Digital Time and Date

Welcome Note

Sunday, November 4, 2012

உலக மக்க‍ளால் கொண்டாடப்ப​டும் அதி முக்கிய தினங்கள்.

 
ஜனவரி

26 – உலக சுங்க தினம்
30 – உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
 
பிப்ரவரி

14 – உலக காதலர் தினம் (கேவலம்!! இதர்க்கும் ஒரு தினமா?)
 
மார்ச்

08 – உலக பெண்கள் தினம்
15 – உலக நுகர்வோர் தினம்
20 – உலக ஊனமுற்றோர் தினம்
21 – உலக வன தினம்
22 – உலக நீர் தினம்
23 – உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
24 – உலக காசநோய் தினம்
28 – உலக கால்நடை மருத்துவ தினம்
 
ஏப்ரல்

05 – உலக கடல் தினம்
07 – உலக சுகாதார தினம்
12 – உலக வான் பயண தினம்
18 – உலக பரம்பரை தினம்
22 – உலக பூமி தினம்
30 – உலக குழந்தைத் தொழிலாளர் தினம் 
மே

01 – உலக தொழிலாளர் தினம்
03 – உலக சக்தி தினம்
08 – உலக செஞ்சிலுவை தினம்
12 – உலக செவிலியர் தினம்
14 – உலக அன்னையர் தினம்
15 – உலக குடும்ப தினம்
16 – உலக தொலைக்காட்சி தினம்
24 – உலக காமன்வெல்த் தினம்
29 – உலக தம்பதியர் தினம்
31 – உலக புகையிலை மறுப்பு தினம்
 
ஜூன்

04 – உலக இளம் குழந்தைகள் தினம்
05 – உலக சுற்றுப்புற தினம்
18 – உலக தந்தையர் தினம்
23 – உலக இறை வணக்க தினம்
26 – உலக போதை ஒழிப்பு தினம்
27 – உலக நீரழிவாளர் தினம்
28 – உலக ஏழைகள் தினம்
 
ஜூலை

01 – உலக மருத்துவர்கள் தினம்
11 – உலக மக்கள் தொகை தினம்
 
ஆகஸ்ட்

01 – உலக தாய்ப்பால் தினம்
03 – உலக நண்பர்கள் தினம்
06 – உலக ஹிரோஷிமா தினம்
09 – உலக நாகசாகி தினம்
18 – உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்
 
செப்டம்பர்

08 – உலக எழுத்தறிவு தினம்
16 – உலக ஓசோன் தினம்
18 – உலக அறிவாளர் தினம்
21 – உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
26 – உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
27 – உலக சுற்றுலா தினம் 
அக்டோபர்

01 – உலக மூத்தோர் தினம்
02 – உலக சைவ உணவாளர் தினம்
04 – உலக விலங்குகள் தினம்
05 – உலக இயற்கைச் சூழல் தினம்
08 – உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
09 – உலக தபால் தினம்
16 – உலக உணவு தினம்
17 – உலக வறுமை ஒழிப்பு தினம்
24 – உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
30 – உலக சிந்தனை தினம்
 
நவம்பர்

18 – உலக மனநோயாளிகள் தினம்
19 – உலக குடியுரிமையாளர்கள் தினம்
26 – உலக சட்ட தினம்
 
டிசம்பர்

01 – உலக எய்ட்ஸ் தினம்
02 – உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
10 – உலக மனித உரிமைகள் தினம்
14 – உலக ஆற்றல் தினம்

டூத் பேஸ்ட் பலன்கள்.....

டூத் பேஸ்ட் பலன்கள் பற்றி முழுமையா ஆராய்ச்சி செய்தவங்க நம்ம ஆளுங்க தான்..

நம்ம ஆளுங்க ஒரு பொருளை எதற்காக பயன்படுத்த வேண்டுமோ அதற்கு மட்டும்
பயன்படுத்தாமல் வேறு என்னென்ன வகையில் இதனை பயன்படுத்த முடியும் என்று
ஆராய்ச்சி செய்வதில் வல்லவர்கள். இதற்கு பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே
போகலாம்.

அந்த வகையில டூத் பேஸ்ட் பற்களை வெண்மையாக்கும். வாய் துர்நாற்றம் போக்கும்.
ஈறுகளை பலப்படுத்தும் என்கின்ற விஷயம் நம்மைப் போன்றவர்கள் தெரிந்து வைத்துள்ளோம். ஆனால் இந்த டூத்பேஸ்ட்டைக் கொண்டு
என்னவெல்லாம் செய்து கொள்ளலாம் என்று பட்டியிலிடுகின்றனர் ஒரு சிலர்..
படித்துப் பாருங்களேன்..

என்னமாதிரியான ஆராய்ச்சி? அடேங்கப்பா!! உலகத்துல வேற எந்த நாட்டுக்காரனாச்சும்
இது போல செய்ய முடியுமா என்ன?

1. பூச்சிக்கடியினால் ஏற்படும் எரிச்சல், வீக்கம், கொப்புளங்கள், அரிப்பு
போன்றவற்றை போக்க சிறிது டூத் பேஸ்ட்டை தடவுங்கள். வீக்கம் குறைவதுடன்
சீக்கிரம் குணமாகும்.

2. சிறிய தீக்காயங்களுக்கு டூத் பேஸ்ட் தற்காலிகமாக கூலிங் எபெக்ட் கொடுக்கும்.

3. முகப்பருக்கள் வேகமாக மறைய தூங்க போகும் முன் பருவின் மேல் ஒரு புள்ளி
அளவுக்கு பேஸ்டை வைத்தால் இரண்டு மூன்று நாட்களில் பரு மறையும். காலையில்
எழுந்தவுடன் முகம் கழுதவல் அவசியம்.

4.பற்களுக்கு எனாமல் கோட்டிங் உண்டு. பற்கள் பளிச்சிட நாம் டூத் பேஸ்ட்
உபயோகிக்கிறோம். அதே போல் நகங்களுக்கும் எனாமல் கோட்டிங் உண்டு. நகங்கள்
சுத்தமாகவும் பளிச்சிடவும் பற்களை சுத்தம் செய்வது போல் மேல்புறமும்
இடுக்குகளிலும் பேஸ்ட் பிரஷ்ஷால் தேய்த்தால் நல்ல பலன் தெரியும். இது நகங்களை
வலுப்படுத்தவும் செய்யும்.

5. பூண்டு, வெங்காயம், மீன் இவற்றை கையாளும் பொழுது கைகளில் இருந்து ஒரு வித
வாடை வரும். சிறிது டூத் பேஸ்ட் எடுத்து தேய்த்து விட்டு கழுவினால் வாடை
நீங்கும்.

6. துணிகளிலும், கார் பெட்களிலும் படிந்த கனமான கறைகளை டூத் பேஸ்ட் மூலம்
நீக்க முடியும். பேஸ்ட்டை கறை படிந்த இடங்களில் தடவி நன்றாக தேய்த்தால் கறைகள்
நீங்கும்.

7. குழந்தைகள், வீட்டுச் சுவர்களில் கிரேயான் கொண்டு கோடுகள் கிறுக்குவது,
சகஜம். ஈரத்துணியில் பேஸ்ட் தடவி, கிரேயான் கோடுகளின் மீது தேய்த்தால் மறைந்து
விடும்.

8. வெள்ளி பாத்திரங்கள், ஆபரணங்கள் பளிச்சிட ஒரு மெல்லிய காட்டன் துணியில்
டூத் பேஸ்ட் தடவி மெதுவாக பாலீஷ் செய்வது போல் தேய்த்தால் புதிதுபோல்
இருக்கும். இது வைர நகைகளுக்கும் பொருந்தும்.

9. சி.டி./ டி.வி.டி.களில் கோடுகள் விழுந்தால் ஒரு துளி டூத் பேஸ்ட் கோட்டிங்
கொடுத்து மெல்லிய துணியால் துடைத்து விடுங்கள்.

10. குழந்தைகளில் பால் பாட்டில் ஒரு வித வாடை வீசும். சிறிது டூத் பேஸ்ட்
விட்டு நன்றாக அலசினால் வாடை போகும்.

11. வீடுகளில் இஸ்திரி பெட்டி உபயோகிக்கும்போது நாளடைவில் துரு பிடித்தது போல்
ஒருவித கருமை நிற கோட்டிங் படிந்து இருக்கும். டூத் பேஸ்டில் உள்ள சிலிக்கா
இந்த துருவை நீக்கி விடும்.

12. நமது மூக்கு கண்ணாடியை துடைப்பதற்கு டூத் பேஸ்டை விட சிறந்தது
ஒன்றுமில்லை. சிறிது பேஸ்ட் தடவி நன்றாக கழுவினால் பளிச்சென்று மாறிவிடும்.

மது அருந்தினால் உடனடியாக இறப்பு ஏற்படாவிட்டாலும், படிப்படியாக என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.




மதுவின் பொதுவான மூலக்கூறு "எதில் ஆல்கஹால்".

... பொதுவாக மதுவகைகளில் எவ்வளவு "எதில் ஆல்கஹால்"(Ethyl Alcohol) உள்ளது என்று கீழே பார்க்கவும்.


1. ரம்.... 50-60%
2. விஸ்கி, பிராந்தி, ஜின்---40-45%
3. ஷெர்ரி, போர்ட்---20%
4. ஒயின்---10-15%
5. பீர்--4-8 %
6. சாராயம்--40-50%


மது அருந்தியவுடன் ஏற்படும் விளைவுகளில் முதலானது; கிளர்ச்சி நிலை (excitement): தயக்கங்களிலிருந்து மெதுவாக விடுதலையும், சுதந்திரமான மனப்பான்மையும் ஏற்படும். ஆல்கஹால் அணுக்கள் மிக சிறியதாக இருப்பதால் நொதிகளின் உதவியுடன் செரித்து பின் இரத்தத்தில் கலக்க வேண்டியதில்லை. இவை நேரடியாக சவ்வூடுபரவல் மூலம் இரத்தத்தில் வெகுவிரைவில் கலக்கும். அதனால் தான் உடனடி போதை ஏற்படுகிறது.


மிகுந்த தன்னம்பிக்கையும், சுய கட்டுப்பாட்டை இழத்தலும் மெதுவாக ஏற்படும். இந்த நேரத்தில் தான் ரகசியங்களையும் மக்கள் உளர ஆரம்பிப்பார்கள். நல்ல மரியாதையும், பண்புகளும் மறக்க ஆரம்பிக்கும். ஆடை ஒழுங்காக உள்ளதா..??? என்று கவனம் இருக்காது.


இரத்தத்தில் 20 மி.கி. ஆல்கஹால் இருக்கும் போதே கூர்மையாக பார்க்கும் திறன் குறையும்.


இரத்தத்தில் 30 மில்லிகிராம் ஆல்கஹால் இருக்கும் போது; 1. தசை கட்டுப்பாடு இழக்கும். 2. தொடு உணர்வுகள் குறையும். 3. சிந்தனை, புரிந்துணர்வு, மதிப்பிடும் தன்மை ஆகியவை பாதிக்கப்படும்.


இரத்தத்தில் 50 மில்லிகிராமுக்கு மேல் போனால்; 1. வாய் வார்த்தைகள் குளறுதல், 2. நடையில் தள்ளாட்டம், 3. அதிக மயக்கம், 4. ஞாபக மறதி 5. அதிக குழப்பம் ஆகியவை ஏற்படும்.

பார்வைத்திறன் குறைவதால் பொருட்களை அதிக வெளிச்சத்தில் தான் பார்க்க முடியும். குறைந்த வெளிச்சத்திலுள்ள பொருட்கள் தெரியாது. கால நேர, தூர மதிப்பீடுகள் குறையும். அதனால் சாலையில் வரும் வாகனங்களின் வேகம், எவ்வளவு தூரத்தில் வருகிறது என்று சரியாக கணிக்கமுடியாது. இதனால் தான் மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் நிறைய ஏற்படுகின்றன.

மது அருந்தி சாலையில் நடப்போருக்கும் வாகனங்கள் வரும் தூரம், வேகம் ஆகியவை தெரியாது.



எனவே, நண்பர்களே...!!!

மதுவை தவிர்ப்போம்...

சுய சிந்தனை பெறுவோம்..






"மதுவே தீமைகளின் தாய்" - நபிகள் நாயகம்.

வரலாற்றில் இன்று..........

நவம்பர் 04

1918: முதலாம் உலக யுத்தத்தில் இத்தாலியிடம் ஆஸ்திரியா - ஹங்கேரி சரணடைந்தது.

1921: ஜப்பானிய பிரதமர் ஹரா தகாஷி டோக்கியோவில் படுகொலை செய்யப்பட்டார்.

1956: ஹங்கேரியில் சோவியத் எதிர்ப்புப் புரட்சியை முறியடிப்பதற்காக சோவியத் யூனியன் துருப்புகள் படையெடுத்தன.

1979: ஈரானிலுள்ள அமெரிக்கத் தூதரகம்மீது ஈரானிய மாணவர்கள் குழுவொன்று முற்றுகையிட்டது.

1992: பில் கிளிண்டன் அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவானார்.

1995: இஸ்ரேலிய பிரதமர் யிட்ஸாக் ராபின் சுட்டுக்கொல்லப்பட்டார்.

2008: அமெரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியாக பராக் ஒபாமா தெரிவானார்.

கண்ணாடி பற்றிய தகவல்கள்.

சுமார் எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆதி மனிதன் கண்ணாடிகளை உபயோகப்படுத்தினான். அந்தக் கண்ணாடிகள், எரிமலைக் குழம்பு காய்ந்து கெட்டியாகும்போது உண்டானவை. இந்தக் கட்டிகளைக் கத்தி செய்வதற்கும், அம்புகள் செய்வதற்கும் பயன்படுத்திக்கொண்டான். கண்ண
ாடிகளை மனிதனே படைக்கும் முறை கி.மு. மூவாயிரம் ஆண்டளவில் மத்திய கிழக்கு நாடுகளில் உண்டாகியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். கி.மு. ஆயிரம் ஆண்டுவாக்கில் வெட்டவெளிகளில் கண்ணாடிக் குழம்புகளை வார்த்து கண்ணாடி செய்யும் முறை எகிப்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு ரோமானியர்கள் கி.பி. முதல் நூற்றாண்டளவில் கண்ணாடிகளாலான சிறிய பொருட்களை உருவாக்கிக் கொண்டார்கள்.

பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை இஸ்லாமிய நகரங்களான பாக்தாத் மற்றும் கெய்ரோவில் கண்ணாடி செய்யும் கலை வளர்ந்தது. இதனால் தான் இந்தக் காலகட்ட கண்ணாடிகளை இஸ்லாமியக் கண்ணாடிகள் என்று அழைத்தார்கள். பன்னிரண்டிலிருந்து பதினாறாம் நூற்றாண்டுவரை வெனிஸ் நகரில் இந்தக் கலை உச்சகட்டம் தொட்டது. பாதரசத்தைப் பயன்படுத்தி முகம் பார்க்கும் கண்ணாடிகளை செயற்கையாகச் செய்யும் தொழில்நுட்பத்தையும் அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால், இந்த நுணுக்கங்களை அவர்கள் ரகசியமாக வைத்திருந்தார்கள். ஆனால், பதினேழாம் நூற்றாண்டளவில் இந்த ரகசியம் கசிந்து, ஐரோப்பிய நாடுகள் பலவும் கண்ணாடிகள் செய்தன. 17 முதல் 19ம் நூற்றாண்டு வரை கண்ணாடிகளால் டெலஸ்கோப், தெர்மாமீட்டர், மைக்ரோஸ்கோப் போன்ற பல அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்தன.

இதன் தொடர்ச்சியாக பார்வைக் கோளாறுக்கான கண்ணாடிகள் ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டன. 1903ம் ஆண்டில்தான் அமெரிக்காவில் ஒரு நிமிடத்தில் ஆயிரக்கணக்கான கண்ணாடிகளை தயாரிக்கும் தானியங்கி இயந்திரம் உருவானது. இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பது கண்ணாடியின் அடிப்படை மூலக்கூறு ஆகும். கொல்கத்தாவில் உள்ள ஒரு ஆய்வுக் கூடத்திலிருந்து 1959ல் இங்கு கொண்டு வரப்பட்டது என்றார் அவர். கண்ணாடியில் உள்ள சுத்தத் தன்மையை வைத்தே அது எந்தக் காலத்தில் செய்யப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்கலாம். நம் உருவங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள், அந்தந்த காலகட்டத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியையும் பிரதிபலிப்பது ஒரு அழகான ஆச்சரியம்தான்.