Digital Time and Date

Welcome Note

Saturday, September 22, 2012

ஃபிரான்சில் நபிகள் நாயகத்திற்கு கார்ட்டூன் வெளியிட்ட பத்திரிக்கை மீது பாரீஸ் நீதிமன்றத்தில் வழக்கு..............!!


         
நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி படம் எடுக்கப்பட்டதை தொடர்ந்து உலகமும் முழுவதும் எதிர்ப்புகள் போராட்டங்கள் மூலம் வெடித்து கொண்டிருக்கையில் முஸ்லிம்களை மேலும் கொதிப்படைச் செய்யும் விதமாக எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றும் வகையில் பிரான்ஸ் நாட்டு பத்திரிக்கை நபிகள் நாயகத்தின் நிர்வாண கார
்ட்டூனை கடந்த புதன் கிழமை தனது பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளது.

இதற்கான போராட்டங்கள் ஆங்காங்கே வெடித்து கொண்டிருக்கும் நிலையில் இந்த பத்திரிக்கையின் மீது கிரிமினல் வழக்கு பாரிஸ் நீதிமன்றத்தில் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அந்த பத்திரிக்கையின் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஃபிரான்ஸ் நாட்டு பிரதமர் Jean-Marc Ayrault கூறுகையில் , நாட்டின் கருத்துரிமை சட்டம் இது போன்ற கார்ட்டூன்களை அனுமதிக்கின்றது, இது யாருக்கேனும் பாதிப்பை ஏற்படுத்தினால் அவர்கள் இந்த பத்திரிக்கையின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாம்.

பேசுவதற்கு சுதந்திரம் அளிக்கப்பட்ட நாட்டில் நாம் இருக்கின்றோம் , எப்படி கார்ட்டூனுக்கு அனுமதி இருக்கின்றதோ அதே போன்று அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டம் உள்ளது. இது சட்டத்தை மதிக்கும் நாடு. அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடரலாம் எனத் தெரிவித்துள்ளார்.

-----------------

மேற்கத்திய நாடுகளில் அதிக முஸ்லிம் மக்கள் தொகையை கொண்டது ஃபிரான்ஸ் நாடாகும்.

ஃபிரான்ஸ் நாட்டு பிரதமரின் பேச்சு கார்ட்டூனை ஊக்குவிக்கும் விதமாகவே உள்ளது. இந்த கார்ட்டூன் வெளியிட்ட பத்திரிக்கைக்கு பிரான்ஸ் நாட்டு அரசு கடும் பாதுகாப்பு அளித்து வருகின்றது. மேலும் பத்திரிக்கை அலுவலகத்தை நோக்கி சென்ற சிலரை ஃபிரான்ஸ் நாட்டு போலிசார் நேற்று கைது செய்துள்ளனர்.

(இந்த போட்டோவில் உள்ளவன் விபச்சாரிக்கு பிறந்த ஃபிரன்ச் பத்திரிக்கையின் ஆசிரியன்)

Friday, September 21, 2012

பணம் பத்தும் செய்யுமா?

ஆசிரியர்: சாளை பஷீர் ஆரிஃப்
எழுத்தாளர் / சமூக பார்வையாளர்

காட்சி 1

அது ஒரு கஞ்சிக்கு வழியில்லாத ஏழையின் வீடு
வைகறைத் தொழுகை முடிந்து இருள் கலையும் நேரம்
வீட்டு முற்றத்தில் பொட்டலம் கிடக்கின்றது
அருகில் சென்று குனிந்து பார்த்தால்
மஞ்சள் நிற துணியில் ஒரு பொருள் பொதியப்பட்டுள்ளது
கையிலெடுத்து பிரித்து பார்த்தால் பணக்கட்டு
ஏழையான அந்த வீட்டுக்கார விதவை முகம் தெரியாத
அந்த கொடையாளிக்காக இறைவனிடம் வயிறும் நெஞ்சும் நிறைந்து வேண்டுகின்றார்

காட்சி 2

மக்கள் அடிக்கடி புழங்கும் ஒரு பொதுவிடத்தில் பொருத்துவதற்காக சாதனம் ஒன்றை அன்பளிப்பாக வழங்குகின்றார் ஒரு கனவான். தான் நன்கொடையாக அளித்த பொருளில் தனது பெயரையும் எழுதி பதித்திட வேண்டும் என நிபந்தனையொன்றையும் விதிக்கின்றார்.

“பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை”

என்ற பழைய வெள்ளித்திரை பாடல் வரிகள்தான் நெஞ்சில் வந்து மோதுகின்றது.

வறுமையும் வளமும் பணமும் முடையும் மனித வாழ்வில் மாறி மாறி வரும் காட்சிகள்.

இந்தக் காட்சி மாற்றங்களில் நாமும் நம்முடைய செயல்பாடுகளும் எந்த எண்ணத்தின் அடிப்படையில் அமைகின்றன என்பதுதான் தலையாய விஷயம். நிறைந்த மனதுடையோர் வாழ்வின் உயர்வு தாழ்வுகளில் தம் நிலையை தாழ்த்திடுவதில்லை. தரமிறங்கி தரையில் உருண்டிடுவதில்லை. பல பத்தாண்டுகளுக்கு முன்பு நமதூருக்கு வந்த பொது நலத்திட்டங்களில் பெரும்பான்மையானவை நம் முன்னோர்களின் தயாள மனதின் விளைவுகளேயாகும்.

பொது விடயங்களில் தங்களது நேரத்தையும் செல்வத்தையும் திறமையையும் உழைப்பையும் ஈந்த அந்த நல்ல மனிதர்கள் யாரும் தங்களின் கொடையின் பெயரால் சட்டாம்பிள்ளைத் தனத்தையோ அல்லது சர்வாதிகாரப் போக்கையோ கைக்கொள்ள விரும்பியதில்லை. காரணம் அந்த பென்னம்பெரும் கொடைகளுக்குப் பின்னணியாக இருந்த அவர்களின் மனதில் அது பற்றிய தெளிவான களங்கமற்றதொரு பார்வையிருந்தது.

அது என்ன பார்வை?

தன்னிடமிருக்கும் நேரம், பணம், திறமை, செல்வாக்கு, சமூக அந்தஸ்து போன்றவையனைத்தும் தமக்கு உரித்தானதல்ல. மாறாக அவையனைத்தும் கடனாக - இரவலாகப் பெற்றவை. அவற்றின் முழு முதல் உரிமையாளன் - சொந்தக்காரன் அந்த அல்லாஹ்தான் என்ற தெளிவு அவர்களுக்கிருந்தது.

அவற்றை வீணடிப்பதோ முறையற்ற வழிகளில் பயன்படுத்துவதோ மிகவும் பாரதூரமான பக்க, பின் விளைவுகளுடன் கைசேதமான முடிவுகளையும் தரவல்லது என அழுத்தமாக நம்பினார்கள்.

ஆனால் இன்றோ...?

இக்கட்டுரையின் தொடக்கத்தில் நாம் கண்ட இரண்டு காட்சிகளுமே நமதூரில் நடந்தவைதான். அவற்றுக்கிடையே உள்ள கால அளவில்தான் வித்தியாசம்.

இரண்டாம் காட்சிக்கும் முதலாம் காட்சிக்கும் உள்ள கால இடைவெளி அரை நூற்றாண்டுக்கும் மேலாகும். பள்ளத்திலிருந்து சிகரம் ஏற பல காலமாகும். ஆனால் சிகரத்திலிருந்து பள்ளத்திற்கு பாய சில விநாடிகள் போதும்.

மூன்றாம் காட்சி அதற்கு நிகழ்கால சாட்சியாக உள்ளது.

மூன்றாம் காட்சியை நாம் தனியாக எழுதிடாததற்கு காரணம் உண்டு.

இன்று நடக்கும் பரபரப்பு அலம்பல் நிகழ்வுகளுக்கு மூன்றாம் காட்சி என்று பெயரிடுவதை விட ஒரு வருட பழமையான நெடுந்தொடர் என பெயரிடுவதே பொருத்தம் எனத்தோன்றியது.

இரண்டாம் காட்சியில் நாம் கண்ட கனவான்களின் பரிணாம வளர்ச்சிதான் இந்த நெடுந்தொடரின் கதை, திரைக்கதை, வசனம், நகைச்சுவை, சண்டைக்காட்சி, இயக்கம் என அனைத்துமாக உருவெடுத்துள்ளது.

என்னிடம் ஏராளமான பணமுள்ளது. அது ஒன்றே எனக்கு சகல அதிகாரத்திற்கான தகுதியாகும். என்னிடம் கேட்காமல் ஊரிலுள்ள மரத்தின் ஒரு இலை கூட அசையக் கூடாது என சிலர் ஆசைப்படுவதை நினைத்து சிரிக்கவா அழவா என தெரியவில்லை.

நம்மிடம் உள்ள பணம் செல்வாக்கு மூலம் பிறருக்கு உதவ இறைவன் வழியமைத்து தந்தானே என அவனுக்கு நன்றி பகருவதுதான் ஒரு நல்ல முஸ்லிமுக்கு அழகு.

அதை விடுத்து சமூகத்திலுள்ள பலர் தன்னிடம் உதவி பெறுவதையே காரணங்காட்டி அதன் மூலம் அந்த சமூகத்தையே முழந்தாளிட்டுப் பணிய வைக்க முயலுவது இறைவனின் படைப்புகளுக்கு பொருத்தமல்ல.

இங்கு பண்ணையார் தோரணையிலான அதிகாரமெல்லாம் காலாவதியாகி பல காலமாகிவிட்டது.

எல்லா வகையான சுதந்திர உரிமைகளையும் கோரும் சனநாயக நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை யாராவது அந்த கனவுலகில் வாழும் கனவான்களுக்கு எடுத்துச் சொன்னால் நன்றாக இருக்கும்.

மகுடிக்கு தலையாட்டும் பாம்பு போல தன் பேச்சிற்கு ஊர் மொத்தமும் அசைந்தாட வேண்டும்; இல்லையெனில் என்ன விலை கொடுத்தாவது யாரையும் தன் சொல்லுக்கு முன் மண்டியிட வைக்க வேண்டும் என்ற மூர்க்கத்தோடு செயல்படுவது அன்றாட நிகழ்வாகி விட்டது. உயர்வும் மாண்பும் படைத்த மனிதர்களை விலைப்பட்டியிட்டு அங்காடியில் தொங்கும் கடைச்சரக்காக்கிப் பார்ப்பதென்பது சிலருக்கு பிடித்தமான பொழுதுபோக்கு.

இந்த முரட்டுப் பிடிவாதத்தின் விளைவாக ஊரை அடித்து உலையில் போடுபவர்கள், மொடாக்குடியர்கள், வகுப்புவாதி, நெறி பிறழ்ந்தவர்கள் என ஒரு ஏவல் கும்பலுக்கே இரை போட்டு தன் வீட்டு செல்ல விலங்குகளாக வளர்த்து வரும் பெரிய மனிதர்களும் உண்டு. இவர்களின் இந்த சதுரங்க விளையாட்டில் பாரம்பரியமிக்க நமதூர் சிக்கித் தவிக்கின்றது. பொது வாழ்வில் ஊழலை ஒழிப்பதற்கான முயற்சிகள் முழு மூச்சோடு சில ஏவலாளிகளால் இரவும் பகலுமாக எதிர்க்கப்படுகின்றது.

இவர்களின் துர்போதனைகளில் தலை கிறங்கி வழி பிறழாமல் இருப்பது கனவான்களின் ஈருலக வாழ்வு சிறக்க வழி வகுக்கும்.

நீர் வறண்ட குளத்திலிருந்து பறவைகள் பறந்து செல்வது போல கனவான்களின் பையிலிருக்கும் பணம் கரைந்து விட்டால் அவர்களைச் சுற்றியிருக்கும் துதி பாடிகள் சூடான அடுப்பில் பட்ட பனிக்கட்டி போல கரைந்தோடி காற்றில் கரைந்து மாயமாய்ப் போய்விடுவர். பொதுமக்கள் பாடுபட்டு தேடிய பணங்காசு அரசு அலுவலகங்களில் வாழும் சில ஊழல் பெருச்சாளிகளுக்குத் தீனியாக தாரை வார்க்கப்பட கனவான்களே ஏன் காரணமாக இருக்கின்றீர்கள்?

பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரும் மன உளைச்சலும் உடல் அலைச்சலும் எத்தனை கனமானது என்பதை அறிவீர்கள்தானே? ஊழலும், முறைகேடுகளும் பூமியில் பரவக்காரணமாக இருப்பவர்களுக்கு இவ்வுலகிலும் அவ்வுலகிலும் காத்திருப்பது என்ன என்பது தெரியாதா? தீச்செயலுடன் இக்கனவான்கள் செய்யும் அறச்செயல்கள் பாதி குடம் பால் மீதி குடம் நஞ்சு என்பது போல்தான் உள்ளது. காலமும் வரலாறும் தீயவற்றுக்கு சாட்சியாக இருப்பது போலவே தீமைக்கெதிரான முயற்சிகளுக்கும் சாட்சியாக இருக்கும் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

**இந்த செய்தியை தயவு செய்து அனைத்து மாணவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

**இந்த செய்தியை தயவு செய்து அனைத்து மாணவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

மத்திய அரசால் வழங்கப்படும் சிருபான்மையினருக்கான 2012-ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித் தொகை பெருவதற்கு விண்ணப்பிக்க மறந்துவிடாதிர்கள். பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் அனைவரும் விண்ணப்பியுங்கள்.

விண்ணப்பங்களை online-ல் apply செய்யலாம். Online-ல் apply செய்வதற்கு இந்த link-ஐ க்ளிக் செய்யுங்கள்.

http://momascholarship.gov.in/minority_scholarship/#

இதில் Student Registry என்று இருக்கும். அதனை தேர்வு செய்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யுங்கள்.

முஸ்லிம்களில் பெரும்பாலானோர் இது பற்றி தெரியாத காரணத்தினால் அரசாங்கம் தரக்கூடிய இந்த கல்வி உதவித் தொகையை இழந்து விடுகின்றனர். ஆகவே அனைவரும் விண்ணப்பியுங்கள் . பிறருக்கும் இதனை தெரியப்படுத்துங்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30.

###இதை முழுவதுமாக படிக்கவும் .###
------.நபி (ஸல்) அவர்களை நாம் உயிருக்கும் மேலாக நேசிக்கிறோம்....என்றும் சொல்வது....நேசமா......? அல்லது வேஷமா...?------

உலகம் போற்றும் உத்தமத்தூதர் (ஸல்) அவர்களை , இழிவு படுத்திய அயோக்கியர்களைக் கண்டித்து உலகம் முழுவதும் முஸ்லிம்கள் பல வழிகளில் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர், நமது தமிழகத்திலும், பல இயக்கங்கள், ஜமாத்துகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன
ர்...
இதற்கு அடிப்படைக் காரணம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை நம் உயிருக்கும் மேலாக நேசித்ததின் காரணமாக அவர்களுக்கு ஒரு இழிவு என்று வரும்போது.... அனைவருக்கும் கோவம் வந்து விடுகிறது.
இதைத்தான் மார்க்கமும் நமக்கு சொல்லித் தருகிறது....
ஆனால்... அதேசமயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களின் மீது...
இந்த ரோஷமும், பாசமும் நம்மில் அநேகர்களுக்கு உண்மையானதா..என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்...

நபி (ஸல்) அவர்களை நாம் நேசிப்பது உண்மையானதாக இருந்தால்...நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்தியது யார், எந்த மதத்தைச் சார்ந்தவன் என்று பார்க்கக் கூடாது...
முஸ்லிம் அல்லாதவர்கள்தான் நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்தக் கூடாது...முஸ்லிம்கள் இழிவு படுத்தலாம் என்று நினைத்தால்..அவன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை உண்மையாக நேசிக்க வில்லை, நேசம் வைத்ததாக வேஷம் போடுகிறான்..
அப்படி பார்க்கும் போது... இந்த யூதன், கிறிஸ்துவன் நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்தியதை விட , இன்னும் அசிங்கமாக நம்மில் பலர் நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்துகிறார்கள்...
எவ்வாறு...??????


*** நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் ஸ்தானத்தில் கொண்டு செல்வது.

*** நபி (ஸல்) அவர்களை (பரிந்துரை என்ற பெயரில்) வணங்குவது.

*** நபி (ஸல்) அவர்களின் வழி முறைகளைப் புறக்கணித்து,தனக்குப் பிடித்த மனிதர்கள்,பெரியார்கள், இமாம்களின் வழி முறைகளைப் பின்பற்றுவது .

*** நபி (ஸல்) அவர்கள் சொல்லாத, செய்யாத விஷயங்களை அவர்களின் மீது இட்டுக் கட்டி கூறுவது.

*** நபி (ஸல்) அவர்கள் மனிதப் படைப்பு அல்ல என்று, அபாண்டம் கூறுவது .

இன்னும் ஏராளம், ஏராளம் .......

இப்போது சொல்லுங்கள் .நபி (ஸல்) அவர்களை நாம் உயிருக்கும் மேலாக நேசிக்கிறோம்....என்றும் சொல்வது....நேசமா......? அல்லது வேஷமா...?


قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ

3:31. (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.


قُلْ إِن كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُم مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّىٰ يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ ۗ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ


9:24. (நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.

திரைப்படம் தயாரித்தவன் மீதும் Youtube மீதும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நடிகை Lee Garcia


                                    
நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் நடித்த Lee Garcia என்ற நடிகை ” படத்தின் தயாரிப்பாளர் மற்றும் Youtube மீது நேற்று (19-9-2012) லாஸ் ஏன்ஜல்ஸ் Superior கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், படத்தின் தயாரிப்பாளர் Nakoula Basseley Nakoula மீது மோசடி மற்றும் அவதூறு புகார்களை தெரிவித
்துள்ளார். மேலும் தனக்கு கொலை மிரட்டல்கள் வர காரணமாக உள்ள அந்த வீடியோவை Youtube முழுவதுமாக நீக்க கோர்ட் உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வீடியோவின் காரணமாக தனது வேலை போய் விட்டதாகவும், தனது பேரக் குழந்தைகளை பாராமறிக்க அனுமதி மருக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படும் குறித்து அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் வழக்கு இது என்பது குறிப்பிடதக்கது.
http://www.tntj.net/105224.html

முஸ்லிம்களை மோசமாக சித்தரித்து திரைப்படம்: ஐ.நா கடும் கண்டனம்:


                                          
முஸ்லிம்களை மோசமாக சித்தரித்து அமெரிக்கா வெளியிட்ட திரைப்படத்திற்கு ஐ.நா பொதுச் செயலாளர் பான்- கி- மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது பற்றி பான்- கி- மூன் கூறுகையில், இந்த திரைப்படம் கொலை முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.

ஐ.நா உயர் பிரதிநிதி ஜார்ஜ் காம்பியோ, இவ் விவகாரம் குறித்து அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் கிளிண்டனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் தற்போது ஏற்பட்டுள்ள வெறுப்பான சூழ்நிலை, ஆபத்தான நிலைமை மற்றும் தாக்குதல்கள், மத அடிப்படையிலான வன்முறைகள் ஆகியவை கவலை அளிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஐ.நா பாதுகாப்பு சபையும், 15 நாடுகளின் பிரதிநிதிகளும் இவ்வாறான வன்முறை சம்பவங்களுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Thursday, September 20, 2012

வீதி வரை மனைவி; காடு வரை பிள்ளை அர்ஜென்டினாவில் கடைசி வரை நாய்

                                                   வீதி வரை மனைவி; காடு வரை பிள்ளை அர்ஜென்டினாவில் கடைசி வரை நாய்
நியூயார்க்:காடு வரை பிள்ளை; கடைசி வரை யாரோ? என பாடலில் கேட்டிருக்கலாம். அதற்கு பதில் தரும் வகையில், அர்ஜென்டினாவை சேர்ந்த ஒரு நாய், ஆறு ஆண்டாக, தன் எஜமானரின் சமாதியை வசிப்பிடமாக மாற்றிக் கொண்டு, பார்ப்போரை பிரமிக்க வைத்திருக்கிறது.
அர்ஜென்டினாவில், கார்லோஸ் பாஸ் நகரை சேர்ந்தவர், மிகுல் கஸ்மேன். உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 2006ல் மரணமடைந்தார். ஊர் கூடி கதறியழுது, அவரது உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்று, சில கி.மீ., தூரத்தில் இருந்தசுடுகாட்டில் அடக்கம் செய்தது. ஊர்வலம் சென்றபோது, கஸ்மேன் வளர்த்த நாய் கேபிடனும், உடன் சென்றது. பின், அவர்களுடனே வீட்டுக்கு திரும்பி விட்டது.
அதன் பின், நாயை காணவில்லை. அதை, கஸ்மேன் வீட்டாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆறு ஆண்டுக்கு பின், கஸ்மேன் சமாதிக்கு, அவரது மகன் டேமியன், மனைவி வெரோனிகா, இரண்டு நாளுக்கு முன் சென்றனர். அப்போது, அங்கு படுத்திருந்த நாயை கண்டு, அதிர்ந்த டேமியன், கேபிடன் என சத்தம் போட்டு கூப்பிட்டான். குரலை கேட்டு துள்ளிக் குதித்து வந்த நாய் வாலாட்டியவாறு, டேமியனை நாக்கால் வருடியபடி நின்றது.
இடுகாட்டை நிர்வகித்து வரும் ஹெக்டர் பசேகாவும், சமாதி அருகே நாய், கடந்த ஆறு ஆண்டாக வசித்து வருவதை உறுதி செய்தார்.
இதைக் கேட்டு டேமியனும், வெரோனிகாவும் அடைந்த ஆச்சரியத்துக்கு அளவே இல்லை.
கஸ்மேன், நாயை சிறு குட்டியாக வீட்டுக்கு எடுத்து வந்தபோது, முகம் சுளித்து கோபப்பட்டனர் இருவரும். அதே நாய், கஸ்மேன் மீது உயிரையே வைத்திருப்பது கண்டு, நெகிழ்ந்து கண்ணீர் விட்டனர்.
பின், கேபிடனை வீட்டுக்கு அழைத்து செல்ல முயற்சி செய்தனர். ஆனால், இடுகாட்டை விட்டு வெளியே வர, நாய் விரும்பவில்லை.
கேபிடன், உணவு தேடி வெளியே சென்றாலும், சரியாக மாலை ஆறு மணிக்கு கஸ்மேன் சமாதிக்கு வந்து விடுமாம். அதன் பின், மறு நாள்தான், மீண்டும் உணவுக்காக வெளியே செல்லுமாம். தகவலை சொல்லி கண் கலங்குகிறார் சுடுகாட்டு நிர்வாகி.

Wednesday, September 19, 2012

கம்பீர குதிரையாக ஷெவர்லே க்ரூஸ்


பார்த்தவுடன் பிடித்துப்போய் தனதாக்கிக் கொள்ளத்தூண்டும் மிக கவர்ச்சியான கம்பீரத் தோற்றமும், வசதியான உள் அமைப்பும் என்ஜின் செயல்திறனும் கொண்டதாக உள்ளது ஷெவர்லேயின் க்ரூஸ். அமெரிக்க பெரிய மசுல் காரையும்,ஐரோப்பிய செடான் வகை காரையும், ஜப்பானிய ஸ்டைலையும் ஒருங்கே கொண்டுள்ளது க்ரூஸ்.

இந்த செக்மண்ட் கார்களில் கீ-லெஸ் என்ட்ரி, க்ரூயிஸ் கண்ட்ரோல், ஆடம்பர வெளி மற்றும் உள்தோற்றம் போன்ற அம்சங்களை கொண்டு வாங்கிய பணத்திற்கு கூடுதல் மதிப்பைக் கொடுக்கிறது என்றால் மிகையல்ல. இந்த செடான் காரின் என்ஜின் 2.0 லிட்டர் VCDi டீசல் என்ஜினாகும். இது முழுமையான சக்தியை அதாவது 166US பவரையும் 380NM டார்க்கையும் வழங்குகிறது. இதன் நவீன என்ஜின் மேனேஜ்மென்ட் சிஸ்டம் அதிக செயல்திறன் கொண்ட வேரியபிள் ஜியா மெட்ரி டர்போ சார்ஜருடனும் சிஆர்டிஐ சிஸ்டத்துடனும் சேர்ந்து ஸ்தம்பிக்கச் செய்யும் செயல்பாட்டையும், எரி பொருள் சிக்கனத்தையும், மாசு கட்டுப்பாட்டையும் ஒருங்கே அளிக்கிறது.

இதன் 6 ஸ்பீட் மானுவல் ட்ராஸ்மிஷன் திறமையான ஓட்டுனர்களுக்கு இனிமையான கார் ஓட்டும் அனுபவத்தை வழங்கும் விதமாக ரிஃபைன்ட் ஹைட்ராலிக் க்ளட்ச் சிஸ்டத்துடனும், அதிக டார்க்கை டெலிவரி செய்வதாகவும், பொருத்தமான துல்லியமாய் கியர் மாற்றும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் க்ரூஸின் 6 ஸ்பீட் ஆட்டோ ட்ரான்மிஷன் எடுத்துக் கொண்டாலும் 2.0லிட்டர் VCDi என்ஜின் பவருக்கு ஏற்ப துல்லியமாக கியர் மாறுவதும், சிரமமின்றி ஓவர்டேக் செய்வதற்கும், வேகமான பயணத்தை முழுமையாக அனுபவிப்பதற்கும் ஏற்ற வகையில் இதன் எலக்ட்ரானிக் ஆட்டோமேட்டிக் ட்ரான்மிஷன் கன்ட்ரோல் சிஸ்டம் செயல்புரிகிறது.

க்ரூஸின் மெக் ஃபெர்சன் ஸ்ட்ரட்-டைப் முன்புற சஸ்பென்ஷன் வண்டிக்கு அதிக ஸ்திரத்தன்மையையும், அமைதியான செயல்பாட்டையும் வழங்குகிறது. இதன் வடிவ க் பின்புற சஸ்பென்ஷன் டார்னுஜ் பீம் மற்றும் காஸ் - சார்ஜ் ஷாக் அப்சர்பருடன் இணைந்து வசதியான ஸ்மூத்தான பயணத்தை அளிக்கிறது. அமர்ந்ததும் ஆடம்பர வசதியையும் சொகுசையும் உணரக் கூடிய வகையில் உள்ள ப்ளாக் லெதரினால் ஆன காரின் உள்ளமைப்பும், டிஜிட்டல் டெக்ஸ்ட்டாக காட்டக்கூடிய ஓடோமீட்டர், ஃப்யூவல் கன்சம்ஷன் மற்றும் ஸ்பீட் ரீடிங்குகள் கொண்ட டாஷ் போர்ட்டும், 3 அழுத்தமான ஸ்போக்குகள் கொண்ட ரிம்முடன் திரும்புவதற்கு லாவகமான அமைப்பைக் கொண்ட ஸ்டியரிங் வீல் போன்றவை காரின் பயணத்தை சுகமாக்கும் உள் அலங்காரங்களாகும்.

PEPS என்ற பாசீவ் என்ட்ரி பாசீவ் ஸ்டார்ட் என் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், ஆன்ட்டி தெஃப்ட் அலார்ம், சாவி@ய தேவையில்லாத இக்னீஷன் மற்றும் ஸ்டார்டர் சிஸ்டம் இவற்றுடன் சேர்ந்த, புஷ்-பட்டன் கொண்டு அமைக்கப்பட்டுள்ள "கீலெஸ்' அனுபவம் புதுமையான தொழில்நுட்பமாகும். மேலும் இதில் உள்ள க்ரூயிஸ் கன்ட்ரோல் என்ற தானாகவே வண்டியின் வேகத்தை அட்ஜஸ்ட் செய்துக்கொள்ளும் சிஸ்டமும், 6 விதமாக உடம்பிற்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்துக் கொள்ளக்கூடிய சீட்டும், மழை ஆரம்பித்தவுடன் தானாகவே வேலை செய்யத் துவங்கும் வைப்பர், மழையின் வேகத்திற்கு ஏற்ப தன் வேகத்தையும் தானாகவே திட்டமிட்டுக் கொள்ளும் வசதியும், தட்பவெப்பத்திற்கு ஏற்ப கூலிங்கை அட்ஜஸ்ட் செய்துக் கொள்ளும் ஏசியும், தேவைக்கேற்ப வளைத்து திருப்பிக் கொள்ள ஏதுவான மியூசிக் சிஸ்டமும் இதன் உள்ளேயே அமைந்த ஸ்டியரிங்கும், அல்ட்ராசோனிக் வேவ் உடன் சேர்ந்த ஆடியோ க்யூஸ் கொண்ட ரிவர்ஸ் பார்கிங் சென்சார், பார்க்கிங் செய்வதை மிகச் சுலபமாக்குவதும் ஷவர்லே க்ரூஸ் வழங்கும் சொகுசு அம்சங்களாகும்.

க்ரூஸின் பாதுகாப்பு அம்சங்களாக அதன் வடிவமைப்பை மிகவும் உறுதியான தூண்களும், உருளையான உலோகச் சட்டங்களும் இணைக்கப்பட்ட கதவுகளும், முன்புற மற்றும் பின்புற தகடுகளும் இதற்கு உறுதியான கட்டமைப்பை தந்துள்ளது. இதன் 4 வீல் டிஸ்க் ப்ரேக் ஏபிஎஸ் என்ற ஆன்ட்டிலாக் ப்ரேக்கிங் சேர்ந்து சிறந்த பாதுகாப்பை அளிக்கிறது. முன்புற இரண்டு ஏர்பேக்குகளும் பயணிகளுக்கு பாதுகாப்பை தருகிறது.

வெளிப்புற பார்வைக்கு மிகவும் கம்பீரமாக தெரிகிறது க்ரூஸ். மேற்புறம் அகன்ற வடிவமும், அகலமான வீல் பேளும், ட்வின் பாட் ஃப்ரன்ட் க்ரில்லும், சாமுரா கண்கள் போன்ற ஹெட்லைட் தோற்றமும், மெல்லிய இரட்டை தோற்றம் கொண்ட டெவில் லேம்ப், 16 அலாய்வீலும், முன்புற க்ரில்லின் நடுவே தங்கநிற "போடை' லோகோவும் (ஷெவர்லே) இதன் தோற்றத்திற்கு காரணமாகும். முரட்டுத்தனமான கம்பீரம் கொண்ட வெளித்தோற்றமும், சிறந்த என்ஜின் செயல்திறனும், சொகுசான உள் அமைப்புகள் என்று எல்லா நல்ல அம்சங்களை ஒருங்கே கொண்டுள்ளது ஷெவர்லேயின் க்ரூஸ்.

அனைவரும் கண்டிப்பாக இதை படிக்கவும்.இதை படிக்கும் போது நம் கண்கள் கண்ணிரால் நனைகிறது!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ் வ பரக்காத்துஹு!


இஸ்லாமிய நாகரிகத்தின் ஈடு இணையற்ற வரலாற்றுச் சான்றுகளுள் ஒன்று -இதோ!

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது குடிமக்கள் நிலையை அறிவதற்காக நகர்வலம் செல்லும் வழக்கம் உடையவர்கள்.

அப்போது மதினா நகரெங்கும் பஞ்சம் நிலவி வந்தது. நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட அனனவருக்கும் கிடைத்திட வேண்டும் என்பதில் உமர் (ரலி) அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தினார்கள்.

ஒருநாள் இரவு நேரத்தில் கலிஃபா அவர்கள் தமது உதவியாளர் அஸ்லம் என்பாருடன் மதினாவின் புறநகர்ப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு குடிசையிலிருந்து விளக்கு வெளிச்சமும் குழந்தைகளின் அழுகுரலும் வரக் கண்டார்கள்.

கலிஃபா அவர்கள் அந்தக் குடிசையை நெருங்கிய போது, அங்கே ஒரு பெண்மணி அடுப்பில் ஒரு சட்டியில் ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதையும் அவருக்கருகில் அழுது கொண்டிருந்த குழந்தைகளையும் கண்டார்கள். கலிஃபா உமர் (ரலி) அவர்கள், அப்பெண்மணிக்கு சலாம் சொல்லி அவரது அனுமதி பெற்று அவருக்கருகில் சென்றார்கள்.

அந்தப் பெண்மணி உமர் (ரலி) அவர்களை பார்த்ததில்லை என்பதால் வந்திருப்பவர் கலிஃபா என்பதை அறியவில்லை.

உமர் (ரலி): “குழந்தைகள் ஏன் அழுது கொண்டிருக்கின்றன?”

பெண்மணி: “அவர்கள் பசியோடிருக்கின்றார்கள். அதனால்தான் அழுகிறார்கள்”
உமர் (ரலி): “அடுப்பில் என்ன இருக்கிறது?”

பெண்மணி: “அது வெறும் சுடுநீரும் சில கற்களும்தான். அவர்களின் பசியைப் போக்க நான் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்கள் தூங்கி விடுவார்கள். அதற்காகத்தான் இப்படிச் செய்து கொண்டிருக்கிறேன்.

. இந்தத் துன்பமான நேரத்தில் எங்களுக்கு ஒரு உதவியையும் செய்யாத கலிஃபா உமர் அவர்களுக்கும் எனக்குமிடையில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்தான் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவான்”.

அப்பெண்மணியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு பதறிப்போன கலிஃபா உமர் (ரலி) அவர்களின் கண்களில் நீர் வழிந்தோட, “அல்லாஹ் உம் மீது கிருபை செய்வானாக! உமது துன்பமான நிலைமையை உமர் எப்படி அறிவார்?” என்று வினவினார்.

“முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் உமர் எங்கள் நிலைமையை அறிந்திருக்க வேண்டாமா? என்றார் அந்தப் பெண்மணி.

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் விரைந்து நகருக்குத் திரும்பி உடனே பைத்துல் மாலுக்குச் சென்றார்கள். ஒரு சாக்குப்பையில் மாவு, நெய், பேரீத்தம் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களும் துணிமணிகளும் எடுத்து வைத்தார்கள். கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டார்கள். சாக்குப்பை நிரம்பியதும் தமது உதவியாளரை அழைத்து, அதைத் தூக்கி தமது முதுகில் வைக்கும்படி சொன்னார்கள்.

அவர்களின் உதவியாளர் அஸ்லம் பதறியவாறு, “இந்த மூட்டையை நானே தூக்கி வருகிறேனே அமீருல் முஃமினீன் அவர்களே!” என்றார். உமர் (ரலி) அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. “என்ன? நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா? மறுமையில் அந்தப் பெண்மணி பற்றி கேள்வி கேட்கப்படப் போவது நான்தானே? அதனால் இந்தச் சுமையையும் நானே சுமக்க வேண்டும்!”

அஸ்லம் மிகவும் தயங்கியபடி அந்த மூட்டையைத் தூக்கி கலிஃபா அவர்களின் முதுகின் மேல் வைத்தார். அதனைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அப்பெண்மணியின் குடிசையை நோக்கி விரைந்தார்கள் உமர் (ரலி) அவர்கள். அஸ்லமும் அவர்களை பின்தொடர்ந்து சென்றார்.

குடிசையை அடைந்த உமர் (ரலி) அவர்கள் மூட்டையிலிருந்து மாவு, நெய், பேரீத்தம் பழங்களை எடுத்து அவற்றை பிசைந்து, அடுப்பிலிருந்த சட்டியிலிட்டு கிளறினார்கள். அருகிலிருந்த ஊதுகுழலை எடுத்து ஊதி அடுப்புத் தீயை தூண்டி எரியச் செய்தார்கள். அவர்களின் அடர்ந்த தாடிக்குள் புகை படிந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு உணவு தயாரானதும் கலிஃபா அவர்களே அந்த உணவை அப்பெண்மணிக்கும் அவரது குழந்தைகளுக்கும் பரிமாறினார்கள். மீதம் இருந்த உணவுப் பொருட்களை அவர்களின் அடுத்த வேளை உணவிற்காக வைத்துக் கொள்ளும்படி கொடுத்தார்கள். வயிறு நிரம்ப உண்ட குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த உமர் (ரலி) அவர்களின் முகமும் மலர்ந்தது.

உமர் (ரலி) அவர்கள் அப்பெண்மணியிடம் ‘அக்குடும்பத்தை பராமரிப்பவர் யாரும் இல்லையா’ என வினவினார்கள். அந்தக் குழந்தைகளின் தந்தை இறந்து விட்டதாகவும் அவர்களுக்கு ஆதரவளிக்க வேறு யாரும் இல்லை எனவும் அப்பெண்மணி தெரிவித்தார். வீட்டிலிருந்த உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்துப் போய் மூன்று நாட்களாக பட்டினியாக இருந்த நிலையில் அறிமுகமில்லாத அந்த மனிதர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த அந்தப் பெண்மணி சொன்னார், “உங்களின் இந்த கருணைச் செயலுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!

உண்மையில் கலிஃபா பதவிக்கு உமரை விட நீங்களே மிகப் பொருத்தமானவர்”. அவருக்கு எதிரில் அமர்ந்திருப்பது கலிஃபா உமர் (ரலி) அவர்கள்தாம் என்பதை அம்மாது இன்னும் அறிந்து கொள்ளவில்லை!

உமர் (ரலி) அவர்களும் ‘தாம் இன்னார்’ என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நீர் கலிஃபாவை சந்திக்கும்போது அங்கே என்னை கண்டு கொள்வீர்” என்றார்கள்.

கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்து குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள் அதன் பின்னர் மதினா திரும்பினார்கள். செல்லும் வழியில் தன் உதவியாளரிடம் சொன்னார்கள், “அஸ்லம், நான் ஏன் அங்கே அமர்ந்திருந்தேன் தெரியுமா? அக்குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருந்ததை பார்த்த நான் அவர்கள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடுவதையும் சிறிது நேரம் பார்க்க விரும்பினேன். அதனால்தான்.”

வீரத்திற்குப் பெயர் பெற்ற உமர் (ரலி) அவர்கள், கருணையுள்ளம் உடையவராகவும் குடிமக்கள் மேல் அக்கறை கொண்ட பொறுப்பான தேசத் தலைவராகவும் விளங்கினார்கள்

Tuesday, September 18, 2012

HEALTHY JUICES for total Wellness:~

Carrot + Ginger + Apple - Boost and cleanseour system.

Apple + Cucumber + Celery - Prevent cancer, reduce cholesterol, and eliminate stomach upset and headache.


Tomato + Carrot + Apple - Improve skin complexion and eliminate bad breath.

Bitter gourd + Apple + Milk - Avoid bad breath and reduce internal body heat.


Orange + Ginger + Cucumber - Improve Skin texture and moisture and reduce body heat.


Pineapple + Apple + Watermelon - To dispel excess salts, nourishes the bladder and kidney.


Apple + Cucumber + Kiwi - To improve skin complexion.


Pear & Banana - regulates sugar content.


Carrot + Apple + Pear + Mango - Clear bodyheat, counteracts toxicity, decreased blood pressure and fight oxidization.


Honeydew + Grape + Watermelon + Milk - Rich in vitamin C + Vitamin B2 that increase cellactivity and strengthen body immunity.


Papaya + Pineapple + Milk - Rich in vitamin C, E, Iron. Improve skin complexion and metabolism.


Banana + Pineapple + Milk - Rich in Vitamins with nutrition and prevent constipation.


இலாமியர்களின் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் எதிரொலி சென்னை அமெரிக்க தூதரகம் மூடல்....


சென்னை அமெரிக்க தூதரகம் திடீரென மூடப் பட்டதால் விசாவிற்காக ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்க வ‌ந்த ம‌க்க‌ள் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

இஸ்லாமியர்கள் மனதை புண்படுத்தும் விதமாக அமெரிக்கா தயாரித்துள்ள திரைப்படத்திற்கு உலக‌ம் முழுவது‌ம் எ‌தி‌ர்‌ப்பு ‌கிள‌ம்‌பியு‌ள்ளது.

சென்னையிலும் கடந்த 3 நாட்களாக சென்னை தூதரகம் பல இஸ்லாமிய அமைப்பினரால் முற்றுகையிடப் பட்டு வருகிறது.கடந்த சனிக்கிழமையன்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டத்தை நடத்த இஸ்லாமிய மக்களுக்கு அழைப்பு விட்டிருந்தது அன்று பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டதால் பல மணி நேரம் போக்குவரத்து அண்ணா சாலையில் பாதிக்கப்பட்டது.இந்த நிகழ்வை புதிய தலைமுறை சேனல் நேரடியாக அரைமணி நேரம் ஒளிபரப்பியது குறிப்பிடத்தக்கது.

இன்றும் ஜனநாயக முஸ்லிம் முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினரும் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர், இதனால் மூன்று இடங்களில் பாதுகாப்பிற்காக காவலதுறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த தொட‌ர் போரா‌ட்‌ட‌ம் காரணமாக செ‌ன்னை‌யில‌் உ‌ள்ள அமெ‌ரி‌க்க துணை தூதரக‌த்து‌க்கு 3 நா‌ள் ‌விடுமுறை ‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளது

Monday, September 17, 2012

கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது எப்படி ?

************ SHARE WITH UR FRIENDS***************

செல்போன் எனப்படும் கைத்தொலைபேசிகள் இன்றை உலகில் ஒரு அத்தியாவசிய ‘கருவியாகி’ யாவரும் பயன்படுத்தியே தீர வ
ேண்டியுள்ள நிலையில், செல்போன் கதிர் வீச்சிலிருந்து முழுவதுமாக தப்ப இயலாது.

ஏனெனில், நீங்க செல்போன் பயன் படுத்தா விட்டாலும், செல்போன் கோபுரங்களின் கதிர் வீச்சும், பிறரின் பயன்பாட்டின் போதான கதிர் வீச்சும் பாதிக்கவே செய்யும். குருவிகள் இதனால் தான் நகர்ப்புரங்களிலிருந்து காணாமல் போயுள்ளதாக ஆய்வுகள் தெரிவிகின்றன.

இந்நிலையில், கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது நமக்கும் நமது குடுமபம் மற்றும் சந்ததியினருக்கும் சிறந்த விடயமாக இருக்கும்.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் இந்த கைத்தொலைபேசிகளில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இதன் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது.

இதன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான(Gliomas, Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் கைத்தொலைபேசி உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே முக்கியமான விடயம் நாம் கைத்தொலைபேசி உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.

1. முடிந்த அளவு கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட கைத்தொலைபேசிகள் பாதிப்பு அதிகம்.

2. ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும்.

3. குழந்தைகளிடம் கைத்தொலைபேசிகளின் பேசுவதோ, கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.

4. உங்கள் கைத்தொலைபேசியில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.

5. காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட கைத்தொலைபேசிகளின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.

6. தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.

7. நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஓன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.

8. கைத்தொலைபேசிகளில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.

9. கைத்தொலைபேசிகளில் விளையாடுவதை முடிந்த அளவு தவிர்க்கவும். முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

10. கைத்தொலைபேசிகளை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.

11. கைத்தொலைபேசிகளை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.

12. கைத்தொலைபேசியில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.

இதுவரை 20- 20 போட்டிகளில் நடந்த சாதனைகளும், சோதனைகளும்.. ஒரு சுவாரஸ்ய பார்வை.


 

நான்காவது 20- 20 உலகக் கோப்பை நாளை நடைபெற இருக்கும் அதேவேளை இதுவரை 20- 20 போட்டிகளில் நடந்த சாதனைகளும், தோல்விகளும் ஒரு பார்வை..

* 2007 உலககோப்பையில் கென்யாவுக்கு எதிராக இலங்கை 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ஸ்கோர்.


* 2010ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து 68 ரன்னில் சுருண்டது. இதுதான் குறைந்த ஸ்கோர்.

* இலங்கையின் ஜெயவர்த்தனே 18 ஆட்டங்களில் 615 ரன் குவித்துள்ளார்.

* 2009 தொடரில் தில்ஷான் 7 ஆட்டத்தில் 317 ரன் விளாசியுள்ளார்.

* கெய்ல் 57 பந்தில் 117 ரன் விளாசியுள்ளார். இதுவே ஒரு ஆட்டத்தில் தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச ஸ்கோர்.

* 11 ஆட்டங்களில் கெய்ல் 27 சிக்சர்கள் விளாசியுள்ளார்.

* 2007 தொடரில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 10 சிக்சர்கள் கெய்ல் விளாசினார்.

* இதே தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் யுவராஜ்சிங் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்தார்.

* நியூசிலாந்துக்கு எதிராக 2009ல் நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தானின் உமர்குல் 3 ஓவர் வீசி 5 ரன்கள் மட்டும் கொடுத்து 6 விக்கெட் சாய்த்தார். இதுவே 20-20ல் சிறப்பான பந்துவீச்சு.

* அப்ரிடி 20 ஆட்டங்களில் 27 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

* தென் ஆப்ரிக்க அணி 16 ஆட்டங்களில் ஆடி 11 வெற்றி, 5 தோல்விகளை பெற்றுள்ளது.

இந்த வரிசையில் இந்தியா 17 ஆட்டங்களில் 8 வெற்றி, 7 தோல்வி கண்டுள்ளது. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது. ஒரு ஆட்டம் முடிவில்லாமல் போனது.

Sunday, September 16, 2012

சதாமே உல்லாசமாக இருந்தது போல ஆபாச வீடியோ வெளியிட அவர்கள் திட்டமிட்டிருந்தனர்...சதாம் போல இருந்தவருக்கு மர்ம நபர்கள் மிரட்டல்

கெய்ரோ, செப். 16&
ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் போலவே இருந்தவரை ஆபாச படத்தில் நடிக்குமாறு கூறி மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டியது அம்பலமானது.
எகிப்தின் அலெக்சாண்ட்ரியா பகுதியை சேர்ந்தவர் முகமது பிஷர். அசப்பில் ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் போலவே இருப்பார். சமீபத்தில், ஓட்டலுக்கு சென்று கொண்டிருந்த இவரை மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கடத்தினர். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அவரை கொண்டு சென்று, நிர்வாண காட்சியில் நடிக்குமாறு கூறினர். மறுத்த அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். எவ்வளவு அடித்தும் மசியாததால் மீண்டும் வேனில் ஏற்றி சென்று கீழே உருட்டி தள்ளினர். படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பெற்றார்.
“சதாம் போல இருந்த என்னை வைத்து ஆபாச காட்சிகளை எடுத்து, சதாமே உல்லாசமாக இருந்தது போல ஆபாச வீடியோ வெளியிட அவர்கள் திட்டமிட்டிருந்தனர்” என்று முகமது கூறினார்.
அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி உறவினர்கள் மனு செய்துள்ளனர்.

இஸ்லாமை விமர்சித்து திரைப்படம் காட்டுமிராண்டிகளுக்கு கடுங்கண்டனம்..!


அப்பாவி மக்களை கொல்வது... விபச்சாரம்... ஓரினச்சேர்க்கை... போன்ற மனிதநாகரிகத்துக்கு எதிரானவற்றுக்கு கடும் தண்டனைகள் வழங்கி அவற்றுக்கு தடை போட்ட புரட்சி வாழ்வியல் மார்க்கம்தான் இஸ்லாம்..!

பெண்கள், குழந்தைகள். வயோதிகர்கள், மத குருமார்கள் போன்றவர்கள் தங்களிடம் போர்களத்துக்கே வந்து நின்றாலும் கூட... அவர்களை ஒன்றும் செய்யக்கூடாது... என்ற தூய்மையான வழியை போதித்த மார்க்கம்தான் இஸ்லாம்..!


இதெல்லாம்... 'நம் ஏக இறைவன் நமக்கு இப்படித்தான் வாழவேண்டும் என்று கட்டளை இடுகிறான்' என்று மக்களுக்கு எடுத்துரைத்து... தாமும் இறைவன் சொன்னபடி சரியாக வாழ்ந்துகாட்டியவர்தான் நம் இறைத்தூதர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்..!


அன்னார் பற்றி ஒரு ஆபாசமான அடல்ட்ஸ் ஒன்லி செக்ஸ் சினிமா எடுக்க வேண்டும் என்றால்... எவ்வளவு கேவலமான தரங்கெட்ட மிருக சிந்தனை கொண்டவனாக அவன் இருக்க வேண்டும்..? எடுத்து இருக்கிறார்கள்... சில அமெரிக்க காட்டுமிராண்டிகள்..!


மேலே நபி (ஸல்) சொன்னவற்றுக்கு முற்றிலும் எதிராக.... அதாவது எதை 'செய்யக்கூடாது' என்று நபி ஸல் அவர்கள் தடுத்தார்களோ... அதற்கு முற்றிலும் எதிரான வகையில்... அந்த படத்தில் முஹம்மத் என்ற ஏழாம் நூற்றாண்டு அரேபிய கதாபாத்திரம்... ஏற்றவன்... மார்க்க பிரச்சாரமாக மக்களிடம் அப்பாவி பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் போன்றோரை தமது ஆதரவாளர்களிடத்தில் கொல்ல சொல்கிறான்..!


தூய நெறிபிறழாத வாழ்க்கையை வாழ்ந்து காட்டிய மூமின்களின் தாயார் ஹதீஜா என்ற பெண் கதாபாத்திரத்துடன்... திருமணத்துக்கு முன்னரே அருவறுக்கத்தக்க வகையில்... விபச்சாரம் 'செய்வதையும்'...........


'இவர் போன்றவர் நமது இந்தியாவுக்கு ஆட்சியாளராக வேண்டும்' என்று காந்தியடிகள் பாராட்டிய சிறந்த கலீபாவான உமர் (ரலி) போன்ற நபித்தோழர் வேடம் ஏற்ற உமர் என்ற ஆண் கதாபாத்திரத்துடனும்... அந்த முஹம்மத் கதாபாத்திரம்... ஏற்றவன்... ஓரினச்சேர்க்கை 'செய்வதையும்'........ விஷுவலாக காட்டிகொண்டு........


"க்ஹா..... ச்சீ...... த்தூ......" என......


இந்த விபச்சாரர்கள் மூஞ்சியில் காரித்துப்பிவிட்டு... அந்த யு டியூப் விடியோவை பாதியில் நிறுத்தி விட்டேன்..! நல்லொழுக்கம் உள்ள நல்லவர்கள் எவரும் இந்த படத்தை முழுதாக பார்க்க மாட்டார்கள்..! இது அந்த படத்தின் பதினான்கு நிமிஷ ட்ரைலராம்...! அதில்... முஹம்மத் கேரக்டர் ஏற்றவனை 'பாஸ்ட்.....ட்' என்று பிறர் அழைக்கிறார்கள்..! இந்த கேரக்டர் ஏற்று இவன் செய்யும் இந்த விபச்சார & ஓரினச்சேர்க்கை பாவத்துக்கு... அவனின் அப்பாவி தாயை வேறு அவமதிக்கிறார்கள் இந்த சண்டாளர்கள்..!


இப்படி ஒரு சினிமாவை எடுத்தவர்கள் நிச்சயம் மனிதர்களாக இருக்க முடியாது..! மிருகங்களாகவே இருக்க முடியும்..! இதை எல்லாம் தடுக்கவோ... சென்சார் செய்யவோ... மனம் இன்றி மறைமுக ஊக்கம் கொடுக்கும் கேடுகெட்ட அமெரிக்க அநாகரிக அரசும் இந்த மிருகங்களுக்கு சற்றும் சளைத்தது அல்ல என்றே புரிகிறேன்..!


அந்த 'Non-Innocent ஹாலிவுட் அமெரிக்க காட்டுமிராண்டிகள்' இந்த கருமத்தை ஜூலையிலேயே ட்ரைலர் படமாக எடுத்து யு-டியூபில் அப்லோடு பண்ணியும் எந்த முஸ்லிமும் கண்டுகொள்ளவே இல்லை என்றதும் கடுப்பாகிப்போனார்கள்..! அவர்கள் வாயில் மண்..!


பின்னர்... ரொம்ப யோசித்து... அந்த சினிமா ட்ரெயிலர் சாக்கடை கழிவை அரபியில் டப்பிங் பண்ணி, இந்த செப்டம்பரில் அதே யு-டியூபில் அந்த காட்டுமிராண்டிகள் மீண்டும் அப்லோடு பண்ணவும்தான்.... அவர்கள் எதிர்பார்த்தபடி ஹிட்சும் டவுன்லோடும்...கிடைத்து விஷமம் சூடு பிடித்தது...!


எப்போதும் போலவே... இப்போதும்... உணர்ச்சிவசப்பட்ட இந்த அரேபிய முஸ்லிம்கள் அமெரிக்க தூதரகத்தை எகிப்திலும் லிபியாவிலும் ஆர்ப்பாட்டம்-கோஷம் என்று முற்றுகை இட்டுள்ளார்கள்..! அமெரிக்க கொடியை கொளுத்தி தமது எதிர்ப்பை காட்டியுள்ளனர்..! எந்த ஒரு கூட்டத்திலும் ஒழுக்கமற்ற (அந்த படம் எடுத்தவர்கள் போல) சில காட்டுமிராண்டிகள் இருப்பார்கள் அல்லவா..? அவர்கள்.... தங்கள் மார்க்கமான இஸ்லாத்தை மறந்தவர்களாக... பின்பற்றாதவர்களாக... அந்த அமெரிக்க காட்டுமிராண்டிகள் எதை எப்படி எவ்வாறு தங்களிடம் இருந்து எதிர்பார்த்தார்களோ... அதை அப்படி அவ்வாறே ஏதோ ஒரு பக்கா செட்டப்பு போல... மிகச்சரியாக (மிகத்தவறாக) தங்கள் காட்டுமிராண்டித்தனத்தை செப்டம்பர் - 11 இல் லிபியாவில் அரங்கேற்றிக்காட்டி இருக்கிறார்கள்..! விளைவு... மூன்று அப்பாவி அமெரிக்கர்களின் உயிர் கொல்லப்பட்டு விட்டது..!


அமெரிக்க யூத கிருத்துவ காட்டுமிராண்டிகளா Vs. லிபிய முஸ்லிம் காட்டுமிராண்டிகளா... என்று நடந்த போட்டியில்....


மீண்டும் வழக்கம்போல வெற்றி அமெரிக்க காட்டுமிராண்டிகளுக்கே...!


காரணம்... சில யூத காட்டுமிராண்டிகளின் அற்புத டைரக்ஷன் எப்போதுமே அழிப்புப்பாதையில் சதி செய்து நாசவேலைக்கு வித்திடுவதில்... மிகத்துல்லியமாக செயல்பட்டு வந்ததை - வருவதை இந்த நூற்றாண்டில் நாம் நன்கு அறிவோம்..! இப்போதும் அப்படியே..!


இனி என்ன..? அந்த சாக்கடை கருமத்துக்கு செமை இலவச விளம்பரம் வ(த)ந்தாயிற்று..! யு டியூபில் தங்க கோப்பை அவார்ட் கிடைக்கும்..! லோ பட்ஜெட் படம். டாலர் மழை கொட்டோ கொட்டோ என்று கொட்டும் அந்த காட்டுமிராண்டி கூத்தாடிக்கூட்டத்துக்கு..! ஆனால், இங்கே அறிவில்லாத மக்கள் அடித்துக்கொண்டு சாவார்கள்..! பிறகு, "பார்த்தீர்களா... முஸ்லிம்களின் அறிவீனத்தைத்தான்... "Innocence of Muslims" என்று சினிமாவாக சொன்னோமே... இப்போதாவது நம்புகிறீர்களா.." என்று வெற்றிக்களிப்புடன் சொல்லிக் காட்டத்தானே இவ்வளவு மெனக்கெடல்..! காட்டுமிராண்டிகள் எதிரபார்த்ததை காட்டுமிராண்டிகள் நடத்திக்காட்டிவிட்டனர்..!


சில மாதங்களுக்கு முன்னர் "குர்ஆனை எரித்து ஆர்ப்பாட்டம் செய்ய போகிறேன்" என்று கூத்தாட்டம் நடத்திய ஓர் அமெரிக்க கிருத்துவ பாதிரியாரை துணைக்கு சேர்த்துக்கொண்டு... அந்த சினிமாகார யூதன், தான் நினைத்ததை விட அதிகமாகவே இப்போது இந்த படம் மூலம் சாதித்து விட்டான்..!


இறைநாடினால்... இந்த உண்மையை எல்லாம் நிதானமாக சில காலம் கழித்தாவது உண்மையை உணரும்..! இஸ்லாத்தின் பால் மக்கள் ஈர்க்கப்பட்டு இணைவதை அந்த காட்டுமிராண்டிகள் உட்பட எவரும் இதுபோன்ற ஆபாச சினிமாக்களால் தடுத்து விட இயலாது...! இதற்குத்தானே இவ்வளவு மில்லியனை ஒவ்வொரு யூதனிடமாக பிச்சை எடுத்து... அதை இப்படி ஒரு நாசவேலைக்கு செலவு செய்தார்கள்..? இவர்களின் சூழ்ச்சியை முறியடித்து வைக்க அல்லாஹ் போதுமானவன்..!


இவ்வளவு கீழ்த்தரமான படங்களை இவர்கள் எடுக்க... இவர்களே மூக்கின் மீது விரல்வைத்து பாராட்டி அவார்டு தரும்படியான உயர்தரமான எதார்த்த சமூக படங்களை ஈரான் எடுக்கின்றதாம்..! எத்தனை எத்தனை தமிழ் (& இந்திய மொழிகள்) படங்களில் முஸ்லிம்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட அவதூறு கதைகளை பார்த்து இருப்பீர்கள்...? ஆனால்... முஸ்லிம்கள் அடுத்த மதத்தை இழிவு படுத்தியோ... பிற சமூகம் மீது பொய் உரைத்தோ... பொத்தாம் பொதுவாக ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீதே வீண்பழி சுமத்தி அவதூறு கட்டியோ... ஒரு படம் எடுத்ததாக... எப்போதாவது கேள்விபட்டதுண்டா...? காரணம்..? "கவிதைக்கும் பொய் அசிங்கம்" என்பதுதான் இஸ்லாமிய நிலைப்பாடு..! எனில், விஷுவல் மீடியா..? இதைவிட அதிக உண்மையாக இருக்க வேண்டுமல்லவா..? சினிமா எடுப்பதிலாவது... முஸ்லிம்களை பார்த்து கத்துக்குங்க..!


ஆகவே.... இதன்மூலம் சொல்ல வருவது யாதெனில்....


சில லிபிய இஸ்லாமின் அமெரிக்க தூதரக தாக்குதலுக்கு எனது கடும் கண்டனங்கள்..! அதில் இறந்த அப்பாவிகளுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள் & இரங்கல்கள்..!


அதைவிட அதற்கு காரணமான சில ஹாலிவுட் சினிமாக்கூத்தாடிகளின் யூத கிருத்துவ மதவெறி காட்டுமிராண்டித்தனத்துக்கு எனது பல மடங்கு கடும் கண்டனங்கள்..!


அதைவிட எல்லாம் பற்பல மடங்கு.... இதை எல்லாம் இன்னும் 'பேச்சுரிமை', 'கருத்து சுதந்திரம்' என்று சும்மா சிரித்தபடி... வேடிக்கை பார்த்துக்கொண்டு... எதிர்ப்புக்குரல் கொடுப்போரை கலகக்காரர்கள்... தீவிரவாதிகள்... என்று புளுகி சித்தரிக்கும்... இந்த செவிட்டு ஊமை ஊடக உலகத்துக்கு எனது மிகக்கடும் கண்டனங்கள்..!


கிறிஸ்துவம், யூதம் பற்றி எல்லாம் உயர்வாக கருத்து சொல்லப்படும் அப்படத்தில்... இறைத்தூதர் மீதும் இஸ்லாம் மீதும் இப்படி அப்பட்டமாக அபாண்டமாக பொய் சொல்லித்தான் தனது மதத்தை உயர்வாக காட்டி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற கேவலமான கீழ்த்தரமான நிலை கிருத்துவத்துக்கும் யூதத்துக்கும் இருப்பதாகவா இந்த அவதூறு சாக்கடை கருமத்தை படமாக எடுத்த மிருகங்கள் நினைக்கிறார்கள்...? மதப்பிரச்சாரம் செய்ய இப்படியா இவர்கள் பொய் சொல்லி தரம் தாழவேண்டும்..? இவர்களின் இந்த இட்டுக்கட்டும் ஈனச்செயலை அந்த சமயங்களை சார்ந்த நல்லோர் எவருமே பெரிய அளவில் கண்டிக்காதது ஏன்..?


மாறாக...


"அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்;............."(க
ுர்ஆன்- 6:108)"

பிற மத கடவுள்களை நாவினால் ஏசுவதைக்கூட தடை செய்திருக்கின்ற ஒரு மார்க்கம் அல்லவா இஸ்லாம்..! நாராசப்படம் எடுத்த பாவிகளே...! உங்களுக்கு உடனடி அவசர சிகிச்சை பிரிவு இஸ்லாத்தில் தான் உள்ளது..! இஸ்லாத்தினுள்ளே வந்து ICU இல் அட்மிட் ஆகிக்கொள்ளுங்கள்..! இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக..!


இஸ்லாமோஃபோபியாவில்.... இந்த அத்தியாயமும் கடந்து போகும்..!


சரி..சரி... வழக்கம் போல... சரியான இஸ்லாத்தை அறிந்தோர்... இவர்களை மனத்தால் வெறுத்து, இவர்களின் மீதான தீர்ப்பை இறைவனிடம் விட்டுவிட்டு... ' யூதர்களிலும் கிருத்துவர்களிலும் உள்ள நல்லோர்களுக்காக வேண்டி அவர்கள் வாழ்வில் நல்லது நடக்க பிரார்த்தித்து விட்டு... இனி அப்படியே இதனை மறந்து விட்டு... அடுத்த வேலையை அதே விதமான ஒற்றுமையுடன் பார்ப்போம் வாருங்கள் சகோஸ்..!


நன்றி: முஹம்மத் ஆஷிக்_citizen of world


Copy and Paste by

Muthumohamed.S