ஜனவரி 14
1539: கியூபாவை ஸ்பெய்ன் தனது ஆட்சியில் இணைத்துக்கொண்டது.
1724:
ஸ்பெய்ன் மன்னர் 5 ஆம் பிலிப் முடிதுறந்தார்.
1761 - இந்தியாவில் மூன்றாம்
பானிப்பட் போர் ஆப்கானியர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையில்
இடம்பெற்றது. ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும்
திருப்புமுனையாக அமைந்தது.
1784 - அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய
அமெரிக்கா இங்கிலாந்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
1858: பிரான்ஸில் 3
ஆம் நெப்போலியன் கொலை முயற்சியிலிருந்து தப்பினார்.
1907 - ஜமெய்க்காவில்
இடம்பெற்ற நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
1913 - கிரேக்கம் துருக்கியரை பிசானி என்ற இடத்தில் இடம்பெற்ற போரில்
வென்றனர்.
1933: அவுஸ்திரேலியாவுடனான கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து
வீரர் டக்ளஸ் ஜார்டின் எதிரணி வீரர்களின் உடலை இலக்கு வைத்து பந்துவீசும்
உத்தியை கையாண்டார். ஒரு பந்து அவுஸ்திரேலியஅணித்தலைவர் பில் வூட்புல்லின்
இதயத்தை தாக்கியது. இத் தொடர் பொடிலைன் சீரிஸ் என அழைக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.
1943 - இரண்டாம் உலகப் போர்: பிராங்கிளின் ரூஸ்வெல்ட்,
வின்ஸ்டன் சர்ச்சில் கசபிளாங்காவில் சந்தித்து போரின் அடுத்தகட்ட
நகர்வுக்கான தீர்மானங்களை எடுத்தனர்.
1950 - சோவியத் ஒன்றியத்தின் மிக்-17
போர் விமானம் வெள்ளோட்டம் விடப்பட்டது.
1969 - ஹவாயிற்கு அருகில்
அமெரிக்கக் கடற்படைக் கப்பல் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 27 பேர்
கொல்லப்பட்டனர்.
1974 - திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து
புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1994 - ஐக்கிய அமெரிக்கத் தலைவர்
பில் கிளிண்டன் மற்றும் ரஷ்யத் தலைவர் போரிஸ் யெல்ட்சின் கிரெம்ளினில்புதிய
பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டனர்.
1995 - சந்திரிகா அரசு -
விடுதலைப் புலிகள் 3ம் கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.
1998 -
ஆப்கானிஸ்தானின் சரக்கு விமானம் ஒன்று பாகிஸ்தானில் மலை ஒன்றில் மோதியதில்
50 பேர் கொல்லப்பட்டனர்.
2000: பொஸ்னியாவில் 100 முஸ்லிம்களை கொலை செய்த
குற்றச்சாட்டுக்குள்ளான 5 பேருககு ஐ.நா. விசாரணைக்குழு 25 வருடகாலம் வரையான
சிறைத்தண்டனை வழங்கியது.
2005 - சனிக் கோளின் டைட்டான் என்ற நிலாவில்
ஐரோப்பாவின் இயூஜென் விண்கலம் இறங்கியது.
No comments:
Post a Comment