Digital Time and Date

Welcome Note

Wednesday, September 19, 2012

கம்பீர குதிரையாக ஷெவர்லே க்ரூஸ்


பார்த்தவுடன் பிடித்துப்போய் தனதாக்கிக் கொள்ளத்தூண்டும் மிக கவர்ச்சியான கம்பீரத் தோற்றமும், வசதியான உள் அமைப்பும் என்ஜின் செயல்திறனும் கொண்டதாக உள்ளது ஷெவர்லேயின் க்ரூஸ். அமெரிக்க பெரிய மசுல் காரையும்,ஐரோப்பிய செடான் வகை காரையும், ஜப்பானிய ஸ்டைலையும் ஒருங்கே கொண்டுள்ளது க்ரூஸ்.

இந்த செக்மண்ட் கார்களில் கீ-லெஸ் என்ட்ரி, க்ரூயிஸ் கண்ட்ரோல், ஆடம்பர வெளி மற்றும் உள்தோற்றம் போன்ற அம்சங்களை கொண்டு வாங்கிய பணத்திற்கு கூடுதல் மதிப்பைக் கொடுக்கிறது என்றால் மிகையல்ல. இந்த செடான் காரின் என்ஜின் 2.0 லிட்டர் VCDi டீசல் என்ஜினாகும். இது முழுமையான சக்தியை அதாவது 166US பவரையும் 380NM டார்க்கையும் வழங்குகிறது. இதன் நவீன என்ஜின் மேனேஜ்மென்ட் சிஸ்டம் அதிக செயல்திறன் கொண்ட வேரியபிள் ஜியா மெட்ரி டர்போ சார்ஜருடனும் சிஆர்டிஐ சிஸ்டத்துடனும் சேர்ந்து ஸ்தம்பிக்கச் செய்யும் செயல்பாட்டையும், எரி பொருள் சிக்கனத்தையும், மாசு கட்டுப்பாட்டையும் ஒருங்கே அளிக்கிறது.

இதன் 6 ஸ்பீட் மானுவல் ட்ராஸ்மிஷன் திறமையான ஓட்டுனர்களுக்கு இனிமையான கார் ஓட்டும் அனுபவத்தை வழங்கும் விதமாக ரிஃபைன்ட் ஹைட்ராலிக் க்ளட்ச் சிஸ்டத்துடனும், அதிக டார்க்கை டெலிவரி செய்வதாகவும், பொருத்தமான துல்லியமாய் கியர் மாற்றும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் க்ரூஸின் 6 ஸ்பீட் ஆட்டோ ட்ரான்மிஷன் எடுத்துக் கொண்டாலும் 2.0லிட்டர் VCDi என்ஜின் பவருக்கு ஏற்ப துல்லியமாக கியர் மாறுவதும், சிரமமின்றி ஓவர்டேக் செய்வதற்கும், வேகமான பயணத்தை முழுமையாக அனுபவிப்பதற்கும் ஏற்ற வகையில் இதன் எலக்ட்ரானிக் ஆட்டோமேட்டிக் ட்ரான்மிஷன் கன்ட்ரோல் சிஸ்டம் செயல்புரிகிறது.

க்ரூஸின் மெக் ஃபெர்சன் ஸ்ட்ரட்-டைப் முன்புற சஸ்பென்ஷன் வண்டிக்கு அதிக ஸ்திரத்தன்மையையும், அமைதியான செயல்பாட்டையும் வழங்குகிறது. இதன் வடிவ க் பின்புற சஸ்பென்ஷன் டார்னுஜ் பீம் மற்றும் காஸ் - சார்ஜ் ஷாக் அப்சர்பருடன் இணைந்து வசதியான ஸ்மூத்தான பயணத்தை அளிக்கிறது. அமர்ந்ததும் ஆடம்பர வசதியையும் சொகுசையும் உணரக் கூடிய வகையில் உள்ள ப்ளாக் லெதரினால் ஆன காரின் உள்ளமைப்பும், டிஜிட்டல் டெக்ஸ்ட்டாக காட்டக்கூடிய ஓடோமீட்டர், ஃப்யூவல் கன்சம்ஷன் மற்றும் ஸ்பீட் ரீடிங்குகள் கொண்ட டாஷ் போர்ட்டும், 3 அழுத்தமான ஸ்போக்குகள் கொண்ட ரிம்முடன் திரும்புவதற்கு லாவகமான அமைப்பைக் கொண்ட ஸ்டியரிங் வீல் போன்றவை காரின் பயணத்தை சுகமாக்கும் உள் அலங்காரங்களாகும்.

PEPS என்ற பாசீவ் என்ட்ரி பாசீவ் ஸ்டார்ட் என் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், ஆன்ட்டி தெஃப்ட் அலார்ம், சாவி@ய தேவையில்லாத இக்னீஷன் மற்றும் ஸ்டார்டர் சிஸ்டம் இவற்றுடன் சேர்ந்த, புஷ்-பட்டன் கொண்டு அமைக்கப்பட்டுள்ள "கீலெஸ்' அனுபவம் புதுமையான தொழில்நுட்பமாகும். மேலும் இதில் உள்ள க்ரூயிஸ் கன்ட்ரோல் என்ற தானாகவே வண்டியின் வேகத்தை அட்ஜஸ்ட் செய்துக்கொள்ளும் சிஸ்டமும், 6 விதமாக உடம்பிற்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்துக் கொள்ளக்கூடிய சீட்டும், மழை ஆரம்பித்தவுடன் தானாகவே வேலை செய்யத் துவங்கும் வைப்பர், மழையின் வேகத்திற்கு ஏற்ப தன் வேகத்தையும் தானாகவே திட்டமிட்டுக் கொள்ளும் வசதியும், தட்பவெப்பத்திற்கு ஏற்ப கூலிங்கை அட்ஜஸ்ட் செய்துக் கொள்ளும் ஏசியும், தேவைக்கேற்ப வளைத்து திருப்பிக் கொள்ள ஏதுவான மியூசிக் சிஸ்டமும் இதன் உள்ளேயே அமைந்த ஸ்டியரிங்கும், அல்ட்ராசோனிக் வேவ் உடன் சேர்ந்த ஆடியோ க்யூஸ் கொண்ட ரிவர்ஸ் பார்கிங் சென்சார், பார்க்கிங் செய்வதை மிகச் சுலபமாக்குவதும் ஷவர்லே க்ரூஸ் வழங்கும் சொகுசு அம்சங்களாகும்.

க்ரூஸின் பாதுகாப்பு அம்சங்களாக அதன் வடிவமைப்பை மிகவும் உறுதியான தூண்களும், உருளையான உலோகச் சட்டங்களும் இணைக்கப்பட்ட கதவுகளும், முன்புற மற்றும் பின்புற தகடுகளும் இதற்கு உறுதியான கட்டமைப்பை தந்துள்ளது. இதன் 4 வீல் டிஸ்க் ப்ரேக் ஏபிஎஸ் என்ற ஆன்ட்டிலாக் ப்ரேக்கிங் சேர்ந்து சிறந்த பாதுகாப்பை அளிக்கிறது. முன்புற இரண்டு ஏர்பேக்குகளும் பயணிகளுக்கு பாதுகாப்பை தருகிறது.

வெளிப்புற பார்வைக்கு மிகவும் கம்பீரமாக தெரிகிறது க்ரூஸ். மேற்புறம் அகன்ற வடிவமும், அகலமான வீல் பேளும், ட்வின் பாட் ஃப்ரன்ட் க்ரில்லும், சாமுரா கண்கள் போன்ற ஹெட்லைட் தோற்றமும், மெல்லிய இரட்டை தோற்றம் கொண்ட டெவில் லேம்ப், 16 அலாய்வீலும், முன்புற க்ரில்லின் நடுவே தங்கநிற "போடை' லோகோவும் (ஷெவர்லே) இதன் தோற்றத்திற்கு காரணமாகும். முரட்டுத்தனமான கம்பீரம் கொண்ட வெளித்தோற்றமும், சிறந்த என்ஜின் செயல்திறனும், சொகுசான உள் அமைப்புகள் என்று எல்லா நல்ல அம்சங்களை ஒருங்கே கொண்டுள்ளது ஷெவர்லேயின் க்ரூஸ்.

No comments:

Post a Comment