Digital Time and Date

Welcome Note

Saturday, June 16, 2012

தீய குணங்கள் பற்றி இஸ்லாம்
1 . தற்பெருமை

(நபியே) நீர் பூமியில் பெருமையாக நடக்க வேண்டாம்.(ஏனெனில்) நிச்சயமாக (இப்படி நடப்பதால்) நீர் பூமியை பிளந்து விடவும் முடியாது. மலையின் உச்சி அளவுக்கு உயர்ந்து விடவும் முடியாது. (அல் குர்ஆன் 17:37)

நரகவாதிகளை உங்களுக்கு அறிவிக்கட்டுமா, தற்பெருமையும், ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: ஹாரிஸா இப்னு வஹப் (ரலி) நூல்: புஹாரி,முஸ்லிம்)

2 . கொடுமை

அநீதி இழைக்கப் பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதிகுறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாக பிரார்த்தனை புரிவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்த போது கூறினார்கள். (நூல்: புஹாரி)

3 . கோபம்

(பய பக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர் (கள் செய்யும் தவறு) களை மன்னிப்பார்கள். (அல் குர்ஆன் 3:134)

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்றார். கோபம் கொள்ளாதே! என்றார்கள். பலமுறை கேட்ட போதும், கோபம் கொள்ளாதே! என்றார்கள்.

(அறிவிப்பவர்: அபு ஹூரைரா (ரலி) நூல்: புஹாரி)

4 . பிறர் துன்பத்தை கண்டு மகிழல்

உன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழாதே! இறைவன் அவன் மீது கருணை புரிந்து, உன்னை துன்பத்தில் ஆழ்த்திவிடுவான். (நூல்: திர்மிதி).

5. பொய்

எவன் பொய்யனாகவும், நிராகரிப்பவனாகவும் இருக்கிறானோ அவனை அல்லாஹ் நேர் வழியில் செலுத்துவதில்லை (அல் குர்ஆன்:39:3)

சந்தேகமானதை விட்டுவிட்டு உறுதியான விசயத்தை நீ எடுத்துக்கொள் (ஏனெனில் ) உண்மை மன நிம்மதி தரக்கூடியது. பொய் சந்தேகமானது என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர் ஹஸன் (ரலி) நூல்கள்:அஹமத், நஸயீ, திர்மிதி, இப்னு ஹிப்பான்)

6. கெட்டவற்றை பேசுதல்

எப்போதும் குறை கூறிக் கொண்டே இருப்பவனும் சபிப்பவனும், ஆபாசமாகவும் அற்பமாகவும் பேசுபவனும் இறைநம்பிக்கையாளன் அல்லன். (நூல்:முஸ்லிம்)

7. இரட்டை வேடம் போடுதல்

மறுமை நாளில் மனிதர்களில் கெட்டவர்களாக இரண்டுமுகம் உடைய (இரட்டை வேடதாரிகளை) பார்ப்பீர்கள். ஒருமுகத்துடன் (ஒரு கூட்டத்திடம்) செல்வார்கள். வேறுமுகத்துடன் ( இன்னொரு நேரத்தில் அக்கூட்டத் திடம்) செல்வார்கள் என நபி (ஸல்) கூறினார்கள். (அதாவது தனதுகொள்கையை சந்தர்ப்பத்திற்கு தகுந் தவாறு மாற்றிக் கொள்வார்கள்) (அறிவிப்பவர்:அபுஹூரைரா (ரலி)நூல்கள்:புஹாரி, முஸ்லிம்)

8. பாரபட்சம் காட்டுதல்

நபி (ஸல்) கூறினார்கள் (இன மத மொழி) வெறியின் அடிப்படையில் மக்களை அழைப்பவன் நம்மை சார்ந்தவன் அல்லன். அதற்காக போராடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். அதற்காக உயிரை விடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். (நூல்:அபுதாவூத்)

முஃமின்களே நீங்கள் நீதியின் மீது நிலைத்திருப்பவர்களாகவும் உங்களுக்கோ அல்லது(உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள் (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும் (உண்மையாக சாட்சி கூறுங்கள்) (அல் குர்ஆன்:4:135)

9. வரம்பை மீறிய புகழ்ச்சி –

நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்: அதிகம் புகழக் கூடியவர்களை நீங்கள் கண்டால் அவர்கள் முகத்தில் மண்ணை வாரிப் போடுங்கள் (அறிவிப்பாளர்:மிக்தாத் (ரலி) ஆதாரம்: முஸ்லிம்ஃ மிஷ்காத்)
10. பரிகாசம்

முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறிதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம் . ஏனெனில் (பரிகசிக்கப் படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம் (அவ்வாறே) எந்தப்பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம்செய்ய வேண்டாம்) ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம் இன்னும் உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும்(உங்களில்) ஒருவரைடியாருவர் (தீய) பட்டப் பெயர்களால் அழைக்காதீர்கள் . ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய)பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும் எவர்கள்(இவற்றிலிருந்து மீழவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரராவார்கள். (அல் குர்ஆன் 49:11)

11. வாக்குறுதி மீறல்

வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். நிச்சயமாக வாக்குறுதி (பற்றி) மறுமையில் விசாரிக்கப்படும். (அல் குர்ஆன் 17:34)

நயவஞ்சகனின் அடையளங்கள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான், வாக்குறுதி கொடுத்தால் மாறு செய்வான், நம்பினால் மோசடி செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரிஃ முஸ்லிம்)

12. சண்டை

அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான் . இதனை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்:புஹாரி)

13. குறை கூறல்

குறை சொல்லி புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அல் குர்ஆன் 104:1)

இறை நம்பிக்கையாளர்களே! உங்களில் சிலர் சிலரைப்பற்றிப் புறம் பேசவேண்டாம். உங்களில் யாராவது ஒருவர்தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தை புசிக்கவிரும்புவாரா, (இல்லை!) அதை நீங்கள் வெறுப்பீர்கள். மேலும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீளுவதை அல்லாஹ் ஏற்றுக்கொள்பவன் மிக்க கருணையாளன். (அல் குர்ஆன் 49:12)

14. பொறாமை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பொறாமையைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நெருப்பு விறகை விழுங்கி விடுவதுபோல் பொறாமை நன்மைகளை விழுங்கிவிடுகின்றது. (அறிவிப்பவர்: அபுஹூரைரா (ரலி), நூல்:அபுதாவூது, மிஷ்காத்)

15. கெட்ட பார்வை

(நபியே) ஈமான் கொண்டவர்கள் தங்கள் பார்வையை (தவறானவைகளிலிருந்து) தாழ்த்திக் கொள்ள வேண்டுமென்று கூறுவீராக. (அல் குர்ஆன் 24:30)

கண்கள் செய்யும் சைகைகளையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான். (அல் குர்ஆன்40:19)

செவி, பார்வை, மனம் இவை ஒவ்வான்றும் மறுமைநாளில் (அதனதன் செயல் பற்றி) நிச்சயமாக விசாரிக்கப்படும். (அல் குர்ஆன் 17:36)

வியாபாரம் பற்றி இஸ்லாம்


வியாபாரத்தைப் பற்றி திருமறை:வியாபாரத்தைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் 2:275 வசனத்தில் குறிப்பிடுகிறான்: அல்லாஹ் உங்களுக்கு வியாபாரத்தை அனுமதித்திருக்கிறான்.

ஆனால் அல்லாஹ் கூறும் வியாபாரத்தில் அளவை நிறுவையில் மோசடி, பொய்யான வாக்குறுதி, பொருள் கலப்படம், குறையுள்ள பொருள் விற்பனை, வாங்குபவரை ஏமாற்றுதல், பொருள் விற்பனைக்காக அல்லாஹ் மீது சத்தியம் செய்தல், பொருளை பதுக்குதல், கொள்ளையடித்தில், திருடுதல், அல்லாஹ் ஹராமாக்கிய பொருளை விற்பனை செய்தல் அல்லது வாங்குதல், வாங்கிய பொருள் கைக்கு வருவதற்கு முன் விற்பனை செய்தல் போன்ற எண்ணற்ற குறைபாடுகள் கிடையாது. ஆனால் இன்றைய வியாபாரத்தில் இவையெல்லாம் வியாபார நுணுக்கங்களாக தலை தூக்கிவிட்டன.

பலர் எந்த வியாபாரம் ஹலாலானது, எந்த வியாபாரம் ஹரமானது என்பதை அறியாமலேயே வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால்தான் வியாபாரியாக இருந்து வாழ்க்கையை நடத்தும் முஸ்லிம்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பற்கு இஸ்லாம் சில வரையறைகளை விதிக்கிறது.


அளவையிலும், நிறுவையிலும் மோசடி கூடாது!


“அளவையிலும், நிறுவையிலும் மோசடி” செய்பவர்களைக் குறித்து அல்லாஹ் தன் திருமறையில் 83:1-3 வசனங்களில் கடுமையாக எச்சரிக்கின்றான்:

அளவையிலும் நிறுவையிலும் யார் மோசடி செய்கிறார்களோ அவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடம் இருந்து அளந்து வாங்கினால் நிறைய அளந்து கொள்வார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும் போது குறைத்து விடுவார்கள். அளவையிலும் நிறுவையிலும் குறைத்து வியாபாரம் செய்வது வியாபார நுணுக்கமாக சில வியாபாரிகள் நினைக்கின்றனர்.

ஆனால் இது ஒரு மாபெரும் மோசடி. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“(அளவை, நிறுவை என) இரண்டு விஷயங்களில் பொறுப்பேற்றுள்ளீர்கள். இதில்தான் உங்களுக்கு முன் இருந்த சமுதாயத்தினர் அழிந்தனர்” என்று எச்சரித்தார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) – திர்மிதீ).வியாபாரத்தில் பொய்ச்சத்தியம் கூடாது!

இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்தார்கள்.

“(வியாபாரத்தில்) சத்தியம் செய்வது, சரக்கை விற்கச் செய்திடும். (ஆனால்) லாபத்தை அழித்துவிடும்” என்று கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி) முஸ்லிம், நஸாயீ, அஹ்மத், அபூதாவூத்).

இவ்வாறு விற்கும் பொருளில் இல்லாததை இருப்பதாக பொய்ச்சத்தியம் செய்து விற்றால் மறுமை நாளில் எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படும் என்று மற்றொரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“மறுமை நாளில் மூன்று நபர்களை அல்லாஹ் பார்க்க மாட்டான், அவர்களைத் தூய்மைப் படுத்தமாட்டான், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு என்று கூறினார்கள். அந்த மூவரில் ஒருவன் தனது வியாபாரப் பொருளில் இல்லாததை இருப்பதாக கூறி சத்தியம் செய்தவன்.” (அபூஹுரைரா (ரலி) புஹாரி).

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒருவன் ஒரு சத்தியம் செய்து அதன் காரணமாக மற்றொரு முஸ்லிமுடைய சொத்தைப் பறித்துக் கொண்டு, அதில் அவன் பொய்யனாக இருப்பின், மறுமையில் அவன் மீது கோபமாக இருக்கும் நிலையில் அல்லாஹ்வைச் சந்திப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (அஷ் அஸ் இப்னு கைஸ் (ரலி)புஹாரி, முஸ்லிம்).

இது பற்றி அல்லாஹ் தன் திருமறையில் (2:188) வசனத்தில் குறிப்பிடுகிறான்:

உங்களுக்கிடையே (ஒருவருகொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! என்று கூறுகிறான்.


வியாபாரத்தில் போட்டி, பொறாமை கூடாது!

இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள். “ஒரு மூமின் மற்றொரு மூமினின் சகோதரர் ஆவார். தன் சகோதரரின் வியாபாரத்தில் தலையிட்டு வியாபாரம் பேச ஒரு மூமினுக்கு அனுமதியில்லை” என்று கூறினார்கள். (உக்பா இப்னு ஆமிர் (ரலி) இப்னுமாஜா, அஹ்மத்).

இதேபோன்று மற்றொரு ஹதீஸில் “உங்களில் ஒருவர் தன் சகோதரன் செய்யும் வியாபாரத்தில் (குறுக்கீடு செய்து) வியாபாரம் செய்ய வேண்டாம்” என்று கூறினார்கள். (இப்னு உமர் (ரலி) புஹாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸாயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்).

(வாங்கும் நோக்கமின்றி விலையை உயர்த்திடும் நோக்கில்) விலையை கூடுதலாக்கிட முயல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள். (இப்னு உமர் (ரலி) புஹாரி, முஸ்லிம், நஸாயீ, இப்னுமாஜா, அஹ்மத்).


பதுக்கல் வியாபாரம் கூடாது!

இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“தேவையான பொருளைப் பதுக்கி வைக்காமல் உரிய நேரத்தில் அவற்றை அங்காடிக்குக் கொண்டு வருபவன் அல்லாஹ்வின் அருளுக்கு உரித்தவனாவான். மேலும் அல்லாஹ் அவனுக்கு வாழ்வாதாரங்களையும் வழங்குவான். இன்னும் அவற்றை பதுக்கி வைப்பவன் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவனாவான்” என்று
கூறினார்கள். (உமர் (ரலி) இப்னுமாஜா).

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பாவியைத்தவிர வேறு யாரும் உணவுப் பொருளைபதுக்கமாட்டார்கள்.” என்று கூறினார்கள். (மஃமர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) முஸ்லிம்).

இந்தப் பதுக்கல்காரனைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தேவையான பண்டங்களைப் பதுக்கி வைப்பவன் எவ்வளவு கெட்டவனாக இருக்கிறான். அல்லாஹ் பொருளின் விலையை மலிவாக்கி விட்டால் இவன் வருத்தப்படுவான். விலை ஏறிவிட்டாலோ மகிழ்ச்சிகொள்கிறான்.” என்று கூறினார்கள். (முஅத் (ரலி) பைஹகீ).


கூட்டு வியாபாரத்தில் சகதோழரை ஏமாற்றுவது கூடாது!

இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

“வியாபாரம் போன்ற வணிகத்தில், இரண்டு கூட்டாளிகளில் ஒருவர் தன்னுடைய தோழருக்கு மோசடி செய்யாத வரை அவர்களுடன் மூன்றாவது கூட்டாளியாக அல்லாஹ் இருப்பான் ” என்று கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி) அபூதாவூத்).

இது பற்றி அல்லாஹ் தன் திருமறையில் (38:24) வசனத்தில் குறிப்பிடுகிறான்:

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரைத் தவிர, உங்களில் கூட்டுச் சேர்வோரில் அதிகமானோர் ஒருவர் மற்றவர் மீது அநீதி இழைக்கின்றனர்.


வியாபாரத்தில் ஹலால் - ஹராம் பேணுவதை கைவிடல் கூடாது!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் யூதர்களை சபிப்பானாக! என்று மூன்று முறை கூறிவிட்டு, நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் மீது கொழுப்பை ஹராமாக்கினான். அவர்களோ அதை விற்பனை செய்து அதன் பணத்தில் சாப்பிட்டார்கள். அல்லாஹ் ஒரு சமுதாயத்தின் மீது எதை உண்ண ஹராமாக்கினானோ அதனுடைய பணமும் ஹராமாக்கிவிட்டான்” என்று கூறினார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) அபூதாவூத்).

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஹராமின் மூலம் வளர்ந்த சதைக்கு நரக நெருப்பே தகுதியானது” என்று கூறினார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) தப்ரானீ).

நபி (ஸல்) அவர்கள் மேலும் கூறினார்கள்: “ஒரு காலம் வரும். அப்போது மக்கள் தாங்கள் சம்பாதிப்பவை ஹலாலா?ஹராமா? என்பதை பொருட்படுத்தமாட்டார்கள்” என்று கூறினார்கள் (அபூஹுரைரா (ரலி) புஹாரி).

நபி (ஸல்) அவர்கள் கூறிய அந்த காலத்தில்தான் நாம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இன்று ஒரு மனிதன் தான் எந்த வழியில் சம்பாதிக்கிறோம் என்பதை பார்ப்பதில்லை. அவனுடைய நோக்கம் பணம் மட்டும்தான். பணமென்றால் அனைத்தையும் இழக்கத்தயாராகிவிடுகிறான்.


ஏன் நமது துஆ அங்கீகரிக்கப்படுவதில்லை?

சிலருக்கு என்னடா! நாம் அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். ஆனால் நம்முடைய துஆ இதுவரை அல்லாஹ் அங்கீகரிக்கவில்லையே? என்று எண்ணம் தோன்றலாம். அதற்கு என்ன காரணம் தெரியுமா?

நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: “ஒருவனது உடை, உணவு, பானம் ஆகியவை ஹராமானதாக இருக்கும் போது, அவனது துஆ எவ்வாறு அங்கீகரிக்கப்படும்?” என்று கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி) முஸ்லிம்).

நாம் ஹராமான முறையில் சம்பாதித்துவிட்டு பிறகு நமது தேவைக்காக அல்லாஹ்விடம் துஆ செய்தால் அந்த துஆவிற்கு பதிலும் இருக்காது, பலனும் இருக்காது.


நேர்மையான வியாபாரிகளின் நிலை என்ன?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உண்மை பேசி, நாணயத்துடன் நடந்து கொள்ளும் ஒரு வணிகர் மறுமை நாளில் நபிமார்கள், உண்மையாளர்கள், ஷஹீதுகள் ஆகியோருடன் இருப்பார்” என்று கூறினார்கள். (அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) திர்மிதீ).

இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “வியாபாரிகளே! ஷைத்தானும் பாவமும் வியாபாரத்தின் போது ஆஜராகி வருவதால், உங்கள் வியாபாரங்களுடன் தர்மத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். (பரா பின் ஆஸிப் (ரலி) திர்மிதீ, அபூதாவூத்).


இறுதியாக!

அன்பான வியாபாரிகளே! நீங்கள் மக்களின் அன்றாடம் தேவைகளை விற்பனை செய்கிறீகள். ஆனால் உங்கள் வியாபாரத்தில் மோசடி செய்யாதீர்கள்! எது ஹராம்? எது ஹலால் என அறிந்து வியாபாரம் செய்யுங்கள்! அல்லாஹ்வின் மீது பொய்ச் சத்தியம் செய்து பொருளை விற்பனை செய்யாதீர்கள்! விற்பனை பொருளை பதுக்கல் செய்யாதீர்கள்! விற்பனை பொருட்களில் கலப்படம் செய்து அப்பாவி மக்களின் உயிர்களை குடிக்காதீர்கள்! அடுத்தவரின் வியாபாரத்தில் குறுக்கீடு செய்து, பொறாமை கொள்ளாதீர்கள்! கூட்டுத்தொழிலில் சகதோழரை ஏமாற்றாதீர்கள்! உங்களின் வியாபாரங்களுக்கு மத்தியில் அதிகம் தர்மம் செய்யுங்கள்!

ஜாஸ்சகல்லாஹ் கைர் அபூவஸ்மீ

Verstehen Sie Spass - Der verhexte LKW

Friday, June 15, 2012

தொழுகையை விட்டவர் அல்லாஹ்வின் அருட்கொடையை தவற விட்டவராவார்

[ ''அவர்களுக்குப் பின்னர் வழித் தோன்றல்கள் வந்தனர். அவர்கள் தொழுகையைப் பாழாக்கினர். மனோ இச்சைகளைப் பின்பற்றினர். அவர்கள் நஷ்டத்தைச் சந்திப்பார்கள்.'' (19:59)

''திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.'' (19:60)

''பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும்''. (2:45)]

தொழுகைக்கு வெளியில்(தொழாதவர்கள்) வைக்கும் கோரிக்கை இறைவனிடம் அறவே ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது என்பதை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள்.

''யார் ஒருவர் வேண்டுமென்றே தொழுகையை விட்டு விடுகிறாரோ அவர் அல்லாஹ்விடத்திலே எதையும் அடைய இயலாது.'' (இப்னுமாஜா)

ஒருவர் தன்னை ஈன்றெடுத்த தனது தந்தையுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிப்போய் பொருளாதார உதவியை மட்டும் பிறர் மூலம் அவரிடம் கேட்டனுப்பினால் ? அவர் கூறும் பதில் முதலில் அவனை வீட்டுக்கு வரச்சொல்லுங்கள் என்பதாகத்தான் இருக்கும். இருக்க வேண்டும்.

மனம் வருந்தி மகன் தன் வீட்டுக்குள் வந்து விட்டால் அவனுக்குத் தேவையான அனைத்தையும் தந்தை செய்து கொடுப்பார், மறுக்க மாட்டார். மறுக்கக் கூடாது.

மகனின் தேவை நிறைவேற்றப்பட வேண்டுமென்றால் மகன் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்று தந்தை விரும்புவது போல் இறைவன் தன்னுடைய அடியார்களில் தொழாதவர்களை, தொழுகையை விட்டவர்களை மீண்டும் தொழுகையின் மூலம் இஸ்லாத்திற்குள் அழைக்கிறான்.

மனம் வருந்தி மீண்டும் தொழுகையை ஆரம்பித்து அதில் பாவமன்னிப்புக் கோரி, உலக- மறுமைத் தேவைகளைக் கேட்டால் குறைவின்றி வழங்குவதாக இறைவன் வாக்களிக்கிறான்.

''அவர்களுக்குப் பின்னர் வழித் தோன்றல்கள் வந்தனர். அவர்கள் தொழுகையைப் பாழாக்கினர். மனோ இச்சைகளைப் பின்பற்றினர். அவர்கள் நஷ்டத்தைச் சந்திப்பார்கள்.'' (19:59)

''திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.'' (19:60)

இறைவனிடம் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம் தான் என்பதை நாம் அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம். 3:19. இறைவனிடம் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கமாகிய இஸ்லாத்தில் இருந்து கொண்டுதான் இறையருளை எதிர்பார்க்க வேண்டும்.

இஸ்லாமியராக இருக்க வேண்டுமென்றால் தொழுகையாளியாக இருக்க வேண்டும், தொழவில்லை என்றால் இஸ்லாத்திலிருந்து தாமாக வெளியேறக் கூடிய அபாயம் உருவாகும்.

''அவனை நோக்கியே திரும்புங்கள்! அவனை அஞ்சுங்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! தங்களது மார்க்கத்தைப் பிரித்து பல பிரிவுகளாகி விட்ட இணை கற்பித்தோரில் ஆகி விடாதீர்கள்! ஒவ்வொரு கூட்டத்தினரும் தம்மிடம் உள்ளதில் மகிழ்ச்சியடைகின்றனர்.'' (30: 31, 32)

இணை வைத்தல் மற்றும் இறை மறுப்புக்கும் (முஸ்லிமான) அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 116)

தொழுகையை அலச்சியம் செய்துவிட்டு கோடி, கோடியாய் தர்மம் செய்வபர்களும் இஸ்லாத்திலிருந்து தாமாக வெளியNறி விடுவார்கள்.

காரணம் கோடி, கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் அவைகள் இறைவனுக்கு சிரம் பணிவதற்கு நிகராகாது.

ஏன் என்றால்?

அவர் கொட்டும் கோடிகள் அவருக்கு இறைவன் வழங்கிய கோடான கோடிகளில் சில கோடிகள் தான். அவனுக்கு சிரம் பணியாமல் அவன் கொடுத்ததிலிருந்து சிறிதை, சிலதை எடுத்து வழங்கிவிட்டு தொழாமல் இருந்து விடுவதால் அவனது அருட்கொடையையும், பாவமன்னிப்பையும் அடைந்து கொள்ள முடியாது.

அப்துல்லாஹ்வாகவோ, அப்துல்ரஹ்மானாகவோ பெயரளவில் இருந்து கொண்டு அவ்லியாக்கள் மூலம் உதவிதேடும் பரேலவிகள் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடுவதைப் போல் தொழுகையை அலச்சியம் செய்துவிட்டு நன்மையை, ஏவித் தீமையைத் தடுக்கும் ஏனைய அமல்களில் மட்டும் கவனம் செலுத்துவோரும் இஸ்லாத்திலிருந்து வெளியNறி விடுவார்கள்.

அதனால்தான் நோன்பு,ஜகாத்,ஹஜ், போன்ற அனைத்து கடமையான நற்செயல்களையும் அல்லாஹ்வின் அடிமை என்று பிரகடனப்படுத்தும் தொழுகைக்கு அடுத்தநிலைக்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொண்டு வந்தார்கள்.

முதல் கோணல் முற்றும் கோணல்.

அல்லாஹ்வின் அருட்கொடையை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்களுக்கு கடமையாக்கப்பட்ட நற்செயல்களில் முதல் நற்செயல் தொழுகைதான்.

முதல் நற்செயல் அலச்சியம் செய்யப்பட்டுவிட்டால் அதற்கடுத்து வரும் நற்செயல்கள் நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்படலாம்.

மறுமையில் மனிதனின் அமல்கள் பற்றி விசாரிக்கப்படும்போது தொழுகை என்ற அமல் முதலில் விசாரிக்கப்படும் அது சீராக அமைந்து விடுமேயானால் அதற்கடுத்த அனைத்து அமல்களும் சீராகவே அமைந்திருக்கும். தொழுகை என்ற அமல் சீராக இல்லை என்றால் அதற்கடுத்த அனைத்து அமல்களும் சீரற்றதாகவே இருக்கும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு, அவர்கள். ஆதாரம்: ஸூனன் அபூதாவூத்.

தொழுகை முறையாக இருந்து அதற்கடுத்து வரும் கடமையான நற்செயல்களில் எதாதவது குறை இருந்தால் தொழுகையின் மூலம் குவியும் மலைப் போன்ற நன்மைகள் அவற்றை சரி செய்துவிடும்;

தொழுகை முறையாக இல்லாமல் அதற்கடுத்து வரும் நற்செயல்கள் மலைபோல் இருந்தாலும் அவைகள் தொழுகையின் குறையை சரி செய்ய முடியாது காரணம் அவைகள் இறைவனிடம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

அல்லாஹ்வையும், அவனது தூதரையும் மறுத்ததும், சோம்பலாகவே தொழுது வந்ததும், விருப்பமில்லாமல் (நல்வழியில்) செலவிட்டதுமே அவர்கள் செலவிட்டவை அவர்களிடமிருந்து ஏற்கப்படுவதற்குத் தடையாக இருக்கிறது. (9:54)

ஆகவே இறைவனுக்கு சிரம் பணியாமல் இருந்துகொண்டு இறைவன் கொடுத்ததை மட்டும் வாரி இரைத்து நன்மையை அடையலாம் என்று நினைத்தாலும், இறைவனுக்கு சிரம் பணியாமல் இருந்து கொண்டு ஏனைய அமல்களில் மட்டும் ஈடுபட்டு நன்மையை அடையலாம் என்று நினைத்தாலும் அவைகள் விழலுக்கு இரைக்கும் நீர் போன்றதாகும்.

விழலுக்கு நீர் இரைப்பதால் எதையும் அறுவடை செய்து கொள்ள முடியாதோ அதேப்பேன்றே சிரம் பணியாதவரின் ஏனைய நற்செயல்களால் நன்மைகள் விளையாது.

பொறுமையைத் தரும் தொழுகை.

மேற்காணும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படாமல் இஸ்லாத்தில் நீடித்து நிலைக்க வேண்டுமானால்? தொழுகையாளிகளாக இருக்கவேண்டும் தொழுகையின் மூலமே இறைவனிடம் உதவியும், பாவமன்னிப்பும் தேடவேண்டும். 2:45. பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும்.

இறைவனை மறுக்கும் நாத்திகவாதிகளுக்குத் தான் தொழுகையும், பொறுமையும் கடினமாக இருக்கும் என்று அல்லாஹ் மேற்காணும் வசனத்தில் கூறுகிறான்.

இறைவன் இருக்கிறான் என்ற உறுதியான நம்பிக்கையில் உள்ளவர்கள் முஸ்லீம்கள் என்பதால் அல்லாஹ் திருமறையில் பல இடங்களில் நம்பிக்கையாளர்களே! என்று அழைக்கிறான்.

நம்பிக்கையாளர்கள் தொழவில்லை என்றால் மேற்காணும் மறுப்போர் நிலைக்கு தாமாக தள்ளப்பட்டுவிடுவார்கள்.

பொறுமை இல்லாதவர்களுக்கு பூமியே பாரமாகி விடுவதை நம் வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கிறோம்.

தொழுகையாளிகள் தான் விதியின் அமைப்பை நினைத்து தங்களக்கு ஏற்படும் இன்னல்கள், இடர்பாடுகளை சகித்துக் கொள்வார்கள், தொழாதவர்கள் விதியை நொந்துகொண்டு தனக்குத்தானேக் கோரமான முடிவை அவசரப்பட்டு ஏற்படுத்திக் கொள்வார்கள் பொறுமை இல்லாதவர்களை பூமியே வெகு சீக்கிரம் துப்பி வெளியேத் தள்ளிவிடும்.

தொழாமல், அல்லது தொழுகையை இடையில் விட்டு இஸ்லாத்திலிருந்து வெளியேறி இருந்தால் தாமதிக்காமல் தொழுகையின் மூலம் இஸ்லாத்திற்குள் மீண்டும் நுழைந்து கொண்டு அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும், உலக – மறுமைத் தேவைகளை கோரும் பாக்கியசாலிகளாக ஆகிவிடுவதற்கு வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக !

Thursday, June 14, 2012

அனைத்து உலாவிகளுக்குமான ஷொர்ட் கட் கீகள்


அனைத்து உலாவிகளுக்குமான ஷொர்ட் கட் கீகள்
[ வியாழக்கிழமை, 14 யூன் 2012, 02:05.13 மு.ப GMT ]
ஒவ்வொரு உலாவியும் தனக்கென சில கட்டமைப்புகளையும், வழிமுறைகளையும் வைத்துள்ளன. இதற்கான ஷொர்ட் கட் கீ தொகுப்புகளும் அந்த உலாவிக்கே உரித்தானவையாக இருக்கும்.
இருப்பினும் பல ஷொர்ட் கட் கீகள் அனைத்து உலாவிகளும் ஒரே மாதிரியான இயக்கத்தினைத் தருவதாகவே அமைந்துள்ளன.

இவற்றைத் தெரிந்து கொண்டால் நாம் எந்த உலாவியைப் பயன்படுத்தினாலும், எளிதாகவும் வேகமாகவும் செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். அத்தகைய ஷொர்ட் கட் கீ தொகுப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

1. டேப்களுக்கான சில ஷொர்ட் கட் கீகள்:

Ctrl+1-8– இடமிருந்து வலமாக, எண்ணுக் கேற்றபடியான டேப்பில் உள்ள தளத்திற்குச் செல்லும்.

Ctrl+9 – கடைசி டேப்பிற்குச் செல்லும்.

Ctrl+Tab – அடுத்த டேப்பிற்குச் செல்லும். அதாவது அப்போது இருக்கும் டேப்பிற்கு வலதுபுறம் உள்ள டேப்பிற்குச் செல்லும்.

இந்த செயல்பாட்டினை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவியை தவிர, மற்ற உலாவிகளில்,

Ctrl+Page Up கீ தொகுப்பு செயல்படுத்தும்.

Ctrl+Shift+Tab –முந்தைய டேப்பிற்குச் செல்லும். அதாவது அப்போது உள்ள டேப்பிற்கு இடது புறம் உள்ள டேப்பிற்குச் செல்லும். இந்த செயல்பாட்டினை, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவியைத் தவிர மற்ற உலாவிகளில் Ctrl+Page Down கீ தொகுப்பு செயல்படுத்தும்.

Ctrl+W, Ctrl+F4– அப்போதைய டேப்பினை மூடும்.

Ctrl+Shift+T– இறுதியாக மூடிய டேப்பினைத் திறந்து தளத்தைக் காட்டும். இப்படியே இந்த கீகளை அழுத்த, அழுத்த, முந்தைய மூடப்பட்ட டேப்களில் உள்ள தளங்கள் திறக்கப்படும்.

Ctrl+T– புதிய டேப் திறக்கப்படும்.

Ctrl+N– புதிய பிரவுசர் விண்டோ ஒன்று திறக்கப்படும்.

Alt+F4– அப்போதைய விண்டோ மூடப்படும். உலாவிகளில் மட்டுமின்றி, அனைத்து அப்ளிகேஷன்களிலும் இந்த கீ தொகுப்பு இதே செயல்பாட்டினை மேற்கொள்ளும்.

2. மவுஸ் சார்ந்த ஷொர்ட் கட் கீ தொகுப்புகள்:

Middle Click a Tab– டேப்பில் கர்சரைக் கொண்டு சென்று, மவுஸின் நடுமுனையைக் கிளிக் செய்தால், டேப் மூடப்படும்.

Ctrl+Left Click, Middle Click –பின்னணியில் இயங்கும் டேப்பில், லிங்க் ஒன்றைத் திறக்கும்.

Shift+Left Click– லிங்க் ஒன்றில் கிளிக் செய்திட, அதற்கான தளம் புதிய உலாவி விண்டோவில் திறக்கப்படும்.

Ctrl+Shift+Left Click– லிங்க் ஒன்றில் கிளிக் செய்திட, தொடர்புடைய தளம் புதிய முன்புறமான டேப்பில் திறக்கப்படும்.

3. பிரவுசரில் உலா வருதல்:

Alt+Left Arrow, Backspace– பின் நோக்கிச் செல்ல.

Alt+Right Arrow, Shift+Backspace – முன் நோக்கிச் செல்ல.

F5– மீண்டும் தொடக்கத்திலிருந்து தளத்தை இறக்கித் தர.

Shift+F5 – தளத்தை இறக்குவதுடன், கேஷ் மெமரியை ஒதுக்கித் தரும். இணைய தளம் முழுமையும் புதியதாக இறக்கித் தரப்படும்.

Escape – தளம் இறக்கம் செய்வது உடனடியாக நிறுத்தப்படும்.

Alt+Home – ஹோம் பேஜ் எனக் குறிக்கப்பட்ட தளம் திறக்கப்படும்.

4. பெரிதாக்குதல்:

Ctrl and +, Ctrl+Mousewheel Up – ஸூம் என்ற வகையில் தளக் காட்சி பெரிதாக்கப்படும்.

Ctrl and -, Ctrl+Mousewheel Down – ஸூம் என்ற வகையில் தளக் காட்சி சிறிதாக்கப்படும்.

Ctrl+0 – மாறா நிலையிலான அளவில் தளம் காட்டப்படும்.

F11– மொனிட்டரின் திரையில் முழுக் காட்சி காட்டப்படும்.

5. மவுஸ் உருளை உருட்டுதல்:

Space, Page Down– தளத்தின் ஒரு பிரேம் கீழாகச் செல்லும்.

Page Up– ஒரு பிரேம் மேலாகச் செல்லும்.

Home – தளத்தின் பக்கத்தின் தொடக்கத்திற்குச் செல்லும்.

End – தளத்தின் பக்கத்தின் கீழ்ப் பகுதிக்குச் செல்லும்.

Middle Click – மவுஸ் கர்சர் வேகமாக, திருப்பும் திசைக்கேற்ப, கீழாகவோ, மேலாகவோ செல்லும்.

6. அட்ரஸ் பார்:

Ctrl+L, Alt+D, F6– அட்ரஸ் பாருக்கு கர்சர் இயக்கம் செல்லும், இதில் டைப் செய்திட ஏதுவாக.

Ctrl+Enter – www. என்பதை முன்னாலும், .com என்பதனைப் பினாலும் இணைக்கும்.

Alt+Enter – அட்ரஸ் பாரில் உள்ள முகவரிக்கான தளத்தினை புதிய டேப்பில் திறக்கும்.

7. தேடல்:

Ctrl+K, Ctrl+E – உலாவியில் உள்ள சர்ச் பாக்ஸ் உள்ளே கர்சர் இயக்கம் செல்லும். உலாவிக்கென சர்ச் பாக்ஸ் இல்லை என்றால், அட்ரஸ் பாருக்குச் செல்லும். (இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், Ctrl+K செயல்படுவதில்லை, அதற்குப் பதிலாக அதே செயல்பாட்டினை Ctrl+E என்ற கீகள் செயல்படுத்தும்)

Alt+Enter – புதிய டேப் திறக்கப்பட்டு, சர்ச் பாக்ஸில் தேடல் தொடங்கும்.

Ctrl+F, F3 – அப்போதைய பக்கத்தில் தேடலைத் தொடர, அந்தப் பக்கத்தில் உள்ள சர்ச் பாக்ஸைத் திறக்கும்.

Ctrl+G, F3 – தேடப்படும் சொல் இடம் பெறும் அடுத்த இடம் கண்டறியப்படும்.

Ctrl+Shift+G, Shift+F3– தேடப்படும் சொல் இடம் பெறும் முந்தைய இடம் கண்டறியப்படும்.

8. ஹிஸ்டரி மற்றும் புக்மார்க்ஸ்:

Ctrl+H – பிரவுசிங் ஹிஸ்டரி திறக்கப்படும்.

Ctrl+J– டவுண்லோட் ஹிஸ்டரி திறக்கப்படும்.

Ctrl+D – அப்போதைய இணையதளம் புக்மார்க் செய்யப்படும்.

Ctrl+Shift+Del – பிரவுசிங் ஹிஸ்டரியை அழிப்பதற்கான விண்டோ திறக்கப்படும்.

9. மற்ற செயல்பாடுகள்:

Ctrl+P– அப்போதைய தளப் பக்கத்தினை அச்செடுக்கும்.

Ctrl+S – உங்கள் கணணியில், அப்போதைய தளம் கோப்பாக பதியப்பட்டு சேவ் செய்யப்படும்.

Ctrl+O –உங்கள் கணணியில் இருந்து ஒரு கோப்பு திறக்கப்படும்.

Ctrl+U– அப்போதைய தளப்பக்கத்திற்கான, சோர்ஸ் கோட்(source code) திறக்கப்படும். (இது இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் திறக்கப்பட மாட்டாது)

உப்பு ஒரு Slow Poison


சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், சர்க்கரை என்பதே வெள்ளை நஞ்சாக கருதப்பட்டு வருகிறது. ஆனால் மற்றொரு வெள்ளை அபாயம் இருப்பது நம்மில் பலருக்குத் தெரியாது அது – உப்பு.

எவ்வளவு ருசியாகச் சமைத்தாலும் உப்பில்லாவிட்டால் அதை வாயில் வைக்க முடியாது என்பது உண்மைதான். அதே நேரம், உப்பு அளவுக்கு அதிகமாகும்போதும் பல உபத்திரவங்களை அளித்துவிடும். உங்கள் உடம்பில் உப்பு அதிகரித்தால், அதிகமான தண்ணீரை உடம்பு சேர்த்து வைத்துக் கொள்ள ஆரம்பிக்கும். அப்போது உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகப் பிரச்சினைகள், சிறுநீரகக்கற்கள் ஏன் பக்கவாத பாதிப்பு கூட ஏற்படும். அதிகமான உப்பு, ரத்தக் குழாய்களில் படிந்து, சீரான ரத்த ஓட்டத்துக்குத் தடையை ஏற்படுத்துவதே முக்கிய காரணம்.

இந்த அடைப்பு நீடிக்கும் போது இதய நோய்கள், மாரடைப்பு போன்ற ஆபத்துகள் அடுத்து வரும். 32 நாடுகளில் 10 ஆயிரம் பேர் அன்றாடம் உணவின் மூலம் எடுத்துக் கொள்ளும் உப்பின் அளவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், அன்றாடம் 6 கிராம் உப்பு அதிகமாக எடுத்துக் கொண்டாலும் அது உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துவதைக் கண்டுபிடித்தனர். அது இதய நோய்களின் அடித்தளமாகவும் அமைகிறது என்பதை அறிந்தனர். பரம்பரை ரீதியாக இதய நோய் பிரச்சினைகள் இல்லா விட்டாலும் அன்றாட உப்பு அளவில் கவனம் வைப்பது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.

salt_370உணவில் அதிகமாக உப்புப் போட்டுக் கொள்ளும் வழக்கம் எனக்கில்லையே என்று நீங்கள் கூறலாம். ஆனால் நீங்கள் சாப்பிடும் நொறுக்குத் தீனிகளில் உப்பு அதிகமாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. உங்களுக்கு அடிக்கடி குடும்பத்துடன் துரித உணவகங்களில் சாப்பிடும் வழக்கம் இருந்தால் அதன் மூலமும் கூடுதல் உப்பு உங்களுக்குள் செல் கிறது. உடனடி உணவுகளிலும் பேக்கிங் செய்யப் பட்டு வரும் உணவுகளிலும் அவற்றைக் கெடாது பாதுகாக்கும் ‘பிரிசர்வேட்டிவ்’ ஆக உப்பு பயன் படுத்தப்படுகிறது.

பாக்கெட் பாப்கார்ன், ஊறுகாய், சாஸ் பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் உப்பு அதிகம். கடைகளில் கிடைக்கும் பாலாடைக்கட்டி, வெண்ணெய் போன்ற வற்றில் கூட உப்பு இருக்கிறது. இப்படி பெரும்பாலான உணவுப் பொருட்களில் உப்பு சேர்க்கப்படு வதற்குக் காரணம் அது எளிதாகவும், மலிவாகவும் கிடைக்கும் பாதுகாப்புப் பொருள் என்பதுதான். சரி, உப்பினால் ஏற்படும் உபத்திரவங்களைத் தவிர்ப்பது எப்படி? உடம்பிலிருந்து நச்சுக் கழிவுகளை எல்லாம் வெளியேற்றும் வகையில் நிறைய தண்ணீர் குடியுங்கள்.

• காரசாரமான நொறுக்குத் தீனிகள், ஊறுகாய் போன்றவற்றைத் தவிருங்கள்.

• துரித உணவுகளைத் தவிர்த்து, வீட்டு உணவை விரும்புங்கள்.

• நிறைய காய்கறிகள், பழங்கள் சாப்பிடுங்கள். உடம்புக்குத் தேவையான நீர்ச்சத்தை அவை
அளிக்கும்.

• உடம்பில் தண்ணீர் தேக்கம் ஏற்படுவதால் நச்சுகளின் அதிகரிப்பை நீராவிக் குளியல் போன்றவை மூலம் போக்கலாம்.

• பேக்கிங் உணவுகளில் உப்பு சேர்க்கப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள். சோடியம் குளோரைடு என்று குறிப்பிட்டிருப்பதால் நாம் அதைக் கவனிக்காமல் போகலாம்.

• உப்பைக் குறைத்து சுவையைக் குறைக்காமல் சமைக்கும் முயற்சிகளில் ஈடுபடுங்கள். அதற்கேற்ப நறுமணப் பொருட்கள் போன்றவற்றைச் சேருங்கள்.

Wednesday, June 13, 2012

விடுதலைப்போரில் வீரமங்கையர் பேகம் ஹஜ்ரத் மஹல் பற்றிய வரலாற்று தகவல் !!!!


ஆங்கிலேயர்களைக் கூண்டோடு அழித்துவிடவேண்டும் என்று ஆண்டவனைத் தொழும்படி முஸ்லிம் தாய்மார்கள் குழந்தைகளிடம் கூறியதை நான் நேரில் கேட்டேன்.- டில்லி மன்னர் மீது நடந்த வழக்கு சாட்சியத்தின் போது ஆங்கில மாது ஆல்ட்வெல் கூறியது. (* வீரசாவர்க்கர்,எரிமலை,பக்கம்.61)

பேகம் ஹஜ்ரத் மஹல்


1857 - இல் மாமன்னர் பகதுர்ஷா ஜஃபர் தலைமையில் இந்திய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக ஒருங்கிணைந்த போது, அதில் அரசாண்ட இரண்டு வீரமங்கையர் இருந்தனர். ஒருவர் ஜான்சிராணி லக்குமிபாய், மற்றொருவர் உத்திரப்பிரதேசத்தில் ஒளத் (Outh) என்ற குறுநிலப்பகுதியை ஆண்ட பேகம் ஹஜ்ரத் மஹல் ஆவார்.

பேகம் ஒளத் (Begum of Outh / Oudh / Awadh) என்று இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு சில வரிகளில் எழுதிச் செல்லும் ஹஜ்ரத் மஹலின் வீரம் - தேசாபிமானம் - தியாக அர்ப்பணிப்பு ஆகியன ஒரு வீர வரலாற்றுக்கும் விரிவாகப் பேசப்பட வேண்டிய வரலாற்றுக்கும் உரியதாகும்.

ஒளத் நவாபான வஜீத் அலிஷாவை ஆங்கிலேயர் சிறைப்படுத்தி வைத்திருந்தனர். அவரது புதல்வாரன இளவரசர் பிரிஜிஸ் காதிரைச் சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிம்மாசனத்தில் ஏற்றினர். பிரிஜிஸ் காதிர் சிறுவராக இருந்த காரணத்தினால் ஒளத் நிர்வாகம் அவரது பிரதிநிதி என்ற முறையில் அவரது தாயாரான ராணி ஹஜ்ரத் மஹலிடம் ஒப்படைக்கப்பட்டது.

... குழப்பமான நிலையிலும் உறுதியும் திறமையும் துணிச்சலும் வாய்ந்த பேகம் நிர்வாக்தை ஒழுங்காக நடத்தி வந்ததிலிருந்து அவரது இணையற்ற பெருமை வெளியாகிறது. அவருடைய நிர்வாக சார்த்தியத்தை ஆங்கில சரித்திர ஆசிரியர்களும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.*

1857 - இல் சிப்பாய் கலகம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் பேகம் தனது படையுடன் சென்று லக்னோ பிரிட்டீஷ் தூதரகத்தை முற்றுகை இட்டார். அங்கிருந்த பிரிட்டீஷ் தூதுவர்கள் சிறைப் பிடிக்கப்பட்டனர். தூதரகத்தை இடித்து தரைமட்டமாக்கினார்.

பேகத்திற்கு மக்கள் மத்தியிலும் வீரர்கள் மத்தியிலும் மிகுந்த செல்வாக்கு இருந்தது. அவர் தலையின் கீழ் திரண்ட புரட்சியாளர்கள் இரண்டு லட்சம் பேர் என்றும்: ஆங்கிலேயர்களை அவர் எதிர்த்த இறுதி யுத்தத்தில் பதினாயிரக்கணக்கில் வீரர்கள் வந்தனரென்றும் ஆங்கில சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.**

பிரிட்டீஷ் படைப் பிரிவுகளில் பணியாற்றிய சிப்பாய்கள் மத்தியில் பேகத்திற்கு மிகுந்த ஆதரவு இருந்தது. இதனால் பேரக்பூரில் இருந்த 34 � வது படைப் பிரிவை ஆங்கில அரசு கலைத்து விட்டது. ஏனென்றால் அப்படைப்பிரிவில் இருந்த பெரும்பான்மையான சிப்பாய்கள் ஒளத் பகுதியைச் சார்ந்தவர்கள்.***

(*மேற்படி.,பக்கம்.253.) - (** மேற்படி,.பக்கம்.354-355) - (*** R.c. AgarWal, Constitution Develapment of India and National Movement, P.43,53)

1858 மார்ச் 6 � ஆம் தேதி 30 ஆயிரம் துருப்புகளுடன் வந்த மேஜர் காலின் படையோடு ஐந்துநாட்கள் தொடர்யுத்தம் நடத்தினார். இப்போரில் மாமன்னர் இளவல்களின் தலைகளைக் கொய்த மேஜர் ஹட்ஸன், பேகத்தின் வீரர்களால் கொல்லப்பட்டான். ஆங்கிலப் பெரும்படையின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் தனது ஆதவாளர்களுடன் ஒளத்தை விட்டுவெளியேறினார். பிதாவ்லியில் முகாமிட்டிருந்த பேகத்தை ஆங்கிலப் படை தொடர்ந்து வந்து விரட்டியது. அவர் தன் ஆதரவாளர்களுடன் நேபாளத்திற்குள் தலைமறைவானார்.

பேகத்தின் ஆட்சியையும் அரசுடைமைகளையும் சொத்துக்களையும் ஆங்கில அரசு பறிமுதல் செய்தது. மற்ற நவாபுகள், மன்னர்கள் போல் ஆங்கிலேயருக்கு மானியங்களை வழங்கி, அவர்களது நிர்ப்பந்தங்களுக்கு ஒத்துப் போயிருந்தால் நிம்மதியாக சகல சௌபாக்கியங்களுடன் அவர் ஆட்சி நடத்தியிருக்கலாம். ஆனால் மண்ணடிமை தீர ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அவர் குரல் கொடுத்ததால் இந்நிலைக்கு ஆளானார். தேசத்தின் விடுதலைக்காக தன் ஆட்சி அதிகாரங்கள் அனைத்தையும் இழந்து நாட்டை விட்டே வெளியேறும் நிலைக்காளான பேகம் ஹஜ்ரத் மஹலின் தியாகங்கள் நெஞ்சைக் கனக்கச் செய்வனவாகும்.

போர்க்களம் முதல் போராட்டக்களம் வரை

பேகம்ஹஜ்ரத் மஹலின் சமகாலத்தில் ஜான்ஸிராணியுடன் பிரிட்டீஷாருக்கு எதிராகப் போர்க்களத்தில் வாளேந்தி நின்ற மற்றொரு வீரமங்கை ஹஸன் மஹ்பர் பேகம். ஜான்ஸியின் ஒரு படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கிய மஹ்பர், 1858 ஜுன் 18 - இல் நடைபெற்ற குவாலியர் யுத்தத்தில் ஜானஸியுடன் வீர மரணம் அடந்தார்.*

1938 - இல் ஹிந்து � முஸ்லிம் ஒற்றுமைக்காக பம்பாயில் காந்திஜியும் முகம்மதலி ஜின்னாவும் சந்தித்துப் பேச ஏற்பாடபயிற்று. ஜின்னாவைச் சந்திக்க வந்த ஒரு பெண்ணும் வந்திருந்தாள். ஜின்னாவின் இல்லத்தில் மூன்று மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தை முடிந்த பின் காந்திஜி பத்திரிகை நிரூபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்பேட்டியில்:
என்னிடம் அத்தியந்த பிரேமை வாய்ந்த பெண்ணொருத்தி இருக்கிறாள். ஹிந்து-முஸ்லிம்ஒற்றுமைக்காக அவள் தன் உயிரையும் சந்தோசமாகக் கொடுப்பாள். - என்று கூறியவர். தன் அருகில் நின்ற அப்பெண்ணை நிருபர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அப்பெண்தான் குமாரி அமாதுல் ஸலாம்.** என் தோள்களின் மீது இரண்டு சிங்கங்கள் அமர்ந்திருக்கின்றன � என்று காந்திஜியால் வருணிக்கப்பட்ட அலி சகோதரர்களின் தாயாரான ஹாஜியா ஆலாஜிபானு என்ற ஃபீயம்மாள் தான், கைராட்டையில் நூற்ற நூலால் நெய்யப்பட்ட ஆடைக்கு கதர் என்று பெயரிட்டவர். தன் கையால் நெய்த துணியைக் காந்திஜிக்கு அளித்து, இதனைக் கத்ராக (கௌரவமாக) ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். அன்றிலிருந்து தான் அந்த ஆடைக்கு கதர் ஆடை என்ற பெயர் வந்தது.

சுதேசி இயக்கத்தின் கலாச்சார அடையாளமான துணிக்கு �கதர்� என்று பெயரிட்டவர் ஒரு முஸ்லிம் தாய் என்ற பெருமை நம் போராட்ட வரலாற்றுக்கு உண்டு.

இவ்வாறு போர்க்களம் முதல் போராட்டக்களம் வரை இஸ்லாமியப் பெண்கள் பலர் தங்களைத் தேச விடுதலைக்காக அர்ப்பணித்துள்ளனர். (* B.L. Grover, S. Grover, A New Look At Modern Indian History, P.268.). - (** தினமணி, 29.04.1938., மறுபிரசுரம்: 29.04.1977.)

Tuesday, June 12, 2012

உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை

குறைந்த கலோரி மற்றும் நிறைய புரதச்சத்து இருக்கிற காய்கறி மற்றும் பழங்களை சாப்பிட்டு வந்தாலே உடல் எடை குறைவதோடு உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும் என தெரியவந்துள்ளது.

ஏனென்றால் டயட்டில் இருக்கும் போது நிறைய காய்கறி மற்றும் பழங்களை சாப்பிட்டால் எடை குறைவதோடு, புற்றுநோய், சிறுநீரகக்கல், இதய நோய், நீரிழிவு போன்ற நோய்கள் வராமல் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

சுரைக்காய் ஜூஸ்: இதில் இரும்பு மற்றம் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்தால் எடை குறைவதோடு, உடலுக்கு பளபளப்பைத் தரும்.

தர்பூசணி ஜூஸ்: இதில் அதிக வைட்டமின்கள் உள்ளன. இது குடிப்பதால் உடல் எடை குறைவது மட்டுமல்லாமல், இதய நோய்க்கும் மிகச் சிறந்தது.

ஆரஞ்சு ஜூஸ்: இதில் அதிக புரதச்சத்தும், குறைந்த கலோரியும் இருப்பதால் உடல் எடை குறைவதற்கு மிகச் சிறந்த பானம். இதிலுள்ள வைட்டமின் சி உடலுக்கு நிறமும் தருகிறது. மேலும் இதைக் குடிப்பதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் பிட் ஆகும்.

கேரட் ஜூஸ்: இந்த ஜூஸ் குடிப்பதால் கண்களுக்கு நல்லது. மேலும் இதை தினமும் குடித்தால் உடலுக்கு நிறத்தை தருவதோடு, உடல் எடையும் குறையும்.

திராட்சை ஜூஸ்: இது ஒரு சுவையான பழச்சாறு. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் உடலில் உள்ள கொழுப்புக்கள் எளிதாக குறைந்து உடல் எடை குறைந்துவிடும். மேலும் இது சிறுநீரகக் கோளாறு, இதய நோய், ஆஸ்துமா, செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகளை போக்குகிறது.

ஆகவே கஷ்டப்பட்டு எடை குறைக்காமல், ஈஸியாக இந்த இயற்கை பானங்களை அருந்தி எடையை குறையுங்கள்.

Monday, June 11, 2012

தமிழ் நாட்டில் பார்க்கவேண்டிய இடம் பிச்சாவரம் !!!

பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் வெளிநாட்டினர் உட்பட 4 லட்சத்து 61 சுற்றுலா பய ணிகள் வந்ததன் மூலம் அரசுக்கு 2 கோடியே 4 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பிச்சா வரத்தில் வன சுற்றுலா மையம் உள்ளது. 1,358 ஹெக்டர் பரப்பில் சதுப்பு நிலக் காடுகளில் 4,444 கால்வாய் திட்டுகளும், நீர் முள்ளி, நரி, வெண்,சிறு, கருங்கண்டன் என18 க்கும் மேற்பட்ட வகையான மூலிகைத் தாவரங்கள் நிறைந்துள்ளன. இயற்கை சீற்றங்களை தடுக்கும் அர ணாக இக்காடுகள் அமைந் துள்ளது. மூலிகை தன்மை யுள்ள காற்றை சுவாசிப் பதால் பல்வேறு நோய்கள் குணமடைகிறது. காடுகளை பாதுகாக்க 1984 ஜூன் 16ல், 5 ஏக்கர் பரப்பில் 6 படகுகளுடன் சுற்றுலாத் தலமாக துவங் கப்பட்டது. 1987 மார்ச் 13ல் தமிழ்நாடு ஓட்டல், காடு களின் நடுவில் 6 காட் டேஜ், 20 கட்டில், 2 டார் மென்டரியுடன் தங்கும் விடுதி அமைக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்ததைத் தொடர்ந்து கூடுதல் பட குகள், சிறுவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அரிய வகை சிற்பங்கள் அமைக்கப்பட்டது.

சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதில் சுற்றுலா பயணிகள் வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க குடை பிடித்தும் ,தொப்பிகள் அணிந்து ஆனந்தமாக படகு சவாரி செய்து வருகின்றனர்.

இங்குள்ள மாங்குரோவ் காடுகள் என்னும் சதுப்பு நில காட்டில் 4 ஆயிரம் வாய்க்கால்கள் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால்கள் வழியாக படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் காடுகளை ரசித்து வண்ணம் உள்ளனர். காடுகளுக்கு நடுவே சிறிய வாய்க்காலில் படகில் சென்று மாங்குரோவ் மரங்களை தொட்ட படி பயணம் செய்வது மனத்திற்கு மகிழ்ச்சியை தருகிறது.

தற்போது அக்னி வெயில் கொளுத்திவருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வெயிலில் இருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்பிரதேசங்களுக்கு சென்று வருகின்றனர்.ஆனால் அங்கு நடுத்தர மக்கள் சென்று வர முடியாது. இவற்றிற்கான செலவு அதிகம் என்பதால் நடுத்தர மக்கள் அங்கு செல்வதில்லை.இருப்பினும் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு ஊட்டியாகவும், கொடைக்கானல் ஆகவும் இந்த பிச்சாவரம் சுற்றுலா மையம் அமைந்துள்ளது.

காடுகளை படகு மூலம் ரசிப்பதற்காக சுற்றுலா துறை சார்பில் 38 துடுப்பு படகுகளும், 8 மோட்டார் படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. துடுப்பு படகில் ஒரு நபருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.40 வசூல் செய்யப்பட்டு வருகிறது.மோட்டார் படகில் 8 பேர் பயணம் செய்யலாம். இதில் 1 மணி நேரத்திற்கு 8 பேருக்கு ரூ.1200 வசூ லிக்கப் பட்டு வருகிறது. இதே படகில் 2 மணி நேரத்திற்கு சவாரி செய்ய ரூ.2 ஆயிரம் வசூலிக்கப் படுகிறது.படகு சவாரி செய்ய குறைந்த கட்டணமே வசூல் செய்வதால் இங்கு அனைத்து தரப்பு மக்களும் எளிதில் வந்து செல்கின்றனர்.

பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு சிதம்பரத்தில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது. கடலூரிலிருந்து பரங்கிப்பேட்டை வழியாகவும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் எளிதில் இந்த சுற்றுலா மையத்திற்கு செல்ல முடியும்.கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 12 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.கடந்த மே மாதம் 24 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.தற்போது மே மாதம்( 5-ந் தேதி )நேற்று வரை 3 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இந்த சுற்றுலா மையத்திற்கு வருகை தந்துள்ளனர்.இன்னும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சுற்றுலாத்துறை மேலாளர் ஹரி கரன் தெரிவித்தார்

Sunday, June 10, 2012

வெள்ளைப்படுதா? வெள்ளை நோயின் பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபட??

வெள்ளைப்படுதா? உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்துங்க!

பெண்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கும் அம்சம் வெள்ளைப்படுதல். இதனால் மன அழுத்தமும், வேறு எந்த விசயத்திலும் கவனம் செலுத்த முடிவதில்லை. உடல் உஷ்ணத்தினால் ஏற்படும் இந்த வெள்ளைப்படுதலுக்கு இயற்கையிலே மருந்திருக்கிறது என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

பொதுவாக ஒரு சில பெண்களுக்கு பூப்பெய்திய காலம் தொட்டே வெள்ளைப் படுதல் இருக்கும். ரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்நோய் அதிகமாக காணப்படும். அதிக உஷ்ணம், மேகவெட்டை போன்றவற்றாலும் இந்நோய் உண்டாகும்.

தூக்கமின்மை, மனக்கவலை, கல்லீரல் பாதிப்பு போன்றவற்றாலும் இந்நோய் ஏற்படும். சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழித்தால் கூட இந்த நோய் பரவ வாய்ப்புண்டு.

அதீத சிந்தனை, காரம், உப்பு மிகுந்த உணவு அருந்துதல் போன்றவற்றாலும் இந்நோய் உண்டாகும்.அதிக மன உளைச்சல், மன பயம், சத்தற்ற உணவு போன்றவற்றால் வெள்ளைப் படுதல் உண்டாகிறது.

இதனை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் மிகப் பெரிய நோய்களுக்கு இது அடித்தளமாக அமைந்துவிடும். எனவே இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம்.

தலைவலி

வெள்ளைப் படும் காலங்களில் உடல் சோர்வு, அடிவயிறு வலி, கை கால் வலி உண்டாகுதல். இடுப்பு வலி, முதுகு வலி போன்றவை உண்டாதல். வெள்ளைப்படும் இடங்களில் அரிப்பு, எரிச்சல் உண்டாதல். சிறுநீர் மிகுந்த எரிச்சலுடன் வெளியேறும் என்கின்றனர் மருத்துவர்கள்

உஷ்ணமான உணவு

வெள்ளைப்படுதலை தவிர்க்க உடலுக்கு வெப்பத்தை உண்டாக்கும் உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

எண்ணெய் தேய்ங்க

அதிக காரம், புளிப்பு, உப்பு இவற்றை குறைக்க வேண்டும்.உணவில் வெண்ணெய், பால், மோர் போன்ற உணவுப் பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உடலை நன்கு சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். உடல் சூட்டை குறைக்க தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இது மனது தொடர்பான விசயம் என்பதால் பயம், மன உளைச்சல் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.

மணத்தக்காளி சூப்

இந்த வெள்ளைப் படுதல் நோயை குணப்படுத்த வீட்டிலே மருந்துள்ளன. மணத்தக்காளி கீரை சூப் சிறந்த மருந்தாக செயல்படுகிறது. மணத்தக்காளியுடன், பூண்டு, மிளகு, சின்னவெங்காயம், சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து சூப் வைத்து குடிக்கலாம். இதனால் உஷ்ணம் குறையும், வெள்ளைப்படுதல் குணமாகும்.

அருகம்புல்

ஓரிதழ் தாமரை இலைகளை நன்கு நீர்விட்டு அலசி அரைத்து எலுமிச்சம் பழம் அளவு உருண்டை எடுத்து காய்ச்சாத பசும் பால் அல்லது வெள்ளாட்டுப் பாலில் கலந்து காலையில் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் எளிதில் குணமாகும்.

அருகம்புல்லை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி 4 குவளை நீரில் கொதிக்க வைத்து அது நன்கு வற்றிய உடன் அதனுடன் மிளகுத்தூள் தேவையான அளவு பனங்கற்கண்டு கலந்து காலை, மாலை இருவேளையும் 15 நாட்கள் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.

இதனை முறையாக செய்து அருந்தினால், வெள்ளை நோயின் பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபடலாம் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்

செவிகளைப் பேணுவோம்!
*************************
இறைவன் மனிதனுக்கு எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கியுள்ளான். மனிதர்களின் நல்வாழ்விற்காக வெளியுலகில் ஏராளமான அருட்கொடைகளை வழங்கியிருப்பதை போன்று மனிதனுக்குள்ளாகவும் பல அருட்கொடைகளை பரிசளித்திருக்கின்றான். அந்த வகையில் மனித உடலுறுப்புகளில் அழங்கரித்து கொண்டிருக்கும் இரு செவிகள் மிகச் சிறந்த அருட்கொடையே.

செவிகள் மூலம் தான் பிறரின் பேச்சுக்களை, உரையாடல்களை நாம் செவியேற்கின்றோம். அவைகளுக்கு தகுந்தாற் போல பதிலளிக்கிறோம். கல்வியை பெறுவதற்கும் இவைகளே முதன்மை காரணமாய், சாதனமாய் திகழ்கின்றன. இவ்வளவு ஏன்? சத்தியக் கொள்கை உட்பட எந்த ஒரு கருத்தும் நமது உள்ளத்தை போய் சென்றடைவதற்கு இவைகளின் துணையையே நாடுகின்றோம்.

செவிப்புலன்களுக்கு என்று தனியாக விசாரணை உண்டு என இறைவன் கூறுவது அவைகள் மிக உன்னதமான அருட்கொடை என்பதை உறுதிப்படுத்துகின்றது.

உமக்கு அறிவு இல்லாததை நீர் பின்பற்றாதீர்! செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை. (அல்குர்ஆன் 17:36)
இந்த வசனம் செவிப்புலன்கள் மிகவும் சிறந்த அருட்கொடை என்ற தகவலை சொல்வதோடு, அவைகளை சரியான முறையில் நாம் பேண வேண்டும் என்ற எச்சரிக்கையையும் விடுக்கின்றது. அவைகளின் மூலம் நாம் எதை செவியுற்றோம், எவற்றுக்காக அவற்றை பயன்படுத்தினோம் என்று நம்மிடத்தில் விசாரிக்கப்படும். ஆனால் இஸ்லாமியர்களில் பலர் ஏனைய உடலுறுப்புகளை (நாவு, மறைஉறுப்பு) பாதுகாப்பதில் முக்கியத்துவம் வழங்கினாலும் செவிப்புலன்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவது கிடையாது. இவற்றால் செய்யும் தீமைகளை தீமைகளாகவே கருதுவது கிடையாது. எனவே நாவு, மறைஉறுப்பு போன்றவற்றை பாதுகாப்பதில், பேணிநடந்து கொள்வதில் வழங்கும் முக்கியத்துவத்தை போன்று நமது செவிப்புலன்களை பாதுகாக்கும் விஷயத்திலும் வழங்க வேண்டும்.

குர்ஆனை செவியேற்போம்

செவிப்புலன்களின் மூலம் நாம் செய்யும் வணக்கங்களில் தலையானது திருக்குர்ஆனை செவியேற்பதாகும். குர்ஆன் வசனங்களை ஓதுவது ஒரு எழுத்திற்கு பத்து என்கிற வீதம் நமக்கு நன்மைகளை பெற்றுத்தரும். குர்ஆன் வசனங்களை செவியேற்பது இதற்கு ஈடாக நன்மைகளை பெற்றுத்தராது என்றாலும், அதிமான நன்மைகளை பெற்றுத்தரவே செய்யும். நாம் இறைவனது அருளை பெறுவதற்கு திருக்குர்ஆன் வசனங்களை செவிதாழ்த்தி கேட்பதும் ஒரு காரணமாக அமைகின்றது.

குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்! (அல்குர்ஆன் 7:204)

அது போக பிறர் ஓதி இறைவசனங்களை நாம் கேட்பது இறைவனால் மிகவும் விரும்பத்தக்க காரியமே. எனவே தான் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இவற்றை மிகவும் விரும்பி வந்தார்கள்.

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம், "எனக்குக் குர்ஆனை ஓதிக் காட்டுங்கள்" என்று சொன்னார்கள். நான், "தங்கள்மீதே குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்" என்று சொன்னார்கள். ஆகவே, நான் அவர்களுக்கு ‘அந்நிசா’ எனும் (நான்காவது) அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். "ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும்போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டு வரும்போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?" எனும் (4:41ஆவது) வசனத்தை நான் அடைந்தபோது ‘தலையை உயர்த்தினேன்’ அல்லது ‘எனக்குப் பக்கத்திரிருந்த ஒருவர் என்னைத் தொட்டுணர்த்தியபோது நான் தலையை உயர்த்தினேன்’. அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்ததைக் கண்டேன். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 1465)
நபிகளார் அவர்கள் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை குர்ஆனை ஓதச் சொல்லி, சூரத்துன் நிஸாவில் சுமார் 40 வசனங்களை ரசித்து கேட்டிருக்கின்றார்கள். அந்த ஸஹாபி ஆட்சேபிக்கும் போது பிறரிடமிருந்து கேட்பதை மிகவும் விரும்புவதாக குறிப்பிடுகின்றார்கள். எனவே நாமும் திருக்குர்ஆன் வசனங்களை அதிமதிகம் செவியேற்பவர்களாக மாற வேண்டும்.

வீணானவற்றை புறக்கணித்தல்

வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். "எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம்" எனவும் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 28:55)

வேதம் வழங்கப்பட்டு அதனை நம்பிக்கை கொண்டவர்கள் வீணானதை செவியுறாமல் புறக்கணிப்பார்கள் என்று இறைவன் அவர்களை பாராட்டி பேசுகின்றான். இறைவன் நமக்கு வழங்கியிருக்கும் செவிப்புலன்கள் எனும் ஆற்றல்களை வீணானவற்றை கேட்பதற்காக ஒரு போதும் பயன்படுத்தி விடக்கூடாது. அவற்றை கேட்பதை விட்டும் நமது செவிகளை பாதுகாப்பது நமது கடமை என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

ஆனால் மனிதர்கள் இந்த செவிகளின் மூலம் நல்லவற்றை கேட்பதை விட தீமைகளை, வீணானவைகளையே அதிகம் கேட்கின்றனர். தாம் புறம் பேசாவிட்டாலும் இன்னொருவர் மற்றவர்களை பற்றி புறம், அவதூறு பேசினால் சஇக்காமல், பல மணிநேரம் அமர்ந்து கேட்கின்றனர். சகோதரனின் மாமிசத்தை சாப்பிடும் ஒரு தீமையில் நாமும் பங்கெடுக்கின்றோம், நரமாமிசம் சாப்பிடுபவர்களை பார்த்து ரசிக்கும் வேளையில் ஈடுபட்டிருக்கின்றோம் என்ற குற்ற உணர்வில்லாமல்ஸ.. இவைகளை ரசித்து கேட்டதற்காக மறுமையில் பதில் சொல்இயாக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இசையில் ஒரு மயக்கம்

மனைவி பேசுவதை ‘அபூஆமிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்’ அல்லது ‘அபூமாலிக் அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்’ என்னிடம் கூறினார்கள் லிஅல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை.லி (அவர்கள் கூறியதாவது:)

நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லக் கேட்டேன்:

என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப் பட்டவையாகக் கருதுவார்கள். (அறிவிப்பாளர்: அப்துர் ரஹ்மான் பின் ஃகன்ம், புகாரி 5590)

மேற்கண்ட செய்தி இசை மார்க்கத்தில் ஹராம் என்பதை தெள்ளிய நீரோடையைப் போன்று தெளிவுபடுத்துகின்றது. மேலும் பிற்காலத்தில் இஸ்லாமியர்கள் இசையை அனுமதிக்கப்பட்டதாக ஆக்கிவிடுவார்கள் என்பதையும் குறிப்பிடுகின்றார்கள். இதை தற்போது கண்கூடாக காண்கிறோம்.

இன்றைய இளைஞர், இளைஞிகளின் மொபைல் போன்கள், மெமரி கார்ட் பொருத்தும் வசதி, ப்ளூடூத் போன்ற நவீன வசதிகள் கொண்டதாகவே இருக்கின்றன. இந்த வசதிகள் எதற்கு? இவைகளின் மூலம் மக்களுக்கு மத்தியில் சீர்திருத்தம் செய்வதற்காகவா?

இல்லையில்லை. அக்காலத்தில் வெளிவந்த சினிமா முதல், தற்காலத்தில் வெளிவராதவரை சினிமாவரை உள்ள அத்தனை சினிமாக்களின் பாடல்களை ஏற்றி, அவ்வப்போது அதை கேட்டு ரசிப்பதற்காக. தன் நண்பர்களின் மொபைல்களுக்கு அனுப்பி அவர்களையும் இந்நன்மையில்? பங்குபெறச் செய்வதற்காக. வேலைகளை முடித்து வீட்டில் இருக்கும் போதும், நண்பர்களுடன் வெளியில் அமர்ந்திருக்கும் போதும் தங்கள் மொபைல் போனில் ஏற்கனவே டவுன்லோட் செய்யப்பட்டிருக்கும் சினிமா பாடல்களை பாடவிட்டு அதன் இசையில் மதிமயங்கி போய்விடுவார்கள்.

தற்போது இசைப்பிரியர்கள் தமிழ் சினிமாப்பாடல் என்பதை தாண்டி ஹிந்தி, மலையாளம் என அவர்களின் இசை ரசனை பல மொழிகளிலும் படர்ந்து விரிகின்றது. இது தான் நாம் செவிகளை பேணும் முறையா?

நமது புத்தியை கெடுக்கும், அறிவை இழக்க வைக்கும் இசையை கேட்பதற்காகவா இந்த செவி எனும் அருட்கொடையை இறைவன் வழங்கினான்? மறுமை நாளில் இறைவன் நம்மை விசாரிக்கும் தருவாயில் நமது செவிகளே நமக்கு எதிராக சாட்சி கூறுபவைகளாக மாறிவிடும் என்பதை மறந்து விடக்கூடாது.

இன்று அவர்களின் வாய்களுக்கு முத்திரையிடுவோம். அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவர்களின் கைகள் நம்மிடம் பேசும்; கால்கள் சாட்சி கூறும். (அல்குர்ஆன் 36:65)

அந்நாளில் அவர்களின் நாவுகளும், கைகளும், கால்களும் அவர் களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும். (அல்குர்ஆன் 24:24)

இந்த வசனங்களில் செவிப்புலன்கள் என்ற வாசகம் இடம்பெறாவிட்டாலும் அவைகளும் நமக்கு எதிராக சாட்சியம் அளிக்கவே செய்யும். அந்நாளில் வாய்களுக்கு முத்திரையிடுவதாக, நமது உடலுறுப்புகள் நமக்கு எதிராக சாட்சி கூறும் என இறைவன் தெரிவிக்கின்றான். வாய்களுக்கு முத்திரையிட்டு விடுவதால் விசாரணைக்குரிய ஒவ்வொரு உறுப்புகளும் நமக்கெதிராக சாட்சியளிக்கும் படி இறைவன் விதித்துவிட்டான். செவிப்புலன்கள் செய்ததைப்பற்றி விசாரணை உண்டு என்ற மேற்குறிப்பிடப்பட்ட வசனம் செவிகளும் நமக்கெதிராக சாட்சியமளிக்கும் என்பதை தெரியப்படுத்துகின்றன.

ஒட்டுக் கேட்டல்

புறம், அவதூறு, இசை ஆகியவற்றிஇருந்து நமது செவிகளை பாதுகாப்பதைப் போன்று ஒட்டுக் கேட்டஇல் இருந்தும் பாதுகாக்க வேண்டும். குடும்பத்தில் இது பெரும் பிரச்சனையாக இருப்பதை காணமுடிகின்றது. கணவன் மனைவி பேசுவதை மாமியாரும், தாயும் மகனும் பேசுவதை மனைவியும், நண்பர்களின் பேச்சை ஏனைய நண்பர்களும் ஒட்டுக் கேட்பதை வழமையாக கொண்டுள்ளனர். நமது இஸ்லாமிய மார்க்கத்தில் பிறர்களின் பேச்சை ஒட்டுக் கேட்பது மிகவும் வன்மையாக கண்டிக்கப்பட்டுள்ளது.

மனைவி பேசுவதை ‘தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்’ அல்லது ‘தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில்’ யார் அவர்களது உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறாரோ அவரது காதில் மறுமை நாற்ல் ஈயம் உருக்கி ஊற்றப்படும். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 7042)

பிறர்களின் பேச்சை ஒட்டுக் கேட்பதை பலரும் வெறுக்கவே செய்வார்கள். எனவே தான் பிறர் வெறுக்கும் படியாக மற்றவர்களின் பேச்சை ஒட்டுக் கேட்பவர்களது காதில் ஈயம் உருக்கி ஊற்றப்பட்டு வேதனை செய்யப்படும் என்று நபிகளார் எச்சரிக்கின்றார்கள். எனவே மறுமை நாளில் இவ்வேதனையிஇருந்து நமது செவிகளை பாதுகாப்போமாக.


இறந்தோரின் பெயரால் செய்யபடும் புதுமைகள் (பித் அத்கள்)

இறந்தோரின் பெயரால் செய்யபடும் புதுமைகள் (பித் அத்கள்)
________________________________________________________

மார்க்க காரியங்களில் ஒரு அமலை செய்தால் அது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடைய சொல்,செயல்,அங்கீகாரம் ஏதாவது ஒன்று இருக்க வேண்டும்.அப்படி எதுவுமே இல்லமால் நாமாக ஒன்றை மார்க்கம் என்று செய்தால் அதனுடைய விளைவு நம்மை நரகத்தில் சேர்த்து விடும் என்பது தெளிவான நபிகளாரின் எச்சரிக்கை..

கீழே நாம் தொகுதிருப்பவை அனைத்தும் இஸ்லாத்தாலும்,நபிகள் நாயகம் (ஸல்) அவர்களாலும் கற்று தர படாதவை இவைகள் அனைத்தும் இறந்தோரின் பெயரால் செய்ய படும் புதுமைகள்.......

* மய்யித்துக்கு நகம் வெட்டுதல்; பல் துலக்குதல்; அக்குள் மற்றும் மர்மஸ்தான முடிகளை நீக்குதல்

*மய்யித்தின் பின் துவாரத்திலும் மூக்கிலும் பஞ்சு வைத்து அடைத்தல்

*ஜனாஸாவைக் குளிப்பாட்டும் போது சில திக்ருகளை ஓதுதல்

* குளிப்பாட்டும் போது மய்யித்தின் நெற்றியில் சந்தனத்தாலோ, அல்லது வேறு நறுமணப் பொருட்களாலோ எதையும் எழுதுதல்

* ஜனாஸா எடுத்துச் செல்லும் போது சில திக்ருகளைக் கூறுதல்

* ஜனாஸா தொழுகையில் ஒவ்வொரு தக்பீரின் போதும் கைகளை அவிழ்த்து உயர்த்துதல்

* இறந்தவருக்காக யாஸீன் ஓதுதல்

* இறந்தவருக்காக மூன்றாம் ஃபாத்திஹா, ஏழாம் ஃபாத்திஹா, நாற்பதாம் ஃபாத்திஹா, கத்தம், வருட ஃபாத்திஹாக்கள் ஓதுதல்

* இறந்தவருக்காக ஹல்கா, திக்ருகள், ராத்திபுகள் நடத்துதல்

* இறந்தவர் வீட்டில் விருந்து அளித்தல்

* கப்ரின் மேல் எழுதுதல்; கல்வெட்டு வைத்தல்

* கப்ருகளைக் கட்டுதல்; கப்ருகளைப் பூசுதல்

* கப்ருக்கு அருகே நின்று தல்கீன் ஓதுதல்

* ஆண்டு முழுவதும் சோகம் அனுஷ்டித்தல்

* உடலுக்கு அருகில் விளக்கேற்றி வைத்தல்

* உடலுக்கு அருகில் ரொட்டி போன்ற உணவுகளை வைத்தல்

* இறந்தவர் வருவார் என்ற நம்பிக்கையில் வீட்டின் வாசலில் விடிய விடிய விளக்கு போடுதல்

* அடக்கம் செய்து முடிக்கும் வரை இறந்தவரின் குடும்பத்தார் சாப்பிடாமல் இருத்தல்

*இறந்தவரின் வீட்டிலிருந்து மாதவிடாய் மற்றும் குளிப்புக் கடமையானவரை வெளியேற்றுதல்

*பூக்களை தூவி ஜனாஸாவை எடுத்து செல்லுதல்

* உடலுடன் உணவுப் பொருள் கொண்டு சென்று கப்ரில் வினியோகம் செய்தல்

* கப்ரில் பன்னீர் தெளித்தல்,பூ மாலைகளை போடுதல்

* அடக்கம் செய்து விட்டு, இறந்தவரின் வீடு வரை வந்து விட்டுச் செல்லுதல்; அங்கு முஸாஃபஹா செய்தல்,வரிசையில் நின்று ஸலாம் கொடுத்தல்

* இறந்தவர் விரும்பிச் சாப்பிட்டதை தர்மம் செய்தல்

* இறந்தவருக்காகக் குர்ஆன் ஓதுதல்

* அடக்கம் செய்த மறுநாள் காலையில் கப்ரைப் போய் பார்த்தல்

* வெள்ளிக்கிழமை தோறும் பெற்றோர் கப்ரை ஸியாரத் செய்தல்

* ஷஃபான் 15 அன்று கப்ருக்குச் செல்லுதல்

* ஷஃபான் 15 அன்று இறந்தவர் பெயரால் உணவு சமைத்தல் பாத்திஹாக்கள் ஓதுதல்

* ஷஃபான் 15ல் அடக்கத்தலத்தை அலங்காரம் செய்தல்,இனிப்பு பதார்த்தங்களை வழங்குதல்

* இரண்டு பெருநாட்களிலும் கப்ருகளுக்குச் செல்லுதல்

* திரும்பும் போது கப்ருக்கு முதுகைக் காட்டாமல் திரும்புதல்

இது போன்ற செயல்கள் அனைத்தும் பித்அத்களாகும். இவை அனைத்தும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.

அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லித் தராததைச் செய்தால் அது நன்மையின் வடிவத்தில் இருந்தாலும் அதன் விளைவு நரகமாகும்.
பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட போலிச் சடங்குகளை விட்டொழித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தவற்றை மட்டும் செய்து நன்மைகளை அடைவோம்.

நேர் வழி காட்ட அல்லாஹ் போதுமானவன்..

'எலுமிச்சை' சர்வ ரோக நிவாரணி!


எலுமிச்சை. இது உலகெங்கும் நிறைந்து காணப்படும் பழமாகும். குறைந்த விலையில் எல்லா சத்துக்களும் நிறைந்த பழங்களில் எலுமிச்சையும் ஒன்று.
மனிதர்களுக்கு ஏற்படும் பலவித நோய்களை குணமாக்கும் சர்வ ரோக நிவாரணியாக எலுமிச்சை திகழ்கிறது. எலுமிச்சையின் தாயகம் பாரதம்தான். முதன்முதலாக 1784-ல் கார்ஸ்வில் ஹெம்மீலி என்பவர் எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருப்பதைக் கண்டுபிடித்தார்.

மருத்துவர் ப்ளென்னின் (1875) ஆராய்ச்சியில் கெட்ட இரத்தத்தை தூய்மைப்படுத்தும் மருந்துகளில் எலுமிச்சையை விட சிறந்தது வேறு இல்லை என கண்டறிந்தார். உதாரணமாக இரண்டாவது உலகப் போரின்போது ஜெர்மனிய வீரர்களின் காயத்தில் இருந்து ஒழுகும் இரத்தத்தை உடனடியாக நிறுத்த எலுமிச்சையை உபயோகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்தியர்களை விட மேலை நாட்டினர் எலுமிச்சை பழத்தையும், அதன் விதை, தோல் அனைத்தையும் மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். இதிலிருந்து வாசனைப் பொருட்களும் தயாரிக்கின்றனர். இந்தியர்களின் வீடுகளில் எலுமிச்சை ஊறுகாய் இல்லாமல் இருக்காது.
கண்களைப் பறிக்கும் மஞ்சள் நிறத்தில் மங்களகரமாய் காட்சிதரும் எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது.

100 கிராம் எலுமிச்சை பழத்தில்,

நீர்ச்சத்து - 50 கிராம்
கொழுப்பு - 1.0 கிராம்
புரதம் - 1.4 கிராம்
மாவுப்பொருள் - 11.0 கிராம்
தாதுப்பொருள் - 0.8 கிராம்
நார்ச்சத்து - 1.2 கிராம்
சுண்ணாம்புச் சத்து - 0.80 மி.கி.
பாஸ்பரஸ் - 0.20 மி.கி.
இரும்புச் சத்து - 0.4 மி.கி.
கரோட்டின் - 12.மி.கி.
தையாமின் - 0.2 மி.கி.
நியாசின் - 0.1 மி.கி.
வைட்டமின் ஏ - 1.8 மி.கி.
வைட்டமின் பி - 1.5 மி.கி.
வைட்டமின் சி - 63.0 மி.கி

எலுமிச்சையின் பயன்கள்:

வயிறு பொருமலுக்கு:

சிலருக்கு கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன்போல காணப்படும். வாயுவும் சேர்த்துத் தொல்லைக் கொடுக்க ஆரம்பிக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து அதில் வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் மேற்கண்ட தொல்லைகள் நீங்கும்.


தாகத்தைத் தணிக்க:

தற்போது கோடைக்காலத்தின் ஆரம்பத்தில் இருக்கிறோம். கோடை வெயிலின் தாக்கத்தால் அடிக்கடி தாகம் ஏற்படும். சிலருக்கு எவ்வளவுதான் தண்ணீர் அருந்தினாலும் தாகம் குறையாமல் இருக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து இரண்டு கப் நீரில் சர்க்கரை சேர்த்து பருகினால் தாகம் தணியும்.


சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு:

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரைக்கு பதிலாக உப்பு சேர்த்து அருந்தலாம்.


கல்லீரல் பலப்பட:

எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறெடுத்து, அதில் தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் பலப்படும்.


தலைவலி நீங்க:

ஒரு குவளை சூடான காபி அல்லது தேநீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி, அரைமூடியை பிழிந்து சாறு கலந்து அருந்தி வந்தால் தலைவலி குணமாகும். காலை, மாலை என இருவேளையும் அருந்த வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு அருந்தி வந்தால் தலைவலி நீங்கும்.


நீர்க் கடுப்பு நீங்க:

வெயில் காலம் என்பதால் நீர்க்கடுப்பு பிரச்சினை சிலருக்கு அவதியை ஏற்படுத்தும். இந்நிலை நீங்க எலுமிச்சம் பழச்சாறுடன் சிறிது உப்பு கலந்து ஒருவாரம் அருந்தி வந்தால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் நீங்கும். இரத்தக் கட்டுக்கு உடம்பில் எங்காவது அடிபட்டாலோ, வீங்கினாலோ ரத்தம் கட்டி இருக்கும். இந்தப் பகுதியை தொட்டாலே சிலருக்கு வலியெடுக்கும். இந்த ரத்தக்கட்டு நீங்க சுத்தமான இரும்புக் கரண்டியில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து அதில் சிறிதளவு கரிய போளத்தைப் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) போட்டு காய்ச்ச குழம்பு போல வரும். அதனை எடுத்து பொறுக்கும் அளவு சூட்டுடன் இரத்தக்கட்டு உள்ள பகுதிகளில் பற்று போட வேண்டும். இவ்வாறு காலை, மாலை இரு வேளையும் சுத்தம் செய்து பற்று போட்டு வந்தால் ரத்தக்கட்டு குணமாகும்.


பித்தம் குறைய:

எலுமிச்சம் பழத்தை பிழிந்த சாற்றில் ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தையும், அதே அளவு மிளகையும் கொஞ்சம் கலந்து வெயிலில் காயவைத்து காய்ந்தபின் நன்றாக பொடித்து எடுத்து பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். காலை மாலை இருவேளையும் இதில் அரை தேக்கரண்டி அளவு வாயிலிட்டு வெந்நீர் குடித்து வந்தால் பித்தம் குறையும்.


எலுமிச்சை தோல்:

எலுமிச்சை பழத்தின் தோல், தோல் சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கி சருமத்திற்கு பளபளப்பைத் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எலுமிச்சம் பழத்தோலில் அதிக சக்தி கொண்ட எண்ணெய் இருப்பதை அறிந்தனர். இது பலவகையான நறுமணத் தைலங்கள் செய்வதற்கும் உபயோகமாகிறது. மேலும் வாதம், எரிச்சல், தொண்டைப்புண் போன்றவற்றிற்கு நல்லது. நகச் சுற்று கொண்டவர்கள் எலுமிச்சம் பழத்தை விரலில் சொருகி வைத்தால் நகச்சுற்று குணமாகும். கிராமப் புறங்களில் இன்றும் இம்மருத்துவ முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

எலுமிச்சம் பழத்தோலை உரித்தவுடன் அதன் மேல் வெள்ளையாக இருக்கும் சிறு தோலில் வைட்டமின் பி அதிகமாக உள்ளது.

* எலுமிச்சம் பழம், உடலில் களைப்பைப் போக்கி உடலுக்கு புத்துணர்வை உண்டாக்கும்.
* எலுமிச்சம் பழச்சாற்றை உடலில் தேய்த்து குளித்தால் உடல் வறட்சி நீங்கும்.
* தாதுவைக் கெட்டிப்படுத்தும்.
* உடல் நமைச்சலைப் போக்கும்
* மாதவிலக்கின் போது உண்டாகும் வலியைக் குறைக்கும்.
* மூலத்திற்கு சிறந்த மருந்தாகும். எலுமிச்சம் பழத்தின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். இதன் மருத்துவப் பயனை உணர்ந்து ஆரோக்கியம் பெறுங்கள்.

சரும நோய் உள்ளவர்களுக்கு இது உகந்தது அல்ல

இதயத்தைக் காப்பாற்ற வழி உங்கள் நாடித்துடிப்பைத் தெரிந்து கொள்ளுகள்1. உங்கள் நாடித்துடிப்பை எங்கே உணர முடியும்?
மணிக்கட்டில், அதாவது கட்டை விரலுக்குச் சற்று கீழே. இதுவே மிக எளிதாக உங்கள் நாடித்துடிப்பை உணரக் கூடிய இடம்.

2. ஏன் உங்கள் நாடித்துடிப்பை பரிசோதனை செய்ய வேண்டும்?

முக்கியமான காரணம் உங்கள் நாடித் துடிப்பின் எண்ணிக்கையை அறிந்து கொள்வது. இதன் மூலம் இதயம் சீராகச் சரியான எண்ணிக்கையிலும் துடிக்கிறதா என்று அறிந்து கொள்ள முடியும்.

3. எப்போது நாடித்துடிப்பைப் பரிசோதனை செய்யலாம்?

நீங்கள் நல்ல ஓய்வில் இருக்கும்போது, காஃபின், நிக்கோடின் போன்ற ஊக்கிகளைப் பயன் படுத்தாது இருக்கும் போதும்.

4. நாடித்துடிப்பின் இயல்பான அளவு என்ன?

ஒரு நிமிடத்திற்கு 60 முதல் 100 வரை. உங்கள் மன அழுத்தம், நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற மருந்துகள் போன்ற வற்றால் உங்கள் நாடித்துடிப்பு குறையவோ, கூடவோ செய்யலாம்.

5. எப்பொழுது நாடித்துடிப்பு சம்பந்தமாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்?

நாம் ஒவ்வொருவரும் தனித்தனியான இயல்பு உள்ளவர்கள். ஆகவே பொது வான ஒரு வரையறையைச் சொல்வது கடினம். நாடித்துடிப்பு சிலருக்கு 100க்கு மேல் இருக்கலாம். சிலருக்கு 60க்குக் கீழ் இருக்கலாம். தொடர்ந்து 120க்கு மேல் இருந்தாலோ அல்லது தொடர்ந்து 40க்குக் கீழ் இருந்தாலோ நீங்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டியது அவசியம்.

உங்கள் நாடித்துடிப்பு என்பது உங்கள் இதயம் துடிக்கிற அளவு. இதை இதயத் துடிப்பு அளவு (ஹார்ட் ரேட்) என்கிறோம். ஒரு நிமிடத்திற்கு உங்கள் இதயம் துடிக்கிற எண்ணிக்கையின் அளவு இது.

இதயத்துடிப்பு நபருக்கு நபர் வயது, மனநிலை, செய்கிற வேலையைப் பொறுத்து மாறுபடும். இதயத்துடிப்பு, நாடித்துடிப்பு இவற்றின் எண்ணிக்கை மாறுபடுவது, சீரற்ற தன்மை இரண்டுமே இருதய நோய் களாலோ அல்லது இருதயம் தொடர் புடைய வேறுசில பிரச்னைகளாலோ ஏற்படலாம். இதனை இதயத்தின் சீரற்ற தன்மை கார்டியாக் அரித் மியா என்று சொல்கிறோம். ஆகவே உங்கள் நாடித் துடிப்பை அறிந்து கொள்வது உங்கள் இதயத்தை அறிந்து கொள்வது ஆகும்.
இதயத்துடிப்பின் சீரற்ற நிலை

இந்நிலை மிகவும் ஆபத்தானது. ஆனால் சிகிச்சை மூலம் சீர் செய்யக் கூடிய நிலை. இந்த நிலையில் இதயத்தைச் செயல்படுத்துகிற மின் துடிப்புகள் ஒன்றுடன் ஒன்று சரியான முறையில் இணைந்து செயல்படாமல் இருக்கும். இதனால் இதயம் அதிக வேகத்திலோ அல்லது மிகக் குறைவான வேகத்திலோ அல்லது ஒழுங்கற்ற முறையிலோ துடிக்கக் கூடும்.

இதயத்துடிப்பின் சீரற்ற நிலையின் வகைகள்

இதில் பல வகைகள் இருக்கின்றன. PSVT என்கிற ஒரு வகை பொதுவாக காணப் படுகிற வகை. இதில் இதயத்தின் அதிகத் துடிப்பு இதயத்தின் மேற்பகுதி அறை களில் இருந்து ஏற்படுகிறது. மற்றொரு வகை கிதி என்பது. இதில் இதயத்தின் மேல் பகுதி அறைகளில் இருந்து அதைவிட மிக அதிகமான மேலும் ஒழுங்கற்ற துடிப்புகள் ஏற்படும். க்ஷிஜி மற்றொரு வகை. இதில் அதிக துடிப்பு இதயத்தின் கீழ்ப் பகுதி அறைகளில் இருந்து ஏற்படும். இது உயிருக்கு ஆபத்தானது.

இதயத்துடிப்பின் சீரற்ற நிலைகளை ஏற்படுத்தும் பொதுவான காரணங்கள்

ரத்தக் கொதிப்பு, புகை பிடிப்பது, குடிப்பழக்கம், கட்டிகள் போன்றவை இதயத்துடிப்பின் சீரற்ற நிலை ஏற்படு வதற்கு மிகப் பரவலான காரணங்கள். தவிர இருதய ரத்தக் கு ழாய் நோய்கள், இருதய வால்வு பிரச்னைகள், இருதயத் தசைகளைத் தாக்கும் நோய்கள், இருதயத் துடிப்பு உருவாகும் இடத்தில் ஏற்படும் நோய்கள், இருதயத்தைச் சுற்றி இருக்கிற உறையில் ஏற்படும் அழற்சி சிளிறிஞிஎன்கிற நீண்ட நாள் மூச்சுக்குழல் அடைப்பு நோய்கள் போன்றவையும் இதயத் துடிப்பின் சீரற்ற நிலை உருவாகக் காரணங்களாக அமைகின்றன.

இதயத்துடிப்பின் சீரற்ற நிலையின் அறிகுறிகள்.

படபடப்பு, விட்டு விட்டு நாடித்துடிப்பு, தலைப் பாரம் மற்றும் லேசான தலை சுற்றல், தளர்ச்சி, மூச்சு வாங்குதல், மயக்கம் அல்லது மயக்கம் வருகிற நிலை ஆகியவை.

இதயத்துடிப்பு சீரற்ற நிலையின் தொடர் நிகழ்வுகள்

பெரும்பாலான இதயத்துடிப்பு சீரற்ற நிலை பொதுவாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் சில ஆபத்தான வை. உயிருக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியவை. இதயம் சீரற்றுத் துடிக்கும் போது போதுமான அளவு ரத்தத்தை உடல் முழுவதும் செலுத்த முடியாமல் சிரமப்படும். போதுமான ரத்தம் கிடைக் காமல் மூளை, இதயம் மட்டுமல் லாமல் மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படும். ஏற்றிரியல் சுப்ரலேஷன், ஏற்றிரியல் ஃப்ளட்டர் என்னும் இரண்டு வகை மிகப் பரவலாகக் காணப் படுகின்றன. இவை இதய மேற்புற அறைகளில் இதய ரத்தம் சேர்வதற்கு வழி செய்வதன் மூலம் ரத்த உறைவு ஏற்படுகிற நிலையை அதிகரிக்கின்றன. இதனால் பக்கவாதம் வருகிற பாதிப்பு அதிகரிக்கிறது.

மிக ஆபத்தான இதயத்துடிப்பு சீரற்ற நிலையைக்கூட வெற்றிகரமாக சிகிச்சை செய்து சரிப்படுத்த முடியும். இந்நிலை யில் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் வழக்கமான ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதயத்தின் இந்நிலையை முன்பே அறிந்து கொள்வது தான் மிக முக்கியமானது. உங்கள் நாடித் துடிப்பைத் தொடர்ந்து பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் உங்களுக்கு இந்தப் பிரச்னை உள்ளதா என்று தெரிந்து கொள்ள முடியும்.

இதயத்துடிப்பு சீரற்ற நிலைக்கான சிகிச்சை

இதற்கான சிகிச்சை வகைகளைப் பொறுத் தும், எவ்வளவு ஆபத்தானது என்பதைப் பொறுத்ததும் மாறுபடும். மருந்துகள் வாழ்க்கை முறை மாற்றம், மின் அலைக் கருவிகள் பயன்படுத்தும் சிகிச்சை போன்றவை உண்டு. மின் அலைக் கருவியைப் பயன் படுத்தி சிகிச்சை செய்வதால் வாழ்க்கை முழுவதும் மருந்துகள் சாப்பிடுவதைத் தவிர்க்க முடியும்.

நாடித்துடிப்பை எப்படி பரிசோதிப்பது?

உங்கள் ஆள் காட்டி, இரண்டாவது, மூன்றாவது விரல்களின் நுனிகளை அடுத்த கையின் மணிக்கட்டின் கட்டை விரலின் அடிப்பாகத்திற்குச் சற்று கீழே வைக்கவும். விரல்களை லேசாக அழுத்தவும். நாடித் துடிப்பை இப்போது உணர முடியும்.

ஒரு கடிகாரத்தைப் பயன்படுத்தி 30 வினாடிகளுக்கு எத்தனை நாடித் துடிப்பு என்று கணக்கிடுங்கள். இதனை இரண் டால் பெருக்கவும். வருகிற விடையே உங்கள் நாடி த்துடிப்பு.

உங்கள் நாடித்துடிப்பு ஒழுங்கற்று இருந் தால் தொடர்ந்து ஒரு நிமிடத்திற்கு கணக் கிடுங்கள். முப்பது விநாடிகளில் நிறுத்த வேண்டாம்.

Reference By : thedipaar.com/

பித்தப்பை கற்கள் (Galbladder Stones) பற்றி தெரியுமா உங்களுக்கு ?


முதலில் பித்தப்பை என்றால் என்ன என்பது பற்றி அறிவோம். அதாவது கல்லீரலில் உற்பத்தியாகும் பித்த நீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்தில் ஒட்டியிருக்கும் சிறிய பைதான் பித்தப் பை எனப்படுகிறது. இது கல்லீரலின் அடியில் அமைந்துள்ளது.

இந்த பித்தப் பை நமது உணவு ஜீரணமாவதற்கு பெரிதும் உதவுகிறது. அதாவது ஒரு வேளை சாப்பிட்டு அடுத்த வேளை உணவு உண்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த பித்தப் பை ஜீரணத்திற்குத் தேவையான ஜீரண நீரை சேமித்து வைக்கும்.நாம் உணவு உண்டதும் இந்த பித்தப் பை சுருங்குகிறது. இதனால் பையில் இருக்கும் ஜீரண நீர் குடலுக்குச் சென்று உணவு செரிமானத்திற்கு உதவுகிறது.

அவ்வாறு பித்தப் பை சுருங்கி விரிவடையாமல் நின்று போவதால் பித்தப் பையில் சுரங்கும் ஜீரண நீர் தேங்கி கற்களாக மாறுகிறது.

இந்த பித்தப் பையில் ஏற்படும் கற்களுக்கும் நாம் உணவில் தெரியாமல் சாப்பிட்டுவிடும் கற்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

பித்தக் கற்கள் மூன்று வகைப்படும். ஒவ்வொரு வகை கற்களும் ஒவ்வொரு காரணத்தினால் உண்டாகின்றன.

பொதுவாக உடல் பருமனாக இருப்பது உணவில் கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பது கருத்தடை மாத்திரை அதிகம் உபயோகிப்பது போன்றவற்றாலும் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் விரைவாக உடைவதாலோ பித்த நீர்ப் பையில் பாக்டீரியா அல்லது குடல் புழுக்கள் சேர்வதாலோ பித்தப் பையில் கற்கள் உண்டாகின்றன.

பித்தப் பையில் கற்கள் உண்டான ஒருவருக்கு வாயுத் தொல்லை ஏற்படுவது சாப்பிட்ட பிறகு வயிற்றின் மேல் பாகத்தில் வலதுபுறம் வலி உண்டாவது மஞ்சள் காமாலை நோய் தாக்குவது கடுமையான வயிற்றுவலி போன்றவை ஏற்படலாம்.

நிறையப் பேர் பித்தப் பை கல் பிரச்சினை ஏற்பட்டு சாதாரண வயிற்று வலி என்று நினைத்து மருந்து உட்கொண்டு வருவதால் எந்த பலனும் அளிக்காமல் இறுதியாகத்தான் மருத்துவ பரிசோதனைக்கு வருகிறார்கள்.

பித்தப் பை கற்களை அல்ட்ரா சவுண்ட் சோதனை மூலம் எளிதாகக் கண்டறிய முடியும். அப்படி கண்டறிய முடியாதவர்களுக்கு மட்டுமே சிடி ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் தேவைப்படுகிறது.

பித்தப் பை கற்களுக்கு பெரும்பாலும் அறுவை சிகிச்சைதான் தீர்வாக உள்ளது. மருந்தினால் குணப்படுத்த முடியும் என்றாலும் 100ல் 10பேருக்கே மருந்து குணமளிக்கிறது.

அதிலும் மருந்தை தொடர்ந்து சாப்பிட வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாவார்கள். மருந்தை நிறுத்தினால் மீண்டும் பிரச்சினை துவங்கிவிடும். மேலும் மாத்திரைகளினால் பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. எனவே பித்தப் பை கற்களுக்கு அறுவை சிகிச்சையே பூரண குணமளிக்கும்.

அறுவை சிகிச்சை என்றால் வயிற்றுக் கிழித்து செய்யப்படும் சிகிச்சை அல்ல. தற்போது லேப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சை நல்ல பலனை அளித்து வருகிறது. வயிற்றைக் கிழிக்காமல் ஒரு சொட்டு ரத்தத்தையும் வீணாக்காமல் இந்த சிகிச்சை முறை அளிக்கப்படுகிறது.

Special thanks to Regha Healthcare Center

நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களை சாகடித்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா..?


1) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களை சாகடித்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா..?


2) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களின் ஆயுளின் எட்டு நிமிடங்களை குறைத்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா..?


3) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா..?


4) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்கள் இதயத்தை எரித்துக்கரியாக்கி கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா..?


5) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களின் பொருளாதார வீழ்ச்சிக்கு நீங்களே வைத்துக் கொள்ளும் கொள்ளி என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா..?


6) நீங்கள் பொது இடங்களில் பிடிக்கும் புகையின் நெடி ஆறுமணி நேரம் அந்த இடத்தை விட்டு அகலாமல் அப்பாவி மக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா..?


7) நீங்கள் உங்கள் பிள்ளைகளின் பார்வையில் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் அந்த இழம்பிஞ்சுகளுக்கு ஆரம்ப பாடமாக அமைகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா..?


8) நீங்கள் புகைப்பிடிப்பதை உங்கள் மனைவியர்கள் கூட விரும்பாமல் மனம் குமுறுவதை நீங்கள் சிந்தித்தது உண்டா..?


9) நீங்கள் புகைப்பிடிக்கும்போது உங்கள் அருகில் இருக்கும் நண்பர்கள் கூட உங்களை வேண்டா வெருப்போடு பார்ப்பதை பற்றி நீங்கள் சிந்தித்தது உண்டா..?


10) நீங்கள் புகைப்பிடித்து விட்டு வீசி எறியும் சிகரட் துண்டினால் எத்தனை குடிசைகளும், கிராமங்களும் எரிந்து சாம்பலாகியுள்ளது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா..?


11) நீங்கள் புகைத்துக்கொண்டே உங்கள் செல்வக் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடி மகிழும் போது அந்த புகையின் நெடியால் உங்கள் பிஞ்சு மழலைகள் நஞ்சை உட்கொள்கிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா..?


12) நீங்கள் புகைப்பதால் உங்களை நீங்களே அழித்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா..?


13) புகைப்பிடித்து பாதிப்புக்கு உள்ளாகி ஆண்டுதோறும் லட்சக்கணக்காண மக்கள் மரணத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா..?


14) நீங்கள் புகைக்கும் புகையிலுள்ள நச்சுப்பொருள்கள் உங்கள் இரத்தத்தோடு கலந்து இரத்த நாளங்களை அடைக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா..?


15) இளமையில் புகைத்து, புகைத்து தள்ளிவிட்டு முதுமையில் குரைத்து, குரைத்து அவஸ்தைபடுபவர்களை பார்த்து நீங்கள் சிந்தித்தது உண்டா..?


16) புகைப்பதை நிறுத்த முடியவில்லையே என்று நொண்டிக்காரணங்களை கூறுபவர்களால் இந்த உலகத்தில் வேற என்னதான் சாதிக்க முடியும்..? என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா..?


17) புகைப்பிடிப்பது ஆபத்து என்று விளம்பரம் செய்துகொண்டே வளர்ந்து கொண்டிருக்கும் சிகரட் உற்பத்தியாளர்களையும், அதை புகைத்து, புகைத்து வீழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் எதிர்காலத்தை பற்றியும் நீங்கள் சிந்தித்தது உண்டா..?


18) புகைப்பிடிப்பது நாகரீகம் என்ற நிலை மாறி, புகைப்பிடிப்பது அநாகரீகம் என்ற உணர்வுக்கு இளைஞர்கள் மாறி வருவதை நீங்கள் சிந்தித்தது உண்டா..?


19) உலகில் முன்னேறிக்கொண்டிருக்கும் நாடுகள் பலவும் புகைப்பிடிப்பதற்கு தடைபோட்டு சட்டம் இயற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா...?


20) புகைப்பிடிப்பதற்கும், விஷம் குடிப்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதை இப்போதாவது நீங்கள் சிந்தித்து பார்ப்பீர்களா..?

*
*
*
*
"உங்கள் மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் ஐந்தே ஐந்து நிமிடம் சிந்தனை செய்து புகை எனும் அரக்கனிடமிருந்து விடுதலை பெறுங்கள்"

கனவாய் மீனுக்கு (Cuttlefish) மூன்று இதயங்கள்...!


கனவாய் (Cuttlefish) எனப்படும் மீன் இனத்திற்கு தான் அந்த சிறப்பு. கடல் விலங்குகளில் இது ராஜா எனவும் கருதப்படுகிறது. இந்த மீன், ஸ்குவிட் மற்றும் ஆக்டோபஸ் குடும்பத்தை சார்ந்ததாகும். இதனை செப்பலோபாட்ஸ் எனவும் அழைக்கின்றனர்.

மேலும் கனவாய் மீனுக்கு மிகப் பெரிய இதயம் உள்ளது, உண்மையில் இதற்கு ஒரு இதயம் அல்ல மூன்று இதயங்கள். இரண்டு இதயங்கள் செவுள்களுக்கு (Gills) ரத்தத்தை பம்ப் செய்யவும், மூன்றாவது இதயம் பிற உறுப்புகளுக்கு (Organs) பம்ப் செய்யவும் பயன்படுத்துகிறது.

இந்த மீனின் அங்கம் தட்டையாக இருப்பதால் கடலில் வாழ்வதற்கு தோதாக உள்ளது. இவை மொலஸ்க்ஸ் மற்றும் சிறிய மீன்களை வேட்டையாடக்கூடியது. கனவாய் மீன்கள் பிற இனத்தின் மீன்களிடம் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள தன் நிறத்தை பின்புல நிறத்திற்கு ஏற்ப மாற்றும் இயல்புடையது.

நீல நிற இரத்தம்

கனவாய் மீனின் ரத்தத்தில் காப்பர் அதிகமாக இருப்பதால் ரத்தத்தின் நிறம் பச்சையும் நீலமும் கலந்த நிறமாக தோன்றும். இதன் காரணமாகவே இதை ராஜா மீன் என்கின்றனர்.

தன் நிறமிப் பையை சரிப்படுத்துவதன் மூலம் தன் நிறத்தை இதனால் மாற்ற முடிகிறது. நிறமி பைகள் சிறியவை, ஆனாலும் பல வண்ணங்களை கொண்டு காணப்படுகிறது. எதிரி மீன்கள் தன்னை தாக்கும்போது கருப்பு நிற திரவத்தை வெளியிட்டு தாக்கும் இனத்திடம் இருந்து தற்காலிகமாக தப்பிக்கும் தந்திரம் உடையது இந்த கனவாய் மீன்க‌ள்.

சர்க்கரை நோய் பற்றி தெரியுமா உங்களுக்கு ???


மனிதன், காலையில் எழுந்து, காலைக் கடன்களை முடித்து, குளித்து, உடையணிந்து உணவருந்தி, சம்பாதிக்கச் செல்கிறான். வேலை, வீடு, மனைவி, மக்கள், எதிர்காலம், தொழில் என்று அன்பான வாழ்க்கையை நடத்தவே விரும்புகிறான். அவன் வாழ்க்கையை புரட்டிப் போட்டு, சந்தோஷத்தை கெடுக்க வந்த நோய் தான் சர்க்கரை நோய்.

சர்க்கரை நோயைக் கண்டுபிடித்தவுடன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்:

* சர்க்கரை நோய் நிலை, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதா? அல்லது நீண்ட நாட்கள் கண்டுப்பிடிக்கப்படாமல் இருந்திருந்ததா?

* சர்க்கரை நோய் உடலில் இருப்பது சில, பல வருடங்களா?

* சில ஆண்டுகளாக இருக்கிறது என்றால் அதன் விளைவுகளை அறிய வேண்டும்.

* பல ஆண்டுகளாக இருந்தால் இதனால் பலவிதமான கோளாறுகளை கண்டறிதல் வேண்டும்.

முதல் மூன்று வகைகளில் அவ்வளவு பாதிப்பு தெரியாது. கடைசி நான்காவது வகையில் பல உறுப்புகளின் தாக்கம், செயலிழப்புகளைப் பார்க்க முடியும்.சர்க்கரை நோய் எப்படி வருகிறது?

நாம் உண்ணும் உணவு, உணவுக் குழாய் மூலம் இரைப்பையை அடைந்தவுடன் செரித்து இரைப்பையிலிருந்து சிறுகுடலுக்கு செல்கிறது. அந்நேரத்தில் இரைப்பை, சிறு குடலிலிருந்து இன்கிரிடின் என்ற குளுகோசை கட்டுப்படுத்தும் சுரப்பிகள் பீட்டா செல்களை செல்களை தூண்டி இன்சுலின் சுரக்கப்பட்டு குளோஸ் என்ற சர்க்கரையை உடலுக்கு ஏற்ற சக்தியாக மாற்றி உடலுக்கு புத்துணர்வு கொடுக்கிறது.

சர்க்கரை நோய்:

நாம் சாப்பிடும் அதிக சர்க்கரையினால் மட்டுமல்லாது ஆல்பாசெல், பீட்டாசெல் இந்த செல்களில் சுரக்கும் குளுகோகான் ஆல் பருத்து வருகிறது. இன்சுலின் என்ற ஹார்மோன் பீட்டாவிலிருந்து வருகிறது.

(ஏ) ஆல்பா செல் குளுகோனை சுரக்கிறது. இது சர்க்கரை ரத்தத்தில் அதிகமாகிறது.

(பி) பீட்டா செல் (இன்சுலினை சுரக்கிறது). இது சர்க்கரையை சக்தியாக மாற்றுகிறது.'ஏ'யும் 'பி'யும் தராசுத் தட்டுகள் போல சரியாக இயங்க வேண்டும். இதில் கோளாறு (ஏ) அதிகமாகி (பி) குறைந்தால் சர்க்கரை நோய் உண்டாகும்.சர்க்கரை நாம் உண்ணும் உணவிலிருந்து மட்டுமல்லாது இந்த குளுகான் கல்லீரலில் இருந்து சர்க்கரையை அதிகமாக்குகிறது. மற்றும் கொழுப்பு, புரதம் முதலியவற்றில் இருந்தும் சர்க்கரையை உருவாக்கி ரத்தத்தில் குளுகோஸை அதிகமாக்கி விடுகிறது.

சர்க்கரை நோய் கண்டவர்கள் தினமும் நரகமாக, சந்தோஷத்தை தொலைத்து நோயை வேண்டா வெறுப்புடன் சரியாக கவனிக்கத் தவறினால் ஏற்படும் விளைவுகள் பல. முக்கியமாக நாம் பயப்பட வேண்டிய உறுப்புகளில் உயிர் காக்கும் உறுப்புகளான இதயம், மூளை, சிறுநீரகம், கண் இவைகளை கண்ணும் கருத்துமாக கண்காணிக்க வேண்டும்.

முடி முதல் நகம் வரை:

சர்க்கரை நோய் உச்சந்தலை முடி முதல் காலில் உள்ள நகம் வரை தாக்குகிறது. சர்க்கரை நோயை கண்ணுக்குத் தெரியாத மைக்ராக்ஸ் கோப் ரத்த நாளங்களின் வியாதி எனப்படும். இதை ஆஞ்சியோபதி என்பர்.மைக்ரோ ஆஞ்சியோபதி டயாபடிக் ரெட்டினோபதி கண்களுக்கு தெரியாத ரத்தக் குழாய்களின் உட்சுவர் கொலஸ்டிரால் தாக்கப்பட்டு நடுச்சுவரில் உள்ள தசைகள் செயலிழந்து விடுகிறது. இதனால் கண்ணின் உட்திரையில் கோளாறு ஏற்பட்டு, கண்ணில் உள்ள ரத்த நாளங்கள் பழுதடைந்து ரத்தக் கசிவு ஏற்பட்டு கண் பார்வையை பாதித்து நாளடைவில் பார்வை இழக்க நேரிடும்.டயாபடிக் நெப்ரோபதி என்ற சிறுநீரகக் கோளாறு:

சிறுநீரகம், உடலிலுள்ள கழிவுகள் இது நாம் உண்ணும் உணவில் உள்ள செரிமானத்திற்கு பிறகு ரத்தத்திலுள்ள வேண்டாத வேதியியல் பொருட்களை உடல் உறுப்புக்களால் ஏற்கப்பட்டு மீதி தேவை இல்லாத கழிவுப் பொருட்களான யூரியா போன்றவற்றை வடிகட்டி வெளியேற்றுவது நெப்ரான் என்ற சிறுநீரகத்தின் உயிர்நாடி. இது கெட்டு விடாமல் பாதுகாக்க வேண்டும். இது கெட்டுவிட்டால் யூரியா, கிரியாட்டின் மேலும் பொட்டாசியம் அதிகமாகி சிறுநீரகம் செயலிழக்கிறது. மூன்று மாதம் ஒரு முறை பொதுவாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சர்க்கரையின் அளவு துல்லியமாக சீராக பராமரிக்கப்படுகிறதா என்பதை அறிய கிளைக்கேர் சுலேட்டு நிமோக்குளான் அளவு பார்த்து சர்க்கரை கட்டுப்பாட்டில் இருப்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இந்த நெப்ரான் என்ற சிறுநீரக உறுப்பு மிகவும் முக்கியமானது. சர்க்கரை நோயினால் இது பாதிக்காதவாறு கண்காணிக்க வேண்டும்.இதற்கு முக்கிய பரிசோதனைகளான எச்.பி.ஏ.சி., என்ற கிளைகோ சிலேட் ஹிமோகுளோபின் ரத்ததத்தின் சிவப்பு அணுக்களில் உள்ள குளுகோஸ் அளவை துல்லியமாக மூன்று மாதமாக எப்படி சர்க்கரை வியாதி இருந்திருந்தது என்பதைக் காட்டும். இது முக்கிய பரிசோதனை இரண்டாவது பரிசோதனை மைக்ரோ ஆல்பர்னியூரியா. இது சிறுநீரகத்தின் உயிர்நாடியான நெப்ரானின் செயல்பாட்டைக் குறிக்கும்.ஸ்டிரோக்கை உண்டாக்கும்:

மூளையைத் தாக்கி, உடலில் உள்ள கை, கால்களை செயல் இழக்கச் செய்து தற்காலிக ஸ்டிரோக் அல்லது நிரந்தர ஸ்டிரோக்கை உண்டாக்கி உடலின் பகுதியை செயலிழக்கச் செய்து வாழ்க்கையையே முடக்கி விடுகிறது. சர்க்கரை இதய நோய் பாதிப்பு உயிரைப் பறிக்கும். மற்ற உறுப்பு பாதிப்புகளினால் உயிர் உடனே போகாது. வாழ்க்கை பாதிக்கும் சர்க்கரை நோய் எத்தனை காலம், ஓராண்டாகி, ஐந்து, பத்து, இருபது ஆண்டா என்பதைப் பொறுத்து இதய தாக்கத்தை சொல்லலாம். முப்பது ஆண்டுகளில் பல நூறு கட்டுரை, பல புத்தகங்கள் சர்க்கரை நோயினால் வரும் இதய நோய்கள் பல உள்ளன. இதற்கு இந்த கட்டுரை போதாது. முக்கியமா இதய நோயைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

மைக்ரோ ஆஞ்சியோபதி, பெரிய ரத்தக் குழாய்களை தாக்கி, கரோனரி ரத்தக் குழாய் அடைப்பை உண்டாக்குகிறது. கண்ணுக்குப் புலப்படாத ரத்த நாளங்கள் பாதிப்பால் இதய தசைகளை பாதிக்கப்பட்டு இதய வீக்கம் ஏற்பட்டு மையோபதி என்ற வியாதி டயபடிக் கார்டியோ மையோபதி என்ற இதய வீக்க நோய் ஏற்படுகிறது. இதை சர்க்கரை நோய் கண்டுபிடித்த நேரத்தில் இருந்து இதயத்தை பாதுகாக்க வேண்டும்.இதய நோயாளி சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். இதய நோயாளிகள் ஆஞ்சியோ பிளாஸ்டி ஸ்டென்ட் வைத்த வர்களும் சரி, பைபாஸ் செய்தவர்களும் சரி, ஸ்டென்ட், பைபாஸ் கிராப்ட் இவைகளை பாதுகாத்து வர வேண்டும்.


ஏன்?சர்க்கரை வியாதி கண்டவர்களுக்கு கரோனரி ஸ்டென்ட்டும், பைபாஸ் கிராப்ட்டும் எளிதில் அடைக்க வாய்ப்புகள் அதிகம். இதற்கு தாறுமாறாக ஏறும் இறங்கும். சர்க்கரை அளவும் கெட்டக் கொழுப்புகளான டி.எச்.எப்.,எல்.டி.எல்.,தான் காரணம்.

புது பரிசோதனை:

சர்க்கரை நோயைக் கண்டுபிடிக்க இன்று வரை வெறும் வயிற்று சர்க்கரை அளவு பரிசோதனையும், சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து சர்க்கரை அளவு பரிசோதனையும் உடலில் குளுகோஸ் தாங்கும் திறனைக் கண்டுபிடிப்பது என்ற நிலை மாறி இப்போது சர்க்கரை நோய் உள்ளதா இல்லையா என்பதை துல்லியமாக தெரிய புதிய முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மேற்கண்ட பரிசோதனை எந்நேரமும செய்யலாம். 6 முதல் 6.5 சதவீதம் இருந்தால் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு. 6 சதவீதம் சர்க்கரை நோய் இல்லை 6.5 சதவீதத்துக்கு மேல் நோய் உள்ளது. இது எப்படி கரோனரி நோய்க்கு ஆஞ்சியோகிராம் கோல்டு ஸ்டென்டோ அதுபோல சர்க்கரைக்கு இது முக்கிய டெஸ்ட்.

ரத்தக்குழாய் அடைப்பு:

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கட்டுப் பாட்டில் இருந்தால் கரோனரி ரத்தக் குழாய் அடைப்பு எப்படி இருக்கும் என்பதை தெரிய வேண்டும். (ஏ) ஐந்து ஆண்டுகள் உள்ளவர்களும் 20 முதல் 30 சதவீதம் வரை அடைப்பு இருக்கலாம். (பி) பத்து ஆண்டுகள் சர்க்கரை நோய் இருந்தால் 90 சதவீத அடைப்பு. ஒரு இடத்தில் அல்லது பல இடத்தில் அடைப்பு இருக்கலாம்.

(சி) 10 ஆண்டு முதல் 20க்குள் இருந்தால் அடைப்பு ஒரு இடத்தில் மட்டுமல்லாது ரத்தக் குழாய் முழுவதும் அடைப்பு இருக்கும். ஒரு குழாய் மட்டுமல்லாது பல குழாய் அடைப்பு இருக்கும். (டி) சர்க்கரை நோயினால் ரத்தக் குழாய் சிறுத்துப் போய் கரோனரி ரத்தக் குழாய் விட்டம் 2 மில்லி மீட்டர் அதற்கு குறைவாக இருக்கும். இது பரிதாபமான நிலை.

பைபாஸ் கிராப்ட் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வீனஸ் கிராப்ட்டுக்கு சில காலம் வரை நன்றாக இருக்கும். அதற்கு மேல் வீனஸ் கிராப்ட் மூட வாய்ப்புள்ளது. பல ஆண்டுகள் வரை கிராப்ட் மூடாமல் இருப்பதைப் பார்த்து இருக்கிறேன்.

வீனஸ் கிராப்ட் இது இணைப்பு தான். லீமா, ரிமா என்ற ஆர்ட்டியல் கிராப்ட் கரோனரி ரத்தக் குழாய் போல் இயங்கும். வீனஸ் கிராப்ட் இணைப்பில் ரத்தம் உறைந்து மூடிவிடும். வீனஸ் கிராப்ட் நாளாவட்டத்தில் செயலிழக்கும். இந்த ஸ்டென்ட் எளிதில் மூடிவிடும். மறு பைபாஸ் சிறந்தது. ஸ்டென்ட் அடைக்காமல், ஸ்டென்ட்டையும் மிகவும் பாதுகாக்க வேண்டும். இதில் கவனமாக இருக்க வேண்டும். தனி மனித ஒழுக்கம், வாழ்க்கை முறை மாற்ற வேண்டும்.

சந்தோஷமாக வாழ கற்றுக்கொள்ளுங்கள்:

சர்க்கரை வியாதியுள்ளவர்கள் பல விளைவுகளோடு வாழ கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்வில் வியாதி வந்தது என்று கவலைப்பட்டு சோம்பேறியாய் மூலையில் இருப்பது நல்லதல்ல. சலிப்பு, வெறுப்பு இவைகள் அதிகமாக தாழ்வு உணர்ச்சி மேலோங்கி தற்கொலைக்கு தூண்டும். பல் தேய்த்து, குளிப்பது போல சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க தினமும் ஒரு தடவை நினைத்து சந்தோஷமாக வாழ கற்றுக்கொள்ளுங்கள்.

நன்றி: பேராசிரியர்: சு. அர்த்தநாரி