Digital Time and Date

Welcome Note

Saturday, March 3, 2012

பிளாக்கரில் எந்த கோடிங்கும் சேர்க்காமல் Recent Post விட்ஜெட் வைக்க

பிளாக்கரில் சில குறிப்பிட்ட விட்ஜெட்களை வைத்திருக்க வேண்டியது அவசியமானது. (பிளாக்கரில் எந்தெந்த அவசியம் இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் சென்று பார்க்கவும்.) முக்கியமான விட்ஜெட்களில் Recent Post விட்ஜெட்டும் ஒன்று. இந்த விட்ஜெட்டை பல வழிகளில் உங்கள் பிளாக்கர் தளங்களில் இணைக்கலாம். அந்த வரிசையில் இன்று எந்த மூன்றாம் தள கொடிங்கையும் சேர்க்காமல் சுலபமாக நம் பிளாக்கரில் உள்ள டீபால்ட் வசதியின் மூலம் Recent Post விட்ஜெட் இணைப்பது எப்படி என பார்ப்போம்.

  • முதலில் Design ==> Add a Gadget ==> Feed என்பதை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
  • Feed கிளிக் செய்ததும் உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்கள் பிளாக்கில் Feed URL கொடுக்கவும்.
  • கொடுத்த பிறகு அருகில் உள்ள Continue என்ற லிங்கை அழுத்தவும்.
  • Continue கொடுத்தவுடன் உங்களுடைய பிளாக்கின் சமீபத்திய 5 பதிவுகளுடன் பாப்-அப் விண்டோ ஓபன் ஆகும்.
  • அதில் தலைப்பை உங்கள் விருப்பம் போல மாற்றி கொண்டு தெரிய வேண்டிய பதிகளின் எண்ணிக்கையும் தேர்வு செய்து கொள்ளவும்.
  • உங்களுக்கு விட்ஜெதஈல் தெரிய வேண்டிய மற்ற வசதிகள் (Date, Author) தேவையென்றால் டிக் மார்க் கொடுத்து கொள்ளவும். 
  • முடிவில் கீழே உள்ள Save என்ற லிங்கை அழுத்தினால் Recent Posts விட்ஜெட் உங்கள் பிளாக்கரில் இணைந்து  விடும். 
நீங்கள் ஒவ்வொரு புது பதிவு போடும் பொழுதும் அந்த பதிவு தானாகவே இந்த விட்ஜெட்டில் அப்டேட் ஆகிவிடும். 
Tech Shortly
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

நீங்களும் கலெக்டர் ஆகலாம் மிக எளிதாக

IAS வெறும் கனவல்ல, நிஜமே!
இந்த ஆண்டிற்கான(2012) சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கான தேதி அறிவிக்கபட்டு உள்ளது. வரும் மே மாதம் 20 ஆம் தேதி(20.05.2012)அன்று, முதல் நிலை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது.
மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும் IAS, IPSபோன்ற இந்திய ஆட்சிப் பணி தேர்வுகள், இந்தியாவின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த அரசு பணிதேர்வாக கருதப்படும்.
இந்திய ஆட்சி பணி தேர்வுகளில் தகுதி பெறுபவர்கள் தான், இந்தியன் அட்மினிஸ்ரேட்டிவ் சர்வீஸ்(IAS), இந்தியன் போலீஸ் சர்வீஸ்(IPS), இந்தியன் பாரின் சர்வீஸ்(IFS), இந்தியன் ஆடிட் அண்ட் அக்கவுன்ட்ஸ் சர்வீஸ், இந்தியன் இன்பர்மேஷன் சர்வீஸ் உள்ளிட்ட நாட்டின் மிக முக்கியமான 25 சிவில் சர்வீஸ் பணிகளில் சேர முடியும்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு கட்டணம்:
சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். UPSC யின் http://upsconline.nic.in/ என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
பெண்கள், SC, ST, உடல் ஊனமுற்றோர் தவிர்த்து, மற்ற அனைவரும் தேர்வுக் கட்டணமாகரூபாய் 50 செலுத்த வேண்டும்.
இந்த தேர்வில் கலந்து கொள்ள குறைந்தபட்ச தகுதிகள்:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகம் அல்லது கல்லூரி அல்லது கல்வி நிறுவனத்தின் மூலமோ பட்டம் பெற்றிருத்தல் அல்லது அதற்கு இணையான கல்வி சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.. பட்டபடிப்பு இறுதியாண்டு தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருப்பவர்களும் முதல் நிலை தேர்வில் கனல்து கொள்ளலாம்.
ஆனால் அவர்கள் மெயின் தேர்வு எழுத செல்லும் பொது, தேர்ச்சி பெற்ற கல்வி சான்றிதழ்களின்நகல்களை சமர்பிக்க வேண்டும். பட்டபடிப்புகளுக்கு இணையான டிப்ளமோ சான்றிதழ்கள் பெற்றவர்களும் இதில் அனுமதிக்கபடுவர். அத்தோடு 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெரும் மாணவர்கள், இந்திய நிர்வாகப் பணிகளில் சேர்ந்து நாட்டின் கொள்கை ரீதியான பல முடிவுகளை எடுக்கும் உயர்ந்த வாய்ப்பை பெறுகிறார்கள்.
தேர்வு நடைமுறை:
இந்த தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டமாக நடைபெறும் முதல்நிலை(Preliminary)தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மட்டுமே இரண்டாம் கட்டமாக நடைபெறும் மெயின் தேர்வில் கலந்து கொள்ள முடியும். இத்தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு, மாணவர்களின் திறமையின் அடிப்படையில் சிவில் சர்வீஸ் பணிகளுக்கு நியமிக்கபடுகிறார்கள்.
முதல்நிலை தேர்வில் இரண்டு தாள்கள் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் 200 மதிப்பெண்கள். அதன் முதல்தாள் “ஜெனரல் ஸ்டடீஸ்(General Studies) எனப்படும் பொது அறிவு தாளில் ஏற்கனவே இருந்த பல பாடங்கள் தற்போதும் இடம் பெற்று உள்ளன. தேசிய மற்றும் உலக புவியியல், இந்திய அரசியல் மற்றும் ஆட்சியியல், சுற்றுசூழல், பல்லுயிர் பெருக்கம், பருவநிலை மாற்றம் போன்ற சிவில் சர்வீஸ் பணிகளில் அன்றாட பிரச்சினைகளை எதிர்கொள்வது குறித்து முதல்தாளில் கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இரண்டு மணி நேரம் நடைபெறும் இத்தேர்வுக்கு 200 மதிப்பெண்கள்.
இரண்டாம் தாள் முற்றிலும் திறனறித் தேர்வாக (Civil Services Aptitude Test – CSAT) மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவேஇருந்து வந்த விருப்பப்பாடம் இனி இருக்காது. இந்தத் தாளில் Comprehension, Communication Skills, Inter Personal Skills , Logical Reasoning, Decision Making & Problem Solving,, General Mental Ability, English Language Comprehension Skills என்று பாடத் திட்டமே லேசாகபதட்டம் கொள்ளவைக்கிறது. கணிதத்திற்கும் ஆங்கிலப் புலமைக்கும் தீனிபோடுவதற்கு ஏதுவாக இந்தப் புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இரண்டு மணி நேரம் நடைபெறும் இந்த இரண்டாம் தாளுக்கான மதிப்பெண்கள் 200.
ஆனால் இதுதான் இப்போது பெருத்த விவாதத்துக்கு உள்ளான ஒன்றாகியுள்ளது. இந்தஆப்டிடியூட் பாடம் இதுவரை நம் தமிழக மாணவர்களுக்கு எந்தப் பள்ளி, கல்லூரிகளிலும் கற்றுத்தரப்படுவதில்லை. அதனால் இனி கிராமப்புறம் மற்றும்தமிழ்வழியில் பயிலும் மாணவர்களால் ஐ.ஏ.எஸ். என்பதை நினைத்தும் பார்க்கமுடியாது என்ற அச்சம் பரவலாக கிளறிவிடப்படுகிறது. ஐஐடி, ஐஐஎம் மனதில்வைத்துத்தான் CSAT கொண்டு வரப் பட்டதோ என்ற சந்தேகம் கிராமப்புற மாணவர்கள் மத்தியில் இதனால் ஏற்பட்டுள்ளது.
ஆனால், இத்தேர்வு மாற்றத்தால் யாரும் பயம் கொள்ளத் தேவையில்லை. மனப்பாடத்திற்கும்ஞாபக சக்திக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்த பழைய தேர்வு முறையைவிட இந்த முறை தகுதியானவர்களை பிரித்தறிய வாய்ப்பாக இருக்கும். உதாரணமாகஒரு பிரச்சினைக்கான சூழலைக் கேள்வியாகக் கேட்டு நான்கு விதமான தீர்வுகளில்மிகப் பொருத்தமான ஒன்றை நம் பதிலாகக் கேட்பார்கள். தேர்வர் அதிக உணர்ச்சி வயப்படக்கூடியவரா, மிஸ்டர் கூல் பெர்சனாலிலிட்டியா,சட்டத்தைமட்டும் கடுமையாக பின்பற்றும் நபரா, சட்டத்தையும் மனிதாபிமானத்தையும் ஒரேஅளவீட்டில் வைத்திருக்கிறாரா என்றெல்லாம் சோதித்து அறிகிறார்கள்.
இதன்மூலம் டெல்லிலியில் உள்ள பெரிய நிறுவனங்கள் தரும் குறிப்புகளை மட்டும்ஆண்டுக்கணக்காக மனப்பாடம் செய்து படித்துவரும் மாணவர்கள் இனிமேல்வடிகட்டப்படுவார்கள்.மருத்துவம்படித்திருந்தாலும் கலைப்பிரிவில் பட்டம் பெற்றிருந்தாலும் இனி மதிநுட்பம்எனும் ஒரே அளவுகோலில் தான் பரிசோதிக்கப்படுவார்கள். ஆரம்பக் காலத்தில்கலைப் படிப்பைப் படித்து வருபவர்களுக்கும், தாய்மொழியில் கல்வி பயின்றவர்களுக்கும் CSAT தேர்வு கொஞ்சம் சிரமம் என்பது உண்மைதான்.அதற்குக் காரணம் பாடத்திட்டத்தில் உள்ள ஆங்கிலம் மற்றும் கணிதம்தான்!
அரசுமற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் மாற்றப்பட்ட தேர்வுமுறைக்குத் தகுந்தபடி தங்கள் பயிற்சி வகுப்பின் முறைகளையும் மாற்றிக் கொண்டு தற்போது இந்த பாடத் திட்டத்திற்கேற்ப பயிற்சி அளித்து வருகிறார்கள்.இந்தத் தேர்வுமுறையால் கல்லூரி நாட்களிலிருந்தே இந்தியில் விருப்பப் பாடங்களை எடுத்து பல வருடங்களாக மனப்பாடம் செய்து படித்து வரும் வடமாநிலமாணவர்களுக்கும் பாதிப்புதான். ஆனாலும் முதல்நிலைத் தேர்வுத்தாள்ஆங்கிலத்திலும், இந்தியிலும் இருப்பதால் இந்தி மாணவர்களுக்கு அது சாதகமாக இருக்கும்.
சிவில்சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று, நாட்டின் உயர்ந்த பதவியை அடைய ஆசை மட்டுமேபோதாது. அதற்கான முயற்சியும், நுணுக்கமும் கட்டாயம் தேவை. முதல்நிலைதேர்வுக்கான பாடத்திட்டம் கடந்த ஆண்டு முதல் மாறியுள்ள நிலையில், மாறுதல் குறித்து தெளிவாகஅறிந்து, அதற்கு தயாராகும் முறைகள் குறித்தும் நன்கு தெரிந்துகொள்வதுஅவசியம்.எனவே, முதல்நிலை தேர்வில் எவ்வாறு கேள்விகள் கேட்கப்படும், எவ்வாறு அதைஎதிர்கொள்வது உள்ளிட்டவற்றை பற்றி இன்ஷா அல்லாஹ் வரும் வியாழக்கிழமை(16.02.2012) அன்று காண்போம். 
முக்கிய தேதிகள்: 
2012-ம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பு 04.02.2012
பூர்த்திசெய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கடைசி தேதி 05.03.2012
தேர்வு நடைபெறும் நாள் 20.05.2012.

ஓமன் நாட்டில் தோண்டி எடுக்கப்பட்ட ஒரு பிணம் சொல்லும் அதிர்ச்சித் தகவல்கள்

பிணம் தோண்டி எடுக்கப்பட்டது(மண்ணறை வேதனை)
இந்தப் புகைப்படம் ஓமன் நாட்டிலுள்ள ஒரு மருத்துவமனையில் இறந்த 18 வயது இளைஞனுடையது. இவனுடைய தந்தையின் வற்புறுத்தலின் பேரில் 3 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் பதைகுழியில் இருந்து இந்த இளைஞனின் பிணம் தோண்டி எடுக்கப்பட்டது. 
இந்த இளைஞன் மருத்துவமனையில் இறந்தபிறகு அதேநாளில் இஸ்லாமிய சடங்குகள்படி புதைக்கப்பட்டது. ஆனால் மருத்துவரின் சிகிச்சையின் மீது சந்தேகப்பட்ட இவனது தந்தை தனது மகன் இறந்ததற்கான உண்மையான காரணம் அறிய ஆசைப்பட்டதால் இவனது பிணம் தோண்டி எடுக்கப்பட்டது. 
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் அப்பிணத்தை தோண்டி எடுப்பதற்காக அனைவரும் செல்லுகின்றனர்.3 மணி நேரத்திற்கு முன்பு சடங்குகள் செய்து விட்டுச் திரும்பிய கால்கள் மறுபடியும் அக்குழியை நோக்கிச் செல்லுகின்றது. 
சற்று முன்பு புதைக்கப்பட்ட இடம் என்பதால் எளிதாக மணலைத் தோண்ட முடிகின்றது. மூடிய குழிகள் மெல்ல மெல்ல தோண்டப்பட்டு வருகின்றது. முழுவதுமாய் தோண்டி அந்த இளைஞனின் பிணம் வெளியே எடுக்கப்படுகின்றது. சிலருக்கு மயக்கம் வராத குறை. சிலர் முகம் சுளிக்கின்றனர். 
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அப்பிணத்தைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைகின்றனர் அவனது தந்தையால் அந்த பிணத்தை காண முடியவில்லை. சற்று முன் புதைக்கப்ட்ட பிணமாக அந்த உடல் தெரியவில்லை. 
3 மணி நேரத்தில் அவனது உடலில் பயங்கர மாற்றம் ஏற்பட்டுளள்ளதை அனைவரும் திகிலோடு கவனிக்கின்றனர். அந்தப்பிணத்தின் உடல் ஒரு விதமான சாம்பல் நிறமாக காட்சி அளிக்கின்றது. 18 வயதான அந்த இளைஞனின் உடல் ஒரு முதியவரின் உடல் போல தோற்றமளிப்பதைக்கண்டு அனைவருக்கும் பயம் கலந்த ஆச்சர்யம். 
சுமார் 1000 பேர் சேர்ந்து அந்த பிணத்தை குழிக்குள் வைத்து அடித்துப்போட்ட மாதிரி மிகவும் சேதமடைந்து கை மற்றும் கால்களில் எலும்புகள் எல்லாம் நொறுக்கப்பட்டு இடுப்புப் பகுதியில் யாரோ நெருக்கியயது போல இடுப்பு பகுதிகள் ஒடிந்து இரத்தங்கள் வெளியே முகத்தில் சிதறி கோரமாக காட்சி அளித்தது.உடல் முழுவதும் உடலின் நிறம் முற்றிலுமாய் மங்கி காட்சி அளித்தது. 
அனைவருக்கும் ஆச்சர்யம் என்னவென்றால் கண்கள் மூடியபடி அடக்கப்பட்ட அந்தப் பிணத்தின் விழிகள் முற்றிலுமாய் திறக்கப்பட்டு எதையோ பார்த்து பயந்து போய் வலி தாங்க முடியாமல் சொக்கி போனதுபோல காட்சி அளித்தது. உடலில் உள்ள இரத்தம் வெளியே வந்து மிகுந்த சித்திரவதைக்கு உட்பட்டவனைப் போல காட்சி அளித்தது. 
இரண்டு பக்கம் வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களால் மனித உடலை நசுக்கினால் எப்படி சிதையுதோ அந்த அளவிற்கு சிதைவுகளின் கோரம் இருந்தது.
புதைத்து 3 மணிநேரத்திற்குள் இப்படி மோசமாக உடல் சிதைக்கப்பட்டுப் போனதன் காரணம் தெரியாமல் அனைவரும் திகிலடைந்து போய் இருந்தனர். 
உறவினர்கள் அந்தப் பிணத்தை எடுத்து இஸ்லாமிய மருத்துவ ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைத்து ஆராயச் சொன்னபொழுது அவர்களின் விளக்கப்படி இந்தப்பிணமானது குழிக்குள் மிகுந்த சித்திரவதைக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளது என்றும் தீய வழியில் நடப்பவர்கள் குழிக்குள் வேதனைப்படுத்தப்படுவார்கள் என்று அல்லாஹ் மற்றும் அவனது தூதுவரான நபிகள் நாயகத்தின் ஏற்கனவே கூறப்பட்டுள்ள எச்சரிக்கைதான் என்றும் விளக்கமளித்தனர்.. 
திகிலில் இருந்து உறையாமல் பயத்துடன் இருந்த அவனது தந்தையிடம் கேட்டபொழுது அவர் தனது மகன் தீய நடவடிக்கைகளில் ஈடுபட்டான் என்பதையும் தொழுகையை ஒழுங்காக பேணி தொழுபவன் இல்லை என்றும் வாழ்க்கையில் சரியான வழியில் அவன் செல்லவில்லை என்றும் விளக்கமளித்தார்.
அல்லாஹ்வின் பாதையில் இறந்தவனைத்தவிர மற்ற அனைவருக்கும் கப்ரு வேதனை உண்டு. கியாமத் நாளுக்கு ( இறுதி நாள் ) முன்பு வேதனைகள் வெளிக்கொணரப்பட்ட முதல் சம்பவம் இதுவாகும்.
"ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போதுஇ அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்தாக இருக்குமானால் என்னை விரைந்து எடுத்துச் செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால்இ கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும் மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி:1314 அபூஸயீத் அல்குத்ரி (ரலி))
"ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு ( முன்கீர் - நக்கிர்) வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து முஹம்மத் எனும் இந்த மனிதரைப் - பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' எனக் கேட்பர். 
அதற்கவன் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' என்பான். 
பிறகு '(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும்இ 'எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' என்பான். 
அப்போது அவனிடம் 'நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள்இ ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கத்துவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 1338 அனஸ் (ரலி)) 
இதுவெல்லாம் நடக்கவா போகிறது என்று வீண் அலட்சியத்தில் இருப்பவர்களுக்கு இது அல்லாஹ்வின் இறுதி எச்சரிக்கையாக இருக்ககூடுமோ?
ஹதீஸில்தானே சொல்லப்பட்டிருக்கின்றது. இதுவெல்லாம் நமக்கு வரும்பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்று அலட்சியப்படுத்திவிடாதீர்கள் நண்பர்களே. மண்ணறையின் வேதனையை மட்டும் மனிதர்களுக்கு கேட்குமானால் அவன் மயக்கமுற்று விடுவான் என்கிற அளவுக்கு வேதனைகள் கடுமையாக இருக்கும். 
அய்யோ வேதனையைத் தாங்க முடியவில்லையே.. அலட்சியமாக இருந்துவிட்டோமே என்று அந்த நேரத்தில் நீங்கள் எவ்வளவுதான் மன்றாடினாலும் வேதனைகள் விட்டு விலகாது. அது காலம் கடந்த ஞானயோதயம். 
ஒன்று புரிந்து கொள்ளுங்கள் : எல்லோருக்கும் மரணம் நிச்சயம். ஆனால் எப்பொழுது வரும் என்று திட்டமிட்டு தெரியாததால் நாம் இவ்வளவு அலட்சியமாக இருக்கின்றோம்.
எனக்கு மெயிலில் வந்த இந்த சம்பவத்தை என்னால் முடிந்தவரை அனைவருக்கும் தெளிவுபடுத்தியுள்ளேன். இது உண்மையாக இருக்குமா அல்லது பொய்யான தகவலா என்று ஆராய்வதும் அல்லது இதன் மூலம் தன் வாழ்க்கையைளிவுபடுத்திக்கொள்வதும் அவரவர் கைகளில் உள்ளது. 
யா அல்லாஹ் நம் பாவங்களை மன்னித்து,நல்வழிப்படுத்தி,இந்த மாதிரி கொடுமைகளை எல்லாம் சந்திக்காவண்ணம் நம்மை சொர்க்கவாசியாக்கி வைப்பானாக!..ஆமின் 
உங்கள் சஹோதரன்:-

காரில் பிரேக் பிடிக்காமல் போனால் செய்ய வேண்டியது என்ன?


 
காரில் பிரேக் பிடிக்காமல் போனால் செய்ய வேண்டியது என்ன?

எவ்வளவு திறமை வாய்ந்த டிரைவராக இருந்தாலும் திடீரென பிரேக் பிடிக்காமல் போனால் காரை கன்ட்ரோல் செய்வது மிக கடினமான விஷயமாக இருக்கும். அது போன்ற அவசர சமயத்தில் மிகவும் சமயோஜிதமாக செயல்பட்டால், நிச்சயம் அசம்பாவிதங்களிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியும்.

காரில் செல்லும்போது பிரேக் பிடிக்கவில்லை என்று உணர்ந்தவுடன், முதலில் செய்ய வேண்டியது பதட்டத்தை விரட்டுவதுதான். உடனடியாக ஹெட்லைட்டை ஒளிர விட்டு எதிரே வாகனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்க வேண்டும்.

கியரை படிப்படியாக குறைத்து முதல் கியருக்கு கொண்டு வந்துவிடுங்கள். பின்னர் காரை மெதுவாக சாலையின் இடது புறத்திலேயே செலுத்துவதுடன் முதல் கியருக்கு வந்தவுடன் ஹேண்ட் பிரேக்கை மெதுவாக தூக்கி காரை மெதுவாக நிறுத்த முயற்சியுங்கள். பதட்டத்தில் கார் வேகமாக செல்லும்போது ஹேண்ட் பிரேக்கை பிடித்துவிட வேண்டாம்.

அவ்வாறு செய்தால், ஹேண்ட் பிரேக்கின் கேபிள் அறுந்துவிட வாய்ப்புண்டு. மேலும், காரை நிறுத்துவதற்கு ஒரே ஆயுதமாக இருக்கும் ஹேண்ட் பிரேக்கும் இல்லையென்றால், சூழ்நிலை மோசமானதாகிவிடும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

By
Gyasudeen Deen