Digital Time and Date

Welcome Note

Saturday, January 12, 2013

அலெக்ஸ் பாண்டியன் விமர்சனம்

படத்தோட ஓப்பனிங்ல வில்லன்களால் துரத்தப்படுற அனுஷ்கா ரயில்வே ட்ராக்குல ஓடி ட்ரெயின் ஏற, அப்படியும் அவரைப் பிடிக்கும் வில்லன்களை நையப்புடைக்கும் கார்த்தி. 30-40 பேரை அடிக்கிறார். தாவி தாவி உதைக்கிறார். குறுக்கால போய் ட்ரெயின புடிக்க ட்ரை பண்றார். மிஸ் ஆயிடுது. மறுபடி ஒரு 20பேர அடிக்கிறார்.

அப்புறம் ஒரு பாலத்துக்கு கீழ ட்ரெயின் போயிட்டு இருக்கப்ப பாலத்துக்கு மேலே கார்த்தி நிக்கிறார்((அப்ப மிஸ் ஆச்சுல்ல அதே ட்ரெயின்.. இவரு பைட்டு முடிச்சுட்டு வரட்டும்னு ட்ரெயின் ட்ரைவர் ஓரமா நிப்பாட்டிட்டு ஒரு டீ சாப்பிட்டிருப்பார் போல). ட்ரெயின் மீது குதித்து இன்னும் ஒரு 10 பேரை தாவி உதைத்து, கொஞ்ச நாளாய் தமிழ் சினிமாவில் காணமல் போயிருந்த ரயில் பெட்டிக்கு மேலே நடக்கும் சண்டையை மீண்டும் போட்டு கதாநாயகியைக் காப்பாற்றுகிறார்.

கட் பண்ணீங்கண்ணா சந்தானத்தோட வீடு. அவருக்கு அழகான 3 தங்கச்சிங்க(நிகிதா, சனுஷா, அப்புறம் யாரு சார் அந்த அழகான புதுப்பொண்ணு?). வீட்டுக்குள் உள்ளே படுத்திருக்கிறார் கார்த்தி. அந்த 3 தங்கைகளும் கார்த்தி மீது லிட்டர் லிட்டராய் ஜொள்ளு விடுகிறார்கள். மாராப்பை விலக்கியபடி தான் பேசுகிறார்கள். கேரம் போர்டு விளையாடும் போது இந்த காய அடி மாமா என அப்பாவியாய் பேசுகிறார்கள். நெஞ்சோடு நெஞ்சு இடிப்பதை விளையாட்டு என நினைத்து விளையாடுகிறார்கள். அவர்களை குனிய வைத்து இடுப்பை பிடித்து தாவ முயலுகிறார். இப்படி இன்னும் சில விளையாட்டுகள் விளையாடுகிறார்கள். எல்லா விளையாட்டிலும் அந்த 3 தங்கைகளும் சேலை விலகிய மார்போடும், இடுப்போடும் அடக்கமாய் இருக்க, அந்த தங்கைகளை காப்பாற்ற போராடுகிறார் சந்தானம். போதாதுக்கு அவரது அம்மா காரக்டரையும் இழுக்கும் இரட்டை அர்த்த டயலாக்குகள். அது என்ன வீடா இல்ல சிலுக்கூர்பேட்டை ப்ராத்தல் ஏரியாவான்னு நமக்கு கொஞ்சமல்ல நிறையவே சந்தேகம் வரும். இதுக்கிடையில இந்த 3 பேரேட சேர்ந்து ஆடுற பாடல்.. அப்புறம் வயசுக்கு வந்ததைக் கொண்டாடும் இன்னொரு அர்த்தமுள்ள பாடல் வேற. இடையில ஆக்சன் படம்னு காமிக்க ஒரு சம்பந்தம் இல்லாம சண்டை வேற.


அப்புறமா இன்டர்வல் டைம்ல அனுஷ்கா மீண்டும் வர்றாங்க. இவரு சி.எம் பொண்ணு. இவர தேடி அலையுற குரூப்போட தலைவர் மிலிந்த் சோமன். ட்ராகுலா படத்துல வர்ற மாதிரி முழங்கால் அளவுக்கு ரெண்டு பக்கமும் காத்துல பறக்குற கோட் என்னேரமும் போட்டிருக்கிறார் . கூடவே நாலு,ஸ்கார்ப்பியோ, 40 கோட் போட்ட அடியாட்கள் என லாஜிக் மாறாமல். அவங்க மறுபடி கார்த்தி, அனுஷ்காவ கண்டுபிடிச்சு துரத்த காட்டுக்குள்ள போறாங்க.

ஒரு ஃப்ளாஸ்பாக் சொல்றாங்க. அது என்னன்னா... மாற்றான் மாதிரி அமெரிக்கால தடை செஞ்ச மருந்த இங்க விக்க வற்றாரு வில்லன். முதலமைச்சர் அனுமதி மறுக்குறாரு. வில்லன் உடனே ஒரு சாமியார் உதவியோட திட்டம் போட்டு சி.எம் பொண்ண கடத்த சொல்றாரு. கடத்துற ஆள்தான் கார்த்தி. கடத்தி காட்டுக்குள்ள போறாரு. அங்க ரெண்டு பேரும் ஏதோ பிக்னிக் வந்த மாதிரி ப்ரீயா திரியுறாங்க. இடையில காமெடி பண்றேன்னு மனோபாலாவை போட்டு கட்டிவச்சி மாறி மாறி அடிக்கிறாங்க. சி.எம்.பொண்ணு அனுஷ்கா அதுவரைக்கும் ஆம்பளைங்களையே பார்த்ததில்லை போல.. இவரு சறுக்கி விழுந்தப்ப கார்த்தி காப்பாத்த உடனே லவ்வு வந்துடுது. வில்லன்கிட்ட ஒப்படைக்க போறப்ப இது மக்களை பாதிக்கிற விசயம் இத நீ செய்யனுமான்னு அனுஷ்கா கேட்க உடனே கார்த்திக்கு ஞானோதயம் வந்து வில்லன்களோட சண்டை போட்டு அனுஷ்காவ காப்பாத்துறாரு.. அப்ப ஓடுனதுதான் பர்ஸ்ட் சீன்.

இப்போ ப்ளாஸ் பேக் முடிஞ்சாச்சா.. மறுபடி சந்தானத்தோட காட்டுக்குள்ள இன்னும் நாலு சுமாரான காமெடி.

முதல்வரோட பி.ஏ. பிரதாப் போத்தனும் இதுல உடந்தைன்னு சின்ன குழந்தை கூட யூகிக்ககூடிய டிவிஸ்ட ரொம்ப பெரிசா பில்டப் பண்ணி காமிக்க, மறுபடி வில்லன்களிடம் அனுஷ்காவும், கார்த்தியும் மாட்டிக்கொள்ள, மறுபடி அவர்களிடமிருந்து அனுஷ்காவை கார்த்தி எப்படி காப்பாத்துறார்ங்கிறது கிளைமாக்ஸ். எப்படி காப்பாத்துறார்?


அதுதான் படத்துலயே ரொம்ப ஹைலைட்.
கட்டிக்கிடக்கிற கார்த்திய வில்லன்கள் சுமனும், மிலிந்த் சோமனும் புட்பாலால் உதைத்து டார்ச்செர் செய்கின்றனர். (10-15 வருசம் முன்னாடி வந்த அர்ஜீன் படங்கள்ள சரண்ராஜ் மாதிரி வில்லன்கள் இப்படித்தான் கிரிக்கெட் பாட் வைச்சு, க்ளவுஸ், லெக்பேட்லாம் கட்டி, அர்ஜீனை கிரிக்கெட்பாலால அடிச்சு டார்செர் பண்ணுவார்) அப்ப, நீங்கல்லாம் ஆம்பளையா முடிஞ்சா அவரை அவுத்துவிட்டு அடிங்க என காலங்காலமாய் கதாநாயகிகள் க்ளைமாக்ஸில் சொல்லும் டயலாக்கை அனுஷ்காவும் மறக்காமல் சொல்ல அப்புறம் என்ன? அதை மட்டும் நீங்க வெள்ளித்திரையில் தான் கண்டுகளிக்கனும் சொல்லிப்புட்டேன் ஆமாம்.

சந்தானம் ஆரம்ப காலத்துல விஜய் டிவில அப்ப வந்த மொக்கை படங்களை கண்ணாபிண்ணான்னு கலாய்ச்சு பிரபலம் ஆனார். இப்ப அவரும் அதையெல்லாம் விட படு மொக்கையான படத்தில். பாவமாய் இருக்கிறது. அதிலும் 3 தங்கைகளை வைத்து நடக்கும் ஆபாசக்கூத்து. (by the way, படத்துக்கு யூ சர்ட்டிபிகேட்). இப்படி இன்னும் எத்தனை படங்களில் தான் ஹீரோக்களுக்கு தங்கைகளை வைத்து செட்டப் பண்ணும் அல்லது காப்பாற்றும் கதாபாத்திரத்தை தாங்கிப்பிடிப்பாரோ. இந்த கடுப்பில் தான் கண்ணா லட்டு திண்ண ஆசையா போல ரூட் மாறிவிட்டார் போல.
கார்த்திக்கு சகுனியில் ஒரு சறுக்கல் அதையடுத்து என்ன மாதிரி படம் செய்து தன் மார்க்கெட்டை சரி செய்ய முயலுவார்னு ஒரு யோசணை இருந்தது.

நடிகர்கள் சாதாரணமாய் இருக்கும் போது நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கிறார்கள். மாஸ் ஹீரோ என்ற பெயரும் மார்க்கெட்டும் வந்ததும் மாஸ் படம் என்ற பெயரில் மொக்கை கதைகளை தேர்ந்தெடுக்கிறார்கள். என்ன எழவு லாஜிக்கோ.
இப்பல்லாம் தெலுங்குப் படங்களே ரொம்ப மாடர்ன்னா, out of the box ஆயாச்சு. ஆனா இவங்க தமிழ்-தெலுங்கு இரு மொழியில எடுக்குறேன்னு 20 வருசத்துக்கு முன்னாடி வந்த தெலுங்குப்படங்களோட போட்டி போட்டு எடுத்துருக்காங்க.

சந்தானத்தின் சில டயலாக்குகள் சிரிக்க வைக்கின்றன. 'கெஸ்ட்னா காய்ச்சல் மாதிரி அன்னிக்கே போயிடனும். ஜான்டிஸ் மாதிரி மாசக்கணக்கா இருக்ககூடாது', 'சிக்ஸ் பேக் இல்லாட்டியும் நல்ல ப்ளாஸ் பேக் வைச்சிருக்கே.' ரகத்தில்.

படத்தில் நம்மை பிரமிக்க வைக்கும் ஒரு விசயம். சண்டைக்காட்சிகள். முன்னெல்லாம் ரோப்புல கட்டி தூக்கி எடுத்த பைட்லாம் பார்த்தா காமெடியா இருக்கும். கால் படாமலே வெறும் சவுண்ட் குடுத்துட்டு 40 அடி தள்ளி போய் விழுவாங்க. சின்னபுள்ளத்தனமா ஏர்ல பறப்பாங்க. இடுப்புல ரோப் கட்டியிழுக்குறது அப்படியே தெரியும். இந்தப் படத்தில் ஒரு மசாலா பட சண்டைக்காட்சியாய் பார்க்கும் போது மிகச் சிறப்பாய் எடுத்துள்ளனர். நிறைய முயற்சி எடுத்திருக்கிறார்கள் கார்த்தியும் மற்ற அனைவரும். சண்டைகாட்சி இயக்குனர் யார் என்பது தெளிவாய் தெரியவில்லை. பாராட்டுக்குரியவர்.

இயக்குனர் சுராஜ் படங்களில் வழக்கமாய் காமெடி வொர்க்அவுட் ஆகும். தலைநகரம், மருதமலை போன்றவற்றின் வெற்றியை உறுதி செய்ததில் காமெடியின் பங்கு பெரியது. அந்த நம்பிக்கையில் இந்தப் படத்திலும் முதல் பாதி முழுவதும் கதைக்கு வேலையே வைக்காமல் காமெடி என்ற ஒன்றையே நம்பியிருக்கிறார். ஆனால் காமெடி தான் வராமல் ஏமாற்றிவிட்டது.

முதல் 15 நிமிடங்களில் காட்டிய வேகமும் விறுவிறுப்பும் அடுத்த 1 மணி நேரத்திற்கு காணமல் போனது, காமெடிக்காக கதையை கடைசி பெஞ்சுக்கு தள்ளியது, தெலுங்கு ஆடியன்ஸையும் கவர் பண்ண வேண்டும் என்பதற்காக பழைய தெலுங்கு பார்முலாவுக்குள் மாட்டிக்கொண்டது, கார்த்தியின் மீது அனுஷ்காவிற்கு காதல் வருவதற்கான சரியான காட்சிகளை அமைக்காதது, அனுஷ்காவின் காரக்டரை டெவலப் பண்ணாதது, சந்தானத்தின் 3 தங்கை கதாபாத்திரங்களை ஏதோ தப்பான இடத்தில் ஏனோ தானோவென அலையும் பென்களை போல சித்தரித்தது, ஒரு சி.எம் பெண்ணை கடத்திவந்தால் கடத்தியவனின் மனநிலை, கடத்தப்பட்ட பெண்ணின் மனநிலை இரு இரண்டையும் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் விளையாட்டுத்தனமாய் காட்சிகள் வைத்தது, வில்லன்களை ஸ்கார்ப்பியோ, கோட் சூட், கெக்கேபிக்கே சிரிப்பு, கெட்ட சேதி சொன்ன தன் ஆளை சுடும் லூசுதனம் தாண்டி டெவலப் பண்ணாதது, 6 பெரிய கார்களில் 10 பேர் மெஷின் கன்னால் விடாமல் ஆயிரக்கணக்கான குண்டுகள் பொழிய, 10அடி முன்னே ஒரு மாருதி வேனில் ஒரு முடி கூட உதிராமல், கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் மூவரும் தப்பி வருவது, இப்படி ஏராளமான இடங்களில் இயக்குநர் சுராஜ் சறுக்கிவிட்டார்.

திரைக்கதை பலவீனமாய் போய்விட்டால் கார்த்தி போன்ற திறமையான நடிகர்களின் ஈடுபாடும், அனைத்து டெக்னீஷியன்களின் உழைப்பும் வீணாய்தான் போகும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கும் பாடம் தான் இந்தப் படம்.

2012ல் தமிழ்சினிமாவில் நிறைய ஆரோக்கியமான படங்கள் வந்து வெற்றி பெற்றது. மசாலா-கமர்சியல்-பிரம்மாண்டம் என்ற பெயரில் வந்த மாற்றான்,பில்லா 2, தாண்டவம், சகுனி, முகமூடி போன்றவை காணாமல் போனது. 2013 ல் இது ரொம்ப சுமாரான ஸ்டார்ட். அதுவும் மாற்றானோடு ஒப்பிட்டால் இது இன்னும் பல படிகள் கீழே.

பிஸினெஸாய் பார்க்கும் போது இன்றைக்கு ரிலீஸ் செய்தது செம லக் என்று தான் சொல்லவேண்டும், விஸ்வரூபம் கான்சல், வேறு எந்த படமும் போட்டிக்கு இல்லாமல் இரண்டு நாள் புல் வசூல் ஆகும். அதன்பின் சமர், கண்ணா லட்டு திண்ண ஆசையா படங்களின் ரிசல்டைப் பொறுத்து இதன் விதி அமையும்.

SoundCameraAction.com Rating: 1.5

நன்றி
சவுண்ட் கேமரா ஆச்சன்

வரலாற்றில் இன்று

ஜனவரி 12
வரலாற்றில் இன்று

ஜனவரி 111779: மனிப்பூரின் மன்னராக சிங் தாங் கோம்பா முடிசூடினார்.

1879: தென்னாபிரிக்காவில் ஆங்கிலேயே - ஸுலு யுத்தம் ஆரம்பமாகியது.

1922: மனிதர்களின் நீரிழிவு நோய் சிகிச்சைக்காக முதல் தடவையாக இன்சுலின் பயன்படுத்தப்பட்டது.

1923: முதலாம் உலக யுத்தத்திற்கான இழப்பீட்டை செலுத்த வலியுறுத்துவதற்காக ஜேர்மனியின் ருஹ்ர் பிராந்தியத்தை பிரெஞ்சு, பெல்ஜிய படைகள் கைப்பற்றின.

1942: கோலாலம்பூரை ஜப்பான் கைப்பற்றியது.

1962: பெருவில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவினால் சுமார் 4000 பேர்பலி.

1972: கிழக்கு பாகிஸ்தான் தனது பெயரை பங்களாதேஷ் என மாற்றிக்கொண்டது.

Friday, January 11, 2013

எய்ட்ஸ் நோய்க்கான புதியதடுப்பூசி தயார்: 32 நோயாளிகளுக்கு சோதனை வெற்றி.

ஸ்பெயின் நாட்டில் உள்ள பாரசிலோனா பல்கலைக்கழக பேராசிரியர் பெலிப் கார்சியோ
தலைமையிலான விஞ்ஞானிகள், எயிட்ஸ் நோயைதற்காலிகமாக கட்டுப்படுத்த புதிய
தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

உலகம் முழுவதும் தற்போது, 3
கோடியே 40 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர் என்று கணக்கெடுப்பு
சொல்கிறது. இந்த எய்ட்ஸ் நோய்க்கு இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப்
படவில்லை என்றாலும், எய்ட்ஸ் நோயை ஓரளவுக்கு கட்டுப் படுத்தும் மருந்துகளை
தற்போது எய்ட்ஸ் நோயாளிகள் உபயோகித்து வருகின்றனர்.

இந்நிலையில்
எய்ட்ஸ் நோய்க்கான புதிய தடுப்பூசி ஒன்றை ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள்
கண்டுபிடித்துள்ளனர். எய்ட்ஸ் நோயின் தாக்கம் உள்ளவர்கள் இந்த
தடுப்பூசியைப் போட்டுக் கொண்டால் எய்ட்ஸ் கிருமிகள் வளர்வது தற்காலிகமாக
கட்டுப்படுத்தப்படும் எனவும் இதனால் அவர்கள் நீண்ட நாட்கள் உயிர்வாழ
முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வெவ்வேறு நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும் எனவும் கூறுகின்றனர்.

எய்ட்ஸ்
நோயாளிகள் தினமும் நோய் எதிர்ப்புத் திறன் மருந்துகளை சாப்பிட்டுக் கொண்டே
இருக்க வேண்டும். ஆனால் இந்த தடுப்பூசியைப் போட்டுக் கொண்டால்,
குறிப்பிட்ட காலம் வரை எய்ட்ஸ் நோய் கிருமிகள் வளர்வதை தடுத்து நிறுத்தி
வைக்க முடியும் எனவும், அதற்குப் பின்னர் மீண்டும் இந்த தடுப்பூசியைப்
போட்டுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுக்கிறது.

எய்ட்ஸ்
கிருமிகள் உடலின் எதிர்ப்பு சக்தியைத்தான் பாதிக்கும். ஆனால் இந்த
தடுப்பூசி எய்ட்ஸ் நோய் கிருமிகளுக்கு எதிர்ப்பு சக்தியாக விளங்கும். எனவே
நோயாளிகள் அவதிப்படுவது தடுக்கப் படும். 32 எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இந்த
சோதனை செய்யப்பட்டு வெற்றியடைந்து விட்ட நிலையில் , விரைவில் இந்த
தடுப்பூசி பயன்பாட்டுக்குவரும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது

நன்றி தினகரன்

வித்தியாசமான சுறாக்கள்!!!

மீன் காட்சியகத்தில் இருக்கும் வித்தியாசமான சுறாக்கள்!!!இந்த உலகில் பார்ப்பதற்கு அழகான விஷயங்கள் பல உள்ளன. அத்தகைய விஷயங்களில் ஒன்று தான் மீன் காட்சியகங்கள். ஏனெனில் இந்த மீன் காட்சியகத்தில் பல வகையான அழகான மீன்களை காணமுடியும். அதிலும் மீன்களை பார்ப்பதால், மனம் ஒரு வித அமைதியை அடையும். அந்த அளவு மீன்களுக்கு மனதை அமைதிப்படுத்தும் சக்தி உள்ளது. பொதுவாக மீன்களில் சுறாக்களை கடலில் தான் பார்ப்போம். ஆனால் இத்தகைய சுறா மீன்களில், சில சிறிய சுறாக்களை மீன் காட்சியகங்களில் காணமுடியும்.

அனைவரும் சுறாக்களை எப்போதும் தனியாகத் தான் வளர்க்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் சுறாக்களில் சில சுறாக்களை மற்ற மீன்களுடன் வளர்க்க முடியும். மேலும் வித்தியாசமான மீன்கள் அனைத்தையும் மீன் காட்சியகத்தில் தான் காணமுடியும். அவற்றை காண்பதோடு அதனை வாங்கி வளர்க்கவும் முடியும்.

இப்போது அந்த சுறா மீன்களில் வகைகளில் சில சுறாக்களைப் பற்றி பார்த்து, வேண்டுமென்றால், அதனை வீட்டிலும் வளர்க்கலாம்.

சிவப்பு வால் சுறா

இந்த சுறா தான் மிகவும் பிரபலமான சுறா வகைகளில் ஒன்று. இந்த சுறாவின் உடல் அடர்ந்த கருப்பு நிறத்திலும் அதன் வால் பகுதி சிவப்பு மற்றும் ஆரஞ்சு கலந்த நிறத்திலும் இருக்கும். இந்த சுறாக்கள் நன்றாக எளிதில் பழகக்கூடியவை. அதிலும் இது இதன் அளவில் உள்ள மற்ற மீன்களுடன், அதாவது தங்க மீன் போன்றவற்றுடன் நன்கு பழகுபவை.

  
பாலா சுறா

இந்த வகையான சுறா மூன்று நிறங்களான சில்வர், வெள்ளை மற்றும் கருப்பு நிறங்கள் கலந்து காணப்படும். இந்த மீன் தான் பார்ப்பதற்கு உண்மையான சுறா போன்று இருக்கும். ஆனால் இதன் இனம் வேறு. இது மிகவும் பெரியதாக வளரும். எனவே ஒரு தொட்டியில் ஒன்றை மட்டும் வளர்ப்பது நல்லது.


கரிக்கன் சுறா

இந்த பேம்பு சுறா எனப்படும் கரிக்கன் சுறா பெரியதாக வளராது. ஆனால் இதன் உடலில் கோடுகளுடன், பார்ப்பதற்கு நீளமாக, எப்போதும் மந்தமான நிலையில் இருக்கும். இதன் அசைவை வைத்து இது கரிக்கன் சுறா என்பதை அறிந்து கொள்ளலாம்.
ரெயின்போ சுறா

இந்த சுறா சிவப்பு வால் சுறாவைப் போன்றே காணப்படும். ஆனால் இது சற்று நீளமாக, பார்ப்பதற்கு மிகுந்த அழகுடன் காணப்படும். இந்த சுறாவிற்கு அதிக இடம் வேண்டும். அவ்வாறு கிடைக்காவிட்டால், அது மற்ற மீன்களை அழித்துவிடும். எனவே இதனை தனியாக வளர்ப்பது நல்லது.
பவள சுறா

இந்த சுறா பெரும்பாலும் தரையில் தான் இருக்கும். ஆகவே இதனை வளர்க்கும் போது தொட்டியில் பவளங்கள் அல்லது சிறுசிறு செடிகளை வைக்க வேண்டும். அவை சிறியவை மற்றும் அமைதியானவை.சைனீஸ் சுறா

இந்த சுறா நீளமாக துடுப்புகளுடன் காணப்படும். சொல்லப்போனால், இது பார்ப்பதற்கு சுறா போன்றே இருக்காது. இவை குளிர்ந்த நீரில் மட்டும் வளரக்கூடியவை.
செயின் சுறா

மீன் தொட்டியானது மிகவும் அழகாக, வித்தியாசமாக காணப்பட வேண்டுமெனில், இந்த செயின் சுறாவை வளர்க்கலாம். ஏனெனில் இதன் சருமம் சற்று ஒளிர்வுடன் காணப்படும் மற்றும் இது அமைதியான ஒரு மீனும் கூட.

நன்றி அஹமது

வரலாற்றில் இன்று

ஜனவரி 10

1806: தென்னாபிரிக்காவின் கேப் டவுனிலிருந்த டச்சு குடியேற்றவாசிகள் பிரித்தானிய படையினரிடம் சரணடைந்தனர்.

1810: நெப்போலியன் தனது முதல் மனைவி ஜோசப்பினை விவாகரத்து செய்தார்.

 • 1840 - ஐக்கிய இராச்சியத்தில் முன்கட்டணம் செலுத்தப்படக்கூடிய கடித உறையுடன், சீரான பென்னி தபால் சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டது. 
 • 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: புளோரிடா கூட்டமைப்பில் இருந்து விலகியது.

 • 1863: உலகின் மிகப் பழைய பாதாள ரயில் பாதையான லண்டன் பாதாள ரயில்பாதை திறக்கப்பட்டது.

  1920 : வேர்செய்ல்ஸ் ஒப்பந்தம் அமுலுக்கு வந்ததன் மூலம் முதலாம் உலக யுத்தம் உத்தியோகபூர்வமாக முடிவு.

 • 1924 - பிரிட்டனின் நீர்மூழ்கிக் கப்பல் எல்-34 ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் 43 பேர் கொல்லப்பட்டனர்.


 • 1946: ஐ.நா. பொதுச்சபைக்கூட்டம் முதல் தடவையாக லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் அரங்கில் நடைபெற்றது. 51 நாடுகள் பங்குபற்றின.

 • 1957 - பிரிட்டனின் சர் அன்டேனி எடெனின் திடீர் பதவி விலகலை தொடர்ந்து , ஹெரல்ட் மேக்மில்லன் பிரதமராக பதவி ஏற்றார்.
 • 1962 - பெருவில் நிகழ்ந்த சூறாவளியில் 4000 பேர் வரை கொல்லப்பட்டனர்.

 • 1972: பாகிஸ்தானில் 9 மாதங்கள் சிறையிலிருந்த ஷேக் முஜிபுர் ரஹ்மான் பங்களாதேஷ் ஜனாதிபதியாக தாயகம் திரும்பினார்.

 • 1974 - யாழ்ப்பாணத்தில் 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் 11 பொதுமக்கள் இலங்கைகாவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டனர்.

 • 1984: அமெரிக்காவுக்கும் வத்திகானுக்கும் இடையில் 117 ஆண்டுகளின்பின் முழுமையான ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டன.

 • 1989 - கியூபா படைகள் அங்கோலாவில் இருந்து வெளியேற ஆரம்பித்தன.
 •  1995 - உலக இளையோர் நாள் பிலிப்பீன்ஸ் நாட்டில் இடம்பெற்றது.
 • 1996 - ஜோர்டானின் மன்னர் ஹுசேன், இஸ்ரேலுக்கு சென்று பிரதமர் ஷிமேன் பேர்ஸ்யை சந்தித்தார் .
 • Wednesday, January 9, 2013

  இறந்துபோன கணவன் சொர்க்கத்திலிருந்து மனைவிக்கு எழுதும் கடிதம் !!

  மிஸ்டர்
  எக்ஸ் மனைவியைப் பிரிந்து தொலைதூர கிராமமொன்றிற்கு சென்றிருந்தார்.. அங்கு
  பெரிதாக வசதிகள் கிடையாது , ஒரு ஹொட்டலில் தங்கும் வாய்ப்பும் கிடைத்தது
  அவரது அறையில் ஒரு கணினி இருந்தது. அவர் தன் மனைவிக்கு ஒரு மின்னஞ்சல்
  (email) அனுப்ப உத்தேசித்துக் கணினியை இயக்கி மின்னஞ்சலைத் தட்டச்சினார்.
  அவசரத்தில் to address என்கிற இடத்தில் அவரது மனைவியின் மின்னஞ்சல்
  முகவரியைத் தட்டாமல் வேறு தவறான முகவரியை எழுதிவிட்டார்.

  மிஸ்டர் எக்ஸ் தான் செய்த பிழையை உணரவேயில்லை. மின்னஞ்சலும் பெறுநர் (recipient) முகவரிக்குச் சென்றுவிட்டது.

  வேறு
  ஒரு நகரம். அங்கே ஒரு விதவை. அவள் தனது கணவனை இரண்டு நாட்களுக்கு முன்னர்
  இழந்தவள். இறந்துபோன தனது கணவனை அடக்கம் செய்து துக்கம் தாங்காமல்
  அழுதுகொண்டிருந்தாள்.

  பிறகு மனதைத் தேற்றிக்கொண்டு தனது Laptop ஐ
  திறந்து துக்கக்கடிதங்கள் ஏதேனும் மின்னஞ்சல் ரூபத்தில் வந்திருக்கிறதா
  எனப் பார்வையிட்டாள்.

  அவளுக்கு வந்திருந்த முதல் மின்னஞ்சல் கடிதத்தைப் படித்ததும் அவளுக்கு மயக்கம் வந்து தலைசுற்றிவிட்டது.தரையில் வீழ்ந்துவிட்டாள்.

  சிறிது
  நேரத்துக்குப் பிறகு அந்த விதவையின் மகன் அந்த அறைப்பக்கமாக வந்தார். தனது
  தாய் தரையில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். Laptop
  இயக்கத்திலேயே இருந்தது. கணினியில் தெரிந்த வாசகத்தைப் படித்தார். அதில்
  பின்வருமாறு இருந்தது.

  அன்பான மனைவிக்கு,

  எனது கடிதம்
  உனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். அவர்கள் இங்கே கணினியெல்லாம் கூட
  வைத்திருக்கிறார்கள். நமக்குப் பிரியமானவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்
  அனுமதிக்கிறார்கள். நான் இங்கே நல்லபடியாக வந்து சேர்ந்தேன். இங்கே எல்லாம்
  தயாரான நிலையில் உள்ளது. நாளையே நீ இங்கே வந்துவிடலாம். உனது வரவை வழிமேல்
  விழி வைத்துக் காத்திருக்கிறேன்.

  --இப்படிக்கு உன் அன்புக் கணவன்

  வரலாற்றில் இன்று

  ஜனவரி 09

  1951 - டாக்டர் அலெக்சாண்டர் ஃபிளெமிங் முதன் முதலாக தனது உதவியாளரான ஸ்டூவர்ட் கிராட்டாக் என்பவருக்கு பென்சிலின் மூலம் சிகிச்சை அளித்தார்.
  1768: லண்டனில் முதலாவது நவீன சர்க்கஸ் கண்காட்சி நடைபெற்றது.

  1776: சேர் ஹம்பரி டேவி, சுரங்க ஊழியர்களுக்கான டேவி விளக்கை பரிசோதித்தார்.

  1822: போர்த்துக்கேய இளவரசர் முதலாம் பெட்ரோ மன்னரின் உத்தரவை மீறி பிரேஸிலில் தங்கியிருக்கத் தீர்மானித்தார்.

  1927: கனடாவில் திரையரங்கொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 78 பேர் பலி.

  1970: சிங்கப்பூரில் உயர் நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டது.

  1980 - மெக்காவிலுள்ள மசூதியைத் தாக்கியதற்காக சவூதி அரேபியாவில் 63 பேரின் தலைகள் துண்டிக்கப்பட்டன.


  1991: குவைத் மீதான ஈராக்கின் ஆக்கிரமிப்பு பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண்பதற்கான முயற்சியாக அமெரிக்க,ஈராக் பிரதிநிதிகள் ஜெனீவாவில் சந்தித்தனர்.


  1995 - விண்வெளியில் அதிக காலம் வாழ்ந்த பெருமையைப் பெற்றார் ரஷ்ய விண்வெளி வீரரான வலேரி பொலியகோவ்.


  2005: சூடான் அரசாங்கத்திற்கும் சூடான் மக்கள் விடுதலை இயக்கம் எனும் தீவிரவாதக் குழுவுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் கென்யாவில் கையெழுத்திடப்பட்டது.

  யோசிங்க நல்லா யோசிங்க .......

  1. மண்ணிலிருந்து மண்ணெண்ணெய் எடுக்கலாம்; கடலிலிருந்து கடலெண்ணெய் எடுக்க முடியுமா?

  2. போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் போட்டா போலீஸ் வரும்; ரயில்வே ஸ்டேஷனுக்கு போன் போட்டா ரயில் வருமா?

  3. தண்ணியில கப்பல் போனா ஜாலி; கப்பல்ல தண்ணி போனா காலி!

  4. ஹோட்டலில் காசு கொடுக்கலேனா மாவாட்டச் சொல்லுவாங்க.... ஆனால் பஸ்ல காசு கொடுக்கலைன்னா பஸ் ஓட்டச் சொல்லுவாங்களா?

  5. யானை மேல நாம உட்கார்ந்தா சவாரி! நம்ம மேல யானை உட்கார்ந்தா ஒப்பாரி!  6. அம்மா அடிச்சா வலிக்கும்... போலீஸ் அடிச்சா வலிக்கும்... ஃப்ரெண்ட்ஸ் அடிச்சாலும் வலிக்கும்... ஆனா சைட் அடிச்சா வலிக்குமா?

  7. என்ன தான் ரயில் வேகமா போனாலும், அதோட கடைசிப் பெட்டி கடைசியாகத்தான் போகும்.

  8. பஸ் போயிடாலும் பஸ் ஸ்டாண்டு அங்கயே தான் இருக்கும். ஆனா சைக்கிள் போயிட்டா சைக்கிள் ஸ்டாண்டு கூடவே போயிவிடும்.

  9. செல்லுல போலன்ஸ்(balance) இருந்தா தான் கால் பண்ணமுடியும்..ஆனா மனுசனுக்கு கால் இருந்தால் தான் பேலன்ஸ்(balance) பண்ண முடியும்.

  10. வாயால நாய்ன்னு செல்ல முடியும்ஸ ஆனா நாயால வாய்ன்னு செல்ல முடியாது.

  11. பாய்சன்(Poison) பத்து நாள் ஆனாலும் பாயாசம் ஆகாது ஆனால் பாயாசம் பத்து நாள் ஆனா பாய்சன்(Poison) ஆயிடும்.

  12. தம் அடிச்சா புகை வரும். ஆனா புகையை அடிச்சா தம் வருமா?

  13. கண்ணை குத்தினா தண்ணிவரும் ஆனா தண்ணியை குத்துனா கண் வருமா?

  14. தண்ணி அடிச்சா மப்பு வரும். மப்பு அடிச்சா தண்ணி வருமா?

  15. எவ்வளவு பெரிய பல் டாக்டரா இருந்தாலும் கடிக்கிற செருப்போட பல்லைப் பிடுங்க முடியுமா?

  16. டீ ஸ்பூனால டீ கலக்கலாம். டேபிள் ஸ்பூனால டேபிளைக் கலக்க முடியுமா?

  17. மெழுகை வைத்து மெழுகுவத்தி செய்யலாம். ஆனா கொசுவை வைத்து கொசுவத்தி செய்ய முடியாது.  நன்றி பூவன்

  Tuesday, January 8, 2013

  வரலாற்றில் இன்று

  ஜனவரி 08
  1297: மொனாக்கோ சுதந்திரம்பெற்றது.

  1811: அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் சார்ள்ஸ் டெஸ்லான்ட்ஸ் என்பவர் தலைமையில் கறுப்பின அடிமைகள் மேற்கொண்ட கலகம் முறியடிக்கப்பட்டது.

  1835: அமெரிக்காவின் தேசிய கடன் தொகை முதல் தடவையாக பூச்சியம் ஆகியது.

  1912: ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.

  1917 - பிரிட்டனில் நாடெங்கும் ஒரே நேரத்தில் 2 மில்லியன் மரங்கள் நடப்பட்டன. மரத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதே அதற்குக் காரணம்.

  1938 - இந்தியாவில் முதல் வண்ணத் திரைப்படம் வெளியானது. இம்பீரியல் பிலிம் கம்பெனிக்காக அர்தேஷிர் இரானி என்பவர் தயாரித்த அந்தப் படத்தின் பெயர் "கிஸான்கன்யா."

  1664 - கலிலியோ தூக்குமேடையைச் சந்தித்த நாள்.


  1973: நெதர்லாந்தில் ரயில் விபத்தில் 93 பேர் பலி.

  1973: அமெரிக்க வாட்டர்கேட் விவகாரத்தில் வாட்டர்கேட்டிலுள்ள ஜனநாயகக் கட்சியின் தலைமையகத்திற்குள் சட்ட விரோதமாக புகுந்த 7 நபர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பமாகின.

  1978: வெளிநாட்டு நிர்ப்பந்தங்கள் காரணமாக, வங்காளத் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானை பாகிஸ்தான் பிரதமர் சுல்பிகார் அலி பூட்டோ விடுதலை செய்தார்.

  1989: பிரிட்டனில் வீதியொன்றில் விமானம் விழுந்ததால் 47 பேர் பலி.

  1996: ஸயர் நாட்டில் விமானமொன்று கோளாறுக்குள்ளாகி சந்தையொன்றில் விழுந்ததால் 350 பேர் பலி.

  வரலாற்றில் இன்று

  ஜனவரி 07  1610: கலிலியோ கலிலி ஜூபிட்டர் கிரகத்தின் நான்கு பெரிய சந்திரன்களை முதல் தடவையாக அவதானித்தார்.

  1782: அமெரிக்காவின் முதலாவது வர்த்தக வங்கியான அமெரிக்க வங்கி திறக்கப்பட்டது.

  1785: பிரான்ஸை சேர்ந்த ஜீன் பியரி பிளங்கர்ட், அமெரிக்காவைச் சேர்ந்த ஜோன் ஜெவ்ரி ஆகியோர் இங்கிலாந்திலிருந்து பிரான்ஸுக்கு பலூனில் பறந்தனர்.

   
  1797: இத்தாலியின் நவீன தேசிய கொடி பாவனைக்கு வந்தது.

  1919: சேர்பியாவுடன் மொன்டேநீக்ரோ இணைப்பதற்கு எதிராக மொன்டேநீக்ரோ கெரில்லாக்கள் கிளர்ச்சி செய்தனர். இப்போராட்டம் தோல்வியில் முடிவுற்றது.

  1927: அத்திலாந்திக் சமுத்திரத்திற்கூடான முதலாவது தொலைபேசி சேவை ஆரம்பிக்கப்பட்டது.

  1949 - ஜீன்ஸ் எனப்படும் மரபணுக் கூறின் முதல் புகைப்படத்தை வெளியிட்டது தெற்கு லிபோர்னியா பல்கலைக்கழகம்.


  1950: அமெரிக்காவின் டெவன்போர்ட் நகர வைத்தியசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் பலி.

  1952: அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன், அமெரிக்காவிடம் ஐதரசன் குண்டுகள் இருப்பதாக அறிவித்தார்.

  1954: நியூயோர்க் நகரில் ஐ.பி.எம். தலைமையகத்தில் கணினி மூலம் மொழிபெயர்ப்பு செய்துகாண்பிக்கப்பட்டது.

  1959: கியூபாவில் பிடெல்காஸ்ட்ரோவின் அரசாங்கத்தை அமெரிக்கா அங்கீகரித்தது.

  1972: ஸ்பெய்னில் இடம்பெற்ற விமான விபத்தில் 104 பேர் பலி.

  1980: 3 வருடங்கள் அதிகாரத்தை இழந்திருந்த இந்திரா காந்தியின் காங்கிரஸ் கட்சி இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியது.

  1990: இத்தாலியின் பைஸா சாய்ந்த கோபுரம் பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்களின் பார்வைக்கு மூடப்பட்டது.

  1999: அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் மீதான நாடாளுமன்ற குற்றவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

  Monday, January 7, 2013

  புனித கஃபாவை அலங்கரிக்கும் கிஸ்வா...

  புனித கஃபாவை அலங்கரிக்கும் கிஸ்வா...

  அல்லாஹ் இவ்விறை இல்லத்தை கட்டப் பணித்த போது கிஸ்வாவைப்பற்றி ஏதும் குறிபபிடவில்லை எனினும் பண்டை காலம் தொட்டே கிஸ்வா போர்த்துவதை ஒரு வைபவமாகப் பல அரசர்களும் நடத்தி வந்ததாக வரலாற்றிலே காண முடிகிறது. கிஸ்வாவைப்பற்றி சில தகவல்களை தொகுத்துத் தருகிறார். கடடுரை ஆசிரியர் டாக்டர் பாக்கவி அவர்கள்.

  முதல் கிஸ்வா

  1. கி.பி 400-ல் யமன் நாட்டை ஆண்ட ஹுமைரி மன்னன் மக்கா வந்த போது அங்குள்ள மக்கள் அவரை சரிவர மரியாதை செலுத்தாததால் கஃபாவை இடித்துத்தள்ள எண்ணிய சமயம் கடுமையான நோய்க்குள்ளானார். அறிஞர்கள் பலரின் ஆலோசனையின் பேரில் உம்ரா செய்து, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்க நோய் நீங்கப் பெற்றார். பின்னர் கண்ட கனவின் பலனாக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் பொருட்டு கிஸ்வாவை போர்த்தியதாக ஆதாரங்கள் உள்ளன. இந்த கிஸ்வா உலர்ந்த பனை ஓலையாலும் நூலாலும் நெய்யப்பட்டதாக இருந்ததாம்.
  2. பெருமானார்(ஸல்) அவர்கள் மக்கா வெற்றிக்குப் பிறகு செய்த ஹஜ்ஜின் போது யமன் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட கிஸ்வாவை போர்த்தினார்கள்.
  3. கலீபா உமர்(ரலி) அவர்கள் கி.பி 634-ல் (ஹிஜ்ரி 13) எகிப்திலிருந்து கொண்டு வரப்பட்ட கிஸ்வாவை போர்த்தினாhகள்.

  4. கலீபா உத்மான்(ரலி) அவர்கள் ஆட்சியின் போது ஒவ்வொரு ஆண்டும் ரமளான் பிறை 27-லும் துல்ஹஜ் மாதம் ஹஜ்ஜுக்கு முன்னரும் இருமுறை கிஸ்வா அணிவிக்கப்பட்டது.

  5. கலீபா முஆவியா(ரலி)யின் காலத்தில் முஹர்ரம் 10-ம் நாள் அன்று பட்டுத்துணியாலும் ரமலான் கடைசியில் கபாத்தி என்ற கட்டித் துணியாலும் போர்த்தினார்கள்.

  6. இவர் காலத்தில் தான் ”லாயிலாஹ இல்லல்லாஹ்” ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயனில்லை’ என்ற அரபி வாக்கியம் பொறித்த கிஸ்வாக்கள் பயன்படுத்தப்பட்டன.

  7. காலப் போக்கில் ஒரு முறை அணிவித்த கிஸ்வாவை அகற்றாமலேயே அதன் மீது மீண்டும் கிஸ்வாவை அணிவித்து வந்தனர். இதனால் கஃபாவின் மீது பெருத்த பளு சேரவே ஹிஜ்ரி 160-ல் (கி.பி.775) கலீபா அல்மஹ்தீ அல் அப்பாஸி பழைய கிஸ்வாக்களை அகற்றிவிடப் பணித்தார்.

  சிகப்பு, பச்சை,வெள்ளை கிஸ்வாக்கள்

  8. சிகப்பு, பச்சை, வெள்ளை ஆகிய நிறங்களில் தான் ஆரம்ப காலங்களில் கிஸ்வாக்கள் போர்த்தப்பட்டு வந்தன்.

  கறுப்பு நிற கிஸ்வா

  கலீபா அல் நாஸிருல் அப்பாஸி காலத்தில் தான் (ஹிஜ்ரி 575 – கி.பி.1179) முதன் முதலில் கறுப்புநிறம் பயன்படுத்தப்பட்டது. அதுவே இன்று வரை தொடர்கிறது.
  9. கி.பி.1342 – ஹிஜ்ரி 743 ல் எகிப்தை ஆண்ட சுல்தான் கலாவூன் கிஸ்வா தயாரிப்பிற்காகவும் கஃபாவின் பராமரிப்புக்காகவும் எகிப்து நாட்டு மூன்று விவசாய கிராமங்களின் வருமானத்தை அன்பளிப்பாக வழங்கினார்.
  10. சுல்தான் கலாவூன் ஆட்சிக்கு 300 ஆண்டுகட்கு பிறகு வந்த உத்மானிய சுல்தான் சுலைமான் மேலும் ஏழு கிராமங்களின் வருமானங்களை வழங்கினார். கஃபாவுடன் மதீனா ரௌலா ஷரீபும் பராமரிப்பில் சேர்க்கப்பட்டது.
  11. பல நூறு ஆண்டுகளாக கிஸ்வாக்கள் எகிப்திலிருந்து மக்காவிற்கு கொண்டு வரப்பட்டன. இவைகளை கொண்டுவர 15-க்கு மேற்பட்ட ஒட்டகங்கள் பயன்படுத்தப்பட்டன.

  ‘மஹ்மல்’ என்று அழைக்கப்படும் அழகிய பல்லாக்குகளை ஒட்டகங்கள் மேல் வைத்து அவைகளில் கிஸ்வாவின் பகுதிகளை கொண்டு வருவர்.
  12. இந்த ஊர்வலம் புறப்படும் போது எகிப்தே விழாக்கோலம் பூணும், அது மக்கா வந்தடைந்ததும் இசைத் தாளங்களுடன் ஆடிப்பாடி மக்கா வாசிகள் அந்த ஒட்டகங்களை வரவேற்பர்.
  13. ஹிஜ்ரி 843 – (கி.பி 1924) ல் மன்னர் அப்துல் அஸீஸ் இப்ன் ஸவூது இப்படி ஆடிப்பாடி கிஸ்வாவை கொண்டுவரும் நிகழ்ச்சி இஸ்லாத்திற்கு முரணாகயிருப்பதைக் கண்டித்ததால் மீனாவில் வைத்து எகிப்தியர்களுடன் மோதல் ஏற்பட்டது. அடுத்த ஆண்டு முதல் கிஸ்வாவை எகிப்து அனுப்புவதை நிறுத்திக் கொண்டது.

  சவூதியில் கிஸ்வா தயாரிப்பு

  14. அவ்வாண்டே மன்னர் அப்துல் அஸீஸ் இந்தியாவிலிருந்து கை தேர்ந்த தொழிலாளிகளை கொண்டு வந்து கிஸ்வா தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நிறுவினார்.

  15. 1927 –ல் (ஹிஜ்ரி 1346) இறுதியில் சவூதி தொழிற்சாலையில் தயாரிக்கப்;பட்ட கிஸ்வா போர்த்தப்பட்டது. இது பத்து ஆண்டுகள் தொடர்ந்தது.

  16. 1950-ல் ஏற்பட்ட அரசியல் மாற்றத்திற்கு பின்பு எகிப்து மீண்டும் கிஸ்வாவை அனுப்பும் உரிமையப் பெற்றது. இது 1962 வரை தொடாந்தது.

  17. அதன் பின்னர் மன்னர் ஸவூது பின் அப்துல் அஸீஸ் ஆட்சியில் மீண்டும் கிஸ்வாவை மக்காவிலேயே தயாரிக்கத் தொடங்கினார்.

  18. சுமார் 240 சவூதி கைவினைஞர்கள் பணிபுரியும் இந்த தொழிற்சாலை பிற பள்ளி வாசல்களில் விரிக்க பயன்படும் விரிப்புகளையும் தயாரித்து வருகிறது.

  19. கிஸ்வாவை தயாரிக்க 670 கிலோ தூய வெள்ளைப்பட்டு நூல் பயன்படுத்தப்படுகிறது. இந்நூலுக்குப் பின்னர் உயர்தர கறுப்புச் சாயம் பூசுகின்றனர்.

  650 சதுர மீட்டர்

  20. ஒரு கிஸ்வா 47 பகுதிகளைக் கொண்டது. ஒவ்வொரு பகுதியும் 14 மீட்டர் நீளமும் 95 செ.மீ அகலமும் கொண்டது. அதன் மொத்த பரப்பு 650 சதுரமீட்டர்.

  10 கோடி செலவில் கிஸவா (120 கிலோ தங்கமும் வெள்ளியும்)

  21. 120 கிலோ தங்கமும் வெள்ளியும் (1க்கு 4 விகிதத்தில்) கலந்த இழைகளால் திருகுர்ஆன் வசனங்கள் மிக நுட்பமான முறையில் பின்னப் படுகின்றன. கிஸ்வா தயாரிக்க ஆகும் மொத்தச் செலவு 170 லட்சம் ரியால்கள் (சுமார் 10 கோடி ருபாய்)

  தங்கத்தில் கதவு

  22. கஃபாவின் கதவுகள் தரைமட்டத்திலிருந்து 2 மீட்டர் உயரத்தில் உள்ளன. இவை தங்கத்தினால் செய்யப்பட்டவை. இந்த வாயிற் பகுதியை மறைக்கும் திரை (7.5 ஒ 4 மீட்டர்) அளவுடையது. அதுவும் சிறந்த வேலைப்பாடுகளால் ஆனவை. கஃபாவின் உள்ளே செல்ல நகரும் ஏணிப்படிகளை பயன்படுத்துகின்றனர்.

  23. கஃபாவின் உட்சுவர்களையும் அதன் கூரைப் பகுதிகளையும் பச்சை நிற பட்டுத் துணியால் அலங்கரிக்கின்றனர். அவைகளிலும் திருக்குர்ஆன் வசனங்கள் பொறிக்கப்படுகின்றன.

  24. ஒவ்வொரு ஆண்டும் ஷாபான் மாத்திலும், துல்ஹஜ்ஜு மாதத்திலும் கஃபாவின் உட்தளம் சந்தனத்தாலும், உயர்ரக வாசனைத் திரவியங் களாலும் கழுகப்படும். உலகம் முழுவதிலுமிருந்து இஸ்லாமியப் பிரதி நிதிகளும் தலைவர்களும் பங்கேற்று கழுக வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

  புதிய கிஸ்வாக்கள்

  25. ஹஜ்ஜுக்கு முன்பாக கழுகும்போது புதிய கிஸ்வா அணிவிக்கப்படும்.

  26. பழைய கிஸ்வா பல சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்டு முஸ்லிம் பிரதிநிதிகள், இஸ்லாமிய கலாசாலைகள், தொல் பொருட்காட்சியங் களுக்கு அன்பளிப்பாக அளிக்கப்படுகிறது.

  UNO வில் கிஸ்வாவின் ஒரு புகுதி

  27. கஃபாவின் வாசல் திரையினைப் போன்ற வேலைப்பாடுகள் அமைந்த (9 ஒ 2.5 மீட்டர்); அளவுடைய திரைச் சீலையை 1983-ம் ஆண்டு சவூதி மன்னர் ஃபஹ்து உலக முஸ்லிம்கள் சார்பில் அமெரிக்காவில் உள்ள உலக நாடுகள் மன்றத்து (UNO) வரவேற்பு அறையில் தொங்விட அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார்.

  Dr. Ahmad Baqavi Ph.D.

  இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!
  பெண்கள் கற்பழிக்க படுவதற்கு காரணம் என்ன என்று நாங்கள் ஓட்டெடுப்பு நடத்தினோம்..ஓட்டளித்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் எமது நன்றிகள். அதிகபட்ச நபர்கள் பெண்கள் அணியும் அரை குறை ஆடை தான் என்று ஓட்டு அளித்து இருந்தார்கள் இன்று நாம் நிறைய இடங்களில் பார்க்கிறோம் பெண்கள் அரை குறை ஆடை அணிந்து தான் வருகிறார்கள் .பார்க்கும் ஆண்களை சபலபடவைக்க இதவும் ஒரு காரணமாகவே அமைகிறது .அதற்க்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான் உன்னுடைய வீட்டை சுற்றமாக்கு நாடு தானாகவே சுற்றமாகும்

  அப்படி அரை குறை ஆடை அணிவது நம் சகோதரியாக கூட இருக்கலாம் நாம் பிள்ளைகளாக கூட இருக்கலாம் . முதலில் அவர்களுக்கு வீட்டில் ஒழுக்க நெறிகளை சொல்லி கொடுத்து வளர்ப்பது நமது தலையா கடமை இருக்கிறது . வீட்டில் தந்தை அண்ணன் ,தம்பி , மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் இருக்கிறார்கள் அவர்களை மீறி எந்த பெண்ணும் அரை குறை ஆடை அணிவது இல்லை முதலில் நமது வீட்டில் உள்ள பெண்களின் ஆடை கொஞ்சம் ஆபாசமாக தெரிந்தால் கண்டிப்பாக கண்டிப்பது நமது கடமை .அதை விட்டு விட்டு அவர்களை நாம் அரை குறையாக ஆடை அணியவைத்து ஷாப்பிங் மாலுக்கும் பீசிக்கும் ,படத்திற்கும் அழைத்து கொண்டு திரியும் நிறைய தாய் தந்தை இருக்கிறார்கள் அவர்களை பார்க்கும் போது தான் அரை குறை ஆடை அணியும் பெண்கள் மீது தவறு இல்லை அவர்களின் தாய் தந்தை சகோதர்கள் மீது தான் தவறு என்று தெள்ள தெளிவாக தெரிகிறது . இவர்கள் தன்னுடைய சகோதிரிகளை அரை குறை ஆடை அணியவைத்து எப்படி அழைத்து வருகிறார்கள் என்று தெரியவில்லை ?உண்மையில் சிந்திக்க வேண்டிய விசையம் தான்

  நம் தமிழ் நாட்டில் இன்று தாவணி என்று சொல்லுவார்கள் அப்படி என்றால் என்ன வென்று கேட்கும் அளவிற்கு போய் கொண்டு இருக்கிறது . இன்று நிறைய சகோதரிகள் சுடிதாருக்கு துப்பட்டா அணிவதே இல்லை கேட்டால் நாகரிகம் என்று சொல்லுகிறார்கள் எப்படி வேண்டுமானாலும் வாழ்வது வாழ்க்கை அல்ல இப்படி தான் வாழ்வது என்பது தான் வாழ்க்கை .

  பெண்கள் அரைகுறை ஆடை ,இறைவனின் படைப்பில் பெண்கள் ஒரு அழகான படைப்பு ,இன்றோ பெண்களின் சுதந்திரம் என்ற போர்வையில் நாகரிகம் என்ற போர்வையில் பெண்களை போதை பொருளாக கண்பிப்பது இதற்கு பெண்களின் இயக்கங்கள் மௌனம் சாதிப்பது இது தான் பெண் சுதந்திரமா??? இதுவும் ஒரு பெணிற்கு எதிரான விபசாரமே அதுவும் corporate விபச்சாரம் !

  இன்று இந்தியாவில் பெண்களின் நிலை என்ன நாகரிகம் வளர வளர பெண்கள் பாலியல் கொடுமைகளும் ,கற்பழிப்புகள் அதிகமானது என்று சொன்னால் மிகை ஆகாது ! இதிலிருந்து உடை கட்டுபாடும் இது போன்ற குற்றங்களை தடுபதற்கான ஒரு வழி என்பது நிதர்சனமான உண்மை . இன்று மத்திய பிரதேசத்தில் ஒரு சட்டம் இயற்ற பட்டது பெண்களின் மீது acid உற்றினால் 3 லட்சம் அபரதாமம் ! என்ன ஒரு கடுமையான சட்டம் ,இந்த சட்டத்தை இயற்றிவர்கள் மீது தான் முதலில் acid எரிய வேண்டும்.. பெண்கள் கற்பழிக்க படுவதக்க்கு அரைகுறை ஆடை மட்டும் காரணமாகவும் எடுத்து கொள்ள முடியாது .

  இன்று நாம் தொலை காட்சிகளில் நாம் குடும்பத்தோடு பார்க்க முடிகிறதா முகம் சுளிக்கும் வனமாகவே இருகிறது .தந்தை பிள்ளைகளோடு தொலை காட்சியே பார்க்க முடியவில்லை இன்று சாதாரண விளம்பரத்தில் கூட ஆபாசம் தொலைகட்சியே திறந்தாலே ஆபாசமாக தான் இருக்கிறது . கிரிக்கெட் ஐ .பி .எள் . விளையாட்டிலும் கூட ஆபாசம் தேவை படுகிறது. பெண்களை போதை பொருளாகவே பயன்படுத்துகிறார்கள் இதை எல்லாம் பார்த்து மக்களின் மனம் மரத்து போய் விட்டது .உடை கட்டுப்பாடு இருந்தாலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் சில காமவெறி கொண்ட கயவர்களால் நடந்து கொண்டு தான் இருக்கிறது இவர்களை தண்டிக்க எப்படி பட்ட சட்டம் இயற்றலாம் ??? கடுமையான சட்டங்கள் வராதவரை இது போன்ற அனச்சாரங்களுக்கு முடிவிற்கே வராது..

  தகவல்:- விழித்திரு தமிழா

  தாஜ்மஹால் காதலின் சின்னமா.....?

  இன்றைக்கு தாஜ்மஹால் எல்லோருக்கும் காதலின் சின்னமாகத்தான் தெரிகிறது. அதுவும் உண்மையாக இருக்கலாம்.ஆனால் தாஜ்மஹால் பற்றிய வரலாற்றுத் தகவல்களை நாம் அறிந்துவைத்திருப்பது என்பது மிக மிக குறைவாகவே இருக்கிறது.
  இந்த வரலாற்று தகவல்களை நோக்கும் போது தாஜ்மஹால் காதலின் சின்னமாக இருப்பதற்கு தகுதியானதா..? என எம் உள்ளத்தினில் வினா எழுப்பத் தோன்றுகிறது.

  ஆகவே தான் தாஜ்மாஹால் தொடர்பாக நான் ரசித்த ஒரு சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

  முதலில் இந்த தகவலை எனக்கு தந்துதவிய நண்பன் K R VIJAYAN அவர்களுக்கும் . அதே போன்று இந்த தகவலுக்கு சொந்தக்காரராக விளங்கும் RAMAKIRISHNAN (TAFAREG) அவர்களுக்கும் இவ்விடத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  மொகலாய வரலாற்றில் அதிகம் பேசப்பட்ட பெண் மும்தாஜ். உலகெங்கும் தாஜ்மகாலின் வழியாக நினைவுகொள்ளப்படுகிறார். ஆனால், பேசப்படப்படாமல் போன முக்கியமான இரண்டு பெண்கள் இருக்கின்றனர். ஒருவர்... ஷாஜகானின் மூத்த மகளும், திருமணம் செய்துகொள்ளாமல் அரசாட்சியில் மன்னருக்குத் துணை நின்றவளும், மிகச் சிறந்த படிப்பாளியும், சூபி ஞான நெறியைப் பின்பற்றியவளுமான ஜஹானாரா பேகம். இன்னொருவர்... ஒளரங்கசீப்பின் மகளும் மெய்யியல் கவிஞருமான ஜெப்உன்நிசா. இந்த இரண்டு பெண்களும் சரித்திர வானில் தனித்து ஒளிரும் இரட்டை நட்சத்திரங்கள்.

  இன்று, தாஜ்மகாலைப் பார்க்கப் போகிறவர்களில் அதிகமானவர்களுக்கு மும்தாஜின் இயற்பெயர் அர்சுமந்த் பானு பேகம், அவள் 13 குழந்தைகளின் தாய், தனது 14-வது பிரசவத்தில் இறந்து போனாள் என்பது தெரியும்? 14 பிள்ளைகளைப் பெற்ற மும்தாஜின் நினைவாக, தாஜ்மகால் கட்டப்பட்டு இருக்கிறது என்றால், அதைத் தாய்மையின் சின்னம் என்றோ, சிறந்த மனைவியின் நினைவுச் சின்னம் என்றுதானே நியாயமாக அழைக்க வேண்டும்?

  ஜஹானாரா பேகம், குரால்னிசா, தாரா ஷகோ, முகமது சுல்தான்ஷா, ரோஷனாரா, ஒளரங்கசீப், உமித்பக்ஷி, சுரையா பானு, சுல்தான் முராத், கௌஹரா எனும் மும்தாஜின் பிள்ளைகள் பெயர்கள்கூட தாஜ்மகாலுக்குள் போகிறவர்களுக்குத் தெரியாது என்பதுதானே நிஜம்.

  காதலின் சின்னமாக திகலும் தாஜ்மஹாலை ஷாஜகான் தன் மூன்றாவது மனைவியான மும்தாஜுக்கே கட்டினார் என்பது எம்மில் பலருக்குத் தெரியாது. 1612-ம் ஆண்டு மே 10-ம் தேதி இவர்களது திருமணம் நடந்தது. அப்போது, மும்தாஜுக்கு வயது 19. மும்தாஜ் இறந்துபோனது 1631 ஜுன் 17-ம் தேதி. அப்போது அவளுக்கு வயது 38. அதாவது, 19 வருஷ இல்லறத்தில் 14 குழந்தைகளைப் பெற்றிருக்கிறாள். தொடர் பிரசவங்களால் உடல்நலிவுற்றுத்தான் இறந்துபோனாள்.

  பிரசவ வலியில் அவள் விட்ட கண்ணீரும் வேதனைக் குரலும் தாஜ்மகாலுக்குள் கேட்கக்கூடுமா என்ன? தனி மனிதர்களின் துயரமும் வலியும் காலத்தின் முன்பு பெரிதாகக் கருதப்படுவதே இல்லை. காலம் எல்லாவற்றையும் உருமாற்றிவிடுகிறது. அவளது மரணத்தின்போது ஜஹானாராவுக்கு வயது 17. மனைவியை இழந்து துக்கத்தில் வாடிய தந்தைக்கு உறுதுணையாக இருந்தாள் ஜஹானாரா. தனிமையிலும் வேதனையிலும் ஷாஜகான் வாடிய காரணத்தால், அரசு நிர்வாகம் செயலற்றுப் போயிருந்தது. அதைச் சரிசெய்யத் தானே அரசு ஆணைகளை பிறப்பிக்கவும், அரசரின் ஆலோசனையின் பெயரில்முக்கிய முடிவுகளை எடுக்கவும் துரிதமாகச் செயல்பட்டாள் ஜஹானாரா.

  நாட்டின் முதல் பெண்மணி என்ற அந்தஸ்தை ஜஹானாராவுக்கு வழங்கினார் ஷாஜஹான். அது அவரது மற்ற இரண்டு மனைவிகளுக்கும், ஜஹானாராவின் சொந்த சகோதரிகளுக்கும்கூடப் பொறாமையை ஏற்படுத்தியது.

  தந்தையைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே, அவள் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதுவும், ஒளரங்கசீப்பால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட தந்தைக்குத் தன்னைத் தவிர வேறு துணை இல்லை என்பதால், தன் வாழ்நாளை அப்பாவின் நலனுக்காகவே செலவழித்திருக்கிறாள்.

  மும்தாஜ் இறந்த பிறகு ஜஹானாராவுக்கு ஒரு முக்கியக் கடமை இருந்தது. தனது சகோதரன் தாரா ஷகோவுக்கு நதிரா பானுவோடு நிச்சயம் செய்யப்பட்ட திருமணத்தை நடத்தியாக வேண்டும். அது, அம்மாவின் இறுதி ஆசை. எனவே, அதைச் செயல்படுத்த தீவிரமாக முயன்றாள்.

  தாராவுக்கும் அவளுக்குமான சகோதர பாசம் அளப்பறியது. அவள், தாரா ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்பினாள். அது, ஒளரங்கசீப்புக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. அவளை, தனது நாட்குறிப்பில் 'வெள்ளைப் பாம்பு’ என்று குறிப்பிடுகிறார் ஒளரங்கசீப். அந்தக் கோபம் ஜஹானாராவைவிட மூன்று வயது இளைய அவளது தங்கை ரோஷனாவுக்கும் இருந்தது. அவள் நேரடியாக ஜஹானாராவிடமே தனது வெறுப்பைக் காட்டினாள். ஒளரங்கசீப்போடு சேர்ந்துகொண்டு ஜஹானாராவின் பதவியைப் பறிக்கச் சதி வலைகளைப் பின்னினாள்.

  ஆனால் மன்னரின் விருப்பத்துக்குரிய மகள் என்பதால், ஜஹானாராவின் அதிகாரத்தை எவராலும் பறிக்க முடியவில்லை. ஷாஜஹான் காலகட்டத்தில் அரசின் ஆண்டு வருவாய் 60 லட்ச ரூபாய். ஆனால், செலவோ ஒரு கோடிக்கும் மேல்! ஆகவே, அந்தப் பற்றாக்குறையைச் சரிசெய்வதற்காக ஷாஜஹான் நிறையத் திட்டங்களைத் தீட்டி நாட்டின் வருவாயை ஒன்றரைக் கோடியாக உயர்த்திக் காட்டினார். செலவினத்தை மிகவும் குறைத்தார். இந்தச் செயல்பாடு காரணமாக அரண்மனையிலேயே அவருக்குக் கடுமையான எதிர்ப்பு உருவாகியிருந்தது. அதைச் சமாளிப்பதுதான் ஜஹானாராவின் முக்கியப் பணியாக இருந்தது.

  இன்னொரு பக்கம், ஷாஜகானுக்குப் பிறகு அரியணைக்கு யார் வருவது என்பதில் தாராவுக்கும் ஒளரங்கசீப்புக்கும் கடுமையான பகை வளர்ந்திருந்தது. தாரா பலவீனமானவன். அவனால் ஆட்சி செய்ய முடியாது என்று ஒளரங்கசீப் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, தனக்கான ஆட்களைத் திரட்டி ஆட்சியைப் பிடிக்கும் ஏற்பாட்டில் இருந்தான். ஆனால், தாராவுக்கே பதவி கிடைக்க வேண்டும் என்று ஜஹானாரா உறுதியாக இருந்தாள். பதவிச் சண்டை குடும்பத்தில் கடும் பூசல்களை உருவாக்கியது.

  தாரா, லாகூரின் புகழ்பெற்ற சூபி ஞானியான மையன்மிரின் சீடன். இந்து மதத்துக்கும் இஸ்லாத்துக்கும் இடையே இணக்கத்தை உருவாக்க, இஸ்லாமிய அறிஞர்கள் படிப்பதற்காக உபநிஷத்துகளை, பாரசீக மொழியில் தாரா மொழி பெயர்த்து இருக்கிறார். அவரது சிறந்த நூலான மஜ்மஉல்பஹ்ரெயின் எனும் இரண்டு பெருங்கடல்களின் சங்கமம், சூஃபியிசத்துக்கும் இந்து மதக் கோட்பாடுகளுக்குமான பொதுத் தன்மையைப் பேசுகிறது.

  ஸர்மத் என்ற ஞானியையும் பின்பற்றினார் தாரா. ஸர்மத் பிறப்பால் ஒரு யூதர். ஆனால், இஸ்லாம் மதத்தைத் தழுவியவர். அத்துடன் ராம லட்சுமணர்களின் பக்தர். அவரது சீடனாகத் தாரா இருப்பதை ஒளரங்கசீப் ஏற்றுக்கொள்ளவில்லை. அதை மத விரோதச் செயல் என்று கண்டித்தார். இந்தச் சகோதரச் சண்டைக்கு நடுவில் ஜஹானாரா மாட்டிக்கொண்டு தவித்தாள்.


  இப்போது உள்ள 'பழைய தில்லி’ அன்று ஷாஜகானாபாத் என அழைக்கப்பட்டது. அந்த நகரை வடிவமைக்கும்போது ஜஹானாரா ஐந்து முக்கிய இடங்களை தானே முன்னின்று வடிவமைத்துத் தந்தார். அப்படி உருவாக்கப்பட்டதுதான் சாந்தினி சௌக்.


  1644 மார்ச் 29-ம் தேதி தாராவின் திருமண ஏற்பாடுகளை செய்துகொண்டு இருந்தபோது ஜஹானாராவின் மெல்லிய பட்டு மேலாடையில் தீப்பற்றி அவளது தாடையிலும் பின் கழுத்திலும் தீக்காயங்கள் ஏற்பட்டன. அவளது அழகான முகம் சிதைந்துபோனதை ஷாஜகானால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சிகிச்சை செய்யப் பல நாட்டு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டார்கள். ஆனாலும், இளவரசியின் சிதைந்த முகத்தை முன்பு போல பொலிவுறச் செய்ய முடியவில்லை.


  நான்கு மாதங்கள் தொடர் சிகிச்சை நடந்தது. இந்த நாட்களில், தனது மகள் நலம்பெற வேண்டும் என்பதற்காக தினமும் 1,000 வெள்ளி நாணயங்களை ஏழைகளுக்கு தானம் அளித்ததோடு, துறவிகளையும் ஞானிகளையும் வரவழைத்து பிரார்த்தனையும் செய்துவந்தார் ஷாஜகான். பல நாட்கள், மகளின் அருகில் அமர்ந்து வேதனையோடு கண்ணீர்விட்டார் என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.


  எட்டு மாதத் தொடர் சிகிச்சை நடந்தது. ஈரானிய மருத்துவரின் முயற்சியால் அவள் குணம் அடைந்தாள் என்றும், ஆங்கில மருத்துவர் ஒருவரின் உதவியால் ஜஹானாரா நலமடைந்தாள் என்றும் இரண்டு விதத் தகவல்கள் கூறப்படுகின்றன. இரண்டையுமே உறுதி செய்யும் ஆதாரங்கள் எதுவும் இல்லை. அவள் நலமடைந்த சந்தோஷத்தில், 80,000 ரூபாய் தானத்துக்காகச் செலவிடப்பட்டது என்றும், மாமன்னர் தன் மகளுக்கு 139 அரிய வகை முத்துக்களையும் அரிய வைரம் ஒன்றையும் பரிசளித்தார் எனவும் கூறப்படுகிறது. இந்தத் தகவல்களோடு சூரத் துறைமுகத்தின் வரி வசூல் முழுவதும் அவளது வருவாயின் கீழ் கொண்டு வரப்பட்டது என்றொரு துணைத் தகவலும் காணப் படுகிறது.

  ஒரே விதியால் எழுதப்பட்ட இருவர் வாழ்க்கை!

  இதைத்தான் பெர்னர் போன்ற ஆய்வாளர்கள் வேறு விதமாகக் குறிப்பிடுகிறார்கள். அதாவது, தன் மகளைக் குணப்படுத்திய ஆங்கிலேய மருத்துவருக்கு நன்றிக் கடன் செலுத்துவதற்காக, சூரத் துறைமுகத்தில் வரி இல்லாமல் பொருட்களை வணிகம் செய்துகொள்ளலாம் என்று ஆங்கிலேயர்களுக்கு அனுமதி அளித்தார் மன்னர் ஷாஜஹான். அப்படித்தான் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் தனது வணிகத்தை ஸ்தாபிக்கத் தொடங்கியது என்கிறார்கள்.


  ஜஹானாரா, தனது தாய் இறந்த பிறகு, அவளது சொத்தில் பாதியை உரிமையாகப் பெற்றிருந்தாள். அந்தப் பணத்தை, டச்சு வணிகர்களுடன் சேர்ந்து கப்பல் வணிகம் செய்தாள் என்றும் மகாஜன் வித்யாதரின் குறிப்பு கூறுகிறது. அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், ஆங்கிலேயருக்கு அவள் வணிகம் செய்ய உதவி இருக்கக்கூடும். மன்னரோடு மாளிகையில் வாழாமல் தனியே தனக்கென ஓர் அரண்மனை அமைத்துக்கொண்டு வாழ்ந்தவர் ஜஹானாரா. தனிமையில் வாழ்ந்த அழகியான ஜஹானாராவை, யூசுப் என்ற கவிஞன் காதலித்தான். அவளும் அவன் மீது மிகுந்த காதலுடன் இருந்தாள். தந்தையைக் கவனித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்த காரணத்தால், அந்தக் காதல் முறிந்துபோனது என்றொரு கதையும் வரலாற்றில் உலவுகிறது.

  1658-ம் ஆண்டில் ஷாஜகான் உடல் நலமற்றுப்போனார். பதவியைக் கைப்பற்ற நான்கு புதல்வர்கள் இடையே கடும் போராட்டம் ஏற்பட்டது. 1659-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி ஒளரங்கசீப்பின் ஆட்கள், தலை வேறு உடல் வேறாக தாராவை வெட்டிக் கொன்றார்கள். வயோதிகத்தைக் காரணம் காட்டி ஷாஜகானைச் சிறையில் அடைத்தான் ஒளரங்கசீப்.

  தனிமையும் நோயுமாக தனது வயோதிகக் காலத்தைக் கழித்த ஷாஜகானுக்கு இருந்த ஒரே ஆறுதல் மகள் மட்டுமே. அவள், ஷாஜகானின் இறுதி நாள் வரை உடனிருந்து பராமரித்து வந்தாள். அப்பாவின் மரணத்துக்குப் பிறகு அவள் தனித்துவிடப்பட்டாள். ஒளரங்கசீப்பால் துரத்தப்பட்ட அப்பாவின் மற்ற மனைவிகளையும் அரண்மனைப் பெண்களையும் தனது பொறுப்பில் கவனித்தாள். ஒளரங்கசீப் அவள் மீது இரக்கம்கொண்டு மீண்டும் அவளுக்கு அரண் மனையின் உயரிய பதவியான முதல் பெண்மணி என்ற அந்தஸ்தை அளித்தார். அதைப் பெரிதாகக் கருதாமல் 16 ஆண்டுகள் அப்பாவின் நினைவில் வாழ்ந்த ஜஹானாரா, 1681-ம் ஆண்டு இறந்துபோனார்.

  அவளுக்கு, நிஜாமுதீன் தர்காவில் கல்லறை அமைக்கப் பட்டது. 'என்னுடைய கல்லறையை அலங்காரமாக மூட வேண்டாம். அங்கே பசும்புற்கள் முளைத்து என்னை மூடட்டும்’ என்ற அவளது இறுதி வார்த் தைகள் அங்கே பொறிக்கப்பட்டுள்ளன.


  ஜஹானாரா எழுதிய பெர்ஷியக் கவிதை களின் தொகுப்பு ஒன்று ஆன்ட்ரியா புடென்ஷோன் என்பவரால் கண்டு பிடிக்கப் பட்டு, 300 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வெளியிடப்பட்டு உள்ளது.

   வெங்கி

  விவேகானந்தர் பொன்மொழிகள்

  நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தால் பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்த வனாகவே ஆகிவிடுவாய். - கீதை விளக்கத்தில் விவேகானந்தர்

  மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகின்றான்.

  பிறரிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக் கொள்ள மறுப்பவன், இறந்தவனுக்கு ஒப்பாவான்.

  காயம்படாதவன் தான் தழும்மைக் கண்டு நகைப்பான்.

  உடலிலும் மனதிலும் வலிமை இல்லாமல் போனால் ஆன்மாவை அடைய முடியாது.

  நீ உன்னைப் பலவீன்ன் என்று ஒரு போதும் சொல்லாதே. எழுந்து நில். தைரியமாக இரு. வலிமையாக இரு. பொறுப்பு முழுவதையும் உன் தோள் மீதே சுமந்து கொள்.

  சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. நான் உறுதியாகச் சொல்வேன். உனது கடந்து கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப்பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமற் போனதையும்தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்தவையாகத்தான் இருக்கும்.

  மக்களுக்கு சேவை செய்யும் தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டு

  நாத்திகனுக்கு தருமசிந்தனை இருக்கலாம். ஆனால் மதகோட்பாடு இருக்க இயலாது. மத்த்தில் நம்பிக்கை வைத்தவனுக்கு தருமசிந்தை அவசியம் இருக்க வேண்டும்.

  குருவாகப் பிறந்த ஆன்மாக்களைத் தவிர, மற்றர்கள் குருவாவதற்கு விரும்பி அழிந்தும் போகின்றனர்.

  செல்வத்தைக் கொண்டு ஒரு மனிதனை மதிப்பவனை விட, அரசனையும், ஆண்டியையும் ஒன்றாக நினைத்து வாழும் துறவிகளின் வாழ்வே சிறந்தது.

  நாம் செல்வச் செழிப்போடு வாழ்ந்தாலும் இறந்துவிட்டபின் இவை நம்முடன் வருமா? நாம் அழியும் செல்வத்தைச் சேர்க்க நினைப்பதை விட அழியாத ஒன்றைப் பெறுவதுதான் ஆண்மைக்கு அழகு.

  மரணத்தை வென்று, அதறக்குமேல் உள்ள மெய்ப்பொருள் என்ன என்பதைனைத் தெரிந்து கொள்ளத்துடிக்கும் துறவற வாழ்க்கையே மேல்.

  மிருகத்தை மனிதானாக்குவதும், மனிதனைத் தெய்வம் ஆக்குவதும் மதம்.

  இந்த உலகில் மிருகங்களை மட்டுமின்றி மிருகத்தனம் கொண்ட எதையும் - பயத்தை உண்டு பண்ணுகிற எதையும் நிற்க வேண்டும். அவற்றுடன் போராடவேண்டும். பயந்து ஓடலாகாது.

  மக்கள் எவராயினும் சகிப்புத் தன்மையோடு, பிறருடைய சமயங்களில் பரிவு காட்ட வேண்டும்.

  மதங்கள் எல்லாமே உண்மையானவைதாம்! ஆனால் ஒரு மத்த்திலிருந்து வேறொரு மத்த்திறகு மக்களை மாறச் செய்வது பொருள்ளற்றது. கிறிஸ்தவர்கள் மேலும் சிறந்த கிறிஸ்தவர்களாகவும், முஸ்லீமுகள் சிறந்த முஸ்லீம் ஆகவும் வாழ வேண்டும். ஒவ்வொருவருக்கும் தம் தம் மதங்களில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்க வேண்டுமே.

  கடவுளை தாம் விரும்பும் உருவத்தில் ஒவ்வொரு மதப்பழகப்படி ஒவ்வொருவரும் வணங்கலாம்.

  தங்கள் மதமே சிறந்து விளங்கவேண்டும் மற்ற மதங்கள் அழிய வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்குள் பகைமையை உருவாக்கும்.

  பணி செய் அதற்குப் பெயர் தவம். தன்னலமற்று மக்களுக்கு உழைக்க வேண்டும். மக்களுக்கு உழைப்பதை தாழ்வாக எண்ணாதே அவ்வாறு உழைக்கும் பணி தெய்வத்திற்குச் செய்யும் திருத்தொண்டைப் போன்றது.

  உடல் இன்பமே பெரிதன்று. வறுமையில் வாழ்ந்தாலும், திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளைப் பெற்று கஷ்டத்தில் வாடுவதை விட, பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டு, தன் நலத்தைக் குறைத்து, பிறர் நலத்தை பேண வேண்டும்.

  இறைவனே இன்று உலகாமகப் பரந்து விரிந்து நிற்கின்றான். கடவுளை நினைத்து பக்தியோடு பணி செய். அதுவும் ஒழ்க்கத் தோடு பணி செய். ஒழுக்கம் என்பது தன்னலமற்ற சேவை. அதுவே சிறப்பு. அந்த சிறப்பை அடைய மனிதன் முயல வேண்டும்.

  நீ கடவுளைத் தேடி எங்கும் போக வேண்டாம். ஏழைகள், துன்ப்ப்படுவோர் எல்லோருமே கடவுள் தான், அவர்களை ஏன் முதலில் பூஜை செய்ய்க்கூடாது?

  உடல் வலிமையுடையவன், வலிமை குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும்.

  செல்வம் படைத்தவன், செல்வம் இல்லாதவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அறிவுடையவன் அறிவு குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்ததை விட வேண்டும்.

  முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும், மேலும் அவ்வப்போடு நம்மிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும், நம்பிக்கை இருந்தது. ஆனாலும் ஒருவனிடத்தில் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் அவனுக்குக் கதி மோக்ஷமில்லை.

  பாவம் என்பது ஒன்று உண்டு என்றால், அது நான் பலவீனமானவன், மற்றவர்கள் பலவீனமானவர்கள் என்று சொல்வது ஒன்றுதான்.

  நம்பிக்கை, நம்பிக்கை நம்மிடத்தில் நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை - இதுவே மகிமை பெறுவதன் இரகசியமாகும்.

  இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன். முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வாழ்க்கைக்கு வழி.

  அடக்கப்படாமல் சரியான வழியில் செலுத்தப்படாத மனம், நம்மை மேலும் மேலும் என்றென்றைக்கும் கீழே இழுத்துச் சென்றுவிடும். ஆனால், அடக்கப்பட்டுச் சரியான வழியில் செல்கின்ற மனம் நம்மை என்றென்றைக்கும் காத்து இரட்சிக்கும்; நம்மை விடுதலைப் பெறச் செய்யும்.

  எப்போதும் விரிந்த மலர்ந்து கொண்டே இருப்பதுதான் வாழ்க்கையாகும். சுருங்கி விடுவது மட்டும் கவனித்துக் கொண்டு, சோம்பல் வாழ்க்கை வாழும் சுயநலக்காரனுக்கு நரகத்தில் கூட இடம் கிடையாது.

  எதிரிகளை அழிக்க ஒரே வழி அவர்களை நண்பர்களாக்குங்கள்.

  யார் ஒருவன் தனக்குள் கௌரவமும் மரியாதையும் போய்விடுமோ என்று பயந்தபடி இருக்கிறானோ அத்தகையவன் அவமானத்தை தான் அடைகிறான்.

  குருவுக்குப் பணிந்து நடந்தாலும் பிரம்மச்சரிய ஒழுக்கத்தை நன்கு கடைப்பிடித்தலம் வெற்றிக்கு வழிகளாகும்.

  சிங்கங்களே சீறி எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள். சுதந்திர ஆன்மாக்கள், அழியாத திருவருளைப் பெற்றவர்கள்.

  போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதே, மிருகத்தைப் போல வாழாதே!

  இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே! என்னால் இயலாது என்று ஒரு நாளும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லவலிமை பெற்றவன், உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும்போது, காலமும், இடமும் கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ எதையும் சாதிக்ககூடியவன். சர்வ வல்லமை படைத்தவன் நீ.

  பயங்கரத்தை எதிர்த்து நில். ஓர் அடியும் பின்வாங்கக்கூடாது. கருத்து இதுதான் - எது வந்தாலும் போராடி முடி. தங்கள் நிலையிலிருந்து நட்சத்திரங்கள் பிறழட்டும். முழு உலகமும் நமக்கு எதிராக எழுந்து எதிர்த்து நிறகட்டும். குறிக்கோளும் கொள்கையும் மாறாமல் முன்னேறிச் செல்.

  நம்பிக்கையை இழந்துவிடாதே. பாதை, கத்தி முனையில் நடப்பதைப் போல மிகவும் கடினமானது தான். எனினும் எழுந்திரு. விழித்துக் கொள். மனம் தளராதே. நீ அடையவேண்டிய உனத் இலட்சியமாகிய குறிக்கோளைக் கண்டுபிடி.

  நீ வீணாக அழுவதேன்? மரணமோ, நோயோ உன்கில்லை. நீ அழுவதேன்? துன்பமோ, துரதிர்ஷ்டமோ உனக்கு கிடையாது. நீ ஏன் அழ வேண்டும்? மாற்றமோ உனக்கு விதிக்கப்படவில்லை. நீ ஆனந்தமயமானவன். நீ உனது ஆன்மாவில் நிலைத்திரு. மக்கள் என்ன வேண்டுமானாலும் இரு. பிறகு, நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் காலடியில் பணிந்து கிடக்கும்.

  பகுத்தறிவைக் கொண்டவன் பகவானை அடைய வழிகளை நுட்பமாகத் தேடுகிறான். தனது உடம்பால் உழைத்து இறைவனை அடைய நினைப்பவன் சேவாமார்க்கத்தை நாடுகிறான். சமூக சேவையில் இறைபணியைத் தேடுகிறான். மந்திரப் பூர்வமாக நாடுபவன் வீட்டிலும் ஆலயத்திலும் பூஜிக்கிறான்.

  கர்மயோகம்: தனது கடமைகளைச் செய்வதாலும் அதற்குரிய செயல்களை ஆற்றுவதாலும் இறை உணர்வைப் பெறுவது.

  பக்தியோகம்: தனது அந்தரங்கமான பக்தி உணர்வால், இறைவனை நினைந்து அவரைத் தனக்கே உரியவராக அடைய முற்படுவது.

  ராஜயோகம்: மனத்தைக் கட்டுப்படுத்தி, உணர்ச்சிகளை ஒருமுகப்படுத்தி இறைவன்பால் தனது சிந்தனையை வழிப்படுத்தி, இறை உணர்வைப் பெறுவது.

  ஞானயோகம்: தனது அறிவாற்றலால் பல்வேறு சாஸ்திர நூல்களைப் படித்தும் ஞானபோதனைகளைப் பெற்றும், இறைவனை உணர்ந்து அவரை அடைய முற்படுவது.

  இந்தச் சீதையெனும் இலட்சியத்தைப் போன்று வேறில்லை. எது எது பரிசுத்த மனதோ, எது எது புனிதமானதோ பெண்ணினத்திலே பெண்மை என்ப்போற்றப்படுவது எதுவோ, அதற்குப் பெயர்தான் சீதை! குரு ஒருவர் ஒரு பெண்மணியை ஆசீர்வதிக்க வேண்டுமென்றாலும், ஒரு குழந்தையை வாழ்த்த வேண்டுமென்றாலும், சீதையைப் போல் இரு என்ற கூறி ஆசீர்வதிப்பார்.

  மனிதனாக வாழ முயற்சி செய். தோல்விகளை ஒரு போதும் பொருட்படுத்தாதே. ஓராயிரம் முறை நீ உனது இலட்சியத்தைக் கைக்கொள். ஆயிரம் முறை நீ தோல்வியுற்றாலும் மீண்டும் ஒரு முறை கைக்கொள்ள முயற்சி செய்.

  பசியால் நலிந்து வாழும் மக்களிடையே சென்று சமயப் பிரசாரம் செய்வது அவர்களை அவமதிப்பதாகும். பட்டினி கிடக்கும் மனிதனை அணுகி, அவனுக்குத் த்த்துவ போதனைகள் செய்வது மேலும் அவனை அவமதிப்பதாகும்.

  ஒரு கழுதை மீது நூலகத்தை ஏற்றிவிட்டால் அது பண்டிதன் ஆகிவிடாது. நூல்கள் நிறைய படிப்பதனால் எவனும் பயன்பெற முடியுமா?

  நம் நாட்டுப் பொன்னை பித்தளையாகவும், அயல்நாட்டுப் பித்தளையைத் தங்கமாகவும் கருதக்கூடிய வகையில் நம் நாட்டு மக்கள் தங்கள் கல்வி அறிவைப் பெற்றிருக்கிறார்கள். நவீன காலமேற்றிசைக் கல்வி, நம் நாட்டு மக்களை இவ்வாறு செய்திருப்பது மந்திர மாயம் போல் இருக்கிறது.

  ஒருவன் நன்மையிலிருந்து அறிவைப் பெறுவது போலவே, தீமையிலிருந்து அறிவைப் பெறுகிறான்.

  உண்மையாக எதையும் துறக்கலாம். ஆனால், எதன் பொருட்டும், உண்மையைத் துறக்கலாகாது.

  எந்த ஒரு காரியத்தை தொடங்கும் பொழுதும், தவிர்க்க முடியாத தவறுகள் சில ஏற்படவே செய்யும்.

  பிறருடைய உத்தரவுக்குப் பயந்து பயந்து நடப்பவர்கள் நாளடைவில் சிந்திக்கும் சக்தியை இழந்து விடுகிறார்கள். உங்களுக்குள் இருப்பதை உங்கள் உழைப்பாலே வெளிக்கொணர முயலுங்கள். பிறரைப் பார்த்து நடிக்காதீர்கள். பிறரிடம் காணப்படும் நல்ல பண்புகளைப் கற்றுக் கொள்ளுங்கள்.

  விட்டுக் கொடுத்து, எவன் பிறருடைய கருத்துகளை ஏற்க ஆயத்தமாய் இருக்கிறானோ இறுதியில் அவனுடைய கருத்துகள் வெற்றி அடைகின்றன.

  கல்வி என்பது ஒருவனுடைய மூளயல் பல விஷயங்களைத் திணிப்பதுன்று, அப்படித் திணிக்கப்படும் அந்த விஷயங்கள் நன்றாக ஜீரணமாகிக் பயன்படவேண்டும்.

  ஆயிரம் முறை இடறி விழுவதன் மூலம்தான் நல்ல ஒழுக்கத்தை உறுதியாக நிலைநிறுத்த முடியும்.

  ஒருவனுடைய உண்மைத் தன்மையை ஆராய வேண்டின், அவனது பெருஞ்செய்ல்களைப் பார்க்க வேண்டாம். அவன் தன் சாதாரணக் காரியங்களை எங்ஙனம் செய்கிறான் என்பதை கவனிக்க வேண்டும்.

  நீ கடவுள் நம்பிக்கை உடையவனாக இருந்தாலும் சரி, அல்லது நாத்திகனாக இருந்தாலும் சரி, அல்லது யாராக இருந்தாலும் சரி. உன்னைடைய சுகதுக்கங்களை மறந்து நீ வேலை செய்க. இது ஒன்றே இப்பொழுது நீ கற்றுக் கொள்ளக்கூடிய முதல் பாடமாகும்.

  எல்லாப் பேய்களும் நம்முடைய மனத்திலே தான் இருக்கின்றன. மனம் கட்டுப்பட்டு அடங்கியிருந்தால் எந்த இடத்தில் நாம் இருந்தாலும் அது சொர்க்கமாக மாறிவிடும்.

  இன்பங்களை அனுபவிக்கும் ஆசையை முற்றிலும் மனத்திலிருந்து நீக்காமல் ஆன்மிக வாழ்வில் எதையுமே அதையமுடியாது.

  இன்பங்கள் என்ற உன்னுடைய எல்லா ஆசைகளையும் சமுதாயத்தின் நன்மையை முன்னிட்டு எப்போது உன்னால் தியாகம் செய்ய முடிகிறதோ அப்போது நீ ஒரு புத்தர் ஆகிவிடுகிறாய்.

  மனிதன் இயற்கையை எதிர்த்துப் பொராட ஆரம்பிக்கிறான். அதில் அவன் பல தவறுகளைச் செய்கிறான். அதனால் துன்பப்படுகிறான்.

  வெற்றிப் பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியும், பெரும் மன உறுதியையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும்.

  மனிதன் தானே பணத்தை உண்டு பண்ணுகிறான். பணம் மனிதனை உண்டு பண்ணியதாக எங்கேயாவது எப்போதாவது நீ கேள்விப்பட்டிருக்கிறாயா?

  மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவனாகிறானோ அந்த அளவுக்குத் தக்கபடி அவன் கடுமையான சோதனைகளையும் கடந்து சென்றாக வேண்டும்.

  நமது குழந்தை நிலையை எண்ணி இப்போது சிரிப்பது போல, இன்னும், ஐம்பது ஆண்டுகளுக்குப்பிறகு இப்போதைய நிலையை எண்ணிச் சிரிப்போம்.

  பெண்ணுக்குரிய அச்சம், நாணம் போன்ற பண்புகளை இந்தியப் பெண்களிடம் மட்டுமே நாம் பார்க்கமுடியும். அத்தகைய அற்புதமான குணங்களை உடைய பெண்களை முன்னேற்ற உங்களால் முடியவில்லை.

  நூல்களைக் கற்கலாம். சொற்பொழிவுகளைக் கேட்கலாம். பல மணி நேரம் தொடர்ந்து பேசலாம். ஆனாலும் அனுபவமே சரியான ஆசான். அதுவே உண்மையாம கல்வி.

  நூல்நிலையம் ஒன்றில் இருக்கும் எல்லா நூல்களையும் ஒன்றுவிடாமல் படிக்கும் புத்திசாலியைவிட, ஐந்து நல்ல, உயர்ந்த கருத்துகளை அறிந்து கொண்டாலே போதும், நீயே மெத்தபடித்தவனாக இருப்பாய்.

  பூரணத்துவம் பெற்ற மனிதன் என்ன ஆகிறான்? அவன் எல்லையற்ற பேரானந்தப் பெருக்கில் திளைத்து வாழ்கிறான். பேரின்பம் பெறுவதற்கு எந்தப் பொருளை அதைய வேண்டுமோ, அந்த ஆண்டவனை அடைந்து அவனுடன் பேரானந்தத்தில் திளைக்கிறான்.

  எல்லா ஒழுக்கத்திற்கும், எல்லா ஆன்மீக உணர்விக்கும் பிரம்மச்சரியமே ஆதாரம்.

  வாழ்க்கையை இன்பம் அனுபவிக்கும் பூஞ்சோலையாக நினைத்து உருகி நிற்கும் காதலனின்ம மனநிலை நமக்குத் தேவையே இல்லை. மாறாக வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் அஞ்சாமல் எதிர்த்துநிற்கும் வீரன் ஒருவனுடைய மனநிலையே நமக்கு இப்போது வேண்டும்.

  கோழைகள் எப்போதும் வெற்றியடைய முடியாது.

  சிவன், விஷ்ணு என்றெல்லாம் எத்தனையோ நூறு பெயர்களால் அழைக்கப்படுவது ஒரே கடவுள்தான். பெய்ர்கள் வேறு. ஆனால் இருப்பது ஒன்றுதான்.

  அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம். அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்.

  துருப்பிடித்தத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

  உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக்கூடாது.

  வழிபாடுகள் எந்தப் பெயரிலும் இருந்தாலும் சரி. எந்த வித்த்தில் இருந்தாலும் சரி. அவை அனைத்தும் ஒரே கடவுளக்குச் செய்யப்படுகின்றன என்பதை நீங்கள் உணர வேண்டும்.

  தனது குழந்தைகளில் யாரேனும் ஒருவருக்காவது உதவி செய்யும் வாய்ப்பை ஆண்டவன் உனக்குக் கொடுத்தால் அதன் மூலம் நீ பாக்கியம் பெற்றவன் ஆகிறாய்.

  இந்தியாவின் பாமர மக்களாகிய இந்த ஏழை எளியவர்களை நாம் உயர்த்த வேண்டும். அவர்களின் முன்னேற்றத்திற்கு உரிய கருத்துக்களை நம்பிக்கயோடும், சிரத்தையோடும், அன்பான சொற்களால் அவர்களுக்கு விரிவாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

  நோயாளிகளுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய். பசியால் வாடுபவனுக்கு உணவு கொடு. அறியாமையில் உள்ளவனுக்கு உன்னால் முடிந்த அளவிற்கு கல்வியறிவைப் புகட்டு. இதுவே உனது கடமையாக்க் கொள்.

  எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தல் பலவீன்னாகவே நீ ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுகிறாய்.

  மனிதனுக்கு மன அமைதியைத் தருவதுதான் மத்த்தின் அடிப்படை இலட்சியமாகும்.

  இறைவனை ஒவ்வொரு உயிரிலும் காண்பவன் ஆத்திகன்.

  எவன் ஒருவனுக்குத் தன்னம்பிக்கை இல்லையோ அவன்தான் நாத்திகன்.

  --
  விவேகானந்தர்.......

  வரலாற்றில் இன்று

  ஜனவரி 06

  1721: பிரிட்டனில் 'சௌத் ஸீ' குமிழ் மோசடி குறித்து விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட குழு அதன் அறிக்கையை சமர்ப்பித்தது.

  1752 - ஆம் ஆண்டு வரை சிலநாடுகளில் இன்று தான் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வந்தது.

  1838: சாமுவேல் மோர்ஸ் இலத்திரனியல் டெலிகிராவ் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டார்.

  1929: அன்னை திரேஸா இந்தியாவில் வறிய மக்களுக்கான தனது சேவையை ஆரம்பிப்பதற்கு கல்கத்தாவை சென்றடைந்தார்.

  1931: தோமஸ் அல்வா எடிஸன் தனது கடைசி காப்புரிமைக்கு வி;ண்ணப்பித்தார்.

  1950: சீன மக்கள் குடியரசை பிரிட்டன் அங்கீகரித்தது. அதற்கு பதிலடியாக சீனக் குடியரசு (தாய்வான்) பிரிட்டனுடனான இராஜதந்திர தொடர்புகளை துண்டித்தது.

  1953: முதலாவது ஆசிய சோசலிஷ மாநாடு பர்மாவின் தலைநகர் ரங்கூனில் நடைபெற்றது.

  1959 - உலகின் முதல் செயற்கைக் கோள் ஏவப்பட்டது. ரஷ்யாவின் காஸ்மிக் ராக்கெட் எனும் அந்தச் செயற்கைக் கோள் புவியை விட்டு 800 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் மேலே சென்று சுற்றுப் பாதையை அடைந்தது.

  1994: அமெரிக்க ஸ்கேட்டிங் வீராங்கனை நான்ஸி கேரிங்கன், தனது போட்டியாளரினால் ஏவப்பட்ட குழுவினால் முழங்காலில் அடித்து காயப்படுத்தப்பட்டார்.