Digital Time and Date

Welcome Note

Saturday, January 26, 2013

இன்று 64-வது குடியரசு தினம்

உலகின் பெரிய ஜனநாயக நாடு இந்தியா, என்பதில் பெருமை கொள்கிறோம். 121 கோடி மக்கள் தொகையை கொண்ட நம் நாட்டில் மொழி, மதம், இனம் என வேறுபாடுகள் இருந்த போதும், ஜனநாயகப் பாதையில் தொடர்ந்து பயணிப்பது தான் சிறப்பம்சம்.விஞ்ஞானம், அறிவியல், விளையாட்டு, கல்வி, சினிமா என அனைத்து துறைகளிலும் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக, இந்தியா முன்னேறிவருகிறது. கடந்த 15 ஆண்டுகளில்தனிமனித வருமானம் அதிகரித்துள்ளது.வடக்கில் பனிபடர்ந்த இமயமலை,தெற்கில் பசுமையான கேரளா,மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் வடகிழக்கு மாநிலங்கள், பாலைவனம் உள்ள ராஜஸ்தான் என புவியியல் அமைப்பிலும் பல வித்தியாசங்கள். சரியும் ஜனநாயகம்இவ்வளவு சிறப்புமிக்க இந்தியஜனநாயகம், இன்றைய நவீன காலத்தில் பல்வேறு பிரச்னைகளில் சிக்கிதவிக்கிறது. ஜனநாயகத்தின் தலைமை இடமான பார்லிமென்ட், பயனில்லாத இடமாக மாறிக்கொண்டிருக்கிறது. காந்தி, நேரு, வல்லபாய் படேல், நேதாஜி என ஆரம்பகால தலைவர்களின் சிறப்பான பணியை தொடர முடியாமல், தற்போதைய அரசியல்வாதிகள் தடுமாறுகின்றனர். இதனால் ஜனநாயகத்தின் மீதுமக்கள் நம்பிக்கை இழக்கின்றனர். தற்போதைய எம்.பி.,க்களில் மூன்றில் ஒரு பகுதியினர், கிரிமினல் பின்னணி உடையவர்கள். எந்த கூட்டத் தொடருமே, முழுமையான நாட்களை நிறைவு செய்வதில்லை. ஒவ்வொரு திட்டத்திலும் கோடிக்கணக்கில் ஊழல் நடக்கிறது.ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் மாறி மாறி அவர்கள் செய்த ஊழல்களை பற்றி பேசவே நேரம் கிடைக்கவில்லை. பின், மக்களைப்பற்றி சிந்திக்க எப்படி நேரம் வரும். வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள, இந்தியர்களின் கறுப்பு பணத்தை பற்றிய விவரம் இன்றளவும் வெளியிடப்படவில்லை. வெளிநாட்டு, உள்நாட்டு பயங்கரவாதம், நவீன இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.நாட்டின் உயரிய விசாரணை அமைப்பான சி.பி.ஐ., ஆளும் கட்சியின், கைப்பாவையாக செயல்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. ஒரு ஆட்சியில் போடப்படும் வழக்குகள், அடுத்த ஆட்சியில், அதன் சுவடே இல்லாமல் தள்ளுபடி செய்யப்படுகிறது. இது,குற்றங்கள் அதிகரிக்கத்தான் வழி செய்யும். வாரிசு அரசியல், அசுர வளர்ச்சி பெறுகிறது. அதே நேரம், அரசியலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு இன்னும் கானல் நீராக உள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், ஆண்டுதோறும் அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர், ஒரு நாளைக்கு 100 ரூபாய்க்கும் கீழ் வருமானம் பெறுபவர்கள். நாளுக்குநாள் உயரும் விலைவாசியால், இவர்கள் இன்னலுக்கு ஆளாகின்றனர். இதற்கு ஒரே தீர்வு, பெரும்பான்மை மக்களுக்கு பயன்பெறக் கூடிய திட்டங்களை நிறைவேற்றுவதற்குஅரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். மறுபக்கம், ஜனநாயகத்தை பாதுகாக்க, மக்களும் ஒத்துழைக்கவேண்டும்.


மிரட்டும் படைபிரிவுகள்

டில்லியில் இன்று நடக்கும் குடியரசு தின அணிவகுப்பில், இந்திய ராணுவத்தில் புதிதாகசேர்க்கப்பட்ட ஏவுகணைகள், புதிய கண்டுபிடிப்புகள், விமானப்படையில் சமீபத்தில்சேர்க்கப்பட்ட விமானங்களின் மாதிரிகளை காணலாம். கப்பல்படையின் அணிவகுப்பும் நடக்கும். குதிரைப்படைகள் அணிவகுப்பு, பாராசூட் ரெஜிமண்ட், காவலர்களின் பிரிகேட், குமோன் ரெஜிமண்ட், அசாம் ரெஜிமண்ட், மகார் ரெஜிமண்ட், கூர்கா ரைபிள் ரெஜிமண்ட் போன்ற துணை ராணுவ படைகளின் அணிவகுப்புகள் இடம்பெறும். துணை ராணுவம், எல்லைபாதுகாப்பு படை, கடலோர காவல் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படை, மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை, ரயில்வேபாதுகாப்பு படை, என்.சி.சி., மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்களின் அணிவகுப்புகள் இடம்பெறும். தொடர்ந்து முன்னாள் படை வீரர்களின் அணிவகுப்பு இடம்பெறும்.

பாசறை திரும்புதல்

குடியரசு தினத்தின் இறுதியாக ஜன., 29ல் பாசறை திரும்பும் நிகழ்ச்சிநடைபெறும். இதில், முப்படைகளின்சார்பில் பேண்டு வாத்தியங்கள் முழங்க, ஜனாதிபதிக்கு வணக்கம் செலுத்தப்படும். தேசிய கீதத்துடன் விழா நிறைவடையும்.

ஒரே இந்தியா உருவானது எப்படி

சுதந்திரத்தின் போது, பல சிறு சமஸ்தானங்களாக இந்தியா பிரிந்திருந்தது. இவற்றை ஒருங்கிணைப்பது சவாலாக இருந்தது. ஒருங்கிணைப்பு பணியில், சர்தார் வல்லபாய் படேல்முக்கிய பங்கு வகித்தார். 565 சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து, இந்தியா என்ற ஒரேகொடையின் கீழ் கொண்டு வந்தார். பெரும்பாலானவை தாமே வந்தும், பேச்சுவார்த்தையின் மூலமும்இணைக்கப்பட்டன. ஐதராபாத், காஷ்மீர், ஜூனாகாத், ஜோத்பூர் ஆகியவை, ராணுவ நடவடிக்கையின் மூலம் இணைந்தன. உறுதியாக நின்று ஒருங்கிணைப்பில் ஈடுபட்ட வல்லபாய் படேல், இந்தியாவின் "இரும்பு மனிதர்' என பெயர் பெற்றார்."ஆப்பரேஷன் போலோ': ஐதராபாத், இந்தியாவுடன் இணைய மறுத்தது. சுதந்திரமாகவே செயல்படும் என அதன் நிஜாம்அரசாணை வெளியிட்டார். அப்பகுதியை இணைப்பது முக்கியமாக கருதப்பட்டது. பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து அரசு, "ஆப்பரேஷன் போலோ' என்ற ராணுவ நடவடிக்கையை 1948, செப்.13ம் நாள் துவக்கியது. சில நாட்களிலேயே அப்பகுதியைராணுவம், கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.குஜராத்தின் தென்மேற்குப் பகுதியில் இருந்த ஜூனாகாத், பாகிஸ்தானுடன் இணைய விருப்பம் தெரிவித்தது. இருப்பினும், அது இந்தியாவுடன் இணைவது தான் நியாயம் என மவுண்ட் பேட்டன் தெரிவித்தார். இதனால் அப்பகுதி ராணுவ நடவடிக்கை மூலம் இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது. எல்லைப் பகுதிகளான ஜோத்பூர் மற்றும் ஜெய்ஷல்மார் ஆகியவை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தன. அப்பகுதி மக்களின் விருப்பப்படி, இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது.

அரசின் கடமை

* நாட்டு மக்களுக்கு பேதம் கருதாது நல்ல வாழ்க்கை, வசதிகளை அமைத்துத் தருதல்.

*சுகாதாரத்தை மேம்படுத்தி, சிறந்த சுற்றுச்சூழலை ஏற்படுத்துதல்.

*உலக அமைதியையும், பாதுகாப்பையும் மேம்படுத்த நடவடிக்கை எடுத்தல்.

*இலவச கட்டாய கல்வி, மருத்துவ வசதியை அளித்தல்.

*குறிப்பிட்ட சிலரின் கையில், நாட்டின் செல்வம் அனைத்தும் சென்று சேரா வண்ணம் தடுத்தல்.

* மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த நாளும் பாடுபடுதல்.

*ஏழைகளுக்கு இலவச சட்ட உதவியை வழங்குதல்.

*நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாத்தல்.மக்களின் கடமை

*அரசியல் அமைப்பை பின்பற்றி தேசிய கீதத்தையும், தேசியக் கொடியையும் மதித்து நடத்தல்.

* நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டை பாதுகாத்தல்.

*தேசியப் பணிபுரிய எப்போதும் தயாராக இருத்தல்.

*இந்தியர்கள் அனைவரிடத்திலும், சகோதரத்துவ உணர்வு கொண்டிருத்தல்.

*நமது பண்பாடு, கலாசாரத்தை கட்டிக் காத்தல்.

*இயற்கை சூழ்நிலைகளை பாதுகாத்தல்.

*வன்முறையில் ஈடுபடாமல் பொதுச் சொத்துக்களை காத்தல்.

*குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்புதல்.

*அறிவியல், தொழில்நுட்பத்தை வளர்த்து நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுதல்.

*மனிதாபிமான உணர்வோடு இருத்தல்.

அமெரிக்காவுக்கு "நோ
'
1950ல் இருந்து ஒவ்வொரு குடியரசு தினத்தின் போதும், வெளிநாட்டு தலைவர் ஒருவர், விருந்தினராக பங்கேற்பது வழக்கம். 1950ல் நடந்த முதல் குடியரசு தினத்தில், விருந்தினராக இந்தோனேசிய அதிபர் சுகர்னோ பங்கேற்றார். இதன்பின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இப்பட்டியலில், வல்லரசு நாடான அமெரிக்காவில் இருந்து ஒரு விருந்தினர் கூட பங்கேற்றதில்லை என்பது ஆச்சரியமான விஷயம். அதிகபட்சமாக பிரான்ஸ்மற்றும் பூடானில் இருந்து தலா நான்கு முறை விருந்தினர்கள் பங்கேற்றுள்ளனர்.

* இந்தாண்டு வெளிநாட்டு சிறப்பு விருந்தினராக பூடான் மன்னர் "ஜிக்மே கேசர்நாம்கியல் வாங்சுக்' பங்கேற்கிறார். உலகின் நீளமானஅரசியலமைப்பு

* குடியரசு தினம் மூன்று நாள் விழா. இறுதி நாளில் வீரர்கள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி நடக்கிறது.

* இந்திய அரசியலமைப்பு இந்திமற்றும் ஆங்கிலத்தில்மட்டுமே எழுதப் பட்டுள்ளது. இதுஉலகின் நீளமான அரசியலமைப்பு. ஒருநாளில் இதை வாசித்துவிட முடியாது. 1950 ஜன., 26 காலை 10.18 மணிக்கு அமலுக்கு வந்தது.

* குடியரசு தினத்தில் ஜனாதிபதி உரை நிகழ்த்துவார்; சுதந்திர தினத்தில் பிரதமர் உரை நிகழ்த்துவார்.

* 2002ல் நடந்த 53வது குடியரசு தினத்துக்குப்பின், இந்திய குடிமகன் யார் வேண்டுமானாலும் தேசியக்கொடியை (முறைப்படி) ஏற்றிஇறக்கலாம் என்ற அறிவிப்பு வந்தது. இதற்கு முன் அரசு உயர் அதிகாரிகளுக்குமட்டுமே இந்த உரிமை இருந்தது.

* குடியரசு தின அணிவகுப்பு ராஜ்பாத்தில் நடப்பது தெரிந்த விஷயம். இது 1954க்குப்பின் தான் இங்கு நடக்கிறது. இதற்கு முன் ஆண்டுதோறும் வெவ்வேறு இடங்களில் நடந்தது.


கம்பீரமான ராஜபாட்டை

டில்லியில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பு, ராஷ்டிரபதி பவனில் துவங்கி, விஜய் சவுக்,இந்தியா கேட் வழியாக தேசிய மைதானத்தைசென்றடையும். இது நடைபெறும் பெருமைக்குரியதெருவின் பெயர் தான் ராஜபாட்டை (ராஜ்பாத்). இதை ஆங்கிலேயர்கள் ராஜ வழி (கிங்ஸ் வே) என்று அழைத்தனர்.

வரலாறு

பிரிட்டன் கட்டட கலைஞர் எட்வின் லூட்டியன்ஸ், ராஜ்பாத்தை சுற்றியுள்ள பகுதிகளை கட்டினார். அப்போது இந்த தெருவிற்கு, அதிக முக்கியத்துவம் அளித்தார். ராஷ்டிரபதி பவனில் இருந்து பார்க்கையில், டில்லி நகரின் பரந்து விரிந்த அமைப்பு தெரிய வேண்டும் என்ற நோக்குடன் இந்த தெருவையும் சுற்றியுள்ள கட்டடங்களையும் வடிவமைத்தார். தெருவின் இருபுறமும், புல்வெளிகள், வாய்க்கால்கள்மற்றும் வரிசையான மரங்கள் காணப்படுகின்றன. கிழக்கு - மேற்கு திசையில் செல்லும் இந்த பாதை,செயலக கட்டடத்தின் வடக்குமற்றும் தெற்கு பகுதியின் பக்கவாட்டில் உள்ளது. ராஷ்டிரபதி பவன் வாயில் கதவுடன், பாதை முடிகிறது.

"மாண்புமிகு'' மக்களாட்சி

குடியரசு என்பதன் நேரடி பொருள் "மக்களாட்சி'. தேர்தல் மூலம் மக்களே ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறைக்கு குடியரசு என பெயர். இது குடியரசு நாடு என அழைக்கப்படுகிறது. இதன் தலைவர், குடியரசு தலைவர் அல்லது ஜனாதிபதி என அழைக்கப்படுகிறார். பதவிக்காலம் 5 ஆண்டுகள். எப்படி வந்தது இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்,பிரிட்டிஷாரிடம் இருந்து "டொமினியன் அந்தஸ்து'பெற்றால் போதும் என பல சுதந்திர போராட்ட தலைவர்கள் எண்ணினர். "டொமினியின் அந்தஸ்து' என்பது, பிரிட்டிஷ் மேலாதிக்கத்துக்கு உட்பட்ட சுய ஆட்சி. இதன்படி நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை ஆகியவற்றை அவர்கள் தான் நிர்வகிப்பர். இதற்கு நேரு, நேதாஜி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின் பூரண சுயராஜ்யம் தான் லட்சியம் என தலைவர்களிடம் மாற்றம் வந்தது. இதன்படி லாகூரில் நடந்த காங்., மாநாட்டில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தால் ஜன., 26 "பூரண சுதந்திர தினமாக' கடைபிடிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1947 ஆக., 15ல் சுதந்திரம் பெற்றாலும், உண்மையான சுதந்திரம் கிடைத்தது 1950, ஜன., 26ல் தான். ஏனெனில் சுதந்திரம் பெற்ற போது, பிரிட்டிஷ் அரசுஇந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து தான் வழங்கியது. அதன்படி பிரிட்டிஷார் சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர்ஜெனரல் தான் நாட்டின் தலைவராக இருந்தார்.சுதந்திரத்துக்குப் பின், ஆட்சியாளர்கள், தங்களது விருப்பத்துக்கு செயல்பட்டு விடக்கூடாது என்பதற்காக அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, 1950, ஜன., 26ல் நடைமுறைக்கு வந்தது. கவர்னர் ஜெனரல் பதவி நீக்கப்பட்டு, புதிதாக ஜனாதிபதி பதவி உருவானது.


ஜனாதிபதியின் அதிகாரங்கள்

* இந்திய ராணுவத்தின் முப்படைகளின் தலைமை தளபதி.

*பார்லிமென்டில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவரை பிரதமராக பதவியேற்க அழைத்தல் மற்றும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தல்.

* பிரதமரின் பரிந்துரைப்படி, அமைச்சர்களை நியமனம் செய்தல்.

* தேர்தல் நடத்தவும், அவசர உத்தரவு பிறப்பிக்கவும் அதிகாரம்.

* மாநில அரசை கலைக்கும் அதிகாரம்.

* பார்லிமென்டை கூட்டுதல், தள்ளி வைத்தல், உரையாற்றுதல், நிறைவேறிய மசோதாக்களுக்கு கையெழுத்திடல்.

* ஆளுநர், ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், இந்திய அரசின் தலைமை வக்கீல், தலைமைத் தேர்தல் ஆணையர், வெளிநாட்டு தூதுவர் ஆகியோரை நியமனம் செய்யும் பொறுப்பு.

* அவசர நிலையை பிரகடனம் செய்தல்.

* பார்லிமென்டின் கீழவையை கலைக்கும் அதிகாரம்.

* சுப்ரீம் கோர்ட் அளித்த தண்டனையை குறைக்கும் அதிகாரமும் உண்டு.

தினமலர்

வரலாற்றில் இன்று

ஜனவரி 25


நிகழ்வுகள்

1327 - 14 வயது மூன்றாம் எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
1348: இத்தாலியின் பிரியூலி பிராந்தியத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால் பாரிய சேதம் ஏற்பட்டது.

1494 - இரண்டாம் அல்பொன்சோ நேப்பில்ஸ் மன்னனாக முடிசூடினான்.

1498 - போர்த்துக்கீச நாடுகாண்பயணி வாஸ்கோ ட காமா தென்கிழக்கு ஆபிரிக்காவை அடைந்தார்.

1533: இங்கிலாந்தின் 8 ஆம் ஹென்றி மன்னன் தனது இரண்டாவது மனைவியாக, ஆன் போலினை திருமணம் இரகசியமாக திருமணம் செய்தார்.
1554: பிரேஸிலின் சா போலோ நகரம் ஸ்தாபிக்கப்பட்டது.

1755 - மாஸ்கோ பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

1881 - தொமஸ் அல்வா எடிசன், அலெக்சாண்டர் கிரஹாம் பெல் ஆகியோர் இணைந்து ஓரியண்டல் டெலிபோன் கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தனர்

1882 - வேல்ஸ் இளவரசர்கள் அல்பேர்ட் விக்டர், ஜோர்ஜ் ஆகியோர் கொழும்பு வந்து சேர்ந்தனர்.

1890 - நெல்லி பிளை தனது 72 நாள் உலகம் சுற்றும் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டார்.

1917 - டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள் ஐக்கிய அமெரிக்காவுக்கு $25 மில்லியன்களுக்கு விற்கப்பட்டது.

1918 - உக்ரேன் மக்கள் போல்ஷெவிக் ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தனர்.

1919 - நாடுகளின் அணி நிறுவப்பட்டது.

1924 - முதலாவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பிரான்சில் ஷாமனீ என்ற இடத்தில் ஆரம்பமானது.

1942 - இரண்டாம் உலகப் போர்: தாய்லாந்து ஐக்கிய அமெரிக்கா மீதும் ஐக்கிய இராச்சியம் மீதும் போரை அறிவித்தது.

1949 - சீனக் கம்யூனிஸ்டுகளின் படைகள் பீக்கிங்கினுள் நுழைந்தன.

1949 - இஸ்ரேலில் இடம்பெற்ற முதலாவது பொதுத் தேர்தலில் David Ben-Gurion பிரதமரானார்.

1955 - சோவியத் ஒன்றியம் ஜேர்மனி மீது அதிகாரபூர்வமாக போரை நிறுத்தியது.

1961: முதல் தடவையாக தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட அமெரிக்க ஜனாதிபதியின் செய்தியாளர் மாநாட்டை ஜோன் எவ். கென்னடி நடத்தினார்.

1971 - உகண்டாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மில்ட்டன் ஓபோட் அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு இடி அமீன் தலைவரானார்.

1971 - இந்தியாவின் 18வது மாநிலமாக இமாசலப் பிரதேசம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1981 - மா சே துங்கின் மனைவி ஜியாங் கிங் இற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

1986 - தேசிய எதிர்ப்பு இயக்கத்தினரால் உகாண்டா அரசு கவிழ்க்கப்பட்டது.

1994 - நாசாவின் கிளமென்டைன் விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.

1995 - யோசப் வாஸ் அடிகளார் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரால் முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.

1998 - கண்டியின் தலதா மாளிகையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டு 25 பேர் படுகாயமடைந்தனர்.

1999 - மேற்கு கொலம்பியாவில் இடம்பெற்ற 6.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

2002 - விக்கிப்பீடியா மீடியாவிக்கி மென்பொருளுக்கு மாறியது.

2004 - ஒப்போர்ச்சுனிட்டி தளவுளவி (MER-B) செவ்வாயில் தரையிறங்கியது.

2005 - இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மந்திராதேவி என்ற இடத்தில் கோயில் ஒன்றில் சனநெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 258 பேர் கொல்லப்பட்டனர்.

2006 – சூரியக் குடும்பத்திற்கு வெளியே பால் வழியின் நடுவிற்குக் கிட்டவாக பூமியில் இருந்து 21,500 ± 3,300 ஒளியாண்டுகள் தூரத்தில் OGLE-2005-BLG-390Lb என்ற கோள் கண்டுபிடிக்கப்பட்டது.

2009 - முல்லைத்தீவில் ராமநாதபுரம் பகுதியில் உள்ள கல்மடு குளத்தின் அணை விடுதலைப் புலிகளால் உடைக்கப்பட்டது.

2010: எத்தியோப்பிய பயணிகள் விமானமான்று மத்தியதரைக்கடலில் விழுந்ததால் 90 பேர் பலி.

பிறப்புகள்

1627 - ரொபேர்ட் பொயில், ஐரிஷ் வேதியியலாளர் (இ. 1691)

1872 - பி. ஆர். ராஜமய்யர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர் (இ. 1898)

1917 - ஈலியா பிரிகோஜின், நோபல் பரிசு பெற்ற ருசிய அறிவியலாளர் (இ. 2003)

1928 - எடுவார்ட் ஷெவார்டுநாட்சே, ஜோர்ஜியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர்

1933 - கொரசோன் அக்கினோ, பிலிப்பைன்ஸ் முன்னாள் குடியரசுத் தலைவர் (இ. 2009)

1941 - செங்கை ஆழியான், ஈழத்து எழுத்தாளர்

1949 - போல் நர்ஸ், நோபல் பரிசு பெற்ற பிரித்தானியர்

இறப்புகள்

1922 - சுன்னாகம் குமாரசாமிப் புலவர் (பி. 1855)

2005 - பிலிப் ஜான்சன், அமெரிக்கக் கட்டிடக் கலைஞர் (பி. 1906)

2006 - நெல்லை கிருஷ்ணமூர்த்தி, கருநாடக இசைக் கலைஞர்

சிறப்பு நாள்

ரஷ்யா: மாணவர் நாள் (தத்தியானா நாள்)

வரலாற்றில் இன்று

ஜனவரி 24


நிகழ்வுகள்

41 - கலிகுலா படுகொலை செய்யப்பட்டான். அவனது மாமன் குளோடியஸ் முடி சூடினான்.

1679 - இங்கிலாந்தின் இரண்டாம் சார்ல்ஸ் நாடாளுமன்றத்தைக் கலைத்தான்.

1857 - தெற்காசியாவின் முதலாவது முழுமையான பல்கலைக்கழகம் கல்கத்தா பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது.


1887 - அபிசீனியப் படைகள் டொகாலி என்ற இடத்தில் இத்தாலியர்களைத் தோற்கடித்தனர்.

1897 - சுவாமி விவேகானந்தர் சிக்காகோவிலிருந்து நாடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் வருகை தந்தார். யாழ் இந்துக் கல்லூரியில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

1908 - பேடன் பவல் சாரணீய இயக்கத்தை ஆரம்பித்தார்.

1918 - கிரெகோரியின் நாட்காட்டி ரஷ்யாவில் பெப்ரவரி 14 முதல் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

1924 - ரஷ்யாவின் பெட்ரோகிராட் நகரம் லெனின்கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது.

1927 - ஆல்பிரட் ஹிட்ச்கொக் தனது த பிளெஷர் கார்டன் என்ற தனது முதலாவது திரைப்படத்தை வெளியிட்டார்.

1939 - சிலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 30000 பேர் கொல்லப்பட்டனர்

1943 - இரண்டாம் உலகப் போர்: பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், வின்ஸ்டன் சேர்ச்சில் ஆகியோர் தமது கசபிளாங்கா உச்சி மாநாட்டை முடித்துக் கொண்டனர்.
1950 - சுதந்திர இந்தியாவின் முதல் அதிபராக பாபு ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார் அதே தினம் இந்தியாவின் தேசிய கீதமாக ஜனகணமன அறிவிக்கப்பட்டது.


1966 - ஏர் இந்தியா விமானம் ஒன்று பிரான்சுக்கும் இத்தாலிக்கும் இடையில் வீழ்ந்ததில் 117 பேர் கொல்லப்பட்டனர்.
1966 - இந்திராகாந்தி பிரதமராகப் பொறுப்பேற்றார்.


1972 - இரண்டாம் உலகப் போரில் காணாமல் போன ஜப்பானிய படைவீரனான சொயிச்சி யாக்கோய் என்பவன் குவாம் காடு ஒன்றில் இருக்கக் கண்டுபிடிக்கப்பட்டான்.

1973 - வியட்நாம் போர் முடிவு.

1978 - கொஸ்மொஸ் 954 என்ற சோவியத் செய்மதி பூமியின் வளிமண்டலத்துள் எரிந்து அதன் பகுதிகள் கனடாவின் வடமேற்குப் பிரதேசத்தில் வீழ்ந்தன.

1984 - முதலாவது ஆப்பிள் மாக்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது.

1986 - வொயேஜர் 2 விண்கலம் யுரேனசின் 81,500 கிமீ தூரத்துக்குள் வந்தது.

1993 - துருக்கிய ஊடகவியலாளரும்ம் எழுத்தாளருமான ஊகுர் மும்க்கு அங்காராவில் கார்க் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.

1996 - மாஸ்கோவுக்கு உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் போலந்துப் பிரதமர் ஜோசப் அலெக்ஸ்கி தனது பதவியைத் துறந்தார்.

2007 - சூடானிலிருந்து 103 பயணிகளுடன் சென்ற விமானம் நடு வானில் கடத்தப்பட்டது.

2009 - இலங்கை ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட அரசுத்தலைவர் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கொழும்பில் காணாமல் போனார்.

பிறப்புகள்

1924 - சி. பி. முத்தம்மா, இந்தியப் பெண் சாதனையாளர் (இ. 2009)

இறப்புகள்

1965 - வின்ஸ்ரன் சேர்ச்சில், பிரித்தானியப் பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1874)

1966 - ஹோமி பாபா, இந்திய அணு ஆராய்ச்சி நிபுணர்

Wednesday, January 23, 2013

கல்லீரலைத் தூய்மைப்படுத்தும் 15 உணவுகள்!!!

உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று. ஏனெனில் கல்லீரல் தான் உடலுக்கு தேவையான நொதியான பைல் என்பதை உற்பத்தி செய்கிறது. இந்த நொதி இல்லாவிட்டால், உடல் இயங்காது. கல்லீரலில் ஏதேனும் பாதிப்பு இருந்தால், அவற்றை பிலிரூபின் என்னும் இரத்தக்கூறு கொண்டு கண்டறியலாம். அதிலும் மஞ்சள் காமாலையா அல்லது ஏதேனும் கொழுப்புகள் சேமிக்கப்பட்டுள்ளதா என்பதை அறியலாம். இத்தகைய பிரச்சனை ஏற்படுவதற்கு காரணம் ஜங்க் உணவுகள், அதிகமான கொழுப்புள்ள உணவுகள் மற்றும் ஆல்கஹால் பருகுவது தான்.

எனவே கல்லீரலில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதற்கு, சிலவற்றை தினமும் மேற்கொண்டு வந்தால், எந்த ஒரு ஆபத்தும் ஏற்படாமல் தடுக்கலாம். குறிப்பாக கல்லீரலை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அத்தகைய சுத்தத்தை உணவுகள் மூலமாகவே சரிசெய்யலாம். மேலும் இந்த உணவுகள் கல்லீரலை மட்டும் சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, உடலையே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். இப்போது அந்த கல்லீரலை சுத்தப்படுத்தும் உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

மஞ்சள்

மசாலாப் பொருட்களில் ஒன்றான மஞ்சள் கிருமிகளை அழிக்க சிறந்தது. ஆகவே வயிற்றில் ஏதேனும் பிரச்சனை என்றால், அப்போது மஞ்சளை உணவிலோ அல்லது பாலிலோ கலந்து சாப்பிடலாம். இதனால் அனைத்தும் சரியாகும்.

வால்நட்

பொதுவாக கல்லீரலில் மாசுக்கள் தங்குவதற்கு அம்மோனியா அதிகம் இருப்பதே ஆகும். வால்நட்டில் அர்ஜினைன் என்னும் அமினோ ஆசிட் இருப்பதால், அவை அந்த அம்மோனியாவை கல்லீரலில் இருந்து வெளியேற்றி, கல்லீரலை சுத்தமாக வைக்கும்.

க்ரீன் டீ

க்ரீன் டீயில் அதிகமான அளவில் நன்மைகள் அடங்கியுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். அத்தகைய எண்ணற்ற நன்மைகளில், கல்லீரலில் உள்ள அழுக்குளை வெளியேற்றும் கேட்டச்சின்கள் எனப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் உள்ளன.

எலுமிச்சை

எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை சாப்பிடும் போது, அதில் உள்ள வைட்டமின் சி கல்லீரலை சுத்தப்படுத்தும் குளுதாதையோனை உடலில் உற்பத்தி செய்கிறது. ஆகவே தினமும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில், எலுமிச்சையை பிழிந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

சீமைக் காட்டுமுள்ளங்கி

கல்லீரலில் உள்ள பழுதடைந்த செல்களை சரிசெய்து, அவற்றை சீராக இயங்க வைப்பதற்கு, சீமைக் காட்டுமுள்ளங்கி மிகவும் சிறப்பானதாக இருக்கும்.


தானியங்கள்

கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகளை உண்ணும் போது, அந்த கொபப்புகள் கல்லீரலில் தங்கிவிட்டால், பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே தானியங்களை அதிகம் சாப்பிடும் போது அதில் உள்ள வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், அந்த கொழுப்புகளை கரைத்துவிடும்.

ஆலிவ் ஆயில்

ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டில் உள்ள கொலஸ்ட்ராலானது உடலுக்கு மிகவும் சிறந்தது. மேலும் அந்த கொழுப்பானது வளர்ச்சிதை மாற்றத்திற்கு பெரிதும் உதவுவதோடு, கல்லீரலை ஆரோக்கியமாக வைக்கிறது. எனவே ஆலிவ் ஆயிலை அதிகம் பயன்படுத்துவது நல்லது.

பூண்டு

பூண்டில் சுத்தப்படுத்தும் பொருள் அதிகம் உள்ளது. குறிப்பாக அல்லிசின் மற்றும் செலினியம் போன்றவை இருப்பதால், அவை கல்லீரலில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றிவிடும்.

ஆப்பிள்

ஆப்பிள் கல்லீரலை சுத்தப்படுத்தும் பொருள் என்று சொல்ல முடியாது. ஆனால் இந்த பழத்தில் உள்ள பெக்டின் என்னும் பொருள் வயிற்றில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, கல்லீரலில் டாக்ஸின்கள் தங்காமல் தடுக்கும்.

இலைக் காய்கறிகள்

இலைவகைக் காய்கறிகளான காலிப்ளவர், முட்டைகோஸ், ப்ராக்கோலி போன்றவற்றில் குளுக்கோஸினோலேட் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் கல்லீரலின் செயல்பாடுகளை அதிகரிக்கும்.

பீட்ரூட்

பீட்ரூட்டில் அதிகமாக நிறைந்திருக்கும் ப்ளேவோனாய்டுகள், கல்லீரலில் உள்ள நொதிகளின் செயல்பாட்டை அதிகரிக்கும்.


அவோகேடோ

அவோகேடோவை சாப்பிட்டால், அவை உடலில் குளுதாதையோனை உற்பத்தி செய்து, கல்லீரலில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற உதவுகிறது.

பச்சைக் காய்கறிகள்

காய்கறிகள் பச்சை நிறங்களை பெறுவதற்கு, அவற்றில் குளோரோபில் இருக்கிறது. எனவே இத்தகைய பச்சை காய்கறிகளை சாப்பிட்டால், அவற்றில் உள்ள குளோரோபில் கல்லீரலில் உள்ள டாக்ஸின்களை உறிஞ்சி, வெளியேற்றும்.

பம்பளிமாஸ்

கல்லீரலில் உள்ள அழுக்குகளை நீக்க வைட்டமின் சி என்னும் சத்து பெரிதும் உதவும். இத்தகைய சத்து கிரேப் ப்ரூட் என்னும் பம்பளிமாஸ் பழத்தில் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய வைட்டமின் சி கிடைத்து, கல்லீரலில் அழுக்குளை நீக்கும் நொதிகளை உற்பத்தி செய்து, கல்லீரலை சுத்தம் செய்யும்.

மல்லி

மல்லியை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் உடலானது குளிர்ச்சி அடைவதோடு, கல்லீரலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும்.

tamil.boldsky.com

பைல்ஸ் பிரச்சனையா? வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்!!!

அனைவரது உடலில் இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மலச்சிக்கல். அந்த மலச்சிக்கல் பிரச்சனை அதிகம் இருந்தாலே, அதற்கு அடுத்த நிலையான பைல்ஸ் வந்துவிடும். பைல்ஸை மூல நோய் என்றும் அழைப்பர். இத்தகைய பைல்ஸ் பிரச்சனை வந்தால் சரியாக உட்கார முடியாது. எப்போதும் ஒருவித டென்சன் இருக்கும். ஏன் தெரியுமா? ஆம், மலவாயில் புண் வந்தால் பின்னர் எப்படி இருக்கும். அதிலும் பைல்ஸ் என்பது சாதாரணமானது அல்ல. அது வந்தால், மலவாயில் கழிவுகளை வெளியேற்றியப் பின்னரும், வெளியேற்றும் போதும் கடுமையான வலி ஏற்படுவதோடு, இரத்தப்போக்கு, அரிப்பு போன்றவை ஏற்படும். இந்த பிரச்சனை வருவதற்கு உடலில் அதிகப்படியான வெப்பமும் ஒரு காரணம்.

எனவே மலச்சிக்கல் வந்தால், அதனை ஆரம்பத்திலேயே சரிசெய்துவிட வேண்டும். அதற்கான மருந்து வீட்டிலேயே இருக்கிறது. அது என்னவென்றால், உணவுகள் தான். குறிப்பாக பைல்ஸ் வந்துவிட்டால், அதனை மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று, அதற்கான மருந்துகளையும் உட்கொள்ளலாம். இல்லையெனில் ஒருசில வீட்டு மருந்துகளைக் கொண்டும் சரிசெய்யலாம். இப்போது அந்த பைல்ஸ் பிரச்சனையை சரிசெய்ய என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

முள்ளங்கி ஜூஸ்

பைல்ஸ் இருந்தால் ஒரு டம்ளர் முள்ளங்கி ஜூஸ் குடித்தால், சரியாகிவிடும். அதிலும் எடுத்தவுடன் ஒரு டம்ளரை குடிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து குடித்து வந்தால், சரியாகிவிடும்.

மாதுளை தோல்

இந்த சிவப்பு நிற மாதுளைப் பழத்தின் தோல் பைல்ஸ் பிரச்சனையை சரிசெய்யும். அதற்கு மாதுளையின் தோலை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை தினமும் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் குடித்தால், சரியாகிவிடும்.

இஞ்சி மற்றும் எலுமிச்சை ஜூஸ்

நீர் வறட்சியும் பைல்ஸ் பிரச்சனைக்கு ஒரு காரணம். எனவே தினமும் இரண்டு முறை இஞ்சி மற்றும் எலுமிச்சையை நீரில் கலந்து ஜூஸ் போன்று இரண்டு முறை குடித்து வந்தால், உடலில் வறட்சி குறைந்து, பைல்ஸ் சரியாகிவிடும்.

அத்திப்பழம்

அத்திப்பழத்தில் உலர்ந்ததை வாங்கி, அதனை இரவில் படுக்கும் போது ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்ததும் பாதியை குடித்துவிட்டு, மீதியை மாலையில் குடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் குணமாகிவிடும்.

வெங்காயம்

வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால், பைல்ஸால் ஏற்படும் இரத்தப் போக்கை சரிசெய்துவிடலாம். அதுமட்டுமின்றி, அவை மலவாயில் ஏற்படும் வலியையும் குணமாக்கும்.

சரியான நிலை

மலம் கழிக்கும் போது சரியான நிலையில் லேசாக அடிவயிற்றை அழுத்தும் படியாக உட்கார்ந்து செல்ல வேண்டும். அவ்வாறு சரியான நிலையில் உட்கார்ந்து செல்வதால், மலக்குடலுக்கு எந்த ஒரு அழுத்தமும் கொடுத்து, கஷ்டப்பட்டு செல்ல வேண்டி இருக்காது. இதனால் பைல்ஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

உடற்பயிற்சி

மலச்சிக்கலை தடுத்து, இரத்த சுழற்சியை சீராக்க, தினமும் நன்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதிலும் மிகவும் கடினமாக இருக்கும் உடற்பயிற்சியான எடை தூக்குதல் போன்றவற்றை செய்யவே கூடாது. அதற்கு பதிலாக வாக்கிங், ஜாக்கிங், நீச்சல் போன்ற லேசான உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

மஞ்சள்

மசாலா பொருட்களில் காயங்களை குணப்படுத்தும் பொருள் அதிகம் உள்ளது. எனவே மஞ்சளை சூடான நீரில் கரைத்து, தினமும் குடித்து வந்தால், பைல்ஸ் இயற்கையாக சரியாகிவிடும்.

வாழைப்பழம்

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனை சரியாகிவிடும் வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவார்கள். அதிலும் இதை இரவில் ஒரு டம்ளர் சூடான பால் குடித்துவிட்டு, ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால், மறுநாள் காலையில் எந்த ஒரு கஷ்டமுமின்றி கழிவுகளை வெளியேற்றலாம்.

பருப்பு வகைகள்

பருப்பு வகைகளில் காராமணி, உளுத்தம் பருப்பு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்தால், பைல்ஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

tamil.boldsky.com

வரலாற்றில் இன்று

ஜனவரி 23


நிகழ்வுகள்

1368 - சூ யுவான்ஷாங் சீனாவின் பேரரசனாக முடிசூடினான். இவனது மிங் பரம்பரை 3 நூற்றாண்டுகள் சீனாவை ஆண்டது.

1556 - சீனாவின் சாங்சி மாநில நிலநடுக்கத்தில் 830,000 வரையானோர் இறந்தனர். உலக வரலாற்றில் மிக அதிகமானோர் கொல்லப்பட்ட நிலநடுக்கம் இதுவாகும்.

1570 - ஸ்கொட்லாந்தில் உள்நாட்டுப் போர் வெடித்தது.

1639 - பெருவைச் சேர்ந்த யூதக் கவிஞர் பிரான்சிஸ்கோ மல்டொனால்டோ டி சில்வா எரியூட்டிக் கொல்லப்பட்டார்.

1719 - புனித ரோம் பேரரசின் கீழ் லீக்டன்ஸ்டைன் நாடு உருவாக்கப்பட்டது.

1789 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது கத்தோலிக்கக் கல்லூரியான ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1793 - ரஷ்யாவும் பிரஷ்யாவும் போலந்தைப் பிரித்தனர்.

1833 - போக்லாந்து தீவுகளை பிரித்தானியா மீண்டும் கைப்பற்றிக் கொண்டது.

1870 - மொன்டானாவில் அமெரிக்கப் படைகளினால் பெண்கள், குழந்தைகள் உட்பட 173 செவ்விந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1874 - விக்டோரியா மகாராணியின் மகன் எடின்பரோ கோமகன் அல்பிரட் ரஷ்யாவின் மூன்றாம் அலெக்சாண்டரின் ஒரே மகளான மரீயா அலெக்சாந்திரொவ்னாவை திருமணம் புரிந்தார்.

1924 - விளாடிமிர் லெனின் ஜனவரி 21 இல் இறந்ததாக சோவியத் ஒன்றியம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

1937 - லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையில் ஜோசப் ஸ்டாலின் அரசைக் கவிழ்க்க முயன்றதாக 17 கம்யூனிஸ்டுகளின் மீது மாஸ்கோவில் விசாரணைகள் ஆரம்பமாயின.

1943 - இரண்டாம் உலகப் போர்: லிபியாவின் தலைநகர் திரிப்பொலியை நாசிகளிடம் இருந்து பிரித்தானியர் கைப்பற்றினர்.

1943 - இரண்டாம் உலகப் போர்: ஆஸ்திரேலிய, மற்றும் அமெரிக்கக் கூட்டுப் படைகள் பப்புவாவில் யப்பானியப் படைகளைத் தோற்கடித்தனர். இது பசிபிக் போரில் யப்பானியரின் வீழ்ச்சிக்கு வழிகோலியது.

1950 - இஸ்ரேலின் சட்டசபை ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தது.

1957 - சென்னை மாநிலத்தில், தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.

1973 - வியட்நாமில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சன் அறிவித்தார்.

1996 - ஜாவா நிரலாக்க மொழியின் முதற் பதிப்பு வெளியானது.

1998 - யாழ்ப்பாணம், புங்குடுதீவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி துணை இராணுவக்குழுவின் முகாம் விடுதலைப்புலிகளால் தாக்கியழிக்கப்பட்டதில் அம்முகாமில் இருந்த ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

2002 - அமெரிக்க ஊடகவியலாளர் டானியல் பேர்ள் கராச்சியில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் கொலை செய்யப்பட்டார்.

2005 - திருச்சி ஸ்ரீரங்கத்தில் கல்யாண மண்டபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் மணமகன் உள்பட 62 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1876 - ஒட்டோ டியெல்ஸ், நோபல் பரிசு பெற்ற ஜேர்மனியர் (இ. 1954)

1897 - சுபாஷ் சந்திர போஸ், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் (இ. 1945)

1907 - ஹிடெக்கி யுக்காவா, நோபல் பரிசு பெற்ற யப்பானியர் (இ. 1981)

1915 - ஆர்தர் லூயிஸ், நோபல் பரிசு பெற்ற பிரித்தானியர் (இ. 1991)

1918 - கேர்ட்ரூட் எலியன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியலாளர் (இ. 1999)

1929 - ஜோன் போல்யானி, நோபல் பரிசு பெற்ற கனடியர்

1930 - டெரெக் வால்கொட், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்

இறப்புகள்
1873 - இராமலிங்க அடிகள், ஆன்மீகவாதி (பி. 1823)

1944 - எட்வர்ட் மண்ச், நோர்வே நாட்டைச் சேர்ந்த ஓவியர் (பி. 1863)

1989 - சல்வடோர் டாலி, ஸ்பானிய ஓவியர் (பி. 1904)

Tuesday, January 22, 2013

வரலாற்றில் இன்று

ஜனவரி 22

 • 1798 - நெதர்லாந்தில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
  1840 - பிரித்தானிய குடியேற்றவாதிகள் நியூசிலாந்தை அடைந்தனர்.
  1863 - ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போலந்து, லித்துவேனியா, பெலரஸ் ஆகிய நாடுகளில் கிளர்ச்சி வெடித்தது.
  1879 - தென்னாபிரிக்காவின் சூலுப் படைகள் ஐசண்டல்வானாவில் வைத்து பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்தனர்.
  1889 - கொலம்பியா கிராமபோன் வாஷிங்டனில் அமைக்கப்பட்டது.
  1901 - 64 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த விக்டோரியா மகாராணி தனது 81வது அகவையில் காலமானதை அடுத்து அவரது மூத்த மகன் ஏழாம் எட்வேர்ட் பிரித்தானியாவின் மன்னரானார்.
  1905 - சென் பீட்டர்ஸ்பேர்க்கில் சார் மன்னருக்கெதிராக தொழிலாளர்களின் எழுச்சி முறியடிக்கப்பட்டது.
  1906 - பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவர் தீவில் வலென்சியா என்ற பயணிகள் கப்பல் பாறைகளுடன் மோதியதில் 130 பேர் கொல்லப்பட்டனர்.
  1941 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் லிபியாவின் டோப்ருக் நகரை நாசிப் படைகளிடம் இருந்து கைப்பற்றியது.
  1942 - சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோயில் ஜப்பானியரின் குண்டுவீச்சினால் பெரும் சேதமுற்றது.
  1952 - உலகின் முதலாவது பயணிகள் ஜெட் விமானம் (BOACயின் Comet) சேவைக்கு விடப்பட்டது.
  1957 - சினாய் தீபகற்பத்தில் இருந்து இஸ்ரேல் வெளியேறியது.
  1964 - கென்னத் கவுண்டா வட றொடீசியாவின் முதலாவது அதிபரானார்.
  1973 - நைஜீரியாவின் கானோ விமானநிலையத்தில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்து வெடித்ததில் 176 பேர் கொல்லப்பட்டனர்.
  1980 - நோபல் பரிசு பெற்ற சோவியத் இயற்பியலாளர் அந்திரே சாகரொவ் மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார்.
 • 1984 - ஆப்பிள் மெக்கின்டோஷ் (mac) கணினி அறிமுகப்படுத்தப்பட்டது.
 • 1992 - சாயீரின் தேசிய வானொலி நிலையத்தை தீவிரவாதிகள் கைப்பற்றி அரசை பதவி விலகும்படி அறிவித்தனர்.
 • 1999 - இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் ஆஸ்திரேலிய கிறிஸ்தவ மதப் போதகர் கிரஹாம் ஸ்டைன்ஸ் என்பவரும் அவரது இரு மகன்களும் இந்துத் தீவிரவாதிகளால் உயிருடன் எரிக்கப்பட்டனர்.
 • 2003 - பயனியர் 10 விண்கலத்துடன் கடைசித் தொடர்பு மேற்கொள்ளப்பட்டது.
 • 2004 - ஆர்க்குட் தொடங்கப்பட்டது.பிறப்புகள்


Monday, January 21, 2013

வரலாற்றில் இன்று

ஜனவரி 21


1789: அமெரிக்காவின் முதலாவது நாவல் பொஸ்டன் நகரில் அச்சிடப்பட்டது.

1793: பிரான்ஸின் 16 ஆம் லூயி மன்னன் தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிரச்சேதம் செய்யப்பட்டார்.

1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜெபர்சன் டேவிஸ் ஐக்கிய அமெரிக்காவின் செனட்டில் இருந்து விலகினார்.

1899: ஒபெல் நிறுவனம் தனது வாகன உற்பத்தியை ஆரம்பித்தது.

1908: நியூயோர்க் நகரில் பெண்கள் பொது இடத்தில் புகைபிடிப்பதை தடைசெய்யப்பட்டது.

1911: முதலாவது மொன்டே கார்லோ பந்தயம் நடைபெற்றது.

1921: இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.

 • 1924 - சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் இறந்தார்.
 • 1925 - அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது.

 • 1941 - இரண்டாம் உலகப் போர்: அவுஸ்திரேலிய மற்றும் பிரித்தானியப் படைகள் லிபியாவின் டோபுருக் நகரைத் தாக்கின.

  1947 - முதலாவது சிங்களத் திரைப்படம் (கடவுணு பொரன்டுவ) திரையிடப்பட்டது.

 • 1954 - உலகின் முதலாவது அணுசக்தியாலான நீர்மூழ்கிக் கப்பல், USS நோட்டிலஸ், ஐக்கிய அமெரிக்காவில்வெள்ளோட்டம் விடப்பட்டது.
  1960: ஜமைக்கா விமான விபத்தில் 37 பேர் பலியாகினர்.

 • 1960 - மேர்க்குரி விண்கலத்தில் சாம் என்ற பெண் குரங்கு விண்வெளிக்குப் பயணமானது.
 • 1972 - திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன.

 • 1976 - ஒலியை மிஞ்சும் வேகத்தில் செல்லக்கூடிய கன்கார்டு ரக விமானம் முதன் முதல் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. அந்த விமானம் ஆங்லோ பிரெஞ்சு கூட்டணியில் உருவானது.

 • 1981: ஈரானில் அமெரிக்கத் தூதரகத்தில் 444 தினங்கள் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 52 பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

  1999: அமெரிக்க கரையோரக் காவல் படையினர் 4300 கிலோகிரோம் கொகேய்ன் போதைப் பொருளை கைப்பற்றினர்.

 • 2004 - நாசாவினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட ஸ்பிரிட் தளவுளவியின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. எனினும் இது பூமியில் தன்னியக்க முறையில் திருத்தப்பட்டு பெப்ரவரி 6 இல் தொடர்புகள் மீண்டும் பெறப்பட்டன.
 • வரலாற்றில் இன்று

  ஜனவரி 20
  வரலாற்றில் இன்று

  ஜனவரி 19
  பிறப்புகள்

  1933 - சீர்காழி எஸ். கோவிந்தராஜன், கருநாடக, திரையிசைப் பாடகர் (இ. 1988)

  இறப்புகள்


  • 1905 - தேவேந்திரநாத் தாகூர், இந்தியப் பகுத்தறிவாளர் (பி. 1817)
  • 1990 - ஓஷோ, இந்திய ஆன்மிகவாதி (பி. 1931).
  •  
  • 9 January 1983 – 16 August 1984
   ---------------------------------
   மாயாபஜார் கிருஷ்ணர் வேடத்தில் நடித்த என்.டி. ராமாராவின் படம் இன்றும்
   ஆந்திர மாநிலத்தில் கிராமப்புறங்களில் வைத்து வணங்கப்படுகிறது என்றால்
   அதற்குக் காரணம் கே.வி. ரெட்டியும், சக்கரபாணியும்தாம்.

   மாயாபஜார் படத்தில் கிருஷ்ணர் வேடத்தில் நடிக்கும்போது, ஆரம்பத்தில்
   என்.டி. ராமாராவுக்கு ஈடுபாடு வரவில்லை. அவருக்கு அதில் ஈடுபாட்டைக்
   கொண்டுவர அவர் கிருஷ்ணர் வேடத்தில் மேக்கப் போட்டு படப்பிடிப்பு தளத்தில்
   நுழையும்போது கிருஷ்ணருக்கு கற்பூர ஆரத்தி காண்பிப்பதுபோல காட்டக்காட்ட,
   அவருள் கிருஷ்ண பக்தி வளர்ந்து, நடிப்பில் மட்டுமல்ல, நிஜத்திலும்
   கிருஷ்ணராகவே மாறிவிட்டார். அந்த அளவுக்கு வேடப் பொருத்தமும் உடல் வளமும்
   என்.டி. ராமாராவுக்கு அமைந்திருந்தது.

  வரலாற்றில் இன்று

  ஜனவரி 18

  • 1520: டென்மார்க் அரசர் இரண்டாம் கிறிஸ்டியன், அசுடென் ஏரியில் நடைபெற்ற சமரில் சுவீடன் படைகளை தோற்கடித்தார்.

   1535: பெரு நாட்டின்தலைநகர் லிமா ஸ்தாபிக்கப்பட்டது.
  • 1778 - ஹவாய் தீவுகளைக் கண்டறிந்த முதலாவது ஐரோப்பியன், ஜேம்ஸ் குக். இதற்கு சான்ட்விச் தீவுகள்எனப் பெயரிட்டான்.

  • 1788: இங்கிலாந்திலிருந்து 736 குற்றவாளிகளை ஏற்றிக்கொண்டு வந்த 11 கப்பல்களில் முதலாவது கப்பல் அவுஸ்திரேலியாவை அடைந்தது. இதுவே அவுஸ்திரேலியாவில் முதலாவது ஐரோப்பிய குடியேற்றமாகும்.

   1886: நவீன கள ஹொக்கி விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.


  • 1896 - X - RAY இயந்திரம் முதற் தடவையாகக் அறிமுகபடுத்தப்பட்டது .
  • 1911 - யூஜின் எலி என்பவர் தனது விமானத்தை சான் பிரான்சிஸ்கோ துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த USS பென்சில்வானியா என்ற கப்பலின் மீது இறக்கினார். கப்பலொன்றில் தரையிறக்கப்பட்ட முதலாவது விமானத் இதுவாகும்.
  • 1919 - முதலாம் உலகப் போர்: பாரிஸ் அமைதி உச்சி மாநாடு பிரான்சில் வேர்சாயி நகரில் ஆரம்பமானது.
  • 1929 - லியோன் ட்ரொட்ஸ்கி சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
  • 1944 - இரண்டாம் உலகப் போர்: மூன்று ஆண்டுகளாக நாசிகளால் முற்றுகையிடப்பட்டிருந்த லெனின்கிராட் நகரைசோவியத் படைகள் மீட்டன.

  • 1950: அமெரிக்காவின் வேர்ஜீனியா மாநிலத்தில்இடம்பெற்ற விமான விபத்தில் 50 பெர் பலி.

   1974: இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையிலான ஒப்பந்தம் மூலம் யோம் கிபூர் யுத்தம் முடிவுக்கு வந்தது.

   1976: லெபனானின் பெய்ரூத் நகரில் லெபனான் கிறிஸ்தவ தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 1000 இற்கும் அதிகமானோர் பலி.

   1977: சிட்னியில் இடம்பெற்ற ரயில் விபத்pல் 83 பேர் பலி. இதுவே அவுஸ்திரேலியாவின் மிக மோசமான ரயில் விபத்தாகும்.
  • 1995 - 17,000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் தெற்கு பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டன.
  • 1997 - போர்ஜ் அவுஸ்லாண்ட் என்பவர் அண்டார்க்டிக்காவை துணை எதுவுமின்றி முதன் முதலில் கடந்து சாதனை படைத்தார்.
  • 2002 - சியேரா லியோனியில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

  • 2005: உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானமான எயார்பஸ் ஏ 380 பிரான்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டது.


  இறப்புகள்


  வரலாற்றில் இன்று

  ஜனவரி 17  பிறப்புகள்


  இறப்புகள்  நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு

  இரண்டே நிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா? நம்புங்கள் என்கிறார் ப்ரீத்தி ஷா. சும்மா இல்லை. ஆராய்ச்சி ஆதாரங்களோடு. யார் இந்த ப்ரீத்தி ஷா? என்ன ஆராய்ச்சி அது?  அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா. 'இன்சைட்’ என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார். விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் ப்ரீத்தி ஷா. இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுகள் ஏதும் இதுவரை வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு முகமையின் அளவுகளை வைத்து இந்தத் தரச்சோதனை நடந்தது. இதில் வெளியான முடிவுகள் மூலமாகத்தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் ப்ரீத்தி ஷா.

  ஆய்வு சொல்லும் முடிவுகள்:

  சோதனை செய்யப்பட்ட எந்த முன்னணி நிறுவனங்களின் நூடுல்ஸும் விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல ஏகப்பட்ட சத்துக்களை உள்ளடக்கியதாகவோ, குழந்தைகள் உடல் நலனுக்கு முற்றிலும் நன்மை பயப்பதாகவோ இல்லை.

  அனைத்து நூடுல்ஸ்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் எக்கச்சக்க மடங்கு அதிகமாக உப்பு மற்றும் கொழுப்பு உள்ளன. நூறு கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்ட சோடியம் அளவாகும். ஆனால், இந்தியாவில் விற்கப்படும் வெவ்வேறு நூடுல்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 821 மில்லி கிராம் முதல் 1943 மில்லி கிராம் வரை சோடியம் இருந்திருக்கிறது. கொழுப்பும் மிகுதி. ஆனால் தேவையான மற்ற சத்துக்களோ சொல்வதைவிடக் குறைந்த அளவில்! மிகக் குறைந்த அளவுக்கே நார்ச்சத்து, புரதம், கால்சியம் ஆகியன உள்ளன. இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிதல், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் எனப் பல்வேறு ஆபத்துகளுக்கும் குழந்தைகள் ஆளாக நேரிடும்.


  ப்ரீத்தி ஷா சொல்கிறார் .

  ''ஆய்வு முடிவுகளைப் பார்த்தபோது அதிர்ந்துபோனேன். இது தொடர்பாக விளக்கம் கேட்டு 15 நிறுவனங்களுக்கும் ஆய்வு நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பினோம். ஆனால், இதுவரை அந்தக் கடிதங்களுக்கு எந்த நிறுவனமும் பதில் அளிக்கவில்லை. கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு என்று எவ்வளவோ சத்து மிக்க சிறுதானியங்கள் விளையும் மண் இது. ஆனால், அவற்றை எல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டு, விளம்பரங்கள் மூலம் சந்தையைப் பிடிக்கும் பெருநிறுவனங்கள் இந்திய மக்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே அடிமைப்படுத்துகின்றன. பெற்றோர்கள் இந்த விஷயத்தில் விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும். குப்பை உணவின் மூலமாக ஏற்படும் வளர்ச்சி உண்மையானது அல்ல. நாளை நம் குழந்தைகள் நிரந்தர நோயாளிகளாக நாமே காரணம் ஆகிவிடக் கூடாது'' என்றார் அக்கறையுடன்.

  உண்மைதான். இந்த காலகட்டத்தில் எந்த விஷயத்தையுமே விழிப்பு உணர்வுடன்தான் அணுக வேண்டும்!

  பாபா ராம்தேவ் vs ஜப்பான் போலி சாமியார் ஷோகோ அசஹாரா.. ஓர் ஆன்மிக பயங்கரவாதம் !!!

  பாபா ராம்தேவ் vs ஜப்பான் போலி சாமியார் ஷோகோ அசஹாரா.. ஓர் ஆன்மிக பயங்கரவாதம் !!!

  இதை நீங்கள் கண்டிப்பாக கடைசி வரை படித்து சிந்திந்து செயல் படுங்கள் ..

  சரி யார் இந்த shoko Asahara ?

  ஷோகோ அசஹாரா ஒரு சாதாரண ஜப்பானியப் பிரஜை. ஜப்பான் இல் வாழந்த ஓர் மிக பெரிய சாமியார்.... இவர் நமது ஊர்களில் நித்தியானந்தா, சாய் பாபா, பிரமானந்தா போன்ற பல போலி சாமியார்களை தூக்கி சாப்பிட்டவர்..... இவர்களுக்கு எல்லாம் ஒரு வகையுள் தலைவர் போன்றவர்....ஏழைமையில் வாடிய குடும்பம். தவிரவும் ஒரு கண்பார்வை கிடையாது. அதனாலென்ன? தனது புத்திக்கூர்மையைப் பயன்படுத்தி, புதிதாக ஒரு மதத்தையே ஸ்தாபித்து, மக்களை மயக்கி வசப்படுத்தி, சம்பாதித்து, சம்பாதித்த அனைத்தையும் ஆயுதங்களாக மாற்றி, ஜப்பானில் ஒரு மாபெரும் புரட்சிக்கு வித்திட்டவர். கொள்கைத் தீவிரர்கள் பலர் சேர்ந்து ஆரம்பித்த இயக்கம் இல்லை இது. ஒரே நபர். ஒரே இலக்கு.ஒரே கனவு. ஜப்பானை ஆளவேண்டும்! இந்தக் கனவுக்காக எத்தனை உயிர்களை பலிகொடுத்திருக்கிறார்கள் தெரியுமா?

  மேற்கு நாடுகளெல்லாம் அணு ஆயுதம் குறித்து யோசித்துக்கொண்டிருந்த வேளையில் ஷோகோவின் 'ஓம் ஷின்ரிக்கியோ', ரசாயன உயிரியல் ஆயுதங்களைத் தயாரித்து மிகப்பெரிய அழிவுகளை உண்டாக்கியிருக்கிறது.ஜப்பானில் மட்டுமல்லாமல் ரஷ்யா முதல் ஆஸ்திரேலியா வரை, அமெரிக்கா முதல் பிலிப்பைன்ஸ் வரை தனது கிளைகளை விஸ்தரித்து, ஆன்மிகப் போர்வையில் இவர்கள் நிகழ்த்திஇருக்கும் அட்டகாசங்கள் கொஞ்சநஞ்சமல்ல!

  ஷோகோ அசஹாரா என்கிற ஒரு தனி மனிதனின் கனவுக்காக, ஜப்பான் நூற்றுக்கணக்கான உயிர்களை பலிகொடுக்க வேண்டிஇருந்தது! மதத் தீவிரவாதம் என்பது எத்தனை அபாயகரமானது என்பதை முதல் முதலில் உலகுக்கு அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொன்ன இயக்கம் ஓம் ஷின்ரிக்கியோ.
  எடுத்தால், வைக்கமுடியாத அளவுக்கு விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்டிருக்கும் நூல் இது.

  ஜப்பானில் அந்த நாட்களில் மத உணர்வு மிகவும் கம்மி, எல்லாரும் நிறோசக்கிமா, நாகசாகி, ஆணு குண்டுக்கு பின்பு அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் வேலை வேலை வலை மட்டும் தான்.... எதாவது முக்கியமான பண்டிகைகள் பொது மட்டும் தனது மத உணர்வை வெளி காட்டி கொண்டு.. பின்பு தனது வேலை க்கு திரும்பி விடுவர்....

  இந்த நேரத்தில் நமது. ( shoko Asahara ) ஒரு மதத்தை உருவாகினால் என்ன என்று யோசித்து நேராக இந்தியா வருகிறார்.... அவர்க்கு நன்றாகவே தெரிந்து இருக்கிறது, இங்கு தான் மதத்தின் பெயரால் என்ன சொன்னாலும் நம்பி விடும் முட நம்பிகையளர்கள் அதிகம் என்று, ஹிமியாலய சென்று அங்கு உள்ள ஒரு ஆசிரமத்தில் சேர்ந்து யோகா, மற்றும் சில தந்திரங்களை கற்று கொள்ளுகிறார்.... அப்படியே கொஞ்சம் புத்தம், சீக்கியம், என்ன சில மடத்தின் கோட்பாடுகளை எடுத்து கொண்டு.... திரும்பவும் ஜப்பான் போகிறார்.

  அங்கு ஒரு single bedroom flat ஒன்றை வாடகைக்கு எடுத்து கொண்டு...( அவர் முதல் மற்றும் கடைசியாக செய்த முதலிடும் இது தான் ) யோகா யோகா யோகா என்று எப்பொழுதும் இருந்து விடுகிறார்... இதை பக்கத்துக்கு விட்டில் இருபவர்கள், முதலில் எதோ கிருகனை பார்ப்பது போல் பார்த்தாலும், இவரின் தோற்றமும், செய்கையும் ஒரு மார்க்கமாக இருப்பதால் இவரை ஒரு சாமியாராக ஏற்று கொள்ளுகிறார்கள்.... அதன் பின் ஒரு சிறு சில சித்து வேலைகள், நமது ஊரில் சொல்ல போனால் திருநிறு வர வளைப்பது, வாயுள் இருந்து லிங்கம் எடுப்பது போல... இதனால் ஜப்பான் மக்கள் இவரை ஒரு கடவுளாகவே பார்க்க தொடங்கி விட்டனர்... அப்பொழுது இவர் தனது இயக்கத்தை ஒரு மதமாக பதிவு செய்து விடுகிறார்.... மதத்தின் பெயர்Aum Shinrikyo அப்படி என்றால் உண்மையான மதம் என்று அர்த்தம். இவரது சித்து விளையாட்டுகளில் மயங்கி ஜப்பானில் பாதிக்கு பாதி இவரது மதத்தில் இணைகிறார்கள்....

  இந்த கால கட்டத்தில் அவருக்கு உலகின் பல முலைகளில் அவருக்கு ஆசிரமங்கள், சீடர்கள் என்று வாழ்கையை ரசித்து கொண்டு இருந்தவர்க்கு திடீர் என்று உலகத்தை ஆட்சி செய்ய வேண்டும் என்று எண்ணம், அரசியலில் இறங்கு கிறார்... பிரதமர் பதிவுக்கு போட்டி இடுகிறார்.. அவரது மதத்தில் இருபவர்கள் மட்டும் அவருக்கு வாக்கு அளித்தால் போதும்.. எதிர் கட்சிகள் அனைத்தும் தேபோசிட் கூட கிடைக்காது.... இருந்தாலும் நமது ஊர் தேர்தல் போல பணத்தை வாரி இறைதார்,

  ஆனால் ஜப்பான் மக்கள் அரசியல் வேறு ஆன்மிகம் வேறு என்று நன்றாக தெரிந்து வைத்து இருந்தார்கள், எனவே இவருக்கு தேபோசிட் குட கிடைக்க வில்லை.

  இந்தியாவில் இருந்து ஒரு பிரமாண்ட லிங்கம் ஒன்றை வாங்கி தனது ஆசிரமத்தில் நிறுவி கொண்டு... தனது பகதர்களுக்கு ஒரு எச்சரிக்கை விட்டார்.. அது தான் இந்த உலகத்தில் அவதரித்து இருக்கும் நவீன காலத்து நோவா ( அதாவது பழைய பைபிள் இல் சொல்லி இருக்கும் ஒரு கதை, உலகம் அழிய போகிறது என்று தெரிந்த ஒருவர் ஒரு மிக பெரிய கப்பல் கட்டி அதில் உலகத்தில் உள்ள ஷிவ ராசிகளை கைப்பற்றி அதை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லுவார் அல்லவா) யார் எல்லாம் தப்பிக்க வேண்டுமோ அவர்கள் அனைவரும் என்னிடம் வாருங்கள், என்னது பார்வை அல்லது என்னது பாதுகாப்பில் இருபவர்கள் மட்டுமே தன்னை காப்பற்றி கொள்ள முடியும்,

  நமது ஊர் தாயத்து போல் அவர் சில விசயங்களை விற்றார்.... அது என்ன வென்றால் தனது தாடி மயிர்... ஒரு முடிய எடுத்து அத நான்கில் இருந்து ஐந்து துண்டாக வெட்டி அதை 500 $ என்று விற்றார்... ஓர வாரத்துல அப்படியே ஷர்ருகன் மாதிரி ஆகிவிட்டார் என்றால் பார்த்து கொள்ளுங்கள், அது அனைத்தும் விற்றது போக தான் குளித்த தண்ணிரை ஒரு சின்ன சிப்பாயுள் அடைத்து அதனை $ 800 க்கு விற்றான்..... அது மட்டும் அல்ல தான் தான் கடவுள் என்னது உடம்பில் ஓடுவது ரத்தம் மே அல்ல அமிர்தம்.. அன்று வாய் குசாமல் வாய்க்கு வந்தது எல்லாம் உளற ஆரம்பித்தான் இந்த பித்தன், இதன் பிறக்கு நம்மளை போல் உள்ளவர்கள் சும்மா விடுவார்களா???? வா வந்து ஒரு ரத்த பரிசோதனை எடுத்து கொள்ளலாம், அதன் பிறக்கு நீ சாமிய இல்ல ஆசாமியா என்று தெரிந்து விடும் என்று சவால் விட... அவரும் ஒத்து கொண்டார்... எதாவது தகிடு தட்டம் பண்ணி விடலாம் என்று எண்ணினார், அய்யோ பாவம் அவரால் ஒன்னும் பண்ண முடிய வில்லை, கடைசியுள் மருத்துவர் அவருது உடம்பில் உள்ளது, அமிரதாமோ அல்ல சாக்கடையோ இல்லை.. அக்மார்க் முத்திரை குட்ட பட்ட o+ ve blood group தான் என்று கூறி விட்டார்...

  இதன் பிறக்கு தான் இவர் தனது சொந்த படை ஒன்று நிறுவினர், தனக்கு எதிராக செயல் பட்டவர்களை திருத்து கட்டினர்... ஆயுதம் வாங்கி குவிக்க அரம்பிட்டார்.... திருபவும் நாட்டிக்கு அரசன் அக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்து, நாட்டிக்கு ஒதுக்கு புறமாக ஒரு ஆணு உலை ஒன்றை நிறுவினர், அதற்கு formulas ரஷ்ய நாட்டில் உள்ள ஒரு முக்கியமா மந்திரி (இவற்றும் நமது சாமியாரின் சீடன் தான்) என்னோ அவருது ஆணு உலை க்கு வந்த scienthist பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருபர்கலே என்பதே சந்தேகமே.... அந்த திட்டமும் வினாகியது....

  உயிரியல் ஆயிதம் (biological weapon ) தயாரித்தல் என்ன என்று யோசித்து ஒரு உயிர் கொல்லி வைரஸ் தயாரிக்கிறார், அதனை நாட்டு மக்கள் மிது ஏவுகிறார், அந்தா பாவம் அந்த வைரஸ் அனைத்தும் எடுத்து செல்லும் வழிகளில் இறந்து விடுகின்றன.......
  அதன் பிறக்கு சிரான் காஸ்( siran gas ) முலம் நாட்டு மக்கள் மிது ஏவுகிறார், அது ஒரு அளவுக்கு வெற்றியும் தருகிறது, ஆனால் ஜப்பான் நாட்டு மக்கள் அதை ஒரு தாக்குதலாக பார்க்க வில்லை, எதோ சுகாதார கேடு, அதனால் தான் இப்படி நடந்து விட்டது என்னே சுகாதார பணிகளை கவனிக்க துவங்கு கிறார்கள்...

  பிறகு டோக்யோ சுரங்க பாதைகளில் இந்த சிரான் காஸ் முலம் தாகுதல் நடத்துகிறான்... இப்பொழுது தான் அரசாங்கம் முழித்து கொண்டு தீவிர விசாரணை நடத்தி நமது வெள்ளை தக்காளியை கைது செய்து தண்டனை குடுகிறார்கள்.

  இது தான் Shoko Asahara வின் கதை, இவரை போல தான் இந்த பாபா ராம்தேவ், சிறு ஏழ்மை குடும்பதில் பிறந்து வாத நோயால் பாதிக்க பட்டு, பின்பு யோகா வால் குணம் அடைந்து ஒரு ஆசிரமம் துவங்கி, பல நாடுகளில் தனது ஆசிரமத்தை துவங்கி இருக்கிறார், கோடி கணக்கில் சொத்துகள் இருக்கிறது... இப்பொழுது அதிரதியாக அரசியல் பிரவசம், தனக்கு என்று ஒரு ஆயுதம் ஏந்திய படை அமைக்க போவதாக அறிக்கை என்று நாள் ஒரு வண்ணமாக பொழுது ஒரு அறிக்கையாக உலா வந்து கொண்டு இருக்கும் இவர் என்னக்கு Shoko அசஹாரா நியாபகம் படுத்துகிறார்.... மேலும் இவருக்கு BJP, RSS போன்ற மதசாயம் பூச பட்ட அரசியல் கட்சிகள் ஆதரவும் இவருக்கு பெருக்கி வருக்கிறது, என்பது குறிப்பிட தக்கது...

  மக்களே நன்றாக சிந்தியுங்கள், யாருக்கு உங்களுடைய அதரவு, மக்களுக்கு நன்மை என்றால் அது யாராக இருந்தாலும் நமது ஆதரவு உண்டு, ஆனால் சில போலிகளும் இது போல் செயல்களை இறங்குவார்கள், இவர்களை நாம் தான் இனம் அறிந்து ஒதுக்க வேண்டும்...யோசித்து முடிவு எடுங்கள்.... நான் உங்களுக்குள் ஒருவன் அக இருந்துகொண்டு உண்மைகளை உலகிருக்கு உரைக்கும் ஒரு சாதாரண வழிபோக்கன்........


  இந்த உலகம் எங்கே செல்கிறது ??


  நன்றி
  இன்று ஒரு தகவல்