Digital Time and Date

Welcome Note

Saturday, November 17, 2012

கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?

"கருங்காலி" என்ற சொல்லின் தோற்றம் இன்று வரை விவாதத்திற்கு உட்பட்டதாகவே இருந்துவருகிறது.

ஆங்கில மொழி வல்லுனர்களுக்கும் தமிழ் மொழி வல்லுனர்களுக்கும் இடையில் ஒரு அர்த்தம் செறிந்த சொல் யுத்தம் பல ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது.

நம்பிக்கை துரோகிகளைக் குறிக்கப் பயன்படும் ஆங்கில சொல்லான “Black Legs” என்பதன் நேரடி மொழி பெயர்ப்புதான் நாம் தமிழில் பயன்படுத்தும் கருங்காலி என்ற சொல்லாகும் என்பது ஆங்கில மொழி வல்லுனர்களின் வாதமாகும்.

இதை நிரூபிக்க அவர்கள் வரலாற்றிலிருந்து ஒரு சம்பவத்தை நினைவு படுத்துகிறார்கள்.ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சிக்கு பின்பு, காரல் மார்க்ஸின் சிந்தாந்தம் அங்கே வேகமாக பரவத்தொடங்கியது. தொழிலாளர்களுக்கென்று சங்கங்கள் உருவாகத்தொடங்கின. அப்படிப்பட்டதொரு காலகட்டத்தில் அங்கே ஒரு நிலக்கரி தொழிற்சாலையில் வேலை நிறுத்தப்போராட்டம் தொடங்கியது.

இப்போது செய்வதைப் போலவே அப்போதும் முதலாளித்துவம் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்காக தொழிலாளர்களை விலைக்கு வாங்கத் தொடங்கியது.போராட்ட காலகட்டத்தில் யாரெல்லாம் வேலைக்கு வருகிறார்களோ அவர்களுக்கெல்லாம் இரண்டு சம்பளம் என்று அறிவித்தது. சில தொழிலாளர்களும் இந்த அறிவிப்பால் மயங்கி தொழிற்சாலையின் பின்வாசல் வழியாக வேலைக்கு சென்றுவிட்டு, வேலை முடிந்ததும் முன்வாசலில் நடக்கும் போராட்டத்தில் ஒன்றும் தெரியாத பிள்ளைகளைப் போல வந்து உட்கார்ந்து கொண்டார்கள்.

போராட்டக் குழுவின் தலைவருக்கு சிலர் போராட்டத்திற்கு துரோகம் செய்துவிட்டு இப்போது போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்து விடுகிறது. அவர்களை அடையாளம் காண அவர் ஒரு யுத்தியை கண்டுபிடித்தார். அது ஒரு நிலக்கரி தொழிற் சாலையாக இருந்ததால் தொழிற்சாலைக்குள் சென்று திரும்பியவர்களின் கால்களில் எப்படியும் கரி பிடித்து கருப்பாகத்தானே காட்சியளிக்கும்? எனவே அவர்களை மிக எளிதாக அவர் அடியாளம் கண்டு பிடித்து விட்டார்.

அவர்கள் தொழிலாளர்களாக இருந்து கொண்டு தொழிலாளர் இனத்திற்கே துரோகம் செய்ததால் நம்பிக்கை துரோகம் செய்பவர்களை “Black Legs” என்று அதுமுதல் ஆங்கிலேயர்கள் அழைத்து வருவதாக ஆங்கில மொழி வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.

எனவே அந்த ஆங்கில மொழிச் சொல்லிலிருந்துதான் நாம் நமது கருங்காலி என்ற சொல்லை மொழி பெயர்த்துப் பெற்றுக்கொண்டோம் என்பது அவர்கள் வாதம்.

ஆனால் உண்மை அதுவல்ல. தமிழ் நாட்டில் தொன்று தொட்டு கோடரிக்கு கருங்காலி என்ற மரத்திலிருந்துதான் கைப்பிடி செய்து போடுகிறோம். மர இனத்தில் பிறந்து தன் மர இனத்தையே அழிக்கப் பயன்படும் ஆயுதமான கோடரிக்கு கைப்பிடியாய் மாறிப்போன அவலம் இந்த கருங்காலி மரத்திற்குத்தான் ஏற்பட்டது. அதனால்தான் தமிழர்கள் நம்பிக்கைத் துரோகிகளை கருங்காலி அழைக்கின்றனர்.

வேண்டுமேயானால் ஆங்கிலேயர்கள் நம் சொல்லான கருங்காலி என்ற சொல்லிலிருந்து அவர்கள் சொல்லான “Black Legs” என்ற சொல்லை பெற்றிருக்கலாம்.


ஐரோப்பாவில் தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன்பிருந்தே இங்கு கோடரிகளுக்கு கருங்காலி மரத்தால்தான் கைப்பிடி செய்யப்படுகிறது என்ற வரலாற்று உண்மையை ஏன் ஆங்கிலேயர்கள் மறுக்கிறார்கள்? தமிழன் கண்டறிந்த எல்லாவற்றையும் தான் கண்டறிந்ததாய் மார் தட்டிக் கொள்பவர்கள் இதை மட்டும் விட்டு வைக்கவா போகிறார்கள்?

இதே போன்றுதான் தேனிலவு என்ற சொல்லும்.
ஆங்கிலத்தில் அதை அப்படியே மொழி பெயர்த்துக் கொண்டு அதை Honeymoon என்று அழைத்து வருகிறார்கள். இதுவும் தமிழில் இருந்து போன சொல்தான் என்பதை புரிந்து கொண்டால் நாம் நம் பலத்தை அறியலாம்.

 

வாசித்த அனைவர்க்கும் நன்றி.

வரலாற்றில் இன்று....

நவம்பர் 17

1511: பிரான்ஸுக்கு எதிராக ஸ்பெய்னும் இங்கிலாந்தும் கூட்டுச்சேர்ந்தன.

1558: இங்கிலாந்தில் எலிஸபெத் யுகம் ஆரம்பம். மகாராணியார் முதலாம் மேரி இறந்தபின் அவரின் சகோதரரி முதலாம் எலிஸபெத் ஆட்சிக்கு வந்தார்.

1800: அமெரிக்க நாடாளுமன்றம் முதல் தடவையாக வாஷிங்டன் டி.சியில் கூடியது.

1831: கொலம்பியாவிலிருந்து ஈக்குவடோரும் வெனிசூலாவும் பிரிந்தன.

1869: மத்தியத்தரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் சுயஸ் கால்வாய் திறந்துவைக்கப்பட்டது.

1903: ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி போல்ஷ்விக் (பெரும்பான்மை) மேன்ஷ்விக் (சிறுபான்மை) என இரு குழுக்களாகப் பிரிந்தது.

1922: ஒட்டோமான் இராஜ்ஜியத்தின் முன்னாள் மன்னர் சுல்தான் 6ஆம் மெஷ்மெத் இத்தாலியில் தஞ்சம் புகுந்தார்.

1933: சோவியத் யூனியனை அமெரிக்கா அங்கீகரித்து.

1969: ஆயுதக்குறைப்பு தொடர்பாக அமெரிக்காவும் சோவியத் யூனியனும் ஹெல்சிங்கியில் பேச்சுவார்த்தை நடத்தின.

1970: சோவியத் யூனியனின் லூனாகோட் -1 எனும் ரோபோ சந்திரனின் தரையில் இறங்கியது. மற்றொரு கோளில் அல்லது உபகோளில் தரையிறங்கிய முதலாவது ரோபோ இதுவாகும்.

1970: டக்ளஸ் ஏங்கல்பர்ட் என்பவர் முதலாவது கணினி மௌஸுக்கு காப்புரிமை பெற்றார்.

1997: எகிப்தில் யாத்திரிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 62 பேர் பலி.

உடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்!

'உடல் உறுப்பு தானம்' என்பது,தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும்ஒருவருக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும்.
நம் உடலில் தானம் செய்யக்கூடிய பகுதிகள் என்னென்ன என்பது பற்றிய நம்கேள்விகளுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்புமருத்துவ நிபுணர் டாக்டர் அருணா ராமகிருஷ்ணன்.
 

"பொதுவாக நமக்குத் தெரிந்துரத்ததானம், கண்தானம் இந்த இரண்டு வித தானங்கள் தான் அதிக அளவில் இருந்து வருகின்றன. வேறு எந்தமாதிரியான உடல் தானங்கள் கொடுக்கப்படுகின்றன என்பதை சொல்லலாமே?"
 

உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முதலாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது.
 

உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன?
 

ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.
 

இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?
 

இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், சுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா).
 

யார் யார் உடல் உறுப்புக்களை தானமாக தரமுடியும்?
 

நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய்,பால்வினை நோய், ஹெபடைடீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாதவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.
 

உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா?
 

18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும்சரி தாமாக முன் வந்து தானம் செய்யலாம்.
 

உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதி முறைகள் உள்ளனவா?
 

ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்யலாம். என்றாலும் அதற்கென்று சில விதி முறைகள் உள்ளன. 1954-ம்ஆண்டு முதல் கடை பிடிக்கப்படும் விதிகள்:-
 

1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மாமா, அத்தை, சித்தப்பா, அவர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்தங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம்.
 

2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர்கள்,மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்பவர்கள், பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் போன்ற நெருக்கமானவர்களும் தரலாம்.
 

3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர்களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தாமல், மற்றொரு நோயாளிக்கு பொருந்துமேயானால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சிறுநீரகங்களை பரிமாறிக் கொள்ளலாம்.
 

தானம் செய்த உறுப்பு சரியாகபொருந்தி, நன்றாக வேலை செய்யுமா?
 

பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொள்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபாடிஸ்தான் காரணம். ஆனால் தானமாக பெற்ற உறுப்பைபொருத்துவதற்கு முன்னால் 'ப்ளாஸ்மா பெரிஸிஸ்' என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார்கள். அவ்வாறு, மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்­ரலையும் எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப்படுவதில்லை.
 

உயிருடன் இருக்கும் பொழுது,உடல் உறுப்பு தானம் செய்வதால், தானம் செய்பவருக்கு ஏதாவது ஆபத்துஇருக்கிறதா?
 

பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதில்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும் போது, இரண்டு உறுப்புகள் செய்ய வேண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பாதிப்பு இருக்காது. கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்த பின், தானாகவே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமுள்ள பகுதிகள் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக்கூடாது, ஆன்டிபயாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட்டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோகப்படுத்தி இருக்கக்கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பிட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாகவோ இருக்கக்கூடாது. ரத்த சோகை இருக்கக்கூடாது, குறைந்தது மூன்று மாதங்களுக்குள் ரத்தானம் செய்திருக்கக் கூடாது. மற்ற அனைவரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.
 

வேறு என்னென்ன உறுப்புகளை தானமாக தர முடியும்?
 

கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ்ஜை (போன் மாரோ), ரத்த நாளங்கள், தோல், இதயம், இதயத்திலுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அனைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்துபேர்களுக்கு தன் உறுப்புக்களை தானமாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது னரையீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோனரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருதயம் மட்டும் துடித்துக் கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர்களுடைய நெருங்கிய உறவினரின் சம்மதம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், எடுத்து தேவையானவர்களுக்கு பொருத்தலாம்.எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந்தாலும், எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தலாம்..
 

டாக்டர் அருணா ராமகிருஷ்ணன்.

Friday, November 16, 2012

படித்ததில் பிடித்தது , The legend history... 1978....


                                   
அந்த 11 வயதுச் சிறுவன் கோடம்பாக்கத்தில் ஒரு ரிக்கார்டிங் ஸ்டுடியோவின் வாசலில் தயங்கியபடி உள்ளே செல்கிறான்.

அவனுக்காகப் பல வாத்தியக்காரர்கள் காத்திருக்கிறார்கள். ''வாப்பா திலீப்... உனக்காகத்தான் காத்துட்டிருக்கோம். நீ கொண்டுவந்த சிந்தசைஸர்ல என்னவோ பிரச்னை. என்னன்னு பாரேன்'' என்கிறார் அர்ஜுனன் மாஸ்டர்.

சிறுவன் திலீப் அந்தக் கருவியின் பாகங்களைத் தொழில்நுட்ப நேர்த்தியுடன் அழகாகப் பிரிக்கிறான். எதையோ சரிசெய்து ஒன்று சேர்க்கிறான். சில நிமிடங்களில் அது மீண்டும் நன்றாக வேலை செய்ய ஆரம்பிக்கிறது.

அர்ஜுனன் மாஸ்டர் அவனை அன்புடன் அணைத்துக்கொள்கிறார்... ''கில்லாடிடா நீ!'' திலீப்பின் கண்கள் கலங்கியிருக்க, அவரும் மனம் கலங்குகிறார்.

''என்ன திலீப், அப்பா ஞாபகம் வந்திடுச்சா..?'' என்பவர், பெருமூச்சுவிடுகிறார். ''என்ன செய்றது... விதின்னுதான் சொல்லணும். சாகிற வயசா மனுஷனுக்கு? இப்பவும் உன் அப்பா இங்கேயே இருக்கிற மாதிரிதான் தோணுது திலீப்'' என்பவர், சிறுவனின் கைகளில் சில ரூபாய் நோட்டுகளைக் கொடுக்கிறார்.

யூனிவோக்ஸ், கிளாவியோலின் போன்ற மின் இசைக் கருவிகளை வாடகைக்கு விட்டதற்காகக் கொடுக்கப்படும் சிறிய தொகை அது.

`திலீப் அந்தப் பணத்தில் தன் சகோதரிகளுக்காக சாக்லேட்டுகளும் பிஸ்கட்டுகளும் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வருகிறான். அம்மாவிடம் மிச்சப் பணத்தைக் கொடுக்கிறான். அவனைப் பார்க்கப் பார்க்க, அம்மாவின் மனம் நெகிழ்கிறது. 'சின்னப் பையன் மேல குடும்பப் பாரம் விழுந்துவிட்டதே! படிக்க வேண்டிய பையனை இப்படி ரிக்கார்டிங் தியேட்டர்களுக்கு அனுப்புகிறோமே' என்கிற வருத்தம்.

ஆனால், சிறுவன் திலீப்பின் கண்களில் மின்னிய விவரிக்க இயலாத ஒளியைக் கண்டபோது, அவன் சரியான பாதையில்தான் போகிறான் என்று அந்தத் தாயின் மனதுக்குப் புரிந்தது.

திலீப் பொதுவாக வீட்டில் யாருடனும் கலகலப்பாகப் பேச மாட்டான். வீடெங்கும் இறைந்துகிடக்கும் இசைக் கருவிகளும், இசைப்பதிவு இயந்திரங்களும்தான் அவனுக்குப் பிடித்த உலகம். தன் அறைக்குச் சென்று அவற்றை வாசிப்பதிலும் பிரித்துப் போட்டு மீண்டும் ஒன்று சேர்ப்பதும்தான் அவனுடைய விருப்பமான ஒரே விளையாட்டு.

மற்றபடி நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது, சினிமா, அரட்டை போன்ற வேறு பொழுதுபோக்குகள்..? ம்ஹூம்... எதுவும் இல்லை.

திலீப் தன் அறைக்குச் சென்று ஹார்மோனியத்தில் ஒரு பாட்டை வாசிக்க ஆரம்பிக்கிறான். அது அவனுடைய அப்பா இசையமைத்த ''பெத்லஹேமில் ராவில்...'' என்கிற பிரபல மலையாளப் படப் பாட்டின் மெட்டு.

அவன் வாசிப்பதைக் கேட்கும் அம்மா, தன் கணவரே நேரில் வந்ததைப் போல் மெய்ம்மறந்துபோகிறார். அந்த மெட்டில் அவன் சில மாற்றங்களையும் செய்து மிக இனிமையாக வாசிப்பதைக் கேட்கும்போது அந்தத் தாய்க்குச் சிலிர்க்கிறது. ஓடி வந்து தன் மகனை நெஞ்சார அணைத்துக்கொள்கிறார். அவர் கண்களில் கண்ணீர் வழிகிறது. ''நீ வாசிக்கிறதைக் கேக்கும்போது சந்தோஷமா இருக்குப்பா... ஆனா, கொஞ்சம் பயமாவும் இருக்கு.

'' ''பயமா... ஏம்மா?'' ''உங்கப்பா ரொம்ப திறமைசாலிப்பா. எவ்வளவோ உயரத்துக்குப் போயிருக்க வேண்டியவரு. இந்த உலகம்தான் அவரைக் கடைசி வரை புரிஞ்சுக்கலை. இவ்வளவு சின்ன வயசுல உனக்கு இருக்கிற திறமை எனக்குத் தெரியுது.

ஆனா, உலகம் புரிஞ்சுக்குமான்னு பயமா இருக்கு'' என்கிறார் வாழ்க்கையின் பல பிரச்னைகளைப் போராட்டத்துடன் கடந்து வந்த அந்தப் பாசமிகு அம்மா.

உலகம் அந்தச் சிறுவனைப் புரிந்துகொண்டது.
இருகரம் நீட்டி அந்த இளம் இசை மேதையை வரவேற்கக் காத்திருந்தது.

அவனுக்கான பிரகாசமான எதிர்கால வெற்றிப் பாதை ஏற்கெனவே அமைக்கப்பட்டுவிட்டது.

நான்கு வயதிலேயே பெற்றோர்களால் பியானோ வகுப்புகளுக்கு அனுப்பப்பட்ட சிறுவன் திலீப், விரைவில் பள்ளிப் படிப்பைவிடப் போகிறான்.

தனராஜ் மாஸ்டரிடம் இசை கற்று, லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் ஸ்காலர்ஷிப் பெற்று, மேற்கத்திய கிளாசிக்கல் இசையில் பட்டம் பெறப்போகிறான்.
ரூட்ஸ், நெமிஸிஸ் அவின்யூ, மாஜிக் போன்ற சென்னை ஆங்கில இசைக் குழுக்களில் பங்கேற்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கப் போகிறது.

இன்னும் ஒரு சில வருடங்களில் எம்.எஸ்.வி, இளையராஜா போன்ற மாபெரும் இசைஅமைப்பாளர்களுக்கு கீ- போர்டு பிளேயராகவும், சில சமயங்களில் இசை கோப்பாளராகவும் பணியாற்றப்போகிறான்.

அவனுடைய திறமை விக்கு விநாயக் ராம், குன்னக்குடி வைத்தியநாதன், ஜாகிர் ஹுசேன் போன்றவர்களுடன் சேர்த்துவைக்கப்போகிறது.

அவர்களுடன் கச்சேரிகளில் பங்கேற்க உலகப் பயணம் செல்வான்.

அதன் பிறகு, 300-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களுக்கு இசை அமைப்பான்.

'பஞ்சதன்' என்கிற பெயரில் சொந்தமாக ஒரு ஹைடெக் ரிகார்டிங் ஸ்டுடியோவைக் கட்டுவான்.

அங்கேதான் இயக்குநர் மணிரத்னத்தைச் சந்திப்பான்.

'ரோஜா' என்கிற படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு அவனுக்குத் தரப்படும்.

அந்த இசையமைப்பு இந்தியத் திரை இசையின் ஸ்டைலையே மாற்றி அமைக்கும்.

முதல் படத்திலேயே தேசிய விருது பெறுவான்.

சொந்த வாழ்க்கையில் நடந்த சில புதிரான நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, அப்போது அவன் பெயரும் மாற்றம் செய்யப்பட்டிருக்கும்.

திலீப் என்கிற இளைஞன் ஏ.ஆர்.ரஹ்மான் என்கிற இசைக் கனவானாக மாறுவார்.

'ரோஜா'வில் ஆரம்பிக்கப் போகும் அந்த மகத்தான இசைக் கனவு ஆஸ்கர் விருதையும் கடந்து செல்லும்.


( ஆச்சரியம் .. ஆனால் உண்மை )
இளையராஜா திலீபின் அப்பாவிடம் கீபோர்டு வாசித்தார். திலீப் ஏ.ஆர்.ரஹ்மான் ஆனபின் இளையராஜாவிடம் கீபோர்டு வாசித்தார், இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர்ராஜா ஏ.ஆர் ரஹ்மானிடம்
கீ போர்டு வாசித்தார்..

ஒரு வரலாறு மீண்டும் மீண்டும் திரும்பி இருக்கிறது பாருங்கள்...!

இது உங்களுக்கும் பிடித்திருந்தான் நீங்களும் Share பண்ணுகள்
உங்களது FB நண்பர்களும் அறிந்து கொள்ளட்டும்..

வரலாற்றில் இன்று...

நவம்பர் 16


1532: தென் அமெரிக்காவில் இன்கா சாம்ராஜ்யத்தின் கடைசி மன்னரான அதாஹுவல்பா ஸ்பானிய தளபதி பிரான்சிஸ்கா பிஸாரோவின் படைகளினால் கைது செய்யப்பட்டார்.

1943: ஜேர்மனியில் நோர்வேயினால் நிர்வகிக்கப்பட்ட மின்னுற்பத்தி நிலையமொன்றின் மீது அமெரக்க விமானங்கள் தாக்குதல் நடத்தின.

1944: ஜேர்மனியின் டுயெரென் நகரை நேச நாடுகளின் படைகள் நிர்மூலமாக்கின.

1945: ரொக்கட் தயாரிப்பு தொழில்நுட்பத்திற்காக ஜேர்மனிய விஞ்ஞானிகள் மற்றும் பொறியிலாளர்களை அமெரிக்க இராணுவம் இரகசியமாக இணைத்துககொண்டது.

1945: யுனெஸ்கோ அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.

1965: சோவியன் யூனியனின் வெனேரா 3 விண்கலம் வெள்ளி கிரகத்தை நோக்கி ஏவப்பட்டது. மற்றொரு கிரகத்தில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் அதுவாகும்.

1988: பாகிஸ்தானில் பலவருடங்களின் பின்னர் நடைபெற்ற சுயாதீன தேர்தல் மூலம் பாகிஸ்தான் பிரதமராக பெனாஸிர் பூட்டோ முதல் தடவையாக தெரிவானார்.

1997: சீனாவில் ஜனநாயகத்திற்கான போராட்டங்களில் ஈடுபட்ட வெய் ஜிங்ஷேங்க் 18 வருடகாலம் தடுத்துவைக்கப்பட்டிருந்த பின்னர் மருத்துவ காரணங்களால் விடுவிக்கப்பட்டார்.

2000: பில் கிளின்டன், வியட்னாம் யுத்தத்தின் பின்னர் வியட்னாமிற்குச் சென்ற முதல் அமெரிக்க ஜனாதிபதியானார்.

Thursday, November 15, 2012

வரலாற்றில் இன்று...

நவம்பர் 15
 


1889: பிரேஸில் மன்னர் இரண்டாம் பெட்ரோ இராணுவப் புரட்சியின் மூலம் நீக்கப்பட்டு பிரேஸில் குடியரசாக்கப்பட்டது.

1920: லீக் ஒவ் நேசன்ஸின் முதலாவது கூட்டம் ஜெனீவாவில் நடைபெற்றது.

1945: ஐ.நாவில் வெனிசூலா இணைந்துகொண்டது.

1949: மகாத்மா காந்தியை கொன்ற குற்றச்சாட்டில் நாதுராம் கோட்ஸே, நாராயண் ஆப்தே ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.

1969: பனிப்போர் காலத்தில் சோவியத் நீர்மூழ்கியொன்றும் அமெரிக்க நீர்மூழ்கியொன்றும் பாரென்ட்ஸ் கடலில் மோதிக்கொண்டன.

1969: அமெரிக்காவின் வாஷிங்டனில் வியட்னாம் யுத்தத்திற்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டத்தில் 250,000 - 500,000 பேர் பங்குபற்றினர்.

1978: மக்காவிலிருந்து இந்தோனேஷியாவுக்கு யாத்திரிகளை ஏற்றிச்சென்ற விமானமொன்று கட்டுநாயக்காவில் விபத்துக்குள்ளானத்தில் 183 பேர் பலியாகினர்.

1988: பலஸ்தீன தேசிய கவுன்ஸில் சுதந்திர பலஸ்தீன பிரகடனம் செய்தது.

1989: சச்சின் டெண்டுல்கர் தனது 16ஆவது வயதில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமானார்.

2007:; பங்களாதேஷில் ஏற்பட்ட புயலினால் 5,000 பேர் பலியாகினர்.

ஒவ்வொரு முஸ்லிமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது..! plz share.. நாம் ஹிஜ்ரி 1434 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளோம். ஹிஜ்ரி என்ற சொல்லை, இஸ்லாமிய ஆண்டுக்குத் தேர்ந்தெடுத்திருப்பதற்கு ஒரு வரலாற்று நிகழ்ச்சியுண்டு. அவ்வரலாற்று நிகழ்ச்சியையும், அந் நிகழ்ச்சியின் போது, சில கட்டங்களில் , நபி(ஸல்) அவர்கள் கொண்டிருந்த நல்லியல்புகளையும் காண்போம். இஸ்லாமியருக்கென தனியொரு ஆண்டுக் கணக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம், கலீபா உமர்(ரழி) அவர்கள் காலத்தில் எழுந்தது. நபித் தோழர்கள், அதை எந்தக் காலகட்டத்திலிருந்து துவக்குவது என்று ஆலோசித்தனர். முக்கியமான பல நிகழ்ச்சிகள் நடந்திருப்பினும், அவற்றில் நபி(ஸல்) அவர்கள், முதன் முதலாக, மக்காவை விட்டு, வெளியேறிய நிகழ்ச்சியையே, இஸ்லாமிய ஆண்டின் துவக்கக் காலமாகக் காலக்கட்டமாகக் கொள்ளலாமெனத் தீர்மானித்தனர். இஸ்லாமிய வரலாற்றில் , பல முக்கிய போர்கள் நிகழ்ந்துள்ளன. பல உடன்படிக்கைகள் நடந்துள்ளன. இவற்றிலொன்றை நினைவு கூர்ந்து, அதையே இஸ்லாமிய ஆண்டிற்குப் பெயராகவும், துவக்க கால கட்டமாகவும் வைத்திருக்கலாம். ஆனால், நபித் தோழர்கள், நபி(ஸல்) அவர்களின் மக்கத்து வெளியேற்றத்தையே (ஹிஜ்ரத்தையே) நமது ஆண்டின் துவக்க காலமாகவும், பெயராகவும் வைக்கத் தீர்மானித்தனர். நபி(ஸல்) அவர்கள், தோழர் அபூபக்கர்(ரழி) ஆகிய இருவர் மட்டுமே, மக்காவை விட்டு வெளியேறினர். மதீனாவுக்கு வந்த பின்பு தான், பத்ரு, உஹது மற்றும் பல தற்காப்புப் போர்கள் நடந்தன. இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பட்டது. பல உயிர்த் தியாகங்கள், சிறப்புமிக்க உடன்படிக்கைகள் நிகழ்ந்தன. இறுதியாக சுமார் பல ஆயிரக்கணக்கான மக்களுடன் மக்கா நகர் சென்று, அங்கும் இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பட்டது. இவ்வனைத்து நிகழ்ச்சிகளுக்கும் துவக்கமாக இருந்தது. நபி(ஸல்) அவர்களின் மக்கத்து வெளியேற்ற நிகழ்ச்சி தான். அந்நிகழ்ச்சி நடந்திராவிடில், மேற்காணும் நிகழ்ச்சிகளுக்கு இடமேது? அன்று நபி(ஸல்) அவர்களின் உயிருக்கே ஆபத்து வந்த போது, உயிர், உடமை உறவு அனைத்தையும் துறந்து , பிறந்த மண்ணையும் விட்டு, வெளியேறிய தியாகத்திற்கும், செயலுக்கும் முன்பாக, வேறெந்தச் செயலையும், வேறெவர் தியாகத்தையும், அருமை நபித் தோழர்கள், உயர்வாகக் கருதவில்லை. அம்மாநபியின் தியாக, புனித வெளியேற்றமே இஸ்லாமிய மறு மலர்ச்சிக்காகவும், அதன் வரலாற்றில் ஓர் திருப்புமுனையாகவும் அமைந்தது, அத்தகைய ஹிஜ்ரத் நிகழ்ச்சியை இஸ்லாமிய ஆண்டுக்கு துவக்க காலமாகவும், ஹிஜ்ரத் என்ற சொல்லையே ஹிஜ்ரி ஆண்டின் பெயராகவும் வைத்தனர். ஒவ்வொரு முஸ்லிமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது..!


ஒவ்வொரு முஸ்லிமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது..!
plz share..

நாம் ஹிஜ்ரி 1434 ம் ஆண்டில் அடியெடுத்து  வைக்க உள்ளோம். ஹிஜ்ரி என்ற சொல்லை, இஸ்லாமிய ஆண்டுக்குத் தேர்ந்தெடுத்திருப்பதற்கு ஒரு வரலாற்று நிகழ்ச்சியுண்டு. அவ்வரலாற்று நிகழ்ச்சியையும், அந் நிகழ்ச்சியின் போது, சில கட்டங்களில் , நபி(ஸல்) அவர்கள் கொண்டிருந்த நல்லியல்புகளையும் காண்போம்.

இஸ்லாமியருக்கென தனியொரு ஆண்டுக் கணக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம், கலீபா உமர்(ரழி) அவர்கள் காலத்தில் எழுந்தது. நபித் தோழர்கள், அதை எந்தக் காலகட்டத்திலிருந்து துவக்குவது என்று ஆலோசித்தனர். முக்கியமான பல நிகழ்ச்சிகள் நடந்திருப்பினும், அவற்றில் நபி(ஸல்) அவர்கள், முதன் முதலாக, மக்காவை விட்டு, வெளியேறிய நிகழ்ச்சியையே, இஸ்லாமிய ஆண்டின் துவக்கக் காலமாகக் காலக்கட்டமாகக் கொள்ளலாமெனத் தீர்மானித்தனர்.

இஸ்லாமிய வரலாற்றில் , பல முக்கிய போர்கள் நிகழ்ந்துள்ளன. பல உடன்படிக்கைகள் நடந்துள்ளன. இவற்றிலொன்றை நினைவு கூர்ந்து, அதையே இஸ்லாமிய ஆண்டிற்குப் பெயராகவும், துவக்க கால கட்டமாகவும் வைத்திருக்கலாம். ஆனால், நபித் தோழர்கள், நபி(ஸல்) அவர்களின் மக்கத்து வெளியேற்றத்தையே (ஹிஜ்ரத்தையே) நமது ஆண்டின் துவக்க காலமாகவும், பெயராகவும் வைக்கத் தீர்மானித்தனர்.

நபி(ஸல்) அவர்கள், தோழர் அபூபக்கர்(ரழி) ஆகிய இருவர் மட்டுமே, மக்காவை விட்டு வெளியேறினர். மதீனாவுக்கு வந்த பின்பு தான், பத்ரு, உஹது மற்றும் பல தற்காப்புப் போர்கள் நடந்தன. இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பட்டது. பல உயிர்த் தியாகங்கள், சிறப்புமிக்க உடன்படிக்கைகள் நிகழ்ந்தன. இறுதியாக சுமார் பல ஆயிரக்கணக்கான மக்களுடன் மக்கா நகர் சென்று, அங்கும் இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பட்டது.

இவ்வனைத்து நிகழ்ச்சிகளுக்கும் துவக்கமாக இருந்தது. நபி(ஸல்) அவர்களின் மக்கத்து வெளியேற்ற நிகழ்ச்சி தான். அந்நிகழ்ச்சி நடந்திராவிடில், மேற்காணும் நிகழ்ச்சிகளுக்கு இடமேது? அன்று நபி(ஸல்) அவர்களின் உயிருக்கே ஆபத்து வந்த போது, உயிர், உடமை உறவு அனைத்தையும் துறந்து , பிறந்த மண்ணையும் விட்டு, வெளியேறிய தியாகத்திற்கும், செயலுக்கும் முன்பாக, வேறெந்தச் செயலையும், வேறெவர் தியாகத்தையும், அருமை நபித் தோழர்கள், உயர்வாகக் கருதவில்லை.

அம்மாநபியின் தியாக, புனித வெளியேற்றமே இஸ்லாமிய மறு மலர்ச்சிக்காகவும், அதன் வரலாற்றில் ஓர் திருப்புமுனையாகவும் அமைந்தது, அத்தகைய ஹிஜ்ரத் நிகழ்ச்சியை இஸ்லாமிய ஆண்டுக்கு துவக்க காலமாகவும், ஹிஜ்ரத் என்ற சொல்லையே ஹிஜ்ரி ஆண்டின் பெயராகவும் வைத்தனர்.


நாம் ஹிஜ்ரி 1434 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளோம். ஹிஜ்ரி என்ற சொல்லை, இஸ்லாமிய ஆண்டுக்
குத் தேர்ந்தெடுத்திருப்பதற்கு ஒரு வரலாற்று நிகழ்ச்சியுண்டு. அவ்வரலாற்று நிகழ்ச்சியையும், அந் நிகழ்ச்சியின் போது, சில கட்டங்களில் , நபி(ஸல்) அவர்கள் கொண்டிருந்த நல்லியல்புகளையும் காண்போம்.

இஸ்லாமியருக்கென தனியொரு ஆண்டுக் கணக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம், கலீபா உமர்(ரழி) அவர்கள் காலத்தில் எழுந்தது. நபித் தோழர்கள், அதை எந்தக் காலகட்டத்திலிருந்து துவக்குவது என்று ஆலோசித்தனர். முக்கியமான பல நிகழ்ச்சிகள் நடந்திருப்பினும், அவற்றில் நபி(ஸல்) அவர்கள், முதன் முதலாக, மக்காவை விட்டு, வெளியேறிய நிகழ்ச்சியையே, இஸ்லாமிய ஆண்டின் துவக்கக் காலமாகக் காலக்கட்டமாகக் கொள்ளலாமெனத் தீர்மானித்தனர்.

இஸ்லாமிய வரலாற்றில் , பல முக்கிய போர்கள் நிகழ்ந்துள்ளன. பல உடன்படிக்கைகள் நடந்துள்ளன. இவற்றிலொன்றை நினைவு கூர்ந்து, அதையே இஸ்லாமிய ஆண்டிற்குப் பெயராகவும், துவக்க கால கட்டமாகவும் வைத்திருக்கலாம். ஆனால், நபித் தோழர்கள், நபி(ஸல்) அவர்களின் மக்கத்து வெளியேற்றத்தையே (ஹிஜ்ரத்தையே) நமது ஆண்டின் துவக்க காலமாகவும், பெயராகவும் வைக்கத் தீர்மானித்தனர்.

நபி(ஸல்) அவர்கள், தோழர் அபூபக்கர்(ரழி) ஆகிய இருவர் மட்டுமே, மக்காவை விட்டு வெளியேறினர். மதீனாவுக்கு வந்த பின்பு தான், பத்ரு, உஹது மற்றும் பல தற்காப்புப் போர்கள் நடந்தன. இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பட்டது. பல உயிர்த் தியாகங்கள், சிறப்புமிக்க உடன்படிக்கைகள் நிகழ்ந்தன. இறுதியாக சுமார் பல ஆயிரக்கணக்கான மக்களுடன் மக்கா நகர் சென்று, அங்கும் இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பட்டது.

இவ்வனைத்து நிகழ்ச்சிகளுக்கும் துவக்கமாக இருந்தது. நபி(ஸல்) அவர்களின் மக்கத்து வெளியேற்ற நிகழ்ச்சி தான். அந்நிகழ்ச்சி நடந்திராவிடில், மேற்காணும் நிகழ்ச்சிகளுக்கு இடமேது? அன்று நபி(ஸல்) அவர்களின் உயிருக்கே ஆபத்து வந்த போது, உயிர், உடமை உறவு அனைத்தையும் துறந்து , பிறந்த மண்ணையும் விட்டு, வெளியேறிய தியாகத்திற்கும், செயலுக்கும் முன்பாக, வேறெந்தச் செயலையும், வேறெவர் தியாகத்தையும், அருமை நபித் தோழர்கள், உயர்வாகக் கருதவில்லை.

அம்மாநபியின் தியாக, புனித வெளியேற்றமே இஸ்லாமிய மறு மலர்ச்சிக்காகவும், அதன் வரலாற்றில் ஓர் திருப்புமுனையாகவும் அமைந்தது, அத்தகைய ஹிஜ்ரத் நிகழ்ச்சியை இஸ்லாமிய ஆண்டுக்கு துவக்க காலமாகவும், ஹிஜ்ரத் என்ற சொல்லையே ஹிஜ்ரி ஆண்டின் பெயராகவும் வைத்தனர்.

Wednesday, November 14, 2012

வரலாற்றில் இன்று...

நவம்பர்   14

இந்தியா: குழந்தைகள் நாள்.
உலக நீரிழிவு நோய் நாள்
 
1889 - நெல்லி பிளை என்ற பெண் ஊடகவியலாளர் 80 நாட்களுக்குள் உலகைச் சுற்றி வரும் தனது திட்டத்தை 72 நாட்களுக்குள் வெற்றிகரமாக முடித்தார்
 
1918 - செக்கொஸ்லவாக்கியா குடியரசாகியது.
 
1922 - BBC எனப்படும் பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகத்தின் தினசரி ஒலிபரப்பு ஆரம்பானது.
 
1956 - ஹங்கேரியில் போர் முடிவுக்கு வந்தது.
 
1960 - OPEC எனப்படும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் சங்கம் வியன்னாவைத் தலைநகராகக் கொண்டு தொடங்கப்பட்டது.
 
1963 - ஐஸ்லாந்து தீவின் அருகில் உள்ள சூர்ட்ஸி என்னும் தீவு வட அட்லாண்டிக் கடலில் எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது.
 
1969 - அப்பல்லோ திட்டம்: அப்போலோ 12 விண்கப்பல் மூன்று விண்வெளி வீரர்களுடன் சந்திரனை நோக்கிச் சென்றது.
 
1971 - மரைனர் 9 செவ்வாய் கோளை சென்றடைந்தது. இதுவே பூமியில் இருந்து வேறொரு கோளின் செயற்கைச் செய்மதியாகச் செயற்பட்ட முதலாவது விண்கலமாகும்.
 
1975 - மேற்கு சகாராவை விட்டு ஸ்பெயின் விலகியது.
 
1990 - கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனிகளின் இணைப்பிற்குப் பின்னர் போலந்துக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான எல்லைகள் வரையறுக்கப்பட்டன.
 
1991 - நாடு கடந்த நிலையில் வாழ்ந்த கம்போடியாவின் இளவரசர் நொரொடோம் சிஹானூக் 13 ஆண்டுகளின் பின்னர் புனோம் பென் திரும்பினார்.
 
1995 - இஸ்ரேலியப் படைகள் ஜோர்டான் நகரிலிருந்து 28 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேறின.
 
1996 - டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

ஒருவாட்டி பாத்ரூம் போனா 6 மணி நேரம் மின்சாரம்.. நைஜீரிய மாணவிகள் சாதனை!

லாவோஸ்: சிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரித்து நைஜீரிய மாணவிகள் நான்கு பேர் சாதனை படைத்துள்ளனர். இவர்களின் இந்த வித்தியாசமான கண்டுபிடிப்பு நைஜீரியாவில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் பூராவும் மின்தடை பிரச்சினைதான். அந்த மின்தடைக்கு ஆறுதல் தேடித் தரும் வகையில் நைஜீரிய மாணவிகள் நால்வரின் கண்டுபிடிப்பு வந்து சேர்ந்துள்ளது.

நைஜீரியா பொருளாதார ரீதியில் வளர்ந்து வரும் ஆப்பிரிக்க நாடு. ஆனால் இங்கு மின்சாரம் என்பது பெரும் பிரச்சினையாகவே இருந்து வருகிறது. பல பகுதிகள் இன்னும் மின்சாரத்தைக் காணாமலேயே இருக்கின்றன. பலருக்கு மின்சாரத்தைப் பார்த்தே பல காலமாகி விட்டதாம்.
இந்த நிலையில்தான் 14 வயதான டூரோ அய்னா அடிபோலா, அகின்டேல் அபியோலா, பேலகே வொலுவடோயின் மற்றும் 15 வயதான பெல்லோ எனியோலா ஆகிய மாணவிகள் சிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரித்து நைஜீரிய மக்கள் மனதில் பால் வார்த்துள்ளனர்.

லாகோஸில் நடந்த ஆப்பிரிக்க சிறு முதலீட்டாளர்கள் மாநாட்டில் தங்களது கண்டுபிடிப்பை அவர்கள் காட்சிக்கு வைத்தனர்.

சிறுநீரை முதலில் இவர்கள் நைட்ரஜன், தண்ணீர் மற்றும் ஹைட்ரஜனாக பிரிக்கின்றனர். பின்னர் ஹைட்ரஜனை ஒரு நீர் வடிகட்டிக்குள் அனுப்பி சுத்திகரிக்கின்றனர். அது பின்னர் ஒரு கேஸ் சிலிண்டருக்குப் போகிறது.

அங்கு ஹைட்ரஜன் போராக்ஸ் திரவமாக மாறுகிறது. பின்னர் அதிலிருந்து ஹைட்ரஜன் வாயு தனியாக பிரிக்கப்படுகிறது. அந்த சுத்திகரிக்கப்பட்ட ஹைட்ஜன் வாயு, ஜெனரேட்டருக்குப் போய் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

ஒரு லிட்டர் சிறுநீரைப் பயன்படுத்தினால் 6 மணி நேரத்திற்குத் தேவையான மின்சாரம் கிடைக்கிறதாம்.

நைஜீரிய இளம் மாணவிகளின் இந்த கண்டுபிடிப்பு நைஜீரியாவில் இப்போது பெரும் பேச்சாக மாறியுள்ளதாம்.

தமிழ்நாட்டில் முதலி்ல் இந்த டெக்னிக்கைப் பயன்படுத்தி நிறைய மின்சாரம் தயாரிக்கலாம். பஸ் ஸ்டாண்ட் பக்கம் போனால் சுவர் பக்கம் ஒதுங்குவோரிடமிருந்து லிட்டர் கணக்கில் சிறுநீரைப் பிடித்தாலே போதும் நிறைய மின்சாரத்தை அள்ளி விடலாமே...

வரலாற்றில் இன்று...

நவம்பர் 13
 

1916: அவுஸ்திரேலியா பிரதமர் பில்லி ஹியூஜ்ஸ் கட்டாய இராணுவ ஆட்சேர்ப்புக்கு ஆதரவு தெரிவித்ததால் தொழிற்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

1947: உலகில் அதிகம் விற்பனைசெய்யப்பட்ட துப்பாக்கியான ஏ.கே.47 உருவாக்கப் பணிகளை ரஷ்யா நிறைவுசெய்தது.

1950: வெனிசூலா ஜனாதிபதி ஜெனரல் கார்லோஸ் டெல்காடோ சல்போட் படுகொலை செய்யப்பட்டார்.

1954: உலகின் முதலாவது றக்பி கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸை பிரிட்டன் தோற்கடித்தது.

1965: பஹாமஸுக்கு அருகில் எஸ்.எஸ். யார்மௌத் எனும் நீராவிக் கப்பல் மூழ்கியதால் 90 பேர் பலி.

1971: அமெரிக்காவின் மரைனர் 9 எனும் விண்கலம் செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வந்ததன் மூலம், மற்றொரு கிரகத்தை சுற்றிவந்த முதல் விண்கலமாகியது.

1982: அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த குத்துச்சண்டைப் பொட்டியில் ரே மான்சினி என்பவர் டுக் கூ கிம் என்பவரை தோற்கடித்தார். 4 நாட்களின் பின்னர் கூ கிம் இறந்ததையடுத்து இவ்விளையாட்டில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன.

1985: கொலம்பியா நாட்டில் எரிமலையொன்று வெடித்ததால் சுமார் 23,000 பேர் பலியாகினர்.

1989: இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்ட ஜே.வி.பி. தலைவர் ரோஹன விஜேவீர கொல்லப்பட்டார்.

Tuesday, November 13, 2012

ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்!கல்விக் கடனுக்காக விண்ணப்பிக்க ஒரு மாணவன் வங்கியில் காத்திருக்கிறான். வங்கி மேலாளர் அழைத்துக் கேட்கிறார். 'உன் அப்பா ஒரு கூலித் தொழிலாளி. உங்களுக்கென்று ஒரு சொந்த வீடுகூட கிடையாது. எப்படி உன்னிடம் இருந்து நான் கடனை வசூலிப்பது?'' ''வசதி இருந்தா நாங்க எதுக்குசார் கடன் கேட்டுவர்றோம்?''- இது மாணவனின் பதில். கடைசிவரை மாணவர்களுக்குப் போராட்டம் மட்டுமே மிஞ்
ுகிறது. இப்படிக் கல்விக் கடன் கேட்டு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காவே போராடிக்கொண்டு இருக்கிறது E.L.T.F (EDUCATION LOAN TASK FORCE) எனும் கல்விக் கடன் அலுவல்படை. வங்கியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஸ்ரீனிவாசன் என்பவர்தான் இந்த அமைப்பை நடத்திவருகிறார்.

அவரிடம் பேசினோம். '' கல்விக் கடன் வாங்குவதற்காக மாணவர்கள் எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்னு எனக்குத் தெரியும். அவங்களுக்கு ஏதாவது உதவி செய்யணும்னுதான் இந்த அமைப்பைத் தொடங்கினேன். கல்விக் கடனைப் பொறுத்தவரை இரண்டு திட்டங்கள்தான் நடைமுறையில் இருக்கின்றன. ஒன்று பொதுத் திட்டம். மற்றொன்று தனிப்பட்ட கடன் திட்டம்.

பொதுத் திட்டமானது மதிப்பெண் அடிப்படையில் சேரும் மாணவர்களுக்குப் பொருந்தும். மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேரும் மாணவர்களுக்குத் தனிப்பட்ட கடன் திட்டம். கல்விக் கடன் வாங்கும் எல்லோருமே பொதுவாகத் தெரிந்துகொள்ளவேண்டிய சில விஷயங்களைச் சொல்கிறேன். கல்விக் கடனுக்கான விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டுமென்றால், வங்கி மேலாளர்கள், அவர்களுடைய உயர் அதிகாரிகளின் அனுமதியின் பேரில்தான் நிராகரிக்க முடியும். நிராகரிப்பதற்கான காரணங்களையும் எழுத்து மூலம் மாணவர்களுக்கு உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டும். தகுந்த காரணம் இல்லாமல் நிராகரிக்கப்பட்டதாகக் கருதினால், மாணவர்கள் வங்கியின் தலைவரிடமே மேல் முறையீடு செய்யலாம். கல்விக் கடன் வாங்கும் மாணவர்கள் படிக்கும் காலத்தில் வட்டியைச் செலுத்தவேண்டியக் கட்டாயம் இல்லை. அது அவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. தொழிற்கல்வி மற்றும் மேலாண்மைக் கல்வி படிக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு மத்திய அரசின் வட்டிக்கான மானியமும் உண்டு. இதற்கான விண்ணப்பத்தைக் கல்விக் கடனில் முதல் தவணை பெறும்போதே, வருமானச் சான்றிதழை இணைத்துக் கொடுத்துவிட வேண்டும். பெற்றோர்களின் எந்தவொரு தனிப்பட்ட கடனுக்கும் அவர்களுடைய பிள்ளைகளின் கல்விக் கடனுக்கும் சம்பந்தமில்லை.

ஒரே வீட்டில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கும் கல்விக் கடன் கொடுக்கச் சட்டத்தில் வழிவகை உண்டு. நான்கு லட்சம் வரையிலான கல்விக் கடனுக்குத் தனி நபர் ஜாமீன் மற்றும் சொத்து ஜாமீன் தேவையில்லை. பெற்றோர்கள் கையெழுத்துப் போட்டால் மட்டும் போதும். எங்களோட இணைய தளத்தில் கல்விக் கடன் சம்மந்தமான அனைத்துத் தகவல்களையும் கொடுத்திருக்கிறோம்.(www.eltf.in )

எங்கள் அமைப்பின் மூலமாக இதுவரைக்கும் 560 மாணவர்களுக்குக் கல்விக் கடன் வாங்கிக் கொடுத்து இருக்கிறோம். கல்விக் கடன் கிடைக்காம கஷ்டப்படும் மாணவர்கள் info@eltf.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மெயில் அனுப்பினால் போதும். நாங்களே தேடிவந்து உதவிகள் செய்து தருவோம்'' என்கிறார்.

கல்வி கற்க இனி என்ன கவலை?

தங்கம் பற்றிய விழிப்புணர்வு ஏற்ப்படுத்தவும் - அதிர்ச்சி தகவல்...............!!நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது,

வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்ததோடு சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்,

வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம், இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்க கூடாது என்று முழங்கி அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்,

நண்பரின் ஆதங்கம் இதுதான். சேதாரம் என்ற பெயரில் நகைக் கடைகளில் பெருங்கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை...?? என்பதே அவரது நியாயமான கேள்வி

அவரது குமுறல் மிக நீதியானதே என்பதுதான் எனது வாதமும், 16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக்கிறார்கள் நகைக் கடை முதலாளிகள், இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ.48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் ஒன்பதாயிரம் ரூபாய் தெண்டம் அழ வேண்டும், ஏறக்குறைய 16 சதவீதம் ? எதற்காக இந்த தெண்டம் ? பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும் ? எந்த அதிமேதாவியும் இது வரை கேள்வி கேட்டதில்லை, அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித்தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள், போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை கூல் பண்ணுவார்கள், இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள் அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது...

சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு...

உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும், என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா ? பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும் ? செய்கூலி கேட்பது நியாயம்தான் 16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும் ? இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை ? பலசரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை ?

எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள் ? அவர்களிடம் வழிப்பறி செய்வதை விட மோசமான செயல் அல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது ? பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான் ? ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான் ? மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில், கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது,

இது போன்ற பகற்கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும்...அல்லது திருத்தப்பட வேண்டும். விரைவில்

இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்...அதுவும் உங்களால் தான் முடியும்............!!

வரலாற்றில் இன்று...

நவம்பர் 11
 

1918: முதலாம் உலக யுத்தத்தின்போது பிரான்ஸின் கொம்பெய்ன் நகருக்கு வெளியே ரயில்வே வாகனமொன்றில் வைத்து ஜேர்மனிக்கும் நேசநாடுகளுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 11 ஆம் மாதம் 11 ஆம் திகதி 11 மணிக்கு மேற்படி யுத்தம் முடிவுற்றது.

1918: ஆஸ்திரியாவின் மன்னர் முதலாம் சார்ள்ஸ் தனது அதிகாரங்களைத் துறந்தார்.

1940: இரண்டாம் உலக யுத்தத்தன்போது பிரித்தானிய கடற்படை, வரலாற்றில் முதல் தடவையாக விமானத் தாங்கி கப்பல் மூலம் இத்தாலிய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது.

1965: ரொடீஸியாவில் (தற்போதைய ஸிம்பாப்வே) வெள்ளை சிறுபான்மையின அரசு ஒரு தலைப்பட்சமாக சுதந்திரப் பிரகடனம் செய்தது.

1975: அங்கோலா சுதந்திரம் பெற்றது.

1981: அன்டிகுவா- பார்புடா ஐ.நாவில் இணைந்தன.

2000: ஆஸ்திரியாவில் ஏற்பட்ட தீ விபத்தொன்றில் பனிச்சறுக்காளர்கள் 155 பேர் பலியாகினர்.

2004: பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யஸீர் அரபாத் காலமானார்.

2008: ஆர்.எம்.எஸ். குயின் எலிஸபெத் கப்பல் தனது கடைசி பயணத்தை துபாய் நகரை நோக்கி ஆரம்பித்தது.

வரலாற்றில் இன்று..

நவம்பர் 12
 

1847: பிரித்தானிய மருத்துவர் சேர் ஜேம்ஸ் யங் சிம்ஸன் முதல் தடவையாக குளொரோபோமை மயக்க மருந்தாகப் பயன்படுத்தினார்.

1927: சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து லினோன் ட்ரொஸ்கி வெளியேற்றப்பட்டதையடுத்து சோவியத் யூனியனின் முழமையான அதிகாரம் ஜோசப் ஸ்டாலினிடம் வந்ததது.

1956 மொராக்கோ, சூடான் ஆகியன ஐ.நாவில் இணைந்தன.

1969: வியட்னாமின் மை லாய் கிராமத்தில் 16.03.1968ஆம் திகதி 347-504 பொதுமக்கள் அமெரிக்கப்படையினரால் கொல்லப்பட்ட சம்பவத்தை 12.11.1969ஆம் திகதி சுயாதீன ஊடவியலாளர் சிமோர் ஹேர்ஸ் உலகிற்கு அம்பலமாக்கினார்.

1970: கிழக்குப் பாகிஸ்தானில் (தற்போதைய பங்களாதேஷ்) ஏற்பட்ட போலா சூறாவளியினால் சுமார் 5 லட்சம் பேர் பலி. இதுவே வரலாற்றில் மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய சூறாவளியாகும்.

1982: சோவியத் யூனியனில் பிரெஸ்னேவைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக யூரி அண்டேரொபோவ் பதவியேற்றார்.

1996: புதுடில்லியில் சவூதி அரேபிய பயணிகள் விமானமொன்றும் கஸகஸ்தான் சரக்கு விமானமொன்றும் நடுவானில் மோதிக்கொண்டதால் 349 பேர் பலி.

1980: நாசாவின் வொயேஜர் -1 விண்கலம் மூலம் சனிக்கிரகத்தின் வளையங்கள் முதல் தடவையாக படம் பிடிக்கப்பட்டது.

1981: மனிதர்களுடன் இரு தடவை விண்ணுக்கு ஏவப்பட்ட முதல் விண்கலம் எனும் பெருமையை கொலம்பியா விண்கலம் பெற்றது.

1990: ஜப்பானில் முடிக்குரிய இளவரசர் அகிஹிட்டோ அந்நாட்டின் 125 ஆவது மன்னரானார்.

2001: அமெரிக்காவில் ஏற்பட்ட விமான விபத்தொன்றில் 260 பேர் பலி.

தயிரில் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன?


           
 1. பால் உடலுக்கு நல்லதுதான். ஆனால் பாலைவிட தயிரே சிறந்த உணவுப்பொருள். இது பாலைவிட அதிவிரைவாக ஜீரணமாகிவிடுகிறது. தயிரில் உள்ள பாக்டீரியாக்கள் குடலில் உள்ள தீமை தரும் பாக்டீரியாவை அழிக்கிறது.
2.உடலில் விரைவாக ஜீரணசக்தியை தூண்டும் பாக்டீரியாக்களை உருவாக்குகிறது. இதனால் உணவு எளிதில் ஜிரணமாகிவிடும். மருத்துவர்கள் கூட தயிரை சிபாரிசு செய்வார்கள். நோய்வாய்ப்பட்டவர்


கள் முதலில் ஆகாரமாக தயிர் சாதத்தை எடுத்துக்கொள்வார்கள். தயிரிலுள்ள Lactobasil ஜீரண சக்தியைத் தூண்டுகிறது.
3. தயிரை அப்படியே சாப்பிடலாம். சிறிது வெந்தயத்தையும் கலந்து சாப்பிடலாம்.
4. தயிரைக் கடைந்து மோராக்கி அதனுடன் சிறிது உப்பு, கொத்தமல்லி, பெருங்காயம், கருவேப்பிலை கலந்து நீர்மோராக பருகலாம். இதனால் உடல் சூடு தனிந்து உடலுக்கு நல்ல புத்துணர்ச்சிக் கிடைக்கும்.
5. சர்க்கரை, இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிக கொழுப்புள்ள பாலில் உருவாக்கிய தயிரை சாப்பிட்டு வர நோய் குணமாகும்.
6. தயிரைக் கொண்டு தோலில் மசாஜ் செய்துவர தோலிலுள்ள நுண்துளைகளில் அழுக்குகள் நீங்கும். தோலுக்கு புத்துணர்ச்சி ஏற்படும்.
7. தயிரிலுள்ள பாக்டீரியாக்கள் விட்டமின் B கிரகிப்பதற்கு உதவுகின்றன.
8. தயிரில் அதிகளவு கால்சியம், புரதம் போன்ற ஊட்டத்துச்சத்துகள் உள்ளது.
9. தேன்,பப்பாளியுடன் தயிரைச் சேர்த்து முகத்தில் தேய்து வர முகம் பொலிவு பெறும்.
10. மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாக தயிர் அல்லது மோருடன் தேன்கலந்து கொடுப்பார்கள்.
11. வெயிலின் தாக்கத்தினால் தோல்களில் ஏற்படும் பாதிப்புகளை தயிர் சரி செய்கிறது. தோல் தடிப்பு வியாதிகளுக்கு தயிர் அல்லது மோர்க்கட்டு சிறந்ததொரு மருந்தாகும்.

தயிரின் முக்கியப் பயன்:

ஒரு மனிதன் நன்றாக தூங்கி எழுந்தாலே போதும். அவனுடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவர்கள் உட்பட பலரும் சொல்லும் கருத்து இது. இத்தகைய நிம்மதியான தூக்கத்தைப் பெற தயிரை உணவுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்.. நிம்மதியான தூக்கத்தைப் பெறுங்கள்.! நன்றி நண்பர்களே..!