Digital Time and Date

Welcome Note

Thursday, January 17, 2013

நாய் கூட மதிக்காத ஒரு ஃபாஸ்ட் ஃபுட் கடை எதுன்னு கேட்டீங்கன்னா.....???

அமெரிக்காவில் மத்த ஏரியாக்கள் எப்படின்னு தெரியலை. ஆனா... சவுத் ஃப்ளோரிடாவில் ..., நாய் கூட மதிக்காத ஒரு ஃபாஸ்ட் ஃபுட் கடை எதுன்னு கேட்டீங்கன்னா....., அது நம்மூரில் கொடி கட்டிப் பறப்பதா நான் கேள்விப்பட்ட KFC. அந்தக் கடைகளுக்குள்ளே போகும் ஆட்களைப் பார்த்தாலே... அதன் தரம் தெரிஞ்சிடும். அதுக்காக.. ரொம்ப டீஸண்டா தெரியும் மத்தக் கடைகள் எல்லாம்... நம்ம உணவை ISI முத்திரையோடவா தயாரிக்கறாங்கன்னு நினைக்கறீங்க?

அமெரிக்காவில் இருந்து ஒரு கம்பெனி நம்மூரில் வந்து, பர்கர் மாமா, பர்கர் மச்சான், மஹாராஜா பேரன் -னு பெயரை மாத்திகிட்டு கடையை விரிச்சி கல்லா கட்டிகிட்டு இருக்காங்க. ஆனா... அந்தக் கருமங்களை இங்கிருந்து ஏன் துரத்த முயற்சி பண்ணிகிட்டு இருக்காங்கன்னு அடுத்த முறை.. அந்த சுத்த பத்தமான வெஜ்/நான் வெஜ் பர்கர் கடிக்கும் போது கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க.

, இதைப் படிப்பதில் கொஞ்சம் பேராவது... Super Size Me டாகுமெண்ட்ரியை பார்த்தோ/கேள்விப் பட்டோ இருப்பீங்க. ஒரு ஆரோக்கியமான மனிதன், தினம் மூன்று வேளை-ன்னு ஒரேயொரு மாதத்திற்கு மட்டும் McDonald's -ல் இருந்து சாப்பிட.. முதல் 5-10 நாளிலேயே... அவரை டெஸ்ட் செய்யும் டாக்டர்கள் எல்லாம் அரண்டு போவது போல, அவர் உடலில் மாற்றங்கள் ஏற்பட..., அதற்கடுத்த 10 நாளில்... அத்தனை டாக்டர்களும்.. அவரை கெஞ்சவே ஆரம்பிச்சிடுவாங்க. அந்த முப்பது நாட்களில்.. Morgan Spurlock கிட்டத்தட்ட அபாய எல்லையை எல்லாம் தாண்டுமளவுக்கு, தன் உடலில் மாற்றத்தைப் பார்ப்பார். அவர் செக்ஸ் வாழ்க்கை உட்பட!!! (இதைச் சொன்னாதானே... பயப்படுவீங்க). இப்ப 30 Days -ன்னு சொல்லி ஒரு ரியாலிடி ஷோ நடத்தும் அளவுக்கு, இந்த டாகுமெண்ட்ரி இவரை பிரபலமாக்கியது.

ஆனாலும்.. எந்த மனிதனும்.. தொடர்ந்து ஒரு மாதத்திற்கு.. McDonald’s-ல் சாப்பிட மாட்டான் என்பதால்.... இது அத்தனை பாதிப்பை எனக்கு தரலை. ஒரு வருடம் முன்னாடி வரைக்கும், நானும்.. தினசரி ஒருதரம்-ன்னு மெக்டொனாட்ஸில் சாப்பிட்டுக்கிட்டுதான் இருந்தேன். அதுக்கே உடம்பில் ஏகப்பட்ட மாற்றங்கள். அப்புறம் எப்பவாவது ஒரு தரம்னு குறைஞ்சது. இப்ப நாலு மாசமா... எத்தனைப் பசின்னாலும்... அந்த ஏரியா பக்கமே போறதில்லை.

The Cove டாகுமெண்ட்ரி.. என்னை ஒரு போன் மட்டும்தான் செய்ய விட்டது. Food, Inc டாகுமெண்ட்ரி... கொஞ்ச நாளா என் உணவு முறையையே மாற்றியிருக்கு. அல்லது வாழ்க்கையையே........மிடில் ஈஸ்ட் ராஜப் பரம்பரையில் ஆரம்பிச்சி... என் மூணு வயசு குழந்தை வரைக்கும்.... இந்த டேஸ்டிற்கு அடிமையாதான் இருக்கோம். ஆனா... சாப்பிட்டது மூளையை மந்தமாக்க.... ஒன்னேயொன்னை மட்டும் மறந்துட்டோம்!!!!!!

இந்தியாவில் எந்த மூலையில் போய்.. McDonald's / Burger King பர்கரை கடிச்சாலும்.. ஒரே டேஸ்ட்தான். நம் நாட்டை விட மூணு மடங்கு பெரிய நாடு... மூலைக்கு மூலை.. இந்த புற்றீசல்கள் இருக்கும் அமெரிக்காவிலும்.. இதே போல.. ‘ஒரே தேசம்... ஒரே டேஸ்ட்’ -தான்.01. இந்த ஒரே டேஸ்ட் எப்படி... ஒட்டு மொத்த நாட்டிற்கும் கிடைக்குது?02. ஒரு பாட்டில் தண்ணியை விட, அதை விட பெரிய பாட்டில் சோடா எப்படி கம்மியான விலைக்கு கிடைக்குது?03. முட்டைக் கோஸ், உருளைக் கிழங்கு எல்லாத்தையும் ஒரு கிலோ வாங்குற காசை விட, கம்மியான காசில்.. எப்படி... உங்களால் McDonald's மாதிரியான கடைகளில், குடும்பத்துக்கே சாப்பாட்டை வாங்க முடியுது?04. நாம மாடு சாப்புடுறோம், கோழி சாப்பிடுறோம்! சரி..!!! அந்த மாடும், கோழியும் என்ன சாப்பிடுது?05. ஒவ்வொரு முறையும் என் மகளும், கிரியும், நீங்களும், நானும் கடிக்கும் ஒவ்வொரு பர்கர் பைட்’டிலும் எத்தனை ஆயிரம் கிருமிகள் நம் வயிற்றுக்கும், எத்தனை நூறு விவசாயக் குடும்பங்கள் தெருவுக்கும் வர்றாங்க???06. மூணு பர்கர் சாப்பிட்ட மூணு வயசு சிறுவனுக்கு, தவிச்ச வாய்க்கு தண்ணி கூட தர முடியாத அவன் அம்மா..., இரண்டே வாரத்தில்.. அவனுக்கு பாலூத்தின கதை தெரியுமா????இந்த சீப் ஃபுட்-டின் சோர்ஸ் என்ன???????????????????இதையெல்லாம் தெரிஞ்சிக்க.... நாம இன்னொரு விஷயத்தை தேடிப் போகணும். 1970-களில் அமெரிக்காவில் நடந்த விவசாயப் புரட்சி. நம்மூரில் வெகு சாதாரண விசயமாகக் கருதும் ஒரு மேட்டர். ஆனால்... அது ஒவ்வொரு அமெரிக்கனின் தலைமுடி வரைக்கும் பரவியிருக்குன்னா நம்புவீங்களா???
ரெண்டு இளைஞர்களும்... ஒரு யுனிவர்சிட்டிக்குள் போறாங்க. ரெண்டு பேரின் முடியும்.. கொஞ்சம் வெட்டப் பட்டு.. பரிசோதிக்கப் படுது. முடிவு.... ரொம்ப ஆச்சரியமா இருக்கு. அவங்க முடியில் கலந்திருப்பது....... சாட்ச்சாத் நம்ம மக்காச்சோளம்.

இந்த ரிசல்ட்டைப் பார்த்து ஆச்சரியப் படும் ரெண்டு பேரும்..., அமெரிக்காவின் மத்தியில் இருக்கும் Iowa மாநிலத்தில் பயிரிடப் படும்... சோளம்.., எப்படி... நியூயார்க்கில் பிறந்து வளர்ந்த தங்கள் முடியில்.. கிடைக்க வாய்ப்பு யோசிக்க ஆரம்பிச்சி....,
... ஒரேயொரு ஏக்கர் நிலத்தை.. அதே Iowa மாநிலத்தில் குத்தகைக்கு எடுத்து... அதில் சோளம் பயிரிட்டு... அந்த சோளம்... எங்கிருந்து விதையாக வருதுன்னு தொடங்கி, அது எங்கெல்லாம்... போகுது... எப்படியெல்லாம் மாறுதுன்னு ஒரு வருடமாக.. அந்த சோளத்தின் பின்னாடியே சுத்துவாங்க. டாகுமெண்ட்ரியின் பெயர் King Corn. வாய்ப்பு கிடைச்சா.. இதையும் பாருங்க.
________________________________________1970-களில் விவசாயப் புரட்சிங்கற பெயரில்... அரசாங்கம்.. விவசாயிகளை சோளம் பயிரிட சொல்ல ஆரம்பிக்கிறாங்க. அதற்காக.. உங்களுக்கு தேவையோ.. இல்லையோ... ஒவ்வொரு ஏக்கருக்கும்... இத்தனை டாலர்ன்னு மானியம் கிடைக்க ஆரம்பிக்குது.

மானியம் கிடைக்குதேன்னு (இதிலேயே நேரடி,மறைமுகம்னு.. ஏகப்பட்டது) அத்தனை விவசாயிகளும்... தேவைக்கு அதிகமான அளவில் சோளத்தைப் பயிரிட ஆரம்பிக்க, அந்த சோளம்... பலப் பல வழிகளில்.. நம் ரத்தத்தில் ஊற ஆரம்பித்திருக்கு.

சோளம் ரொம்ப சீப்-ன்னு தெரியும். அது எத்தனால் தயாரிக்கவும், கொஞ்சமா பெட்ரோலில் கலக்கறாங்கன்னும் தெரியும். அது இல்லாமல்... அந்த சோளம்.. எத்தனை இடத்தில் பரவியிருக்குன்னு நினைக்கறீங்க? கண்டிப்பா கணக்கெடுக்க முடியாது. இதெல்லாம் இல்லாமல்... சோளத்தின்.. இன்னொரு சிறப்பு.......

......அதிலிருந்து கிடைக்கும் சர்க்கரை!!! கரும்பை விட.. மிக.. மிக.. மிக.. மலிவான சர்க்கரை. நாம குடிக்கும் கோக், பெப்ஸி, க்ரேப் சோடா.. போடா... வாடா.... அத்தனையிலும் இருப்பது... சோளம் மட்டும்தான்!!!

மெக்டொனாட்ஸில் ஒரு மீல் வாங்கிட்டு உட்காருறீங்கன்னா...., பர்கர், சோடா... அவ்வளவு ஏன்.... உருளைக் கிழங்கில் செஞ்ச ஃப்ரென்ச் ஃப்ரைஸில் கூட சோளம் கலந்திருக்கு. மிகக் குறைவான விலையில், நமக்கு சர்க்கரை வியாதியை தந்துகிட்டு இருக்கு. இது சோளத்தோட குறையில்லை. கம்மி காசில் அதிகம் சம்பாதிக்க.. இந்த உணவுக் கம்பெனிகள் கண்டுபிடித்த பொருள்.
இவர்களோட இந்த ‘சீப்’ தேவைக்காக... இவர்கள் அரசாங்கத்தை தூண்ட..., அரசாங்கம் விவசாயிகளுக்கு ஆசை காட்ட, எல்லோரும்.. இந்த சோளத்தை பயிரிட ஆரம்பித்து... இப்ப தேவைக்கு அதிகம்னு சொல்லி.. இதே கம்பெனிகள்.. மலிவான விலைக்கு விவசாயிகளிடம் இருந்து.. அடிமாட்டு விலைக்கு வாங்கிக் கொள்வது. அது அரசாங்கத்துக்கு விற்கப்பட்டாலும்.. இவங்களுக்குத்தான் திரும்ப விற்கப் போறாங்க. நட்டத்தில் விற்ற விவசாயிக்கு... அரசாங்கம் தரும் மானியம் மட்டும்தான் அந்த மொத்த வருட உழைப்புக்கு கூலி. அந்த மானியம்... வரி கட்டும் மக்களிடம் இருந்து!!! எல்லோருக்கும் நாமம்!!! உணவுக் கம்பெனிகளுக்கு மட்டும் சோளம்!!!
கடந்த முப்பது வருடங்களுக்குள்... அமெரிக்காவில் பிறந்த அத்தனை ஜீவன்களுக்கும்.. அவர்களின் ஜீனே மாறிப்போய்... உடம்பு முழுக்க ‘சோளம்’ மட்டுமே ஓடிக்கிட்டு இருக்கு. மாடுகளுக்கு புல் போட்டா...., நாம.. பர்கரை $1 டாலருக்கு கடிக்க முடியாது. அதேதான்.. கோழி.. மீன் -ன்னு.. அத்தனை ‘உணவு’ விலங்குகளுக்கும்... கிடைக்கும் ஒரே சாப்பாடு.. ‘சோளம்.. சோளம்.. சோளம்’. மீனெல்லாம் சோளம் சாப்பிடுமா???
ஒரு சேர்ல.... ஒத்தைக் காலில்... ஒரு யானையையே நிற்க வைக்க பழக்கும் மனுசனுக்கு.. இந்த மீனை.. சோளம் திங்க வைப்பதா பெரிசு?! மாடு, கோழின்னு.. அத்தனையும்.. சோளம் சாப்பிட்டு.. சாப்பிட்டு.... கொஞ்ச நாட்களுக்குள்ளயே உடம்பு பெருக்க (நாமக்கல்லுக்கு வாங்க... அங்க கோழி வளர்க்கறதைப் பார்த்தா... சைவமாகிடுவீங்க), அந்த மாடு-கோழிகள்தான்... நமக்கு... லஞ்ச்!! அப்ப நாம சாப்பிடுறது கோழியை இல்லை. சோளத்தை!! நீங்க வெஜிடேரியந்தான்!!
________________________________________

King Corn & Food, Inc இரண்டுப் படங்களிலும்.. ஒரே காட்சி காட்டப் படும். ஆனால் வெவ்வேறு வருடங்களில்!! எதுன்னா.. இந்த ‘சோளத்தை’ மட்டுமே தின்று வளரும் மாட்டின் வயிற்றுப் பகுதி. சாப்பிடும் போது.. இந்தக் காட்சியை பார்த்துடாதீங்க!!! அதிலும் குறிப்பா... மெக்டொனாட்ஸ் சாப்பாடு சாப்பிடும் போது!!!! பார்த்தால்... வாந்திக்கு நீங்களே கேரண்டி!!! எத்தனை வருட இடைவெளியில்.. இந்தக் காட்சிகள் படம் பிடிக்கப் பட்டாலும்... சோளம் சாப்பிடும் மாடுகளின் உடல்நிலை ஒன்னேயொன்னு மட்டும்தான்!!! உவ்வ்வே!!!!!!!!
அந்த நாடு முழுக்க... ஒரே மாதிரியான ருசி கிடைப்பதற்காக..., இது மாதிரியான கம்பெனிகளின் டேஸ்டிற்கு ஏற்ப.. ஜீன்கள் மாற்றப் பட்ட.. கோழி-மாடு-பன்றிகளை மட்டுமே 99% எல்லோரும் வளர்க்கிறாங்க. மொத்த கொள்ளளவும்... இவர்களை நம்பியிருப்பதால்.. இந்த கம்பெனிகள் சொல்வது மட்டுமே சட்டம். எதிர்த்தால்.. காண்ட்ராக்ட் கட்!! அடுத்த வருடம்.. அந்த விவசாயிக் குடும்பம்.. நடுத்தெருவில்!!! இது எதுவும் தெரியாமல்.. நாமும் நம் குழந்தைகளும்... மெக்டொனாட்ஸில்.. kids zone -ல் சந்தோசமா பெப்ஸி குடிச்சி, பர்கர் கடிச்சிகிட்டு இருக்கோம்.
அமெரிக்க உணவின் தரக் கட்டுப்பாட்டை... கண்காணிக்கும் FDA (Food and Drug Administration) எல்லாம் எப்பவோ கண்ணை மூடியாச்சி. ஏன்னா... எந்த அரசாங்கம்.. ஆட்சிக்கு வந்தாலும்.. அந்தக் கட்சியை சார்ந்த..., இந்த உணவுக் கம்பெனிகளின்.. நெருங்கிய ஆட்கள் FDA -ஐ கண்ட்ரோல் செய்யுறாங்க. ஸோ... சாப்பிடும்.. உணவில்.. என்ன கலந்திருக்கு..., எத்தனை கலோரி சாப்பிடுறோம், இந்த உணவு எங்கே.. எப்படி தயாரிக்கப் பட்டது-ன்னு எந்த விவரமும் இல்லாமல்... இந்த ‘குப்பை உணவை’ மென்னுகிட்டு இருக்கோம்.

நீ என்ன சொல்லுறது??!! நான் சாப்பிடத்தான் போறேன் -ன்னு நினைக்கிறவங்க.. இதைத் தாண்டி படிக்க வேண்டாம்.2006 வருஷம், இன்னொரு 9/11 நடந்த மாதிரியும், அந்த்ராக்ஸ் கிருமிகள் பரவின ரேஞ்சிற்கும் அமெரிக்கா முழுக்க ஒரே பீதி!!! 50 ஏக்கர் நிலத்தில்... கலிஃபோர்னியா மாநிலத்தின் ஏதோவொரு மூலையில் வளர்ந்திருந்த.........., நம்ம பாப்பாய்ஸ் தாத்தா சாப்பிடுவாரே.. அந்த ஸ்பினச் கீரையில்.., எதோ ஒரு கிருமி இருக்க, இருப்பத்தாறு மாநிலத்தில் இப்ப இந்த கிருமி பரவிடுச்சி. மூணு பேர் அல்ரெடி காலி. சிறுநீரகப் பிரச்சனை.. அது.. இதுன்னு.. அல்லோகலம். இதுக்கெல்லாம் காரணம்...?
Escherichia Coli அல்லது சுருக்கமா E Coli. உணவை விஷமாக மாற்றும் ஒரு வகையான பாக்டீரியா. பெரும்பாலும்... ‘கழுவாமல்’ சாப்பிடும் எந்த உணவுப் பொருள் மேலயும் இது இருக்குமாம். சைவம்... அசைவம்னு எல்லாம் எந்த பாகுபாடும் கிடையாது.

ஒழுங்கான.. இடத்தில்.. வளரும் ஆடு-மாடு-கோழிகளே... சீக்கு பிடிச்சித் திரியும் போது... நகரக் கூட வழியில்லாமல் கூட்டம் கூட்டமாக சாக ரெடியாக இருக்கும்.. இந்த மெக்டொனாட்ஸ் கோழிகள் மட்டும் என்ன பணக்கார களையோட சுத்தப் போகுது??

ஒரு ஹிடன் கேமராவில்..., இப்படி... நோயில் இறந்தக் கோழிகளைக் கூட... இந்த சுகாதார உணவுக் கம்பெனிகள் அள்ளிப் போட்டுக் கொண்டு போக, ஏற்கனவே.. ஒரு மாட்டின் வயிற்றில் ஓட்டை போட்டு... அதிலிருந்து... இவர்கள் வெளியே எடுத்துக் காட்டும்.. அழுக்குகள் எல்லாம் பார்த்து.. குமட்டிக் கொண்டு வரும்போது..., இந்த E-coli மட்டும் என்ன சும்மாயிருக்குமா?? அதுவும்.. ஜம்முன்னு... இந்த அத்தனை உணவுகள் மேலேயும்.. ஜம்முன்னு வளர்ந்துகிட்டுதான் இருக்கு.

இப்படி E-coli பாக்டீரியா இருந்த பர்கர்களை சாப்பிட்ட, ஒரு மூணு வயசுப் பையன் இரண்டே வாரத்தில்.. சிறுநீரகப் பிரச்சனையில் இறக்க, பையனை பறிகொடுத்த அம்மாவால்... இந்த பண்ணாடைகளை ஒன்னும் புடுங்க முடியலை. இது மாதிரி குழந்தைகளை இழந்த நிறைய பேர் இன்னும் போராடிகிட்டே இருக்காங்க. ஆனாலும்.. அர்னால்ட் மாதிரியான அரை மெண்டல் அரசியல்வாதிகள் எல்லோரும்...... இந்த கார்ப்பொரேஷன்களை காப்பாற்றுவதற்கு மட்டும்தான்.. தங்களோட.. ‘வீட்டோ’ பவரை உபயோகிக்கிறாங்க. Food, Inc படம் ஆறு வருடமாக எடுக்கப் பட்ட, வெறும் ஒன்னரை மணி நேர டாகுமெண்ட்ரி. இதன் இயக்குனர்/தயாரிப்பாளர் ராபர்ட் கென்னர் மாதிரி.. ஆர்வலர்கள் எல்லாம்.......
..... குறைந்த பட்சம்.. நாம் சாப்பிடும் உணவில்.. நாம் என்ன சாப்பிட்டுகிட்டு இருக்கோம்னு ஒரு லேபிள் அடிச்சி ஒட்டுங்கடா-ன்னு கோர்ட்டில் வாதாடி... வெற்றி பெற்றால்... அந்த அர்னால்ட் கூமுட்டை.. அதையும்.. தன்னோட வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி.. கேன்ஸல் பண்ணிடுச்சாம்.
மைக்ரோஸாஃப்ட் கம்பெனி எப்பவும்... தன்னோட சாஃப்ட்வேர்களின்... பிரச்சனைகளை.. ‘ஆணிவேரில்’ இருந்து பார்க்காது. ஒரு bug-ஆ?? ஓகே.. இந்தா patch!! நூறு bugs-ஆ? இந்தா சர்வீஸ் பேக்-ன்னு... ‘ஒட்டு போட்டே’ உயிர் வாழ்ந்துகிட்டு இருக்கு. அதே விசயத்தைத்தான்.. இந்த Food கம்பெனிகளும் பண்ணுறாங்க.

இறைச்சிக்காக வளர்க்கும் ஆடு, மாடுகளை Ecoli மாதிரி பாக்ட்ரீயாக்கள் வரவிடாமல் ஆரோக்கியமா வளர்க்கறதை விட்டுட்டு..., அந்த Ecoli பாக்டீரியாக்களை கொல்ல..., அந்த இறைச்சி மேல்.. இன்னொரு பூச்சி மருந்தை தெளிச்சி... சூப்பர் மார்க்கெட்களுக்கும், நம்ம பர்கருக்கும் அனுப்பறாங்க.நெசமா.. சொல்லுங்க.... நீங்க பர்கரா சாப்பிடுறீங்க??????????

இது பேசி முடியற கதையில்லை. சொல்லி திருந்தப் போறதுமில்லை. முடிஞ்சா படம் பாருங்க. அதுக்கப்புறமும்.. அந்த கருமத்தை சாப்பிடத்தான் போறீங்கன்னா... தாராளமா குழி வெட்டிக்கங்க.......................

Thanks Hollywoodbala

Wednesday, January 16, 2013

கொலை, பாலியல் வன்முறைகளில் 33,000 மைனர் குற்றவாளிகள்: அதிர்ச்சி ரிப்போர்ட்

இந்தியாவில் 2011ம் ஆண்டு மட்டும் 18 வயதை பூர்த்தியடையாத 33000 மைனர் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது ஒரு புள்ளிவிபரம். ஒருவன் 18 வயதை பூர்த்தியடையாதவன் என்ற காரணத்தினாலேயே தான் செய்த குற்றத்தில் இருந்து தப்பிவிடுகிறான்.

கொலையோ, கொள்ளையோ, பாலியல் வன்முறையோ இப்போது பதினாறு வயது முதல் 18 வயதிற்குட்பட்டோர்தான் அதிகம் ஈடுபடுகின்றனர். ஆடம்பர செலவுகளுக்காகவும், போதைக்காகவும் பணத்தை கொள்ளையடிக்கின்றனர். அதேபோல் காம இச்சையை தீர்த்துக்கொள்ள பள்ளிப் பருவத்தில் இருந்தே பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்.

மைனர் குற்றவாளிகள் இன்றைக்கு பெருகிவருகின்றனர். இதனால் குற்றச்செயல்களுக்கு தண்டனை தருவதற்காக மேஜர் வயதை 18ல் இருந்து 16ஆக குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு அனைத்து மாநிலங்களும் ஒப்புதல் அளித்துள்ளன.

மைனர் குற்றவாளிகள் அதிகம்

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு புள்ளி விவரத்தில்,"'மைனர்கள் எனப் படும் சிறார்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவது சமீப காலமாகவே மிகவும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும், 2011ல் மட்டும் 16லிருந்து 18 வயதுக்குட்பட்ட 33 ஆயிரம் சிறுவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பாலியல் வழக்குகள் அதிகம்

இவற்றில் பெரும்பாலானவை கொலை மற்றும் பாலியல் பலாத்கார வழக்குகள்தான் அதிகம். நாடுமுழுவதும் 1,419, பாலியல் பலாத்கார வழக்குகள் மைனர் குற்றவாளிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

மகாராஷ்ராவில் அதிகம்

மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தான் இது போன்ற சிறார்கள் மீது அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.என்று மத்திய அரசின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 ஆண்டுகளில் அதிகம்

கடந்த 2000 ம் ஆண்டு 198 பாலியல் வழக்குகள் மைனர் குற்றவாளிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 12 ஆண்டுகளில் பல மடங்காக அதிகரித்துள்ளது. மைனர் என்பதால் மட்டுமே ஒருவன் செய்த தவறுகளில் இருந்து தப்பிவிடக்கூடாது என்பதற்காகவே இப்போது தண்டனைகளையும், அதற்கேற்ப சட்டங்களையும் கடுமையாக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.

தூக்கில் போடுங்கள்

டெல்லி மாணவி பலாத்கார வழக்கில் தொடர்புடைய இளம் குற்றவாளிதான் கொடூரமாக மாணவியை தாக்கியுள்ளான். எனவே இளம் வயதிலேயே கொடூரச் செயல் புரிந்த அவனை தூக்கில் போட வேண்டும். அவன் மீது கருணை காட்டக்கூடாது" என்று ஆவேசப்பட்டுள்ளார் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார்.

ஒன் இந்தியா.காம்

வரலாற்றில் இன்று

ஜனவரி 16
Tuesday, January 15, 2013

லூயி பிரெய்ல் - வரலாற்று நாயகர்!

லூயி பிரெய்ல் - வரலாற்று நாயகர்!

இரவும் பகலும், இருளும் ஒளியும் மாறி மாறி வருவது இயற்கையின் நியதி. துருவ பிரதேசங்களில்கூட ஆறுமாத இருளுக்குப்பின் ஆறுமாதம் ஒளி பிறக்கும். ஆனால் எப்போதுமே இருள் சூழ்ந்த ஒரு நிலையை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? நம் கற்பனைக்குகூட எட்டாத ஓர் இருள் சூழ்ந்த உலகம் இருக்கிறது அதுதான் கண்பார்வையற்றோரின் உலகம். ஐம்புலங்களில் ஆக விலைமதிக்க முடியாதது 'கண்'தான். கண் பார்வையிழந்தவர்கள் ஒன்றுமே செய்ய முடியாத முடங்கி கிடந்த காலம் உண்டு. அவர்களின் வாழ்வில் விடிவெள்ளியாய் உதித்து அவர்கள் எழுத, படிக்க ஓர் எளியமுறையை வகுத்துத்தந்த ஓர் அற்புத வரலாற்று மாந்தரைத்தான் சந்திக்கவிருக்கிறோம். அவர்தான் 'பிரெய்ல்' எனப்படும் எழுத்துமுறையை உருவாக்கித்தந்த லூயி பிரெய்ல் (Louis Braille).

1809-ஆம் ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி குடும்பத்தில் நான்காவது பிள்ளையாக பிரான்சில் பிறந்தார் லூயி பிரெய்ல். அவரது தந்தை ஓர் தோல் வியாபாரி பலவித தோல்களை வெட்டி கைப்பைகள், பணப்பைகள், காலணிகள் போன்றவற்றை தைத்து விற்பனை செய்வார் அதுதான் அவர்களது குடும்பத்தொழில். சிறுவயதிலிருந்தே மிகவும் சுட்டியாகவும், துறுதுறுவென்றும் இருந்த பிரெயிலுக்கு தந்தையைப் பார்த்து அவரைப்போலவே தோலை வெட்டி தைத்து விளையாடுவதில் அலாதி பிரியம். அவருக்கு மூன்றே வயதானபோது ஒருநாள் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது. அப்பா இல்லாத சமயம் அவர் கத்தி ஊசியுடன் தோல் தைத்து விளையாடிக்கொண்டிருந்தார். திடீரென்று அலறல் சத்தம் சமயலறையிலிருந்து ஓடிவந்து பார்த்த அம்மாவின் இதயத்துடிப்பு சில வினாடிகள் அடங்கிப்போனது. ஒரு கண்ணில் இரத்தம் கொட்ட வலி தாங்க முடியாமல் துடித்துக்கதறினான் பிஞ்சு பாலகன் பிரெய்ல்.

தோலில் துளைபோட உதவும் கூர்மையான ஊசிபோன்ற கருவி அவன் கண்ணை பதம் பார்த்துவிட்டது என்பதை உணர்ந்த அந்த தாய் பதறியடித்துக்கொண்டு பிரெயிலை மருத்துவமணைக்கு கொண்டு சென்றார். பிரெயிலை பரிசோதித்த மருத்துவரைப் பார்த்துக்கொண்டே பிரார்த்தனையில் மூழ்கினார் அந்த தாய். பிரெய்ல் ஒரு கண்ணில் பார்வை இழக்கப்போகிறான் என்ற செய்தியை மருத்துவரின் கவலை தோய்ந்த கண்கள் அந்த தாய்க்கு உணர்த்தின. ஒரு கண்ணில் கட்டுப்போட்டு வீட்டுக்கு அனுப்பினார் மருத்துவர். பிரெயிலுக்கு இருள் என்றாலே பயம் இரவில் தூங்கும்போதுகூட மெழுகுவர்த்தி ஒளியில்தான் தூங்குவான். சில நாட்களுக்கு பிறகு ஒருமுறை "அம்மா இருட்டிவிட்டது ஏன் இன்னும் மெழுகுவர்த்தி ஏற்றவில்லை?" என்று கேட்டான் பிரெய்ல் தாயின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது ஏனெனில் அப்போது பட்டப்பகல் நேரம்.

முதல் கண்ணில் ஏற்பட்ட காயத்தினால் இரண்டாம் கண்ணும் பாதிக்கப்பட்டு முழுமையாக பார்வையை இழந்துவிட்டான் பிரெய்ல் என்பதை அறிந்து உள்ளுக்குள்ளேயே அழுதது அந்த தாய் உள்ளம். அப்போது பிரெயிலுக்கு வயது நான்குதான். அன்று அந்த தாய் சிந்திய கண்ணீருக்கு ஒட்டுமொத்த பார்வையற்றோர் சமூகமே இன்று நன்றிக்கடன் பட்டிருக்கிறது. ஏனெனில் அந்த வயதில் ஏற்பட்ட இயலாமைதான் பார்வையற்றோரின் சரித்திர நாயகனாக பிரெயிலை பிற்காலத்தில் உயர்த்தியது. பார்வையிழந்தும்கூட இரண்டு ஆண்டுகள் வழக்கமாக பள்ளிக்கு சென்றார் பிரெய்ல். ஆனால் எழுதவும் படிக்கவும் முடியாது என்பதால் பள்ளியை தொடர முடியாமல் போனது.

பிரெயிலுக்கு பத்து வயதானபோது பாரீஸில் (paris) உள்ள ஒரு பார்வையற்றோர் பள்ளியில் சேர்த்தனர் பெற்றோர். அந்தப்பள்ளியில் வாசிக்கக் கற்றுத்தரப்பட்டது ஆனால் எழுத கற்றுத்தரப்படவில்லை. அவர்களுக்கான எழுத்துகள் தாள்களில் புடைத்திருக்கும் அதனை விரல்களால் தொட்டு உணர்ந்து ஒவ்வொன்றாக எழுத்துக்கூட்டி வாசிக்க வேண்டும் அது மிகவும் சிரமமான ஒன்று. ஒரு வாக்கியத்தை படித்து முடிக்கும் முன் ஆரம்ப எழுத்துகள் மறந்து போகும். தம்மைப்போன்றோர் வாசிப்பதற்கு இதைவிட ஒரு சிறந்த முறை இருக்க வேண்டுமே என்று சிந்திக்கத் தொடங்கினார் பிரெய்ல்.

ஒருமுறை அந்தப்பள்ளிக்கு Charles Barbier என்ற இராணுவ வீரர் வருகை தந்தார். இரவு நேரங்களில் பேசிக்கொள்ளாமல் இராணுவ வீரர்கள் செய்திகளை பறிமாறிகொள்ள ஒருமுறையை அவர் உருவாக்கியிருந்தார். பணிரெண்டு புள்ளிகளை கொண்ட அந்த முறையில் எளிய செய்திகளை பறிமாறிகொள்ளலாம் அதனை 'sonography' என்று அவர் அழைத்தார். ஆனால் அது சிரமமானது என்று கூறி அதனை நடைமுறைப்படுத்த இராணுவம் மறுத்துவிட்டது. பார்வையற்றோர் பள்ளிக்காவது அது பயன்படட்டும் என்று Charles தனது முறையை பிரெய்ல் படித்த அந்த பள்ளியில் விளக்கிக்காட்டினார். அதனை ஆராய்ந்த பிரெய்லுக்கு அதில் நிறைய விசயங்கள் அடங்கியிருப்பதாகபட்டது. அதனை கொஞ்சம் எளிமைப்படுத்தினால் ஒரு நல்ல முறையை உருவாக்கலாம் என்று நம்பிய அவர் அடுத்த சில மாதங்களுக்கு சொந்தமாகவே பல சோதனைகளை செய்து பார்த்தார். அதன்பலன் மூன்றே ஆண்டுகளில் அவருக்கு 15 வயதானபோது ஆறு புள்ளிகளை கொண்ட ஒரு எழுத்துமுறையை கண்டுப்பிடித்தார். அதுதான் அவரது பெயரிலேயே 'பிரெய்ல்' முறை என்று இப்போது அழைக்கப்படுகிறது.
பிரெய்ல் முறையில் புள்ளிகள் தாளில் உயர்ந்து எழும்பி நிற்கும் தொடுவதன் மூலம் அந்த புள்ளிகளை உணரலாம். உதாரணத்திற்கு A என்ற எழுத்தைக்குறிக்க ஒரு புள்ளி, B என்ற எழுத்தைக்குறிக்க இரண்டு புள்ளிகள் இதேபோல் ஆறு புள்ளிகளை 64 விதமாக பயன்படுத்தும் முறைதான் 'பிரெய்ல்' முறை. அந்த முறையில் தொடர்ந்து மாற்றங்கள் செய்த பிரெய்ல் சில ஆண்டுகளில் கணிதத்திற்கும், இசைக்கும்கூட எழுத்து வடிவங்களை உருவாக்கினார். 1829-ஆம் ஆண்டில் தாம் உருவாக்கிய முறையை விளக்கும் புத்தகத்தை வெளியிட்டார். ஆரம்பத்தில் பிரெய்ல் முறையை அந்தப்பள்ளிக்கூடம் கண்டுகொள்ளவில்லை ஓர் ஆசிரியர் அதற்கு தடைகூட விதித்தார். ஆனால் நாளடைவில் அந்த முறையின் மகிமையை உலகம் உணரத் தொடங்கியது. குறிப்பாக பார்வையற்றவர்களின் உலகம் புத்துணர்ச்சி பெற்றது. அதுவரை எழுதவும் படிக்கவும் முடியாமல் இருந்தவர்களுக்கு 'பிரெய்ல்' முறை ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.

தாம் கற்ற பள்ளியிலேயே ஆசிரியராக பணியாற்றி அனைவரின் நன்மதிப்பையும் பெற்றார் பிரெய்ல். துரதிஷ்டமாக அவருக்கு காசநோய் ஏற்பட்டு 1852-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் நாள் தனது 43-ஆவது வயதில் அவர் காலமானார். அவர் இறந்தபிறகுதான் அவரது கண்டுபிடிப்பை அங்கீகரித்தது பிரெஞ்சு அரசாங்கம். சரியாக நூறு ஆண்டுகள் கழித்து 1952-ஆம் ஆண்டு அவரது உடல் தோண்டியெடுக்கப்பட்டு தேசிய வீரர்களுக்காக கட்டப்பட்ட புகழ்பெற்ற 'Pantheon' அரங்கில் அடக்கம் செய்யப்பட்டது.

'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்றார் ஒளவையார் கொன்றை வேந்தனில். ஆனால் அந்த கண்களே இல்லாதவர்களுக்குகூட எண்ணையும், எழுத்தையும் கொண்டு சேர்த்திருக்கிறார் லூயி பிரெய்ல். அவர் தந்த வரத்தால்தான் பின்னாளில் John Milton, Helen Keller, sir arthur pearson போன்ற கண் பார்வையற்ற வரலாற்று நாயகர்களை உலகம் சந்திக்க முடிந்தது. பிரெய்ல் நான்கு வயதிலேயே பார்வையை இழந்தபோதும் எல்லாப் பாடங்களிலும் மிகச்சிறப்பாக தேறினார் என்பதும் Chello, Organ ஆகிய இரண்டு இசைக்கருவியையும் திறம்பட வாசிக்கக் கற்றுக்கொண்டார் என்பதும் நாம் வியக்க வேண்டிய் வரலாற்று உண்மைகள்.

தன்னம்பிக்கையும், விடாமுயற்சியுமே அவருக்கு இருகண்களாக செயல்பட்டன. நம்மில் பெரும்பாலோர் ஐம்புலங்களும் நன்றாக செயல்படும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். ஆனால் ஐம்புலங்களில் ஆக முக்கியமான கண்ணை இழந்தபோதும்கூட தன்னம்பிக்கையை இழக்கவில்லை லூயி பிரெய்ல். ஓர் அபூர்வ கண்டுபிடிப்பால் தன்னைப் போன்றோரின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்தார் அவர். அந்த தன்னம்பிக்கை நமக்கு இருந்தால் நம் வாழ்விலும், பிறரது வாழ்விலும் ஓர் வித்தியாசத்தை ஏற்படுத்தலாம். தன்னம்பிக்கையோடு விடாமுயற்சியுடன் செயல்படுவோருக்கு வானம் வசப்பட்டே ஆக வேண்டும் என்பதுகூட இயற்கையின் நியதிதான்.

(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

வரலாற்றில் இன்று

ஜனவரி15

பிறப்புகள்[b]காசாபா தாதாசாகேப் சாதவ் (Khashaba Dadasaheb Jadhav, ஜனவரி 15, 1926ஆகஸ்ட் 14, 1984) தனிநபர் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற இந்தியர் ஆவர். இவர் 1952 ஆண்டுஹெல்சிங்கியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.[/b]
  • இறப்புகள்

காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்

மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது. தமிழில் வனம் ,
கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது
குறிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் புவி மேற்பரப்பின் 9.4% அல்லது மொத்த
நிலப்பரப்பின் ஏறத்தாழ 30% காடுகளினால் மூடப்பட்டுள்ளது. முன்னர் காடுகள்
நிலப்பரப்பின் 50% வரை மூடியிருந்ததாக மதிப்பிட்டுள்ளனர். உலகின் பல
பகுதிகளிலுமுள்ள காடுகள்காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொள்கின்றன.
உயிர்க்கோளத்தில் முக்கியமான அம்சமாக விளங்கும் காடுகள், பல
உயிரினங்களுக்குப் புகலிடமாக விளங்குகின்றன. காடுகள் வெள்ளப்பெருக்கைக்
கட்டுப்படுத்துவதுடன் மண் அரிப்பையும் தடுக்கின்றன. காடுகளில் பல வகைகள்
உண்டு.

தாசுமேனியாவில் உள்ள மிதவெப்பவலய மழைக்காடு:

காடுகளை,
மரங்களை அடிப்படையாகக் கொண்டே வகைப்படுத்துவது வழமை எனினும், காட்டுச்
சூழல்மண்டலம் , பல்வேறு வகையான விலங்குகள் , நுண்ணுயிர்கள் போன்றவற்றையும்
உள்ளடக்குகின்றன. அத்துடன், ஆற்றல் சுற்றோட்டம், உணவு வட்டம் போன்ற
இயற்பியல் மற்றும் வேதியியல் சார்ந்த செயற்பாடுகளும் இதற்குள் அடங்குவன.
சதுப்பு நிலக்காடுகள், பசுமை மாறாக்காடுகள், இலையுதிர் காடுகள், ஊசியிலைக்
காடுகளின் சில வகைகளாகும்.

வெப்பமண்டலக் காடுகள்:
உலகில் வாழும் 50 சதவீத உயிரினங்களுக்கு உறைவிடமாக விளங்குகின்றன
பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் மழைக்காடு
காடுகள்
பல்வேறு தளங்களால் ஆன அமைப்புக் கொண்டவை. இவற்றில் மரங்களின் மேல்
பகுதிகளால் ஆன மேல்தளமும், உயரம் குறைந்த தாவரங்களினால் ஆன கீழ்த்தளமும்
அடங்கும். சிக்கல்தன்மை கூடிய காடுகளில் ஐந்து தளங்கள்வரைஇருக்கும்.
மிகவும் உயரத்தில் உள்ள மேல்தளம் உயர் மரங்களின் மேற்பகுதிகளால் ஆனது.
அதற்குச் சற்றுக் கீழுள்ள தளம் நடுத்தர உயரம் கொண்ட சிறு மரங்களால் ஆனது.
அதற்குஅடுத்த தளம் உயரம் குறைவான குறு மரங்களினால் அமையப் பெற்றது.
மேலிருந்து நான்காவது நிலையில் உள்ள தளம் செடிவகைகளைக் கொண்டிருக்கும்.
ஐந்தாவதான நிலத்தளம் புல் , பூண்டுகளினால் ஆனது. நான்காவது, ஐந்தாவது
தளங்கள் முறையே செடித்தளம் , பூண்டுத்தளம் எனவும் குறிப்பிடப்படுவது உண்டு.
சில வேளைகளில் நில மட்டத்தில் பாசிகளைக் கொண்டஒரு தளமும் இருப்பது உண்டு.

வளம்
மிகுந்த நிலப்பகுதிகளில் அமைந்த பெருங்காடுகளிலேயே ஐந்து தளங்களைத்
தெளிவாகக் காண முடியும். வளம் குறைந்த பகுதிக் காடுகளில் பெரும்பாலும்
மேல்தளம், கீழ்த்தளம், நிலத்தளம் என மூன்று தளங்களையே இனங்காண முடியும்.
வளமற்ற வரண்ட பகுதிகளில் உள்ள காடுகள் சிலவற்றில் தளங்களைத் தெளிவாக
இனங்கண்டுகொள்ள முடியாத வகையில் இடைப்பட்ட நிலைகளிலும் தாவரங்கள்
இருப்பதைக் காணலாம்.

சுவிட்சர்லாந்தின் அல்ப்சு தேசியப் பூங்கா பகுதியில் உள்ள ஊசியிலைக் காடு:
மரங்கள்
வளர்வதற்கு உகந்த எல்லாப் பகுதிகளிலும் காடுகளைக் காண முடியும். அடிக்கடி
தீப்பிடிக்கும் வாய்ப்புள்ள இடங்களையும், மனித நடவடிக்கைகளினால்
மாற்றங்களுக்கு உள்ளான சூழல் கொண்ட இடங்களையும், வேறுவகையில்
பாதிப்புகளுக்கு உள்ளான இடங்களையும் தவிர்த்து, மரம் வளர்
எல்லைக்கோட்டுக்கு உட்பட்ட எல்லா உயரங்களிலும் காடுகள்உள்ளன. 10° வடக்கில்
உள்ள குறுக்குக் கோட்டுக்கும், புவிமையக் கோட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில்
உள்ள காடுகள் பெரும்பாலும் வெப்பவலய மழைக்காடுகளும் , 53° வடக்கு 67°
வடக்கு ஆகிய குறுக்குக் கோடுகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள
காடுகள் வடதுருவப்புலக் காடுகளும் ஆகும். பொது விதியாக பூக்கும் தாவர
வகைகளைக் கொண்ட அகன்ற இலைக் காடுகளில் , வித்துமூடியிலித் தாவர வகைகளைக்
கொண்ட ஊசியிலைக் காடுகளில் இருப்பதிலும் பார்க்கக் கூடுதலான இனங்களைக்
காணமுடியும். எனினும் இதற்கு விதிவிலக்குகளும் உள்ளன.

காடுகளைப்
பல்வேறு வழிகளில்வகைப்பாடு செய்துள்ளனர். அவற்றுள் ஒன்று காடுகள்
அமைந்துள்ள உயிர்ச்சூழலை அடிப்படையாகக் கொண்டது. இந்த் வகைப்பாட்டில் அக்
காடுகளில் உள்ள முதன்மையான தாவர வகைகளின் இலைகளின் இருப்பு நிலையும்
(பசுமையிலைத் தாவரம், இலையுதிர் தாவரம்) கவனத்தில் கொள்ளப்படுகிறது.இன்னொரு
முறையிலான வகைப்பாடு காட்டிலுள்ள முதன்மை இனங்கள் அகன்ற இலைத் தாவரங்களா,
ஊசியிலைத்தாவரங்களா என்பதை அடிப்படையாகக் கொண்டது.

மடகாசுக்கரில் உள்ள அடர்த்தியற்ற ஒரு காடு.
பலரும்
பல்வேறு வகைப்பாட்டுமுறைகளை முன்மொழிந்திருந்தாலும், எல்லோரும்
ஏற்றுக்கொள்ளக்கூடியதாக எதுவும் அமையவில்லை. ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் ,
உலகக் காப்புக் கண்காணிப்புமையம் என்பன இணைந்து உருவாக்கிய வகைப்பாடு பிற
வகைப்பாடுகளை எளிமையாக்கி உருவாக்கியது ஆகும். இந்த முறை உலகின் காடுகளை 26
முதன்மை வகைகளாக வகைப்படுத்துகிறது. இது, காலநிலை வலயங்களையும், மரங்களின்
வகைகளையும் கருத்தில் கொள்கிறது. இந்த 26 வகைகளையும், 6 பெரும் பிரிவுகளாக
வகைப்படுத்தலாம். அவை:

1. மிதவெப்ப ஊசியிலைக் காடுகள் ,
2. மிதவெப்ப அகலிலை மற்றும் கலப்பிலைக் காடுகள் ,
3. வெப்பவலய ஈரக் காடுகள் ,
4. வெப்பவலய வரண்ட காடுகள் ,
5. அடர்த்தியற்ற காடுகளும் புற்றரைக் காடுகளும் ,
6. வளர்ப்புக் காடுகள்
என்பன.

நன்றி அறிவுலகம்

உலகிலேயே ஊழல் நிறைந்த நாடு அமெரிக்கா - ஜாக்கிசான் ஆவேசம்............!!

உலகிலேயே ஊழல் நிறைந்த நாடு அமெரிக்கா - ஜாக்கிசான் ஆவேசம்............!!

உலகிலேயே ஊழல் மலிந்த நாடு அமெரிக்காதான். அமெரிக்காவைவிட எங்கள் நாடு சிறந்தது என பிரபல ஆக்ஷன் நடிகர் ஜாக்கிசான் கூறியுள்ளார்,

அமெரிக்க
ஊடகங்கள் சமீபகாலமாக சீன அரசுக்கு எதிராகவும், சீனாவுக்கு எதிராகவும் சீன
அரசியல் தலைவர்களை இகழ்ந்தும் சீனாவில் ஊழல் மலிந்து விட்டது. அந்த
நாட்டின் பிரதமர் வென்ஜியாபாவோ உள்ளிட்ட தலைவர்கள் ஊழல் மூலம் சொத்துக்களை
குவித்துள்ளனர் என தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

அமெரிக்க
ஊடகங்களின் இச்செய்திகள் குறித்து நடிகர் ஜாக்கிசானிடம் கருத்து
கேட்கப்பட்டபோது, அவர் அமெரிக்காவுக்கு எதிராக ஆவேசத்துடன் கருத்துத்
தெரிவித்தார். ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்தப் பேட்டியில்...

உலகிலேயே
ஊழல் மலிந்த நாடு அமெரிக்காதான், சீனா அல்ல. இங்கும் ஊழல் பிரச்சினை
உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளுடன்
ஒப்பிடும்போது சீனாவில் ஊழல் குறைவுதான். சீனர்கள் தங்களை மட்டுமே
விமர்சனம் செய்து கொள்வர், வெளிநாட்டினர்களை அவர்கள் ஒருபோதும் இகழ்வதோ
விமர்சனம் செய்வதோ இல்லை. அந்த வகையில் எங்கள் நாடு மிக சிறந்தது என்று
அவர் கூறினார்.

சங்கை ரிதுவான்

ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!

பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது!
உதாரணாமக பெண்ணால், தொலைக்காட்ச்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும் முடியும்.

ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக,
ஆண்களால் தொலைக்காட்ச்சியைப்பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசமுடியாது! (
அவர்களின் கவணம்தொலைக்காட்சியில் இருக்கும் அல்லது தொலை பேசியில்
இருக்கும். இரண்டிலும் இருக்காது! )

மொழி :
பெண்களால் இலகுவாக பல மொழிகளைக்கற்றுக்கொள்ள முடியும்!
அதனால்
தான் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் பலர் பெண்களாக இருக்கின்றார்கள்.3 வயது
ஆண்குழந்தையுடன் ஒப்பிடும் போது அதே வயது பெண்குழந்தை அதிகபடியான சொற்களை
தெரிந்து வைத்திருப்பதற்கும் மூளையின் இந்த அமைப்பே காரணம்.

பகுத்துணரும் திறன்:
ANALYTICAL SKILLS)
ஒரு
பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்து தீர்மானத்திற்குரிய
படிகளை தீர்மானிப்பதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாளான இடம்
ஒதுக்கப்படுகிறது. அதனால், எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான
தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆணகளின் மூளையால்இலகுவாக ஏற்படுத்திக்கொள்ள
முடியும்.

ஆனால், பெண்களின் மூளையால் இதை செய்ய முடியாது. அது மட்டுமல்லாது பெண்களால் ஆண்கள் வைக்கும் தீர்மானத்தையும் உணர்ந்துகொள்ள முடியாது.

வாகன‌ம் ஓட்டுதல்:
வாகனத்தை
ஓட்டிக்கொண்டு இருக்கும் போது, தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம்,
பயணிக்கும் திசை, வாகனத்தின் போக்கில் ஏற்பட இருக்கும் மாற்றங்களை
(சிக்னல்ஸ்) முன் கூட்டியே விரைவாக கணித்து அதற்கு ஏற்றபோல் நடத்தையை
வெளிப்படுத்த ஆண்களின் மூளையால் முடியும்.

ஆனால், பெண்களின் மூளை தாமதமாகவே இந்த கணிப்புக்களை மேற்கொள்ளும்.
இதற்கு
காரணம், ஆண்களின் “ஒரு பணியை செய்யக்கூடிய மூளைத்திறன்”ஆகும். உதாரணமாக
வாகனம் செலுத்தும்போது இசையைக்கேட்டுக்கொண்டிருந்தாலும் ஆண்களின் கவணம்
வாகனம் செலுத்துவதில் தான் இருக்கும். பெண்களின் கவனம் இரண்டிலும்
இருக்கும். அதனால் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை
எதிர்கொள்கின்றார்கள்.

பொய்ப்பேச்சு!:
ஆண்கள் பெண்களின்
முகத்திற்கு நேராக பொய் பேசும் போது, பெண்கள் இலகுவாக பொய் என்பதை
அறிந்துகொள்வார்கள்! ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால்
அதை உணரமுடிவதில்லை.

காரணம் பெண்கள் பேசும் போது70% ஆன முக
மொழியையும் 20% உடல் மொழிகளையும் 10% ஆன வாய் மொழியையும் உணர்கின்றனர்.
ஆண்களின் மூளை அவ்வாறானதில்லை!

பிரச்சனைக்கான தீர்வுகள்.
பல
பிரச்சனைகள் இருக்கும் ஒரு ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும்
தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தீர்வை படிப்படியாக
இனங்காணும். இதனால் பிரச்சணையுள்ள ஆண்கள் தனிமையில் தமது தீர்வுகளை
கண்டுகொள்வார்கள்.

ஆனால், இதே அளவு பிரச்சனையுள்ள ஒரு
பெண்னின்மூளையானது பிரச்சனைகளை தனித்தனியாக பிரித்தறியாது…. யாராவது
ஒருவரிடம் தமது முழுப்பிரச்சனைகளையும் வாய்மூலமாக சொல்வதனூடாக
திருப்தியடைந்துகொள்ளும்.
சொன்னதன் பின்னர், பிரச்சனைதீர்ந்தாலும் தீராவிட்டாலும் அவர்கள் நின்மதியாக படுத்துறங்குவார்கள்.

தேவைகள்:
மதிப்பு, வெற்றி, தீர்வுகள்,பெரிய செயலாக்கங்கள் என்ற ரீதியில் ஆண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.
ஆனால், உறவுகள், நட்பு, குடும்பம் என்ற ரீதியில் பெண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.

மகிழ்ச்சியின்மை:
ஒரு
பெண்ணிற்கு தனது காதல்/ உறவுகளிடையே பிரச்சனை அல்லது திருப்தியின்மை
இருந்தால்… அவர்களால், அவர்களின் வேலையில் கவணம் செலுத்த முடியாது.
ஆனால், ஒரு ஆணிற்கு தனது வேலையில் பிரச்சனை இருப்பின் அவர்கள் காதல்/ உறவுகளில் கவணம் செலுத்த முடியாது

உரையாடல்:
பெண்கள் உரையாடும் போது மறைமுக மொழிகளை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால், ஆண்கள் நேரடி மொழியையே பயன்படுத்துவார்கள்.

நடவடிக்கை:
பெண்கள் சிந்திக்காமல் அதிகம் பேசுவார்கள். ஆண்கள் சிந்திக்காமல் அதிகம் செய்வார்கள்!
ஆண்கள், பெண்களிடையேயான உறவுகளில் ஏற்படும் பிரச்சனைக்கான உண்மையான அறி வியல் காரணத்தை தற்போது உணர்ந்திருப்பீர்கள்.

RIYASdotCOM

"ஒரு சலாம் என் வாழ்வை மாற்றியது"

"ஒரு சலாம் என் வாழ்வை மாற்றியது"

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...
(நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.)

முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாம் நோக்கி ஈர்க்கப்பட பல காரணங்கள் இருக்கலாம். குர்ஆன் முழுவதையும் படித்த பிறகு சிலர் கவரப்படுவார்கள், சிலரோ குர்ஆனின் சில வசனங்களை கேட்டதாலேயே ஈர்க்கப்பட்டிருப்பார்கள், வேறு சிலரோ முஸ்லிம்களின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டிருப்பார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

சமீபத்தில் ஒரு கிறிஸ்துவ நபர் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்ற அந்த ஒரு வார்த்தை தன்னை நோக்கி கூறப்பட, அதனால் ஈர்க்கப்பட்டு, பின்னர் தான் சந்தித்த முஸ்லிம் சிறுவர்களின் நன்னடத்தைகளால் இஸ்லாத்தை கற்றுக்கொண்டு, பின்னர் சிறு போராட்டத்திற்கு பின் இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டவர். 

இவர் இஸ்லாத்தை தழுவி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகின்றது. இந்த கால இடைவெளியில் இவர் நம் உம்மத்திற்கு செய்துள்ள பணிகள் அளப்பரியவை. தாவாஹ் பணியில் சிறந்து விளங்கும் இவர், இன்றைய முஸ்லிம் தலைமுறையினருக்கு மிகப்பெரும் ஊக்கமாய் திகழ்கின்றார். 

நாம் மேலே கூறியவற்றிற்கு சொந்தக்காரர் சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் (Idris Towfiq)அவர்கள். கத்தோலிக்க பாதிரியாராக பணியாற்றிய இவர், தான் இஸ்லாமை தழுவியது குறித்து கூறிய கருத்துக்கள் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது. இன்ஷா அல்லாஹ்.... தொடர்ந்து அவர் சொல்வதை பார்போம்.....

"நான் ஆன்மிகத்தில் மேலும் ஒரு அடி எடுத்து வைக்க விரும்பினேன். பாதிரியாராக வர வேண்டுமென்ற என்னுடைய ஆசையை பிஷப்பிடம் வெளிப்படுத்தினேன். 

ரோமில் என்னுடைய பயிற்சியை முடித்து விட்டு கத்தோலிக்க பாதிரியாராக பிரிட்டனில் பணியாற்ற துவங்கினேன். ஒரு பாதிரியாராக சிறப்பான நாட்கள் அவை. நல்ல மனிதர்களோடு பணியாற்றி கொண்டிருந்தேன். 

என்னை பார்த்து சிலர் ஆச்சர்யத்துடன் கூறுவார்கள் 'சகோதரர் இத்ரீஸ், உங்கள் வாழ்கையில் எவ்வளவு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. நீங்கள் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தீர்கள். திடீரென வேறொரு பாதையில் திசை திரும்பிவிட்டீர்கள். என்னவொரு மாற்றம்!!!'

நான் எந்தவொரு மாற்றத்தையும் காணவில்லை. என்னுடைய வாழ்க்கையை திரும்பி பார்க்கின்றேன். அவர்கள் எண்ணுவது போல நான் இரு வேறு பாதையில் இருந்ததில்லை. நேரான வழியில் இருந்ததாகவே நினைக்கின்றேன். 

செயின்ட் தாமஸ் அக்கொய்னஸ், பைபிள், சர்ச்சுகளின் வரலாறு ஆகியவற்றை பற்றிஅன்று ரோமில் படித்து கொண்டிருந்தது, இன்று உங்களுடன் ஒரு முஸ்லிமாக பேசுவதற்குதான் என்று நினைக்கின்றேன்.

பாதிரியாராக வர எனக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை. இன்று, இங்கே, உங்களுடன் ஒரு முஸ்லிமாக பேசுவதற்காகவே பயிற்சியளிக்கபட்டதாக நான் எண்ணுகின்றேன். 

சரி, ஏன் பாதிரியார் பணியை துறந்தேன்? சர்ச்சுகளுடன் எனக்கு எந்த பிரச்சினையும் இருந்ததில்லை. ஒரு கத்தோலிக்க கிருத்துவனாக மகிழ்ச்சியாகவே இருந்தேன். என்னுடைய மதத்தை விட்டு விலகும் எந்தவொரு எண்ணமும் எனக்கு தோன்றியதில்லை. 

தான் நாடுவோருக்கு வெவ்வேறு வழிகளில் நேர்வழி காட்டுகின்றான் இறைவன். உளவியல் ரீதியாக என்னை பாதிக்கப்பட செய்து நேர்வழி காட்டினான் அவன்.

நீங்கள் அறிந்திருக்கலாம், ஒரு கத்தோலிக்க பாதிரியார் மணம் முடித்து கொள்ள முடியாது. நான் தனிமையில் இருப்பதாக உணர்ந்தேன். கத்தோலிக்க சர்ச்சின் ஒரு அங்கமாக தொடரும் அதே வேலையில், பாதிரியார் பணியிலிருந்து விலகுவதென முடிவெடுத்தேன். மிக கடினமான முடிவு இது.

என்னுள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்னுடைய முடிவு. இதிலிருந்து விடுபட வேண்டுமென்றால் எனக்கு புத்துணர்ச்சி தேவை. சுற்றுலா செல்வதென முடிவெடுத்தேன். என்னிடம் அப்போது அதிக பணமும் இல்லை. குறைந்த செலவில் எந்த இடம் விடுமுறைக்கு ஏற்றதென்று இன்டர்நெட்டில் தேடினேன். நான் கண்டு கொண்ட இடம் எகிப்து.

மணல், ஒட்டகங்கள், பிரமிடுகள் என்று இவை தவிர்த்து எகிப்தை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.... 

ஆ...இன்னொரு பிரச்சனையும் இருக்கின்றது....முஸ்லிம்கள்..... !

நான் இதுவரை ஒரு முஸ்லிமை கூட என் வாழ்வில் சந்தித்ததில்லை. டி.வி.க்கள் என்ன சொல்கின்றனவோ அதுதான் நான் முஸ்லிம்களை பற்றி அறிந்திருந்தது. எகிப்திற்கு நான் செல்லும் பயணம் அபாயம் நிறைந்ததாக இருக்கலாம். 

என்னிடம் அப்போது பணமும் இல்லை...வேறு வழியும் இல்லை. எகிப்திற்கு செல்லுவதென முடிவெடுத்தேன். 

எகிப்தில் தங்கிருந்த அந்த ஒரு வாரம் என்னுடைய வாழ்க்கையையே மாற்றிவிட்டது. என் வாழ்வில் முதல் முறையாக இஸ்லாமை சந்தித்தேன். 

நான் முதன் முதலாக இஸ்லாத்தை பற்றி அறிந்து கொண்டது, இஸ்லாமை பற்றிய ஒரு புத்தகத்தாலோ, தொலைக்காட்சி நிகழ்ச்சியாலோ அல்லது ஒரு முஸ்லிம் அறிஞராலோ அல்ல. காலணிகளை துடைத்து கொண்டிருந்த அந்த சிறுவனால் தான். 

அன்று அந்த சிறுவனை கடந்து சென்று கொண்டிருந்தேன்.

'அஸ்-------ஸ--------லாமு அலைக்கும்' 

அவன் என்னை நோக்கி கூறிய வார்த்தைகள் இவை. 

உங்கள் மீது அமைதி நிலவுவதாக என்ற அந்த வார்த்தைகள் அவன் உள்ளத்திலிருந்து வந்த வார்த்தைகள். 

என் ஓட்டலுக்கு அருகில் அவனது கடை இருந்ததால் நிறைய முறை அவனை கடந்து தான் செல்லுவேன். அவனிடம் பேசுவதற்கென்று சில அரபி வார்த்தைகளை கற்று கொண்டேன். 

அவனை கடந்து செல்லும்போது 'எப்படி இருக்கின்றாய்' என்று கேட்பேன். 

அவன் 'அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் இறைவனிற்கே)' என்று பதிலளிப்பான்.

ஆக, இஸ்லாம் எனக்கு அறிமுகமானது, அந்த சிறுவன் கூறிய "அஸ்ஸலாமு அலைக்கும்'மற்றும் 'அல்ஹம்துல்லில்லாஹ்' என்ற வார்த்தைகளால் தான்.

விடுமுறை முடிந்து என்னுடைய நாட்டிற்கு திரும்பினேன். இன்னும் எனக்கு இஸ்லாம் குறித்து தெரிந்திருக்கவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் புரிந்து கொண்டேன். முஸ்லிம்கள் என்பவர்கள் ஊடகங்கள் கூறுவது போன்று இல்லை. 

கல்வி பயிற்றுவிப்பது (Idris Tawfiq has a degree in English language and Literature from the University of Manchester) என்னுடைய பின்னணியாக இருந்ததால் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியில் அமர்ந்தேன். குறும்புக்கார சிறுவர்களை கொண்ட பள்ளி அது. மிகவும் குறும்புக்கார மாணவர்கள்.

அந்த சிறுவர்களில் அரபு மாணவர்கள் நிறைய பேர் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். என்னுடைய பணி, உலகின் ஆறு முக்கிய மதங்களான புத்தம், இந்து மதம், சீக்கியம், கிருத்துவம், யூத மதம் மற்றும் இஸ்லாம் குறித்து பாடம் எடுப்பது. கிருத்துவத்தை பற்றி நன்கு அறிந்தவன் நான். யூத மதத்தை பற்றியும் போதுமான அளவு அறிவு பெற்றிருந்தவன். மற்ற மதங்கள் குறித்து ஒன்றும் தெரியாது.

இஸ்லாம் குறித்து இந்த மாணவர்களுக்கு நல்ல முறையில் பாடமெடுக்க வேண்டுமென்றால் அந்த மார்க்கம் குறித்து நான் அறிந்திருக்கவேண்டும். ஆகையால், இஸ்லாம் குறித்து படிக்க ஆரம்பித்தேன். 

நிறைய படித்தேன். படித்த தகவல்களை விரும்ப ஆரம்பித்தேன். 

மூன்று, நான்கு மாதங்கள் சென்றிருக்கும்.....நாயகம் (ஸல்) அவர்களது பெயரை உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும் என்னுள் தடுமாற்றத்தை உணர்வேன். அதனை வெளிக்காட்டி கொள்ளாமல் ஏதாவது செய்து சுதாரித்து கொள்வேன். 

ரமலான் மாதம் வந்தது.... 

இந்த சிறுவர்கள் என்னிடம் வந்தார்கள், 'சார், நாங்கள் தொழ வேண்டும். உங்கள் அறையில் தான் தரைவிரிப்பும் (Carpet), வாஷ்பேசினும் (Wash basin) உள்ளது. உங்கள் அறையில் நாங்கள் தொழலாமா?'

அனுமதித்தேன்..... 

சிறுவர்கள் தொழுவதை பின்னால் உட்கார்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். அவர்கள் தக்பீர் கட்டுவது, ருக்கூ (1) செய்வது என இவை என்னை வசீகரித்தது. அவர்களிடம் கூறாமல், இந்த சிறுவர்கள் தொழுகையில் என்னென்ன உச்சரிகின்றார்கள், அந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்பது போன்றவற்றை இன்டர்நெட்டில் தேடி அறிந்து கொண்டேன்.

ரமலான் முடிவில், இந்த சிறுவர்கள் மூலமாக எப்படி தொழ வேண்டுமென்பதை அறிந்திருந்தேன். 

அது போல, ரமலான் மாத ஆரம்பத்திலேயே இந்த சிறுவர்களிடம் கூறியிருந்தேன், உங்களுடன் சேர்ந்து நானும் நோன்பு நோற்பேனென்று. அல்லாஹ்விற்காக அல்ல, இந்த சிறுவர்களை உற்சாகப்படுத்துவதற்காக... 

ஆக, ராமலான் மாத முடிவில், எப்படி தொழ வேண்டுமென்பதை அறிந்திருந்தேன், நோன்பும் நோற்றிருந்தேன். 

மேலும் மாதங்கள் உருண்டோடின. முஸ்லிம்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உணர்ந்திருந்தேன். அவர்கள் இனிமையானவர்கள் என்பதை அறிந்திருந்தேன். முஸ்லிம்களுடன் இருப்பது மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக இருந்தது. இஸ்லாம் குறித்து மேலும் அறிந்து கொள்ள லண்டன் மத்திய மசூதிக்கு செல்ல ஆரம்பித்தேன். மாணவர்களுக்கு சொல்லி கொடுக்க அல்ல, நான் அறிந்து கொள்ள. 

சில வாரங்களுக்கு பின்பு, யூசுப் இஸ்லாம் (பிரபல முன்னாள் பாடகரான கேட் ஸ்டீவன்ஸ்)அவர்களின் சொற்பொழிவை அந்த பள்ளிவாசலில் கேட்க கூடிய சந்தர்ப்பம் அமைந்தது. அந்த உரையின் முடிவில் அவரிடம் சென்றேன்.

'நான் முஸ்லிமல்ல. அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக கேட்கின்றேன், ஒருவர் முஸ்லிமாக என்ன செய்ய வேண்டும்' 

அவர் கூற ஆரம்பித்தார்...

"இறைவன் ஒருவனே என்பதில் உறுதிப்பாடு கொண்டவர்கள் முஸ்லிம்கள்" 

" எப்போதும் ஒரு இறைவனின் மீதே நம்பிக்கை கொண்டிருக்கின்றேன்"

"முஸ்லிம்கள் ஐவேளை தொழுபவர்கள்" 

"உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அரபியில் எப்படி தொழ வேண்டுமென்று எனக்கு தெரியும்" 

என்னை புதிராக பார்த்தார் யூசுப் இஸ்லாம். தொடர்ந்தார்...

"முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள்"

"Actually, ரமலான் மாதம் முழுக்க நான் நோன்பு நோற்றிருக்கின்றேன்"

என் கண்களை நேரடியாக பார்த்த யூசுப் இஸ்லாம், "சகோதரரே, நீங்கள் ஏற்கனவே முஸ்லிம்தான். யாரை முட்டாளாக்க பார்க்கின்றீர்கள்" 

பின்னர் "அல்லாஹு அக்பர் (இகாமத்) என்று மக்ரிப் தொழுகைக்கான அழைப்பை கூற ஆரம்பித்தார்கள். அனைவரும் தொழுகைக்காக செல்ல ஆரம்பித்தார்கள்.

நான் மது அருந்தியவனை போல அங்கு நின்று கொண்டிருந்தேன். அவர் கூறிய அந்த வார்த்தைகள் என்னை துளைத்து கொண்டிருந்தன. 

தொழுகை நடக்கும் இடத்திற்கு சென்றேன். கீழே ஆண்களும், மேலே பால்கனியில், பெண்களும் தொழுகைக்காக அணிவகுக்க ஆரம்பித்தார்கள். பின்னால், தூணில் சாய்ந்தபடி உட்கார்ந்தேன். தொழுகை ஆரம்பித்தது. 

மிக மிக அழகான தருணம் அது. குரானின் வசனங்கள் ஓதப்பட..........அழ ஆரம்பித்தேன்....அழுது கொண்டே இருந்தேன்.... அழுது கொண்டே இருந்தேன்....சிறு குழந்தையை போல அழுது கொண்டிருந்தேன்..... 

அந்த தருணத்தில் நான் உணர ஆரம்பித்தேன்., இத்தனை நாளாக நான் தேடிக்கொண்டிருந்த வாழ்க்கையின் அர்த்தம் இன்று இந்த அறையில் முடிவடைந்திருக்கின்றது என்று. 

தொழுகை முடிந்ததும் நேராக யூசுப் இஸ்லாமிடம் சென்றேன். 

"சகோதரரே, நான் முஸ்லிமாக வேண்டுமென்று விரும்புகின்றேன். நான் என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்"

அவர் சொன்னார், "நான் கூறுவதை திரும்ப கூறுங்கள். வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதர் என்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்".

அவரை பின் தொடர்ந்து கூறினேன், "வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள், அவனது தூதர் என்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்".

அங்கிருந்த சகோதரர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். அற்புதமான தருணம் அது. 

முழுமையான முஸ்லிமாக வாழ்வது, முஸ்லிமல்லாதவரை இஸ்லாமை நோக்கி அழைக்கும் சிறப்பான யுக்தி என்று நான் உறுதியாக நம்புகின்றேன். அதனால், ஒரு உண்மையான முஸ்லிமாக வாழ விரும்புகின்றேன். 

நான் இப்போது மிகுந்த மன அமைதியுடன் உள்ளேன். நான் பெற்ற இந்த மகிழ்ச்சியை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். நான் நினைத்து கூட பார்த்திராத வழியில் அல்லாஹ் என்னை வழி நடத்தி கொண்டிருக்கின்றான். 

என்னுடைய அணுகுமுறை முஸ்லிமல்லாதவர்கள் மட்டுமல்லாது முஸ்லிம்களையும் குறிப்பாக இளைஞர்களை கவர்ந்திருப்பது மகிழ்ச்சியை தருகின்றது. இறைவன் நாடினால், தொடர்ந்து என்னுடைய அழைப்பு பணியை செய்து கொண்டிருப்பேன்.

சுபானல்லாஹ்... 

இஸ்லாம் போதிக்கும் சிறு வார்த்தைகள் கூட ஒருவர் மனதில் ஊடுருவி இஸ்லாத்திற்கு நல்ல அறிமுகமாக இருப்பது ஆச்சர்யமடைய வைக்கின்றது. 

முஸ்லிமல்லாதவரை நோக்கி நாம் சொல்லும் சலாம் கூட ஒரு சிறந்த அழைப்பு பணியாக இருப்பதற்கு சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் அவர்களின் இஸ்லாம் நோக்கிய பயணம் ஒரு அழகிய உதாரணம். 

இஸ்லாம் குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார் இத்ரீஸ் தவ்பிக். இவை மட்டுமல்லாது பத்திரிக்கைகள் மற்றும் இணைய தளங்களிலும் தன்னுடைய பங்களிப்பை செய்து வருகின்றார். 

உலகம் முழுதும் பயணம் செய்து அழைப்பு பணியில் ஈடுபட்டு வரும் சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் அவர்களை தங்கள் பகுதிக்கு, சொற்பொழிவாற்ற அழைக்க விரும்பும் சகோதர, சகோதரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அவருடைய தளத்தில் தங்களது விருப்பத்தை பதிவு செய்யலாம். 

சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் போன்றவர்களை தொடர்ந்து நம்மிடையே தோன்ற செய்து நம்முடைய ஈமானை அதிகரிக்க எல்லாம் வல்ல இறைவன் உதவி புரிவானாக..ஆமீன். 

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
‎"ஒரு சலாம் என் வாழ்வை மாற்றியது"

மேலும் மாதங்கள் உருண்டோடின. முஸ்லிம்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உணர்ந்திருந்தேன். அவர்கள் இனிமையானவர்கள் என்பதை அறிந்திருந்தேன். முஸ்லிம்களுடன் இருப்பது மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக இருந்தது.இஸ்லாம் குறித்து மேலும் அறிந்து கொள்ள லண்டன் மத்திய மசூதிக்கு செல்ல ஆரம்பித்தேன். மாணவர்களுக்கு சொல்லி கொடுக்க அல்ல, நான் அறிந்து கொள்ள.

சில வாரங்களுக்கு பின்பு, யூசுப் இஸ்லாம் (பிரபல முன்னாள் பாடகரான கேட் ஸ்டீவன்ஸ்)அவர்களின் சொற்பொழிவை அந்த பள்ளிவாசலில் கேட்க கூடிய சந்தர்ப்பம் அமைந்தது. அந்த உரையின் முடிவில் அவரிடம் சென்றேன்.

'நான் முஸ்லிமல்ல. அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக கேட்கின்றேன், ஒருவர் முஸ்லிமாக என்ன செய்ய வேண்டும்'

அவர் கூற ஆரம்பித்தார்...

"இறைவன் ஒருவனே என்பதில் உறுதிப்பாடு கொண்டவர்கள் முஸ்லிம்கள்"

" எப்போதும் ஒரு இறைவனின் மீதே நம்பிக்கை கொண்டிருக்கின்றேன்"

"முஸ்லிம்கள் ஐவேளை தொழுபவர்கள்"

"உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அரபியில் எப்படி தொழ வேண்டுமென்று எனக்கு தெரியும்"

என்னை புதிராக பார்த்தார் யூசுப் இஸ்லாம். தொடர்ந்தார்...

"முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள்"

"Actually, ரமலான் மாதம் முழுக்க நான் நோன்பு நோற்றிருக்கின்றேன்"

என் கண்களை நேரடியாக பார்த்த யூசுப் இஸ்லாம், "சகோதரரே, நீங்கள் ஏற்கனவே முஸ்லிம்தான். யாரை முட்டாளாக்க பார்க்கின்றீர்கள்"

பின்னர் "அல்லாஹு அக்பர் (இகாமத்) என்று மக்ரிப் தொழுகைக்கான அழைப்பை கூற ஆரம்பித்தார்கள். அனைவரும் தொழுகைக்காக செல்ல ஆரம்பித்தார்கள்.

நான் மது அருந்தியவனை போல அங்கு நின்று கொண்டிருந்தேன். அவர் கூறிய அந்த வார்த்தைகள் என்னை துளைத்து கொண்டிருந்தன.

தொழுகை நடக்கும் இடத்திற்கு சென்றேன். கீழே ஆண்களும், மேலே பால்கனியில், பெண்களும் தொழுகைக்காக அணிவகுக்க ஆரம்பித்தார்கள். பின்னால், தூணில் சாய்ந்தபடி உட்கார்ந்தேன். தொழுகை ஆரம்பித்தது.

மிக மிக அழகான தருணம் அது. குரானின் வசனங்கள் ஓதப்பட..........அழ ஆரம்பித்தேன்....அழுது கொண்டே இருந்தேன்.... அழுது கொண்டே இருந்தேன்....சிறு குழந்தையை போல அழுது கொண்டிருந்தேன்.....

அந்த தருணத்தில் நான் உணர ஆரம்பித்தேன்., இத்தனை நாளாக நான் தேடிக்கொண்டிருந்த வாழ்க்கையின் அர்த்தம் இன்று இந்த அறையில் முடிவடைந்திருக்கின்றது என்று.

தொழுகை முடிந்ததும் நேராக யூசுப் இஸ்லாமிடம் சென்றேன்.

"சகோதரரே, நான் முஸ்லிமாக வேண்டுமென்று விரும்புகின்றேன். நான் என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்"

அவர் சொன்னார், "நான் கூறுவதை திரும்ப கூறுங்கள். வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதர் என்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்".

அவரை பின் தொடர்ந்து கூறினேன், "வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள், அவனது தூதர் என்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்".

அங்கிருந்த சகோதரர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். அற்புதமான தருணம் அது.

முழுமையான முஸ்லிமாக வாழ்வது, முஸ்லிமல்லாதவரை இஸ்லாமை நோக்கி அழைக்கும் சிறப்பான யுக்தி என்று நான் உறுதியாக நம்புகின்றேன். அதனால், ஒரு உண்மையான முஸ்லிமாக வாழ விரும்புகின்றேன்.

நான் இப்போது மிகுந்த மன அமைதியுடன் உள்ளேன். நான் பெற்ற இந்த மகிழ்ச்சியை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். நான் நினைத்து கூட பார்த்திராத வழியில் அல்லாஹ் என்னை வழி நடத்தி கொண்டிருக்கின்றான்.

என்னுடைய அணுகுமுறை முஸ்லிமல்லாதவர்கள் மட்டுமல்லாது முஸ்லிம்களையும் குறிப்பாக இளைஞர்களை கவர்ந்திருப்பது மகிழ்ச்சியை தருகின்றது. இறைவன் நாடினால், தொடர்ந்து என்னுடைய அழைப்பு பணியை செய்து கொண்டிருப்பேன்.

சுபானல்லாஹ்...

இஸ்லாம் போதிக்கும் சிறு வார்த்தைகள் கூட ஒருவர் மனதில் ஊடுருவி இஸ்லாத்திற்கு நல்ல அறிமுகமாக இருப்பது ஆச்சர்யமடைய வைக்கின்றது.

முஸ்லிமல்லாதவரை நோக்கி நாம் சொல்லும் சலாம் கூட ஒரு சிறந்த அழைப்பு பணியாக இருப்பதற்கு சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் அவர்களின் இஸ்லாம் நோக்கிய பயணம் ஒரு அழகிய உதாரணம்.

இஸ்லாம் குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார் இத்ரீஸ் தவ்பிக். இவை மட்டுமல்லாது பத்திரிக்கைகள் மற்றும் இணைய தளங்களிலும் தன்னுடைய பங்களிப்பை செய்து வருகின்றார்.

உலகம் முழுதும் பயணம் செய்து அழைப்பு பணியில் ஈடுபட்டு வரும் சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் அவர்களை தங்கள் பகுதிக்கு, சொற்பொழிவாற்ற அழைக்க விரும்பும் சகோதர, சகோதரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அவருடைய தளத்தில் தங்களது விருப்பத்தை பதிவு செய்யலாம்.

சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் போன்றவர்களை தொடர்ந்து நம்மிடையே தோன்ற செய்து நம்முடைய ஈமானை அதிகரிக்க எல்லாம் வல்ல இறைவன் உதவி புரிவானாக..ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

Monday, January 14, 2013

வரலாற்றில் இன்று

ஜனவரி 14 

1539: கியூபாவை ஸ்பெய்ன் தனது ஆட்சியில் இணைத்துக்கொண்டது.

1724: ஸ்பெய்ன் மன்னர் 5 ஆம் பிலிப் முடிதுறந்தார்.

1761 - இந்தியாவில் மூன்றாம் பானிப்பட் போர் ஆப்கானியர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையில் இடம்பெற்றது. ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

1784 - அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய அமெரிக்கா இங்கிலாந்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.

1858: பிரான்ஸில் 3 ஆம் நெப்போலியன் கொலை முயற்சியிலிருந்து தப்பினார்.

1907 - ஜமெய்க்காவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

1913 - கிரேக்கம் துருக்கியரை பிசானி என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வென்றனர்.

1933: அவுஸ்திரேலியாவுடனான கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வீரர் டக்ளஸ் ஜார்டின் எதிரணி வீரர்களின் உடலை இலக்கு வைத்து பந்துவீசும் உத்தியை கையாண்டார். ஒரு பந்து அவுஸ்திரேலியஅணித்தலைவர் பில் வூட்புல்லின் இதயத்தை தாக்கியது. இத் தொடர் பொடிலைன் சீரிஸ் என அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1943 - இரண்டாம் உலகப் போர்: பிராங்கிளின் ரூஸ்வெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில் கசபிளாங்காவில் சந்தித்து போரின் அடுத்தகட்ட நகர்வுக்கான தீர்மானங்களை எடுத்தனர்.

1950 - சோவியத் ஒன்றியத்தின் மிக்-17 போர் விமானம் வெள்ளோட்டம் விடப்பட்டது.

1969 - ஹவாயிற்கு அருகில் அமெரிக்கக் கடற்படைக் கப்பல் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 27 பேர் கொல்லப்பட்டனர்.

1974 - திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1994 - ஐக்கிய அமெரிக்கத் தலைவர் பில் கிளிண்டன் மற்றும் ரஷ்யத் தலைவர் போரிஸ் யெல்ட்சின் கிரெம்ளினில்புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டனர்.

1995 - சந்திரிகா அரசு - விடுதலைப் புலிகள் 3ம் கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.

1998 - ஆப்கானிஸ்தானின் சரக்கு விமானம் ஒன்று பாகிஸ்தானில் மலை ஒன்றில் மோதியதில் 50 பேர் கொல்லப்பட்டனர்.

2000: பொஸ்னியாவில் 100 முஸ்லிம்களை கொலை செய்த குற்றச்சாட்டுக்குள்ளான 5 பேருககு ஐ.நா. விசாரணைக்குழு 25 வருடகாலம் வரையான சிறைத்தண்டனை வழங்கியது.

2005 - சனிக் கோளின் டைட்டான் என்ற நிலாவில் ஐரோப்பாவின் இயூஜென் விண்கலம் இறங்கியது.

பழமையை பறைசாற்றும் பாம்பன் ரயில்பாலம்... ஓர் பார்வை

வங்காளவிரிகுடா கடலில் பாம்பன் தீவில் அமைந்துள்ளது ராமேஸ்வரம். தமிழ்நாட்டினையும் ராமேஸ்வரத்தையும் இணைக்கும் வகையில் கடந்த 1913ம் ஆண்டு ரயில்பாலம் கட்டப்பட்டது.

நூறு ஆண்டுகளை எட்டப்போகும் பழமையான இந்த பாலத்தின் மீது தற்போது இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்று மோதியுள்ளது. இதனால் பாலத்தின் தூண் சேதமடைந்துள்ளது. இதனையடுத்து ரயில்போக்குவரத்து தடைபட்டுள்ளது.

இந்தியாவின் முதல் கடல்பாலம்

தமிழ்நாட்டின் நிலப்பரப்பையும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் வகையில் பாக்ஜலசந்தியில் இந்தியாவிலேயே முதல் முதலாக கடல்பாலம் கட்டப்பட்டது. 2.3 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த பாலம் இந்தியாவின் இரண்டாவது மிகநீளமாக கடற்பாலமாகும். இந்தப் பாலம் கட்டுமானப்பணிகள் 1913ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1914ம் ஆண்டு திறக்கப்பட்டது. பாலத்தின் கீழே கப்பலும், மேலே ரயிலும் செல்லும் வகையில் கட்டப்பட்டுள்ளது. கடலில் மணல், கல்லுடன் கூடிய பவளப்பாறையில் 6,776 அடி நீளத்திற்கு இந்த ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது.

பாரம்பரிய சின்னம்

இது கப்பல்கள் செல்லும் போது திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ரயில்வேயின் பாரம்பரியம் சின்னமாக அமைந்துள்ளது.1964 ல் ஏற்பட்ட புயலின் காரணமாக பாலம் பலமான சேதம் அடைந்தது. பின்னர் பாலம் புதுப்பிக்கப்பட்டு ரயில் பயணம் தொடங்கியது. தொடக்கத்தில் மீட்டர் கேஜ் பாதையாக இருந்த இந்த ரயில் பாலம் பின்னர் அகலரயில்பாதையாக ஆகஸ்ட் 12, 2007 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 கப்பல்கள் இப்பாலத்தின் வழியாகச் செல்கின்றன

கடல் கொந்தளிப்பு அதிகம்

இப்பகுதி, கடல் கொந்தளிப்பு அடிக்கடி ஏற்படும் பகுதியுமாகும் பாம்பன் ரயில் பாலம் உலகின் மிகவும் துருப்பிடிக்கத்தக்க பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் மிகுந்த சிரமங்களுக்கு இடையிலேயே நடைபெற்றது. இந்தப் பாலம் கட்டுவதற்கு 5000 டன் சிமென்ட், 18000 டன் இரும்பு எஃகு பயன்படுத்தியுள்ளனர். பாலம் கட்ட ஜல்லிக்கல், மணல் ஆகியவை பல நூறு கிலோமீட்டர் தொலைவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது.

இடிபாடுகளில் சிக்கிய கப்பல்

இந்த நிலையில் கொல்கத்தாவில் இருந்து மும்பை செல்ல, ஜனவரி 9ம் தேதி பாம்பன் வழியாக வந்த இரு கப்பல்கள், நள்ளிரவில் வீசிய சூறாவளியில் சிக்கி, பாம்பன் ரயில் பாலம் அருகில் சிக்கிக் கொண்டன. 1964 புயலில் சேதமடைந்த பாலத்தின் இடிந்த விழுந்த கற்களுக்குள் அவை மாட்டிக்கொண்டன.

மீட்க போராட்டம்

ஜனவரி 10ம் தேதி இந்திய கடற்படை கப்பலை இழுத்து வந்த இழுவை கப்பலை மட்டும் மீட்க மாலுமிகள் முயன்றும் முடியவில்லை. மறுநாள், ராமேஸ்வரத்தில் இருந்து வரவழைத்த, 2 விசைப்படகுகள் மூலமாகவும் மீட்க முடியாததால், அன்று மாலை, பாம்பனில் இருந்து மேலும் 2 விசைப்படகுகளை வரவழைத்தனர். அவற்றின் உதவியுடன், இரவு 11 மணி வரை, போராடியும் பயனில்லாமல் போனது. நேற்று காலை, கடல் நீர் மட்டம் உயர்ந்து, காற்றின் வேகம் குறைவாக இருந்ததால், இழுவை கப்பலை மீட்டு விடலாம் என நினைத்த, கடைசி முயற்சியும் தோல்வி அடைந்தது.

மோதிய கப்பல் மீட்பு

இந்நிலையில், கடலில் அதிக நீரோட்டம் காரணமாக கப்பலின் நங்கூரம் பிடி தளர்ந்ததால், அந்த கப்பல் நகர்ந்து பாலத்தின் மீது மோதியது. இதனால் 24-வது எண் பாலம் சேதமடைந்தது. இதைத் தொடர்ந்து பெரும் போராட்டத்திற்குப் பின்னர் கப்பல் மீட்கப்பட்டது. கப்பல் மோதியதில் அந்த தூண் 60 டிகிரி கோணத்தில் திரும்பியுள்ளது. இதனால், அது சரி செய்யப்படும் வரை மண்டபம் வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள்

பாம்பன் கடல் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக தரை தட்டி நின்றிருந்த கப்பலை எதிரே பேருந்து போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் பாலத்தில் நின்று சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். ஏராளமான சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இன்று கப்பல் மோதியதையும், அதை மீட்க நடந்த போராட்டத்தையும் காண ஏராளமானோர் குவிந்ததால் அப்பகுதியில் பேருந்து போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

http://tamil.oneindia.in

வரலாற்றில் இன்று

ஜனவரி 13