Digital Time and Date

Welcome Note

Saturday, October 24, 2015

இனி ஒரே செல்போனில் 2 சிம்களிலும் வாட்ஸ்-அப் பயன்படுத்தலாம்!

ன்று செல்பாேன் பயன்படுத்தும் அனைவரும் அலுவலக எண், தனிப்பட்ட உபயோகம் என  ஒருவரே பல எண்களை பயன்படுத்துவது சாதாரணமான விஷயமாக உள்ளது . இதனால் இன்று இரண்டு சிம்கள் பொருத்தக் கூடிய டூயல் சிம் மொபைல்களைதான் பெரும்பாலானாேர் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் இந்த போன்களில் உள்ள பிரச்னை, இருக்கும் இரண்டு எண்களில் எதாவது ஒரு எண்ணில் இருந்து மட்டும்தான் வாட்ஸ்-அப் செயலியைப் பயன்படுத்த முடியும். மற்றொரு எண்ணைக் கொண்டு, அதே மொபைலில் வாட்ஸ்-அப் பயன்படுத்த முடியாது. இதனால், வாட்ஸ்-அப் பயன்பாட்டுக்காக மட்டும் வேறொரு புது மொபைலை நாடும் நிலை உள்ளது.


ஆனால் தற்போது, ஒரு மொபைலில் இரண்டு நம்பர்களுக்கும் தனித் தனியாக வாட்ஸ் அப் பயன்படுத்தும் விதமாக புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நீங்கள் டூயல் சிம் மொபைல் பயன்படுத்துபவர் என்றால், டிசா (Disa) என்ற இந்த செயலியின் மூலம், உங்கள் மொபைலில் உள்ள இரண்டு எண்களுக்கும், தனித்தனியாக வாட்ஸ்-அப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

டிசா செயலியை பயன்படுத்தும்  வழிமுறைகள் கீழே...

முதலில் டிசா செயலியை தரவிறக்கம் (download) செய்து இன்ஸ்டால் செய்து காெள்ளுங்கள்.
அதில் ‘+’ என்ற தேர்வை அழுத்தி, உங்கள் மற்றொரு எண்ணை (அதாவது வாட்ஸ் அப் பயன்படுத்தாத எண்) '+91' என குறியீட்டோடு தரவும். (உதாரணம்: +91 82208*****)

அடுத்து வெரிஃபை செய்வதற்கான கட்டம் வரும். இதைத் தாண்டினால் ஒரே நேரத்தில் இரண்டு எண்களுக்கு தனித்தனியாக வாட்ஸ் அப் பயன்படுத்த உங்கள் மொபைல் தயாராகிவிடும். நீங்கள் ஏற்கெனவே வைத்துள்ள வாட்ஸ்-அப் இல்லாமல், டிசா செயலிக்குள் இன்னொரு வாட்ஸ்-அப் பக்கம் உருவாகிவிடும்.

ஆனால் தற்போது டிசா செயலியில் உள்ள வாட்ஸ்-அப் மூலம் செய்திகள், புகைப்படங்கள்  மற்றும் வீடியாே ஆகியவற்றை மட்டுமே  அனுப்ப  முடியும். வாட்ஸ்-அப் கால்கள் (Whatsapp call) செய்ய முடியாது. அதே போல ஆண்ட்ராய்டு ஃபோன்களில் மட்டுமே தற்போது  இந்த செயலியை  பயன்படுத்த முடியும்.

டிசா செயலியை பதிவிறக்கம் செய்ய இந்த லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்: https://goo.gl/bW2ELo


--மு.ஜெயராஜ்
vikatan