Digital Time and Date

Welcome Note

Thursday, March 14, 2013

இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : அல்-குர்ஆன்

Q46) சுவனத்தில் இருக்காது என்று இறைவன் குறிப்பிடுவது எவை?

A) 1) பசி, 2) நிர்வானம், 3) தாகம், 4) வெயில் (20:118,119)

Q47) வீரமுள்ள செயல் என குர்ஆன் எதைக் கூறுகிறது?

A) எவரேனும் (பிறர் செய்யும் தீங்கை) பொறுத்துக் கொண்டு மன்னித்து விடடால் அது மிக உறுதியான (வீரமுள்ள) செயலாகும். (42:43), (31:17), (3:186)

Q48) நபி முஸா (அலை) அவர்கள் கற்பாறையில் அடித்த போது எத்தனை நீர் ஊற்றுக்கள் பீறிட்டு எழுந்ததாக இறைவன் கூறுகிறான்?

A) பன்னிரணடு நீர் ஊற்றுகள் பீறிடடு எழுந்தது. (2:60) & (7:160)

Q49) தொழாதவர்களுக்காக இறைவன் சித்தப்படுத்தி வைத்திருப்பதாகக் கூறும் நரகத்தின் பெயர் என்ன?

A) ஸகர் என்ற நரகம். அல் முத்தஸ்ஸிர்(74:41,42,43)

Q50) இறைவன் என்னோடு இருக்கிறான் என்று கூறிய நபி யார்?

A) முஸா (அலை) அஷ் ஷுஃரா(26:62)

Q51) “ஸிஹாஹ் ஸித்தஹ்” என்று கூறப்படும் ஹதீஸ் நூல்களின் பெயர் என்ன?

A) 1) புஹாரி 2) முஸ்லீம் 3) அபூதாவுத் 4) திர்மிதி 5) நஸயி 6) இப்னுமாஜா

Q52) அல்லாஹ்வின் எந்த இரு அருட்கொடைகளை மக்கள் நஷ்டத்திற்குள்ளாக்குகிறார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

A) ‘ஆரோக்கியம், ஓய்வு நேரம் ஆகிய இந்த இரண்டு அருட்கொடைகளை மக்கள் நஷ்டத்திற்குள்ளாக்குகிறார்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி)

Q53) உங்களில் (முஸ்லிம்களில்) சிறந்தவர்கள் என யாரைக் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

A) ‘உங்களில் (முஸ்லிம்களில்) சிறந்தவர்கள் யார் எனில், யார் குர்ஆனைக் கற்று, (பிறருக்கும்) கற்றுத் தருகிறார்களோ அவர்கள்’ (அறிவிப்பவர் : உதுமான் (ரலி), நூல்: புகாரி)

Q54) ஹுதைபிய்யா உடன்படிக்கையில் எந்த வார்த்தை இடம்பெறக் கூடாது என மக்கத்து காஃபிர்கள் கூறினர்?

A) “ரஸுலுல்லாஹ்” என்ற வார்த்தை இடம்பெறக்கூடாது என்று மக்கத்து காபிர்கள் கூறினர்.

Q55) தச்சராக இருந்த இறைத்தூதர் யார்?

A) ஜக்கரிய்யா (அலை) (முஸ்லிம்)

No comments:

Post a Comment