Digital Time and Date

Welcome Note

Thursday, February 14, 2013

வரலாற்றில் இன்று

பெப்ரவரி 14

நிகழ்வுகள்

1349 - பிரான்சின் ஸ்ட்ராஸ்பூர்க் நகரில் கிட்டத்தட்ட 2,000 யூதர்கள் கொல்லப்பட்டனர் அல்லது கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

1779 - ஹவாயில் ஆதிவாசிகளால் கப்டன் ஜேம்ஸ் குக் கொல்லப்பட்டான்.

1804 - ஓட்டோமான் பேரரசுக்கு எதிரான சேர்பியர்களின் முதலாவது எழுச்சி கரஜோட்ஜே என்பவனின் தலைமையில் இடம்பெற்றது.

1849: அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் நொக் போல் புகைப்படம் பிடிக்கப்பட்டார். பதவியிலிருக்கும் போது படம்பிடிக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதியொருவர் புகைப்படம் எடுக்கப்பட்டது இதுவே முதல் தடவை.
1876 - எலீஷா கிறே மற்றும் அலெக்சாண்டர் கிரகம் பெல் இருவரும் வேறு வேறாக தொலைபேசிக்காண காப்புரிமம் பெற விண்ணப்பித்தனர்.

1879 - சிலியின் இராணுவப்படைகள் பொலீவியாவின் அன்டோபகாஸ்டா நகரைக் கைப்பற்றினர்.

1900 - இரண்டாம் போவர் போர்: தென்னாபிரிக்காவில் ஒரேஞ்ச் மாநிலத்தை 20,000 பிரித்தானியப் படைகள் ஆக்கிரமித்தன.

1918 - சோவியத் ஒன்றியம் கிரெகோரியின் நாட்காட்டியை ஏற்றுக் கொண்டது (பழைய ஜூலியன் நாட்காட்டியின் படி பெப்ரவரி 1).

1919 - போலந்து-சோவியத் போர் ஆரம்பமானது.

1920: அமெரிக்க பெண் வாக்காளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
1924 - ஐபிஎம் நிறுவனம் அமைக்கப்பட்டது.

1927 - யூகொஸ்லாவியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 700 பேர் இறந்தனர்.

1929 - சிக்காகோவில் வேலண்டைன் நாளன்று "அல் காப்போன்" என்பவனின் எதிராளிகள் ஏழு பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

1942 - இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூரில் பசிர் பஞ்சாங்க் என்ற இடத்தில் ஜப்பானியர்களின் தாக்குதல் ஆரம்பித்தது.

1946 - ENIAC என்ற முதல் தலைமுறைக் கணினி அறிமுகமானது.

1956 - சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது மாநாடு மொஸ்கோவில் ஆரம்பமானது.

1961 - 103வது தனிமம் லோரென்சியம் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

1966 - அவுஸ்திரேலியாவில் முன்னர் பாவனையில் இருந்த அவுஸ்திரேலிய பவுண்டிற்குப் பதிலாக அவுஸ்திரேலிய டொலர் அறிமுகப்படுத்தப்பட்டது.

1979 - ஆப்கானிஸ்தானுக்கான ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர் அடொல்ஃப் டப்ஸ் காபூலில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் காவற்துறையினருக்கும் கடத்தல்காரருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் அகப்பட்டு இறந்தார்.

1981 - டப்ளினில் இரவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ர தீயில் 48 பேர் கொல்லப்பட்டனர்.

1987 - யாழ்ப்பாணம், கைதடியில் இடம்பெற்ற வெடிவிபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் பொன்னம்மான் உட்பட ஏழு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.

1987 - தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி நிதர்சனம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

1989 - ஜிபிஎஸ் திட்டத்தின் 24 செய்மதிகளில் முதலாவது விண்ணில் ஏவப்பட்டது.

1989 - யூனியன் கார்பைட் நிறுவனம் 1984 போபால் அழிவிற்காக இந்திய அரசிற்கு 470 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்ட ஈடாக வழங்க சம்மதித்தது.

1989 - சாத்தானின் கவிதைகள் நூலை எழுதியதற்காக சல்மான் ருஷ்டிக்கு ஈரான் தலைவர் ருஹொல்லா கொமெய்னி மரண தண்டனை விதி்த்தார்.

1990 - பெங்களூருவில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 92 பேர் கொல்லப்பட்டு 54 பேர் காயங்களுடன் தப்பினர்.

1998 - கோயம்புத்தூர் நகரின் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 58 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் காயமுற்றனர்.

2000 - நியர் ஷூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளின் சுற்றுவட்டத்துள் பிரவேசித்தது. சிறுகோள் ஒன்றின் சுற்றுக்குள் சென்ற முதலாவது விண்கலம் இதுவாகும்.

2005 - லெபனானின் முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரி சுட்டுக் கொல்லப்பட்டார்.

2005 - பிலிப்பீன்சில் மணிலா நகரில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 7 பேர் கொல்லப்பட்டு 151 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்
1483 - ஸாகிருதீன் பாபர், முகலாயப் பேரரசர் (இ. 1530)

1869 - சார்ல்ஸ் வில்சன், நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர், (இ. 1959)

1917 - ஹேர்பேர்ட் ஹோப்ட்மன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க கணிதவியலாளர்

இறப்புகள்

1779 - ஜேம்ஸ் குக், பிரித்தானிய கப்பற் தளபதி, நாடுகாண்பயணி (பி. 1728)

1968 - அ. ந. கந்தசாமி, ஈழத்து எழுத்தாளர் (பி. 1924)

Wednesday, February 13, 2013

ஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்?

ஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள் என்பதற்கு பல சுவாரஸ்யமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் எட்டு:

1. ரிமோட் கண்ட்ரோல் என்பது ஆண்களுக்கு ஒரு விதமான சக்தி தருகிறது. 'நான்தான் குடும்பத் தலைவன். எனக்குக் கீழ்ப்படிந்துதான் டி.வி. உள்பட எல்லாரும் இயங்க வேண்டும்' என்கிற ஆணாதிக்கச் செயல் என்கிறார்கள்.

2. ஒரு மனைவியின் கூற்றின்படி... 'என் கணவரால் என்னை கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. ரிமோட் கண்ட்ரோலை இம்சை செய்கிறார்.'

3. ஆண்களின் ஆதிகால வேட்டையாடும் குணத்தின் நவீன வடிவம் இது. கையில் ரிமோட் வைத்திருக்கும் ஆண் சுவாரஸ்யமான இரைகளைத் தேடும் வேட்டை மிருகம்.

4. ஆண்களுக்கு உடனடியாக காரியம் நடக்க வேண்டும். மேலும் கொஞ்சம் சந்து கிடைத்தால் 'அங்கே என்ன ஓடிக்கொண்டிருக்கிறது... அதைத் தவறவிடக்கூடாது' என்கிற எட்டிப் பார்க்கும் ஆசையும் உண்டு.

5. எப்போதுமே ஆண்களுக்குக் கொஞ்சம் அலையும் ஆசையும், இருக்கிறதை விட்டுப் பறக்கிறதைப் பிடிக்கும் ஆசையும் உண்டு. 'இதைப் பார்த்தாகிவிட்டதே... வேறு எதாவது கிடைக்கிறதா பார்ப்போம்' என்கிற நப்பாசை.

6. ஒரு எலி, பூனை, நாய் போல பாவ்லாவியன் ரிஃப்ளக்ஸாக (Pavlovian Reflex) பட்டனை அழுத்தும்போதெல்லாம் சந்தோஷம் கிடைத்தால் அதிகம் சேனல் மாற்றமாட்டார்கள். ஆனால், அப்படிக் கிடைப்பதில்லை. அதனால் சந்தோஷத்தைத் தேடி இன்னும் இன்னும் தாவல்.

7. ரிமோட் கண்ட்ரோல் என்பது, ஒரு கணவன் தன் மனைவியைச் சுலபமாக வெறுப்பேற்றுவதற்கான சாதனம்.

8. ஒரு மனைவி எழுதியிருந்தார் - 'என் கணவனுக்கு பக்கவாதம் வந்து மெள்ள மெள்ள செயலிழந்து கொண்டிருந்தார். கடைசிவரை அவரால் தன்னிச்சையாகச் செய்ய முடிந்த காரியம் - ஒரு பென்சிலை வாயில் வைத்துக் கொண்டு மிகுந்த சிரமத்துடன் ரிமோட்டின் பட்டனை அமுக்குவதே. அந்தக் காரியம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதையும் இழந்த பின் அவர் இறந்துபோனார்.'

- சுஜாதா
கற்றதும் பெற்றதும் நூலில் இருந்து..

இஸ்லாம் என்றால் என்னவென்பதை எடுத்து சொல்லும் கடமை நமக்கு இருக்கிறது

[ இஸ்லாத்தை விமர்சிப்பது தப்பில்லை. பொதுவில் வலம் வரும் எதன் மீதும் விமர்சனம் எழுவது இயல்பு தான். அதனடிப்படையில் இஸ்லாத்தை விமர்சிப்பது ஏற்புடையது தான். ஆனால் ஒன்றை விமர்சிக்கும் முன் அதனை அறிந்து விமர்சிப்பதே முறை...

இன்று இஸ்லாத்தை விமர்சிக்கும் எவருக்கும் குறைந்த பட்சம் இஸ்லாம் என்றால் என்ன, அது மனித குலத்திற்கு என்ன சொல்கிறது என்பதை கூட தெளிவாக வரையறை செய்ய தெரியாது.

பொது புரிதலில் ஊடகங்கள் கொடுக்கும் தவறான சுட்டிகளை வைத்துக்கொண்டோ, அல்லது தனது சுய புரிதலில் விளங்கி வைத்திருக்கும் ஒரு சில செய்திகளை வைத்துக்கொண்டோ எதிர் மறை கண்ணோட்டத்தில் விமர்சிக்கிறார்கள்.

இஸ்லாம் சொல்லாத அல்லது ஹராம் என்று தடுத்த ஒன்றை ஒருவன் செயல்படுத்தினால் முஸ்லிம் என்ற வட்டத்தை விட்டே முதலில் அவன் வெளியேறி விடுகிறான். பிறகு எப்படி அவன் செய்வதற்கு இஸ்லாத்தை பொறுப்பாக முடியும்.? இது முஸ்லிம்கள் என சொல்லிக்கொள்ளும் எவருக்கும் பொருந்தும்.

தீவிரவாதத்திற்கு துளிக்கூட மார்க்கத்தில் அனுமதியில்லையெனும் போது அதை செய்பவர்களை முஸ்லிம்களென யாரும் கூறுவார்களானால்.. அவர்களுக்கு இஸ்லாத்தை குறித்த அடிப்படை அறிவுக்கூட இல்லையென்பதாக தான் விளங்கிக்கொள்ள முடியும்.

வகுப்பறையில் ஆசிரியர் எதுவும் எழுதப்படாத கரும்பலகையில் ஒரு இடத்தில் மட்டும் புள்ளி வைத்து மாணவர்களை நோக்கி இந்த போர்ட்டில் என்ன தெரிகிறது என கேட்டார்..? உடனே மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் ஒரு வெண்புள்ளி தென்படுவதாக கூறினர். சில வினாடிகள் மௌனித்த ஆசிரியர், பார்த்தீர்களா.. இவ்வளவு பெரிய போர்ட்டில் ஒரு சிறுப்புள்ளியை தவிர மற்ற எல்லா இடங்களும் கருப்பாக காட்சியளிக்கிறது.. ஆனால் அவ்வளவு பெரிய பரப்பளவை யாரும் கண்டுக்கொள்ளாமல் சிறிதாய் தென்படும் ஒரு புள்ளியை மட்டும் சொல்கிறீர்களே.... என மாணவர்களின் மாற்று சிந்தனையை தூண்டினார்.

உண்மைதான்..! அந்த மாணவர்களை போல தான் நம்மில் பலர் பல விசயங்களை புரிந்து வைத்திருக்கிறோம். நமக்கு ஆராய அவகாசமில்லாத எந்த செயலையும் அது எதிர்மறையாக இருப்பீனும் கூட இந்த சமூகத்தின் பெரும்பான்மை கூறும் கருத்துகளோடே உடன்படுகிறோம். அப்படியானவைகளில் ஒன்றாய் இன்று இஸ்லாமும்- முஸ்லிம்களும் ஆகி போனது தான் நாம் கவனிக்க தவறிய ஒன்று!

முஸ்லிம் என்ற ஒற்றை சொல் தொடர்புடைய எந்த செயலாக இருப்பீனும் அச்செயலின் முடிவில் இன்று இஸ்லாம் விமர்சிக்கப்படுகிறது. பொதுவெளியில் இந்த சமூகத்திற்கு முஸ்லிம்கள் எதிரானவர்களென மேற்கத்திய ஊடகங்களால் செய்யப்படும் பொய் பிரச்சாரமே இதற்கு தலையாய காரணமென்றால் அது மிகையில்லை. அதனை வெற்றிக்கரமாக இச்மூகத்தில் செயல்படுத்திய காரணத்தால் தான் இன்று ஓசாமாவும், தாலிபான்களும் இஸ்லாத்தின் அடையாளமாக வைத்து விமர்சிக்கப்படுவதோடு தாடிகளும், தொப்பிகளும் தீவிரவாதத்தின் அடையாளமாக்கப்படுகிறது.

உதாரணத்திற்கு, தீவிரவாதத்தை இஸ்லாம் அங்கீகரிப்பதாய் சொல்பவர்களிடம் ஆதாரம் கேட்டால், முஸ்லிம் பெயர் கொண்ட தீவிரவாத அமைப்புகளின் பக்கம் கையே நீட்டி தம் சான்றை நிறுவ பார்க்கிறார்கள். இதுவா ஒன்றை உண்மைப்படுத்த எடுக்கும் அளவுகோல்...?

இஸ்லாத்தை நீங்கள் குறைப்படுத்த வேண்டுமானால் அதற்கு குர்-ஆன் மற்றும் நபிகளாரின் வாழ்வு இவை இரண்டில் மட்டுமே ஆதாரங்களை எடுத்து முன் வைத்து குற்றம் சுமத்த வேண்டும். ஏனெனில் இவை தான்... இவை மட்டும் தான் இஸ்லாம். குர்-ஆனோ அல்லது நபிகளாரோ (அப்பாவி) மனிதர்களை கொல்லுங்கள் என்று கட்டளையிட்டிருந்தால் தீவிரவாதத்தை இஸ்லாத்தோடு முடிச்சிடுவதற்கு நியாயமான காரணங்களும் இருக்கின்றன, இஸ்லாத்தை குற்றப்படுத்துவது நூற்றுக்கு நூறு உண்மையானதும் கூட எனலாம். ஆனால்...

வீணாய் ஒருவனை கொல்வது ஒட்டுமொத்த சமூகத்தையும் கொல்வதற்கு சமமானது. (5:32 ) என தனி மனித உயிருக்கே இவ்வளவு முக்கியத்துவம் இஸ்லாம் கொடுத்து சொல்லியிருக்கும் போது இஸ்லாம் சொன்னதால் தான் அப்பாவி மக்களை கொலை செய்கிறோம் என ஒருவனோ / ஒரு குழுவோ சொன்னால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்...? குறைந்த பட்சம் அதை ஏற்பது என்பது அறிவுடைமையா...? சிந்திக்க வேண்டும் .

இஸ்லாம் சொல்லாத அல்லது ஹராம் என்று தடுத்த ஒன்றை ஒருவன் செயல்படுத்தினால் முஸ்லிம் என்ற வட்டத்தை விட்டே முதலில் அவன் வெளியேறி விடுகிறான். பிறகு எப்படி அவன் செய்வதற்கு இஸ்லாத்தை பொறுப்பாக முடியும்.? இது முஸ்லிம்கள் என சொல்லிக்கொள்ளும் எவருக்கும் பொருந்தும். தீவிரவாதத்திற்கு துளிக்கூட மார்க்கத்தில் அனுமதியில்லையெனும் போது அதை செய்பவர்களை முஸ்லிம்களென யாரும் கூறுவார்களானால்.. அவர்களுக்கு இஸ்லாத்தை குறித்த அடிப்படை அறிவுக்கூட இல்லையென்பதாக தான் விளங்கிக்கொள்ள முடியும்.

தீவிரவாதத்தை செய்வதினால் தான் தாலிபான்களை எதிர்க்கிறோம் என பக்கத்திற்கு பக்கம், வரிக்கு வரி மனிதம் பேசும் மனித பிறவிகள் எவரும், அதே தீவிரவாதத்தை வெவேறு பெயர்களில், வெவ்வேறு போலி காரணத்திற்காக ஈராக்கிலும், பாலஸ்தீனிலும் அரங்கேற்றி ஆயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்று குவித்த இஸ்ரேலையும், அமெரிக்காவையும் ஏன் பொதுவெளியில் எதிர்க்கவில்லை, நடுநிலை முக்காடு போட்டிருக்கும் ஊடகங்கள் கூட இவற்றிற்கு எதிராய் செயல்பட்டதில்லையே அது ஏன்..? புரிந்துக்கொள்ள முயற்சியுங்கள் முஸ்லிம்களும் மனிதர்கள் தான்...

இஸ்லாமிய சட்டங்களை விமர்சிப்பதிலும் அதே முரண்பாடுதான். சவுதி உட்பட எந்த நாடும் தங்களை இஸ்லாமிய நாடாக பிரகடனப்படுத்தியிருந்தாலும் அவற்றின் சட்ட முறைமைகள் மீறப்படும் போது இஸ்லாமே விமர்சிக்கப்படுகிறது.

குற்றம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணையின் போது இரு தரப்பையும் நன்கு விசாரித்த பிறகே நடுநிலையாய் தீர்ப்பை வழங்க சொல்கிறது இஸ்லாம். அது தம்மை சார்ந்தவர்களுக்கு பாதகமாக அமைந்தாலும் (6:152 ) நீதி செலுத்த சொல்கிறது. ஆக இங்கே குறை இஸ்லாமிய சட்ட முறைமைகளில் இல்லை. மாறாக அதை அமுல்படுத்துவோரிடம் பிரச்சனை இருந்தால் இதற்கு எப்படி மார்க்கம் காரணமாகும்..?

இஸ்லாமிய ஆட்சியை நீங்கள் விமர்சிப்பதாக இருந்தால், அண்ணலாரின் ஆட்சியிலிருந்தோ அல்லது அதற்கடுத்து வந்த கலிஃபாக்களின் ஆட்சியிலிருந்தோ விமர்சனங்களை பதிய வேண்டும். ஏனெனில் அவை தான் இஸ்லாத்தின் அடிப்படையில் செய்யப்பட்ட ஆட்சியாக அங்கீகரிக்கப்பட்டவை.. ஆனால் இன்று சவுதி ஆட்சியாளர்களுக்கு எதிராக கூப்பாடும் போடும் எவரும் மேற்கண்ட ஆட்சியமைப்பு பற்றி வாய் திறப்பதில்லை...

உண்மையாக இஸ்லாம் என்ன சொன்னது என்பதை அறிய அதை செயல்படுத்தியவர்களிடம் மட்டும் தான் ஒப்பு நோக்க வேண்டும். தன் தந்தையாராலே ஓட்டகைகள் மேய்ப்பதற்கு கூட தகுதியில்லையென ஒதுக்கப்பட்ட உமர் (ரலி), பிற்காலத்தில் சுமார் 22 லட்சம் சதுரமைல்களை எந்த வித முறைகேடுகளும் இன்றி திறமையான நிர்வாக திறன் கொண்டு நீதமான ஆட்சியை சுமார் 10 ஆண்டு காலம் செய்ய முடிந்தது என்றால் அதற்கு பெயர் தான் இஸ்லாமிய ஆட்சி. அதை செய்ய வைத்தது தான் இஸ்லாம்! இவர்களது ஆட்சியை விமர்சிக்க வாருங்கள் தாரளமாய் ...

இன்னும் பாருங்கள், சமீபத்தில் இஸ்லாமிய விரோத போக்குக்கொண்ட ஒரு படத்திற்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் களத்தில் இறங்கியதை சேனல் நியுஸ்களிலும், இணையத்தில் எழுத்துக்கள் வாயிலாகவும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான செயலாக கண்டித்த இதே ஊடகங்கள், இதற்கு முன்னர் இதே முஸ்லிம் அமைப்புகள் இரத்த தான முகாம்கள் பல நடத்திய போதும், வரதட்சணைக்கு எதிராக பல மேடைகள் போட்ட போதும், சுனாமி எனும் பேரிடர் ஏற்பட்ட தருணத்தில் மத சார்பற்று களப்பணியாற்றிய போதும் ஓரிரு வார்த்தைகள் கூட அவர்கள் குறித்து செய்திகள் வெளியிடவில்லையே ஏன்...?

பொதுவெளியில் முஸ்லிம்கள் என்றாலே பிரச்சனைக்குரியவர்கள் அல்லது பிரச்சனைகள் ஏற்படுத்த கூடியவர்கள் என்ற பிம்பம் மட்டுமே நிலை பெற வேண்டும் என்ற சுய நல சிந்தனைக்கு என்ன காரணம்...?

இஸ்லாம் சொன்ன ஒரே காரணத்திற்காகவே சிகரெட் பிடிக்காமல், மது அருந்தாமல், விபச்சாரத்தின் பக்கம் நெருங்காமல், வட்டி வாங்காமல், மதுக்கடைகள் நடத்தாமல், ஹராமான தொழில் செய்யாமல் இன்று உங்களின் மத்தியில் எத்தனையோ முஸ்லிம்கள் நாள்தோறும் வலம் வருகிறார்களே அவர்களை ஏன் இஸ்லாத்தின் அடையாளமாக கருத மறுக்கிறீர்கள்...?
முஸ்லிம் சகோதரர்களே...! இத்தருணத்தில் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். இஸ்லாம் சொல்லாத ஒன்றை செய்யும் போது சிறியதாகினும், பெரியதாகினும் அது இச்சமுகத்தில் எந்த கோணத்தில் பார்க்க படுகிறது என்பதை தான் தற்கால நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகிறது.

ஹஜ் பெருநாளுக்கும், நோன்பு பெருநாளுக்கும் மாற்றார்களை அழைத்து வீட்டில் பிரியாணி கொடுத்து புளங்காகிதம் அடைந்தால் மட்டும் போதாது. அவர்களுக்கு உண்மையான இஸ்லாம் என்றால் என்னவென்பதை எடுத்து சொல்லும் கடமையும் நமக்கு இருக்கிறது. வேதவரிகளும் தூதர் மொழிகளும் மட்டுமே நமது வாழ்க்கைகான அளவுகோல். என்பதை (எடுத்து சொல்ல) என்றும் மறவாதீர்கள்.
-nidur.info
-SA

வரலாற்றில் இன்று

பெப்ரவரி 13

நிகழ்வுகள்

1258 - பக்தாத் மங்கோலியரிடம் வீழ்ந்தது.

1668 - ஸ்பெயின் போர்த்துக்கலை தனிநாடாக அங்கீகரித்தது.

1755 - ஜாவாவின் மடாரம் பேரரசு "யோக்யகர்த்தா சுல்தானகம்" மற்றும் "சுரகர்த்தா சுல்தானகம்" என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

1880 - எடிசன் விளைவை தொமஸ் எடிசன் அவதானித்தார்.

1914 - பொன்னம்பலம் அருணாசலத்திற்கு சேர் பட்டம் பக்கிங்ஹாம் அரண்மனையில் வழங்கப்பட்டது.

1920: அமெரிக்க தேசிய நீக்ரோ லீக் ஸ்தாபிக்கப்பட்டது.

1931: கல்கத்தாவிற்குப் பதிலாக, புது டில்லி இந்தியாவின் தலைநகராகியது.

1934 - சோவியத் நீராவிக்கப்பல் செலியூஷ்கின் ஆர்க்டிக் பெருங்கடலில் மூழ்கியது.

1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரை ஹிட்லரின் நாசிப் படைகளிடம் இருந்து மீட்டன.

1960 - பிரான்ஸ் தனது முதலாவது அணுகுண்டை சோதித்தது.

1971 - வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்காவின் உதவியுடன் தெற்கு வியட்நாம் லாவோசைத் தாக்கியது.

1974 - நோபல் பரிசு பெற்ற அலெக்சாண்டர் சொல்ஷெனிட்சின் சோவியத் ஒன்றியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.

1975 - நியூயோர்க் நகரில் உலக வர்த்தக மையத்தில் தீ பரவியது.

1978 - சிட்னியில் ஹில்டன் உணவகத்தின் முன் குண்டு வெடித்ததில் ஒரு காவற்படை உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர்.

1984 - கான்ஸ்டன்டீன் செர்னென்கோ சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார்.

1985 - கொக்கிளாய் இராணுவ முகாம் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அழிக்கப்பட்டது.

1990 - இரண்டு ஜெர்மனிகளும் இணைவது குறித்த இரண்டு-கட்டத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

1991: ஈராக்கின் பாக்தாத் நகரில் அமெரிக்காவின் அதி நவீன குண்டொன்று வீழ்ந்ததில் சுமார் 400 பொதுமக்கள் பலியாகினர்.

1996 - நேபாள மக்கள் புரட்சி மாவோயிசவாத போராளிகளால் ஆரம்பிக்கப்பட்டது.

2001 - எல் சல்வடோரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 400 பேர் வரை கொல்லப்பட்டனர்.

2008: அவுஸ்திரேலியாவில் அந்நாட்டு பழங்குடியின மக்கள் கொல்லப்பட்டமைக்கு பிரதமர் கெவின் ருட் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மன்னிப்பு கோரினார்.

பிறப்புகள்

1879 - சரோஜினி நாயுடு, இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை (இ. 1949)

1910 - வில்லியம் ஷாக்லி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1989)

1920 அ. மருதகாசி, தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் (இ. 1989)

இறப்புகள்

1950 - செய்குத்தம்பி பாவலர், தமிழறிஞர் (பி. 1874)

2009 - கிருத்திகா, தமிழக எழுத்தாளர்

வரலாற்றில் இன்று

பெப்ரவரி 12

நிகழ்வுகள்

55 - ரோமின் முடிக்குரிய இளவரசன் டிபேரியஸ் கிளோடியஸ் சீசர் பிரிட்டானிக்கஸ் மர்மமான முறையில் இறந்தான். இவனது மரணம் நீரோ மன்னனாக வர வாய்ப்பளித்தது.

1502 - இந்தியாவுக்கான தனது இரண்டாவது கடற் பயணத்தை வாஸ்கோ ட காமா லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தார்.

1554: இங்கிலாந்தில் 9 நாட்கள் அரசியாக பதவி வகித்த ஜேன் கிறே, தேசத்துரோக குற்றச்சாட்டின் பேரில் சிரச்சேதம் செய்யப்பட்டார்.

1593: 30 ஆயிரம் பேர்கொண்ட ஜப்பானிய படையெடுப்பை 3 ஆயிரம் பேர் கொண்ட தென்கொரிய படை முறியடித்தது.

1733 - ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியா ஆங்கிலக் குடியேற்ற நாடாக ஜேம்ஸ் ஒக்லிதோர்ப் என்பவரால் அமைக்கப்பட்டது.

1771 - சுவீடன் மன்னன் அடொல்ஃப் பிரெடெரிக் இறந்ததை அடுத்து அவனது மகன் மூன்றாம் குஸ்டாவ் மன்னன் ஆனான்.

1818 - சிலி ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1832 - கலாபகசுத் தீவுகளை எக்குவாடோர் இணைத்துக் கொண்டது.

1832 – லண்டனில் காலரா பரவியதில் 3000 பேர் கொல்லப்பட்டனர்.

1873 - எமிலியோ காஸ்டெல்லார் ஸ்பெயினின் புதிய குடியரசின் பிரதமராக ஆனார்.

1912 - சீனாவின் கடைசி அரசன் க்சுவாண்டொங் முடி துறந்தான்.

1912 - சீனக் குடியரசில் கிரெகோரியன் நாட்காட்டி அமுலுக்கு வந்தது.

1927 - முதலாவது பிரித்தானியப் படைகள் ஷங்காய் நகரை அடைந்தன.

1934 - ஆஸ்திரியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமாகியது.

1961 - வெனேரா 1 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் வெள்ளிக் கோளை நோக்கி ஏவியது.

1999: அமெமரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் மீதான அமெரிக்க செனட் சபையின் குற்றவியல் விசாரணையில் அவர் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டார்.

1999: மரபணு மாற்றப்பட்ட உணவுகளினால் ஏற்படும் சுகாதார பாதிப்புகள் குறித்து சர்வதேச விஞ்ஞானிகள் குழுவொன்று எச்சரிதத்து.

2001 - நியர் ஷூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளில் தரையிறங்கியது. சிறுகோள் ஒன்றில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.

2002 - யூகொஸ்லாவியாவின் முன்னாள் தலைவர் சிலொபடான் மிலோசெவிச் மீது ஹேக் நகரில் ஐநாவின் போர்க்குற்ற விசாரணைகள் ஆரம்பமாயின.

2002 - ஈரானின் விமானம் ஒன்று கோரமபாத் நகரில் வீழ்ந்ததில் 119 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1809 - சார்ள்ஸ் டார்வின், ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர் (இ. 1882)

1809 - ஆபிரகாம் லிங்கன், ஐக்கிய அமெரிக்காவின் 16வது அதிபர் (இ. 1865)

1918 - ஜூலீயன் ஷ்விங்கர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1994)

1967 - என். ரவிக்கிரன், சித்திர வீணைக் கலைஞர்

இறப்புகள்

1804 - இம்மானுவேல் கண்ட், ஜெர்மனியைச் சேர்ந்த மெய்யியலாளர், (பி. 1724)

1908 - ஜி. யு. போப், தமிழ்நாட்டில் தமிழ்ப் பணி புரிந்த அமெரிக்கர் (பி. 1820)

2009 - புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி, தமிழீழ ஊடகவியலாளர்

2009 - முருகதாசன், தீக்குளித்து இறந்த ஈழத்தமிழன்(பி. 1982)

வரலாற்றில் இன்று

பெப்ரவரி 11

நிகழ்வுகள்
கிமு 660 - ஜிம்மு பேரரசரினால் ஜப்பான் அமைக்கப்பட்டது.

55 - ரோமப் பேரரசின் முடிக்குரிய பிரிட்டானிக்கஸ் ரோம் நகரில் மர்மமான முறையில் இறந்தான். நீரோ பேரரசனாவதற்கு இது வழி வகுத்தது.

1531 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னன் இங்கிலாந்துத் திருச்சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.

1659 - சுவீடன் படைகளின் கோப்பன்ஹேகன் நகரத் தாக்குதல் பலத்த உயிரிழப்புகளுடன் முறியடிக்கப்பட்டது.

1752 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது மருத்துவமனை பென்சில்வேனியாவில் திறக்கப்பட்டது.

1809 - ரொபேர்ட் ஃபுல்ட்டன் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றார்.

1814 - நோர்வேயின் விடுதலை அறிவிக்கப்பட்டது.

1826 - லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி லண்டன் பல்கலைக்கழகம் என்ற பெயருடன் அமைக்கப்பட்டது.

1873 - ஸ்பானிய உயர் நீதிமன்றம் (Cortes) முதலாம் அமெடியஸ் மன்னனை பதவி விலக்கி ஸ்பெயின் நாட்டைக் குடியரசாக அறிவித்தது.

1919 - பிரீட்ரிக் எபேர்ட் ஜெர்மனியின் அதிபராகத் தெரிந்தெடுக்கப்பட்டார்.

1929 - இலாத்தரன் உடன்படிக்கை மூலமாக வத்திக்கான் நகர் உருவானது.

1933 - மகாத்மா காந்தி ஹரிஜன் என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.

1942 - இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூரில் பூக்கிட் டீமா என்ற இடத்தில் நேச நாடுகள் அணிக்கும் ஜப்பானுக்கும் இடையில் சமர் நிகழ்ந்தது.

1945 - இரண்டாம் உலகப் போர்: யால்ட்டா உச்சி மாநாடு முடிவடைந்தது.

1953 - சோவியத் ஒன்றியம் இஸ்ரவேலுடன் தூதரக உறவை முறித்துக் கொண்டது.

1960 - சீன எல்லையில் நடந்த தாக்குதல் ஒன்றில் 12 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

1964 - சைப்பிரசில் கிரேக்கர்களுக்கும் துருக்கியர்களுக்கும் இடையில் லிமசோல் என்ற இடத்தில் சமர் இடம்பெற்றது.

1964 - சீனக் குடியரசு (தாய்வான்) பிரான்சுடன் தூதரக உறவை முறித்துக் கொண்டது.

1968 - இஸ்ரேல்-ஜோர்தான் எல்லைச் சண்டை ஆரம்பித்தது.

1971 - ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சோவியத் ஒன்றியம் உட்பட 87 நாடுகள் சர்வதேச நீர்ப்பரப்பில் அணுவாயுதத் தடையைக் கொண்டுவர முடிவெடுத்தன.

1973 - வியட்நாம் போர்: அமெரிக்கப் போர்க்கைதிகளின் முதலாவது தொகுதியை விடுவிக்கும் நிகழ்வு வியட்நாமில் இடம்பெற்றது.

1975: பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரானார். ஆந்நாட்டின் அரசியல் கட்சியொன்றின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட முதல் பெண் இவராவார்.

1979 - அயதொல்லா கொமெய்னியின் தலைமையில் ஈரானில் இஸ்லாமியப் புரட்சி வெற்றி அடைந்தது.

1990: 20 வயதான மைக் டைசன், பிரபல குத்துச்சண்டை சம்பியன் ஜேம்ஸ் பஸ்டர் டக்ளஸை வீழ்த்தி இளம் உலக சம்பியனானனார். குத்துச்சண்டை வரலாற்றில் மாபெரும் ஆச்சரிய பெறுபேறாக இது கருதப்படுகிறது.

1990 - தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின்னர் விடுதலையானார்.

1996 - இலங்கை இராணுவத்தினரால் குழந்தைகள் உட்பட 26 பேர் திருகோணமலை, கிளிவெட்டி பகுதியின் குமாரபுரத்தில் படுகொலை செய்யப்பட்டனர். 30 பேர் காயமடைந்தனர்.

1997 - டிஸ்கவரி விண்ணோடம் ஹபிள் விண்வெளித் தொலைக்காட்டியைத் திருத்தும் நோக்கில் விண்ணுக்கு ஏவப்பட்டது.

2005 - ஜேர்மனியின் முதல் 24 மணி நேரத் தமிழ் வானொலியான ஐரோப்பியத் தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்டது.

2008 - கிழக்குத் திமோரின் அதிபர் ஜொசே ரமோஸ் ஹோர்ட்டா அவரது வீட்டில் வைத்து தீவிரவாதிகளால் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார்.

பிறப்புகள்

1847 - தொமஸ் அல்வா எடிசன், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர் (இ. 1931)

1917 - சிட்னி ஷெல்டன், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2007)

1924 - வி. வி. வைரமுத்து, நடிகமணி, ஈழத்தின் நாட்டுக்கூத்து நடிகர் (இ. 1989)

1964 - சேரா பேலின், அலாஸ்கா மாநில ஆளுனர்

இறப்புகள்
1650 - ரேனே டெஸ்கார்ட்டஸ், தத்துவ ஞானி, கணித மேதை (பி. 1596)

1693 - ஜான் டி பிரிட்டோ, இயேசு திருச்சபை மதப்போதகர் (பி. 1647)

1713 - ஜகாந்தர் ஷா, முகலாய அரசன் (பி. 1664)

1946 - மா. சிங்காரவேலர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தை (பி. 1860)

1948 - செர்கீ ஐசென்ஸ்டைன், ரஷ்யத் திரைப்பட இயக்குனர் (பி. 1898)

1973 - ஹான்ஸ் ஜென்சன், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானிய இயற்பியலாளர் (பி. 1907)

19?? - சி. சுந்தரலிங்கம், அடங்காத் தமிழன், ஈழத் தமிழ் அரசியல்வாதி

1978 - ஹரி மார்ட்டின்சன், நோபல் பரிசு பெற்ற சுவீடன் எழுத்தாளர் (பி. 1904)

1991 - ரொபேர்ட் ஹோலி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1922)

2006 - பெக்கி கிரிப்ஸ் அப்பையா, எழுத்தாளர் (பி. 1921)

2007 - சாகரன், தமிழிணைய ஆர்வலர் (பி. 1975)

சிறப்பு நாள்

ஜப்பான் - நிறுவன நாள்

ஈரான் - இஸ்லாமியப் புரட்சி நாள் (1974)

கமரூன் - இளைஞர் நாள்

ஐக்கிய அமெரிக்கா - கண்டுபிடிப்பாளர் நாள்

பொஸ்னியா - விடுதலை நாள்

வத்திக்கான் நகரம் - விடுதலை நாள் (1922)

வரலாற்றில் இன்று

பெப்ரவரி 10

நிகழ்வுகள்

1258: பாக்தாத் நகரம் மொங்கோலியர்களிடம் வீழ்ச்சியடைந்தது.

1355 - இங்கிலாந்து, ஒக்ஸ்போர்டில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலவரத்தில் 63 மாணவர்களும், 30 பொது மக்களும் கொல்லப்பட்டனர்.

1763 - பிரான்ஸ் கியூபெக் மாநிலத்தை ஐக்கிய இராச்சியத்திற்கு அளித்தது.

1798 - லூயி அலெக்சாண்டர் பேர்த்தியர் ரோமைக் கைப்பற்றி அதனை பெப்ரவரி 15 இல் ரோமன் குடியரசாக அறிவித்தான்.

1815 - கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றும் நோக்கில் பிரித்தானியர் கண்டியினுள் நுழைந்தனர்.

1840: பிரிட்டனின் விக்டோரியா மகாhணியார் இளவரசர் அல்பர்ட்டை திருமணம் செய்தார்

1846 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பஞ்சாபின் சீக்கியருக்கும் இடையில் இடம்பெற்ற போரில் பிரித்தானியர் வெற்றி பெற்றனர்.

1863 - அலன்சன் கிரென் தீயணைக்கும் கருவியின் காப்புரிமம் பெற்றார்.

1870 - கிறிஸ்தவப் பெண்கள் இளையோர் அமைப்பு (YWCA) அமைக்கப்பட்டது (நியூயோர்க் நகரம்).

1897 - மடகஸ்காரில் மதச் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.

1914 - யாழ்ப்பாணத்தின் அரச அதிபராக சார்ள்ஸ் கம்பர்லாண்ட் நியமிக்கப்பட்டார்.

1931 - புது டில்லி இந்தியாவின் தலைநகராக்கப்பட்டது.

1952: இந்தியாவின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தலில் ஜவஹர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது.

1954 - வியட்நாம் போர்: அமெரிக்க அதிபர் டுவைட் ஐசன்ஹோவர் வியட்நாம் மீது ஐக்கிய அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என எச்சரித்தார்.

1962: சோவியத் யூனியனினால் கைது செய்யப்பட்ட அமெரிக்க உளவு விமான விமானியும்; அமெரிக்காவினால் கைது செய்யப்பட்ட சோவியத் உளவாளி ருடோல்வ் ஆபெல்லும் பரிமாற்றம் செய்யப்பட்டனர்.

1964 - ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் கரையில் HMAS மெல்பேர்ன் என்ற விமானந்தாங்கிக் கப்பலும் HMAS வொயேஜர் என்ற காடற்படைக் கப்பலும் மோதிக் கொண்டதில் 82 பேர் கொல்லப்பட்டனர்.

1969 - தமிழ் நாட்டின் முதலமைச்சராக மு. கருணாநிதி தெரிவு செய்யப்பட்டார்.

1991 - வன்னி மீதான இலங்கை இராணுவத்தினரின் வன்னி விக்கிரம படையெடுப்பு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதுடன் உலங்குவானூர்தி ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டது.

1996 - சதுரங்கக் கணினி "டீப் புளூ" உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்றது.

2005: பிரிட்டனின் முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸும் கமீலா பார்க்கரும் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக பிரித்தானிய அரசகுடும்பம் அறிவித்தது.

2009: ரஷ்யாவின் கொஸ்மோஸ் 2251 செய்மதியும் அமெரிக்காவின் இரிடியம் 33 செய்மதியும் விண்வெளியில் தற்செயலாக மோதி சிதறின.

பிறப்புகள்

1887 - ஜோன் என்டேர்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1985)

1890 - போரிஸ் பாஸ்டர்நாக், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1960)

1902 - வால்ட்டர் பிராட்டன், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1987)

1910 - ஜோர்ஜஸ் பயர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1969)

இறப்புகள்

1837 - அலெக்சான்டர் புஷ்கின், ரஷ்ய எழுத்தாளர், கவிஞர் (பி. 1799)

1912 - ஜோசப் லிஸ்டர், பிரித்தானிய அறிவியலாளர் (பி. 1827)

1918 - ஏர்னெஸ்டோ மொனெட்டா, நோபல் பரிசு பெற்ற இத்தாலியர் (பி. 1833)

1923 - வில்ஹெம் ரொண்ட்ஜென், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (பி. 1845)

வரலாற்றில் இன்று

பெப்ரவரி 9

நிகழ்வுகள்

1822 - ஹெயிட்டி புதிதாக அமைக்கப்பட்ட டொமினிக்கன் குடியரசை முற்றுகையிட்டது.

1825: அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் தேர்தல் கல்லூரி வாக்குகளில் பெரும்பான்மையைப் பெறாததால் செனட் சபை உறுப்பினர்கள் ஜோன் குயின்ஸி அடம்ஸை ஜனாதிபதியாக தெரிவு செய்தனர்.

 1849: புதிய ரோம குடியரசு ஸ்தாபிக்கப்பட்டது.

1885 - முதலாவது ஜப்பானியர் ஹவாய் தீவை வந்தடைந்தனர்.

1895 - வில்லியம் மோர்கன் volleyball ஐக் கண்டுபிடித்தார்.

1897 - பெனின் மீது பிரித்தானியர் தாக்குதலை ஆரம்பித்தனர்.

1900 - இலங்கையிலும், இந்தியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

1900 - டேவிஸ் கோப்பை டென்னிஸ் பந்தயம் ஆரம்பிக்கப்பட்டது.

1904 - போர்ட் ஆர்தர் சமர் ஆரம்பித்தது.

1942 - ஐக்கிய அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

1950: அமெரிக்க இராஜாங்கத்திணைக்கள ஊழியர்களில் சுமார் 200 பேர் கம்யூனிஸ்ட்டுகளாக இருப்பதாக செனட் சபை உறுப்பினர் ஜோசப் மெக்கர்;தி கூறினார்.

1959: உலகின் முதலாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான ஆர்-7 சேம்யோர்க்கா, ரஷ்யாவினால் செயற்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

1962 - பொதுநலவாய அமைப்பினுள் ஜமெய்க்கா விடுதலை பெற்றது.

1965 - வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்க தாக்குதல் படைப்பிரிவு முதற்தடவையாக தென் வியட்நாமிற்கு அனுப்பப்பட்டது.

1969 - போயிங் 747 விமானத்தின் முதற் சோதனைப் பறப்பு மேற்கொள்ளப்பட்டது.

1971 - கலிபோர்னியாவில் 6.4 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

1971 - அப்பல்லோ 14 விண்கலம் மூன்று அமெரிக்கர்களுடன் பூமி திரும்பியது.

1975 - சோயூஸ் 17 விண்கலம் பூமி திரும்பியது.

1986 - ஹேலியின் வால்மீன் சூரியனுக்கு அண்மையில் எட்டரைக் கோடி கிமீ தூரத்தில் வந்தது.

1991 - லித்துவேனியாவில் விடுதலைக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தார்கள்.

1996 - ஐரிஷ் குடியரசு இராணுவம் தனது 18 மாத யுத்த நிறுத்த உடன்பாட்டினை முறித்துக்கொண்ட சில மணி நேரத்தில் லண்டனில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1773 - வில்லியம் ஹென்றி ஹாரிசன், ஐக்கிய அமெரிக்காவின் 9வது குடியரசுத் தலைவர் (இ. 1841)

1910 - ஜாக் மொனோட், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1976)

1940 - ஜே. எம். கோட்ஸி, நோபல் பரிசு பெற்ற தென்னாபிரிக்க எழுத்தாளர்

1943 - ஜோசப் ஸ்டிக்லிட்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்

1970 - கிளென் மெக்ரா, அவுஸ்திரேலியத் துடுப்பாட்டக்காரர்

1979 - சாங் சீயீ, சீனத் திரைப்பட நடிகை

இறப்புகள்

1881 - பியோதர் தஸ்தயெவ்ஸ்கி, இரசிய நாவலாசிரியர் (பி. 1821)

1977 - ஜி. ஜி. பொன்னம்பலம், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் (பி. 1901)

1979 - டெனிஸ் காபோர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1900)

1984 - யூரி அந்திரோபொவ், சோவியத் அதிபர் (பி. 1914)

1994 - ஹ்வார்ட் டெமின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1934)

2001 - ஹேர்பேர்ட் சைமன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1916)

வரலாற்றில் இன்று

பெப்ரவரி 8

நிகழ்வுகள்

1587 - இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்தை கொலை செய்ய முயற்சித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஸ்கொட்லாந்து அரசி முதலாம் மேரி தூக்கிலிடப்பட்டாள்.

1622 - இங்கிலாந்தின் முதலாம் ஜேம்ஸ் மன்னன் இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தைக் கலைத்தான்.

1761 - லண்டனில் நிலநடுக்கம் பதியப்பட்டது.

1849 - புதிய ரோமன் குடியரசு அமைக்கப்பட்டது.

1900 - போவர் போர்: தென்னாபிரிக்காவில் லேடிஸ்மித் என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் போவர்களினால் தோற்கடிக்கப்பட்டனர்.

1904 - சீனாவின் லூஷென்கோ (முன்னர் போர்ட் ஆர்தர்) நகரை ஜப்பான் தாக்கியது.

1924 - ஐக்கிய அமெரிக்காவில் மரண தண்டனைகளுக்கு முதற் தடவையாக நச்சு வாயுவை பயன்படுத்தும் முறை நெவாடாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1942 - ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் நேதாஜி ஜெர்மனியை விட்டுத் தெற்காசியாவுக்குப் புறப்பட்டார்.

1956 - இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் களனி மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

1963 - கியூபாவுடனான போக்குவரத்து, பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் ஐக்கிய அமெரிக்க மக்களுக்கு தடை செய்யப்பட்டதாக அதிபர் ஜோன் எஃப். கென்னடி அறிவித்தார்.

1971 - நாஸ்டாக் பங்குச்சந்தைக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.

1974 - 84 நாட்கள் விண்ணில் சஞ்சரித்த பின்னர் முதலாவது அமெரிக்க விண்வெளி ஆய்வுகூட ஸ்கைலாப் 4 வீரர்கள் பூமி திரும்பினர்.

1974 - அப்பர் வோல்ட்டாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.

1989 - போர்த்துக்கலில் போயிங் 707 விமானம் ஒன்று சாண்டா மரியா மலையில்
மோதியதில் 144 பேர் கொல்லப்பட்டனர்.

2005 - இஸ்ரேலும் பாலஸ்தீனமும் போர்நிறுத்தத்திற்கு உடன்பட்டன.
பிறப்புகள்

1700 - டானியல் பேர்னோலி, கணிதவியலாளர் (இ. 1782)

1828 - ஜூல்ஸ் வேர்ன், பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1905)

1834 - திமீத்ரி மெண்டெலீவ், இரசிய வேதியியலாளர் (இ. 1907)

1897 - ஜாகீர் உசேன், இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் (இ. 1969)

1963 - மொகமட் அசாருதீன், இந்திய அணியின் முன்னாள் துடுப்பாளர்

இறப்புகள்

1804 - ஜோசப் பிரீஸ்ட்லி, ஆங்கிலேய வேதியியல் அறிஞர் (பி. 1733)

1889 - சொலமன் ஜோன்பிள்ளை, எழுத்தாளர், சிலோன் பேட்ரியட் பத்திரிகையின் ஆசிரியர்

1975 - ரொபர்ட் ரொபின்சன், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய வேதியியலாளர் (பி. 1886)

1993 - நா. சண்முகதாசன், ஈழத்தமிழ்த் தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி (பி. 1920)

2005 - அரியநாயகம் சந்திரநேரு, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், மனித உரிமை ஆர்வலர்.

சிறப்பு நாள்

பரிநிர்வாண நாள் - பௌத்த வழிபாட்டு நாள்

மாவீரன் கான் சாஹிப்.

இந்தியாவில் சுதந்திற்கு போராடிய முஸ்லிம் போராளிகள் பலர் இருகின்றனர்.அதிகமான போராளிகள் துரோகிகளின் மூலமே ஆங்கிலேயர்களால் கொல்லபட்டனர் .அப்படிபட்ட போராளிகள் இருக்கும் பொழுது ஆங்கிலேயர்களால் இந்தியாவை கைப்பற்றுவது கேள்வி குறியானது?அப்படி பட்டவர்களின் ஒருவர் தான் இந்த மாவீரன் கான் சாஹிப்.

ஏன் இப்பொழுது உள்ள மக்கள் இவரது தியாகத்தை நினைப்பதில்லை,மேலும் ஏன் வரலாற்றில் இருந்து இவரை மறைக்க முயல்கின்றனர்.கோழையாக இருந்தவர்கள் ,நாட்டை காட்டி கொடுத்தவர்கள் எல்லாம் இன்று போற்ற படுகின்றனர் ஆனால் உண்மையான போராளிகள் மறைக்க படுகின்றனர். ஏன் இந்த பாகுபாடு.அவர் முஸ்லிம் என்ற ஒரே காரணமோ?இனியாவது விழிக்குமா வரலாறு ?

மேலும் இவரை போற்றும் விதமாக மதுரை விமான நிலையதிற்கு இவரது பெயரை வைக்குமா அரசாங்கம்? இனி இவரது சாதனைகளை பார்ப்போம்.சிவகங்கை அருகே உள்ள பனையூர் என்ற கிராமத்தில் 1725ம் ஆண்டு மருதநாயகம்பிறந்தார். மதுரை பகுதியை ஆண்டதால் மருதநாயகம் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இஸ்லாத்தை ஏற்ற காரணத்தினால் முகம்மது யூசுப்கான் சாஹிப் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இவர் மருதுநாயகம்,கான்சாஹிப், மருதநாயகம் முகம்மது கான் சாஹிப் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறார்.இவர் பிறவி முஸ்லிம். இதை நாட்டுப்புற பாடல்கள் உறுதிப்படுத்துகின்றன என்று பேரா. நத்தர் ஷா தனது ஆய்வு நூலில் வாதிடுகிறார்.1764ல் வெள்ளைய அதிகாரி ஒருவர் எழுதிய கடிதம் ஒன்று அதற்கு ஆதாரமாக மேற்கோள் காட்டப்படுகிறது.

வளரும் பயிறும், துடிப்பான தொடக்கமும்:

சிறுவராக இருக்கும்போதே கம்பீரமாக தன் வாழ்நாளைத் தொடங்கினார் கான்சாஹிப். விளையாட்டாக இருந்தாலும், வீரதீர சாகஸகங்களாக இருந்தாலும் கான் சாஹிப்தான் அதில் வெற்றி பெறுவார்.மருத்துவர், தையல் தொழிலாளி,படகோட்டி, விளையாட்டு வீரர், வித்தகர் என பல திற மைகள் வெளிப்பட்டாலும் தன்னை போர்க் களத்தில் ஈடு படுத்திக் கொள்வதிலேயே அவரது ஆர்வம் இருந்தது. தஞ்சாவூரை தலைமையகமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னன் பிரதாப சிம்ஹானின் படையில் கொஞ்ச காலம் பணிபுரிந்தார். இதுதான் முதல் ராணுவ அனுபவம்!

பிரெஞ்சுப் படையின் ஆயுதம்:

பிறகு என்ன காரணத்தினாலோ அவர் புதுச்சேரிக்குச் சென்றார். சென்றவர் அங்கேயும் போர் புலியாகவே தன்னை அடையாளம் காட்டினார். புதுச்சேரியை மையமாகக் கொண்டு ஆட்சி புரிந்த பிரெஞ்சுப் படையில் சாதாரண படைவீரனாக தன்னை இணைத்துக் கொண்டார்.இவரது அறிவும், தலைமைப் பண்பும், போர் நுட்பமும் பிரெஞ்சு தளபதிகளை வியப்பில் ஆழ்த்திற்று. விளைவு, குறுகிய காலத்தில் முக்கியப் பதவிகளை வென்றார் கான்சாஹிப் மருதநாயகம்.

ஆற்காடு நவாப் யார் ?

ஒளரங்கசீப்பின் மரணத்திற்குப் பிறகு முகலாய பேரரசு தென்னிந்தியாவில் பலகீனமடைந்தது. யாரும், யாருக்கும் கட்டுப்படவில்லை. ஒவ்வொருவரும் தங்களை நவாபுகள், நிஜாம்கள் என்று சிற்றரசர்களாக அறிவித்துக் கொண்டனர்.தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஆற்காட்டை தலைநகராகக் கொண்டு இயங்கிய ஆற்காடு நவாபின் அரசுதான் முதன்மையானதாகவும் , பலமானதாகவும் இருந்தது. இவர்களிடம் அனுமதி பெற்றுத்தான் ராபர்ட் கிளைவின் தலைமையில் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் ஆங்கிலேயே வணிகர்களும், படையினரும் தென்னிந்தியாவில் நுழைந்தனர்.

ஆங்கிலேயப் படையில் கான் சாஹிப்

ஆற்காடு போருக்குப் பிறகு தென்னிந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களின் செல்வாக்கும்,ஆதிக்கமும் குறையத் தொடங்கியது. அவர்கள் புதுச்சேரியையும், காரைக்காலையும் மட்டுமே தக்க வைத்துக் கொண்டனர். இந்நிலையில் பிரெஞ்சு படையில் இருந்த தளபதிகளுக்கும், கான் சாஹிபுக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் தோன்றியது.கோபமுற்ற கான் சாஹிப் ஆங்கிலேயப் படையில் ராபர்ட் கிளைவின் அனுமதியுடன் இணைந்தார். தங்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் தங்களோடு இணைவதில் பெருமகிழச்சி கொண்டனர் ஆங்கிலேயர். ஆனால், அவர்தான் தங்கள் ஆட்சிக்கு பூகம்பமாக மாறப்போகிறார் என்பதை அப்போது அவர்கள் உணரவில்லை.
வீரமும் – பரிசும்

மருதநாயகம் ஆங்கிலேயர் அணியில் இருந்த போது துரதிர்ஷ்டமாக ஒரு போரை சந்திக்க வேண்டி வந்தது. இருவரும் வீரர்கள். மோதிக் கொண்ட அவர்கள் மைசூர் சிங்கம் ஹைதர் அலியும், மருதநாயகமும் தான் என்பது வேதனையான செய்தி!அந்தப் போர் நடைபெற்றிருக்கக் கூடாது.

விதியை என்னவென்பது ? திண்டுக்கல் அருகே போர் நடந்தது. இந்தப் போரில் மருதநாயகம் தோற்றிருக்க வேண்டும் என மனம் நினைக்கிறது. ஆனால் ஹைதர் அலியை தோற்கடித்தார் மருதநாயகம்! ஆங்கிலேயர்கள் பூரித்தனர். தான் யார் என்பதையும், ஹைதர் அலி யாருக்காக போராடுகிறார் என்பதையும் அறியாதகாலத்தில் மருதநாயகம் செய்த போர் அது. இதற்கு ஆற்காட் நவாபின் துரோகம்தான் பின்னணியாக இருந்தது.நடைபெற்ற தவறுக்கு பிற்காலத்தில் பரிகாரம் தேடினார் மருதநாயகம்! மருந்து தடவினார் ஹைதர் அலி என்ற உணர்ச்சிமிகு செய்திகள் ஆங்கிலேயர்களுக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை.

மைசூர் சிங்கம் ஹைதர் அலியையே தோற்கடித்த தால் , புகழின் உச்சிக்குப் போனார் கான் சாஹிபு மருதநாயகம். அதுபோல் திருநெல்வேலி சீமையில் ஆங்கிலேயரை எதிர்த்த பூலித்தேவனுக்கும்,மருதநாயகத்திற்கும் 06.11.1759ல் போர் நடந்தது. மருதநாயகம் முதல் தோல்வியைச் சந்தித்தார். ஆனால் தளரவில்லை. ஒரேவருடத்தில் 12.12.1760ல் நெல்கட்டான் செவ்வல் அருகே போரிட்டு பூலித்தேவனை வென்றார்.1752 ல் இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பாக்கத்தில் பிரெஞ்சுப் படையை மருதநாயகம் வீழ்த்தியது ஆங்கிலேயரையே ஆச்சர்யப்படுத்தியது.

ஒருமுறை 09.11.1757ல் மருதநாயகம் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருடன் மட்டுமே இருந்தபோது, நூற்றுக்கணக்கான எதிரிகள் அவரை முற்றுகையிட்டனர். அதில் அவர் காட்டிய வீர தீர செயல்களும், அதுபோல் மேலும் பல வெற்றிகளும் அவருக்கு தளபதி தகுதிக்கு மேலே சென்று கவர்னர் பொறுப்பையும் பெற்றுத் தந்தது.

இன்றைய மதுரை, தேனீ, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர்,தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் திருச்சியின் தெற்கு பகுதிகளை போர்கள் மூலம் வென்றெடுத்ததால், ஆங்கிலேயர்கள் 1759ல் அவரை தெற்குச் சீமையின் கவர்னராக நியமித்தனர். இது ஆற்காடு நவாப் முகம்மது அலிக்கு பொறாமையை ஏற்படுத்தியது. கான் சாஹிபுக்கும், ஆற்காட் நவாபுக்கும் இடையில் பனிப்போர் தொடங்கியது. இதில் ஆங்கிலேயர் குளிர் காய்ந்தனர்.

மனம் மாறிய மருதநாயகம்

திறமையற்ற நவாபையும், ஆற்றல் மிக்க தன்னையும் ஒரே தட்டில்வைத்துப் பார்க்கும் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிகளை மெல்ல உணரத் தொடங்கினார் மருதநாயகம்! சிங்கமும், சிறு நரியும் சமமாக முடியுமா? உயர உயரப் பறந்தாலும் குருவி பருந்தாக முடியுமா?இதுவரை ஆற்றல் மிகு தளபதியாய், ஆட்சி நிர்வாகியாய் மட்டுமே இருந்த கான்சாஹிபுக்கு ஏன் நமது நாட்டை நாமே ஆளக் கூடாது-? எதற்கு பிரெஞ்சுக்காரர்களிடமும், ஆங்கிலேயர் களிடமும் அடிமைப்பட்டு கிடக்க வேண்டும்-?இவர்கள் யார்-? அன்னியர்கள்தானே? இந்திய மன்னர்களுக்குள் நடைபெறும் சண்டை,சச்சரவுகளில் அன்னியர்கள் ஏன் லாபமடைய வேண்டும்? இப்படி பல கேள்விகள் அவரிடம் எழுந்தது. அதுவே தேசப் பற்றையும்,விடுதலை உணர்வையும் தூண்டியது!
மதுரைப் போர்

முடியாது! முடியவே முடியாது! ஆற்காடு நவாபிடம் மட்டுமல்ல…உனக்கும் கப்பம் கட்ட முடியாது என்று ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டார் மருதநாயகம். புயல் உருவானது! போர் மேகங்கள் சூழ்ந்தன!1763 ஜனவரி 9 அன்று தனது கோட்டையில் பறந்த ஆங்கிலேயர் கொடியை இறக்கி, அதிகாரப்பூர்வமாக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். ஆங்கிலேய கொடி எரிக்கப்பட்டது! போர் வீரனாக, சிறந்த ஆட்சியாளனாக திகழ்ந்த மருதநாயகம், தன்னை சிறந்த ராஜ தந்திரியாகவும் காட்ட வேண்டியதை உணர்ந்தார். கோட்டையில் அவரது கொடியான மஞ்சள் கொடியை ஏற்றியதோடு,பிரெஞ்சுக்காரர்களின் கொடியையும் சேர்த்து தன் கோட்டையில் பறக்கவிட்டார்! எதிரிக்கு எதிரி நண்பன்! பழைய நட்பை புதுப்பித்துக் கொண்டார். பிரெஞ்சுக்காரர்களின் உதவியை நாடினார்.

தக்காணத்தை ஆட்சி செய்த தக்காண நிஜாம் அலி , தனது கவர்னராக மருதநாயகத்தை அங்கீகரித்தார். இது ஆங்கிலேயர்களையும் ஆற்காடு நவாபையும் திகைப்பில் ஆழ்த்தியது.ஆற்காடு நவாபின் வேண்டுகோளை ஏற்று, ஆங்கிலேயப்படை திருபுவனம் வந்தது. மருதநாயகத்தின் அதிரடி யுத்தத்திற்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாத அவர்கள் ஓடி ஒளிந்தனர். அடுத்தடுத்து இரண்டு போர்களிலும் மருதநாயகம் வென்று திகிலூட்டினார். நிமிர்ந்து உட்கார்ந்தனர் ஆங்கிலேய தளபதிகள்! விழிகள் மிரள யோசித்தனர்.

ஆங்கிலேயப் படைக்கு தலைமையேற்ற பிரஸ்ட்டன் திணறினார். அவரும்,கான்சாஹிபும் முன்னாள் நண்பர்கள்! அதனால் பயம் அதிகரித்தது! காரணம் மருதநாயகத்தின் குணமும், சினமும் தெரியும்! அவர் பயந்தபடியே நடந்தது! மூலக்கரை கொத்தளம் அருகே நடந்த ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் வாள் முனையில் நூற்றுக்கணக்கானோரை சீவித் தள்ளினார் மருதநாயகம்! உடைந்த வாள்களும் வீரம் பேசின! ரத்தம் கொட்டின! ஆங்கிலேய தளபதி பிரஸ்ட்டன் சுடப்பட்டு படுகாயமடைந்தார். பின்னர் உயிர் துறந்தார். பிரஸ்ட்டனை பெரிதாக நம்பியிருந்த ஆற்காடு நவாப் நிலை குலைந்தார். மருதநாயகம் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிடும் செய்தியும், அதன் வெற்றிகளும் மைசூர் மன்னர் ஹைதர் அலிக்கு எட்டியது. அவர் பழைய பகையை மறந்தார். மண்ணுரிமை போரில், தனது நிலைக்கு மருதநாயகம் வந்ததை வரவேற்று வாழ்த்து செய்தி அனுப்பினார்.

தந்திரம்! வஞ்சகம்!

ஆற்காடு நவாபுக்கு அடுத்து என்ன செய்வது புரியவில்லை. பயம் வாட்டியது. சிவகங்கை சீமையின் விஷமியான தாண்டவராயன் “நீங்க ஒன்றும் பயப்படாதீங்க”என்று செயற்கையாக ஆற்காடு நவாபுக்கு தைரியமூட்டினான். இனி, மருதநாயகத்தை போரினால் வெல்ல முடியாது! இனி தந்திரம் தான் தீர்வு என்பதை உணர்ந்து செயல்பட்டான் தாண்டவராயன்! துரோகிகளை விலை பேசினான்!

இறுதியாக மதுரையில் மருதநாயகத்தின் கோட்டை முற்றுகையிடப்பட்டது. தீவிரமான முன்னேற்பாடுகளுடன், நிறைய ஆயுதங்கள், ஆயிரக்கணக்கான வீரர்கள், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவாசிய தேவைகளுடன் ஆங்கிலேயப்படைகள் திரண்டன.1763 பிப்ரவரி மாதம் மருதநாயகம் ஆங்கிலேயர்களின் கொடியை தனது பீரங்கி வாயிலில் வைத்து வெடித்து சிதற செய்து தன் கோபத்தை வெளிப்படுத்தினார். தொடங்கியது ‘மதுரை போர்’!

மதுரை போர் உக்கிரமடைந்தது! நாட்கள் பல கடந்து, வாரங்களாக நீடித்தது முற்றுகை! மருதநாயகத்தின் கோட்டை, நகரிலிருந்து துண்டிக்கப்பட்டது, உணவு,ஆயுதங்கள், மருந்துகள் என காக்கா, குருவி கூட நுழைய விடாமல் தடுக்கப்பட்டது. மருதநாயகம் சரணடைந்தால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று ஆங்கிலேயர்கள் தூது அனுப்பினர். மண்டியிட மாட்டேன் என்றார் மாவீரன் மருதநாயகம். அப்படி சிந்திப்பதே குற்றம் என கருதுபவராயிற்றே!நாலாயிரம் வீரர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆங்கிலேய அதிரடிப்படை,இரண்டாயிரம் குதிரைகள் என மருதநாயகத்துக்கு எதிராக முற்றுகை வலுத்தது. மருதநாயகத்தின் படையினர் பீரங்கிகளால் அதிர வைத்தனர். பின்வாங்கி ஓடிய ஆங்கிலேயர்கள் மதுரை தெப்பக்குளத்துக்கு அருகே பதுங்கினர். ஆங்கிலேயர்கள் அணியில் இருந்த இந்தியப்படையினர் போரில் ஈடுபடுவது குறித்து குழம்பிக் கொட்டிருந்தனர்.அச்சமயத்தில், இந்திய வீரர்களின் குழப்பத்தை பயன்படுத்தி மருதநாயகம் நடத்திய தாக்குதலில் படு தோல்வியடைந்தது ஆங்கிலேயப்படை. வைகை நதி சிவந்தது! போர் தற்காலிகமாக நின்றது.

போரில் உறுதி

கோட்டையில் மருதநாயத்துக்கு ஆதரவாக பிரெஞ்சுப் படைகளும் தளபதிகளும் உறுதியோடு நின்றார்கள். அவர்களில் ஒருவர் மார்ச்சந்! அவருக்கும் மருதநாயகத்திற்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தது. எனினும் அவரே சிறந்த தளபதி என்பதை உணர்ந்த மருதநாயகம் அவருக்கு முன்னுரிமை கொடுத்தார்.ஒருவாரம் கழித்து 15.09.1763ல் மீண்டும் போரை தொடங்கினர் ஆங்கிலேயர். அப்போதும் தோல்வி. ஆங்கிலேயர்களின் தோல்வியில் கிடைத்த அமைதியில்,தற்காலிக இடைவெளியை சரியாக பயன்படுத்தினார் மருதநாயகம்! கோட்டைக்குள் உணவு, ஆயுதங்கள், மருந்துகள் கொண்டு வரப்பட்டு அடுத்த போருக்கு தயாரானார்கள்.

இறுதி யுத்தம்

ஆங்கிலேயர்கள் தங்கள் படையை பலப்படுத்தி மீண்டும் மதுரைக்கு வந்தனர்.31.01.1764 ல் மும்பையிலிருந்து சிறப்பு ஆங்கிலேய அதிரடிப் படையும் மதுரைக்கு வரவழைக்கப்பட்டது. இவர்கள் தொண்டி துறைமுகத்தில் இறங்கினர். மதுரையை சுற்றியிருந்த குட்டி, குட்டி அரசுகளான பாளையக்காரர்களையெல்லாம் ஆங்கிலேயர்கள் வளைத்தனர்.ஆங்கிலேயர்களையும், ஆற்காட் நவாபையும் ஆதரிப்பவர்கள் தங்களை தாங்களே அழித்துக் கொள்வதற்கு சமம் என்றும், தனக்கு பாளையக் காரர்கள் அதாவது சிற்றரசர்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கடிதம் எழுதினார் மருதநாயகம்.

ஹைதர் அலியின் உதவி

முன்பு ஹைதர் அலியும், மருதநாயகமும் திண்டுக்கல் அருகே போரிட்டதை குறிப்பிட்டிருந் தோம். இப்போது வரலாறு மாறியது. இருவரும் தாய் நாட்டுக்காக ஓரணியில் திரண்டனர். பழைய சம்பவங்களை மறந்த மருதநாயகம், ஹைதர் அலியிடம் ராணுவ உதவியை கோரினார்.“நானும், நீயும் வேறல்ல. நமது படையும், நாடும் வேறல்ல” என்று சகோதர உணர்வோடு ஹைதர் அலி கடிதம் எழுதி தனது ஆதரவை வழங்கினார். (நன்றி : C. Hayavadana Rao, History of Mysore)பிப்ரவரி 1764ல் ஹைதர் அலி, சுலைமான் என்ற தளபதியின் கீழ் ஒரு பெரும்படையை மருதநாயகத்துக்காக அனுப்பி வைத்தார். போதாக் குறைக்கு19.02.1764ல் பிரெஞ்சுப் படைகளும் வந்து சேர்ந்தது.

சீறினார்… மோதினார்!

உற்சாகத்தில் சிலிர்த்து எழுந்தார் மருதநாயகம். அவரது நிலப்பரப்பின் முக்கிய எல்லைகளில் படைகள் முன்னிறுத்தப்பட்டது. வடக்கே நத்தம், தெற்கே பாளையங்கோட்டை பகுதிகளில் ராணுவம் பலப்படுத்தப்பட்டது. பாதுகாப்பு அரண்கள், அகழிகள், மணல் மேடுகள் என தற்காப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.மீண்டும், மீண்டும் ஆங்கிலேயர்கள் சளைக்காமல் மதுரையை குறிவைத்து போரிட்டனர். நவீன ஆயுதங்களை இங்கிலாந்திலிருந்து வரவழைத்தனர். 1764 ஜூன் மாதம் தொடர்ந்து நடைபெற்ற போரில் ஆங்கிலப்படை தோல்வியை சந்தித்தது. ஆங்கிலேயர்கள் புறமுதுகிட்டு ஓடியதோடு, சமாதானக் கொடியையும் ஏற்றினர். செய்தி கேட்டு அலறினார் ஆற்காட் நவாப்!அதே நேரம் மதுரை மற்ற பகுதிகளுடன் துண்டிக்கப்பட்டதாலும், போரினால் ஏற்பட்ட நிர்வாக சீர்குலைவினாலும் பெரும் இழப்பு ஏற்பட்டது. கோட்டையில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டதால், அது மருதநாயகத்திற்கு பெரும் இன்னலை ஏற்படுத்தியது. மருதநாயகம், சரண் அடைய விடுக்கப்பட்ட வேண்டுகோளை நிராகரித்ததுடன் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை தாய் மண்ணை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கர்ஜித்தார்.

தந்திரம்

போரினால் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த எதிரிகள் தந்திரங்களையும்,வஞ்சகங்களையும் கையாண்டனர். கான்சாஹிபின் அமைச்சர்களில் ஒருவரான சீனிவாசராவை வலையில் வீழ்த்தினர். இதற்கு பின்னணியில் சிவகங்கை மன்னரின் தளபதியான தாண்டவராயன் இருந்தான். பொன்னுக்கும், பொருளுக்கும் ஆசைப்பட்ட சீனிவாசராவ் மூலம் மெய்க்காவலர்களான பாபாசாஹிப், சேகுகான் உள்ளிட்டோரையும், பிரதான தளபதியும், பிரெஞ்சு அதிகாரியுமான மார்ச்சந்த்தையும் துரோக வலையில் இணைத்தனர்.மருதநாயகம் தன் குடும்பத்தோடு தப்பி செல்ல விருப்பதாகவும், அதன் பிறகு உங்கள் கதி அதோ கதிதான் என்றும் இவர்களிடம் அவதூறு கூறப்பட்டது. அவர்கள் மருதநாயகத்தின் மீது சந்தேகம் கொண்டனர். இதைத்தான் ஆங்கிலப்படை எதிர்பார்த்தது. அது நடந்தது. கான்சாஹிப் மருதநாய கத்தை பிடித்துக் கொடுத்தால்,பொதுமன்னிப்பும், சலுகைகளும் உங்களுக்கு வழங்கப்படும் என்று பேரம் நடந்தது. திட்டம் தயாரானது.

சூழ்ச்சி வென்றது…

மருதநாயகத்தை யாராலும் அவ்வளவு எளிதில் நெருங்க முடியாது. அடக்க முடியாது. பிடிக்க முடியாது. போர் யானையை எப்படி முடக்க முடியும்? அவரை எப்போதும், கெடுபிடி இன்றி சந்திக்க கூடிய அந்த நால்வரும் இப்போது எதிரிகளின் கையில்! இதை அறியாதவராக மருதநாயகம் இருந்தார்!அது ரமலான் மாதம் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள்.13.10.1764 அன்று கோட்டைக்குள் தனியறையில் அவர் தொழுதுக் கொண்டிருந்த போது துரோகிகள் நுழைந்திருக் கிறார்கள். தனது நம்பிக்கைக்குரியவர்கள் என்பதால் அவர் தயார் நிலையில் இல்லை. அவர்கள் பாய்ந்து மருதநாயகத்தை அமுக்கி பிடித்தனர். அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தொழுத நிலையில் இருந்த மருதநாயகத்தை சிறைபிடித்தனர்.அந்த மாவீரன் அப்போது நம்பிக்கை துரோகிகளின் முகத்தை பார்த்து “என்னை கொன்று விடுங்கள், எதிரிகளிடம் ஒப்படைத்து விடாதீர்கள்” என்று கதறியுள்ளார். எதிரிகளிடம் அடிமைப்படுவதை, அவர் அப்போதும் விரும்பவில்லை. ஆம். மாவீரர்கள் மண்டியிடுவதில்லை! 700 வீரர்களின் பாதுகாப்புடன் கண்களை கட்டி,ஆற்காடு நவாபிடம் கொண்டு செல்லப்பட்டார். மருதநாயகம் கைதுக்கு பிறகு மூன்று நாட்கள் பட்டினி! அவரது மகனும், மனைவியும் திருச்சி சிறையில் பூட்டப்பட்டனர். அடுத்தநாள் மதுரை கோட்டையில் ஆற்காடு நவாபின் கொடி ஏற்றப்பட்டது.

விசாரணை

சிறைபிடிக்கப்பட்ட மருதநாயகத்தை சித்ரவதைப் படுத்தினார்கள். ஆற்காடு நவாபை பார்த்து தலை வணங்க சொன்னார்கள். முடியாது என மறுத்தார் மருதநாயகம்! உணவு தட்டுகளை எட்டி உதைத்தார். கைது செய்யப்பட்டதிலிருந்து தொடர்ந்து பட்டினி! ஆனாலும் மானமும், வீரமும் அவருக்கு உரமேற்றின.

மருதநாயகத்துக்கு என்ன தண்டனை? என விவாதிக்கப்பட்டபோது ஆங்கிலேயர்கள் தண்டனை எதுவுமில்லை என்றதும், ஆற்காடு நவாப் கோபமடைந்தார். அவரை தூக்கிலிடுங்கள் அல்லது என்னை கொல்லுங்கள் என அடிமை குரல் கொடுத்தார். ஆங்கிலெயர்களிடம் இருந்த நேர்மை, இரக்கம், கூட ஆற்காடு நவாபிடம் இல்லை. வேறு வழியின்றி ஆங்கிலேயர்கள் வரலாற்று பெருவீரனை தூக்கிலிட ஆணையிட்டனர்.

தூக்குக் கயிறை முத்தமிட்டார்

15.10.1764 இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் ஒரு கறுப்பு நாள்!

அன்று மதுரைக்கு மேற்கே உள்ள சம்மட்டிபுரத்தில் உள்ள ஒரு மாமரத்தில் தூக்கிலிட கொண்டுவரப்பட்டார், மருதநாயகம். அவர் அப்போதும் கலங்கவில்லை. தூக்குக் கயிறை (மரணத்தை) முத்தமிட்டார். மருதநாயத்தின் முகத்தில் பயம் இல்லை. விழிகளில் கலக்கமில்லை.

தாய்நாட்டின் விடுதலைக்காக உயிர்துறக்கிறோம் என்ற பெருமிதம் தெரிந்ததாக வரலாற்றுப் பக்கங்கள் பூரிக்கின்றன.தூக்கிலிடப்பட்டதும் அவர் மரணிக்கவில்லை. மாறாக கயிறு அறுந்து விழுந்தது! அவர் உடலில் சதையும், எலும்புகளும், ரத்தமும் மட்டுமில்லை. தியாக குணமும்,வீரத்தனமும் அல்லவா கலந்திருந் தது! எனவே, எடை தாங்கவில்லை!புதிய கயிறு தயாரிக்கப்பட்டு மீண்டும் தூக்கிலிடப்பட்டார், அப்போதும் உயிர் பிரியவில்லை. “நான் யோகாசனம் பயின்றவன். கழுத்தை உப்ப வைத்து, பல மணிநேரம் மூச்சை அடக்கும் ஆற்றல் கொண்டவன்” என்று தூக்கு கயிற்றில் சீறினார் மருதநாயகம். எதிரிகள் குலை நடுங்கினர்.

இறுதியாக, மூன்றாவது முறை நீண்ட நேரம் தூக்கில் தொங்கவிட்ட பிறகுதான் மாவீரனின் உயிர் பிரிந்தது. நாடு துயரில் மூழ்கியது! அன்று இரவு சில ஆங்கிலேய தளபதிகளின் கனவில் மருதநாயகம் வந்து மிரட்டியதாகவும் செய்தி பரவியது. அதன் பிறகு எங்கே; மீண்டும் உயிர் பெற்று எழுந்து விடுவாரோ என பயந்த ஆங்கிலேயர்கள் புதைக்கப்பட்ட அவரது உடலை மீண்டும் தோண்டியெடுத்தனர்.

தலை, கால், கை என பல பாகங்களாக வெட்டி யெடுக்கப்பட்ட அவர் உடல் பல்வேறு ஊர்களுக்கு தனித்தனியாக அனுப்பப்பட்டு அடக்கப்பட்டது.

ஆம், செத்த பிறகும் மருதநாயகத்தின் உடலை கண்டு ஆங்கிலேயர்களும், துரோகி ஆற்காடு நவாப் முகம்மது அலியும் நடுங்கியுள்ளனர். வெட்டப்பட்ட உடல்களை பொதுமக்கள் பார்வைக்கும் வைத்துள்ளனர்!

மருதநாயகம் அடக்கஸ்தலம்

அவரது உடலின் ஒரு பாகம் மதுரையருகே அவர் தூக்கிலிடப்பட்ட சம்மட்டி புரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கே இப்போதும் அவர் நினைவிடம் உள்ளது. அவரது தலை திருச்சியிலும், ஒரு கை தஞ்சாவூரிலும், இன்னொரு கை பெரியகுளத்திலும், ஒரு கால் திருவிதாங்கோட்டிலும், இன்னொரு கால் பாளையங்கோட்டையிலும்,உடல் மதுரையிலும் அடக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து இரண்டாண்டுகள் ஆங்கிலேயர்களை தூங்கவிடாமல் செய்தவன், ஷஹீதாகி(வீரமரணம்) மீள முடியாத உறக்கத்தில் ஆழ்ந்தான்…! தாய் நாட்டிற்காக தன்னுயிர் தந்த, தலைவனின் உடல் சின்னாப்பின்னப்படுத்தப்பட்டதை நினைக்கும் போது நெஞ்சம் பதறுகிறது. விழிகள் கலங்குகின்றன. இந்த தியாகத்தை யாராவது போற்றுகிறார்களா? நினைக்க நினைக்க நெஞ்சு விம்முகிறதே?

அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா பெல்லோஷிப் பல்கலைக்கழகத்தின் டெல்டா அரங்கு நிரம்பி வழிந்தது.

yaar intha  baba?                                                               1988 ஆம் ஆண்டு...

கறுப்பர், வெள்ளையர், ஆண்கள், பெண்கள், மாணவ-மாணவியர் என ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த பெருங்கூட்டத்திற்கு நடுவே
கம்பீரமாக எழுந்து நின்று உரையாற்றினார், அந்த இளம் தமிழர்.

சுமார் 13 மணி நேரம் அவர் ஆற்றிய தொடர் சொற்பொழிவில் அமெரிக்கர்கள் சொக்கிப்போனார்கள்.

ஆங்கில இலக்கியங்களைப் பற்றிய அவரது ஆழமான அறிவும்; பைபிளைப் பற்றிய அவரது தெளிவான புரிதலும்; திருக்குர்ஆன் ஒளியில் அமைந்த அவரது பேச்சின் சாரமும் கண்டு அனைவரும் வியந்தனர்.

தனது அறிவாலும், மேடை ஆளுமையாலும் அமெரிக்க மக்களின் அபிமானத்தைப் பெற்ற அவர், 'தவறுகளைக் கண்டு திமிறி எழும்' தனது இயல்பு குணத்தை அங்கேயும் வெளிப்படுத்தினார்.

அமெரிக்கர்களிடையே நிலவும் ஒழுக்கச்சீர்கேட்டையும்,கலாச்சார சீரழிவுகளையும் சுட்டிக்காட்டிய அவர், ஒழுக்கவியல் நிறைந்த வாழ்க்கைத் தத்துவத்தை எடுத்துரைத்தார். எளிதில் உணர்ச்சிவயப் படக்கூடியவராகவும், முன் கோபக்காரராகவும் இருந்த அவர், தனக்கேயுரிய வேகத்தில் அமெரிக்கர்களைச் சாடியபோதும், அம்மக்கள் அவர் மீது வெறுப்படையாமல், அவரது கருத்தில் இருக்கும் உண்மைகளையும், நியாயத்தையும் உணர்ந்து தங்களைச் சுயபரிசோதனை செய்துகொண்டனர்.

பல்கலைக்கழக நிகழ்ச்சியோடு அவரைத் திருப்பி அனுப்பாமல், பிலடெல்பியா மாகாணம் முழுவதும் அடுத்தடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தனர். எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று எழுச்சியுரையாற்றினார்,அந்தத் தமிழர்.

அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அமெரிக்கர்கள் பலர் குடிப்பதை மறந்தார்கள்;
தீய பழக்கங்களை விட்டு விலகினார்கள்; ஒழுக்கவியலை நோக்கி நகர்ந்தார்கள்; இறுதியில் இஸ்லாத்தை தங்களின் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார்கள். தமது ஒரு சுற்றுப்பயணத்திலேயே இப்படியொரு அழுத்தமான தாக்கத்தையும், ஆக்கப்பூர்வமான மாற்றத்தையும் ஏற்படுத்திக்காட்டிய அந்த இளம் தமிழர் வேறு யாருமல்ல; அவர்தான் புரட்சியாளர் பழனிபாபா.

1997, ஜனவரி 28 ஆம் நாள் பழனிபாபா படுகொலை செய்யப்பட்டார்.
'நான் வாழ வந்தவனல்ல; மாள வந்தவன்' என்று செல்லுமிடமெல்லாம் முழங்கிய அவர் சொன்னது போலவே மாண்டுபோனார்.

அவர் மறைந்து இன்றோடு 14 ஆண்டுகள் கடந்து விட்டன. அவரது பெயரை உச்சரிக்கவோ; அவரது பங்களிப்புகளை நினைவு கூரவோ; அவரது தியாகங்களைப் போற்றவோ இன்றைய இயக்கங்களுக்கு விருப்பம் இல்லை.

இரத்த தான விழாக்களில் மூழ்கிப் போயிருக்கும் இயக்கங்கள், 'முஸ்லிம்களின் இரத்தம் குடித்த இந்துத்துவ மதவெறிக்கு எதிராக காலமெல்லாம் களமாடிய அந்தப் போராளித் தலைவருக்கு' ஒரு நினைவேந்தல் கூட்டத்தைக் கூட எடுக்கவில்லை.

பழனிபாபா என்றால் கலவரத்தை விதைத்தவர்; இளைஞர்களை வழி கெடுத்தவர்; தவறான முன்னுதாரனங்களுக்கு உரியவர் என்றெல்லாம் அவர் குறித்து மோசமான சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. அவரது பன்முக ஆற்றலை மறைத்து, அவரை வன்முறையாளராகக் காட்டும் புனைவுகள் செய்யப்பட்டுள்ளன. அத்தகையச் சித்தரிப்புகளை உடைக்கவோ, புனைவுகளை முறியடிக்கவோ இங்கே எந்த இயக்கமும் தயாராக இல்லை.

பாபாவின் பாசறையில் வளர்ந்த 'மக்கள் ஜனநாயகக் கட்சி'யினர் மட்டும் தங்களின் வலிமைக்கேற்றவாறு ஆண்டுதோறும் புதுஆயக்குடியில் அவரது நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். ஆனால், பாபாவின் பேச்சையும், எழுத்தையும்,சிந்தனையையுமே இன்றைய தமது செயல் திட்டமாகக் கொண்டு இயங்கும் பெரிய அமைப்புகள் அனைத்தும், அவரை நினைவு கூராமல் தவிர்த்து வருகின்றன.

இன்றைய இயக்கங்களின் பேச்சும், செயல்பாடும், இலக்கும் இன்றைய இயக்கங்களை வழிநடத்தும் தலைவர்களின் சிந்தனையில் உதித்தவை அல்ல.

இன்றைய தலைவர்கள் எதையெல்லாம் பேசுகின்றார்களோ; எந்த செயல் திட்டத்தின் அடிப்படையில் இயங்குகின்றார்களோ; எந்த இலக்கை நோக்கிப் பயனிக்கின்றார்களோ அவற்றையெல்லாம் 25 ஆண்டுகளுக்கு முன்பே பேசியவர்; இயங்கியவர்; பயணித்தவர், பழனிபாபா.

முஸ்லிம்கள் என்றாலே அவர்கள் தங்களின் பிரச்சனைகளுக்காக மட்டுமே போராடுபவர்கள் என்ற கருத்து நிலவிய காலத்தில்,
1980 களிலேயே வெகுமக்களுக்காகக் குரல்கொடுக்கும் மனித உரிமைப் போராளியாக விளங்கினார், பாபா. பேராசிரியர். கல்யாணி போன்ற மனித உரிமை ஆர்வலர்களுடனும், PUCL போன்ற மனித உரிமை அமைப்புகளுடனும் இணைந்து, உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினார்.

நுண்ணிய தளங்களில் இந்துத்துவத்திற்கு எதிராக அழுத்தமானப் பதிவுகளைச் செய்து வரும் பேராசிரியர்.அ.மார்க்ஸை இன்றைய தமிழ் முஸ்லிம் சமூகம் நன்றி உணர்வோடு பார்க்கிறது. ஆனால் தமிழக முஸ்லிம்களுக்கு பேராசிரியர் அ.மார்க்ஸ் என்றால் யாரென்றே தெரியாத ஒரு காலத்தில், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே அவரைச் சரியாக இனம் கண்டு அடையாளப்படுத்தியவர், பாபா. 'இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்' எனும் தலைப்பில் அ.மார்க்ஸ் எழுதிய நூலை வெளியிடுவதற்கு பெரும் துணை புரிந்தார், பாபா.

முஸ்லிம்களோடு உறவாடும் பிற சமய-சார்பற்ற தோழமை சக்திகள் பலர் இருந்தாலும், ஆபத்தான வேளைகளில் முஸ்லிம்களின் குரலாக ஒலிக்கும் அ.மார்க்ஸ் போன்றவர்கள் அதில் தனிச்சிறப்பு உடையவர்கள் என்பதை பாபா மிகச்சரியாகவே கணித்துள்ளார். பாபாவின் கணிப்பு எவ்வளவு தொலைநோக்குடையது என்பதை, அ.மார்க்ஸின் இடையறாத களப்பணிகளில் இருந்து நாம் உணர்கின்றோம்.

ஜெயலலிதா ஆட்சியில், காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்ட போது, நீதிமன்றம் நடந்து கொண்ட முறை மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. சங்கராச்சாரியாருக்கு ஆதரவான நீதிபதிகளின் ஒருபக்கச் சார்பு கடும்கண்டனத்திற்குள்ளானது. சில ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற இந்த நிகழ்வை, பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே கணித்து முன்னறிவித்தவர் பாபா.

சங்கராச்சாரியாரைக் கொலை செய்ய சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, பாபா ஒரு முறை சிறையிலடைக்கப் பட்டார். கைதை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடரும் படி பாபாவிடம் பலரும் வலியுறுத்தினர். அப்போது பாபா, 'உயர்நீதிமன்ற நீதிபதி சங்கராச்சாரியாரைச் சந்தித்து ஆசி வாங்கியிருக்கிறார். அப்படிப்பட்டவர் எப்படி எனக்கு நீதி வழங்குவார்' என்று கேள்வி எழுப்பினார். அந்த வகையிலும் பாபாவின் கணிப்பு உண்மையாகிவிட்டதை நாம் நடைமுறையில் கண்டு வருகின்றோம்.
 அரசியல் - சமூகப் பணிகளோடு இஸ்லாமிய மார்க்கக் கொள்கைகளிலும் ஆழ்ந்த அறிவு பெற்றிருந்தார், பாபா. பல இஸ்லாமிய கொள்கை விளக்கக் கூட்டங்களில் பங்கேற்று சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். சுன்னத்வல் ஜமாஅத் கொள்கைத் தளத்தில் நின்று தமது இஸ்லாமியக் கருத்துக்களை எடுத்துரைத்தார். அதே சமயம் முஸ்லிம்களிடையே நிலவும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் தீவிரமாக முழங்கினார்.

அவரும் வட்டி, வரதட்சணை, அனாசாரம் போன்ற சமூகக் கொடுமைகளை கடுமையாகச் சாடினார். எனினும், அவர் ஒருபோதும் மார்க்கத்தையும், அரசியலையும் போட்டுக் குழப்பிக் கொண்டதில்லை; முஸ்லிம் ஜமாத்துகளைக் கூறு போட்டதில்லை; ஒரே தெருவில் போட்டியாக இன்னொரு பள்ளிவாசலை உருவாக்கி சமூகத்தில் குழப்பத்தையும் பிளவையும் ஏற்படுத்தியதில்லை. அவர் தன் வாழ்நாள் முழுவதும் ஜமாத்துகளின் ஒருங்கிணைப்பையும், முஸ்லிம்களின் ஒற்றுமையையுமே வலியுறுத்தினார்.

பாபாவின் இதழியல் மற்றும் எழுத்துப் பணிகளும் அவரது தொலைநோக்குக்கு சான்றாக விளங்குகின்றன. கிறிஸ்தவம் தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்ட பாபா, 'பைபிள் ஒரு ஆய்வு' என்னும் நூலை வெளியிட்டார். கிறிஸ்தவ பாதிரியார்களுடன் விவாதங்களிலும் ஈடுபட்டார். அது கிறிஸ்தவத்திலும், பைபிளிலும் அவருக்கு இருந்த ஆழ்ந்த புலமையை வெளிப்படுத்தியது. 'ராமகோபாலைய்யருக்கு மறுப்பு' எனும் தலைப்பில் பாபா எழுதிய நூல் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாபர் மஸ்ஜித் தொடர்பாக ஆங்கிலத்தில் ஒரு நூலை எழுதினார், பாபா.

'புனிதப் போராளி', 'அல்-முஜாஹித்', 'முக்குல முரசு' போன்ற பத்திரிகைகளை நடத்திய பாபா, அவற்றில் அனல் பறக்கும் கட்டுரைகளை எழுதினார். நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளையும், அரச அடக்குமுறைகளையும் 'புனிதப் போராளி' மூலம் அம்பலப்படுத்தினார்.
 இவ்வாறு, மனித உரிமை அமைப்புகளுடன் தொடர்பு; பேராசிரியர்.அ.மார்க்ஸ் போன்றவர்களுடன் நட்பு; மூட நம்பிக்கை எதிர்ப்பு; சமூகத் தீமைகள் ஒழிப்பு; நூல்கள் மற்றும் இதழ்கள் மூலம் முஸ்லிம்களின் உரிமைகளைப் பேசும் ஊடகப் பங்களிப்பு ; பிற சமய அறிஞர்களுடனான உரையாடல் மூலம் இஸ்லாமிய அழைப்புப் பணி என எந்த செயல் திட்டங்களின் அடிப்படையில் பாபா இயங்கினாரோ, அவை அனைத்தையும் ஒன்று விடாமல் காப்பியடித்து, இன்றைய முஸ்லிம் இயக்கங்கள் இயங்கி வருவதையும், செயல் திட்டங்களைக் கற்றுத்தந்த பாபாவை மட்டும் மறந்து விட்டதையும் இன்று காண்கின்றோம்.

பாபாவின் சமூகப் பங்களிப்புகளை நினைவுகூரும் கடமையிலிருந்து இயக்கங்கள் தவறி விட்டாலும், இளைஞர்கள் தவறமாட்டோம் என்பதை எடுத்துரைக்கவே பாபாவை மறுவாசிப்பு செய்கின்றோம். ஏனெனில், பாபா இளைஞர்களைத்தான் அதிகம் நம்பினார். இளைஞர்களையே மிகவும் விரும்பினார். 'வரலாறு என்னை விடுதலை செய்யும், வரும்காலம் என் சார்பில் வஞ்சமெடுக்கும்' என்று மேடைகள் தோறும் முழங்கினார். நமக்காக முழங்கியவரை, நமது விடியலுக்காக ஏங்கியவரை நினைவு கூராமல் விட்டால் அது நன்றி கொன்றதாக ஆகிவிடும். ஆகவே, பாபாவை அறிந்து கொள்வோம். அடுத்த தலைமுறைக்கும் அவரை எடுத்துச் செல்வோம்.

1950 நவம்பர் 14 ஆம் நாள், என்.வி.முஹம்மது அலி - கதீஜா பீவி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் பழனிபாபா. அஹமது அலி என்பது இயற்பெயர். ஆனால், 'பழனிபாபா' என்ற அடைமொழியே பின்னாளில் அவரது பெயராக மாறிப்போனது. பழனியிலிருந்து 4 கி.மீ தொலைவில் திண்டுக்கல் செல்லும் பாதையில் அமைந்துள்ள புதுஆயக்குடி என்னும் கிராமம் தான் பாபாவின் தாய் வழிப் பூர்வீகமாகும். பாபாவின் தந்தை நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சார்ந்தவர். ஊட்டியில் உள்ள ஆங்கிலப்பள்ளி ஒன்றில் கல்வி பயின்று வந்த பாபாவும், அவரது சகோதர சகோதரிகளும், பெற்றோரின் மறைவுக்குப் பின் புது ஆயக்குடியில் உள்ள தாய்மாமா அப்துல் ரஹ்மான் அவர்களின் பராமரிப்பில் வளர்ந்து வந்தனர்.

பழனி ஆண்டவர் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த பாபா, கல்லூரி நாட்களிலேயே பொது வாழ்வில் ஈடுபடத் தொடங்கினார். புது ஆயக்குடியில் நைனா முகம்மது என்பவர் தலைமையில் நடைபெற்ற முஸ்லிம்லீக் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியதுதான் பாபாவின் முதல் மேடை அனுபவமாகும்.

கிறிஸ்தவப் பள்ளிக் கூடத்தில் ஆங்கில வழிக்கல்வி பயின்றதனால் ஆங்கிலப் புலமை மிகுந்தவராகப் பரிணமித்தார் பாபா. எதையும் எளிதில் உள்வாங்கிக் கொள்ளும் ஆற்றலுடையவராகவும்; நுனிப்புல் மேயாமல் ஆழ்ந்து பார்க்கும் அறிவுடையவராகவும்; துணிவையும், மனோ தைரியத்தையும் இயல்பாகக் கொண்ட தன்னம்பிக்கை மனிதராகவும் சிறந்து விளங்கிய அவர், அத்தகைய பிறவி குணத்தால் மிக வேகமான வளர்ச்சியை அடைந்தார்.

இந்துத்துவ எதிர்ப்பு; சிறுபான்மையினர் பாதுகாப்பு; உழைக்கும் வர்க்கச் சார்பு; முஸ்லிம் சமுதாய விழிப்புணர்வு; ஒடுக்கப்பட்டோர் அரசியல் விடுதலை; இஸ்லாமிய கருத்தியல் குறித்த பரப்புரை என தனது கொள்கைகளை வரையறுத்துக் கொண்ட அவர், அக்கொள்கைகளின் அடிப்படையில் மிகத் தீவிரமாக களமாடினார். தமிழகத்தில் அவர் பயணிக்காத கிராமங்களே இல்லை. தமிழகத்தின் எல்லைகளைத் தாண்டி இந்தியா முழுவதும் வலம் வந்தார். இந்தியாவைக் கடந்து அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என நாடு நாடாகச் சுற்றினார். அவ்வாறு அவர் சென்ற இடமெல்லாம் அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.

பாபாவின் தனித் திறமைகளினாலும், நாவண்மையினாலும் ஈர்க்கப்பட்ட அரசியல் தலைவர்களும், சமூக சிந்தனையாளர்களும் அவருக்கு நெருக்கமானார்கள். இந்திராகாந்தி முதல் எம்ஜிஆர் வரை எல்லா அரசியல்வாதிகளுடனும் பாபாவுக்குத் தொடர்பு இருந்தது. டாக்டர் ராமதாஸ் முதல் டாக்டர் சேப்பன் வரை எல்லா சமூகத் தலைவர்களுடனும் அவருக்கு உறவு இருந்தது. அ.மார்க்ஸ் முதல் அனீஸ் பாத்திமா [நர்கிஸ்] வரை எல்லா சிந்தனையாளர்களுடனும் அவருக்கு நட்பு இருந்தது.

பாபா, ஒரு பன்முக ஆளுமை. அநீதியைக் கண்டு ஆர்த்தெழும் இயல்பைக் கொண்டவர்.தவறுகள் எங்கே நடந்தாலும் தன் சட்ட ஞானத்தால் தட்டிக்கேட்டவர். இந்திய குடியரசுத் தலைவராக இருந்த பிராமணரான ஆர்.வெங்கட்ராமன் தனது பதவிக் காலத்தில் அரசுப் பணத்தில் திருப்பதி கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்தார். தமது தனிப்பட்ட மத நம்பிக்கைகளுக்காக மக்கள் பணத்தை விரயமாக்கிய ஆர்.வியின் செயலை கடுமையாகக் கண்டித்த பழனிபாபா, 'வெங்கட்ராமன் திருப்பதிக்கு அடிக்கடி சென்று வந்த மொத்த செலவினத்தையும் அரசுக்குத் திருப்பி செலுத்த வேண்டும்' என்று கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இப்படி அதிகாரத்தை நோக்கிய உண்மையின் குரலாக ஒலித்த பாபாவை நாடே திரும்பிப் பார்த்தது.

1980 களில் நிகழ்ந்த மீனாட்சிபுரம் மதமாற்றத்தை தொடர்ந்து குமரிமாவட்டம் மண்டைக்காட்டில் நடைபெற்ற கலவரம் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் வரவை அறிவிப்புச் செய்தது. 'இந்து முன்னணி' என்ற மாற்றுப் பெயரில் களமிறங்கிய இந்துத்துவ சக்திகள், அமைதிப்பூங்காவான தமிழகத்தை அமளிக்காடாக்கினர். விநாயகர் ஊர்வலத்தை அறிமுகப்படுத்தி முஸ்லிம்களை வம்புக்கு இழுத்தனர். 'காமவெறியில் விஞ்சி நிற்பவள் கதீஜாவா? அன்னை மேரியா? மணியம்மையா?' என்ற தலைப்பில் பட்டிமன்றங்களை நடத்தினர். முஸ்லிம்களின் உயிருக்கு உயிரான நபிகளாரைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்து வெறிக்கூச்சலிட்டனர்.

ஆர்.எஸ்.எஸ் கும்பலின் இத்தகைய அராஜகச் செயல்களால் தமிழகம் முழுவதும் பற்றி எரிந்தது. கோவை, விழுப்புரம், ஆம்பூர், தேவிப்பட்டினம், ஆத்தூர், சேலம், வாணியம்பாடி, தேங்காப்பட்டினம், திண்டுக்கல், குளச்சல், காயல்பட்டினம், கடையநல்லூர், திருவல்லிக்கேணி, மேட்டுப்பாளையம், பழனி, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, அத்திக்கடை, மேலப்பாளையம், நாகூர் என்று... எங்கு பார்த்தாலும் கலவரம். இந்துத்துவ வெறியர்களின் கோரத் தாக்குதலுக்கு இலக்காகிய முஸ்லிம்கள் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். அத்தகைய இருண்ட சூழலில் ஒளிக்கீற்றாய் உதித்தவர்தான் பழனிபாபா.

ஆர்.எஸ்.எஸ்ஸின் அராஜகங்களைக் கண்டு அஞ்சி நடுங்கிய சமூகத்திற்கு தைரியமூட்டினார், அவர்.
பேசவே பயந்து வாய் பொத்தி ஊமையாய்க் கிடந்த சமூகத்திற்கு கேள்வி கேட்க கற்றுத் தந்தார். இந்து முன்னணியின் மதவெறிக் கூட்டங்களுக்கு எதிர் கூட்டம் போட்டு தமது அபாரமான பேச்சுத் திறனால் தக்க பதிலடி கொடுத்தார். அவர் கலவரத்தை விதைத்தவர் இல்லை; கலவரத்தை விதைத்தவர்களுக்கு எதிரான கருத்தை விதைத்தவர்.

இந்துத்துவ மதவெறிக்கு எதிராக களமாடிய அதே வேளையில், முஸ்லிம்களை ஒடுக்கிய அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும் வீச்சோடு இயங்கினார், பாபா. முஸ்லிம்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்தின் நடவடிக்கைகளை துணிந்து அம்பலப்படுத்தி வந்த அவர், இடையறாத சட்டப் போராட்டத்தின் மூலம் ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் மிரள வைத்தார். அச்சத்தின் பிடியிலிருந்த முஸ்லிம்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டினார்.

பாபா மீது நான்கு முறை தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டது. 80 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நூற்றுக்கு மேற்பட்ட முறை சிறை சென்று வந்த அவர், எல்லா ஒடுக்குமுறைகளையும் உடைத்தெறிந்தார். தடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகும், இந்தியாவிலேயே கைது செய்யப்பட முடியாத ஒரே மனிதராகவும் அவர் இருந்தார்.

இந்துத்துவ கும்பலின் பயங்கரவாத நடவடிக்கைகளை ஜனநாயகத் தளத்தில் நின்று எதிர்கொள்ளும் வகையில், பாபா உருவாக்கிய மக்கள் திரளைக் கண்டு புறமுதுகிட்டு ஓடினார்கள் இந்து முன்னணியினர். பாபாவின் படையை நேருக்கு நேராகச் சந்திக்கும் துணிவற்ற அவர்கள், அதிகாரத்தின் துணையை நாடினார்கள். பாபாவின் பின்னால் அணிவகுத்த இளைஞர்கள் மீது அடக்குமுறைச் சட்டம் பாய்ந்தது. பாபாவின் ஆதரவாளர்கள் குறிவைக்கப்பட்டனர்; கண்காணிக்கப்பட்டனர்; கைது செய்யப்பட்டனர். சிறையிலடைக்கப்பட்ட அனைவருக்கும் சட்ட ரீதியான உதவிகளைச் செய்தார், பாபா. சிறையிலிருந்த முஸ்லிம் இளைஞர்களின் குடும்பங்களைப் பற்றிய விபரங்களைச் சேகரித்து அந்த குடும்பங்களின் செலவினங்களுக்கு மாதந்தோறும் மணியார்டர் செய்து வந்தார். பாபாவின் இத்தகைய குணச்சிறப்பின் காரணமாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவர் மீது அபிமானம் கொண்டனர். பாபாவின் படை மேலும் வலிமை பெற்றது.

இந்துத்துவத்தை தனியொரு சமூகமாக நின்று எதிர்க்க முடியாது என்ற நடைமுறை உண்மையைப் புரிந்து கொண்ட பாபா தொடர்ச்சியாக பல வியூகங்களை வகுத்தார். இந்துத்துவத்தால் பாதிக்கப்படும் ஏனைய சமூகங்களையும் இணைத்துக் கொண்டு போராட்டத்தை முன்னெடுத்தார். பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மண்டல் கமிஷனை ஒழித்தது இந்துத்துவம். ஆகவே, இந்துத்துவத்தை எதிர்க்க பிற்படுத்தப்பட்டவர்களே வாருங்கள் என 'டச்சிங்காக' அழைப்பு விடுத்தார்.

தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் ஊருக்கு வெளியே சேரியில் ஒதுக்கி வைத்து வதை செய்கின்றது இந்துத்துவம். ஆகவே, இந்துத்துவத்தை வேரறுக்க தலித் மக்களே அணிதிரள்வீர் என உணர்வுப் பூர்வமாக அறைகூவல் விடுத்தார்.

அத்தகைய அறைகூவலுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவர்களுடனும், தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர்களுடனும் உறவை வளர்த்துக் கொண்டார். வன்னியர் சமூகத் தலைவரான டாக்டர் ராமதாசுடனும், தலித் சமூகத் தலைவரான டாக்டர் சேப்பனுடனும் இணைந்து களம் கண்டார்.

வன்னியர் சங்கத்தை பாட்டாளி மக்கள் கட்சியாக ராமதாஸ் மாற்றிய போது, பா.ம.கவுக்கு ஒரு வெகுஜன அடையாளத்தைப் பெற்றுத் தந்தவர் பழனிபாபா. தனது ஜிகாத் கமிட்டித் தொண்டர்களை பாமகவில் இணைந்து செயலாற்றும் படி ஊக்கப்படுத்தினார். அவரது அறிவுரையை ஏற்றுக்கொண்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் பாமகவில் இணைந்தார்கள்.

அவ்வாறு இணைந்தவர்கள் பட்டி தொட்டியெங்கும் பா.ம.க பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தனர். அந்த கூட்டங்களில் பங்கேற்று பழனிபாபா முழங்கினார். ஒடுக்கப்பட்ட சமூகங்களின் நம்பிக்கை நாயகனாக ராமதாசை முன்னிறுத்தினார். வன்னியர் சாதிக்கட்சி என்ற முத்திரையிலிருந்து விலகி, ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் கட்சியாக பா.ம.கவை அடையாளப்படுத்துவதற்கு கடுமையாக உழைத்தார்.

பா.ம.க படிப்படியாக வளர்ந்து அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்தது. ராமதாசின் அரசியல் நடவடிக்கைகளில் மெல்லிய மாற்றங்களும் நிகழ்ந்தன. அறிவுக் கூர்மையுள்ள பாபா அதை உணர ஆரம்பித்தார். ராமதாசிடம் ஏற்பட்ட மெல்லிய மாற்றம் ஒரு கட்டத்தில் வலிமையாக வெளிப்பட்டது. பா.ம.க கூட்டங்களில் பாபா பேசிய பிறகு இறுதியாக ராமதாஸ் பேசுவார். பாபாவின் அனல் பேச்சைக் கேட்க ஆயிரக்கணக்கில் திரண்டு நிற்பவர்கள், அவர் பேசி முடித்ததும் கலைந்து சென்று விடுவார்கள். ராமதாஸ் பேசத் தொடங்கும் போது கூட்டம் சில நூறு பேர்களாகச் சுருங்கி விடும். இதுவும் ஒரு வகையில் ராமதாசுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. விளைவு; பாபாவை கூட்டங்களுக்கு அழைக்காதீர்கள் என பா.ம.கவினருக்கு ராமதாஸ் வாய்மொழி உத்தரவு போட்டார். பாபாவுக்கும் ராமதாசுக்கும் இடையே முரண்பாடு மேலும் அதிகரித்தது.

அதே காலகட்டத்தில் பால்தாக்கரேயை ஆதரித்து அறிக்கை விட்டார் ராமதாஸ். மேலும் பாஜக தலைவர்களுடன் நெருங்கத் தொடங்கினார். ராமதாசின் கொள்கைத் தடுமாற்றத்தைக் கண்டு கடும் அதிருப்தி அடைந்த பாபா தனது தொண்டர்களிடம், 'முஸ்லிம்கள் பா.ம.கவில் இருக்க முடியாத சூழல் உருவாகிவிட்டது' என வெளிப்படையாகக் கூறினார். பின்னர் அதையே மேடைகளிலும் எதிரொலித்தார்.

1996, சட்டமன்றத் தேர்தலின்போது, புதுக்கோட்டைத் தொகுதியில் பா.ம.க வேட்பாளராகப் போட்டியிட்ட கே.எம்.ஷெரீபை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த பாபா, 'இதுதான் பிற அரசியல் கட்சிக்காக, தாம் பேசுகிற கடைசி பேச்சு என்றும், இனி எந்த அரசியல் கட்சிக்கும் ஓட்டு கேட்க மாட்டேன் என்றும், எதிர்காலத்தில் சமுதாயத்திற்காகவே ஓட்டு கேட்பேன்' என்றும் அறிவிப்பு செய்தார். பா.ம.கவினால் பாபாவுக்கு ஏற்பட்ட ஏமாற்றம், தனியொரு அரசியல் கட்சியைக் கட்டமைக்கும் சிந்தனைக்கு அவரைத் தள்ளியது.

எண்ணிக்கையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் அரசியலை எப்படி வென்றெடுப்பது என்ற ஆய்வில் இறங்கினார். இறுதியில், கேரளாவுக்குச் சென்று மக்கள் ஜனநாயகக் கட்சியின் [பிடிபி] தலைவர் அப்துல் நாசர் மதானியை சந்தித்தார். அங்கு முஸ்லிம்களையும், தலித்துகள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களையும் இணைத்த அரசியல் வியூகத்தின் மூலம் வலுவான ஜனநாயக சக்தியாக எழுச்சி பெற்றிருந்த மதானியுடனான பாபாவின் சந்திப்பு, அவருக்குப் புதிய நம்பிக்கையையும் தெம்பையும் ஊட்டியது.

முஸ்லிம்களையும், தலித்துகளையும், அரசியல் மைய நீரோட்டத்தில் தவிர்க்க முடியாத தனிப்பெரும் சக்தியாக மாற்றும் வகையில் தமிழகத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சியைத் தொடங்கும் முடிவுக்கு வந்தார் பாபா. தமிழகத்தில் பி.டி.பியை தொடங்கும் முன்னர் கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் அவர்களுடன் கலந்தாலோசிக்குமாறு பாபாவிடம் கேட்டுக் கொண்டார், மதானி.

பாபா கொடிக்காலை சந்தித்தார். அடுத்தக் கட்ட அரசியல் நகர்வு பற்றி விவாதித்தார். பாபாவின் முடிவுகளை மகிழ்ச்சியோடு வரவேற்றார் கொடிக்கால். பின்னர் ஜிகாத் கமிட்டியினருடன் நடைபெற்ற கலந்துரையாடலில், கேரளாவின் பி.டி.பி கட்சியை தமிழ்நாட்டில் தொடங்குவதிலுள்ள நடைமுறைச் சிக்கல்கள் விவாதிக்கப்பட்டன. முடிவில் மதானியின் அரசியல் அஜெண்டாவை ஏற்றுக்கொள்வது என்றும், ஜிகாத் கமிட்டியையே அரசியல் கட்சியாக மாற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கட்சியைப் பதிவு செய்வதற்கும், கட்டமைப்பை உறுதிப்படுத்துவதற்கும், கிளைகளை விரிப்பதற்கும் பணிகளை முடுக்கி விட்டார், பாபா. தனது பேச்சில் இருந்த வேகத்தைக் குறைத்து, வியூகத்தை கூர்தீட்டினார். தமிழகம் முழுவதுமுள்ள முஸ்லிம் ஜமாத்துகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டார். பாபாவின் அத்தகைய முயற்சிகளுக்கு உடனடி பலன் கிடைத்தது. பல மாவட்டங்களில் ஜமாத்துகள் ஒருங்கிணையத் தொடங்கின.

முஸ்லிம்களை ஒருங்கிணைப்பது; தலித்துகளுடன் உரையாடுவது; இரண்டு சமூகங்களும் இணைந்து அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பது என்ற வியூகம்தான் பாபா கையிலெடுத்த கடைசி ஆயுதம். எதிர்காலத்தில் கட்சிகளின் கூட்டமைப்பு வலுவிழந்து விடும் என்றும், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் கூட்டமைப்புதான் வலுப்பெறும் என்றும் பாபா கூறி வந்தார். அத்தகைய கூட்டமைப்பை உருவாக்குவது சாதாரண வேலையல்ல என்றும், அது மிகப்பெரும் அர்பணிப்புக்குப் பின்னரே சாத்தியமாகும் என்றும் அவர் முன்னுணர்ந்தார்.

இத்தகைய அரசியல் நிலைப்பாட்டுடன் களப்பணியை நோக்கி பாபா நகரும் போதுதான் திடீரென படுகொலை செய்யப் பட்டார்.

1997, ஜனவரி 28 ஆம் நாள் இரவு பொள்ளாச்சியில் உள்ள பாபாவின் நண்பர் பசுவராஜ் என்கிற தனபால் வீட்டிற்கு பாபா சென்றார். 30 ஆண்டுகால நண்பரான தனபாலோடு சுமார் ஒரு மணி நேரம் தனிப்பட்ட, குடும்ப விசயங்களைப் பற்றி உரையாடிவிட்டு இரவு 9.30 மணியளவில் அங்கிருந்து விடைபெற்றார். புறப்படுவதற்கு பாபா தனது ஜீப்பில் ஏறி அமர முயன்ற போது, கையில் சிறிய கோடாலி போன்ற ஆயுதத்துடன் பாபாவை நெருங்கிய அந்த மர்ம மனிதன், திடீரென பாபாவின் தலை,நெஞ்சு,உடல் என சரமாரியாக வெட்டினான். பாபா நிலைகுலைந்து சாய்ந்தார்.

அதிர்ச்சியடைந்த பாபாவின் நண்பர் தனபால், 'டேய் டேய்' என சத்தமிட்டுக் கொண்டே அந்தக் கொலைகாரனை விரட்டினார். அப்போது அவன் 'நீ எனக்கு குறி இல்லை, போடா ஒதுங்கி' என அவரைத் தள்ளிவிட்டு ஓடிவிட்டான். சற்று தூரத்தில் நின்றிருந்த அம்பாசிடர் கார் ஒன்றில் தொற்றிக் கொண்ட அவன் தப்பித்து விட்டான். பாபா படுகொலை செய்யப்பட்ட செய்தி தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. ஆங்காங்கே கலவரம், கல்வீச்சு, கறுப்புக் கொடி போராட்டம் என எதிர்ப்பு வலுவாக இருந்தது. கனத்த இதயத்தோடும், கண்ணீர் பெருக்கோடும் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்கள் திரளுக்கு மத்தியில், பழனி அருகேயுள்ள புது ஆயக்குடியில் பாபாவின் உடல் நல்லடக்கம் செய்யப் பட்டது.  
 பாபாவின் படுகொலையில் தொடர்புடைய கொலையாளிகள் அனைவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விட்டனர். பாபா கொலை வழக்கை முன்னெடுப்பதற்கும், கொலையாளிகளுக்கு உரிய தண்டனையை பெற்றுத் தருவதற்கும் உருப்படியான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப் படவில்லை.

பாபாவின் ஆதரவாளர்களிடம் இது குறித்து கேள்வி எழுப்பிய போது 'கைது செய்யப் பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல' என்றும், அவர்களுக்கு எதிராக வழக்கு நடத்துவதில் எந்தப் பயனும் இல்லை என்றும், பாபா படுகொலைக்குப் பின்னணியில் பல மர்ம முடிச்சுகள் இருக்கின்றன என்றும் கூறி அதிர்ச்சியளிக்கின்றனர். அது என்ன மர்ம முடிச்சு என்பதை நம்மால் விளங்க முடியவில்லை.

ஆனால், அவரது படுகொலைக்குப் பின்னால் இருக்கும் அரசியலை நம்மால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

பாபா, இந்துத்துவ மதவெறிக்கு எதிராக மிகத் தீவிரமாக சொற்போர் நிகழ்த்திய காலங்களில் கொல்லப்படவில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான அரச அடக்குமுறைகளை அம்பலப்படுத்தி மக்களை அணி திரட்டிய காலத்திலும் கொல்லப்படவில்லை. பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர்களோடு இணைந்து அவர்களின் அரசியல் அமைப்பை வலுப்படுத்த உழைத்த காலங்களிலும் படுகொலை செய்யப்படவில்லை.

மாறாக, எப்போது அவர் பேச்சைக் குறைத்து, செயல் வீச்சை அதிகரித்து, ஜமாத்துகளை ஒருங்கிணைத்து, முஸ்லிம்களும் தலித்துகளும் இணைந்த அரசியல் பயணத்தை முன்னெடுக்க முயன்றாரோ அப்போதுதான் அவர் படுகொலை செசெய்யப்பட்டார்.

அப்படியென்றால், எந்த முயற்சி வெற்றி பெறுமோ; எந்த முயற்சி ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு விடிவைத் தருமோ; எந்த முயற்சி முஸ்லிம்களுக்கு உரிய பயனளிக்குமோ...அந்த முயற்சியில் அவர் ஈடுபட முயன்றபோதே கொல்லப்பட்டு விட்டார் என்றால், அதன் பின்னணியில் இருக்கின்ற 'அரசியல்' எது என்பதை ஆய்வு செய்தாக வேண்டும்.

இந்துத்துவத்தின் நேரடித் தாக்குதல்களுக்கு இலக்காகின்ற இரட்டைச் சமூகமான முஸ்லிம்களும், தலித்துகளும் இணைவது இயல்பாகவே சாத்தியமானது. இரு சமூகங்களுக்குமான உறவு இரண்டறக் கலந்தது. இரண்டு சமூகங்களும் பல்வேறு அரசியல் கட்சிகளால் வஞ்சிக்கப்பட்ட வரலாற்றுக்கு உரியது. சரியான தலைமைகள் இன்றித் தடுமாறும் நிலைமையை உடையது. நாடு முழுவதும் வாக்குகளைத் தீர்மானிக்கும் சக்திகளாகவும், மக்கள் தொகை அடிப்படையில் ஒருங்கிணைந்த மிகப்பெரிய சமூகங்களாகவும் இருப்பதால், இரண்டு சமூகங்களையும் இணைத்த அரசியல் நடவடிக்கை என்பது இரண்டு சமூகங்களையும் தவிர மற்ற எல்லோருக்கும் சிக்கலானது. இரண்டு சமூகங்களையும் வஞ்சித்து அரசியல் பிழைப்பு நடத்தும் அனைவருக்கும் ஆபத்தானதும் கூட.

எனவே, அந்த இணைப்பு அஜெண்டாவை கையிலெடுப்பவர்கள் பல்வேறு இன்னல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் ஆளாவார்கள். அரசியல் மைய நீரோட்டத்திலிருந்து அவர்கள் அகற்றப்படுவார்கள்; அல்லது அழிக்கப்படுவார்கள்.

கேரள மாநிலத்தில், முஸ்லிம்களும் தலித்துகளும் இணைந்த அரசியல் அஜெண்டாவை கையிலெடுத்த மதானி, பொய் வழக்குகள் சுமத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு அரசியல் மைய நீரோட்டத்திலிருந்து அகற்றப்பட்டார். அதே வழிமுறையை தமிழகத்தில் கையிலெடுக்க முயன்ற பழனிபாபா அழிக்கப்பட்டார்.

பாபாவின் மறைவுக்குப் பிந்தைய தமிழக முஸ்லிம்களின் அரசியல் போக்கு, இலக்கற்றுத் தடுமாறிக் கொண்டிருப்பதை மீளாய்வு செய்தால் அந்த உண்மை நமக்கு விளங்கும்.

பழனிபாபா, தனது பொதுவாழ்க்கைப் பயணத்தில் முதலில் எம்ஜிஆருடன் நெருக்கமாக இருந்தார். பின்னர் அதே எம்ஜிஆர்தான் தமது ஆட்சிக்காலத்தில் பாபாவின் கூட்டங்களுக்குத் தடை போட்டார். ஒவ்வொரு தடையையும் நீதிமன்றத்தில் சென்று அனாயாசமாகமுறியடித்து, வெற்றிகரமாக கூட்டம் நடத்துவார், துணிச்சல்கார பாபா. இதனால் எரிச்சலடைந்த எம்ஜிஆர் சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்குள் பழனிபாபா நுழையத் தடை என அரசாணை கொண்டு வந்தார்.

பாபாவுக்கும், எம்ஜிஆருக்கும் இடையிலான முரண்பாட்டைக் கவனித்த கலைஞர், எம்ஜிஆரை எதிர்க்க பாபாவை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். ஒரு கட்டத்தில் கலைஞருடனும் முரண்பட்டார் பாபா. எம்ஜிஆராவது பாபாவின் கூட்டங்களுக்குத் தான் தடை போட்டார். ஆனால் கலைஞரோ, பாபாவைக் கைது செய்து சிறையிலடைக்கும் அளவுக்கு கடுமை காட்டினார்.
இறுதியில், டாக்டர் ராமதாசோடு நெருங்கிய பாபா, அவரோடும் முரண்பட்டு விலகினார்.

பழனிபாபா, எம்ஜிஆரையும் கலைஞரையும் ராமதாசையும் சமுதாயத்திற்காகவே ஆதரித்தார்; சமுதாயத்திற்காகவே எதிர்த்தார். சுயநல அரசியலையோ, அல்லது பிழைப்புவாத அரசியலையோ அவர் முன்னெடுத்திருந்தால் எந்தத் தலைவரோடும் அவருக்கு முரண்பாடுகள் ஏற்பட்டிருக்காது. யாரோடும் சமரசமாகி விடாமல் அவர் காத்த கொள்கை உறுதிதான் அவரை தனித்து இயங்க வைத்தது; ஷஹீது அந்தஸ்துக்கு உயர்த்தி வைத்தது.

பாபா மிக இயல்பானவர்; உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர். மனதில் பட்டதை பட்டெனச் சொல்லிவிடும் பழக்கமுடையவர். இன்றைய அரசியல் சமூகத் தலைவர்களுக்கு உரிய, இன்றைய அரசியல் சூழலுக்கு மிகவும் அவசியமான 'நடிக்கும் திறன்' பாபாவிடம் இருந்ததில்லை