Digital Time and Date

Welcome Note

Saturday, October 27, 2012

செய்தி: ஐஸ்லாந்தின் எரிமலை மீண்டும் வெடிக்க ஆரம்பித்து ஐரோப்பாவில் புகை மண்டலத்தை பரப்பியுள்ளதால் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

செய்தி: ஐஸ்லாந்தின் எரிமலை மீண்டும் வெடிக்க ஆரம்பித்து ஐரோப்பாவில் புகை மண்டலத்தை பரப்பியுள்ளதால் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஐஸ்லாந்தின் அய் யா பியா லா யெர் குல் (ay-yah-FYAH-lah-yer-kuhl) எரிமலை கடந்த இரு மாதங்களாக அவ்வப்போது வெடித்து வானில் சாம்பல் புகை மண்டலத்தை பரப்பி வருகிறது. இந்த புகை மண்டலத்தால் என்ஜின்கள் இயக்கமே நின்று விமானங்கள் விபத்துக்குள்ளாகலாம் என்பதால் புகை மண்டலம் கரையும் வரை விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

இப்போது இந்த எரிமலை வெடித்து ஐஸ்லாந்திலிருந்து ஐரோப்பா வரை பல்லாயிரம் கி.மீட்டருக்கு வான்வெளியில் சாம்பல் நிறைந்திருப்பதால் விமானங்கள் மீண்டும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இன்று மட்டும் 1,000 விமானங்கள் ரத்தாகியுள்ளன.

இந்த புகை மண்டலத்தால் நெதர்லாந்து, இங்கிலாந்தி்ன் தென் கிழக்கில் உள்ள விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன.
எரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை!

(Geo-Reactor)

''பூமியின் மையத்து வரை ஒரு துளையைத் தோண்டிச் சென்றால் நாம் எதைக் காண்போம்? உட்கருவின் நடுவில் இயற்கை அணு உலையாய் இயங்கி வரும் 5 மைல் விட்டமுள்ள யுரேனியக் கோளம் ஒன்றிருப்பதை ஊகித்து உடன்பட வைக்க ஆதாரம் உள்ளது. அதை நான் ''புவி அணு உலை'' (Geo-Reactor) என்று குறிப்பிடுகிறேன்.''

''பிரபஞ்சம், பூகோளம் ஆகியவற்றின் மெய்யான இயற்கை அமைப்பைக் கண்டுபிடிப்பதும், அந்த அறிவை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வதும் விஞ்ஞானத்தின் முக்கிய குறிக்கோளாகும். அந்தப் பணியைத்தான் நான் இப்போது செய்து வருகிறேன்'' மர்வின் ஹெர்ன்டன் Ph.D., (Marvin Herndon, President Transdyne Corpn, San Diego, California)

''ஐஸ்லாந்தின் எரிசாம்பல் முகில் (Plume) விஞ்ஞானத்துக்குக் கிடைத்த ஓர் இயற்கைக் கொடை (Boon to Science).'' பிரையன் ஹான்ட்வெர்க் (Brian Handwerk, National Geographic News)
பூகோளத்தின் மையத்தில் இயங்கும் வேகப் பெருக்கி அணு உலை

உலக நாகரீகக் குடிமக்களுக்குப் பெருந்தீங்கு விளைவிப்பது பூமியின் உட்கரு வெப்ப மீறலே தவிர மெதுவாக மாறிவரும் சூழ்வெளிப் பருவ நிலை மாற்றங்கள் அல்ல! கலிலியோ பூமி நகர்கிறது என்று கண்டுபிடித்தார்.

காப்பர்னிக்கஸ் பூமி பரிதியைச் சுற்றி வருகிறது என்று கண்டுபிடித்தார். டெஸ்மார்க்கின் வெளியீட்டில் கவரப்பட்ட ''டாம் சாக்கோ'' (Tom Chalko, inspired by Desmarquet's Report) நமது பூமிக் கோளின் திண்ணிய உட்கரு (Earth's Solid Inner Core) உண்மையில் ஓர் அணு உலை என்று 2000 ஆண்டில் கண்டுபிடித்தார்.

அணு உலையின் வெப்ப ஆற்றலே வெளிக்கருவில் உள்ள உலோகங்களைக் கொதிக்கும் குழம்பாக மாற்றி வைத்துள்ளது. அந்த அணுக்கரு உலை மையத் திரிவாக (Eccentric) அமைந்திருக்கிறது. தானாக இயங்கியும் இடையிடையே தானாக நிறுத்தம் அடைந்தும் வரும் மைய அணு உலையே பூமியின் மேற்தளத்தில் அடுத்தடுத்து நில நடுக்கங்களை உண்டாக்கியும், எரிமலைகளை எழுப்பியும் வருகிறது! பூமியின் துருவப் பனிப்பாறை முகப்புகள் உருகிப் போவதற்கு முக்கியக் காரணம் பூஜிய டிகிரி செல்ஸியஸ் உஷ்ணத்துக்கு மேல் சூடேறும் காற்றென நாம் கருதக் கூடாது!

துருவங்களின் பனிப் பாறைகளைச் சூடாக்கி உருக்குவது பூமியின் உட்கருவிலிருந்து வெளியாகும் வெப்பமே (Overheating of the Earth’s Core) தவிர பூகோளச் சூடேற்ற மில்லை என்பது இப்போது விஞ்ஞானிகள் கருதும் புதிய கருத்து! எரிமலைகள் மீண்டும் பீறிட்டெழுவதும், நில நடுக்கம் திடீரெனத் தாக்கித் தகர்ப்பதும் சூடேறிய பூமியின் மைய அணுப்பிளவு உலை குளிர்ந்து போகத் தேவைப் படுவதால் தவிர உட்கரு ‘படிமச் சுருக்கம்’ அடைவதால் (Crystallization) அல்ல ! இயங்கும் எந்த அணுப்பிளவு உலையும் வெப்ப மீறல் ஆபத்தில் (Danger of Over-heating) சிக்கிக் கொண்டு சிதைவு அடையக் கூடாது!
ஆர்டிக், அண்டார்க்டிக் துருவப் பனிக்குன்றுகளில் பெருமளவுப் பகுதிகள் ஏற்கனவே உருகி நீராகிக் கடல் உயரத்தை மிகையாக்கி விட்டன ! 2000 – 2003 ஆண்டுகளுக் கிடையில் மட்டும் அண்டார்க்டிக் பனிக்குன்றுகளின் உருகுதல் 8 மடங்கு அதிகரித் துள்ளது! சரிந்த பனிக்குன்றுகள் நழுவிக் கடலில் மூழ்கும்போது சுனாமியைத் தூண்டுவதோடு கடற்கரைப் பகுதிகளைக் கடல் வெள்ளம் மூழ்க்கி விடுகிறது!

எரிமலைகள் கண்விழித்து ஆர்டிக் கடலடியிலும் அண்டார்க்டிக் ஆழப் பகுதிலும் எழும்புகின்றன! அண்டார்க்டிக்கைச் சுற்றியிருக்கும் கடலில் 5 கி.மீ. (3 மைல்) ஆழத்தில் உள்ள நீர், திணிவு குன்றி உப்பளவும் குறைந்து (Less Dense & Less Salty) அண்டார்க்டிக்கின் அடித்தளம் உருகிப் போகிறது என்பதை உறுதிப் படுத்துகிறது! தூயப் புதுநீர் உப்புக் கடல்நீரை விட திணிவு குறைந்து மேலே மிதக்க வேண்டுமல்லவா ? அவ்விதம் நிகழ்வதில்லை. அதாவது அண்டார்க்டிக்கின் மேற்தளம் உருகாமல் பேரளவில் அடித்தளக் குன்றுகள் மட்டும் இளகிக் கீழே தூய நீராகத் தங்கி விடுகின்றன!

பூகம்ப எண்ணிக்கையும், தகர்ப்பாற்றலும் மிகையாகி வருகின்றன

கடந்த நாற்பது ஆண்டுகளாக நில நடுக்கத்தின் எண்ணிக்கை, தீவிரம், வலுவாற்றல் யாவும் ஏறிக் கொண்டே போகின்றன. 1973 இல் அமெரிக்கப் பூதளவியல் ஆய்வு நோக்ககம் (USGS -US Geological Survey) 7.0 ரிக்டர் அளவுக்கு மீறிய பூகம்பங்களின் தகர்ப்பாற்றல் 6 மடங்கு அதிகரித்து உள்ளதாக வெளியிட்டிருக்கிறது. மெல்ல மெல்ல காலநிலை உஷ்ணம் ஏறும் போது ஒரு டிகிரிக்குக் குன்றிய தசமத்தில் கூடினாலும் நிலநடுக்கங்கள் 5 மடங்கு பெருகிய ஆற்றலில் தகர்க்கின்றன!

நாசா விஞ்ஞானிகள் கூறுவது : பூமியானது தான் வெப்ப சக்தியை எதிரனுப்ப முடிவதைப் போல் பரிதியி லிருந்து பெறும் சக்தியைப் பேரளவில் (0.85 MegaWatt per Sq km) உறிஞ்சிக் கொள்கிறது. சூழ்வெளி மாசுக்கள் இப்போது பெருகி வருகின்றன. பூமியைத் தாக்கும் சூரியக் கதிர்வீச்சு இயக்கங்கள் பரிதித் தேமல்களால் (Sun Spots) 2012 ஆண்டு வரை மிகையாகி வரும். 2000 -2003 இந்த மூன்று ஆண்டுகளில் ஏன் அண்டார்க்டிக் அடித்தளப் பனிக் குன்றுகளின் உருகல் 8 மடங்கு அதிகரித்திருக்கிறது ? அந்தக் கால இடை வெளியில் பரிதியின் வெப்ப வீச்சு அண்டார்க்டிக் பகுதியில் எட்டு மடங்கு மிகையாகப் பொழிய வில்லை!

பூகோளச் சூடேற்றமும் அந்த அளவுக்கு திடீரென ஏறவும் இல்லை. ஆதலால் அண்டார்க்டிக் பனிக் பாறைகள் உருகக் காரணம் பூமியின் உட்கருவில் உள்ள அணுப்பிளவு இயக்கம் பெருகி வெப்ப சக்தி உள்ளிருந்து மேலெழுந்துள்ளதையே காட்டியுள்ளது.பூகோளச் சூடேற்றம் அண்டார்க்டிக் கடற் பகுதி ஆழத்தில் பனி உருகி உப்பு சிறுத்த, தணிவும் குறைந்த நீர் சேமிப்புக்குக் காரணமாக இருக்க முடியாது!

புவி மையத்தில் இயங்கி வரும் அணுக்கரு உலை வெப்பம் மீறி எழுந்து அப்படிச் செய்திருக்க முடியும் என்று ஒப்புக் கொள்ளலாம். அதாவது புவி மையத்தில் உள்ள அணு உலையின் கனல் எழுச்சியைத் தணிக்க, ''வெப்பத் தணிப்பியாக'' (Heat-Sink) அண்டார்க்டிக் பனிக் கண்டம் ஒன்று மட்டும்தான் உதவ முடிகிறது! அதாவது பூமியின் உட்கரு அணு உலைக்கு நேர் மேலே இருப்பது அண்டார்க்டிக் பனிப் பாறைகள் என்று நாம் ஊகிக்கலாம்!

பூமி மையத்தில் உள்ள பூத அணுக்கருப் பிளவு உலை

ஆதிகாலப் பிள்ளைப் பூமியானது (Baby Earth) பரிதியிலிருந்து பிரிந்து உட்கரு உலோகக் கோளமான ஓர் நீர் அண்டம் என்பதை அறிவோம். சூடான திரவக் குழம்பில் திரண்டு பரிதியை மூலத் தட்டு வடைபோல் (Primordial Disc) சுற்றிக் குளிர்ந்த ஓர் உருண்டையே நமது பூர்வ பூமி ! திணிவு மிக்க திரவ உலோகங்கள் (Densest Metals) ஈர்ப்பாற்றலால் கீழாகப் படிந்தும், நிறை மெலிந்த கனிமங்கள் மேலே மிதந்தும் பூமியின் மேற்தளம் மட்டும் குளிர்ந்தது.

யுரேனியம், தோரியம் போன்ற உலோகங்கள் மிகத் திணிவு பெற்றவை.உதாரணமாக யுரேனியத்தின் திணிவு (Density): 19 கிராம் /கியூபிக் செ.மீ. (19 gram per cubic cm). யுரேனியம் ஈயத்தை விட 1.6 மடங்கு திணிவு உள்ளது. தோரியத்தின் திணிவு : 11.7 கிராம் /கியூபிக் செ.மீ. புளுடோனியத்தின் திணிவு : 19.7 கிராம் /கியூபிக் செ.மீ. இம்மூன்று கன உலோகங்களும் மற்ற கன உலோகங்களோடு சேர்ந்து பூமியின் மையக் கருவில் படிந்திருக்கலாம் என்று அழுத்தமாக ஊகிக்க இடமிடுக்கிறது.
தானாக நியூட்ரான்கள் தாக்கும் போது அணுப்பிளவில் அணுசக்தி உண்டாக்கும் மூன்று கன உலோகங்கள் : யுரேனியம் -235, யுரேனியம் -233, புளுடோனியம் -239. யுரேனியம் 238 உலோகத்தை வேக நியூட்ரான் தாக்கும் போது, யுரேனியம் -238 புளுடோனியம் -239 ஆக மாறுகிறது. அதுபோல் தோரியம் -232 உலோகத்தை நியூட்ரான் தாக்கும் போது, தோரியம் -232 யுரேனியம் -233 ஆக மாறுகிறது.

யுரேனியம் -235, யுரேனியம் -233, புளுடோனியம் -239 ஆகிய மூன்றும் சுயமாக நியூட்ரான்களை வெளியேற்றி அவை அந்தக் கன உலோகங்களைத் தாக்கிப் பிளக்கும் போது அணுசக்தியை உண்டாக்குகின்றன. பெரும்பான்மையாகப் பூமியில் கிடக்கும் யுரேனியம் -238 இல் சிறிதளவு யுரேனியம் -235 உள்ளது. ஆகவே முதலில் நிகழும் யுரேனியம் -235 நியூட்ரான் சேர்க்கையில் சக்தி உண்டாவதுடன், பிளவுக் கழிவுகளோடு மூன்று நியூட்ரான்கள் பிறக்கின்றன. அந்த நியூட்ரான்கள் மீண்டும் யுரேனியம் -235 உலோகத்தைத் தாக்கி சக்தியும், கழிவும், 3 நியூட்ரான் களும் உண்டாகும். அணுப்பிளவுக் கழிவுகளில் இரண்டு பாதி சிறு நிறை தனிமங்கள் காணப்படும். திரவ நிலையில் சிறு நிறைத் தனிமங்கள் பிரிந்து மேலே மிதக்கும்.

வேக நியூட்ரான்கள் யுரேனியம் -238 உலோகத்தைத் தாக்கிச் சக்தியை உண்டாக்கும் புளுடோனியம் -239 உலோகத்தையும் முடிவில் தோற்றுவிக்கும். மேலும் வேக நியூட்ரான்கள் தோரியம் -232 உலோகத்தைத் தாக்கிச் சக்தியை உண்டாக்கும். யுரேனியம் -233 உலோகத்தையும் தோற்றுவிக்கும். இம்மாதிரி தொடர்ந்து வேகப் பெருக்கி அணு உலைகள் போல் (Fast Breeder Reactor) தொடர்ந்து அணுசக்தியும், எரிசக்தி எருவும் பூமியின் மையத்தில் உண்டாகி வருகின்றன.

அப்படி இயங்கும் அணுப்பிளவு அணு உலைகளில் கழிவுக் தனிமங்கள் உண்டாகித் தானாக அணு உலை நிறுத்தம் அடையும். காரணம் கழிவுப் பொருட்கள் நியூட்ரான் விழுங்கிகள். நிறை சிறுத்த கழிவுப் பொருட்கள் கனற் குழம்பில் மேலே ஏறி மிதக்க மறுபடியும் அணு உலை இயங்க ஆரம்பிக்கிறது. இத்தகைய வேகப் பெருக்கி அணு உலைதான் பூமியின் மையத்தில் தொடர்ந்து இயங்கியும் இடையிடையே நிறுத்தம் அடைந்தும் பிரம்மாண்ட மான வெப்ப சக்தியை உற்பத்தி செய்து வருகிறது என்று 1993 ஆம் ஆண்டில் டாக்டர் மர்வின் ஹெர்ன்டன் புதியதோர் பூமி உட்கரு நியதியை அறிவித்தார் !

விஞ்ஞானி மர்வின் ஹெர்ன்டான் அறிவித்த புவி அணு உலை

பூமியில் அணுசக்தி ஆற்றல் பெறும் யுரேனியம், தோரியம் ஆகியவற்றின் இருப்பு பல இடங்களில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. வானியல் விஞ்ஞானி டாக்டர் மர்வின் ஹெர்ன்டான் முதன்முதல் அணுப்பிளவுத் தொடரியக்கம் செய்து காட்டிய இத்தாலிய விஞ்ஞானி என்ரிகோ •பெர்மியைப் பின்பற்றி பூமிக்குள்ளே மாபெரும் ஓர் இயற்கை அணுப்பிளவு உலை (Natural Nuclear Fission Geo-Reactor) இயங்கியும் அடுத்து நிறுத்தம் அடைந்தும் வருகிறது என்னும் புதியதோர் கோட்பாட்டை வெளியிட்டார்.

அந்த அணுப்பிளவு உலை வேக நியூட்ரான்கள் யுரேனியத்தைத் தாக்கி சக்தியும், எரிசக்தி எருவும் ஈனுகின்ற ஒரு வேகப் பெருக்கி அணு உலை (Fast Breeder Reactor). அதற்கு ஹைடிரஜன் போன்ற மிதவாக்கி (Moderator) தேவையில்லை. மற்ற மின்சக்தி நிலையங்கள் போலின்றி, புவி அணு உலை (Georeactor) தானாக இயங்கும். தானாக நிறுத்தம் அடையும். அதன் வெப்ப சக்தி ஆற்றலைக் கூட்டிக் குறைக்கும் சுயக் கட்டுப்பாடும் கெண்டது. இயக்கத்தில் விளைந்து சேமிப்பாகும் அணுப்பிளவுக் கழிவுகள் நிரம்பி நியூட்ரான்களை விழுங்கி அணு உலை அடுத்து நிறுத்தம் அடையும். நிறை குன்றிய அணுவியல் கழிவுகள் கனற் குழம்பில் மேலேறி மிதக்கும். பிறகு தனிப்பட்டுக் கீழே யுரேனியம் -235 சேரும் போது அணு உலை தானாக இயங்கத் துவங்கும்!

இந்தக் கோட்பாடை மர்வின் ஹெர்ன்டான் 1993 இல் முதன்முதல் வெளியிட்ட போது அக்கருத்தைப் பலர் கூர்ந்து நோக்க வில்லை. பூமியின் உட்கரு வெப்பம் மிகுந்த கோளம்! அதைச் சுற்றி வெளிக்கருவில் உலோகத்தால் ஆன கனற் குழம்பு ! உட்கருவின் அணு உலை வெப்ப சக்தியே திரவக் குழம்பை மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுற்ற வைத்திருக்கும். அந்த அணுப்பிளவு சக்தியே பூகோளக் காந்த சக்திக்கும் (Geomagnetism) மூலமாக இருக்கக் கூடும் என்பதும் அறியப் படுகிறது. செவ்வாய்க் கோள் மின் காந்த மின்றி ஈர்ப்பியல் குன்றி செத்துக் கிடக்கிறது.

செவ்வாய்க் கோளின் உட்கரு அணு உலை இயக்கம் நிரந்தராக நிறுத்தம் அடைந்து அதன் காந்த சக்தி இழந்து போனது! செவ்வாய்க் கோளின் அணு உலை சக்தியற்றுச் செத்து விட்டதால் செவ்வாயின் காந்த சக்தி மறைந்து, ஈர்ப்பாற்றல் குறைந்து போய் அதன் சூழ்வெளி வாயு மண்டலம் நிரந்தரமாய் இழக்கப் பட்டு நீர்வளம் எல்லாம் முற்றிலும் வரண்டு விட்டது. ஆனால் செவ்வாயின் உட்கரு ஒருகாலத்தில் சூடாக இருந்து அதில் இயங்கிய எரிமலை பரிதி மண்டலத்தின் மிகப் பெரிய எரிமலையாக எழுந்திருக்கிறது !
4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய நமது பூமி தன் உட்கருவில் அணுவியல் எருக்களான யுரேனியம் -235, யுரேனியம் -238, அணுப்பிளவு இயக்கத்தால் உண்டான புளுடோனியம் -239 ஆகியவற்றைப் பயன்படுத்தி வரும் 5 மைல் (10 கி.மீ.) விட்டமுள்ள வேகப் பெருக்கி அணு உலைக் கோளம் ஒன்றைக் கொண்டுள்ளது என்று கூறுகிறார் மர்வின் ஹெர்ன்டான். அது வெளியாக்கும் வெப்ப சக்தி 4 டெரா வாட்ஸ் (4000 பில்லியன் வாட்ஸ்), (4 மில்லியன் மெகாவாட்ஸ்) [4 terawatts (4X10^12 watts)] என்று கணினி மாடல் மூலம் கணக்கிடப்படுகிறது. இப்பேரளவு வெப்ப சக்தி தொடர்ந்து வெளியேறாது விட்டு விட்டு எழுவதால், அங்குமிங்கும் எரிமலையும், பூகம்பமும் உலக நாடுகளில் தலைதூக்கி குடிமக்களுக்கு அடிக்கடி இன்னல் கொடுத்து வருகின்றன!

எ.சி.எம்.கடாபி
இஸ்லாமிய ஆயிவு மையம்
வாழைச்சேனை
இலங்கை.

அமெரிக்கா இதுவரை கண்டிராத அதிர்ச்சியை கொடுத்துள்ள ஈரான்!

''நாம் நாடியவர்களின் பதவிகளை நாம் உயர்த்துகின்றோம். கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்!'' (அல்குர்ஆன் 12:76)

அமெரிக்காவின் அதி நவீன ஆளில்லா உளவுபார்க்கும் விமானம் ஒன்றை சில மாதங்களுக்கு முன் சுட்டு வீழ்த்தியது।. ராடர் திரையில் விழாமல் தன்னை உருமறைத்துக்கொண்டு பறக்கத்தக்க இந்த விமானம் தான் இருக்கும் இடத்தை வேறு இடத்தில் இருப்பது போன்ற பொய்யான தோற்றப்பாட்டையும் மேற்கொள்ள வல்லது. அதுமட்டுமல்லாது அதி நவீன கண்காணிப்புப் கருவிகளைக் கொண்டுள்ள இவ்விமானம் தரையில் இருந்துவரும் ஆபத்துக்களையும் அறிந்து அதற்கு ஏற்றால் போல தனது பறக்கும் திறனை மாற்றவல்லது.

இதனை எவ்வாறு சுட்டு வீழ்த்த முடியும் என்பதே பெரும் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் அதனை ஈரானிய இராணுவத்தினர் பத்திரமாகத் தரையிறக்கியுள்ளனர் என்ற செய்தி தற்போது கசிந்துள்ளது.

இவ்விடையம் ஏற்கனவே அமெரிக்காவுக்குத் தெரிந்திருக்கவேண்டும் ஆனால் அவர்கள் வாயே திறக்கவில்லை காரணம் ஈரான் தான் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அறிவிக்க அப்படியே இருக்கட்டும் என அமெரிக்க விட்டுவிட்டது. விமானம் சுடப்பட்டால் அது தரையில் வந்து விழும்போது சிறிய அளவிலாவது சேதம் ஏற்படும். ஆனால் சுட்டு வீழ்த்தியதாகச் சொல்லப்படும் விமானத்தை ஈரான் காட்டும்போது அதனைப் பார்த்து உலகமே ஒரு கணம் ஆடிப்போய்விட்டது.

காரணம் அதில் எந்தச் சேதமும் இல்லை. (மிகமிகக் குறைந்த ஒரு சேதத்தைத் தவிர) அப்படி என்றால் விமானத்தை எவ்வாறு ஈரான் இராணுவத்தினர் கைப்பற்றினார்கள் என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. மேற்கொண்டு படியுங்கள்.

இந்த விடயத்தை சம்பவ தினமன்று குறிப்பிட்ட விமானம்(RQ - 170) அப்கானிஸ்தான் வான் பரப்பில் பறப்பது போன்ற தோற்றப்பட்டை கொடுத்துக்கொண்டு பறப்பில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்கா சொல்கிறது அவ்விமானம் சிலவேளை ஈரானின் எல்லைப் பகுதிக்குள் தற்செயலாகச் சென்றிருக்கலாம் என்று. ஆனால் அந்த விமானம் ஈரான் நாட்டிற்குள் சுமார் 200 கிலோ மீட்டர் வரை ஊடுருவிச் சென்று வேவுபார்த்துள்ளது என்பதே உண்மையாகும். குறிப்பிட்ட விமானம் உள்வாங்கும் GPS சமிஞ்சைகளை ஈரான் அவதானித்து அதனை வைத்து அந்த ஆளில்லா விமானத்தை ஏமாற்றியுள்ளது. புரியவில்லையா ? அதாவது இந்த அதி நவீன ஆளில்லா விமானம் செயற்கைக்கோளில் இருந்து வெளியாகும் சில சமிஞ்சைகளை வைத்தே தனது (பாதை) பயணத்தை உறுதிசெய்கிறது. அச் சமிஞ்சைகள் சிலவேளை கிடைக்கவில்லை என்றால் அது தானாகவே ஆட்டோ பைலட் (தானாகப் பறக்கும் திறனுக்கு) மாறும்.

ஈரான் முதலில் ஒருவகையான ஒலிக்கற்றைகளைப் பாவித்து செயற்கைக்கோளின் சமிஞ்சைகளைத் தடைசெய்துள்ளது। அவ்விமானம் உடனே ஆட்டோ பைலட் சிஸ்டத்துக்கு தன்னை மாற்றி பறப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. இவ்வாறு பறப்பில் இருந்த விமானத்தின் கருவிகளோடு உடனடித் தொடர்பை ஏற்படுத்திய ஈரான் இராணுவத்தினர் விமானத்தில் ஏற்கனவே பதியப்பட்டிருந்த வரைபடங்களை மாற்றியுள்ளனர். உலகவரை படங்கள் சிலவற்றை மாற்றி அதனை அந்த விமானத்தின் மெமரியில் பதித்துள்ளனர்.

புதிதாகப் பதிக்கப்பட்ட மெமரியில் அந்த விமானம் இறங்கவேண்டிய இராணுவத் தளம் ஈரானின் ஒரு விமான நிலையம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தைப் பொறுத்தவரை ஈரான் நாடு தான்॥ தான் தரையிறங்கவேண்டிய கடைசி விமானநிலையம் என அது நினைத்துள்ளது. (அதாவது பாக்கிஸ்தான் இல்லையேல் அக்பானிஸ்தான் என்று அது நினைத்து ஈரானில் தரையிறங்கத் தயரானது). இந்த விமானத்தை அதுவரை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சி.ஐ.ஏ உளவு நிறுவனம் அதன் கட்டுப்பாட்டை சில நிமிடங்கள் இழந்தது. அதனைச் சாதகமாகப் பயன்படுத்திய ஈரான் அந்த ஆளில்லா விமானம் இறங்கவேண்டிய குறியீடுகளை தாம் ஏற்கனவே ஏற்படுத்தியிருந்த தொடர்புகள் மூலம் உட்செலுத்தியுள்ளது.

பறக்கும் அவ்விமானத்தின் உயரத்தை அவசரமாக கணக்கிட்ட அவர்கள் எத்தனை ஆயிரம் அடி உயரத்தில் இருந்து அது தரையிறங்கவேண்டும் என அறிவித்தல் சமிஞ்சைகளை விடுக்க அவ்விமானம் தனது சொந்த விமானநிலையத்துக்கு தாம் வந்துவிட்டதாகக் கருதி தரையிறங்கியுள்ளது. இருப்பினும் எல்லாவற்றையும் படு கச்சிதமாகச் செய்த ஈரானின் இராணுவ வல்லுனர்கள் சிறிய பிழை ஒன்றை மட்டும் விட்டுவிட்டனர். விமானத்திற்க்கும் ஓடு தளத்திற்கும் இடையே உள்ள தூரத்தை துல்லியமாக அவர்கள் கணக்கிடவில்லை. அதனால் அமெரிக்க விமானம் தரையிறங்கும்போது மெதுவாக இறங்கவில்லை. சற்றுக் கடினமான முறையில் தரையிறங்கி மிகச்சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளது அவ்வளவுதான். ஆனால் இது ஈரானின் பாரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.

உலகில் உள்ள பல நாடுகளுக்கு மேல் இவ்விமானம் பறப்பில் ஈடுபட்டு நோட்டம் இட்டுள்ளது. இவ்விமானம் ரஷ்ய வான்பரப்பில் கூட பறந்து அங்கும் மண்ணைத்தூவி திரும்பியுள்ள நிலையில் இதனை ஈரான் எவ்வாறு துல்லியமாகக் கண்டு பிடித்து சுட்டு வீழ்த்தாமல் தரையிறக்கியுள்ளது என்பது பெரும் சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.

இதனை விடப் பெரியவிடையம் என்னவென்றால் இவ்விமானம் பறப்பில் ஈடுபட்டு ஈரான் நாட்டிற்குள் வந்த சில நிமிடங்களில் எல்லாம் ஈரான் இராணுவ வல்லுனர்கள் கடுகதி வேகத்தில் எவ்வாறு செயல்பட்டார்கள் என்பது தான் தெரியவில்லையாம். இவ்விமானம் குறித்து ஏற்கனவே ஈரான் பல தகவல்களைத் தெரிந்துவைத்திருக்கிறதா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளது. அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு நிறுவனம் தற்போது ஆழ்ந்த யோசனையில் உள்ளது. இதற்கான பதிலடியை ஈரானுக்கு எவ்வாறு கொடுப்பது என்பது அமெரிக்காவின் அடுத்த சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க கைப்பற்றப்பட்ட விமானத்தில் இருந்து அமெரிக்காவில் உள்ள தேசிய பாதுகாப்பு கம்பியூட்டர்களை அல்லது உளவு நிறுவனத்தின் கம்பியூட்டர்களைத் தொடர்புகொள்ள முடியும் என்பதனால் அனைத்துச் சேனல்களையும் அமெரிக்க பென்டகன் பாதுகாப்பு மையம் தற்போது முடக்கியுள்ளதாம்.

எ.சி.எம்.கடாபி
இஸ்லாமிய ஆயிவு மையம்
வாழைச்சேனை
இலங்கை.

ஆராய்ச்சிகள் - அன்றும், இன்றும்


 • "ஆராய்ச்சி", "ஆராய்ச்சியாளர்கள்", "விஞ்ஞானி" - இதெல்லாம் ரொம்பவே நமக்குப் பரிச்சயமான வார்த்தைகள். அவ்வப்போது பத்திரிககளில் "According to latest research..." என்று படித்திருப்போம். உலகில் நமக்கு புரியாத பல புதிர்களை விளங்க வைப்பதும், அறியாத பல நல்ல விஷயங்களையும் புரிய வைப்பதும் இந்த ஆராய்ச்சியாளர்களே!!
  எல்லா புகழ்பெற்ற பெரும் பன்னாட்டு நிறுவனங்களிலும் ஆராய்ச்சிகளுக்கும், புது கண்டுபிடிப்புகளுக்குமென்றே "R & D" எனப்படும் "ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்துதல்" என்ற தனித் துறையே உண்டு. இது தவிர அரசாங்கள் சார்பாகவும், பல்கலைக் கழகங்கள் சார்பாகவும் இத்துறை மூலம் பெரிய பெரிய ஆராய்ச்சிகள் நடத்தி, மனித மற்றும் உலக மேம்பாட்டுக்குப் பாடுபடுகிறார்கள். எளிதாகப் புரிய வைக்கவேண்டுமென்றால், "மூலிகை பெட்ரோல்" ராமரும் ஒரு ஆராய்ச்சியாளரே!!

  ஆராய்ச்சியாளர்களின் தொடர் ஆர்வத்தாலும், முயற்சிகளாலும்தான் இன்றைய உலகில் பல நவீன கருவிகளும், நோய்களுக்கு மருந்துகளும், புதிய சிகிச்சை முறைகளும் கிடைத்திருக்கின்றன. ஒரு காலத்தில் மருந்தே இல்லைன்னு சொல்லப்பட்ட கேன்ஸர் இன்னிக்கு குணப்படுத்த முடியுற வியாதியா ஆகிடலையா? அதுபோல எய்ட்ஸுக்கும் மருந்து இப்போ இல்லைனாலும், ஆராய்ச்சி தொடருது. சமீபத்துல ஒருவரின் புற்றுநோய்க்குச் செய்த ஸ்டெம் செல் சிகிச்சையால் எதிர்பாராவிதமாக அவரின் எய்ட்ஸ் குணமாகியுள்ளது. இதுவும் ஆராய்ச்சி செய்யப்பட்டு, எய்ட்ஸ் சிகிச்சைக்கு வழிவகுக்கப்படலாம் எதிர்காலத்தில்.

  உலகம் உருண்டையென்பதிலிருந்து, இந்த அண்டவெளியில் பூமியைப் போல இன்னும் சுமாராக ஐம்பது பில்லியன் கோள்கள் இருக்கக்கூடும் என்று நமக்கு தெரிவித்ததும் ஆராய்ச்சியாளர்களே!!

  சாக்லேட் சாப்பிட்டால் கெடுதல் என்ற நமது நினைப்பை, (டார்க்) சாக்லேட் அளவோடு சாப்பிட்டால் உடல்நலத்திற்கு நல்லது என்று தெளிய வைத்ததும் இப்படியான ஆராய்ச்சிகளே! (க்ரீன்) டீக்கும் இதேதான்.

  முன்னெல்லாம் "கொலஸ்ட்ரால்" என்பதே கெட்ட வார்த்தையாக நினைத்து எண்ணெய் வகைகளை நாம் "தீண்டத்" தயங்க, அப்புறம் கொலஸ்ட்ராலிலும் "நல்ல" கொலஸ்ட்ரால் (HDL), "கெட்ட" கொலஸ்ட்ரால் (LDL) உண்டு என்று புரிய வைத்து, அதற்கேற்றவாறு எண்ணெய் வகைகளைத் தேர்ந்தெடுக்க வைத்தனர் ஆராய்ச்சிகள் மூலம்.

  முட்டை சாப்பிட்டால் உடல் பருமனும், பி.பி.யும் எகிறும் என்று நினைத்து நாம் தவிர்த்துக் கொண்டிருக்க, நிறைய முட்டை சாப்பிட்டால் உடலில் கொழுப்பு உருவாகுதலே நிறுத்தப்படும். எனவே இதய நோய் வராது என்று புதிய தகவல் தருகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்!!

  இதேதான் உப்பு, உருளைக் கிழங்கு, ரெட் மீட் வகையறாக்களுக்கும் - இவையெல்லாம் உடல்நலத்திற்கு பெரும் கேடு விளைவிப்பவை என்ற நம் நினைப்பில் உப்பைத் தூவி, இவைகளிலும் நன்மை உண்டு; ஆனால், அளவுக்கு மிஞ்சினால்தான் ஆபத்து என்று வலியுறுத்துகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

  இந்த "பதப்படுத்தப் பட்ட உணவுகள்" (frozen foods) குறித்து எல்லாருக்குமே ஒரு இகழ்ச்சி உண்டு. ஹூம், பாக்கெட்டுல போட்டு ஃப்ரீஸர்ல போட்டு வச்சிருக்கதுல என்ன சத்து இருக்கும்? ஃப்ரெஷ்ஷா அன்னிக்கு கடையில வாங்கிச் சாப்பிடுற மாதிரி வருமா? என்று அங்கலாய்ப்பவர்களுக்கும் ஆப்பு இருக்கு. "ஃப்ரெஷ்"னு நாம சொல்ற பல காய்கறி, பழ வகைகள் ஆக்சுவலா ஆறு மாசத்துக்கும் முன்னேயே, அதுவும் அவை சரியான பருவத்துக்கு வருமுன்னே பறிச்சு, செயற்கை முறையில பழுக்க வைக்கப்பட்டு, பல ஊர்கள்/நாடுகள் பயணம் செய்வதில் சத்து இழப்பும் ஏற்பட்டு, நமக்கு கடைகளில் "ஃப்ரெஷ்" என்று விற்கப்படுகின்றன. ஆனால், ஃப்ரோஸன் வகைகளில் காய்கறிகள்/பழங்கள் அவை இயற்கையாகவே சரியான பருவம் அடையும் வரை காத்திருந்து, பின் பறிக்கப்பட்டு, உடன் ஃப்ரீஸ் செய்யப்படுவதால், அவற்றில்தான் முழுமையான சத்துக்களும் இருக்கின்றன என்று இப்போது சொல்கிறார்கள்!!

  சாப்பாட்டை விடுங்க, நடைபயிற்சிக்கு வாங்க. இந்த நடைபயிற்சி செய்யணும்னு நினைக்கிறவங்க, செய்ற முதல் வேலை நல்ல ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்குவதுதான்!! அந்த ஷூ வாங்குறதுக்கு (மட்டுமே) அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்போம். பயிற்சியாளர்கள்/ மருத்துவர்களும் சரியான காலணி அணிந்து நடப்பதுதான் நல்லது. இல்லைன்னா, பாதம், முட்டிகளுக்கு பாதிப்பு வரலாம்னு சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனா அதுக்கும் வருது வில்லங்கம். வெறும் காலோடு நடப்பதுதான் நல்லதாம். உள்ளங்காலின் தோல் அதற்கேற்ற உறுதியோடுதான் உள்ளது என்றும், அப்படி நடந்தால்தான் இரத்த ஓட்டமும், தொடுஉணர்ச்சிப் புள்ளிகளும் சரியாகத் தூண்டப்படும் என்றும் ஆராய்ச்சிகள் சொல்கின்றன. (இது நம்ம நாட்டுக்கு ஒத்து வராதுன்னாலும், ஸ்போர்ட்ஸ் ஷூக்களில் காசைத் தொலைப்பதைத் தடுக்க உதவும்.)

  அட இந்த வீடியோ/கம்ப்யூட்டர் கேம்ஸ் - அது கண்ணுக்கு நல்லதில்லை, மூளையை மந்தப்படுத்தும், நிழலைப் பார்த்து நிஜத்திலும் மாயைகளை எதிர்பார்ப்பார்கள் சிறுவர்கள், என்றெல்லாம் சொல்லி கட்டுப்படுத்துவோம் நம் பிள்ளைகளை. இப்போ அதுக்கும் ஒரு நல்ல பாயிண்ட் கண்டுபிடிச்சு சொன்னான் என் மகன் - இந்த மாதிரியான விளையாட்டுகள் கண்-கை ஒருங்கிணைப்புக்கு (Hand-eye coordination) நல்ல பயிற்சியாம்; அத்தோடு problem solving skills, multi-tasking, quick-thinking இப்படி பல நன்மையான விளைவுகள் இருக்கிறதாம். இதுவும் ஆராய்ச்சியால் கிடைத்த தகவல்தான்.

  அது மட்டுமா? நாமல்லாம் சின்ன வயசுல பயாலஜில படிச்சுருப்போம் - நம்ம உடம்புல இருக்கிற குடல்வால் (appendix), வால் எலும்பு (coccyx), ஞானப் பல் (wisdom teeth) போன்ற சில உறுப்புகள் நமக்கு பயன்தராதவை; பரிணாம விதிகளின்படி (evolution theory) குரங்குலருந்து மனுஷன் வந்தப்போ இந்த உறுப்புகளும் கூடவே வந்துடுச்சு. மனிதனுக்கு இவற்றின் தேவையில்லாததால், இவை "பரிணாமத்தின் எச்சங்கள்" (vestigial organs) என அறியப்பட்டன. ஆனா இப்போ ஆராய்ச்சியாளர்கள், அப்படியெல்லாம் இவை மொத்தமாகப் பயனற்றவை அல்ல; இவற்றுக்கென்று சில வேலைகளும் உள்ளன என்று கண்டுள்ளார்கள்.

  உதாரணமா, குடல்வால் என்பது நல்ல பாக்டீரியாக்களின் இருப்பிடம்; வயிற்றுக்கோளாறுகள் வந்து சரியானபின், குடல்களுக்கு நல்ல பாக்டீரியாக்களை அனுப்புமாம் இது. இதுபோல வால் எலும்பும் முதுகெலும்புக்கு ஒரு குஷன் போல செயல்படுகின்றது என்றும் கண்டுபிடித்துள்ளனர். (பார்க்க: http://news.nationalgeographic.com/news/2009/07/090730-spleen-vestigial-organs_2.html; http://en.wikipedia.org/wiki/Vermiform_appendix )

  பரிணாமத்தின் முக்கிய ஆதாரமாகக் கருதப்பட்ட vestigial organs குறித்த கருத்தையே மாற்றியமைப்பதால், இது நிச்சயமாக ஆராய்ச்சி அறிவியலில் ஒரு மைல் கல்லாக அமையும்.

  மேலே சொன்ன விஷயங்களை ஆராய்ஞ்சு பாத்ததிலிருந்து என்ன தெரியுதுன்னா, ஆராய்ச்சிகளில் அன்னிய தேதிக்கு மனிதனின் அறிவும், அறிவியலும், தொழில் நுட்பங்களும் எவ்வளவு வளர்ச்சியடைஞ்சிருக்கோ அது பொறுத்துதான் முடிவுகள். ஒரு காலத்துல ஏற்றுக்கொள்ளவே முடியாதுன்னு சொல்லப்பட்ட பலதும் பின்னாட்களில் மேம்பட்ட ஆராய்ச்சியினால் சரியென நிரூபிக்கப்பட்டுள்ளது & vice-versa. எந்தவொரு விஷயமும் நம்ம அறிவுக்கு எட்டலை அல்லது ஆராய்ச்சியால் நிரூபிக்கப் படவில்லை என்பதாலேயே தவறாகவோ, பொய்யாகவோ ஆகிவிடாது!!

  எ.சி.எம்.கடாபி
  இஸ்லாமிய ஆயிவு மையம்
  வாழைச்சேனை.
  இலங்கை

Wednesday, October 24, 2012

முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா? | Nellai Popular Front Of India

முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா? | Nellai Popular Front Of India

பிர் அவ்னின் உடலும் பிரான்ஸ் நாட்டு ஆய்வாளரின் உறுதியான கருத்தும்.


                                 
 1981ல் பிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்குட்படுத்துவதற்காக தம்மிடம் ஒப்படைக்குமாறு பிரான்ஸ் அரசு எகிப்திடம் கோரிக்கை முன்வைத்தது.

இவ்வேண்டுகோலுக்கினங்க பிர்அவ்னின் சடலம் விமானம் மூலமாக பிரான்ஸிற்குக் கொண்டு செல்லப்பட்டது. இவ்விமானத

்தை வரவேற்பதற்காக பிரான்ஸின் அதிபரும் விமான நிலையத்தில் காத்திருந்தார். அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். அரச வரவேற்பளிக்கப்பட்ட பின்னர் பிர்அவ்னின் உடல் ஆய்வகம் நோக்கிக் கொண்டு செல்லப்பட்டது.

தொள்பொருள் ஆய்வாளர்கள் சத்திரசிகிச்சை நிபுணர்களென ஆரய்ச்சிக்குத் தேவையானவர்களனைவரும் ஆய்வகத்திலே குழுமியிருந்தனர். சத்திரசிகிச்சை குழுவுக்கு prof:Maurice Bucaille தலைமை தாங்கினார்.

பிர்அவ்ன் எப்படி மரணமடைந்தான் என்பது பற்றிய தகவல்களை கண்டுபிடிப்பதற்காக ஆய்வாளர்கள் பெரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இக்குழுவுக்குத் தலைமை வகித்த prof:Maurice அவர்களும் இப்பணியில் மூழ்கியிருந்தார். நல்லிரவு கழித்து ஆய்வு முடிவு வெளியாகியது.

உடலில் உப்பு படிந்திருப்பதானது பிர்அவ்ன் கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளமைக்கான சிறந்த சான்றாகும் என்றும் கடலில் மூழ்கியவுடனே இவ்வுடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்றும் ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னர் உடலைப் பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடலுக்கடியிலிருந்து வெளியெடுக்கப்பட்டிருந்தாலும் உடல் பழுதடையாமல் எந்த பாதிப்புக்களும் ஏற்பட்டிருக்காமல் காணப்பட்டமை பெரும் ஆச்சரியமாகவிருந்தது. prof:Maurice பிர்அவ்னின் உடல் கடலுள்ளிருந்து வெளியெடுக்கப்பட்டமை தொடர்பாகவும்இ அவ்வுடல் கடலுக்கடியிலே பாதுகாக்கப்படடிருந்தமை தொடர்பாகவும் தனது ஆய்வின் இறுதியரிக்கையினைத் தயாரித்தார்.

அங்கு குழுமியிருந்தவர்களில் ஒருவர் இன்னொருவரின் காதில் மெதுவாக ‘அவசரப்படாதே. முஸ்லிம்கள் இந்த மம்மி மூழ்கடிக்கப்பட்டதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.” என்று கூறினார். prof:Maurice அவர்கள் அந்த நபர் சொன்ன இத்தகவலை ஏற்கவில்லை. பிர்அவ்னைப்பற்றிய இச்செய்திளை அறிவதென்றால் கணனி வசதியுடன் கூடிய நவீன ஆய்வு மையங்கள் மூலமாகவே அறிந்துகொள்ள முடியுமென்று கூறினார். அதாவது பிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்ட செய்தி பற்றி முஸ்லிம்களுக்குத் தெரியுமென்று அந்த நபர் கூறியதை மாரிஸ் புகைல் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

அப்பொழுது அங்கிருந்த இன்னொருவர் ‘பிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்டதாகவும்இ மூழ்கடிக்கப்பட்ட பின் அவனின் உடல் பாதுகாக்கப்படுமெனவும் முஸ்லிம்களின் அல்குர்ஆனில் கூறப்படுகின்றதே”

என்று கூறினார். இச்செய்தியைக் கேள்வியுற்ற மாரிஸ் புகைல் அவர்கள் மேலும் திடுக்கிட்டுப் போனார். ‘இது எப்படி சாத்தியமாகும்? இந்த மம்மியின் உடல் 1898ல்தான் கண்டுபிடிக்கப்பட்டது. முஸ்லிம்களின் அல்குர்ஆனோ 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களிடம் இருக்கின்றது. எகிப்தியப் பழங்குடி மக்கள் தமது மன்னர்கள் இறந்த பின் அவர்களின் சடலங்கள் கெட்டுவிடாமல் இருப்பதற்காக ஒரு வகை மருத்துவ முறையினைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்ற செய்தி சில தசாப்பதங்களுக்கு முன்னர்தான் அரேபியர் உட்பட அனைவருக்கும் தெரியவாகிற்று அதற்கு முன்னர் முஸ்லிம்களுக்கு இந்த மம்மி பற்றிய தகவல் தெரிவதற்கு வாய்பில்லாத போது இது எப்படி சாத்தியமாயிற்று?” என்று அங்கு கூடியிருந்தவர்களிடம் வினவ ஆரம்பித்தார்.

prof:Maurice அவர்கள் அன்றைய இரவு பிர்அவ்னின் உடலுக்கு முன்னாலிருந்து அதை ஆழமாக அவதானிக்கத் தொடங்கினார். முஸ்லிம்களின் அல்குர்ஆன் இந்த மம்மியைப் பற்றிப் பேசுகின்றது என்று அந்த நபர் சொன்ன தகவல் ‘மூஸாவைத் துரத்திச் சென்ற அந்த பிர்அவ்ன் இதுவாகத்தான் இருக்க முடியுமோ?” ‘முஸ்லிம்களின் முஹம்மத் இவரை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருப்பாரோ?” ‘முஸ்லிம்களின் அல்குர்ஆன் கூறும் அந்த மம்மி இதுவாகத்தான் இருக்குமோ?” போன்ற வினாக்ளை அவருள் ஏற்படுத்தியது. மாரிஸ் அவர்களுக்குத் தூக்கம் வரவில்லை. தவ்ராத்தைக் கொண்டு தருமாறு அங்குள்ளவர்களிடம் மாரிஸ் அவர்கள் வேண்டிக் கொண்டதும் தவ்ராத் அங்கு கொண்டு வரப்பட்டது. தவ்ராத்தைப் படித்தார். ‘பிர்அவ்னின் படைகள் தண்ணீரில் மூழ்கின. அவனும் கடலில் மூழ்கினான். அவர்களுள் ஒருவரும் தப்பவில்லை” என்பது மாத்திரமே அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இன்ஜீலைப் படித்தார். அதிலும் இவ்வுடல் பாதுகாக்கப்படுவது பற்றி எதுவும் கூறப்பட்டிருக்கவில்லை. மாரிஸ் அவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார். பரிசோதனை முடிந்ததும் பிர்அவ்னின் உடல் எகிப்துக்குக் கொண்டு வரப்பட்டது.

இருந்தாலும் மாரிஸ் அவர்களால் ஒரு நிமிடமேனும் தாமதிக்க முடியவில்லை. இது பற்றி அறிவதற்காக முஸ்லிம் அறிஞர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவென இஸ்லாமிய நாடுகளுக்குப் பயணமாகத் தொடங்கினார். அந்த சந்திப்பிலே அவர் முதலாவதாக வினவியது பிர்அவ்னின் உடல் கடலில் மூழ்கடிக்கப்பட்டபின் பாதுகாக்கப்படுவது பற்றித்தான்.

அப்போது சபையிலிருந்த ஒருவர் அல்குர்ஆனில் சூறா யூனுஸில் இடம் பெறும் ‘உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம். மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்”. என்ற வசனத்தை ஓதிக் காண்பித்தார். இக்குர்ஆன் வசனம் மாரிஸ் புகைல் அவர்களின் உள்ளத்தையே உலுக்கியது. உடனே எழுந்து எல்லோருக்கும் முன்னால் சத்தத்தை உயர்த்தியவராக ‘நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். அல் குர்ஆனை நம்பி விட்டேன்” என்று அவர் இஸ்லாத்தைத் தழுவினார்.

பின்னர் பிரான்ஸிற்குச் சென்று 10 வருடங்களாக நவீன கண்டு பிடிப்புக்கள் அல்குர்ஆனுக்கு எவ்வளவு தூரம் உடன்படுகின்றன என்ற ஆய்வை மேற்கொண்டு ‘அல்குர்ஆன்இ தவ்ராத் இன்ஜீல்…. நவீன அறிவியலின் ஒளியில் புனித வேதங்கள் ஓர் ஆய்வு” எனும் நூலை வெளியிட்டார். இதைப்பார்த்த மேற்குலகு அதிர்ந்து போனது. குறுகிய காலத்துள் இப்புத்தகம் விற்றுத் தீர்ந்து போனமை குறிப்பிடத்தக்கதாகும். இன்றைக்கும் எகிப்து நூதன சாலைக்கு பல ஆய்வாளர்கள் வந்து செல்வதைக் காண்கின்றோம். இவர்களுள் மாரிஸ் புகைல் போன்று படிப்பினை பெற்றவர்களைக் காண்பதற்கில்லை என்றுதான் கூறமுடிகின்றது. எனவே அல்குர்ஆன் வெறும் விஞ்ஞான உண்மைகளை மாத்திரம் சொல்லவில்லை மனித சமூகத்துக்குத் தேவையான எத்தனையோ அரிய பல வழிகாட்டல்களை சொல்லித் தருகின்றது. இதையுணர்ந்து மனித சமூகம் அதைப்படிக்குமானால் இன்னும் பல மாரிஸ் புகைல்கள் உருவாகுவார்கள் என்பது திண்ணம்.

Sunday, October 21, 2012

முஸ்லிம் பெண்கள் பிழைப்புக்காக வெளிநாடு போகலாமா?


                                     
பொதுவாக, பெண்கள் வெளிநாடு போவது இஸ்லாத்தில் தடுக்கப் பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். ஆயினும், குடும்பக் கஷ்டங்களினால் அவற்றைத் தாங்க முடியாது, அதே நேரம் யாரும் கஷ்டங்களைப் போக்க உதவி செய்யவும் இல்லை, அல்லது எதோ ஒரு சிறு உதவி செய்தாலும் அது போதாத நிலையில், பெண்கள் வெளிநாடு சென்று உழைக்க கிளம்புகிறார்கள்.


இப்படி, "முஸ்லிம் பெண்கள் வெளிநாடு சென்று உழைப்பது ஹராம்" என பல மவ்லவிகள் (முக்கியமாக தப்லீக், thawheed, salafi மவ்லவிகள்) கூறுகிறார்கள். ஆனால், இந்தப் பெண்களுக்கு நல்வாழ்வுக்குரிய மாற்று வழி தீர்வு எதுவும் சொல்கிறாரில்லை. கேட்டால், "கஷ்டத்தைப் பொறுத்துக்கொண்டு வாழ வேண்டும் இறைவன் சுவர்க்கம் தருவான்" என்று கூறுகிறார்கள். எனவே, பெண்கள் வெளிநாடு போய் உழைப்பது பற்றி, இஸ்லாத்தின் நிலைப்பாட்டை எழுதுங்கள்.

-ANSWER(QURAN@ HADEES ADIPADAILL)

ஆணோ, பெண்ணோ வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களைச் சகித்துக்கொண்டு, இறைவழியில் பொறுமையை மேற்கொண்டால் இறைவன் சுவர்க்கத்தைத் தருவான் என்பது உண்மையே. அதேபோல், ஜீவாதாரத் தேவைக்காக வாழ்க்கையில் எதிர் நீச்சலை மேற்கொண்டு கஷ்டப்பட்டு "உழைத்து நேர்மையுடன் பொருளீட்டினாலும் சுவர்க்கத்தைத் தருவேன்" என்பதும் இறைவனின் வாக்குறுதி!

ஆணாயினும் பெண்ணாயினும் ''உழைப்பது ஹராம்'' என்று இஸ்லாம் எங்கும் சொல்லவில்லை!

ஆனால், இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா, ஃபிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த பெண்கள் வளைகுடாவில் பிழைக்கப்போய், அவர்களுள் பலர் அனுபவிக்கும் கொடுமைகளைக் கருத்தில் கொண்டு, "பெண்கள் பிழைப்புக்காக வெளிநாடு செல்வது ஹராம்" எனச் சிலர் கருத்துக் கூறியிருக்கலாம். தங்கள் வீட்டு வேலைக்காரப் பெண்களைத் தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக நடத்துகின்ற, அவளுடைய குடும்பத்தின் அத்தனை தேவைகளையும் தம் தேவைகளாக ஏற்றுச் செயல்படுகின்ற இறையச்சம் உள்ளவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.

முஸ்லிம் பெண்கள், பிழைப்புத் தேடி வெளிநாட்டுக்குப் போகவேண்டிய கட்டாயத் தேவையையும் சூழலையும் பற்றி இங்குத் தெரிந்து கொள்ள வேண்டியது நமது கடமையாகும்.

"ஆண்கள் பெண்களிடம் ஆளுமையுடையவர்கள்" எனும் கருத்தில் அமைந்த 4:34ஆவது இறைமறை வசனத்தில், ஒரு குடும்பத்திற்கான பொருளாதாரச் செலவினங்களுக்கு அந்தக் குடும்பத்தின் தலவனே பொறுப்பேற்கத் தகுதியுடையவனாவான் எனும் அடிப்படை பொதிந்துள்ளது.

ஆனால், ஒரு குடும்பப் பெண்ணுக்கு ஊதாரியான, குடும்பப் பொறுப்பற்ற கணவன் அமைந்துவிட்டாலோ, மணமாகி குழந்தைகளைப் பெற்றபின் கணவன் இறந்துவிட்டாலோ அந்தக் குடும்பத்தைப் பொறுப்பேற்க எவரும் இல்லாமல் அல்லது இருந்தும் முன்வராமல் போய்விட்டாலோ பெண்கள் சம்பாதித்து அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றவேண்டிய இக்கட்டான கட்டாயச் சூழல் ஏற்படுகின்றது. அதனால், ஆதரவற்ற பெண்கள் குறுகிய காலத்தில் பொருளீட்ட ஆசைப்பட்டுத் தேர்ந்து கொள்வது 'வெளிநாட்டு வேலை'.

''பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வின் அருளைத் தேடிக்கொள்ளுங்கள்!'' (அல்குர்ஆன் 62:10) இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான அனுமதியாகும். அயல்நாடு சென்று ஆண்கள் உழைப்பதுபோல், பெண்களும் அயல்நாடு சென்று ஹலாலாக உழைத்துச் சம்பாதிப்பதும் ஆகுமானதே!

பெண்களுக்கான வாழ்வாதாரத் தேவைகளைக் குடும்பத்து ஆண்கள் பூர்த்தி செய்திடல் வேண்டும் என்பதுபோல், ஆதரவற்றப் பெண்கள், சிறுவர், பலவீனமான முதியோர் ஆகியோருக்கு இஸ்லாமிய அரசு பொறுப்பேற்க வேண்டும்!

"கடன் உள்ள நிலையில் மரணித்தவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படுவார்கள். "இவர் கடனை நிறைவேற்றத்தக்க சொத்துகளை விட்டுச் சென்றுள்ளாரா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்பார்கள். அவர் விட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டால் அவருக்கு(ஜனாஸா)த் தொழுகை நடத்துவார்கள். அவ்வாறு இல்லையெனில் முஸ்லிம்களை நோக்கி ''உங்கள் தோழருக்குத் தொழுகை நடத்துங்கள்'' என்று கூறிவிடுவார்கள் (புகாரி 5371).

அல்லாஹ் அவர்களுக்கு அநேக வெற்றிகளை வழங்கியபோது (அதாவது அரசுக் கருவூலத்தில் நிதிகள் குவிந்தபோது) "மூஃமின்களுக்கு அவர்களின் உயிர்களைவிட நான் மிகவும் உரித்தானவன். எனவே மூஃமின்களில் யாரேனும் கடனை விட்டு மரணித்தால் அதை நிறைவேற்றவது என்னைச் சேர்ந்ததாகும். யாரேனும் செல்வத்தை விட்டுச் சென்றால் அது அவரது வாரிசுகளுக்கு உரியதாகும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 2298, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத்).

ஒருவர் (மரணமடைந்து) விட்டுச் சென்ற செல்வம் அவரின் வாரிசுகளுக்குரியதாகும். ஒருவர் (ஆதரவற்ற) மனைவி மக்களைவிட்டுச் சென்றால் அவர்களைப் பராமரிப்பது நம்முடைய பொறுப்பாகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (புகாரி 2398).

கணவன் மரணித்து, குடும்பத்தில் ஆண் ஆதரவற்று மனைவி, மக்கள் நிர்க்கதியான நிலையில் விடப்படும்போது அவர்களைப் பராமரிப்பது நமது பொறுப்பாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அதாவது, ஆதரவற்ற பலவீனமானவர்களைப் பராமரிப்பது இஸ்லாமிய ஆட்சியின் பொறுப்பாகும்!

சொந்த உழைப்பில் குடும்பத்தை நடத்தவேண்டிய கட்டாயத்திலிருக்கும் பெண்களுக்கு, "வெளிநாட்டுக்குச் சென்று பிழைக்கக்கூடாது" என்று தடைவிதித்தல் பொருந்தாது. ஏனெனில், எல்லா அடிப்படை வசதிகளையும் பெண்களுக்கு அளித்துவிட்டு, அதன்பிறகு, "வயிற்றுப் பிழைப்புக்காக வெளிநாட்டுக்குப் போகாதே!" என்று தடுக்கும் உரிமை இஸ்லாமிய அரசுக்குத்தான் உண்டு! வறுமையால் வாடும் பெண்களுக்கு, அவர்களுக்கான எந்த உதவியும் செய்யாமல், உள்ளூரில் பிழைத்துக்கொள்ள வழிவகை தேடாமல், வெறுமனே ஃபத்வா கொடுப்பது நியாயமில்லை.

"முஸ்லிம் பெண்கள் பிழைப்புக்காக வெளிநாட்டுக்குப் போவது ஹராம்" என ஃபத்வா கொடுப்பவர்கள், ஆதரவற்ற பெண்களுக்கு உள்ளூரிலேயே உள்நாட்டிலேயே பாதுகாப்பான வேலைக்கு ஏற்பாடு செய்து கொடுக்க முன்வந்தால் பாராட்டலாம். ஆனால், அது ஆகப்போவதில்லை என்று உங்கள் கேள்வியிலிருந்து விளங்குகிறது.

எனவே, ஆதரவற்ற பெண்கள் அரசு அல்லது ஜமாஅத்தாரின் உதவியற்ற நிலையில், தன் கையே தனக்கு உதவி என உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றும் சூழ்நிலைக்கு ஆளாகின்றனர். உள்ளூர், வெளிநாடு என இவர்கள் உல்லாசப் பயணமாகச் செல்லவில்லை. உழைத்துப் பொருளீட்டுவதற்காக செல்கின்றனர். அதுவும் வெளிநாட்டுக்குச் சென்றுவந்த, தம் நிலையை ஒத்தவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்துகொண்டே பெரும்பாலும் செல்கின்றனர். எனவே, வெளிநாட்டுக்குப் பிழைப்பைத் தேடிப் போவதா வேண்டாமா என்பது அவரவரின் தேவை, கட்டாயம், நிர்ப்பந்தம், பயன், பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அப்பெண்கள் தீர்மானிப்பதாகும்.

மற்றபடி, உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ ஹலாலான முறையில் உழைத்துப் பொருளீட்டிக் கொள்வதற்கு இஸ்லாம் பெண்களுக்குத் தடை விதிக்கவில்லை.

(இறைவன் மிக்க அறிந்தவன்