நவம்பர் 14
இந்தியா: குழந்தைகள் நாள்.
உலக நீரிழிவு நோய் நாள்
இந்தியா: குழந்தைகள் நாள்.
உலக நீரிழிவு நோய் நாள்
1889
- நெல்லி பிளை என்ற பெண் ஊடகவியலாளர் 80 நாட்களுக்குள் உலகைச் சுற்றி
வரும் தனது திட்டத்தை 72 நாட்களுக்குள் வெற்றிகரமாக முடித்தார்
1918 - செக்கொஸ்லவாக்கியா குடியரசாகியது.
1922 - BBC எனப்படும் பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகத்தின் தினசரி ஒலிபரப்பு ஆரம்பானது.
1956 - ஹங்கேரியில் போர் முடிவுக்கு வந்தது.
1960 - OPEC எனப்படும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் சங்கம் வியன்னாவைத் தலைநகராகக் கொண்டு தொடங்கப்பட்டது.
1963 - ஐஸ்லாந்து தீவின் அருகில் உள்ள சூர்ட்ஸி என்னும் தீவு வட அட்லாண்டிக் கடலில் எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது.
1969 - அப்பல்லோ திட்டம்: அப்போலோ 12 விண்கப்பல் மூன்று விண்வெளி வீரர்களுடன் சந்திரனை நோக்கிச் சென்றது.
1971
- மரைனர் 9 செவ்வாய் கோளை சென்றடைந்தது. இதுவே பூமியில் இருந்து வேறொரு
கோளின் செயற்கைச் செய்மதியாகச் செயற்பட்ட முதலாவது விண்கலமாகும்.
1975 - மேற்கு சகாராவை விட்டு ஸ்பெயின் விலகியது.
1990
- கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனிகளின் இணைப்பிற்குப் பின்னர்
போலந்துக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான எல்லைகள் வரையறுக்கப்பட்டன.
1991 - நாடு கடந்த நிலையில் வாழ்ந்த கம்போடியாவின் இளவரசர் நொரொடோம் சிஹானூக் 13 ஆண்டுகளின் பின்னர் புனோம் பென் திரும்பினார்.
1995 - இஸ்ரேலியப் படைகள் ஜோர்டான் நகரிலிருந்து 28 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேறின.
1996 - டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
No comments:
Post a Comment