குறைந்த நிலையில் உள்ள மார்க்கம் தெரிந்த எத்தனையோ பெண்கள் இருந்தும் அவர்களை விட்டு விடுகின்றார்கள் என்று பரவலாகப் பேசப்படுகின்றது. இது ஓரளவு உண்மை தான். அழகு, பணத்தை விட மார்க்கத்திற்கே முன்னுரிமை கொடுக்கும் படி குர்ஆனும், ஹதீஸும் கூறுகின்றன.

மார்க்கத்திற்கே முன்னுரிமை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் நான்கு நோக்கங் களுக்காக மண முடிக்கப்படுகிறாள். 1. அவளது செல்வத்திற்காக. 2. அவளது குடும்ப பாரம்பரியத்திற்காக 3. அவளது அழகிற்காக 4. அவளது மார்க்கத்திற்காக. ஆகவே, மார்க்க நெறியுடையவளை (மணம் முடித்து) வெற்றி அடைந்து கொள். (இல்லையேல்) உன் இரு கைகளும் மண்ணாகட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5090

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவு படுத்துகிறான்.
(அல்குர்ஆன் 2:221)

கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் (உரியோர்). நல்ல பெண்கள் நல்ல ஆண் களுக்கும், நல்ல ஆண்கள் நல்ல பெண்களுக்கும் (தகுதியானோர்). இவர்கள் கூறுவதை விட்டும் அவர்கள் சம்பந்தம் இல்லாதவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், மரியாதையான உணவும் உண்டு.
(அல்குர்ஆன் 24:46)

மேற்கண்ட வசனங்கள் மற்றும் ஹதீஸின் படி மார்க்கத்திற்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். அத்துடன் அழகும், அந்தஸ்தும் இருந்தால் நல்லது தான், தடையில்லை.

பெண்களுக்குத் தனிச் சட்டமா?

இப்படி அழகையும் செல்வத்தையும் பார்க்கும் ஆண்கள் சிலர் இருந்தாலும், எங்களுக்கு மார்க்கம் தான் வேண்டும் என்று கேட்கும் ஆண்களும் இருக்கத் தான் செய்கின்றார்கள்.

இவர்கள் இவ்வாறு கேட்பதற்குக் காரணம், தங்களுக்கு அந்தப் பெண்கள் சம்பாதித்துப் போடுவார்கள் என்பதற்காக அல்ல. மாறாக மார்க்கம் தெரிந்த பெண்களைத் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் தங்கள் பெற்றோரிடமும் குடும்பத்தாரிடமும் நல்ல முறையில் நடந்து கொள்வார்கள்; தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை நல்ல முறையில், இஸ்லாத்தின் அடிப்படையில் வளர்ப்பார்கள்; தங்களிடமும் நல்ல முறையில் நடந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு தான்.

ஓர் ஆண் கல்வி கற்றால் அது அவனுக்கு மட்டும் தான். ஒரு பெண் கல்வி கற்றால் அது ஒரு குடும்பத்திற்கே பலனளிக்கும் என்பதை அறிந்தே மார்க்கக் கல்வி பயின்ற பெண்களை சிலர் திருமணம் முடிக்கின்றார்கள்.

ஆனால் ஆலிமா படித்த பெண்களில் சிலரின் நிலை என்னவென்றால், நம் எதிர்பார்ப்பின் படி ஏகத்துவக் கொள்கையை ஏற்ற மாப்பிள்ளை கிடைக்க வேண்டும் என்றால் நீண்ட நாட்களாகும் என்பதால் தாங்கள் படித்த கல்வியை மறந்து விட்டு, தங்களது பெற்றோரின் பேச்சைக் கேட்டு வரதட்சணை கொடுத்துத் திருமணம் முடித்துக் கொள்கிறார்கள்.

இன்னும் சில ஆலிமாக்கள் தங்களுக்கு தவ்ஹீத் சிந்தனையுள்ள மாப்பிள்ளைகள் வந்தாலும் சில ஆண்கள் எதிர்பார்ப்பது போல் அழகையும் படிப்பையும் செல்வத் தையும் குலப் பெருமையையும் எதிர்பார்க்கின்றனர். அந்த ஆண் களிடம் இருக்கும் கடின உழைப்பு, கலப்பற்ற ஈமானிய உறுதியை இந்த ஆலிமாக்கள் உணர்ந்து கொள்வதில்லை.

நாம் மேலே எடுத்துக் காட்டிய வசனங்களிலும் ஹதீஸிலும் சொல்லப் பட்ட செய்திகள் ஆண்களுக்கு மட்டும் தானா? பெண்களுக்கும் அது தானே சட்டம்?

இறைவன் தன் திருமறையில் பல இடங்களில், தொழுகையை நிலை நாட்டுங்கள், ஜகாத் கொடுங்கள் என்று ஆண்களைக் குறிக்கும் வார்த்தை களைப் போட்டுக் கூறுகின்றான். இதை நாம் ஆண்களுக்கு மட்டும் உரிய கட்டளை; பெண்களுக்கு இந்தக் கடமைகள் இல்லை என்று எடுத்துக் கொள்ள மாட்டோம். இரு பாலருக்கும் உள்ள கட்டளைகள் தான் என்றே எடுத்துக் கொள்வோம். அது போன்று தான் நாம் மேலே காட்டிய ஆதாரங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
எதிர்பார்ப்புகள் ஆண்களிடமும் பெண்களிடமும் இருக்க வேண்டிய ஒன்று தான். ஆனால் அதை விட மார்க்கத்திற்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

விதண்டாவாதம் பேசும் ஆலிமாக்கள்.

இன்னும் சில ஆண்கள் தங்களுக்கு ஆலிமாப் பெண்கள் தான் வேண்டும் என்று திருமணம் செய்து கொள்கின்றார்கள். திருமணம் செய்த பிறகு, "நாம் ஏன் ஆலிமாப் பெண்ணைத் திருமணம் செய்தோம்? சாதாரண பெண்ணைத் திருமணம் செய்திருக்கக் கூடாதா?''' என்று வருத்தப்படுகின்றனர்.

இன்று ஆலிமா படித்த பெண்களில் சிலர், தங்கள் கணவனின் குடும்பத்தாரிடம் நடக்கக் கூடிய விதம் தான் இதற்குக் காரணம். கணவன் சொல்லுக்குக் கட்டுப்பட்டால் போதும், அவனது பெற்றோருக்கோ, சகோதர சகோதரிக்கோ கட்டுப்பட்டு நடக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், கணவனின் குடும்பத்தாருக்கு வேலை பார்க்கும் படி மார்க்கம் சொல்லவில்லை என்று விதண்டாவாம் செய்கின்றனர்.

தங்கள் குடும்பத்தினரிடம் நல்ல முறையில் தன் மனைவி நடந்து கொள்ள வேண்டும் என்று தான் ஒவ்வொரு ஆணும் விரும்புவான். அவ்வாறு விரும்பும் ஆண்களையும் இந்தப் பெண்கள் எதிர்த்துப் பேசுகின்றனர். இது ஒரு நல்ல மனைவிக்கு அழகல்ல!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதன் பெறுகின்ற பொக்கிஷங்களிலேயே சிறந்த ஒன்றை நான் உனக்கு அறிவிக்கவா? (அவள் தான்) நல்ல மனைவியாவாள். கணவன் அவளை நோக்கினால் அவனை மகிழ்விப்பாள். அவன் கட்டளை இட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமல் இருக்கும் போது (தன்னுடைய) கற்பை அவனுக்காகப் பாதுகாத்துக் கொள்வாள்.
அறிவிப்பவர்: உமர் (ரலீ)
நூல்: அபூதாவூத் 1412

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானின் உடமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்வை குறித்து விசாரிக்கப்படுவான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலீ)
நூல்: புகாரீ 5200

இந்த ஹதீஸில் நபியவர்கள் சொல்லும் போது ஒரு பெண் தன் கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளி என்று கூறுகின்றார்கள். பொறுப்பாளி என்றால் கணவனின் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் அவளே பொறுப்பு ஆவாள். இந்தப் பொறுப்பு பற்றியும் மறுமையில் விசாரிக்கப்படும்.

நாங்கள் அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவருடைய கருவூலக் காப்பாளர் வீட்டுக்குள் வந்தார். அவரிடம் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், "அடிமைகளுக்கு உணவு கொடுத்து விட்டாயா?'' என்று கேட்டார்கள். அவர் "இல்லை'' என்றார். "உடனே சென்று அவர்களுக்கு உணவு கொடு'' என்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) கூறி விட்டுப் பின்வருமாறு கூறினார்கள். "ஒருவரின் உணவு எவரது அதிகாரத்தில் உள்ளதோ அவர் அந்த மனிதருக்கு உணவளிக்க மறுப்பதே அவர் பாவி என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: கைஸ் பின் அப்துர்ரஹ்மான்
நூல்: முஸ்லிம் 996

தன் பொறுப்பில் உள்ளவர்களுக்கு உணவளிக்க மறுப்பவரைப் பாவி என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். கணவனின் வீட்டிற்கு மனைவி தான் பொறுப்பாளியாவாள் என்ற ஹதீஸின் படி அவள் தன்னுடைய கடமையைச் செய்தாக வேண்டும்.

பொதுவாக மார்க்கக் கல்வி பயின்ற பெண்களுக்கென்றே தனிச் சிறப்பு சமுதாயத்தில் உண்டு. ஆனால் இது போன்று தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாக இருந்து கொண்டு, தன் பொறுப்பில் வெறுப்பைக் காட்டும் போது, அந்தப் பெண்கள் தாங்கள் பெற்ற சிறப்பை இழந்து விடுகின்றனர். இவ்வாறு சில பெண்கள் செய்வது ஒட்டு மொத்தமாக ஆலிமாக்களே இப்படித் தான் என்ற எண்ணத்தை உருவாக்கி விடுகின்றது.

"எவரது நாவு மற்றும் கைகளின் தீங்கிலிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகின்றார்களோ அவரே முஸ்லிம் ஆவார். மேலும் எவர் அல்லாஹ்வினால் தடுக்கப் பட்டவற்றை விட்டும் ஒதுங்கிக் கொள்கின்றாரோ அவரே முஹாஜிர் ஆவார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: புகாரி 10

தன்னால் பிறருக்கு எந்தச் சிரமும் ஏற்படாதவாறு ஒரு முஸ்லிம் நடக்க வேண்டும் என்றால் மார்க்கம் படித்த ஒரு பெண் இந்த விஷயத்தில் மிகவும் பேணுதலாக இருக்க வேண்டும்.

இது போன்ற குறைகள் மார்க்கம் படித்த பெண்களிடம் இனிமேலாவது ஏற்படாமல் பாதுகாப்பாக நடக்க வேண்டும். ஏனெனில் மார்க்கம் பயின்றவர்களுக்கென்று சமுதாயத்தில் ஒரு தனி அந்தஸ்து இருக்கின்றது. அவர்கள் செய்யும் சிறு தவறானாலும் அது வெளிப்படுத்தப்படும்.

எனவே நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவது போல் மார்க்கம் உடைய நல்ல பெண்ணாக இருந்து, அதன் மூலம் நம் கணவராக வரவிருப்பவர் வெற்றியடையக் கூடிய நிலையை இறைவன் உதவியால் உருவாக்குவோம்.

jazakallah for information:

குர்ஷித் பானு
ஆசிரியை, அல்இர்ஷாத் மகளிர் இஸ்லாமியக் கல்வியகம்
.

Sunday, May 6, 2012

பெண் என்றால் கேவலமா...?


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு....!
Assalaamu Alaikkum Va Rahmathullahi Va Barakathuhu...!


"மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்; பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்". (அல்குர்ஆன் 2:222)



ஆண் பெண் இருபாலரிடையே உடற்கூறு ரீதியாக பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. அவற்றுள் முக்கியமான வேறுபாடாக பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயைக் குறிப்பிடலாம்.



மாதவிடாய் வெளிப்படும் போது தான், சிறுமி என்ற நிலையிலிருந்து பெண் என்ற நிலையை ஒருத்தி அடைகிறாள். பெண்மையின் மற்றொரு சிறப்பம்சமான தாய்மை ஏற்படுவதற்கான தகுதியையும் மாதவிடாய் தான் தீர்மானிக்கிறது.



உடற்கூறு ரீதியான இந்த வேறுபாட்டைக் காரணம் காட்டி உலகில் உள்ள எல்லா மதத்தினரும் பெண்களை மிகவும் இழிவாக நடத்துகின்றனர். பெண்கள் கூட இத்தகைய இழிவை ஏற்றுக் கொள்கின்றனர்.



மாதவிடாய் நாட்களில் பெண்கள் வீட்டுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் புழக்கடையில் ஒதுக்கப்படுகின்றனர். அந்த நாட்களில் பயன்படுத்தப் படுவதற்கென்று பாத்திரங்கள் கூட தனியாக வைத்துக் கொள்கின்றனர்.



அவர்களைத் தொடுவதும் கூட தீட்டாகக் கருதப்படுகின்றது. அவர்களுடன் சேர்ந்து மற்றவர்கள் உண்பதும் பருகுவதும் கிடையாது.



அப்பெண்களை அவர்களின் அழகை அனுபவிக்கின்ற கணவர்கள் கூட பெண்களை இந்த நாட்களில் தனிமைப்படுத்தி விடுகின்றனர்.



இயல்பிலேயே பெண்கள் மட்டரகமானவர்கள் என்று சித்தரிப்பது தான் இவர்களது நோக்கமாகும்.

இந்த நிலைமை 20 ஆம் நூற்றாண்டில் கூட முழுமையாக மாறவில்லை. சில குடும்பங்களில் அந்த நிலை மாறியுள்ளது என்றாலும் இத்தனை நூற்றாண்டுகள் இதற்குத் தேவைப்பட்டுள்ளது.



1400 ஆண்டுகளுக்கு முன்னால் பெண்கள் எவ்வித உரிமையும் வழங்கப்படாமல் வெறும் போகப் பொருட்களாக மட்டுமே கருதப்பட்டு வந்த காலத்தில் 20 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மாறுதலை இஸ்லாம் ஏற்படுத்தியது.



நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் யூத சமுதாயத்தில் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவர்களை வீட்டிலிருந்து வெளியேற்றுவார்கள். உண்ணும் போதும் பருகும் போதும் தம்முடன் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். வீட்டிலும் சேர்க்க மாட்டார்கள். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது மேற்கண்ட வசனத்தை அல்லாஹ் அருளினான். இவ்வசனம் அருளப்பட்ட பின் உடலுறவு தவிர மற்ற அனைத்தையும் செய்யுங்கள்! வீடுகளில் அவர்ளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! என நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: அபூதாவூது



விஞ்ஞான அறிவு வளர்ந்துள்ள இன்றைய கால கட்டத்தில் மாதவிடாய் ஏன் ஏற்படுகிறது என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிகின்ற காலத்தில் கூட சமுதாயம் ஏற்றுக் கொள்ளத் தயங்குகின்ற ஒரு மாற்றத்தை நபிகள் நாயகம் (ஸல்) அன்றைக்கே செய்து காட்டியுள்ளனர்.



மாதவிடாய் என்பது கடவுனின் சாபத்தின் அடையாளம் கடவுளின் கோபத்தின் வெளிப்பாடு என்ற மூடநம்பிக்கை நிலவிய அன்றைய காலத்தில் அந்தப் புரட்சியை நபி (ஸல்) அவர்கள் நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.



நபிகள் நாயகத்தின் மனைவி உம்மு ஸலமா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட போது அவர்கள் படுக்கையிலிருந்து ஒதுங்கினார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் தம்மோடு ஒரே போர்வையில் உம்மு ஸலமா (ரலி) அவர்களைச் சேர்த்துக் கொண்டார்கள். அதை உம்மு ஸலமா (ரலி) அவர்களே அறிவிக்கிறார்கள். (புகாரி)



எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் என் மீது சாய்ந்து கொண்டதுண்டு என அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். (அஹ்மத்)



பள்ளிவாசலில் நபி (ஸல்) (இஃதிகாப்) தங்கியிருக்கும் போது எனது வீட்டுக்குள் தலையை நீட்டுவார்கள். மாதவிடாய் ஏற்பட்டிருந்த நான் அவர்களின் தலையைக் கழுவி விடுவேன் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அஹ்மத்)



பள்ளியில் இருந்த விரிப்பை கைநீட்டி எடுத்துத் தருமாறு என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டனர் எனக்கு மாதவிடாய் என்று நான் கூறினேன். மாதவிடாய் உன் கையில இல்லையே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம்



மாதவிடாய் நேரத்தில் தம்மனைவி கடித்த இறைச்சியை அதே இடத்தில் கடித்து நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டுள்ளனர். (நூல்: முஸ்லிம்)



பள்ளிவாசலில் தங்கக் கூடாது! தொழக்கூடாது! நோன்பு நோற்கக் கூடாது. கஃபா ஆலயத்தில் தவாபு செய்யக் கூடாது என்பதைத் தவிர மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் ஏனைய பெண்கள் போல் நடந்து கொள்ளலாம் என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர்.



இருபதாம் நூற்றாண்டில் கூட துணிவாகச் சொல்ல முடியாத முழுமையாக நடை முறைப்படுத்த முடியாத ஒரு புரட்சிகரமான கருத்தை அன்றைக்கு நபி (ஸல்) அவர்கள் சர்வ சாதாரணமாக விளக்கி விட்டார்கள்.



உலகத்தைப் பற்றியோ சமுதாய பழக்கவழக்கங்கள் பற்றியோ அவர்கள் கவலைப்பட வில்லை.

இயற்கையான ஒரு உபாதையின் காரணமாகப் பெண்கள் தீண்டத்தகாதவர்கள் போல் நடத்தப்படும் கொடுமையை மட்டுமே அவர்கள் கவனத்தில் கொண்டார்கள்.



எந்த உரிமைக்காக இன்றுவரை பெண்கள் போராட வேண்டியுள்ளதோ – போராடியும் பெற முடியவில்லையோ அத்தகைய உரிமைகளை எவ்விதப் போராட்டமும் இன்றி நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கு வழங்கி விட்டனர்.



பெண்ணுரிமைக்குப் போராடுவோர் அவர்கள் கேட்கின்ற உரிமைகள் பலவற்றை இஸ்லாம் அன்றே வழங்கியுள்ளதை உணரட்டும்! முஸ்லிம் பெண்களும் தங்களுக்குக் கிடைத்துள்ள அந்த கண்ணியத்தைப் புரிந்து கொள்ளட்டும்.

ஜஷாக்கல்லாஹ் ஹைர் : திருநறையூர் வெப்தளம்

இஸ்ரேல் அழிந்துபோவது நிச்சயம்........



அல்லாமா யூசுஃப் அல்- கர்ளாவி

இஸ்ரேல் பலஸ்தீன நில...த்தில் குடியேற்றங்களை விஸ்தரிப்பது ஆபத்தானது என சா்வதேச முஸ்லிம் அறிஞா்கள் ஒன் றியத்தின் தலைவா் கலாநிதி யூசுஃப் அல்- கர்ளாவி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மஸ்ஜிதுல் அக்ஸாவை அழித்து குத்ஸை யூத மயப்படுத்தும் திட்டத்தை தொடா்வதை தடுப்பதற்காக ஓன்றிணையுமாறு அவா் அறபு ஆட்சியாளா்களை வேண்டிக் கொண்டார்.
கட்டாரில் அமைந்துள்ள உமா் இப்னு கத்தாப் பள்ளிவாயிலில் நிகழ்த்திய குத்பா பிரசங்கத்திலேயே அவா் இதனைக் குறிப்பிட்டார். அறபிகளும் முஸ்லிம்களும் போராட்ட வீரா்களாக இருக்கவேண்டும். ஒருபோதும் அவா்கள் இழிவை அங்கீகரிக்கக் கூடாது எனவும் அவா் கேட்டுக்கொண்டார்.
உலகம் முழுவதும் உள்ள யூதர்கள் செல்வத்தாலும் அரசியலாலும் ஆயுதத்தாலும் ஊடகங்களாலும் இஸ்ரேலுக்கு உதவிக் கொண்டிருக்கும்போது நாம் பலஸ்தீன சகோதர்களுக்கு உதவி செய்யாதவா்களாக இருக்கிறோம் என அவா் கவலைப்பட்டார்.
இஸ்ரேல் அழிந்து போவதும் குத்ஸும் மஸ்ஜிதுல் அக்ஸாவும் மீட்கப்படுவதும் நிச்சயம் எனவும் அவா் குறிப்பிட்டார் ”இஸ்ரேலியா்கள் நிச்சயம் அழிந்துபோவர். பலஸ்தீனத்தைவிட்டு அவா்கள் வெளியேற்றப் படுவா். அத்தினத்தையே முஸ்லிம்களாகிய நாம் எதிர்பார்த்து காத்திருக் கிறோம் எனவும் அவா் குறிப்பிட்டார்.