இன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய
இருக்கிறார்கள். அவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில்
உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சினையும் படிப்படியாக
குறையும்.
* முதலில் உடலில் உள்ள தேவையற்ற எடை குறைகிறது. சிறுவர்
முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும்,
உடலுக்குப் புத்துணர்வையும் தரக் கூடியது ஸ்கிப்பிங்.
* உடலின் உள்
உறுப்புகளும், நரம்புகளும் தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள்
சீராகின்றன. மனக் கவலை, மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற உள்ளக்
கோளாறுகள் நீங்குகின்றன.
* உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கொடுக்கிறது.
*
கை, கால், தொடைப் பகுதி தசைகள் அதிக சக்தி பெறுகின்றன. மூட்டு வலி,
கணுக்கால் வலி நீங்குகிறது. தொடர்ச்சியான இடுப்பு வலி உள்ளவர்களுக்கு அது
குறைவதுடன், முதுகெலும்பின் எலும்பு முடிச்சுகள் பலம் பெறுகின்றன. இரத்த
ஓட்டம் சீராகிறது.
* நல்ல மன ஒருமைப்பாட்டையும், தன்னம்பிக்கையையும்
தருகிறது. ஆரோக்கியம் மற்றும் அழகை பராமரிக்க ஸ்கிப்பிங் உதவுகிறது. மிக
முக்கியமாக ஆழ்ந்த உறக்கத்திற்கு ஸ்கிப்பிங் அருமருந்தாகும். அதனால்
நீங்களும் உடலுக்கும் ஸ்கிப்பிங்தானே என எண்ணாமல் ஆரோக்கியமான வாழ்விற்கு
ஸ்கிப்பிங் செய்து பயன்பெறுவோம்.
மாலைமலர்
Digital Time and Date
Welcome Note
Thursday, March 7, 2013
வயிற்றுப் புற்றுநோயைக் கண்டறிய எளிய மூச்சு பரிசோதனை.
மனித
உடம்பை அரித்துக் கொல்லும் கொடிய நோயான புற்றுநோய், முற்றிய பிறகே
கண்டறியக் கூடியதாக உள்ளது. அதிலும், வயிற்றுப் பகுதியில் தோன்றும் புற்று
நோய் நாட்பட்ட நிலையிலேயே வெளித்தெரிவதால் நோயாளிகள் பிழைப்பது மிகவும்
கடினமாகிறது.
இங்கிலாந்து நாட்டில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 7000 பேர் இந்த வயிற்று புற்று நோய் தாக்கத்திற்கு ஆளாகிறார்கள். அதில் பெரும்பாலோருக்கு நோய் முற்றிய நிலையிலேயே தெரிய வருகிறது.
இதைப்பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “இந்த வகை புற்றுநோயாளிகளில் சிகிச்சைக்குப் பின் ஐந்தில் ஒருவர்தான் ஐந்து வருடங்கள் உயிர் வாழ்கிறார். இருவர் ஒரு வருடம் மட்டுமே வாழ்கின்றனர்.
வயிற்றுக்குள் செலுத்தப்படும் நுட்பமான காமிராவினால் வயிற்றுத் திசுக்களை பரிசோதிப்பதே இந்த புற்று நோயை கண்டுபிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் தற்போதைய நடைமுறை. ஆனால், இப்போது மூச்சுக்காற்றைப் பரிசோதிப்பதன் மூலம் இவ்வகை புற்று நோயை எளிதாக கண்டறியலாம் என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வெளியிடும் மூச்சுக்காற்றின் ரசாயன மாறுபாடுகள் மற்ற வயிற்று உபாதைகளிலிருந்து மாறுபடும். தகுந்த மருத்துவ உபகரணங்களால் இதனைக் கண்டறியலாம்” என்றனர்.
இஸ்ரேலிலும், சீனாவிலும் விஞ்ஞானிகள் 130 நோயாளிகளை இந்த புதிய முறையில் பரிசோதித்துப் பார்த்ததில் 90 சதவிகித முடிவுகள் சரியாக அமைந்தன. இதைப்பற்றி இஸ்ரேலின் தொழில்நுட்பப் பேராசிரியர் ஹோசம் ஹைக் கூறுகையில், நீண்ட ஆராய்ச்சிகள் தேவைப்பட்டாலும் இது ஒரு நல்ல பலனைத்தரும் முறை என்றார்.
இங்கிலாந்து நாட்டின் புற்று நோய் குறித்த பத்திரிக்கை இதழும், இம்முறை நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும், நோய் குறித்த பரிசோதனையை விரைவுபடுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
“நீண்ட கால சோதனைகள் தேவைப்பட்டாலும், தற்போதைய கண்டுபிடிப்புகள் நம்பிக்கை அளிக்கின்றன. நோயின் தாக்கம் நாட்பட்ட பின்னரே வெளித்தெரிவதால் ஐந்தில் ஒருவர் மட்டுமே அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிகிறது. ஆரம்பகட்டத்தில் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் நோயாளிகள் உயிர் வாழ்வதற்கான சாத்தியங்களும் அதிகரிக்கும்" என்று இங்கிலாந்தின் மருத்துவ ஆராய்ச்சிக் கழக தலைவர் கேட்லா தெரிவித்தார்.

தலைமுறை இடைவெளி... இன்டர்நெட் புதைகுழி!
வீட்டுக்குள் இருக்கும் கம்ப்யூட்டர், தனது இன்டர்நெட் இணைப்பு மூலம்
எல்லையற்ற உலகவெளியை டீன்ஏஜ் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்கிறது.
‘‘டிஜிட்டல் யுகத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டு. அந்த ரகசியமான மாய
உலகத்துக்குள் மூழ்கிவிடும் பிள்ளைகள், தங்கள் பெற்றோரிடமிருந்து நீண்ட
தூரம் விலகிச் சென்றுவிடுகிறார்கள்’’ என்கிறது இந்தியாவில் செய்யப்பட்ட
லேட்டஸ்ட் சர்வே ஒன்று!
இன்டர்நெட் பாதுகாப்பு நிறுவனமான மெக்காஃபி எடுத்த இந்த சர்வேக்கு பெயர், ‘டீன்களின் ரகசிய வாழ்க்கை’. ‘‘எஞ்சினியரிங் படித்த பெரியவர்களை விட, டெக்னாலஜி உபகரணங்களைக் கையாள்வதில் டீன்ஏஜ் பசங்கள் புத்திசாலிகளாகவும் திறமைசாலிகளாகவும் இருக்கிறார்கள். கல்வி, தகவல்தொடர்பு, பொழுதுபோக்கு என எல்லாவற்றுக்கும் இன்டர்நெட்டை பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விடுகிறார்கள்’’ என்கிறார் மெக்காஃபி நிறுவனத்தின் கன்ஸ்யூமர் மார்க்கெட்டிங் இயக்குனர் மெலானி டுகா.
இந்த சர்வே சொல்லும் சில அதிர்ச்சியூட்டும் உண்மைகள்...
40 சதவீத டீன்ஏஜ் பிள்ளைகள், தங்கள் வீட்டு அட்ரஸ் உட்பட எல்லா தகவல்களையும் அப்பாவியாக இன்டர்நெட்டில் பலருடனும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
21 சதவீத டீன்ஏஜ் பிள்ளைகள், ஏமாற்று வேலைகளையும் பொய் சொல்வதையும் இன்டர்நெட்டில் கற்றுக் கொள்கிறார்கள்.
31 சதவீத டீன்ஏஜ் பிள்ளைகள், சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களுக்கு அறிமுகமாகும் புதிய நபர்களை நேரில் சென்று சந்திக்கிறார்கள். இது எத்தனை ஆபத்துகளைத் தரும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. இதில் 17 சதவீதம் பேரே இதை பெற்றோருடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.
டீன்ஏஜ் பிள்ளைகளில் ஐந்தில் ஒருவர், ஆபாச இணையதளங்களைப் பார்க்கிறார். 32 சதவீத பெற்றோர்களே இதை உணர்கிறார்கள். ‘‘இதையெல்லாம் பார்க்க வேண்டாம்’’ என பெற்றோர்கள் எச்சரிக்கும் தளங்களை 37 சதவீத பிள்ளைகள் அடமாகப் போய்ப் பார்க்கின்றன.
‘‘உங்களுடைய ஆபாசப் படங்களைப் பதிவேற்றுங்கள்’’ எனக் கட்டளையிடும் இணையதளங்களுக்கு அடிபணிந்து, 2 சதவீத டீன்ஏஜ் பிள்ளைகள் தங்கள் படங்களை அனுப்புகிறார்கள்.
பிள்ளைகள் வளர வளர, தாங்கள் இன்டர்நெட்டில் என்ன செய்கிறோம் என்பதை பெற்றோர்களிடம் மறைக்க ஆரம்பிக்கிறார்கள். 16, 17 வயதில்தான் இப்படி மறைப்பது ஆரம்பிக்கிறதாம்.
70 சதவீத பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் பரிசுத்தமானவர்கள் என நம்புகிறார்கள். ‘‘அவர்கள் இன்டர்நெட்டில் என்ன செய்தாலும் எங்களிடம் சொல்லாமல் மறைப்பதில்லை’’ என அப்பாவியாக சொல்கிறார்கள். வெறும் 30 சதவீத பெற்றோரே பிள்ளைகளைக் கண்காணிக்கிறார்கள்.
ஒரு காலத்தில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ‘தலைமுறை இடைவெளி’ இருந்தது. இப்போது அந்த இடத்தில் ‘இன்டர்நெட் புதைகுழி’ இருக்கிறது!
தினகரன்

ஹாட்மெயில் சகாப்தம் முடிகிறது
இமெயில் என்றால், அது ஹாட்மெயில் தான் என்ற புகழைப் பெற்று, மின்னஞ்சல்
உலகை இணையத்தில் கட்டிப் போட்டிருந்த ஹாட்மெயில், தன் சகாப்தத்தினை
முடித்துக் கொள்ள இருக்கிறது. இந்தியரான சபீர் பாட்டியா உருவாக்கிய ஹாட்
மெயில் தான் இலவச மின்னஞ்சலை உலகிற்கு வழங்கியது. இதனைப் பின்பற்றியே,
மைக்ரோசாப்ட் நிறுவனம், மின்னஞ்சல் சேவைக்கு அவுட்லுக் டாட் காம்
தளத்தினைத் தொடங்கி இணையாக நடத்தியது. ஆனாலும், ஹாட் மெயில்
வாடிக்கையாளர்கள், அதைவிட்டு நகர வில்லை. தொடர்ந்து மின்னஞ்சல் உலகில்
முதல் இடத்தைக் கொண்டு இயங்கி வந்தது. இதனைக் கண்ட மைக்ரோசாப்ட், சில ஆண்டு
களுக்கு முன்னர், ஹாட்மெயில் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றியது.
தொடர்ந்து இயக்கியும் வருகிறது. ஆனால், தன் செயல் பாடுகளை ஒருமுகப்படுத்த
வேண்டும் என்ற நோக்கில், ஹாட்மெயிலை மூடி, அதன் பல கோடி வாடிக்கையாளர்களை
தன் அவுட்லுக் டாட் காம் தளத்திற்கு மாற்றும் முடிவை மைக்ரோசாப்ட்
அறிவித்தது.
அறிவிப்பிற்குப் பின்னரும் அவுட்லுக் இயங்கி வந்ததால், அதன் வாடிக்கையாளர்கள் அதனையே தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். வரும் சில மாதங்களில் இதனை முழுமையாக அமல் படுத்தி, ஹாட் மெயில் தளத்தை மூட இருப்பதாக அண்மையில் மைக்ரோசாப்ட் அறிவித்தது. இந்த அறிவிப்பு எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும், திடீரென ஹாட் மெயில் மூடப்படும் என்பதனைப் பலரால் மனதளவில் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அவுட்லுக் டாட் காம் தளத்திற்கு மாற்றப்படும் வாடிக்கையாளர்களுக்கு, விண்டோஸ் 8 பயன்படுத்தினால், முற்றிலும் புதிய அனுபவம் காத்திருக்கிறது. அவுட்லுக் டாட் காம் தளத்திலேயே பல புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன. புதிய இன்டர்பேஸ் தரும் அனுபவம் புதுமையாகவும் வித்தியாசமாகவும் உள்ளது. இந்த மாற்றத்திற்கான வழி காட்டுதலைச் சென்ற ஆண்டு முதலே மைக்ரோசாப்ட் வழங்கி வந்தது.
இருப்பினும், உலகெங்கும் உள்ள ஹாட்மெயில் வாடிக்கையாளர்கள் பல்வேறு சந்தேகங்களை கேள்விகளாக எழுப்பி உள்ளனர். அவற்றில் சிலவற்றையும், மைக்ரோசாப்ட் அவை குறித்து தந்த தகவல்களையும் இங்கு காணலாம்.
கேள்வி: எத்தனை முறை, மைக்ரோசாப்ட், ஹாட்மெயில் தளத்திலிருந்து அவுட்லுக் டாட் காம் தளத்திற்கு மாறுவதற்கான அறிவிப்புகளைத் தந்தது?
பதில்: பல மின்னஞ்சல்களை மிக விளக்க மாக, இது குறித்து, மைக்ரோசாப்ட் தந்தது. இதற்கென எவற்றையெல்லாம் அப்டேட் செய்திட வேண்டும் எனச் சுட்டிக் காட்டி, அதற்கான வழிமுறைகளையும் விளக்கியது.
கேள்வி: நான் ஹாட்மெயில் அக்கவுண்ட்டிலிருந்து, அவுட்லுக் தளத்திற்குச் சென்ற பின்னர், மீண்டும் மனது மாறி, ஹாட் மெயில் தளத்திற்கு வர முடியுமா?
பதில்: இன்றைய நிலையில் முடியாது என்று தான் சொல்ல வேண்டும். (அவுட்லுக் டாட் காம் சோதனை முறையில் இருந்த போது, மைக்ரோசாப்ட் இதனை அனுமதித்தது. ஆனால் இப்போது இல்லை.)
கேள்வி:அவுட்லுக் டாட் காம் தளத்திற்கு நான் மாறிவிட்டால், நான் ஹாட்மெயில் தளத்தில் சேர்த்து, சேமித்து வைத்த மெயில்கள் எல்லாம் என்னவாகும்?
பதில்: எல்லாமே அங்கு நகர்த்தப் பட்டுவிடும். அப்கிரேட் பட்டன் அழுத்திய சில நொடிகளில், உங்கள் மெயில்கள் அனைத் தும் புதிய தளத்தில் கிடைக்கத் தொடங்கி விடும்.
கேள்வி: எந்த பிரவுசர்கள் அவுட்லுக் டாட் காம் தளத்தினை சப்போர்ட் செய்கின்றன?
பதில்: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8,9,10, கூகுள் குரோம் 17 மற்றும் அடுத்த பதிப்புகள், பயர்பாக்ஸ் 10 மற்றும் அடுத்த பதிப்புகள், சபாரி 5.1 மற்றும் மேக் சிஸ்டம். இவை அனைத்தின் முந்தைய பதிப்புகளிலும் அவுட்லுக் டாட் காம் செயல்படும்.
கேள்வி: என்னுடைய மைக்ரோசாப்ட் முகவரி, விண்டோஸ் லைவ் ஐ.டி., ஹாட் மெயிலுடன் இணைக்கப்பட்டிருந்தால், அவற்றின் கதி என்ன? புதிய மெயில் ஐ.டி. ஒன்று பெற்று, என் அக்கவுண்ட்ஸ் மாற்ற வேண்டுமா?
பதில்: தேவை இல்லை. நீங்கள் @hotmail.com, @msn.com or @live.com என எதனைப் பயன்படுத்தி வந்தாலும், ஹாட் மெயில் தளம் மூடப்பட்ட பின்னரும், அந்த மெயில் ஐ.டிக்களுடன் தொடர்ந்து செயல் படலாம். எப்படி உங்கள் மொபைல் எண்ணை மாற்றாமல், எந்த மொபைல் சேவை நிறுவனத்தின் சேவையையும் மேற்கொள்ள முடியுமோ, அது போலத்தான். இதற்கு எந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை என்பது இதன் சிறப்பு. மேலும், தற்போதைய அவுட்லுக் சேவை இன்னும் சிறப்பானதாக, வளமானதாக இருக்கும்.
கேள்வி: நான் ஏற்கனவே தனியாக அவுட்லுக் டாட் காம் அக்கவுண்ட் ஒன்றைத் தொடங்கி இருக்கிறேன். என்னுடைய ஹாட்மெயில் அக்கவுண்ட்டும் அவுட்லுக் டாட் காம் தளத்திற்கு மாற்றப்பட்டால், என் அக்கவுண்ட்களின் கதி என்னவாகும்? இரண்டும் இணைக்கப்படுமா? தனித்தனியாக இயங்குமா? ஒன்று அழிக்கப்படுமா?
பதில்: இரண்டையும் இணைக்க எந்த வழியும் இல்லை. ஆனால் இரண்டு அக்கவுண்ட்களையும் இயக்கி, இரண்டையும் நீங்களே இணைக்கலாம். இதற்கு, அக்கவுண்ட் செட்டிங்ஸ் சென்று, அதில் permissions என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், “manage linked accounts” என்பதில் கிளிக் செய்திடவும்.
கேள்வி: பயனாளர்கள், அவர்கள் விரும்பினால், தங்களுடைய ஹாட்மெயில் அக்கவுண்ட்டைத் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கப் படுகிறார்களா?
பதில்: பலர் தங்களின் மின்னஞ்சல் முகவரியுடன் அன்பால் ஒன்றிப் போய் இருக்கிறார்கள். அது மாற்றப்பட்டால், எங்கே தங்களுடைய அடையாளம் சிதறிவிடுமோ என அஞ்சுகிறார்கள். பலர், தங்கள் மனதை மாற்றிக் கொண்டு புதிய அவுட்லுக் டாட் காம் தளத்தில் புதிய முகவரியுடன் பழைய முகவரி சேவையை இணைத்துக் கொண்டனர். ஆனால், பழைய ஹாட்மெயில் முகவரியையே தொடர்ந்து பயன்படுத்த விரும்புபவர்கள் இன்னும் அதனைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த இருவகையினருக்கும் ஒரே மாதிரியான சேவை கிடைக்கும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
கேள்வி: அவுட்லுக் டாட் காம் தளத்தில் உள்ள காலண்டரை எப்போது மைக்ரோசாப்ட் அப்டேட் செய்திடும்? இப்போது ஹாட்மெயில் ஸ்டைலில் இருக்கும் அதனை, மெட்ரோ ஸ்டைலுக்கு எப்போது மாற்றும்?
பதில்: மைக்ரோசாப்ட் இது குறித்து இன்னும் எதுவும் திட்டவட்டமாகச் சொல்ல வில்லை. விரைவில் இது நடந்தேறும் என்றுதான் அறிவிப்பு விட்டுக் கொண்டிருக்கிறது.
கேள்வி: அவுட்லுக் டாட் காம், ஸ்கைப் தளத்துடன் இணைக்கப்படுமா?
பதில்: இதற்கு விரைவில் என்ற பதிலைத் தான் மைக்ரோசாப்ட் தந்து கொண்டிருக்கிறது. இன்னும் குறிப்பிட்ட காலவரையறையைத் தரவில்லை.
கம்ப்யூட்டர் மலர்

Monday, March 4, 2013
வரலாற்றில் இன்று
பெப்ரவரி 28
1928: இந்திய பௌதிவியல் விஞ்ஞானி சி.வி.ராமன், 'ராமன் விளைவை' கண்டுபிடித்தார்.
1940: அமெரிக்காவில் போர்ட் ஹாம் பல்லைக்கழகத்திற்கும் பிட்ஸ்பர்க் பல்லைக்கழகத்திற்கும் இடையிலான கூடைப்பந்தாட்டப் போட்டி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. கூடைப்பந்தாட்டப் போட்டியொன்று நேரடியாக ஒளிபரப்பப்பட்டமை இதுவே முதல் தடவை.
1942: சுந்தா நீரிணையில் ஜப்பானிய கடற்படையினருடனான மோதலில் அமெரிக்காவின் யுத்த கப்பலான யூ.எஸ்.எஸ். ஹஸ்டன்

மூழ்கடிக்கப்பட்டதில்
693 பேர் பலி. அதே மோதலில் அவுஸ்திரேலியாவின் எம்.எம்.ஏ..எஸ். பேர்
கப்பலும் மூழ்கடிக்கப்பட்டு 375 பேர் பலியாகினர்.
1947: தாய்வானில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 10,000 -30,000 பேர் பலி.
1975: லண்டனில் ரயில் விபத்தினால் 43 பேர் பலி.
1986: தொழிலாளர் வர்க்கத்திற்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் ஆதரவானவராக விளங்கியவரும், வீதிகளில் பாதுகாப்பின்றி நடமாடும் பிரதமராக பெயர் பெற்றவருமான சுவீடனின் பிரதமர் ஒலோவ் பால்மே, தலைநகர் ஸ்டொக்ஹோமில் திரையரங்கொன்றிலிருந்து நள்ளிரவு நேரத்தில் மனைவியுடன் வீடு நோக்கி நடந்து சென்றபோது துப்பாக்கிதாரியொருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரின் மனைவி காயமடைந்தார். இக்கொலையின் சூத்தரதாரி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
1997: அஸர்பைஜானில் ஏற்பட்ட பூகம்பத்தால் 1100 பேர் பலி.
1997: ஈரானில் ஏற்பட்ட பூகம்பத்தால் சுமார் 3000 பேர் பலி.
2005: லெபனான் ஆதரவாளராக கருதப்பட்ட சிரிய பிரதமர் ஒமர் கராமி, சிரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களால் ராஜினாமா செய்தார்.
2005: ஈராக்கின் அல் ஹிலாஹ் நகரில் தற்கொலை குண்டுத் தாக்குதலினால் 127 பேர் பலி.

Subscribe to:
Posts (Atom)