Digital Time and Date

Welcome Note

Tuesday, November 13, 2012

ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்!



கல்விக் கடனுக்காக விண்ணப்பிக்க ஒரு மாணவன் வங்கியில் காத்திருக்கிறான். வங்கி மேலாளர் அழைத்துக் கேட்கிறார். 'உன் அப்பா ஒரு கூலித் தொழிலாளி. உங்களுக்கென்று ஒரு சொந்த வீடுகூட கிடையாது. எப்படி உன்னிடம் இருந்து நான் கடனை வசூலிப்பது?'' ''வசதி இருந்தா நாங்க எதுக்குசார் கடன் கேட்டுவர்றோம்?''- இது மாணவனின் பதில். கடைசிவரை மாணவர்களுக்குப் போராட்டம் மட்டுமே மிஞ்
ுகிறது. இப்படிக் கல்விக் கடன் கேட்டு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காவே போராடிக்கொண்டு இருக்கிறது E.L.T.F (EDUCATION LOAN TASK FORCE) எனும் கல்விக் கடன் அலுவல்படை. வங்கியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஸ்ரீனிவாசன் என்பவர்தான் இந்த அமைப்பை நடத்திவருகிறார்.

அவரிடம் பேசினோம். '' கல்விக் கடன் வாங்குவதற்காக மாணவர்கள் எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்னு எனக்குத் தெரியும். அவங்களுக்கு ஏதாவது உதவி செய்யணும்னுதான் இந்த அமைப்பைத் தொடங்கினேன். கல்விக் கடனைப் பொறுத்தவரை இரண்டு திட்டங்கள்தான் நடைமுறையில் இருக்கின்றன. ஒன்று பொதுத் திட்டம். மற்றொன்று தனிப்பட்ட கடன் திட்டம்.

பொதுத் திட்டமானது மதிப்பெண் அடிப்படையில் சேரும் மாணவர்களுக்குப் பொருந்தும். மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேரும் மாணவர்களுக்குத் தனிப்பட்ட கடன் திட்டம். கல்விக் கடன் வாங்கும் எல்லோருமே பொதுவாகத் தெரிந்துகொள்ளவேண்டிய சில விஷயங்களைச் சொல்கிறேன். கல்விக் கடனுக்கான விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டுமென்றால், வங்கி மேலாளர்கள், அவர்களுடைய உயர் அதிகாரிகளின் அனுமதியின் பேரில்தான் நிராகரிக்க முடியும். நிராகரிப்பதற்கான காரணங்களையும் எழுத்து மூலம் மாணவர்களுக்கு உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டும். தகுந்த காரணம் இல்லாமல் நிராகரிக்கப்பட்டதாகக் கருதினால், மாணவர்கள் வங்கியின் தலைவரிடமே மேல் முறையீடு செய்யலாம். கல்விக் கடன் வாங்கும் மாணவர்கள் படிக்கும் காலத்தில் வட்டியைச் செலுத்தவேண்டியக் கட்டாயம் இல்லை. அது அவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. தொழிற்கல்வி மற்றும் மேலாண்மைக் கல்வி படிக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு மத்திய அரசின் வட்டிக்கான மானியமும் உண்டு. இதற்கான விண்ணப்பத்தைக் கல்விக் கடனில் முதல் தவணை பெறும்போதே, வருமானச் சான்றிதழை இணைத்துக் கொடுத்துவிட வேண்டும். பெற்றோர்களின் எந்தவொரு தனிப்பட்ட கடனுக்கும் அவர்களுடைய பிள்ளைகளின் கல்விக் கடனுக்கும் சம்பந்தமில்லை.

ஒரே வீட்டில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கும் கல்விக் கடன் கொடுக்கச் சட்டத்தில் வழிவகை உண்டு. நான்கு லட்சம் வரையிலான கல்விக் கடனுக்குத் தனி நபர் ஜாமீன் மற்றும் சொத்து ஜாமீன் தேவையில்லை. பெற்றோர்கள் கையெழுத்துப் போட்டால் மட்டும் போதும். எங்களோட இணைய தளத்தில் கல்விக் கடன் சம்மந்தமான அனைத்துத் தகவல்களையும் கொடுத்திருக்கிறோம்.(www.eltf.in )

எங்கள் அமைப்பின் மூலமாக இதுவரைக்கும் 560 மாணவர்களுக்குக் கல்விக் கடன் வாங்கிக் கொடுத்து இருக்கிறோம். கல்விக் கடன் கிடைக்காம கஷ்டப்படும் மாணவர்கள் info@eltf.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மெயில் அனுப்பினால் போதும். நாங்களே தேடிவந்து உதவிகள் செய்து தருவோம்'' என்கிறார்.

கல்வி கற்க இனி என்ன கவலை?

தங்கம் பற்றிய விழிப்புணர்வு ஏற்ப்படுத்தவும் - அதிர்ச்சி தகவல்...............!!



நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது,

வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்ததோடு சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்,

வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம், இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்க கூடாது என்று முழங்கி அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்,

நண்பரின் ஆதங்கம் இதுதான். சேதாரம் என்ற பெயரில் நகைக் கடைகளில் பெருங்கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை...?? என்பதே அவரது நியாயமான கேள்வி

அவரது குமுறல் மிக நீதியானதே என்பதுதான் எனது வாதமும், 16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக்கிறார்கள் நகைக் கடை முதலாளிகள், இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ.48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் ஒன்பதாயிரம் ரூபாய் தெண்டம் அழ வேண்டும், ஏறக்குறைய 16 சதவீதம் ? எதற்காக இந்த தெண்டம் ? பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும் ? எந்த அதிமேதாவியும் இது வரை கேள்வி கேட்டதில்லை, அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித்தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள், போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை கூல் பண்ணுவார்கள், இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள் அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது...

சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு...

உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும், என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா ? பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும் ? செய்கூலி கேட்பது நியாயம்தான் 16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும் ? இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை ? பலசரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை ?

எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள் ? அவர்களிடம் வழிப்பறி செய்வதை விட மோசமான செயல் அல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது ? பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான் ? ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான் ? மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில், கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது,

இது போன்ற பகற்கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும்...அல்லது திருத்தப்பட வேண்டும். விரைவில்

இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்...அதுவும் உங்களால் தான் முடியும்............!!

வரலாற்றில் இன்று...

நவம்பர் 11
 

1918: முதலாம் உலக யுத்தத்தின்போது பிரான்ஸின் கொம்பெய்ன் நகருக்கு வெளியே ரயில்வே வாகனமொன்றில் வைத்து ஜேர்மனிக்கும் நேசநாடுகளுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 11 ஆம் மாதம் 11 ஆம் திகதி 11 மணிக்கு மேற்படி யுத்தம் முடிவுற்றது.

1918: ஆஸ்திரியாவின் மன்னர் முதலாம் சார்ள்ஸ் தனது அதிகாரங்களைத் துறந்தார்.

1940: இரண்டாம் உலக யுத்தத்தன்போது பிரித்தானிய கடற்படை, வரலாற்றில் முதல் தடவையாக விமானத் தாங்கி கப்பல் மூலம் இத்தாலிய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது.

1965: ரொடீஸியாவில் (தற்போதைய ஸிம்பாப்வே) வெள்ளை சிறுபான்மையின அரசு ஒரு தலைப்பட்சமாக சுதந்திரப் பிரகடனம் செய்தது.

1975: அங்கோலா சுதந்திரம் பெற்றது.

1981: அன்டிகுவா- பார்புடா ஐ.நாவில் இணைந்தன.

2000: ஆஸ்திரியாவில் ஏற்பட்ட தீ விபத்தொன்றில் பனிச்சறுக்காளர்கள் 155 பேர் பலியாகினர்.

2004: பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யஸீர் அரபாத் காலமானார்.

2008: ஆர்.எம்.எஸ். குயின் எலிஸபெத் கப்பல் தனது கடைசி பயணத்தை துபாய் நகரை நோக்கி ஆரம்பித்தது.

வரலாற்றில் இன்று..

நவம்பர் 12
 

1847: பிரித்தானிய மருத்துவர் சேர் ஜேம்ஸ் யங் சிம்ஸன் முதல் தடவையாக குளொரோபோமை மயக்க மருந்தாகப் பயன்படுத்தினார்.

1927: சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து லினோன் ட்ரொஸ்கி வெளியேற்றப்பட்டதையடுத்து சோவியத் யூனியனின் முழமையான அதிகாரம் ஜோசப் ஸ்டாலினிடம் வந்ததது.

1956 மொராக்கோ, சூடான் ஆகியன ஐ.நாவில் இணைந்தன.

1969: வியட்னாமின் மை லாய் கிராமத்தில் 16.03.1968ஆம் திகதி 347-504 பொதுமக்கள் அமெரிக்கப்படையினரால் கொல்லப்பட்ட சம்பவத்தை 12.11.1969ஆம் திகதி சுயாதீன ஊடவியலாளர் சிமோர் ஹேர்ஸ் உலகிற்கு அம்பலமாக்கினார்.

1970: கிழக்குப் பாகிஸ்தானில் (தற்போதைய பங்களாதேஷ்) ஏற்பட்ட போலா சூறாவளியினால் சுமார் 5 லட்சம் பேர் பலி. இதுவே வரலாற்றில் மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய சூறாவளியாகும்.

1982: சோவியத் யூனியனில் பிரெஸ்னேவைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக யூரி அண்டேரொபோவ் பதவியேற்றார்.

1996: புதுடில்லியில் சவூதி அரேபிய பயணிகள் விமானமொன்றும் கஸகஸ்தான் சரக்கு விமானமொன்றும் நடுவானில் மோதிக்கொண்டதால் 349 பேர் பலி.

1980: நாசாவின் வொயேஜர் -1 விண்கலம் மூலம் சனிக்கிரகத்தின் வளையங்கள் முதல் தடவையாக படம் பிடிக்கப்பட்டது.

1981: மனிதர்களுடன் இரு தடவை விண்ணுக்கு ஏவப்பட்ட முதல் விண்கலம் எனும் பெருமையை கொலம்பியா விண்கலம் பெற்றது.

1990: ஜப்பானில் முடிக்குரிய இளவரசர் அகிஹிட்டோ அந்நாட்டின் 125 ஆவது மன்னரானார்.

2001: அமெரிக்காவில் ஏற்பட்ட விமான விபத்தொன்றில் 260 பேர் பலி.

தயிரில் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன?


           
 1. பால் உடலுக்கு நல்லதுதான். ஆனால் பாலைவிட தயிரே சிறந்த உணவுப்பொருள். இது பாலைவிட அதிவிரைவாக ஜீரணமாகிவிடுகிறது. தயிரில் உள்ள பாக்டீரியாக்கள் குடலில் உள்ள தீமை தரும் பாக்டீரியாவை அழிக்கிறது.
2.உடலில் விரைவாக ஜீரணசக்தியை தூண்டும் பாக்டீரியாக்களை உருவாக்குகிறது. இதனால் உணவு எளிதில் ஜிரணமாகிவிடும். மருத்துவர்கள் கூட தயிரை சிபாரிசு செய்வார்கள். நோய்வாய்ப்பட்டவர்


கள் முதலில் ஆகாரமாக தயிர் சாதத்தை எடுத்துக்கொள்வார்கள். தயிரிலுள்ள Lactobasil ஜீரண சக்தியைத் தூண்டுகிறது.
3. தயிரை அப்படியே சாப்பிடலாம். சிறிது வெந்தயத்தையும் கலந்து சாப்பிடலாம்.
4. தயிரைக் கடைந்து மோராக்கி அதனுடன் சிறிது உப்பு, கொத்தமல்லி, பெருங்காயம், கருவேப்பிலை கலந்து நீர்மோராக பருகலாம். இதனால் உடல் சூடு தனிந்து உடலுக்கு நல்ல புத்துணர்ச்சிக் கிடைக்கும்.
5. சர்க்கரை, இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிக கொழுப்புள்ள பாலில் உருவாக்கிய தயிரை சாப்பிட்டு வர நோய் குணமாகும்.
6. தயிரைக் கொண்டு தோலில் மசாஜ் செய்துவர தோலிலுள்ள நுண்துளைகளில் அழுக்குகள் நீங்கும். தோலுக்கு புத்துணர்ச்சி ஏற்படும்.
7. தயிரிலுள்ள பாக்டீரியாக்கள் விட்டமின் B கிரகிப்பதற்கு உதவுகின்றன.
8. தயிரில் அதிகளவு கால்சியம், புரதம் போன்ற ஊட்டத்துச்சத்துகள் உள்ளது.
9. தேன்,பப்பாளியுடன் தயிரைச் சேர்த்து முகத்தில் தேய்து வர முகம் பொலிவு பெறும்.
10. மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாக தயிர் அல்லது மோருடன் தேன்கலந்து கொடுப்பார்கள்.
11. வெயிலின் தாக்கத்தினால் தோல்களில் ஏற்படும் பாதிப்புகளை தயிர் சரி செய்கிறது. தோல் தடிப்பு வியாதிகளுக்கு தயிர் அல்லது மோர்க்கட்டு சிறந்ததொரு மருந்தாகும்.

தயிரின் முக்கியப் பயன்:

ஒரு மனிதன் நன்றாக தூங்கி எழுந்தாலே போதும். அவனுடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவர்கள் உட்பட பலரும் சொல்லும் கருத்து இது. இத்தகைய நிம்மதியான தூக்கத்தைப் பெற தயிரை உணவுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்.. நிம்மதியான தூக்கத்தைப் பெறுங்கள்.! நன்றி நண்பர்களே..!