Digital Time and Date

Welcome Note

Saturday, December 22, 2012

வரலாற்றில் இன்று

டிசம்பர் 221790 - துருக்கியின் இஸ்மாயில் நகரை ரஷ்யாவின் சுவோரவ் என்பவனும் அவனது படைகளும் கைப்பற்றின.

1807 - வெளிநாடுகளுடனான வர்த்தகத் தொடர்புகளை நிறுத்தும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் கொண்டுவரப்பட்டது
1845 - பஞ்சாபில் ஃபெரோசிஷா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரித்தானியப் படைகள் சீக்கியர்களைத் தோற்கடித்தனர்.

1849 - ரஷ்ய எழுத்தாளர் பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் மரணதண்டனை கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டது.

1851 - இந்தியாவின் முதலாவது சரக்கு ரயில் உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்க்கீ நகரத்தில் ஓடவிடப்பட்டது.

1895 - எக்ஸ்ரேயைக் கண்டுபிடித்த ஜெர்மன் விஞ்ஞானி வில்ஹெம் ரோண்ட்ஜென் ( Wilhelm Rontgen) முதன் முதலாக தனது மனைவியின் கையை எக்ஸ்ரே எடுத்துக் காட்டினார்
1915 - மலேசியாவின் இலங்கைத் தமிழரால் வாங்கப்பட்ட யாழ்ப்பாணம் என்ற விமானம் பிரித்தானிய வான்படைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.

1937 - லிங்கன் சுரங்கம் நியூயோர்க் நகரில் பொதுமக்களுக்காகத் திறந்துவிடப்பட்டது.
1938 - எழுபது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அடியோடு அழிந்து போய் விட்டது என்று கருதப்பட்ட கொயலாகாந்த் இன மீன் வகை அன்ஜூவான் தீவுக்கருகே உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டது.

1942 - இரண்டாம் உலகப் போர்: போரில் பாவிப்பதற்கென வீ-2 ஏவுகணைகளை உற்பத்தி செய்ய ஹிட்லர் உத்தரவிட்டார்.

1944 - இரண்டாம் உலகப் போர்: வியட்நாமில் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கெதிராக வியட்நாம் மக்கள் இராணுவம் அமைக்கப்பட்டது.

1989 - ஒரு வார சண்டையின் பின்னர் இயோன் லியெஸ்கு, கம்யூனிச ஆட்சியாளரான நிக்கலாய் செய்செஸ்குவை வீழ்த்தி ருமேனியாவின் ஆட்சியைக் கைப்பற்றினார்.

1989 - கிழக்கு ஜெர்மனியையும் மேற்கு ஜெர்மனியையும் பேர்லினில் பிரித்த "பிராண்டன்பேர்க் கதவு" 30 ஆண்டுகளின் பின்னர் திறந்து விடப்பட்டது.

1990 - மார்ஷல் தீவுகள், மைக்குரோனீசியா கூட்டு நாடுகள் ஆகியன விடுதலையடைந்தன.

வரலாற்றில் இன்று

டிசம்பர் 21


69 - வெஸ்பசியான் ரோமப் பேரரசின் ஒரே ஆண்டில் 4வது பேரரசனாக முடிசூடினான்.
1768 - நேபாளம் ஒரு குடையின் கீழ் கொண்டுவரப்பட்டு இன்றுவரையுள்ள நாடு தோற்றுவிக்கப்பட்டது.

1898 - pierre Curie, Marie Curie என்ற இரண்டு விஞ்ஞானிகள் ரேடியத்தின் கதிரியக்கத் தன்மையைக் கண்டுபிடித்து அறிவியல் வரலாற்றில் தங்கள் பெயரைப் பதித்து கொண்டனர்.

1902 - இலங்கையில் போவர் போர்க் கைதிகளாக இருந்தவர்கள் தென்னாபிரிக்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

1913 - உலகின் முதலாவது குறுக்கெழுத்துப் போட்டி "நியூயோர்க் வேர்ல்ட்" பத்திரிகையில் வெளியானது.

1941: இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜப்பான் -தாய்லாந்து நாடுகளுக்கிடையில் சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1948 - அன்னை தெரசாவின் சீரிய பணி தொடங்கியது. கல்கத்தாவின் மோத்திஜிஸ் சேரியில் தனது தொண்டைத் தொடங்கினார் அந்த தெய்வத்தாய்

1962 : நார்வேயின் முதல் தேசிய பூங்காவாக ராண்டன் பூங்கா அறிவிக்கப்பட்டது

1967: உலகில் முதலாவது இதய மாற்று சத்திரசிகிச்சைக்குள்ளான லூயிஸ் வாஷ்கன்ஸி, 18 நாட்களின்பின் தென்னாபிரிக்காவில் காலமானார்.

1968 - சந்திரனுக்கான மனிதனை ஏற்றிச் சென்ற விண்கலம் அப்பல்லோ 8 புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது. புவியீர்ப்பைத் தாண்டிச் சென்ற முதலாவது மனித விண்கலம் இதுவாகும்.

1969: நியூயோர்க்கில் ஓரினப் பாலியல் செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் ஏற்படுத்தப்பட்டது.

1969: சகல விதமான இனப்பாகுபாட்டையும் ஒழிக்கும் சாசனத்தை ஐ.நா. அங்கீகரித்தது.


1971 - ஐநா அவையின் பொதுச் செயலாராக கூர்ட் வால்ட்ஹெயிம் தெரிவானார்.

1973 - அரபு-இஸ்ரேல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஜெனீவா மாநாடு ஆரம்பமானது.

1979 - ரொடீசியாவின் விடுதலைக்கான உடன்பாடு லண்டனில் கைச்சாத்திடப்பட்டது.

1988: லண்டனிலிருந்து நியூயோர்க்கிற்குப் புறப்பட்ட பான் அமெரிக்கன்; விமானம் ஸ்கொட்லாந்தின் லொக்கர்பீ எனும் இடத்திற்கு மேலாக பறந்துகொண்டிருந்தபோது குண்டுவெடித்து சிதறியதால் 270 பேர் (தரையிலிருந்த 11 பேர் உட்பட) கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் லிபிய பிரஜைகள் இருவர் தொடர்புபட்டனர் என்ற குற்றச்சாட்டு பிரிட்டன் - லிபிய நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக முறுகல் நிலவியது.


1991 - கசக்ஸ்தானின் அல்மா-ஆட்டா நகரில் கூடிய பதினொரு சோவியத் குடியரசுகளின் தலைவர்கள் தனிநாடுகளின் பொதுநலவாய அமைப்பு உருவாகியவுடன் சோவியத் ஒன்றியம் கலைக்கப்படும் என அறிவித்தனர். இதன்படி டிசம்பர் 26 ஆம் நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.

1992: நெதர்லாந்து விமானமொன்று பாரோ விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானதால் 56 பேர் பலி.

1995 - பெத்லகேம் நகரம் இஸ்ரேலியர்களிடம் இருந்து பாலஸ்தீனர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Friday, December 21, 2012

டிசம்பர் 21


69 - வெஸ்பசியான் ரோமப் பேரரசின் ஒரே ஆண்டில் 4வது பேரரசனாக முடிசூடினான்.

1768 - நேபாளம் ஒரு குடையின் கீழ் கொண்டுவரப்பட்டு இன்றுவரையுள்ள நாடு தோற்றுவிக்கப்பட்டது.

1898 - pierre Curie, Marie Curie என்ற இரண்டு விஞ்ஞானிகள் ரேடியத்தின் கதிரியக்கத் தன்மையைக் கண்டுபிடித்து அறிவியல் வரலாற்றில் தங்கள் பெயரைப் பதித்து கொண்டனர்.

1902 - இலங்கையில் போவர் போர்க் கைதிகளாக இருந்தவர்கள் தென்னாபிரிக்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

1913 - உலகின் முதலாவது குறுக்கெழுத்துப் போட்டி "நியூயோர்க் வேர்ல்ட்" பத்திரிகையில் வெளியானது.

1941: இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜப்பான் -தாய்லாந்து நாடுகளுக்கிடையில் சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1948 - அன்னை தெரசாவின் சீரிய பணி தொடங்கியது. கல்கத்தாவின் மோத்திஜிஸ் சேரியில் தனது தொண்டைத் தொடங்கினார் அந்த தெய்வத்தாய்

1962 : நார்வேயின் முதல் தேசிய பூங்காவாக ராண்டன் பூங்கா அறிவிக்கப்பட்டது

1967: உலகில் முதலாவது இதய மாற்று சத்திரசிகிச்சைக்குள்ளான லூயிஸ் வாஷ்கன்ஸி, 18 நாட்களின்பின் தென்னாபிரிக்காவில் காலமானார்.

1968 - சந்திரனுக்கான மனிதனை ஏற்றிச் சென்ற விண்கலம் அப்பல்லோ 8 புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது. புவியீர்ப்பைத் தாண்டிச் சென்ற முதலாவது மனித விண்கலம் இதுவாகும்.

1969: நியூயோர்க்கில் ஓரினப் பாலியல் செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் ஏற்படுத்தப்பட்டது.

1969: சகல விதமான இனப்பாகுபாட்டையும் ஒழிக்கும் சாசனத்தை ஐ.நா. அங்கீகரித்தது.


1971 - ஐநா அவையின் பொதுச் செயலாராக கூர்ட் வால்ட்ஹெயிம் தெரிவானார்.

1973 - அரபு-இஸ்ரேல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஜெனீவா மாநாடு ஆரம்பமானது.

1979 - ரொடீசியாவின் விடுதலைக்கான உடன்பாடு லண்டனில் கைச்சாத்திடப்பட்டது.

1988: லண்டனிலிருந்து நியூயோர்க்கிற்குப் புறப்பட்ட பான் அமெரிக்கன்; விமானம் ஸ்கொட்லாந்தின் லொக்கர்பீ எனும் இடத்திற்கு மேலாக பறந்துகொண்டிருந்தபோது குண்டுவெடித்து சிதறியதால் 270 பேர் (தரையிலிருந்த 11 பேர் உட்பட) கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் லிபிய பிரஜைகள் இருவர் தொடர்புபட்டனர் என்ற குற்றச்சாட்டு பிரிட்டன் - லிபிய நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக முறுகல் நிலவியது.


1991 - கசக்ஸ்தானின் அல்மா-ஆட்டா நகரில் கூடிய பதினொரு சோவியத் குடியரசுகளின் தலைவர்கள் தனிநாடுகளின் பொதுநலவாய அமைப்பு உருவாகியவுடன் சோவியத் ஒன்றியம் கலைக்கப்படும் என அறிவித்தனர். இதன்படி டிசம்பர் 26 ஆம் நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.

1992: நெதர்லாந்து விமானமொன்று பாரோ விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானதால் 56 பேர் பலி.

1995 - பெத்லகேம் நகரம் இஸ்ரேலியர்களிடம் இருந்து பாலஸ்தீனர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வேற்றுக்கிரக வாசிகள் பறக்கும் தட்டுகளில் வந்திறங்குகின்றனரா?

‘‘மாயன் காலண்டர் முடிந்துவிட்டது. உலகம் பேரழிவை சந்திக்கப் போகிறது.. டிசம்பர் 21,ம் தேதியோடு உலகம் அழியப் போகிறது’’ , உலகம் முழுவதும் இதுதான் தற்போதைய பரபரப்பு பேச்சு. அந்த சம்பவத்துக்கு இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் கவுன்ட் டவுன் பரபரப்பாக உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கிறது. ‘அச்சச்சோ என்னவெல்லாம் ஆகுமோ’ என்ற பதற்றத்தில் பிரத்யேக பிரார்த்தனை, பாவமன்னிப்பு ஜெப கூட்டம் ஒரு பக்கம்.. ‘வுடு மாமு. டோன்ட் ஒர்ரி’ என்று டேக் இட் ஈஸியாக உற்சாகம், கொண்டாட்டம், ஸ்பெஷல் பார்ட்டி.. என அமர்க்களமாய் ஒரு பக்கம் என கலவை சம்பவங்களால் உலகம் களைகட்டியிருக்கிறது.

உய்னுல், பக்துன்.. மிரட்டும் ‘மாயன்’
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மாயன் மக்கள் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்கள். தற்போது மெக்சிகோ, கவுதமாலா நாடுகள் அமைந்திருக்கும் மத்திய அமெரிக்க பகுதியில் கி.மு.2000 முதல் கி.பி.250 வரை வாழ்ந்தவர்கள் மாயன் இன மக்கள். மத்திய அமெரிக்கா மற்றும் தென்அமெரிக்க நாடுகளில் இப்போதும் வசிக்கும் பழங்குடியின மக்கள் சிலர் தங்களை மாயன் வம்சாவளியினர் என்று கூறிக்கொள்கிறார்கள். எழுத்துக்களை உருவாக்கியது, கட்டிட கலை, வானியல் சாஸ்திரம், மத நம்பிக்கை உள்பட பல விஷயங்களில் அதிக அறிவு உள்ளவர்களாக கருதப்படுகின்றனர். இவர்கள் உருவாக்கிய காலண்டர்தான் தற்போது உலகை பதற்றத்திலும் பீதியிலும் ஆழ்த்தியிருக்கிறது. மாயன் மக்கள் வடிவமைத்த காலண்டர்படி, வருடத்துக்கு மொத்தம் 360 நாட்கள். 20 நாட்கள் கொண்டது ஒரு ‘உய்னுல்’ (மாதம்). 18 உய்னுல் கொண்டது ஒரு துன் (ஆண்டு). 20 துன் கொண்டது ஒரு காதுன். 20 காதுன் கொண்டது ஒரு பக்துன் (சுமார் 394 ஆண்டு) என்கிறது அந்த கணக்கு.

நாலாவது உலகம் மூன்று நாள் பாக்கி
இறைவன் முதலில் ஒரு உலகை படைத்தார். அது சரியாக வராததால் இன்னொன்றை படைத்தார். அதுவும் சொதப்பியதால் வேறொன்று. இப்படி மூன்று உலகங்களை இறைவன் அடுத்தடுத்து படைத்திருக்கிறார். அந்த மூன்றாவது உலகம் 13 பக்துன்களில் (தோராயமாக 5125 ஆண்டுகள்) அழிந்துவிட்டது. அதன் பிறகுதான், மக்களாகிய நம்மைக் கொண்டு இறைவன் இந்த புதிய உலகை படைத்திருக்கிறார். இந்த புதிய உலகமும் 5125 ஆண்டுகளில் அழிந்துவிடும் என்று அந்த காலண்டர் மூலம் தெரியப்படுத்துகிறார்கள் மாயன் மக்கள். அவர்களது கூற்றுப்படி, கி.மு. 3114,ம் ஆண்டு ஆகஸ்ட் 11,ம் தேதி தொடங்கிய 4,வது உலகம் 2012,ம் ஆண்டு டிசம்பர் 21,ம் தேதியோடு அழிந்துவிடும். இதுதான் மாயன் காலண்டரின் சாராம்சம். ‘‘வானியல் சாஸ்திரம் உள்பட பல விஷயங்களிலும் கைதேர்ந்தவர்கள் மாயன் மக்கள். நான்காவது உலகமும் 5125 ஆண்டுகளில் அழிந்து, அதன் பிறகு 5,வது உலகம் தோன்றும் என்று கூறவில்லையே. ஸோ.. உலகத்துக்கு முற்றுப்புள்ளி வரும் 21,ம் தேதி கன்பார்ம்’ என்கிறது உலகம் அழிவு ஆதரவு தரப்பு. சூரியனில் உருவாகும் காந்தப் புயல் சுழன்றடித்து பூமியை நோக்கி வீசப் போகிறது. ராட்சத புயலில் சிக்கி பொடிப்பயல் பூமி தூள் தூளாகப் போகிறது என்றும் இணையதளத்தில் செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. புதுவை கடலில் நீரோட்டம் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி செல்வதற்கு பதிலாக உல்ட்டாவாகியுள்ளது. எசகுபிசகாக ஏதோ நடக்கப் போகிறது என்று மீனவர்களும் தங்கள் பங்குக்கு பீதி கிளப்புகிறார்கள். ‘தப்பு செஞ்சிட்டேன்.. மன்னிச்சிக்க மச்சான்’ என்று கைதிகள் கட்டிப் பிடித்து கண்ணீர் வடித்து கதறுவதும்.. இருக்கிற சொத்து சுகங்கள், வீடு, பங்களாக்களை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு எழுதி வைப்பதும்.. கிடைக்கிற வழிபாட்டு தலங்களில் எல்லாம் புகுந்து பிரார்த்தனை நடத்துவதுமாய்.. அழிவு கவுன்ட் டவுன் பல நாடுகளில் அமோகமாய் நடக்கிறது.

கேவலம்.. கேனத்தனம் விஞ்ஞானிகள் உர்ர்..
டிவியிலும் ரேடியோவிலும் இதுபற்றிய செய்திகளை கேள்விப்பட்டாலே ‘ஸ்டாப் இட்’ என்று டென்ஷனாய் கத்துகிறார்கள் விஞ்ஞானிகள். ‘‘அண்டவெளியில் நடந்த பெருவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சூரியனில் இருந்து 454 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானதுதான் நமது பூமி. உருவான 100 ஆண்டுகளில் உயிரினம் தோன்றியது. சூரியனில் இருந்து கிடைக்கும் சக்தி உள்பட பல்வேறு அம்சங்களை கணக்கில் கொண்டு ஆராய்ந்தால், இன்னும் 50 கோடி ஆண்டு முதல் 230 கோடி ஆண்டு வரை எந்த பிரச்னையும் இல்லாமல் உலகம் இயங்கும். பல கோடி ஆண்டுகள் இடைஞ்சல் இல்லாமல் இயங்கப்போகிற பூமிக்கு 2010, 2011, 2012 என அல்பத்தனமாக ஆயுள் குறிப்பது கேவலமாக, கோமாளித்தனமாக, கேனத்தனமாக இருக்கிறது’’ என்கிறது பகுத்தறியும் விஞ்ஞானிகள் தரப்பு.

நோ பிராப்ளம் ஜோதிட தகவல்
இரண்டு நாளில் உலகம் அழியப்போகிறது என்ற கூற்றை ஜோதிடர்களும் அதிரடியாக மறுக்கிறார்கள். ‘‘சனி நீச்சம், செவ்வாய் நீச்சம், சனி,செவ்வாய் பார்வை போன்ற கிரக நிலைகள் இருப்பதுதான் கெடுபலன்களை தரும். சுனாமி, சூறாவளி, பயங்கர நாசம் ஏற்படுத்தும் ரசாயன, தீ விபத்துகள் நடக்கப்போவதை கிரக நிலைகளை வைத்து ஓரளவு யூகித்து விடலாம். கிரக நிலைகள் தாறுமாறாக இருந்தால், உலகம் அழிவுக்கான அறிகுறி என்று கருதலாம். ஆனால், தற்போது கிரகங்களின் நிலைகள் நல்லபடியாகவே இருக்கின்றன. சனி நன்கு உச்சத்தில் இருப்பதால் இயற்கை சீற்றங்கள் வருவதற்குக்கூட வாய்ப்பு இல்லை. உலகம் அழியும் என்பதை நம்பத் தேவையில்லை’’ என்கின்றனர்.

‘டோன்ட் ஒர்ரி மாமூ.. சரக்கு அடிக்கலாம் வா’
உலகம் அழியும் மேட்டரிலும் டேக் இட் ஈஸி பாலிசிதாரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ‘அதான் உலகம் அழியப் போகுதே. இன்னும் ஏன் படிப்பு, எக்சாம், மார்க்கு, வேலை, லீவு, லாஸ் ஆப் பே, பர்மிஷன், சொந்த வீடு கனவு, லோன், கவர்மென்ட் வேலைனு அலட்டிக்கிறீங்க. எதை பத்தியும் கவலைப்படாதீங்க. உலகம் இருக்கிற வரை சந்தோஷமா இருப்போம். உலகம் அழிவதை ஜாலியாக கொண்டாடுவோம். வாங்க மஜாவா இருப்போம்’ என்று ஸ்பெஷல் விருந்துக்கும் பார்ட்டிக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் டிஸ்கொதே, ஸ்டார் ஓட்டல்களில் ‘டிசம்பர் 21‘ ஸ்பெஷல் பார்ட்டிகள் நடக்க இருக்கின்றன. பதற்றம் ஒரு பக்கம்.. கொண்டாட்டம் ஒரு பக்கமாக பரபரப்பாக நகர்ந்துகொண்டிருக்கிறது ‘உலகம் அழிவு’ கவுன்ட் டவுன். 21,ம் தேதிக்கு பிறகு உலகம் என்னதான் ஆகும்? மாயன் காலண்டர் சொல்வதுபோல பூமாதேவி வாயை பிளக்கப் போகிறாளா..? ‘போங்கடா லூசுப் பசங்களா’ என்று சிரித்துவிட்டு வழக்கம்போல சுற்றப் போகிறாளா..? இன்னும் ரெண்டே நாள்தான்.. வெயிட் அண்ட் ஸீ!

அட்றா சக்க.. அட்றா சக்க
அழிவை சந்திக்கும் கடைசி 3 நாட்கள் உலகம் முழுவதும் கும்மிருட்டாகும் என்று பரவிய தகவலால் சீனாவின் சிச்சுவான், ஜிலின் பகுதிகளில் உள்ள கடைகளில் மெழுகுவர்த்திகள் விற்று தீர்ந்துவிட்டதாம்.

ரஷ்யாவில் பின்னிப் பெடலெடுக்கிறது அழிவு பீதி. அன்னிய முதலீடு, பெட்ரோல் விலை உயர்வு போல உலகம் அழிவு சமாசாரம் பற்றியும் டிவிக்களில் விவாதங்கள் அனல் பறக்கிறது. அண்டவெளியை நாலைந்து ஆங்கிள்களில் படம் பிடித்து தொடர்ச்சியாக பல டிவிக்கள், இணையதளங்களில் ‘நேரடி ஒளிபரப்பு’ ஓடிக்கொண்டிருப்பது ஹைலைட்.
எல்லாம் அழியப் போகிறது. உங்களது சொத்துக்களை எல்லாம் எங்களிடம் ஒப்படைத்துவிட்டு எங்களது பக்தி மார்க்கத்தில் சேர்ந்துவிடுங்கள்’ என்று பிரசாரம் செய்த சீன ஆசாமிகள் சுமார் 100 பேர் ஷாங்சி, சிச்சுவான் பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீனாவின் குவாங்ஷன் கவுன்டியில் கத்தியுடன் பள்ளிக்கூடத்தில் புகுந்த ஒருவர் 23 குழந்தைகளை குத்திவிட்டார். போலீஸ் கேட்டதற்கு, ‘அதான் உலகமே அழியப்போகுதே சார்’ என்றாராம் நக்கலாக. அவரை நொங்கு நொங்கு என்று நொங்கி எடுத்து வருகின்றனர் போலீசார்.
பறக்கும் தட்டுகளில் வேற்றுக்கிரக வாசிகள் வந்திறங்குவதாக, ‘வந்திறங்கியதை என் ரெண்டு கண்ணால் பார்த்ததாக’ அவ்வப்போது வதந்திகள் கிளம்பும். மாயன் மக்கள் வாழ்ந்த மெக்சிகோ உள்ளிட்ட இடங்களில் கடந்த 1,ம் தேதி ஏராளமான பறக்கும் தட்டுகள் தரையிறங்குவதாக புரளி பரவியது. அழியப் போகும் உலகத்தில் இருந்து மக்களை மீட்டுக்கொண்டு வேற்றுக்கிரகத்துக்கு அவை பறக்கப்போகின்றன. இதற்காக பல நாடுகளில் இருந்து விமானம் பிடித்து ஏராளமானோர் மெக்சிகோ மற்றும் தென்அமெரிக்க நாடுகளில் குவிந்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த உலகமும் சீட்டுக்கட்டு போல சரிவதை பார்த்தபடியே, அவர்கள் மட்டும் பறக்கும் தட்டுகளில் ஏறி வேற்றுக்கிரகத்துக்கு போய் வாழ்க்கை நடத்தப்போகிறார்கள்.. வதந்திகளும் புரளிகளும் வந்துகொண்டே இருக்கின்றன.

நல்ல சேதி சொல்லும் நாஸ்டர்டாம்
உலகில் எப்போது, என்ன நடக்கப் போகிறது என்று பல சம்பவங்களை மிக துல்லியமாக கணித்து பல ஆண்டுகளுக்கு முன்பே சொன்னவர் மிகேல் டி நாஸ்டர்டாம். பிரான்சின் புரோவென்ஸ் பகுதியை சேர்ந்தவர். 1503,ல் பிறந்து 1566,ல் இறந்தவர். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், வைத்தியர், வானியல் நிபுணர் என்று பல முகங்கள் கொண்டவர். கிரக நிலைகளை கூட்டிக் கழித்து ஜோதிடம் சொல்பவர். சிம்பிளாக பிரான்ஸ் சித்தர். உலகில் எதிர்காலத்தில் இதெல்லாம் நடக்கப் போகிறது என்று கூறி 4 வரி செய்யுள் வடிவில் அவர் வெளியிட்ட கருத்துகள் 1550,களில் தொகுப்பு புத்தகங்களாக தொடர்ந்து வெளியானது. ‘இது ஜோதிடத்தின் தீர்ப்பு’ என்று கூறி திட்டவட்டமாக அவர் வெளியிட்ட கருத்துகள் மக்கள் மத்தியில் வரவேற்பை மட்டுமின்றி எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. சின்னதும் பெரியதுமாக 6 ஆயிரத்துக்கும் அதிகமான ஆரூடங்களை அவர் கூறியுள்ளார். ‘உலக மையத்தில் வெடிக்கும் தீ, நியூ சிட்டியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும், வானுயர்ந்த இரு பாறைகள் தகர்க்கப்படுவது மாபெரும் போரை ஏற்படுத்தும்’ என்பது போன்ற வரிகளுடன் அவர் கூறியிருந்தது நியூயார்க் இரட்டை கோபுர தகர்ப்பு சம்பவத்தை பற்றியதுதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அமெரிக்க முன்னாள் அதிபர் கென்னடி சுட்டு கொல்லப்பட்டது, அவரது மகன் ஜூனியர் கென்னடி விமான விபத்தில் பலியானது, இங்கிலாந்து இளவரசி டயானா கார் விபத்தில் மரணம் அடைந்தது, 1986,ல் சேலஞ்சர் விண்கலம் வெடித்து சிதறியது, ஜப்பான் அணுகுண்டு வீச்சு, ஹிட்லர் பிறப்பு ஆகியவை குறித்தும் நாஸ்டர்டாமின் ஆரூட செய்யுள்களில் குறிப்பு காணப்படுவதாக கூறுகின்றனர். ஒரு மகிழ்ச்சியான சமாசாரம்.. ‘‘என் கணிப்பு இன்றில் இருந்து 3797 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்’’ என்று நாஸ்டர்டாம் கூறியிருக்கிறார். அவர் இதை சொன்னது 1555,ம் ஆண்டில். எனவே, அவரது கணக்கின்படி உலகம் அழிவு 2012,ல் இல்லை என்பதுதான் என்கின்றனர் நாஸ்டர்டாம் நம்பிக்கையாளர்கள். அப்போதும் இதேபோல உலகம் இன்னொரு முறை பரபரப்பாகி அழிவு பற்றி விவாதிக்கும்.

நியூட்டன் சொல்ல மறந்த விதிகள்...!

1.வரிசை விதி-
நீங்கள் நிற்கும் வரிசையை மாற்றினால் நீங்கள் விட்டுச் சென்ற வரிசை நீங்கள் இப்போது நிற்கும் வரிசையை விட வேகமாக நகரும்.

2.தொலைபேசி விதி
நீங்கள்
தற்செயலாக பிழையான இலக்கத்தைச் சுழற்றினால் ஒரு போதும் அந்த இலக்கம் வேறு
அழைப்பில் இருக்காது. உடனடியாகவே உங்களுக்கு இணைப்புக் கிடைத்துவிடும்.

3.இயந்திர பழுதுபார்ப்பு விதி-
உங்கள் கைகள் முழுவதும் கிறீஸ் பட்ட பின்னர் உங்கள் முதுகு அரிக்கத் தொடங்கும்.

4.தொழிற்சாலை விதி-
நீங்கள் தவறவிட்ட எந்தவொரு திருத்தும் கருவியும் எப்போதுமே எடுக்க முடியாத ஒரு இடத்தில் உருண்டு சென்று தஞ்சமடைந்திருக்­கும்.

5.பொய்க்காரண விதி-
நீங்கள்
வேலைக்கு பிந்தி வந்ததற்கு காரணம் உங்கள் வாகன ரயர் ஒட்டையானது என நீங்கள்
உங்கள் முதலாளியிடம் சொல்வீர்களாயின­் அடுத்த நாள் உண்மையாகவே உங்கள் ரயர்
ஓட்டையாகும்.

6.குளிப்பு விதி-
நீங்கள் குளிக்கத் தொடங்கி உங்கள் உடல் முழுவதும் நீரால் நனைந்த பின்னர் உங்கள் தொலைபேசி சிணுங்கும்.

7.சந்திப்பு விதி-
உங்களுக்கு
தெரிந்தஒருவரை சந்திப்பதற்கான நிகழ்தகவானது அந்த நபர் உங்களை யாரொடு
சேர்த்து காணக் கூடாது என நினைக்கிறீர்களே­ா அவரோடு இருக்கும் போது அதிகம்.


8.வெளிப்படுத்து கை விதி-
ஒரு இயந்திரம் தொழிற்படவில்லை­ என ஒருவருக்கு நிரூபிக்க முற்படுகையில் அந்த இயந்திரம் தொழிற்பட ஆரம்பிக்கும்.

9.திரையரங்க விதி-
நீங்கள்
திரையரங்கில் வாசல் ஓரத்தில் அமர்ந்திருக்கைய­ில் உங்கள் வரிசையில்
கடைசியாக ஓரத்தில் இருப்பவர்கள் அனைவரும் படம் ஆரம்பித்து நீங்கள் இரசிக்க
ஆரம்பித்த பின்னரே வருவார்கள்.

10.கோப்பி விதி-
உங்கள்
அலுவலகத்தில் சூடான கோப்பி ஒன்றை பருக அமரும் தருணத்தில் தான் உங்கள்
முதலாளி உங்களை அழைத்து பெரிய வேலையொன்றை தருவார். கோப்பி சூடாறி குளிரும்
வரையாவது அந்த வேலை கட்டாயம் நீடிக்கும்.

nandri dhivya abhi

பாட்டிக்கு வயது 93 ஆனால்...

கின்னஸ் புத்தகத்தின் தரவுப்படி உலகின் மிகப்பழமையான யோகா ஆசிரியையாக டஓ போர்ச்சன் லின்ச் என்ற 93 வயது நிரம்பிய பெண் காணப்படுகிறார். தனது வாழ்நாளில் பல்லாயிரக் கணக்கான மாணவர்களுக்கு யோகா கற்பித்த பெருமைக்குரியவர்.

தற்போது நியூயோர்க் நகரில் அமைந்துள்ள பயிற்சி நிலையத்தில் தொடர்ந்தும் யோகா கற்பித்து வருகிறார். யோகாவில் சுமார் 80 வருட அனுபவமுள்ள இவரிடம் பயிற்சி பெற பலரும் விரும்புகின்றனர்.

இது குறித்து டஓ போர்ச்சன் லின்ச் தெரிவிக்கையில், எனது நாள் யோகா மூலம் ஆரம்பமாகிறது, நான் யோகாவை மிகவும் விரும்புகிறேன் என்றார்.


வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள தஞ்சை பெரிய கோயில்.

கருவூர்ச் சித்தரால் வடிவமைக்கப்பட்டு, மன்னன் இராச ராச சோழனால் கட்டப்பட்ட, தமிழனின் கட்டிடக்கலையைப் பறைசாற்றும் கோவிலின் பெருமை!உலகின்
அதிசயம் எனக் கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக
177 வருடங்கள் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன்
கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல், ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை
விசயங்களை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக
கட்டினர்.

இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது, இரண்டாம் தளம்
கட்டும் போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம் சிறிது காலம் நிறுத்தி
வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு
ஒத்துழைத்தது. இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது.

ஒரு கேவலமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம் உலக அதிசயப்படியலில் இன்றும் உள்ளது ! (AUG 8TH 1173 -1372)

தஞ்சையில்
உள்ள சித்தர்களின் கட்டிடக்கலைக்கு பெயர் போன ராஜா ராஜா சோழனால் கட்டப்பட
216 அடி உலகையே மிரளச்செய்யும் தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில்
கட்டப்பட்டது. இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் (80,000 கிலோ) எடை
கொண்டது.

உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 ஆண்டுகளுக்கு மேலாக
கம்பீரமாக நிற்கும் கட்டிடம். இப்போதுள்ள எந்தத் தொழில் நுட்பமும் இல்லாத
அந்தக் காலத்தில் எப்படி கட்டப்பட்டது? என்பது உலகுக்கே வியப்பாக உள்ளது.

ஆனால்.
சாகாக்கலை அறிந்த சித்தர்களுக்கு இது மிகச் சாதாரண வேலை. 64 கலைகளையும்
தாண்டி, 65வது கலையாகிய சாகாக்கலை/ மரணமில்லா பெருவாழ்வு பெற்ற சித்தர்கள்
பிரபஞ்சத்தையே மாற்றி அமைக்கும் சக்தி வாய்ந்தவர்களென சித்தர் ஏடுகள்
கூறுகின்றன. இது நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் அவர்கள் விட்டுச்சென்ற பல
கலைகள் / தடயங்கள் நம்மை இன்றும் வியக்கவே வைக்கின்றன.

வியப்பை
மட்டுமே பதிலாய் வைத்துள்ள தஞ்சை பெரிய கோயில் போன்ற கட்டிடம் உலக அதிசய
பட்டியலில் இடம் பெறவில்லை! சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி
வியப்படையும் நாம், அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ள, தமிழனின் பெருமைகளை
பற்றி மறந்து விடுகின்றோம்!

தகவலுதவி & நன்றி:
சசிதரன்.
உங்கள் புகைப்படத்தில் சில நேரங்களில் விரும்பாத காட்சிகள் இடம் பெற்றிருக்கலாம். அவற்றை நீங்கள் இணைய உதவியுடன் நீக்கி கொள்ள முடியும்.
இந்த தளத்தில் சென்று LOAD IMAGE என்பதை கிளிக் செய்து உங்கள் புகைப்படத்தினை பதிவிறக்கம் செய்யவும்.

பின்னர் நீங்கள் புகைப்படத்தில் இருந்து நீக்க விரும்பும் காட்சியை MOUSE மூலமாக கிளிக் செய்து தெரிவு செய்யவும்.

அளிக்கப்படும் பகுதி வெள்ளையாக தோன்றும். இப்போது படத்தின் மேலேயுள்ள INPAINT என்பதை கிளிக் செய்தால் படத்தில் நீங்கள் தெரிவு செய்த பகுதி அழிந்து விடும்.

பின்னர் அழிக்கப்பட்ட புதிய படத்தினை SAVE செய்து கொள்ளலாம்.


http://www.webinpaint.com/

கொழும்பில் ஒரு குட்டித் தீவு...

எழில்கொஞ்சும் இயற்கை அழகோடு தலைநகர் கொழும்பை அலங்கரிக்கிறது பெய்ர வாவிக்குள் அமைந்திருக்கும் குட்டித் தீவு. இயற்கையின் எழில் கொஞ்சும் அழகோடு இயற்கை காற்று தரும் ஆசுவாசத்துக்கு அங்கு எல்லையே இல்லை எனலாம்.

கங்காராமய பகுதியில் பெய்ர என்ற பெயர்கொண்டு அழைக்கப்படும் வாவி இந்து சமுத்திரத்தோடு கலக்கிறது. அதன் நடுவே அமைந்திருக்கும் இந்தக் குட்டித் தீவை பிரதான நெடுஞ்சாலையிலிருந்து பாலம் ஒன்றிணைக்கிறது.அந்தப் பாலத்தினூடாகச் சென்று குட்டித் தீவில் காலடி எடுத்து வைத்தாலே போதும், வேறெங்கோ தேசத்துக்கு வந்துவிட்டதுபோல இருக்கும்.

ஆதலால் தான் காதலர்களின் வருகைக்கு அளவே இல்லாமல் இருக்கிறது. அமைதியாக தமது உணவுர்வுகளைப் பரிமாறிக்கொள்வதற்கும் சுதந்தரக் காற்றை சுவாசித்து காதலின் இன்பத்தை அனுபவிப்பதற்காக வருகை தரும் காதலர்கள் தமது பொழுதை இங்கே கழிக்கிறார்கள். சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கும் இங்கு குறைவேயில்லை.

நீல வானம், மனதை வருடும் தென்றல் ஆகியனவும் மோதிப்பார்க்க முயற்சித்து தோற்றுப்போகும் சின்னச் சின்ன அலைகளும் ஆங்காங்கே நீந்தித் திரியும் அன்னப் பறவைகளும் அந்தப் பொழுதுகளை சுவாரஸ்யம் மிக்கதாக ஆக்குகின்றன.

அன்னப் பறவைகளைப் போன்றே உருவாக்கப்பட்ட படகுகள் உல்லாசப் பிரயாணிகளையும் உள்நாட்டவர்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளன. குறிப்பிட்ட எல்லைக்குள் இருவர் இணைந்து அரைமணிநேரத்தை இந்தப் படகில் கழிக்கலாம். இதற்காக வயது வந்த ஒருவருக்கு நூறு ரூபாவும் 12 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்கு ஐம்பது ரூபாவும் அறவிடப்படுகிறது.இந்தப் பணியை இலங்கை இராணுவத்தினர் செய்து வருகிறார்கள். அங்கு 12 படகுகள் சேவைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குட்டித் தீவைச் சுற்றி அன்னப் பறவை வடிவிலான படகில் சவாரி செய்வதே தனிச் சுகம்தான்.

இதனை அனுபவிப்பதற்காக தூர இடங்களிலிருந்தும் மக்கள் வருகை தருவதாக இராணுவத்தினர் எமக்குத் தெரிவித்தார்கள்.
இந்தக் குட்டித்தீவை அண்மித்ததாக இருக்கும் அழகிய விகாரை சீமா மாலகய என்று அழைக்கப்படுகிறது.

இலங்கையில் சீமா மாளிகா விகாரைக்குத் தனிச் சிறப்பு உண்டு. பெய்ர வாவியில் அமைந்திருக்கும் இந்த விகாரை தினமும் வருகை தரும் நூற்றுக்கணக்கானோரின் மனதில் சாந்தியை விதைக்கிறது.

விகாரைக்கு முன்னால் அமைந்துள்ள சயனநிலை புத்தர் சிலை வரவேற்கிறது.உள்ளே செல்லும்போது ஏதோ ஓர் அமைதி எம்மை முழுமையாக ஆட்கொள்கிறது. மனதின் அத்தனை மையங்களையும் சாந்தம் என்ற ஒன்று நம்மைத் தொற்றிக்கொள்வதாயும் கௌதம புத்தர் போதித்த சகிப்புத் தன்மைக்கு அது அத்திபாரமிடுவதாயும் உணர்வு ஏற்படுகிறது.


உள்ளேயுள்ள அமைதியான புத்தர் சிலை ஆயிரம் நல்லர்த்தங்களை மனதில் விதைக்கிறது. ஆங்காங்கே உட்கார்ந்து தியானத்தில் ஆழ்ந்திருக்கும் துறவிகளை தொந்தரவு செய்யாவண்ணம் மக்கள் வழிபாட்டில் ஈடுபடுகிறார்கள்.

அதனைச் சார்ந்தே சிறு விகாரையொன்றும் அரச மரமும் அமைந்திருக்கின்றன.தியானத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ள இந்த விகாரையை நிர்மாணித்தவர் ஜெப்ரி பாவா எனப்படும் திறமைமிக்க கலைஞர்.

ஜெப்ரி பாவாஇலங்கையின் மிகச்சிறந்த கட்டிடக்கலை நிபுணர்களில் ஜெப்ரி பாவாவுக்குத் தனித்துவமான இடம் உண்டு. அதுமட்டுமல்ல ஆசியாவின் தலைசிறந்த நிபுணராகவும் மதிக்கப்படுகிறார்.

சீமா மாளிகா என்றழைக்கப்படும் இந்த பௌத்த தியான மண்டபத்தை நிர்மாணித்த பெருமை அவரையே சாரும்.
1919 ஆம் ஆண்டு பிறந்த ஜெப்ரி பாவா இலங்கை மட்டுமல்லாது இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், எகிப்து, சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் தனது நிர்மாணத் திறமையை நிரூபித்துள்ளார்.

அவற்றுள் சாதனையாகக் கருதப்படுவது என்னவென்றால், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் அமைந்துள்ள இலங்கைப் பாராளுமன்றத்தை வடிவமைத்தவர் ஜெப்ரி பாவா என்பதுதான்.

ஆரம்பகாலங்களில் வீடுகள், விடுதிகள், பாடசாலைகளை நிர்மாணிப்பதில் ஆர்வம் காட்டிய பாவா பின்னர் பாரிய கட்டிடங்களை வடிவமைப்பதில் ஆர்வம் காட்டினார்.

அதில் சுற்றாடலுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையிலும் வெப்பநிலை அதிகரிக்கும் சாத்தியத்தை கருத்திற்கொண்டும் செயலாற்றியமையை முழு உலகமும் பாராட்டியது.

அவரது நிர்மாணங்களில் ஒன்றுதான் சீமா மாளிகா எனப்படும் தியானத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் வகையில் கட்டப்பட்ட பௌத்த விகாரை. அலைபாயும் மனதை ஓரிடத்தில் நிலைநிறுத்துவதற்கு இந்தத் தியானமண்டபம் வழிவகுக்கிறது.

தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் வெளிநாட்டு பௌத்த துறவிகளும் தமது அதிகமான பொழுதுகளை இங்கே கழிக்கின்றனர்.
தியான மண்டபத்தைச் சூழ அமைந்திருக்கும் புத்தர் சிலைகளும் இயற்கையோடு ஒன்றிக்கச் செய்வதாய் அமைக்கப்பட்டிருக்கும் சிறு விகாரையும் அமைதி என்ற ஒன்றை மட்டுமே மனதில் விதைக்கின்றன.

தியானத்துக்கு ஏற்றாற்போல இதனை வடிவமைத்து நிர்மாணம் செய்த ஜெப்ரி பாவா இலங்கை வரலாற்றிலும் பாரம்பரியத்திலும் முக்கிய இடத்தை வகிக்கிறார்.

பெய்ர வாவிக்கு நடுவே இத்தனை அழகும் அமைதியும் ஒருமித்திருக்கிறது. இயற்கையின் அதிசயங்களில் இதுவும் ஒன்றுதான். ஏனென்றால் மனதுக்கு நிம்மதியைத் தரக்கூடிய வகையில் அத்தனை அமிசங்களும் ஒருங்கே அமைந்திருக்கின்றன.

இலங்கை அந்நியர் ஆட்சியில் இருந்த காலத்தில் பெய்ர வாவியானது படகினூடாக பொருட்கள் பரிமாறுவதற்கு பெரிதும் பயன்பட்டதாக வரலாறு கூறுகிறது. ஆங்கிலேயர் ஆட்சியின் பின்னரும் கட்டுமரங்கள், படகுகளில் மக்கள் சவாரி செய்ததாகவும் பொருட்களை ஏற்றிச்சென்று வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பாதுகாப்பின் நிமித்தம் பெய்ர வாவியின் நடுவே அமைந்திருக்கும் குட்டித் தீவுக்கு மக்கள் அனுமதிக்கப்படவில்லை. அத்தோடு படகுச் சவாரிகளும் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

தற்போது பொதுமக்கள் பயனடையும் வகையில் சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது.

இயற்கை கொடுத்த கொடையை சூழல் மாசுபடா வண்ணம் பாதுகாத்து பயனடைவோம்.

Ansaar hayaath 

வரலாற்றில் இன்று

சர்வதேச மனித ஒருமைப்பாட்டு தினம்


69 - நீரோ மன்னனின் முன்னாள் தளபதியாக இருந்த வெஸ்பசியான் ரோமப் பேரரசனாகத் தன்னை அறிவிக்கும் பொருட்டு ரோம் நகரை அடைந்தான்.

1192 - சிலுவைப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டு விட்டு இங்கிலாந்து திரும்பும் வழியில் முதலாம் ரிச்சார்ட் ஆஸ்திரியாவின் ஐந்தாம் லியோபோல்டினால் கைது செய்யப்பட்டான்
1606 - வேர்ஜீனியா கம்பனியின் மூன்று கப்பல்கள் ஆங்கிலேயர்களை ஏற்றிக் கொண்டு வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுனை நோக்கிக் கிளம்பியது. இதுவே அமெரிக்காக்களில் இடம்பெற்ற முதலாவது நிரந்தர ஆங்கிலக் குடியேற்றத் திட்டமாகும்.

1803 - பிரெஞ்சுகளிடம் இருந்து லூசியானா விலைக்கு வாங்கப்பட்டதைக் குறிக்க நியூ ஓர்லென்ஸ் நகரில் பெரும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

1844 - இலங்கையில் அடிமைகளை வேலைக்கமர்த்துவதற்கெதிரான சட்டமூலம் கொண்டுவரப்பட்டது
1860 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: தெற்கு கரொலைனா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து வெளியேறிய முதலாவது மாநிலமானது.

1876 - பங்கிம் சந்திர சட்டோபாத்தியா என்பவர் "வந்தே மாதரம்" எனும் இந்தியாவின் சுதந்திர எழுச்சிப் பாடலை எழுதினார்.

1917 - சோவியத்தின் முதலாவது இரகசியக் காவற்துறை "சேக்கா" அமைக்கப்பட்டது.

1924: லான்ட்ஸ்பேர்க் சிறையிலிருந்து அடோல்வ் ஹிட்லர்
விடுவிக்கப்பட்டார்.


1942 - இரண்டாம் உலகப் போர்: கல்கத்தா ஜப்பானியர்களின் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளானது.

1943 - பொலிவியாவில் இராணுவப் புரட்சி நடந்தது.

1946: ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமியினால் 1300 பேர் பலி. 38000 வீடுகள் சேதம்.


1951 - அணுவாற்றலினாலான மின்சாரம் முதற்தடவையாக ஐடஹோவில் பிறப்பிக்கப்பட்டது. இது நான்கு மின்குமிழ்களை எரிக்கப் பயன்பட்டது.

1955 - கார்டிஃப் வேல்சின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.

1960 - வியட்நாம் விடுதலைக்கான தேசிய முன்னணி அமைக்கப்பட்டது.

1973: ஸ்பெய்ன் பிரதமர் அட்மிரல் லூயிஸ் பெலான்கோ கார் குண்டுத் தாக்குதலில் பலியானார்.

1987: பிலிப்பைன்ஸில் டெப்ளாஸ் நீரிணையில் எண்ணெய்தாங்கிக் கப்பலொன்றுடன் பயணிகள் கப்பலொன்று மோதியதால் சுமார் 4000 பேர் பலியானதாக மதிப்பிடப்படுகிறது. 1749 பேர் பலியானதாக உத்தியோகபூர்வ பதிவுகள் தெரிவிக்கின்றன


1988 - போதைப்பொருள் கடத்தலுக்கெதிரான ஐநா சாசனம் வியென்னாவில் கைச்சாத்திடப்பட்டது.

1989 - பனாமாவின் அதிபர் மனுவேல் நொரியேகாவைப் பதவிலிருந்து அகற்ற ஐக்கிய அமெரிக்கா தனது படைகளை பனாமாவுக்கு அனுப்பியது.

1995: அமெரிக்காவின் கொலம்பியா மாநிலத்தில் இடம்பெற்ற விமானவிபத்திழல் 160 பேர் பலி.


1998 - Houston ஒரே பிரசவத்தில் எட்டு குழந்தைகளை ஈன்றெடுத்தார்
1999 - போர்த்துக்கல் மக்காவுவை மக்கள் சீனக் குடியரசிடம் கையளித்தது

2007: இரண்டாம் எலிஸபெத் அரசியார் பிரிட்டனில் அதிக வயதில் ஆட்சியிலிருந்தவர் எனும் சாதனைக்குரியவரானார். அவருக்குமுன் விக்டோரியா மகாராணியார் 81 வருடங்கள், 7 மாதங்கள், 29 நாட்கள் உயிர்வாழ்ந்தார்.

Wednesday, December 19, 2012

தமிழகத்தில் தனுஷ்கோடி புயல் ஓர் பேரழிவு சின்னம் !!!

1964 ஆம் ஆண்டு டிசம்பர் 23 இல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. தனுஷ்கோடி நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. தனுஷ்கோடியையும் பாம்பனையும் இணைத்த இருப்புப்பாதை வீசிய கடும் புயலில் அடித்து செல்லப்பட்டது. அதிகாலையில் நடந்த இந்த கோர தாண்டவத்தில் மொத்தம் 2000 பேர் வரை உயிரிழந்தனர். அதன் பின்னர் தமிழ் நாடு அரசு இந்த ஊரை வாழத்தகுதியற்றதாக அறிவித்தது.

தனுஷ்கோடியில் அழிந்த நிலையில் உள்ள ஒரு தேவாலயம்புயல் வந்து புரட்டிப் போட்டதன் அடையாளமாக இன்றும் மிச்சமிருப்பது சிதிலமடைந்த ஒரு தேவாலயம். சில கட்டடங்கள் மட்டுமே. தனுஷ்கோடியைப் புதுப்பிக்க அரசுகள் ஏனோ மறந்து போய் விட்டன. இருப்பினும் தனுஷ்கோடியில் இன்றும் சில மீனவ குடும்பங்கள் வசிப்பதைக் காணலாம். அவர்களும் கூட தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். சுடச் சுட மீன் சுட்டுத் தருவது உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர். ஒரு காலை கடலுக்குள்ளும், இன்னொரு காலை கடல் மண்ணிலுமாக வைத்து தனுஷ்கோடி தடம் மாறிப் போய்க் கிடக்கிறது. தனுஷ்கோடியின் ரயில் நிலையத்தை கடல் கொண்டு விட்டது. ரயில் தண்டவாளம் மட்டும் பாதி கடலுக்குள் சென்றபடி காட்சி அளிக்கிறது.

மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில், பேய் மழையுடன் புயல் வீசியது. ராமேசுவரத்தில், புயலின் வேகம் கடுமையாக இருந்தது . புயல் காரணமாக, கடலில் அலை பயங்கரமாக இருந்தது. தென்னை மர உயரத்துக்கு அலைகள் சீறிப்பாய்ந்து கரையில் மோதின திடீர் என்று கடல் பொங்கி, ராமேசுவரம் தீவில் உள்ள தனுஷ்கோடிக்குள் புகுந்தது. தனுஷ்கோடி அடியோடு அழிந்து,
கடலில் மூழ்கி விட்டதால்,

தமிழ்நாட்டில் உள்ள மண்டபம் என்ற இடத்தையும் , ராமேசுவரம் தீவையும் இணைப்பது "பாம்பன் பாலம்." இது கடலில் அமைக்கப்பட்டது. கப்பல் வரும்போது, இந்தப்பாலம் இரண்டாகப் பிரிந்து, கப்பலுக்கு வழிவிடும். இந்த பாலம், பலத்த சேதம் அடைந்தது. புயல் வீசுவதற்கு முன், ராமேசுவரத்தில் இருந்து, தனுஷ்கோடிக்கு ஒரு ரெயில் புறப்பட்டுச் சென்றது . தனுஷ்கோடியை நெருங்கிக் கொண்டிருந்தபோது , பலத்த மழையுடன் சூறாவளி வீசியது. உடனே ரெயில் நிறுத்தப்பட்டது. எனினும் சற்று நேரத்தில் கடல் பொங்கி, தனுஷ்கோடியை விழுங்கிய போது, ரெயிலும் கடலில் மூழ்கியது. ரெயிலில் 115 பேர் பயணம் செய்தனர். அவர்கள் அவ்வளவு பேரும் கடலில் மூழ்கி பலியாகி விட்டார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 40 கல்லூரி மாணவர்கள், ராமேசுவரத்துக்கு உல்லாசப் பயணம் வந்திருந்தனர் . கடலில் மூழ்கிய
ரெயிலில் அவர்கள் பயணம் செய்தனர் என்ற தகவல் பின்னர் தெரியவந்தது . அந்த 40 பேரும் கடலில் மூழ்கி இறந்து விட்டார்கள். தனுஷ்கோடியில் இருந்த பெரிய கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பெரும்பாலான வீடுகளும், கட்டிடங்களும் கடலுக்குள் மூழ்கிவிட்டன . தந்தி, டெலிபோன் கம்பங்கள் சாய்ந்து விழுந்து விட்டதால், ராமேசுவரம் தீவுக்கும், வெளி உலகத்துக்கும் இடையே தகவல் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விட்டன . இதனால் சேதத்தின் முழு விவரங்களும் உடனடியாக சென்னைக்குத் தெரியவில்லை .

கடலுக்குள் மூழ்கி பலியாகாமல் உயிர் தப்பியவர்கள் , மணல் திட்டுகளில் தவித்தனர். அவர்களைக் காப்பாற்ற கப்பல்கள், மோட்டார் படகுகள், "ஹெலிகாப்டர்" விமானங்கள் அனுப்பப்பட்டன. ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதிக்கு முன்பு ரெயில் மூலம்தான் குடிநீர் அனுப்பப்பட்டு வந்தது. புயல்_மழை வீசியதைத் தொடர்ந்து அங்கு குடிநீரே இல்லாமல் போய்விட்டது . உயிர் தப்பியவர்கள், குடிக்கத் தண்ணீர் இன்றி தவித்தனர். அவர்களுக்காக ஹெலிகாப்டர் விமானத்தில் தண்ணீர் அனுப்பப்பட்டது . விமானத்தில் இருந்து சாப்பாடு பொட்டலங்களும் போடப்பட்டன . உயிர் பிழைத்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, மதுரையில் இருந்தும், மற்ற இடங்களில் இருந்தும் ராமேசுவரத்துக்கும் டாக்டர்கள் அனுப்பப்பட்டனர் .

அதன் தொடர்பான கட்டுரையை கீழே படிக்கவும்.

தனுஷ்கோடி - டிசம்பர் 23,1964 தமிழக மக்களால் மறக்க முடியாத தினங்கள் பல. அதில் ஒன்று தனுஷ்கோடியை கடல் தின்ற தினம்.

தமிழக கடலோரப் பகுதிகளை 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி ஆழிப் பேரலை புரட்டிப் போட்டு விட்டுப் போனதற்கு முன்பே, தனுஷ்கோடியை அந்த சுனாமி விகாரமாக்கி விட்டுச் சென்ற தினம்தான் டிசம்பர் 23,1964. அழகிய தனுஷ்கோடியை சின்னாபின்னமாக்கி, அலங்கோலப்படுத்தி விட்டுப் போனது.

மன்னார்வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. அதை அப்போது கடல் கொந்தளிப்பு என்று பொதுவான வார்த்தையால் அழைத்தனர்.

அன்றெல்லாம் சுனாமி என்றால் என்ன என்றே அக்காலத்து மக்களுக்குத் தெரியவில்லை. ஆனால் நமது காலத்தில் நம்மைத் தாக்கிய சுனாமியைப் போன்ற ஆழிப் பேரலைதான் அன்றைய தனுஷ்கோடியையும் அலைக்கழித்துள்ளது.

இந்த அலை 20 அடி உயரத்துக்கு ராட்சத அளவில் எழும்பி வந்தது. ராமேஸ்வரம் தீவின் கிழக்கு முனையில் தனுஷ்கோடி நகரம் இருந்தது. 500-க்கும் மேற்பட்ட வீடுகள் கொண்ட அழகிய மீனவ நகரம்.

அப்போது அதிகாலை 3 மணி இருக்கும். மீனவ மக்களும், பிறரும் நிம்மதியாக கண்ணயர்ந்திருந்த நேரம் அது. ஆனால் கடல் மட்டும் காட்டுத்தனமாக விழித்துக் கொண்டிருந்தது.

பொங்கி வந்த கடல் வெள்ளமும், திரண்டு வந்த ஆழிப் பேரலைகளும், தனுஷ்கோடிக்குள் புகுந்து, புரட்டிப் போட்டது. நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது.நகரிலிருந்த முக்கால்வாசிப் பேர் முகவரி தெரியாமல் கடல் அன்னையின் கோரப் பிடியில் சிக்கி உயிரிழந்தனர்.

எனவே இலங்கை செல்ல ஏராளமான பயணிகள் அதில் இருந்தனர். தனுஷ்கோடியைத் தாக்கிய புயலுக்கும், ஆழிப் பேரலைக்கும் இந்த ரயிலும் தப்பவில்லை. அப்படியே கடலுக்குள் இழுத்துப் போட்டு விட்டது போட் மெயிலை, கடலில் எழுந்து வந்த ஆழிப் பேரலை.
அதிகாலையில் நடந்த இந்த கோர தாண்டவத்தில் 2000 பேர் உயிரிழந்தனர்.

அழகிய தனுஷ்கோடி அடியோடு அழிந்தது. மண் மூடிப் போன மேடாக மாறிப் போனது. புயல் வந்து புரட்டிப் போட்டதன் அடையாளமாக இன்றும் மிச்சமிருப்பது சிதிலமடைந்த ஒரு தேவாலயம். சில கட்டடங்கள் மட்டுமே.

தனுஷ்கோடியைப் புதுப்பிக்க நமது அரசுகள் ஏனோ மறந்து போய் விட்டன. இருப்பினும் தனுஷ்கோடியில் இன்றும் சில மீனவ குடும்பங்கள் வசிப்பதைக் காணலாம். அவர்களும் கூட தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். சுடச் சுட மீன் சுட்டுத் தருவது உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர்.

ஒரு காலை கடலுக்குள்ளும், இன்னொரு காலை கடல் மண்ணிலுமாக வைத்து தனுஷ்கோடி தடம் மாறிப் போய்க் கிடக்கிறது.

தனுஷ்கோடியின் ரயில் நிலையத்தை கடல் கொண்டு விட்டது. ரயில் தண்டவாளம் மட்டும் பாதி கடலுக்குள் சென்றபடி காட்சி அளிக்கிறது - கடந்த காலத்தில் தாங்கள் 'தடம் புரண்ட' கதையை சொல்லியபடி.

ராமேஸ்வரம் வரும் யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், ஒரு எட்டு தனுஷ்கோடிக்கும் சென்று வருவது வழக்கம். இப்படி வந்து செல்பவர்களால்தான் இன்னும் தனுஷ்கோடி நமது மன 'டைரி'யிலிருந்து அழியாத காவியமாக உள்ளது.

இன்று ஒரு தகவல்

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும். .

*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

*கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பவுடர் :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பவுடர் :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பவுடர் :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பவுடர் :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பவுடர் :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பவுடர் :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பவுடர் :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பவுடர் :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பவுடர் :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பவுடர் :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பவுடர் :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பவுடர் :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பவுடர் :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பவுடர் :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பவுடர் :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பவுடர் :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பவுடர் :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பவுடர் :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பவுடர் :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பவுடர் :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பவுடர் :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியாநங்கை பவுடர் :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பவுடர் :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பவுடர் :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

*கோரைகிழங்கு பவுடர் :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பவுடர் :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பவுடர் :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பவுடர் :- ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பவுடர் :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பவுடர் :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பவுடர் :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பவுடர் :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பவுடர் :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பவுடர் :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பவுடர் :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பவுடர் :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பவுடர் :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பவுடர் :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பவுடர் :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பவுடர் :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பவுடர் :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பவுடர் :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பவுடர் :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பவுடர் :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பவுடர் :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பவுடர் :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பவுடர் :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பவுடர் :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

நன்றி கோபி

கல்லணை

கல்லணை ( Tiruchirapalli (Trichy), India ) ஜாலி

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக...் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான் . ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .

நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.

நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.

ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று .

உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை.. கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிய வேண்டிய செய்தி , SHARE செய்யுங்கள் !!

நன்றி கோபி

வரலாற்றில் இன்று

டிசம்பர் 19


324 - லிசீனியஸ் ரோமப் பேரரசன் பதவியைத் துறந்தான்.

1154- இங்கிலாந்தின் இரண்டாம் ஹென்றி முடிசூடினான்.

1606 - ஐக்கிய அமெரிக்காவின் 13 குடியேற்ற நாடுகளில் முதலாவதான வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுன் நகரில் இங்கிலாந்தில் இருந்து மூன்று கப்பல்களில் ஆங்கிலேயர்கள் வந்திறங்கினர்.

1871 - யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக கத்தோலிக்க மதகுருப் பதவிகள் (ordination) வழங்கப்பட்டன.

1916 - முதலாம் உலகப் போர்: பிரான்சில் வேர்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ஜேர்மனியப் படைகளை பிரெஞ்சுப் படைகள் தோற்கடித்தன.

1932 - பிபிசி எனப்படும் பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகம் முதன் முதலில் வெளிநாடு ஒன்றுக்கு ஒலிபரப்பத் தொடங்கியது. Empire Service என்ற அந்தச் சேவையைப் பெற்ற நாடு ஆஸ்த்திரேலியா.

1941 - அடொல்ஃப் ஹிட்லர் ஜேர்மனிய இராணுவத் தலைவர் ஆனார்.

1961 - போர்த்துகீச குடியேற்ற நாடான டாமன் டையூ பகுதியை இந்தியா தன்னுடன் இணைத்துக்கொண்டது.

1963 - சன்சிபார் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று சுல்தான் ஹமூட் பின் முகமது தலைமையில் முடியாட்சியைப் பெற்றது.

1972 - சந்திரனுக்கு கடைசித் தடவையாக மனிதரை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 17 பாதுகாப்பாக பூமி திரும்பியது.

1983 - உலகக்கோப்பை காற்பந்துப் போட்டியில் வழங்கப்படும் பரிசுக்கிண்ணம் பிரேசிலில் அந்நாட்டு காற்பந்தாட்ட அமைப்பின் தலைமையகத்தில் வைத்துத் திருடப்பட்டது.

1984 - ஹொங்கொங்கின் ஆட்சியை ஜூலை 1, 1997 இல் மக்கள் சீனக் குடியரசிடம் மீண்டும் ஒப்படைக்கும் ஒப்பந்தம் சீனத் தலைவர் டெங் க்ஸியாவோபிங், பிரித்தானியப் பிரதமர் மார்கரெட் தாட்சர் ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டது.

1986 - சோவியத் எதிர்ப்பாளி அந்திரேய் சாகரொவ் வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

1997 - ஆங்கிலத் திரையுலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய Titanic திரைப்படம் முதன் முதலில் திரையிடப்பட்டது.

2000 - யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 3 வயதுக் குழந்தை உட்பட 8 பொதுமக்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

Tuesday, December 18, 2012

வரலாற்றில் இன்று

டிசம்பர் 18 • 1271 – குப்லாய் கான் தனது சீனப் பேரரசின் பெயரை “யுவான்” என மாற்றிக் கொண்டான். யுவான் வம்சம் ஆரம்பமானது.
  1505 – பெல்ஜிய மன்னன் ஜோன் IX வான் ஹோர்ன் தூக்கிலிடப்பட்டான்.
  1642 – ஏபெல் டாஸ்மான் நியூசிலாந்தில் காலடி பதித்த முதலாவது ஐரோப்பியரானார்.
  1787 – நியூ ஜெர்சி ஐக்கிய அமெரிக்காவில் 3வது மாநிலமாக இணைந்தது.

 • 1865 - அமெரிக்க அரசியல் சட்டத்தில் 13வது திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி அமெரிக்காவில் கொத்தடிமை முறை அடியோடு அழிக்கப்பட்டது.

  1911 – சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கையின் சட்டசபைக்கு தேசியப் பிரதிநிதியாகத் தெரிவானார்.
  1926 – துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.
  1935 – இலங்கை சமசமாஜக் கட்சி என்ற இடதுசாரிக் கட்சி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது.
  1941 – ஹொங்கொங்கின் பிரித்தானிய ஆளுனர் சரணடைய மறுத்ததைத் தொடர்ந்து ஜப்பான் ஹொங்கொங் மீது படையெடுத்தது.
  1944 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் விமானப்படை விமானங்கள் சீனாவின் ஹன்கோவ் நகரில் ஜப்பானிய இராணுவத்தளத்தின் மீது குண்டுகளை வீசின.
  1961 – இந்தோனீசியா டச்சு நியூ கினியை ஆக்கிரமித்தது.
  1966 – சனி கோளின் சந்திரன் எப்பிமேத்தியஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
  1973 – சோவியத் விண்கலம் சோயூஸ் 13 வலன்டீன் லேபெடெவ், பியோத்தர் கிளீமுக் ஆகியோருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.

 • 1979 - கலிபோர்னியாவில் ஸ்டான்லி பாரெட் என்பவர் Sound Barrier எனப்படும் ஒலியை விஞ்சும் வேகத்தில் மணிக்கு 1190 கிலோ மீட்டல் வேகத்தில் தனது ராக்கெட் காரை ஓட்டி சாதனை செய்தார்.

  1987 – லரீ வோல் தனது பேர்ள் கணினி நிரலாக்க மொழியை வெளியிட்டார்.
  1990 – ஈழப்போர்: இலங்கையின் திருகோணமலை இராணுவத் தளபதி லக்கி விஜயவர்த்தனா கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
  1997 – எச்.டி.எம்.எல் 4.0 வெளியிடப்பட்டது.
  1999 – ஈழப்போர்: கொழும்பு நகரசபை முன்னரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது, ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் தனது வலது கண்ணை இழந்தார்.
  2005 – சென்னையில் வெள்ள நிவாரணம் பெறுவதில் ஏற்பட்ட நெருக்கடியில் 42 பேர் உயிரிழந்தனர்.

Monday, December 17, 2012

"BIOS" பற்றிய சில தகவல்கள் .....

பயாஸ் (BIOS)என்றால் என்ன?

Basic input output System என்பதையே சுருக்கமாக பயாஸ்(BIOS) என அழைக்கின்றனர். பொதுவாக ஒவ்வொரு கணினியும் இயங்கஆரம்பிக்கும்போது முதலில் அதனுடைய அனைத்து உள்உறுப்புகளின் திறன் அதன் தற்போதைய நிலை போன்றவற்றை தனக்குதானே சரிபார்த்துக் கொள்ளும்.இச்செயலை Power on Self & Test என்றும் சுருக்கமாக Post என அழைப்பர். பின்னர் கணினியில் கருமையான திரை ஒன்று தோன்றி கணினியின் பாகங்களான தாய்ப்பலகை (Mother board),நினைவகம்(Memory) ஆகியவற்றை பற்றிய மிகமுக்கிய அத்தியாவசியமான தகவல்களை திரையில் காண்பிக்கும். இந்த சமயத்தில் விசைப்பலகையில் Del அல்லது F2 விசையை தட்டினால் பயாஸ் அமைப்பு நீலவண்ணத்திரையாக மாற்றி காண்பிக்கும், இந்த பயாஸ்(BIOS)தான் கணினி இயக்கத்தின் போது வன்பொருளை (hardware) மென் பொருளுடன் (Software) ஒத்தியங்குகிறதா என ஒப்பிட்டுபார்த்து சரியாக இருந்தால் மட்டும் இயக்கமுறைமையை(Operating System) இயக்க அனுமதிக்கும்.இதனை மேம்படுத்தி நிகழ் நிலைப்படுத்தும் (upgradable) மென் பொருட்களை இதில் முன் கூட்டியே அதன் உற்பத்தியாளர்களால் நிறுவப்பட்டுள்ளன.

ஒரு கணிப் பொறி இயங்குவதற்கு முன்பு இந்த பயாஸ் ஆனதுஅதில் ஒரு இயக்க முறைமையை (Operating System (OS)) இயங்குவதற்கு வேண்டிய ஒரு சில அடிப்படை செயல்கள் சரியாக உள்ளதா என சரிபார்க்கிறது. இந்த ஆரம்ப பணிகளை இயக்கமுறைமையானது(Operating System (OS)) தானாக செய்து கொள்ளாது Post செயல்,சவுன்கார்டு, USB வழித்தடம், நுழைவாயில் (Ports) ,கட்டுப்பாடுகள் (Control), தரவுகளை தேக்கும்சாதணங்கள் (Storage Device) போன்றவைகள் ஒரு கணினியில் சரியான நிலையில் இருக்கிறதா என பயாஸானது முதலில் பரிசோதிக்கிறது. இந்த அடிப்படை பணிமுடிந்து இவைகளனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே இயக்கமுறைமையை(Operating System (OS)) இயங்க பயாஸ்அனுமதிக்கிறது

1. காத்திருமுறைமை (Standby mode)

நம்முடைய கணினி இயக்கத்தின் காத்திருமுறைமையை மூன்று நிலைகளில் பராமரிக்கலாம் S0 என்பது செயல்படும் சாளர குழல் ஆகும் S1 மற்றும் S3 ஆகியவை மின்சேமிப்பு நிலையாகும், இயல்பு நிலையில் பயாஸ் ஆனதுS1 நிலையில் இருக்கும்படி அமைத்திருப்பார்கள் இந்த நிலையில் கணினி செயல்படும் வேகம் S3 யை விட அதிகமாகும் ஆனால் S3யை விட 50% மின்சாரம் அதிகமாக பயன்படுத்திக் கொள்ளும்.

இந்த S3 நிலையில் செயல்படவேண்டிய முக்கிய பதிவேடுகளின் இயக்கத்தை தற்காலிமாக நிறுத்திவைக்கிறது அதனால் குறைந்த அளவு மின்சாரமே உபயோகபடுதப்படுகிறது.

ஆனால் இந்த S3 நிலைக்கு உங்கள் கணினியை மாற்றுவதற்கு விரும்பினால் அதற்கு முன்பு உங்கள் தாய்ப்பலகை (Mother board) இந்த நிலையை கையாளும் தன்மையுடையதாக இருக்கிறதாவென பரிசோதித்து பார்க்கவும் அவ்வாறு இல்லையெனில் S1 நிலையையே தொடர்ந்து பராமரிக்கவும்.

2. வேகமான தொடக்க இயக்கம் (Faster Booting)

கணினியின் தொடக்கஇயக்கத்தின்போது உள்ளுறுப்புகளை, இயக்ககங்களை((Drives) பரிசோதித்து நினைவகத்தில் ஏற்றும் செயல்களை தாண்டிசெல்லும் ( By Pass) அமைப்பை இயலும் (Enabled) என அமைப்பதன் மூலம் காத்திருக்கும் நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

3. வளங்களை திறனுடன் பயன்படுத்துதல் (Effective usage of Resources)

தாய்ப்பலகையுடன் (Mother board) கூடுதலான இயக்கக கட்டுப்பாடுகளை (Drive controller) அமைப்பதன் மூலம் S-ATA, P-ATA போன்ற நுழைவு வாய்ப்புகள் அமைக்கப்பட்டு கூடுதலான பயன் கிடைக்கும்படி செய்யப்படுகிறது,

இந்த கூடுதல் வசதி தேவையில்லையெனில் இதனை பயன்படுத்தவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு.இவைகளின் இணைப்பை துண்டிக்கச் செய்வது நல்லது அதனால் தொடக்க காத்திருப்பு நேரம் குறைவதற்கு வாய்ப்புள்ளது.

4. கணினியை தானாக தொடங்க செய்வது (Starting PC Automatically)

ஒரு கடிகாரத்தில் அலாரம் அடிப்பதற்கான நேரத்தை அமைத்து விடியற்காலையில் நாம் கண்விழித்தெழுவதை போன்று கணினியும் மீண்டும் எப்போது இயங்கத் தொடங்க வேண்டும் என நேரம் அமைத்துவிட்டால் தானாகவே கணினியானது குறிப்பிட்ட நேரத்திற்கு இயங்கத் தொடங்கும் இது Stand by mode லிருந்து தொடங்குவது அன்று கணினி இயக்கத்தை நிறுத்திய பிறகும் தானாகவே இயங்கத் தொடங்குவதுஆகும் என்பதை மனதில்கொள்ளுங்கள்,

5. வளாக இணைப்பு பரிசோதிப்பை இயங்காதிருக்க செய்தல் (Deactivating LAN Check)

சில கணினிகள் இணைய இணைப்பு மற்றும் வளாக இணைப்புடன் இருக்கும் அந்த நிலையில் கணினி இயங்க தொடங்குபோது இணைய இணைப்பு வளாக இணைப்பு ஆகியவற்றின் சாதனங்கள் அதற்கான வாயில்களுடன் மிகச்சரியாக பொறுத்தப்பட்டுள்ளதா என பரிசோதிக்கும் சரியாக இல்லையெனில் அடுத்த செயலுக்கான கட்டளை வரும்வரை அப்படியே இயங்காமல் காத்திருக்கும் இந்த இணைப்புகள் இல்லாத நிலையில் இதற்கான சாதனங்களை பரிசோதிக்கும் செயலை இயங்காதிருக்க(Deactive) செய்வது நல்லது.

6. தொடக்க வரிசைகிரமத்தை போதுமானதாக செய்க (Boot Sequence optimization)

பயாஸ் ஆனது வன்தட்டு (Hard Disc)நெகிழ்வடடு Floby Disc குறுவட்டு CD or DVD அல்லது வலை இணைப்பு Net work போன்ற எந்த இயக்ககத்திலிருந்து வேணடுமானாலும் தொடங்கும்படியான வாய்ப்பை அறவே நீக்கிவிடுக, அதற்குபதிலாக Hard Disc முதலிலும் அதன்பிறகு CD or DVD யும் அதன்பிறகே Net work லும் என்றவாறான வரிசைகிரமத்தில் இயங்க தொடங்க வேண்டும் என அமைத்து கால விரையத்தை தவிர்த்திடுங்கள்

7. வன்தட்டு இயக்ககததை அமைவு செய்தல் (Configuare S-ATA hard drives)

புதிய தாய்ப்பலகை (Mother board)கள் ஒரு S-ATA வை ஆதரித்தால் மட்டும S-ATA வன்தட்டு இயக்கக அமைவை பயன்படுத்தலாம். இதில் மூன்று வகையான இயக்க முறைகள் உள்ளன,

1. IDE யின் நிலை (இது முந்தைய P-ATA வுக்கானது).

2. உயர்திறன் AHC1 நிலை (இது இரண்டாவது தலைமுறை S-ATA வுக்கானது.)

3. மிக வேகமான பாதுகாப்பான RAID தொழில்நுட்ப நிலை.

பொதுவாக புதிய கணினிகளில் உள்ள இயல்புநிலை IDE யை இதனுடைய திறன் ஒரு பொருட்டாக இல்லையெனினும் அப்படியே விட்டுவிடுவது நல்லது. ஆயினும் இரண்டு வன்தட்டுகளை (Hard Drive) பயன்படுத்துவதால் RAID 0 தொழிலநுட்ப நிலை.யை பயன்படுத்துவது நல்லது. தரவுகள் இரண்டுஇடங்களில் பராமரிக்கவேண்டுமெனில் RAID 1 ஐ பயன்படுத்துங்கள். ஆயினும் சாளரத்தை நிறுவுமுன் உற்பத்தியாளரால் வழங்கப்பட்ட தாய்ப்பலகை (Mother board)இயக்ககத்தை நிறுவுக.

8. ஆபத்து நிலையில் பயாஸிற்கு புகலிடம். (Resort to BIOS for rescue)

கணினியில்உள்ள வன்பொருளின் உறுப்புகளில் அதிகப்படியான மாறுதல் ஏதேனும் செய்திருந்தால் பயாஸ் ஆனது கணினியின் தொடக்கத்தை மறுத்து (தடுத்து) நிறுத்திவிடும். இவ்வாறான நேரத்தில் உடனடியாக கணினிக்கு வரும் மின் தொடர்பை துண்டித்துவிடுங்கள். பின்னர் மின்தொடர்பிற்கு உதவும் மின்கம்பியை பொருத்துவாயிலிருந்து கழட்டிவிடுங்கள். தட்டையான வட்டவடிவமான மையசெயலகத்தின் மின்கலண்களை (CPU Cell) கழட்டி 60 செகண்டு கழித்து மீண்டும் பொறுத்துக. இவ்வாறு செய்வதால் பயாஸ் அமைவை இயல்பு நிலைக்கு கொண்டு சேர்த்துவிடும்.

9. மையசெயலகத்தின் சுழற்சி இயக்கத்தை தானாகவே ஒழுங்குபடுத்துதல்(Automatic Regulation of the CPU Cycle)

Intel and AMD ஆல் உருவாக்கப்பட்ட தாய்ப்பலகையின்((motherboard) கடிகார வேகத்தை மையசெயலகம் ஆனது சும்மா இருக்கும் நிலையில் குறைத்து அமைப்பது மையசெயலகத்தின் மின்நுகர்வும், வெப்ப உற்பத்தியும் குறைத்துவிடும். அதனால் குறைந்த அளவு மின்சாரத்தை மட்டுமே எடுத்துக்கொள்ளும்,, இதற்காக AMD தாய்ப்பலகை (Mother board)எனில் Auto என்றும் Intel தாய்ப்பலகை (Mother board)எனில் enabled என்றும் அமைத்திடுக்.

10. மையசெயலகத்தின் (CPU) இயக்கத்தை நாமே அமைக்கலாம்,

மையசெயலகத்தின் (CPU) கடிகார வேகத்தின் பெருக்குதல் காரணியை 9லிருந்து 6 ஆக குறைத்தால் (உதாரணமாக இண்டல் கோர் 2Duo & 4300 ஆனது 200Mzhs x 9 =1800 Mzhs என இருப்பதை 6 ஆக குறைப்பது) வேகத்தை பத்து சதவிகிதம் மட்டும் கூடுதலாக செய்து. பெருக்குதல் காரணியான FSB யை கூடுதலாக்காமலேயே குறைந்த கடிகார வேகத்தில் இயங்கும்படியும் குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தும்படியும் மாற்றியமைக்க முடியும். ஆயினும் தானியங்கு அமைப்பை அப்படியே விட்டுவிடுவது மிகப்பாதுகாப்பானது.

11. மின்விசிறியை தானாக இயங்குமாறு அமைத்தல்(Automatic Regulated Fans)

மையசெயலகத்தில் (CPU) ஏற்படும் வெப்பத்தை தணிப்பதற்கான மினிவிசிறியை Enable அல்லது Auto என தக்கவாறு அமைப்பது நல்லது. சில மையசெயலகத்துடன் (CPU) இருக்கும் மினிவிசிறிகளின் இயங்கு திறனை (Performance ) 1முழுதிறனுடன் (full Performance ) அதிக வேகத்துடன் இயங்குவது, 2 போதுமான அளவிற்கு மட்டும் இயங்குவது(Optimization) 3 குறைந்த அளவு மட்டும் இயங்குவது (Silent) என மூன்று வாய்ப்புகளில் வைத்திருப்பார்கள். நாம் விரும்பியவாறு மையசெயலகத்தினுடையCPU விசிறியின் வேகத்தை மாற்றி அமைக்கலாம். எச்சரிக்கை நாம் எந்த வாய்ப்பை தோர்ந்தெடுக்கின்றோமோ அதற்கேற்றவாறு மின் நுகர்வும் இருக்கும்.

12. நினைவகத்தை அதிவேகமாக்குதல்(Memory Over Clocking)

RAM நினைவகத்தை போதுமான அளவு நினைவக கட்டுப்பாடு பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக சில உள்ளுறை சுனக்க மதிப்பை (Latency value) பராமரிக்க வேண்டும். இவைகள் சாதாரணமாக நெடுவரிசையின் முகவரிநேர சமிக்சையை (Column Address Stroke சுருக்கமாக CAS) கடிகார இயக்க சுழற்சியில் குறிப்பிடுவார்கள். இந்த சமயத்தில் உண்மையில RAM Latency யை தாய்ப்பலகையானது (Mother board) பயன்படுத்திகொள்ளாது. உதாரணமாக RAM on Latency WWW-12 என்பது 555-15 என இயல்பு நிலையில் தாய்ப்பலகை (Mother board) ஆதரிக்கும்.

இதனை நாமே நினைவக கடிகார வேகத்தை உண்மை நிலையைவிட குறைவாக அமைப்பது RAM ன் திறனை உயர்த்த உதவுகிறது. அதிகபட்சமாக ஒவ்வொன்றும் ஒரு கடிகார சுற்று அளவிற்கு குறையாமல்இருந்தால் நல்லது. இதனை ஒரு தாய்ப்பலகை (Mother board) ஏற்றுக்கொண்டால் கணினி இயங்க ஆரம்பிக்கும். இல்லையெனில் BIOS-ல் இதனை மறு அமைவு செய்ய வேண்டும். சாளரத்தில் (Window) இதன் மதிப்பை பரிசோதிக்க CPU-3 என்ற கருவியை பயன்படுத்தி கொள்ளவும்.

13. கடிகார சுற்று பொது(Clock Gen)

இதனை இயலுமை (Enable) செய்வதால் பயனாளர் மையசெயலகத்தின் (CPU) கடிகார வேகத்தை PLLControl வாய்ப்பிலிருந்து FSB மற்றும் RAM துணையுடன் மாற்றி அமைக்க முடியும். ஆனால் இது சிறிது ஆபத்தானது எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.

நன்றி : கரூர் கவியன்பன்

வரலாற்றில் இன்று

டிசம்பர்  17

பாலியல் பெண் தொழிலாளர்களுக்கெதிரான வன்முறையை நிறுத்தும் அனைத்துலக நாள்

1398 - சுல்தான் மெஹ்மூடின் படைகளை டில்லியில் வைத்து டீமூர் படைகள் தோற்கடித்தன.

1577 - பிரித்தானிய அரசி முதலாம் எலிசபெத்துக்காக அமெரிக்காக்களின் பசிபிக் பெருங்கடல் பகுதியை ஆராய்வதற்காக பிரான்சிஸ் டிரேக் இங்கிலாந்து, பிளைமவுத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டான்.

1718 - பெரிய பிரித்தானியா ஸ்பெயினுடன் போரை அறிவித்தது.

1819 - சிமோன் பொலிவார் பெரிய கொலம்பியாவின் விடுதலையை அறிவித்தான்.

1834 - அயர்லாந்தின் முதலாவது தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் டென்னசி, மிசிசிப்பி, கென்டக்கி ஆகிய மாநிலங்களில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

1903 - ரைட் சகோதரர்கள் வடக்கு கரொலைனாவில் முதன்முதலில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்தனர்.

1926 - லித்துவேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து மக்களாட்சி அரசு கலைக்கப்பட்டு அண்டானஸ் சிமெத்தோனா ஆட்சியைப் பிடித்தார்.

1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் வடக்கு போர்ணியோவில் இறங்கினர்.

1946 - தமிழ் நாட்டில் அவிநாசிலிங்கம் செட்டியார் கல்வியமைச்சராக இருந்த போது அவரது பெரும் முயற்சியால் தமிழ் வளர்ச்சிக் கழகம் தொடங்கப்பட்டது

1947 - இலங்கைத் தமிழரசுக் கட்சி அமைக்கப்பட்டது.

1957 - அமெரிக்கா முதல் முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாகச் பரிசோதித்துப் பார்த்தது.

1961 - கோவாவை இந்தியா, போர்த்துக்கலிடம் இருந்து கைப்பற்றியது.

1989 - 25 ஆண்டுகளின் பின்னர் பிரேசிலில் முதலாவது பொதுத்தேர்தல் இடம்பெற்றது.

Sunday, December 16, 2012

வரலாற்றில் இன்று

டிசம்பர் 16


பெருமணல் கார்னெட் எதிர்ப்பு
 
1431 - இங்கிலாந்தின் ஆறாம் ஹென்றி பிரான்ஸ் மன்னனாக பாரிசில் முடிசூடினான்.
1497 - வாஸ்கொடகாமா முன்னர் பர்தலோமியூ டயஸ் சென்றடைய முடியாத தென்னாபிரிக்காவின் அட்லாண்டிக் கரையோரத்தில் உள்ள நன்னம்பிக்கை முனையை சுற்றி வந்தார்.

1598 - கொரிய, ஜப்பானியக் கடற்படைகளுக்கிடையே இடம்பெற்ற சமரில் கொரியா வெற்றி பெற்றது.

1653 - சேர் ஒலிவர் குரொம்வெல் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து நாடுகள் அடங்கிய பொதுநலவாயத்தின் தலைவரானார்.

1707 - ஜப்பானின் ஃபூஜி மலை கடைசித் தடவையாக வெடித்தது.

1773 - அமெரிக்கப் புரட்சி: பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் - அமெரிக்கர்கள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் கப்பல்களில் ஏறி தேநீர் பெட்டிகளை பாஸ்டன் துறைமுகத்தில் எறிந்தனர்.

1920 - மிக மோசமான நில நடுக்கங்களுள் ஒன்று சீனாவின் கான்ஸீ மாநிலத்தைத் தாக்கியது, ரிக்டர் அளவுகோளில் எட்டாக பதிவான இயற்கைப் பேரிடரில் சுமார் 200 ஆயிரம் பேர் மடிந்தனர்.

1925 - இலங்கை வானொலியின் வானொலி சேவை கொழும்பில் ஆரம்பம்.

1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் சரவாக்கீன் மிரி நகரைக் கைப்பற்றினர்.

1946: ஐ.நாவில் தாய்லாந்து இணைந்தது.

1950: கொரிய யுத்தத்தில் சீனப்படைகள் வடகொரிய
படையினருடன் இணைந்ததையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன் அவசரகால நிலையை
பிரகடனப்படுத்தினார்.


1971 - வங்காளதேச விடுதலைப் போரில் பாகிஸ்தான் இராணுவம் சரணடைந்து போர் முடிவுக்கு வந்தது.

1971 - பாஹ்ரேன் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

1986: சோவியத் யூனியனின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக கஸகஸ்தான் பிராந்தியத்தில் போராட்டம் ஆரம்பமாகியது.

1991 - கசக்ஸ்தான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது
 
2000 - ஜூபிடர் கோளைச் சுற்றும் Ganymede என்ற நிலாவில் ஐஸ் மேற்பரப்பின் கீழ் திரவ உப்புநீர்க்கடல் இருப்பதற்கான தடயங்கள் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்தனர்.