Digital Time and Date
Welcome Note
Saturday, May 5, 2012
குழந்தைகளின் பற்களை தாக்கும் நோய்கள்.

மருத்துவ செய்தி.
மனிதன் முக அழகில் மட்டு...ம் அல்ல உடல் நலத்திலும் முக்கிய பங்கு வகிப்பது பற்கள். சிலருக்கு பற்கள் முன்பக்கமாக நீண்டும் வரிசையாக இல்லாமலும் இருக்கும்.
இதன் காரணமாக அவர்களது முக அழகு சிதைந்து விடும். இதனால் ஏராளமானோர் தன்னம்பிக்கை இழந்து வாழ்வில் எதையும் சாதிக்க முடியாதவர்களாக மாறி விடுகிறார்கள்.
பற்களின் அழகு சிதைந்து போவதற்கு குழந்தை பருவத்தில் அதை முறையாக கவனித்து பராமரிக்காதது தான் காரணம்.
குழந்தை பருவத்தில் இருந்தே பல் குழந்தை நல மருத்துவ நிபுணரிடம் குழந்தைகளை காண்பித்தால், பற்களின் ஆரோக்கியம், அழகு கெடாமலும், பல் சிதையாமலும் பார்த்துக் கொள்ளலாம் என்கின்றனர் பல் மருத்துவ சிறப்பு நிபுணர்கள்.
ஒரு குழந்தையின் பல் வரிசை சரி இல்லாமல் போனால் முக அழகு சிதைந்து விடும். பற்கள் நன்றாக இருந்தால் தான் முகம் அழகுடன் பளிச்சிடும். பல் போனால் சொல் போச்சு என்பது பழமொழி. இதற்கேற்ப குழந்தைகளின் பல் சொத்தையாகி விழுந்து விட்டால் அவர்களால் தெளிவாக பேசமுடியாது.
இதனால் தன்னம்பிக்கை இழந்து விடுவார்கள். குழந்தைகளுக்கு ஒரு சில பற்கள் விழுந்து விட்டாலும் கூட அவர்களால் உணவை நன்றாக மென்று சாப்பிட முடியாது.
இதனால் அவர்களுக்கு அடிக்கடி அஜீரண கோளாறு ஏற்படும். குழந்தையின் சிரிப்பிலும் பல் முக்கிய பங்கு வகிக்கிறது. பல் இல்லாத குழந்தையின் சிரிப்பு அதன் அழகை சிதைத்து விடும்.
குழந்தைக்கு 6 முதல் 7-ம் மாதத்திற்குள் பல் முளைக்க தொடங்கும். 19-வது மாதத்தில் 20 பற்கள் முளைத்து விடும். பல் முளைக்கும் கால கட்டத்தில் தான் குழந்தை கண்ட கண்ட பொருட்களையும் எடுத்து வாயில் வைத்து கடிக்கும். இதனால் நோய் தொற்றி காய்ச்சல், வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படலாம்.
இதனால் பெற்றோர் அந்த சமயத்தில் குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. இல்லா விட்டால் கிருமித்தொற்றால் பல்வேறு நோய்களின் பிடியில் குழந்தை சிக்க நேரிடும். குழந்தையின் பல் விஷயத்தில் பெற்றோர் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
குழந்தைக்கு சாக்லெட், ஐஸ்கிரீம் போன்றவை சாப்பிடும் போது அதில் உள்ள இனிப்பு வாயில் ஒட்டிக் கொண்டால் பல் சொத்தையாகி விடும். எனவே எந்த உணவுப் பொருள் கொடுத்தாலும் சாப்பிட்ட பிறகு குழந்தையின் வாயை நன்றாக கழுவுவது நல்லது.
நொறுக்குத் தீனி சாப்பிடும் குழந்தைகள் தான் அதிக அளவில் பற்களை இழந்து தவிப்பதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவித்துள்ளது. எனவே குழந்தைகள் நொறுக்கு தீனி சாப்பிட்டு முடிந்ததும் குழந்தையின் வாய்க்குள் தண்ணீர் விட்டு கழுவி விடுவது நல்லது.
மனிதன் முக அழகில் மட்டு...ம் அல்ல உடல் நலத்திலும் முக்கிய பங்கு வகிப்பது பற்கள். சிலருக்கு பற்கள் முன்பக்கமாக நீண்டும் வரிசையாக இல்லாமலும் இருக்கும்.
இதன் காரணமாக அவர்களது முக அழகு சிதைந்து விடும். இதனால் ஏராளமானோர் தன்னம்பிக்கை இழந்து வாழ்வில் எதையும் சாதிக்க முடியாதவர்களாக மாறி விடுகிறார்கள்.
பற்களின் அழகு சிதைந்து போவதற்கு குழந்தை பருவத்தில் அதை முறையாக கவனித்து பராமரிக்காதது தான் காரணம்.
குழந்தை பருவத்தில் இருந்தே பல் குழந்தை நல மருத்துவ நிபுணரிடம் குழந்தைகளை காண்பித்தால், பற்களின் ஆரோக்கியம், அழகு கெடாமலும், பல் சிதையாமலும் பார்த்துக் கொள்ளலாம் என்கின்றனர் பல் மருத்துவ சிறப்பு நிபுணர்கள்.
ஒரு குழந்தையின் பல் வரிசை சரி இல்லாமல் போனால் முக அழகு சிதைந்து விடும். பற்கள் நன்றாக இருந்தால் தான் முகம் அழகுடன் பளிச்சிடும். பல் போனால் சொல் போச்சு என்பது பழமொழி. இதற்கேற்ப குழந்தைகளின் பல் சொத்தையாகி விழுந்து விட்டால் அவர்களால் தெளிவாக பேசமுடியாது.
இதனால் தன்னம்பிக்கை இழந்து விடுவார்கள். குழந்தைகளுக்கு ஒரு சில பற்கள் விழுந்து விட்டாலும் கூட அவர்களால் உணவை நன்றாக மென்று சாப்பிட முடியாது.
இதனால் அவர்களுக்கு அடிக்கடி அஜீரண கோளாறு ஏற்படும். குழந்தையின் சிரிப்பிலும் பல் முக்கிய பங்கு வகிக்கிறது. பல் இல்லாத குழந்தையின் சிரிப்பு அதன் அழகை சிதைத்து விடும்.
குழந்தைக்கு 6 முதல் 7-ம் மாதத்திற்குள் பல் முளைக்க தொடங்கும். 19-வது மாதத்தில் 20 பற்கள் முளைத்து விடும். பல் முளைக்கும் கால கட்டத்தில் தான் குழந்தை கண்ட கண்ட பொருட்களையும் எடுத்து வாயில் வைத்து கடிக்கும். இதனால் நோய் தொற்றி காய்ச்சல், வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படலாம்.
இதனால் பெற்றோர் அந்த சமயத்தில் குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. இல்லா விட்டால் கிருமித்தொற்றால் பல்வேறு நோய்களின் பிடியில் குழந்தை சிக்க நேரிடும். குழந்தையின் பல் விஷயத்தில் பெற்றோர் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
குழந்தைக்கு சாக்லெட், ஐஸ்கிரீம் போன்றவை சாப்பிடும் போது அதில் உள்ள இனிப்பு வாயில் ஒட்டிக் கொண்டால் பல் சொத்தையாகி விடும். எனவே எந்த உணவுப் பொருள் கொடுத்தாலும் சாப்பிட்ட பிறகு குழந்தையின் வாயை நன்றாக கழுவுவது நல்லது.
நொறுக்குத் தீனி சாப்பிடும் குழந்தைகள் தான் அதிக அளவில் பற்களை இழந்து தவிப்பதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவித்துள்ளது. எனவே குழந்தைகள் நொறுக்கு தீனி சாப்பிட்டு முடிந்ததும் குழந்தையின் வாய்க்குள் தண்ணீர் விட்டு கழுவி விடுவது நல்லது.
மினிமம் பாலன்ஸ் முறையை கைவிட்டு ஜீரோ பாலன்ஸை அனுமதிக்க எஸ்.பி.ஐ. உத்தரவு
திருநெல்வேலி: அனைத்து சேமிப்பு கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்பு தொகை விதி்முறையை கைவிடுமாறு எஸ்பிஐ உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 17ந் தேதி ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை மறுஆய்வு நடந்தது.
அதில் வங்கி துறையின் பல அதிரடி மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி
வீட்டு கடனை மு்ன் கூட்டியே செலுத்தினால் அபராத வட்டி கூடாது என அறிவிக...்கப்பட்டது.
அடுத்ததாக ஜீரோ பேலன்ஸ் வசதியுடன் சேமிப்பு கணக்கு தொடங்க அனைவரையும்
அனுமதிக்குமாறு ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக
நாட்டின் மிக பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, தனது
கிளைகளுக்கு ஏப்ரல் 25ந் தேதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி எல்லா
வகையான சேமிப்பு கணக்குகளிலும் மினிமம் பேலன்ஸ் விதியை நீக்கிவிடும்படி
உத்தரவிட்டுள்ளது.
இதை உடனடியாக அமுல்படுத்தவும், ஏப்ரல் 25-ந்
தேதிக்கு பிறகு மினிமம் பாலன்ஸ் குறைந்ததாக யாருக்காவது பணம்
பிடித்திருந்தால் அதை மீண்டும் அவர்களது கணக்கில் வரவு வைக்கவும்
சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதங்கள் அனைத்து
மண்டல பொது மேலாளர்களுக்கும் எஸ்பிஐ தலைமை அலுவலகம் அனுப்பியுள்ளது. இனி
சேமிப்பு கணக்குகளுக்கு மினிமம் பேலன்ஸ் விதிமுறை கிடையாது என்று
வாடிக்கையாளர்கள் எளிதில் பார்க்கும் வகையில் அறிவிப்பு பலகையில் இடம் பெற
செய்யவும் எஸ்பிஐ வலியுறுத்தியுள்ளது.See More
திருநெல்வேலி: அனைத்து சேமிப்பு கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்பு தொகை விதி்முறையை கைவிடுமாறு எஸ்பிஐ உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 17ந் தேதி ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை மறுஆய்வு நடந்தது. அதில் வங்கி துறையின் பல அதிரடி மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி வீட்டு கடனை மு்ன் கூட்டியே செலுத்தினால் அபராத வட்டி கூடாது என அறிவிக...்கப்பட்டது. அடுத்ததாக ஜீரோ பேலன்ஸ் வசதியுடன் சேமிப்பு கணக்கு தொடங்க அனைவரையும் அனுமதிக்குமாறு ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக நாட்டின் மிக பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, தனது கிளைகளுக்கு ஏப்ரல் 25ந் தேதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி எல்லா வகையான சேமிப்பு கணக்குகளிலும் மினிமம் பேலன்ஸ் விதியை நீக்கிவிடும்படி உத்தரவிட்டுள்ளது.
இதை உடனடியாக அமுல்படுத்தவும், ஏப்ரல் 25-ந் தேதிக்கு பிறகு மினிமம் பாலன்ஸ் குறைந்ததாக யாருக்காவது பணம் பிடித்திருந்தால் அதை மீண்டும் அவர்களது கணக்கில் வரவு வைக்கவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதங்கள் அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும் எஸ்பிஐ தலைமை அலுவலகம் அனுப்பியுள்ளது. இனி சேமிப்பு கணக்குகளுக்கு மினிமம் பேலன்ஸ் விதிமுறை கிடையாது என்று வாடிக்கையாளர்கள் எளிதில் பார்க்கும் வகையில் அறிவிப்பு பலகையில் இடம் பெற செய்யவும் எஸ்பிஐ வலியுறுத்தியுள்ளது.See More

தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்!

வெளியூர்களுக்கு பயணம் செல்லும்போது, பெரும்பாலோனோர், குடிப்பதற்கு பாட்டில் குடி நீரை உபயோகிப்போம்.
... Aquafina, Kinley, Bislery போன்ற பல்வேறு கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்களை நாம் வாங்கி பயன்படுத்துவோம்.
இதில் எந்த கம்பெனி நல்ல கம்பெனி என்பதை நாம் ஆராய்வதில்லை.
அதோடு இப்பாட்டில்களின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள மர்ம எண்களை நம்மில் பெரும்பாலோனோர் அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை.
அனைத்து குடி நீர் பாட்டில்களின் அடி பாகத்திலும் 1 முதல் 7 வரையிலான எண்களில் ஏதாவது ஒரு எண் பொறிக்கப்பட்டிருக்கும்.இந்
படத்தில் எண்களும் அதற்கான வேதிப்பொருளின் பெயரும் இடம் பெற்றுள்ளது .
இந்த வேதிபொருட்கள் அனைத்துமே நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை.
இந்த பாட்டில்களிலுள்ள நீரை அருந்திவிட்டு எக்காரணம் கொண்டும் அதில் மீண்டும் நீரை நிரப்பி பயன்படுத்தக்கூடாது .
அவ்வாறு பயன்படுத்தினால் உடலுக்கு பெரும் தீங்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது .
கிராமங்களில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாட்டில்களில் குடி நீரை நிரப்பி பள்ளிகளுக்கு தினமும் அனுப்புகிறார்கள்.
இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
மேலும் புதிதாக வாங்கிய குடிநீர் பாட்டில்களையும் வெயில் படும் இடங்களிலும் வைக்கக்கூடாது.
அப்படி வைப்பதால் பாட்டிலின் வேதிப்பொருட்கள் வெகு எளிதில் நீரில் கலந்து விட வாய்ப்புள்ளது. .
இவற்றில் 1, 3, 6 ஆகிய எண்கள் பொறிக்கப்பட்டுள்ள பாட்டில்கள் மிகவும் தீங்கு விளைவிக்க கூடியவை .
ஆகவே இனிமேல் தண்ணீர் பாட்டில் வாங்கும்போது கம்பெனி பெயர் மற்றும் பாட்டிலின் அடியிலுள்ள எண்களையும் கவனித்து வாங்குவது சிறந்தது.
தண்ணீர் காலியானதும், பாட்டிலை, சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் அப்புறப் படுத்துவது அதை விட சிறந்தது.
குர்ஆனில் பேசும் எறும்புகள்:

நபி சுலைமானிடம் பேசிய எறும்பு 27:16-19
(نملة سليمان)
حَتَّى إِذَا أَتَوْا عَلَى وَادِي النَّمْلِ قَالَتْ نَمْلَةٌ يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لَا يَشْعُرُونَ
இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு (எறும்புப் புற்றின்) அருகே அவர்கள் வந்தபோது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) 'எறும்புகளே! உங்கள் குடியிருப்புக்களுக்குள் நுழையுங்கள்! சுலைமானும் அவரது படையினரும் அவர்கள் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக்கூடாது என்று கூறியது. (அல்குர்ஆன்:27:18)
فَتَبَسَّمَ ضَاحِكًا مِّن قَوْلِهَا
அது சொல்வதைக் கேட்டு சுலைமான் புன்னகை சிந்தி சிரித்தார் (அல்குர்ஆன்: 27:19) என்று அருள்மறை கூறுகிறது.
எறும்பு பேசியது:-
அல்லாஹ்வின் அற்புத மறையாம் அல் குர்ஆன் 'எறும்புகள் பேசியதாகவும் அது கேட்டு பறவைகள், உயிரினங்களின் மொழிகளைத் தெரிந்த இறைதூதர் சுலைமான்(அலை) அவர்கள் சிரித்ததாகவும்' இங்கே கூறப்படுகிறது.
அல்லாஹ் தனது படைப்புகளில் அற்பமான எறும்புகள்; பேசியதையும் அதற்கொரு முக்கியத்துவம் அளித்தும் தனது வேதத்திருமறையில் குறிப்பிடுவதாயின் அந்த அரிய படைப்பில் நிச்சயம் பல அதிசயங்கள் அமைந்திருக்கும் என ஆய்வு செய்தபோது நமக்குத் தெரியாத பல உண்மைகள் தெரியவருகின்றன. இப்போது நாம் அதுபற்றி விரிவாகக் காண்போம்.
எறும்பும் அதன் வகைகளும்:
எறும்பு ஒரு குழுவாக வாழும் ஒரு பூச்சியனமாகும். அது உலகின் எல்லாப் பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. அண்மையில் இதுபற்றி ஆய்வு செய்த அறிவியலார் 'உலகில் 11,880 வகையான எறும்பினங்கள் உள்ளதாகக் கண்டு பிடித்துள்ளனர். அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் இவை 90,000-க்கும் மேலிருக்கும் எனக்கூறுகிறார்.இவற்றில் பெரும்பாலானவை வெப்பமுள்ள நாடுகளில் தான் வாழ்கின்றன.
பாதை மாறாது திரும்பும் அதிசயம்:
நாம் ஒரு பதிய ஊருக்கோ நாட்டிற்கோ செல்லும் போது பாதைகளையும் இடங்களையும் தெரிந்து கொள்ள வரைபடமோ வழிகாட்டியோ தேவப்படுகிறது. அது போல இரை தேடச் செல்லும் உயிரினங்கள் பல மைல் தூரம் சென்று விட்டு தமது வசிப்பிடங்களுக்கு எப்படி திரும்பி வந்து சேருகின்றன என்பதை ஆராயும் போது நமக்கெல்லாம் வியப்பாக உள்ளன.ஒவ்வொரு உயிரினங்களுக்கும் ஒவ்வொரு புதுமையான ஏற்பாட்டையும் அறிவையும் அதனுள் அதைப் படைத்த நாயன் அமைத்துள்ளான். இங்கே அவன் எறும்புக்கு என்ன ஏற்பாட்டைச் செய்துள்ளான் எனபதைப் பார்ப்போம்.
துனீசியா நாட்டின் மத்திய தரைக் கடல் பகுதியில் வாழும் ஒருவகை கறுப்பு இன எறும்புகள் (Black Aunts) பாலைவனத்தில் கூடுகள் அமைத்து வாழந்து வருகின்றன. காலையில் சூரியன் உதயமாகி சிறிது நேரத்திற்கெல்லாம் வெப்பநிலை எழுபது டிகிரி சென்டி கிரேடு வரை உயரும் அந்த வெப்பநிலையில் உள்ள பகல் வேளையில் தனக்குத் தேவையான இரையைத்தேடி வீட்டைவிட்டு வெளியேறுகிறது.
அடிக்கடி நின்றும் திரும்பியும் வேகமாக ஊர்ந்து செல்லும் எறும்பு தனது கூட்டிலிருந்து 200 மீட்டர் (655 அடி) பரப்பளவுக்கு வளைந்தும் நெளிந்தும் ஊர்ந்து வெகுதூரம் வரை சென்று விடுகின்றன. பாதைகளை அறிவதற்கு அடையாளமாக அங்கே ஆற குளம் குட்டை ஏரி மரம் கட்டடம் என எதுவுமே இல்லை. அது தேடிய பருப்பொருட்களை சுமந்து கொண்டு என எந்தவகை அடையாளங்களும் இல்லாத பாலைவனத்தில் எப்படி துல்லியமாக தன் வசிப்பிடத்தைக் கண்டுபிடித்து வருகிறது என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
எறும்புகளின் நீளம் உயரம் பருமன் எடை இவைகளை கருத்தில் கொண்டு அவைகள் பயணிக்கும் தூரத்தை கணக்கிட்டு மனித ஆற்றலோடு ஒப்பிடும்; போது அதே பாலைவனத்தில் 35 முதல் 40 கிலோ மீட்டர் தூரம் வரை ஒரு மனிதன் பயணிப்பதற்கு சமமாகும். மனிதனால் நடைமுறையில் சாத்தியமே இல்லாத இந்த அற்புதச் செயலை சாதாரண எறும்புகள் வெற்றிகரமாக செய்து முடிக்கின்றனவே! இது எப்படி ? என சிந்திதாலே தலை சுற்றுகிறது.
கண்களில் திசைகாட்டும் கருவி:
அல்லாஹ் எறும்புகளுக்கு வழங்கியிருக்கும் தனிப்பட்ட உடலமைப்பே இந்த அரிய செயல்களுக்குக் காரணமாகும். எறும்புகளின் கண்களில் பிரத்தியேகமாக திசையை அறியக்கூடிய அற்புதமான ஒரு கருவியை இறைவன் பொருத்தியிருக்கிறான்.
அல்லாஹ்வினால் வழங்கப்பட்டுள்ள இந்த ஆற்றல் மனிதனால் கண்டு பிடிக்கப்பட்ட திசைகாட்டும் கருவியைவிட பன்மடங்கு ஆற்றல் வாய்ந்தது. இந்த சிறப்புமிகு அம்சத்தால் மனிதனால் உணரமுடியாத ஒருவகை கதிர்களை எறும்புகள் உணர்கின்றன. இந்த உணரும் கதிர்களால் வடக்கு தெற்கு என திசைகளை சரியாக அறிந்து கொள்கின்றன. இவ்வாறு திசைகளை அறியும் எறும்புகள் தங்களது கூடுகளையும் தவறாமல் அடையாளம் கண்டு கொள்கின்றன. ஒளியின் குணநலன்களை மனிதன் அறிவதற்கு முன்னரே எறும்புகள் ஒளியைப்பற்றித் தெரிந்து கொண்டு அதனைப் பயன்படுத்திவருவது விந்தையிலும் விந்தையல்லவா? இது அல்லாஹ் வழங்கிய அற்புத ஆற்றல் அல்லவா?
நோய்கிருமிகளைத் தடுக்கும் ஆற்றல்:
மனிதன் தன்னை நோய்கிருமிகளிலிருந்து தடுத்துக் கொள்வதைப்போல மற்ற உயிரினங்களும் தங்களை தற்காத்துக் கொள்ள சில தடுப்பு முறைகளைக் கையாளுகின்றன. அந்த வகையில் எறும்புகள் நோய்கிருமிகளை தடுக்க ஒரு வகை திராவகம் போன்ற திரவப் பொருளை உற்பத்திச் செய்கின்றன. இந்த திரவப் பொருளை தங்களின் உடலில் பரவச் செய்வதுடன் தங்களின் கூடுகளின் சுவர்களிலும் தடவுகின்றன. எறும்புகள் தங்களின் உடலை மட்டுமல்லஇதங்களது வசிப்பிடத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்து வைத்திருக்கின்றன என்பதை அறிய முடிகிறது. இதனை ஆராயும் போது எப்படிப்பட்ட பாதுகாப்பு முறையை இந்த அற்பமான எறும்பினத்தில் அல்லாஹ் அமைத்திருக்கிறான் எனபதை எண்ணி அவன் வல்லமையை உணர்ந்து அவனுக்கு ஒவ்வொரு உயிரினமும் துதி (தஸ்பீஹ்) செய்த வண்ணமுள்ளன என வான்மறை குர்ஆன் கூறுவதை மனிதர்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது மட்டுமா? இன்னும் எத்தனையோ அதிசயங்கள் அவற்றில் உள்ளன.
ஏளனம் செய்தோர் வியந்து நிற்கின்றனர்:
கடந்த காலங்களில் எறும்புகள் ஒன்றோடொன்று உரையாடிக் கொள்கின்றன. மிக நுட்பமான தகவல்களை பரிமாறிக்கொளகின்றன' என்று குர்ஆன் கூறியபோது எள்ளி நகையாடியோர் ஏராளம். 'இவையெல்லாம் கற்பனைகள்' என பரிகாசம் செய்தனர். ஆனால் அண்மையில் எறும்புகளைப் பற்றி வெளியட்டுள்ள ஆய்வுகள் மனிதனை வியக்கவைக்கின்றன.
விலங்குகள் பூச்சிகள் ஆகியவற்றின் வாழ்க்கை முறைகளை ஆய்வு செய்தோர் 'எறும்புகளின் வாழ்கைப் போக்கு மனிதனின் வாழ்க்கை போக்கோடு மிகவும் நெருங்கிய தொடர்புடையவை எனக் கண்டுள்ளனர்.
அவை பின்வருமாறு :-
வியப்பூட்டும் வாழ்க்கை முறைகள்!
1. மனிதர்களைப் போன்றே எறும்புகள் இறந்த உடலகளை மண்ணில் புதைத்து விடுகின்றன.
2. தங்களின் அன்றாடப் பணிகளை மனிதர்களைப் போல் சீராக பங்கிட்டு நிர்வாகங்களை ஒரு திட்டமிட்டுக் கவனித்துக் கொள்கின்றன. மேலாளர்கள் (Managers), மேற்பார்வையாளர்கள் (Supervisors), தொழிலாளர்களை மேலாண்மை செயபவர்கள் ( Foremen) உழைப்பாளர்கள் (Workers) என்று தனித்தனியாக துறைகளை (Departments) வகுத்துச் செயலாற்றுகின்றன.
3. அவ்வப்போது ஒன்று கூடி தங்களிடையே அனைவரும் மகிழ்ச்சியோடு (Chatting) அளவளாவிக் கொள்கின்றன.
4. தங்களுக்கிடையே மிகவும் நவீன முறைகளை கையாண்டு தகவல் பரிமாற்றங்கள் செய்கின்றன.
5. சீரான பொதுச் சந்தைகள் நடத்தி பண்டமாற்றும் செய்து வருகின்றன.
6. வெய்யில் காலத்திலேயே மழைகாலத்திற்குரிய நீண்ட நாள் தேவைக்கான தானிய மணிகளை சேமித்து வைக்கின்றன.
7. தானிய மணிகள் முளைவிட்டு வளரும் போது அவற்றின் அடிவேர்களை அறுத்துவிடுகின்றன. அவ்வாறு அறுக்காது விட்டுவிடின் அவை அழுகிப்போகும் என்பதைத் தெரிந்து வைத்துள்ளன.
8. சேமித்து வைத்திருக்கும் தானியக்களஞ்சியம் மாரிகாலத்தில் ஈரப்பசைமிக்கதாய் மாறிவிடும்போதுஇ அவற்றை வெளியே கொண்டு வந்து சூரிய கதிர் ஒளியில் காயவைக்கின்றன. அந்த தானிய மணிகள் சூரிய ஒளியில் காய்ந்ததும் உடனே உள்ளே கொண்டு சென்று பாதுகாக்கின்றன. ஈரப்பசையால் வேர்விட்டு அழுகிப்போய்விடும் என்ற வேளாண்மை அறிவைப் பெற்றிருப்பது விந்தையிலும் விந்தையல்லவா?
இறைவனின் அருள் வேதம் கூறிய அனைத்தும் இன்று உண்மையாகிவருவது
திருக்குர்ஆன் அல்லாஹ்வின் வேதம்'என்பதற்கு மறுக்க முடியாத சான்றுகளாகும்.
அறியுடையோர் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு அரிய படிப்பனை உள்ளது
(குர்ஆன் 13:3,16:11 , 39:42,45:13).
பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்

விஷ ஜந்துக்களில் பூரான் என்று அழைக்கப்படும் ...- நூறுகால் பூச்சியும் ஒன்று. சுமார் 5 முதல் 7 அங்குல நீளமுடையது. பூரான் மிகவும் சுறுசுறுப்பான பிராணி. பூச்சிகளைத் தின்று வாழும். எப்போதும் திரிந்துக் கொண்டே இருக்கும். இதில் பல பிரிவுகள் உண்டு. பூரான் பக்கவாட்டில் கணக்கற்ற கால்கள் உண்டு. இது நீண்டு வளர்ந்திருக்கும். கெட்டியான தலையின் முன் பக்கத்தில் உணர்வு இலை இருக்கும்.
வாயின் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு கொக்கியைப் போல் உள் வளைந்த கூர்மையான பற்கள் கரு நிறத்துடன் இருக்கும். பூரான் தயங்காமல் கடித்து விட்டு ஓடிவிடும். அது கடிக்கும்போது ஒரு வகையான விஷம் வெளிவரும். பூரான் கடிக்கும்போது வலியே தெரியாது. இரண்டு நாட்களுக்குப் பிறகே தெரியும்.
உடலில் பல இடங்களில் அதிக தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்படும். பூரான் கடித்த பிறகு உடலில் ஏற்படும் அவதியைக் கொண்டுதான் பூரான் கடி என்று உறுதி செய்யமுடியும். பூரான் கடித்த உடலில் விஷத்தின் அளவிற்கேற்ப தடிப்புகள் கூடவும் குறையவும் செய்யும். உடலெங்கும் அதிக தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்பட்டு சொறிந்தால் புண் ஏற்பட்டால் விஷம் அதிகம் என அறியலாம்.
பூரான் கடித்தான் என்று தெரிந்ததும் தடிப்பு ஏற்பட்ட இடத்தில் முதல் சிகிச்சையாக மண்ணெண்ணெயை விட்டு நன்றாகத் தேய்க்கத் தடிப்புகள் மறையும். உள்ளுக்கு பனைவெல்லாம் சாப்பிடவேண்டும்.
பூரான் கடியை தீர்க்க மருந்து
குப்பைமேனி இலையையும் உப்பையும் வகைக்கு 150 கிராம் எடுத்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் 30 கிராம் மஞ்சள் சேர்த்து இடித்து உடல் முழுவதும் நன்றாகப் பூசவும். ஒருமணி நேரம் சென்ற பிறகு சுத்தமான நீரில் குளிக்கவேண்டும். மூன்று நாட்கள் காலையில் மட்டும் இவ்வாறு செய்து வர தடிப்பும் அரிப்பும் மறையும்.
வெற்றிலைச் சாற்றை சுமார் 6 அவுன்ஸ் எடுத்து அதில் 35 கிராம் மிளகை ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவேண்டும். ஊறிய மிளகை எடுத்து உலர்த்திப் பொடி செய்து கண்ணாடி பாத்திரத்தில் வைக்கவும். இந்த மருந்தை காலை, மாலை இரண்டு சிட்டிகை அளவு வென்னீரில் பருகவேண்டும். உப்பு, புளி இரண்டையும் சேர்க்கக் கூடாது. பூரான் கடிதானே என்று அலட்சியம் கூடாது.
மற்றொரு மருந்தாக ஆகாச கருடன் கிழங்கை சிறுசின்னி சாறுடன் கலந்து அரைத்து சுண்டைக்காய் அளவு தினசரி 3 வேளை மூன்று நாள் சாப்பிடவேண்டும். வெய்யில் வராமல் மூன்று நாள் வீட்டிலே இருக்கவேண்டும். புளி நீக்கிய உணவை சாப்பிடவேண்டும். பூரான் கடி விஷம் அறவே நீங்கும். பூரான் கடிக்குச் சிகிச்சை செய்யாமல் இருந்து தடிப்புகள் தோன்றி நீடித்து பலமாதமாகி விட்டால் ஊமத்ததைலம் தயாரித்து உடலில் தடவி குளிக்கவேண்டும்.
ஊமத்தம் செடியின் வேர்- 100 கிராம் நல்லெண்ணெய் - கால் லிட்டர் ஊமத்தை வேரை நன்றாக நைய இடித்து நல்லெண்ணெயில் ஊற போடவும். சூரிய வெயிலில் வைத்து தினந்தோறும் தடிப்புகளில் தடவி ஊறி குளிக்கவேண்டும். உடலெங்கும் தடிப்பு சொறி போன்ற சில்லரை தொந்தரவும் சீங்கும். தைலத்தைத் தினந்தோறும் சூரிய வெயிலில் வைத்து உபயோகிக்க வேண்டும்.
''எங்க வீட்டுல மட்டும் மின்வெட்டு பிரச்னை கிடையாதுங்க''

''எங்க வீட்டுல மட்டும் மின்வெட்டு பிரச்னை கிடையாதுங்க'' என்று ஜாலியாகச் சிரிக்க...ிறார் சுரேஷ்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசிக்கும் இவர், தனியார் நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குநர். தன்னுடைய வீட்டில் சோலார் தகடுகளைப் பொருத்தி, அதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தைப் பயன்படுத்திவருகிறார்.
''மழை நீர் சேகரிப்புத் திட்டம் உள்பட ஏகப்பட்ட திட்டங்களை நம்ம அரசு அறிமுகப்படுத்துவதற்கு முன்னாடியே என் வீட்டுல அறிமுகப்படுத்திட்டேன். காரணம், நல்ல விஷயங்கள்ல நாம மத்தவங்களுக்கு முன் மாதிரியா இருக்கணும்கிற எண்ணம் தான்.
வீட்டுல சோலார் தகடுகளை பொருத்தின இந்த மூணு மாசமா ஒரு செகண்ட் கூட எங்க வீட்ல கரண்ட் கட் கிடையாது. மின் விசிறி, லைட்டுகள்னு எங்க வீட்டுக்கான மின்சாரத்தேவை சுமார் ஒரு கிலோ வாட். அதுக்காக, 10 சோலார் தகடுகளை பொருத்தி இருக்கேன். சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் மின்சாரம், நேரடியாக மெயின் போர்டில் சேரும்படி இணைப்புக் கொடுத்து இருக்கேன். அப்படி கிடைக்கிற மின்சாரத்தை 10 இன்வெர்ட்டர் பேட்டரிகளில் சேமிச்சு வெச்சுப் பயன்படுத்துறேன்.
சோலார் தகடுகளில் இருந்து கிடைக்கிற மின்சாரத்தைக் காலையில் இருந்து சாயங்காலம் வரை மட்டுமே பயன்படுத்த முடியும். இரவு வேளைகளில் பேட்டரியில் சேமிக்கப்பட்டு உள்ள மின்சாரத்தை பயன்படுத்துவோம். இங்கே நான் பொருத்தி இருக்கிற சோலார் தகடு, இன்வெர்ட்டர் பேட்டரிகளுக்கு கிட்டத்தட்ட இரண்டரை லட்ச ரூபாய் செலவாச்சு. இது பெரிய தொகை தான். ஆனால், இதில் 80 ஆயிரம் ரூபாயை அரசாங்கம் மானியமா கொடுத்தாங்க. 20 ஆயிரம் ரூபாய் செலவில் கூட சோலார் தகடுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கலாம்.
இப்ப பெரும்பாலான வீடுகள்ல டிஷ் ஆண்டனா இருக்கிற மாதிரி வருங்காலத்துல எல்லா வீட்டு மாடிகளிலும் சோலார் தகடுகள் இருக்கும். என்கிட்ட ஏகப்பட்ட பேர் இதைப் பற்றி விசாரிக்கிறாங்க. இதை ஃபாலோ பண்ணினா பவர்கட்டுக்கு கட் சொல்லலாம்...!'' சிரிக்கிறார் சுரேஷ்.
முடிந்தால், முடிந்தவர்களும் இந்த முறையை பின்பற்றலாமே.....
சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசிக்கும் இவர், தனியார் நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குநர். தன்னுடைய வீட்டில் சோலார் தகடுகளைப் பொருத்தி, அதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தைப் பயன்படுத்திவருகிறார்.
''மழை நீர் சேகரிப்புத் திட்டம் உள்பட ஏகப்பட்ட திட்டங்களை நம்ம அரசு அறிமுகப்படுத்துவதற்கு முன்னாடியே என் வீட்டுல அறிமுகப்படுத்திட்டேன். காரணம், நல்ல விஷயங்கள்ல நாம மத்தவங்களுக்கு முன் மாதிரியா இருக்கணும்கிற எண்ணம் தான்.
வீட்டுல சோலார் தகடுகளை பொருத்தின இந்த மூணு மாசமா ஒரு செகண்ட் கூட எங்க வீட்ல கரண்ட் கட் கிடையாது. மின் விசிறி, லைட்டுகள்னு எங்க வீட்டுக்கான மின்சாரத்தேவை சுமார் ஒரு கிலோ வாட். அதுக்காக, 10 சோலார் தகடுகளை பொருத்தி இருக்கேன். சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் மின்சாரம், நேரடியாக மெயின் போர்டில் சேரும்படி இணைப்புக் கொடுத்து இருக்கேன். அப்படி கிடைக்கிற மின்சாரத்தை 10 இன்வெர்ட்டர் பேட்டரிகளில் சேமிச்சு வெச்சுப் பயன்படுத்துறேன்.
சோலார் தகடுகளில் இருந்து கிடைக்கிற மின்சாரத்தைக் காலையில் இருந்து சாயங்காலம் வரை மட்டுமே பயன்படுத்த முடியும். இரவு வேளைகளில் பேட்டரியில் சேமிக்கப்பட்டு உள்ள மின்சாரத்தை பயன்படுத்துவோம். இங்கே நான் பொருத்தி இருக்கிற சோலார் தகடு, இன்வெர்ட்டர் பேட்டரிகளுக்கு கிட்டத்தட்ட இரண்டரை லட்ச ரூபாய் செலவாச்சு. இது பெரிய தொகை தான். ஆனால், இதில் 80 ஆயிரம் ரூபாயை அரசாங்கம் மானியமா கொடுத்தாங்க. 20 ஆயிரம் ரூபாய் செலவில் கூட சோலார் தகடுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கலாம்.
இப்ப பெரும்பாலான வீடுகள்ல டிஷ் ஆண்டனா இருக்கிற மாதிரி வருங்காலத்துல எல்லா வீட்டு மாடிகளிலும் சோலார் தகடுகள் இருக்கும். என்கிட்ட ஏகப்பட்ட பேர் இதைப் பற்றி விசாரிக்கிறாங்க. இதை ஃபாலோ பண்ணினா பவர்கட்டுக்கு கட் சொல்லலாம்...!'' சிரிக்கிறார் சுரேஷ்.
முடிந்தால், முடிந்தவர்களும் இந்த முறையை பின்பற்றலாமே.....
கட்டுப்பாடான உணவு மூளையை பாதுகாக்கும்

கட்டுப்பாடான உணவு மூளையை பாதுகாக்கும் : விஞ்ஞானிகள் தகவல்
வயதாக வயதாக மூளையின் ...நினைவாற்றல் குறைந்துவிடும். ஆனால் ஒருசிலர் மட்டுமே சின்ன சின்ன விசயங்களைக் கூட நினைவில் வைத் துக்கொண்டு அசத்துவார்கள். இதற்குக் காரணம் அவர்களின் உணவுப் பழக்கமே. குறைவாகவும், கட்டுப்பாடோடும் மூளையை இளமையோடு வைத்திருக்கும் என்று கண்டறிந்துள்ளனர் இத்தாலிய விஞ்ஞானிகள்.
கட்டுப்பாடான உணவு முறையால் நடைபெறும் ஒரு மூலக்கூறுச் செயல்பாடு, மூளை முதுமை அடைவதில் இருந்து காப்பாற்றுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இதுதொடர்பாக அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி இதழில் வெளியி டப்பட்ட ஒரு கட்டுரையில், எலிகள் மீது செய்யப்பட்ட ஆய்வு ஒன்று விவரிக்கப்பட்டிருக்கிறது.
இத்தாலி நாட்டில் எலிகளை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதாவது, எலிகள் வழக்கமாகச் சாப்பிடும் உணவு அளவில் 70 சதவீதம் மட்டுமே அவற்றுக்கு வழங்கப்பட்டது. கலோரி குறைந்த அந்த உணவு, சி.ஆர்.ஈ.பி.1 என்ற புரத மூலக்கூறைத் தூண்டுவதும், அதன் மூலம், மூளையின் ஆயுள் நீட்டிப்பு மற்றும் நல்ல செயல்பாட்டுடன் தொடர் புடைய பல்வேறு ஜீன்களை செயல்படச் செய்வதும் விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப்பட்டது.
கட்டுப்பாடான உணவு முறைக்கு உட்படுத்தப்படும் எலிகளுக்கு நல்ல நினைவுத்திறன், குறைவான ஆக்ரோஷம், அல்சைமர் என்ற ஞாபகமறதி வியாதி ஏற்படுவது தவிர்ப்பு போன்ற அம்சங்கள் காணப்படுவதை ஏற்கனவே விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.
இதற்கிடையில், உணவுமுறை தொடர்பான மற்றொரு கண்டுபிடிப்பை யும் விஞ்ஞானிகள் நிகழ்த்தியிருக்கிறார்கள். அதாவது, கணையப் புற்றுநோய் ஏற்படாமல் தவிர்க்க விரும்புவோர், செலினியம், நிக்கல் செறிந்த உணவைச் சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.
இதுதொடர்பான புதிய ஆய்வில், உடம்பில் செலினியம், நிக்கல் தடயம் அதிகமாகக் காணப்படும்போது அது அபாயகரமான கணையப் புற்று நோயைத் தடுக்கிறது. அந்த நோய்க்கு எதிராக இவை ஒரு தடுப்புக் கவசம் போலச் செயல்படுகின்றன என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
இந்த ஆய்வுக்குழுவில் இருந்த ரோம் நாட்டைச் சேர்ந்த சேர்ந்த விஞ் ஞானி கியாவாம்பட்டிஸ்டா பானி, எங்களின் நோக்கமே, சி.ஆர்.ஈ.பி.1-ஐ செயல்படச் செய்வதற்கான வழியைக் கண்டுபிடிப்பதுதான் என்று கூறியுள்ளார்.
உதாரணமாக, ஏதாவது மருந்தின் மூலம் அதைச் சாதிக்கலாம் என்று நினைக்கிறோம். அதன் மூலம், கட்டுப்பாடான உணவுமுறை இன்றியே மூளையை இளமையாக வைத்திருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
http://www.nasonline.org/ news-and-multimedia/podcasts/
வயதாக வயதாக மூளையின் ...நினைவாற்றல் குறைந்துவிடும். ஆனால் ஒருசிலர் மட்டுமே சின்ன சின்ன விசயங்களைக் கூட நினைவில் வைத் துக்கொண்டு அசத்துவார்கள். இதற்குக் காரணம் அவர்களின் உணவுப் பழக்கமே. குறைவாகவும், கட்டுப்பாடோடும் மூளையை இளமையோடு வைத்திருக்கும் என்று கண்டறிந்துள்ளனர் இத்தாலிய விஞ்ஞானிகள்.
கட்டுப்பாடான உணவு முறையால் நடைபெறும் ஒரு மூலக்கூறுச் செயல்பாடு, மூளை முதுமை அடைவதில் இருந்து காப்பாற்றுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இதுதொடர்பாக அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி இதழில் வெளியி டப்பட்ட ஒரு கட்டுரையில், எலிகள் மீது செய்யப்பட்ட ஆய்வு ஒன்று விவரிக்கப்பட்டிருக்கிறது.
இத்தாலி நாட்டில் எலிகளை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதாவது, எலிகள் வழக்கமாகச் சாப்பிடும் உணவு அளவில் 70 சதவீதம் மட்டுமே அவற்றுக்கு வழங்கப்பட்டது. கலோரி குறைந்த அந்த உணவு, சி.ஆர்.ஈ.பி.1 என்ற புரத மூலக்கூறைத் தூண்டுவதும், அதன் மூலம், மூளையின் ஆயுள் நீட்டிப்பு மற்றும் நல்ல செயல்பாட்டுடன் தொடர் புடைய பல்வேறு ஜீன்களை செயல்படச் செய்வதும் விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப்பட்டது.
கட்டுப்பாடான உணவு முறைக்கு உட்படுத்தப்படும் எலிகளுக்கு நல்ல நினைவுத்திறன், குறைவான ஆக்ரோஷம், அல்சைமர் என்ற ஞாபகமறதி வியாதி ஏற்படுவது தவிர்ப்பு போன்ற அம்சங்கள் காணப்படுவதை ஏற்கனவே விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.
இதற்கிடையில், உணவுமுறை தொடர்பான மற்றொரு கண்டுபிடிப்பை யும் விஞ்ஞானிகள் நிகழ்த்தியிருக்கிறார்கள். அதாவது, கணையப் புற்றுநோய் ஏற்படாமல் தவிர்க்க விரும்புவோர், செலினியம், நிக்கல் செறிந்த உணவைச் சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.
இதுதொடர்பான புதிய ஆய்வில், உடம்பில் செலினியம், நிக்கல் தடயம் அதிகமாகக் காணப்படும்போது அது அபாயகரமான கணையப் புற்று நோயைத் தடுக்கிறது. அந்த நோய்க்கு எதிராக இவை ஒரு தடுப்புக் கவசம் போலச் செயல்படுகின்றன என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
இந்த ஆய்வுக்குழுவில் இருந்த ரோம் நாட்டைச் சேர்ந்த சேர்ந்த விஞ் ஞானி கியாவாம்பட்டிஸ்டா பானி, எங்களின் நோக்கமே, சி.ஆர்.ஈ.பி.1-ஐ செயல்படச் செய்வதற்கான வழியைக் கண்டுபிடிப்பதுதான் என்று கூறியுள்ளார்.
உதாரணமாக, ஏதாவது மருந்தின் மூலம் அதைச் சாதிக்கலாம் என்று நினைக்கிறோம். அதன் மூலம், கட்டுப்பாடான உணவுமுறை இன்றியே மூளையை இளமையாக வைத்திருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
http://www.nasonline.org/
நம் உடலைப் பற்றிய உண்மைகள்!!!!!!!!!!

குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இர...ுக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.
நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.
நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.
நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.
பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும். நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.
நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.
நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.
நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.
நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.
முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.
மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.
ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது.
இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.
மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.
ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.
நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது.
நமது மூளை 80% நீரால் ஆனது.
நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.
நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடிதான்.
மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும்.
பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது.
மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.
மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்,
கண்கள் 31 நிமிடங்கள் | மூளை 10 நிமிடங்கள் | கால்கள் 4 மணி நேரம் | தசைகள் 5 நாட்கள் | இதயம் சில நிமிடங்கள்
தமிழ்புத்தாண்டு பற்றிய முழு வரலாறு!
தமிழ்புத்தாண்டு பற்றிய குழப்பங்களுக்கு
தீர்வு பெற இதைப் படியுங்கள். ஆரம்பமே மூலிகை வைத்தியன் மாதிரி இருக்கேனு
நினைக்காதீங்க. நிஜமாவே சொல்றேன். படிங்க!!
சித்திரை1 தான் தமிழ் புத்தாண்டு என நாம் கொண்டாடி வந்த ஆண்டுக் கணக்கு முறையைக் கவனத்தில் எடுத்துக் கொண்டால் அது சுழற்சி முறையில் இருக்கும். அறுபது ஆண்டுகள் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருக்கும். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் 'பரபவ' முதல் 'அட்சய' என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லை!
இந்த அறுபது ஆண்டு சுழற்சி முறையைக் குறித்து முதலில் கவனிப்போம். இந்த முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறிஸ்துவுக்கு பின் 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது. கனிஷ்கன் என்ற வடநாட்டு அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுவோரும் உண்டு. பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாக பரப்பப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது. எந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் நிறுத்தப்படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், கலைகள் போன்றவை அந்த நாட்டினரின் பழக்க வழக்கங்களோடு கலந்து விடுவது இயல்பு. அந்த வகையில் இந்தச் சாலிவாகன முறை பின்னர் மெல்ல மெல்ல தமிழகத்தில் நடை முறைப் பழக்கத்திற்கு வந்து விட்டது. அறுபது ஆண்டு சுழற்சி முறை காரணமாக ஆரியர்களிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் 'சஷ்டி பூர்த்தி' என்ற அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழக்கம் இருப்பதைக் கவனியுங்கள்.
மேலும் இந்த அறுபது ஆண்டுகளுக்கான விளக்கம் மிகுந்த ஆபாசம் நிறைந்ததாகும். அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.
ஒருமுறை நாரதமுனிவர், கடவுள் கிருஷ்ணனை "நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரலக்கூடாதா?" என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணன், "நான் உடன் இல்லாம்ல வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள்’ என்றாரா,. இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி "நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்" என்றார். கிருஷ்ணன் நாரதரை "யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்" எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். பின் கடவுள் கிருஷ்ணனுடன் அறுபது வருடம் கூடி, அறுபது மகன்களைப் பெற்றார். அவர்கள் ‘பிரபவ தொடங்கி அட்சய முடிய’ என பெயர் பெற்றார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருஷமாகும் வரம் பெற்றார்கள். இப்படிதான் சித்திரை1ல் ஆரம்பிக்கும் புத்தாண்டு வரலாறு செல்கிறது.
தமிழகத்தில் வானியலில் திறமையான அறிஞர்களை ‘அறிவர், கணி, கணியன்’ என அழைத்தார்கள். அரசனுடைய அவையில் பெரும் புத்தி படைத்த 'கணி'கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. ‘அறிவர்'கள் குறித்துத் தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார்.
தமிழர்கள் காலத்தைக் கணித்ததைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளை கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பிரித்து வைத்தார்கள். ‘வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்’ என்று அவற்றை அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.
அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.
பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.
1. இளவேனில் - ( தை-மாசி மாதங்களுக்குரியது)
2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)
3. கார் - (வைகாசி – ஆனி மாதங்களுக்குரியது)
4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)
5. முன்பனி – (புரட்டாசி – ஐப்பசி மாதங்களுக்குரியது)
6. பின்பனி – (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)
காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு (seasons) பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விசயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.
இடையில் தமிழர் மட்டும் மாறி விட்டோம்! இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால் தான் தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டு என்கிறோம்.
தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாய் அறிவித்த கருணாநிதியைப் பிடிக்காத பலர் சித்திரை முதல் நாளை தான் தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடுவேன் எனப் பிடிவாதமாக இருக்கிறார்கள். ஜெயலலிதா சித்திரை1 அன்று புத்தாண்டு வாழ்த்து சொல்வதில் ஆச்சரியமில்லை. அந்த அம்மையாருக்கு இதெல்லாம் தெரிந்தால் தானே! நமக்கேனும் கொஞ்சம் சிந்திக்கும் திறன் வேண்டும். நமக்குப் பிடிக்காதவர் நம் சோற்றை, "சோறு" எனச் சொன்னான் என்பதற்காக நம் சோறு மலம் ஆகி விடாது. நமக்குப் பிடிக்காதவர்கள் சொன்னாலும் உண்மை உண்மையே. குறைந்தபட்சம் கீழே பாரதிதாசன் சொல்வதையாவது கேளுங்கள்,
"நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!"
-பாரதிதாசன்.
சித்திரை1 தான் தமிழ் புத்தாண்டு என நாம் கொண்டாடி வந்த ஆண்டுக் கணக்கு முறையைக் கவனத்தில் எடுத்துக் கொண்டால் அது சுழற்சி முறையில் இருக்கும். அறுபது ஆண்டுகள் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருக்கும். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் 'பரபவ' முதல் 'அட்சய' என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லை!
இந்த அறுபது ஆண்டு சுழற்சி முறையைக் குறித்து முதலில் கவனிப்போம். இந்த முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறிஸ்துவுக்கு பின் 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது. கனிஷ்கன் என்ற வடநாட்டு அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுவோரும் உண்டு. பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாக பரப்பப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது. எந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் நிறுத்தப்படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், கலைகள் போன்றவை அந்த நாட்டினரின் பழக்க வழக்கங்களோடு கலந்து விடுவது இயல்பு. அந்த வகையில் இந்தச் சாலிவாகன முறை பின்னர் மெல்ல மெல்ல தமிழகத்தில் நடை முறைப் பழக்கத்திற்கு வந்து விட்டது. அறுபது ஆண்டு சுழற்சி முறை காரணமாக ஆரியர்களிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் 'சஷ்டி பூர்த்தி' என்ற அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழக்கம் இருப்பதைக் கவனியுங்கள்.
மேலும் இந்த அறுபது ஆண்டுகளுக்கான விளக்கம் மிகுந்த ஆபாசம் நிறைந்ததாகும். அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.
ஒருமுறை நாரதமுனிவர், கடவுள் கிருஷ்ணனை "நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரலக்கூடாதா?" என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணன், "நான் உடன் இல்லாம்ல வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள்’ என்றாரா,. இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி "நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்" என்றார். கிருஷ்ணன் நாரதரை "யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்" எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். பின் கடவுள் கிருஷ்ணனுடன் அறுபது வருடம் கூடி, அறுபது மகன்களைப் பெற்றார். அவர்கள் ‘பிரபவ தொடங்கி அட்சய முடிய’ என பெயர் பெற்றார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருஷமாகும் வரம் பெற்றார்கள். இப்படிதான் சித்திரை1ல் ஆரம்பிக்கும் புத்தாண்டு வரலாறு செல்கிறது.
தமிழகத்தில் வானியலில் திறமையான அறிஞர்களை ‘அறிவர், கணி, கணியன்’ என அழைத்தார்கள். அரசனுடைய அவையில் பெரும் புத்தி படைத்த 'கணி'கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. ‘அறிவர்'கள் குறித்துத் தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார்.
தமிழர்கள் காலத்தைக் கணித்ததைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளை கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பிரித்து வைத்தார்கள். ‘வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்’ என்று அவற்றை அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.
அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.
பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.
1. இளவேனில் - ( தை-மாசி மாதங்களுக்குரியது)
2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)
3. கார் - (வைகாசி – ஆனி மாதங்களுக்குரியது)
4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)
5. முன்பனி – (புரட்டாசி – ஐப்பசி மாதங்களுக்குரியது)
6. பின்பனி – (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)
காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு (seasons) பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விசயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.
இடையில் தமிழர் மட்டும் மாறி விட்டோம்! இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால் தான் தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டு என்கிறோம்.
தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாய் அறிவித்த கருணாநிதியைப் பிடிக்காத பலர் சித்திரை முதல் நாளை தான் தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடுவேன் எனப் பிடிவாதமாக இருக்கிறார்கள். ஜெயலலிதா சித்திரை1 அன்று புத்தாண்டு வாழ்த்து சொல்வதில் ஆச்சரியமில்லை. அந்த அம்மையாருக்கு இதெல்லாம் தெரிந்தால் தானே! நமக்கேனும் கொஞ்சம் சிந்திக்கும் திறன் வேண்டும். நமக்குப் பிடிக்காதவர் நம் சோற்றை, "சோறு" எனச் சொன்னான் என்பதற்காக நம் சோறு மலம் ஆகி விடாது. நமக்குப் பிடிக்காதவர்கள் சொன்னாலும் உண்மை உண்மையே. குறைந்தபட்சம் கீழே பாரதிதாசன் சொல்வதையாவது கேளுங்கள்,
"நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!"
-பாரதிதாசன்.
திராவிட மாயை(!?)
ஒரு இனம் உலகெங்கும் உள்ள மொழியியல்,
தொன்மையியல் ஆராய்ச்சியாளர்களால் அந்த இனத்தின் மொழியாலேயே, அந்த மொழியின்
தொன்மையாலேயே இனம் காணப்படுகிறது. சமஸ்கிருதம், ஹீப்ரூ உட்பட பல தொன்மையான
மொழிகள் இன்று செத்த மொழிகள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும்
உயிருடன், வீச்சுடன், செழுமையுடன் வாழும் மிகச்சில தொன்மையான மொழிகளுள்
தமிழும் ஒன்று. அதனால் இந்தியர்களுக்கு, தமிழர்களுக்கு அதன்
முக்கியத்துவமும் பெருமையும் தெரிகிறதோ இல்லையோ உலக அறிஞர்களும், பல
வளர்ந்த நாடுகளும் தமிழுக்கான மரியாதையை, தமிழுக்கான முக்கியத்துவத்தை
தங்கள் மொழி சார்ந்த நிகழ்ச்சிகளில் கொடுக்கின்றன, கொடுக்கிறார்கள்.

தமிழில்
இருந்து நீண்ட நெடுங்காலத்திற்கு முன் பிரிந்த தெலுங்காகட்டும், சில நூறு
ஆண்டுகளுக்கு முன் பிரிந்த கன்னடமாகட்டும், வெகு சில ஆண்டுகளுக்கு முன்
தோன்றிய மலையாளமாகட்டும் அனைத்தும் தமிழ் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவையே.
ஆரியர்களைப் பொறுத்தவரை சிந்து சமவெளி நிலப்பரப்பில் இருந்த கறுப்பர்கள்
யாவரும் திராவிடர்களே. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த அவர்களின்
வருகையின் போது தமிழ் இப்போது உள்ள வடிவத்தில் இல்லையென்றாலும் அது பல
மொழிகளாக பிரிந்திருக்கவில்லையென்றும், ஒரே மொழியாகத்தான் இருந்தது என்றும்
ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மேலும் ஆரியர்கள் தமிழர்களைக் குறிக்க
பயன்படுத்திய இந்த 'திராவிட' எனும் சொல் தமிழ், பின் திரமிள என்பதில்
இருந்து மருவிய சொல்லேயாதலால் அதனை சமஸ்கிருத சொல்லாக ஏற்றுக் கொள்ள
முடியாது. மேலும் திராவிட என்பதற்கு சமஸ்கிருதத்தில் வேறு எந்த அர்த்தமும்
கிடையாது. அதனால் திராவிட என்பது தமிழர்களைக் குறிக்க பிரத்யேகமாக
ஆரியர்களால் உபயோகிக்கப்பட்ட வார்த்தையே ஆகும். நாம் பெரும்பான்மையாக
வாழ்ந்த நிலப்பரப்பையும் 'திராவிடர் நிலம்' என்றே வழங்கினார்கள். (ஆதாரம்:
ரிக்வேத கால ஆரியர்கள் நூல். எழுதியவர்: ராகுல சாங்கிருத்தியாயன்)
திராவிட (தமிழ்) இனத்திற்கு எதிரானவர்கள்,
முக்கியமாக சமஸ்கிருதத்தை தங்கள் கடவுளர் மொழியாகக் கொண்டுள்ள இந்து
மதவாதிகள் கூறும் இன்னொரு குற்றச்சாட்டு, கால்டுவெல் அடிப்படையில் ஒரு
பாதிரியார் என்றும் அதனால் மதத்தை பரப்ப அவர் செய்த சதியே ஆரிய-திராவிட
மொழிக்குடும்ப பிரிப்பு என்பதும் ஆகும்! சரி அப்படியே ஆகட்டும்! நாம்
கால்டுவெல்லை கணக்கில் எடுத்துக்கொள்ளவே வேண்டாம். ஆங்கிலேய அரசின்
ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் ICS (Indian Civil Service) அதிகாரியாக,
இராமநாதபுரம், சென்னை உட்பட்ட இடங்களின் ஆட்சியாளராக பல ஆண்டுகாலம்
சிறப்பாக பணியாற்றியவர் எல்லிஸ். திராவிட மொழிகளை இனங்கண்டதில், திராவிட
மொழிகளின் தனித்துவத்தை கண்டறிந்ததில் இவரது பணி போற்றத்தக்கது. (இவர்
பிற்காலத்தில் தன் பெயரை தமிழ் மேல் கொண்ட காதலால் தமிழ் உச்சரிப்புக்கு
ஏற்ற வண்ணம் எல்லிஸன் என மாற்றிக்கொண்டார்.)
1804ல் வில்லியம் காரே என்ற அறிஞர் தமது
சமஸ்கிருத இலக்கண நூலில் இந்தியாவில் பேசப்பட்ட அனைத்து மொழிகளுக்குமே
வேர்-மொழி சமஸ்கிருதம் என்ற கருத்தை முன்வைத்த போது அதற்கு எல்லிஸ்
தலைமையில் இயங்கிய சென்னைக் கல்விச் சங்கக் குழு ஆதாரங்களுடன் வன்மையாக
எதிர்ப்பு தெரிவித்தது. பின் அக்கல்லூரியின் கண்காணிப்புக் குழுவில்
இடம்பெற்றிருந்த அலெக்ஸாண்டர் காம்பெலின் 'தெலுங்கு மொழி இலக்கணம்' என்னும்
நூலுக்கான முன்னுரையில் திராவிட மொழிகளின் தனித்துவத்தையும், அவற்றுள்
தமிழுக்கான முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டிருக்கிறார் எல்லிஸ். அதாவது
கால்டுவெல்லுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே! கால்டுவெல் தன் திராவிட
மொழிகளின் ஒப்பிலக்கணம் ஆராய்ச்சி நூல் மூலம் திராவிட மொழிக் குடும்பத்தை
உலகிற்கு அறிமுகப்படுத்தியிருந்தாலுமே கூட, அவருக்கு பல ஆண்டுகள் முன்பே
எல்லிஸ் அந்த பணிகளை துவங்கிவிட்டார். முதன்முதலில் சமஸ்கிருதத்தில்
இருந்து தென்னிந்திய மொழிகள் முற்றிலும் வேறுபட்டவை என்று பறைசாற்றியவர்
எல்லிஸ். தாமஸ் ட்ரவுட்மேன் என்ற மொழியியல் ஆராய்ச்சியாளர் தன் 'திராவிடச்
சான்று' புத்தகத்தில் ஆதாரங்களுடன் இவற்றை எடுத்துவைத்திருக்கிறார். அதனால்
எல்லிஸ் ஆரம்பித்த, செய்த பணிகளை முழுமைப்படுத்திய கால்டுவெல்லை பற்றிய
மதம் சார்ந்த குற்றச்சாட்டுக்களை நாம் கருத்தில் கொள்ளவே தேவையில்லை.
அடுத்து, ஏன் மலையாளிகள், கன்னடர்கள்,
தெலுங்கர்கள் தங்களை திராவிடர்கள் என அழைத்துக்கொள்வதில்லை என்று
கேட்கப்படுகிறது. திராவிடம் என்ற சொல்லில் (superior or root language)
வேர்மொழி தமிழ் தான் என்று அனைத்து ஆராய்ச்சிகளும், அனைத்து
ஆராய்ச்சியாளர்களும் ஒருமித்த குரலில் தெரிவிக்கும் போது 'திராவிடம்' என்ற
சொல்லாடலை அவர்கள் பயன்படுத்தினால் தமிழர்க்கு கீழ் அவர்கள் என்ற தோற்றம்
ஏற்படும் தானே! அதாவது இந்துக்களில் பார்ப்பனர்களுக்கு கீழ் மற்ற சாதியினர்
என்பதைப் போல! அதனால் தான் அவர்கள் அதை உபயோகிப்பதில்லை. இந்த
ஏற்றத்தாழ்வு சாதியைப் போல கட்டுக்கதைகளாலும், புராணங்களாலும்
வரையறுக்கப்பட்டதல்ல. தமிழின் தொன்மையால் நம் இனத்திற்குக் கிடைத்த பேறு.
இந்தப் பேறை நாம் ஒதுக்கலாமா?
திராவிடம் எனச் சொல்வது அனைத்து திராவிட
மொழிகளுக்கும் நம் மொழியான 'தமிழ்' தாயாக இருந்தது என்பதாகத் தான்
அர்த்தப்படுமேயொழிய, நம் மொழிக்கு உயர்வுதானேயொழிய எந்த வகையிலும் சிறுமை
இல்லை. திராவிடன், திராவிடம் என்ற சொற்பதங்களை நாம் புறக்கணித்தோமானால்
நாளை இந்தப் பெருமையும், உண்மையும், நம் தொன்மையும் மறைக்கப்படலாம், மறந்து
போகலாம், காணாமல் போகலாம்!
திராவிடம் என்பதற்கான இலக்கணம் இப்போது
திரிந்து சீர்க் கெட்டுக் கிடக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. இப்போது
திராவிடம் என்பதை வெறும் அரசியல் கட்சிகளாக பலர் அடையாளம் காண்கின்றனர்.
திராவிடக் கட்சிகளைப் பிடிக்காதவர்கள் திராவிடக் கொள்கைகளை, திராவிட
கருத்தாக்கத்தை பிடிக்காததது போல் நடந்துகொள்வது அறியாமையே! உதாரணத்திற்கு
இன்றைய தமிழ்த் தேசியக்கட்சிகளின் தலைவர்கள் நாளை தப்பு செய்தால், அந்தத்
தலைவர்களை திட்டுவார்களா? தமிழ்த் தேசியக் கொள்கையை திட்டுவார்களா என்பதே
என் ஐயம்!
மேலும் மதராஸ் மாகாணமாக இருந்தபோது
திராவிட நாடு என்பது ஒட்டுமொத்த தென்னிந்திய திராவிட நிலப்பரப்பையும்
குறிப்பதாய் இருந்தது. உறவுச் சிக்கல் ஏற்பட்டு உணர்வு ரீதியாக பிற
மொழியினருடன் இயைந்து வாழமுடியாது என்ற நிலை ஏற்பட்டு நிகழ்ந்த மாநிலப்
பிரிவுக்குப் பின், பெரியார் காலத்திலேயே தமிழ்நாடு தமிழர்க்கே,
திராவிடநாடு தமிழர்க்கே என்ற முழக்கங்கள் எழத்துவங்கி விட்டன. விடுதலை
நாளிதழிலேயும் அப்படியான முழக்கங்களே வெளிவந்தன. இன்றும் பெரியார் திடலில்
அந்த முழக்கங்கள் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
இதையெல்லாம் திராவிட இயக்கங்கள் முன்வைத்த
திராவிடநாடு என்பது தமிழ்நாடே என நிரூபிக்க மிகப்பெரிய வரலாற்றுச் சம்பவம்
ஒன்று உண்டு. இந்தியா முழுவதையும் சில பெரிய மாநிலங்களாகப் பிரித்தால்
மாநிலங்கள் பலம் வாய்ந்ததாக இருக்கும் என்ற கருத்து மேற்குவங்காள முதல்வர்
பி.சி.ராயால் முன்மொழியப்பட்டது. அதாவது தமிழகம், கேரளம், கர்நாடகம்,
ஆந்திரம் ஆகியவற்றை ஒன்றாக தட்சிணப்பிரதேசம் என்ற மிகப்பெரிய மாநிலமாக
அறிவிக்கலாம் என்றும் அதை தட்சிணப்பிரதேசம் என்றும் குறிப்பிடலாம் என்றும்!
இதுகுறித்த தீர்மானம் 1956ல் அமிர்தசரஸீல் பி.சி.ராயால் முன்மொழியப்பட்டு
நிறைவேற்றப்பட்டது. நேருவின் அமைச்சரவை இது குறித்து முதல்வர்களிடம்
கருத்து கேட்டபோது காமராசர் முதலில் ஒப்புக்கொண்டார். பின் பெரியார்
அவசரமாக காமராசருக்கு ஒரு தந்தி அடித்து இதற்கு ஒப்புக்கொண்டால்
தமிழ்நாட்டில் தமிழர்களின் முக்கியத்துவம் குறைந்து, பிறமொழியினரின்
ஆதிக்கம் வந்து எல்லா துறையிலும் தமிழர்கள் ஓரங்கட்டப்படுவார்கள் என
அறிவுரை வழங்கினார். இதையேற்ற காமராசர் தன் ஒப்புதலில் பின்வாங்கினார்.
(அண்ணாவும் இந்த தட்சிணப்பிரதேச திட்டத்தை ஏற்கவில்லை) அதன்பின் பல
முதல்வர்களுக்கு விருப்பமில்லாததால் நேருவால் இந்தத் திட்டம்
கைவிடப்பட்டது. அதாவது இன்றைக்கு தமிழ்த் தேசியவாதிகள் தூற்றும் திராவிட
இயக்கத்தின் தந்தை பெரியார், தான் விரும்பிய திராவிட நாட்டில், தான்
முன்வைத்த திராவிட நாட்டில் உணர்வில் வேறுபட்ட மலையாளிகளையோ, கன்னடரையோ,
தெலுங்கரையோ ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது. மேலும்
திராவிட இயக்கங்கள் முன்மொழிந்த திராவிட நாடானது தனித்தமிழ்நாடே என்பதற்கு
இதைவிட என்ன சான்று வேண்டும்?
திராவிட இயக்கங்கள், கட்சிகள் வலுப்பெற்று
இருக்கும் இந்த 50 ஆண்டுகளில் தமிழகம் ஏராளமாக வளர்ச்சி கண்டிருக்கிறது
என்பதுயும், பிற வடமாநிலங்களை விட தொழிலிலும், உட்கட்டமைப்பிலும் பலபடிகள்
முன்னே இருக்கிறது என்பதும் நிதர்சனம். இந்தியாவின் பிற மாநிலங்களுக்குச்
சென்றவர்களுக்கு இந்த உண்மை புரியும்.
அதே நேரத்தில் தெலுங்கு, மலையாளம்,
கன்னடத்தில் சமஸ்கிருதத்தின் பாதிப்பு பெரிய அளவில் இன்று இருக்கிறது.
(அம்மொழிகள் தமிழ் பெரு அளவிலும், சமஸ்கிருதம் பின்னாளில் சிறு அளவில்
கலந்து உருவான மொழிகள் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.) தமிழில்
கூட சுமார் 40 அல்லது 50 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட
பத்திரங்களாகட்டும், அச்சிடப்பட்ட செய்தித்தாள்களாகட்டும் பெருமளவில்
சமஸ்கிருதம் கலந்திருந்தது. படிப்படியாக அதை நீக்கி தமிழின் தனித்தன்மையை
மீட்டெடுத்ததும் திராவிட இயக்கங்களே! (சிறு தகவல்: எம்.ஜி.ஆர்
ஆட்சிக்காலத்தில் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை அரசாணையாக்கி எல்லா
பத்திரிக்கைகளுக்கும் அனுப்பியபோது அதை ஏற்காத ஒரே பத்திரிக்கை துக்ளக்!
இன்றும் அந்தப் பத்திரிக்கையில் வேறு எந்த ஊடகத்திலும் இல்லாத அளவிற்கு
வடமொழி வார்த்தைகள் சரளமாக உபயோகப்படுத்தப்படுவதைப் பார்க்கலாம்.)
தமிழ்த் தேசிய முழக்கம் திராவிடக்
கொள்கைக்குள் அடங்குமேயொழிய அது தனியொரு கொள்கை ஆகாது! இன்று புதிதாய்
முளைத்துள்ள சில தலைவர்கள் தங்கள் சுயலாபத்துக்காக திராவிடக்கொள்கையை
தமிழர்களுக்கு எதிரி போல் திரிக்கிறார்கள். தமிழை, தமிழுக்கு எதிரியாய்
திரித்தல் எவ்வளவு ஆபத்தோ, அறிவீனமோ அதைப் போல, சாதிய அடக்குமுறைக்கு
எதிராக திராவிட இயக்கங்களால் நிறுவப்பட்ட 'திராவிடக் கொள்கை' அம்பேத்கர்
சொன்னதைப் போல, என்.எஸ்.கிருஷ்ணன் பாடியதைப் போல "கருப்பு சிவப்பு என்ற
பேதத்தை நீக்கும்.. பள்ளு பறையரோடு கள்ளர் மறவரென உள்ள பேதங்களை
ஒழித்துக்கட்டும்" என்ற கொள்கை கொண்டதால் தற்கால சாதிய உணர்வோடு செயல்படும்
தமிழ்த் தேசியவாதிகளுக்கு உவர்ப்பாக இருக்கிறது என்பதே உண்மை!
சமீபத்தில் முளைத்த ஒரு தமிழ்த் தேசியக்
கட்சி - தனது கொள்கையாக - தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத யாரையும் தான்
முன்வைக்கும் தமிழ்த் தேசியத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்று பல
மேடைகளில் அறிவித்திருக்கிறது. இதன்படி தமிழர்களின் அழிவிற்காக அயராமல்
பாடுபடும் சுப்பிரமணியஸ்வாமியும், தமிழ் எழுத்து சீர் பெறுவதைக் கூட
விரும்பாத சோவும் தமிழர்கள் ஆவார்கள். தமிழகத்தை ஆள்வதற்கு தகுதியுடைவர்கள்
ஆவார்கள். ஆனால் காலம் காலமாக தமிழகத்தில் ரத்தம் சிந்தி உழைக்கும்
தெலுங்கு பேசும் அருந்ததியர் போன்ற ஆதி திராவிடர்கள் தமிழர்கள்
ஆகமாட்டார்கள்! அவர்களை இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்! இவர்கள்
'திராவிடர்கள்' என்று எதிர்ப்பது யாரைத் தெரிகிறதா?
இதுபோன்ற கொள்கையுடைய
போலி தமிழ்த்தேசியவாதிகள் தான் சாதியத்துக்கு எதிராக இருக்கும்
திராவிடத்தின் மீது சேற்றையள்ளி இறைக்கிறார்கள். பெரியாரைத்
திட்டுகிறார்கள். அம்பேத்கரைத் தூற்றுகிறார்கள். வரலாறு அறியாமல்
பிதற்றுகிறார்கள். பல ஆண்டுகாலம் தமிழருக்காக, தமிழர் நலனுக்காக
உழைப்பவர்களைக் கூட, உலகத் தமிழர்கள் போற்றும் தலைவர்களைக் கூட அவர்களின்
சாதி அடையாளத்தை மனதில் கொண்டு, நன்றி மறந்து "நீ யார்?" என்கிறார்கள்!
மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும்
சொல்கிறேன். சாதி-மத பேதமற்ற தமிழ்நாடு தமிழருக்கே என்பதே திராவிடக்
கொள்கை. திராவிடம் என்பது என்ன எனப் புரிந்தால்தான் தமிழ்த் தேசியத்தின்
உண்மையான முகம் புரியும். தமிழ்த் தேசியம் என்பது திராவிடக் கொள்கையேயொழிய
புதியதொரு கொள்கை அல்ல! எதிரியை விட்டுவிட்டு சுயநலத்தின் பொருட்டு
வளர்த்துவிட்டவர்களின் மார்பில் பாய்கிறவர்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு
சாதி மத பேதமற்ற தமிழ்ச்சமுதாயம் படைப்போம்.
திராவிடர் என்பது இனம்! திராவிடம் என்பது அடக்குமுறைக்கெதிரான கொள்கை! திராவிட மொழி என்பது தமிழ்! திராவிடன் என்போன் தமிழன்!
ஸ்பெக்ட்ரம் - தேசம் சேமித்த பல லட்சம் கோடி?????
ஸ்பெக்ட்ரம்... கடந்த ஓராண்டாக இந்தியர்கள் இறைவனின் திருநாமத்தைவிட
அதிகம் உச்சரித்த பெயர். சில பல வணிக விளையாட்டுகள்,சில பல சதிகள், சில பல
அரசியல் சடுகுடுகள், அரசிற்கும்,நீதித்துறைக்குமான "தான் யார் என்ற அகங்காரங்கள்" இவற்றோடு மக்களிடையே மண்டையைக் குழப்பவைத்த
மீடியாக்கள் என்று ஓராட்டம் ஆடி இப்போது இரண்டாம் சுற்றில் நிற்கிறது.
என்னதான் நடந்தது இதில்? எதுதான் உண்மை?
ஸ்பெக்ட்ரம் என்பது அதிர்வெண்.அதாவது மெஹாஹெர்ட்ஸ்னு சொல்றோம் இல்லையா அதுதான். நாட்டில் உள்ள தாதுக்கள்,கனிமங்கள் போல இதுவும் ஒரு வளம். சரி இது எதுக்கு அரசாங்கத்துகிட்ட இருக்கணும்? விசயம் சிம்பிள்.. இதை அரசாங்கம் ஒழுங்கு செய்யாம ஆளுக்காள் ஒரே அலைவரிசையில் செயல்படுத்த ஆரமிச்சா தகவல் தொடர்பில் குழப்பம் வரும். சரி 2ஜி அப்படின்னா என்ன? இதுக்கு முன்னாடி 1ஜி இருந்ததால இது 2ஜி. ஆஹா.. அப்ப 1ஜி அப்படின்னா என்ன? முதன்முதலில் செல்பேசி சேவை அனலாக் முறையில் இயங்கியது. தாத்தா காலத்து டெக்னாலஜி. அதுல நீங்க பேசுனா நான் கேக்கலாம், நான் பேசுனா நீங்க கேக்கலாம்.இதைத்தாண்டி ஒரு வசதியும் கிடையாது. அதுவும்கூட அத்தனை துல்லியமாக சில நேரம் இருக்காது.
அடுத்து வந்தது டிஜிட்டல் தொழில்நுட்பம். இதுதான் 2ஜி. இது gsm மற்றும் cdma அப்படின்னு ரெண்டு வழில இயங்குது. இந்தச் சேவைகள், 800, 900, 1800, 1900 மெகா ஹெர்ட்சில் ஏதோ ஒன்றில் வேலை செய்யும். ஒவ்வோரு நாட்டுலயும் வேறவேற அதிர்வெண்ல இருக்கும். இந்தியாவில் 900, 1800 என்ற இரண்டு அதிர்வெண்களில் செல்பேசிச் சேவைகள் இயங்குகின்றன.
1800 மெகா ஹெர்ட்ஸில் செல்பேசிச் சேவை இயங்குறதுன்னா என்ன? இந்த அதிர்வெண்ணை அடிப்படையாகக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட அலைப் பரவலை (spectrum) இந்தச் சேவைக்காக ஒதுக்குவார்கள். செல்பேசிச் சேவைக்கு அதை நடத்தும் ஒவ்வொரு நிறுவனத்துக்கு இரண்டு பரவல் தேவை. ஒன்று, செல்பேசிச் சேவையின் மையம்.இது இவர்கள் தங்கள் செல்பேசி கோபுரங்களோடு தொடர்பு கொள்ள. மற்றொன்று கோபுரங்கள் தனிப்பட்ட செல்பேசிகளுடன் தொடர்பு கொள்ள. அதாவது அப்லிங் மற்றும் டவுன்லிங். இதுக்காக தகவல் தொடர்பு அமைச்சகம் 75 மெகாஹெர்ட்ஸ் அப்லிங்கிற்கும் 75 மெஹா ஹெர்ட்ஸ் டவுன்லிங்கிற்கும் தருகிறது. அதாவது மொத்தம் 150 மெஹா ஹர்ட்ஸ். இந்த 150 மெஹா ஹர்ட்ஸ்குள்ள அமைச்சகம் எத்தனை நிறுவனங்களை அனுமதிக்கலாம்? தகவல் தொடர்பு அமைச்சகம், ஒரு GSM நிறுவனத்துக்கு 10 மெகா ஹெர்ட்ஸ் பரவலும், ஒரு CDMA நிறுவனத்துக்கு 5 மெகா ஹெர்ட்ஸ் பரவலும் தரலாம் என்று அதற்குமேல் தரக்கூடாது என்பது சட்டம். ஆக, சுமார் 10 நிறுவனங்கள்தான் அதிகபட்சம் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் இருக்கமுடியும். 900, 1800 ஆகிய இரண்டையும் சேர்த்தால், இதைப்போல இரண்டு மடங்கு இருக்கமுடியும்.
சரியா! இப்போ இருக்குற மெகாஹர்ட்ஸைத் தாண்டி அதிகமான நிறுவனங்கள் விண்ணப்பிக்கும்போது அரசு என்ன செய்யும்? சிம்பிள் ஏலம்விடும். ஏன் ஏலம் விடணும்? அப்பதான் யார் அதிகம் கேக்குறாங்களோ அவங்களுக்கு குடுக்கலாம். அரசுக்கும் அதிக பணம் கிடைக்கும். ஆ.ராசா என்ன செஞ்சாரு? ஏலம் விடாம அமைச்சகமே ஒருவிலையை நிர்ணயித்து முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அலைக்கற்றையை ஒதுக்கினார். இதுனால என்னாச்சு? என்னாச்சா... எவ்வளவு பெரிய துரோகம் இது!! ஏலம் விட்டுருந்தா 1,76,000 கோடிக்கு போயிருக்கும். ஆனா இந்தாளு முன்னுரிமையில் குடுத்தால வெறும் 30,984.55 கோடிதான் அரசுக்கு வந்துச்சு. எவ்வளவு பெரிய பச்சை துரோகம் இந்தாள் செஞ்சது!! இல்லையா? இப்படித்தான் படிச்சதும் தோணும். கொஞ்சம் அதன் மறுபுறத்தையும் பார்ப்போமா?
ஏன் ராஜா இப்படிச் செஞ்சாரு? முதன்முதலில் 1997 இல் சென்னையில் ஸ்கைசெல் நிறுவனத்தின் செல்பேசி உபயோகித்தவர்களுக்குத் தெரியும். அவுட் கோயிங் ஒரு நிமிடத்திற்கு 20 ரூபாய், இன்கம்மிங் 15 ரூபாய். 20 ரூபாய் என்பது அன்று ஒரு தினக் கூலிக்காரரின் ஒருநாள் சம்பளம். ஏன் அவ்வளவு விலை?? காரணம் அன்று அலைக்கற்றை ஏலமுறையில் ஒதுக்கீடு செய்ததால் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் மிக அதிகவிலை குடுத்து அந்த உரிமையை வாங்கியது, வாங்கிய தொகையை யார் தலையில் கட்டும்? பயனாளர் தலையில் கட்டும். அதனால்தான் அந்த ரேட்.
அன்று ஒரு தினக்கூலிக்காரரின் ஒருநாள் சம்பளத்தொகையை ஒரே ஒரு அழைப்பிற்காக செலவு செய்த நிலைபோய் இன்று ஒரு தினக்கூலிக்காரர் தான் எங்கே வேலைக்கு வரவேன்டும் என்பதை தன்னுடைய செல்பேசியில் கேட்டு தெரிந்துகொண்டு வரும் நிலைக்கு மலிவாகிவிட்டது தகவல்தொடர்பு. எப்படி? காரணம் அதே ஆ.ராசா. ஏலமுறையில் விலை ஏற்றிக் குடுக்காமல் நிர்ணய விலையில் அலைக்கற்றைகளை வழங்கியதால் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த விலையில் ஒதுக்கீடு கிடைத்தது. அதனால் அதிக விலை வைக்காமல் 50 பைசா என்ற அளவில் மிகக் குறைந்த விலையில் அழைப்பினை நிறுவனங்கள் வழங்குகிறது.
சரி சார், குப்பனும்,சுப்பனும் செல் பேசலை யார் சார் இப்ப அடிச்சுகிட்டா? நாட்டுல நாலு பெரிய மனுசன் பேசுனாப் போதாதா? அப்படிப் பார்த்தா இந்தாள் தேசத்துக்கு 1,76,000 கோடி இழப்பு ஏற்படுத்துனது உண்மைதானே சார்? ஆமாம் சார். உண்மைதான். ஏல முறையைத் தவிர்த்தால் இழப்பு ஏற்படும்னு தெரிஞ்சேதான் செஞ்சார். " அட அயோக்கியப் பயலுகாளா? தெரிஞ்சேதான் செஞ்சிகளாடா பாவிகளா"ன்னு தோணுதா? கொஞ்சம் வெயிட் பண்ணி அடுத்த பத்தியைப் படிச்சுட்டு அந்த முடிவு சரியா தப்பான்னு யோசிங்க.
நானும் நீங்களும் நாளை மீண்டும் நேரில் சந்திப்பதாக இன்று நேரில் பேசிக்கொண்டு இருக்கும்போது முடிவு செய்கிறோம். சந்தர்ப்ப வசத்தால் நாளை நான் வேறு இடத்திற்கு செல்ல வேன்டிய சூழல். என்ன செய்வேன்? இப்போது மலிவுவிலையில் செல் இருப்பதால் 50 பைசாவிற்கு உங்களை அழைத்து நான் வர இயலாததைச் சொல்லிவிடுவேன். நீங்களும் வரமாட்டிர்கள். ஆனால் நாட்டில் இப்போதும் அவுட் கோயிங் 20 ரூபாய் இன்கம்மிங் 15 ரூபாய் என்ற அளவிலேயே இருந்தால் என்ன ஆகும்? சத்தியமாக இதை எழுதும் என்னிடமும், இதைப் படிக்கும் உங்களிடமும் நிச்சயம் செல்பேசி இருக்காது. நான் உங்களைத் தொடர்புகொள்ள முடியாது. நாளை நீங்கள் என்னைப் பார்க்க வடபழனியில் இருந்து என் வீடு இருக்கும் ஆழ்வார்பேட்டை வருகின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். வந்து பார்த்த பின்னர் வீட்டில் என் மனைவி சொல்லித்தான் நான் இல்லை என்பதே உங்களுக்குத் தெரியும். அங்கிருந்து வர 15 கிலோமீட்டர் போக 15 கிலோமீட்டர் என 30 கிமீக்கு குறைந்தது அரைலிட்டர் பெட்ரோல் செலவாகியிருக்கும். குறைந்தது 33 ரூபாய் உங்களுக்கு இழப்பு. உங்களுக்கு என்றால் உங்களுடைய இழப்பு அல்ல, எரிபொருள் என்ற அளவில் இது தேசத்தின் இழப்பு. இந்த 33 ரூபாயில் வரிக்கு முந்தைய அடக்கவிலையான குறைந்தது 15 ரூபாய் அன்னிய செலாவனியாக அரபு நாடுகளுக்குப் போய்விடும். நம் இருவரைப்போல நாட்டில் எத்தனை கோடி பேர்? எத்தனை கோடி லிட்டர் பெட்ரோல் மிச்சம்? இது ஒரு சிறு உதாரணம்தான். இதுபோல பல உதாரணங்களை தகவல் தொடர்பு மலிவினால் தேசத்திற்கு கிடைத்த சேமிப்பை என்னால் அடுக்கிக்கொண்டே போகமுடியும். ஆம் ஆ.ராசா 1,76,000 கோடி இழப்பை ஏற்படுத்தினார். அதே நேரத்தில் கணக்கிட முடியாத லட்சம்கோடியை இந்த தேசத்திற்கு சேமித்துள்ளார். காமாலைக்கரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள். பலருக்கும் அவர் ஏற்படுத்திய இழப்பு தெரிகிறது, எனக்கு அதனால் விளைந்த சேமிப்பு தெரிகிறது. ஒரு அமைச்சராக குப்பனையும்,சுப்பனையும் செல்பேச வைத்ததோடு இந்த தேசத்திற்கும் பலபலபல இலட்சம் கோடிகளை சேமித்துத்தந்த அமைச்சர் ஆ.ராசாவிற்கு என் வந்தனங்கள்.
- நன்றி கவிஞர் புதுகை எம்.எம்.அப்துல்லா
Mobile Call rates can hike by 100%, Warn Pvt. Operators

Trai had recommended on April 23 a reserve price of Rs 3,622 crore per
MHz in the 1,800-MHz band, 10 times higher than the cost of licences
that came bundled with 4.4-MHZ spectrum in 2008. The Telecom
Commission’s views have been sent to the regulator for its comments.
Trai will respond to the questions, after which the commission will take
a final call on the auction policy. That would be vetted and cleared by
a ministerial group headed by Finance Minister Pranab Mukherjee. The
commission has expressed reservations over the proposed liberalised
regime in which spectrum usage would be delinked from the service
offered. It has opined the ‘liberalised’ usage would need detailed study
on the use of different technologies in the same band.
சூதாட்டம் + விபச்சாரம் = ஜ.பி.எல். கிரிக்கெட்
உலகமயத்தின் தொடர் தாக்குதலின் விளைவால், மட்டைப்பந்து (கிரிக்கெட்) விளையாட்டுப் போட்டி, "விளையாட்டு" என்ற தன் இயல்பு நிலையை இழந்து, பல ஆண்டுகள் கடந்து விட்டன. இதன் தொடர்ச்சியாக, விளையாட்டுத் தளத்திலிருந்த மட்டையடிப் போட்டிகள் வணிகத் தளத்திற்கு மாறி, பிறகு சூதாட்டக் களத்திற்குப் போய்விட்டன. இது பற்றி முன்னணி மட்டையடி வீரர்கள் பலரும் கூட கவலை வெளியிட்டிர...ுந்தனர்.
ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக்) அமைப்பின் பரிணாம வளர்ச்சியின் அண்மைய வெளிப்பாடே, ஐ.பி.எல். சர்ச்சையாக இன்று நாடெங்கும் பேசப்படுகின்றது. விலைவாசி உயர்வு, பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல், உழவர்களை அழித்து விட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு வேளாண்மையைத் தாரை வார்க்கும் அதிரடிச் சட்டங்கள் என விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய விடயங்கள் மறக்கப்பட்டு, அவை துண்டுச் செய்திகளாயின. ஐ.பி.எல். தலைப்புச் செய்தியானது.
கடந்த 2008 ஆம் ஆண்டு, மட்டையடி விளையாட்டு வீரர்களை வெளிப்படையாக ஏலத்தில் எடுத்து, தொடக்கத்திலேயே தன் வணிகத்தன்மையை வெளிப்படுத்திக் கொண்டது தான், ஐ.பி.எல். அமைப்பு.
2008 ஆம் ஆண்டு, முன்னணி மட்டையடி வீரர் கபில் தேவ், ஜீ தொலைக்காட்சி நிறுவனத்தோடு இணைந்து "இந்தியன் கிரிக்கெட் லீக்" (ஐ.சி.எல்.) என்ற ழைக்கப்பட்ட அமைப்பைத் தோற்றுவித்தார். பல்வேறு நாட்டு ஓய்வு பெற்ற மட்டையடி விளையாட்டு வீரர்களையும் உள்ளடக்கிய விளையாட்டு அணிகளை உருவாக்கி, விளையாட்டு நேரத்தைக் குறைத்து பரபரப்பானப் போட்டிகளை நடத்தி, அதன் ஒளிபரப்பு உரிமைகள் மற்றும் விளம்பரங்கள் மூலம் கோடி கோடியாகக் கொள்ளையடிப்பதே இவ்வமைப்பின் "உயரிய" நோக்கம்.
இவ்வமைப்பின் இந்த நோக்கத்தை உணர்ந்து கொண்ட, இந்திய மட்டையடி வாரியத்தின் பண முதலைகள், அவ்வமைப்பன் வழியே தானும் பணம்சம்பாதிக்கத் திட்டமிட்டது. ஐ.சி.எல். அமைப்பை சீர்குலைக்கும் வகையில், ஐ.பி.எல். என்ற புதிய அமைப்பை உருவாக்கியது. நடுவண் காங்கிரஸ் அரசில் பங்கு வகிக்கும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும் இந்திய மட்டையடி வாரியத்தின் பேரங்களை முன்னின்று நடத்துபவருமான அமைச்சர் சரத் பவார் இதற்கு பின்னணியில் இருந்தார். அவரைப் போன்றே தரகு வேலைகளில், ஈடுபடுவதில் "திறமைசாலி"யான இந்திய மட்டையடி வாரியத்தின் துணைத் தலைவர் லலித் மோடி ஐ.பி.எல். அமைப்பின் ஆணையராக அமர்த்தப்பட்டார்.
இதனைத் தொடர்ந்தே, ரோமானிய அடிமைகள் ஏலத்தில் எடுக்கப்பட்டது போல "விளையாட்டு" வீரர்கள், ஐ.பி.எல். போட்டிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டனர். அம்பானி, விஜய் மல்லையா போன்ற பன்னாட்டுப் பெரு முதலாளிகளும், இந்தியா சிமெண்ட்ஸ் போன்ற தனியார் பெரு நிறுவனங்களும், சீரழிந்த உலகமயப் பண்பாட்டை போதிக்கும் "டெக்கான் க்ரோனிக்கல்" போன்ற ஊடகங்களும், அப்பண்பாட்டை செயலில் காட்டும் சாருக்கான், ப்ரீத்தீ ஜிந்தா போன்ற நடிகர்களும் இந்த ஏலத்தில் கலந்து கொண்டனர். இந்த ஏலத்தின் மூலம் ஏறக்குறைய ரூ. 2000 கோடி இலாபம் சம்பாதித்தத்தோடு மட்டுமின்றி, போட்டிக்கான பார்வையாளர் நுழைவுச் சீட்டு, ஒளிபரப்பு உரிமை, விளம்பரங்கள் என மேலும் பல்லாயிரம் கோடிகளை சம்பாதித்தது, ஐ.பி.எல்.
ஐ.பி.எல். ஏலம் எடுக்கப்பட்ட போதே, அந்த ஏலத்தில் புழங்கியப் பணம் எங்கிருந்து வந்தது என்று நடுவண் அரசு கூட ஆராய்ந்திடவில்லை. உழவர்கள் தற்கொலை, சிறுதொழில்கள் நசுக்கப்பட்டது குறித்தெல்லாம் வாய் திறக்காத ஊடகங்கள், ஐ.பி.எல். ஏலத்தொகையைக் கணக்குக் காட்டி "இந்தியா" வளர்ந்து விட்டதாக பெருமையடித்தன.
ஐ.பி.எல். மட்டையடிப் போட்டிகளின் நடுவில் "இளைப்பாறுதல்" என்ற பெயரில், அரைகுறை ஆடைப் பெண்களை ஆடவிடுவதும், நடிகைகளை விட்டுக் கட்டிப்பிடிக்க வைப்பதும், போட்டி முடிந்ததும் தினமும் நடத்தப்படுகின்ற, "இரவு விருந்தில்" நடக்கும் ஆட்டம் பாட்டம் கேளிக்கைகளும், அது சார்ந்திருக்கும், உலகமய நுகர்வியப் பண்பாட்டை உலகிற்கு அறிவிக்கின்றன. யார் வேண்டுமானாலும் யாருடனும் உறவு கொள்ள வலியுறுத்துகின்ற இந்த, உலகமய பாலியல் சீரழிவுகளுக்கு "பாலியல் விடுதலை" என்று புதுப்பெயர் வைத்து, வளர்க்கின்றன ஊடகங்கள். கோடி கோடியாகக் கொள்ளையடித்த முதலாளிகளும், அவர்தம் கையாள் அரசியல்வாதிகளும், அவர்களது வாரிசுகளும், விலை மாதர்களுடன் கொஞ்சிக் குலாவுகின்ற, அந்த இரவு விருந்துகளில் கலந்து கொள்ள ஒருவருக்கான அனுமதிச் சீட்டின் இன்றைய நிலவரப்படி, விலை 40,000 ரூபாய் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
உலகமய நுகர்வியத்தின் தாக்குதலுக்கு உள்ளாகிய, மேட்டுக்குடியினர் மட்டுமின்றி, உலகமயப் பாலியல் சீரழிவுகள் மீதான கவர்ச்சியால் ஈர்க்கப்படும் நடுத்தர வர்க்கத் தகவல் தொழில் நுட்பத்துறை இளைஞர்களும், ஐ.பி.எல். போட்டிகளை இரசித்துப் பார்ப்பதோடு, இந்த இரவு விருந்துகளில் பெருமளவில் கலந்தும் கொள்கின்றனர்.
இவ்வாறு, கோடி கோடியாக இலாபம் சம்பாதித்து வந்த ஐ.பி.எல். இந்தக் கொள்ளையின் இலாபம் போதாமல், இவ்வாண்டு மேலும் 2 புதிய அணிகளை உருவாக்கிக் கொள்ளையிடத் திட்டமிட்டது. இதன் விளைவாகவே புனே, கொச்சி என புதிய அணிகள் உருவாக்கப்பட்டு, ஏலம் விடப்பட்டன. கொச்சி அணி அதிகபட்சமாக ரூ. 1553 கோடி களுக்கு ஏலம் போனது.
மொரீசியஸ், துபாய் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் முதலீடுகளுக்கு வரிவிலக்கு உண்டு என்பதால், அங்கிருந்து செயல்படுவதாக கூறிக் கொள்ளும் பல போலி நிறுவனங்கள் கருப்புப் பணத்தை "முதலீடு" என்ற பெயரில், இந்தியாவிற்கு அனுப்பி வெள்ளைப் பணமாக மாற்றி வருகின்றன. இவ்வகை முதலீடுகள் ஐ.பி.எல். போட்டியிலும் பெருமளவு குவிந்துள்ளன என்பதை, ஐ.பி.எல். ஏலத்தில் ஈடுபட்ட நிறுவனங்களின் பின்னணியை ஆராய்ந்த போது தெரியவந்தது.
தமது ட்விட்டர் இணையதளப் பக்கங்களில், கொச்சின் அணியின் உண்மையான உரிமையாளர்கள் யார் யார் என, ஐ.பி.எல். ஆணையர் லலித் மோடி ஒரு பட்டியலை வெளியிட்டார். அந்தப் பட்டியல் வெளியிடப்பட்டதும், ஐ.பி.எல். விதிமுறைகள் மீறப்பட்டு, அதன் மரியாதை மீது பாதிப்பு ஏற்படுத்தப்பட்டு விட்டதாகக் கொதித்துப் போய் அறிக்கை வெளியிட்டார், காங்கிரஸ் நடுவண் அமைச்சர் சசி தரூர். இந்திய மட்டையடி வாரியத் தலைவர் சசாங் மனோகரும், லலித் மோடி வெளியிட்ட "இரகசியங்களுக்கு" எதிராகக் கண்டனம் தெரிவித்தார்.
நடுவண் அமைச்சர் சசி தரூரின் பதட்டப் பின்னணியை ஆராய்ந்த போது, கொச்சி அணியின் ரூ. 70 கோடி ரூபாய் மதிப்புள்ள 18 விழுக்காட்டுப் பங்குகளை வைத்திருப்பது, துபாயில் வசிக்கும் அழகுக்கலை நிபுணரான சுனந்தா புஷ்கர் என்று தெரியவந்தது. அவர் சசி தரூரின் வருங்கால மனைவி என பேசப்படுபவர். பட்டியலை வெளியிட்ட பின், இதனை வெளியிடக் கூடாது என தம்மை அமைச்சர் சசி தரூர் மிரட்டினார் என்று லலித் மோடி மேலும் கூறினார்.
"மெத்தப் படித்தவர், நிர்வாகவியல் தெரிந்தவர், ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டவர்" என்றெல்லாம் ஊடகங்களால் காட்டப்பட்ட சசி தரூர், அந்த செல்வாக்கின் மூலம் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்று, அமைச்சராகவும் வலம் வந்து கொண்டிருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு மலையாளி என்பது அவருக்குள் சிறப்புத் தகுதி. தற்போது, தம் காதலி சுனந்தாவிற்கு ஐ.பி.எல். அணியின் பங்குகளை வாங்கிக் கொடுத்தது போல், வேறு சில பினாமிகளின் துணையோடு வேறு அணிகளையும் தம் கட்டுப்பாட்டில் அவர் வைத்திருந்தாரா என்ற ஐயம் அனைவரிடத்தும் வலுவாக எழுந்தது.
"நல்ல நிர்வாகி" என்றெல்லாம் போற்றப்பட்ட லலித் மோடி, "அமெரிக்காவில் போதைப் பொருள் கடத்தல், ஆட்கடத்தல், அடிதடி வழக்கில் கைதாகி 2 ஆண்டுகள் சிறையிலிருந்தவர். அவருக்குத் தான் நாம் உயர்பதவி கொடுத்திருக்கிறோம்" என அமைச்சர் சசி தரூரின் செயலாளர் ஜாக்கப் ஜோசப், லலித் மோடிக்கு எதிராக வெளிப்படையாக சீறி எழுந்தார்.
பெருமுதலாளிகளும், முதலாளிகளின் ஊடகங்களும், அதில் நடித்த நடிகர்களும் தாம் கொள்ளையடித்தப் கருப்புப் பணத்தை, கண் முன்பே வெள்ளையாக மாற்றுவது குறித்தும் எந்த தேர்தல் கட்சியும் சீறவில்லை. மாறாக, அதில் பங்கு கிடைக்காதா என்ற ஏக்கப் பார்வையோடே ஐ.பி.எல். மீது கரிசனத்தோடு கிடந்தனர். இந்நிலையில், பா.ஜ.க. அதுவரை ஐ.பி.எல். போட்டிகளை இரசித்துப் பார்த்து வந்தது. ஆனால் காங்கிரஸ் நடுவண் அமைச்சர் ஒருவர் தம் அதிகாரத்தின் மூலம், தம் காதலிக்கு பங்குகள் வாங்கிக் கொடுத்தது அம்பலமானதும், "திடீர்" அக்கறையோடு நாடாளுமன்றத்தை கேள்விகளோடு முற்றுகையிட்டது.
உழவர்களை நசுக்கும் ஒடுக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழாத பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சசி தரூரின் அதிகார மீறலுக்கு எதிராக "பொங்கி" எழுந்தனர். எதிர்க்கட்சியினரின் கோரிக்கைக்குப் படிந்து, சசி தரூரின் பதவியைப் பறித்து, நல்லவர் போல தமக்கு ஏதும் தெரியாதது போல் வேடமிட்டுக் கொண்டு, சிக்கலை அத்தோடு முடிக்க நினைத்தது சோனியா - மன்மோகன் அரசு.
2009ஆம் ஆண்டு இந்திய மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஐ.பி.எல். போட்டிகளை ஒத்தி வைக்குமாறு இந்திய அரசு கோரிக்கை வைத்த போது கூட, அதனை மதிக்காது புறந்தள்ளி, இந்திய அரசுக்கு சவால் விடுக்கும் விதமாக அப்போட்டிகளை தென்னாப்பரிக்காவில் நடத்தியது, ஐ.பி.எல். அமைப்பு. அப்போதும், நடுவண் அரசு லலித் மோடி மீது சினங்கொள்ளவில்லை. தற்போது, ஐ.பி.எல். ஊழலில் தம் கட்சி அமைச்சர் ஒருவர் பதவி இழந்து, ஊரெல்லாம் காறி உமிழும் நிலைவந்த பின்னர் தான், அவமானம் தாங்காமல் நேரடியாக களத்தில் இறங்கியிருக்கிறது, நடுவண் காங்கிரஸ் அரசு.
இதுவும் தற்காலிகமான நடவடிக்கைகளே. திரைமறைவு பேரங்கள் நடத்தப்பட்டு, அதில் நல்ல "விலை"யும் பேசப்பட்டு விட்டால், காங்கிரஸ் அரசு ஐ.பி.எல். அமைப்பின் கொள்ளைகள் குறித்து சிறிதும் கண்டு கொள்ளாது என்பதே உண்மை. ஐ.பி.எல். அமைப்பு தான் கொள்ளையடித்த பணத்தில், பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும் பங்கு கொடுத்திருந்தால், பாராளுமன்றத்தில் அவர்களும் போர்க்கொடி தூக்கியிருக்கமாட்டார்கள். பங்கு கொடுக்காததால், ஐ.பி.எல்.லுக்கு வந்தது சிக்கல்.
ஐ.பி.எல். அமைப்புக்கு மட்டுமின்றி, உற்பத்தியில் ஈடுபடாத நிதி புழங்குகின்ற எந்தவொரு தனியார் அமைப்பின் ஊழல்கள் - மோசடிகள் அம்பலமாகின்றதென்றால், அரசியல்வாதிகளுக்கும், முதலாளிகளுக்கும் பண பேரம் படியவில்லை என்று தான் பொருளே தவிர வேறொன்றுமில்லை. ஏனெனில், இதுவே இன்றைய உலகமய காலகட்டத்தின் அரசியல் யதார்த்தமாக உள்ளது.
அரசுக்கு சவால் விடுக்கும் அளவிற்குப் பணவலு பெற்றிருந்த ஊழலிலும் கூட லலித் மோடி மீது ஐயம் கொள்ளாத நடுவண் காங்கிரஸ் அரசு, இச்சிக்கலில் தம் அமைச்சரின் பதவியை பறிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்ட நிலையில் தான் ஐ.பி.எல். குறித்து உற்று நோக்கத் தொடங்கியது. ஐ.பி.எல். அணிகளை ஏலம் எடுத்தவர்களின் அலுவலகங்கள், ஒளிபரப்பு உரிமை பெற்ற நிறுவனங்கள், உரிமையாளர்கள், பங்குதாரர்கள் என பலரது வீடுகளும் வருமானவரித் துறையினரால் முற்றுகையிட்டு சோதனையிடப்பட்டன.
மும்பையில் இயங்கிய லலித் மோடி அலுவலகத்தில் வருமானவரித் துறையினர், சோதனை நடத்தவருவதற்கு சில நிமிடங்களுக்கு முன், விஜய் மல்லையாவின் வளர்ப்பு மகள் லைலா அங்கிருந்த முக்கிய கோப்புகளை எடுத்துச் சென்றது, அங்கிருந்த ஒளிப்பதிவுக் கருவியில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அதனை விஜய் மல்லையாவும் ஒப்புக் கொண்டார். இருந்த போதும், அவர் எடுத்துச் சென்ற கோப்புகள் குறித்து லைலாவிடம் விசாரித்து, விஜய் மல்லையாவின் கோபத்தை சம்பாதிக்க காங்கிரஸ் அரசு ஒன்றும் ஏமாளி அரசல்ல. அடுத்த தேர்தலில் அவரிடம் தான் தேர்தல் நிதி வசூலுக்குப் போய் நிற்க வேண்டியிருக்கும். எனவே, அந்தக் கோப்புகள் காணாமல் போனது போனதாகவே இருக்கட்டும் என அங்கிருந்து கிளம்பினர் வருமான வரித் துறையினர்.
இந்த சோதனைகளின் முடிவில், சசி தரூர் மீது புகார் கூறிய, லலித் மோடி அவரை விடப் பெரிய மோசடிக்காரர் என்பதும் தெரிய வந்தது. கடந்த 2007 ஆம் ஆண்டு ரூ. 19 இலட்சம் வருமானவரி செலுத்திய லலித் மோடி, 2008-2009 நிதியாண்டில் 32 இலட்சம் வரி செலுத்தினார். 2009ஆம் ஆண்டு அதிக வரி செலுத்திய 100 பேர் பட்டியலில் இடம் பிடித்தார். 2010ஆம் ஆண்டிற்கு 11 கோடி ரூபாய் வரியை முன்பணமாக செலுத்திவிட்டார். லலித் மோடியின் இந்த "அபார" வளர்ச்சி, அரசியல்வாதிகளை மட்டுமின்றி இந்திய மட்டையடி வாரிய உறுப்பனர்களில் பலருக்கும் எரிச்சலூட்டத் தொடங்கியது.
வருமானவரித் துறையினரின் பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பின், லலித் மோடி செய்த பல்வேறு தில்லுமுல்லுகள் தெரிய வந்தன. "அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார்" என சசி தரூரை குற்றம் சாட்டிய லலித் மோடியோ, தம் சுற்றத்தாரை பினாமிகளாக்கி அணிகளை ஏலத்தில் எடுத்திருந்தது அம்பலமானது. மேலும், போட்டியின் முடிவுகளை முன்கூட்டியே நிர்ணயம் செய்து சூதாட்டம் நடத்தியது உட்பட பல்வேறு மோசடிகளில் அவர் ஈடுபட்டிருந்தது குறித்தும் ஐயப்பாடுகள் எழுந்தன.
ராஜஸ்தான் அணியின் 25 விழுக்காட்டுப் பங்குகள், நைஜீரியாவைச் சேர்ந்த லலித் மோடியின் ஒன்று விட்ட சகோதரர் சுரேதீ செல்லாராம் என்பவர் வைத்திருக்கிறார். கொல்கத்தா அணியின் 45 விழுக்காட்டுப் பங்குகளை மொரீசியசைச் சேர்ந்த "சீ ஐலாண்டு" நிறுவனத்தின் தலைவர் ஜெய் மேத்தா என்பவர் பெற்றுள்ளார். இவர் நடிகை ஜூகி சாவ்லாவின் கணவர் மட்டுமின்றி லலித் மோடியின் பினாமி என்றும் கூறப்படுகிறது. இது மட்டுமின்றி, லலித் மோடியின் வளர்ப்பு மகளின் கணவர் கவுரவ் பர்மா இங்கிலாந்தில் இயங்கும் "பெட்பேர்" எனப்படும் சூதாட்ட நிறுவனத்துடன் தொடர்புடையவர் என, வருமான வரித்துறையினரின் கமுக்க அறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டி, "தி எக்னாமிக் டைம்ஸ் ஏடு எழுதியது. (காண்க: எக்னாமிக் டைம், ஏப்ரல் 19, 2010).
அணிகளைப் பினாமிகளின் பெயரால் வாங்கிய குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி, பல்வேறு குற்றச்சாட்டுகள் மோடி மீது மேலும் எழுந்தன. ஐ.பி.எல். போட்டிகளின் தொலைக் காட்சி ஒளிபரப்பு உரிமைகளில் மோசடி நடந்ததும் அம்பலமானது. போட்டிகளை தொலைக்காட்சிகளில் ஒளிரப்புவதற்காக, ரூ. 8225 கோடி ரூபாய்க்கு, மொரீசியசில் உள்ள வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் குரூப் மற்றும் சோனி நிறுவனத்தின் மல்டி ஸ்கீரீன் மீடியா ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த உரிமையை பெறுவதற்காக, சோனி நிறுவனத்தின் மல்டி ஸ்கிரீன் மீடியா நிறுவனத் திடமிருந்து ரூ. 125 கோடி கைளிட்டு பெற்றதை வெளிப்படையாகவே ஒத்துக் கொண்டது, வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் குரூப் நிறுவனம். இதிலும், லலித் மோடியின், மோடி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு தொடர்பிருந்தது தெரியவந்தது.
"அரசுத்துறை நிறுவனங்கள் லஞ்சத்தில் திளைப்பவை. அரசு ஊழியர்கள் அனைவரும் சோம்பேறிகள். தனியார் நிறுவனங்களே வெளிப்படையான நிர்வாகத்தை நடத்த வல்லவை" என்று உலகமய ஊடகங்கள் போதித்து வருகின்றன. ஆனால், இன்றோ அந்த ஊடகங்களில் நடைபெறுகின்ற லஞ்ச ஊழல்களே வாய்பிளக்க வைக்கின்றன.
வேகமாக வளர்ந்து வரும் லலித் மோடியின் செல்வாக்கால் திணறிய இந்திய மட்டையடி வாரியமும், நடுவண் காங்கிரஸ் அரசும் இந்த ஊழலை, பயன்படுத்தி லலித் மோடியை அப்பதவியிலிருந்து தூக்கி விட்டு, வேறொருவரை அப்பதவியில் அமர்த்தும் நடவடிக்கையில் இறங்கின. "முடிந்தால் நீக்கிப் பாருங்கள்" என சவால் விடுத்தார் லலித் மோடி. மோடியின் சவாலுக்கு பின்புலமாக, ஐ.பி.எல். அணிகளை ஏலத்தில் எடுத்த பண முதலைகள் நிற்பது உலகறியாததல்ல.
முற்றிலும் வணிகமயமாகி சூதாட்டமாகவும் விபச்சாரமாகவும் ஆகிவிட்ட மட்டையடி விளையாட்டைப் புறக்கணித்து, உடலுக்கு உற்சாகம் தருவதோடு தம் இனத்தின் பெருமையையும் பறைசாற்றுகின்ற தேசிய இன விளையாட்டுகளில் நடுத்தர வர்க்க இளைஞர்கள் கவனம் செலுத்தி ஈடுபட வேண்டும்.
மேலும், "தேசிய விளையாட்டு" என இந்திய அரசு பறைசாற்றிக் கொள்ளும் ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு, சம்பளம் தராமல் இழுத்தடிப்பதும், அயலார் விளையாட்டான மட்டைப்பந்து போட்டிக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதும், இந்திய அரசுக்கே உரிய "வந்தேறித் தன்மை"யைத்தான் வெளிப்படுத்துகின்றது.
தேர்தல் அரசியல்வாதிகளும், முதலாளியத் தரகர்களும் இணைந்து நடத்துகின்ற சூதாட்டத் திருவிழாவான, இந்த ஐ.பி.எல். விளையாட்டுப் போட்டிகள் தடை செய்யப்பட வேண்டும். ஐ.பி.எல். உள்ளிட்ட அமைப்புகள் கொள்ளையடித்து வைத்திருக்கும் பணக்காரர்களின் கருப்புப் பணத்தை அரசுடைமையாக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற, எந்த அரசும் முன்வராது என்று தெரிந்தே இக்கோரிக்கைகளை நாம் எழுப்புகிறோம். மக்களை ஆளுகின்ற அரசுகளிடம் அல்ல, ஆளுகின்ற அரசுகளைத் திருப்பித் தாக்கும் திறனுள்ள மக்களிடம் தான் இதனை எழுப்பியாக வேண்டும்.
நன்றி: தமிழ்த்தேசிய தமிழர் கண்ணோட்டம்
கறையான்கள் பற்றி திருக்குர்ஆன்...!!!

திட்டமிட்டுச் செயலாற்றும் கறையான் அவருக்கு (சுலைமானுக்கு) நாம் மரணத்தை விதித்த போது பூமியல் ஊர்ந்து செல்லும் கறையான் தான் அவரது மரணத்தை (ஜின்களுக்குக்) காட்டிக்கொடுத்தது.
அல்குர்ஆன்.34:14
கரையான்கள் எறும்புகளைப் போல இருந்தாலும், உண்மையில் அவை எறும்புகள் வகை அல்ல. எறும்புகள் Hymenoptera என்ற வரிசையைச் சேர்ந்தது. ஆனால், கரையான்கள் Isoptera என்ற வரிசையைச் சேர்ந்தது. Iso என்றால், 'ஒரே மாதிரி ' என்று பொருள். Ptera என்றால், 'இறக்கை ' என்று பொருள். அதாவது, கரையான்களின் மறுவடிவமான ஈசல்களின் முன் மற்றும் பின் இறக்கைகள் ஒரே மாதிரி இருப்பதால், இந்த வகைப்பாட்டியல் பெயர். கரையான்களில், உலகம் முழுதும் சுமார் 275 பேரினங்களும், சுமார் 2750 சிற்றினங்களும் உள்ளன. கரையான்களில் ஒரு சில சிற்றினங்கள், மரங்களில் வாழும். அவை மரங்களை, அரித்து தின்று விடும். மண்ணில் புற்று அமைத்து வாழும்.
கரையான்களும், தேனீக்களைப் போல ஒரு சமுதாய பூச்சி (Social insect) ஆகும். ஏன் அப்படி அழைக்கிறோம் எனில், அவற்றால் தனித்து வாழ இயலாது. ஒரு கரையான் கூட்டத்தில் இராணிக்கரையான் (Queen), மன்னர் கரையான் (King), இராணுவ வீரர்கள் (Soldiers) மற்றும் பணிக்கரையான்கள் (Workers) என நான்கு வகை இருக்கும். இதில் இராணுவ வீரர்களும், பணிக்கரையான்களும் மலட்டுத் தன்மை கொண்டவை. ஆனால் இவையும் பிறப்பால் மலடு அல்ல. வளர்ப்பால்தான் மலடு ஆகின்றன. தேனீக்களைப் போல இராணிக்கரையான் தன் உடலிலிருந்து Queen pheromone எனப்படும் ஒருவித பிரத்யேக சுரப்பினைச் சுரக்கும். இந்த சுரப்பினை எல்லா பணி மற்றும் இராணுவ வீரர்கள் கட்டாயமாக குடிக்க வேண்டும். அவ்வாறு குடிக்கும்பட்சத்தில் அவை மலடு ஆகிவிடும்.
இராணுவ வீரர்களுள் இரண்டு வகை உண்டு. முதல்வகை பருத்த தலையுடன், முகத்தில் ஒரு பிரத்யேக அரிவாள் போன்ற கொடுக்குடன் இருக்கும். அவை Mandibulate Soldiers எனப்படும். இவை பகைவர்களின் மீது தாக்குதல் நடத்தி விரட்டிவிடும். அடுத்த வகை, Nasute Soldiers எனப்படும். இவை பகைவர்களின் மீது துர்நாற்றம் மிக்க சுரப்பினைத் துப்பி விரட்டிவிடும். இதில் நாம் கவனிக்க வேண்டிய விசயம், இராணுவ வீரர்கள் கண்பார்வையற்ற குருடர்கள். இராணுவ வீரர்களுள் ஆண், பெண் என இருபாலருமே உண்டு. பணிக்கரையான்களும் கண்பார்வையற்ற குருடர்களே ! அவற்றிலும், ஆண், பெண் என இருபாலருமே உண்டு. இராணுவ வீரர்கள் மற்றும் பணிக்கரையான்களின் வாழ்நாள் 1-2 ஆண்டுகள் ஆகும். பணிக்கரையான்கள் புற்றினைக் கட்டுதல், பழுதடைந்த புற்றினைச் சரிசெய்தல், இளம்கரையான், இராணுவ வீரர்கள், மன்னர் மற்றும் இராணி கரையான்களுக்கு உணவு கொடுத்தல் என பல வேலைகளைச் செய்யும்.
இராணிக்கரையான் ஒரு நாளைக்கு சுமார் 2000 முட்டைகள் வைக்கும். அதாவது, ஒவ்வொரு 15 நொடிக்கும் ஒரு முட்டை வைக்கும். இராணிக்கரையான்களின் வாழ்நாள் 15-25 ஆண்டுகள் ஆகும். இராணுவ வீரர்கள் மற்றும் பணிக்கரையான்களுக்கு ஒரு குறிப்பிட்ட வாசனை உண்டு. ஒரு வேளை, பாதுகாப்பு பணியில் உள்ள இராணுவ வீரர்கள் பகைவர்களுடனான போரில் கணிசமாக இறந்து விட்டால், இந்த வாசனை குறைந்துவிடும். இந்த Signal கிடைத்தவுடன், இராணிக்கரையான் இராணுவ வீரர்களுக்கான முட்டைகளை வைக்கும். இப்படியாக இந்த கரையான்களுக்கு தனி இராஜியங்கள் உண்டு என்பதை அறியும்போது இந்த சின்னஞ்சிறிய கண்தெரியாத பூச்சிக்கு இத்தனைப்பெரிய ஆற்றலைக் கொடுத்த இறைவன் எப்பேர்ப்பட்ட சக்திபடைத்தவன் என்பதை நாம் அறிய முடிகின்றது.
..வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் நன்கறிகின்றான் அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் ஆவான்.
(திருக்குர்ஆன் 3:29)
...வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள அனைத்தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம். அவன் நாடியதைப் படைக்கிறான் இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.
(திருக்குர்ஆன் 5:17 )
பாம்பு ஏன் புற்றுக்கு வருகிறது ?
ஒரு கரையான் புற்றில், பல மில்லியன் கரையான்கள் இருக்கும். அவற்றின் வளர்சிதை மாற்றங்களால் உருவாகும் வெப்பம் மற்றும் நீராவி ஆகியன ஒருவிித மிதவை உந்து விசைகளை (Buoyant forces) உள்ளிழுக்கும். எனவே புற்றின் உள்ளிருக்கும் காற்று Central chimney மூலம் மேலே வரும். அப்போது புற்றின் உள்காற்றிலிருக்கும் ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு, வெப்பம் மற்றும் நீராவி ஆகியன Surface conduits மூலம் புற்றின் வெளிக்காற்றுடன் பரிவர்த்தனை செய்துகொள்ளும். எனவே புத்தம் புதிய காற்று, மீண்டும் புற்ிறுக்குள் Surface conduits, Central chimney மூலம் உள்ளிழுக்கப்படும். எனவே புற்று எப்போதும் சில்லென்றே இருக்கும். எனவேதான், பாம்பு புற்றுக்கு வந்து தங்கிவிடும்.
கரையான்கள் மரம் மற்றும் நூல்களை உண்ணுகிறதே, அதை எப்படி செரிக்கிறது ?
பொதுவாக, பேப்பர் மற்றும் மரங்களில், செல்லுலோஸ் என்ற பொருள் இருக்கும். அதை செரிக்கத் தேவையான செல்லுலேஸ் என்ற நொதி நமக்கோ, கரையான்களுக்கோ இல்லை. கரையான்கள் தங்கள் குடலில் Protozoa க்களுக்கு உணவும் உறைவிடமும் கொடுக்கும். இதற்குக் Protozoa க்கள் கரையான்களுக்கு செல்லுலோஸை செரிக்கத் தேவையான செல்லுலேஸ் என்ற நொதியைக் கொடுக்கும். இப்படித்தான் கரையான்களுக்கு உணவு செரிக்கின்றது.
நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் அற்பமானதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். இறைநம்பிக்கைக் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்.
திருக்குர்ஆன்2:26
இத்துணை ஆற்றல்களைப் பெற்றிருக்கும் இந்த அதிசயப்பிராணிகளான கரையான்களுக்குக் கண்களே இல்லை என்பது அதைவிடவும் அதிசயமல்லவா? கொசுக்களுக்கு 100 கண்களைக் கொடுத்த இறைவன் கண்களே இல்லாதும் என்னால் படைப்புகளை படைத்து இயங்கச் செய்யமுடியும் என்பதற்கு இது ஒரு சான்றாகும்.
ഗൂഗിളിൽ അർത്ഥം തെരയാൻ!!
രു വാക്കിന്റെ അർത്ഥം അറിയാനായി ഒരുവൻ ഗൂഗിചെയ്യുന്നത് ഇന്നു യാദൃശ്ചികമായി കണാനിടയായി!! babysitting എന്ന വാക്കിന്റെ അർത്ഥമറിയാനായിരുന്നു ഈ പരാക്രമമത്രയും... കുറച്ചുസമയം നോക്കിനിന്ന ഞാൻ അവനീ സൂത്രം പറഞ്ഞുകൊടുക്കുകയുണ്ടായി. നെറ്റിൽ കളിക്കുന്ന പലർക്കും ഇതറിയും; എന്നാലും അറിയാത്തവരും കാണും എന്ന ധാരണയിലാണിതിവിടെ ഷെയർ ചെയ്യുന്നത്.
ബേബിസിറ്റിങിന്റെ അർത്ഥമറിയാൻ ആ സുഹൃത്ത് ആദ്യം babysitting എന്നു മാത്രം ഗൂഗിൾ ചെയ്തു നോക്കി
പിന്നെ babysitting , meaning എന്നു നോക്കി, അതുകഴിഞ്ഞ് meaning of babysitting എന്നു നോക്കി...
അപ്പോഴൊക്കെ കിട്ടിക്കൊണ്ടിരുന്നത് വിക്കീപീഡിയ, ഡിക്ഷണറീസ് പോലുള്ള മറ്റുപല സൈറ്റുകളുടേയും ലിങ്കുകളാണ്.
ഗൂഗിളിൽ ഒരു വാക്കിന്റെ അർത്ഥം കണ്ടുപിടിക്കാനുള്ള എളുപ്പവഴി അർത്ഥം കണ്ടുപിടിക്കേണ്ട വാക്കിനെ define: ചേർത്തെഴുതി സേർച്ച് ചെയ്യുന്നതാണ്.
ഇവിടെ നമ്മുടെ കാര്യത്തിൽ define:babysitting എന്നു ഗൂഗിളിൽ സേർച്ച് ചെയ്താൽ മതിയാവും!
ഏതൊരു വാക്കിനേയും ഇങ്ങനെ സേർച്ച് ചെയ്താൽ അതിന്റെ ശരിയായ പ്രൊനൗൺസിയേഷൻ അടക്കം കിട്ടും.
ഉദാഹരണങ്ങൾ നോക്കുക:
1) define:babysitting
2) define:ombudsman
3) define:collage
இளமையா இருக்க ஆசையா???

‘குமரியை உண்டால், குமரியை வெல்ல முடியும்’ என்கிறது சித்த மர...ுத்துவம். குமரி என்பது சோற்றுக்கற்றாழை யின் மற்றொரு பெயர்.
‘அலோவேரா’ சோப்பு, ஷாம்பூ... எல்லாம் சோற்றுக் கற்றாழை மூலம்தான் உற்பத்தி செய்கிறார்கள். தரிசு நிலத்தில் விளையும் இந்த செடிக்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உண்டு.
கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள ் மறைந்து போகும். இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும். கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.
என்ன இல்லை சோற்றுக்கற்றாழை யில்!
சோற்றுக் கற்றாழைக்குசித்த மருத்துவர்கள் கொடுத்திருக்கும ் மதிப்பே தனிதான். மூலிகைகள் உலகத்தில் ராஜ மரியாதையுடன் வலம் வரும் இந்த சோற்றுக்கற்றாழை அதற்கு முற்றிலும் தகுதி உடையதுதான். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகை ஏராளமான மருத்துவக்குணங் களை கொண்டது.
தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்லகட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணிபற்றாமலிருப்பதற ்காகவும் தொங்க விடப்படுவது உண்டு.
கற்றாழையின் சோற்றைத்தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக்குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.
சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.
வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில் புண்ஆறும்.
கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.
இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் தீரும்.
மஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதா ல் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையு ம் அதிகரிக்கிறது.
ஜெசி ஓவன்ஸ் பற்றிய தகவல் !!!!

ஆரிய இனமே உலகில் மிகச்சிறந்த இனம், வெள்ளைத்தோல் உடையர்வர்கள்தான் எதிலும் சிறக்க முடியும் என்ற ஹிட்லரின் அபத்தமான நம்பிக்கையை தவிடு பொடியாக்கிய அந்த வரலாற்று நாயகரின் பெயர் தான் ஜெசி ஓவன்ஸ். அந்தப் பெயரை ஒலிம்பிக் போட்டிகள் என்ற வானம் இன்றும் பெருமையுடன் சுமந்து நிற்கிறது.
ஜேம்ஸ் கிளீவ்லண்ட் ஓவன்ஸ் 1913 ஆம் ஆண்டு செப்டம்பர் 12ந்தேதி அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் ஓர் எளிமையான கருப்பர் இன குடும்பத்தில் ஏழாவது பிள்ளையாக பிறந்தார். அவரது தாத்தா கொத்தடிமையாக இருந்தவர். James Cleveland Owens என்பதன் முதல் எழுத்துக்களைக் கொண்டு ஓவன்ஸை எல்லோரும் J C என்று அழைப்பார்கள். அவர் பள்ளிக்குச் சென்ற முதல் நாள் அவரது பெயரை ஆசிரியர் கேட்க ஜெ சி என்று சொல்ல அதனை ஜெசி என்று எழுதிக்கொண்டார் அந்த ஆசிரியர். அன்றிலிருந்து அவரது பெயர் ஜெசி ஓவன்ஸ் என்றானது. குடும்பம் ஏழ்மையாக இருந்ததால் வாழ்க்கை சிரமமாக இருந்தது. குடும்பத்திற்கு உதவ மளிகைப்பொருட்களை விநியோகம் செய்வது, காலணிகள் பழுது பார்ப்பது, மின்தூக்கிகள் இயக்குவது போன்ற பல்வேறு வேலைகளைச் செய்தார் ஜெசி. அந்த வேலைகளைச் செய்யும்போதுதான் ஓடுவது என்றால் தனக்கு பிடிக்கும் என்பதை உணர்ந்தார் அவர். அந்தத் தெளிவுதான் அவரது வாழ்க்கையை மாற்றி அமைத்தது.
பள்ளியில் ஒருநாள் அறுபது மீட்டர் தூரம் ஓடும் பயிற்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு ஓடிய ஜெசியைப் பார்த்து அவருக்கு நல்ல எதிர்காலம் இருப்பதை உணர்ந்தார் பயிற்றுவிப்பாளர் ச்சார்லி ரைலி. ஜெசிக்கு நல்ல பயிற்சி அளிக்க விரும்பினார். ஆனால் பள்ளி முடிந்து பல வேலைகள் பார்க்கும் நிர்பந்தம் இருந்ததால் எப்படி பயிற்சியில் ஈடுபடுவது என்று தயங்கினார் ஜெசி. அவரது நிலையை புரிந்துகொண்ட ரைலி காலை நேரங்களில் தனியாக பயிற்சியளிப்பதாக கூறவே அதனை ஏற்றுக்கொண்டார் ஜெசி. அதிலிருந்து அவர் பட்டைத் தீட்டிய வைரமாக ஜொலிக்கத் தொடங்கினார். அவருக்கு 19 வயதானபோது கல்லூரித் திடல்திடப் போட்டிகளில் நூறு மீட்டர் ஓட்டத்தில் அப்போதிருந்த உலகச் சாதனையை சமன் செய்தார். அவரது அபாரத் திறனைக் கண்ட அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் அவரை தங்கள் மாணவராக்கிக் கொள்ள போட்டிப் போட்டனர்.
அப்படி முன்வந்த 28 பல்கலைக்கழகங்களிலிருந்து ஒஹாயோ ஸ்டேட் (Ohio State University) பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுத்தார் ஜெசி ஓவன்ஸ். அப்போது அமெரிக்காவில் இன ஒதுக்கல் நடப்பில் இருந்ததால் பல இன்னல்களைச் சந்தித்தார் ஜெசி. அவர் கருப்பர் என்பதால் பல்கலைக்கழக வளாகத்தில் தங்க அனுமதி மறுக்கப்பட்டது. திடல்திட விளையாட்டுக் குழுக்களோடு பயணம் செய்யும்போது கருப்பர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட உணவகங்களிலும், ஹோட்டல்களில் மட்டும்தான் அவர் உணவு உண்ண முடியும், தங்க முடியும். அல்லது உண்வை பொட்டலமாக வாங்கி வெளியில் சாப்பிட வேண்டும். தவிர்க்க முடியாத சில சமயங்களில் வெள்ளையர்களின் ஹோட்டல்களில் தங்க அனுமதிக்கப்பட்டாலும் அவர் பின் கதவு வழியாகத்தான் நுழைய அனுமதிக்கப்பட்டார். மேலும் ஹோட்டலுக்குள் மின் தூக்கியைப் பயன்படுத்தக்கூடாது. படிகளில் ஏற வேண்டும்.
இப்படி வெள்ளை இன பெரும்பான்மையினரால் எல்லா விதங்களிலும் ஒதுக்கப்பட்ட ஓவன்ஸ் அவரது ஓட்டத்திறமைக்காக மட்டும் விரும்பபட்டார். தனக்கு இழைக்கப்படும் சமூக அநீகளுக்கு தன் கால்களாலேயே பதிலடி தந்தார் ஓவன்ஸ். 1935 ஆம் ஆண்டு மே 25ந்தேதி ஓர் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டினார். அந்த ஒரே நாளில் அவர் மூன்று உலகச் சாதனையை நிகழ்த்தி நான்காவது சாதனையைச் சமன் செய்தார். அதற்கு அவர் எடுத்துக்கொண்ட நேரம் எவ்வுளவு தெரியுமா? வெறும் 45 நிமிடங்கள்தான். விளையாட்டு உலகில் அதற்கு முன்னும் அப்படி ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டதில்லை, அதற்குப் பிறகும் அந்தச் சாதனை முறியடிக்கப்படவில்லை. அந்த அதிசயத்தை நிகழ்த்திய அடுத்த ஆண்டே உலகை வியப்பிலும், ஹிட்லரை வெறுப்பிலும் ஆழ்த்தினார் ஜெசி ஓவன்ஸ். 1936 ஆம் ஆண்டு பெர்லனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அவர் பிரகாசமாக மின்னினார்.
ஹிட்லர் அப்போது ஆட்சியில் இருந்ததால் பலர் ஹிட்லர் ஒலிம்பிக் போட்டிகள் என்றும் அதனை வருணித்தனர். ஆரியர்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற இருமாப்போடு அமர்ந்திருந்த ஹிட்லரின் கண்களுக்கு முன்னே ஒன்றல்ல, இரண்டல்ல மூன்று உலகச் சாதனைகளோடு நான்கு தங்கப்பதக்கங்களை வென்று குவித்தார் ஜெசி ஓவன்ஸ். உலகின் கண்களுக்கு முன் தனது சித்தாந்தம் சிதைந்து போன வெறுப்பில் ஒலிம்பிக்ஸ் அரங்கத்தை விட்டு ஆத்திரத்தோடு வெளிநடப்புச் செய்தார் ஹிட்லர். ஆனால் ஜெர்மன் விளையாட்டு ரசிகர்களோ ஓவன்ஸை கைதட்டி ஊக்கமூட்டினர். 100 மீட்டர், 200 மீட்டர், 4x100 மீட்டர், நீளம் தாண்டுதல் ஆகியவற்றில் ஓவன்ஸ்க்கு தங்கம் கிடைத்தது. ஒரே ஒலிம்பிக் போட்டியில் நான்கு தங்கப்பதக்கங்களை வென்ற முதல் அமெரிக்கர் என்ற பெருமை அவருக்கு கிட்டியது.
அப்படிப்பட்ட சாதனையைச் செய்தும் அவர் கருப்பர் என்ற ஒரே காரணத்துக்காக எந்த விளம்பர நிறுவனமும் அவரை ஒப்பந்தம் செய்ய முன் வரவில்லை. இதுபோன்ற அநீதிகளால்தான் மார்ட்டின் லூதர் கிங் போன்ற சுதந்திர வீரர்கள் அமெரிக்காவில் உதித்தனர். தனக்கு நன்றாக பேசும் திறன் உண்டு என்பதை உணர்ந்த ஓவன்ஸ் பொது நிகழ்ச்சிகளில் பேசவும், விரிவுரை வழங்கவும் தொடங்கினார். அவரது சுபாவம் பலருக்கும் பிடித்திருந்ததால் சொந்தமாக பொது உறவு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். அமெரிக்கா முழுவதும் பயணம் செய்து மதம், நேர்மை, கடும் உழைப்பு ஆகிய மூன்றை பற்றியும் அவர் பேசினார். வசதி குறைந்த பகுதிகளில் வசிக்கும் இளையர்களுக்காக பல விளையாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும், ஆதரவளித்தும் ஊக்கமூட்டினார்.
1976 ஆம் ஆண்டு ஓவன்ஸ்க்கு 'Presidential Medal of Freedom' எனப்படும் தனி நபருக்கான அமெரிக்காவின் ஆக உயரிய விருதை வழங்கி கவுரவித்தார் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜெரால்ட் ஃபோர்ட். பின்னாளில் புற்றுநோய் ஏற்பட்டு 1980 ஆம் ஆண்டு மார்ச் 31ந்தேதி தமது 66 ஆவது வயதில் காலமானார் ஜெசி ஓவன்ஸ். தான் காதலித்த ரூத் சாலமன் என்ற பெண்ணை மணந்து கொண்டு Gloria, Beverly, Marlene, என்ற மூன்று பெண் குழந்தைகளுக்கு தந்தையானார் ஓவன்ஸ். அவரது மனைவியும் மகள் மார்லினும் இன்றுவரை “ஜெசி ஓவன்ஸ் பவுண்டேஷன்ஸ்” என்ற அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர். தங்கள் இலக்கை அடைய விரும்பும் தகுதி நிறைந்த ஆனால் வசதி குறைந்த இளையர்களுக்கு இன்றும் நிதியுதவி வழங்குகிறது ஜெசி ஓவன்ஸ் அறக்கட்டளை.
வறுமை, நிறவெறி, இன ஒதுக்கல், என பல சமூக அநீதிகளைத்தாண்டி ஓவன்ஸால் உலகம் போற்றும் அளவுக்கு உயர்ந்து நிற்க முடிந்ததென்றால், நமக்கு தடையாக இருப்பவை எவை? கொத்தடிமையாக வாழ்ந்த ஒருவரின் பேரன் விளையாட்டு உலகில் உச்சத்தைத் தொட்டது அதிர்ஷ்டத்தாலோ, மாய மந்திரத்தாலோ, ஊக்க மருந்துகளாலோ அல்ல. பயிற்சித் தடங்களில் அவர் சிந்திய வியர்வையும், தன் தோலின் நிறம் ஒரு குறையல்ல என்ற நம்பிக்கையும், கடும் உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும் உலகம் எப்போதுமே தலைவணங்கும் என்ற தைரியமும்தான் ஜெசி ஓவன்ஸ்க்கு 'ஒலிம்பிக்ஸ்' என்ற வானத்தை வசப்படுத்தியது. ஓவன்ஸைப்போல் வியர்வை சிந்தவும், விடாமுயற்சியோடு உழைத்தால் எல்லோரும் ஒரு நாள் முன்னேறலாம் .......
Friday, May 4, 2012
கூகிள் (Google) உருவான சுவாரஸ்யமான கதை
கூகிள்
எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி
தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு." நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க" என்று
சொல்லிட்டு சென்னை 28 என்ற மிகப்பெரும் ஹிட் படம் ஒன்றை எடுத்திருந்தார்
வெங்கட்பிரபு. அதுமாதிரிதான் "நாங்க ஜாலியா கம்பனி ஆரம்ம்பிக்கிறோம் "
என்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய கம்பனிதான் இந்த கூகிள்.அந்த கம்பனிதான்
இணைய உலகில் ஒரு விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.
ஷெல் என்பவர் முப்பத்தேழு வயதுப் பெண்மணி. ஒரு பெரியஅமெரிக்கக் கம்பெனியில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு பெரிய தப்பு செய்துவிட்டார். அவசரமாக முடிவு எடுத்து, ஆலோசிக்காமல் செயல்பட்டு, அகலக் கால் வைத்துவிட்டார். அவரால் கம்பெனிக்கு பல லட்சம் டாலர் நஷ்டம். தன் மடத்தனம் புரிந்தவுடன் தயங்கிக்கொண்டே முதலாளியிடம் போய் விஷயத்தைத் தெவித்தார்.
இந்த நிலையில் பாஸ் என்ன செய்வார்?
வேறொரு கம்பெனியாக இருந்திருந்தால் உடனே ஷெலுக்கு சீட்டுக் கிழிவதுடன், அவருடைய சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசர் வரை அத்தனை பேருக்கும் அண்டர்வேருடன் நிறுத்தி வைத்து பரேடு நடந்திருக்கும். ஆனால் ஷெலின் பாஸ் புன்னகையுடன், ""அப்படியா, தாங்க்ஸ்!'' என்றார்.
""தயங்கித் தயங்கி, ஒரு முடிவும் எடுக்காமல் களிமண் மாதிரி உட்கார்ந்திருப்பவர்கள்தான் தப்பே செய்ய மாட்டார்கள். அடிக்கடி தடுக்கி விழுபவர்கள்தான் நம் கம்பெனிக்குத் தேவை. அவர்கள்தான் நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்!''
இந்த வித்தியாசமான கம்பெனிதான் கூகிள். அதன் வினோதமான முதலாளிதான் லாரி பேஜ். தன் கல்லூரித் தோழர் செர்ஜி ப்ன்னுடன் சேர்ந்து காலேஜ் படிக்கும்போதே கம்பெனி ஆரம்பித்தவர். (படிப்புதான் குட்டிச் சுவராகிவிட்டது!) எட்டு வருடத்தில் உலகத்தின் நம்பர் ஒன் இன்டர்நெட் கம்பெனியாக வளர்ந்து போட்டியே இல்லாமல் இணைய மலையின் உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது கூகிள்.
லாரியும், செர்ஜியும் பிட்ஸா சப்ளை செய்து சம்பாதித்த காசில் மிச்சம் பிடித்து கம்ப்யூட்டர் வாங்கித் தங்கள் ஹாஸ்டல் அறையில் கம்பெனியை ஆரம்பித்தார்கள். பிறகு ஒரு வீட்டு கராஜை வாடகைக்கு எடுத்து ஆறு ஊழியர்களுடன் கம்பெனி நடத்தினார்கள். இன்றையத் தேதிக்கு கூகிளின் மதிப்பு பன்னிரெண்டாயிரம் கோடி டாலருக்கு மேல்.
கணிதத்தில் கூகால் (googol) என்ற ஒரு பெரிய நம்பர். ஒன்று போட்டு நூறு சைபர். எத்தனை கோடி வலைப் பக்கங்கள் இருந்தாலும் தேடித் தந்துவிடுவோம் என்ற அர்த்தத்தில் இந்தப் பெயரை வைத்தார்கள். ஆனால் நம் கதாநாயகர்களுக்கு ஸ்பெல்லிங் கொஞ்சம் தகராறு. (கூகால்) என்பதற்குப் பதிலாக (கூகிள்) என்று தப்பாக எழுதிவிட்டார்கள். யாரும் கவனிக்காததால் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.
இதை உருவாக்கி முடித்ததும் இந்த தேடல் நுட்பத்தை Yahoo போன்ற பெரும் தலைகள் யாருக்காவது விற்கலாம் என முடிவெடுத்தனர்.வாங்க யாரும் இல்லாததால் 1998-ல் Google என்ற கம்பெனி உருவானது.1998 நவம்பரில்
தான் கூகிள் இணையதளம் முதலாக தலைக்காட்ட தொடங்கி யிருந்தது.ஆரம்பத்தில் பணம் ஒன்றும் அவ்வளவாய் சம்பாதிக்க இயலவில்லை.Sun-னும் IBM-மும் சில Sun Ultra II,F50 IBM RS/6000
செர்வர்களை தானமாக வழங்கியிருந்தனர்.2001-ல் யாகூ கூகிளை வாங்க விலைப்பேசி கொண்டிருந்ததாம்.தேடல் இயந்திரத்தின் வலிமை அறியா யாகூ ஒரு தேடல் இயந்திரத்துக்கு இத்தனை விலையா ($5 Billion) என ஒதுங்கி விட்டது.(அன்று யாகுவிடம் விலைபோயிருந்தால் கூகிள் என்னவாயிருக்கும்?...யூகிக்க கூட இயலவில்லை.)
நிறுவனத்தில் எட்டாயிரம் பேர் வேலை செய்கிறார்கள். எல்லாம் பொறுக்கி எடுத்த மணி மணியான என்ஜினீயர்கள். அவர்களுடைய கலிபோர்னியா ஆபீசில் போய்ப் பார்த்தால் ஏதோ பல்கலைக்கழகக் கட்டடத்துக்குள் நுழைந்துவிட்ட மாதிதான் இருக்கிறது. இளைஞர் பட்டாளம் ஏக இரைச்சலாகச் சிரித்துக் கொண்டு அடித்துக் கொண்டு கானா பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறது. வராந்தாவில் ஊழியர்கள் வளர்க்கும் செல்ல நாய்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் டேபிள் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். மடியில் குழந்தையை வைத்துக் கொண்டே வேலை செய்யும் தாய்மார்கள், மூடு வருவதற்காகப் பாட்டுக் கேட்கும், பியானோ வாசிக்கும் இளைஞர்கள்... ஆபீஸ் மாதிரியாகவா தெரிகிறது?
கூகிள் ஊழியர்களுக்கு கம்பெனி செலவில் சாப்பாடு, காப்பி இலவசம். கூகிள் கான்டீன் என்பது நம் மியூசிக் அகாதெமி கான்டீன் போல பிரபலமானது. அதைத் தவிர அலமாரி அலமாரியாக நொறுக்குத் தீனிகள், பழங்கள், பானங்கள். கொடுத்து வைத்தவர்கள், பிரித்து மேய்கிறார்கள்!
கூகிள் பிறந்த புதிதில் சர்ச் எஞ்சின் எனப்படும் வலைத் தேடல் இயந்திரமாக மட்டும்தான் இருந்தது. மசால் தோசை என்று தேடினால் இன்டர்நெட்டில் இருக்கும் கோடியோ கோடிக்கணக்கான தகவல் பக்கங்களில் புகுந்து புறப்பட்டுத் தேடி வினாடி நேரத்தில் விடை கொண்டு வந்துவிடும். இந்த மின்னல் வேகத் தேடல் டெக்னாலஜியைக் கண்டுபிடித்தவர்கள் பேஜும் பின்னும்தான். இதைச் செய்ய அவர்கள் பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் எதையும் உபயோகிக்கவில்லை; சாதாரணமாகக் கடையில் கிடைக்கும் எட்டணா கம்ப்யூட்டர்களை ஏராளமான எண்ணிக்கையில் வாங்கிப் போட்டு அவற்றை ஒத்துழைக்க வைத்த சாப்ட்வேர் சாணக்கியத்தனம்தான் அவர்கள் செய்தது.
கூகிளில் வேலை செய்பவர்கள் எல்லோருக்கும் வாரம் நாலு நாள் ஆபீஸ் வேலை, ஒரு நாள் சொந்த வேலை. அதாவது, உங்களுக்கு ஏதாவது புது ஐடியா தோன்றினால் அதை முயற்சித்துப் பார்க்க கம்பெனி காசில் வசதி செய்து தருகிறார்கள். கூகிள் அறிமுகப்படுத்தியுள்ள பல புதுமையான சேவைகள் இப்படி ஆளாளுக்கு குருட்டாம்போக்கில் யோசித்து ஆரம்பித்து வைத்ததுதான். ""ஒவ்வோர் ஐடியாவும் ஒரு வைரம்; "தினப்படி வேலையில் பிசியாக இருக்கிறேன், யோசிக்க நேரமில்லை' என்பதனால் எந்த நல்ல ஐடியாவும் வீணாகிவிடக் கூடாது'' என்பது கூகிள் கொள்கை.
கூகிள் ஊழியர்கள் எல்லாரும் கிட்டத்தட்ட சுதந்திரமாக, தமக்குத் தாமே வேலை செய்துகொள்கிறார்கள். பின்கை கட்டிக் கொண்டு பின்பக்கம் உலாத்திக் கண்காணித்துக் கொண்டே இருக்கும் சூப்பர்வைசர்கள் கிடையாது. ""எவ்வளவுக்கு எவ்வளவு மானேஜ்மென்ட் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் குறைந்துடும். ஃப்ரீயாக விட்டால்தான் எல்லாரும் பொறுப்பாக வேலை செய்வார்கள்'' என்கிறார்கள். (கார்ப்பரேட் சர்வாதிகாரிகளே! கவனித்தீர்களா?)
கூகிள் வருவதற்கு முன்னும் பற்பல தேடல் இயந்திரங்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் எல்லாம் ஒரே குறைபாடு, குப்பைத் தொட்டியிலிருந்து அள்ளி வந்த மாதிரி சம்பந்தா சம்பந்தமில்லாத வலைப் பக்கங்களையெல்லாம் பீறாய்ந்து கொண்டுவந்து போட்டுவிடும். தங்கள் வெப் சைட்தான் முதலில் வர வேண்டும் என்பதற்காக சர்ச் எஞ்சினை நயவஞ்சகமாக ஏமாற்றுவதற்குப் பலர் சதித் திட்டங்கள் வேறு செய்து வைத்திருந்தார்கள்.
கூகிள்தான் முதல் முதலாக பக்கங்களைத் தரப்படுத்தி மார்க் போட்டு உருப்படியான தகவல்களை முதலில் கொண்டு வந்து தர ஆரம்பித்தது. பேஜ் ராங்கிங் (Page ranking) என்ற இந்த டெக்னிக்கை கண்டுபிடித்தவர் லாரி பேஜ். ஒரு வலைப் பக்கத்தை நிறையப் பேர் சிபாரிசு செய்து இணைப்புச் சங்கிலி போட்டு வைத்திருந்தால், அதிலும் பெரிய மனிதர்கள் சிபாரிசு செய்தால் அதிக மார்க் என்பது இதன் தத்துவம். கூகிளையும் ஏமாற்ற முடியும்; ஆனால் கஷ்டம்.
கூகிள் ஆராய்ச்சிசாலை என்று புதிது புதிதாக என்னவோ கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
கூகிள் நியூஸ் என்பது உலகத்தில் உள்ள அத்தனை செய்திகளையும் ஒரே இடத்தில் தருகிறது;
கூகிள் மேப் என்ற சேவையில் அமெரிக்காவின் வரைபடம் மொத்தமும் வைத்திருக்கிறார்கள். ஏதாவது ஓர் ஏரியாவில் போய் நின்றுகொண்டு இங்கே பக்கத்தில் பிட்ஸா எங்கே கிடைக்கும் என்றால் உடனே காட்டுகிறது.
லட்சக்கணக்கான புத்தகங்கள் கொண்ட இலவச லைப்ரரி நடத்துகிறார்கள்.
பி.எச்டி மாணவர்கள் காப்பி அடிக்க ஆராய்ச்சிக் கட்டுரைகள் தேடித் தருகிறார்கள்.
பறவைப் பார்வையாக சாட்டிலைட்டிலிருந்து உலகத்தைப் பார்க்கவும் வசதி செய்திருக்கிறார்கள் (ஊரான் வீட்டு நெய்யே என்று இந்தியாவின் தலைப்பக்கம் கொஞ்சம் கிள்ளி பாகிஸ்தானுக்குக் கொடுத்திருப்பதுதான் பார்க்கச் சகிக்கவில்லை.)
கூகிள் பயண சேவையில் பஸ், ரயில் நேரங்கள், வழித் தடங்கள் சொல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட ஸ்டாப்பில் அடுத்த பஸ் எப்போது வரும் என்பது வரை காட்டுகிறது (ஆழ்வார்பேட்டையில் அல்ல, அமெரிக்காவில்!). கூகிள் செவ்வாய் என்ற ப்ராஜெக்டில் செவ்வாய் கிரகத்தின் நுணுக்கமான போட்டோக்களை கலர் கலராக சேமித்து வைத்திருக்கிறார்கள்.
உங்களுக்கே சொந்தமாக இணையத்தில் ஓர் ஒண்டுக் குடித்தனம்- ஒரு வலைப் பக்கம் தேவை என்றால் ஐந்து நிமிடத்தில் அமைத்துக்கொள்ளலாம். டைப் அடிக்கத் தெரிந்தால் போதும்; மற்றதெல்லாம் அவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள்.
ஜி மெயில்தான் இப்போது சூடான மெயிலை விட அதிகம் நாடப்படுகிறது. எல்லா இ-மெயில் கம்பெனிகளும் பிசுகிப் பிசுகி ஐம்பது மெகாபைட், நூறு மெகாபைட் என்று இடம் தந்துகொண்டிருந்தபோது கூகிள் மட்டும் ஒரேயடியாக ஆயிரம் எம்.பி. இலவசம் என்று அறிவித்துப் போட்டியாளர்களைப் பதறி ஓட வைத்தார்கள். பிறகு இது இரண்டாயிரத்தைத் தாண்டி இலவசமாக இன்னும் வளர்ந்துகொண்டே போகிறது.
இன்டர்நெட் பூராவும் அநியாயத்துக்குக் கொட்டிக் கிடக்கும் மற்றொரு விஷயம் செக்ஸ். குழந்தைகள் கூகிளில் தேடும்போது பலான சமாச்சாரங்கள் எதுவும் வந்துவிடக் கூடாதே என்பதற்காக முக்கியமான வார்த்தைகளை வைத்து மேற்படி சரக்கா என்பதை நிர்ணயித்து வடிகட்டி விடுகிறார்கள். ஆனால் படங்களைப் பொறுத்தவரை கம்ப்யூட்டருக்கு கண்ணில்லை. ஒரு படத்தைக் காட்டி பக்திப் படமா, பலான படமா என்று கம்ப்யூட்டரை சரியாகச் சொல்ல வைத்துவிட்டால் கேள்வி கேட்காமல் டாக்டர் பட்டம் கொடுக்கலாம். சில கூகிள் விஞ்ஞானிகள் சேர்ந்து இதற்கு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.
மனித வடிவம், தோல் நிறம் எல்லாவற்றையும் எண்களாக மாற்றி ஸ்டாடிஸ்டிக்ஸ் கணக்குப் போட்டு படத்திலிருப்பது சம்திங் சம்திங்தான் என்பதை பெரும்பாலும் கண்டுபிடித்து விடுகிறார்கள்.
எந்த வார்த்தையை எந்த ஊர் ஜனங்கள் அதிகம் தேடுகிறார்கள் என்று தேதி வாரியாகப் படம் வரைந்து காட்டுகிறார்கள்.
அப்துல் கலாம் என்ற பெயரை கோவை மக்கள்தான் அதிகம் தேடுகிறார்கள்.
ஷகீலாவை கேரளத்து ரசிகர்கள் கூகிள் பூராத் தேடித் துரத்தியிருக்கிறார்கள்.
இந்தியாவின் டாப் டென் என்று பார்த்தால் பொதுவாக நாம் கிரிக்கெட் பற்றித்தான் அதிகம் விசாரித்திருக்கிறோம். அடுத்தபடி சானியா மிர்ஸா, ப்ரியங்கா சோப்ரா, நமீதா வருகிறார்கள்.
சில படிக்கிற பையன்கள் இந்திரா காந்தி யுனிவர்சிட்டியையும் தேடியிருக்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான x86 செர்வர்களில் தாங்களே உருவாக்கியுள்ள Linux-ல் தாங்களே உருவாக்கிய வெப்செர்வரில் எல்லாவற்றையும் ஓட்டுகிறார்கள்.அவர்கள் வெப் செர்வர் பெயர் GWS/2.1 அதாவது Google Web Server, current Version 2.1.அதாவது Apache-ன் கூகிள் வடிவம் என்கிறார்கள்.
கூகிள் செர்வர்கள் 450,000-ஐயும் ஓட்ட 20 மெகாவாட்டுகள் மின்சாரம் தேவையாம்.அதாவது மாதம் கூகிளுக்கு கரண்ட் பில் $2 மில்லியன்கள்.அம்மாடியோவ்!!
Subscribe to:
Posts (Atom)