Digital Time and Date

Welcome Note

Showing posts with label Kavithai. Show all posts
Showing posts with label Kavithai. Show all posts

Wednesday, July 10, 2013

வாடகை வீடு பெரும் தொல்லை !

வீட்டில் ஆணி அடித்தால் உடன் !
வீட்டுக்காரர் சொல்லால் ஆணி அடிப்பார் !

வீட்டுக்காரர் அருகில் வசித்தால் !
வீட்டில் மகிழ்ச்சிக்கு பஞ்சம்தான் !

சொந்த வீட்டை விற்று விட்டு !
வாடகை வீடு வந்தால் வலி அதிகம் !

நம் குழந்தை அவர் குழந்தை சண்டையிட்டால் !
நம் குழந்தை அடங்கிப் போக வேண்டும் !

நாய் வளர்க்க நம் மகள் ஆசைப்பட்டால் !
நாயை விட அதிகம் குரைப்பார் வீட்டுக்காரர் !

வருடா வருடம் வாடகை ஏற்றுவார் !
வாய் பேசாமல் தந்தாக வேண்டும் !

வாடகை வீட்டில் குறை இருந்தால் !
வீட்டுக்காரரிடம் பயந்து சொன்னால் !

இஷ்டம் என்றால் இரு !கஷ்டம் என்றால் போ!
இஞ்சி தின்ன குரங்குப் போல கத்துவார் !

பிடிக்காத புதிதாக வந்த வீடு !
பிடிக்கத் துவங்கி மனம் ஒப்பும் !

வீட்டைக் காலி செய்யச சொல்லி !
வீட்டுக்காரர் உத்தரவு போடுவார் !

மறுபடியும் வீடு பார்க்கும் படலம் !
மொத்தமாக முன்தொகை கேட்பார்கள் !

சொந்த வீடு கட்டும் ஆசையில் !
சொந்தமாக மனை வாங்கி ஏமாந்தோம் !

வாடகை வீடு மாறி மாறி குடும்பத்திற்கு !
வலிக்கிறது நெஞ்சம் துக்கமே மிச்சம் !

படிவங்கள் பூர்த்தி செய்யும் போது !
பார்த்தால் நிரந்தர முகவரி கேள்விக்கு நெஞ்சு வலிக்கும் !

இருப்பவனுக்கு ஒரு வீடு இல்லாதவனுக்கு பல வீடு !
என்று சொல்லி வைத்தனர் வீடு மாறியே நொந்தோம் !

குறைந்த பட்சம் ஆதார் அட்டை கூட !
கொடுப்பதில்லை வீடு மாறியவர்களுக்கு !

ஒருவனுக்கு பத்து வீடுகள் உண்டு !
பலருக்கு ஒரு வீடு கூட இல்லை !

எட்டு அடுக்கு மாளிகையில் ஒரே ஒரு குடும்பம் !
எட்டிப் பார்க்கும் குழாயில் பல குடும்பம் !

அனைத்து வீடுகளையும் அரசுடமையாக்கி !
ஒரு குடும்பத்திற்கு ஒரு வீடு மட்டும் தாருங்கள் !


நன்றி கவிஞர் இரா .இரவி  
அமர்க்களம் 

இனிய ரமலான் வாழ்த்துக்கள்!

 இனிய ரமலான் வாழ்த்துக்கள்!

இனிய மாலை நேரம்!

இஸ்லாமிய இதயங்கள்
எதிர்பார்த்துக் காத்திருக்கும்
பொன்னேரம்!

புதிய இளைய முதற்பிறை
எழில் வானத்தில்
கோலம் வரையக்
காத்திருக்கும் நேரம்!

சுவனத்தின் தென்றல்
ஒருமாத காலம் பூமியை
வலம்வரும் நேரம்!

கொடுமைகள் - வன்மைகள்
தீமைகள் -பகைமை நரகச் சூடுகள்
மாண்டழியும் நேரம்!

அலையும் மன சாத்தான்கள்
காட்டப்படும் நேரம் !

இந்த பூலோகம் எங்கணும்
இறைப்புகழிலும்
நபிப் புகழிலும்
நிறையும் நேரம்!

ஒளுவின் துளிகளில்
உண்மைகள் உயிர்க்கும் நேரம்!

அருள்மறை மொழிகளில்
உலகம் குளிக்கும் நேரம்!

சலவாத்துக்களில்
சந்தோசம் கொள்ளும் நேரம்!

தராவீ ஹ் தவங்களில்
பள்ளிவாயில்கள்
அலங்கரிக்கப்படும் நேரம்!

வா வா ரமலானே!
வந்து எங்களை நேர்படுத்து
இடையில் கொஞ்சம்
வளைந்து போன
நெஞ்சங்களச் சீர்படுத்து!

இனிய ரமலான் வாழ்த்துக்கள்!


முஹமது மொய்தீன்

Sunday, June 30, 2013

ஊழலோ ஊழல் !

அரசியலில் ஊழல் !
அரிசியிலும் ஊழல் !
ஆற்றுமணலில் ஊழல் !
செம்மண்ணிலும் ஊழல் !
ஆயுதத்தில் ஊழல் !
ராணுவத்திலும் ஊழல் !
 

நிதித்துறையில் ஊழல் !
நீதித்துறையிலும் ஊழல் !
நிலத்தில் ஊழல் !
நிர்மானத்திலும் ஊழல்
 

தொலைபேசியில் ஊழல் !
தொலைக்காட்சியிலும் ஊழல்!
கல்லில் ஊழல்!
பாறையிலும் ஊழல்!
 

நிலக்கரியில் ஊழல்!
நிலத்தடி நீரிலும் ஊழல்
விளையாட்டில் ஊழல்
கிரிக்கெட்டிலும் ஊழல்
 

மருத்துவத்தில் ஊழல்!
மருத்துவக் கல்லூரியிலும் ஊழல்!
காவல் துறையில் ஊழல்
உளவுத்துறையிலும் ஊழல்
 

சுகாதாரத்தில் ஊழல்
சுடுகாட்டிலும் ஊழல்
உதவித் தொகையில் ஊழல்
உன்னத ஆசிரியர்களும் ஊழல்
 

மாற்றுத் திறனாளிகள் உதவியில் ஊழல்
மாற்று அரசியலிலும் ஊழல்
ஊழலோ ஊழல்
எங்கும் எதிலும் ஊழல்
 

வாழ்க ஜனநாயகம்!
வளர்க பண நாயகம்!
உலகின் பெரிய ஜனநாயக நாடு!
உலகின் பெரிய ஊழலோ ஊழல்!




நன்றி
கவிஞர் இரா .இரவி

Saturday, June 29, 2013

ஓர் ஆயுள் கைதியின் அறையில் கண்ட வாசகம்

போதைக்கு அடிமையாகாதே;
புதை குழியில் வீழ்ந்திடுவாய்!

மாதுக்கு அடிமையாகாதே;
மதிகெட்டு அலைந்திடுவாய்!

சூதுக்கு அடிமையாகாதே;
சுற்றத்தை இழந்திடுவாய்!

பணத்திற்கு அடிமையாகாதே;
குணத்தை இழந்திடுவாய்!

புகழ்ச்சிக்கு அடிமையாகாதே;
மகிழ்ச்சியை இழந்திடுவாய்!

தூண்டுதலுக்கு அடிமையாகாதே;
தூண்டிலில் மாட்டிக்கொள்வாய்!

புலன்களுக்கு அடிமையாகாதே;
பலன்களை இழந்திடுவாய்!

கோபத்திற்கு அடிமையாகாதே;
ஆபத்தில் வீழ்ந்திடுவாய்!

உணர்ச்சிக்கு அடிமையாகாதே;
உன்னையே நீ இழந்திடுவாய்!

அன்பிற்கு அடங்கு, அறிவுக்கு அடிபணி அத்தனையும் பெற்றிடுவாய்!!!

(ஓர் ஆயுள் கைதியின் அறையில் கண்ட வாசகம்)

முகநூல்- இனியவன்

Thursday, June 27, 2013

தமிழர்கள் கவனத்திற்கு

தடுக்கி விழுந்தால் மட்டும் அ… ஆ…
சிரிக்கும் போது மட்டும் இ… ஈ…
சூடு பட்டால் மட்டும் உ… ஊ…
அதட்டும் போது மட்டும் எ… ஏ…
சந்தோசத்தின் போது மட்டும் ஐ…
ஆச்சர்யத்தின் போது மட்டும் ஒ… ஓ…
வக்கனையின் போது மட்டும் ஔ…
விக்களின் போது மட்டும் ஃ…
என்று தமிழ் பேசி
மற்ற நேரம் வேற்று மொழி பேசும்
தமிழர்களிடம் மறக்காமல் சொல்
உன் மொழி
தமிழ் மொழி என்று

நன்றி ………..ஒரு தமிழன் படைப்பு