Digital Time and Date

Welcome Note

Saturday, June 9, 2012

முதுகு வலியை தவிர்க்க முத்தான வழிகள்!முதுகு வலி என்பது இன்று பொதுவாக காணப்படக்கூடிய ஒரு உடல் இயக்க பாதிப்பாகும். இது இன்று 75% பொதுமக்களை பாதிக்கிறது. பொரும்பாலான முதுகு வலி, தசை பிடிப்பு மற்றும் உடலின் நேர்கோட்டமைப்பில் ஏற்படும் மாறுபாட்டால் வருகிறது.

கீழ்கண்ட குறிப்புகள் முதுகு வலி வராமல் தடுப்பதோடு வலி இருப்பவர்களுக்கு வலியை குறைக்க உதவுகிறது.

1. எப்பொழுதும் சுறுசுறுப்போடு இருப்பது, பொதுவான உடற்பயிற்சிகள் செய்வது. (உதாரணமாக) நடப்பது, நீச்சல் அடிப்பது, சைக்கிள் ஓட்டுவது.
2. தாழ்ந்த நாற்காலியில் அதிக நேரம் அமர வேண்டாம்.

3. உறங்கும் போது கடினமான மெத்தையை உபயோகிக்கவும் (அல்லது) தரையில் உறங்கவும்.

4. நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போது இருக்கையை உங்கள் உயரத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளவும், அதிக தூரம் பயணிக்கும் போது பிரேக் மெதுவாக அடிக்கவும்.

5. கணிணியில் அதிக நேரம் வேலை பார்பவர்கள் தங்கள் இருக்கையை சரி செய்து, தனது முழு முதுகும் இருக்கையில் (நிமிர்ந்தவாறு) இருக்கும்படி செய்யவும்.
6. அதிக எடையை தூக்கும் போது உங்கள் மார்போடு அணைத்தபடி தூக்கவும்.

7. அதிக நேரம் முதுகு திரும்பியவாறு வேலை செய்ய வேண்டாம்.
8. அதிக நேரம் நின்று கொண்டே பயணிக்க வேண்டாம்.

9. முதுகு வலி எடுத்தால், நீண்ட நேரம் அமருவதை தவிர்க்கவும். 30 நிமிடங்களுக்கு ஒரு முறை எழுந்து சில பொதுவான பயிற்சிகள் செய்யவும்.

10. கீழ்கண்ட ஏதேனும் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக (பிசியோதெரபிஸ்டை) அணுகவும்.

1) தொடர்ந்து 5 நாட்களுக்கு மேல் முதுகு வலி இருப்பின்,
2) வலி கால்களுக்கு பரவுதல், கால்களுக்கு பரவுதல், கால்களில் உணர்ச்சியின்மை (அல்லது) எரிச்சல்,
3) குனிந்தால் பளிச்சென்று வலி பரவுதல்,
4) நீண்ட நேரம், நின்றால், அமர்ந்தால் (அல்லது) நெடுந்தூரம் பயனித்தல் முதுகுவலி வருவது.

எழுந்து நின்று மரியாதை செய்தல் பற்றி இஸ்லாம்!!!


வயதில் பெரியவர், ஆசிரியர், தலைவர்கள், முதலாளிகள், நிர்வாகிகள், மேலதிகாரிகள் போன்றோருக்காக மற்றவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்வதை உலகமெங்கும் காண்கிறோம்.

மேல் நிலையில் உள்ளவர்கள் இந்த மரியாதையை உளமாற விரும்புவதையும் நாம் காண்கிறோம். ஆனால் இஸ்லாத்தில் இதற்கு அனுமதி இல்லை.

எந்த மனிதரும் எந்த மனிதருக்காகவும் மரியாதை செய்யும் விதமாக எழுந்து நிற்கக் கூடாது என்று நபிகள் நாயகம் கட்டளை பிறப்பித்தார்கள்.

நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபராகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி). அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்களும், இப்னு சஃப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா (ரலி) அவர்கள் 'அமருங்கள்' என்றனர். 'தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றும் முஆவியா (ரலி) கூறினார்கள்.
நூல்கள்: திர்மிதீ 2769 அபூதாவூத் 4552

மன்னருக்காகக் கூட மக்கள் எழக் கூடாது. அவ்வாறு எழ வேண்டும் என்று எந்த முஸ்லிமும் எதிர்பார்க்கக் கூடாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்துச் சென்றதை இந்த வரலாற்றிருந்து நாம் அறிகிறோம்.

உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: அஹ்மத் 12068, 11895 திர்மிதீ 2678


தமக்காக மக்கள் எழக் கூடாது என்பதை எந்த அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) வெறுத்தார்கள் என்பதற்கு பின்வரும் நிகழ்ச்சி சான்றாகவுள்ளது.

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன் 'பாரசீக, ரோமாபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே! அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களே! இனி மேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள்! அவர்கள் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள்! அவர்கள் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள்' என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 701


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுத போது மக்களும் உட்கார்ந்து தொழுததாக புகாரி 689, 732, 733, 805, 1114, 688 ஆகிய ஹதீஸ்களிலும் காணலாம். யாருக்கேனும் நிற்க இயலாத அளவுக்கு உடல் உபாதை ஏற்பட்டால் அவர் உட்கார்ந்து தொழ அனுமதி உண்டு.

அந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவித்தார்கள். ஆனால் பின்னால் தொழுதவர்களுக்கு எந்த உபாதையும் இல்லாததால் அவர்கள் நின்று தொழுதார்கள். அவர்கள் நபிகள் நாயகத்துக்கு மரியாதை செய்வதற்காக நிற்கவில்லை.

ஆனாலும் முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அமர்ந்திருக்க பின்னால் மற்றவர்கள் நிற்பதைப் பார்க்கும் போது நபிகள் நாயகத்தின் முன்னே யாரும் அமரக் கூடாது என்பதற்காக நிற்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. ஏனைய நாட்டு மன்னர்களுக்கு முன் மக்கள் நிற்பது போல் இது தோற்றமளிக்கின்றது. அந்த வாடை கூட தம் மீது வீசக் கூடாது என்பதற்காக அனைவரையும் அமர்ந்து தொழுமாறு நபிகள் நாயகம் ஆணையிடுகிறார்கள்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.வரவேற்பதற்காகவும், அன்பை வெளிப்படுத்துவதற்காகவும் ஒருவருக்காக மற்றவர் எழலாம். மரியாதைக்காகத் தான் எழக் கூடாது.

பெற்ற மகள் தம்மைத் தேடி வந்த போது வாசல் வரை சென்று நபிகள் நாயகம் (ஸல்) வரவேற்றுள்ளனர். (திர்மிதீ 3807)

நம் வீட்டுக்கு ஒருவர் வரும் போது நாம் எழலாம். அது போல் அவர் வீட்டுக்கு நாம் போகும் போது அவர் எழ வேண்டும். இதற்குப் பெயர் தான் வரவேற்பு.

ஒருவர் நம்மிடம் வரும் போது நாம் எழுந்து வரவேற்கிறோம். ஆனால் அவரிடம் நாம் சென்றால் அவர் எழுந்து வரவேற்பதில்லை என்றால் மரியாதை நிமித்தமாகவே அவருக்கு நாம் எழுந்துள்ளோம் என்பது பொருள். இது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. எழுந்து நிற்பது இரு தரப்புக்கும் பொதுவாக இருந்தால் மட்டுமே அது வரவேற்பில் அடங்கும்.

குடல் புண் (அல்சர்) பற்றி தெரியுமா உங்களுக்கு ?வயிற்றிலே ஒன்றும் இல்லாதது போன்ற உணர்வும், பல்லைக் கடிக்க வேண்டும் என்ற உணர்வும் தோன்றுகிறதா? நெஞ்செரிச்சல் உள்ளதா? வயிற்றிலிருந்து புளிப்பு நீர் வாய் நிறைய எதுக்களிக்கிறதா? இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களுக்கு குடல் புண் இருக்கலாம்.

குடல் புண் என்றால் என்ன?

இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின் உட்புறத்தில் மேற்பகுதியில் ஏற்படும் புண்ணை குடல் புண் என்கிறோம். செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

குடல் புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டு. இதை அமில குடல் புண்நோய் என்றும் அழைக்கிறோம்.

புண் எதனால் ஏற்படுகிறது?

குடல் புண் தோன்றுவதற்கரிய காரணங்கள் இதுவரை தெளிவாக அறியப்படவில்லை இருப்பினும் புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் குடல் புண் வருவதற்கு வழி வகுக்கின்றன. சாலிசிலேட் மருந்துகள், ஆஸ்பிரின் முதலான வலி நிவாரண மருந்துகள், காயங்களுக்காகவும் மூட்டு வலிகளுக்காகவும் சாப்பிடும் மருந்துகள், வீக்கத்தைக் குறைக்கச் சாப்பிடும் மருந்துகள் போன்ற மருந்துகளின் காரணமாகவும் குடல் புண் வருகிறது.

குடல் புண் வகைகள்

குடல் புண்ணை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1) வாய்வுக் கோளாறால் ஏற்படும் குடல் புண் .

2) சிறு குடலில் ஏற்படும் குடல் புண்.

குடற்புண் இருப்பதை அறிவது எப்படி?

காரணமின்றி பற்களைக் கடித்தல், துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சலோடு கூடிய வலி, மார்பு எலும்பு கூட்டுக்கு கீழே வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற மாயத் தோற்றமும் இருந்தால் குடல் புண் இருப்பதாகக் கொள்ளலாம்.

இந்தப் பகுதியில் ஏற்படும் அசெளகரியங்கள், சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ ஏற்படுகின்றன. இதை உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அமிலத்தை நடுநிலைப்படுத்தும் மருந்துகளை உட்கொள்வதின் மூலமாகவோ நிவர்த்தி செய்யலாம். சில நேரங்களில் வாந்தியினால் வலி குறைகிறது. அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்க மாக வலி ஏற்படும். இவ் வலியானது காலை சிற்றுண்டிக்கு முன்பு வருவதே இல்லை. இரவு 12-2 மணி அளவில் அதிகமாகக் காணப்படுகிறது.

சில நேரங்களில் அமில நீரானது வாந்தியாவதும் உண்டு. குடல் புண் வலி தனியாக வருவதே இல்லை. வலி இருக்கும் காலத்தில் மார்பு எலும்புக் கூட்டுக்கு பின்னால் எரிவது போன்ற உணர்ச்சியும் உடன் ஏற்படும். இதையே நெஞ்செரிச்சல் என்கிறோம், வலி அதிகம் ஏற்படுவதே இல்லை. ஆனால் உடல் நலக்கேடு, அமைதியற்ற நிலை, பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும். இந்த மாதிரியான அசெளகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம்.

ஒருநபர் எந்த அளவுக்கு அடிக்கடி சாப்பிடுகிறார். என்பதைப் பொறுத்து இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும். சில நாட்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ விட்டு விட்டு வருவதும் தொடர்ந்து இருப்பதும் உண்டு. பிறகு இவ்வலி மறைந்து, சில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தோன்றாமலும் இருக்கலாம்.

சிலருக்கு இவ்வலி, குறிப்பிட்ட இடைவெளிவிட்டு தோன்றி, பல வருடங்களுக்கும் நீடிக்கலாம். அப்படி இருப்பின், அவருக்கு நாள்பட்ட குடல் புண் இருப்பதாகக் கருதலாம். அடிக்கடி வரக் கூடிய பசி உணர்வை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனென்றால் அது குடல் புண்ணின் விளைவாக கூட இருக்கலாம்.

மருத்துவம் செய்யாவிட்டால்...

குடல் புண்ணுக்கு மருத்துவம் செய்யாவிட்டல், ரத்தக் கசிவும் சமயத்தில் உதரப் போக்கும் ஏற்படும். ரத்தக் கசிவின் காரணமாக, அரைத்த காபிக் கொட்டை போன்று கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்த வாந்தி எடுப்பார், வலி நிவாரணியான ஆஸ்பரின் போன்றவற்றை சாப்பிட்டால் மிக மோசமான ரத்தப் போக்கு ஏற்படும். அதிகமான ரத்தப் போக்கோ அல்லது ரத்தக் கசிவோ மிகவும் அபாயகரமானதாகும்.

இரைப்பையில் சுரக்கும் நீர்களும் அமிலமும் குடல் புண்ணின் மேல் அடிக்கடி படுவதால், இரைப்பையில் துவாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இரைப்பையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழிவான அடிவயிற்றுப் பகுதிக்குத் தள்ளப்பட்டு, வயிற்று நீர்களால் அடி வயிற்றில் இருக்கும் உறுப்புக்கள் அனைத்தும் நனைந்து விடுகின்றன.ஆகவே, வயிற்று அறைகள் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படுகிறது. அதனால், வயிற்று அறை தோல்களில் வீக்கம் ஏற்படுகிறது. இதை உடனடி அறுவைச் சிகிச்சை மூலமே குணப்படுத்த முடியும்.

சாப்பிடும் உணவு வயிற்றுக்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படலாம். இதனால் சாப்பிட்ட உணவு வாந்தியாகி விடுகிறது.இதுவும்அறுவைச் சிகிச்சையால்தான் குணப்படுத்த முடியும். ஆகவே குடற்புண் இருந்தால் மேலே கண்ட பல வழிகளில் துன்பம் ஏற்படும். எனவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்..

செய்யக்கூடாதவை

0 புகைபிடிக்கக் கூடாது.

0 மது, காபி பானங்களை குடிக்கக் கூடாது வயிற்று வலியை அதிகப்படுத்தக கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது.

0 அதிகமாகச் சாப்பிடக்கூடாது.

0 பின்-இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.

0 சாப்பிட வேண்டிய உணவுகளைத் தவிர்க்கக் கூடாது.

0 சாப்பிட்டவுடன் முன்பக்கமாகச் சாய்வதோ, வளைவதோ கூடாது. அப்படிச்செய்தால் சாப்பிட்ட உணவு தொண்டைக் குழிக்குள் வந்து சேரும். இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.

0 இரவில் அதிக நேரம் விழித்திருக்கக் கூடாது.

0 மனநிலையை தடுமாற விடக் கூடாது.

0 அவசரப்படக் கூடாது.

0 கவலைப்படக் கூடாது.

0 மருத்துவ ஆலோசனைகளை அலட்சியப்படுத்தக் கூடாது.

செய்ய வேண்டியவை

0 குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும்

0 தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

0 அதிக வாழைப் பழங்களைச் சாப்பிட வேண்டும்.

0 தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவையூட்டிய லஸ்ஸி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

0 மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும்.

0 இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும்.

0 இருக்கமாக உடை அணியக் கூடாது.

0 மருத்துவரின் ஆலோசனைப்படி படுக்கையின் தலைப் பாகத்தை சிறிது உயர்த்திக் கொள்ளலாம்.

0 யோகாசனம், தியானம் முதலியவற்றைப் பயில வேண்டும்.

0 எப்போதும் ஜாலியா இருக்க வேண்டும்

0 அலுவலக வேலைகளை அங்கேயே விட்டுவிட வேண்டும்.

0 முறையாக, இறுக்கம் இல்லாத வாழ்வைப் பின்பற்ற வேண்டும்.

0 சுகாதாரத்தை பின்பற்றி குடல் புண் வருவதைத் தவிர்க்க வேண்டும்.

குடல் புண்ணுக்கு மருத்துவம் என்ன?

அனேக மருத்துவர்கள் பூரண ஓய்வையும் அதிகமான தூக்கத்தையும் சிபரிசு செய்கிறார்கள். தீவிரமான வேலைகளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது. எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், கவலைகள் குடல் புண்ணை அதிகப்படுத்தும், புகை பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது முதலியவற்றை விட வேண்டும். அமிலத்தை நடுநிலையாக்கும் மருந்துகளை அடிக்கடி சாப்பிட வேண்டும். தூக்க மருந்துகளையும் தேவைப்பட்டால் மன அமைதி தரும் மருந்துகளையும் சாப்பிட வேண்டும். இவை தவிர, தற்காலத்தில் புரோபான்தளின், சிமிடிடின், ராணிடிடின், •பாமாடிடின், சுரால்பேட், முதலியவும் பயன்படுகிறது, சிமிடிடின்தான் அதிகம் சிபரிசு செய்யப்படுகிறது. எந்த மருந்தாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனைப்படிதான் சாப்பிட வேண்டும்.

குடல் புண் உள்ளவர்களுக்கு உரிய ஆகாரம் என்ன?பொரித்த அல்லது தாளிதம் செய்த உணவு வகைகள், ஏற்கனவே உள்ள குடற் புண்களை அதிகப்படுத்தும் என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை. இருப்பினும் சிபாரிசு செய்யப்பட்ட உணவு வகைகளைக் கீழே காணலாம். சத்தான சரிவிகித உணவு.

0 குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம்.

0 காபி, மது, காற்று அடைக்கப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

0 டீ தடை செய்யப்பட்ட பானம் அல்ல. இருப்பினும் பால் கலக்காத டீயைச் சாப்பிடக் கூடாது. தினமும் சாப்பிடும் டீயின் அளவைக் குறைத்தக் கொள்ள வேண்டும்.

0 வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கிவிட வேண்டும்.

0 மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது.

0 பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.

0 பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசெளகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது.

0 பால் சாப்பிடுவதை யாரும் சிபரிசு செய்வதில்லை.

Thanks to Dr.அம்புஜவல்லி, தஞ்சாவூர்.

ட்விட்டரின் லோகோ மாறுகிறது .....


blue bird
ட்விட்டர் புதிய லோகோவை அறிமுகம் செய்திருக்கிறது. ரெக்கைகட்டி பறந்து கொண்டிருக்கும் சமூக வலைத்தளங்களில் ட்விட்டருக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு.
ட்விட்டர் நிறுவனம் தனது ப்ளூபேர்டு லோகோவை புதிதாக வடிவமைத்திருக்கிறது. இந்த புதிய லோகோவிலும் அதே ப்ளூபேர்டு தான் இருக்கிறது. ஆனால் ட்விட்டர் நிறுவனம் இந்த பறவையின் வடிவமைப்பில் சில மாற்றங்களை செய்திருக்கிறது.
இந்த பறவையின் அலகு வானத்தை பார்த்தது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ட்விட்டர் பறவை ஐந்து இறகுகளை கொண்டிருந்தது. அதில் ஒரு இறகுக்கு கத்தரி போட்டுவிட்டதால், இப்போது இந்த புதிய லோகோவில் நான்கு இறகுகள் தான் உள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்த பறவைக்கு ஹேர்கட்டும் செய்யப்பட்டுவிட்டது. தலையில் இருந்த குருவி முடியையும் இப்போது காணவில்லை.
இருப்பினும் இந்த ட்விட்டர் பறவையின் இந்த புதிய லோகோவை பார்க்கும் போது, மிக சுதந்திரத்துடனும், நட்பு பாராட்டும் வகையிலும் பறப்பது போன்ற உணர்வை கொடு்ப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.


எல்லையில்லா சுதந்திரத்தையும், தன்நம்பிக்கையையும் குறிக்கிறது இந்த புதிய லோகோ. இந்த புதிய ட்விட்டர் பறவை அதிக உற்சாகத்துடன், இன்னும் பல தேசங்கள் பறக்கும் போல் தெரிகிறது.

முகத்தில் வடியும் எண்ணெய்த் தன்மையைப் போக்க சில டிப்ஸ்வெயில் காலத்தில் வெளியில் போவ தென்பது கடினமான ஒன்றாக தான் இருக்கும். உங்களுக்கு எண்ணெய் பசை சருமமாக இருந்தால் வெயில் உங்கள் எண்ணெய் பசையை மேலும் அதிகரிக்கச் செய்து உங்கள் முக அழகை கெடுத்து விடும். கவலையை விடுங்க எண்ணெய் பசை நீங்கி அழகாக காட்சியளிக்க இதோ சில டிப்ஸ்

எண்ணெய் பசை நீங்க:
வெள்ளரிக்காயை தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம். வெள்ளரிச்சாற்றுடன் பால் பவுடர் கலந்து தடவினாலும் எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும் இதை தொடர்ந்து ஒரு மாத காலமாவது பின்பற்ற வேண்டும்.

தக்காளி பழத்தை நன்கு பிழிந்து சாறாக எடுத்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன் வெள்ளரிப்பழம் அல்லது ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும் கழு வலாம்.

பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன் காரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால் அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.
எண்ணெய் பசை சருமத்தினர் அடிக்கடி குளிர்ந்த தண்ணீரீல் முகம் கழுவ வேண்டும். முகத்தை அலம்ப சோப்பிற்கு பதில் கடலைமாவை பயன்படுத்தலாம். இதனால் எண்ணெய் வழிவது குறைவதோடு முகமும் பளபளப்பாக இருக்கும்.

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் எண்ணெய் வழிவது குறையும். வெள்ளரிக்காய் சாறு எலுமிச்சம் பழச்சாறு, சந்தன தூள், பாதாம் பவுடர், தயிர், உருளைக்கிழங்கு சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அவற்றை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் எண்ணெய் வழிவது குறையும்.

சோளத்தை நன்கு பவுடர் செய்து தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகத்தின் எண்ணெய்ப் பசை நீங்கும். எண்ணெய்ப் பசை சருமத்தினர் வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும் சிறிது தயிர், கடலை மா மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும்.

எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சை சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு அவற்றை நன்றாக கலக்கி முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும்.

பப்பாளி கூழ், முல்தானி மட்டி, வேப்பிலை பொடி ஆகியவற்றை நன்றாக பசை போல் குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால் முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் தன்மை குறையும்.

உங்கள் முகத்தில் எண்ணெய் பசை நீங்கி பொலிவு பெற மேற்கண்ட வழி முறை களை பின்பற்றுங்கள்.

கல்கி அவதாரம் பற்றிய தகவல் !!!! (Must read )

இந்துக்களின் வேதங்களில் மிக பிரபலமாக அறியப்படும் "கல்கி அவதாரம்" குறித்து -அவர் பூமியில் குழப்பங்களும்,கொடுமைகளும் மலிந்து காணப்படும் பொழுது தர்மத்தை நிலைநாட்ட அவதரிப்பார் எனவும் நம்பபடுகிறது.இனி அவர் பூமியில் பிறக்க போவதில்லை.,ஆம்! அவர் ஏற்கனவே பிறந்து விட்டார் ... யார் அவர் ?
ஓர் ஆய்வு பார்வை .,

எப்போது வருவார் கல்கி அவதார்...

ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.

இதை நான் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.

ஆனால், கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, “பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி” என்னும் இந்த புத்தகம், வங்காளத்தில் இருந்து வெளிவந்ததாகும். இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய அத்தாட்சியாக இருக்கிறது. இதை எழுதியது,தலைசிறந்த ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும், ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார்.

பண்டிட் வைத் ப்ரகாஷ, பன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற்றும் அயரா உழைப்பில் உருவான இப்புத்தகத்தை, இதே போல ஆய்வு செய்யும் எட்டு கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும், முழுக்க இப்புத்தகத்தை படித்துணர்ந்து, பலமான ஆதாரங்களினால்,இப்புத்தகத்தின் தகவல், முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர்.

இந்தியாவின் தலைச்சிறந்த வேதங்கள், குறிப்பிடும் தூதரும் வழிகாட்டியுமான கல்கி அவதாரம், மக்காவில் பிறந்த முஹம்மது என்னும் மாமனிதரே ஆவார். ஆதனால்,ஹிந்துக்கள், இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல், ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு, இவ்வுலகில் உதித்து, இறைத்தூதை எத்தி வைத்து, வாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரை ஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். இவரது ஆராய்ச்சியின் இறையாண்மையை நிரூபிக்க, பண்டிட், தம் வேதத்திலிருந்து தக்க சான்றுகளை முன்வைக்கிறார்.

1.வேதங்கள், கல்கி அவதாரம் தான், பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இது, கடைசி தூதர்,முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.

2.ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் ‘ஜஸீரத்துல் அரப்’ என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.

3.ஹிந்து புனித நூல்களில், கல்கி அவதாரத்தின் தந்தையை, விஷ்னு பகத் என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால்,இறைவன், அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடு, பகத் என்றால் அடிமை என்று அர்த்தம்.
ஆக, விஷ்னு பகத் என்பது, அல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில், அப்துல்லாஹ் என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு, சாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆக,இறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா என்பது,உறுதிப்படுகிறது
.
4.அதோடு, கல்கி அவதாரம், ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும்,வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள்ளது. ஆக, இது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்.

5.கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன.. இதுவும், மிக உயரிய, மதிப்புமிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால், முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.
6.கல்கி அவதாரத்துக்கு, ஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆக, மக்காவிலேயே, அல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.

7.மேலும், கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும்,அதன் மூலம் அவர், இவ்வுலகத்தையும், ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘மிஃராஜ்’ இரவில், ‘புராக்’ வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது, இதைத்தானே சொல்கிறது?

8.அதோடு, கல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும் எனவும்,இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது. முஹம்மதுக்கு, பத்ரு போர்க்களத்தில், இறைவனின் உதவி நேரடியாக தன் ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.

9.மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது, கல்கி அவதாரம்,குதிரையேற்றத்திலும், அம்பெய்துவதிலும், வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார்.. இந்த இடத்தில், பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன சொல்கிறார் என்பது, அதி முக்கியமான, கவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும். அதாவது, குதிரை, வாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டது, தற்போது, நவீன ஆயுதங்களான, துப்பாக்கிகள்,பீரங்கிகள், ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால், வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. உண்மையில், வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பது, புனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

Friday, June 8, 2012

നിസാരമാക്കി നിസ്ക്കാരത്തെ ഒരാള്‍ ഉപേക്ഷിച്ചാല്‍?

 
നിസാരമാക്കി നിസ്ക്കാരത്തെ ഒരാള്‍ ഉപേക്ഷിച്ചാല്‍ 15 വിധം ശിക്ഷ കൊണ്ട്‌ അവനെ ശിക്ഷിക്കപ്പെടും...ഈ ലോകത്ത്‌ വെച്ച് ആറും..മരണസമയത്ത്‌ മൂന്നും..... ഖബറില്‍ വെച്ച് മൂന്നും..തന്‍റെ റബ്ബിനെ കാണുന്ന സമയത്ത് (ഖിയാമത്ത്‌ നാളില്‍) മൂന്നും

* തന്‍റെ ജീവിതത്തില്‍ നിന്ന് ബര്‍ക്കത്തിനെ നീക്കപ്പെടും.
* തന്‍റെ മുഖത്ത്‌ നിന്ന് സജ്ജനങ്ങളുടെ ലക്ഷണം മായിക്കപ്പെടും.
* തന്‍റെ മറ്റു സല്കര്‍മ്മങ്ങള്‍ക്ക് പ്രതിഫലം ലഭിക്കുകയില്ല.
* തന്‍റെ പ്രാര്‍ത്ഥന ഉയര്‍ത്തപ്പെടുകയില്ല (സ്വീകരിക്കപ്പെടുകയില്ല).
* സജ്ജനങ്ങളുടെ പ്രാര്‍ത്ഥനയില്‍ അവന്‍ ഉള്‍പ്പെടുകയില്ല.
* ഈമാന്‍ കൂടാതെ തന്‍റെ ആത്മാവ്‌ പുറപ്പെടും.
മരണ സമയത്തുള്ള ശിക്ഷകള്‍ -------------------------------
* നിന്ദ്യനായി മരിക്കും.
* വിശന്നവനായി മരിക്കും.
* ദാഹിച്ചവനായി മരിക്കും (തല്‍സമയം സമുദ്രത്തിലെ വെള്ളം മുഴുവന്‍ കുടിച്ചാലും ദാഹശമനം ലഭിക്കുകയില്ല).
ഖബറിലുള്ള ശിക്ഷകള്‍-------------------------
* തന്‍റെ വാരിയെല്ലുകള്‍ തമ്മില്‍ കോര്‍ക്കുന്ന വിധം ഖബര്‍ അവനെ ഞെരിച്ച് അവന്‍റെ മേല്‍ കുടുസ്സാക്കപ്പെടും.
* തന്‍റെ ഖബറില്‍ തീ കത്തിക്കപ്പെടുകയും രാപ്പകല്‍ ആ തീയില്‍ അവന്‍ കിടന്ന്‌ മറിഞ്ഞു കൊണ്ടിരിക്കും
* ശുജാഹുല്‍ അഖ്റഹ് എന്ന സര്‍പ്പത്തെ അവന്‍റെ മേല്‍ അധികാരപ്പെടുത്തും. നിസ്കാരം പാഴാക്കിയതിന്റെ കണക്കനുസരിച്ച് അവനെ അത്‌ ഭയങ്കര ശബ്ദത്തോടെ കൊത്തികൊണ്ടിരിക്കും. ഓരോ കൊത്തിനും അവന്‍ എഴുപത്‌ മുഴം ഭൂമിയില്‍ ആണ്‍ടുപോകും. ഞാന്‍ നിന്നെ കൊത്തികൊണ്ടേയിരിക്കാന്‍ എന്‍റെ റബ്ബ് എന്നെ അധികാരപ്പെടുത്തിയിരിക്കുന്നു എന്ന് സര്‍പ്പം പറയും.
ഖിയാമത്ത് നാളില്‍ ലഭിക്കുന്ന ശിക്ഷകള്‍----------------------------------------
* ആകാശം പോട്ടിപിളര്‍ന്നാല്‍ എഴുപത്‌ മുഴം വലിപ്പമുള്ള ചങ്ങലയുമായി ഒരു മലക്ക്‌ വന്ന് അവന്‍റെ പിരടിക്ക് കെട്ടും. അത്‌ അവന്‍റെ വായിലൂടെ കടത്തി പിന്‍ദ്വാരത്തിലൂടെ പുറപ്പെടീക്കും ശേഷം ഇപ്രകാരം വിളിച്ച് പറയും 'ഇത് നിസ്കാരം ഉപേക്ഷിച്ചവനുള്ള ശിക്ഷയാണ്'
* അല്ലാഹു അവനിലേക്ക്‌ അനുഗ്രഹത്തിന്‍റെ നോട്ടം നോക്കുകയില്ല.
* അവന് ശക്തിയായ വേദനയുള്ള ശിക്ഷ ലഭിച്ചു കൊണ്ടെയിരിക്കും. അവനെ ശുദ്ധികരിക്കുകയില്ല.
അളളാഹു നമ്മെ കാത്ത് രക്ഷിക്കട്ടെ...

நிலநடுக்கம் ஓர் ஏச்சரிக்கையா?

 

விஞ்ஞானம் அசுர வளர்ச்சி அடைந்துவரும் நேரத்தில் விஞ்ஞானிகளால் தடுக்கமுடியாத பெரும் சேதங்களும் உலகத்தில் நடக்கத்தான் செய்கின்றன.

விஞ்ஞான வளர்ச்சியில் உச்சத்தில் இருக்கும் ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் கூட மிகப்பெரிய சேதங்கள் ஏற்படுகின்றன. சுனாமி போன்ற பேராபத்துகள் வளர்ச்சியடைந்த பெருநாடுகளைக்கூட விட்டுவைக்கவில்லை.


2004 ஆம் ஆண்டு இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைத் தாக்கிய சுனாமியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். பல அதிசயமான நிகழ்வுகளையும் ஆச்சரியக் கண் கொண்டு பார்த்தவர்கள் ஏராளம். இவ்வளவு பெரிய பயங்கரம் நடக்குமா? என்று கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு பனைமரம் உயரத்திற்கு கடல் அலைகள் ஏற்பட்டு பல லட்சம் மக்களை அள்ளிக் கொண்டு சென்றது.

பூமி பல அடுக்குகளாக அமைந்திருப்பதும் பூமிக்குள் நெருப்பு குழம்புகள் இருப்பதும் இது போன்ற நில நடுக்கங்கள் ஏற்பட காரணமாக அமைகிறது.

பூமியின் மேற்பரப்பு பெரும் பாளங்களாக அமைந்துள்ளது. இவை நகரும் பிளேட்டுகளாக இருக்கிறது. நிலப்பரப்பிலும், நீரின் அடியிலுமாக உள்ள இவற்றில் ஏழு பிளேட்டுகள் மிகப் பெரியதாகவும், குறைந்தது ஒரு டஜன் சிறிய பிளேட்டுகளும் உள்ளன.

இந்தப் பிளேட்டுகள் சுமார் 80 கி.மீ. வரை தடிமன் கொண்டதாக இருக்கிறது. இதனடியில் பாறைகள் கொதிக்கும் குழம்பாக இருப்பதாலும், பூமியின் சுழற்சி வேகத்தில் இந்தப் பாறைக் குழம்பு நகர்வதாலும், மேலே இருக்கும் பிளேட்டுகள் ஒன்றுடன் ஒன்று உராய்வதுடன் நகர்ந்தும் செல்கிறது.

இந்தப் பிளேட்டுகள் ஒரு வருடத்திற்கு ஒரு செ.மீ. முதல் சுமார் 13 செ.மீ. வரை நகர்கிறது. இது நமது உலக வேகத்திற்கு மிக சிறியதாக இருந்தாலும் இந்த பிளேட்களின் லேசான உராய்வும் கூட பெரும் பூகம்பம் ஏற்படுத்தக் கூடியவை.

சிறிய உராய்வு கூட ஒரு நாட்டையே தலைகீழாக மாற்றிப் போடும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இந்தியாவில் இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழ ஆரம்பித்துள்ளது.

இந்தோனேஷியாவின் சும்தரா தீவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு அதைச் சுற்றியுள்ள நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

மனிதர்களைச் சோதிப்பதற்காக அல்லாஹ் இது போன்ற இடர்களை ஏற்படுத்துவான். மனிதர்கள் தங்கள் செயல்களை மதிப்பீடு செய்வதற்காகவும் இதன் பின்னர் திருந்தி வாழ்வதற்காகவும் இதுபோன்ற சோதனைகளை ஏற்படுத்துவதாக அல்லாஹ் கூறுகிறான்.

ஒவ்வொரு வருடமும் ஒரு தடவையோ, இரண்டு தடவைகளோ தாங்கள் சோதிக்கப்படுவதை அவர்கள் உணர மாட்டார்களா? பின்னரும் அவர்கள் திருந்திக் கொள்ளவில்லை. படிப்பினை பெறுவதுமில்லை.
[அல்குர்ஆன் 9:126]

இதை உணர்ந்து நடக்கும் நல்லவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்வானாக......

பென்ட்ரைவ் ட்ரிக்ஸ்: ஃபோல்டர் ஷார்ட்கட் பாதிப்பிற்கான தீர்வு ?பென்ட்ரைவ் ட்ரிக்ஸ்: ஃபோல்டர் ஷார்ட்கட் பாதிப்பிற்கான தீர்வு

பென் ட்ரைவ் மற்றும் எக்ஸ்டெர்னல் ஹார்டிஸ்க் ஆகியவற்றை நாம் தினசரி அலுவல் நிமித்தமாகவும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும் பல கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் பயன் படுத்தி வருகிறோம். இவ்வாறான பயன்பாட்டில் நம்மை அறியாமலேயே சில சமயங்களில் வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதலுக்கு உள்ளான கணினிகளில் பயன்படுத்தும் நிலை உண்டாகி விடுவது இயல்புதான்.

பெரும்பாலும் நமது அதி முக்கியமான கோப்புகள் (புகைப்படங்கள், பல நாட்கள் செலவழித்து உருவாக்கிய ஆவணங்கள்) அனைத்தையும் பென் ட்ரைவ்களில்தான் வைத்திருப்போம். மால்வேர் தாக்குதல்களுக்கு உள்ளான கணினிகளில் இவற்றை பயன் படுத்திய பிறகு, நமது பென் ட்ரைவை சோதித்துப் பார்த்தால், நாம் அதில் வைத்திருந்த ஃபோல்டர்கள் அனைத்தும் காணாமல் போய், வெறும் 1 KB மட்டுமே அளவுள்ள அவற்றின் ஷார்ட்கட்கள் மட்டுமே இருப்பதைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கலாம்.

ஒரு சிலர், பென் ட்ரைவில் உள்ள அனைத்தும் போய்விட்டது என்று எண்ணி ஃபார்மெட் கூட செய்திருக்கிறார்கள். பல நாள் உழைப்பு வீணாகிவிட்டதே என்றெண்ணி தலையில் கைவைத்து அமருவதை விட, கொஞ்சம் சிந்தித்தால் போதும் இழந்ததாக கருதிய கோப்புறைகளை மீட்டெடுத்து விடலாம்.

முதலில் நாம் செய்ய வேண்டியது, நமது பென் ட்ரைவ் அல்லது எக்ஸ்டர்னல் ட்ரைவ் லெட்டரை அறிந்து கொண்டு (உதாரணமாக G: ), ஸ்டார்ட் மெனுவில் ரன் கட்டளைக்கு சென்று CMD என டைப் செய்து DOS prompt இற்கு செல்லுங்கள். அங்கு ட்ரைவ் லெட்டரை டைப் செய்து (G:) என்டர் கீயை அழுத்தி, அந்த குறிப்பிட்ட ட்ரைவிற்கு செல்லுங்கள். அங்கு DIR/AD என டைப் செய்து என்டர் கீயை அழுத்த, நமது ட்ரைவில் உள்ள அனைத்து ஃபோல்டர்களும் (நாம் இழந்ததாக கருதிய) hidden வடிவில் மறைக்கப்பட்டிருப்பதை காணலாம்.

இவற்றை எப்படி மீட்டெடுக்கலாம்?

இதே DOS prompt -ல் இருந்து கொண்டு, Attrib -r -s -h /s /d G:*.* என்ற கட்டளையை கொடுங்கள். அவ்வளவுதான் உங்கள் கோப்புறைகள் மீட்கப்பட்டன. பிறகு தேவையற்ற ஷார்ட்கட்கள், மற்றும் வைரஸ் என சந்தேகிக்கப்படும் கோப்புகள் அனைத்தையும் டெலிட் செய்து விடுங்கள்.

இந்து மதத்தில் சிலை வணக்கம் இல்லை

இந்து மதத்தில் சிலை வணக்கம் இல்லை என்பதை இந்து பண்டிதர்களும் இந்து அறிஞர்களும்
ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் மனிதன் வணங்கத் துவங்கும் ஆரம்ப காலகட்டங்களில்
அவனது மனதை ஒருமைப்படுத்த சிலை அவசியமாகிறது. மனித மனம் ஒருமைப்படும் பக்குவம்
வந்த பிறகு அந்த சிலை அவசியமில்லை. சரியா?

பதில்:டாக்டர் ஜாஹிர் நாயக் அவர்களிடம் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலினை தமிழாக்கம் செய்து தந்திருக்கிறேன். படியுங்கள். பரப்புங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிய போதுமானவன் (முகநூல் வழியாக முஹம்மது மீராசாகிப்)

மனதை ஒருமை படுத்துவதில் உச்சநிலையில் இருக்கிறார்கள் இஸ்லாமியர்கள்:

மனதை ஒருமை படுத்துவதில் உச்சநிலையில் உள்ளவர்கள் இஸ்லாமியர்களே! மனிதன் கடவுளை
வணங்கத் துவங்கும் ஆரம்ப காலகட்டங்களில் அவனது மனதை ஒருமைப்படுத்த சிலை
அவசியமாகிறது. மனித மனம் ஒருமைப்படும் நிலை வந்த பிறகு அந்த சிலை அவசியமில்லை என்பது
சரியானது எனில், மனதை ஒருமை படுத்துவதில் உச்சநிலையில் உள்ளவர்கள்
இஸ்லாமியர்கள்தான். ஏனெனில் இஸ்லாமியர்களாகிய நாங்கள் அல்லாஹ்வை வணங்கும்போது,
மனதை ஒருமைப் படுத்த எங்களுக்கு சிலை எதுவும் தேவையில்லை என்பதை நான் உங்களுக்கு
இந்நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இடி இடிப்பது ஏன்? என்று குழந்தைகள் கேட்கிறது..!

ஒரு முறை இஸ்லாமிய ஆய்வு மையத்தில், நான் ஒரு இந்து சாமியாருடன் பேசிக்
கொண்டிருந்தேன். 'இடி இடிப்பது ஏன்?'இ என்று குழந்தைகள் கேட்டால், - 'சொர்க்கத்தில்
பாட்டியம்மா மாவு இடிக்கிறார்கள்,' என்று நாங்கள் சொல்வோம் என்றார். ஏனெனில் இடி போன்ற
விஷயங்களை அறிந்து கொள்வதற்கு ஏற்ற வயது அவர்களுக்கு இல்லை என்ற காரணத்தையும்
சொன்னார். அதுபோலவே - கடவுளை வணங்கத் துவங்கும் ஆரம்ப கட்டத்தில் அவனது மனதை
ஒருமைப்படுத்த சிலை அவசியமாகிறது என்றும் சொன்னார்.

இஸ்லாமிய மார்க்கம் பொய் சொல்வதை விரும்புவதில்லை. அது பொய் என்று வெளிப்படையாகத்
தெரிந்தாலும் - பொய் சொல்வதை இஸ்லாமிய மார்க்கம் விரும்புவதில்லை. அதுபோல ஒரு தவறான
செய்தியை நான் எனது குழந்தைக்கு ஒருபோதும் சொல்லமாட்டேன். ஏனெனில் குழந்தைகள்
பள்ளிக் கூடத்திற்குச் சென்று - மின்னல் அடிக்கும்போது உருவாகும் அதீத வெப்பக் காற்றின்
அதிர்வுதான் இடியின் சப்தம் என்று அறிவார்கள் எனில், ஆசிரியர் பொய் சொல்வதாக எண்ணிக்
கொள்ளும். பின்னர் ஆசிரியர் சொன்னதுதான் உண்மை என்று அறிந்த பிறகு, தனது தந்தையை
ஒரு பொய்யராக கருதும். குழந்தைகள் தங்கள் அறிவுக்கு எட்டாத சில விஷயங்களை புரிந்து
கொள்ளமாட்டர்கள் என்று கருதுவீர்களேயானால், குழந்தைகளுக்குத் தவறான தகவல்களைத்
தருவதை விட்டுவிட்டு, குழந்தைகள் புரிந்து கொள்ளக் கூடிய விதத்தில், எளிதான முறையில்
பதிலளிக்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு, உங்களது குழந்தை கேட்ட கேள்விக்கு பதில்
தெரியவில்லை எனில், உங்களுக்குத் தெரியாது என்று பதிலளிக்க கூடிய தைரியத்தை
வரவழைத்துக் கொள்ளுங்கள். ஆனால் இன்றைய காலத்து குழந்தைகள் நீங்கள் சொல்லும்
பதிலில் திருப்தி அடைந்து விடுவதில்லை. தெரியவில்லை என்கிற பதிலை எனது மகனிடம்
சொன்னால், 'அப்பா..! நீங்க ஏன் தெரிஞ்சிக்கக் கூடாது?.,' என்று அவன் அப்போதே திருப்பி
கேட்டு விடுகிறான். மேற்படி கேள்வி உங்களை உடனடியாக அறிந்து கொள்ள வைப்பதுடன்,
நீங்கள் அறிந்ததை உங்கள் குழந்தைக்கும் அறிய வைக்கக் கூடிய வாய்ப்பையும் உருவாக்குகிறது.

3. ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்குத்தான் மனதை ஒருமைப்படுத்த சிலை தேவைப்படுகிறது -
(இரண்டையும், இரண்டையும் கூட்டினால் நான்கு என்பது முதலாம் வகுப்பிலும் அதேதான்.
இறுதி வகுப்பிலும் அதே நிலைதான்.)

ஆரம்ப நிலையில் கடவுளை வணங்க ஆரம்பிப்பவர்களுக்குத்தான் சிலை என்ற ஒன்று
தேவைப்படுகிறதேத் தவிர, அதற்கு பிந்தைய நிலையில் உள்ளவர்களுக்கு கடவுளை வணங்க சிலை
எல்லாம் தேவையில்லை - என்று சில பண்டிதர்கள் என்னை நம்ப வைக்க முயற்சித்திருக்கிறார்கள்.
இவ்வேளையில் நாம் ஒரு முக்கியமான உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும். எந்த
விஷயமாக இருந்தாலும், அதன் அடிப்படையில் உறுதியாக இருந்தால்தான் - பின்வரும் காலங்களில்,
குறிப்பிட்ட அந்த விஷயத்தில் சிறந்தவராக விளங்க முடியும். இரண்டையும், இரண்டையும்
கூட்டினால் நான்கு என்பதை ஆரம்ப பாடசாலையில் கற்றுக் கொள்ளும் மாணவன், பள்ளி இறுதி
வகுப்பு சென்றாலும், அல்லது கணிதவியலில் முனைவர் (டாக்டர்) பட்டம் பெற்றாலும், இரண்டையும்,
இரண்டையும் கூட்டினால் நான்கு என்கிற அடிப்படை கணிதவியலில் எந்தவித மாற்றமும்
இல்லாதவனாகத்தான் இருப்பான். இரண்டையும், இரண்டையும் கூட்டினால் ஐந்து என்றோ அல்லது
ஆறு என்றோ மாறுவதற்குரிய வாய்ப்பே இல்லை. பின்னர் அல்ஜிப்ரா, திரிகோணமெட்ரி,
லோகோரிதம் - என்று கணிதவியலின் பல பிரிவுகளை கற்றுக் கொண்டாலும், இரண்டையும்,
இரண்டையும் கூட்டினால் நான்கு என்கிற அடிப்படை கணிதவியலில் எந்தவித மாற்றமும்
இல்லாதவனாகத்தான் இருப்பான். ஆக ஆரம்பபாடசாலையிலேயே ஆசிரியரிடமிருந்து தவறாக கற்றுக்
கொள்ளும் மாணவன், எதிர்காலத்தில் எப்படி சிறந்த விற்பன்னராக விளங்க முடியும்?.
இந்து வேதங்களின் அடிப்படை கொள்கைகள் கடவுளின் தன்மையை பற்றிச் சொல்லும்பொழுது,
கடவுளுக்கு எந்தவித உருவமுமில்லை என்று சொல்கிறது. எனினும் - இது பற்றிய உண்மையை
அறிந்துள்ள இந்து அறிஞர்கள் - மக்களால் பின்பற்றப்படும் தவறான இந்த வழக்கத்தை ஏன் தடுக்க
முனைவதில்லை?.

நீங்கள் ஆரம்பபாடசாலையில் படிக்கும் உங்களது பிள்ளைக்கு இரண்டையும், இரண்டையும்
கூட்டினால் நான்கு என்று சொல்லித் தருவீர்களா?. அல்லது இரண்டையும், இரண்டையும்
கூட்டினால் ஐந்து என்றோ அல்லது ஆறு என்றோ சொல்லித் தந்துவிட்டு, பின்னர் உங்கள் பிள்ளை
பள்ளி இறுதி வகுப்பு முடித்த பிறகு இரண்டையும், இரண்டையும் கூட்டினால் ஐந்தோ அல்லது ஆறோ
அல்ல. இரண்டையும், இரண்டையும் கூட்டினால் நான்குதான் என்கிற உண்மையைச் சொல்லித்
தருவீர்களா?. இது போன்று யாரும் செய்யவே மாட்டோம். மாறாக உங்களது பிள்ளை தவறான
பதிலளித்தால் அதனைத் திருத்தி, சரியான பதிலைச் சொல்லித் தருவோம். அவ்வாறான தவறுகளை
திருத்தவில்லை என்றால், நீங்கள் உங்களது பிள்ளையின் எதிர்காலத்தை வீணடிக்கிறீர்கள்
என்றுதான் அர்த்தம்.

Thursday, June 7, 2012

.....உபயோகமான 100 மருத்துவ குறிப்புகள்.....

1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாக கட்டுப்போட்டு கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்... கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ் தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியை பாதிக்கும்.

6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள் தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.

7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

8. கால் தடுமாறி பிசகிவிட்டால்... உடனே 'கையால் நீவிவிடு' என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவி விடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.

9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்... நாற்காலியும் செருப்பும் கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா... நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா... என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து 'ரிலாக்ஸ்' செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.


பெண்களுக்காக...


10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.

11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.

12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.

13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா..? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.கர்ப்பக் கால கவனிப்பு..!

14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை 'மெலனின்' எனப்படும் நிறமிகளே...!

15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.

16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.

17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளை கட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.

18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல... உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.

20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.

21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.

23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.
24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.

25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.

26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.

27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.

28. தாய்ப்பாலை சேமித்து கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.

29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.

30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்... வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.

31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.உணவே மருந்து....!

32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்... ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்..!

33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது... உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.

35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.

36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்... உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்... நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்... கண் நோய்கள் நெருங்காது.

42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு... இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.மருந்தே வேண்டாம்....!

49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்... கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.


50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.

51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.

52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும் தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனை தராது.லப்... டப்..!

53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.

54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்... இதயத்தைப் பற்றி கவலையேபட தேவையில்லை.

55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.

56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.

57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.கிட்னியைக் கவனியுங்கள்....

58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.

59. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி - இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்... உஷார்!

60. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.

61. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, 'கிட்னியில் கல்' என்ற பயமே தேவையில்லை.


பல்லுக்கு உறுதி...!

62. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.

63. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

64. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.

65. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.

66. இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.

67. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.

68. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி... இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.

69. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.

70. முகப்பரு இருந்தால்... உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.

71. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.

72. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.

73. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.

74. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்

75. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.ஜெனரல் வார்டு..!

76. சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.

77. வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்... உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.

78. நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை. அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலோ அல்லது பயணத்தின் இடையிலோ பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.

79. காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பட்ஸ் போடும்போது திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.

80. வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்... வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.

81. சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா..? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும்.

82. வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.

83. நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.

84. உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.

85. மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்.நில்... கவனி... செல்...!

86. மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது... தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே - வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும்.

87. தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.

88. 'போஸ்ட்மார்ட்டம்' என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கும். இதன் காரணமாக போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்த்துவிட்டால்... பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.

89. ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்... அமீபியாசிஸ் எனும் தொற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.


90. 'போரடிக்கிறது' என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்... தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.

91. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.

92. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்... கறுப்பே சிறப்பு.

93. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.

94. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது... அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.எச்சரிக்கை

95. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாக பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

96. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.

97. இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.

98. அலர்ஜி - ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.

99. நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.

100. சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும்.நன்றி: விகடன்.

முஸ்லிம் பண்டிகைகள் நாட்டிற்கு நாடு மாறுபடுவது ஏன்?

விளக்கம் : முஸ்லிம் பண்டிகைகள் மட்டுமின்றி மற்ற பண்டிகைகளும் கூட நாடுகள் தோறும் மாறுபட்டே வரும். அது தான் உலக அமைப்பாகும்.

உலகில் ஒவ்வொரு பகுதியினருக்கும் ஒவ்வொரு நேரமாக இருப்பதை நாம் அறிவோம். இந்தியாவில் பகலாக இருக்கும் போது உலகின் பாதிப் பகுதிகளில் இரவாக இருக்கும்
நாம் பகலில் கொண்டாடும் விழாவை நாம் மறு நாளுக்குள் நுழைந்த பிறகு தான் அவர்கள் கொண்டாட முடியும். உலகம் முழுவதும் ஒரே நேரமாக இருந்தால் மட்டுமே அனைவரும் ஒரே நேரத்திலும், ஒரே நாளிலும் எந்த விழாவையும் கடைப்பிடிக்க முடியும்.


சரியான கணிப்பு கிடையாதா? என்ற கேள்விக்கும் இது தான் விடையாகும்.

இஸ்லாம் கணிக்குமாறு நமக்குக் கூறவில்லை. பிறை பார்த்துத் தான் பண்டிகைகளைக் கொண்டாடுமாறு கூறுகிறது.


கிறித்தவ சகோதரி கூறுவது போல் கணிப்பதாக வைத்துக் கொள்வோம். அப்போதும் உலகம் முழுவதும் ஒரே நாளில் எந்த விழாவையும் கொண்டாட முடியாது.


கணிப்புப்படி நமக்கு இன்று காலையில் பண்டிகை வருகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நேரத்தில் இரவுப் பொழுதை அடைந்த அமெரிக்கா போன்ற நாட்டவர் மறு நாள் காலையில் தான் அந்தப் பண்டிகையைக் கொண்டாட முடியுமே தவிர நாம் கொண்டாடும் அதே நேரத்தில் கொண்டாட முடியாது.


உலகம் முழுவதும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் எந்தக் காரியத்தையும் செய்ய முடியாத வகையில் தான் இந்த உலகம் அமைந்துள்ளது.

பூமிக்கு எதிரும் புதிருமாக இரண்டு சூரியன்களை நிறுத்தினால் மட்டும் தான் இது சாத்தியப்படும். அமெரிக்காவிலும், இந்தியாவிலும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட முடியாது. அப்படிக் கொண்டாடுவதும் இல்லை.


மனிதர்களாகப் போட்டுக் கொண்ட டேட்லைன்' காரணமாக இரண்டையும் ஒரே தேதி என்ற நாம் கூறிக் கொள்கிறோமே தவிர உண்மையில் அடுத்தடுத்த நாட்களில் தான் இந்தக் கொண்டாட்டம் நடக்கிறது.


நள்ளிரவு 12 மணிக்கு அமெரிக்காவில் புத்தாண்டு பிறக்கிறது என்றால் அதே நேரத்தில் பட்டப்பகலில் இருக்கும் நாம் புத்தாண்டைக் கொண்டாடுவதில்லை.


இதைப் புரிந்து கொண்டால் முஸ்லிம்களின் பண்டிகைகள் வேறு வேறு நாட்களில் அமைவதைக் குறை கூற மாட்டார்கள்.

பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து


Thanks to www.onlinepj.com

by: RIYASdotCOM

இஸ்லாமிய மார்க்கச் சகோதரர்களில் சிலர் வாஸ்து சாஸ்திரம் என்ற பெயரில் வீடு, கடைகள் அமைக்கின்றார்களே ஏன் ?

Assalamu Alaikkum warahmathullaah...

கேள்வி : இஸ்லாமிய மார்க்கச் சகோதரர்களில் சிலர் வாஸ்து சாஸ்திரம் என்ற பெயரில் வீடு, கடைகள் அமைக்கின்றார்களே? இஸ்லாம் எப்படி அறிவுப்பூர்வமான மார்க்கம் எனக் கூற முடியுமா  என்று சிலர் கேட்கிறார்கள். 
விளக்கம்


பதில் : முஸ்லிம்களில் அறிவீனர்கள் செய்யும் செயலை இஸ்லாத்துடன் தொடர்பு படுத்தக் கூடாது. இஸ்லாம் ஆதரிக்கிறதா என்பதைத் தான் கவனிக்க வேண்டும்.

கடவுளை நம்புவோர் மனிதனை விட கடவுளுக்கு அறிவு அதிகம் என்பதை நம்ப வேண்டும்.


நீங்கள் ஒரு கொலை செய்து விடுகிறீர்கள். அதற்காக உங்களுக்குத் தூக்குத் தண்டனையோ, ஆயுள் தண்டனையோ விதிக்கப்படுகிறது.
உடனே நீங்கள் உங்கள் வீட்டின் அமைப்பை மாற்றி அமைக்கிறீர்கள். மாற்றி அமைக்கப்பட்ட வீட்டைப் பார்த்து விட்டு இவர் வீட்டை மாற்றி அமைத்துள்ளதால் இவரது தண்டனையை ரத்துச் செய்கிறேன் என்று நீதிபதி தீர்ப்பளித்தால் அவருக்கு மறை கழன்று விட்டது எனக் கூறுவோம். உலகமே கை கொட்டிச் சிரிக்கும்.
வாஸ்து சஸ்திரத்தை நம்புபவர்கள் இறைவனை இத்தகைய நிலையில் தான் நிறுத்துகின்றனர்.


ஒவ்வொரு மனிதனைப் பொருத்தே அவனுக்கு ஏற்படும் நன்மை - தீமைகளை ஏக இறைவன் நிர்ணயம் செய்கிறான். இந்த ஆளுக்கு இது தான் என இறைவன் தீர்மானம் செய்து விட்ட பிறகு வீட்டை மாற்றுவதால், வீட்டின் அமைப்பை மாற்றுவதால், அணிந்திருக்கும் ஆடையை மாற்றுவதால் இவர் வேறு ஆள்' என்று இறைவன் நினைத்து ஏமாந்து போவான் என்று நம்புகிறார்களா?

இறைவனைப் பற்றிய இவர்கள் நம்பிக்கை இது தான் என்றால் இதை விட நாத்திகர்களாக அவர்கள் இருந்து விட்டுப் போகலாம்.


'ஐயா! என் பெயரை மாற்றிக் கொண்டதால், அதிஷ்டக்கல் மோதிரம் அணிந்துள்ளதால் என்னைத் தண்டிக்காதீர்கள்!' என்று நீதிபதியிடம் ஒரு குற்றவாளி முறையிட்டால் தப்பித்து விட முடியாது எனும் போது நுண்ணறிவாளனான இறைவனிடம் எப்படி இது போன்ற கிறுக்குத் தனங்களால் தப்பிக்க இயலும்?


நமக்கென விதிக்கப்பட்ட நன்மைகளும் இப்படித் தான்.

உங்கள் வீட்டுக்கு இரண்டு ஜன்னல்கள் இருக்கும் போது உங்களுக்கு ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தனுப்புகிறார். அன்றைய தினம் தான் ஒரு ஜன்னலை வாஸ்துப் படி அடைக்கிறீர்கள். உங்களுக்கென அனுப்பட்ட தொகையை அவர் உங்களிடம் தராமல் திரும்பி விடுவாரா? பணம் ஆளுக்குத் தானே தவிர ஜன்னலுக்கு அல்ல.


சாதாரண மனிதனே இவ்வளவு தெளிவாக விளங்கும் போது, இறைவனுக்கு இது விளங்காது; ஏமாந்து விடுவான் என எண்ணுவது என்னே பேதமை!

நமது தமிழகத்தைப் பொருத்த வரை 95 சதவிகிதம் கட்டிடங்கள் எல்லாவிதமான சாஸ்திரங்களும் பார்க்கப்பட்ட பிறகே கட்டப்படுகின்றன. வாஸ்து சாஸ்திரம் உண்மை என்றால் 95 சதவிகிதம் பேர் எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால் பத்து சதவிகிதம் பேர் கூட நிம்மதியாக இல்லை.


வாஸ்து சாஸ்திரம் பித்தலாட்டம் என்பதற்கு இது ஒன்றே நிதர்சனமான சான்றாக உள்ளது.


வாஸ்து நிபுணர் என்ற 'ஃபிராடு பேர்வழிகள்' நம்மைப் போன்ற மனிதர்கள் தான். ஒரு கட்டடம் இப்படி இருந்தால் இன்ன விளைவு ஏற்படும் என்பதை இவர்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள். கடவுளே இவர்களிடம் இதைக் கூறினாரா? நிச்சயமாக இல்லை.

எவனோ ஒருவன் உளறி வைத்ததைப் பிழைப்புக்கு உதவுவதால் பற்றிப் பிடித்துக் கொண்டார்கள்.
இஸ்லாத்தை நம்பும் ஒருவன் எந்த நிமிடம் இத்தகைய கிறுக்குத் தனங்களை நம்புகிறானோ அந்த நிமிடமே இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவான்.

உலகில்தான் முஸ்லிம்கள் கணக்கில் இவன் சேர்க்கப்படுவானே தவிர இறைவனிடத்தில் இறைவனை விபரங்கெட்டவனாகக் கருதிய குற்றத்தைச் செய்தவனாவான்.

அறியாத முஸ்லிம்கள் இனியாவது திருந்திக் கொள்ள வேண்டும்.


பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து


Thanks to www.onlinepj.com

by: RIYASdotCOM

இஸ்லாமியப் பொதுஅறிவு.............

அஸ்ஸலாமு அலைக்கும்.........................  இஸ்லாமியப் பொதுஅறிவு 
1 . ஹிஜ்ரத் என்றால் என்ன?

வாழும் நாட்டில் கொடுமை பொறுக்க முடியாமல் இறைவனுக்காக நாடு துறந்து அன்னிய நாட்டில் தஞ்சம் புகுவது.

 
2 . இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் ஸஹாபாக்கள் எந்தநாட்டில் தஞ்சம் புகுந்தார்கள்?

ஹபஸா (அபிசீனியா)

 
3 . ஹிஜ்ரா காலண்டர் எப்படி தொடங்கியது?

முஹம்மத்நபி(ஸல்)அவர்கள் மக்கா நகர் துறந்து, மதீனா நகர் நோக்கி ஹிஜ்ரத் சென்ற நிகழ்விலிருந்து.

 
4 . ஹிஜிரி (அரபி) மாதங்கள் பெயர் என்ன?

1. முதல் மாதம் முஹர்ரம்,

2. இரண்டாம் மாதம் ஸபர்,

3. முன்றாம் மாதம் ரபிவுல் அவ்வல்,

4, நான்காம் மாதம் ரபிவுல் ஆகிர்,

5, ஐந்தாம் மாதம் ஜமாஅத்துல் அவ்வல்,

6. ஆறாம் மாதம் ஜமாஅத்துல் ஆகிர்,

7. ஏழாம் மாதம் ரஜப்,

8. எட்டாம் மாதம் ஷாஃபான்,

9. ஒன்பதாம் மாதம் ரமழான்,

10. பத்தாம் மாதம் ஷவ்வால்,

11. பதினோன்றாம் மாதம் துல் கஅதா,

12. பனிரெண்டாம் மாதம் துல் ஹஜ்.

 
5. முஸ்லிம்களின் 3 புனித நகரங்கள் எவை?

1. புனித கஃபா ஆலயம் உள்ள மக்கா.

2. மஸ்ஜித் நபவீ இருக்கும் மதீனா.

3. மஸ்ஜித் அக்ஸா இருக்கும் பாலஸ்தீனம்.

 
6. உம்முல் குர்ஆன் எது?

ஸூறத்துல் ஃபாத்திஹா(ஏழு வசனங்கள்)
  
7. ரூஹூல் அமீன் என்பது யாருடைய பெயர்?

வானவர் தலைவர் ஜீப்ரீல் (அலை) அவர்களுடைய பெயர்

 
8. நபி(ஸல்) அவர்களுக்கு குர்ஆன் எத்தனை ஆண்டுகள் வஹீ மூலம் இறங்கியது?

23 ஆண்டுகள்

 
9. குர்ஆன் மக்காவில் எத்தனை ஆண்டுகள், மதீனாவில் ஆண்டுகள் இறங்கியது?

மக்காவில் : 13 ஆண்டுகள் , மதீனாவில் : 10 ஆண்டுகள்

 
10 . குர்ஆனை ஒதினால் ஒரு எழுத்துக்கு எத்தனை நன்மைகள் உண்டு?

குர்ஆனை ஒதினால் ஒரு எழுத்துக்கு 10 நன்மைகள் உண்டு. (ரமழானில் 70-நன்மைகள்-).

 
11. திருக்குர்ஆனை முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர் யார் ?

அப்துல்ஹமீது பாகவி

 
12. ஸஜ்தா இல்லாத தொழுகை யாது?

ஜனாஸா தொழுகை

 
13. ஆரம்பத்தில் திருக்குர் ஆனை எதில் பதிவு செய்தனர் ?

எலும்பு, தோல், மரப்பட்டைகள். மேலும் நபிகளாரும், ஸஹாபாப் பெருமக்களும் மனனம் செய்து கொண்டனர்.

 
14 . திருக்குர்ஆனின் முதல் வசனம் எது ?

'இக்ரஹ் பிஸ்மிரப்பிக்கல்லதி ஹலக்' (அல் குர்ஆன் 96 : 1)

 
15. நபி (ஸல் ) அவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது இறங்கிய இறை வசனம் எது?

'அல்யவ்ம அக்மல்து லகும் தீனகும் வ அத்மம்து' என துவங்கும் வசனமாகும்(5:3)

 
16. உலகின் இறுதி நபி யார் ?

உலகின் இறுதிநபி முஹம்மத்(ஸல்) அவர்கள்

 
17. மைக்கேல் ஹார்ட் எழுதிய The 100 என்ற ஆய்வு நூலில், எல்லாருக்கும் முதன்மையாக, தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார் ?

முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.

 
18. குர் ஆனில் அதிகம் பெயர் கூறப்பட்ட நபி யார் ?

நபி முஸா (அலை)

 
19. இறுதி நாளின் அடையாளமாக, வானிலிருந்து இறங்கிவரக்கூடிய நபி யார் ?

நபி ஈஸா (அலை)

 
20. திருக் குர் ஆனில் பெயர் கூறப் பட்ட ஒரே பெண்மணி யார் ?

நபி ஈஸா(அலை) அவர்களின் தாய் மரியம் (அலை).

 
21. திருக் குர் ஆனில் ஒரு இடத்தில் மட்டும் வரும் நபித் தோழரின் பெயர் என்ன ?

ஜைது (ரலி) ( அல் குர்ஆன் 33 : 37)

 
22. ஹதீஸ் கிரந்தங்கள் சிலவற்றின் பெயர் கூறு?

புஹாரி, முஸ்லிம், இப்னுமாஜா, திர்மிதி, முஸ்னத் அஹ்மத், நஸயீ

 
23. எந்த கலீஃபாவின் ஆட்சியில், ஸ்பெயினில் இஸ்லாம் பரவியது?

கலிபா உஸ்மான் (ரலி)

 
24. பிலால்(ரலி) அவர்களை அடிமைத் தனத்திலிருந்துமீட்டவர் யார் ?

அபு பக்கர் (ரலி) அவர்கள்

 
25. முதலில் இஸ்லாத்தை தழுவிய சிறுவர் யார் ?

அலி (ரலி) அவர்கள்.

 
26. இஸ்லாமிய வரலாற்றில் முதல் பெண் உயிர் தியாகியின் பெயர் என்ன ?

அன்னை சுமையா (ரலி) அவர்கள்.

 
27. இறைவனின் வாள் என்று அழைக்கப் பட்ட நபித்தொழர் யார் ?

காலித் பின் வலீத்(ரலி)

 
28. தாங்கள் வழி நடத்திச் சென்ற அனைத்து போர்களிலும், வெற்றி ஈட்டிய நபித் தொழர் யார் ?

காலித் பின் வலீத் (ரலி)

 
29. வியாபாரிகள் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கேள்விப் பட்டு இஸ்லாத்தை ஏற்ற கேரள மன்னர் யார் ?

மன்னர் சேரமான் பெருமாள்-அப்துர் ரஹ்மான்

 
30. நாம் பிறந்து வளர்ந்து மடியும் எல்லா விஷயங்களும் எழுதப்பட்டு வானில் உள்ள மூலப்பதிவேட்டின் பெயர் என்ன ?

லவ்ஹூல் மஹ்ஃபுள்

 
31. மனிதனின் வலப்புறமும், இடப்புறமும் இருந்து நன்மை, தீமைகளை எடுத் தெழுதும் வானவர்கள் பெயர் என்ன ?

கிராமன் - காத்திபீன்

 
32. ஒரு நற்செயலை செய்தால் எத்தனை மடங்கு நன்மைஉண்டு ?

10 மடங்கு நன்மை உண்டு.

 
33. மறுமையில் ஒரு நாளின் அளவு என்ன ?

உலகின் ஆயிரம் ஆண்டுகள் (காண்க அல்குர்ஆன் 22 : 47)

 
34. அல்லாஹ் - அளவற்ற அருளாளன்

 
35. திருக்குர்ஆன் - இறைவேதம்

 
36. குர்ஆனின் முதல் வசனம் இறங்கிய இடம்?

ஹிரா குகை

 
37 அல்லாஹ்வுவை வணங்குவதற்காகமுதலில் ஆதம் (அலை)அவர்களால் கட்டப்பட்டு பிறகு இப்ராஹீம் (அலை)அவர்களால் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட பள்ளிவாயில் யாது ?

மக்காவிலுள்ள கஃபா

 
38. கலிபா என்பவர் யார்?

இஸ்லாமிய ஆட்சியாளர்

 
39. ஸஹாபாக்கள் எனப்படுவோர் யாவர்?

நபி(ஸல்) அவர்களின் தோழர்கள்

 
40. ஈத் அல் பித்ர் என்றால் என்ன?

புனித ரமழான் மதத்தின் இறுதியில் வரும் பெருநாள்

 
41. ஈத் அல் அத்ஹா என்றால் என்ன?

தியாகத்திருநாள் - ஹஜ்ஜூப் பெருநாள்

 
42. சுன்னா என்றால் என்ன?

நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கை வழிமுறை சொல், செயல், அங்கிகாரங்களுக்கு சுன்னா எனப்படும்.

 
43. ஸலாத் என்றால் என்ன?

தொழுகை

 
44. ஸஜ்தா என்றால் என்ன?

தொழும் போது தலையை குனிந்து நெற்றியை பதிக்கும் முறை

 
45. சூரா என்றால் என்ன?

குர்ஆனின் பாகம்

 
46. ஷிர்க் என்றால் என்ன?

அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்

 
47. ஸவ்ம் என்றால் என்ன?

நோன்பு

 
48. வித்ர் என்றால் என்ன?

இரவில் தூங்குவதற்கு முன் இறுதியாகத் தொழும் தொழுகை

 
49. வுளு என்றால் என்ன?

தொழுகைக்கு முன் நீரால் முகாம் கை கால் போன்ற உடல் உறுப்புகளை சுத்தம் செய்வது

 
50. தக்வா என்றால் என்ன?

இறையச்சம்

 
51. தவ்பா என்றால் என்ன?

பாவ மன்னிப்பு

 
52. புர்கான் என்றால் என்ன?

திருக்குர்ஆனின் மற்றுமொரு பெயர் - பிரித்தரிவித்தல் என்று பொருள்.

 
53. தீன் என்றால் என்ன?

அல்லாஹ்வின் மார்க்கம்

 
54. தூஆ என்றால் என்ன?

இறைவனிடம் உதவி கேட்டு பிராத்தனை புரிவது

 
55. பாங்கு என்றால் என்ன?

தொழுகைக்கான அழைப்பு .......................................நன்றி அஸ்ஸலாமு அலைக்கும்
நட்புடன்
>>>>ரியாஸ் .காம்<<<<<<<<

இரண்டாவது சூர் ஊதப்பட்டவுடன் (நீதி விசாரனைக்கு முன்) அன்நாளில் நம்முடைய நிலை எப்படி இருக்கும்


இரண்டாவது சூர் ஊதப்பட்டவுடன் (நீதி விசாரனைக்கு முன்) அன்நாளில் நம்முடைய நிலை எப்படி இருக்கும்


'நிச்சயமாக தீர்ப்பு வழங்கும் (கியாமத்) நாள் நேரங் குறிக்கப்பட்டதாக இருக்கிறது. சூர் ஊதப்படும் அந்நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்'. (அல்குர்ஆன் 78:17,18)

இரண்டாம் சூர் ஊதப்பட்டவுடன் மனிதர்கள் எவ்வாறு உயிர்பிக்கப்படுவார்கள்? அதைத் தொடர்ந்து நடைபெறுவது என்னவென்பதை இனி காண்போம்.


பூமியைப் பிளந்து வெளியேறுவர்

இரண்டாவது சூர் ஊதப்பட்டவுடன் எல்லா மனிதர்களும் பூமியைக் கிழித்துக் கொண்டு வெளிப்படுவார்கள்.

'பூமி பிளந்து அவர்கள் வேகமாக வரும் நாள் அது தான். யாவரையும் ஒன்று சேர்க்கும் நாள்! இது நமக்கு மிக எளிதானதேயாகும்'. (அல்குர்ஆன் 50:44)

'இலக்குகளை நோக்கி செல்வது போல் அவர்கள் மண்ணறைகளிலிருந்து வெளியேறுவார்கள்'. (அல்குர்ஆன் 70:43)

அழிவு நாளின் போது அழிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட அனைத்து மனிதர்களும் பூமிக்குள்ளிருந்தே உயிருடன் வெளிப்படுவார்கள். ஏதோ ஒரு இலக்கை நோக்கிச் செல்வது போல் வேகமாக விரைவார்கள் என்பதை இவ்வசனங்கள் கூறுகின்றன.


மண்ணறைகளில் தங்கிய காலத்தை உணரமாட்டார்கள்

பல்லாயிரம் ஆண்டுகள் மண்ணறைகளில் புதைந்து கிடந்தவர்கள் உட்பட எவருமே தாம் மண்ணறைகளில் தங்கியிருந்த கால அளவை உணரமாட்டார்கள். ஏதோ சற்று நேரம் உறங்கி விட்டு எழுந்திருப்பதாகவே அனைவரும் உணர்வார்கள். இதைப் பின்வரும் வசனங்கள் விளக்குகின்றன.

'இவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை இவர்கள் பார்க்கும் நாளில் பகலில் சிறிது நேரம் தவிர (மண்ணறைகளில்) இருக்க வில்லை என்பது போல் அவர்களுக்குத் தோன்றும்'. (அல்குர்ஆன் 46:35)

'நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில் காலையிலோ, மாலையிலோ சொற்ப நேரமே தங்கியிருந்ததாக அவர்களுக்குத் தோன்றும்'. (அல்குர்ஆன் 79:46)

'அன்றியும் அந்த நாள் வரும்போது சற்று நேரமே தங்கியிருந்ததாக குற்றவாளிகள் சத்தியம் செய்து கூறுவார்கள்'. (அல்குர்ஆன் 30:55)

எங்களுக்கு ஏற்பட்ட துக்கமே (எங்கள் உறங்குமிடங்களிலிருந்து) எங்களை எழுப்பியவர்கள் யார்?' (அல்குர்ஆன் 36:52) இதை 10:45, 17:62

வசனங்களும் கூறுகின்றன. கப்ருகளில் வேதனை செய்யப்பட்டதும், பல்லாண்டு மண்ணறைகளில் கழித்ததும் அவர்களுக்குத் தெரியாது. உறங்கிய போது ஏற்பட்ட கனவாகவே அதை அவர்கள் நினைத்துக் கொள்வார்கள். எங்கள் உறக்கத்திலிருந்து எழுப்பியவர் யார் என்று அவர்கள் கேட்பது இதனால்தான்.
இந்த உணர்வுடன் எழுவோர் குற்றவாளிகள் தாம், நல்லடியார்கள் உலகில் வாழும் போதே மறுமை நாளை நம்பியவர்கள் இந்த நிகழ்ச்சிகள் ஏற்படும் என்பதை குர்ஆனிலிருந்து படித்து அறிந்த மக்கள் இவ்வாறு எண்ண மாட்டார்கள். 30:55 வசனத்தில் 'குற்றவாளிகள்' என்று கூறப்படுவதிலிருந்து இதை அறியலாம். 30:56 வசனத்தில் நல்லடியார்கள் இவ்வாறு எண்ண மாட்டார்கள் என்பதைத் தெளிவாகவும் இறைவன் கூறுகிறான்.

'ஆனால் எவர்களுக்கு கல்வியும் ஈமானும் கொடுக்கப்பட்டனவோ அவர்கள் 'அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி திரும்ப உயிர் கொடுத்து எழுப்பப்படும் நாள் வரையில் (மண்ணறையில்) தங்கியிருந்தீர்கள். உயிர் பெற்று எழும் நாள் இது தான். இதனை அறியாதவர்களாகவே நீங்கள் இருந்தீர்கள் என்று கூறுவார்கள்'. (அல்குர்ஆன் 30:56)


பிறந்த மேனியாக எழுப்பப்படுவார்கள்

நபிமார்கள், நல்லவர்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் அனைவருமே நிர்வாணமாக எழுப்பப்படுவார்கள். எவருமே ஆடை யணிந்திருக்க மாட்டார்கள். மேலும் இவ்வுலகில் கத்னா செய்திருந்தவர்கள் உட்பட அனைவரும் கத்னா செய்யப்படாதவர்களாகவே எழுப்பப்படுவார்கள்.

'நிச்சயமாக நீங்கள் நிர்வாணமாகவும், செருப்பணியாமலும், கத்னா செய்யப்படாமலும் எழுப்பப்படுவீர்கள்' என்று நபி (ஸல்) கூறிவிட்டு 21:104 வசனத்தை ஓதிக்காட்டினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
'கியாமத் நாளில் மக்கள் செருப்பணியாமலும், நிர்வாணமாகவும், கத்னா செய்யப்படாமலும் எழுப்பப்படுவீர்கள்' என்று நபி (ஸல்) கூறிய போது 'அல்லாஹ்வின் திருத்தூதரே! ஆண்களும் பெண்களும் திரண்டிருக்கும் போது சிலர் சிலரைப் பார்ப்பார்களே? என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'ஆயிஷாவே! சிலர் சிலரைப் பார்த்துக் கொண்டிருப்பதை விட நிலமை மிகவும் கடுமையானதாக இருக்கும்' என்று விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)


சிலர் குருடர்களாகவும், ஊமையர்களாகவும் எழுப்பப்படுவர்

எவ்வாறு பிறந்தார்களோ அவ்வாறே மறுமையில் எழுப்பப்படுவார்கள் என்றாலும் உலகில் வாழும் போது பார்வை, செவி, பேசும் திறனுடன் இருந்து தவறான வழியில் சென்றவர்கள் குருடர்களாகவும் ஊமையர்களாகவும் செவிடர்களாகவும் எழுப்பப்படுவார்கள்.

'யார் வழிகெட்டு விட்டார்களோ அவர்களுக்கு அவனையன்றி உதவிசெய்வோர் எவரையும் நீர் காண மாட்டீர்! மேலும் அவர்களைக் குருடர்களாகவும், ஊமைகளாகவும், செவிடர்களாகவும் முகம் குப்புற (நடப்பவர்களாக) கியாமத் நாளில் எழுப்புவோம்'. (அல்குர்ஆன் 17:97)

'எவன் என்னுடைய போதனையைப் புறக்கணிக்கின்றானோ அவனுக்கு நிச்சயமாக நெருக்கடியான வாழ்க்கையே இருக்கிறது. மேலும் நாம் அவனைக் கியாமத் நாளில் குருடனாகவே எழுப்புவோம். (அப்போது அவன்) என் இறைவனே! நான் பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்? என்று கூறுவான். (அதற்கு இறைவன்) அவ்வாறு தான். நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்த போது அவற்றை நீ மறந்து விட்டாய். அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய் என்று கூறுவான். ஆகவே எவன் தன் இறைவனுடைய வசனங்களின் மேல் நம்பிக்கை கொள்ளாமல் வரம்பு மீறி நடக்கின்றானோ அவனுக்கு இவ்வாறு தான் நாம் கூலி கொடுப்போம். (இதை விட) மறுமையின் வேதனை மிகவும் கடுமையானதும், நிலையானதுமாகும்'. (அல்குர்ஆன் 20:124-127)

இறைவனின் வேத வசனங்களை நம்பாத அனைவரும் குருடர்களாகவே எழுப்பப்படுவார்கள் என்பதை இவ்வசனங்கள் கூறுகின்றன.
முகம் கறுத்தவர்களாக எழுப்பப்படுவர்
விசாரணைக்குப் பின் கிடைக்கும் தண்டனை தனியாக இருக்க விசாரணைக்கு முன்பே குற்றவாளிகள் குருடர்களாகவும், செவிடர்களாகவும், ஊமைகளாகவும், தனி அடையாளத்துடன் எழுப்பப்படுவது போல், முகம் கறுத்தவர்களாகவும் எழுப்பப்படுவார்கள். நல்லவர்கள் உலகில் கறுப்பர்களாக இருந்தாலும் - வெண்மை முகத்தவர்களாகவும், தீயவர்கள் - உலகில் வெண்மை நிறத்தவர்களாக இருந்தாலும், முகம் கறுத்தவர்களாகவும் எழுப்பப்படுவர். இதைப் பின் வரும் வசனம் விளக்குகின்றது.

'அந்த நாளில் சில முகங்கள் வெண்மையாகவும், மற்றும் சில முகங்கள் கறுப்பாகவும் இருக்கும். எவரது முகங்கள் கறுப்பாக உள்ளனவோ அவர்களிடமும் 'நீங்கள் நம்பிக்கை கொண்டபின் நிராகரித்தீர்கள் அல்லவா? நீங்கள் நிராகரித்ததற்காக இந்த வேதனையைச் சுவையுங்கள் (என்று கூறப்படும்)''. (அல்குர்ஆன் 3:100)


யா அல்லா அந்நாளின் வேதனைகளை விட்டு எங்கள் அனைவரயும் பாதுகாப்பாக ஆமீன்


நீச்சல் குளத்தில் பெண்கள் குளிக்கலாமா?


நீச்சல் குளத்தில் பெண்கள் குளிக்கலாமா?

கேள்வி

லண்டனில் இருக்கும் ஒரு சிலர் பெண்கள் நீச்சல் தடாகம் சென்று நீச்சல் பண்ணலாம் என்றும் நீங்கள் தான் அவ்வாறு பதில் தந்ததாகவும் கூறுகிறார்களாம். இதன் உண்மையை நானும் அறிய விரும்புகிறேன்,. குரான் ஹதீஸ் ஆதரங்களுடன் பதில் தரவும்.


பதில்

பெண்கள் அவர்களுக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளங்களுக்குச் சென்று குளிப்பது தவறில்லை. ஆனால் சில ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

நீச்சல் குளத்தின் பொறுப்பாளர் உட்பட எந்த அந்நிய ஆணும் அவர்கள் குளிப்பதைப் பார்க்க முடியாதவாறு பாதுகாப்பு இருக்க வேண்டும். பெண்களோடு குளிக்கும் போது தனது அந்தரங்கப் பகுதிகளை மற்ற பெண்களிடம் வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும். இந்த ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடித்து குளிப்பது தவறல்ல.

பாதுகாப்பான சூழ்நிலை இருந்தாலும் பெண்கள் நீச்சல் குளங்களுக்கு அறவே செல்லக்கூடாது என்று சிலர் தவறாகக் கூறுகின்றனர். இதற்கு இவர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.


அபுல் மலீஹ் அல்ஹதலீ கூறுகிறார் :

ஹிம்ஸ் அல்லது ஷாம் நாட்டைச் சார்ந்த சில பெண்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்தனர். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் உங்கள் பெண்களை குளியல் குளங்களுக்கு நீங்கள் தான் அனுப்புகின்றீர்களா? ஒரு பெண் தன்னுடைய கணவன் வீடு அல்லாத வேறு இடத்தில் தன் ஆடையை (கழற்றி) வைத்தால் அவள் தனக்கும் தன்னுடைய இறைவனுக்கும் இடையேயுள்ள திரையைக் கிழித்து விடுகிறாள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்று கூறினார்கள்.

நூல் : திர்மிதீ (2727)

இந்தச் செய்தியை சரியான அடிப்படையில் புரிந்து கொண்டால் இவர்கள் கூறும் கருத்துக்கு இது ஆதாரமில்லை என்பதை அறியலாம்.

ஆயிஷா (ரலி) அவர்கள் குளிப்பது தொடர்பாக இதைக் கூறினாலும் நபிகள் நாயகம் ஸல அவர்கள் சொன்ன வார்த்தை எதுவென நாம் பிரித்துப் பார்க்க வேண்டும்.

ஒரு பெண் தன்னுடைய கணவன் வீடு அல்லாத வேறு இடத்தில் தன் ஆடையை (கழற்றி) வைத்தால் அவள் தனக்கும் தன்னுடைய இறைவனுக்கும் இடையேயுள்ள திரையைக் கிழித்து விடுகிறாள் – இது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன வாக்கியமாகும். பெண்கள் ஆடையை அவிழ்ப்பது பற்றித்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆடையை அவிழ்க்காமல் குளிக்கும் நிலை இருந்தால் அதை இந்தத் தடை கட்டுப்படுத்தாது.

மேலும் கணவனுடைய வீடு என்றால் வீடு என்று இதற்குப் பொருள் கொள்ளக் கூடாது. கணவன் அல்லாத மற்றவர்கள் முன்னால் என்று தான் பொருள் கொள்ள வேண்டும்

கணவனும் மனைவியும் வேறு ஒரு உறவினரின் வீட்டுக்குச் செல்கின்றனர். இந்த வீடு மனைவிக்கு கணவனுடைய வீடு இல்லை. இந்த வீட்டில் கணவன் முன்னால் மனைவி ஆடையை அவிழ்க்க்க் கூடாது என்று யாரும் சொல்ல மாட்டார்கள். கணவன் முன்னால் என்பதைத் தான் கண்வன் வீடு என்ற சொல்லாம் நபிகள் நாயகம் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

அடுத்தவர் வீடு என்ற காரணத்தால் இது கூடாது என்று யாரும் கூறுவதில்லை. பாதுகாப்பு ஒன்றை மட்டுமே கவனத்தில் கொண்டு இதை அனுமதிக்கின்றனர்.

பெண்கள் நவீன நீச்சல் குளத்தில் அன்னியர்கள் பார்க்காமலும் ஆடை அவிழ்க்காமலும் குளிக்கும் நிலை இருந்தால் அங்கே குளிப்பது தவறல்ல.

இன்றைக்கு பெண்களுக்கான நவீன பாதுகாப்பான நீச்சல் குளங்கள் இருப்பதைப் போன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருக்கவில்லை. குளம் குட்டை போன்ற நீர்நிலைகளே பொதுவிடங்களில் இருந்தது. அங்கு சென்று பெண்கள் குளித்து வந்தனர்.

இவர்கள் குளிப்பதை அந்நிய ஆண் பார்க்க நேரிடும். பாதுகாப்பு அற்ற இது போன்ற நீர்நிலைக்கு சென்று குளிக்கக் கூடாது என்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே இந்த ஹதீஸின் அடிப்படையில் தற்போது இஸ்லாமியப் பெண்கள் ஆறு குளம் ஏரி போன்ற நீர்நிலைகளுக்குச் சென்று அறைகுறை ஆடையுடன் குளிக்கக் கூடாது என்று கூறலாமே தவிர பாதுகாப்புள்ள இடங்களுக்கும் செல்லக்கூடாது என்று கூற முடியாது.

அதே நேரத்தில் ஆண்களுக்கும் தனித்தனி பகுதி ஒதுக்கப்பட்டு மறைக்கப்பட்டு இருந்தால் அப்போது இது தவறாகாது.

அது போல் குற்றாலம் போன்ற இடங்களிலும் தீம்ஸ் பார்க்குகளிலும் ஆண்கள் பார்வையில் படாமல் பெண்கள் குளிக்க முடியாது என்பதால் அது போன்ற இடங்களில் குளித்து ஆண்களின் காட்சிப்பொருளாக ஆகக் கூடாது

ஆனால் இன்று விடுதிகளில் தங்கும் தமபதிகள் கூட ரகசியமாக படம் பிடிக்கப்படுகின்றனர். அது போல் குளியறையிலும் ரகசிய கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதையும் கவனத்தில் கொள்வது அவசியம் .

துவாவுடைய ஒழுக்கங்கள்

 
துவாவுடைய ஒழுக்கங்கள்

1.அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதற்குமுன்
1. பிரார்த்தனை செய்வதற்கு முன் அல்லாஹ்வைப் போற்றிப் புகழவேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறவேண்டும். அது ஏனெனில், நிச்சயமாக நீர் அல்லாஹ்விடம் அவனுடைய அருட்கொடைகளை, கருணைகளை, பாவமன்னிப்பை கேட்கப்போகிறீர். எனவே, அல்லாஹ்வுடைய தகுதிக்கேற்றவாறு எதிலே புகழ்வார்த்தையும், மேன்மைப்படுத்திப் பேசுதலும் இருக்குமோ அத்தகைய ஒரு முன்னுரையை நீர் முதலில் அவனுக்காக முற்படுத்துவதே இவ்விடத்தில் பொருத்தமான ஒரு செயலாக இருக்கும்.

இதற்குச் சான்றாக பின்வரும் நபிமொழியைப் பாருங்கள்!
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமர்ந்திருந்தபோது, ஓர் ஆடவர் அந்நேரம் வந்தார். தொழுது முடித்தார். பின்னர், யாஅல்லாஹ்! எனக்கு நீ பாவம் பொருத்தருள்வாயாக! எனக்கு நீ அருள் செய்திடுவாயாக! என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தொழுது முடித்தவரே! நீர் அவசரப்பட்டுவிட்டீர்! நீர் தொழுது முடித்தால் அல்லாஹ் அவனுக்குத் தகுந்தவைகளைக் கொண்டு புகழ்வீராக! பின்னர் என்மீது ஸலவாத்துக் கூறுவீராக! பின்னர் அவனிடம் பிரார்த்திப்பீராக!

அறிவிப்பாளர் கூறுகிறார்:
பின்னர் அவரை அடுத்து ஒரு ஆடவர் தொழுது முடித்தார். அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்தைக் கூறினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவரிடம், தொழுது முடித்தவரே! துஆச் செய்வீராக! (ஒரு சமயம் உம்முடைய துஆ அங்கீகரிக்கப்பட்டு) நீர் பதிலளிக்கப்படலாம் என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: ஃபுளாலத் பின் உபைத் ரளியல்லா அன்ஹு, நூல்: திர்மிதீ

2. அல்லாஹ்ப்பற்றி நல்லெண்ணம் கொள்ளுதல்
உயர்வானவனாகிய அல்லாஹ்,

(البقرة ) وَإِذا سَأَلَكَ عِبَادِيْ عَنِّي فَإِنِّيْ قَرِيْبٌ أُجِيْبُ دّعْوَةَ الدَّاعِى إِذَا دَعَانِ

மேலும் , (நபியே!) என்னுடைய அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால், நிச்சயமாக நான் சமீபத்தில் இருக்கிறேன் (என கூறுவீராக!). அழைப்பாளனின் அழைப்பிற்கு அவன் என்னை அழைக்கும்போது நான் பதிலளிக்கிறேன் என்று கூறினான். (அல்பகறா:186)اَللّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا عمِلْتُ وَشَرِّ مَالَمْ أَعْمَلْ
அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக மின் ஷர்ரி மா அமில்த்து, வ ஷர்ரி மாலம் அஃமல் என்று துஆச்செய்பவர்களாக இருந்தார்கள் என்று கூறினார்கள்.

எனவே, அல்லாஹ் நம்மிலிருந்து மிகச் சமீபமாக இருக்கிறான். அவனுடைய அறிவு, எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் அவன் சூழ்ந்து அறிதல், அவனுடைய பாதுகாப்பு ஆகியவற்றால் அவன் நம்மோடு இருக்கிறான் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கவேண்டும்.

திட்டமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், துஆவை ஏற்றுக்கொள்ளுதல் என்ற விஷயத்தை அல்லாஹ்விடம் நாம் ஒப்படைத்து விடவேண்டும் எனவும், நாம் துஆச் செய்து கேட்ட நம்முடைய எண்ணம் நிறைவேறும் என்பதில் நாம் உறுதியாக இருக்கவேண்டும் எனவும் நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.

அல்லாஹ்வின்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
(உங்களுடைய பிரார்த்தனை அல்லாஹ்வால்) ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை உறுதி கொண்டவர்களாக அல்லாஹ் அழைத்துப் பிரார்த்தனை புரியுங்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ

நிச்சயமாக அல்லாஹ், அவனுடைய விசாலமான தயாளத்தனத்தாலும், பேருபகாரத்தின் சிறப்பாலும் உங்களை எப்போது பிரார்த்தனைச் செய்பவரிடமிருந்து பேராதரவும் பிரார்த்தனையில் தூய்மையான எண்ணமும் ஏற்பட்டுவிடுமோ வெறுங்கையோடு திருப்பமாட்டான் என்பதை உறுதியாக நம்பிக்கைக் கொள்ளுங்கள். ஏனெனில், பிரார்த்தனை புரிபவர் (அல்லாஹ் நமது துஆவை ஏற்பான் என்ற) அவருடைய பேராதரவில் உறுதிகொண்டவராக இல்லையென்றால் அவருடைய துஆவும் தூய்மையானதாக அமையாது.

3. நமது பாவங்களை ஒப்புவித்தல்
இந்தச் செயலே அல்லாஹ்வுக்குரிய நமது அடிமைத்தனத்தை நிரூபணம் செய்வதில் முழுமையானதாகும்.

அல்லாஹ்வின்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் உன்னையன்றி வேறு (யாரும், எதுவும்) இல்லை. நிச்சயமாக நான் எனக்கே அநீதி இழைத்துவிட்டேன். எனவே, என் பாவங்களை எனக்கு நீ பொருத்தருள்வாயாக! என்று ஒரு அடியான் கூறும்போது, அவனைப்பற்றி பெருமிதங்கொள்கிறான். என்னுடைய அடியான் நிச்சயமாக அவனுக்கு ஒரு இரட்சகன் இருக்கிறான், அவன்தான் பாவங்களை பொருத்தருள்வான். (பாவிகளுக்கு) தண்டனை வழங்கிடுவான் என்பதை அறிந்து கொண்டான் என்று (அல்லாஹ் வாகிய) அவன் கூறுகிறான். அறிவிப்பாளர்: அலீ பின் அபீதாலிப் ரளியல்லாஹு அன்ஹு, நூல்:ஹாகிம்

4. கேட்பதில் உறுதி
உங்களில் ஒருவர் பிரார்த்தனைச் செய்யும்போது கேட்பதை உறுதியாகக் கேட்கட்டும். யாஅல்லாஹ்! நீ நாடினால் கொடு என திண்ணமாக அவர் சொல்லவேண்டாம். ஏனெனில், அவனை நிர்ப்பந்திக்கச் செய்பவர் யாரும் இல்லை என அல்லாஹ்வின்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்:புகாரீ, முஸ்லிம்

கேட்பதில் உறுதி என்பதன் நோக்கமாவது, தேடிப் பெறுவதில் நிரந்தரமாக நிலைத்து சளைக்காமல் பிடிவாதமாக மன்றாடிக் கேட்பது, அல்லாஹ்விடம் மிகக் கடுமையாக தெண்டித்துக் கேட்குதலைக் குறிப்பதாகும்.

5. பிரார்த்தனையில் கடுமை
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்குரிய ஒரு போர்வை திருடப்பட்டுவிட்டது. அதைத் திருடியவருக்கெதிராக துஆச் செய்பவர்களாக இருந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், (திருடியதால் அவருக்குண்டான பாவத்தை அவருக்குக் கேட்பதில்) அவர் விஷயத்தில் மென்மையைக் கையாளவேண்டாம் என்று கூறினார்கள். (நூல்:அபூதாவூது)

6. ஒன்றை மூன்று முறை கேட்டு துஆச் செய்தல்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தமது தொழுகையை முடித்துக் கொண்ட போது, தனது தொணியை உயர்த்தி பின்னர் (பகைவர்களான) அவர்களுக்குக் கேடாக பிரார்த் தனை செய்தார்கள். அவர்கள் எதையும் பிரார்த்தனைச் செய்பவர்களாக இருந்தால் மூன்று முறை துஆச் செய்வார்கள். யாஅல்லாஹ்! குரைஷியரை நீ பிடித்துக்கொள்! யாஅல்லாஹ்! குரைஷியரை நீ பிடித்துக்கொள்! யாஅல்லாஹ்! குரைஷியரை நீ பிடித்துக்கொள்! என பின்னர் கூறினார்கள் என்று இப்னு மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடைய அறிவிப்பில் முஸ்லிமில் வந்துள்ள நீளமான ஹதீஸில் நபிவழியில் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

7. ‘ஜவாமிஉ’ (சுருக்கமான வார்த்தையில் விசாலமான அர்த்தங்களைக் கொண்டுள்ள) துஆக்களைக் கூறி பிரார்த்தனைப் புரிதல்

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆக்களில் நிறைய பொருளை தரும் சுருக்கமான வார்த்தைகளை விரும்புபவர்களாகவும் அதுவல்லாத வார்த்தைகளை கூறாது விட்டு விடுபவர்களாகவும் இருந்தனர். நூல்: ஸன்னன் அபீதாவூது, அஹ்மது

இதுமாதிரியான பிரார்த்தனைகளில் உள்ளதே ஃபர்வா பின் நவ்ஃபல் அவர்கள் அறிவிப்பில் வந்துள்ள ஒன்று.

நான் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதைக்கொண்டு துஆச் செய்பவர்களாக இருந்தார்களோ அப்படியான ஒரு துஆவைப்பற்றி நான் கேட்டேன்.

(பொருள்: யாஅல்லாஹ்! நான் செய்து விட்டவற்றின் தீங்கிலிருந்தும் மற்றும் நான் செய் யாதவற்றின் தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் காவல் தேடுகிறேன்) நூல்: முஸ்லிம், அபூதாவூது

اَللَّهُمَّ اغْفِرْ لِيْ خَطِيئَتِيْ وَجَهْلِيْ وَإِسْرَافِيْ فِي أِمْرِيْ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ اَللَّهُمَّ اغْفِرْ لِيْ جِدِّيْ وَهَزْلِيْ وَخَطَئِيْ وَعَمْدِيْ وَكُلُّ ذَلِكَ عِنْدِيْ ، اَللَّهُمَّ اغْفِرْ لِيْ مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ وَ أَنْتَ عَلى كُلِّ شَيئٍ قَدِيْرٌ

அல்லாஹும்மக் ஃபிர்லீ கதீஅதீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபீ ஃபீ அம்ரீ, வமா அன்த்த அஃலமு பி?ி மின்னீ, அல்லாஹும்மக் ஃபிர்லீ ஜித்தீ வ?ஜ்லீ, வ கதஈ, வ அம்தீ, வ குல்லு தாலிக இன்தீ, அல்லாஹும்மக் ஃபிர்லீ மா கத்தம்த்து, வமா அக்கர்த்து, வமா அஸ்ரர்த்து, வமா அஃலன்த்து, வமா அன்த்த அஃலமு பிஹி மின்னீ அன்த்தல் முகத்திமு, வஅன்த்தல் முஅக்கிரு, வ அன்த்த அலா குல்லி ஷையின் கதீர் என இந்த துஆவைக் கூறி பிரார்த்தனை புரிபவர்களாக நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்தார்கள் என அபூமூஸப் அல் அஷ்அரீ – ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். நூல்: முஸ்லிம்رَبَّـنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُونَا بِالْإِيْمَانِقَالَ رَبِّ اغْفِرْ لِيْ وَلِأَخِيْ وَأَدْخِلْنَا فِيْ رَحْمَتِكَ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِيْنَرَبَّنَا اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ

(பொருள்: யாஅல்லாஹ்! என்னுடைய தவறை, எனது அறியாமையை, எனது காரியத்தில் வீண்விரயத்தை, என்னைவிட நீ அறிந்திருக்கும் ஒன்றை எனக்கு நீ பொருத்தருள்வாயாக!

யாஅல்லாஹ்! என்னுடைய முயற்சி(யால் ஏற்பட்டதை), என்னுடைய சோர்வு, என்னுடைய தவறு, வேண்டுமென்றே தெரிந்து என்னால் செய்யப்பட்டது, என்னிடமுள்ள அவை ஒவ்வொன் றையும் நீ எனக்கு பொருத்தருள்வாயாக!

யாஅல்லாஹ்! நான் முற்படுத்தியவற்றை, நான் பிற்படுத்தியவற்றை, நான் மறைத்தவற்றை, நான் பகிரங்கப்படுத்தியவற்றை, நான் விரயம் செய்தவற்றை, என்னை விட நீ எதை மிக அறிந்திருக்கின் றாயோ அந்த ஒன்றை நீ எனக்கு பொருத்தருள்வாயாக! நீதான் (நன்மைகளைச் செய்ய) முற்படுத்தி வைப்பவன், நீயே (தீயவற்றைச் செய்யாது காத்து) பிற்படுத்திவைப்பவன், நீயே ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுள்ளவன்.)

8. பிரார்த்தனை புரிபவர் தனக்காக முதலில் கேட்பார்
உயர்வானவனின் கூற்றில் வந்துள்ளவற்றைப் போன்று:-

எங்களுடைய இரட்சகனே! எங்களுக்கும், ஈமான் கொண்டு எங்களை முந்திவிட்டார்களே அத்தகையோரான எங்களுடைய சகோதரர்களுக்கும் நீ பொருத்தருள்வாயாக! அல்ஹஷ்ரு: 10

இன்னும் அவனுடைய கூற்று:-

எனது இரட்சகா! எனக்கும் என்னுடைய சகோதரருக்கும் நீ பொருத்தருள்வாயாக! மேலும், எங்களை உன்னுடைய ரஹ்மத்தில் நுழைவிக்கச் செய்திடுவாயாக! என்று (நபி மூஸப்) அவர்கள் கூறினார்கள். அல் அஃராஃப்:151

இன்னும், அவனுடைய கூற்று:-

எங்கள் இரட்சகா! எனக்கும், என்னுடைய பெற்றோர்களுக்கும், விசுவாசிகளுக்கும் கேள்வி கணக்கு நிலைபெறும் நாளில் பொருத்தருள்வாயாக! இப்றாஹீீம்:41

நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யாரை யாவது நினைவுகூர்ந்து, அவருக்காக பிரார்த்தனை புரிவார்களானால் தனக்காக அதை முதலில் கேட்டு ஆரம்பிப்பார்கள். (திர்மிதீ)

எனினும், இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கட்டாயமான வழக்கமாக இருந்ததில்லை. ஏனெனில், சில சமயங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடுத்தவருக்கு துஆச் செய்து கேட்டதை தனக்கு கேட்காமல் துஆச் செய்திருப்பதும் சரியான வழியில் வந்துள்ளது (நபி இப்றாஹீீம் அவர்களின் துணைவியர்) ஹாஜர் விஷயத்தில், ‘இஸ்மாயீலின் தாயாருக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக! ஜம்ஜம் (நில்நில்)என்று சொல்வதை விட்டிருப்பார்களானால் (ஜம்ஜம் ஊற்றான) அது பெருக்கெடுத்து ஓடிவிடும் ஒரு பெரும் ஊற்றாக ஆகியிருக்கும் என்று கூறியது போன்று!

9. துஆச் செய்ய விரும்பத்தக்க நேரங்களில் துஆச் செய்ய முயற்சிப்பது

அவ்வாறான நேரங்களில் உள்ளதே நடு இரவு, பாங்கு மற்றும் இகாமத்துக்கு இடையேயான நேரம், ஸஜ்தாவில், (போருக்கு) அழைக்குமிடத்தில், போர் சமயத்தில், ஜும்ஆ தினத்தின் அசருக்குப்பின், அரஃபா நாள், மழை பொழியும் நேரம், ரமளானின் கடைசி பத்து நாட்கள்