ஜனவரி 27
நிகழ்வுகள்
1695 - ஓட்டோமான் பேரரசின் மன்னன் இரண்டாம் அஹமது இறந்ததை அடுத்து இரண்டாம் முஸ்தபா மன்னனானான்.
1880 - தாமஸ் எடிசன் வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் பெற்றார்.
1888 - தேசிய புவியியற் கழகம் (National Geographic Society) வாஷிங்டன் டிசியில் அமைக்கப்பட்டது.
1915 - ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் ஹெயிட்டியை ஆக்கிரமித்தனர்.
1918 - பின்லாந்தில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
1924 - விளாடிமிர் லெனினின் உடல் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மாலை 4:00 மணிக்கு
அடக்கம் செய்யப்பட்டது.
1926 - ஜோன் லோகி பயார்ட் முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்திக் காட்டினார்.
1938 - நியூ யோர்க்கில் நயாகரா நீர்வீழ்ச்சியில் நயாகரா பாலம் உடைந்து வீழ்ந்தது.
1943: இரண்டாம் உலக யுத்தத்தின்போது அமெரிக்க விமானங்கள் முதல் தடவையாக ஜேர்மனி மீது குண்டுத்தாக்குதல் நடத்தின.
1944 - இரண்டாம் உலகப் போர்: அச்சு நாடுகளின் இரண்டாண்டு லெனின்கிராட் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.
1945
- இரண்டாம் உலகப் போர்: லட்சக்கணக்கான யூதர்கள் குரூரமாகக் கொல்லப்பட்ட
போலந்தின் அவுஷ்விட்ஸ் சித்திரவதை முகாமில் எஞ்சியிருந்த கைதிகள் 7,600
பேர் சோவியத் செம்படையினாரால் விடுவிக்கப்பட்டனர்.
1967 - அப்பொலோ 1
விண்வெளி வீரர்கள் மூவர் கென்னடி விண்வெளி மையத்தில் தமது விண்கலத்தைப்
பரிசோதிக்கும் போது இடம்பெற்ற தீ விபத்தில் கொல்லப்பட்டனர்.
1967: விண்வெளியில் அணுவாயுதங்களை வைத்திருப்பதை தடைசெய்யும் ஒப்பந்தத்தில் 69 நாடுகள் கையெழுத்திட்டன.
1973 - வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்பாடு பாரிசில் எட்டப்பட்டது.
1984: பொப்பிசைப் பாடகர் மைக்கல் ஜாக்ஸன், பெப்ஸி விளம்பரப் படப்பிடிப்பின்போது தீ விபத்துக்குள்ளானார்.
1996
- நைஜரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் நாட்டின் முதலாவது மக்களால்
தெரிவு செய்யப்பட்ட அதிபர் மஹமான் ஊஸ்மன் பதவியிலிருந்து அகற்றப்பட்டு
இராணுவத் தளபதி இப்ராகிம் மயினாசரா ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.
2002 - நைஜீரியாவின் லாகோஸ் நகரில் இராணுவக் களஞ்சியமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 1,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
2006: வெஸ்டர்ன் யூனியன் நிறுவனம் தந்தி சேவைகளை நிறுத்திக்கொண்டது.
பிறப்புகள்
1756 - வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்ஸார்ட், ஐரோப்பிய செவ்வியல் இசையமைப்பாளர் (இ. 1791)
1775 - பிரீடரிக் ஷெல்லிங், ஜெர்மனிய மெய்யியல் அறிஞர் (இ. 1854)
1832 - லூயிஸ் கரோல், ஆங்கில எழுத்தாளர், கணிதவியலாளர், கிறித்துவப் பாதிரியார் (இ. 1898)
1903 - ஜோன் எக்கில்ஸ், நோபல் பரிசு பெற்ற ஆஸ்திரேலியர் (இ. 1997)
1936 - சாமுவேல் டிங், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
1944 - மைரேயட் கொரிகன், நோபல் பரிசு பெற்றவர்
1974 - சமிந்த வாஸ், இலங்கைத் துடுப்பாட்ட வீரர்
இறப்புகள்
1814 - ஜொகான் ஃபிக்டே, ஜேர்மனிய மெய்யியல் அறிஞர் (பி. 1762)
1893- மகா வைத்தியநாத ஐயர், கருநாடக இசைப் பாடகர் (பி. 1844)
1967 - அப்பொலோ 1 விண்வெளிவீரர்கள்:
எட்வர்ட் வைட், (பி. 1930)
வேர்ஜில் கிறிசம், (பி. 1926)
றொஜர் காபி, (பி. 1935),
No comments:
Post a Comment