Digital Time and Date

Welcome Note

Thursday, January 31, 2013

"""""பள்ளி சிறுமிக்காக தெருவோரம் உட்கார்ந்திருந்த அபுதாபி இளவரசர்!"""""

"""""பள்ளி சிறுமிக்காக தெருவோரம் உட்கார்ந்திருந்த அபுதாபி இளவரசர்!"""""











 


 பள்ளிக்கு வெளியே செய்வதறியாது தனியாக நின்று கொண்டிருந்த சிறுமியின் பெற்றோர் வரும் வரை அவருக்கு துணையாக அபுதாபி இளவரசர் ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் சாலையோரத்தில் அமர்ந்திருந்தார்.

அபுதாபியின் இளவரசரும், ராணுவ துணை தளபதியுமான ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் காரில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது ஒரு பள்ளிக்கு வெளியே சிறுமி ஒருவர் தொலைந்தது போன்று தனியாக நின்று கொண்டிருந்திருக்கிறார். இதைப் பார்த்த இளவரசர் காரை நிறுத்துமாறு கூறி தனது உதவியாளருடன் அந்த சிறுமி அருகே சென்று நீ ஏன் இங்கு நின்று கொண்டிருக்கிறாய் என்று கேட்டார்.

அதற்கு சிறுமி, தனது தந்தை வந்து அழைத்துச் செல்ல வேண்டும். ஆனால் இன்னும் வரவில்லை, அதனால் தான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

சிறுமியை தனது காரில் வீட்டில் இறக்கிவிடுவதாக இளவரசர் தெரிவித்தார். அதற்கு சிறுமியோ முன் பின் தெரியாதவர்களுடன் பேசக் கூடாது என்று தனது தந்தை தெரிவித்துள்ளதாக கூறினார்.

உடனே உதவியாளர் அச்சிறுமியிடம் இவர் யாரோ அல்ல அபுதாபியின் இளவரசர் என்று கூறினார். அதற்கு சிறுமி, அது எனக்குத் தெரியும். ஆனால் பழக்கமில்லாதவர்களுடன் செல்லக் கூடாது என்று என் தந்தை கூறியுள்ளார் என்றார்.

இதைக் கேட்ட இளவரசர் சிரித்துவிட்டார். சிறுமியின் தந்தை வரும்வரை அவருக்கு துணையாக சாலையோரத்தில் அமர்ந்திருந்தார்.

இளவரசர் சாலையோரத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்த மக்கள் ஆச்சரியப்பட்டனர்.

நம் ஊர் 'சாக்கடை கமிஷன்' கவுன்சிலர்களாவது இதைச் செய்வார்களா...??

அன்புள்ள கமல் அவர்களுக்கு

Thaagam Senguttuvan
அன்புள்ள கமல்
அவர்களுக்கு வணக்கம் ....1992-93 ஆம்
ஆண்டுகளில் இயங்கிய கமல் நற்பணி இயக்க
அனைதுக்கல்லூரி மாணவர் அமைப்பின் பச்சையப்பன்
கல்லூரி பொறுப்பாளர் செங்குட்டுவன்
எழுதுவது ! இன்றைக்கு யாதவர் சங்கத்தில் உள்ள
நண்பர் குணசீலன் அன்று உங்கள் நற்பணி இயக்கத்தின்
தலைவர் . நாங்கள் படித்த
சென்னை முத்தையா செட்டியார் மேல்நிலைப்பள்ளி
யில் நீங்களும் படித்தீர்கள்
என்று அன்றைக்கு பெருமைகொள்வோம்
நாங்கள் .1992 ஆம் ஆண்டு தாகம்
அனைதுக்கல்லூரி மாணவர் இதழாய் வெளியிடும்
விழாவுக்கு நீங்கள் வருவதாக
இருந்து ,குணா படத்தின் படப்பிடிப்புக்
காரணமாக நீங்கள் வாழ்த்து செய்தி மட்டும்
அனுப்புனீர்கள். தாகத்தின் முதல்
ஆண்டு விழாவில் கலந்துக்கொள்வேன ்
என்று சொன்னீர்கள் ."சுட்டி" "தேன்மழை " போன்ற
மாணவர் இதழ்கள் போல மாணவர்
பருவத்தோடு நின்றுவிடாமல் "தாகம் "
தொடர்ந்து வெளிவரவேண்டும்
என்று வாழ்த்தினீர்கள் . இந்த 22 ஆண்டுகளில்
தாகத்தில்
உங்களை விமர்சித்து எத்தனையோ க்கட்டுரைகள்
வெளிவந்து விட்டது .இன்றைக்கு விஸ்வரூபத்திற்க
ாக நீங்கள் தமிழ் நாட்டை விட்டே செல்கிறேன்
என்று சொன்னபோது எனக்கும் கண்
கலங்கியது ...ஆனால் கமல், உங்களை 5
வயது முதல்
பாராட்டி சீராட்டி இன்று உங்களை கலைஞானியாக ,கோடீஸ்வரனாக
உயர்த்திய தமிழ் நாட்டை எவ்வளவு எளிதாக
உங்களால் தூக்கி வீச முடிகிறது . காஷ்மீர்
முதல் கேரளா வரை என்று தமிழ் நாட்டை நீங்கள்
தவிர்தபோது இஸ்லாமிய சகோதரனை விட
எனக்கு உங்கள் மீது கடும் கோபம் வந்தது ! 50
ஆண்டுகாலம் உங்களை சுமந்த நாட்டிற்கு ,உங்கள்
நாத்துடுக்கால் சிதம்பரம் நிகழ்ச்சியில்
பேசிய காரணத்தால், உங்களை இன்றைய
அரசு பந்தாடும் நிலையில்,தமிழர் களும் தமிழ்
நாடும் என்ன பாவம்
செய்தது உங்களை வளர்த்ததை த்தவிர ?
ராசி அழகப்பன்,குணசீல ன்,உங்கள் ராஜ்கமல்
நிறுவனத்தின் நிழலாக இருந்த டி.என் .யெஸ்
(குணா படத்தை தயாரித்து அழிந்து போனவர் )
அய்யா அவர்களின் மகன்
சக்தி .புதுக்கல்லூரி இப்ராஹிம்
இப்படி எத்தனையோ தளபதிகள் அன்று உங்களுடன்
இருந்தனர் .இன்று அவர்கள் எல்லாம் எங்கே ?
இந்தியாவில் ஏதேனும் ஒரு மதசார்பற்ற
மாநிலத்தில் தங்குவேன்
என்று சொல்கிறீர்களே ...கமல் உண்ட
வீட்டிற்க்கே ரெண்டகம்
செய்கிறீர்களே ,இந்தியாவில் தமிழ்நாட்டைத்
தவிர ஒரு மதசார்பற்ற நாட்டை உங்களால்
சொல்லமுடியுமா ? அக்ரகாரத்தில் பிறந்த
உங்களை இன்று இந்த மதச்சார்பற்ற
நாடுதானே உச்சியில் நிற்க்கவைத்துள் ளது ?
ஏதாவது ஒரே ஒரு அக்ரகாரத்து அம்பி உங்களுக்காக
இன்று சாலை மறியல் செய்திருப்பானா ? உங்கள்
அக்ரகாரத்து எழுத்தாளர்கள்
சோ ,மதன் ,s .v .சேகர் ,உங்கள் குரு பாலச்சந்தர்
உங்களை சந்தித்திருப்பா ர்களா ? இன்று உங்கள்
வீட்டின் முன் அழுதவன் எல்லாம் இளிச்சவாய
தமிழன் தானே ?எனக்கு அரசியல்
கிடையாது ..மதம்
கிடையாது என்று சிறு பிள்ளை தனமாக
புலம்புகிறீர்களே  கமல் ,ஹேராம் ,உன்னைப் போல்
ஒருவன் ,விஸ்வரூபம் ,அன்பேசிவம் போன்றப் படங்கள்
அரசியல் பேசாமல் எதை ப்பேசின ?மதம் பேசாமல்
எதை பேசின ? 1983 இல் ஈழப் படுகொலைக்காக
உங்கள் தலைமையில் பல்லாயிரம் ரசிகர்கள்
ஒன்று திரண்டு பேரணி நடத்தினார்களே இன்று உங்களுக்கு அந்த
உணர்வே இல்லையா ? ஏன் இலங்கை தீவிரவாதம்
பற்றி உங்களால் படம் எடுக்க இயலாதா ?
அதற்கு ஒபாமா ஒப்புதல் தரமாட்டாரா ? காரணம்
நீங்கள் இந்தியனாகி பல காலம்
ஆகிவிட்டது கமல் !
தமிழனாக ..பிறகு இந்தியனாக ,,,இந்தியாவில்
வாழ முடியாதப் பட்சத்தில்
அமெரிக்கனாக ...அடடா...என்ன ஒரு மனித நேயம்
உள்ள மனிதர் ..நடிகர் !
இன்றைக்கு இங்கு நடக்கும் கூத்து ,உலகில்
எங்காவது நடக்குமா கமல்? உங்களை ஆளாக்கிய
மண்ணிற்காக நீங்கள் ஒரே ஒரு படம்
எடுத்ததில்லை ..ஆனால் ,உங்களை அமெரிக்காவின்
விசுவாசியாக காட்டிக்கொள்ள, கேவலம் ஆஸ்கார்
விருதுக்காக பலநூறு ஆண்டுகளாக நம்முடன்
பிணைந்திருக்கும ் இஸ்லாமிய
சகோதரர்களை தொடர்ந்துக் கொச்சைப்
படுத்திக்கொண்டே இருப்பீர்கள் ?
உங்களுக்கு தமிழக மக்கள்
ஆதரவு தெரிவிக்கவில்லை என்ற உடன்
இங்கிருந்து வெளியேறுவேன்
என்று அழுகிறீர்கள் ! வெட்கம் வெட்கம் ! நீங்கள்
தமிழர்கள் படும் அவலங்களை வைத்து ஒரு படம்
எடுத்து அதற்க்கு தடை என்றால் தமிழகம்
உங்களை விட்டுக்கொடுத்த ிருக்குமா ? நீங்கள்
சிறந்த நடிகர்தான் ..ஆனால்
தமிழகத்திற்கு நண்றி உள் ள மனிதனா ?
என்று உங்களை தொட்டு க்கேட்டுப் .பாருங்கள் .இந்த
தமிழ்நாடும் தமிழனும்
உங்களுக்கு க்கோடி கோடியாக அள்ளித்தரவேண்டும், ஆனால் நீங்கள் இந்த மக்களைப் பற்றி படம்
எடுக்கவில்லை என்றால் கூடப்
பரவாயில்லை எதாவது ஒரே ஒரு தமிழர்
பிரச்சனைக்காக நீங்கள் குரல்
கொடுத்தது உண்டா கமல் ? தயவுசெய்து நீங்கள்
போகும் ஊரில் உள்ள மக்களுக்காகவாவத ு குரல்
கொடுங்கள் ...அவர்களையும்
ஏமாற்றி விடாதீர்கள் ? எங்களைப் போல் அவர்கள்
ஏமாற மாட்டார்கள் !போகும் போது இன்று தமிழக
ரசிகர்கள் உங்கள் கடன் அடைக்க அனுப்பும்
பணத்தையும் மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள் !
அடுத்த ப் படம் எடுக்க உதவும் ! இந்தக் கடிதம்
உங்களுக்கு மட்டும்
அல்ல .எங்களை இன்றைக்கு சுரண்டிக்கொண்டி
ருக்கும் அத்தனை நடிகர்களுக்கும்
தான் .தயவு செய்து அவர்களையும் உங்களுடன்
மதச்சார்பற்ற நாடான குஜராத்திற்கு அழைத்துச்
சென்று விடுங்கள் ! நாங்கள் நிம்மதியாக
வாழ்கிறோம் !!
என்று அன்புடன்
தாகம் செங்குட்டுவன்
மற்றும் பழைய நற்பணி மன்ற தோழர்கள் . —

Wednesday, January 30, 2013

வரலாற்றில் இன்று

ஜனவரி 30


நிகழ்வுகள்

1648 - எண்பதாண்டுப் போர்: நெதர்லாந்துக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் உடன்பாடாகியது.

1649 - முதலாம் சார்ல்ஸ் மன்னன் தூக்கிலிடப்பட்டான். அவனது மனைவி ஹென்றியேட்டா மரீயா பிரான்ஸ் சென்றாள்.

1649 - பொதுநலவாய இங்கிலாந்து என்ற குடியரசு அமைக்கப்பட்டது.

1649 - இளவரசர் சார்ல்ஸ் ஸ்டுவேர்ட் இரண்டாம் சார்ல்ஸ் தன்னை இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றின் மன்னனாக அறிவித்தான். எனினும் எவரும் அவனை அங்கீகரிக்கவில்லை.

1750: அமெரிக்க ஜனாதிபதி அன்ட்ரூ ஜக்ஸனை சுட்டுக்கொல்ல முயற்சி நடைபெற்றது. அமெரிக்க ஜனாதிபதியொருவரை கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட முதலாவது சம்பவம் இது.

1820 - எட்வர்ட் பிரான்ஸ்ஃபீல்ட் அண்டார்டிக்காவில் தரையிறங்கினார்.

1835 - ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆண்ட்ரூ ஜாக்சன் கொலை முயற்சியில் இருந்து தப்பித்தார்.

1847: அமெரிக்காவின் யேர்பா புயெனா நகரத்தின் பெயர் சான் பிரான்ஸிஸ்கோ என மாற்றப்பட்டது.

1889 - ஆஸ்திரியாவின் இளவரசர் ருடோல்ஃப் தனது காதலியுடன் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

1930 - உலகின் முதலாவது radiosonde சோவியத் ஒன்றியத்தில் உருவாக்கப்பட்டது.

1933 - அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபராக (Chancellor) பதவியேற்றார்.

1943 - இரண்டாம் உலகப் போர்: உக்ரேனில் லேத்திச்சிவ் என்ற இடத்தில் யூதர்கள் ஆயிரக்கணக்கில் நாசிகளால் கொல்லப்பட்டனர்.

1945 - இரண்டாம் உலகப் போர்: பால்ட்டிக் கடலில் வில்ஹெல்ம் கூஸ்ட்லொஃப் என்ற பயணிகள் கப்பல் சோவியத் நீர்மூழ்கிக் கப்பலினால் தாக்கப்பட்டதில் அதில் பயணம் செய்த 9,000 பேர் கொல்லப்பட்டனர்.


1948 - இந்தியத் தலைவர் மகாத்மா காந்தி இந்துத் தீவிரவாதியான நாதுராம் கோட்சேயினால் படுகொலை செய்யப்பட்டார்.

1956: அமெரிக்க சிவில் உரிமை போராட்டத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் ஜுனியரின் வீட்டின் மீது குண்டுவீசப்பட்டது.

1964 - ரேஞ்சர் 6 விண்கலம் ஏவப்பட்டது.

1964 - தென் வியட்நாமில் ஜெனரல் நியுவென் கான் (Nguyen Khanh) இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.

1972 - வட அயர்லாந்தில் விடுதலைப் போராட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்ட 14 பேர் ஐக்கிய இராச்சிய துணை இரானுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1972 - பாகிஸ்தான் பொதுநலவாய அமைப்பிலிருந்து விலகியது.

1976 - தமிழ்நாட்டில் மு. கருணாநிதியின் திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது.

1994 - பியோத்தர் லேக்கோ சதுரங்க ஆட்டத்தில் உலகின் முதலாவது வயதில் குறைந்த கிராண்ட் மாஸ்டர் ஆனார்.

2000 - கென்யாவின் விமானம் ஒன்று அட்லாண்டிக் கடலில் ஐவரி கோஸ்ட் கரையில் வீழ்ந்ததில் 169 பேர் கொல்லப்பட்டனர்.

2003 - பெல்ஜியம் சமப்பால் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கியது.

2006 - தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் 5 பேர் மட்டக்களப்பு, வெலிக்கந்தையில் கடத்தப்பட்டனர்.

பிறப்புகள்


1882 - பிராங்கிளின் ரூஸ்வெல்ட், 32வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் (இ. 1945)

1899 - மாக்ஸ் தெய்லர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1972)

1910 - சி. சுப்பிரமணியம், இந்திய அரசியல்வாதி (இ. 2000)

1941 - டிக் சேனி, அமெரிக்காவின் 46வது துணைத் தலைவர்

1949 - பீட்டர் ஆகர், நோபல் பரிசு பெற்றவர்.

1974 - கிரிஸ்டியன் பேல், பிரித்தானிய திரைப்பட நடிகர்

இறப்புகள்

1832 - ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன், கடைசிக் கண்டி அரசன்

1891 - சார்ல்ஸ் பிராட்லா, ஆங்கில அரசியல் கிளர்ச்சியாளர் (பி. 1833)

1928 - ஜொஹான்னஸ் ஃபிபிகர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1867)

1948 - மகாத்மா காந்தி, (பி. 1869)

1948 - ஓர்வில் ரைட், ஐக்கிய அமெரிக்காவின் வானூர்தி நிபுணர் (பி. 1871]])

1969 - Georges Pire, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1910)

1981 - வில்லியம் கொபல்லாவ, இலங்கையின் முதலாவது சனாதிபதி (பி. 1897)

1991 - ஜோன் பார்டீன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1908)

2007 - சிட்னி ஷெல்டன், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1917)

சிறப்பு நாள்
இந்தியா - தியாகிகள் நாள்

உலக தொழுநோய் ஒழிப்பு நாள்

வரலாற்றில் இன்று

ஜனவரி 29


நிகழ்வுகள்
1595 - ஷேக்ஸ்பியரின் ரோமியோவும் ஜூலியட்டும் நாடகம் முதன் முதலாக அரங்கேறியது.

1676 - மூன்றாம் பியோதர் ரஷ்யாவின் மன்னனாக முடி சூடினான்.

1814 - நெப்போலியன் பொனபார்ட்டின் பிரெஞ்சு இராணுவம் பிரியென் நகரில் இடம்பெற்ற சமரில் ரஷ்யாவை வெற்றி பெற்றது.

1819 - ஸ்டாம்ஃபோர்ட் ராபில்ஸ் சிங்கப்பூரில் தரையிறங்கினார்.

1834: அமெரிக்காவில் தொழிலாளர் கிளர்ச்சியை அடக்குவதற்கு ஜனாதிபதி அன்ட்ரூ ஜக்ஸன் முதல் தடவையாக இராணுவத்தை பயன்படுத்தினார்.

1861 - கான்சஸ் ஐக்கிய அமெரிக்காவின் 34வது மாநிலமாக இணைந்தது.

1863 - ஐக்கிய அமெரிக்காவின் இடாகோ மாநிலத்தில் பெயார் ஆற்றருகில் இராணுவத்தினருக்கும் ஷோஷோன் பழங்குடிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமரில் பல நூற்றுக்கணக்கான பழங்குடிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

1886 – ஜெர்மனியரான கார்ல் பென்ஸ் பெட்ரோலினால் இயங்கும் முதலாவது தானுந்துக்கான காப்புரிமம் பெற்றார்.

1916 - முதலாம் உலகப் போர்: பாரிஸ் ஜெர்மனியரின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானது.

1918: சோவியத் யூனியனுக்கு எதிராக உக்ரேனில் கிளர்ச்சி ஏற்பட்டது.

1929 - சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட லியோன் ட்ரொட்ஸ்கி துருக்கியை அடைந்தார்.

1940 - ஜப்பான், ஒசாக்காவில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற தொடருந்து ஒன்று வெடித்ததில் 181 பேர் கொல்லப்பட்டனர்.

1944 - இரண்டாம் உலகப் போர்: போலந்தில் கொனியூச்சி என்ற இடத்தில் சோவியத் துணை இராணுவத்தினரினால் பெண்கள், குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 38 பேர் கொல்லப்பட்டனர்.

1946 - ஐக்கிய அமெரிக்காவில் CIG எனப்படும் மத்திய உளவுத்துறை குரூப் (Central Intelligence Group) அமைக்கப்பட்டது.

1987 - மோனலிசாவின் காதிற்குப் பின்புறம் உள்ள ஒரு நரம்பு வீங்கியிருந்ததால் முகத் தசைகள் விறைத்து செயலிழந்து போனதால்தான் அப்படிப்பட்ட புன்னகை பூக்க முடிந்தது என்று Physician's Weekly என்ற சஞ்சிகை யூகம் வெளியிட்டது. ஓவியப் பிரியர்களுக்கு வேம்பாகக் கசந்தது அந்தச் செய்தி.

1992 - இஸ்ரேலுடன் முழு அளவில் அரச தந்திர உறவை ஏற்படுத்திக் கொள்ளப் போவதாக இந்தியா அறிவித்தது.1996 - இத்தாலியில் வெனிஸ் நகரில் உள்ள ஓப்பரா மாளிகையான லா ஃபெனீஸ் தீயினால் அழிந்தது.

1996: அணுவாயுத பரிசோதனைகளை பிரான்ஸ் நிறுத்திக்கொள்வதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜக் சிராக் அறிவித்தார்.

2001: இந்தோனேஷியாவில ஜனாதிபதி அப்துர் ரஹ்மான் வாஹிட்டை இராஜினாமா செய்யக்கோரி பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் வீதியிலிறங்கி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

2005 - சீனாவின் பெருநிலப்பரப்பில் இருந்து 1949ம் ஆண்டிற்குப் பின்னர் முதற்தடவையாக வர்த்தக விமானம் ஒன்று தாய்வானுக்கு வந்து சேர்ந்தது.

பிறப்புகள்

1860 - ஆன்டன் சேகொவ், ரசிய எழுத்தாளர் (இ. 1904)

1866 - ரொமெயின் ரோலண்ட், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1944)

1926 - அப்துஸ் சலாம், நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானிய இயற்பியலாளர் (இ. 1996)

1970 - ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், இந்திய ஒலிம்பிக் வீரர்

இறப்புகள்

1934 - பிரிட்ஸ் ஹேபர், நோபல் பரிசு பெற்ற ஜெர்மனிய வேதியியலாளர் (பி. 1868)

1963 - றொபேட் புறொஸ்ட், அமெரிக்கக் கவிஞர் (பி. 1874)

1981 - பாலகிருஷ்ணன், நாதசுரக் கலைஞர் (பி. 1945)

1998 - பி. எஸ். பி. பொன்னுசாமி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1908)

சிறப்பு நாள்

கிப்ரல்டார் - அரசியலமைப்பு நாள்

Monday, January 28, 2013

வரலாற்றில் இன்று

ஜனவரி 28


நிகழ்வுகள்

1547 - எட்டாம் ஹென்றியின் இறப்பு. அவனது 9 வயது மகன் ஆறாம் எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னன் ஆனான்.

1624 - கரிபியனில் முதலாவது பிரித்தானியக் குடியேற்ற நாடான சென் கிட்ஸ் சர் தொமஸ் வார்னர் என்பவரால் அமைக்கப்பட்டது.

1679 - சென்னை கோட்டைப் பகுதியில் சிறு நிலநடுக்கம் உணரப்பட்டது.

1820 - ஃபாபியன் பெலிங்ஷோசென் தலைமையில் ரஷ்யா நாடுகாண் பயணக்குழு அண்டார்ட்டிக்காவை அடைந்தது.

1846 - அலிவால் என்ற இடத்தில் சீக்கியர்களுடன் இடம்பெற்ற போரில் சர் ஹரி ஸ்மித் தலைமையிலான பிரித்தானியப் படைகள் வெற்றி பெற்றனர்.

1878 - பாரிசில் ஈபிள் கோபுரம் கட்டுவதற்கு அடிக்கல் இடப்பட்டது.

1882 - சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.

1909 - ஐக்கிய அமெரிக்கப் படைகள் குவாண்டானாமோ விரிகுடாவைத் தவிர்த்து கியூபாவின் மற்றைய பகுதிகளில் இருந்து விலகினர்.

1915: அமெரிக்க கரையோர காவற்படை ஸ்தாபிக்கப்பட்டது.
1918 - பின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கியை புரட்சியாளர்கள் கைப்பற்றினர்.
1932 - ஜப்பானியப் படைகள் ஷங்காய் நகரைத் தாக்கினர்.

1933: பாகிஸ்தான் எனும் பெயரை சௌத்ரி ரெஹ்மட் அலி இயற்றினார்.
1935 - ஐஸ்லாந்து கருக்கலைப்பைச் சட்டபூர்வமாக்கிய முதல் நாடானது.

1986 - சாலஞ்சர் மீள்விண்கலம் புறப்பட்ட 73ஆவது வினாடியில் வானில் வெடித்துச் சிதறியதில் ஏழு விண்வெளிவீரர்கள் கொல்லப்பட்டனர்.

1987 - மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கிராமத்தில் இலங்கை இராணுவத்தினரால் 86 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

2002 - கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அண்டெஸ் மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.
2010: பங்களாதேஷின் முதல் ஜனாதிபதி ஷேக் முஜிபுர் ரஹ்மானை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஐந்து பேர் தூக்கிலிடப்பட்டனர்.

2011: எகிப்தில் ஜனாதிபதி முபாரக்கிற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்.

பிறப்புகள்

1853, ஹொசே மார்த்தி, கியூபாவின் புரட்சியாளர் (இ. 1895)

1922 - ரொபேர்ட் ஹோலி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1993)

1925 - ராஜா ராமண்ணா, இந்திய அணுவியல் நிபுணர்

இறப்புகள்

1939 - வில்லியம் யீட்ஸ், நோபல் பரிசு பெற்ற ஐரிஸ் எழுத்தாளர் (பி. 1865)

1996 - ஜோசப் புரொட்ஸ்கி, நோபல் பரிசு பெற்ற ரசியக் கவிஞர் (பி. 1940)

2007 - ஓ. பி. நாயர், இந்தித் திரைப்பட இசையமைப்பாளர்

சிறப்பு நாள்
உலக தொழுநோய் நாள்

வரலாற்றில் இன்று

ஜனவரி 27


நிகழ்வுகள்

1695 - ஓட்டோமான் பேரரசின் மன்னன் இரண்டாம் அஹமது இறந்ததை அடுத்து இரண்டாம் முஸ்தபா மன்னனானான்.

1880 - தாமஸ் எடிசன் வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் பெற்றார்.

1888 - தேசிய புவியியற் கழகம் (National Geographic Society) வாஷிங்டன் டிசியில் அமைக்கப்பட்டது.

1915 - ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் ஹெயிட்டியை ஆக்கிரமித்தனர்.

1918 - பின்லாந்தில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

1924 - விளாடிமிர் லெனினின் உடல் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மாலை 4:00 மணிக்கு
அடக்கம் செய்யப்பட்டது.

1926 - ஜோன் லோகி பயார்ட் முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்திக் காட்டினார்.

1938 - நியூ யோர்க்கில் நயாகரா நீர்வீழ்ச்சியில் நயாகரா பாலம் உடைந்து வீழ்ந்தது.
1943: இரண்டாம் உலக யுத்தத்தின்போது அமெரிக்க விமானங்கள் முதல் தடவையாக ஜேர்மனி மீது குண்டுத்தாக்குதல் நடத்தின.

1944 - இரண்டாம் உலகப் போர்: அச்சு நாடுகளின் இரண்டாண்டு லெனின்கிராட் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.

1945 - இரண்டாம் உலகப் போர்: லட்சக்கணக்கான யூதர்கள் குரூரமாகக் கொல்லப்பட்ட போலந்தின் அவுஷ்விட்ஸ் சித்திரவதை முகாமில் எஞ்சியிருந்த கைதிகள் 7,600 பேர் சோவியத் செம்படையினாரால் விடுவிக்கப்பட்டனர்.

1967 - அப்பொலோ 1 விண்வெளி வீரர்கள் மூவர் கென்னடி விண்வெளி மையத்தில் தமது விண்கலத்தைப் பரிசோதிக்கும் போது இடம்பெற்ற தீ விபத்தில் கொல்லப்பட்டனர்.
1967: விண்வெளியில் அணுவாயுதங்களை வைத்திருப்பதை தடைசெய்யும் ஒப்பந்தத்தில் 69 நாடுகள் கையெழுத்திட்டன.



1973 - வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்பாடு பாரிசில் எட்டப்பட்டது.
1984: பொப்பிசைப் பாடகர் மைக்கல் ஜாக்ஸன், பெப்ஸி விளம்பரப் படப்பிடிப்பின்போது தீ விபத்துக்குள்ளானார்.



1996 - நைஜரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் நாட்டின் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிபர் மஹமான் ஊஸ்மன் பதவியிலிருந்து அகற்றப்பட்டு இராணுவத் தளபதி இப்ராகிம் மயினாசரா ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.

2002 - நைஜீரியாவின் லாகோஸ் நகரில் இராணுவக் களஞ்சியமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 1,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
2006: வெஸ்டர்ன் யூனியன் நிறுவனம் தந்தி சேவைகளை நிறுத்திக்கொண்டது.


பிறப்புகள்
1756 - வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்ஸார்ட், ஐரோப்பிய செவ்வியல் இசையமைப்பாளர் (இ. 1791)

1775 - பிரீடரிக் ஷெல்லிங், ஜெர்மனிய மெய்யியல் அறிஞர் (இ. 1854)

1832 - லூயிஸ் கரோல், ஆங்கில எழுத்தாளர், கணிதவியலாளர், கிறித்துவப் பாதிரியார் (இ. 1898)

1903 - ஜோன் எக்கில்ஸ், நோபல் பரிசு பெற்ற ஆஸ்திரேலியர் (இ. 1997)

1936 - சாமுவேல் டிங், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்

1944 - மைரேயட் கொரிகன், நோபல் பரிசு பெற்றவர்

1974 - சமிந்த வாஸ், இலங்கைத் துடுப்பாட்ட வீரர்

இறப்புகள்

1814 - ஜொகான் ஃபிக்டே, ஜேர்மனிய மெய்யியல் அறிஞர் (பி. 1762)

1893- மகா வைத்தியநாத ஐயர், கருநாடக இசைப் பாடகர் (பி. 1844)

1967 - அப்பொலோ 1 விண்வெளிவீரர்கள்:

எட்வர்ட் வைட், (பி. 1930)

வேர்ஜில் கிறிசம், (பி. 1926)

றொஜர் காபி, (பி. 1935),

வரலாற்றில் இன்று

ஜனவரி 26


நிகழ்வுகள்

கி.மு. 45: ஜூலியன் கலண்டர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

1340 - இங்கிலாந்து மன்னன் மூன்றாம் எட்வர்ட் பிரான்சின் மன்னனாக அறிவிக்கப்பட்டான்.

1500 - விசெண்ட் யானெஸ் பின்சோன் பிரேசில் நாட்டில் காலடி வைத்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்ர்.

1531 - போர்த்துக்கல், லிஸ்பன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

1565 - கர்நாடகா மாநிலத்தின் தலைக்கோட்டை என்ற இடத்தில் விஜயநகரப் பேரரசுக்கும் இஸ்லாமிய தக்காணத்து சுல்தான்களுக்கும் இடையில் இடம்பெற்ற சமரில் கடைசி இந்துப் பேரரசு தோல்வி கண்டது. இத்தோல்வி இந்தியாவின் பெரும் பகுதி இஸ்லாமியரின் கட்டுப்பாட்டுக்குள் வரக் காரணியாய் இருந்தது.

1600: ஸ்கொட்லாந்தில் வருடம் ஆரம்பிக்கும் தினம் மார்ச் 25 இலிருந்து ஜனவரி முதலாம் திகதிக்கு மாற்றப்பட்டது.

1772: முதலாவது பயணக் காசோலை லண்டனில் விநியோகிக்கப்பட்டது.

1788 - ஆர்தர் பிலிப் தலைமையில் பிரித்தானியக் கைதிகளின் முதலாவது தொகுதியைக் கொண்ட கப்பல் சிட்னியை அடைந்து புதிய குடியேற்றத்தை ஆரம்பித்தனர். இது ஆஸ்திரேலிய நாளாகக் கொண்டாடப்படுகிறது.


1800: டச்சு கிழக்கிந்திய கம்பனி கலைக்கப்பட்டது.

1804: ஹெய்ட்டியில் பிரெஞ்சு ஆட்சி முடிவடைந்தது.

1808: அமெரிக்காவில் அடிமைகளை இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டது.

1833: பாக்லாந்து தீவுகளுக்கு பிரிட்டன் உரிமை கோரியது.

1837 - மிச்சிகன் ஐக்கிய அமெரிக்காவின் 26வது மாநிலமாக இணைக்கப்பட்டது.

1841 - ஐக்கிய இராச்சியம் ஹொங்கொங்கை அதிகாரபூர்வமாக ஆக்கிரமித்தது.

1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: லூசியானா மாநிலம் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகியது.

1870 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியா அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைந்தது.


1872: இலங்கையில் பிரித்தானிய நாணயத்திற்குப் பதிலாக ரூபா நாணயம் பாவனைக்கு வந்தது.

1877: பிரிட்டனின் விக்டோரியா மகாராணியார் இந்தியாவின் ஆட்சித் தலைவராக பிரகடனப்படுத்தப்பட்டார்.

1899: கியூபாவில் ஸ்பானிய ஆட்சி முடிவுற்றது.

1924 - சென் பீட்டர்ஸ்பேர்க் லெனின்கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது.

1926 - ஜோன் லோகி பெயர்ட் தொலைக்காட்சிப் பெட்டியைக் காட்சிப்படுத்தினார்.

1930 - இந்திய தேசியக் காங்கிரஸ் 26 ஜனவரியை இந்தியாவின் விடுதலை நாளாக (பூரண சுயராஜ்ய நாள்) அறிவித்தது.


1934: ஜேர்மன் - போலந்து மோதல் தவிர்ப்பு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.

1942 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் படையினர் முதற்தடவையாக ஐரோப்பாவை (வட அயர்லாந்து) அடைந்தனர்.

1949 - ஆஸ்திரேலியக் குடியுரிமை முதன் முறையாக வழங்கப்பட்டது.

1950 - இந்தியா குடியரசு நாடானது. ராஜேந்திர பிரசாத் அதன் முதலாவது குடியரசுத் தலைவரானார்.

1952 - பிரித்தானிய மற்றும் எகிப்திய உயர் வகுப்பு வர்த்தகர்களுக்கெதிராக எகிப்தில் இடம்பெற்ற வன்முறைகளில் கெய்ரோ நகரத்தின் நடுப் பகுதி தீயினால் சேதமாக்கப்பட்டது.

1958 - ஜப்பானிய பயணிகள் கப்பல் தெற்கு அவாஜி தீவில் மூழ்கியதில் 167 பேர் கொல்லப்பட்டனர்.


1959: கியூபாவில் பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கிளர்ச்சிப் படைகள் ஜனாதிபதி படிஸ்டாவின் ஆட்சியை கவிழ்த்தன.

1962 - ரேஞ்சர் 3 விண்கலம் சந்திரனை ஆராய்வதற்காக விண்ணுக்கு ஏவப்பட்டது. ஆனாலும் இத் தளவுளவி 22,000 மைல்களால் சந்திரனைத் தவறவிட்டது.

1965 - இந்தி இந்தியாவின் அதிகாரபூர்வ மொழியானது.


1978: எயார் இந்தியா விமானம் மும்பையில் விபத்துக்குள்ளானதால் 213 பேர் பலி.

1980 - இஸ்ரேலும் எகிப்தும் தூதரக உறவை ஆரம்பித்தன.

1983 - லோட்டஸ் 1-2-3 வெளியிடப்பட்டது.


1984: பிரிட்டனிடமிருந்து புரூணை சுதந்திரம் பெற்றது.

1992 - ரஷ்யாவின் அணுவாயுத ஏவுகணைகள் ஐக்கிய அமெரிக்க நகரங்களை நோக்கி செலுத்தப்படமாட்டா என அதிபர் பொரிஸ் யெல்ட்சின் அறிவித்தார்.


1998: வெள்ளை மாளிகை பணிப்பெண் மோனிகா லுவின்ஸ்கியுடனான தகாத உறவுகள் வைத்திருந்த குற்றச்சாட்டை அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் மறுத்தார். 8 மாதங்களின்பின் அவர் இக்குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

2001 - குஜராத் நிலநடுக்கத்தில் 20,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.


2002: ஐரோப்பிய ஒன்றியத்தின் 12 நாடுகளில் யூரோ நாணயம் சட்டபூர்வமானதாக்கப்பட்டது.

2004: ஆப்கானிஸ்தானின் புதிய அரசியலமைப்பில் ஜனாதிபதி ஹமீட் கர்சாய் கையெழுத்திட்டார்.

2006 - வெஸ்டர்ன் யூனியன் நிறுவனம் தொலைத்தந்தி மூலமான தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது.

2007: ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரன் ,கொழும்பில் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.

2007: இந்தோனேஷியாவில் 102 பயணிகளுடன் விமானமொன்று காணாமல் போனது.

2009: தாய்லாந்தில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் 66 பேர் பலி.

2010: பாகிஸ்தானில் கரப்பந்தாட்டப் போட்டியொன்றின்போது இடம்பெற்ற தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் 105 பேர் பலி. நூற்றுக்கும் அதிகமானோர் காயம்.


பிறப்புகள்

1904 - சோன் மக்பிறைட், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1988)

1911 - பொலிக்காப் கூஷ், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1993)

1921 - அகியோ மொறிடா, ஜப்பானியத் தொழிலதிபர் (இ. 1999)

1977 - வின்ஸ் கார்டர், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

1823 - எட்வர்ட் ஜென்னர், ஆங்கிலேய மருத்துவர், அம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர் (பி. 1749)

1895 - கெய்லி, கணிதவியலர் (பி. 1821)

1964 - தோமஸ் அடிகள், யாழ்ப்பாணம் தோலகட்டி ஆசிரம சுவாமிகள் (பி. 1886)

2008 - ஜோர்ஜ் ஹப்பாஷ், பாலஸ்தீனத் தலைவர் (பி. 1926)

சிறப்பு நாள்
உலக சுங்கத்துறை தினம்

ஆஸ்திரேலியா - ஆஸ்திரேலியா நாள் (1788)

இந்தியா - குடியரசு நாள் (1950)

உகாண்டா - விடுதலை நாள்