Digital Time and Date

Welcome Note

Saturday, April 28, 2012

பிலிப்ஸின் இரு தசாப்தங்களுக்கு ஒளிரக்கூடிய மின்குமிழ்.
மின்சாரத்தை சிக்கனமாக பாவிக்ககூடியதும், சுமார் 20 வருடங்கள் வரை ஒளிதரக்கூடிய எல்.இ.டி மின்குமிழ் தற்போது சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது.

... அதாவது சுமார் 100,000 மணித்தியாலங்கள் இவற்றால் ஒளிரமுடியுமென தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைக்காலமாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இம் மின்குமிழானது நெதர்லாந்து நாட்டு நிறுவனமான 'பிலிப்ஸ்' இனால் உற்பத்தி செய்யப்படுகின்றது.

அண்மையில் அமெரிக்க அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்தும் மின்குமிழுக்கான 10மில்லியன் டொலர் பரிசினையும் இது வென்றது.

சுமார் 18 மாதங்கள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே இப்பரிசு வழங்கப்பட்டது.

ஆரம்பத்தில் இதன்விலை 60 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

விலை சற்று அதிகம்தான் என்ற போதிலும் அதன் பாவனைக்காலத்தின் போது சுமார் 165 அமெரிக்க டொலர்கள் வரையான மின்சக்திச் செலவினை மீதப்படுத்தமுடியுமென பிலிப்ஸ் தெரிவிக்கின்றது.
எனினும் சில இடங்களில் இதனை 25 அமெரிக்கடொலர்களுக்கு விற்பனை செய்ய எதிர்பார்ப்பதாக பிலிப்ஸ் குறிப்பிட்டுள்ளது.
See More

Friday, April 27, 2012

கணிதமேதை அல் குவாரிஸ்மி பற்றிய தகவல்கள் !!!(AL KHWARIZMI )கணிதத்துறையில் முஸ்...லிம்கள் ஆற்றிய சாதனைகள் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இன்றைய நவீன கணினிக்கு அவை தான் அடிப்படையாகும்.

எட்டாம் நூற்றாண்டில் இரண்டாம் பகுதியில் ஆட்சிப் புரிந்த அப்பாசியக் கலிபா அல்-மாமுனூடைய காலத்தில் தான் முறையான கணித விஞ்ஞான ஆய்வு தொடங்கிற்று. இந்தக் காலக்கட்டத்தில் கணித துறை ஆக்கங்கள் அனைத்தும் முஸ்லிம்களால் மட்டுமே இயற்றப்பட்டன. 11 ஆம் நூற்றாண்டு வரை கணிதத்துறையில் முஸ்லிம்களின் அடிப்படையான ஆக்கங்களே காணப்பட்டன.

12 ஆம் நூற்றாண்டில் இவர்களுடைய கணிதவியல் ஆக்கங்களை யூதர்களும்,கிறித்தவர்களும் அரபி மொழியிலிருந்து லத்தின் மற்றும் ஹீப்ரு மொழிகளில் மொழிபெயர்த்தனர். 13 ஆம் நூற்றாண்டு வரை யூத கிறித்துவர்களால் கூட இவர்களுடைய ஆக்கங்களுக்கு நிகரானவற்றை இயற்ற முடியவில்லை.

நாம் இன்று எழுதக்கூடிய 1,2,3 என்ற எங்கள் ஆங்கில எண்கள் என்றே பலர் தவறாக எண்ணிக்கொள்கின்றனர்.ஆனால் அவை அரபி எண்கள் என்று தான் அழைக்கபடுகின்றன. இந்த எண்கள் முறை இந்தியாவிலிருந்து அரபுலகதிற்கு வந்தது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் முஸ்லிம்கள் தாம் பிறரிடமிருந்து பெற்றக் அறிவுக் கலைக்கு என்றும் நன்றிக் கடன் பட்டவர்களாக, அறிவு துறையில் நேர்மையுடையவர்களாக (Intellectual Honesty ) விளங்கியுள்ளனர். அதன் காரணமாக வலப்புறத் திலிருந்து இடப்புறமாக எழுதப்படும் அரபி எழுத்து முறை வழக்கத்திற்கு மாறாக இந்த எண்கள் மட்டும் இடப்புறத்திலிருந்து வலபுறமாகத்தான் இன்றும் எழுதப்படுகின்றன. இன்றும் அரபுலகில் இந்த எண்கள் இந்திய எண்கள் என்றே அழைக்கப்படுகின்றன.

இந்தியர்களிடமிருந்து கணித என்களை கற்றுக் கொண்ட முஸ்லிம்கள் அதற்கு நன்றி செலுத்தும் முகமாக இவ்வாறுதான் மேற்குலகத்திற்கு அதனை அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.இன்னும் பூஜ்யம் அல்லது ஸைபர் என்ற எண் வடிவத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் எண் முறை கணிதத்தை (Arithmetic) முஸ்லிம்கள் மிகவும் எளிமைப் படுத்திவிட்டனர். Zero என்ற ஆங்கில சொல்லுக்கு பிரெஞ்சு மொழியில் Ciphra எனப்படும். இது Sifr என்ற அரபி சொல்லிலிருந்து தோன்றியதாகும். என்றால் பூஜ்யம் என்று பொருள்படும்.

ஒன்பதாம் நூற்றாண்டில் கலிபா அல் மாமூனுடைய காலத்தில் வாழ்ந்த மிகப் பெரும் கணித மேதை அபு அப்துல்லா முஹம்மது இப்னு மூசா அல்குவாரிஸ்மி என்பவராவர். இவர் வாழ்ந்த காலம் கி.பி ஆகும். 1,2,3 என்ற எண்முறை கணிதம் இவரது பெயராலேயே ஐரோப்பாவிலிருந்து அறிமுகமானது. அதனை ஆங்கிலத்தில் Algorithm என அழைப்பர். அல்குவாரிஸ்மி என்ற பெயரே Algorithm என மருவி வந்துள்ளது Algebra என்ற குரிக்கணிதவியலின் தந்தையும் இவர்தான். இவர் கிதாபுல் ஜபர் வல் முகாபலா என்ற நூலினை எழுதியுள்ளார். அல்ஜபர் என்ற அரபி சொல்லிருந்து தான் Algebra என்ற சொல் பிறந்தது.வடிவக்கணிதம் (Geometry ), முக்கோணக்கணிதம் (Trigonometry ) என்ற கணித முறைகள் ஏற்படுத்தியவர்களும் முஸ்லிம்களே.

அரபியர்களின் நடமாடும் கலைக்களஞ்சியம் என அழைக்கப்படும் அல்-கிந்தி என்பவர் 270 நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் சில கணித நூல்களும் அடங்கும். இவரது முழுப்பெயர் அபுயூசுப் யாகூப் இப்னு இசாக். இவர் வாழ்ந்தக் காலம் கி.பி 801 - 873 ஆகும்.

அல் குவாரிஸ்மி மற்றும் அல் கிந்தினுடைய எழுத்துகளின் வழியாக தான் எண்முறை கணிதம் மேற்குலகிற்கு நன்கு அறிமுகமானது. இவர்களுக்கு பின் எண்ணற்ற பல முஸ்லிம் கணித மேதைகள் தோன்றி கணிதவியல் விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு தொண்டாற்றியுள்ளனர்.

மதச்சார்பற்ற முஸ்லிம் ஆட்சியாளர்களின் வரலாறு இந்தியாவில் மறைக்கப்பட்டுள்ளது

மதச்சார்பற்ற முஸ்லிம் ஆட்சியாளர்களின் வரலாறு இந்தியாவில் மறைக்கப்பட்டுள்ளது  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

இந்திய பத்திரிக்கை மற்றும் தகவல் தொழில்நுட்ப ஊடகங்கள் மதச்சார்பின்மை இல்லாத முஸ்லிம் ஆட்சியாளர்களின் குறிப்பிட்ட திட்டங்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளையே மக்களுக்கு வழங்கி வருகின்றது. திப்பு சுல்தான் போன்ற மதச்சார்பற்ற ஆட்சியாளர்களைப் பற்றிய வரலாறுகள் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே மறைக்கப்பட்டுள்ளது.’ என
உச்சநீதிமன்றதின் மூத்த தலமை நீதிபதியான மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.

அறிவுப்பூர்வமான-வளர்ச்சி மற்றும் எதிர்கால அமைதிக்கான வழிதடம் அமைத்தல் என்ற தலைப்பில் நிகழ்ந்த மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

மேலாண்மை குறிக்கோள்களுக்கான கல்வி நிறுவனத்தின் வெள்ளி விழாவையொட்டி இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் “நீங்கள் முஹம்மது கஜினி எவ்வாறு கோவில்களை இடித்தார் மேலும் மற்ற முஸ்லிம் ஆட்சியாளர்கள் எவ்வாறு ஹிந்து மக்களை மதம் மாற்றினார்கள் என்ற வரலாற்று செய்திகளை மட்டுமே படித்திருப்பீர்கள். திப்பு சுல்தான் போன்ற முஸ்லிம் ஆட்சியாளர்கள் 153 கோவில்கள் கட்டுவதற்கு பொருளாதார உதவிகள் செய்திருக்கிறார் என்ற வரலாற்று செய்திகளை எப்போதும் படித்திருக்க மாட்டீர்கள்” என உருது மொழியில் ஆர்வமுடையவரான கட்ஜு கூறினார்.

இது போன்ற வரலாற்று செய்திகள் மதச்சார்பற்ற வரலாற்றாசிரியர்கள், சமூக ஆய்வாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மட்டுமே கூறிவந்துள்ளார்கள். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி போன்றவர்கள் இத்தகைய வரலாற்று செய்திகளை வெளிப்படையாக கூறுவது இதுவே முதல் முறையாகும்.

உத்தரபிரதேசத்தைப் பற்றி கூறுகையில் அவ்தாஹ் பகுதீன் நவாப் மதசார்பற்ற நடுநிலையான அவரின் செயல்பாடுகளுக்காகவே பேசப்பட்டவர் என்று உதாரணங்களையும் மேற்கோள்காட்டி கூறினார்.

நம்முடைய குடிமையியல் பற்றிய இந்திய வரலாற்றில் இது போன்ற முக்கியமான பகுதிகள் மறைக்கப்பட்டது தான் இந்தியாவில் மத துவேச சக்திகள் வளர்ச்சியடைய காரணமாகின. ஆனால் இந்தியா பல்வேறு வேறுபாடுகள் கொண்ட கலாசாரங்கள் உள்ள நாடு மதச்சார்பற்ற தன்மை இல்லாமல் இந்தியாவில் வாழவே முடியாது என்றும் அவர் கூறினார்.

இந்தியா ஒரு குடியேற்றவாசிகளின் நாடு “இந்திய கலாசாரம்” என்பது “சமஸ்கிருதம்-உருது” கலாசாரம் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மூத்த முஸ்லிம் தலைவரும் அறிவியலாளர்களுக்கான ஐ.ஒ.எஸ் என்ற அமைப்பை உருவாகியவருமான செய்யத் ஷகாபுதீன் கூறுகையில்; “சமூக ஆய்வாலர்களுக்கான இந்த அமைப்பு அறிவுக்கூர்மை மற்றும் அரசியல் சார்ந்தவர்கள் ஒருங்கிணைந்து சமூக மாற்றத்திற்கான ஒரு செயல் திட்டத்தை உருவாக்கலாம்” என்று இம்மாநாட்டில் பேசினார்.

Thursday, April 26, 2012

பதவியை பற்றி இஸ்லாம்


பதவி என்றால் என்ன, இஸ்லாம் பதவியை பற்றி என்ன கூறுகிறது என்பதைப் பற்றிய அறிவில்லாத காரணத்தினாலும் புகழுக்காகவும் பணத்துக்காகவும் எதையும் செய்யலாம் என்ற சுயநலத்தினாலும் இஸ்லாத்தையே மறந்து வாழக் கூடிய முஸ்லிம்களை நாம் இன்று பார்த்து வருகிறோம். பதவிக்காக தம்முடைய மானத்தை இழந்து, நம்பகத் தன்மையை இழந்து, கடைசியில் இஸ்லாத்தையே மறந்து இணைவைப்பில் விழக் கூடிய நிலையையும் நாம் பார்க்காமல் இல்லை.நமக்கு ஒரு பதவி கிடைக்கிறது என்றால் அது நம்முடைய திறமையால் கிடைத்தது இல்லை மாறாக அது அல்லாஹ்வின் நாட்டம், சோதனை, உதவி என்றே ஒரு முஸ்லிம் நம்ப வேண்டும். மேலும் மார்க்கத்தை எத்திவைக்கும் தாவா பணியாகட்டும் ஏனைய சமுதாயப் பணியாகட்டும் நாம் அதற்காக செயல்படும் ஒரு கருவியேயாகும் என்பதையும் அல்லாஹ்வின் ஏவல்களை செய்யும் ஒரு அடிமையாகவே எண்ணி செயல்பட வேண்டும்.


பதவி ஏன் அமானிதம்?.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்' "நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை (தாம் சுகங்)களிலேயே பதவி(ப் பால்) தான் இன்பமானது. பாலை மறக்க வைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப் பாலை நிறுத்துவது)தான் மோசமானது." (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 7148)

"அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: பூமியின் கிழக்குப் பகுதிகளையும் மேற்குப் பகுதிகளையும் நீங்கள் வெற்றி கொள்வீர்கள். இறைவனை அஞ்சி அமானிதத்தை நிறைவேற்றியவரைத் தவிர அவைகளை நிர்வகிப்பவர்கள் நரகத்தில் இருப்பார்கள்." (நூல்: அஹ்மத் 22030)


அதிகாரமும் தலைகனமும்


பின்னும் நீர் கூறும்: "நான் என்னுடைய ரப்பின் தெளிவான அத்தாட்சியின் மீதே இருக்கின்றேன்; ஆனால் நீங்களோ அதைப் பொய்ப்பிக்கின்றீர்கள். நீங்கள் எதற்கு அவசரப்படுகின்றீர்களோ அ(வ்வேதனையான)து என் அதிகாரத்தில் இல்லை; அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்விடமேயன்றி வேறில்லை; சத்தியத்தையே அவன் கூறுகின்றான், தீர்ப்பு வழங்குவோரில் அவனே மிகவும் மேலானவனாக இருக்கிறான்.(அல்குர்ஆன் 6:57)

பின்னர் அவர்கள் தங்களின் உண்மையான பாதுகாவலனான அல்லாஹ்விடம் கொண்டு வரப்படுவார்கள்; (அப்போது தீர்ப்பு கூறும்) அதிகாரம் அவனுக்கே உண்டு என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும், அவன் கணக்கு வாங்குவதில் மிகவும் விரைவானவன். (அல்குர்ஆன் 6:62)

மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும்,அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர் களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 4:36)


மறுமை நிலை

மறுமையில் கேள்வி கணக்கிர்க்காக மஹ்ஷர் மைதானத்தில் நிருத்தப்படுவோம் என்பது அனைவரும் அறிந்ததே.அங்குள்ள ஒரு நாள் என்பது உலகில் 50,000 வருடங்களுக்கு சமமானதாகும். சுட்டெரிக்கும் வெப்பத்தினால் மக்கள் கடுமையான வேதனை அடையும் அந்த நிலையில் ஏழு சாராருக்கு மட்டும் அந்த வெப்பத்திலிருந்து பாதுகாத்து அல்லாஹ் தனது அர்ஷின் அடியில் நிழல் வழங்குவான்.அங்கு அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் அங்கு இருக்காது. அதில் தனக்கு கொடுக்கப்பட்ட பதவியை அழகிய முறையில் பயன்படுதியவரும் ஒருவர் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் :

அல்லாஹ்தன்னுடைய(அரியணையின்)நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் தன்னுடைய நிழலில் ஏழுபேருக் குநிழல் அளிப்பான்:

1. நீதிமிக்க ஆட்சியாளர்.

2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.

3. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனுடைய அச்சத்தில் கண்ணீர் சிந்திய மனிதன்).

4. பள்ளிவாசலுடன் எப்போதும் தொடர்பு வைத்துக் கொள்ளும் இதயமுடையவர்.

5. இறைவழியில் நட்புகொண்ட இருவர்

6.அந்தஸ்தும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்தபோது 'நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்' என்று கூறியவர்.

7. தம் இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம்கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர். (அறிவிப்பாளர் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் புகாரி 6806)

அதேபோல் தம்முடைய பதவியை தவறான வழியில் பயன்படுத்துபவர்களையும் அல்லாஹ் வன்மையாக எச்சரிக்கிறான்.

அவர்கள் இந்த உலக வாழ்விலிருந்து (அதன்) வெளித்தோற்றத்தையே அறிகிறார்கள் - ஆனால் அவர்கள் மறுமையைப் பற்றி அலட்சியமாக இருக்கிறார்கள்.(அல்குர்ஆன் 30:7)

புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் 'எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா? எனது விசாரணை என்னவாகும் என்பது தெரியவில்லையே! (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா?எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே! எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே" எனக் கூறுவான். (அல்குர்ஆன் 69:25-29)


இறையச்சம்

'நீ பரிசுத்தமாகிட உனக்கு விருப்பம் உண்டா? நான் உனது இறை வனை நோக்கி வழி காட்டுகிறேன்! (இறைவனை) அஞ்சிக் கொள்!' எனக் கூறுவீராக" (என்று இறைவன் கூறினான்.) (அல் குர்ஆன் 79:18,19)


ஃபிர்அவ்னுக்கு அனைத்து ஆற்றலையும் அல்லாஹ் கொடுத்திருந்தா ஆனால் அவனோ இறையச்சம் இல்லாமல் தன்னையே கடவுள் என்று அகந்தை கொண்டிருந்தான்.அவனை நோக்கி அல்லாஹ் கூறுவதை பாருங்கள்.

''அவனை(ஃபிர்அவ்னை) இம்மையிலும் மறுமையிலும் வேதனை மூலம் அல்லாஹ் பிடித்தான்.'' (அல்குர்ஆன் 79:25)


கலந்து ஆலோசித்து முடிவெடுத்தல்


(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவ ராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான். (அல்குர்ஆன் 3:159)

தமது காரியங்களில் தமக்கிடையே ஆலோசனை செய்வோருக்கும் நாம் வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவோருக்கும் தமக்கு அநீதி இழைக்கப்பட்டால் (இறைவனிடம்) உதவி தேடுவோருக்கும் சிறந்ததும் நிலையானதுமாகும். (அல்குர்ஆன் 42:37:38)திடவுறுதி, பொறுமை, வீரம்


''(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள்.'' .(அல்குர்ஆன் 3:159)


தகுதியும் திறமையும்


'ஓர் அவையில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கிக்கொண்டிருந்த போது அவர்களிடம் நாட்டுப் புறத்து அரபி ஒருவர் வந்தார். 'மறுமை நாள் எப்போது எனக் கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது (அங்கிருந்த) மக்களில் சிலர் 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுற்றார்கள்; எனினும் அவரின் இந்தக் கேள்வியை அவர்கள் விரும்பவில்லை' என்றனர். வேறு சிலர், 'அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுறவில்லை' என்றனர்.

முடிவாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் பேச்சை முடித்துக் கொண்டு, 'மறுமை நாளைப் பற்றி (என்னிடம்) கேட்டவர் எங்கே?' என்று கேட்டார்கள். உடனே (கேட்டவர்)' இறைத்தூதர் அவர்களே! இதோ நானே' என்றார். அப்போது கூறினார்கள்.' அமானிதம் பாழ்படுத்தப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர் பார்க்கலாம்." அதற்கவர், 'அது எவ்வாறு பாழ் படுத்தப்படும்?' எனக் கேட்டதற்கு, 'எந்தக் காரியமாயினும் அது, தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 59)


பாரபட்சம் இருக்கக் கூடாது

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 5:8)

மக்ஸுமிய்யா எனும் (குரைஷிக்) குலத்தைச் சேர்ந்த பெண் ஒருமுறை திருடிவிட்டார். இது (உயர்ந்த குலமெனத் தம்மைக் கருதி வந்த) குரைஷிக் குலத்தினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. ‘இது குறித்து நபிகள் நாயகத்திடம் யாரால் பரிந்து பேச முடியும்? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்புக்குப் பாத்திரமான உஸாமாவால் மட்டுமே இயலும் என்று அவர்கள் பேசிக் கொண்டனர். உஸாமா, நபிகள் நாயகத்திடம் இது குறித்துப் பேசினார். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அல்லாஹ்வுடைய குற்றவியல் சட்டங்களில் நீர் பரிந்து பேசுகிறீரா? எனக் கடிந்து விட்டு மக்களிடையே எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில் ‘மனிதர்களே! உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தவர் உயர்ந்தவன் திருடினால் விட்டு விடுவார்கள். பலவீனமானவன் திருடினால் தண்டனையை நிறைவேற்றுவார்கள் இதன் காரணமாகவே அழிந்து போயினர். அல்லாஹ்வின் மேல் ஆணையாக இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை நானே வெட்டுவேன்’ என்று குறிப்பிட்டார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 6787)

உயிருக்கு உயிர் கண்ணுக்குக் கண் மூக்குக்கு மூக்கு காதுக்குக் காது பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப் பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.(5:45)


பதவி என்பது பொறுப்பு

''செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப் படுபவை.'' (அல்குர்ஆன் 17:36)


நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண் தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண் தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவருடைய பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்." (நூல்: புகாரி 7138)


நம்பிக்கை

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: தனக்கு ஏவப் பட்டதை மனமுவந்து திருப்தியுடன் நிறைவேற்றும் நம்பிக்கைக்குரிய கருவூலக் காப்பாளர் தர்மம் செய்தவராவார். (அறிவிப்பவர்: அபூ மூஸல் அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத் 18836)

தம் கட்டுப்பாட்டில் உள்ள செல்வதினாலேயே பலர் தடுமாறி விடுகின்றனர். நாம் எப்படிப் பட்ட நம்பிக்கையாளராக இருக்க வேண்டும் என்பதை திருக் குரானில் கூறப்பட்டுள்ள இந்த சாம்பவம் நமக்கு தெளிவு படுத்தும்.

'இறைவா! நான் சில ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி அவர்களின் கூலியையும் கொடுத்தேன். ஒரே ஒருவர் மட்டும் தம் கூலியைவிட்டுவிட்டுச் சென்றார். அவரின் கூலியை நான் முதலீடு செய்து அதனால் செல்வம் பெருகியிருந்த நிலையில் சிறிது காலத்திற்குப் பின் அவர் என்னிடம் வந்தார். 'அல்லாஹ்வின் அடியாரே! என்னுடைய கூலியை எனக்குக் கொடுத்துவிடும்!" என்று கூறினார். 'நீர் பார்க்கிற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உம் கூலியிலிருந்து கிடைத்தவைதாம்!" என்று கூறினேன். அதற்கவர் 'அல்லாஹ்வின் அடியாரே! என்னை கேலி செய்யாதீர்!" என்றார். 'நான் உம்மை கேலி செய்யவில்லை!" என்று கூறினேன். அவர் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஓட்டிச் சென்றார். 'இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!' எனக் கூறினார். பாறை முழுமையாக விலகியது. உடனே, அவர்கள் வெளியேறிச் சென்றுவிட்டனர்!" என அப்துல்லாஹ்வின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள். (நூல்: புகாரி 2272)ஆட்சிக்கு ஆசைப் படுவது

நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய ஆசைப்படாதீர்கள். ஆனால் மறுமை நாளிலோ அதற்காக வருத்தப்படுவீர்கள்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 7148)

அபூ மூஸா (ரலி) அறிவித்தார்கள்: "நானும் அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த மற்றும் இருவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களிடம் சென்றோம்; (அவர்கள் இருவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பதவி கேட்டார்கள்;) நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்), 'இவ்விருவரும் பதவி கேட்பார்கள் என்று நான் அறிந்திருக்கவில்லை! (முன்பே நான் இதை அறிந்திருந்தால் இவர்களைத் தங்களிடம் அழைத்து வந்திருககவே மாட்டேன்!)" என்று கூறினேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'பதவியை விரும்புகிறவருக்கு நாம் பதவி கொடுக்கமாட்டோம்!" என்று பதிலளித்தார்கள். (நூல்: புகாரி 2261)


அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது,அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்''. (அல்குர்ஆன் 110:1-3)Reference By : http://www.nidur.info/

செல்போனிலோ, விடீயோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத்தை படம் பிடிப்பவர்களுக்காக இந்த பதிவு..''நீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் அந்தரங்கத்தை படம் பிடித்து ரசிப்பவர்களாக இருந்தால்... வெரி சாரி.. உங்களின் நிர்வாணம் இப்போது உலகம் முழுக்க பரவிக்கொண்டிருக்கலாம்.

... ``அது எப்படி... எ
ன் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பதால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?'' என்று யோசிக்கிறீர்களா... வெயிட்... உங்களுக்காகவே சாம்பிளுக்கு சில சம்பவங்கள்...(பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன)

அடையாறில் வசிக்கிறார்கள் மதுமிதா- ராம். புதுமணத் தம்பதிகளான இவர்கள் ஐ.டி. துறையில் வேலை செய்கிறார்கள். ஒருநாள் நண்பர் ஒருவரால் மதுமிதாவுக்கு அனுப்பப்பட்டிருந்த அந்த மெயிலில் ஒரு வீடியோ இணைக்கப்பட்டிருந்தது. அதைத் திறந்து பார்த்த மதுமிதாவுக்கு அதிர்ச்சியில் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. காரணம், அந்த வீடியோ மதுமிதாவும் அவர் கணவன் ராமும் பெட்ரூமில் அந்தரங்கமாக இருந்தபோது சும்மா ஜாலிக்காக செல்போனில் எடுத்தது. கொஞ்ச நேரம் அதைப் பார்த்து ரசித்துவிட்டு, செல்போனிலிருந்து அப்போதே அதை அழித்தும் விட்டார்கள். ஆனால் அது இப்போது இண்டர்நெட் முழுக்க பரவிக் கொண்டிருக்கிறது. 'செல்போனில் இருந்து டெலிட் செய்த ஒரு வீடியோ எப்படி இண்டர்நெட்டுக்குப் போகமுடியும்? என்பதுதானே உங்கள் டவுட். அதற்கான விடையைத் தெரிந்து கொள்வதற்கு முன் மேலும் சில அதிர்ச்சிச் சம்பவங்களையும் பார்த்துவிடுவோம்.

அண்ணாநகரைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் ரம்யா. துறுதுறுவென துள்ளித் திரியும் டீன் ஏஜ் பெண். 10_ம் வகுப்பு படிக்கிறாள். உடன் படிக்கும் மாணவிகள் பலர் செல்போன் வைத்திருக்கிறார்கள் என அப்பாவை நச்சரிக்கவே, அவரும் ஒரு காஸ்ட்லியான கேமரா செல்போனை வாங்கிக் கொடுத்தார்.

ஒருநாள் பெட்ரூமில் கண்ணாடி முன் நின்று தன் அழகை ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு, செல்போனில் தன் உடலில் துணியில்லாமல் படம் பிடித்தால் என்ன என்று தோன்றியது. உடனே அதைச் செய்தும் விட்டாள். பின்னர் சிறிது நேரம் துணியில்லாத தன்னுடைய அந்த வீடியோவை ரசித்துப் பார்த்துவிட்டு டெலிட் செய்துவிட்டாள். ஆனால் இப்போது அந்த வீடியோவும் நெட்டில் உலா வந்து கொண்டிருக்கிறது.

இதேபோல் நெல்லையைச் சேர்ந்த லட்சுமி -குமார் தம்பதியரும் தங்கள் அந்தரங்கத்தை செல்போனில் வீடியோவாக எடுத்து பின்னர் அதை டெலிட் செய்து விட்டனர். ஆனால் அந்த போன் ஒரு நாள் தொலைந்து போனது. புது செல்போன் வாங்கிக் கொண்டார்கள். பழைய போனை மறந்தும் விட்டார்கள். ஆனால் பழைய செல்போனில் இருந்த அந்த தம்பதியினரின் அந்தரங்கம் இப்போது இணையதளம் முழுக்க பரவிக் கெண்டிருக்கிறது.

இதுமட்டுமல்ல, குற்றாலத்தில் குளியல் போடும் கல்லூரி மாணவிகளின் வீடியோ, ஹாஸ்டல் ரூமில் பர்த்டே பார்ட்டி கொண்டாட்டத்தில் குத்தாட்டம் போடும் மாணவிகளின் வீடியோ... என ஏகப்பட்ட வெரைட்டிகளில் அந்தரங்க வீடியோக்கள் இண்டர்நெட்டில் நிரம்பிக் கிடக்கின்றன. செல்போனில் டெலிட் செய்யப்பட்ட ஒரு வீடியோ எப்படி இணையத்துக்குப் போனது என்பதுதான் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் புரியாத புதிர்.

அந்த புதிருக்கான விடையின் பெயர் 'ரெக்கவரி சாஃப்ட்வேர்
(recovery software) .

மேலே சம்பவத்தில் இடம்பெற்ற எல்லோருக்கும் ஒன்றுபோல் ஒரு விஷயம் நடந்தது. அது அவர்களின் செல்போனும், டிஜிட்டல் கேமராக்களும் ஒருநாள் பழுதடைந்தது. அவற்றைச்
சரி செய்ய கடைகளில் கொடுத்திருந்தார்கள். அங்கிருந்துதான் அவர்களின் மானம் இணையதளத்தில் பறக்கவிடப்பட்டது.

இதுபோன்ற வில்லங்கச் சம்பவங்களின் பின்னணி என்ன? அண்ணாநகரில் செல்போன் கடை வைத்திருக்கும் மூர்த்தி விரிவாகச் சொல்கிறார்.

''செல்போன், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் நம்மில் பலருக்கு அதுகுறித்த முழுமையான தகவல்கள் தெரிவதில்லை. அதுவும் தங்கள் செல்போனில் எடுக்கப்பட்ட ரகசிய போட்டோக்கள், வீடியோக்கள் டெலிட் செய்யப்பட்டிருந்தாலும் மீண்டும் அதைப் பார்க்க முடியும் என்கிற விஷயமே புதுசாகத்தான் இருக்கும்.

அந்த விஷயம் தெரியாமல்தான் பலர் ஆர்வக் கோளாறில் தங்களின் படுக்கை அறைக் காட்சிகளை செல்போனிலும், டிஜிட்டல் கேமராவிலும் பதிவு செய்து ரசிக்கிறார்கள். பின்னர் டெலிட்டும் செய்துவிடுகிறார்கள். ஆனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் என்றாவது ஒருநாள் பழுதடையும். அப்போது அதை சரிபண்ண கடைகளில் கொடுக்க வேண்டி வரும். அங்குதான் பிரச்னை ஆரம்பிக்கிறது.

சர்வீஸ் செய்யும் கடைக்காரர்கள் சரிபண்ணி முடித்ததும், ஆர்வக் கோளாறில் ஒவ்வொரு போனிலும் என்னென்ன டெலிட் செய்யப்பட்டிருக்கிறது என்று தேடிப்பார்ப்பார்கள். இதற்காக அழிக்கப்பட்ட தகவல்களை திரும்பப் பெறும் வசதி கொண்ட பல 'ரெக்கவரி சாஃப்ட்வேர்கள் இருக்கின்றன. இதன் மூலம் திரும்பப் பெறப்படும் வீடியோ மற்றும் போட்டோக்களில் ஏதாவது ஆபாசப் படங்கள் இருந்தால் போதும், உடனே அதை இணையத்தில் விற்றுவிடுவார்கள். இந்த மாதிரியான 'ஹோம் மேட் செக்ஸ் வீடியோக்கள் எனப்படும் சம்பந்தப்பட்டவர்களே எடுக்கும் படங்களுக்கு வெளிநாட்டவர்களிடம் ஏக கிராக்கி என்பதால் இந்த அயோக்கியத்தனத்தை பல கடைக்காரர்கள் துணிந்து செய்கிறார்கள் என்கிறார்.

இதைத் தவிர்க்க என்ன செய்வது?

முக்கியமாக படுக்கை அறைக்கு செல்போனையோ, கேமராவையோ கொண்டு செல்லாதீர்கள். காதலனோ, கணவனோ, மாமனோ மச்சானோ.. படம் எடுக்க ஆண்கள் எவ்வளவு வற்புறுத்தினாலும் பெண்கள் சம்மதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

இது ஒருவகையான ஆபத்து என்றால், இன்னொரு ஆபத்தும் இதில் இருக்கிறது. அது இன்று உயிருக்குயிராய் காதலிக்கும் கணவன் மனைவியோ, காதலர்களோ நாளை சூழ்நிலை காரணமாக பிரிந்து வேறொருவரைத் திருமணம் செய்ய நேரிடலாம். ஆனால்... ஏமாற்றப்பட்டதாக நினைக்கும் ஆண்கள், பெண்களைப் பழிவாங்க முடிவு செய்து, முன்பு எடுத்த அந்தரங்கப் படங்களை இண்டர்நெட்டில் பரப்பி விடுகிறார்கள்.

அதேபோல் வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர்களுடன் 'வெப்கேமில் பேசும் பெண்களும், கணவர் ஆசைப்படுகிறார் என்பதற்காக கேமரா முன் தங்களின் அந்தரங்கத்தைக் காட்டாதீர்கள். கம்ப்யூட்டரில் அது பதிவு செய்யப்படலாம். அந்த கம்ப்யூட்டர்கள் ஒருநாள் பழுதடைந்து சரி செய்ய அனுப்பும் போது அங்கிருந்து அது இணையத்துக்கு பரவக்கூடும். ஜாக்கிரதை!

ஒரு ஆபாச தளத்தில் ஒரு பெண்ணின் விடியோ வெளியானால் போதும்... உலகம் முழுக்க அது பரவி விடும். அப்புறம் அந்தப் பெண்கள் வெளியே தலைகாட்ட முடியாது. அசிங்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு.

இப்போது செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் கேமராக்களின் வரவால் ஒவ்வொருவரும் கேமராமேனாகி விட்டார்கள். பொது இடங்களில் உங்களுக்குத் தெரியாமல் ரகசியமாக கேமராக்கள் படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன. கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவ்வளவு நுண்ணிய கேமராக்கள் வந்து விட்டன.
தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், துணிக்கடைகளின் ட்ரையல் ரூம்கள் போன்றவற்றைப் பயன்படுத்தும் முன் ஒருமுறை சுற்றி நோட்டமிடுங்கள்.
உஷாருப்பா.. உஷாரு..

இரத்த விருத்திக்கு பேரீச்சை

இயற்கையின் கொடையான பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.
இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இப்பழங்கள் அரபு நா...டுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.
பேரீச்சையின் பயன்கள், கண்பார்வை தெளிவடைய
வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
பெண்களுக்கு பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.
சளி இருமலுக்கு பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
நரம்பு தளர்ச்சி நீங்க

அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.
பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.
* எலும்புகளை பலப்படுத்தும்.
* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.
* முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.
* புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.
* பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது
See More

குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க நினைத்து இஸ்லாத்தை ஏற்ற டாக்டர்
குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க நினைத்து இஸ்லாத்தை ஏற்ற ( டாக்டர் ஜாரி மில்லர் )
-----------------------------------------------
கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்தவ பிரசார பீரங்கி டாக்டர் ஜாரி மில்லர். பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார். இவர் ஒருநாள் திருக்குர்ஆனை வாசிக்கநினைத்தார். அவரது எண்ணமெல்லாம் குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டும்; முஸ்லிம்களைக் கிறித்தவ மதத்திற்கு அழைக்க இத்தவறுகள் தனக்கு உதவும் என்பதுதான். பதினான்கு நூற்றாண்டுகளாக ஓதப்பட்டுவரும் ஒரு பழைய நூலில் என்ன இருந்துவிடப் போகிறது? பாலைவனம் பற்றியும் அது போன்ற செய்திகள் பற்றியுமே அது பேசும் என்பதே அந்தக் கணக்கரின் கணக்காக
இருந்தது

ஆனால், என்ன ஆச்சரியம்! உலகத்தில் வேறு எந்த நூலிலும் காணக்கிடைக்காத அற்புதத் தகவல்களை குர்ஆனில் கண்ட மில்லர், திகைப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார். நபி(ஸல்) அவர்களின்துணைவியார் கதீஜா (ரலி) அவர்களின் இறப்பு, அல்லது நபிகளாரின் புதல்வியர், புதல்வர்கள் ஆகியோர் மறைவு போன்ற சோகச் செய்திகள் குர்ஆனில் இருக்கக்கூடும் என எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றமே விடையானது.

நபியின் குடும்பத்தார் குறித்த தகவல்கள் இல்லாததுமட்டுமல்ல; குர்ஆனில் ஒரு முழு அத்தியாயமே அன்னை மர்யம் (அலை) அவர்களின் பெயரால் இடம்பெற்றிருந்தது மில்லரை திகைப்பில் ஆழ்த்தியது. அன்னை மர்யம் குறித்து கிறித்தவ நூல்களிலோ பைபிளிலோ கூறப்படாத அருமை பெருமைகள் இந்த அத்தியாயத்தில் சிறப்பாகக் கூறப்பட்டிருப்பதை மனிதர் கண்டார். ஆயிஷாவின் பெயரிலோ ஃபாத்திமாவின் பெயரிலோ ஓர் அத்தியாயம்கூட இடம்பெறாததையும் அவர் உணர்ந்தார்

நபி ஈசா (அலை) அவர்களைப் பற்றி குர்ஆனில் 25 இடங்களில் பெயரோடு குறிப்பிடப்பட்டிருந்த அதே வேளையில், நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயர் ஐந்தே ஐந்து இடங்களில் மட்டுமே கூறப்பட்டிருந்தது மில்லரின் வியப்பைக் கூட்டியது. குர்ஆனைச் சற்று ஆழமாகப் படிக்கத் தொடங்கினார். ஏதேனும் குறைகள் கிடைக்காமலா போய்விடும்! ஆனால், திருக்குர்ஆனில் ஒரு வசனம் அவரைத் தூக்கிவாரிப் போட்டது

இந்தக் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிட மிருந்து வந்திருப்பின், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் நிச்சயம் கண்டிருப்பார்கள் (4:82)

என அந்த வசனம் அறைகூவல் விடுக்கிறது. இத்திருவசனம் குறித்து ஜாரி மில்லர் கூறுகிறார்: இன்றைய அறிவியல் அடிப்படைகளில் ஒன்று என்னவெனில், சிந்தனைகளில் தவறு இருக்கும்; தவறு இல்லை என்பது நிரூபிக்கப்படும்வரை. குர்ஆனோ, தன்னில் தவறுகளைக் கண்டுபிடியுங்கள் என முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதோருக்கும் சவால் விடுக்கிறது. அவர்களால்தான் அது முடியவில்லை. உலகில் எந்தப் படைப்பாளனுக்கும், ஒரு புத்தகத்தை எழுதிவிட்டு, அதில் தவறுகளே இல்லை என்று அறைகூவல் விடுக்கும் துணிவு இருந்ததில்லை. குர்ஆனோ இதற்கு நேர்மாறாக, தன்னில் தவறுகளே கிடையாது; இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம் என்று சொல்வதுடன், காட்ட முடியாது என்று பறைசாற்றவும் செய்கிறது. டாக்டர் மில்லரை நீண்ட நேரம் சிந்திக்கவைத்த மற்றொரு வசனம்

இறைமறுப்பாளர்கள் சிந்திக்க வேண்டாமா? வானங்களும் பூமியும் ஒன்றாக இணைந்திருந்தன. நாம்தான் அவற்றை வெடித்துச் சிதறவைத்தோம். உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரால் உருவாக்கினோம். அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (21:30)

1973ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றுத் தந்த அறிவியல் ஆய்வே இந்தப் பொருள்தான். பெருவெடிப்பு’ (Big Bang) எனும் பிரபஞ்சக் கோட்பாடுதான் அது. மிகமிக அதிகமான வெப்ப நிலையும் அடர்வும் மிகுந்த ஒரு வெடிபொருள், பலகோடி ஆண்டுகளுக்குமுன் வெடித்துச் சிதறியதால் உண்டானதே இந்தப் பிரபஞ்சம்என்கிறது இக்கொள்கை

‘இணைந்திருத்தல்’ என்பதைக் குறிக்க ‘ரத்க்’ எனும் சொல் வசனத்தின் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. இது, ஒன்றோடொன்று நன்கு இணைந்த பொருளைக் குறிக்கும். ‘சிதறல்’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘அல்ஃபத்க்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. வெடித்துச் சிதறுவதை இது குறிக்கும். (ரத்க், ஃபத்க் – சுப்ஹானல்லாஹ்!)

நபி (ஸல்) அவர்களுக்கு இந்த குர்ஆனை ஷைத்தான்கள்தான் சொல்லிக்கொடுக்கின்றன என்று பலர் விமர்சித்தனர். டாக்டர் மில்லரும் கிட்டத்தட்ட இதை நம்பியிருந்தார்போலும். இவ்வாதத்தைத் திருக்குர்ஆன் தவிடுபொடியாக்குவதைக் கண்டு திகைத்துப்போனார் மில்லர்

“இதை ஷைத்தான்கள் இறக்கிவிடவில்லை. அது அவர்களுக்குத் தகுந்ததும் அல்ல;அதற்கு அவர்களால் இயலவும் செய்யாது.” (26:210,211)

என்று கூறும் குர்ஆன்,”(நபியே!) நீர் குர்ஆனை ஓதுவதானால், விரட்டப்பட்ட ஷைத்தானைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக!” (16:98) என்று கட்டளையிடுகின்றது. ஷைத்தானே ஒரு வேதத்தை அருளிவிட்டு, அதை ஓதுவதற்குமுன் என்னைவிட்டுப் பாதுகாப்புக் கோருவீராக என்று எப்படிச் சொல்வான்?

டாக்டர் ஜாரி மில்லரை யோசிக்கவைத்த நிகழ்வுகள் பல குர்ஆனில் இடம்பெறுகின்றன. அவற்றை அற்புதங்கள்’ என்கிறார் அற்புதக் கூட்டங்கள் பல நடத்திய அவர். அவற்றில் ஒன்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் அபூலஹப் தொடர்பான நிகழ்ச்சி. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு சொல்லையும் மறுப்பதே அபூலஹபின் வேலை. அபூலஹப் மரணிப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே, அவரைச் சபிக்கும் அத்தியாயம் ஒன்று (தப்பத் யதா அபீலஹப்) அருளப்பட்டிருந்தது. அபூலஹப் நரகம் செல்வான் என அந்த அத்தியாயம் வெளிப்படையாகவே கூறுகிறது.

அபூலஹப் நினைத்திருந்தால், குர்ஆனைப் பொய்யாக்க ஒரே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். அதுதான் கலிமா. கலிமாவைச் சொல்லி வெளிப்படையிலேனும் தன்னை அவன் முஸ்லிமாகக் காட்டிக்கொண்டு, அதன் மூலம் குர்ஆனின் கூற்றை -தான் நரகவாசி என்பதை- பொய்யாக்கியிருக்கலாம். ஆனால், அவன் அப்படிச் செய்யவில்லை

ஏனெனில், குர்ஆன் நாலும் அறிந்த நாயகனால் அருளப்பெற்றது

பழைய சாதத்துல உள்ள மருத்துவ குணங்கள் பற்றிய அறிய தகவல் !!!!

நோய் எதிர்ப்பு சக்...தி,உடல் சுறுசுறுப்பாக, பன்றிக் காய்ச்சல்,எந்தக் காய்ச்சலும் அணுகாது!, உடல் சூட்டைத் தணிப்பதோடு, குடல்புண், வயிற்று வலி குணப்பட, சிறு குடலுக்கு நன்மை, அலர்ஜி, அரிப்பு போன்றவை சரியாக, சட்டென்று இரத்த அழுத்தம் கட்டுக்குள் வர, உடல் எடையும் குறைய..
முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர்.

தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!

"காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்.

மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும். அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".

கொஞ்சம் சைனஸ் நோய் உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது ஏன் என்றால் பழைய சாதம் உடலுக்கு அதிகமான குளிர்ச்சி தரும் .

” கணினி ஆணா… பெண்ணா..?”


ஒரு மாணவன் ஒரு சந்தேகத்தை எழுப்பினான்..
” கணினி ஆணா… பெண்ணா..?”

மாணவிகள் சொன்ன ...காரணங்கள்
1) அதுக்கு எதையும் சுலபமா புரிய வைக்க முடியாது..
2) உருவாக்கினவனைத் தவிர வேறே யாருக்கும் அதோட நடைமுறையை புரிஞ்சிக்க முடியாது..
3) நாம ஏதாவது தப்பு பண்ணா மனசுலேயே வச்சிருந்து நேரம் பார்த்து மானத்தை வாங்கும்..
4) எந்த நேரத்துல புகையும்… எந்த நேரத்துல மயங்கும்னு சொல்லவே முடியாது..
5) நம்ம கிட்ட இருக்கறதைவிட அடுத்தவங்க வச்சிருக்கறது நல்லா வேலை செய்யறது மாதிரி தோணும்…!
அதனால் கணினி ஆண் தான் என்றார்கள்
-------------------------------------------------------------------------------

மாணவர்களோ கணிணி பெண்பால்தான்னு சாதிச்சாங்க.. அதுக்கு ஆதாரமா அவங்க சொன்னது இதோ…

1) எப்பவுமே அடுத்த கணிணியோட ஒத்துப் போகவே போகாது..
2) எட்ட இருந்து பார்க்க கவர்ச்சிகரமா இருக்கும்.. ஆனா கிட்ட போனாதான் அதோட வண்டவாளம் தெரியும்..
3) நிறைய ஸ்டோர் பண்ணி வச்சிருக்கும்.. ஆனா எப்படி பயன்படுத்தணும்ன்னு அதுக்கு தெரியாது..
4) பிரச்சினையை குறைக்கறத்துக்காக கண்டுபிடிக்கப்பட்டவை.. ஆனா பெரும்பாலான சமயங்களில் அதுகளேதான் பிரச்சினையே..
5) அதை சொந்தமாக்கிக்கிட்ட பிறகுதான் நமக்கு புரியும்.. அடடா இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா இதைவிட அருமையான மாடல் கிடைச்சிருக்குமேன்னு…!

கௌரவம் பாராத மாமனிதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்
நாயகம் (ஸல்) அவர்களின் உருவ அமைப்பும், குணாதிசயங்களும்


நபித்துவ முத்திரை

ஸாயிப் இப்னு யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது : எனது சிறிய தாயார் என்னை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரியின் மகன் நோய் வாய்ப்பட்டுள்ளான் என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் எனது தலையை தடவி எனது அபிவிருத்திக்காகப் பிராத்தித்தார்கள். (பின்னர்) உளுச் செய்தார்கள். அவர்கள் மீதம் வைத்திருத்த தண்ணீரிலிருந்து நான் குடித்தேன். நபி (ஸல்) அவர்களுடைய முதுகிற்கு பின்னால் எழுந்து நின்றேன். அப்போது அவர்களுடைய இரு புஜங்களுக்கிடையில் நபித்துவத்தின் முத்திரையை நான் பார்த்தேன். அது ஒரு கௌதாரியின் முட்டையைப் போன்று இருந்தது. (நூல் - ஸூனன் திர்மிதி, புகாரி)

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்களின் தலைமுடி இருகாதுகளின் பாதி வரை (தொங்கிக் கொண்டு) இருக்கும். (நூல் - முஸ்லீம், அபூதாவுத், நஸயீ)


தலைவாருதல்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் வகிடு எடுக்காமல் தலைவாரி வந்தார்கள். அப்போது இணைவைப்பாளர்கள் வகிடு எடுத்து தலைவாரி வந்தார்கள். வேதம் கொடுக்கப்பட்டவர்கள் வகிடு எடுக்காமல் தலைவாரி வந்தார்கள். வேதம் கொடுக்கப்பட்டவர்கள் விசயமாக எந்தக் கட்டளையும் வராhததால் அவர்களுக்கு ஒத்து நடக்க நபி (ஸல்) அவர்கள் விரும்பினார்கள். பின்னர் வகிடு எடுத்துத் தலைவாரினார்கள். (நூல் - புகாரி, அபூதாவுத்)

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் அதிகம் எண்ணெய் தேய்ப்பவர்களாகவும் தாடிக்குச் சீப்பிடுபவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் தலையில் அதிகமாக ஒரு துணி இருந்து கொண்டே இருக்கும். (தலையில் அதிகம் எண்ணெய் இருந்ததால்) அத்துணி நனைந்ததைப் போல் இருக்கும்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் தலையிலும், தாடியிலும் பதிநான்கு நரைமுடிக்கு அதிகமாக நான் எண்ணவில்லை.

அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்களுக்கு சுமார் 20 நரைமுடிகளே இருந்தன. (நூல் - இப்னுமாஜா)

ஸிமாக் இப்னு ஹர்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்களின் தலையில் நரைமுடிகள் இருந்தனவா? என்று ஜாபிர் இப்னு ஸமுரா ( ரலி) இடம் வினவினேன். அதற்கவர் நபி (ஸல்) அவர்கள் வகிடு எடுக்கும் பகுதியில் சில முடிகளைத் தவிர வேறு எங்கும் நரைமுடிகள் இருக்கவில்லை. எண்ணெய்த் தேய்த்து இருந்தால் (அதுகூட) அவற்றை (நரையை) மறைத்துவிடும் என்று பதிலளித்தார்கள்.


சாயம் ஏற்றல்

பஷிர் இப்னு காஸாஸியாவின் மனைவி ஜஹ்தா (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் குளித்துவிட்டு தலை(முடி) யை உதறியவர்களாக தன் வீட்டிலிருந்து வெளியேறினார்கள். அப்போது அவர்கள் தலையில் மருதாணி சாயமிருந்ததை நான் கண்டேன்.


ஆடை

பரா இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது : இரண்டு தோள் புஜங்களுக்கு நெருக்கமாக தலைமுடி தொங்கிக் கொண்டு, சிவப்பு நிற ஆடை அணிந்த நபி (ஸல்) அவர்களை விட அழகானவராக மனிதர்களில் எவரையும் நான் கண்டதில்லை. (நூல் - புகாரி, நஸயீ)


காலணி

கதாதா (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் காலணி எப்படியிருந்தது என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் கேட்டபோது, அவற்றில் இரண்டு வார்ப்பட்டைகள் இருந்தன என்று பதிலளித்தார்கள். (நூல் - ஸூனன் திர்மிதி, புகாரி)


மோதிரம்

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்களின் மோதிரம் வெள்ளியால் செய்யப்பட்டிருந்தது. அதன் மேல்பகுதியில் அபீஸினியா நாட்டின் வேலைப்பாடு இருந்தது. (நூல் - ஸூனன் திர்மிதி, முஸ்லீம், அபுதாவுத், நஸயீ, இப்னுமாஜா)


வலது கரத்தில் மோதிரம் அணிதல்

அலீ இப்னு அபுதாலிப்; (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் வலது கரத்தில் மோதிரம் அணிபவர்களாக இருந்தனர். (நூல் - அபுதாவுத், நஸயீ)


வாள்

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் வாளின் கைப்பிடி வெள்ளியாலாகியிருந்தது. (நூல் - ஸூனன் திர்மிதி, முஸ்லீம், அபுதாவுத், நஸயீ, தாரமீ)


உருக்குச் சட்டை

ஸூபைர் இப்னு அவ்வாம் (ரலி) அவர்கள் கூறியதாவது : உஹதுப் போர் அன்று நபி (ஸல்) அவர்கள் இரண்டு உருக்குச் சட்டை அணிந்திருந்தனர். (அதை அணிந்த வண்ணம்) ஒரு கற்பாறையில் ஏறமுயன்றனர். ஆனால் முடியவில்லை. அபுதல்ஹா (ரலி) அவர்களை கீழே அமரச் செய்து (அவர்கள் மேலேறி) அதில் ஏறி அமர்ந்துக் கொண்டார்கள். (அப்போது) நபி (ஸல்) அவர்கள் தல்ஹா (எனது பரிந்துரையை) கடமையாக்கிக் கொண்டார் என்று கூறியதை நான் செவியுற்றேன். (நூல் - ஸூனன் திர்மிதி, அஹமத்)


தலைப்பாகை

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது மக்காவில் நுழைந்தார்கள். அப்போது அவர்கள் தலையில் கருப்புத் தலைப்பாகை இருந்தது. (நூல் - ஸூனன் திர்மிதி, முஸ்லீம், அபுதாவுத், நஸயீ, இப்னுமாஜா)


கீழாடை

அபூதர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது : ஆயிஷா (ரலி) அவர்கள் ஒட்டுப்போட்ட ஒரு போர்வையையும், கடினமான ஒரு வேட்டியையும் எங்களிடம் காட்டி இந்த இரண்டையும் அணிந்த நிலையில் தான் நபி (ஸல்) அவர்களுடைய உயிர் கைப்பற்றப்பட்டது என்று கூறினார்கள். (நூல் - ஸூனன் திர்மிதி, புகாரி, முஸ்லீம்)


நடை

அபூஹூரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்களை விட அழகான எவரையும் நான் கண்டதில்லை. அவர்கள் முகத்தில் சூரியன் இலங்கிக் கொண்டிருப்பது போலிருக்கும். நபி (ஸல்) அவர்களைப் போன்று விரைவாக நடப்பவர்களை நான் கண்டதில்லை. பூமி அவர்களுக்கு சுருட்டப்பட்டது போல் இருக்கும். நாங்கள் (அவர்களோடு) செல்ல பெரும் சிரமத்தை எடுத்துக் கொள்வோம். ஆனால் அவர்களுக்கு எச்சிரமமும் இருக்காது. (நூல் - ஸூனன் திர்மிதி, அஹமத், இப்னுஹிப்பான்)


உணவருந்துதல்

கஆப் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் மூன்று விரல்களால் சாப்பிடுவார்கள். அந்த மூன்று விரல்களைச் சூப்பவும் செய்வார்கள். (நூல் - முஸ்லீம்)


பேச்சு

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் உங்களைப் போன்று விரைவாகப் பேசக்கூடியவர்களாக இருந்ததில்லை. அவரிடம் அமர்ந்திருப்பவர் மனனம் செய்யும் வண்ணம் இடைவெளிவிட்டு தெளிவாக அவர்களின் பேச்சு இருக்கும். (நூல் - ஸூனன் திர்மிதி, அபுதாவுத், நஸயீ)

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் (சில வேளைகளில்) விளங்கிக் கொள்வதற்காக ஒரு வார்த்தையை மூன்று முறை கூறுவார்கள். (நூல் - ஸூனன் திர்மிதி, புகாரி)


சிரிப்பு

அப்துல்லா இப்னு ஹாரிஸ் இப்னு ஜஸ்வு (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்களை விட அதிகம் புன்னகை புரியக் கூடிய எவரையும் நான் பார்த்தில்லை. (நூல் - ஸூனன் திர்மிதி)

ஆமிர் இப்னு ஸஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது : கன்தக் போர் (அகழ் போர்) அன்று நபி (ஸல்) அவர்கள் கடவாய் பற்கள் தெரியுமளவுக்குச் சிரித்தார்கள். எதற்காகச் சிரித்தார்கள் என்று ஸஅத்(ரலி) யிடம் கேட்டேன். அதற்கவர்கள் (அகழ் போர் அன்று எதிரி) ஒருவன் கேடயத்தை வைத்துக் கொண்டு நான் விடும் அம்புகளை எல்லாம் தனது நெற்றியைத் தாக்குவதை விட்டும் தடுத்துக் கொண்டிருந்தான். நான் அம்பை எடுத்து (சமயம் பார்த்துக் கொண்டிருந்தேன்) அவன் தலையை உயர்த்திய போது அம்பை எறிந்தேன். அது குறிதவறாமல் அவன் நெற்றியை பதம் பார்த்தது. அவன் கீழே விழுந்து காலை உயரத் தூக்கிக் கொண்டான். அப்போது நபி (ஸல்) அவர்கள் கடவாய்ப் பற்கள் தெரியுமளவு சிரித்தார்கள். நீங்கள் எதற்க்காகச் சிரித்தீர்கள்? என்று கேட்டேன். அந்த மனிதரிடம் நீர் நடந்து கொண்ட முறையைப் பார்த்துத் தான் என்று கூறினார்கள்.


நகைச்சுவை

அபூஹூரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது : அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்களிடம் நகைச்சுவையாகப் பேசுகிறீர்களே என்று கேட்டபோது, ஆம்! எனினும் நான் உண்மையைத் தவிர வேறு எதையும் கூறமாட்டேன் என்று கூறினார்கள். (நூல் - ஸூனன் திர்மிதி)

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது : ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் ஏறிச்செல்ல ஒரு வாகனம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உம்மை ஒரு ஒட்டக குட்டியின் மீது ஏற்றி விடுகிறேன் என்றார்கள். அதற்கு அம்மனிதர் ஒட்டகக் குட்டியை நான் என்ன செய்வேன் அல்லாஹ்வின் தூதரே! என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் எந்த ஒட்டகமும் (தாய்) ஒட்டகத்தின் குட்டி தானே! என்றார்கள். (நூல் - ஸூனன் திர்மிதி, அபூதாவுத்)

ஹஸன் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கிழவி வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் சுவர்க்கம் செல்ல துஆச் செய்யுங்கள்! என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நிச்சயமாக கிழவி சுவர்க்கத்தில் நுழைய முடியாது என்றார்கள். அப்பெண்மணி அழுதவர்களாக திரும்பிச் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்பெண்மணியிடம் கூறுங்கள். அப்பெண்மணி கிழவியாக இருக்கும் நிலையில் சுவர்க்கம் செல்லமாட்டார்கள். ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக நாம் அப்பெண்களை புதிய படைப்பாக உண்டாக்கி அவர்களைக் கன்னிகளாகவும், பாசமுடைய சமவயதினராகவும் ஆக்குவோம். (அல்குர்ஆன் : 56 : 35 - 37)


தூக்கம்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் உறங்கினால் குறட்டைவிடுவார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை குறட்டைவிடுமளவுக்கு உறங்கினார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்கள் தொழுகைக்கு அறிவிப்புச் செய்தார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுந்து தொழுதார்கள். ஆனால் உளுச் செய்யவில்லை. (நூல் - புகாரி, முஸ்லீம், அபூதாவுத், நஸயீ, இப்னுமாஜா)

அபுகதாதா (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் பயணிக்கும்போது இரவில் ஒய்வெடுக்க எண்ணினால் வலதுபுறமாகப் படுத்துக் கொள்வார்கள். ஸூப்ஹ் நேரத்தின் நெருக்கத்தில் ஒய்வெடுக்க விரும்பினால் கையை நட்ட வைத்து தலையை (வலது) கையின் உள்ளங்கையில் வைத்துக் கொள்வார்கள். (நூல் - முஸ்லீம், இப்னுகுஸைமா, இப்னுஹிப்பான்)


படுக்கை

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் உறங்கும் படுக்கை தோலாலானது. அதன் உள்ளே பேரீத்தநார்கள் நிரப்பப்பட்டிருக்கும். (நூல் - ஸூனன் திர்மிதி, புகாரி, முஸ்லீம்)


Reference By:

அன்புடன் ,
முஹம்மத் இக்பால்,
நிர்வாகி,
இஸ்லாமிக் தாவா குழுமம்.(www.facebook.com/groups/islamicdawah1)

இஸ்லாத்தின் பார்வையில் அரவாணிகள்......................!!

அரவாணிகள் ஆண்களே.... ...அவர்கள் பெண்களல்ல......................!!

ஆண்கள் எப்படி பெண்களின் சபைக்கு செல்லக்கூடாதோ அதே போல் அரவாணிகளும் பெண்களின் சபைக்கு செல்ல கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள் எனவே அரவாணிகளாக இருப்பவர்கள் ஆண்களுக்குரிய சட்டத்தின் அடிப்படையில் வாழ வேண்டும் இஸ்லாம் வலியுறுத்துகிறது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களை போன்று ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களையும், ஆண்களை போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்துள்ளார்கள் மேலும் அவர்களை உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள் என்று சொன்னார்கள் அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருவரை வெளியேற்றினார்கள், உமர் (ரலி) அவர்களும் ஒருவரை வெளியேற்றினார்கள்

அறிவிப்பவர்: அப்பாஸ் (ரலி)

புஹாரி: 5886

அரவாணிகள் ஆண்களே..... அவர்கள் பெண்களல்ல...............!!

கேரட் பற்றிய தகவல் !!!!கேரட்டில் உள்ள ‘ஏ’ வைட்டமின் கண்பார்வைக்கு நல்லது என்று தெரியும். இன்னொரு அதிசயமும் இருக்கிறது. கேரட்டை இரண்டு துண்டாக வெட்டி அதன் உள்பகுதியை உற்று நோக்குங்கள். கிட்டத்தட்ட அது நம் கண்ணின் அமைப்பு போலவே இருக்கும். கேரட்டுக்கு மஞ்சள் நிறத்தை அதிலுள்ள பீட்டாகேரட்டின் என்ற அமிலம் தான் தருகிறது. அந்த பீட்டாகேரட்டின்தான் மனிதக் கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது. வயோதிகம் காரணம...ாக ஏற்படும் பார்வை குறைபாட்டைக்கூட பீட்டாகேரட்டின் தடுத்து நிறுத்துகிறது. பீட்டாகேரட்டின் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் கூட அது கேரட்டைப் போல பலன் தருவதில்லை என்பதும் உண்மை.

கேரட் ஆப்கானிஸ்தானை பிறப்பிடமாகக் கொண்டது. பல நூற்றாண்டுகளில் பலவித மாறுதல்களுக்குள்ளான காரட் துவர்ப்பு நீக்கப்பட்டு, இனிப்புடன் கிடைக்கக்கூடிய காய் வகைகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

கேரட் செடியின் வேர்ப் பகுதியில் வளரக்கூடியது. ஆரஞ்சு, சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் கேரட் கிடைக்கின்றது. கேரட் பச்சையாகக் கூட சாப்பிடக்கூடியது.

பொதுவாக அனைத்து வீடுகளில் சமைக்கக் கூடிய கேரட்டில் அடங்கியுள்ள சத்துக்கள் பற்றி விவரங்களை இப்போது பார்ப்போம்.

100 கிராம் கேரட்டில் உள்ள சத்துக்கள்:

சக்தி 41 கலோரிகள்

கார்போ ஹைட்ரேட்ஸ் 9 கிராம்
சர்க்கரை 5 கிராம்
நார்சத்து 3 கிராம்
கொழுப்புச் சத்து 0.2 கிராம்
புரோட்டின் 1 கிராம்

வைட்டமின் A - 93% (835 மைக்ரோ கிராம்)
பீட்டா கரோட்டின் - 77% (8285 மைக்ரோ கிராம்)
வைட்டமின் B1 - 3% (0.04 மில்லி கிராம்)
வைட்டமின் B2 - 3% (0.05 மில்லி கிராம்)
வைட்டமின் B3 - 8% (1.2 மில்லி கிராம்)
வைட்டமின் B6 - 8% (0.1 மில்லி கிராம்)
வைட்டமின் B9 - 5% (9 மைக்ரோ கிராம்)
வைட்டமின் C - 12% (7 மில்லி கிராம்)

கால்சியம் - 3% (33 மில்லி கிராம்)
இரும்புச் சத்து - 5% (0.66 மில்லி கிராம்)
மங்கனீஷ் - 5% (18 மில்லி கிராம்)
பாஸ்பரஸ் - 5% (35 மில்லி கிராம்)
பொட்டாசியம் - 5% (240 மில்லி கிராம்)
சோடியம் 2.4 மில்லி கிராம்

இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை எனலாம். இந்த கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்பது முழுக்க முழுக்க உண்மை.கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும்.
வைட்டமின் "ஏ" சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது.
இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.
இவை இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்கின்றது. மேலும், குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.
கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.
பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

கேரட் சாப்பிட்டால் பெண்களின் மார்பக புற்று நோய் முற்றாமல் காத்துக் கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவின் புளோரிடாவில் புற்று நோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது.
கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப் புற்று நோயிலிருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தக் காய்களில் உள்ள வைட்டமின் "ஏ" விலிருந்து பெறப்படும் ரெட்டினாயிக் அமிலம், புற்று நோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து விடும். கேரட் சருமத்திற்கு பொலிவைத் தந்து சுருக்கத்தை நீக்குகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இது பற்றி பிலடெல்பியாவிலுள்ள பாக்ஸ் சேஸ் புற்று நோய் மையத்தின் ஆராய்ச்சியாளர் சாண்ட்ரா பெர்ணாண்டஸ் கூறியதாவது: இந்தக் காய்களிலுள்ள சத்துக்கள் புற்று நோயை ஆரம்ப நிலையில் மட்டுமே அழிக்குமென்றும், நோய் முற்றிய புற்றுச் செல்களை அழிக்காது என்றும் தெரிவித்தார்.
See More

எதனால் மாரடைப்பு வருது?உலகிலேயே அதிகமாக மனிதர்கள் இறப்பதற்கு முதல் காரணம் மாரட...ைப்பு, ஏழை, பணக்காரன், ஆண், பெண் என்ற வித்தியாசம் ஏதுமின்றி எல்லோரையும் தாக்குகிறது இந்த “ஆட்கொல்லி” இருதய நோய். மாரடைப்பு வருவதற்கு காரணங்கள்.

* அதிக ‘கொலஸ்ட்ரால்’ ரத்த தமனிகளில் கொழுப்புகள், ட்ரைகிளிசரைடுகள் அதிகமாக இருப்பது பரம்பரை, புகைபிடித்தல், அதிக இரத்த அழுத்தம் இன்றைய அவசர வாழ்க்கையில் ஏற்படும் மன இறுக்கம், நீரிழிவு நோய் போன்றவை.

* இருதய நோய்களை வருமுன் காப்பது நல்லது. இதில் முக்கிய பங்கு வகிப்பது உணவு. இருதய நோயை சமாளிக்க பல வழிகளில் முனைய வேண்டும்.

* சரியான உணவு, உடற்பயிற்சி, நோய் வந்தால் சரியான சிகிச்சை, வாழ்வுமுறைகளில் மாற்றம், மன நிலையில் அமைதி என்ற பல வழிகளில் இந்த நோயை சமாளிக்க வேண்டும்.

* ஆயுர்வேதத்தில் இருதய நோய்களுக்கு உன்னதமான மருந்துகள் உள்ளன. இம் மருந்துகளுடன், உணவுக்கட்டுப்பாடும் சேர்ந்தால் சிகிச்சை பலனளிக்கும். முதலில் உணவுமுறைகளைப் பார்ப்போம்.

* சாப்பிடும் உணவு எவ்வளவு கலோரிகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வயதாக வயதாக, ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு, 1500 கலோரிகள் போதுமானது. எல்லோரும் அறிந்தது உணவில் கொழுப்பை குறைப்பது நல்லது.

* வனஸ்பதி, வெண்ணெய் இவற்றை அறவே தவிர்க்கவும். சிறிதளவு உருக்கிய நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

* நார்ச்சத்தும், மாவுச்சத்தும் மிகுந்த கோதுமை, அரிசி, பீன்ஸ், ஒட்ஸ் மாவு, காய்கறி, பழங்கள் போன்ற உணவுகள் நல்லவை. சமையலில் ஆலிவ் எண்ணெய், தானிய எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் இவற்றை மாற்றி மாற்றி உபயோகிக்கவும்.

* 4 பேர் உள்ள குடும்பத்திற்கு மாதம் 2 கிலோ எண்ணெய்க்கு மேல் உபயோகிக்க கூடாது. இல்லை, ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் போதுமானது.

* உணவில் கண்டிப்பாக உப்பைக் குறைக்கவும். 2400 மி.கி. உப்பு (சோடியம்) ஒரு நாளுக்கு போதுமானது. முடிந்தால் இந்த அளவையும் குறைக்கவும்.

உடல் எடையை அதிகரிக்க விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஓர் ‘வளையம்’ போல் வயிற்றை சுற்றி கொழுப்பு இருப்பவர்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்புகள் அதிகம். சுறுசுறுப்பாக இருங்கள்.

கிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்!நீங்கள் கிரெடிட் கார்டு வைத்திருப்ப...வரா..? கார்டை தேய்ப்பதற்கு முன் முதலில் இதைப் படியுங்கள்…

1. உங்களிடம் கிரெடிட் கார்டு இருப்பதை ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாக நினைக்காதீர்கள்.

2. ஒரே ஒரு கிரெடிட் கார்டு போதுமானது.

3. கிரெடிட் கார்டில் பணம் எடுக்காதீர்கள். அப்படி எடுத்தால் எடுத்த நாள் முதலே வட்டி கட்ட வேண்டியிருக்கும்.

4. முடிந்தவரை கையிலிருக்கும் பணத்தைக் கொடுத்து செலவு செய்யுங்கள். அப்போதுதான் பொருளின் மதிப்பு தெரியும்.

5. ஒரு கார்டில் இருக்கும் கடனை அடைக்க இன்னொரு கார்டைப் பயன்படுத்தாதீர்கள்.

6. கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் போது சேவைக் கட்டணம் உண்டா என்று தெரிந்து கொண்டு பயன்படுத்துங்கள்.

7. பில்லிங் தேதி மற்றும் பணம் கட்ட வேண்டிய கடைசி தேதியை மறக்கவே மறக்காதீர்கள்.

8. இணையம் மூலம் உங்களது கிரெடிட் கார்டு வரவு செலவுகளை அடிக்கடி சரிபாருங்கள்.

9. ஓட்டல், பெட்ரோல் பங்கில் கார்டைப் பயன்படுத்தும் போது கவனம் தேவை. உங்கள் கார்டை டூப்ளிகேட் செய்ய வாய்ப்புண்டு.10. ஸ்டேட்மென்ட் வந்தவுடன் முழுமையாகப் படியுங்கள். அதில் உள்ளது நாம் செய்த செலவுதானா என்று பாருங்கள். 11. உங்கள் கிரெடிட் கார்டு நிறுவனத்தின் தொலைபேசி எண் அல்லது கஸ்டமர்கேர் எண்ணை தனியாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள். கார்டு தொலைந்தால் புகார் செய்யப் பயன்படும்.

12. உங்களது கிரெடிட் கார்டு பாஸ்வேர்டை யாருக்கும் தெரியப்படுத்தாதீர்கள்.

13. கார்டு வாங்கியவுடன் அதன் பின்பகுதியில் உங்கள் கையெழுத்தை மறக்காமல் போட்டு வையுங்கள்.

14. ஆன்லைனில் வர்த்தகம் செய்யும்போது நம்பத் தகுந்த, பிரபலமான இணையதளங்களையே பயன்படுத்துங்கள்.

15. ‘உங்களுக்கு புதிய ஆஃபர் தருகிறோம். பாஸ்வேர்டு மற்றும் இதர விவரங்களை கொடுங்கள்’ என்றால் உஷாராகுங்கள்.

16. பின்நம்பரை அடிக்கடி மாற்றுங்கள். அதை மற்றவர்களுக்கு தெரியும்படி எழுதி வைக்காதீர்கள்.

17. கிரெடிட் கார்டில் அதிக லிமிட் வைத்துக் கொள்ளாதீர்கள். இது உங்களை அதிக செலவு செய்யத் தூண்டும்.

18. உங்கள் வருமானத்தில் கிரெடிட் கார்டுக்கென குறிப்பிட்ட சதவிகிதத் தொகையை ஒதுக்கி அதற்கேற்ப செலவழியுங்கள்.

19. முக்கியமான சமயங்களில் மட்டும் கிரெடிட் கார்டை வெளியே எடுத்துச் செல்லுங்கள். முடிந்தவரை டெபிட் கார்டு மூலமே செலவு செய்யுங்கள்.

20. எல்லாவற்றுக்கும் மேலாக, கிரெடிட் கார்டில் ஒரு மாதம் பணம் கட்டத் தவறினால், இது நமக்கு சரிப்பட்டு வராது என்று யோசிக்காமல் கார்டை தலையைச் சுற்றி தூர எறிந்துவிடுங்கள்.

Wednesday, April 25, 2012

கண்ணியமிக்க "காயிதே மில்லத்".."கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்" என்று போற்றப்படும் ஜனாப் காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் சாகிப், இந்தியாவின் பெரும் முஸ்லிம் தலைவர்களுள் ஒருவர். திருநெல்வேலியைச் சார்ந்த ஊராகிய பேட்டையில் 5.6.1896-ல் பிறந்தவர். காயிதேமில்லத் என்ற அரபி சொல்லுக்கு "மக்களின் வழிகாட்டி" என்று பொருள்.

...
தனது பி. ஏ. பொதுத்தேர்வை எழுதாமல் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமைப் போராட்டத்தில் பங்கு கொண்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட துவங்கினார்.


1936_ம் ஆண்டு இஸ்மாயில் சாகிபு, முஸ்லிம் லீக் கட்சியில் சேர்ந்தார். 1945_ம் ஆண்டில், தமிழ்நாட்டில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஆனார். 1948_ம் ஆண்டு அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

"இந்தியா தான் எங்கள் தாய் நாடு. இங்கிருந்து நாங்கள் போகமாட்டோம்' என்று அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் இங்கே தங்கிவிட்டதால், அவர்களுக்காக கட்சி பெயரில் இருந்த "அகில' என்பதை நீக்கி விட்டு.. 1949-ல் 'இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்று மாற்றினார் காயிதேமில்லத். இதன் முதல் மாநாடே சென்னையில் உள்ள ராஜாஜி ஹாலில் தான் நடந்தது.


1971 ல் பாகிஸ்தான் இந்தியாவோடு போர் தொடுத்தபோது, "தனது ஒரே மகனை போர்க்களத்திற்கு அனுப்ப தயார்" எனக்கூறி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார். நெய்வேலியில் எடுக்கப்படும் நிலக்கரியில் மாநில அரசுக்கு உரிய பங்கு கோரி பெற்றுத் தந்தவர். இந்திய நாட்டு அரசின் தேசிய மொழியாகும் தகுதி தமிழுக்கு மட்டுமே உண்டு என ஓங்கி முழங்கியவர்.


அனைத்து கட்சியினரும் மதிக்க தக்க தலைவராக விளங்கினார். இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, ஜாகீர் உசேன், ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் கட்சி பாகுபாடின்றி நட்புறவு கொண்டிருந்தார்.


கேரளா "மஞ்சேரி" மக்களவை தொகுதியிலிருந்து மூன்று முறை (1962, 1967, 1971) தொகுதிக்கு சென்று வாக்கு சேகரிக்காமலே வெற்றி பெற்ற மகத்தான தலைவர். அவ்வளவு தூரம் தொகுதி மக்களின் செல்வாக்கை பெற்றவர்.


அன்றைய சென்னை மாநிலத்தின் சட்டமன்ற பிரதான எதிர்கட்சி தலைவராகவும் சிறப்பாக பணியாற்றினார். 1967ல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை கைப்பற்ற முக்கிய பங்காற்றினார்.


அரசியலில் கவனம் செலுத்தியதோடு, தொழிற்துறையிலும் காயிதே மில்லத் புகழ் பெற்று விளங்கினார். தோல் பொருட்கள் மற்றும் இறைச்சி ஏற்றுமதி மற்றும் விற்பனையில் கொடிகட்டி பறந்தார். தொழிற்துறையில் புகழ் பெற்றதால் சென்னை துறைமுக பொறுப்புக் கழகம், சென்னை வர்த்தகத் துறை, தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு, இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில், தொழில் திட்டக்குழு, சுங்கவரி கழகம், தென்னிந்திய தொழில் வர்த்தக சபை உட்பட ஏராளமான அமைப்புகளில் உறுப்பினராக விளங்கினார்.


சிறுபான்மையினரின் நலனில் அக்கறை கொண்டவர். தமிழகத்தில் 14 இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களை அமைத்தவர். அடக்கமும் ஒழுக்கமும் நிறைந்த நன்னடத்தையால் அனைத்து தரப்பினராலும் "கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்" என அன்புடன் அழைக்கப்பட்டார். இவர் 5-4-1972ல் மரணித்தார். மரணம் அடைந்தபோது காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிபுக்கு வயது 76.


அன்னாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை மட்டும் லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.

நன்றி: விக்கி பீடியா, மாலை மலர்.
See More

சூரிய ஒளி தகடுகள் மூலம் இயக்கப்படும் பேருந்து


சீனாவை சேர்ந்த யூசா சாங் என்பவர...் ஒரு புதிய நவீன வடிவமைப்பை கண்டுபிடித்துள்ளார். இந்த நவீன தொழில் நுட்பம் செயல்பட ஆரம்பித்துவிட்டால் சீனாவின் போக்குவரத்து நெரிசலும் சுற்றுப்புற சீர்கேட்டை கொண்டுவரும் புகையும் ( வாகனங்களால் வெளியிடபடுபவை ) கணிசமாக குறைந்துவிட வாய்ப்புகள் உள்ளது.

இதுதான் அந்த நவீன தொழில் நுட்பம் . Straddling Bus என்று அழைக்கபடுகிறது. 18 அடி உயரமும் 25 அடி அகலமுமான ஒரு பேருந்து. பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஓடுபாதை பயன்படுத்தப்பட போகிறது. இந்த பேருந்தின் மேல்தட்டில் மாத்திரம் பயணிகள் இருப்பார்கள். மேல்தட்டிற்கு கீழ் இருக்கும் சாலையில் மற்ற சிறு வாகனங்கள் சென்று வரும். படத்தை கூர்ந்து பாருங்கள். பேருந்தின் சக்கரங்கள் எப்படிவடிவமைக்கப்பட்டிருக்கிறது என்றும் எப்படி அதன் கீழ் வாகனங்கள் சென்று வருகிறது என்பதையும். இதனால் இந்த பேருந்தின் நிமித்தம் எந்த போக்குவரத்து இடைஞ்சலும் இருக்காது. சுமார் 1200 பேர் இதில் பயணிக்கும் சக்தி இருப்பதால் மற்ற பேருந்துகளின் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. சுமார் 40 கிமீ வேகத்தில் செல்லும் இந்த பேருந்து 25 முதல் 30 சதவீத நெரிசலை குறைக்கும் என எதிர்பார்க்க படுகிறது.

இந்த பேருந்தை இயக்குவதற்க்கான சக்தி முழுவதும் பேருந்தின் மேல்பொருத்தப்பட்டிருக்கும் சூரிய ஒளி தகடுகள் மூலம் பெறப்படும். பேருந்து நிறுத்தத்தின் கூரையிலும் சூரிய ஒளி தகடுகள் பொருத்தப்பட்டு அந்த சக்தியும் பேருந்துக்கு மாற்றப்படும். இந்த பேருந்தின் மூலம் சுமார் 40 சாதாரண பேருந்துகளை ஈடுகட்ட முடியும். எனவே வருடத்திற்கு சுமார் 860000 கிலோ எரிபொருள் சேமிக்கப்படும் என்றும் சுமார் 2640000 கிலோ கார்பன் நச்சு பொருட்களை கட்டுப்படுத்த முடியும் என்று எதிர்பர்க்கப்படுகிறது.

இஸ்லாத்தை தழுவிய அமெரிக்காவின் காவல் துறையை சேர்ந்த டெர்ரி ப்ரூக்!!!!!!!!

அமெரிக்காவின் காவல் துறையை சேர்ந்த டெர்ரி ப்ரூக் என்பவர் இஸ்லாத்தை தழுவிய பின் முதல் முறையாக உம்ரா கடமையை நிறைவேற்றியுள்ளார். இதன்போது சவூதியின் தினசரிப்பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த டெர்ரி ப்ரூக் (முஸ்தபா அப்துல்லா) தான் இஸ்லாத்தை தழுவிய அற்புதத்தை பகிர்ந்து கொண்டார்.


2003ஆம் ஆண்டு அமெரிக்க படை வீரரான டெர்ரி ப்ரூக் இராணுவ மெய்க்காப்பாளராக பதவிப் பிரமாணம் புரிந்து அதிகம் சிறப்பு பெயர் பெற்றிராத குவாண்டனமோ சிறைக்கு காவலராக மாற்றப்பட்டார். அங்கு வேலைக்கு அமர்த்தப்பட்ட அவருக்கு அவரைப் பீதியடைய செய்யும் அளவுக்கு திடுக்கிடும் பல விடயங்கள் காத்திருந்தன. முஸ்லிம்களின் வீடு என்று சொல்லும் அளவுக்கு தாலிபான் மற்றும் அல்கைதாவை சேர்ந்த பலர் அங்கு இருப்பதைக் கண்டு முதலில் வேலை செய்ய அஞ்சிய ப்ரூக், தான் பல வித விஷ ஜந்துக்களுடன் வேலை பார்க்கப்போவதாக எண்ணும் அளவுக்கு வெறுப்புடனேயே பணிக்குச் சேர்ந்துள்ளார்.


பின்னர் சில நாட்களில் மொரோக்கவை சேர்ந்த அஹமத் அல் ரஷ்தி என்பவருடனும் மற்றும் சில முஸ்லிம்களுடனும் நட்புறவு ஏற்பட்டதாகவும், தினமும் இரவு வேளைகளில் அவர்கள் அடைக்கப்பட்டிருக்கும் சிறைக்கு வெளியில் இருந்து இஸ்லாத்தைப் பற்றி கேட்டறிந்ததாகவும், தான் இஸ்லாத்தை தழுவியது மறக்க முடியாத சம்பவம் என்றும் தெரிவித்துள்ளார்.


இது பற்றி அவர் மேலும் கூறுகையில், டிசம்பர் 2003 ஆம் ஆண்டு அதிகாலை 12.49 மணியளவில் நான் இஸ்லாத்தை தழுவினேன். என்னைச் சுற்றி அமர்ந்திருந்த என்னுடைய சக தோழர்களும் என்னை முஸ்தபா முஸ்தபா என்று அழைத்த அந்த நிமிடம் என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. பின்னர் முஸ்தபா என்ற என் பெயருடன் அப்துல்லா என்றும் சேர்த்துக் கொண்டதன் பின் `முஸ்தபா அப்துல்லா' என்று அனைவராலும் அழைக்கப்பட்டேன்.


என்னுடைய வாழ்க்கைக்கு சரியான வழியை இறைவன் சிறை எண் 590ல் இருந்த `அல் ரஷீதி' மூலமாகத் தான் கிடைக்கச் செய்தான். இது வரை கண்டிராத குவாண்டனாமோ சிறைக்கு என்னை மாற்றம் செய்வதை அறிந்து வேதனைக்கு உள்ளான எனக்கு அங்கு தான் நேர்வழி இருந்தது தெரியாமல் போனது. குவாண்டனமோ போகும் வரை கடவுள் மீது நம்பிக்கை இல்லாத எனக்கு அந்த சிறையில் தான் நான் இஸ்லாத்தை தழுவும் வாய்ப்பும், மதத்தின் இனிமையும், தூய்மையையும், ஒப்பற்ற நேர் வழியையும் பெற முடிந்தது.


நானும் என்னுடன் இருந்த மற்ற சில காவலர்களும் இஸ்லாத்தை படித்ததற்காகவும், இஸ்லாத்தை தழுவியதற்கு எதிராகவும் அமெரிக்காவின் கொடூரத்திற்கு உள்ளாக்கப்பட்டோம். பின்னர் இராணுவத்தில் இருந்தும் வெளியேற்றப்பட்டோம். இப்பொழுது நான் என்னுடைய வேலையை விட்டுவிட்டு என்னைப் பற்றியும், நான் இஸ்லாத்தை தழுவிய அனுபவத்தைப் பற்றியும் புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன்.


சிறையில் கைதிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றியும், அவர்கள் மனிதாபிமானம் இல்லாமல் நடத்தப்படுவதை பற்றியும் நான் எனது கவலையைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

சுதந்திர போராட்ட வீரர் ஹாஜி முகமது மெளலானா சாகிப் பற்றிய தகவல் !!!!

அன்னிபெசண்ட் துவக்கிய ஹோம்ரூல் இயக்கத்தில் சேர்ந்து போராட்டத்தில் பங்கு கொண்ட சுதந்திர போராட்ட வீரர் ஹாஜி முகமது மெளலானா சாகிப் பற்றிய தகவல் !!!!


மதுரையைச் சேர்ந்தவர் இவர். தந்தையார் பெயர் ஹாஜி முகம்மது ஹாசேமுது. 1886இல் பிறந்த முகமது மெளலானா 1910இல் முதன்முதலில் அன்னிபெசண்ட் துவக்கிய ஹோம்ரூல் இயக்கத்தில் சேர்ந்து போராட்டத்தில் பங்கு கொண்டார். இவரது பேச்சு பொருள் பொதிந்ததாகவும், உலக நடப்புகள், நாட்டு நடப்புகள் இவற்றைத் துல்லியமாக விளக்கும் வகையில் இருக்குமென்பதால், இவரது பேச்சை மக்கள் விரும்பிக் கேட்பர். பல அறிஞ்சர்களின் எழுத்துக்கள், பேச்சுக்கள் இவைகளிலிருந்து பல மேற்கோள்களைக் காட்டி பேசும் பாங்கு
அந்த நாளில் மிக அரிதானது. இவர் அரசை எதிர்த்து அழுத்தமான குற்றச் சாட்டுக்களை முன்வைத்து பேசினால், அரசுத் தரப்பினர் அச்சம் கொள்வர்.

1921இல் நிலக்கோட்டையில் கள்ளுக்கடை மறியல் நடந்தது. அப்போது மறியலை எதிர்த்து உள்ளூர் குண்டர்கள் சிலர் கள்ளுக்கடை முதலாளிகளின் ஏவலால் சத்தியாக்கிரகிகள் மீது தாக்குதல் நடத்த அங்கு ஓர் கலவரம் உருவாகி, கடைகள் சூறையாடப்பட்டன. காவல்துறை தொண்டர்கள் மீது கொள்ளை வழக்கைப் பதிவு செய்து வழக்கு நடத்தினார்கள். அந்த வழக்கில் ஹாஜி முகமது மெளலானா அவர்களும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். வழக்கு செஷன்ஸ் கோர்ட்டுக்குப் போனபோது இவர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். தஞ்சாவூரில் சென்னை மாகாண காங்கிரஸ் மகாநாடு நடைபெற்றது. அதில் இவர் பேசிய பேச்சுக்காக, மக்களைத் தூண்டிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் இவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. 1932இல் மதுரையில் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்தில் இவர் கைது செய்யப்பட்டு மறுமுறை இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். தீவிரமான மதப் பற்று உள்ளவர் இவர். அதே அளவுக்கு தேசபக்தியும் மிகுந்தவர். இவர் மதுரை நகராட்சியின் முனிசிபல் சேர்மனாகவும், துணை சேர்மனாகவும் பதவி வகித்திருக்கிறார். எந்த நேரத்திலும் மத ஒற்றுமைக்காகப் பாடுபட்டு வந்தவர்.

இவரது இடைவிடாத பணிகளுக்கிடையிலும் ஒவ்வொரு வேளையிலும் தொழுகை நடத்தத் தவற மாட்டார். சிறையிலும்கூட சிறை அதிகாரிகளிடம் போராடி முஸ்லிம்களுக்காகத் தொழுகைக்கென்று தனியிடம் கேட்டு வாங்கி, பாய், விளக்கு, தண்ணீர் இவை கிடைத்திட வழிவகுத்தவர். வாழ்க ஹாஜியார் முகமது மெளலானா சாஹிப் புகழ்!

Tuesday, April 24, 2012

கியாமத் நாளின் அடையாளங்கள்....!விபச்சாரமும் மதுப்பழக்கமும் பெருகும்...!

'கல்வ...ி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும் அறியாமை நிலைத்து விடுவதும் மது அருந்தப் படுவதும் வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.(நூல் புகாரி : 80)

ஒளிவு மறைவாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வந்த விபச்சாரம்.

இன்று வெளிப்படையாக பகிரங்கமாக நடக்கின்றது.
அரசாங்கமே சிவப்பு விளக்குப் பகுதியை ஏற்படுத்துவதும் அன்னியப் பெண்களுடன் உறவு கொள்ளும் போது ஆணுறை பயன்படுத்துங்கள் என்று பண்பாடு.

மிக்க இந்தியா போன்ற நாடுகளே செய்யும் விளம்பரமும் விபச்சாரம் எந்த அளவுக்கு பெருகிப்போயுள்ளது என்பதை உணர்த்துகிறது.

மக்களை நல்வழிப்படுத்தக் கடமைப்பட்ட அரசுகளே மதுபான விற்பனை செய்யத் துவங்கி விட்டன.
நாகரீகமான பெயர்களில் அறிமுகப்படுத்தப்படும் உயர்
ரக அன்னிய மதுவுக்கு மக்கள் அடிமைப்பட்டு வருவதும் மறுக்க முடியாத உண்மை.

Monday, April 23, 2012

மூக்கின் மேல் அடையாளம் இடுவோம்

மூக்கின் மேல் அடையாளம் இடுவோம்
______________________________________

ஒரு மனிதன...ைத் துல்லியமாக வேறுபடுத்தி அறிந்திட கைரேகையைத் தான் நிபுணர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஒருவரது கைரேகையைப் போல் இன்னொருவரின் கைரேகை இருப்பதில்லை என்பது தான் இதற்குக் காரணம். முக்கியமான ஆவணங்களில் கைரேகை வாங்குவதும் இதற்காகவே.

ஆனால் மனிதனை தனித்து அடையாளம் காண்பது பற்றி திருக்குர்ஆன் பேசும் போது மனிதனின் மூக்கில் அடையாளம் இடுவோம் என்று கூறுகிறது.

அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் முன்னோர்களின் கட்டுக் கதைகள் எனக் கூறுகிறான்… அவனது மூக்கின் மேல் அடையாளம் இடுவோம்.

திருக்குர்ஆன் 68:15,16

கைரேகைகள் நம் கண்களுக்குத் தெரிகிறது. இதை வெளிப்படையாக நாம் பார்த்து அறிந்து கொள்கிறோம்

ஆனால் மனிதனின் மூக்கில் ஏதாவது அடையாளம் இடப்பட்டிருப்பது நமக்குத் தெரிகிறதா என்றால் நிச்சயமாக இல்லை எனலாம்.

மூக்கில் எந்த அடையாளமும் போடப்பட்டது நமக்குத் தெரியாவிட்டாலும் இப்போது மூக்கில் அடையாளம் போடப்ப்ட்டுள்ளதை நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர்

இது குறித்து தினகரன் கோவை பதிப்பில்( 7-3-2010) வெளிவந்த செய்தி இதை உறுதிப்படுத்துகிறது.

லண்டன் மார்ச் 7

தீவிரவாதிகள் கிமினல்களைக் கண்டுபிடிக்க அவர்களது மூக்கு உதவும் என்று பாத் பல்கலைக் கழக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கான புதிய தொழில் நுட்பத்தை அவர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

மனிதர்களின் பலவிதமான மூக்கு அளவுகளைக் கொண்டு அவர்களைப் பற்றி துல்லியமான விவரங்களைக் கண்டறியலாம் என்கின்றனர். அவர்கள் அதன் படி போட்டேபேஸ் என்ற உயர் தொழில் நுட்ப ஸ்கேனர் மூலம் மூக்கைப் பல கோணங்களில் படம் எடுக்க வேண்டும்

பிறகு ரோமன், கிரீக், நுபியான், ஹாக், ஸ்னப் மற்றும் டர்ன் அப் என்ற ஆறு வடிவங்களில் மூக்கை ஆய்வு செய்ய வேண்டும். பிறகு மூக்கின் விவரங்கள் முனை மற்றும் துளைகள் ஆகியவற்றை கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் மூலம் துல்லியமாக சோதனை செய்யப்படும். இது பற்றி டாக்டர் அட்ரியன் ஈவன்ஸ் கூறுகையில் கைரேகை ஸ்கேனை விட மூக்கு ஸ்கேன் மூலம் ஒருவரை எளிதாக அடையாலம் கண்டு பிடிக்கலாம். அதன் மூலம் குற்றவாளியின் தாயகம், இனம் ஆகியவற்றுடன் கைரேகையைப் போல் ஒவொருவரது மூக்கு அமைப்பும் வேறுபடுவதால் அடையாளம் காண்பது எளிது.

இது குறித்து 1400 வருடங்களுக்கு முன்பு அருள் மறையாம் திரு குர் ஆன் கூறியுள்ளது

அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் முன்னோர்களின் கட்டுக் கதைகள் எனக் கூறுகிறான்… அவனது மூக்கின் மேல் அடையாளம் இடுவோம்.

திருக்குர்ஆன் 68:15,16

மூக்கின் மேல் அடையாளம்

இவ்வசனத்தில் (68:16) மனிதனைத் தனியாகப் பிரித்துக் காட்டுவதற்கு மூக்கின் மேல் அடையாளமிடுவோம் என்று கூறப்பட்டுள்ளது

மனிதனைத் தனியாக வேறுபடுத்திக் காட்ட முக்கிய அடையாளங்கள் இரண்டு. ஒன்று ரேகைகள். இதை அனைவராலும் கண்டுபிடிக்க முடியாது. ஆயினும் ஆய்வு செய்து எந்த மனிதனின் ரேகை என்பதைக் கண்டு கொள்ளலாம். ஒருவரின் ரேகை போல் இன்னொருவரின் ரேகை இருக்காது

அனைவராலும் தெரிந்து கொள்ளக் கூடிய மற்றொரு அடையாளம் மூக்கு. எவ்வளவு நெருக்கமான மனிதராக இருந்தாலும் மூக்கை மறைத்துக் கொண்டால் துல்லியமாக அடையாளம் காண முடியாது.

எனவே தான் மூக்கின் மேல் அடையாளமிடுவோம் என்ற சொல் இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ZAJAKALLAH ,தமிழ் வெப் இஸ்லாம்.

ஓவர் டென்சன் பார்ட்டியா? உடம்புக்கு ஆகாது!!


இன்றைக்கு உள்ள இளைய தலைமுறயினர் பத்...தில் ஒருவருக்கு ஹைபர் டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்த நோய் ஏற்படுகிறது. இந்த உயர் ரத்த அழுத்த நோயானது மவுனமாக இருந்து ஆளை கொள்ளும் ஆபத்தான நோய் என்று மருத்துவ உலகினர் எச்சரிக்கின்றனர். உயர் ரத்த அழுத்தத்தினால் பக்கவாதம், இதயபாதிப்பு, சிறுநீராக கோளாறுகளும் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயர் ரத்த அழுத்தம்

இன்றைக்கு பெரும்பாலோனோர் சத்தான உணவுகளைத் தவிர்த்து அதிக கொழுப்பு, பல்வேறு ரசாயனங்கள் உள்ள பாஸ்ட் புட் வகைகளை உட்கொள்வதால் உடலில் அதிக கொழுப்பு கூடுகிறது. இதனால் உடல் பருமன் நோய்க்கு ஆளாகின்றனர். மேலும் பெண்களுக்கு ஹார்மோன்கள் மாற்றத்தினால் சோர்வு, நினைவாற்றல் குறைவு, படபடப்பு ஏற்படுகிறது. அதிகமான மன அழுத்தம், மன உளைச்சல் ஏற்பட்டாலும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே உடலானது நோய்களின் கூடாரமாக மாறுவதோடு இளம்வயதில் ஹார்ட் அட்டாக் உள்ளிட்ட பல நோய்கள் அழையா விருந்தாளியாக உள்ளே நுழைகின்றன.

பாரம்பரிய உணவுகள்

உடலில் பிரச்னைகள் இருக்கும் போது அது மனதையும் பாதித்து ஹார்மோன்களையும் பாதிக்க செய்கிறது. இதனால் டென்ஷன் அதிகரித்து மன அழுத்தத்தில் கொண்டுபோய் விடுகிறது. சிறு வயது முதல் நமது பாரம்பரிய உணவுகளுக்கு முதலிடம் தர வேண்டும். ஆவியில் வேக வைத்த உணவுகள் மற்றும் பருப்பு வகைகள், தானியங்கள் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சத்தான கீரை, காய்கறிகள், பழங்கள் சாப்பிடும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். பச்சைப்பயறு, கொள்ளு, கொண்டைக்கடலை மற்றும் பீன்ஸ் உள்ளிட்ட பயறு வகைகளை கலவையாக முளைக் கட்டி சாலடாக சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான புரோட்டீன் கிடைக்கிறது. சத்தான உணவுகள் உடலையும், மனதையும் உற்சாகமாக வைத்திருக்கும். இட்லி, கம்பு, ராகிக் களி, சோள மாவு தோசை, கீரை கலந்து செய்யப்படும் அடை வகைகள் என மூன்று வேளை உணவிலும் பாரம்பரிய உணவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

குழந்தைகள் பர்கர், பீட்ஸா மற்றும் ஜங்க் புட் வகைகள் அடிக்கடி சாப்பிடுவதற்கு தடை விதிக்கவும். அதே கார்பனேட் அடங்கிய குளிர்பான வகைகளை தொடர்ந்து குடிக்க கொடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக இளநீர், பழரசங்கள் சாப்பிட பழக்கப் படுத்தலாம்.

நெல்லிக்கனி ஜூஸ்

ஹைபர் டென்சன் ஏற்பட்டவர்களுக்கு பூண்டு சிறந்த மருந்தாக உள்ளது. வெறும் வயிற்றில் பூண்டு ஜூஸ் பருகலாம். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்கிறது. இதன் மூலம் உயர்ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

தினசரி காலையில் நெல்லிக்கனி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து ஜூஸாக கலந்து பருகலாம். இதனால் உயர்ரத்த அழுத்தம் கட்டுப்படும்.

உயர் ரத்த அழுத்த நோய்க்கு தர்பூசணி சிறந்த மருந்தாக உள்ளது. தினசரி தர்பூசணி பழத்தை சாப்பிடலாம் அல்லது தர்பூசணி பழச் சாறுடன் கசகசா சேர்த்து அரைத்து தினசரி வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இதனால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.

துளசி, வேப்பிலை

துளசி 5 இலைகள் வேப்பிலை 5 சேர்த்து அரைத்து தண்ணீரில் கலந்து பருகவேண்டும். ஒருவாரத்திற்கு தொடர்ந்து இதனை குடித்து வர உயர்ரத்த அழுத்தம் குணமாகும்.

முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் .முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் .

1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை ,,அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 தொலைபேசி: 2829 5445

2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டை, நெடுஞ்சாலை சென்னை - 14 தொலைபேசி: 94440 52530

3. சீதக்காதி அறக்கட்டளை, 688 , அண்ணா ...சாலை, சென்னை - 06

4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன், 688 , அண்ணா சாலை, சென்னை - 06

5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் 4 மூர்ஸ் ரோடு, சென்னை - 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்)

6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட், ஜாவர் பிளாசா, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34

7. முஹம்மது சதக் அறக்கட்டளை 133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34

8. மெஜெஸ்டிக் பவுண்டேசன் 117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை ,சென்னை - 02

9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட், ஜபார்ஷா தெரு, திருச்சி.

10. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை, சென்னை - 03

11. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட், டி - பிளாக் 10 ( 23 ) 11 வது தெரு, அண்ணா நகர் - சென்னை 40 போன் 98400 80564

12. அஸ்மா காசிம் அறக்கட்டளை ,மாண்டியத் சாலை, எழும்பூர் - சென்னை – 08

13. ராஜகிரி பைத்துல்மால், கீழத் தெரு, ராஜகிரி - 614 207

14. டாம்கோ 807, - அண்ணா சாலை, 5 வது சாலை, சென்னை

15. ஹாஜி. அஹமது மீரான், Managing Director Professional Courier’s

22. மகாராஜா சூர்யா ராவ் ரோடு, ஆழ்வார்பேட்டை - சென்னை – 18

16. மியாசி, புதுக் கல்லூரி வளாகம், பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14

17. S I E T கே.பி. தாசன் சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18

Sunday, April 22, 2012

குர்ஆன் இறை வேதம்தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று !

السلام عليكم ورحمة الله وبركاته
குர்ஆன் இறை வேதம்தான் என்பதற்கு இதுவும் ஒரு
சான்று !

இந்த பிர்அவ்ன் உடல் 1898ல்தான் கண்டுபிடிக்கப்பட்டது. அல்குர்ஆனோ 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அருளப்பட்டது . பிர்அவ்ன் மூசா நபியை துரத்தி செல்லும்போது அல்லாஹ்வின் நாட்டப்படி கடலால் மூழ்கடிக்கப்பட்டது 3000 ஆண்டுகளுக்கு முன் .இப்போது பிர்- அவுன் உடல் கெய்ரோ அருங்காட்சியகத்தில் பாதுகாக்கபடுகிறது

73:16.ஃபிர்அவ்ன் அத்தூதருக்கு மாறு செய்தான் எனவே, அவனைக் கடினமான பிடியாக, நாம் பிடித்துக் கொண்டோம்.
10:92எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது)..
14:52. இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படுவதற்காகவும் (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன் தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் அறிவுடையோர் நல்லணர்வு பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும்

கேவலமான உண்மைகள்


கேவலமான உண்மைகள் 1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய்.... ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!! 2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!! 3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!! 4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!! 5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!! 6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!! 7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!! 8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். 9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!! 10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை..!!! 11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்...!!!!See More

மருத்துவர்களின் முன்னோடி பற்றிய தகவல் !!!
மருத்துவர்களின் இளவரசன் (Prince Of Physicians) என்று அடைமொழி சூட்டப்பட்ட அபூ அலி ஹுசைன் இப்னு அப்துல்லாஹ் இப்னு சீனா கி பி (980 – 1036) மருத்துவ துறையின் மாமேதையாக விளங்கினார். இப்னு சீனா 10 ம் வயதிலையே இஸ்லாமிய அடிப்படை அறிவை பெற்று திருக்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்தார். இவர் இளம் வயதிலையே பல்வேறு ஆசிரியர்களிடம் அல் ஜிப்ரா, வான சாஸ்திரம், தர்க்கவியல், தத்துவம், இறையியல் என்று பல்வேறு விசயங்களை கற்றுக் கொண்டார்.

இவர் தனது 16 ம் வயதில் மருத்துவத்தில் கவனம் செலுத்தினார். இவர் 18 ம் வயதில் புகழ்பெற்ற மருத்துவராக விளங்கினார். மன்னர் நூஹ் இப்னு மன்சூர் சாமாணி என்பவர் நோய்வாய் பட்டிருந்தபோது அவரது நோயை குணப்படுத்த முடியாமல் பல்வேறு மருத்துவர்கள் திரும்பிச் செல்லவே, இறுதியாக இப்னு சீனா அழைக்கப்பட்டார். மன்னரின் நோயை குணப்படுத்தினார் இப்னு சீனா. குணமாகிவிட்ட மகிழ்ச்சிப் பெருக்கால் மன்னர் யாருக்கும் அனுமதிக்காத தனது அரச நூலகத்தை பயன்படுத்தும் உரிமையை இப்னு சீனாவிற்கு வழங்கினார். தனது சிகிச்சைக்கு கைமாறாக இதனை கருதிய இப்னு சீனா, அந்நூலகத்தில் பொதிந்திருந்த அரும்பெரும் நூல்களை எல்லாம் கற்று பயன் அடைந்தார்.

இப்னு சீனா கிட்டத்தட்ட 200 நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் மருத்துவ நூல்கள் மட்டும் 16 ஆகும். இதில் 8 நூல்கள் செய்யுள் வடிவில் அமைந்துள்ளன. அவர் எழுதிய நூல்களிலே உலகப் புகழ்ப்பெற்ற நூல் அல் கானூன் பித்திப் ஆகும்.

இந்நூல் 1270 ல் ஹீப்ரு (யூதர்களின்) மொழியிலும் லத்தின் மொழியிலும் மொழிப்பெயர்க்கப்பட்டு உள்ளது. இதன் லத்தின் மொழியாக்கம் ஐரோப்பாவில் வெளியிடப்பட்டதிலிருந்து 30 பதிப்புகளை கண்டுள்ளது.

15 ம் நூற்றாண்டில் இந்நூல் குறித்து பல்வேறு விளக்கவுரை நூல்கள் வெளிவந்துள்ளன. இந்நூலில் உள்ள உடற்கூறு பகுதி மட்டும் நீக்கப்பட்டு, டாக்டர்.O . C Gruner என்பவரால் 1930 ல் ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது என்றால் இந்த 21 ம் நூற்றாண்டு வரை நீடித்து நிற்கும் இதன் செல்வாக்கை புரிந்துக் கொள்ளலாம்.

இவ்வாறு இப்னு சீனா எழுதிய "அல் - கானூன் பித்திப்" என்ற மருத்துவ கலைக்களஞ்சியம் 15 ம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய பல்கலைகழகங்களின் மருத்துவ பாடத்திட்டத்தில் முக்கிய நூலாக சேர்க்கப்பட்டிருந்தது.

பிரான்ஸ் நாட்டில் அமைந்து இருக்கும் பாரிஸ் மருத்துவ பல்கலைகழகத்தில் இவரது பெயரில் ஆய்வகம் ஒன்று அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

(S.H.M. முஹையதீன் அவர்கள் எழுதிய உலகின் அறிவியல் முன்னோடிகள் முஸ்லிம்கள் எனும் நூலிலிருந்து...