Digital Time and Date

Welcome Note

Saturday, August 25, 2012

புற்றுநோயை தடுக்கும் புராக்கோலி . . . .


புராக்கோலி என்ற மேலைநாட்டு காய்கறியானது இதயநோய் மற்றும் புற்றுநோய்களை குணப்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.நார்விக்கில் உள்ள உணவு ஆராய்ச்சி மற்றும் ஜான் இன்ஸ் மையத்தினர் இதுதொடர்பான
ஆய்வில் ஈடுபட்டு சூப்பர் புராக்கோலியை கண்டறிந்துள்ளனர்.

இங்கிலாந்து போன்ற மேலைநாடுகளில் அதிகமாக விற்பனையாகும் புராக்கோலி, அங்கு மிகவும் விலை மலிவான காய்கறியாகும். முட்டைக்கோஸ் குடும்பத்தைச் சேர்ந்த ப்ராக்கோலியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, போலிக் அமிலம், கால்சியம், நார்ச்சத்து போன்றவை காணப்படுகின்றன. எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு ப்ரூக்கோலி முக்கிய பங்காற்றுகிறது. இதில் உள்ள தாதுஉப்புக்கள் உயர்ரத்த அழுத்தம், மற்றும் புற்றுநோயை கட்டுப்படுத்துகிறது.

சூப்பர் புராக்கோலி

நார்விக்கில் உள்ள உணவு ஆராய்ச்சி மற்றும் ஜான் இன்ஸ் மையத்தினர் ஆய்வு செய்து ஆரோக்கியத்துக்கு ஊக்கமளிக்கும் `குளூக்கோராபேனின்’ என்ற ஊட்டச்சத்தை மும்மடங்கு கொண்டுள்ள புதிய புராக்கோலியை உருவாக்கியுள்ளனர். இந்த `குளூக்கோராபேனின்’, இதயநோய் மற்றும் குடல், புராஸ்டேட் புற்றுநோய்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிரான தடுப்பாக அமையும் என்று ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

காவி பயங்கரவாதங்களை மக்களுக்கு நிரூபித்த Times Of India நாளிதழ்!----------------------------------------------------------------------
"தடை செய்யப்பட்ட இணையத் தளங்களில் 20 சதம் RSS மற்றும் சங் பரிவார் அமைப்புகளுடையவை"-டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ்"


டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி ஒன்று கீழே தரப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலத்தவர் பயந்தோடும்படியும், அதேநேரத்தில் அத்தகைய அச்சுறுத்தலுக்குக் காரணமானவர்கள் இஸ்லாமியர்கள் என்கிறவாறும் பொய்ச் செதிகளைப் பரப்பியதற்காக இன்று தடை செய்யப்பட்டுள்ள இணையத் தளங்களில் 20 சதம் RSS மற்றும் சங் பரிவார் அமைப்புகளுடையவை என்கிறது இச் செய்தி.

இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வண்ணம் பொய்யாகத் திருத்தி அமைக்கப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் இவை சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புக் கருத்துக்களைப் பரப்பின.

சீன ஆக்ரமிப்பிற்கு எதிராக தீக்குளிக்கும் திபெத்தியரின் படங்களை, “அஸ்ஸாம் மாநில இந்துக்களுக்கு எதிரான வங்கதேச முஸ்லிம்களின் வன்முறை” எனத் தலைப்பிட்டு சில மதவெறி பிடித்த விஷமிகள் வெளியிட்டன.

“வெளியிடப்பட்ட பல படங்களில் இத்தகைய உண்மைகளை வெளிப்படுத்தக் கூடிய பின்புலங்கள் வெட்டி நீக்கப்பட்டுள்ளன” என்று ஒரு அதிகாரி கூறியுள்ளார்.

புனே, பெங்களூரு, சென்னை முதலான இடங்களிலிருந்து வடகிழக்கு மாநிலத்தவர் பலரும் ஓடுவதற்குக் காரணமாக இருந்த குறுஞ்செய்திகள் பலவும் கூட இத்தகைய அமைப்புகளாலேயே கொடுக்கப்பட்டிருந்தன.

“தங்களது வெறுப்பு அரசியல் நோக்கத்திற்காகப் பலரும் அஸ்ஸாம் பிரச்சினையைப் பயன்படுத்திக் கொண்டனர். வலது சார்புடைய சங் அமைப்புகள் இதில் பெரும்பங்கு வகித்தன” என்ரார் ஒரு அதிகாரி. (ரத்த யாத்திரை புண்ணியவான் திரு அத்வானி அவர்களும் தனது நச்சு கருத்தை கக்கியது குறிபிடதக்கது) அஸ்ஸாமிய போடோக்கள் அனைவரும் இந்துக்கள் என அவர்கள் பரப்பிய செய்தியும் முழு உண்மையன்று. போடோக்களில் கிறிஸ்தவர்களும் உள்ளனர். (முந்தைய இன்று ஒரு தகவல் பதிவிலும் பார்த்தோம்) அதற்கு சில RSS கும்பலை சார்ந்தவர்கள் பொங்கியது குறிபிடதக்கது இப்போது இது உண்மை என்று நிரூபிக்க பட்டுவிட்டது !உண்மை ஒரு நாள் வந்தே தீரும் அல்லவா

பெங்களூரிலிருந்து பலரும் ஓடுவதற்குக் காரணமாக இருந்த, ‘நான்கு வடகிழக்கு மாநிலத்தவர் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு எதிராக ஃபட்வா (அறிவிப்பு )ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது’ எனப் பரப்பட்ட செய்தியும் இத்தகைய வலதுசாரி RSS சங்பரிவார் அமைப்புகளுடைய வேலையாகவே இருக்கலாம் எனச் சந்தேகம் உள்ளது.

பெங்களூரில் ரயில் ஒன்றில் மூன்று பெண்கள் குண்டு வைக்கத் திட்டமிட்டதாகப் பரப்பப்ப்ட்ட செய்தி பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த ஒருவரால் பதியப்பட்டது என்பது பின்னர் வெளியாகியது.

சுதந்திர தினத்தன்று ஐதராபாத்தில் பாகிஸ்தான் கொடி ஏற்றிக் கொண்டாடப்பட்டது என்றொரு செய்தி பரப்பப்பட்டது நினைவிருக்கும். இந்திய சிறுபான்மைனரின்(இஸ்லாமியர்கள்) தேசபக்தியைச் சந்தேகிக்கும் நோக்குடன் இச்செய்தி பரப்பப்பட்டது. இந்த ‘ஐதராபாத்’ பாகிஸ்தானிலுள்ள ஐதராபாத் என்பதும், அங்கு ஏற்றப்பட்ட கொடி தொடர்பான வீடியோ காட்சிதான் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரிசாவில் மருத்துவப் பணி ஆற்றிக் கொண்டிருந்த மருத்துவர் கிரஹாம் ஸ்டெய்ன்சையும் அவரது இரு குழந்தைகளையும் உயிருடன் எரித்துக் கொன்ற தாராசிங்கிற்கு ஆதரவான இன்னொரு இணையத் தளம், அஸ்ஸாம் கலவரத்திற்குக் காரணம் கிறிஸ்தவ மிஷனரிகள் எனவும், அவர்களே போடோக்களுக்கு ஆயுதங்களை அளித்தார்கள் எனவும் பொய்ச் செய்தியைப் பரப்பியது.

“வலது அமைப்புகள் பலவும் வடகிழக்கில் கால் பதிக்க விரும்புகின்றன. பழங்குடியினரைத் தம் பக்கம் ஈர்க்க விரும்புகின்றன. இன்றைய பிரச்சினையை அவை இந்த நோக்கில் பயன்படுத்த முயற்சிக்கின்றன. இந்தியர்களுக்கு எதிராகப் புலம் பெயர்ந்த சிறுபன்மயினர் இஸ்லாமியர்கள் என்பதாக ஒரு பிரச்சாரத்தைச் செய்து அரசியல் லாபம் பெற முயல்கின்றன” என அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

ஆர்.எஸ்.எஸ் VHP ,முதலான ஹிந்துத்வ அமைப்புகள் பலவும் பயந்தோடிய வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு உணவு முதலியவற்றை வழங்கின. பஜ்ரங்தளம் அஸ்சாமில் கலவரப் பகுதிகளில் கடை அடைப்பிற்கும் அழைப்பு விடுத்தது. இன்னும் சாதி பிரச்சனையே ஒழிந்த பாடில்லை இருபதோரம் நூற்றாண்டிலும் இது போன்ற மதவெறியர்கள் செய்கின்ற செயலகளுக்கு இந்தியா துண்டாட பட்டு விட்டது !!! உண்மையில் சொன்னால் அடுத்த வல்லரசு இந்தியவா சீனவா என்று எந்த அடிபடையில் ஒப்பீடு பார்க்கிறோம் ??? சீனா கம்முனிசம் சித்தாந்த என்ற ஒரே கொள்கையை கொண்ட நாடு அங்கு பெரும் மத கலவரம் என்ற வரலாறு ஒன்றை பார்க்க முடியாது ...ஆனால் இந்தியாவோ பல பல கலாசாரங்களை கொண்ட நாடு இப்படி உள்ள நாட்டில் இன்னும் இந்த கயவர்களை தடை செய்யாதது இந்திய இறையாண்மையை அசைத்து பார்பதும் இந்தியாவின் வளர்ச்சியின் அக்கறை இல்லா தன்மை மேலும் அரசியல்வாதிகளின் மெத்தன போக்கை தான் காண்பிக்கிறது ...எனக்கு தெரிந்த வரையில் இந்து முஸ்லிம் கலவரம் மற்றும் வெறுபுணர்வு பிரசாரம் சுதந்திரதிற்கு முன்னால் (வெள்ளையனின் பிரிதாலும் சூல்சியை தவிர) நடந்தாக வரலாறு இல்லை.... இந்தியாயவை சூடுகடாகும் தேச பக்தர்கள் என்ற போர்வையில் வேஷம் போடும் இந்த விஷமிகளை துரத்தும் வரையில் இந்தியாவின் பரிதாப நிலை எப்படி இருக்கும் என்பது நடுநிலயர்களுக்கு தான் வெளிச்சம் !

நன்றி -டைம்ஸ்
ஆதாரம் :-

http://timesofindia.indiatimes.com/india/20-of-banned-hate-sites-put-up-by-Hindu-groups/articleshow/15609191.cms

20% of banned hate sites put up by Anti Muslim groups

Deeptiman Tiwary, TNN | Aug 23, 2012, 01.54AM IST

NEW DELHI: The clamour over Pakistan fanning communal passions in India through social networking sites has missed a crucial detail. Around 20% of the web pages — blocked by government agencies — were uploaded by right-wing Hindu fundamentalists seeking to polarize the country on communal lines.

In these posts doctored images or videos showing alleged atrocities against tribal Bodos by Muslims have been tagged with provocative captions and point to extremist Hindu groups trying to fish in troubled waters to target minorities and fan tensions.

Sources in agencies involved in scanning internet and blocking inflammatory web pages say several posts had pictures or videos of Tibetans self-immolations in protest against Chinese occupation. These posts were, however, captioned as atrocities against "Assamese Hindus" by "illegal" migrant Muslims.

"Several images had been cropped in a way to obliterate the background that could have revealed the actual context of the pictures," said an official.

Agencies have also found clues indicating a large number of SMSs that spread panic among the northeast Indians living across the country were also generated by fringe Hindu groups. The panic led to a mass exodus of people from the north-east from several cities, including Pune, Bangalore and Chennai.

"Everyone is trying to ride the Assam conflict bandwagon for their own parochial and political gains. Right-wing Hindu groups have played a major role in spreading panic among the north-easterners," said the official. Their portrayal of all Bodos as Hindus is also inaccurate as some are Christians.

Sources said days before the exodus from Bangalore began, rabid SMSs about killing of four persons from the north-east and a fatwa being issued against people from the region started doing the rounds. These messages are suspected to have been spread by right-wing groups too.

A recent input from Bangalore about three women planning to bomb a train turned out to be a red herring. Later, the input was traced to an activist of Bajrang Dal.

Videos allegedly showing unfurling of a Pakistani flag on August 15 in Hyderabad were uploaded questioning the integrity and patriotism of Muslims in the Indian city. The video was found to be that of Pakistan's Hyderabad.

Another right-wing group, inspired by Dara Singh, the killer of Australian missionary Graham Steins, called the Assam conflict a handiwork of Christian missionaries who have allegedly armed Bodos.

"Several right-wing groups are trying to increase their influence in the north-east. Some mainstream groups too have been trying to woo tribals across the nation and so have openly pledged support to Bodo struggle. They see the present conflict as the best situation to make inroads in the north-east. The attempt is also at polarizing the entire nation as Indians versus immigrant Muslims to gain political ground," said the official.

Several Hindu groups have also come forward to help fleeing north-easterners. RSS and certain other Hindu outfits arranged for food and other services for north-easterners fleeing Bangalore. They even exhorted them to not to flee as the group would protect them.

The ABVP even set up 24-hour helplines in 20 cities across India for students from the north-east. Bajrang Dal too called bandhs in riot-affected districts in Assam.

Thursday, August 23, 2012

இசுரேலின் கோரப்பிடியில் பாலஸ்தீனத்தின் கதை - வீடியோ ! | வினவு !

இசுரேலின் கோரப்பிடியில் பாலஸ்தீனத்தின் கதை - வீடியோ ! | வினவு !

வங்கதேச முஸ்லிம் அகதிகள் விரட்டப்பட வேண்டியவர்களா ? |

வங்கதேச முஸ்லிம் அகதிகள் விரட்டப்பட வேண்டியவர்களா ? | வினவு !

கடத்தல்காரர்களெல்லாம் முஸ்லிம்களா ? | வினவு !

கடத்தல்காரர்களெல்லாம் முஸ்லிம்களா ? | வினவு !

அம்பேத்கர் மதம் மாறியது ஏன் ? | வினவு !

அம்பேத்கர் மதம் மாறியது ஏன் ? | வினவு !

பணம், வேலை, கல்விக்காக மதம் மாறுவது குற்றமா ? | வினவு !

பணம், வேலை, கல்விக்காக மதம் மாறுவது குற்றமா ? | வினவு !

மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா? | வினவு !

மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா? | வினவு !

வங்கதேச முஸ்லிம் அகதிகள் விரட்டப்பட வேண்டியவர்களா ? | வினவு !

வங்கதேச முஸ்லிம் அகதிகள் விரட்டப்பட வேண்டியவர்களா ? | வினவு !