Digital Time and Date

Welcome Note

Saturday, March 17, 2012

பித்தப்பை கற்கள் (Galbladder Stones) பற்றி தெரியுமா உங்களுக்கு ?

பித்தப்பை கற்கள் (Galbladder Stones) பற்றி தெரியுமா உங்களுக்கு ?

முதலில் பித்தப்பை என்றால் என்ன என்பது பற்றி அறிவோம். அதாவது கல்லீரலில் உற்பத்தியாகும் பித்த நீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்தில் ஒட்டியிருக்கும் சிறிய பைதான் பித்தப் பை எனப்படுகிறது. இது கல்லீரலின் அடியில் அமைந்துள்ளது.

இந்த பித்தப் பை நமது உணவு ஜீரணமாவதற்கு பெரிதும் உதவுகிறது. அதாவது ஒரு வேளை சாப்பிட்டு அடுத்த வேளை உணவு உண்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த பித்தப் பை ஜீரணத்திற்குத் தேவையான ஜீரண நீரை சேமித்து வைக்கும்.



நாம் உணவு உண்டதும் இந்த பித்தப் பை சுருங்குகிறது. இதனால் பையில் இருக்கும் ஜீரண நீர் குடலுக்குச் சென்று உணவு செரிமானத்திற்கு உதவுகிறது.

அவ்வாறு பித்தப் பை சுருங்கி விரிவடையாமல் நின்று போவதால் பித்தப் பையில் சுரங்கும் ஜீரண நீர் தேங்கி கற்களாக மாறுகிறது.

இந்த பித்தப் பையில் ஏற்படும் கற்களுக்கும் நாம் உணவில் தெரியாமல் சாப்பிட்டுவிடும் கற்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

பித்தக் கற்கள் மூன்று வகைப்படும். ஒவ்வொரு வகை கற்களும் ஒவ்வொரு காரணத்தினால் உண்டாகின்றன.

பொதுவாக உடல் பருமனாக இருப்பது உணவில் கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பது கருத்தடை மாத்திரை அதிகம் உபயோகிப்பது போன்றவற்றாலும் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் விரைவாக உடைவதாலோ பித்த நீர்ப் பையில் பாக்டீரியா அல்லது குடல் புழுக்கள் சேர்வதாலோ பித்தப் பையில் கற்கள் உண்டாகின்றன.

பித்தப் பையில் கற்கள் உண்டான ஒருவருக்கு வாயுத் தொல்லை ஏற்படுவது சாப்பிட்ட பிறகு வயிற்றின் மேல் பாகத்தில் வலதுபுறம் வலி உண்டாவது மஞ்சள் காமாலை நோய் தாக்குவது கடுமையான வயிற்றுவலி போன்றவை ஏற்படலாம்.

நிறையப் பேர் பித்தப் பை கல் பிரச்சினை ஏற்பட்டு சாதாரண வயிற்று வலி என்று நினைத்து மருந்து உட்கொண்டு வருவதால் எந்த பலனும் அளிக்காமல் இறுதியாகத்தான் மருத்துவ பரிசோதனைக்கு வருகிறார்கள்.

பித்தப் பை கற்களை அல்ட்ரா சவுண்ட் சோதனை மூலம் எளிதாகக் கண்டறிய முடியும். அப்படி கண்டறிய முடியாதவர்களுக்கு மட்டுமே சிடி ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் தேவைப்படுகிறது.

பித்தப் பை கற்களுக்கு பெரும்பாலும் அறுவை சிகிச்சைதான் தீர்வாக உள்ளது. மருந்தினால் குணப்படுத்த முடியும் என்றாலும் 100ல் 10பேருக்கே மருந்து குணமளிக்கிறது.

அதிலும் மருந்தை தொடர்ந்து சாப்பிட வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாவார்கள். மருந்தை நிறுத்தினால் மீண்டும் பிரச்சினை துவங்கிவிடும். மேலும் மாத்திரைகளினால் பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. எனவே பித்தப் பை கற்களுக்கு அறுவை சிகிச்சையே பூரண குணமளிக்கும்.

அறுவை சிகிச்சை என்றால் வயிற்றுக் கிழித்து செய்யப்படும் சிகிச்சை அல்ல. தற்போது லேப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சை நல்ல பலனை அளித்து வருகிறது. வயிற்றைக் கிழிக்காமல் ஒரு சொட்டு ரத்தத்தையும் வீணாக்காமல் இந்த சிகிச்சை முறை அளிக்கப்படுகிறது.

Special thanks to Regha Healthcare Center


Reference By : http://www.readislam.net/

Verified:::
— with Fazal Bazeer and 6 others.

அந்த கிணற்று நீர் ஒருபோதும் வற்றாது...

அந்த கிணற்று நீர் ஒருபோதும் வற்றாது...

சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி, வ பரக்காத்துஹு 
*** *****ஜம் ஜம் புனித நீர் ***** ********
SAKoTHARA, SAKoTHARIKAL ANAIVARUKKUM ASSALAAMU ALAIKKUM WA RAHMATHULLAAHI, WA BARAKKAATHTHUHU....
**** ****** ZUM ZUM HOLY WATER ***** *******
فِيهِ آيَاتٌ بَيِّنَاتٌ مَّقَامُ إِبْرَاهِيمَ ۖ وَمَن دَخَلَهُ كَانَ آمِنًا ۗ وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا ۚ وَمَن كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ
"அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்." (அல்குரான் 3:97)
மக்காவில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன என்று இவ்வசனம் 3:97 கூறுகிறது. தெளிவான் அத்தாட்சி என்றால் யாருக்கும் எந்தச் சந்தேகமும் ஏற்படாத வகையில் மக்கள் கண்டு களிக்கும் வகையிலும் எந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும் அத்தாட்சி என்பது நிரூபணமாகும் வகையிலும் இருக்க வேண்டும். மனிதன் இன்னும் கண்டறியாத சான்றுகள் பல இருக்கலாம். மனிதன் கண்டறிந்த சான்றுகளில் முதன்மையானது ஜம்ஜம் எனும் கிணறாகும்.
இப்ராஹீம் நபி அவர்கள் தமது மனைவி ஹாஜர் அவர்களையும் மகன் இஸ்மாயீலையும் அப்போது மக்கள் குடியிருக்காத வெட்ட வெளியில் இறைவனின் கட்டளைப்படி குடியமர்த்தினார். குழந்தை இஸ்மாயீல் தண்ணீரின்றி தத்தளித்த போது வானவர் ஜிப்ரீல் வந்து அந்த இடத்தில் அடித்து ஒரு நீருற்றை ஏற்படுத்தினார், அது தான் ஜம்ஜம் எனும் கிணறாகும்.
இந்தக் கிணறு மாபெரும் அற்புதமாக இஸ்லாம் உண்மை மார்க்கம் என்பதை நிரூபிக்கும் சான்றாக இருக்கிறது.
****கிணற்றின் அளவு*****
இந்தக் கிணறு 18 அடி அகலமும் 14 அடி நீளமும் கொண்டதாகும்.
இந்தக் கிணற்றில் தண்ணீரின் ஆழம் எப்போதும் சுமார் ஐந்து அடியாகும்.
இந்தக் கிணற்றில் இருந்து ஒவ்வொரு விநாடியும் தண்ணீர் இறைக்கப்பட்டுக் கொண்டே உள்ளது. வருடத்தின் எல்லா நாட்களிலும் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். ஹஜ் காலத்திலும் ரமலான் மாதத்திலும் சுமார் 20 லட்சம் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். அனைவருக்கும் இந்தக் கிணற்றில் இருந்து தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
ஒவ்வொருவரும் 20 லிட்டருக்குக் குறையாமல் அந்தத் தண்ணீரைத் தமது சொந்த ஊருக்கும் எடுத்துச் செல்கிறார்கள். 
குறைந்த ஆளம் உள்ள இந்தக் கிணறு, பாலைவனத்தில் அமந்துள்ள இந்தக் கிணறு, அருகில் ஏரிகளோ ,கண்மாய்களோ ,குளம் குட்டைகளோ இல்லாத அந்தக் கிணற்றில் இருந்து எப்படி...? லட்சோப லட்சம் மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது என்பது முதலாவது அற்புதமாகும்.
எந்த ஊற்றாக இருந்தாலும் சில வருடங்களிலோ, பல வருடங்களிலோ செயலிழந்து போய் விடும். ஆனால் இந்த ஊற்று பல ஆயிரம் ஆண்டுகளாக வற்றாமல் இருப்பது இரண்டாவது அற்புதமாகும்.
எந்த ஒரு நீர் நிலையாக இருந்தாலும் பாசி படிந்து போவதும் கிருமிகள் உற்பத்தியாவதும் இயற்கை. இதனால் தான் குளோரின் போன்ற மருந்துகள் நீர் நிலைகளில் கலக்கப்படுகின்றன. ஆனால் ஜம்ஜம் தண்ணீரில் அது உற்பத்தியான காலம் முதல் இன்று வரை எந்த மருந்துகள் மூலமும் அது பாதுக்காக்கப்படாமல் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வது மூன்றாவது அற்புதமாகும்.
மருந்துகளால் பாதுகாக்கப்படாத தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்காது என்பது அறிவியலின் முடிவாகும். ஆனால் இந்தத் தண்ணீர் 1971 ஆம் ஆண்டு ஐரோப்பிய சோதனைச் சாலையில் சோதித்துப் பார்க்கப்பட்ட போது """இது குடிப்பதற்கு மிகவும் ஏற்ற நீர் """""என்று நிருபிக்கப்பட்டது.
பொதுவாக மற்ற நீரில் இருந்து ஜம்ஜம் தண்ணீர் வேறுபட்டுள்ளதும் சோதனையில் தெரிய வந்துள்ளது. கால்ஷியம் மற்றும் மேக்னீஷியம் எனும் உப்பு மற்ற வகை தண்ணீரை விட ஜம்ஜம் தண்ணீரில் அதிகமாக உள்ளது. இந்த உப்புக்கள் புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியவை. இதை அனுபவத்தில் உணரலாம். மேலும் இந்தத் தண்ணீரில் ஃபுளோரைடு உள்ளது. இது கிருமிகளை அழிக்க வல்லது. அங்கே அற்புதம் நடக்கிறது இங்கே அற்புதம் நடக்கிறது என்றெல்லாம் பலவாறான நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது. அது போல் இதையும் கருதக் கூடாது. மற்ற அற்புதங்கள் எல்லாம் எந்த சோதனைக்கும் உட்படுத்தப்படாதவை. நிருபிக்கப்டாமல் குருட்டு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. 
ஆனால் தினசரி 20 லட்சம் மக்களுக்கு அந்தத் தண்ணீர் குடி நீராகப் பயன்படுவதும், பாலைவனத்தில் இந்த அதிசயம் பல்லாயிரம் ஆண்டுகள் நடந்து வருவதும் எல்லாவித சோதனைக்கும் உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால் இது மெய்யான அற்புதமாகும். இது போன்ற அற்புதம் உலகில் இது ஒன்று தான் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

ஜிமெயில் இப்போது ஹார்ட் டிஸ்க்காக பயன்படுத்தலாம்

ஜிமெயில் இப்போது ஹார்ட் டிஸ்க்காக பயன்படுத்தலாம்

வன்தட்டுக்கள் எத்தனை வந்தாலும் எமக்கு ஒரு பயம் உண்டு நம்ம ஹர்ட்டிஸ்க் எப்ப வைரஸ் அடிச்சு நாசமாக போகுதோ என்று அதற்காக நாம் எத்தனையோ வழிகளை தேடிக்கண்டு பிடித்து பல முயற்சிகளை செய்கின்றோம் எதற்காக என்றால் எமது தரவுகளை பாதுகாப்பதற்காகவும் சேமிப்பதற்காகவும், இது இவ்வாறு இருக்க கூகிள் நிறுவனம் தனது புதிய சேவை ஒன்றை தந்துள்ளது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? ஆமாங்க ஜிமெயில் கணக்கு உள்ளவர்கள் ஜிமெயில் ஐ வந்தட்டாக பயன் படுத்தலாம் என்ற புதிய விடயம் உங்களுக்கு தெரியுமா?
இணைய உலகில் ஓன்லைன் தகவல் பரிமாற்றத்திற்கு சிறந்த தொடர்பாடல் ஊடகமாக காணப்படும் ஜிமெயிலை உங்கள் கணணியின் வன்தட்டாக(hard disk) பயன்படுத்த முடியும்.
இதன் மூலம் உங்கள் கணணியின் தகவல் சேமிப்பதற்கான வசதியை மேலும் 25MB வரை அதிகரிக்க முடியும்.
இதற்காக வசதியை Gmail Drive என்ற இலவச மென்பொருள் ஒன்று தருகின்றது. இதனைப் பயன்படுத்தி அமைக்கப்படும் மெய்நிகர்(virtual) வன்தட்டில் drag-drop முறை மூலம் தகவல்களை சேமிக்க முடியும். இச்சேவையை பெறுவதற்கு இணைய இணைப்பு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
மெய்நிகர் வன்தட்டை உருவாக்குவதற்கான படிமுறைகள்:
1. இந்த தளத்திற்கு சென்று http://www.filehippo.com/download_gmail_drive/ Gmail Drive என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக்கொள்ளவும்.
2. தற்போது உங்களது mycomputer பகுதியில் மேலதிகமாக ஒரு வன்தட்டின் உருவம் காணப்படும். அதில் Right click செய்து தோன்றும் மெனுவில் Login As என்பதனை தெரிவு செய்யவும்.

3. அதன் பின் தோன்றும் வின்டோவில் உங்களுக்குரிய பயனர் பெயர், கடவுச்சொல் என்பவற்றை கொடுத்து உள்நுளையவும்.

4. இப்போது குறித்த வன்தட்டை பயன்படுத்த முடியும். வன்தட்டை செயலிழக்க செய்வதற்கு அதன்மேல் Right click செய்து தோன்றும் மெனுவில் Log out என்பதை தெரிவு செய்யவும்.

திருமணம் செய்துகொள்ள தடை செய்யப்பபட்டவர்கள் யார் யார்?

திருமணம் செய்துகொள்ள தடை செய்யப்பபட்டவர்கள் யார் யார்?

திருமணம் செய்துகொள்ள தடை செய்யப்பட்டவர்களை திருக்குர்ஆனில் இறைவன் பட்டியலிடுகின்றான். இறைவன் குறிப்பிட்டுக் காட்டிய நபர்களைத் தவிர மற்றவர்கள் அனுமதிக்கப்பட்டவர்கள் என்று இறைவன் தெளிவுபடுத்துகிறான். 
உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்கு (வேறு கணவர் மூலம்) பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாகரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. 
உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (தடுக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (தடுக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர். இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். இவர்களைத் தவிர மற்றவர்களை விபச்சாரமாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர் திருப்தியடைந்(து மணக்கொடையில் மாற்றம் செய்)தால் உங்கள் மீது குற்றம் இல்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் (4 : 23 24)
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியரில் யாருக்கு அவர்களின் மணக்கொடையைக் கொடுத்து விட்டீரோ அவர்களையும், அல்லாஹ் உமக்கு போர்க் கைதிகளாகக் கொடுத்த அடிமைப் பெண்களையும், உமது தந்தையின் சகோதரரின் புதல்விகள், உமது தந்தையின் சகோதரிகளுடைய புதல்விகள், உமது தாயின் சகோதரருடைய புதல்விகள், உமது தாயின் சகோதரிகளுடைய புதல்விகள் ஆகியோரில் உம்முடன் ஹிஜ்ரத் செய்தோரையும் உமக்கு (மணமுடிக்க) நாம் அனுமதித்துள்ளோம். 
அல்குர்ஆன் (33 : 50)

வெந்தயத்தின் மருத்துவம்

வெந்தயத்தின் மருத்துவம்

சர்க்கரை மற்றும் கொலஸ்டிரால் அளவுகளைக் குறைக்க உதவும் வெந்தயம்: ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதன் விளைவாக மற்ற உடல்நல குறைபாடுகள் ஏற்படுகின்றன.


ஐதராபாத்திலுள்ள தேசிய ஊட்டச்சத்து மையத்தின் ஆய்வுப்படி, வெந்தயம், ரத்தத்திலுள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளைக் குறைக்கின்றன என கண்டறியப்பட்டுள்ளது.


சர்க்கரை நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுடன், வெந்தயம் உட்கொள்வது, உறுதுணையாய் செயல்படுகிறது. வெந்தயம் எந்த அளவு, எந்த நிலையில் மற்றும் என்ன முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதன் விவரம் கீழே உள்ளது.

* வெந்தயம் என்பது பொதுவாக உணவின் ருசியை அதிகரிக்கச் செய்ய பயன்படுத்தப்படும் பொருளாகும். இது மளிகை கடைகளில் கிடைக்கும்.

* வெந்தயம் அதிக நார்சத்து (50 சதவீதம்) கொண்டவை. இவை சர்க்கரை நோயாளிகளின் ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையையும், ரத்தத்திலுள்ள அதிக கெலஸ்ட்ராலையும் குறைக்கிறது. இத்தன்மையானது, வெந்தயத்தில் உள்ளது.

* உட்கொள்ள வேண்டிய வெந்தயத்தின் அளவு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ராலின் அளவைப் பொறுத்தது. 25 முதல் 50 கிராம் வரை வேறுபடுகிறது.

* ஆரம்ப காலத்தில், 25 கிராம் வெந்தயத்தை தினமும் இரண்டு வேளை, ஒரு வேளைக்கு 12.5 கிராம் என்ற அளவில், இரண்டு முக்கிய உணவுகளாகிய காலை மற்றும் இரவு உணவுகளோடு எடுத்து கொள்ளலாம்.

* வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்தோ அல்லது பொடியாக இடித்தோ, தண்ணீரிலோ, மோரிலோ கலந்து, உணவுக்கு 15 நிமிடங்கள் முன்னதாக எடுத்து கொள்ள வேண்டும்.

* இரவு முழுவதும் ஊற வைக்கப்பட்ட விதைகள் அல்லது பொடியாக இடித்தெடுக்கப்பட்ட விதைகளை, தோசை, சப்பாத்தி, இட்லி, பொங்கல், உப்புமா, தயிர், பருப்பு மற்றும் காய்கறி கூட்டுகள் செய்யும் போது, அவற்றுடன் சேர்த்து பயன்படுத்தலாம். இப்படி செய்யும் போது, விதைகளின் கசப்புத்தன்மை ஓரளவுக்கு குறைகிறது. இவைகளை தயார் செய்யும் போது, உண்பவரின் ருசிக்கேற்ப, உப்பையோ அல்லது புளியையோ சேர்த்து தயார் செய்யலாம்.

* ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அதிகளவு இருக்கும் வரை இவ்விதைகளை உட்கொள்ளலாம்.

* வெந்தயம் எடுத்து கொள்வதுடன், தினமும் நடைபயிற்சி போன்ற உடற்பயிற்சிகளை செய்வதும் மிகவும் அவசியம். உடல் எடையை குறைப்பதன் மூலம், இன்சுலின் ஹார்மோனின் செயல்களை அதிகரிக்கச் செய்யும். எனவே, அதிக கலோரி கொடுக்கக்கூடிய, குறிப்பாக "சாச்சுரேட்டேட்' கொழுப்பு உள்ள உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

* இவ்விதைகளை உட்கொள்ளும் நோயாளிகளில் சிலருக்கு, ஆரம்பத்தில் வயிற்றுப்போக்கு மற்றும் குடலில் வாயு உற்பத்தியாவது அதிகமாக காணப்படும்.

* வெந்தயத்தை உணவாக பயன்படுத்துவதுடன், பரிந்துரைக்கப்பட்ட மற்ற சர்க்கரை நோய் சிகிச்சை முறைகளையும் பின்பற்ற வேண்டும். இப்படி பயன்படுத்தும் போது, சர்க்கரை வியாதிக்கான மருந்துகளின் அளவு குறையலாம். ஆயினும், உங்கள் மருத்துவர் மாத்திரமே நோயின் தன்மையை கொண்டு எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்தின் அளவுகளை தீர்மானிக்க முடியும்.

சர்க்கரை நோயால் திடீரென ஏற்படும் உடல்நலக் கேடுகளுக்கு உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாடுவது அவசியம்


Jazzakallah khair திருப்பூர் கபீர்