முஸ்லிம் அமெரிக்கர்கள் - ஓர் ஆய்வு கட்டுரை
உங்கள் அன்றாட வாழ்வில் மார்க்கம் முக்கிய பங்கு வகிக்கின்றதா?
இது, பிரபல காலப் (Gallup poll) நிறுவனத்தால் சென்ற வருடம் முஸ்லிம்
அமெரிக்கர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கேட்கப்பட்ட கேள்விகளுள் ஒன்று.
இதற்கான பதில் -
ஆம் - 80%
முஸ்லிம் அமெரிக்கர்களில் பத்தில் எட்டு பேர் இஸ்லாம் தங்கள் வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளனர்.
காலப் நிறுவனத்தின் முஸ்லிம் அமெரிக்கர்கள் குறித்த இந்த ஆய்வறிக்கை
கவனிக்கத்தக்க பல தகவல்களை நமக்கு தருகின்றது. அவற்றில் சில உங்கள்
பார்வைக்காக....
1. இனப் பின்னணி:
முஸ்லிம்
அமெரிக்கர்கள் பல்வேறு இனப் பின்னணியை கொண்டவர்களாக இருக்கின்றனர்.
அமெரிக்காவில், ஒரு மார்க்கம் பலவித இன மக்களால் அதிகம்
பின்பற்றபடுகிறதென்றால் (Most Racially Diverse Religious Group) அது
இஸ்லாம் தான்.
முஸ்லிம் அமெரிக்கர்களில் 35% பேர் கறுப்பின மக்கள்
(African Americans). இவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாத்தை தழுவியவர்கள்
அல்லது தழுவியவர்களின் வாரிசுகள்.
28% முஸ்லிம் அமெரிக்கர்கள் தங்களை வெள்ளையர்கள் என்று அடையாளப்படுத்தி கொண்டுள்ளனர்.
முஸ்லிம் அமெரிக்கர்களில் ஐந்தில் ஒருவர் ஆசியர். சுமார் 18% முஸ்லிம்
அமெரிக்கர்கள் தங்களை எந்தவொரு இனத்தோடும் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.
கடைசியாக, சுமார் 1% முஸ்லிம் அமெரிக்கர்கள் தங்களை ஹிஸ்பானிக் (Hispanic -
Spanish speaking people/ஸ்பானிஷ் மொழி பேசும் மக்கள்) என்று
அடையாளப்படுத்தி கொண்டுள்ளனர்..
2. தினசரி வாழ்வில் இஸ்லாம்:
முஸ்லிம்களின் அன்றாட வாழ்வில் இஸ்லாம் பெரும் பங்காற்றுகிறது. இதற்கு முஸ்லிம் அமெரிக்கர்களும் விதிவிலக்கல்ல.
சுமார் 80% முஸ்லிம் அமெரிக்கர்கள் தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாம்
முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளனர். இது அமெரிக்க சராசரியை விட 15%
அதிகம்.
இன்னும் சற்று விரிவாக கூற வேண்டுமென்றால், முஸ்லிம்
அமெரிக்கர்களில் பெண்கள் 82% பேரும், ஆண்கள் 78% பேரும் இவ்வாறு கருத்து
தெரிவித்துள்ளனர்.
இங்கு கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால்
முஸ்லிம் அமெரிக்கரில் ஆண் பெண் என்று வித்தியாசம் இல்லாமல் இருபாலருடைய
கருத்துக்களும் கிட்டத்தட்ட ஒன்றாகவே உள்ளன. ஆனால் அமெரிக்காவின் மற்ற
மார்க்க மக்களை எடுத்துக்கொண்டால் வித்தியாசத்தை காணலாம்.
அதாவது,
மற்ற மார்க்கங்களில், பெண்களுக்கும் ஆண்களுக்கும் இந்த கருத்தில்
குறிப்பிடத்தக்க வித்தியாசம் உண்டு. உதாரணத்துக்கு, கத்தோலிக்கர்களை
எடுத்துக்கொண்டால் 75% பெண்களும், 62% ஆண்களும் தங்கள் மதம் தங்களுடைய
அன்றாட வாழ்வில் முக்கிய பங்காற்றுவதாக கூறியுள்ளனர்.
அமெரிக்க சராசரியை எடுத்துக்கொண்டால், 72% பெண்களும் 58% ஆண்களும் இதே கருத்தை கூறியுள்ளனர்.
ஆக, அமெரிக்காவை பொறுத்தவரை மார்க்கப்பற்று என்பது ஆண்களை விட பெண்களுக்கே
அதிகமுள்ளது. ஆனால் முஸ்லிம் அமெரிக்கர்களை பொறுத்தவரை இந்த வித்தியாசம்
இல்லாமல் இருபாலரும் கிட்டத்தட்ட சமமான நிலையிலேயே உள்ளனர்.
முஸ்லிம் அமெரிக்க இளைஞர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வும் (77%) இதே முடிவுகளைத்தான் தருகிறது.
80% முஸ்லிம் அமெரிக்கர்கள் தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாமிற்கு முக்கிய
பங்குள்ளதாக கூறியிருந்தாலும் இந்த சதவிதம் மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது
குறைவுதான். உதாரணத்துக்கு, இதே நிறுவனத்தால் வேறு சில நாடுகளில்
நடத்தப்பட்ட ஆய்வில், இதே கேள்விக்கு, எகிப்தில் 100% முஸ்லிம்களும்,
இந்தோனேசியா மற்றும் பங்களாதேஷில் 99% முஸ்லிம்களும், ஜெர்மன் முஸ்லிம்கள்
82% பேரும் "தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாம் முக்கிய பங்காற்றுவதாக"
தெரிவித்துள்ளனர்.
3. பெண்கள்
யூதர்களுக்கு அடுத்து அமெரிக்காவில் அதிகம் படித்தவர்களாக இருப்பவர்கள் முஸ்லிம்கள் தான்.
அதிலும், மேற்படிப்பு முடித்த மற்றும் பட்டம் பெற்ற முஸ்லிம்களில் ஆண்களை (39%) விட பெண்களே (42%) அதிகம்.
முஸ்லிம் பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, மற்றொரு குறிப்பிடத்தக்க
தகவலையும் தருகின்றது. என்னவென்றால், பெண்கள் (40%), ஆண்களுக்கு (42%)
நிகரான அளவில் பள்ளிவாசலுக்கு வருகின்றனர். இது, காலப் நிறுவனத்தால் சில
முஸ்லிம் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளோடு ஒப்பிடும் போது
வேறுபடுகின்றது. இந்த நாடுகளில் பெண்கள் பள்ளிக்கு வருவது (அமெரிக்காவுடன்
ஒப்பிடும் போது) குறைவே. ஆனால் அமெரிக்காவில் அந்த நிலை இல்லை. அங்கு
ஆண்களும் பெண்களும் சமமான அளவிலேயே பள்ளிக்கு வருகின்றனர்.
4. மற்றவைகள்:
70% முஸ்லிம் அமெரிக்கர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இது அமெரிக்க சராசரியை விட 6% அதிகம்.
அமெரிக்காவின் பள்ளிவாசல்கள் பல்நோக்கு கூடங்களாக உள்ளன.
மது அருந்துவோரின் சதவிதம் மற்ற மார்க்க மக்களுடன் ஒப்பிடும் போது
மிகக்குறைவாகவே உள்ளது. அதே சமயம், நான்கில் ஒரு முஸ்லிம் அமெரிக்கர் புகை
பிடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளார்.
முஸ்லிம் அமெரிக்க பெண்களில் மூன்றில் ஒருவர் "professional Job"பில் உள்ளார்.
கறுப்பின முஸ்லிம் அமெரிக்கர்கள் மார்க்கத்தின் மேல் அதிக பற்று
கொண்டுள்ளனர் (87%). இவர்களைத் தொடர்ந்து ஆசியர்களும் (86%)வெள்ளையர்களும்
(72%) வருகின்றனர்.
காலப் நிறுவனத்தின் இந்த ஆய்வறிக்கையை
(140 பக்கங்கள்) முழுவதுமாக படிக்க விருப்பமுள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் இருந்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
(File Size : ~5.2 MB).
இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
Download the complete document from:
http://www.muslimwestfacts.com/mwf/116074/Muslim-Americans-National-Portrait.aspx
ஜசகல்லாஹ் கைர் : அன்பு சகோதரன் ஆஷிக் அஹ்மத் அ.Aashiq Ahamed (நிர்வாகி எதிர்க்குரல்)
Reference By: http://www.ethirkkural.com/
அடிமைகள் பற்றி இஸ்லாம்
இஸ்லாம் அடிமைகளை கொடுமைபடுத்த சொல்கிறதா?
ராஜா வேலை முடித்து,கம்பெனி பஸ்ஸில் வந்து இறங்கி,எப்போதும் போகும்
டீக்கடைக்குள் நுழைகிறார்.அங்கே சற்றுமுன் வந்து சேர்ந்த அவரது நண்பர்
அப்துல்லா அப்போதுதான் டீ சொல்லிவிட்டு மாலைமலரை புரட்டிக்
கொண்டிருக்க,..பேச்சு ஆரம்பிக்கிறது....
ராஜா:என்ன மாப்ள இன்னக்கி சீக்கிரம் வந்துட்டாப்ள இருக்கு...
அப்துல்லா:அட! வா மாப்ள!..(தம்பி இன்னோரு டீ’ப்பா,..சக்கர ஜாஸ்தி)...
உன்னப்பத்திதா நெனச்சுக்கிட்டு இருந்தேன்..என்னடா பயள இன்னும்
காணோமே,எப்போவும் நமக்கு முன்னாடியே வந்துருவானேன்னு...சரி போவட்டும்,வேலை
எப்டி போச்சு இன்னைக்கு?..
ராஜா:என்ன எப்பவும் போலதே..காலைல
ரெண்டு அவர் வேலை இருந்துச்சு மாப்ள... அப்ரோ,மேனேஜர் கெளம்பி எங்கையோ
போரதா ரிஷப்ஷன்ல சொல்லிட்டு போயிட்டாரு....
அப்துல்லா:அப்ரோ நீ என்ன பண்ணிருப்பைன்னு நான் சொல்ரேன்....வேலைய அப்டியே மூட்டை கட்டி வச்சுட்டு,ப்ளாக்க ஓப்பன் பண்ணிருப்பையே.....
ராஜா: (பயபுள்ள நம்மள நல்லாவே நோட் பண்ணி வச்சிருக்கு...)வேரென்ன பன்ன
ஒவ்வொரு திரட்டியா ஓப்பன் பண்ணி,நல்லது கெட்டது,கழுத குதுர
எல்லாத்தையும்,படிச்சு முடிச்சாச்சு மாப்ள...ஆமா நீ என்ன ஒழுங்கா..நீ என்ன
பண்ணுன சொல்லு...
அப்துல்லா:அட நம்ம கத’தே உனக்கு
தெரியுமே,..வேலை இருக்கு மாப்ள,ஆனா நம்ம மேனேஜர் டார்கெட் டேட்
குடுத்துட்டு,அப்ரம் நம்ம பக்கம் வரவே மாட்டார்...அப்ரம் என்ன,டைம்
இருக்கு...ஸோ நானும் காலைல கொஞ்ச நேரத்துலையே ப்ளாக்ல நொழஞ்சுட்டேன்...
பேசிக்கொண்டே டீ குடித்துவிட்டு,அக்கவுண்ட் புக்கில் எழுதிவிட்டு இருவரும் வெளியே வருகிறார்கள்
அப்துல்லா: சரி இன்னைக்கு என்ன ஹாட் டாப்பிக் படிச்ச,அத மொதல்ல சொல்லு...
ராஜா:ம்ம்ம்ம்...ஆரம்பத்துல
வெறும் மொக்கையா படிச்சுட்டு இருந்தே.அப்ரம் ஹிட்ஸ் எதுக்கெல்லா அதிகமா
இருக்கோ அதப்பாத்து படிக்க ஆரம்புச்சேன்..ஆனா மாப்ள,ஹிட்ஸ் அதிகமா இருக்கிர
பெரும்பாலான பதிவு,உங்க மதத்தப் பத்திதாண்டா.... போட்டு
வறுத்தெடுக்குறானுவ....எவன்னே
தெரியாது மாப்ள!,அவன் எழுதினதுபூரா மொக்க பதிவுதா, ஒருத்தங்கூட அவன் பளாக்
பக்கம் வந்திருக்க மாட்டான்..ஆனா அவன் பதிவுக்கும், ஹிட்ஸ், காரசாரமா
விவாதம்,...பாத்தா..பதிவு உங்க மதத்தப்பத்தி....நீ இதல்லா படிப்பியா???..
எப்பா முடியலடா...
அப்துல்லா: தெரியும் மாப்ள!..நானும் படிப்பேன்...படிச்சுட்டு,முடிஞ்ச
வரைக்கும் விளக்கம் சொல்லுவேன்...சிலர் கேட்டுப்பாங்க...சிலர் மல்லுக்கு
நிக்கிரதுக்கே வருவாங்க.. அவங்கள கண்டுக்காம போயிட்ரது மாப்ள..வேரென்ன
செய்ய....
ராஜா:ஆனா மாப்ள,அதை படிக்கும் பொது சில மேட்டர்’ல
எனக்கே சில கேள்வியெல்லா வந்துச்சு,சரி அவனுகள்ட்ட பேசி பிரயோசனம்
இல்லைன்னு விட்டுட்டேன்...
அப்துல்லா:சரி...என்ன படிச்ச என்ன கேள்வி வந்துச்சு,என்கிட்ட கேளேன்..பதில் தெரிஞ்சா சொல்றேன்...
ராஜா: (தயங்கியவனாக) இல்ல மாப்ள எல்லா மதத்துலையும்,நல்லது கெட்டது
இருக்கு... நான் ஒன்ன கேக்க,நீ பதிலுக்கு,உன் மதம் மட்டும் யோக்கியமான்னு
கேட்டா,அது நமக்குள்ள நல்லா இருக்காதுலடா...அங்க ஒருத்தன ஒருத்தன்
இப்டித்தா கேட்டுக்கிறானுவ. வேணாம் மாப்ள...அத உடு...
அப்துல்லா: மாப்ள!..பதில் தெரியாதவந்தாண்டா இந்த வேலையெல்லா பாக்குறது...
என்னப்பத்தி உனக்கு தெரியாதா!!??? இவ்ளோ யோசிக்கிற...கேளு! தப்பா
இருந்தாலும் பரவாயில்லை.தெரிஞ்சா சொல்றேன்...இல்லைன்னா கேட்டுட்டு வந்து
சொல்றேன்...சும்மா கேள்ரா,,,நீதா ஏடாகூடமா கேக்க போரியா?இல்ல நாந்தா
அதெப்டி நீ கேக்கலாம்னு நிக்கெப்போரேனா?.. நாம என்ன அப்டியா
பழகிருக்கோம்..சொல்லு மாப்ள...
ராஜா:அதுவந்து...உங்க
மதம்,மத்த மதத்துக்காரங்கள அடிமையா வச்சுருக்க சொல்லுதாமே,மத்த மதத்து
நாட்டோட சண்ட போட்டு,எதிர்க்குரவங்கள கொல்லவும், இருக்குறவங்கள அடிமையாக்கி
கொண்டுவந்து கொடுமைபடுத்தவும் செய்யசொல்லுதாமே... முசுலிம்க எல்லாம்
வன்முறை குணம் கொண்டவங்க அது இதுன்னு...சொல்லிருந்தானுக...ஏ மாப்ள இதபத்தி நீ என்ன சொல்ர...உனக்கு எதுனாச்சும் தெரியுமா?
அப்துல்லா: அட இதுதானா?
ராஜா: என்ன மாப்ள இவ்ளோ சாதாரணமா சொல்ர??
அப்துல்லா:இல்லடா..இத கேட்டு கேட்டு,பதில் சொல்லி சொல்லி அளுத்துப் போச்சு மாப்ள...
ராஜா:அப்டியா?அப்போ உனக்கு இதுக்கு பதில் தெரியுமாடா??..அப்பாட எனக்கு
மனசு அரிச்சுக்கிட்டே இருந்துச்சு மாப்ள...யார்கிட்ட
கேக்குரதுன்னு...யாராச்சும் அசரத்துக்கிட்ட கேட்டா தப்பா நெனச்சுப்பாங்களோன்னு இருந்துச்சு..ஆனா உன்ன கேக்கனும்ன்னு நெனைக்கவே இல்லடா...சரி சொல்லு...
அப்துல்லா:மாப்ள!இஸ்லாத்தில்
போர்,ஏன்,என்னங்கிரது இருக்கே அது பெரிய டாப்பிக்.. அதப்பத்தி பின்னால
பேசுவோம்..மொதல்ல அதுக்கப்பரம் இருக்கிற அடிமைத்தனம் பத்தி பாப்போம்..அதுல
இஸ்லாம் எப்புடி அணுகுதுன்னு தெரிஞ்சா,மத்த மேட்டர்’ல அவங்க சொல்ரது எல்லா
எந்த அளவுக்கு உண்மைன்னு நீயே முடிவுபண்ணிக்கலாம்...
ராஜா:அதுவும் சரிதே மாப்ள...மொதல்ல அதப்பத்தி சொல்லு..நானும் கேகனும்ன்னு தா இருந்தே,,,இப்போதா ஒன்னொன்னா நியாவகம் வருது...
அப்துல்லா:மாப்ள ஒன்னொன்னா பொறும்மையா கேளு சொல்றேன்..என்ன...
ராஜா: அதுசரி மாப்ள,முசுலீம்க,அந்த காலத்துல,வேர நாட்டுல இருந்து
புடுச்சுட்டு வர்ர வேர மதத்து கைதிகளைலாம்,அடச்சு வச்சு,அவங்களை
அடிமைகளாக்கி,ரொம்ப கொடும படுத்துவாங்களாமே..அவங்களை கேக்க ஆளுகலே
இல்லாம,பாவம் சொல்ல முடியாத கொடுமைகள் இருந்துச்சாமே!அது நெசமா? அதப்பத்தி
தெரிஞ்சா சொல்லேண்டா.
அப்துல்லா:மாப்ள!அக்காலத்துல
அடிமைமுறைங்கிறது தவிர்க்க முடியாத ஒன்னு... கைதிகளை அடைத்து வைத்து
சோறுபோட,பராமரிக்கவுலா சத்து இல்லை.அதனால, அவங்கள,மக்களுக்கும்,போரில்
கலந்துகிட்டவங்களுக்கும் கொடுத்து, அவங்ககிட்ட வேலை
வாங்கிக்கவும்,பதிலுக்கு அவங்கலை பராமரிக்கவும் அனுப்பி விடுவார்கள்..ஆனா
அவங்கள யாரும் கேக்காமைலாம் இல்லடா...இஸ்லாமே அவங்களுக்கான உரிமைகளை அழகா
பாதுகாக்கக்கூடியதாக இருந்துச்சு,அதுமட்டும் இல்லாம இந்த அடிமைமுறை
காலப்போக்குல மறைந்து போகவும் இஸ்லாம் வழிவகுத்துச்சு...இந்த மேட்டர்
பெரும்பாலும் யாருக்கும் தெரியாது..
ராஜா:அப்டியா?...என்னடா சொல்ர....!!!
அப்துல்லா:ம்ம்ம் சொல்றேன் கேளு...அதாவது மாப்ள,இஸ்லாம் வர்ரதுக்கு
முன்னாடியும் அக்காலத்துலையே அடிமை முறை இருந்துச்சுதான்..அவங்களை யாரும்
கேக்க முடியாது... சித்ரவதைன்னா,உங்கூட்டு எங்கூட்டு சித்ரவதை
இல்லை...அவங்கள அவங்களோட எஜமான் கொடூரமா கொன்னேபோட்டாலும் கேக்க
நாதியில்ல...ஆனா இஸ்லாம் வந்ததுக்கப்பரம், ஒவ்வொன்னுக்குமான சட்டதிட்டங்கள்
அல்லாஹ்,அப்ரம் நபி (ஸல்) மூலமா முஸ்லிம்களுக்கு வந்துகிட்டே
இருந்துச்சு..அதுல அடிமைகளா இருந்தவங்களும் விதிவிலக்கில்ல...அவங்களோட
உரிமைகளையும் இஸ்லாம் கவனத்துல கொள்லாம இல்ல....அடிமைகள் மீதான
எஜமானர்களின் எல்லை என்னாங்கிறத தெளிவா நபி (ஸல்) சொல்லிருக்காங்க..அத
மீறுறவங்கள கண்டிச்சு இருக்காங்க,அதுமட்டும் இல்லாம.....!!! இரு உனக்கு
தெளிவா புரியனும்ன்னா அது சம்பந்தமான தெளிவான ஹதீஸயே உனக்கு சொல்றேன்...
ம்ம்ம்ம்ம்......ஸஹீஹ் முஸ்லிம்’ல பதியப்பட்ட 3411வது ஹதீஸை ஹிலால் பின் யசாஃப் (ரஹ்) என்பவர் அறிவிக்கிறார்....அதாவது..
ஒரு முதியவர் அவசரப்பட்டு தம் அடிமைப் பெண்ணின் முகத்தில்
அறைந்துவிட்டார். அவரிடம் சுவைத் பின் முகர்ரின் (ரலி) அவர்கள்,
"அடிப்பதற்கு அவளது மென்மையான முகம்தான் கிடைத்ததா? பனூ முகர்ரின்
குடும்பத்தின் ஏழு உறுப்பினர்களில் நானும் ஒருவன் ஆவேன். எங்களிடம் ஒரே ஓர்
அடிமைப் பெண் மட்டுமே இருந்தாள். அவளை எங்களது குடும்பத்துச் சிறியவர்
ஒருவர் அடித்துவிட்டார். அப்போது அவளை விடுதலை செய்துவிடுமாறு அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டார்கள்'' என்று கூறினார்கள்.
அதுமட்டுமில்லாம ஹதீஸ் 3408ல அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒருவர்
தம் அடிமையை அறைந்துவிட்டால், அல்லது அடித்துவிட்டால், அவரை விடுதலை செய்து
விடுவதே அதற்குரிய பரிகாரமாகும் என தெளிவாக சொல்லிவிட்டார்கள்,,
ராஜா:என்ன மாப்ள சொல்ர???..அப்போ அடிமை ஈஸியா விடுதலை ஆகிடலாமே...எந்த எஜமான் தா தனக்கு கெடச்ச அடிமைய அடிக்காம இருப்பான்...
அப்துல்லா:ம்ம்ம்..நீ சொல்றது சரிதா மாப்ள,...ஆனா பாரு இவங்களோட வேலைகள
செய்றதுக்கு கட்டாயம் ஆள் தேவை...அக்கால,அதுவும் பாலைவன வாழ்க்கைல...எல்லா
வேலையும் தானே செய்துக்கிறதுங்கிறது அத்தனை சுலபமான காரியம்
இல்லையே....அதும் வயதானவங்க.. பணக்காரங்க... இவங்காளாலைலாம் வேலைக்கு ஆள்
இல்லாம முடியாதே....
ஸோ..கட்டாயம் ஒரு அடிமை வேலையாள் வேணும்..ஆனா அவன்
மேல கைவச்சுட்டா, அவன விடுதலை செய்தே ஆகனும்...அப்போ யார்தா அடிப்பாங்க
சொல்லு....
ராஜா:அதுவுஞ்சரிதா மாப்ள...ஆனா எத்துன பேர்தா இப்டி அடிச்சதையும்,அதனால விடுதலை செய்ரதையும்,செய்யப்போராங்க...அவங்க அடிமைய மெரட்டி வச்சுருக்கலாம்ல... அப்போ அவங்க கஷ்டப்படுரது யாருக்கு தெரியப்போகுது??
அப்துல்லா:மாப்ள! நீ கேக்குறது வாஸ்தவந்தா...ஆனா இந்தக்காலம் மாதிரி இல்ல
அந்த கால இஸ்லாமிய ஆட்சி..யாரும் போய் நேரடியாவே ஆட்சியாளர்களை
சந்திக்கலாம்...அப்டி இருக்கும் போது இந்த அடிவாங்கிய அடிமைகளுக்கு என்ன
தடை இருக்கும் அவங்க விடுதலையாக ஒரு பொன்னான வாய்ப்பான தன் எஜமான் அடித்த
சம்பவத்தை முறையிட???..ம்ம்..
அதுமட்டும் இல்லாம,அக்கால மக்கள்
தான் ஒரு துரும்பை நகர்த்தினாலும்,அது அல்லாஹ்வுக்கும்,அவனது தூதருக்கும்
பொருத்தமான வழியில்தான் செய்ய விரும்புவார்கள்..அவர்களின் முழுவாழ்வுமே, அல்லாஹ்,நபி(ஸல்),மறுமை,சொர்க்கம்,நரகம்,
அடிப்படையில்தான்... தான் மறைமுகமாக ஒரு காரியத்தை செய்துவிட்டாலும்,அதை
யாரும் பாக்காலைனாலும்,அல்லாஹ் பாக்குறான்கிற நம்பிக்கை அவர்களின்
உள்ளத்தில் வழுவாக இருக்கும் அதனால் அவர்கள் அப்படி செய்ய சாத்தியம்
இல்லை...
அதுமட்டும் இல்லாம,நபி(ஸல்) தங்கள் மீது ஏதாவது கோபப்பட்டு
விட்டாலோ,அல்லது சின்ன தவறை செய்து விட்டாலோ, அதுக்காக நாள்பூரா அழுது
அல்லாஹ்விடம் மன்னிப்புகேட்கும் அளவுக்கு, பயபக்தியோட இருந்தவங்க அவங்க...
இது சம்பந்தமான இன்னோரு ஹதீஸ உனக்கு சொன்னா புரியும்ன்னு நெனைக்கிறேன்...
ஸஹீஹ் முஸ்லிம்’ல பதியப்பட்ட 3414வது ஹதீஸை அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) என்பவர் அறிவிக்கிறார்....அதாவது..
நான் (ஒரு முறை) என் அடிமையை அடித்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்குப்
பின்னாலிருந்து யாரோ, "அபூ மஸ்ஊதே நினைவிருக்கட்டும்! இவர்மீது
உமக்கிருக்கும் அதிகாரத்தைவிடப் பன்மடங்கு அதிகாரம் உம்மீது அல்லாஹ்வுக்கு
இருக்கிறது'' என்று கூறுவதை நான் செவியுற்றேன். நான் திரும்பிப்
பார்த்தேன். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். உடனே
நான், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் உவப்புக்காக (இவரை நான் விடுதலை
செய்துவிட்டேன்) இவர் சுதந்திரமானவர்'' என்று கூறினேன். அப்போது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அறிந்துகொள்! நீ இவ்வாறு
செய்திருக்காவிட்டால் "நரகம் உம்மை எரித்திருக்கும்' அல்லது "நரகம் உம்மைத்
தீண்டியிருக்கும்'' என்று கூறினார்கள்.
ராஜா:மாப்ள சத்தியமா
சொல்றேண்டா..நீ சொல்றத என்னால நம்பவே முடியல... எதிரிகளையும் மத்த
மதத்துக்காரங்களையும் கொலை செஞ்சா,முசுலிம்களுக்கு சொர்க்கம்
இருக்குன்னுல்ல,நா கேள்விபட்டு இருக்கேன்..அதனால முசுலிம்க எல்லா மத்தவங்கள
அநியாயமா கொலை செஞ்சதாவும்ல சொல்ராங்க...ஆனா நீ சொல்ற மேட்டர் அதுக்கு
ஆப்போஸிட்டாவுல இருக்கு...
இப்போ நா சொன்னது உண்மையா இருந்தா,அடிமைகள
மட்டும் ஏன் இப்டி அடிக்கக்கூட கூடாதுன்னு சொல்லனும்??..அதும் அவங்க மத்த
மதத்துக்காரங்கவேர,அல்லா மத்த மதத்துக்காரங்கள கொல்லச்சொல்லிருந்தா???
எப்டி அவங்கள அடிச்சாக்கூட முசுலிம்களுக்கே நரகம்ன்னு சொல்லிருப்பாரு???..
அப்துல்லா:ஹ்ம்ம்...நீ கேக்குறது சரிதா மாப்ள!!!..யாராவது,கொலையே செய்யச்
சொல்லிட்டு,அதுக்கு உனக்கு சொர்க்கம்ன்னு சொல்லிட்டு,அப்ரம் அதெ ஆள பராமரி,
அடிக்கக்கூட செய்யாத, அடிச்சா மவனே உனக்கு நரகம்ன்னு சொல்லுவாங்களா???..
அதுமட்டும் இல்ல இன்னும் இருக்கு,அதக்கேட்டா நீ இன்னு ஆச்சிரியப்படுவ...
ராஜா:என்னதது??? சொல்ரா!!!...
அப்துல்லா:ம்ம்...அதாவது,இப்ப
நம்ம ஊர் பழக்கத்த எடுத்துக்கோ,வீட்டு வேலைக்காரி, வேலை எல்லா
செஞ்சு,சமச்சு எல்லா முடிக்கிராங்கன்னு வச்சுக்கோ,அவங்கல எப்டி நம்மூர்ல
நடத்துவோ...சொல்லு...
ராஜா:என்ன!!!...நாம டைனிங் டேபிள்ல
உக்காந்து சாப்ட்டுட்டு,மிச்சம் இருக்கிறத, அவங்களுக்குன்னே ஒரு தட்டு
வச்சிருப்போம்ல,அதுல போட்டு அடுப்பாங்கரைலையோ, இல்ல கொல்லைலயோ ஒக்காந்து
சாப்புட சொல்லுவோம்...ஆமா இதை ஏங்கேக்குர....
அப்துல்லா:விஷயம் இருக்கு மாப்ள..அதாவது நமக்கு எந்த உரிமையும் இல்லாத
சம்பளத்துக்கு வேலைபாக்குர வேலையாளுக்கு நாம குடுக்குர மரியாதை இப்டின்னா,
இன்னும் அடிமைன்னா நாமல்லா என்ன பண்ணுவோம்...ஆனா இஸ்லாம் அடிமைகள
அரவணைக்கிர இன்னோரு விஷயத்த சொல்றேன் கேளு...
ஸஹீஹ் முஸ்லிம்’ல பதியப்பட்ட 3421வது ஹதீஸை அபூஹுரைரா (ரலி) என்பவர் அறிவிக்கிறார்....அதென்னான்னா!!!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவருடைய பணியாளர் வெப்பத்தையும் புகையையும் தாங்கிக்கொண்டு
உணவு சமைத்துக் கொண்டுவந்தால், அவரையும் தம்முடன் அமரச் செய்து அவர்
உண்ணட்டும். உணவு குறைவானதாக இருந்தால் அதில் ஓரிரு கவளங்களையாவது அவரது
கையில் வைக்கட்டும்.அப்டீன்னு.........
ராஜா:எது???..அடிமைகள சரிக்கு சரியா உக்காரவச்சு சாப்படு
போடனுமா???..மாப்ள அப்ரோ என்னடா அடிமை???..அவன அடிமைன்னு சொல்ரதுக்கு
வாய்ப்பே இல்லியே!!!
அப்துல்லா:ம்ம்ம்..இன்னும் கேளு...
ஸஹீஹ் முஸ்லிம்’ல பதியப்பட்ட 3419வது ஹதீஸை மஅரூர் பின் சுவைத் (ரஹ்) என்பவர் அறிவிக்கிறார்....
நான் அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள்மீது ஒரு மேலங்கியும் அவர்களுடைய
அடிமை யின் மீது அதே மாதிரியான மேலங்கியும் இருப்பதைக் கண்டேன். நான் அது
குறித்து அவர் களிடம் வினவியபோது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ஒரு (அடிமை) மனிதரை ஏசும்
போது, அவருடைய தாயைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசிவிட்டேன். உடனே அம்மனிதர்
நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினார். அப்போது நபி (ஸல்)
அவர்கள் (என்னிடம்), "நீர் அறியாமைக் காலத்துக் கலாசாரம் உள்ள மனிதராகவே
இருக்கின்றீர். (அடிமைகளான) அவர்கள் உங்கள் சகோதரர்களும் ஊழியர்களும் ஆவர்.
அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்துள்ளான். யாருடைய
ஆதிக்கத்தின் கீழ் அவருடைய சகோதரர் இருக்கிறாரோ அவர் தாம் உண்பதிலிருந்து
அவருக்கு உணவளிக்கட்டும். தாம் அணிவதிலிருந்து அவருக்கு அணியத் தரட்டும்.
அவர்களது சக்திக்கு மீறிய பணியைக் கொடுத்து அவர்களைச்
சிரமப்படுத்தாதீர்கள். அவ்வாறு அவர்களது சக்திக்கு மீறிய பணியை
அவர்களுக்குக் கொடுத்தால் அப்பணியில் அவர்களுக்கு நீங்களும்
ஒத்துழையுங்கள்'' என்று கூறினார்கள்.
இதுதா உள்ளதுலையே
ஹைலைட்டு...அடிமைகள் எஜமானர்களுக்கு சகோதரர்களாகவும், அவர்கள் அணிவதையே
அடிமைகளுக்கு அணியத்தரவேண்டும் என்றும்,அவர்கள் உண்பதையே அவர்களுக்கும்
தரவேண்டும்ன்னு சொன்ன நாம ஒத்துப்போமா??? ம்ம்ஹும்... ஆனா அவங்க அதை
நடைமுறைபடுத்துனாங்க...
அதுமட்டுமில்லாம,அளவுக்கு மீறி வேலை
கொடுக்கக்கூடாது என்பதும்,அப்படி கொடுத்தால் எஜமானன் அவனுக்கு
உதவிபுரியவேண்டும் என்பதும் கட்டளை.
இனோன்னு...நாமெல்லா நெனைக்கிற
மாதிரி முஸ்லிம்களுக்கு,பிற மதத்தவங்கதா அடிமையா இருப்பாங்கன்னு...ஆனா
அடிமைகள்ல முஸ்லிம்களும் இருந்திருக்காங்க....இதை ஹதீஸ் 3422
மெய்ப்பிக்கிறது..கடைசி கடைசியா அடிமைகளுக்கு இஸ்லாம் வழங்கிய சிறப்பை
சொல்ல ஒரே ஒரு ஹதீஸ மட்டும் சொல்றேன்...
அது என்னான்னா...ஸஹீஹ் முஸ்லிம்’ல 3423 வது ஹதீஸை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
"அபூஹுரைராவின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! அல்லாஹ்வின்
பாதையில் அறப்போர் புரிவதும், ஹஜ்ஜும், என் தாய்க்குச் செய்ய வேண்டிய
கடமையும் இல்லாமலிருந்தால் நான் (ஒருவரின்) அடிமையாக இருக்கும் நிலையில்
இறப்பதையே விரும்பியிருப்பேன்'' என்றார்கள்.
ஒரு சுதந்திரமான முஸ்லிமே
அடிமையா இருந்து மரணிக்க ஆசைப்படும் அளவுக்கு அடிமை” என பொருள்பட
சொல்லப்பட்டவர்கள் இஸ்லாத்தில் சிறப்புப்பெற்று இருந்துள்ளனர்.
மேலும்
இப்படியாக பேணப்பட்ட அடிமை முறையானது,மேலும் சிலர் செய்துவிடும்
தவறுகளுக்கு பரிகாரமாகவும்,நன்மையை கருதியும்,அடிமை உரிமை விடப்பட்டு,
காலப்போக்கில் அடிமைகள் அருகி...குறுகிய காலத்திலே அடிமை முறை இல்லாமல்
போனதற்கும் இஸ்லாம் வகுத்த சட்டங்களே காரணம்...
இப்போ என்ன சொல்ர????
ராஜா:(மலைத்தவனாக)...டே நண்பா! ஒன்னும் சொல்ரதுக்கே இல்லட...நா என்னமோன்னு
நெனச்சுட்டு இருந்தேன்....ஒரு அடிமை விஷயத்துல இவ்ளோ சட்டதிட்டங்கள்
இருக்கா??? அதும் ஒரு முஸ்லிம் அடிமையா இருக்க விரும்பக்கூடிய அளவுக்கு
சிறப்பானதா????...இந்தக்காலத்துலகூட
சிந்திக்கமுடியாத அளவுக்கு இஸ்லாம் அடிமைகளை,சே,,இந்த வார்த்தையே
தப்பு..வேலையாள்களை நடத்தியவிதம்,என்னை பிரம்மிக்க வெக்கிது மாப்ள.....என்ன
சொல்ரதுன்னே தெரியலடா....
இன்னும் நெரைய கேள்விகளும்,குழப்பங்களும்
எனக்கு இருக்கு....அடுத்து சந்திக்கும் போது பேசுவோம்டா....இவ வேர மிஸ்கால்
அடிக்க ஆரம்பிச்சுட்டா!..இனியும் லேட்டா போனா டின்னு கட்டிடுவா
மாப்ள....நேரம் ஆகுது..நா கெளம்புறேன்,,..
அப்துல்லா:ஓக்கே
மாப்ள....நீ மொதல்ல கெலம்புரியோ இல்லையோ,நா கெலம்புறேன்... பேசுனதுல நேரம்
போனதே தெரியலையப்பா!!!..உன் தங்கச்சிய பத்திதா உனக்கு நல்லா
தெரியுமே!!....ஸேம் ப்ளட்....
ஜசகல்லாஹ் கைர் ரஜின்
இவன் ,
முஹம்மத் இக்பால்,
நிர்வாகி,
இஸ்லாமிக் தாவா குழுமம் (http://www.facebook.com/groups/islamicdawah1)