காதுக்குள் இயற்கையாகவே வாக்ஸ் ...என்கிற திரவம் சுரப்பதால் அழுக்கு தானாகவே வெளியாகிவிடும்.
இதனால் காதுக்குள் குச்சி, பட்ஸ் விட்டு சுத்தம் பண்ணுதல் கூடாது, நம்
காதுகள் 80 லிருந்து 85 டெசிபல் வரை தான் சப்தத்தை தாங்கும் சக்தியுள்ளது
என்பதால் அதற்கும் அதிகமான சப்தத்தை தவிர்ப்பது நல்லது.
சைனஸ், டான்சில், தாடை எலும்பியல் பிரச்சினை என்றாலும் காது பாதிக்கும் என்பதால் இப்பிரச்சினைகளை உடனே கவனிக்க வேண்டும்.
சப்தம் குறைவான இனிமையான பாடல்களை கேட்க வேண்டும். ஓடும் வண்டியிலிருந்து ரேடியோ, டேப் போன்ற இரைச்சலான சப்தத்தை தவிர்க்க வேண்டும்.
தொடர்ந்து பலமணி நேரங்கள் கைபேசியில் பேச வேண்டிய சூழ்நிலையில் ஒரு காதிலிருந்து மறு காதுக்கு மாற்றி மாற்றிப் பேசுவது நல்லது.
முதுபெரும் இயற்பியல் அறிஞரும், நோபல் பரிசினை வென்றவருமான ஆல்பர்ட்
ஐன்ஸ்டீன் கூறினார்: மதத்தினை மெய்ப்பிக்காத அறிவியல் முடமானது; அறிவியலை
மெய்ப்பிக்காத மதம் குருடானது.
...
இஸ்லாத்தினைத் தவிர பிற மதங்கள் அறிவியல் ஆய்வுகளைக் கண்டு கொள்ளுவதில்லை.
தங்களுடைய வேதப் புத்தகங்களை தற்கால அறிவியல் உண்மைகளுடன் பொருத்திப்
பார்ப்பது இல்லை. அது, அவர்களுக்கு தேவையாகவும் இல்லை. பெரும்பாலான
முஸ்லிம் அல்லாதவர்கள், தங்களுடைய வேதப் புத்தகங்களில் எழுதப்பட்டுள்ள
வசனங்கள் தற்கால அறிவியலுக்கு முரணாக இருப்பதை அறிந்து கொள்ளவும்
முற்படுவதுமில்லை. ஆனால், இஸ்லாம் இவைகளுக்கு மாற்றமாக மக்களை நோக்கி சவால்
விடுகின்றது.
வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும்
இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள்
உள்ளன. (அல்குர்ஆன் 3:190) வானங்களும், பூமியும் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன
என்பதை ஆய்வு செய்து குர்ஆனோடு பொறுத்திப் பாருங்கள் என்று அறைகூவல்
விடுக்கின்றது.
குர்ஆனில் உள்ள 6 ஆயிரத்திற்கும் அதிகமான
வசனங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வசனங்கள் அறிவியல் கருத்துக்களை
உட்பொருளாகக் கொண்டுள்ளன. குர்ஆன் என்பது அறிவியல் புத்தகமல்ல; எனினும்
நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் எவையும் குர் ஆனோடு முரண்படவில்லை
என்பதை நடுநிலையான அனைத்து அறிவியலாளர்களும் ஒத்துக் கொள்வர். திருக்குர்
ஆனின் உள்ள அறிவியல் உண்மைகள் எதேச்சேயானவை என்று கூறுவதற்கும்
வாய்ப்பில்லை அன்ற அளவிற்கு ஆதாரங்கள் குவிந்து கிடக்கின்றன.
திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள அனைத்து அறிவியல் செய்திகளையும்
இக்கட்டுரையில் குறிப்பிட முடியாது எனினும் “ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு
சோறு பதம்” என்பதை கீழ்க்கண்ட இரு செய்திகளின் மூலம் அறியலாம்.
பெருவெடிப்புக் கொள்கை:
வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே
பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து
அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள்
நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் 21:30)
பெருவெடிப்புக்
கொள்கை (‘The Big Bang’) மூலமாகவே, இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்பதில்
வானியற்பியல் வல்லுனர்களிடையே கருத்து வேறுபாடு இல்லை. பெருவெடிப்புக்
கொள்கை என்பது,
1. இந்த முழுப் பிரபஞ்சமும் முன்னதாக மாபெரும் பருப்பொருளாக (Primary Nebula) இருந்தது.
2. பின்னர், பெரு வெடிப்பு ஏற்பட்டு பிரபஞ்சங்கள் உருவாகின.
3. அவை பிறகு நட்சத்திரங்கள், கோளங்கள், சூரியன் – சந்திரன்களாக உருவாகின.
- என்பதாகும்.
அணு சக்தி ஆய்வுக்கான ஐரோப்பிய அமைப்பு (European Organization for
Nuclear Research-CERN), இந்த பெருவெடிப்பை ஆய்வுக்கூடத்தில் நடத்தி அணு
ஆற்றல் பருப்பொருளாக எவ்வாறு மாறுகின்றது என்பதை ஆய்வு செய்வதற்காக,
பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து
எல்லையில் பூமிக்கு அடியில் 100 மீட்டர் ஆழத்தில் 27 கி.மீ.
நீள வட்ட வடிவிலான சுரங்கப்பாதையைப் போன்ற சோதனைக்கூடத்தில் தான் அணுக்களை
உடைத்து நொறுக்கும் இயந்திரம் கடந்த செப்டம்பர் மாதத்தில் உருவாக்கியது.
(படம்: புரோட்டான்களின் மோதல் வரைபடம்)
சுமார் 595 கோடி டாலர் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பெருவெடிப்பு
சோதனையை துவக்கினர். சுரங்கத்தின் 2 இடங்களில் இருந்து புரோட்டான்களை
செலுத்தி நேருக்கு நேர் மோதவிட்டு, அப்போது உருவாகும்
மாற்றங்களை ஆயிரக்கணக்கான கருவிகள் மூலம் ஆய்வு செய்து
பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது என்பதைக் கண்டுபிடிக்க திட்டமிட்டனர்.
இதற்காக உருவாக்கப்பட்ட ராட்சத ஹட்ரான் கொலைடர் (Large Hadron
Collider-LHC) இயந்திரத்தை கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி வெற்றிகரமாக
இயக்கி முதற்கட்ட சோதனையை முடித்தனர். ஆனால் பெருவெடிப்பு சோதனைக்காக
உருவாக்கப்பட்ட இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. குளிரூட்டும் கருவி
ஒன்றில் இருந்து ஒரு டன்னிற்கும் மேற்பட்ட திரவ நிலையிலான
ஹீலியம் வாயு கசிந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தக் கட்ட
ஆய்வுகள் அடுத்தாண்டில் நடக்கும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு சிரமப்பட்டு நடத்தப்படும் ஆய்வு உண்மையை திருக்குர்ஆன் எளிதாக 21:30ல் நமக்குக் கூறுகின்றது.
படம்: LHC (Large Hydron Collider) எனப்படும் பெருவெடிப்பு ஆய்வுக்கூடம்
பூமிக்கும் வானிற்கும் இடைப்பட்ட பகுதி:
சில காலத்திற்கு முன்பு வரை, பூமிக்கு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் உள்ள
விண்வெளியானது வெறும் வெற்றிடம் என்றே அறிவியலாளர்கள் கூறி வந்தனர். ஆனால்,
தற்போது விண்வெளியானது திட, திரவ, வாயு நிலைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு
பருப்பொருளான “பிளாஸ்மா” என்ற அயனிய பொருண்மை பாலங்களால் (bridges of
matter) ஆனவை என்பது கண்டுபிடிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன்
மூலம் வானிற்கும், பூமிக்கும் இடைப்பட்ட பரப்பு வெற்றிடமல்ல என்பது
தெளிவாகி உள்ளது.
அவனே (இறைவேனே) வானங்களையும், பூமியையும்,
அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் படைத்தான். (அல்குர்ஆன் 25:59) என்பதாக
அல்லாஹ், தன் இறைவேதத்தில் குறிப்பிடுகின்றான். பூமிக்கும், வானிற்கும்
இடைப்பட்ட பகுதி வெற்றிடமாக (vacuum) இருந்தால், இறைவன் பூமியையும்,
வானங்களையும், “இடைப்பட்ட பகுதியையும்” என்று சேர்த்துக் கூறத் தேவையில்லை.
படம்: பால்வெளி பகுதியில் அயனிய பொருண்மை வெளி (வெற்றிடம் அல்ல என்பதற்கு சான்று)
1400 ஆண்டுகளுக்கு முன்னதாக எந்த ஒரு தனி மனிதனின் சிந்தனைக்கும்
அப்பாற்பட்ட செய்தியை, அறிவியல் உணமையை இஸ்லாம் எடுத்துக்காட்டுகின்றது.
மேற்கண்ட இரு எடுத்துக்காட்டுகளும், இஸ்லாம் இன்றைய நிரூபிக்கப்பட்ட
அறிவியல் உண்மைகளோடு எவ்வாறு ஒத்துள்ளது என்பதை விளக்குகின்றது. தோண்டத்
தோண்டக் கிடைக்கும் புதையல் போல குர்ஆனை ஆய்வு செய்தால், இஸ்லாம்
இவ்வுலகிற்கு வழங்கிய அறிவியல் கொடைகளை அனைவரும் அறிய முடியும்.
அவர்களுக்கு உண்மை தெளிவாக வேண்டும் என்பதற்காக (பூமியின்) பல
பாகங்களிலும், அவர்களுக்கு உள்ளேயும் நமது சான்றுகளை அவர்களுக்குக்
காட்டுவோம். உமது இறைவன் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்
என்பது போதுமானதாக இல்லையா? (அல்குர்ஆன் 41:53)
கோடைகாலம் ஆரம்பித்த நிலையில் ...உடல்
வெப்பமும் அதிகரித்து விட்டது. அப்போது வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம்.
ஏனென்றால் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் என்பதால். இதற்கு இன்னொரு குணமும் இருக்கிறது. அது எப்படியென்றால் வெந்தயம் உடல் எடையையும் குறைக்கும் என்பதாகும்.
இதனை சாப்பிடுவதால் ஜிம் செல்லாமல், உடலை வருத்தி உடற்பயிற்சியை செய்யாமல் எளிதாக எடையை குறைக்கலாம்.
வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கலொரி குறைவாகவும் உள்ளது. இதில்
நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இரத்த கொதிப்பு மற்றும் உடலில்
சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
மேலும் வெந்தயத்தில்
கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால், எடை அதிகரிக்க வழி இல்லை மற்றும் உடலில்
கலொரி குறைவாக இருந்தாலும் எடை அதிகரிக்காது.
இரவில் ஒரு ஸ்பூன்
வெந்தய விதையை நீரில் ஊற வைத்து, காலையில் சுடு தண்ணீரில் வெறும் வயிற்றில்
சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுப்பொருளை வெளியேற்றுவதோடு, உடல் எடையையும்
குறைக்கும்.
வெந்தய விதையை சாதாரண தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைப்பதோடு, ஜீரண சக்தியும் கூடும்.
வெந்தய விதையை பொன்னிறமாக வறுத்து அதை பொடியாக்கி, காற்று புகாத ஒரு டப்பாவில் வைத்து, உண்ணும் உணவில் கலந்து சாப்பிடலாம்.
வெறும் வயிற்றில் டீ யுடன் வெந்தயப் பொடியைக் கலந்து சாப்பிடலாம். இதனால் அடிக்கடி பசி ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும்.
தொலைக்காட்சியில் வெளியான நித்தியானந்தா
சுவாமிகளின் நித்திய ஆனந்த லீலா வினோதங்களால் தமிழக கர்நாடகா
பக்தகோடிகளெல்லாம் அல்லோல பட்டனர்
32 வயதேயான நித்தியானந்தா
தமிழகத்தின் திருவண்ணாமலையில் பிறந்தவர். 33 நாடுகளில் 1200 மையங்கள்,
அமெரிக்க இந்துப் பல்கலைக்கழகத்தின் தலைவர், பெங்களூருக்கு வெளியேமைசூர்
சாலையில் 200 ஏக்கர் பரப்பளவில் தலைமைப் பீடம். பெரும் செல்வாக்கு,
கொட்டும் பணம். எப்படி சம்பாதித்தார் இவற்றையெல்லாம்..
குமுதத்தில் கதவைத் திற காற்று வரட்டும்
கட்டுரையை எழுதியவரின் அந்தரங்க கதவை திறந்து பார்த்த யாரோ ஒருவர் அதனை
படம் பிடித்து தொலைக்காட்சிக்கும் அனுப்பிவிட நித்திய அனுபவங்கள் வெட்ட
வெளிச்சமாகிவிட்டது.
பிரம்மச்சரியத்தை கட்டுப்படுத்துவது எவ்வாறு
என்று எழுதியவர் உணர்ச்சிகளின் உந்து சக்தியால் சிற்றின்பத்தை தகாத
முறையில் உய்த்து உணர்ந்தார். பாவம் பக்தகோடிகள் இவரின் கட்டுரையை படித்து
பண்பட முயன்றவர்கள் திண்டாடிப் போயிருப்பார்க்ள்.காஞ்சிக் காமக்கோடியின்
காமக்களியாட்டங்களும், கொலைக் குற்றமும் வெளிப்பட்ட பிறகும் வாழாவிருந்த
சங்க்பரிவார்களுக்கு நித்யானந்தாவின் நிழலுக அனுபவங்களை கண்டவுடன் பொத்துக்
கொண்டு வந்துவிட்டது.
நித்யானந்தாவிற்கு ரஞ்சிதா காஞ்சிக்கு
‘எம்’ ’எஸ்’ நடிகைகளின் சேவைகள். கூடவே ‘அனு’வில் துவங்கும் எழுத்தாளரின்
கசப்பான அனுபவங்கள். காரணம் புரிகிறது அவர் 'அவாள்’ ஆனதாலோ!
அடப்பாவிகளா? ஒழுக்கச் சீரழிவிலும் ஜாதி வெறியா?காஞ்சிக் காமக்கோடி முதல்
கடைக்கோடி அர்ச்சகன் வரை ஒழுக்கச் சீரழிவின் உச்சத்திற்கே சென்ற செய்திகள்
அடிக்கடி வெளியான பின்னரும் அறியாமையிலிருந்து விடுபடாத பக்தகோடிகள்
புரோகித கசமாலங்களின் காலடியில் வீழ்ந்தே கிடக்கின்றனர்.
மனிதனை
மனிதன் என்ற நிலையில் பார்க்காமல் அவன் காட்டும் சில வித்தைகளால்
உச்சத்தில் தூக்கிவைத்து கூத்தாடிவிட்டு அவனது ரகசிய செய்கைகள்
வெளிப்படுத்தப்படும் பொழுது நிலைகுலைந்துப் போகின்றனர் இந்த அறிவிலிகள்.
இறைவன் யார்? மனிதனை இறைவன் எதற்காகப் படைத்தான்?அவனுக்கும்
மனிதனுக்குமிடையே இடைத்தரகர்கள் தேவையா? தான் படைக்கப்பட்டது ஏன்? என்பதை
பற்றி உணராததன் காரணமாக அறியாமை என்னும் அந்தகாரத்தில் மனிதர்களில் சிலர்
மண்டியிட்டுக் கிடப்பதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சில அல்ல பல
புல்லுருவிகளும் புரோகித வேடம் பூண்டு பணம் சம்பாதிக்கவும், பாலியல்
சுகத்தை அனுபவிக்கவும் தலைப்பட்டு விடுகின்றனர். இத்தகைய சூழலை
பயன்படுத்திக் கொண்டு கடவுளை மறுக்கிறோம் எனக்கூறும் கூட்டம் ஒன்று
ஒழிக்கப்பட வேண்டியவை எவை மடங்களா? மதங்களா? என பட்டிமன்றம் நடத்திக்
கொண்டிருக்கின்றது.
கடவுளின் பெயரால் நடைபெறும் அநாகரீகங்களும்,
அநியாயங்களும் சமூகத்தில் அங்கீகரிக்கப்படுவது எதனால்? என்பதை நாம்
சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். இத்தகைய ஒழுக்கச் சீரழிவுகளுக்கு முடிவுகட்ட
வேண்டுமென்றால் தனது அறிவுக்கு சிறிது வேலையைக் கொடுக்க மனித சமூகம்
தயாராகவேண்டும்.
இயற்கை புறம்பான நிலையில் பிரம்மாச்சரியத்தை
கட்டுப்படுத்துகிறோம் என்ற மோசடித் தனத்திலிருந்து விடுபட்டு இல்லற
வாழ்க்கையின் மூலமே மனிதன் முழுமனிதனாக முடியும் என்று கூறும் மனிதத்
தன்மைக்கு ஏற்ற கொள்கையை ஏற்க மனிதர்கள் தயாராக வேண்டும். மனித உள்ளங்கள்
இத்தகைய இருள்களிலிருந்து எப்பொழுது விடுதலையடைந்து தன்னைப் படைத்த
உண்மையான இறைவனை உணரத் தலைப்படுகிறதோ அன்று இத்தகைய மடங்களெல்லாம் காணாமல்
போய்விடும். ஆகவே திருந்த வேண்டியது மடங்களல்ல மக்களின்
மனங்களேயாகும்..இப்படி நாம் இன்னும் விளிக்காமல் இருந்தால் இவர்களை
போன்றவர்கள் மதுரை ஆதினதுக்கு மட்டும் வர மாட்டார்கள் . நாளை அரசியலுக்கு
கூட வர வாய்ப்பு உள்ளது
நாட்டில் தலை விரித்தாடிய பசிக்கொடுமையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்
என்ற வைராக்கியம் ஒரு வரலாற்று நாயகரின் நெஞ்சத்திலும், வயிற்றிலும் தீயாக
கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அன்றைய தினம் அந்த தீ விஸ்வரூபம்
எடுத்து நாட்டின் இடைக்கால ஆட்சியைக் கவிழ்த்து ஒரு புதிய ஆட்சியை அமைக்க
உதவியது. 'நவம்பர் புரட்சி' என்று வரலாறு அழைக்கும் அந்த புரட்சியை
சந்தித்த நாடு ரஷ்யா.
"இந்த நாட்டிற்க்கு இப்போதைய தேவை யுத்தம்
இல்லை, அமைதியும், உணவும், வேலையும்தான். உலகப் போரிலிருந்து ரஷ்யா
உடனடியாக விலக வேண்டும். பசித்த வயிற்றுடன் நம் இராணுவத்தினர் இனிமேல்
வீம்புக்காக போர் முனைகளில் சாகக்கூடாது. மக்களுக்கு அமைதி, உண்ண உணவு,
விவசாயம் செய்ய நிலம், இந்த மூன்றுதான் இந்த நாட்டின் இப்போதைய தேவை".
என்ற ஆவேசமான பிரச்சாரத்துடன் தன் நாட்டு மக்களை ஒன்றுபடுத்தி அந்த
நவம்பர் புரட்சிக்கு வித்திட்டு ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி மலர வழி
வகுத்த அந்த வரலாற்று நாயகர் லெனின். கம்யூனிச சித்தாந்தம் கார்ல்
மார்க்ஸின் சிந்தனையில் உதித்த ஒன்று என்றாலும் அந்த சித்தாந்தத்தை
வரலாற்றில் முதன் முதலில் செயல்படுத்தி காட்டிய புரட்சி வீரர் லெனின்தான்.
1870-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் நாள் ரஷ்யாவின் வால்கா (Volga River)
நதிக்கரையோரம் உள்ள சிம்பிர்ஸ்க் (Simbirsk) எனும் நகரத்தில் பிறந்தார்
விளாடிமிர் இலீச் உல்யானவ் (Vladimir Ilyich Ulyanov) என்ற லெனின். அந்த
நகரம் இப்போது லெனினின் நினைவாக உல்யானவ்ஸ் (Ulyanov's) என்று
அழைக்கப்படுகிறது. லெனினுக்கு அலெக்ஸாண்டர், டிமிட்ரி என்ற சகோதரர்களும்,
ஆனர், மரியா, ஆல்கா என்ற சகோதரிகளும் இருந்தனர். அவரது தந்தை
நம்பிக்கைக்குரிய அரசாங்க அதிகாரியாக இருந்தாலும், லெனினின் மூத்த சகோதரர்
அலெக்ஸாண்டர் முற்போக்கு கொள்கையும், தீவிரவாத கொள்கையும் உடையவராக
இருந்தார். அப்போது ரஷ்யாவை ஆண்டு வந்த ஷா மன்னன் மக்கள் நலன் மீது அக்கறை
இல்லாதவனாக இருந்தான்.
மன்னனைக் கொல்வதே ரஷ்ய மக்களுக்கு
நல்வாழ்வு கிடைக்க ஒரே வழி என்று நம்பிய அலெக்ஸாண்டர் அதற்காகத் திட்டமிடத்
தொடங்கினார். அந்தத் திட்டத்தை அறிந்த மன்னனின் அதிகாரிகள்
அலெக்ஸாண்டரையும், அவரது நண்பர்களையும் கைது செய்ததோடு மட்டுமின்றி
1887-ஆம் ஆண்டு மே 8-ஆம் நாள் அவர்களை தூக்கிலிட்டுக் கொன்றனர். அப்போது
லெனினுக்கு வயது பதினேழுதான். சிறு வயதிலிருந்தே தன் அண்ணனோடு நெருங்கிப்
பழகியவர் லெனின். பெற்றோர் தெய்வ நம்பிக்கை உடையவர்களாக இருந்தனர். ஆனால்
அலெக்ஸாண்டருக்கும், லெனினுக்கும் மதப்பற்று இருந்ததில்லை. குடும்பம்
முழுவதும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆலயம் செல்லும்போது அவர்கள் இருவர்
மட்டும் ஆலயம் செல்ல மறுத்தனர். பிள்ளைகளின் சுதந்திரத்தில் பெற்றோர்
தலையிட விரும்பாததால் குழந்தைப் பருவத்திலிருந்தே புதுமைக் கருத்துகளோடும்,
சுயமாக சிந்தித்து செயல்பட்டு முடிவெடுக்கும் வாய்ப்போடும் வளர்ந்தார்
லெனின்.
விளையாட்டிலும், படிப்பிலும் பள்ளியில் முதல் மாணவனாக
திகழ்ந்த அவர் உயர்நிலைப்பள்ளி இறுதித் தேர்வில் மாநிலத்திலேயே முதல்
மாணவனாக தேர்ச்சிப் பெற்றார். அண்ணனின் மரணம் அவரை பெரிதாக பாதித்தாலும்
தன் நாட்டுக்கு புதிய ஆட்சி தேவை என்ற எண்ணம் அவரிடம் வேரூன்றி வளரத்
தொடங்கியது. கஸான் நகரில் உள்ள (Kazan University) பல்கலைக்கழகத்தில்
சேர்ந்து பட்டம் பயின்றார் லெனின். ஒரு தீவிரவாதியின் தம்பி என்று கூறி
முதலில் அவரை சேர்த்துக் கொள்ள மறுத்தது பல்கலைக்கழகம். ஆனால் அவரது கல்வி
தேர்ச்சியைக் கண்டு பின்பு மனம் மாறி ஏற்றுக்கொண்டது. பல்கலைக்கழகத்தில்
தன்னுடம் படித்த முற்போக்கு சிந்தனையுடைய மாணவர்களுடன் சேர்ந்து
போராட்டங்களில் ஈடுபட்டதால் லெனினை பல்கலைக்கழகம் வெளியேற்றியது. ஆனால்
வைராக்கியத்துடன் சுயமாகவே படித்து 1891- ஆம் ஆண்டில் சட்டத்தில் பட்டம்
பெற்றார் லெனின்.
அந்தக் காலகட்டத்தில் தான் கார்ல் மார்க்ஸின்
புகழ்பெற்ற 'மூலதனம்' என்ற நூலை படிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
தொழிலாளர்களுக்காக பாடுபட வேண்டும் என்ற உந்துதல் அவருக்கு ஏற்பட்டது.
கார்ல் மார்க்ஸின் கருத்துகளை அவர் பரப்பத் தொடங்கினார். அதனை அறிந்த ஷா
மன்னன் லெனினை கைது செய்து மூன்று ஆண்டு சிறை தண்டனையுடன் ஷைபீரியாவுக்கு
நாடு கடத்தினான். தண்டனை முடிந்ததும் 1900-ஆம் ஆண்டு ஜெர்மனிக்கு சென்ற
லெனின் அங்கிருந்து ஒரு பத்திரிக்கை நடத்தத் தொடங்கினார். அடுத்த பதினேழு
ஆண்டுகள் அவர் ஐரோப்பாவிலேயே தங்கியிருந்து ஷா மன்னனின் கொடுங்கோன்மை
பற்றியும், ரஷ்ய தொழிலாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் நிறைய
எழுதினார். லெனினின் கோபத்திற்கு காரணம் இல்லாமல் இல்லை.
ஷா
மன்னனின் ஆட்சியில் நிலக்கரி தட்டுப்பாட்டால் தொழிற்சாலைகள் மூடப்பட்டன.
ஒரு ரொட்டித் துண்டுக்காக மக்கள் ஒருவரையொருவர் வெட்டிக் கொல்லும் அளவுக்கு
உணவு பஞ்சம் கோர தாண்டவம் ஆடியது. மன்னன் தன் மனைவி அலெக்ஸாண்ட்ராவின்
கைப்பாவையாக விளங்கினான். மனைவியோ ரஷ்புட்டின் என்ற காமுக சாமியாரின்
கட்டுப்பாட்டில் இருந்தாள். மன்னனும், ராணியும் மக்கள் நலன் மீது அக்கறை
இல்லாமல் இருந்ததால்தான் மன்னனைக் கொல்ல திட்டம் தீட்டினார் லெனினின்
அண்ணன் அலெக்ஸாண்டர். தங்கள் பிரச்சினைகளை சொல்ல அரண்மனை நோக்கி ஊர்வலமாக
சென்ற அப்பாவி மக்கள் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர். பொறுத்தது
போதும் என்று ஒரு தேசமே பொங்கி எழுந்தது.
1917-ஆம் ஆண்டு
பிப்ரவரி மாதம் வீதிகளில் திரண்ட ரஷ்ய மக்கள் மன்னனுக்கு எதிராக எழுப்பிய
கோஷங்களால் ரஷ்யாவே அதிர்ந்தது. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மிதவாத
சோசியலிஸ்ட் என்று தங்களை அடையாளம் காட்டிக்கொண்ட ஒரு குழு ஆட்சியைக்
கைப்பற்றியது. பெரும் கோபத்தில் இருந்த கம்யூனிஸ்டுகள் ஷா மன்னனையும்,
அவனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் நிற்க வைத்து சுட்டுக் கொன்றனர். ஆனால்
புதிதாக ஆட்சிக்கு வந்தவர்களாலும் உணவு தட்டுப்பாட்டைப் போக்க முடியவில்லை.
ஷா மன்னன் மறைந்தாலும் நாட்டின் அவலங்கள் மறையவில்லை. அதுதான் சரியான
தருணம் என்று நம்பிய லெனின் தன் தாய்நாடு நோக்கி புறப்பட்டார். அவருடைய
சகாக்கள் உருவாக்கியிருந்த செஞ்சேனியைக் கொண்டு அதே ஆண்டு அதாவது 1917-ஆம்
ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் தலைநகர் பெட்ரோகிராடை (Petrograd) சுற்றி
வளைத்தது லெனினின் படைகள்.
இடைக்கால ஆட்சியின் வீரர்கள்
துப்பாக்கிகளை கீழே போட்டு விலகி நிற்க, ஒரு சொட்டு இரத்தம் சிந்தாமல்,
வன்முறை நிகழாமல் ஆட்சியைக் கைப்பற்றினார் லெனின். ரஷ்யாவில் கம்யூனிஸ்டு
ஆட்சி மலர்ந்தது. பிரச்சாரத்தில் கூறியிருந்ததைப் போலவே ஆட்சிக்கு வந்த
மறுநாளே நில பிரபுக்களின் விளை நிலங்களை கைப்பற்றி விவசாயிகளுக்கு
பிரித்துக் கொடுத்தார் லெனின். தொழிற்சாலைகளின் நிர்வாகம் தொழிலாளிகளிடம்
ஒப்படைக்கப்பட்டது. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. லெனின் ரஷ்யாவின்
கம்யூனிஸ்டு ஆட்சியை அமைத்த பிறகுதான் பெரும்பாலான நாடுகளில் கம்யூனிசம்
பரவத் தொடங்கியது. கார்ல் மார்க்ஸின் கொள்கைகளை அவர் பின்பற்றினாலும்
அடக்கு முறையை வன்முறையால்தான் எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் நம்பினார்.
நிறைய புத்தகங்களை படிக்கும் பழக்கம் அவரிடம் இருந்தது. தனது
புரட்சிகரமான கருத்துகளை அவர் புத்தகங்களாகவும் எழுதியிருக்கிறார். அவரது
எழுத்துகள் 55 தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன. 1922-ஆம் ஆண்டு மே மாதம்
லெனினை முடக்குவாதம் தாக்கியது. உடல் செயலிழந்தது. இரண்டு ஆண்டுகளில்
அதாவது 1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் நாள் தனது 54-ஆவது வயதில் அவர்
காலமானார். அவரது பதப்படுத்தபட்ட உடல் இன்றும் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில்
பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் அடக்கு முறையையும், முறையற்ற
ஆட்சியும் நடந்தபோது நம்மால் என்ன செய்ய முடியும்? என்று மற்றவர்களைப்போல்
லெனினும் ஒதுங்கியிருந்திருந்தால் அவரால் வரலாற்றில் அவ்வுளவு பெரிய
தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியாது.
கம்யூனிசம் கொள்கைகளின்
நிறை, குறைகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டியதில்லை. ஆனால் நாட்டில் வறுமை
ஒழிய வேண்டும், எல்லொருக்கும் வேலை கிடைக்க வேண்டும், அனைவருக்கும் உணவு
கிடைக்க வேண்டும் என்றும் சிந்தித்ததாலேயே வரலாற்றில் அழியா இடத்தைப்
பெற்றிருக்கிறார் லெனின். அவரைப் பற்றியும், ரஷ்ய புரட்சியைப் பற்றியும்
வருணிக்க முனைந்த மகாகவி பாரதியார்....
என்று கவிதை
வடித்திருக்கிறார். நம்மால் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற
அசைக்க முடியா நம்பிக்கையும், தன் இலக்கை நோக்கி இரவு, பகல் பாராமல்
உழைக்கும் மனஉறுதியும், எல்லோருக்கும் எல்லாமும் வேண்டும் என்ற பரந்த
மனப்பான்மையும்தான் லெனின் என்ற அந்த வரலாற்று நாயகனுக்கு வானத்தை
வசப்படுத்த உதவிய பண்புகள். அதே பண்புகளை நாமும் வளர்த்துக்கொண்டால்
லெனினைப் போல் ஒரு தேசத்தின் தலையெழுத்தையே மாற்ற முடியாவிட்டாலும்,
குறைந்தது நம் தலையெழுத்தையாவது மாற்றிக் கொள்ளலாம்.
பழவகைகளில் மிகவும் பெரிய பழம் என்றால் அது
பலாப்பழம் தான் . இந்த பழம் பச்சை நிறத்திலான கரடு முரடான மேல் தோலை
கொண்டதாக அமைந்திருக்கும் . இதன் தோல் உறுதியாகவும் அதன் அடிப்பாகத்தில்
சுளைகள் நிறைந்து காணப்படும் .
பலாச்சுளைகள் ஒவ்வொன்றும்
நரம்புகள் போன்ற சடைகளின் இடையில் பதிந்திருக்கும் . பலாப்பழத்தின் சுவை
மரத்துக்கு மரம் வேறுபாடு உடையதாக இருக்கும் . சில பலாப்பழ சுளைகள் தேன...்
போன்று இனிப்பாகவும் , சில பழங்கள் இனிப்பு குறைந்தவையாகவும் இருக்கும் .
மஞ்சள் நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் பலாப்பழ சுளைகள்
காணப்படும் . பழுத்த , நல்ல பழம் என்றால் மஞ்சள் நிறத்தில் இருக்கும் .
பலாக்கொட்டைகளை வேக வைத்தோ , அவித்தோ , பொரித்தோ , காய்கறிகளுடன் சேர்த்து
சமைத்தோ சாப்பிடலாம் .
விட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது
பலாப்பழத்தில் . உடலுக்கும், மூளைக்கும் வலுவளிக்கும் .நோய்களை குணமாக்கும்
தன்மை கொண்டது .பலாச்சுளைகளை மென்று தின்ன வேண்டும் . இரத்தத்தை விருத்தி
ஆக்கும் தன்மையும் இந்த பழத்தில் உண்டு . எதுவும் அளவுடன் சாப்பிட வேண்டும்
. அதுதான் உடம்புக்கு நல்லது .
மரத்தில் விளையும் பழங்களிலேயே
பெரிய பழம் பலாப்பழமாகும். சில இடங்களில் மட்டுமே இது முறையான விவசாய
முறைகளின் படி முழுமையான தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. பெரும்பாலும்
மற்ற பழத்தோட்டங்களில் துணைப்பயிராகவோ அல்லது வீட்டுத்தோட்டங்களிலோ
வளர்க்கப்படுகிறது. உலகின் சில இடங்களில் 'பழங்களின் அரசன்' என்று
போற்றப்படுகிறது
இப்போது பலாப்பழ சீசன் என்பதால் எல்லா
இடங்களிலும் பலாப்பழம் விற்கப்படுகிறது . பலா மரம், இந்தியா, பர்மா,
இலங்கை, சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், பிரேசில், கென்யா ஆகிய நாடுகளில்
பெரும்பாலாக வளர்கிறது. பலாச்சுளைகள் பொட்டாசியம், கல்சியம் , பாஸ்பரஸ்
ஆகிய உப்பு சத்துக்களும் உயிர்ச்சத்து ஏ மற்றும் சி யும் அதிக அளவில்
கொண்டுள்ளன. கொட்டைகள் உயிர்ச்சத்து பி1, பி2 ஆகியவை கொண்டுள்ளன.
100 கிராம் பலாப்பழத்தில், 303 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது. இதனால்
உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க, பலாப்பழம் சிறந்ததாகும். பலாப்பழத்தில்
குறைந்த அளவு கலோரிகளே உள்ளதால், எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தங்கள்
உணவில் பலாப்பழத்தை தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம். புற்றுநோயைத்
தடுக்கும் "ஆன்ட்டி-ஆக்சிடெண்டுகள்' பலாப்பழத்தில் உள்ளன என சமீபகால
ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
வயது முதிர்தலைத் தள்ளிப் போட,
பலாப்பழம் உதவுகிறது. இது வயது ஆவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தைத்
தடுக்கிறது. மலச்சிக்கலை நீக்க, பலாப்பழம் உதவுகிறது. சீசனில் கிடைக்கும்
பழங்கள், நம் உணவில் இடம் பெற வேண்டும் என உணவியல் நிபுணர்கள்
கூறுகின்றனர்.
பலாப்பழத்தின் சுவையை எல்லோரும் சுவைத்து
பாருங்கள் . எல்லோரும் சாப்பிடுங்கள் . அதன் பயன்களை அறிந்து கொள்ளுங்கள்.
அறியாமை காலத்...து
மக்கள் தங்களின் ஒவ்வொரு தேவைக்கும் தனி தனி தெய்வங்களை ஏற்படுத்தி குறைகளை
தீர்த்து வைக்க வேண்டினர். மாற்று மதங்களிலும் இதே போன்ற செயல் இருப்பதை
நாம் காணலாம்.
அதே போன்று நம் மக்களும் தங்களின் குறைகளை
தீர்த்து வைக்க கோரி தனி,தனி அவ்லியாக்களை உருவாக்கி வைத்துள்ளனர்.
நீங்கள் பார்க்கும் புகை படம் நாகூர் தர்காவில் எடுக்கபட்டது. அங்குள்ள
மக்கள் தங்கள் தேவைகளை வேண்டி அங்கு அடக்கம் செய்யப்பட்டவரிடம்
பிரார்த்தித்து எழுப்பிய மரம் இது.
அல்லாஹ்வின் தூதரின்
எச்சரிக்கை மெய் படுத்த பட்டதல்லவா! நீங்கள் உங்கள் முன்னோர்களின் செயல்களை
அப்படியே பின்பற்றுவீர்கள் என்று கூறியதை...
நாங்கள்
புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க, நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன்
யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணை வைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம்
இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க் கருவிகளைத்
தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். "தாத்து அன்வாத்' என்று
அதற்குச் சொல்லப்படும்.
நாங்கள் அந்த மரத்தின் பக்கம்
சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில் "அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு
"தாத்து அன்வாத்து' என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும்
ஏற்படுத்துங்கள்'' என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள்
"சுப்ஹானல்லாஹ்! அல்லாஹு அக்பர்! இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்)
முன்னோர்களின் செயல் ஆகும்'' என்று சொல்லி, "என் உயிர் யார் கைவசம்
இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ
இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி
மூஸா (அலை) அவர்களிடத்தில், "மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள்
இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள்' என்று கேட்க, அதற்கு
மூஸா (அலை) அவர்கள், "நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள்' என்று
பதிலளித்தார்கள்.
இதைப் போலவே, நீங்களும்
கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையைப்
படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
No 1:-முஹம்மது நபி صلى الله عليه وسلم ஆசிரியர்: மைக்கேல் ஹெச்.
ஹார்ட்
[ இப் பூமியில் வாழ்ந்த கோடானுகோடி மனிதர்களில்
வரலாற்றின் போக்கில் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணும் அளவுக்கு மிகப்பெரும்
செல்வாக்கு வல்லமை பெற்றிருந்தவர்கள் யார் யார் என்பதை மைக்கேல் ஹெச்.
ஹார்ட் அவர்கள் The 100 என்ற தன்னுடைய புத்தகத்தில் பதிவு
செய்திருக்கிறார். அதில் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
அவர்களுக்கு முதலாம் இடத்தை கொடுத்து அதற்கான காரணத்தையும்
கொடுத்திருக்கிறார். இனி அவரது வரிகளை படிப்போம்.]
இந்த
உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியவர்களின்
பட்டியலில் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை முதலாமானவராகத்
தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும். மற்றும் சிலர்
"ஏன் அப்படி?" என்று வினாவும் தொடுக்கலாம். ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு
நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே
தாம்.
எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய
உலகத்தின் பெரும் மதங்களின் ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல்
வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பதின்மூன்று
நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதும், எல்லாத்
துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது.
இந்நூலில்
இடம் பெற்றுள்ளோரில் பெரும்பான்மையானவர்கள் பண்பாடு மிக்க அல்லது
அரசியலில் நடுநாயகமாக விளங்கிய நாகரிகத்தின் கேத்திரங்களில் பிறந்து
வளர்வதற்குரிய வாய்ப்பினைப் பெற்றவர்களாக இருந்தார்கள். ஆனால், முஹம்மதோ
(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வாணிபம், கலை, கல்வி ஆகியவற்றின்
கேத்திரங்களுக்குத் தொலைவிலுள்ளதும், அக்காலத்தில் உலகத்தின் பின்தங்கிய
பகுதிகளாகவும் இருந்த தென் அரேபிய நாட்டிலுள்ள மக்கா என்னும் பேரூரில்
கி.பி. 570ஆம் ஆண்டில் பிறந்தார்கள். ஆறு வயதிலேயே அநாதையாகிவிட்ட அவர்கள்,
எளிய மூழ்நிலையிலே வளர்க்கப்பட்டார்கள்.
அன்னார் எழுதப் படிக்கத்
தெரியாதவராக இருந்தார் என இஸ்லாமிய வரலாறு நமக்குச் சொல்லுகிறது. தம்
இருபத்தைந்தாம் வயதில் அவர்கள் செல்வச் சீமாட்டியாக இருந்த ஒரு விதவையை
மணந்தார்கள். அதிலிருந்து அவர்களின் பொருளாதார நிலை சீரடைந்தது. எனினும்,
அவர்கள் தம் நாற்பதாம் வயதை எட்டும் முன்னர், குறிப்பிடத்தக்கவர்கள்
என்பதற்குரிய வெளி அடையாளங்கள் மிகக் குறைவாகவே இருந்தன.
அக்காலத்தில் பெரும்பான்மையான அரபுகள் பிற்பட்டோராகவும் பல தெய்வங்கள்
மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தனர். எனினும், மக்காவில் அப்போது
மிகக் குறைந்த எண்ணிக்கையுடையோராய் யூதர்களும், கிறிஸ்தவர்களும்
இருந்தனர். அவர்களிடமிருந்தே பிரபஞ்சம் முழுமையும் ஆளுகின்ற அனைத்து
வல்லமையுள்ள ஏக இறைவனைப் பற்றி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
முதலில் அறியலானார்கள் என்பதில் ஐயமில்லை. அவர்களுக்கு நாற்பது வயதானபோது,
உண்மையான ஏக இறைவன் அல்லாஹ் தம்முடன் பேசுகிறான் என்றும், சத்தியத்தைப்
பரப்புவதற்குத் தம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான் என்றும் முஹம்மது உறுதியான நம்பிக்கை
கொண்டார்கள்.
இதன் பின், மூன்றாண்டு காலம் முஹம்மது (ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) தம் நெருங்கிய தோழர்களுக்கும், துணைவர்களுக்கும் போதனை
செய்தார்கள். பின் சுமார் 613ஆம் ஆண்டிலிருந்து, பகிரங்கமாக போதனை
செய்யலானார்கள்.
பையப்பைய, தம் கொள்கையை ஏற்கும் ஆதரவாளர்களை
அவர்கள் பெறத் துவங்கவே, மக்காவின் அதிகார வர்க்கத்தினர் அன்னாரை
அபாயகரமாகத் தொல்லை தரும் ஒருவராகக் கருதலானர்கள். கி.பி. 622ஆம் ஆண்டில்,
தம் நலனுக்குப் பாதுகாப்பில்லை எனக் கருதி, மக்காவுக்கு வடக்கே இருநூறு
கல் தொலைவிலுள்ள மதீனா நகருக்கு ஏகினார்கள். அங்கு அவர்களுக்குக் கணிசமான
அரசியல் வல்லமையுள்ள பதவி கிட்டிற்று.
இவ்வாறு அவர்கள்
மதீனாவுக்குச் சென்ற ஹிஜ்ரா என்ற இந்திகழ்ச்சிதான், நபிகள் வாழ்க்கையில்
ஒரு திருப்பு முனையாக அமைந்தது. மக்காவில் அவர்களைப் பின்பற்றியோர் மிகச்
சிலரே இருந்தனர். ஆனால் மதீனாவிலோ, மிகுந்த ஆதரவாளர்களைப் பெறலானார்கள்.
இதனால் அவர்கள் பெற்றுக்கொண்ட செல்வாக்கு ஏறத்தாழ எல்லா அதிகாரங்களும்
கொண்ட ஒரு தலைவராக்கிற்று. அடுத்த சில ஆண்டுகளில் முஹம்மது (ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அவர்களை பின்பற்றுவோர் தொகைவேகமாகப் பெருகத் துவங்கியதும்
மக்காவுக்கும் மதீனாவுக்கு மிடையே தொடர்ந்து பல போர்கள் நிகழ்ந்தன.
இறுதியில் 630ஆம் ஆண்டில் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்), மாபெரும்
வெற்றியாளராக மக்காவுக்குள் திரும்பி வந்ததும், இப்போர் ஒய்ந்தது. அரபுக்
கேத்திரங்கள், இப்புதிய மார்க்கத்துக்கு விரைந்து வந்து அதனை ஏற்றுக்
கொள்வதை, முஹம்மது அவர்களின் வாழ்வின் எஞ்சிய இரண்டரை ஆண்டுகளும் கண்டன,
அவர்கள் 632ஆம் ஆண்டில் காலமானபோது தென் அரேபியா முழுவதிலும் பேராற்றல்
கொண்ட ஆட்சியாளராக விளங்கினார்கள்.
அரபு நாட்டின் படவீகள்
என்னும் நாடோடிக் கோத்திரத்தார் வெறி கொண்ட வீரத்தோடு போராடுவார்கள்
எனப் பெயர் பெற்றிருந்தனர். ஆனால், ஒற்றுமையின்றி, ஒருவரையொருவர்
ஒழிக்கும் போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறு தொகையினர் அவர்கள்,
நாடோடி வாழ்க்கையின்றி, நிலையாக வேளாண்மைகளில் ஈடுபட்டிருந்த வடபகுதி
அரசுகளின் பெரிய படைகளுக்கு இணையாக இந்த படவீகள் இருக்கவில்லை. ஆனால்
வரலாற்றில் முதன் முறையாக முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களால்
ஐக்கியப்படுத்தப்பட்டு, உண்மையான ஒரே இறைவன் மீது கொண்ட ஆழிய
நம்பிக்கையால் உந்தப்பட்ட இச்சிறுசிறு அரபுப் படைகள், மனித வரலாற்றிலே
பேராச்சரியம் தரத்தக்க வெற்றித் தொடர்களில் தங்களை ஈடுபடுத்தலாயின.
அரபு நாட்டுக்கு வடகிழக்கில் சாஸ்ஸானியர்கள் புதிய பேரரசு பரந்து கிடந்து,
வடமேற்கில் கான்ஸ்டாண்டி நோபிளை மையமாகக் கொண்ட பைஸாந்தியம் என்னும்
கிழக்கு ரோமப் பேரரசு இருந்தது. எண்ணிக்கையைக் கொண்டு பார்த்தால், இத்தகு
எதிரிகளுடன் அரபு ஈடுகொடுக்க முடியதோர்தாம். எனினும், எழுச்சியடைந்த
இந்த அரபுகள் மெஸபொட்டோமியா, சிரியா, பாலஸ்தீனம் முழுவதையும் வெகுவேகமாக
வெற்றி கொண்டனர். கி.பி. 642ஆம் ஆண்டில் பெஸாந்தியப் பேரரசிடமிருந்து
எகிப்தைப் கைப்பற்றினர். 637இல் காதிஸிய்யாவிலும், 642இல் நஹவாத்திலும்
நடைபெற்ற முக்கியப் போர்களில் பாரசீகப் படைகள் நசுக்கப்பட்டன.
முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் நெருங்கிய தோழர்கள்,
முஹம்மது அவர்களைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப் பேற்றவர்களுமான அபூபக்ர்,
உமர் இப்னு அல்-கத்தாப் (ரளியல்லாஹ¤ அன்ஹ¤ம்) ஆகியோரின் தலைமையில் வென்ற
நிலங்களுடன் அரபுகளின் முன்னேறுதல் நின்றுவிடவில்லை. கி.பி. 711க்குள்
அரபுப் படைகள், வட ஆஃப்ரிக்காவிலிருந்து அட்லாண்டிக் மாகடல் வரையிலும் உள்ள
பகுதிகளைத் தம் ஆதிக்கத்தில் கொண்டு வந்தன. அங்கிருந்து அவை வடபுலம்
நோக்கித் திரும்பி, ஜிப்ரால்டர் கடலிடுக்கைக் கடந்து, ஸ்பெயின் நாட்டின்
விஸிகோதிக் அரசை வென்றன.
கிறிஸ்துவ ஐரோப்பா முழுவதையும்
முஸ்லிம்கள் வென்று விடுவார்களோ என்று கூட ஒரு சமயம் தோன்றிற்று. ஆனால்,
732ஆம் ஆண்டில், ஃபிரான்சின் மையப் பகுதிவரை முன்னேறிவிடட் ஒரு முஸ்லிம்
படை, பரங்கியரால் டூர்ஸ் போரில் தோற்கடிக்கப்பட்டது. இருப்பினும் கூட
நபியவர்களின் சொல்லால் உணர்வு பெற்ற, இந்த படவீக் கோத்திரத்தினர்,
குறைந்த ஒரு நூற்றாண்டு காலப் போர்களின் மூலமாக, அதுவரை உலகு கண்டிராத
-இந்திய எல்லைகளிலிருந்து அட்லாண்டிக் மாகடல் வரை பரந்திருந்த ஒரு பேரரசை
நிறுவினார்கள். இப்படைகள் வென்ற நிலங்களிலெல்லாம், அப்புதிய மார்க்கத்தை
மக்கள் பெரும் அளவில் தழுவலாயினர்.
ஆனால், இவ்வெற்றிகள் அனைத்துமே
நிலைபெற்றவையாக இருக்கவில்லை. பாரசீகர்கள் நபிகள் மார்க்கத்துக்கு
விசுவாசம் பூண்டவர்களாக இருந்து வந்தாலும் கூட, அரபுகளிடமிருந்து தம்
சுதந்திரத்தை மீட்டுக் கொண்டனர். ஸ்பெயின் நாட்டின் எழுநூறு ஆண்டுகள்
போர் நடப்புகளுக்குப் பிறகு, அந்தத் தீபகற்பம் முழுவதையும் கிறிஸ்துவர்கள்
மறு வெற்றி கொண்டனர். இருப்பினுங்கூடப் பண்டையப் பண்பாட்டின் இரு
தொட்டில்களாக விளங்கிய மெஸ பொட்டோமியாவும் (இன்றைய இராக்) எகிப்தும்
அரபு நாடுகளாகவே இருக்கின்றன. இது போன்றே வட ஆஃப்ரிக்காவின் முழுக்
கடற்கரைப் பகுதிகளும் இருக்கின்றன.
முஸ்லிம்கள் துவக்கத்தில்
வென்ற நாடுகளின் எல்லைகளுக்குத் தொலைவிலும் இப்புதிய மார்க்கம் இடைப்பட்ட
நூற்றாண்டுகளில் தொடர்ந்து பரவியவாறே இருந்தது. இப்போது,
ஆஃப்ரிக்காவிலும், மத்திய ஆசியாவிலும், இன்னும் அதிகமாகவே பாகிஸ்தானிலும்
கூட வட இந்தியாவிலும், இந்தோனேஷியாவிலும், முஸ்லிம்கள் கோடிக்கணக்கில்
வாழ்ந்து வருகின்றனர். இந்தோனேஷியாவில், இப்புது மார்க்கமே
ஒருமைப்பாட்டின் அம்சமாக அமைந்துள்ளது. ஆனால், இந்தியத் துணைக் கண்டத்தில்
இந்து முஸ்லீம் பூசல் ஒற்றுமைக்குப் பெரும் தடையாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில், மனிதகுல வரலாற்றில் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) யின் தாக்கத்தை-செல்வாக்கை-எப்படிக் கணக்கிடுவது? ஏனைய சமயங்களைப் போன்றே
இஸ்லாமும் அதனைப் பின்பற்றுவோரின் வாழ்க்கைகளில் மிகப் பெரும் தாக்கத்தை
உண்டு பண்ணி, ஆதிக்கம் செலுத்துகின்றது. இதன் காரணமாகத்தான் உலகப் பெரும்
சமயங்களை நிறுவியவர்கள் இந்நூலில் முக்கியமாக இடம் பெற்றுள்ளனர். உலகத்தின்
முஸ்லிம்களைவிடக் கிறிஸ்துவர்கள் ஏறத்தாழ இருமடங்கினராக இருப்பினும் கூட
முஹம்மது நபியவர்களை ஏசு நாதரைவிட முதன்மையாக இடம் பெறச் செய்திருப்பது,
எடுத்த எடுப்பில் புதுமையாகத் தோன்றலாம். இந்த முடிவுக்கு இரண்டு
காரணங்கள் உண்டு.
ஒன்று: கிறிஸ்துவ வளர்ச்சிக்கும் மிகவும்
முக்கியத்துவம் வாய்ந்த பணியினை முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்)
அறநெறி, ஒழுக்க இயல் ஆகியவற்றுக்கு (அவை யூத சமயத்திலிருந்து வேறுபட்ட
அம்சங்களைப் பொறுத்தவரை) ஏசுநாதரே காரணமாக இருந்தாலும், அதன்
இறைமையியலை(THEOLOGY) உருவாக்கியதில் முதன்மையானவரும், அதன்பால், மக்கள்
வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும், புதிய ஏற்பாட்டின் பெரும்
பகுதியின் ஆசிரியருமான தூய பவுல்தான்.(St. PAUL) ஆனால், இஸ்லாத்தின்
இறைமையியல்(THEOLOGY), அதன் அறநெறி, ஒழுக்க இயல் யாவற்றுக்குமே
பொறுப்பானவர் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தான். அன்றியும்
அச்சமயத்தை மக்களிடையே பரப்புவதிலும் இஸ்லாமிய அனுஷ்டான மரபுகளை
வகுப்பதிலும் அவர்கள் மூலாதாரமான பொறுப்பினை மேற்கொண்டிருந்தார்கள்.
மேலும், இறைவனிடமிருந்து தங்களுக்கு நேரடியாய் அருளப்பட்ட அவர்கள் நம்பிய
திருவெளிப்பாடான புனித குர்ஆனின் போதகரும் அவர்தாம். முஹம்மது (ஸல்லல்லாஹ¤
அலைஹி வஸல்லம்) வாழ்நாளிலேயே இவ்விறை வெளிப்பாடுகள் பற்றுதியுடனும்,
கடமையுணர்வுடனும், பதிவுச் செய்யப்பட்டன.
அவர்கள் காலமான சிறிது
காலத்துக்குள் ஆதாரபூர்வமாக அவை ஒரு சேரத் தொகுக்கப்பட்டன. எனவே, முஹம்மது
நபி (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) அவர்களின் கருத்துகளும், போதனைகளும்,
கொள்கைகளும், குர்ஆனுடன் நெருக்கமானவை. ஆனால், ஏசுநாதரின் இது போன்ற
விரிவான போதனைகள் அடங்கிய எதுவும்(மூலாதாரத்துடன்) எஞ்சவில்லை.
கிறிஸ்துவர்களுக்கு பைபிளைப் போன்று, முஸ்லிம்களுக்கு குர்ஆன் முக்கியம்
வாய்ந்ததாகும். குர்ஆன் வாயிலாக முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
உண்டு பண்ணிய தாக்கம், மிகப்பெரும் அளவினதாகும். கிறிஸ்துவத்தின் மீது
ஏசுநாதரும், தூய பவுலும் ஒருங்கிணைந்து உண்டுபண்ணிய தாக்கத்தை விட,
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இஸ்லாத்தின் மீது உண்டு பண்ணிய
தாக்கம் மிகுந்தது என்றே சொல்லலாம். சமய அடிப்படையில் மட்டும் பார்க்கப்
போனால் மனித வரலாற்றில் ஏசுநாதருக்கு இருந்த செல்வாக்கைப் போன்றே
முஹம்மதுவுக்கும் இருந்தது என்று சொல்லலாம்.
இரண்டாவது: மேலும்,
ஏசுநாதரைப் போலில்லாமல், முஹம்மது நபி (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) சமயத்
தலைவராக மட்டுமின்றி, உலகியல் துறைகளிலும் தலைவராக இருந்தார்கள். உண்மையில்
அரபுகளின் வெற்றிகளுக்கு, பின்னிருந்து இயக்கிய உந்து சக்தியான அன்னார்
எல்லாக் காலத்துக்கும் தாக்கத்தை உண்டு பண்ணும் செல்வாக்கு மிக்க தலைவராக
இடம் பெறலாம்.
வரலாற்று நிகழ்ச்சிகளில் முக்கியம் வாய்ந்த பல,
தவிர்க்க முடியாமல் நிகழக் கூடியவை தாம்: அவற்றை நடத்துவதற்குரிய
குறிப்பிட்ட தலைவர் ஒருவர் இல்லாவிடினும் சரியே என்று சொல்லக்கூடும்.
சான்றாக ஸைமன் பொலீவர் பிறந்திருக்காவிட்டாலும் கூட, ஸ்பெயினிடமிருந்து
தென் அமெரிக்கக் காலனிகள் தங்கள் விடுதலையைப் பெற்றுத்தானிருக்கும். அதனால்
அரேபிய வெற்றிகளைப் பற்றி இவ்வாறு சொல்ல முடியாது. ஏனெனில் முஹம்மது நபி
(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்துக்கு முன், இப்படி எதுவும்
நிகழ்ந்ததில்லை.
எனவே அன்னார் இல்லாமலே இத்தகு
வெற்றிகளைப் பெற்றிருக்கும் என நம்புவதற்கும் நியாயமில்லை. மனித வரலாற்றில்
இவ்வெற்றிகளுக்கு ஒத்தவையாக எவற்றையும் பற்றிச் சொல்ல முடியுமானால் அவை
செங்கிஸ்கான் தலைமையில் மங்கோலியர்கள் பதின்மூன்றாம் நூற்றாண்டில் அடைந்த
வெற்றிகளாகும். ஆனால், இவ்வெற்றிகள் அரபு வெற்றிகளைவிட, பரப்பளவில்
மிகுந்திருந்தாலும்-நிலைத்திருக்கவில்லை.
இன்று மங்கோலியர்கள் வசமுள்ள நிலப் பகுதி செங்கிஸ்கானுக்கு முன்னர்
அவர்களிடமிருந்தது தான்.
ஆனால், அரபுகளின் வெற்றிகளோ, பெரிதும்
வேறுப்பட்டவையாகும். இஸ்லாத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையால்
மட்டுமல்ல, அரபு மொழி, வரலாறு, பண்பாடு ஆகியவற்றாலும் இணைக்கப்பட்டு,
இராக்கிலிருந்து மொரோக்கோவரை ஒரு சங்கிலித் தொடர்போல் அரபு நாடுகள்
விரிந்து கிடக்கின்றன. குர்ஆன் இஸ்லாமிய சமயத்தின் மூலாதாரமாக
அமைந்திருப்பதும், அது அரபு மொழியில் இருப்பதுமாகிய காரணங்கள் தாம்
பதின்மூன்று நூற்றாண்டுகளுக்கிடையில் அம்மொழி ஒன்றுக்கொன்று
விளங்காவிட்டார மொழிகளாகச் சிதறிச் சிதைந்து போகாமல் தடுக்கப்பட்டது
என்று சொல்லலாம்.
இந்த அரபு நாடுகளுக்கிடையே, கணிசமான
வேறுபாடுகளும், பிரிவுகளும் காணப்படுகின்றன என்பதும் உண்மைதான். எனினும்,
பகுதியளவிலான இவ்வொற்றுமைக் குறைவு இந்நாடுகளுக்கிடையே நிலவி வரும்
ஒற்றுமையின் முக்கியம் வாய்ந்த அம்சங்களே தம் கண்களிலிருந்து மறைந்துவிடக்
கூடாது. சான்றாக 1973-74 எண்ணை ஏற்றுமதித் தடையில் அரபு நாடுகள் மட்டுமே
கலந்து கொண்டன. ஈரானும், இந்தோனேஷியாவும் அவை இஸ்லாமிய நாடுகளாக
இருப்பினும் இதில் கலந்து கொள்ளவில்லை.
ஆக ஏழாம் நூற்றாண்டில்
தொடங்கிய அரபு வெற்றிகள், மானுட வரலாற்றில் இன்னும் முக்கியமான பங்கு
வகித்து வருவதைக் கண்கூடாகக் காண்கிறோம். சமயத் துறையிலும், உலகியல்
துறையிலும் முஹம்மது நபி ஒருசேரப் பெற்ற ஈடில்லாத செல்வாக்குத்தான் மனித
வரலாற்றில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரே தனி மனிதர் என்னும்
தகுதிக்கு அவரை உரித்தாக்குகிறது என நான் கருதுகிறேன்.
கோடை காலத்தில் எண்ணெயும், வியர்வையும்
அதிகரித்து பருக்கள் ஏற்படுவது இயல்பு. அதை நகங்களினால் கிள்ளினால் அதிக
ஆபத்து. அவை சீல்வைத்து புண்கள் வடுக்கலாக மாறி விடும். கோடைகால பருக்களைப்
போக்க சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் அழகியல் நிபுணர்கள். டீ பேக் பேஸ்ட்
சருமத்தில் ஏற்படும் கறுமையை போக்கவும், பருக்களை நீக்கவும் டீ டிகாசன்
சிறந்த நிவாரணி. தேனீர் தயாரித்த பின்பு மீதம் இருக்கும் டிக்காஷனில்
சிறிதளவு கடலைமாவு கலந்து பேஸ்ட் மாதிரி தயாரியுங்கள். அதனை கை, முகம்,
கழுத்து போன்ற பகுதிகளில் பூசி 15 நிமிடம் காயவைக்கவும். உலர்ந்து
இறுக்கமான பின்பு குளிர்ந்த நீரில் கழுவவும். பயன்படுத்திய `டீ பேக்கை'
கழுவி கண்களின் மேல் 10 நிமிடங்கள் வைத்திருந்தால், சூட்டினால் ஏற்படும்
கண் சோர்வு, எரிச்சல் நீங்கும்.
அதேபோல் கிரீன் டீ முகப்பருவைப் போக்கும் சிறந்த மருத்துவப் பொருளாக
செயல்படுகிறது. இதில் உள்ள பென்சாயில் பெராக்ஸைடு முகத்தில் உள்ள அதிக
எண்ணெய் பசையை நீக்கும். வறட்சி ஏற்படவிடாது. சருமத்தை பருவின்றி
பொலிவாக்கும். துளசி சாறு
ஒரு லிட்டர் தண்ணீரை சூடாக்குங்கள். சூடானதும் அடுப்பில் இருந்து
இறக்கிவைத்து விட்டு அதில் ஒரு கைப்பிடி துளசியை போட்டு
மூடிவைத்துவிடுங்கள். நன்றாக ஆறிய பின்பு அந்த நீரை வடிகட்டி முகம் கழுவ
பயன்படுத்துங்கள். வேப்பிலை வடிநீர்
தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் புதினா, துளசி, வேப்பிலை
மூன்றையும் தலா ஒரு கைப்பிடி வீதம் போட்டு மூடிவைக்கவும். இதனை வடிகட்டி
ஆறவைத்து முகம் கழுவினாலும் முகப்பரு வராது. இதை பிரிஜ்ஜில் வைத்து 3
நாட்கள் வரை பயன்படுத்தலாம். அந்த நீரில் ஒரு கப் எடுத்து, அதில் 3 டீ
ஸ்பூன் முல்தாணி மிட்டி கலந்து பரு இருக்கும் இடங்களில் பூசவேண்டும். பத்து
நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவிவிட்டால் பரு மறையும். ரோஜா, சந்தனம்
ஒரு லிட்டர் தண்ணீரை சூடாக்கி, அதில் பிங்க் கலர் ரோஜா இதழ்களை ஒரு
கைப்பிடி அளவு போட்டு மூடிவைத்துவிடுங்கள். ஒரு மணி நேரம் கழித்து வடிகட்டி
எடுத்து, அந்த நீரை பயன்படுத்தி சந்தன கட்டையை கல்லில் தேய்த்து உரசி,
அரைக்கவேண்டும். அதை பரு, வியர்க்குரு, கருமையான சருமங்கள் உள்ள பகுதிகளில்
பூசவும். அரை மணி நேரத்தில் குளிர்ந்த நீரால் முகம் கழுவவேண்டும். இளநீர், தர்பூசணி
இளநீரையும், தர்பூசணி சாறையும் சம அளவு எடுத்து கலந்து முகத்தில்
தேயுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து மீண்டும் ஒருமுறை பூசுங்கள்.
படுத்துக்கொண்டு பஞ்சில் முக்கி இதை தேய்ப்பது நல்லது. இல்லாவிட்டால்
வழிந்தோடி விடும். பஞ்சில் முக்கிய சாறை கண்களை மூடிக்கொண்டு, கண்களின்
மேல் பகுதியிலும் வைக்கவேண்டும். உடல் சூட்டினால் ஏற்படும் கட்டியை
கட்டுப்படுத்தும். கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். முகமும் பொலிவு
பெறும்.
அதிக அளவு டிவி பார்த்தாலோ, கணினியில் வேலை செய்தாலோ பருக்களும்,
கரும்புள்ளிகளும் தோன்றும். கண்களைச் சுற்றி கருவளையும், சோர்வும்
ஏற்படும். எனவே இவற்றை தவிர்க்க வேண்டும். மன அழுத்தம் இருந்தாலும்
முகப்பரு வரும். எனவே மனதை அமைதியாக்குவதோடு, ஊட்டச்சத்து மிக்க உணவு உண்டு
நன்றாக உறங்கி எழுந்தாலே முகப்பரு ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர்
நிபுணர்கள்.
இஸ்லாமிய இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் குடி பழக்கதிற்கு அதிகமாக
அடிமையாகிவிட்டனர் நம்மை தொடர்பு கொண்ட சகோதரர்கள் திருமங்கலத்தில்
[காளி]குடிப்பதை போட்டோ எடுத்துவுள்ளோம் என்றுகூற அதிர்ந்துபோனேனோம் இதே
நிலைமைதான் எல்லா முஸ்லிம் ஊர்களில் இதே நிலை நிடிக்கிறது இல்லை என்று
மறுக்கிறீர்களா உங்க ஊருக்குபக்கத்தில் இருக்கும் டாஸ்மார்க் கடையை
கண்காணித்தால் உண்மை யை உணர்ந்து கொள்வீர்கள் இந்தநிலை தொடர்ந்தால்
சமுதாயம் அழிவைநோக்கி செல்லும் என்பதை யாரும் தடுக்க முடியாது இறைவன் தான்
இவர்களை காப்பாற்ற வேண்டும் ஆய்வு செயிதபின் தான் எழுதுகிறோம் தற்போதைய
நிலைமையை ஒரு சகோதரி தெளிவாக சொன்னார் என்னிடம் யாராவது ஆண்களை
[மாப்பிள்ளையை ]பார்க்க வந்தவர்கள் விசாரித்தால் என்ன சொல்வோம் என்று கூற
நாம் அதிர்ந்து போனோம் இவைகளிடம் இருந்து விடுபட்டால் சமுதாயம் முன்னணி
சமுதாயமாக திகழும் என்பதில் சந்தேகம்இல்லை குடி மக்களை கொஞ்சம் கொஞ்சமாகக்
கொல்லும் ஒரு விஷமருந்தை தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனை
செய்து, அதன் மூலம் குடும்பத் தலைவர்களைக் கொன்று குடும்பத் தலைவிகளை
விதவையாக்கி வருகிறது.நீதிமன்றங்கள் கூட கடுமையான தீரப்பை வழங்கிவுள்ளது
வெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே
மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்தக்
குடிநோயின் அறிகுறிகள் என்னென்ன? இந்தப் புதைகுழிக்குள் விழாமல் இருப்பது
எப்படி? தப்பித்தவறி விழுந்துவிட்டவர்கள் குடியின் ஆக்டோபஸ் பிடியிலிருந்து
மீண்டு வருவது எப்படி? குடிநோயிலிருந்து ஒருவர் மீண்டுவர சொந்தமும்
நட்பும் எப்படி உதவ முடியும்? அடுக்கடுக்காகப் பிறக்கும் அத்தனை
கேள்விகளுக்கும் வல்லுநர்களிடம் விடை உண்டு. ”ஆரம்பத்தில் வெறும் ஆசை,
நண்பர்களின் வற்புறுத்தலுக்காக மது அருந்துவார்கள்; பின்பு அதில் தொடர்ந்து
நாட்டம் ஏற்பட்டு குடிக்க ஆரம்பிக்கிறார்கள். நாளடைவில், இன்னும் அதிக
அளவில் குடித்தால்தான் போதை ஏற்படும் என்கிற நிலை உருவாகும். எங்கே,
எப்படிக் குடிக்கலாம் என்று மதுவைப் பற்றிய சிந்தனைதான் அதிகமாக இருக்கும்.
இவையே ஆரம்பக்கட்ட நிலை. அடுத்து, குடிப்பதைக் கட்டுப்படுத்தவோ,
மதுவின் அளவைக் குறைக்கவோ முடியாது. வற்புறுத்தலின்பேரில் சிறிது காலம்
நிறுத்துவதுபோல் இருந்துவிட்டு, மறுபடியும் அதிகமாகக் குடிப்பார்கள்.
கோபம், வெறுப்பு, சண்டை, இவையே இடைப்பட்ட காலகட்ட நிலை; தொடர்ந்து
அதிகமாகக் குடிப்பது, குடிப்பதற்காகக் கடன் வாங்குவது, பொய் பேசுவது,
திருடுவது, குடிக்கத் தடுப்பவர்களை அடிப்பது, காரணமே இல்லாமல் மனைவியின்
நடத்தையைச் சந்தேகிப்பது என நிலைமை விபரீதமாகும். ‘குடித்தால்தான்
சிறிதளவேனும் செயல்பட முடியும்’ என்கிற உச்ச நிலை உருவாகும். இவைதான் தீவிர
இறுதிக்கட்ட நிலை” தவறான முறையில் புரிந்து அடிமையாகி விடுகின்றனர்
”ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடே இல்லாமல் குடிப்பவர்களில் யாருக்கு
வேண்டுமானாலும் குடிநோய் வரலாம். குடிப்பவர்களில் 10 முதல் 20
சதவிகிதத்தினர் மதுவுக்கு அடிமையாகிவிடுகின்றனர். ரத்தத்தில் 20 மில்லி
கிராம் ஆல்கஹால் கலந்தாலே பார்வைத் திறன் குறையும். 30 மில்லி கிராம் என்ற
அளவைத் தொட்டால் தசை தன் கட்டுப்பாட்டை இழக்கும். சிந்திப்பது,
புரிந்துகொள்வது, மதிப்பிடும் தன்மை குறைவது என்று சங்கிலித் தொடர்போல்
எல்லாம் பாதிக்கப்படும். உடல் அளவிலும் மன அளவிலும் குடிக்கு
அடிமையாகிவிடுவதால் வாழ்க்கையில் பலவிதமான பிரச்னைகள் ஏற்பட்டாலும்கூட
குடிப்பதை அவர்களால் நிறுத்த முடியாது. ஏனெனில், குடியை நிறுத்தும்போது கை
நடுக்கம், தூக்கமின்மை, மனச்சோர்வு, சிந்திக்கும் திறனில் பாதிப்பு, பயம்,
பிரமை, நரம்புத் தளர்ச்சி, உணர்ச்சி இன்மை என்று பல்வேறு பாதிப்புகள்
உருவாகும். கணையத்தில் ரணம், தோல் தொடர்பான வியாதிகள், தாம்பத்திய
வாழ்க்கையில் பிரச்னை, ஊட்டச்சத்துக் குறைபாடு, வயிற்றுப்புண், ஜீரணசக்தி
குறைதல், புற்றுநோய் அபாயம், கல்லீரல் வீக்கம், மஞ்சள்காமாலை, இதயத்
துடிப்பில் மாற்றம், ரத்தக் குழாய்கள் பாதிப்பு, இதய தசைகள் பழுதடைதல்
என்று உடலின் எந்த உறுப்பையும் இந்தக் குடிநோய் விட்டுவைக்காது.
குடித்தவுடன் மூளை செயல்படும் திறனும் உடனடியாகக் குறைவதோடு நிரந்தரப்
பாதிப்புகளுக்கும் உள்ளாகும். மதுவின் தாக்கத்தில் கார் அல்லது பைக்
ஓட்டுகிறவர் தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளாக இதுவே காரணம்” . இவர்களை
எப்படி மீட்டு எடுப்பது? என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன?
முதலில் உடல் பரிசோதனை செய்யப்படும். தொடர்ந்து மது அருந்தியதால்
ஏற்கெனவே உடலில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கும், நன்றாகப் பசித்து
சாப்பிடவும், ஆழ்ந்து தூங்குவதற்கும் வழிசெய்யும் சிகிச்சை முறைகள்
மேற்கொள்ளப்படும். இரண்டாவது கட்டமாக மனரீதியாக சிகிச்சை அளிக்கப்படும்.
மது அருந்தாமல், மகத்தான வாழ்வு வாழும் வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளல்,
குடியால் ஏற்படும் பாதிப்புகளை உணர்தல், வாழ்வின் உன்னதத்தை
அறிந்துகொள்ளுதல், குரூப் தெரபி, மீண்டு நல்லபடியாக வாழ்பவர்களுடனான
கலந்துரையாடல், ஆலோசனை எனப் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படும். உள்நோயாளியாகச்
சிகிச்சை முடிந்து சென்ற பிறகும், தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு
ஆலோசனைகள், மருந்துகள், பிரச்னைகளைச் சமாளிக்க வழிகள் எனச் சிகிச்சை
முறைகள் தொடரும். பழைய சகவாசத்தால் சிலர் மறுபடியும் குடிக்க நேரிடலாம்.
திரும்பவும் குடிக்க ஆரம்பித்த இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டும்
குடிப்பவருக்கு குற்ற உணர்வு இருக்கும். இந்தச் சமயத்தில் குடும்பத்தினர்
மறுபடியும் சிகிச்சைக்கு அழைத்து வந்துவிட்டால் அவர்களை எளிதில்
மீட்டுவிடலாம். ஒருவர் குடிநோயில் இருந்து மீண்டு, நல்ல வாழ்க்கை வாழ
வேண்டும் என்று மற்றவர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், ‘விடுபட வேண்டும்’
என்ற உறுதியான எண்ணம் குடிப்பவருக்கும் இருக்க வேண்டும். சிகிச்சை முடிந்து
சென்ற பிறகும், அதே வேலை, சூழல், சமுதாயம், குடிகார நண்பர்கள்
இருக்கத்தான் செய்யும். நமக்காக எதுவும் மாறியிருக்கப்போவது இல்லை. மாற
வேண்டியது குடிநோயாளிதான்” குடிநோயிலிருந்து ஒருவரை மீட்டெடுப்பதைவிட
அந்தப் புதைக்குழிக்குள் ஒருவர் விழாமல் காப்பாற்றுவது புத்திசாலித்தனம்.
அதனால், குடிபோதைபற்றிய விழிப்பு உணர்வைப் பள்ளிகள், கல்லூரிகளில் இருந்தே
தொடங்க வேண்டும். அப்படி செய்தால்தான் ஓர் ஆரோக்கியமான சமூகத்தை நம்மால்
கட்டமைக்க முடியும்! போதை ஏறினால்… பாதை மாறினால்…
உலகிலேயே விபத்துகளில் முதலிடம். இந்த மரணங்களில் பெரும்பாலானவற்றுக்கான
காரணம்… மதுப்பழக்கம்! (அதீத வேகத்தால் நேரும் விபத்துகள் 24 சதவிகிதம்
என்றால் மதுவால் நேரும் விபத்துகள் 40 சதவிகிதத்துக்கும் அதிகமாம்). மது
‘உள்ளே’ சென்றவுடன் உடலில் அப்படி என்னதான் செய்கிறது?
”நாம் உண்ணும் உணவு சிறுகுடலால் உட்கிரகிக்கப்பட்டு, அதன் பிறகு
கல்லீரலில் போய் பல்வேறு பொருட்களாகப் பிரிந்து ரத்தத்தில் கலக்கும்.
இதேபோலதான் மதுவும் கல்லீரலுக்குச் சென்று அசிட்டால்டிஹைடு, அசிட்டிக்
ஆசிட், கார்பாக்ஸிலிக் ஆசிட் எனும் மூன்று பொருட்களாக உடைந்து ரத்தத்தில்
கலக்கிறது. இவை மூன்றும் மூளையின் முக்கியப் பகுதிகளைப் பாதிக்கின்றன. இதன்
தொடர்ச்சியாக கிளர்ச்சியான மனநிலை, அதிக சந்தோஷம், குழப்பம்,
சுயநினைவிழப்பு என்று பல்வேறு கட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடக்கும்.
இப்படிக் குழப்பச் சூழல் ஏற்படும்போதோ, சுயநினைவை இழக்கும் தருணத்திலோதான்
வண்டி ஓட்டுகையில் விபத்து நேரிடுகிறது. குறிப்பாக, நம்முடைய மூளையில்
கட்டுப்பாடு மற்றும் உணரும் திறன் இருக்கிற கார்டெக்ஸ் பகுதி
பாதிக்கப்படுவது முக்கியக் காரணம். எந்த வேகத்தில் ஓட்ட வேண்டும் என்பது
ஸ்பீடா மீட்டர் பார்க்காமலேயே நமக்குத் தெரிந்திருக்கும். அதற்குக் காரணம்,
கார்டெக்ஸுக்குள் இருக்கும் ஓர் ஒழுங்குமுறையானது நம்மை வழிநடத்திக்கொண்டே
இருப்பதுதான். ஆனால், மது அருந்திய பிறகு இந்தக் கட்டுப்பாடு போய்விடும்.
எல்லோரும் ஓர் ஒழுங்கில் வண்டி ஓட்டிக்கொண்டு இருக்கும்போது, மது
அருந்தியவர் மட்டும் தாறுமாறாக ஓட்டுவதால், விபத்து நடந்துவிடுகிறது. மூளைக்குள்
ஒரு செல் இன்னொரு செல்லுக்குத் தகவல்களை அனுப்பும் நியூரோ
ட்ரான்ஸ்மீட்டர்கள்பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்த நியூரோ
டிரான்ஸ்மீட்டரில் குளுட்டோமைன், காபா என்று இரண்டு நல்ல, கெட்ட தூதுவர்கள்
இருக்கின்றனர். ஆல்கஹால் அருந்தாதவர்களுக்கு குளுட்டோமைன் என்ற நல்ல
நியூரோ தூதுவர்கள் அதிகமாகச் செயல்படும்; காபா தூதுவர்களின் செயல்கள்
குறைவாக இருக்கும். ஆல்கஹால் அருந்தியவர்களுக்கு இது தலைகீழாக மாறிவிடும்.
குழப்பங்களும், விபத்துகளும் நடக்க இந்தக் காபா முக்கியக் காரணம். மது
அருந்திவிட்டு விபத்துக்குள்ளாவதோடு, விபத்துக்குப் பிறகு மருத்துவமனையில்
அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதிலும் நிறைய சிரமங்கள் இருக்கின்றன. எந்தத்
தகவலையுமே பெற முடியாமல் சுய நினைவற்ற ஒருவருக்கு மருத்துவர் சிகிச்சை
அளிக்க வேண்டி இருக்கும். அதனால், முதலில் அவருக்கு என்ன பாதிப்பு, வேறு
ஏதேனும் குறைபாடுகள் இருக்கின்றனவா, எப்படி விபத்துக்குள்ளானார்… போன்ற
விபரங்களைக் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கத் தாமதமாகும். அதேபோல், மது
அருந்திவிட்டு அடிபட்டவருக்குப் பக்க விளைவாக வலிப்பு போன்ற வேறு
பாதிப்புகளும் வரலாம். இதோடு, அவர் குணமாவதும் பாதிக்கப்படும்!” பாதிக்கப்பட்ட
இளைஞர்களுக்கு… குடிக்கும் நேரம் வரும்போது, மனதை ஒருநிலைப்படுத்தும்
வகையில் தியானம், பிரார்த்தனை அல்லது மனதை மாற்றும் வகையில் மனைவி, குடும்ப
உறுப்பினர்களுடன் நேரத்தைச் செலவிடுவது, பொது இடங்களுக்குச் செல்வது,
விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடலாம். ஆரோக்கியமான
பொழுதுபோக்குகளையும் நல்ல நண்பர்களின் நட்பையும் உருவாக்கிக்கொள்ள
வேண்டும். எந்தச் சூழலில், யார் குடிக்கக் கூப்பிட்டாலும், மதுவை
அருந்தக் கொடுத்தாலும் ‘வேண்டாம்’ என்று திடமாகக் கூற வேண்டும். பெற்றோர்களின்
கவனத்துக்கு… நட்பை கவனிக்கவும், நண்பர்கள் யார் என்ற தெரிந்து
வைக்கவும் . பார்ட்டி, ஃபங்ஷன் என்று நேரம் கழித்து வரும் மகனைக்
கண்டிப்பாகக் கூர்ந்து கவனிக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.
வாய் குளறுதல் மற்றும் மது வாடை வந்தால் நல்ல நிலையில் இருக்கும்போது
அவருடன் பேசுங்கள், மதுவால் வரும் கேடுகளை எடுத்துச் சொல்லி, உங்களுடைய
கனிவான கண்காணிப்பில் அவர் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். கூடுமானவரை
பிள்ளைகளின் கையில் அதிகப் பணப்புழக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்வது
அவசியம். நட்பு வட்டாரத்தினால், மகன் பாதை மாறுவது தெரிந்தால், ஒரிரு
வாரங்கள், குடும்பத்துடன் வெளியூர்களுக்கு சுற்றுலா செல்வது பலன் தரும்.
புதிய இடமும் மாறுபட்ட சூழலும் இதற்கு உதவியாக இருக்கும். மனம் விட்டு
பேசுவதும் மகத்தான பலனைத் தரும். வெளியூரில் படிக்கும் மகனாக இருந்தால்,
அடிக்கடி அவனிடம் போனில் பேசுவது, அந்த ஊரில் இருக்கும் அக்கறையுள்ள
குடும்ப நண்பர்களைப் போய் பார்க்கச் சொல்வது, ‘நாங்கள் உன் அருகில்தான்
இருக்கிறோம்’ என்று அடிக்கடி அவருக்கு உணர்த்துவது… இவையெல்லாம் அவருக்குள்
பெற்றோர் மீதான அன்பு கலந்த மரியாதையை ஏற்படுத்தும்; தவறான செயல்களுக்கு
அடிமையாகாமல் இருக்க உதவும். மதுவை மறப்போம்! மதுவை ஒழிப்போம்! “மது
தீமைகளின் தாய்” – நபிகள் நாயகம் ஒரு நல்லவன் மது அருந்த
ஆரம்பித்துவிட்டால் அணைத்து தீமைகளையும் செய்ய
ஆரம்பித்துவிடுவான்,கத்துவது, வெட்கத்தை இழப்பது, ஆடுவது, பாடுவது, பெண்களை
செக்ஸ் எண்ணத்தோடு பார்ப்பது, நண்பர்களோடு அல்லது மற்றவர்களோடு
வேண்டுமேன்றே சண்டைக்கு போவது,வாகனத்தை வேகமாக ஓட்டுவது,நபிகள் நாயகம் “மது
தீமைகளின் தாய்” என்று சொன்னது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது. ஆதலால்
தான் இறைவன் இந்த மதுவை மனித குலத்துக்கு தடை செய்தான்மதுவை வாங்குவதும்
விற்பதும் பரிமாறுவதும் உற்பத்திசெய்வதும் கொண்டுசெல்வதும் அனைத்தும்
இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளன. அனைவருக்கும் தண்டனை உண்டு. அனைவரும்
பாவத்தில் சமமானவர்கள். அனைவரும் சபிக்கப்பட்டவர்கள்.இதே போல்தான்
வட்டியும் இறைவன் இந்த மனித குலத்துக்கு தடை செய்தான். வட்டி
வாங்குவதும் கொடுப்பதும் அதற்கு சாட்சியாக இருப்பதும் அனைத்தும்
இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளன. அனைவருக்கும் தண்டனை உண்டு. அனைவரும்
பாவத்தில் சமமானவர்கள். அனைவரும் சபிக்கப்பட்டவர்கள் வட்டியினால் பல
குடும்பங்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனமதுவையும் வட்டியையும் ஒழிக்க
வேண்டிய அரசாங்கமே அதை நடத்தினால் குடி குடியைக் கெடுக்கும், இது
அனைவரும் ஒப்புக் கொள்ளும் உண்மை.மக்களை இந்த உண்மையை உணர வைத்து அவர்களை குடியை விடச்செய்வதே
அறிவுள்ளவர்கள்செய்யும்
நல்ல முயற்சி. தென்னை மரத்திலிருந்துதானே கள் வருகின்றது, தென்னை மரத்தைவெட்டி
வீழ்த்தி விட்டால், கள் குடி ஒழிந்துவிடும் என்று
தென்னை மரங்கள்அனைத்தையும்
வெட்டி வீழ்த்துபவனை அறிவாளி என்று அறிவாளிகள் சொல்ல மாட்டார்கள்.மாறாக, தென்னை
மரத்தைக் கொண்டு மக்கள் பெறும் நல்ல பல பலன்களை இழக்க நேரிடும்என்பதே உண்மையாகும். குடிகாரன் தென்னை மரத்திலிருந்து கள் கிடைக்கவில்லைஎன்பதற்காகக் குடியை விடப்போவதில்லை.
ஸ்பிரிட்டைக் காய்ச்சிக் குடிக்கஆரம்பிப்பான். அவனுக்கு வேண்டியது போதை. அந்தப் போதையை எப்படி
எல்லாம் பெற்றுக்கொள்ள
முடியுமோ அப்படியெல்லாம் பெற்றுக் கொள்ள முயல்வான். குடியை ஒரு போதும்விடமாட்டான். இதேபோல் மூட்டைப் பூச்சி
தொல்லைத் தாங்கமுடியவில்லை என்பதற்காகவீட்டைக் கொளுத்தி விட்டு காட்டில் போய் அவதிப்படமாட்டான்
அறிவுள்ள மனிதன்.வீட்டிலிருந்து
கொண்டே மூட்டைப்பூச்சித் தொல்லையைப் போக்க உரிய வழியையே பார்ப்பான். எனவே மதங்களுக்கு அப்பாற்பட்டள்ள, நீங்கள் மதங்கள் மூடநம்பிக்கையை வளர்க்கிறது என்பதில் ஆழ்ந்த
நம்பிக்கையுமுள்ளநீங்கள்
உங்களின் இம்முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள். இஸ்லாம் அறிவுப்பூர்வமானதாஎன்று வினவுவதற்குமுன் உங்கள்
நம்பிக்கையும் நிலைபாடும் அறிவுப்பூர்மானதா என்பதைசற்று நிதானத்துடன் சிந்தியுங்கள்.
மக்களின் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புகளுக்கு டாஸ்மாக்
நிறுவனமே காரணமாக உள்ளதென சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு காட்டமாக
விளாசியுள்ளார்.
கடலூரைச் சேர்ந்த பாலமுருகனின் பழுதடைந்த இரண்டு சிறுநீரகங்களையும்
மாற்ற 5 லட்ச ரூபாய் செலவாகும் என்று போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை
சொல்லிவிட்டது. டாஸ்மாக் நிறுவனத்திடம் சுகாதார திட்டத்தின் கீழ் உதவி
கேட்டுள்ளார் பாலமுருகன். மருத்துவ சிகிச்சை திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக
ஒரு லட்ச ரூபாய் மட்டுமே கொடுக்க முடியும் என்று டாஸ்மாக் நிர்வாக
இயக்குனர் கூறிவிட்டார்.
இதனை எதிர்த்து பாலமுருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு, “எதிர் மனுதாரரான டாஸ்மாக்
இயக்குனர், பாலமுருகன் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சைப் பெற வேண்டும்
என்று கூறியுள்ளார். சிகிச்சையளிக்கும் ஆஸ்பத்திரியை இயக்குனர் முடிவு
செய்ய முடியாது. மருத்துவ சிகிச்சை தொகை பெறும் விவகாரத்தில்
உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழிகாட்டியுள்ளது. எனவே டாஸ்மாக் நிறுவனம்
உச்சவரம்பை தீர்மானிக்க முடியாது. சிகிச்சைக்கான 5 லட்ச ரூபாயை டாஸ்மாக்
நிறுவனம் கொடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.
அதோடு மட்டும் நீதிபதி நிறுத்தவில்லை. மதுவை மக்களுக்கு விற்று
அவர்களின் ஈரல், சிறுநீரகம் பாதிக்கப்படுவதற்கு டாஸ்மாக் மறைமுகக் காரணமாக
உள்ளது என்று கூறியுள்ளார். முன்பு தனியார் வசமிருந்த மது தயாரிப்பு
மற்றும் விற்பனையை 2003 ஆம் ஆண்டு முதல் அரசே ஏற்றுக் கொண்டது. ஒவ்வொரு
மாவட்டத்திலும் ஆளும் கட்சியினரும், தொழில் அதிபர்களும் மதுக்கடைகளை
ஏலத்தில் எடுத்து பல கோடிகளை சுருட்டி வருகின்றனர். 2003&ல் அன்றைய
அதிமுக அரசு, மது விற்பனை உரிமையை தமிழ்நாடு வாணிபக் கழகத்துக்கு
வழங்கியது. அது முதல், தொடர்ந்து மது விற்பனை தாறுமாறான வளர்ச்சி கண்டு
வருகிறது. அது பற்றிய வருவாய் விபரத்தை சட்டமன்றத்தில், மதுவிலக்கு
ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் நத்தம் விசுவநாதன்
தெரியப்படுத்தியிருக்கிறார்.
சுமார் 3639 கோடி லாபத்தில் தொடங்கிய மது
விற்பனை வருவாய் 9 ஆண்டுகளில் 18 ஆயிரம் கோடியை தாண்டிவிட்டது அரசு துறை
நிறுவனம் ஒன்று பெரிதாக வளர்ந்துள்ளது என்று யாரும் பெருமை கொள்ள முடியாது.
இந்த வருமானம் அரசாங்கத்தை சக்திப்படுத்தலாம். ஆனால் குடிமக்களின் சக்தியை
அது உறிஞ்சிவிடுகிறது.
குடி மக்களை கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும்
ஒரு விஷமருந்தை தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனை செய்து, அதன்
மூலம் குடும்பத் தலைவர்களைக் கொன்று குடும்பத் தலைவிகளை விதவையாக்கி
வருகிறது. ஒருபுறம் பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவதாக அரசு
கூறினாலும், டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் பல பெண்கள் தங்கள் குடும்பத்
தலைவர்களை இழக்கவும் முழு காரணமாகி வருகிறது. எனவே தமிழக அரசு டாஸ்மாக்
மதுக்கடைகளை ஒழித்து ‘குடி’ மக்கள் குடியிலிருந்து விடுபட அனைத்து
முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்மென்பதே சமூகநல ஆர்வலர்களின்
விருப்பமாகும்.
இருதயத்திற்கான இரத்த ஓட்டம்
பாதிக்கப்பட்டால் ஹார்ட் அட்டாக் (Heart Attack) என்று சொல்கிறோம். அதே
போல் மூளையின் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டால் அதை ப்ரைன் அட்டாக் (Brain
Attack) என்று அழைக்கிறோம். தமிழில் வாத நோய் அல்லது பக்கவாதம் என்று
அழைக்கப்படுகிறது.
வாதநோய் எனப்படும் வியாதி வயதானவர்களுக்குத்
தான் ஏற்படும் என்பது மக்களிடையே உள்ள கருத்தாகும். இது ஒரு விதத்தில்
சரியானதாக இருந்தாலும் இந்த வியாதி, காரணத்தைப் பொறுத்து, எந்த வயதிலும்
ஏற்படலாம். மாறிவரும் வாழ்க்கை நடைமுறைகள், பணியில் / குடும்ப
வாழ்க்கை யில் ஏற்படும் மன அழுத்தம் ஆகியவற்றால், இளவயதினருக்கும் வாத நோய்
ஏற்பட ஆரம்பித்துள்ளது.
வாதநோய் என்றவுடன், இத்துடன் வாழ்க்கை
முடிந்துவிட்டது என்பது போன்ற அபிப்பிராயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது
இந்நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க, நோயின் கடுமையைக் குறைக்க /
குணப்படுத்த பரிசோதனை உபகரணங்கள், மருந்துகள், அறுவை சிகிச்சை ஆகிய முறைகள்
உதவி செய்கின்றன.
வாத நோய் என்றால் என்ன?
நம் உடலில்
உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் / பாகத்திற்கும் மூளையில் ஒரு ஸ்விட்ச் உள்ளது.
அந்த ஸ்விட்ச் பழுதாகும் பொழுது அந்த குறிப் பிட்ட உடல் பாகம் செயல்
இழந்து விடுகிறது (Paralysis). இரத்தக் குழாய் சம்பந்தப் பட்ட வியாதியினால்
இந்த செயல் இழப்பு ஏற்படும்போது அதை வாதநோய் என்கிறோம்.
இந்த
நொடியில் நன்றாக இருக்கும் மனிதனுக்கு அடுத்த நொடியில், அடுத்த சில
நிமிடங்களில் செயல் இழப்பு ஏற்படுகிறது. இந்த விரைவுத் தன்மையினால்தான்
இந்த வியாதியை 'ஸ்ட்ரோக்' என்றும் சொல்கிறோம்.
இரத்த ஓட்டம்
தடைப்படுவதற்கான காரணங்கள் (இரத்தக் குழாய் அடைப்பு, இரத்தக் குழாய் கசிவு)
மூளையின் குறிப்பிட்ட பகுதிக்குச் செல்லும் இரத்தக் குழாயில் திடீரென
அடைப்பு ஏற்படலாம் (Ischemic Stroke). இந்த அடைப்பு என்பது, வயது
முதிர்ச்சியினால் இரத்தக் குழாயில் ஏற்படும் பாதிப்பு ஆகும். அல்லது
இரத்தத்தில் ஏற் படும் மாற்றங்களாலும் இரத்தக் குழாயின் உட்பக்கத்தில்
அடைப்பு ஏற்பட லாம் (Thrombotic). அல்லது வெளி உறுப்புகள், உதாரணமாக
இருதயத்தில் இருந்து இரத்தத் துகள்கள் சென்று மூளையில் இரத்தக் குழாயை
அடைக்கலாம் (Embolic).
சில சமயங்களில், வயது முதிர்ச்சியினால்
ஏற்படும் இரத்தக் குழாய் மாற் றங்கள் அல்லது அதிகமான இரத்த அழுத்தம் (High
Blood Pressure) காரண மாக மூளையில் இரத்தக் குழாய் பலவீனமாகி, நைந்து போய்,
இரத்தக் கசிவு ஏற்படலாம் (Heamorrhagic Stroke).
வாதநோய்
ஏற்படுவதற்கான காரணங்கள் (Risk Factors)
உயர் இரத்த அழுத்தம்,
சர்க்கரை வியாதி, இருதய வியாதிகள், இரத்தத்தில் அதிகமான கொழுப்பு அளவு,
புகை பிடித்தல், மதுப்பழக்கம், உடல் பருமன் போன்றன.
வாதநோயின்
அறிகுறிகள்
இந்த நோய் எல்லா வயதினரையும் பாதிக்கலாம் என்றாலும்
வயது முதிர்ந் தவர்களை அதிகம் பாதிக்கிறது. முதல் நாள் இரவில் நன்றாகத்
தூங்க ஆரம்பிக் கும் மனிதன், அடுத்த நாள் அதிகாலையில் உடலில் ஒரு பக்கம்
செயல் இழந் திருப்பதையும் சில சமயம், சுய நினைவு அற்ற நிலையில்,
உறவினர்களால் கண்டுபிடிக்கப்படுவதையும் பார்க்கிறோம். இருப்பினும், எந்த
நேரத்திலும் செயல் இழப்பு ஏற்படலாம்.
பேச்சுக் குழறல், திடீர்
தலைவலி, கண்பார்வை திடீரென மங்குதல், உடலில் ஒரு பக்கம் மரத்துப் போதல்,
தலை சுற்றல் ஆகியவை மற்ற அறிகுறிகளாகும். மேலே சொல்லப்பட்ட சில அறிகுறிகள்
தற்காலிகமானவை ஆகும். உடன் சிகிச்சை அளிக்கப்பட்டால் வாத நோயில் இருந்து
விடுபடலாம். மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்ட உடனேயே, காலம் தாழ்த்தாமல்
மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். ஆரம்பத்திலேயே சிகிச்சையை
ஆரம்பித் தால் உயிரிழப்பைத் (Mortality) தடுக்கவும், உடல் ஊனத்தை
(Morbidity) குறைக்க வும் வாய்ப்புள்ளது.
வாதநோயை
உறுதிப்படுத்துவதற்கு தேவையான பரிசோதனைகள்
வாதநோய் பல்வேறு
காரணங்களால் ஏற்படுவதால், குறிப்பாக என்ன கார ணத்தினால் ஒருவருக்கு
ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்தால்தான் அதற் கேற்ப சிகிச்சை அளிக்க
முடியும். சிறுநீர் பரிசோதனை, இரத்த அணுக்கள் பரிசோதனை, இரத்தம்
உறையும் தன்மையைக் கண்டறிதல், இரத்தத்தில் சர்க்கரை, உப்பு மற்றும்
கொழுப்பின் அளவுகள், மார்பு எக்ஸ்ரே (Xray Chest), இருதய சுருள் படம்
(ECG), எக்கோ கார்டியோ கிராம் (Echo cardiogram), C.T. ஸ்கேன், MRI ஸ்கேன்,
மூளைக்குச் செல் லும் இரத்தக் குழாய்களின் அடைப்பைக் கண்டுபிடிக்க உதவும்
கலர் டாப்ளர் (Colour Doppler) மற்றும் ஆஞ்சியோ கிராம் (Angiogram) போன்ற
பரிசோதனைகளில் மருத்துவர், நோயாளி யைப் பரிசோதனை செய்துவிட்டு, தேவைக்கேற்ப
சிகிச்சைகளை முடிவு செய்வார்.
வாத நோய்க்கான சிகிச்சை முறைகள்
முன்னேறி வரும் மருத்துவத் துறையில் எல்லா நோய்களுக்கும் புதிய
சிகிச்சை முறைகள் இருப்பதுபோல், வாத நோயை குணப்படுத்து வதற்கும் புதிய
சிகிச்சை முறைகள் உள்ளன. எனவே இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கான
சிகிச்சை என்பது, நோயாளி மருத்துவமனைக்கு வந்த உடனேயே ஆரம்பித்து
விடுகிறது. சுயநினைவில்லாமல் வரும் நோயாளிகளுக்கு, இரத்த அழுத்தம்,
இரத்தத்தில் சர்க்கரை அளவுகள் ஆகியவற்றை சில வினாடிகளில் தெரிந்துகொண்டு,
உயிரைக் காப்பாற்றுவதற்கான அனைத்து சிகிச்சை முறைகளும்
மேற்கொள்ளப்படுகின்றன. நோயாளியின் நாடித் துடிப்பு, இரத்த அழுத்தம், இரத்த
ஓட்டம், சுவாசம் ஆகியவை சீர்செய்யப் படுகின்றன.
இதற்கிடையே C.T.
மூளை ஸ்கேன் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படு கிறது. இதன்மூலம் மூளையில்
இரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு உள்ளதா? இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதா?
என்பதைக் கண்டுபிடித்து, அதற்கேற்றாற்போல், அடுத்த கட்ட சிகிச்சைகள்
செய்யப்படுகின்றன. இரத்தக் குழாய் அடைப்பு ஏற்படும் நோயாளிகளை, அதன் முதல்
அறி குறிகள் தெரிந்து மூன்று மணி நேரத்திற்குள், அதற்குரிய சிகிச்சை
மையங்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்த் தால், C.T. மூளை ஸ்கேன் செய்யப்பட்டு,
அடைப்பு உறுதி செய்யப்பட்டு மருந்துகள் மூலம் அடைப்பைக் கரைப்பதற்கு
Thrombolysis என்னும் சிகிச்சை அளிக் கப்படுகிறது.
இரத்தக் கசிவு
ஏற்படும் நோயாளிகளுக்கு, கசிவு அதிகமானால் அல்லது பெரிய இரத்தக்குழாய்
அடைப்பு ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம். போன்ற
நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்படலாம். மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்ட முதல் நாளில் இருந்து பிஸியோதெரபி (Physiotherapy)
எனப்படும் முடநீக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
வாத நோய் வராமல்
தடுப்பதற்கான வழிமுறைகள்
நமது இயந்திரத்தனமான வாழ்க்கையினால்
உடல் நலத்தைப் பேணக் கூடிய சில அடிப்படை விடயங்களைக் கூட நம்மால் செய்ய
முடி வதில்லை. வேகமான நடைப்பயிற்சி (Brisk Walking) மற்றும் உடற்பயிற்சிகள்
மிகவும் அவ சியம். இவை நம் மூளைக்கும் இதயத்திற்கும் புதுத் தெம்பைக்
கொடுக்கின்றன.
உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவை அடங்கிய நார்ச்சத்து உள்ள உணவுகளை
உண்ணுவது நல்லது. கொழுப்பு குறைவான உணவுகளை உண்ண வேண்டும். சர்க்கரை நோய்
மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், மாதம் ஒரு முறையாவது
மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, இவற்றைக் கட்டுப்பாட் டுக்குள்
வைத்துக்கொள்ளவேண்டும்.
மன அழுத்தம் குறைவதற்கு தியானப்
பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இரவில் குறைந்தபட்சம் தடையில்லாத 6 மணி நேரத்
தூக்கம் அவசியம்.
மூளை என்பது ஒரு Super Computerயை விட
நுணுக்கமானது. அது நமக்கு இயற்கை அளித்த வரப்பிரசாதம். மேலே விளக்கப்பட்ட
வகைகளில் நம் வாழ்க்கை நடைமுறைகளை நெறிப்படுத்திக்கொண்டு, மூளையை நல்ல
முறையில் இயங்கச் செய்வது நமது கடமையாகும்.......... BY;-> MY DREAM
DOCTOR.
உங்களுக்கு உள்ளாகவும் (பல
அத்தாட்சிகள் இருக்கின்றன அவைகளை) நீங்கள் ஆழ்ந்து கவனித்துப் பார்க்க
வேண்டாமா?' அல்குர்ஆன் (51:21)
...
'நாம்தாம் அவர்களைப் படைத்தோம்; நாம்தாம் அவர்களுடைய அமைப்பையும்
உறுதிப்படுத்தினோம்' அல்குர்ஆன் (76:28)
'திட்டமாக நாம்
மனிதனை மிக்க மேலான வடிவத்தில் படைத்தோம்' அல்குர்ஆன் (95:04)
மேற்கண்ட வசனங்கள் மனிதனாகிய நம்முடைய படைப்பு நம்முடைய அமைப்பு, நம்முடைய
அவயங்களின் மீது அல்லாஹ் தன் முத்திரையை பதித்திருப்பதை, இது போன்ற
வசனங்கள் குர்ஆன் நெடுக காணமுடிகிறது.
தன்னை அறிந்து கொண்டவன்
அல்லாஹ்வை அறிந்து கொண்டான்: இந்த கட்டுரை மூலம் ஒரு சில அவயங்களின் புள்ளி
விபரங்களையும், சில அவயங்களின் பணிகளையும் மிகச் சொற்பமாகவே சுட்டிக்
காட்டியுள்ளோம்.
அதுவும் 100 புள்ளிகளில். ஒவ்வொரு அவயத்தின்
படைப்பின் நுட்பத்தை நவீன விஞ்ஞானத்தின் மூலம் காணும் போது படைத்த
அல்லாஹ்வே புகழுக்குரியவன், என நம் வாய்முணு முணுக்கிறது அத்தனை
ஆச்சரியங்களையும் எழுதி முடித்துவிட முடியாது.
உதாரணத்திற்கு,
நமது மூளையைப் பற்றி நவீன விஞ்ஞானம் அறிந்து கொண்டது மிகமிக சொற்பமானது
தான் இன்னும் தெரியாத புரியாத விளங்கிக் கொள்ள முடியாத விநோதங்கள் ஏராளம்,
ஏராளம். 1. மனிதன் இறந்தபின் அவனது ஜீரண உறுப்புகள் தொடர்ந்து 24 மணி
நேரம் வரை செயல்படுகிறது. அவனது எலும்பு தொடர்ந்து 4 நாட்களை வரை
செயல்படுகிறது. தோல் தொடர்ந்து 5 நாட்;கள் வரை பணி செய்கிறது. கண் மற்றும்
காது தொடர்ந்து 6 மணி நேரம் பணி செய்கிறது தசைகள் ஒரு மணி நேரம்
செயல்படுகிறது. அவனது சிறுநீரகம் தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படுகிறது. ஆக
அவனது ரூஹ் (உயிர்) பிரிந்தாலும் அவனது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள்
நிறுத்தப்படவில்லை. 2. மனித உடலிலுள்ள பாஸ்பரசைக் கொண்டு 20 ஆயிரம்
தீக்குச்சிகள் செய்யலாம், கார்பனைக் கொண்டு 900 பென்சில்களை உருவாக்கலாம்,
கொழுப்பைக் கொண்டு 7 பார் சோப்புகளை செய்யலாம், மனித உடலின் இரும்பைக்
கொண்டு 2 அங்குல ஆணி ஒன்று செய்யலாம்.. மனித உடலில் அதிகமாக காணப்படும்
தாதுப்பொருள் கால்சியம்.
3. உயிர்வாழ உடலுக்குத் தேவை 13
வைட்டமின்கள். நம் வாழ்நாளில் 50 டன் உணவுப் பொருளையும் 11 ஆயிரம்
காலன் திரவத்தையும் உட்கொள்கிறோம். 4. உடலில் பொட்டாசியம் அளவு 70
சதவீதமாக குறைந்துவிட்டால் அசதி, சோர்வு, வாந்தி, வயிற்றுப் போக்கு
ஏற்படும்.
5.மனிதமூளை 80 முதல் 85 சதவீதம் தண்ணீரைக் கொண்டதாகும்.
6. பெண்களை விட ஆண்களுக்கு மூளை மிகப்பெரியது. பெண்களை விட சுமார் 4000
உயிரணுக்கள் ஆண்கள் மூளையில் இருக்கிறது. 7. மூளையின் 100கோடி
நியூரான்கள் நமக்கு 4 வயதுக்குள் கிடைத்துவிடும். 8. மூளையின்
மடிப்புகளே அறிவு கூர்மையை தீர்மானிக்கிறது. 9. மூளை அதிகமாக வேலை
வாங்கும் மனித உறுப்பு கட்டை விரல்கள். 10. நமது நரம்பு மண்டலம் தான்
மூளைக்குத் தகவல்களை அனுப்புகிறது. அது ஒரு நிமிடத்திற்கு 6 லட்சம்
தகவல்களை அனுப்புகிறது. 11. மனிதன் சிந்திக்கும் வேகம் நிமிடத்திற்கு
500 சொற்கள் என்றும் பேசும் வேகம் நிமிடத்திற்கு 100 சொற்கள் என்றும்
கணக்கிடப்பட்டுள்ளது. 12. மூளையின் கனபரிமாணம் 1500 கன சென்டி மீட்டர்.
13. முளையின் நிறம் பழுப்பான நீலநிறம். 14. மனித மூளையில் தாமிரத்தின்
அளவு 6கிராம் ஆகும். 15. மூளை 65 சதவீதம் கொழுப்பு பொருளால் ஆனது.
16. மனித உடலில் அதிக செல்களால் உருவான பகுதி மூளை, மூளையின் வெளிப்பகுதி
மட்டுமே 8 பில்லியன் செல்களால் உருவானது. 17. ஒரு மனிதன் 35 வயது
அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன. 18.
நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது. 19. நமது
மூளை 80% நீரால் ஆனது. 20. நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில்
அதிகமாக இருக்கும். 21. மண்ணீரலில் சுரக்கும் ஒரு வகை நீர் ரத்தத்தில்
கலந்து மூளைக்குச் சென்று சிறிய அறைகளைப் பாதிக்கிறது. இதனால் தான்
மனிதனுக்கு கோபம் வருகிறது. 22. இதயத்தை, சிறுநீரகத்தை, கல்லீரலை,
முழங்காலை மாற்றலாம். ஆனால் மூளையை மட்டும் மாற்றவே முடியாது. காரணம்
ஞாபங்கள், நினைவுகள், எதிர்காலத்தில் மாற்ற முடிந்தாலும், மாற்றப்பட்டவன்
வேற்று மனிதன் தான் அவன் அந்நியன் தான். 23. மூளையில் ஏற்படும் வலியை
நம்மால் உணரமுடியாது. ஆனால் மற்ற உறுப்புகளின் வலியை உணர்த்துவது மூளையே.
24 மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை
துடிக்கிறது. 25. ஓர் ஆணின் இதயத்தைவிட பெண்ணின் இதயம் அதிகமாக
துடிக்கிறது. 26. நம் இதயத்தின் எடை 10 அவுன்ஸ் தான். அவரவர் கைவிரல்
5யையும் பொத்திப் பார்த்தால் என்ன அளவு இருக்குமோ அதே அளவு தான் அவரவர்
இதயம் இருக்கும். 27. இதயம் ஒரு நாளைக்கு சுமார் 1லட்சம் தடவை லப்டப்
செய்கிறது. வருடத்திற்கு 4 கோடி தடவை. உங்க வயதை 4கோடியால் பெருக்கிப்
பாருங்கள். இறைவனின் பேரருள் தெரியும்.
28.நமது தலையின் எடை 3.175
கிலோகிராம். 29. மனிதனின் மண்டை ஓடு அவனது 80- ஆம் வயது வரை
வளர்கிறது. 30. நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடிதான். 31.
உடலில் உண்டாகும் உஷ்ணம் வெளியேறிவிடாமல் தடுக்கவே ரோமம் உள்ளது. 32.
மனித உடலில் 50 லட்சம் முடிக் கால்கள் உள்ளதாகவும், பெண்களின் முடியை விட
ஆண்களின் முடி வளர்ச்சி விரைவானது என்றும் அறியப்படுகிறது. 33. நம்
தலைமுடி 1 லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை உள்ளன. அவை 1 மாதத்திற்குள்
1-1/4 செ.மீ. வளர்கின்றன. 34. தலைமுடி 2 வருஷத்திலிருந்து 4 வருஷம் வரை
வளர்கிறது. அதன்பின் 3 மாதம் வளராமல் இருந்து உதிர்கிறது. அப்புறமாக புது
கேசம் வளர்கிறது. 35. மனித முகங்களை மொத்தம் 520 வகைகளுக்குள்
அடக்கிவிடலாம். 36. மனித நாக்கின் நீளம் 10 செ.மீ. 37. நமது
நாக்கில் சுவை உணரும் மொட்டுக்கள் 9000 உள்ளன. 38. மனிதனுக்கு 3 வகையான
பற்கள் உண்டு.
39. தானாக மூச்சை அடக்கி தனக்குத்தானே மரணம்
ஏற்படும்படி செய்ய எவராலும் முடியாது. 40. நம் மூக்கில் வாசனையை
நுகரும் செல்கள் 50 லட்சம் உள்ளன. ஆனால் நாயின் மூக்கில் 22கோடி நுகரும்
செல்கள் உள்ளன. அதனால் மோப்ப சக்தி அதிகம் இருக்கிறது…
41. நன்கு
வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன்
குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன்
வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது.
42. நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது. 43. மனித உடலில்
மிகவும் கடினமான பாகம் தாடை எலும்பு. நமது உடலில் உறுதியான எலும்பு தொடை
எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது. 44. மனித உடலில் 33
முள்ளெலும்புகள் உள்ளன. 45. நமது உடலின் நீளமான எலும்பு தொடை எலும்பு
தான். 46. நம்முடைய தலை ஒரே எலும்பால் உருவானது அல்ல, 22 எலும்புகளில்
உருவானதாகும். 47. எலும்புகளின் துணை இன்றி தானே அசையும் தசை. நாக்கு.
48. கண்கள் உலர்ந்து போகாமலிருக்க இரண்டு வகையான ஈரம்
தேவைப்படுகிறது. கண் இமைகள் தான் நம் வைப்பார்கள். அவற்றின் விளிம்பில் 30
சுரப்பிகள் உள்ளன. கண்சிமிட்டும் போதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம்
அலம்புகின்றன. அழுது கண்ணீர் விடும்போது கண் விழிமேல் இருக்கும்
சுரப்பிகளிலிருந்து கண்ணீர் சப்ளை ஆகிறது. 49. நாம் 6 விநாடிக்கு ஒரு
முறை கண்களை இமைக்கிறோம். சாதாரணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள்
கண்களை இமைக்கிறோம். 50. கண்களில் உள்ள லென்ஸ் ஆயுள் முழுவதும் வளரும்.
51. நம் ஒவ்வொரு கண்ணிலும் 6 தசைகள் உள்ளன. 52. நமது கண்களின் எடை
சராசரியாக 28 கிராம். 53. நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை
பிரித்தெரியும் சக்தியுண்டு. 54. நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும்
தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு. 55. முதல் 8 வாரம் வரை
குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.
56. நமக்கு இரண்டு கால்கள்,
இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள் ஒரே அளவாக
இருப்பதில்லை காரணம் கருவில் சிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரே சீராக
வளர்வதில்லை. இந்த மிகச் சிறிய வித்தியாசம் தான் நம்மை அழகுபடுத்திக்
காட்டுகிறது. நம் இடதுகால் செருப்பை விட வலதுகாலின் செருப்பு வேகமாக
தேய்வது கூட இந்த சிறு வித்தியாசத்தால் தான். 57. நமது கைகளில்
நடுவிரலில் நகம் வேகமாகவும், கட்டை விரலில் நகம் மெதுவாகவும் வளர்கின்றன.
நம்முடைய உடல் பாரத்தால் கைவிரல் நகத்தைவிட கால்விரல் நகம் மெதுவாக
வளர்கிறது.
58. நம் இரத்தத்தில்; சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 127
நாட்கள் தான் அதன் பிறகு அது மடிந்துவிடும். புது சிவப்பணுக்கள் உருவாகும்.
இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள். 59. மனித
உடலில் இருக்கும் இரத்தம் 30 அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும். 60. 70
வயது வரை வாழும் ஒரு மனிதனின் இதயம் 250 கோடி தடவை துடிக்கிறது. ஒரு
பம்பின் செயல்பாட்டிற்கு ஒப்பிட்டால் இதயம் ஒரு நாளைக்கு 18 ஆயிரம் லிட்டர்
ரத்தத்தை பம்ப் செய்கிறது. இதயம் சீராக துடிக்க பொறாமை, கெட்ட சிந்தனை
இவைகளை விட்டொழித்தால் போதும், உயிர்வாழும் ஆண்டுகள் அதிகரிக்கும். 61.
உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி மட்டுமே. 62. மனித உடலில் 97,000
இரத்த நாளங்கள் உள்ளன. 63. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் இரத்த
சிவப்பணுக்கள் உள்ளன. 64. இதயத்திலிருந்து புறப்பட்ட இரத்தம் உடல்
முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும் இதயத்திற்குத் திரும்ப
எடுத்துக் கொள்ளும் நேரம் 30 செகண்டு ஆகும். 65. இரத்தத்தில் 300 கோடி
வெள்ளை அணுக்கள் உள்ளன. 66. 70 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 5600
மில்லிலிட்டர் ரத்தம் உடம்பிலிருக்கும். 67. இரத்தம் சுமார் 97,000
கிலோ மீட்டர் நீளமுள்ள இரத்த நாளங்களிலிருந்து இதன் வழியே நிமிடத்திற்கு 70
தடவை செல்கிறது. 68. நமது மொத்த உடல் எடையில் 12% இரத்தம் ஆகும்.
தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.
69. ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1
மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது. 70. நமது
உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த
தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.
71.
பகலில் 8 மில்லிமீட்டர் சுறுங்கி இரவில் 8 மில்லி மீட்டர் உயர்ந்து
விடுகிறோம். காரணம் பகலில் நமது வேலைகள் செய்யும் போது தண்டு வடத்திலுள்ள
குறுத்தெலும்பு வட்டுகள் ஈர்ப்பு விசை காரணமாக அழுத்துகின்றன. இதனால் உயரம்
குறைகிறது. இரவில் எவ்வித விறைப்புத்தன்மையும் இல்லாமல் படுத்து
உறங்குவதால் நமது உடம்பின் உயரம் கூடுகிறது. 72. நாம் இரவில் தூங்கும்
போது அசையாமல் தூங்குவதில்லை, சுமார் 40 முறை அந்தப் பக்கம்,
இந்தப்பக்கமாகப் புரண்டு படுக்கிறோம். 73. நாம் படுத்திருக்கும் போது 1
நிமிடத்திற்கு 9 லிட்டர் மூச்சுக்காற்றும் உட்கார்ந்திருக்கும் போது 18
லிட்டர் மூச்சுக்காற்றும், நடக்கும் போது 1 நிமிடத்திற்கு 27 லிட்டர்
மூச்சுக்காற்றும் தேவைப்படுகிறது. 74. ஆரோக்கியமான மனிதன் 7
நிமிடங்களில் தூங்கி விடுகின்றான். 75. ஒரு மனிதன் தன் தாழ்நாளில் 23
வருஷம் தூங்குகிறான் 76. நம் உடலில் சுமார் 20 லட்சம் வியர்வை
சுரப்பிகள் இருக்கின்றன. அவை ஒரு நாளில் சராசரியாக 5 லிட்டர் முதல் 6
லிட்டர் வியர்வையை வெளிப்படுத்துகின்றன. 77. நமது உடலிலுள்ள செல்கள்
பிரிந்து இரண்டாகும் தன்மையுடையது. ஒரு நாளைக்கு நம் உடலில் 60 கோடி
செல்கள் இறந்து புது செல்கள் பிறக்கின்றன. 78/ பெண்களைவிட ஆண்களுக்கு
40 சதவீதம் கூடுதலாக வியர்க்கிறது. 79. நம் உள்ளங்கைகளில் ஒவ்வொரு சதுர
அங்குலத்திலும் 3000 வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. 80. ஒரு மனிதன்
தினமும் 2 லிட்டர் எச்சிலை ஊறச் செய்கிறான். 1.14லிட்டர் வியர்வை
வெளியிடுகிறான்.
81. நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும்
பெண்களுக்கு 300 நாட்களில் குழந்தை பிறக்கிறது. 28 நாட்களுக்கு ஒரு முறை
மாதவிடாய் ஆகும். பெண்களுக்கு 280 நாட்களில் குழந்தை பிறக்கிறது. இதுதவிர
மாதவிடாய் பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறப்பும் சற்று
முன்னாடியே (குறை பிரசவம்) அமைந்து விடுகிறது. பெண்கள் இது விஷயத்தில்
கவனம் கொள்ள வேண்டும்.
82. நம்முடைய உடல்தோலின் பருமன் மிகக்
குறைந்தபட்சம் ½ மில்லி மீட்டர் கண்ணிமைகளிலும், அதிகபட்சமாகப் பருமன் 4
முதல் 6 மில்லி மீட்டராக உள்ளங்கைகளிலும், அடிப்பாதங்களிலும்
அமைந்திருக்கிறது. 83. மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல். 84.
மனித உடலின் தோலின் எடை 27 கிலோ கிராம். 85. நமது தோலின் பரப்பளவு
சுமார் 20 சதுரஅடிகள். 86.நம் உடல் தசைளின் எண்ணிக்கை 630. 87. ஓர்
அடி எடுத்து வைக்க உடலெங்கும் 54 தசைகள் பணிபுரிய வேண்டியுள்ளது. 88.
நமது நுரையீரல் 3 லட்சம் துவாரங்களையும் இரத்த குழாய்களையும் கொண்டதாக
இருக்கிறது. இவைகளின் நீளம் 2400 கி.மீ. உள்ளது.
89. நம்
நுரையீரலில் உட்புறம் அமைந்துள்ள 'ஆலவியோலி' என்னும் சிறிய காற்று அறைகளின்
எண்ணிக்கை மட்டுட் 30 கோடியாகும் புகைப்பிடித்தல் கூடாது.
90.
மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.\
91.
ஆட்ரினல் சுரப்பி அளவுக்கு அதிகமாக நீரை சுரக்கத் தொடங்கிவிட்டால் ஆணுக்கு
பெண்குணமும், பெண்ணுக்கு ஆண்குணமும் ஏற்படும். 92. பெண்கள்
கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை
விரிவடைகிறது. 93. ஒரு பெண் பிறக்கும் போதே அவள் சுமார் 3-½ லட்சம் கரு
முட்டைகளோடு தான் பிறக்கிறாள். இந்த முட்டைகளை ஒரு டீஸ்பூனில் 10 லட்சம்
நிரப்பலாம். 94. பெண்களுக்கு வாழ்நாளில் மாத விடாய் சுமார் 375 முறை
ஏற்படுகிறது. 95. ஒரு முறை வெளியாகும். ஆணின் விந்தில் 30 கோடி
உயிரணுக்கள் வரை இருக்கும் 96. நமது சிறு நீரகத்தில் பத்து
லட்சத்திற்கும் மேற்பட்ட வடிகட்டிகள் இருக்கின்றன. (இவைகள் ஊறுகாய்,
உப்புக்கருவாடு, ஆல்கஹால் போன்றவற்றால் பாதிப்படைகிறது.)
96. நம்
நகம் தினமும் 0.1 மில்லி மீட்டர் வீதம் வளர்கிறது. நம் நகம் தினமும் 0.1
மில்லி மீட்டர் வீதம் வளர்கிறது. நாம் ஒரு பொருளை இறுக்கிப்பிடிக்க
நம்கட்டை விரலிலுள்ள 3 தசைகள் தான் பெரும் பங்கு அளிக்கிறது. மனிதனை ஒத்த
உருவம் கொண்ட சிம்பன்ஸி குரங்கிற்கு இந்த 3 தசைகள் கிடையாது.
97.
மனிதன் பயன்படுத்தும் சொல் தொகுதி 5000 முதல் 6000 வார்த்தைகள் தான்.
சாதாரண மனிதன் முதல் விஞ்ஞானிகள் வரை சராசரியாக இவ்வளவு வார்த்தைகளைத்தான்
பயன்படுத்துகிறார்கள். சிந்தனையின் வேகம் அல்லது ஒரு யோசனையின் தூரம் என்று
சொல்லுகிறோம் இந்த தூரம் 150 மைல்களாகும்.. நாம் பேசக்கூடிய வார்த்தைக்கு
72 தசைகள் வேலை செய்ய வேண்டும். பேச்சை குறைத்தால் சாதனைகளை நிகழ்த்தலாம்.
98. நாள் ஒன்றுக்கு நீங்கள் 23,040 தடவை சுவாசிக்கிறீர்கள். உள்
வாங்கும் காற்றில் ஆக்ஸிஜன் குறைவாகி கார்பன்டை ஆக்சைடு அதிகமாகிவிட்டால்
உபரியாக காற்றை உள்வாங்க கொட்டா...வி விடுகிறோம்
99. மனிதனின்
உடலிலுள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை 46 (23 ஜோடி)
100.
மணிக்கட்டிலிருந்து நடுவிரல் நுனிவரை உள்ள நீளமும், மேவாய் கட்டையிலிருந்து
நெற்றி உச்சி வரை உள்ள நீளமும் எல்லாருக்கும் சமமாக இருக்கும்.
அல்லாஹ்! நீயே மகத்துவமானவன்; நீயே சிறந்த படைப்பாளன்: நீயே சிறந்த
பாதுகாவலனும் கூடSee
More
ஆகாஷ்
டேப்லெட்டைத் தயாரி...த்த டேட்டாவிண்ட் தன்னுடைய புதிய உபிஸ்லேட்
வரிசை டேப்லெட்டுகளைக் களத்தில் இறக்குகிறது. இதில் உள்ள விசேஷம்
என்னவென்றால் இந்த உபிஸ்லேட் டேப்லெட்டுகள் தமிழ், ஹிந்தி, மராத்தி,
பஞ்சாப் மற்றும் மற்ற இந்திய மொழிகளை சப்போர்ட் செய்யும் வகையில் களமிறக்க
இருக்கிறது. அதற்காக டேட்டாவிண்ட் பெங்களூரைச் சேர்ந்த ரிவேரியே லாங்குவேஜ்
டெக்குனாலஜிஸ் பிரைவேட் லிமிட்டட் என்ற நிறவனத்துடன் வர்த்தக ஒப்பந்தம்
செய்திருக்கிறது.
இந்த ஒப்பந்த்தைப் பற்றி டேட்டாவிண்டின் தலைமை
மேலாளர் திரு. சுனித் சிங் துளி கூறும் போது இந்த ஒப்பந்தம் பற்றி
மகிழ்வதாகக் கூறுகிறார். மேலும் பல மொழிகளில் இந்த டேப்லெட் வரும் போது
ஆங்கிலம் தெரியாத பல மக்கள் தங்கள் சொந்த தாய் மொழியில் டேப்லெட்டை
இயக்கலாம் என்று கூறுகிறார்.
இந்த உபிஸ்லேட் டேப்லெட்டை
வாடிக்கையாளர்கள் தங்களது சொந்த மொழிகளில் பயன்படுத்தலாம். அதற்கான தொழில்
நுட்பங்களை இந்த டேப்லெட் கொண்டு வருகிறது. அதனால் உபிஸ்லேட்
வாடிக்கையாளர்கள் பரமானந்தம் அடைவார்கள் என்பதில் ஐயமில்லை.
சமீபத்தில் டேட்டாவிண்ட் உபிஸ்லேட் 7சி என்ற புதிய டேப்லெட்டை களமிறக்கி
இருந்தது. இந்த டேப்லெட் ஆகாஸ் 2 டேப்லெட்டின் வர்த்தக டேப்லெட்டாகவும்
கருதப்பட்டது. ஆன்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர் ப்ரீடு இயங்கு தளம் மற்றும்
கோர்ட்டெக்ஸ் எ8 – 800 மெகா ஹெர்ட்ஸ் ப்ராசஸருடன் இருக்கும் இந்த டேப்லெட்
ரூ.3999க்கு விற்கப்படுகிறது.
குறைந்த விலையில் இந்த டேப்லெட்
இருந்தாலும் வைபை மற்றும் ஜிபிஆர்எஸ் இணைப்புகளைக் கொண்டிருக்கிறது. 3
மோடம்களையும் சப்போர்ட் செய்கிறது. மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்,
யுஎஸ்பி போர்ட் போன்ற வசதிகளும் இந்த டேப்லெட்டில் உண்டு. மேலும் இதன் 7
இன்ச் திரை 800 x 400 பிக்சல் ரிசலூசனுடன் கப்பாசிட்டிவ் தொடு வசதியை
அளிக்கிறது.
இப்போது இந்த டேப்லெட் பல மொழிகளில் வரும் போது
இன்னும் சூப்பராக இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.
வாசனைத்திரவியம் (PERFUME) - இதை நம்மில் விரும்பாதோர் யாரும்
இருக்கமுடியாது.சிலருக்கு சில மணம் பிடிக்கலாம்,அல்லது பிடிக்காது
போகலாம்,ஆனால் ஏதாவது ஒரு மணத்தில் மனங்கொள்ளாத மனிதன் இருக்கவே முடியாது.
அப்படிப்பட்ட வாசனையை அள்ளிக்கொடுக்கும் திரவியத்தில், முஸ்லிம்களில்
சிலருக்கு சில சங்கடங்கள் இருப்பதை உணரமுடிகிறது. அதாவது ஆல்கஹால். இது
போதைப்பொருளாயிற்றே... அது கலந்திருக்கும் இந்த திரவியத்தை பயன்படுத்தலாமா?
என்று.. என்னப்பா இதெல்லா ஒரு விஷயமா? என்ன அத ஒடச்சு வாயிலயா
ஊத்துரீங்க.. போதை வர்ரதுக்கு எனும் கேள்வியோடு, படிப்பவர்கள் எம்மை
எதிர்நோக்கலாம்... ம்ம்..
இந்தக் கேள்வியின் ஆதி இஸ்லாத்துடன் இழைகிறது... ஒரு பொருள்
குறித்து, ஒரு தடையோ, சட்டமோ இருக்க...அப்பொருள் சார்ந்த பிற பொருட்களும்
தடைசெய்யப்பட்டவையா அல்லது அனுமதிக்கப்பட்டவையா? என கேள்வி
எழுப்புவதும்,அதை தெளிவுபடுத்திக்கொள்வதும் முஸ்லிம்களுக்கு அவசியமான
ஒன்றுதான். இந்தக் கேள்வியும், பயன்படுத்தலாமா? என்ற அச்ச நிலையும்
யாரைக்குறித்தும் வருவதில்லை..நம்மைப் படைத்த இறைவன் இது தொடர்பான ஒன்றை
தடைவிதித்திருக்க நாம் அறியாமல் அதைப் பயன்படுத்தி அவனுக்கு மாறு
செய்துவிடக்கூடாதே என்பதால்தான்... இறை பக்தி, இறை அச்சத்தால்தான்...
சரி விஷயத்துக்கு வருவோம்! வாசனைத்திரவியங்கள்
பெரும்பாலானவை ஆல்கஹால் கலந்து செய்யப்படுபவையாக இருக்கக்
காண்கிறோம்.ஆல்கஹால், வாசனைத் திரவியங்களில்
முக்கியமாக கரைப்பானாகவும், எளிதில் ஆவியாகவும், காற்றில் இலகுவாக
கலக்கவும், இன்னும்
சில பயன்பாடுகளின் அடிப்படையில் ஆல்கஹால் வாசனைத்திரவியங்களில்
பயன்படுத்தப் படுகிறது.
ஆல்கஹால்
என்பது மிகவும் அறியப்பட்ட போதைப்பொருள் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
இஸ்லாம் போதைக் பொருள்களை கடுமையாக, வேரும் வேர்சார்ந்த மண்ணோடும்
தடைசெய்திருக்கும் நிலையில், இப்படிப்பட்ட ஆல்கஹால் நாம் பயன்படுத்தும்
வாசனைத் திரவியங்களில்
இருக்க.. இவை நமக்கு அனுமதிக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுகிறது..
மது
தடை குறித்த சில வசனங்களையும் ஹதீஸ்களையும் பார்த்துவிட்டு, அதனடிப்படையில்
இந்த
விடயத்தை அணுக நமக்கு ஓரு தெளிவு கிடைக்கும் என நம்புகிறேன்.
(நபியே!)
மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்,நீர்
கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது, மனிதர்களுக்கு (அவற்றில்
சில)
பலன்களுமுண்டு, ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள
பலனைவிடப்
பெரியது”. - 2:219
நிச்சயமாக
ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக்
கொண்டும்,
உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டுபண்ணி அல்லாஹ்வின்
நினைவிலிருந்தும்,
தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்துவிடத்தான்.எனவே அவற்றை விட்டும்
நீங்கள்
விலகிக்கொள்ள மாட்டீர்களா?. - 5.91
பேரீச்சை,
திராட்சை பழங்களிலிருந்து மதுவையும், நல்ல ஆகாரங்களையும் நீங்கள்
உண்டாக்குகிறீர்கள்.நிச்சயமாக இதிலும் சிந்திக்கும் மக்களுக்கு ஓர்
அத்தாட்சி
இருக்கிறது. - 16.67
இப்னு
உமர் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(என் தந்தை) உமர் ரலி
சொற்பொழிவு மேடையின் மீது நின்று
(இறைவனைப் போற்றிப் புகழ்ந்து) பின் ஐந்து வகைப்
பொருள்களினால் மது
தயாரிக்கப்பட்டுவந்த நிலையில் மதுவிலக்கு வந்தது. அவையாவன: திராட்சை,
பேரீச்சம்
பழம், தேன், கோதுமை, வார்க்கோதுமை. ஆக அறிவுக்குத் திறையிடுவதெல்லாம்
மதுவேயாகும்.
என்று கூறினார்கள்.
ஸஹிஹ்
புஹாரி – 5581 , 5588
ஆயிஷா
ரலி அவர்கள் கூறினார்கள்.
இறைத்தூதர்
ஸல் அவர்களிடம் பித்உ குறித்து கேட்கப்பட்டது.அது தேனால் தயாரிக்கப்படும்
மதுவாகும். யமன்வாசிகள் அதை அருந்திவந்தார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்)
அவர்கள்,
போதை தரும் (மது)பானம் ஒவ்வொன்றும் தடைசெய்யப்பட்டதேயாகும் என்று
கூறினார்கள்.
ஸஹிஹ்
புஹாரி – 5586,5598
அனஸ்
ரலி அவர்கள் கூறியதாவது:
நபி
ஸல் அவர்களிடம் மதுவை சமயல் காடியாக மாற்றுவது குறித்துக்
கேட்கப்பட்டது. அதற்கு
நபி ஸல அவர்கள் இல்லை மாற்றக்கூடாது என்று கூறினார்கள்.- இந்த
ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வருகிறது.
ஸஹிஹ் முஸ்லிம் 4014
வாயில்
பின் ஹுஜ்ர் அல்ஹள்ரமீ ரலி அவர்கள் கூறியதாவது:
நபி
ஸல் அவர்களிடம் தாரிக் பின் சுவைத் அல்ஜுஅஃபீ ரலி அவர்கள் மது
தயாரிப்பதைப்பற்றிக்
கேட்டார்கள்.அப்போது நபி ஸல் அவர்கள் அவ்வாறு மது தயாரிப்பதைத் தடை
செய்தார்கள். அல்லது
அதை வெறுத்தார்கள். அப்போது தாரிக் ரலி அவர்கள் மருந்துக்காகவே அதைத்
தயாரிக்கிறேன் என்று கூறினார்கள். நபி ஸல் அவர்கள் அது மருந்தல்ல நோய்
என்றார்கள். இந்த
ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வருகிறது.
ஸஹிஹ் முஸ்லிம் - 4015
மேற்கண்ட
குர்ஆன் ஹதீஸ் தரவுகளில் இருந்து அதன் சாராம்சமாக நாம் அறியப்பெருபவை:
மது
இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டது.அவற்றில் சில நன்மை இருப்பதை
நியாயப்படுத்தினாலும், அதனாலான தீமை அதை மிகைப்பதால் மது தடை
செய்யப்படுகிறது.
வசனம்
16.67 ஆனது மதுவின் போதை மனிதர்களுக்குள் வெறுப்பை ஏற்படுத்துவதாகவும்,
தொழுகையில்
இருந்து தடுத்துவிடுவதாகவும் இருப்பதால் அதனின்று விலகிக்கொள்ளச்சொல்லி
அறிவுறுத்துகிறது.
வசனம்
16.67 ஒரு பொருளில் இருந்து நல்லவையும் கிடைக்கிறது கெட்டவையும்
கிடைக்கிறது. குர்
ஆன் உதாரணப்படுத்தும் பேரீச்சம்பழம் நன்மையைத் தருவதும்,அதில் இருந்தே மது
தயாரிக்கப்ப்படுவதும் இருந்தாலும், நல்லவைகளை அனுமதித்து அதனின்று
வெளியாகும்
கெட்டவை புறக்கணிக்கப்படுகிறது.
ஸஹீஹ்
புஹாரி ஹதீஸ் தரவுகள்அறிவுக்குத்
திறையிடுவதெல்லாம் மதுவேயாகும் என்றும், போதை தரும் (மது)பானம்
ஒவ்வொன்றும் தடைசெய்யப்பட்டதேயாகும்
என்றும் தெளிவுபடுத்துகிறது.
ஸஹீஹ்
முஸ்லிம் ஹதீஸ் தரவுகள் மதுவை சமையல் பொருளாக மாற்றுவதற்கும்,இன்னும்
மருந்தாக
பயன்படுத்துவதற்கும் கூட தடை செய்யப்பட்டதை தெளிவாக்குகிறது.
மேற்சொன்னவற்றில்
இருந்து அறியவருவது என்னவென்றால்,போதை அளிக்கும் ஒவ்வொன்றும்
தடைசெய்யப்பட்டதே.அது
குடிபானமாக,அல்லது வேறுவிதமாக என எப்படி மனிதன் எடுத்துக்கொண்டாலும் அது
போதை
தருவதாக இருப்பின் முழுக்க முழுக்க தடைசெய்யப்பட்டது. இப்படியான
போதைப்பொருள்களை
மருந்தாக பயன்படுத்த விதிவிலக்கு இருக்குமா? என்றால் இல்லை.ஏன்? மருந்தாக
உட்கொண்டாலும்,அது போதை தருவதே,அது அறிவுக்குத் திறையிடும் செயலைச் செய்து
கேடு
விளைவிப்பதால், அது மருந்தல்ல நோய் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.
சரி
சமைக்கும் பொருளாக! என்றால்...ம்ம்ஹும் அதுவும் இல்லை..ஆக போதைவஸ்துக்களை
எந்த
வடிவிலும் மனிதன் உட்கொள்ள அனுமதி அறவே இல்லை.ஒட்டுமொத்தமாக அறிவை மயக்கி
நிலைகுலையச்செய்யும் எதுவும் போதைப்பொருள்தான்..அவை யாவும் தடுக்கப்பட்டது.
அடுத்து
ஒரு மூலப்பொருளில் இருந்து போதைப்பொருள் தயாரித்தால் அது தடைசெய்யப்பட்டது.
ஆனால்
அதே பொருளில் இருந்து உணவுப்பொருள் தயாரித்தால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
உதாரணமாக
திராட்சை, பேரீச்சம்பழம்.
சரி
இப்போது நாம் பயன்படுத்தும் வாசனைப்பொருள்களில் கலக்கப்படும் ஆல்கஹால்
பற்றி
பார்ப்போம்..
ஏன் ஆல்கஹால்? வேரெதும் இல்லையா என்றால்..
ஆல்கஹாலை ஒத்த இன்ன பிற திரவங்கள் இருக்கவே செய்கிறது.அவை தனக்கென
குறிப்பிட்ட நிறத்தையும்,மணத்தையும் கொண்டவையாக இருக்க, ஆல்கஹால் மட்டுமே,
எவ்வித நிறமும் மணமும் இல்லாத நீர்மமாக, காற்றில் எளிதில் ஆவியாகிக்
கலக்கும் தன்மை கொண்டதாகவும், விலை குறைவானதாகவும் இருப்பதால் இதற்கு
முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. வாசனைத்திரவியத்தில்
கலக்கப்படும்
ஆல்கஹால் ஆனது எத்தனால் எனும் பொருளை மூலமாகக் கொண்டது. எத்தனாலில்
இருந்தே போதைதரும் மதுவும் வருகிறது,மருத்துவப் பயன்பாட்டிற்கான ஸ்ப்ரிட்
தயாரிக்கப் படுகிறது,எரிபொருள், என பல்வேறு பயன்பாட்டிற்கான பொருள்கள்
கிடைக்கிறது.அவை அனைத்தும் ஆல்கஹால் எனும் பொதுப்பெயருடன்
அழைக்கப்படுகிறது.
இப்படி எத்தனால் எனும் மூலப்பொருளில் இருந்து
கிடைக்கும் பல்வேறு நன்மைகளினூடே மது
எனும் தீமையும் இருக்கிறது.எத்தனாலை பேரீச்சம்பழத்துக்கு ஒப்பாகக்
கொண்டால், அதில்
இருந்து கிடைக்கும் தீதை புறந்தள்ளி,நன்மையை பெரும் பொருட்டு மற்றவைகளை
பயன்படுத்திக் கொள்கிறோம்.
அடுத்து,
அப்படி கலக்கப்படும் ஆல்கஹால் ஆனது, போதைக்காக அதில் கலக்கப்படுவதில்லை.
பொதுவாக
இயற்கையில் இருந்து பெறப்படும் வாசனைத்திரவியம் ஆனது எண்ணைவடிவில்
கிடைக்கிறது. இப்படிக் கிடைக்கும் அதிஅடர்வுள்ள எண்ணையானது அத்தர் எனும்
பெயரில் நேரடி பயன்பாட்டிற்கு வருகிறது.இது அதிக செறிவுள்ளதாக இருப்பதால்
ஒரு துளியும் அதிக மணத்தை,நீண்டநேரம் வழங்கு தன்மை கொண்டது.அதில் ஆல்கஹால்
கலக்கப்படாததால்,பொதுவாக அத்தர் பயன்படுத்தலாம், சென்ட் கூடாது என்பர். அதே
எண்ணையைக் கரைத்து இலகுவாக்கவும், எளிதில் பரவக்கூடியதாக்கவும், எளிதில்
ஆவியாகக் கூடியதாக்கவும்,
காற்றில் கலந்து மணம் பரப்பக்கூடிய தன்மை கொண்டதாகவும் மாற்றவே ஆல்கஹால்
கலக்கப்படுகிறது. இப்படியானது உட்கொள்ள தகுதியானதும் இல்லை. அதை நாம்
ஒருபோதும் உட்கொள்வது
இல்லை.இன்னும் அது எந்த ரூபத்திலும் மனித உடலுக்குள் செல்வதும் இல்லை.
அதனால் வெளிப்படும்
வாசமானது போதை தரக்கூடியதாகவும் இல்லை.
இப்படிப்பட்ட
ஆல்கஹாலை போதை வஸ்துக்களில் கீழ் கொண்டுவர
எவ்வித சாத்தியமும் இல்லை.வாசனைத்திரவியமாகப் பயன்படுத்துவது மேற்கண்ட குர்
ஆன் ஹதீஸ் தரவுகளுடன் முரண்படுவதாகவும் இல்லை. அது அறிவை மயக்கி போதை
தருவதும்
இல்லை.
அதனால் வாசனைத்திரவியத்தில் பயன்படுத்தும் ஆல்கஹாலை
மேற்கண்ட குர் ஆன் ஹதீஸ் தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது .அதை
பயன்படுத்துவதில் எவ்வித தவறும் இல்லை..என்ற முடிவுக்கு வரலாம். அல்லாஹ்வே
மிக்க அறிந்தவன்.