Digital Time and Date

Welcome Note

Saturday, March 30, 2013

யார் இந்த சோனியா காந்தி ?

.

யார் இந்த சோனியா காந்தி ? சரித்திரத்தை புரட்டி பார்ப்போம். இந்தியர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்...

மன்மோகன் சிங் எனும் பொம்மை கொண்டு இந்தியாவின் சொந்த குடிமக்களாகிய நம்மை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் ஒரு இத்தாலிய சூனிய காரி பெண்ணான "அன்னை சோனியா" என்று நம் தமிழ் காவலர் கருணா நிதியால் அழைக்கப்படும் "சோனியா காந்தி" தான்.

இந்தியர் பலருக்கு புரியாத புதிருமாய் , விளங்காத விடயுமாய் உள்ளது இந்த கேள்வி, இதோ அவருடைய சரித்திரத்தை புரட்டி பார்ப்போம்.

அலுவலக ரீதியாக உலக அளவில் இவர் பெயர் சோனியா காந்தி கிடையாது, பாஸ்போர்டில் கூட இவரது பெயரில் காந்தி என்ற பெயரோ - சோனியா என்ற பெயரோ கிடையாது, எல்லாமே வெளி வேஷம்.

உண்மையான பெயர் : எட்விட்ஜ் அந்தோனியா அல்பினா மைனோ (Edvige Antonia Albina Maino)
எல்லோரும் இவர் இத்தாலி என்று கூறுவர் இவரது இந்திய பொய் பெயரான "சோனியா" எனபது இத்தாலி கிடையாது, உண்மையில் இந்த பெயர் ரஷிய பெயராகும்.

எப்படியோ இவரது உண்மையான பெயர் "சோனியா" என்பது இல்லை. மாறாக அந்தோனியா (Antoniya) என்ற இத்தாலிய பெயரை தான் இவர் தனது பாஸ் போர்டில் வைத்து உள்ளார்,

நன்கு ஆராய்ந்து பார்த்தால் காந்தி - காந்தி என்று நம்மை ஏமாற்றும் காங்கிரெஸ் காரர்கள் அடிப்படையில் முஸ்லிம் கள், எப்படி என்று கேட்கிறீர்களா? ராஜீவ் காந்தியின் உண்மை பெயர் ராஜீவ் கான் காரணம் இவர் தந்தை பெரோஸ் கான், மேலும் இவர்கள் குடும்பத்தில் வரும் காந்தி என்ற பெயர் கூட பொய்யானது, ராஜிவின் அன்னை இந்திராவின் உண்மை பெயர் இந்திரா பிரிய தர்ஷினி. காந்தி என்ற பெயரை இந்திய மக்களை ஏமாற்றுவதற்காக அரசியல் நோக்கத்துக்காக இவர்கள் இட்டுக்கொண்ட அடை மொழி.

சரி நாம் அன்னை சோனியாவின் வண்டவாலத்துக்கு வருவோம், சோனியாவின் தந்தை ஸ்டீபன் (Stefano Eugene Maino) முதலில் ஜெர்மனி யின் ஹிட்லரின் ராணுவத்தில் பணி புரிந்து கொண்டிருந்தார் , அப்போது ரஷ்யா மீது ஹிட்லர் போர் தொடுத்த பொது, இவர் ரஷ்யாவில் கைதாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

மேலும் அவருக்கு இருபது ஆண்டுகள் சிறை தண்டனையை ரஷியா அளித்தது,பின்னர் அவருக்கு நான்கு ஆண்டுகளாக தண்டனையை குறைத்து விடுதலை செய்தது ரஷ்யா, அங்கிருந்து வரும்போது தான் தன மகளுக்கு ரஷியா பெயரை வைத்தார். அதுவும் அந்த மகள் "சோனியா" இவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த பொது பிறந்தார் எனபது குறிப்பிடத்தக்கது.
 
ஆகவே சோனியா பிறப்பில் கூட ஒரு மர்மம் மறைந்து கிடைக்கிறது, மரபியல் ரீதியாக தந்தை பெயர் தெரியாத ஒரு பெண் தான் இப்போது இந்தியாவை ஆட்டிக்கொண்டு இருக்கிறார்.

சோனியாவின் அறிக்கையின்படி அவர் இத்தாலியில் பிறந்தார் என்றார், அனால் பிறப்பு சான்றிதழ் மூலம் இவர் ச்விட்செர்லாந்தில் மிலிடரி காம்பில் பிறந்தார் என்று உறுதி செய்யப்பட்டது. ஆக இவர் எங்கு பிறந்தார் என்று கூட இவருக்கு நினைவு இல்லை.
 
இவர் ராஜிவை மனம் முடிக்கையில் தான் இங்கிலாந்தில் உள்ள காம்ப்ரிட்ஜ் பல்கலை கழகத்தில் பட்டம் முடித்ததாக சொல்லி இருந்தார், பின்னர் அது பொய் என்றும் இவர் பள்ளியில் 5 வகுப்பை தாண்ட வில்லை என்றும் நிருபனமானது.

இப்போது புரிகிறதா நம்மை ஆட்டுவிக்கும் பெண் ஒரு படிக்காத மாமேதை

via நான் பேச நினைப்பதெல்லாம்'

நிலத்தில் மிதக்கும் மலைகள்நிலத்தில் மிதக்கும் மலைகள்
**************************

அல்குர்ஆனின் வழியில் அறிவியல்…..

இஸ்லாம் அறிவியல் உண்மைகளை அரவணைத்துச் செல்லும் மார்க்கம். இயற்கையோடு இணைந்து செல்லும் இணையற்ற மார்க்கம். இயற்கை மார்க்கத்தின் இறுதி நெறிநூல் அல்குர்ஆனோ, அறிவியல் கருத்துக்களை உள்ள டக்கிய ஆய்வுப் பெட்டகமாக விளங்குகிறது. இன்றைய நவீன அறிவியல் கருத்துக்கள் அடங்கிய வசனங்கள் குர்ஆனில் ஏராளமாக உள்ளன. அவ்வசனங்களில் ஒன்றுதான்,

“அன்றியும், மலைகளைப் போல் உயரமாகச் செல்லும் கப்பல்கள் அவனுக்கே உரியன” அல்குர்ஆன் 55:24

“இன்னும் மலைகளைப் போல் கடலில் செல்பவையும் (கப்பல் மற்றும் பனிப் பாறை (Ice berg) அவனுடைய அத்தாட்சிகளில் உள்ள வையாகும்.” அல்குர்ஆன் 42:32

இவ்விரு வசனங்களிலும், கடலில் செல்லும் கப்பல்களை நிலத்தில் உள்ள மலைகளோடு அல்லாஹ் ஒப்பிட்டுக் கூறுகிறான். சாதாரணமாக இவ்வசனங்களைப் பொருள் கொள்ளும் போது, கடலில் கப்பல் செல்வது பெரும் மலைகள் செல்வது போன்ற தோற்றத்தை பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்துகிறது என்றுதான் அனைவரும் அறிகிறோம். ஆனால்
சற்று ஆழமாக, அறிவியல் கண் கொண்டு இவ்வசனங்களை ஆய்வு செய்யும்போது, நவீன அறிவியல் உண்மைகள் இவ்வசனங்களில் ஒளிந்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்படுகிறோம். அல்லாஹ் உண் மையல்லாத ஒன்றை உதாரணமாகக் கூட கூறுவதில்லை என்பதை அறிந்து வியக்கிறோம். சுபுஹானல்லாஹ்!-இறைவன் தூய்மையானவன்.
 
1.பூமியின் ஈர்ப்புவிசை-மிதத்தல் விசை (Buoyancy Force)

கடலில் மிதக்கும் கப்பல், மற்றும் பனிப் பாறை(Ice berg)களும் நிலத்தில்
நிற்கும் மலைகளும் ஒரே அறிவியல் விதியின் கீழ் செயல்படும் உண்மையை அல்லாஹ் 1400 ஆண்டுகளுக்கு முன்பே வெளிப்படுத்திவிட்டான். வானத்தை நோக்கி எப்பொருளை எறிந்தாலும் அது மீண்டும் பூமியில் வந்து விழும். இதற்குக் காரணம் பூமியின் ஈர்ப்பு விசை (Gravitational force) இது போல் மிதக்கும்
எப்பொருளையும் நீரில் ஆழ்த்தினால், நீரானது அப்பொருளை மேல் நோக்கித்
தள்ளும். உதாரணமாக ஒரு பந்தை நீரில் அமுக்கினால் அது மீண்டும் மேல் நோக்கி மிதக்கும். இதற்குக் காரணம் பூமியின் ஈர்ப்பு விசை (Buoyancy Force)

ஒரு பொருள் நீரில் மிதப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. 1.அப்பொருளின்
அடர்த்தி (Density) நீரின் அடர்த்தியை விடக் குறைவாக இருக்க வேண்டும்.

2. அப்பொருளின் எடையால் (Mass volume) விலக்கப்படும் நீரின் எடை அதிகமாக இருக்க வேண்டும்.

ஆர்ட்டிக், அண்டார்டிக் கடலில் மிதக்கும் பனிப்பாறை(Ice berg)யின்
அடர்த்தி 0.9 கிராம்/ சி.சி. ஆனால் கடல் நீரின் அடர்த்தி 1.0 கிராம்/
சி.சி. எனவே அடர்த்தி குறைந்த (ஐஸ்பெர்க்) பனிப்பாறைகள் 1 பங்கு நீருக்கு
மேலும் 9 பங்கு நீருக்குள் மூழ்கியும் மிதக்கிறது.

கடலில் மிதக்கும் கப்பலின் எடையானது (Mass volume) விலக்கும் நீரின் எடையை விடக் குறைவாக இருப்பதால் கப்பல் மிதக்கின்றது.
கடலில் மிதக்கும் கப்பல் மற்றும் பனிப்பாறை (Ice berg)யைப் போலவே
நிலத்தில் உள்ள மலைகளும் இதே அறிவியல் விதியின் கீழ் (Archimedes
Principle) மிதப்பதாக நவீன அறிவியல் கூறுகிறது.

உருகிய பாகுக்(Viscous fluid)குழம்பில் மிதக்கும் மலைகள்:
“நிச்சயமாக வானங்களும் பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதனையும் இவற்றை நாமே பிரித்தமைத்தோம் என்பதையும் நிராகரிப்பவர்கள் பார்க்கவில்லையா?
(அல்குர்ஆன் 21:30)

ஒன்று சேர்ந்திருந்த வானம் பூமி அனைத்தையும் 13-20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெரு வெடிப்பின் (Big bang) மூலம் அல்லாஹ் பிரித்தான். இப்படி பிரிந்து வந்த நட்சத்திரங்கள், சூரியன், பூமி மற்றும் பிற கோள்கள் அனைத்தும் கடும் வெப்பநிலையில் சுழன்றன. பல மில்லியன் ஆண்டுகள் கடந்து அவை மெதுவாக குளிர்ந்தன.

பூமியின் மேல் அடுக்கு (Continental Crust) குளிர்ந்து கடினமாக மாறியது. இதற்கு கீழே உள்ள மாண்டில் எனும் இடை அடுக்கு உருகிய பாகு (Viscous fluid) நிலையில் உள்ளது. நடு உறை எனப்படும் core முற்றும் உருகிய இரும்பு திரவ நிலையில் இன்றும் உள்ளது. இதுவே magma எனும் எரிமலை குழம்பாக வெளியேறுகிறது. மாண்டில் (Mantle) எனும் நடு உறை பாகு நிலையில் கடல் போல் சூழ்ந்துள்ளது. கடலில் கப்பல், பனிப்பாறை மிதப்பது போன்ற உருகிய பாகு குழம்பில் பூமியின் மேல் ஓட்டில் உள்ள மலைகள் (Continental mountain crust) மூழ்கி மிதக்கின்றன. ஏனெனில் பூமியின் மேற்பரப்பில் உள்ள (Continental Mountain Crust) மூழ்கி மிதக்கின்றன. ஏனெனில் பூமியின் மேற்பரப்பில் உள்ள (Continental Crust) அடர்த்தி 2.8 கிராம் /சி.சி. ஆனால் பாகு நிலையில் உள்ள மாண்டிலின் அடர்த்தி 3.3 கிராம்/சி.சி. எனவே அடர்த்தி குறைவான மலைகள் அடர்த்தி அதிகமுள்ள மாண்டில் பாகு (Viscous fluid) கடலில் மிதக்கின்றன.

அடர்த்தி குறைவான பனிக்கட்டி அடர்த்தி அதிகமுள்ள கடலில் மிதப்பது போன்று அடர்த்தி குறைவான மலைகள் அடர்த்தி அதிகமுள்ள பாகு கடலில் மிதக்கின்றன. இதைத் தான் அல்லாஹ், “மலைகளைப் போல் கடலில் செல்பவையும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். அல்குர்ஆன் 42:32ல் கூறுகிறான்.

நிலத்தில் உள்ள மலைகள், கடலில் மிதக்கும் கப்பல்கள், பனிப்பாறைகள் (Ice berg) அனைத்தும் ஒரே அறிவியல் விதியில் (Archimedes Principle) செயல்படும் விந்தையை அல்லாஹ் 1400 ஆண்டு களுக்கு முன்பே வெளிப்படுத்தி விட்டான்.

மலையின் வேர்கள் (Mountain Buoyancy Roots) “இன்னும் மலைகளை முளைகளாக ஆக்க வில்லையா?” அல்குர்ஆன் 78:7 பூமியில் உள்ள பெரும் மலைத் தொடர்கள் முளைகளைப் போல் பூமியில் ஊன்றப்பட்டுள்ளதாக அல்லாஹ் கூறுகிறான். இதை நவீன அறிவியலில் Buoyant Roots என்று அழைக்கிறார்கள். மரத்தின் வேர்கள் பூமியில் ஆழப் பாய்ந்து மரத்தை நிலைநிறுத்துவது போல், மலையின் வேர்கள் பூமியின் மேல் ஓட்டிலிருந்து கீழிறங்கி மாண்டில் பாகு பகுதியில் நிலை நிற்கின்றன. கப்பல் போல், பனிப்பாறை போல் மிதக்கின்றன.

கடலில் மிதக்கும் கப்பல்கள் அலைகளின் காரணமாக அசைவது போன்று நிலத்தில் மிதக்கும் மலைகளும் அசைந்து செல்கின்றன. இது செல்லும் வேகத்தை நம்மால் உணர முடியாது. உதாரணமாக நமது கைவிரல்களில்
வளரும் நகம் எந்த வேகத்தில் வளர்கிறதோ இதே வேகத்திலேதான் பூமித்தட்டின் மேற்புறமும் பாகு கடலில் நகர்கிறது.

மலையின் உயரத்தை விட 5, 6 மடங்கு அதிக ஆழத்தில் Buoyant Root பூமியில் ஊடுருவி இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. கடலில் மிதக்கும் கப்பல் அல்லது பனிப்பாறையில் நாம் எடைகளை ஏற்றினால் கப்பல் அல்லது பனிப் பாறை சற்று நீரில் மூழ்கும். எடையை எடுத்து விட்டால் மீண்டும் பழைய நிலைக்கு மேல் வந்து மிதக்கும். இதற்கு Buoyancy Force என்று முன்பே கூறினோம். இந்த விதியின் கீழ் நிலத்தில் மிதக்கும் மலைகளும் செயல்படுகின்றன.

பூமியில் நிகழும், காற்று, மழை, பனிப் பொழிவு, வெப்பம், ஆறு காரணமாக மலைகள், பாறைகள் தொடர்ந்து அரிக்கப்பட்டு தேய்மானம் (Erosion) அடைகிறது. வருடத்திற்கு 0.02 மி.மி. அரிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது 100 வருடத்தில் 2மி.மீட்டர் உயரம் அரிக்கப்பட்டு விடும். உதாரணமாக 4கி.மி. உயரமுள்ள ஒரு மலையானது வருடத்திற்கு 0.02 மி.மீ அளவுக்கு அரிக்கப்பட்டால் சுமார் 2 மில்லியன் வருடங்களில் 4 கி.மி. உயரமுள்ள மலை முற்றிலும் அரிக்கப்பட்டு விடும்.

ஆனால் இன்று நாம் காணும் உலகில் உள்ள பெரும் பெரும் மலைகள் பல மில்லியன் ஆண்டுகள் கடந்தும் இன்றும் உயர்ந்து நிற்கின்றன. இதற்குக் காரணம் Buoyancy root விதியே. எடை ஏற்றப்பட்ட சரக்குக் கப்பலிலிருந்து எடையை எடுக்க எடுக்க கப்பல் மீண்டும் மேல் நோக்கி மிதக்கும். இதைப் போலவே ஒரு கண்ணாடி பாத்திரத்தில் குளிர்ந்த நீரை நிரப்பி அதில் ஒரு துண்டு ஐஸ் கட்டியை போட்டால், 1 பங்கு நீருக்கு மேலும் 9 பங்கு நீருக்கு கீழ் மூழ்கி மிதக்கும். நீருக்கு மேலிருக்கும் ஐஸ் கரையக் கரைய Buoyancy root விதிப்படிகீழிருக்கும் ஐஸ் ஆனது மேல் நோக்கி நீரால் தள்ளிப்போட்டு தொடர்ந்து அதன் 1பங்கு உயரத்தை எப்போதும் மாறாமல் வைத்திருக்கும். ஐஸ் முற்றிலும் கரையும் வரை இந்நிலை நீடிக்கும்.

நிலத்தில் மிதக்கும் மலைகள் புறச் சூழலினால் மேல் புறம் அரிக்கப்பட்டாலும், அரிக்கப்பட்ட அளவிற்கு Buoyancy root மலையை மேல் நோக்கி தள்ளி பழைய அளவிலேயே சமநிலைப்படுத்தும். மிகச் சமீபத்திய இமயமலை ஆய்வு முடிவுகள் மூலம் இமயமலையின் வேர்கள் (Buoyancy root) சுமார் 250-300 மைல் ஆழம் வரை ஊடுருவி உள்ளதாக தெரிவிக்கின்றன.

18-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இவ்வறிவியல் உண்மையை சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு சிறிய வசனத்தில் வெளிப் படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

“மலைகளைப்போல் கடலில் செல்பவையும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். அல்குர்ஆன் 42:32

இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : அல்-குர்ஆன்

Q83) முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் பெயர் என்ன?

அப்துல் முத்தலிஃப்

Q84) முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தந்தையார் பெயர் என்ன?

அப்துல்லாஹ்

Q85) முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தாயார் பெயர் என்ன?

ஆமினா அம்மையார்

Q86) முஹம்மது (ஸல்) அவர்களின் தாயார் எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவராவார்?

ஆமினா அம்மையார் பனூஸஹ்ரா கோத்திரத்தைச் சேர்ந்த வஹ்ப் என்பவரின் மகளாவார்.

Q87) முஹம்மது (ஸல்) அவர்களின் தந்தை எங்கு, எப்போது மரணமடைந்தார்கள்?

முஹம்மது (ஸல்) அவர்கள் தன் தம் தாயின் வயிற்றில் சில மாத கருவாக இருந்தபோது, சிரியா நாட்டிற்கு வியாபாரத்திற்காக செல்லும் வழியில் மதினாவில் நோய்வாய்பட்டு இறந்தார்.

Q88) முஹம்மது (ஸல்) அவர்கள் எந்த வருடம் பிறந்தார்கள்?

கி.பி. 570 ஆம் ஆண்டு, ரபியுல் அவ்வல் மாதம் பிறந்தார்கள். பிறந்த தேதியில் கருத்து வேறுபாடு உண்டு. ஆயினும் பல அறிஞர்களின் கருத்துப்படி ரபியுல் அவ்வல் மாதம் 12-ல் பிறந்தார்கள் என்பதாகும்.

Q89) முஹம்மது (ஸல்) அவர்கள் பிறந்த வருடம் வரலாற்று ஆசிரியர்களிடையே எப்படி அழைக்கப்படுகிறது?

யானை ஆண்டு என அழைக்கப்படுகிறது.

Q90) முஹம்மது (ஸல்) அவர்கள் பிறந்த வருடம் யானை ஆண்டு என்று ஏன் அழைக்கப்படுகிறது?

நபிகள் நாயகம் பிறப்பதற்கு ஐம்பது நாட்களுக்கு முன்பு கஃபதுல்லாஹ்வை இடிப்பதற்காக படைதிரட்டி வந்த ஆப்ரஹாம் என்ற கிறிஸ்தவ ஆட்சியாளரின் யானைப் படையினர் மீது அல்லாஹ் ‘அபாபீல்’ என்னும் பறவைகளை அனுப்பி அவற்றை அழித்தான். இதன் காரணமாக அந்த ஆண்டை யானை ஆண்டு என்கின்றனர்.

Q91) முஹம்மது (ஸல்) அவர்கள் குழந்தையாக இருந்த போது அவர்களுக்குப் பாலூட்டிய செவிலித் தாய் யார்?

பனூஸஃத் கோத்திரத்தைச் சேர்ந்த கிராமவாசியான ஹலீமத்துஸ் ஸஃதிய்யா என்ற அம்மையார்.

Q92) முஹம்மது (ஸல்) அவர்களின் தாயார் எப்போது மரணமடைந்தார்கள்?

நபி (ஸல்) அவர்கள் ஆறு வயதாக இருக்கும் போது மதினாவிலிருந்து திரும்பும் வழியில் அப்வாஃ என்னுமிடத்தில் ஆமினா அம்மையார் மரணமடைந்தார்கள்.

Q93) முஹம்மது (ஸல்) அவர்களின் தாயார் மரணத்திற்குப் பின்னர் யார் பொறுப்பில் வளர்ந்தார்கள்?

தமது பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களின் பொறுப்பில் வளர்ந்தார்கள்.

Q94) முஹம்மது (ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் எப்போது மரணமடைந்தார்கள்?

நபி (ஸல்) அவர்களுக்கு எட்டு வயதாக இருக்கும் போது.

Q95) அப்துல் முத்தலிப் அவர்களின் மரணத்திற்குப்பிறகு முஹம்மது (ஸல்) அவர்கள் யார் பொறுப்பில் வளர்ந்தார்கள்?

நபி (ஸல்) அவர்களின் பெரிய தகப்பனார் அபுதாலிப் அவர்களின் பொறுப்பில் வளர்ந்தார்கள்.

Q96) முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அச்சமூக மக்களால் வழங்கப்பட்ட பெயர்கள் யாவை? ஏன்?

உண்மையாளர், மற்றும் நம்பிக்கையாளர் (அல்-அமீன்) என்று அழைக்கப்பட்டார்கள்.

காரணம் இவ்விரண்டு குணங்களின் அடிப்ப டையிலேயே வளர்ந்து வந்தார்கள். நம்பிக்கைக்குரியவர் வந்து விட்டாரெனக் கூறப்பட்டால் நிச்சயமாக அது நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் தான் என்று புரிந்துகொள்ளப்படும்.

Q97) முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது ஆரம்பக் காலத்தில் செய்த தொழில் என்ன?

குரைஷிகளில் ஒருவரிடம் கூலிக்கு ஆடுகள் மேய்க்கும் வேலையைச் செய்தார்கள்.

Q98) முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எந்த நாட்டுக்கு வியாபாரத்திற்காகச் சென்றார்கள்?

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சிரியா நாட்டுக்கு வியாபாரத்திற்காகச் சென்றார்கள்.

Q99) முஹம்மது நபி (ஸல்) அவர்களின் முதல் திருமணம் எப்போது யாருடன் நடந்தது?

நபி (ஸல்) அவர்களுக்கு 25 வயதாக இருக்கும் போது விதவையான 40 வயதான கதீஜா (ரலி)அம்மையாருடன் நடந்தது.

Q100) முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு கதீஜா (ரலி) அவர்கள் மூலமாகப் பிறந்த குழந்தைகள் யாவர்?

ஸைனப் (ரலி), ருகைய்யா (ரலி), உம்முகுல்ஸும் (ரலி), ஃபாத்திமா (ரலி) ஆகிய பெண் மக்க ளையும் காசிம் (ரலி), அப்துல்லாஹ் (ரலி) என்ற இரு ஆண் மக்களையும் பெற்றெடுத்;தார்கள்.

காசிம் (ரலி), அப்துல்லாஹ் (ரலி) ஆகிய இருவரும் சிறுவயதிலேயே இறந்துவிட்டார்கள்.

Q101) முஹம்மது நபி (ஸல்) அவர்களின் எத்தனையாவது வயதில் வஹி இறங்க ஆரம்பித்தது?

40 ஆம் வயதில்.

Q102) முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எந்த இடத்தில் முதன்முதலாக வஹீ இறங்கியது?

மக்காவிலுள்ள ஜபல் அல்-நூர் என்று சொல்லப்படக்கூடிய மலையிலுள்ள ஹிரா என்னும் குகையில்

இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : அல்-குர்ஆன்

Q76) பெருமை என்றால் என்ன என்பதற்கு நபி (ஸல்) அவர்கள் அளித்த விளக்கம் என்ன?

A) ‘எவனுடைய உள்ளத்தில் கடுகளவு பெருமை இருக்கிறதோ அவன் சொர்க்கம் செல்ல முடியாது’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். அப்போது ஒரு மனிதர் ‘என்னுடைய உடையும், என் காலனிகளும் அழகாக இருக்க வேண்டுமென்று நான் விரும்புவது பெருமையா?’ என்று கேட்டார். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘இறைவன் அழகானவன், அவன் அழகை விரும்புகிறான். பெருமை என்பது சத்தியத்தை மறைப்பதும், மக்களை இழிவாகக் கருதுவதுமாகும்’ என விளக்கினார்கள். (அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம்: முஸ்லிம் மற்றும் திர்மிதி)

Q77) திருடர்களில் மிகவும் மோசமான திருடன் என்று யாரைக் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

A) ‘திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்? என்று நபித் தோழர்கள் கேட்டனர். ‘தனது ருகூவையும், ஸுஜுதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்’ என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தாகள். (அறிவிப்பவர் : அபூகதாதா ரலி, நூற்கள் அஹ்மத், ஹாகிம், தப்ரானி)

 Q78) முஹம்மது நபி (ஸல்) எத்தகைய மக்கள் வாழ்ந்த காலத்தில் பிறந்தார்கள்?

கற்களையும், சிலைகளையும், வாழ்ந்து மறைந்த நல்லடியார்களின் உருவங்களையும் கடவுள் எனவும், கடவுளுக்கு நெருக்கமானவர்கள் எனவும் வழிபட்ட அறியாமைக் கால மக்கள் வாழ்ந்த சமூகத்திலே பிறந்தார்கள்.

Q79) அறியாமைக் கால மக்கள் வணங்கிக் கொண்டிருந்த கடவுளர்களின் பெயர்கள் சிலவற்றைக் கூறுக:

லாத், மனாத்,உஸ்ஸா,ஹுப்ல் – இவைகள் முஹம்மது நபி (ஸல்) பிறந்த கால கட்டத்தில் வாழ்ந்த மக்களின் கடவுள்களாகும்.

Q80) முஹம்மது நபி (ஸல்) பிறந்த கால கட்டத்தில் வாழ்ந்த மக்களின் சமூகம் எப்படியிருந்தது?

அநியாயம் பரவிக் கிடந்தது. பலவீனர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. பெண் குழந்தைகள் உயிருடன் புதைக்கப்பட்டனர். புனிதமானவைகள் அலட்சியப்படுத்தப்பட்டன. பலமுள்ளவர்கள் பலவீனர்களின் உரிமைகளைச் சுரண்டித் தின்றனர். கணக்கின்றி பல மனைவியரை வைத்திருந்தனர். விபச்சாரம் பரவிக்கிடந்தது. அற்பக் காரணங்களுக்காக பல குலங்களிடையே போர்கள் நடந்துகொண்டிருந்தன.

Q81) முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எந்த நபியின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்?

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மகனார் நபி இஸ்மாயில் (அலை) அவர்களின் வம்சா வழியைச் சேர்ந்தவராவார்கள்.

Q82) நபி (ஸல்) அவர்கள் எந்த குலத்தைச் சேர்ந்தவர்கள்?

அரேயிர்களின் உயர் குலமான குரைஷிக் குலத்தைச் சேர்ந்தவர்கள்.

இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : அல்-குர்ஆன்

Q66) எந்த ஏழு நபர்களுக்கு மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் இடம் கிடைக்கும்?

A) 1) நீதமான ஆடசியாளர் 2) அல்லாஹ்வின் வணக்கத்திலேயே வளர்ந்த வாலிபன் 3) யாருடைய உள்ளம் அல்லாஹ்வின் பள்ளியை நினைத்த வண்ணம் இருக்கிறதோ அவர் 4) அல்லாஹ்வுக்காகவே விருப்பம் கொண்டு, சந்தித்து, பிரிந்த இருவர் 5) அழகும் அந்தஸ்தும் உள்ள பெண் தன் விருப்பத்திற்கு இணங்குமாறு அழைத்த போது, நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன் என்று கூறியவர் 6) வலக்கரம் என்ன கொடுத்தது என்று தன் இடக்கரம் அறியாத அளவுக்கு இரகசியமாக தர்மம் செய்தவர் 7) தனிமையில் அல்லாஹ்வின் அச்சத்தால் கண்ணீர் மல்க அல்லாஹ்வை நினைவு கூர்பவர். (புகாரி)

Q67) நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்தைக் கூறுக.

A) நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்து ஒன்று தான்.

அல்லாஹ் நபி (ஸல்) அவாகள் மீது ஸலவாத் கூறுமாறு திருக்குர்ஆனில் வசனம் 33:56 ல் கட்டளையிட்ட போது, நபி தோழாகள் நபி (ஸல்) அவர்களிடம் எப்படி ஸலவாத் கூறவேணடும் என கேட்டபோது, பின் வரும் ஸலவாத்தை ஓதிக்காட்டினார்கள்.

அல்லாஹும்ம ஸல்லிஅலா முஹம்மதின் வ-அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம, வ-அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலாமுஹம்மதின் வ-அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம, வ-அலா ஆலி இப்ராகீம இன்னக்க ஹமீதுன் மஜீத்

Q68) அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறை கூறிய நயவஞ்சகன் யார்?

A) அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு உபை ஸலூல் (புகாரி)

Q69) ஆயிஷா (ரலி) அவாகள் மீது கூறப்பட்ட அவதூறு சம்பந்தமாக இறங்கிய குர்ஆன் வசனம் எது?

A) எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது; மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு. (அல்-குர்ஆன் 24:11)

எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு. (அல்-குர்ஆன் 24:23)

Q70) என்ன காரணங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள் என நபி (ஸல) அவர்கள் கூறினார்கள்?

A) ‘ஒரு பெண் நான்கு காரணங்களுக்காக மணமுடிக்கப்படுகிறாள். அவளின் செல்வத்திற்காக, அவளின் அந்தஸ்திற்காக, அவளின் அழகிற்காக, அவளின் மார்க்கத்திற்காக. நீ மார்க்கப் பற்றுள்ளவளைத் தேர்ந்தெடுத்து அவளை மணமுடித்துக் கொள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)

Q71) குழந்தைகளின் எத்தனை வயதில் அவர்களை தொழுகைக்கு ஏவுமாறு நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள்?

A) ‘உங்களின் குழந்தைகளுக்கு எழு வயது ஆகும் போது தொழும்படி கட்டளையிடுங்கள்: அவர்கள் பத்து வயது ஆகும் போது (தொழ மறுத்தால்) அவர்களை அடியுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத்)

Q72) “நோன்பாளிக்கு இரு சந்தோஷங்கள் உள்ளன” என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் அந்த இரு சந்தோஷங்கள் யாவை?

A) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பாளிக்கு இரு சந்தோஷங்கள் உள்ளன. ஓன்று நோன்பு திறக்கும் போது. மற்றது தனது நாயனை (மறுமையில்) சந்திக்கும் போது ஏற்படுகின்ற சந்தோஷமாகும். (ஆதாரம் : திமிதி)

Q73) ஹிஜ்ரி எத்தனையாவது ஆண்டில் ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டது?

A) ஹிஜ்ரி இரண்டாவது ஆண்டில் நோன்பு கடமையாக்கப்பட்டது.

Q74) நெருப்பு விறகை அழித்து விடுவதைப் போல் எந்த செயல் நன்மையை அழித்து விடுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினாகள்?

A) நெருப்பு விறகை அழித்து விடுவதைப் போல் பொறாமை நன்மையை அழித்து விடுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: அபூதாவுத்)

Q75) மறுமை நாளில் முஃமினின் தராசில் எவற்றை விட வேறெதுவும் கணமானதாக இருக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

A) ‘மறுமையில் ஒரு அடியானின் தராசில் நற்குணங்களைத் தவிர வேறெதுவும் கணமானதாக இருக்காது. அசிங்கமான கெட்ட வார்த்தை பேசுபவனை அல்லாஹ் வெறுக்கிறான்’ (அறிவிப்பவர் : அபுதர்தா (ரலி), ஆதாரம் : திமிதி மற்றும் அஹ்மத்)

இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : அல்-குர்ஆன்

Q56) எந்த மூன்று இடங்களைத் தவிர நன்மையை நாடி பிரயாணம் செய்யாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

A) 1) மஸ்ஜிதுல் ஹரம் 2) மஸ்ஜிதுல் அக்ஸா 3) மஸ்ஜிதுன் நபவி. (புகாரி)

Q57) காலத்தைத் திட்டுவது குறித்து கூறப்படும் நபிமொழி எது?

A) ‘காலத்தைத் திட்டுவதன் மூலம் மனிதர்கள் எனக்கு தீங்கிழைக்கிறார்கள். காலத்திற்குச் சொந்தக்காரன் நானே! இரவையும் பகலையும் மாறி வரச்செய்பவனும் நானே! என அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்’ (அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : புகாரி)

Q58) நீதிபதிகள் எத்தனை வகைப்படுவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

நீதிபதிகள் மூன்று வகைப்படுவர்: அவர்களில் ஒரு வகையினர் சுவனத்திற்கும், இரு வகையினர் நரகத்திற்கும் செல்வர்: உணமையை அறிந்து அதன் படி தீர்ப்பு வழங்கியவர் சுவனம் செல்வர். உணமையை அறிந்திருந்தும் அநீதமாக தீர்ப்பு வழங்கியவரும், உணமையை அறியாமலேயே தீர்ப்பு வழங்கியவரும் நரகம் புகுவார். (அறிவிப்பவா : புரைதா (ரலி), நூல் : அபூதாவுது)

Q59) ‘அஸ்ரத்துல் முபஸ்ஸரா’ என்று அழைக்கப்படக் கூடக் கூடிய சுவர்க்கத்திற்கு நன்மாராயங் கூறப்பட்ட நபித்தோழர்கள் யாவர்?

A) (1) அபூபக்கர் (ரலி) (2) உமர் (ரலி) (3) உதுமான் (ரலி) (4) அலி (ரலி) (5) தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி) (6) ஜுபைர் இப்னு அவ்வாம் (ரலி) (7) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) (8) ஸஃது இப்னு அபீவக்காஸ் (ரலி) (9) ஸயித் இப்னு ஜைத் (ரலி) (10) அபூ உபைதா இப்னு அல் ஜர்ராஹ் (ரலி) (ஆதாரம் : திர்மிதி, இப்னு மாஜா)

Q60) மனிதன் மரணித்த பின்பும் பயன் தரக் கூடிய அமல்கள் யாவை?

A) ‘மனிதன் இறந்து விடடால் மூன்று விஷயங்களைத் தவிர அவனுடைய அமல்கள் அனைத்தும் அவனை விட்டும் துண்டிக்கப்படுகின்றது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த மூன்று விஷயங்கள் 1) நிரந்தர தாமம் 2) பயன் தரும் கல்வி 3) இறந்தவருடைய சாலிஹான பிள்ளைகள் செய்யும் துஆ (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்)

Q61) எந்த இரு விஷயங்கள் ஒருவரிடம் இருந்தால் அவனை நன்றி உள்ளவன் என்றும், பொறுமை உள்ளவன் என்றும் இறைவன் குறித்துக் கொள்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

A) 1) இறை நெறியை மேற்கொள்வதில் தன்னைவிட மேலானவரைப் பார்த்தல் 2) உலக வசதிகளைப் பொருத்தவரை தன்னை விடக் கீழானவரைப் பார்த்து இறைவனுக்கு நன்றி செலுத்துதல் (திர்மிதி)

Q62) எல்லாவற்றையும் விட சிறந்த செல்வங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியவை எவை?

A) 1) இறைவனை நினைவு கூறும் நாவு 2) இறைவனுக்கு நன்றி செலுத்தும் உள்ளம் 3) இறை வழியில் நடந்திட கனவனுக்கு உதவிடும் நம்பிக்கையுள்ள மனைவி. (திர்மிதி)

Q63) எந்த ஐந்து கேள்விகளுக்கு விடைதராமல் மனிதன் மறுமையில் இறைவனின் நீதி மன்றத்திலிருந்து அகன்று செல்ல முடியாது என்று நபி (ஸல்) கூறினார்கள்?

A) 1) வாழ்நாளை எப்படி கழித்தான் 2) வாலிபத்தை எவ்வாறு கழித்தான் 3) எவ்வாறு செல்வத்தை ஈட்டினான் 4) அந்த செல்வத்தை எவ்வாறு செலவழித்தான் 5) அவன் அறிந்ததிலிருந்து எவ்வாறு செயல்பட்டான். (திர்மிதி)

Q64) முனாஃபிக்குகளின் அடையாளங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியவை எவை?

A) 1)பேசினால் பொய் கலந்து பேசுவான் 2) வாக்குறுதியை மீறுவான் 3) நம்பினால் மோசடி செய்வான் (புஹாரி)

Q65) வாழ்நாள் அதிகரிக்கப்படவும், உணவு விஸ்தீரிக்கப்படவும் விரும்புகிறவர்கள் என்ன செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

A) ‘வாழ்நாள் அதிகரிக்கப்படவும், உணவு விஸ்தீரிக்கப்படவும் விரும்புகிறவர்கள் தம் சுற்றத்தினருடன் (உறவினர்களுடன்) நல்லுறவு பாராட்டுவாராக’ (அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி), ஆதாரம் :புகாரி)

Thursday, March 28, 2013

அந்தப் பழைய காலுறை... என்னோடு வரவேண்டும்..!!

அவர் அறிஞர். செல்வந்தரும் கூட. தனக்கு மரணம் நெருங்குவதாக உணர்ந்தார். தன் மகனை அருகழைத்தார்.

மரண சாசனம் போல ஒன்றைச் சொன்னார்: "என் அருமை மகனே, விரைவில் நான் உங்களனைவரையும் விட்டுப் பிரிந்து விடுவேன். என்னுடலைக் குளிப்பாட்டி சடலத்துணி (கஃபன்) சுற்றுவீர்கள். அப்போது என்னுடைய ஒரேயொரு வேண்டுகோளை நிறைவேற்றுவாயா?"

"என்னவென்று சொல்லுங்கள் தந்தையே!" என்றான் மகன். 

அறிஞர் கூறினார் : "என் சடலம் அதற்குரிய துணியால் சுற்றப்படும் போது, என்னுடைய பழைய காலுறைகளில் ஒன்றை என் கால்களில் அணிவித்துவிடு. இதுதான் என் எளிய கோரிக்கை"

ஊரில் மிகப் பெரும் செல்வந்தர் தன் தந்தை. ஆனால், என்ன இது விசித்திரமான கோரிக்கை என்று நினைத்துக் கொண்டாலும், எளிய ஒன்று தானே என்று மகனும் ஒப்புக் கொண்டான்.

அதற்கடுத்த சில நாள்களில் அந்த முதியவர், தன் சொத்துகளையும், மனைவி மக்களையும் விட்டுவிட்டு மாண்டுப் போனார். அவரை உலகிலிருந்து விடை கொடுத்து அனுப்ப உறவினர்களும் நண்பர்களும் குழுமிவிட்டனர். உடல் குளிப்பாட்டப்பட்டது. பிரேத ஆடை உடலில் சுற்றப்படும் நேரம் நெருங்கியது. அப்போது மகனுக்கு தந்தையின் வேண்டுகோள் நினைவுக்கு வந்தது. மெல்ல எழுந்து, குளிப்பாட்டிய வரிடம் சென்று தந்தையின் ஒரு காலுறையைக் கொடுத்து "இதனை என் தந்தையின் கால்களில் அணிவியுங்கள்; இதுவே அவரின் இறுதி விருப்பமாகும்" என்று கூறினான்,

"முடியாது; முடியவே முடியாது" மறுத்தார் குளிப்பாட்டும் பணியாளர். "இல்லை, இது என் தந்தையின் ஆசை; நீங்கள் செய்துதான் ஆகவேண்டும்" என்று சொல்லிப் பார்த்தான் மகன். ஆனால் அவர் அசைந்து கொடுப்பதாக இல்லை. "இஸ்லாத்தில் இதற்கு இடமேயில்லை; எனவே, வாய்ப்பில்லை!" என்றார் உறுதியாக.

மகனோ மீண்டும் மீண்டும் கேட்டுப் பார்த்தான். அந்தப் பணியாளர் கடைசியாகச் சொன்னார். "நான் சொன்னது, சொன்னது தான். வேண்டுமானால், நீ மார்க்க அறிஞர்களை; தீர்ப்பளிப்பாளர்களைக் கேட்டுவிட்டு வா; நான் சொல்வதைத் தான் அவர்களும் சொல்வார்கள்". அதன்படி அங்கு குழுமியிருந்தவர்களில் அறிஞர்களை, மார்க்க அறிஞர்களை அணுகிக் கேட்டபோது அவர்களும் அதையே சொன்னார்கள் "ஆமாம்! ஷரீஅத்தில் இதற்கு அனுமதி இல்லை தான்!"

இக் களேபரம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், வயது முதிர்ந்த ஒருவர், அந்த மகனை நெருங்கினார். "தம்பி, உன் தகப்பனார் அவரது சடலம் துணியிடும் வேளையில் உன்னிடம் சேர்ப்பிக்க வேண்டுமென்ற நிபந்தனையோடு ஒரு கடிதம் என்னிடம் தந்திருந்தார். அதை உன்னிடம் தரும் நேரம் இதுவென்று நினைக்கிறேன்" என்று கூறி ஒரு கடிதத்தை அவனிடம் கொடுத்தார்.

இறந்த அறிஞரின் நீண்டகால நண்பர் அவர். தனது தந்தையின் கடிதத்தை ஆவலுடன் வாங்கிப் படித்தான்மகன். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.

"என் மகனே! அனைத்து செல்வங்களையும் விட்டுவிட்டு இதோ நான் இறந்து விட்டேன். என் நிலைமையைப் பார்த்தாயா? என்னுடைய சொத்துக் களிலிருந்து ஒரே ஒரு பழைய காலுறையைக் கூட மேலதிகமாக என்னுடன் கொண்டு செல்ல முடியவில்லை; நாளை இந்த நிலை உனக்கும் வரலாம். இந்தப் பொருட்களும் செல்வங்களும் சொத்துகளும் இவ்வுலகிற்கு மட்டும் தான். ஆனால், இவற்றை, இந்தப் பொருட்களை நீ நேர்வழியில் ஈட்டி, நேர்வழியில் செலவழிப்பதன் மூலம் கிடைக்கிற அருள்வளம் இருக்கிறதல்லவா; அது, அந்த அருள்வளம் தான் மறு உலகிலும் உதவும். ஆகவே, இந்தச் செல்வங்களையும், சொத்துகளையும் இறைவழியில், மற்றவர்களின் வயிற்றுப் பசிக்கும், அறிவுப் பசிக்கும் உணவாகும் வகையில் செலவிடு. அப்படி செய்தால், இரு உலகிலும் ஆதாயம் பெற்றவனாக ஆவாய்!"

அந்த நிமிடம் வரை உள்ளத்தில் பெருகியிருந்த ஆணவமோ மமதையோ சடசடவென எரிந்து பொசுங்குவதைப் போன்ற உணர்வுடன் கண்களில் நீர் கோர்க்க, தந்தையின் சொற்களை உறுதிமொழி எடுத்துக் கொண்டான் மகன்.

'(மறுமையில் நன்மையின்) எடை கனத்தவர்களே வெற்றியாளர்கள்.' என்கிறது (திருக்குர்ஆன் 7:8)

'அல்லாஹ்வின் திருப்திதான் மிகப்பெரியது. அதுதான் மகத்தான வெற்றி.' (திருக்குர்ஆன் 9:72)

நல்ல வழியினாலே ஆராய்ந்து அருளைச் செய்க: பல வழியாக ஆராய்ந்தாலும், அப்படி அருள்செய்தலே உயிருக்கு உறுதுணையாகும் என்கிற கருத்தை உணர்த்தும் திருக்குறள் உண்டு:

* (ஆங்கில மடல் ஒன்றின் தமிழாக்கம்: சகோதரர் இப்னு ஹம்துன்) * எம் அப்துல் காதர்

* (ஆங்கில மடல் ஒன்றின் தமிழாக்கம்: சகோதரர் இப்னு ஹம்துன்) * 
எம் அப்துல் காதர்

இப்ராஹீம் அலைஹி வஸ்ஸலாம்

இப்ராஹீம் அலைஹி வஸ்ஸலாம்
********************************

இராக்கில் உள்ள அன்நஸிரியா நகரத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் பாபிலோனியாவில் உள்ள உர் என்று அழைக்கப்படுகின்ற நகரம் தான் இபுறாகிம் நபி பிறந்த நகரமாகும். 

A=இப்ராஹீம் நபி அவர்களின் வீடு என்று நம்பப்படுகிறது.
B=நம்புருது மன்னன் சந்திரனுக்கு கட்டிய கோயில்.
C=இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் 
அவர்களின் அடக்கஸ்தலம் ஹெப்ரான் நகரத்தில் உள்ள அல்ஹலீல் என்ற இந்த பள்ளிவாசல் அருகில்தான் உள்ளது.
D=நம்ருது மன்னனின் அரண்மனையின் அஸ்திவாரம்

இப்ராஹீம் நபியின் சமுகத்தினர் அவ்வூரை சந்திர தேவன் காத்து வருவதாக நம்பினர். அவ்வூரில் சந்திரனுக்கு ஒரு கோயில் கட்டினான் நம்புருது மன்னன்.

பிற்காலத்தில் அக்கோயிலை மக்கள் புதுபித்தார்கள். சுமார் ஜயாயிரம் தேவர்களையும் தேவிகளையும் சிலை வடிவில் வணங்கிக் கொண்டிருந்த தன் சமுதாயத்தினர், தம் தந்தை மற்றும் நம்ருது மன்னனிடமும் சிலை வணக்கத்தின் பகுத்தறிவுக்கு பொருத்தமில்லாத நிலைகளை எடுத்து கூறினார்.

சுமார் 38 மீட்டர் நீளமும் 38 மீட்டர் அகலமும் உள்ள நம்ருது மன்னனின் அரண்மனையில் ஏறக்குறைய 30 அறைகள் இருந்தன.

சிலைகள் உயிரற்றவை என்பதை நிரூபிப்பதற்க்கு இப்ராஹீம் நபி ஒரு தந்திரம் செய்தார்கள். சிறிய சிலைகள் எல்லாவற்றையும் கோடாரியால் உடைத்துவிட்டு கோடாரியை பெரிய சிலையின் கழுத்தில் தொங்கவிட்டார். இதனால் கோபமுற்ற அவரது சமுதாயத்தினர் அவரை நெருப்பில் தள்ளி கொலை செய்ய முடிவெடுத்தனர். அல்லாஹ்வை மட்டும் தான் வணங்க வேண்டும் என்ற உண்மையை கூறிய இப்ராஹீம் நெருப்பு குண்டத்தில் தூக்கியெறியப்பட்டார். ஆனால் எல்லாவற்றையும் எரிக்கும் நெருப்புக்கு அந்த ஆற்றல் இல்லாமல் போகும்படி அல்லாஹ் ஆனையிட்டான்.

(இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்) “நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு!” என்று நாம் கூறினோம். அல்குர்ஆன் 21:69

இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் தன் நாட்டையும் வீட்டையும் விட்டு ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பாலஸ்தீனத்தை அடைந்தார்.

இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் அவர்களின் முதுமை காலத்தில் அவர்களுக்கு ஒரு மகன் பிறக்கிறார். அந்த மகனையும் மனைவி ஹாஜராவையும் பாலஸ்தீனத்தில் இருந்து ஏறத்தாழ 1500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அரேபியாவில் ஆள் நடமாட்டமில்லாத மக்காவில் விட்டுவிட்டு திரும்பி வரும்படி அல்லாஹ் கட்டளையிட்டான். வறட்சிமிக்க அரேபியாவின் பள்ளத்தாக்குகளில் அதிர்ச்சியோடு சஃபா மர்வா குன்றுகளுக்கிடையில் தண்ணீரைத்தேடி இங்கும் அங்கும் ஹாஜரா அழைந்தார். இந்த வரலாற்று உணர்வை நிலை நாட்ட இன்றும் ஹஜ் மற்றும் உம்ரா செய்பவர்கள் சஃபா மர்வா குன்றுகளுக்கிடையில் வேகமாக நடந்து வருவார்கள். வறட்சிமிக்க மக்காவில் விடப்பட்ட கைக் குழந்தை தாகத்தால் கால்களை உதைத்து அழுதபோது அவ்விடத்தில் ஜம்ஜம் என்ற நீருற்று பீறிட்டு கிளம்பியது. இந்த நீருற்று நாலாயிரம் வருடங்களுக்கு பிறகும் வற்றாமல் மக்காவாசிகளுக்கும் மக்காவுக்குவரும் ஹாஜிகளுக்கு ஏற்படுத்திய பெரும் அருட்கொடையாகும்.

இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் பாலைவனத்தில் விட்டு சென்ற கைக்குழந்தை வளர்ந்து நடக்கும் பருவத்தை அடைந்ததும் அவர்களது கைகளால் அக்குழந்தையை அறுத்து பலியிடுமாறு இறைவன் கட்டளையிட்டான். இதனை நிறைவேற்றுவதற்க்கு இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் பாலஸ்தீனத்திலிருந்து மீண்டும் மக்கா வந்தார். மகனுடன் மினாவிற்க்கு புறப்பட்ட இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் இந்த இடத்திற்க்கு வந்து சேர்ந்து வந்தவுடன் ஷைத்தான் அசரிரியாக இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் அவர்களை திசைதிருப்ப முயற்சி செய்தான். அந்த அசரிரியின் ஒசை கேட்ட திசை நோக்கி இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் கல்லால் அடித்தார்கள். எம்பெருமானர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம் அவர்களின் கட்டளைக்கு இணங்க செய்யக்கூடிய ஹஜ்ஜில் அதே இடத்தில் ஹாஜிகள் கல்லால் அடிப்பார்கள். ஷைத்தான் அடிக்கும் கற்கள் இந்த வட்டத்திற்க்குள் விழுந்தால் போதுமானது. அந்த தூணில் படவேண்டிய அவசியமில்லை

இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் தன் மகனை அறுப்பதற்க்காக தரையில் படுக்க வைக்கிறார்கள் அப்பொழுது இறைவன் கூறினான்: வேண்டாம் இப்றாஹீம் நீ என் கட்டளையை நிறைவேற்றிவிட்டாய். உம்மகனுக்கு பதிலாக ஒரு ஆட்டை அறுப்பாயாக. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைவதற்க்காக எதையும் தியாகம் செய்யக்கூடிய மனப்பான்மையை உருவாக்குதுதான் இந்த திருப்பலியின் நோக்கமாகும்

இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் அவர்களின் மகன் இஸ்மாயில் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் வாலிப வயதை அடைந்ததும் அவர்கள் இருவருக்கும் கஃபாவை அதன் பழமையான அஸ்திவாரத்திலிருந்து எழுப்பும்படி அல்லாஹ் கட்டளையிட்டான்.
இந்த இறையில்லத்தை 7 முறை இடப்புறமாக சுற்றி வலம்வருவது ஹஜ்ஜிலும் உம்ராவிலும் கடமையான செயலாகும்.

லூத் அலைஹி வஸ்ஸலாம்

லூத் அலைஹி வஸ்ஸலாம் 
**************************

இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் அவர்களின் சகோதரனின் மகன் லூத் அலைஹி வஸ்ஸலாம் அவர்கனை பாலஸ்தீன நாட்டின் கிழக்குப் பகுதிக்கு அல்லாஹ் நபியாக அனுப்பினான். அதில் சதோம் என்பது முக்கியமான நகரமாகும். ஓரின புனர்ச்சியில் ஈடுபட்டுகொண்டிருந்த தன் சமுதாயத்தினரிடம் அந்த மானக்கேடான செயலை விட்டுவிடுமாறு லூத் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் கட்டளையிட்டார்கள். ஆனால் அச்சமுகத்தினர் அத்தீயசெயலை மிகவும் பகிரங்கமாக செய்து வந்தனர். இதைப்பற்றி குர்ஆன் கூறுகிறது.

அப்போது அவர்: “என் இறைவனே! குழப்பம் செய்யும் இந்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.

நம் தூதர்(களாகிய மலக்கு)கள் இப்ராஹீமிடம் நன்மாராயத்துடன் வந்தபோது, “நிச்சயமாக நாங்கள் 
இவ்வூராரை அழிக்கிறவர்கள்; ஏனெனில் நிச்சயமாக இவ்வூரார் அநியாயக்காரர்களாக இருக்கின்றனர்” எனக் கூறினார்கள்.

“நிச்சயமாக அவ்வூரில் லூத்தும் இருக்கிறாரே” என்று (இப்றாஹீம்) கூறினார்; (அதற்கு) அவர்கள் அதில் இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள் நன்கறிவோம்; எனவே நாங்கள் அவரையும்; அவருடைய மனைவியைத் தவிர, அவர் குடும்பத்தாரையும் நிச்சயமாகக் காப்பாற்றுவோம்; அவள் (அழிந்து போவோரில் ஒருத்தியாக) தங்கி விடுவாள் என்று சொன்னார்கள்.

இன்னும் நம் தூதர்கள் லூத்திடம் வந்த போது அவர்களின் காரணமாக அவர் கவலை கொண்டார். மேலும் அவர்களால் (வருகையால்) சங்கடப்பட்டார்; அவர்கள் “நீர் பயப்படவேண்டாம், கவலையும் படவேண்டாம்” என்று கூறினார்கள். நிச்சயமாக நாம் உம்மையும் உன் மனைவியைத் தவிர உம் குடும்பத்தினரையும் காப்பாற்றுவோம்; அவள் (உம்மனைவி அழிந்து போவோரில் ஒருத்தியாக) பின் தங்கி விடுவாள்.

நிச்சயமாக, நாங்கள் இவ்வூரார் மீது, இவர்கள் செய்து கோண்டிருக்கும் பாவத்தின் காரணமாக, வானத்திலிருந்து வேதனையை இறக்குகிறவர்கள் ஆவோம்.

(அவ்வாறே அவ்வூரார், அழிந்தனர்) அறிவுள்ள சமூகத்தாருக்கு இதிலிருந்தும் நாம் ஒரு தெளிவான அத்தாட்சியை விட்டு வைத்துள்ளோம். அல்குர்ஆன் 29:30-35

அதனால் உருவாகியதுதான் இந்த சாவுக்கடல் அல்லது லூத்தின் கடல். ஜோர்டான் நாட்டுத் தலைநகரம் அம்மானிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் தான் சாவுக்கடல் உள்ளது.
 
இக்கடலில் உள்ள உப்பின் அளவு சாதரணமாக உள்ள கடலின் உப்பின் அளவைவிட 8 மடங்கு அதிகமாகும். ஆகையால் இந்நீரில் விழும் எல்லாப் பொருள்களும் மிதப்பதை காணலாம். உயிரினம் உயிர்வாழமுடியாத காரணத்தினால் இக்கடல் சாக்கடல் என்றழைக்கப்படுகிறது. இவ்வுலகில் ஓரின புணர்ச்சியில் ஈடுபடக்கூடிய எல்லா காலங்களிலும் உள்ள எல்லோருக்கும் ஒரு முன்னெச்சரிக்கையாக இக்கடலை அல்லாஹ் ஏற்ப்படுத்தியுள்ளான்.

நிலத்தில் மிதக்கும் மலைகள்

நிலத்தில் மிதக்கும் மலைகள்
**************************

அல்குர்ஆனின் வழியில் அறிவியல்…..

இஸ்லாம் அறிவியல் உண்மைகளை அரவணைத்துச் செல்லும் மார்க்கம். இயற்கையோடு இணைந்து செல்லும் இணையற்ற மார்க்கம். இயற்கை மார்க்கத்தின் இறுதி நெறிநூல் அல்குர்ஆனோ, அறிவியல் கருத்துக்களை உள்ள டக்கிய ஆய்வுப் பெட்டகமாக விளங்குகிறது. இன்றைய நவீன அறிவியல் கருத்துக்கள் அடங்கிய வசனங்கள் குர்ஆனில் ஏராளமாக உள்ளன. அவ்வசனங்களில் ஒன்றுதான்,

“அன்றியும், மலைகளைப் போல் உயரமாகச் செல்லும் கப்பல்கள் அவனுக்கே உரியன” அல்குர்ஆன் 55:24

“இன்னும் மலைகளைப் போல் கடலில் செல்பவையும் (கப்பல் மற்றும் பனிப் பாறை (Ice berg) அவனுடைய அத்தாட்சிகளில் உள்ள வையாகும்.” அல்குர்ஆன் 42:32

இவ்விரு வசனங்களிலும், கடலில் செல்லும் கப்பல்களை நிலத்தில் உள்ள மலைகளோடு அல்லாஹ் ஒப்பிட்டுக் கூறுகிறான். சாதாரணமாக இவ்வசனங்களைப் பொருள் கொள்ளும் போது, கடலில் கப்பல் செல்வது பெரும் மலைகள் செல்வது போன்ற தோற்றத்தை பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்துகிறது என்றுதான் அனைவரும் அறிகிறோம். ஆனால் சற்று ஆழமாக, அறிவியல் கண் கொண்டு இவ்வசனங்களை ஆய்வு செய்யும்போது, நவீன அறிவியல் உண்மைகள் இவ்வசனங்களில் ஒளிந்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்படுகிறோம். அல்லாஹ் உண் மையல்லாத ஒன்றை உதாரணமாகக் கூட கூறுவதில்லை என்பதை அறிந்து வியக்கிறோம். சுபுஹானல்லாஹ்!-இறைவன் தூய்மையானவன்.
பூமியின் ஈர்ப்புவிசை-மிதத்தல் விசை (Buoyancy Force)

கடலில் மிதக்கும் கப்பல், மற்றும் பனிப் பாறை(Ice berg)களும் நிலத்தில் நிற்கும் மலைகளும் ஒரே அறிவியல் விதியின் கீழ் செயல்படும் உண்மையை அல்லாஹ் 1400 ஆண்டுகளுக்கு முன்பே வெளிப்படுத்திவிட்டான். வானத்தை நோக்கி எப்பொருளை எறிந்தாலும் அது மீண்டும் பூமியில் வந்து விழும். இதற்குக் காரணம் பூமியின் ஈர்ப்பு விசை (Gravitational force) இது போல் மிதக்கும் எப்பொருளையும் நீரில் ஆழ்த்தினால், நீரானது அப்பொருளை மேல் நோக்கித் தள்ளும். உதாரணமாக ஒரு பந்தை நீரில் அமுக்கினால் அது மீண்டும் மேல் நோக்கி மிதக்கும். இதற்குக் காரணம் பூமியின் ஈர்ப்பு விசை (Buoyancy Force)

ஒரு பொருள் நீரில் மிதப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. 1.அப்பொருளின் அடர்த்தி (Density) நீரின் அடர்த்தியை விடக் குறைவாக இருக்க வேண்டும்.

2. அப்பொருளின் எடையால் (Mass volume) விலக்கப்படும் நீரின் எடை அதிகமாக இருக்க வேண்டும்.

ஆர்ட்டிக், அண்டார்டிக் கடலில் மிதக்கும் பனிப்பாறை(Ice berg)யின் அடர்த்தி 0.9 கிராம்/ சி.சி. ஆனால் கடல் நீரின் அடர்த்தி 1.0 கிராம்/ சி.சி. எனவே அடர்த்தி குறைந்த (ஐஸ்பெர்க்) பனிப்பாறைகள் 1 பங்கு நீருக்கு மேலும் 9 பங்கு நீருக்குள் மூழ்கியும் மிதக்கிறது.

கடலில் மிதக்கும் கப்பலின் எடையானது (Mass volume) விலக்கும் நீரின் எடையை விடக் குறைவாக இருப்பதால் கப்பல் மிதக்கின்றது.
கடலில் மிதக்கும் கப்பல் மற்றும் பனிப்பாறை (Ice berg)யைப் போலவே நிலத்தில் உள்ள மலைகளும் இதே அறிவியல் விதியின் கீழ் (Archimedes Principle) மிதப்பதாக நவீன அறிவியல் கூறுகிறது.

உருகிய பாகுக்(Viscous fluid)குழம்பில் மிதக்கும் மலைகள்:
“நிச்சயமாக வானங்களும் பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதனையும் இவற்றை நாமே பிரித்தமைத்தோம் என்பதையும் நிராகரிப்பவர்கள் பார்க்கவில்லையா? (அல்குர்ஆன் 21:30)

ஒன்று சேர்ந்திருந்த வானம் பூமி அனைத்தையும் 13-20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெரு வெடிப்பின் (Big bang) மூலம் அல்லாஹ் பிரித்தான். இப்படி பிரிந்து வந்த நட்சத்திரங்கள், சூரியன், பூமி மற்றும் பிற கோள்கள் அனைத்தும் கடும் வெப்பநிலையில் சுழன்றன. பல மில்லியன் ஆண்டுகள் கடந்து அவை மெதுவாக குளிர்ந்தன.

பூமியின் மேல் அடுக்கு (Continental Crust) குளிர்ந்து கடினமாக மாறியது. இதற்கு கீழே உள்ள மாண்டில் எனும் இடை அடுக்கு உருகிய பாகு (Viscous fluid) நிலையில் உள்ளது. நடு உறை எனப்படும் core முற்றும் உருகிய இரும்பு திரவ நிலையில் இன்றும் உள்ளது. இதுவே magma எனும் எரிமலை குழம்பாக வெளியேறுகிறது. மாண்டில் (Mantle) எனும் நடு உறை பாகு நிலையில் கடல் போல் சூழ்ந்துள்ளது. கடலில் கப்பல், பனிப்பாறை மிதப்பது போன்ற உருகிய பாகு குழம்பில் பூமியின் மேல் ஓட்டில் உள்ள மலைகள் (Continental mountain crust) மூழ்கி மிதக்கின்றன. ஏனெனில் பூமியின் மேற்பரப்பில் உள்ள (Continental Mountain Crust) மூழ்கி மிதக்கின்றன. ஏனெனில் பூமியின் மேற்பரப்பில் உள்ள (Continental Crust) அடர்த்தி 2.8 கிராம் /சி.சி. ஆனால் பாகு நிலையில் உள்ள மாண்டிலின் அடர்த்தி 3.3 கிராம்/சி.சி. எனவே அடர்த்தி குறைவான மலைகள் அடர்த்தி அதிகமுள்ள மாண்டில் பாகு (Viscous fluid) கடலில் மிதக்கின்றன.

அடர்த்தி குறைவான பனிக்கட்டி அடர்த்தி அதிகமுள்ள கடலில் மிதப்பது போன்று அடர்த்தி குறைவான மலைகள் அடர்த்தி அதிகமுள்ள பாகு கடலில் மிதக்கின்றன. இதைத் தான் அல்லாஹ், “மலைகளைப் போல் கடலில் செல்பவையும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். அல்குர்ஆன் 42:32ல் கூறுகிறான்.

நிலத்தில் உள்ள மலைகள், கடலில் மிதக்கும் கப்பல்கள், பனிப்பாறைகள் (Ice berg) அனைத்தும் ஒரே அறிவியல் விதியில் (Archimedes Principle) செயல்படும் விந்தையை அல்லாஹ் 1400 ஆண்டு களுக்கு முன்பே வெளிப்படுத்தி விட்டான்.

மலையின் வேர்கள் (Mountain Buoyancy Roots)
“இன்னும் மலைகளை முளைகளாக ஆக்க வில்லையா?” அல்குர்ஆன் 78:7
பூமியில் உள்ள பெரும் மலைத் தொடர்கள் முளைகளைப் போல் பூமியில் ஊன்றப்பட்டுள்ளதாக அல்லாஹ் கூறுகிறான். இதை நவீன அறிவியலில் Buoyant Roots என்று அழைக்கிறார்கள். மரத்தின் வேர்கள் பூமியில் ஆழப் பாய்ந்து மரத்தை நிலைநிறுத்துவது போல், மலையின் வேர்கள் பூமியின் மேல் ஓட்டிலிருந்து கீழிறங்கி மாண்டில் பாகு பகுதியில் நிலை நிற்கின்றன. கப்பல் போல், பனிப்பாறை போல் மிதக்கின்றன.

கடலில் மிதக்கும் கப்பல்கள் அலைகளின் காரணமாக அசைவது போன்று நிலத்தில் மிதக்கும் மலைகளும் அசைந்து செல்கின்றன. இது செல்லும் வேகத்தை நம்மால் உணர முடியாது. உதாரணமாக நமது கைவிரல்களில் வளரும் நகம் எந்த வேகத்தில் வளர்கிறதோ இதே வேகத்திலேதான் பூமித்தட்டின் மேற்புறமும் பாகு கடலில் நகர்கிறது.

மலையின் உயரத்தை விட 5, 6 மடங்கு அதிக ஆழத்தில் Buoyant Root பூமியில் ஊடுருவி இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. கடலில் மிதக்கும் கப்பல் அல்லது பனிப்பாறையில் நாம் எடைகளை ஏற்றினால் கப்பல் அல்லது பனிப் பாறை சற்று நீரில் மூழ்கும். எடையை எடுத்து விட்டால் மீண்டும் பழைய நிலைக்கு மேல் வந்து மிதக்கும். இதற்கு Buoyancy Force என்று முன்பே கூறினோம். இந்த விதியின் கீழ் நிலத்தில் மிதக்கும் மலைகளும் செயல்படுகின்றன.

பூமியில் நிகழும், காற்று, மழை, பனிப் பொழிவு, வெப்பம், ஆறு காரணமாக மலைகள், பாறைகள் தொடர்ந்து அரிக்கப்பட்டு தேய்மானம் (Erosion) அடைகிறது. வருடத்திற்கு 0.02 மி.மி. அரிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது 100 வருடத்தில் 2மி.மீட்டர் உயரம் அரிக்கப்பட்டு விடும். உதாரணமாக 4கி.மி. உயரமுள்ள ஒரு மலையானது வருடத்திற்கு 0.02 மி.மீ அளவுக்கு அரிக்கப்பட்டால் சுமார் 2 மில்லியன் வருடங்களில் 4 கி.மி. உயரமுள்ள மலை முற்றிலும் அரிக்கப்பட்டு விடும்.

ஆனால் இன்று நாம் காணும் உலகில் உள்ள பெரும் பெரும் மலைகள் பல மில்லியன் ஆண்டுகள் கடந்தும் இன்றும் உயர்ந்து நிற்கின்றன. இதற்குக் காரணம் Buoyancy root விதியே. எடை ஏற்றப்பட்ட சரக்குக் கப்பலிலிருந்து எடையை எடுக்க எடுக்க கப்பல் மீண்டும் மேல் நோக்கி மிதக்கும். இதைப் போலவே ஒரு கண்ணாடி பாத்திரத்தில் குளிர்ந்த நீரை நிரப்பி அதில் ஒரு துண்டு ஐஸ் கட்டியை போட்டால், 1 பங்கு நீருக்கு மேலும் 9 பங்கு நீருக்கு கீழ் மூழ்கி மிதக்கும். நீருக்கு மேலிருக்கும் ஐஸ் கரையக் கரைய Buoyancy root விதிப்படி கீழிருக்கும் ஐஸ் ஆனது மேல் நோக்கி நீரால் தள்ளிப்போட்டு தொடர்ந்து அதன் 1 பங்கு உயரத்தை எப்போதும் மாறாமல் வைத்திருக்கும். ஐஸ் முற்றிலும் கரை யும் வரை இந்நிலை நீடிக்கும்.

எச்சரிக்கை மணி ஹாரன் உருவான வரலாறு

இன்று நம் காது ஜவ்வுகளைக் கிழிக்கும் அளவில் ஒலிக்கப்படும் எச்சரிக்கை மணி (ஹாரன்) முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது 1927 ஆம் ஆண்டு தான். இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா ? எச்சரிக்கை மணியைக் கண்டுபிடித்தது ஒரு சிறுவன் என்றால் உண்மையில் ஆச்சர்யம் தானே. ஆம் 1927 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஒரு பரபரப்பான சாலையை சிறுவன் ஒருவன் கடந்து கொண்டிருந்தான். அப்போது திடீரென்று ஒரு குதிரை வண்டி அதிவேகமாக அவனை கடந்து சென்றது. சிறுவன் மயிரிழையில் உயிர் தப்பினான்.

ஆனால் அந்த சிறுவன் வீட்டிற்கு சென்ற பிறகு அந்த சம்பவத்தை நினைத்து மன அழுத்தத்திற்கு ஆளானான். மோட்டார் வண்டிகள் இல்லாத அந்த காலத்திலும் குதிரை வண்டிகள் அதிகமாக இருந்ததால் அந்த பகுதி எப்போதும் பரபரப்பாக இருக்கும். இதனால் அந்த சாலையில் நடந்து செல்லும் பயணிகள் வேகமாக செல்லும் குதிரை வண்டிகளால் அடிக்கடி
விபத்திர்க்குள்ளாகினர். இதனால் இந்த விபத்துகளை தடுக்க ஒரு எச்சரிக்கை கருவி இருந்தால் நன்றாக இருக்கும் என்று அந்த சிறுவன் நினைத்தான்.

உடனே கடினமாக உழைத்து மணி போல ஒரு கருவியை உருவாகினான். அந்த கருவியிலிருந்து கணீரென்று ஒலி வந்தது. இது தான் அவனின் முதல் கண்டுபிடிப்பு. அதை குதிரை வண்டிகளில் எச்சரிக்கை மணி போல பொருத்தினான். இது அனைவரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. எச்சரிக்கை மணியைக் கண்டுபிடித்ததன் மூலம் அவனுக்கு ஓரளவு வருவாய் கிடைத்தது. இதனால் தன் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்தான்.

சிறுவனின் தொடர் ஆராய்ச்சியால் உருவானது தான் பாதுகாப்புக் குண்டூசியும் (Safty Pin), ஊற்றுப் பேனாவும் (Fountain Pen). அந்த சிறுவன்தான் பிற்காலத்தில் மிகப் பெரிய கண்டுபிடிப்பாளரான வால்டர் ஹண்ட் (1796–1859). சிறு வயதிலேயே எச்சரிக்கை மணியை கண்டுபிடித்த வால்டர் ஹண்டின் வரலாறு உண்மையிலேயே சுவாரஸ்யமானது தான்.

அல் அக்ஸா மசூதியின் பின்னணி...........

அல் அக்ஸா மசூதியின் பின்னணி...........ஜெருசலேம் நகரில் உள்ள மிகப்பெரிய பள்ளிவாசல் இது. ஒட்டுமொத்த பாலஸ்தீனிலேயே, இதனைக்காட்டிலும் பெரிய பள்ளிவாசல் வேறு ஏதும் கிடையாது. ஒரே சமயத்தில், ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இங்கே அமர்ந்து தொழ முடியும். முகம்மது நபியின் பாதம் பட்ட பூமி அவரது விண்ணேற்றத்துடன் தொடர்புடைய நிலம் இது.

இந்த அல் அக்ஸா பள்ளிவாசலுக்குச் சற்றுத்தள்ளி, இன்னொரு பள்ளிவாசல் இருக்கிறது. அதன் பெயர் மஸ்ஜித் ஏ உமர். கலீஃபா உமர் கட்டிய பள்ளிவாசல் இது.

இந்த அல் அக்ஸா மற்றும் மஸ்ஜித் ஏ உமர் ஆகிய இரு பள்ளிவாசல்களையும் இணைத்த வளாகத்தை, முஸ்லிம்கள் 'பைத்துல் முகத்தஸ்' என்று அழைப்பார்கள்.

இந்த இடத்தை முன்வைத்துத்தான், யூதர்களுக்கும் அரேபியர்களுக்குமான பிரச்னை ஆரம்பித்தது.

அல் அக்ஸா பள்ளிவாசல் இருக்கும் இடத்தில்தான், யூதர்களின் புராதனமான புனிதத்தலமான சாலமன் தேவாலயம் இருந்தது என்பது இஸ்ரேலியர்களின் வாதம். அதற்கு ஆதாரமாக அவர்கள் சுட்டிக்காட்டுவது, அந்தப் பள்ளிவாசலின் ஒருபக்கச் சுற்றுச் சுவராக இன்னமும் மிச்சமிருக்கும் அந்த உடைந்த சுவர். (Wailing wall எனப்படும் அழுகைச் சுவர். சாலமன் ஆலயம் இருந்ததன் அடையாளம், இந்தச் சுவர்தான் என்பது யூதர்களின் கருத்து. இந்தச் சுவரில் முகத்தைப் புதைத்து அழுதபடியே யூதர்கள் பிரார்த்தனை செய்வது வழக்கம்.). யூதர்களின் வாதம் என்னவெனில், அல் அக்ஸா பள்ளிவாசலுக்கும் முகம்மது நபி விண்ணேறிய சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அல் அக்ஸாவுக்குச் சற்றுத் தொலைவில் உள்ள Dome of the Rock எனப்படும், மஸ்ஜித் ஏ உமர் பள்ளிவாசல் இருந்த இடத்திலிருந்துதான் முகம்மது விண்ணேற்றம் செய்தார் என்பது.

தங்களுடைய இக்கருத்தை அழுத்தம் திருத்தமாக உலக மக்கள் மத்தியில் பதியச் செய்வதற்காக, Dome of the Rock ஐயே-அல் அக்ஸா என்று குறிப்பிடுவது யூதர்களின் வழக்கம். அல் அக்ஸா மசூதியை இடித்துவிட்டுத் தங்கள் தேவாலயத்தை மீண்டும் அங்கே எழுப்புவதற்குத் தொல்பொருள் துறையின் உதவியை அவர்கள் நாடினார்கள்.

உண்மையில் அல் அக்ஸா வேறு, Dome of the Rock வேறு. இரண்டும் பைத்துல் முகத்தஸ் என்கிற ஒரே வளாகத்தில் இருக்கும், இரு வேறு மசூதிகள்.

யூத தேவாலயங்கள் - சாலமன் ஆலயமே ஆனாலும் சரி; எப்படியானாலும் மசூதிகளின் காலத்துக்கு முற்பட்டவைதான். ஏனெனில், இஸ்லாத்தின் தோற்றமே காலத்தால் மிகவும் பிற்பட்டது. ஆனால், மசூதி இருக்கும் ஓரிடத்தில்தான் தங்களது புராதன ஆலயம் இருந்தது என்று நிறுவுவதற்கு, அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள்தான் பல விபரீதங்களை உள்ளடக்கியதாக இருந்தது. ஆதாரங்களில் தெளிவில்லாதது அவற்றுள் முதலானது. அணுகுமுறையில் முரட்டுத்தனம் மிகுந்திருந்தது அடுத்தது. பேசித் தீர்க்க வேண்டிய பிரச்னையை, ராணுவ நடவடிக்கை மூலம் தீர்க்க நினைத்தது மூன்றாவது.

புராண, சரித்திர காலங்கள் தொடங்கி மிகச் சமீபத்தில் 1967-ம் ஆண்டு வரை இந்த மசூதி வளாகம், முஸ்லிம்களின் வசம்தான் இருந்திருக்கிறது. பாலஸ்தீன் யூதர்களை மொத்தமாக விரட்டியடிக்கும் தமது அரசியல் நோக்கத்துக்கு வலு சேர்ப்பதற்காகவே, இஸ்ரேலிய அரசு அல் அக்ஸா மசூதி விஷயத்தைக் கையில் எடுத்து, அங்கேதான் சாலமன் தேவாலயம் இருந்தது என்று தொடர்ந்து பிரசாரம் செய்து, மக்களின் மத உணர்வுகளைத் தூண்டிவிட ஆரம்பித்தது.

பிரச்னையைத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் வசம் அளித்துவிட்டு, 'நீங்கள் எங்கே வேண்டுமானாலும் தோண்டிப் பாருங்கள்' என்று அனுமதியும் அளித்தது.

ஒரு மசூதி இருக்கிறது. மக்கள் அங்கே தினசரி தொழுதுகொண்டிருக்கிறார்கள்.
முஸ்லிம் உலகின் மூன்றாவது மிக முக்கியமான வழிபாட்டுத்தலம் அது.) இறைத்தூதருடன் தொடர்புடைய ஒரு நினைவுத் தலம் அது. அப்படிப்பட்ட இடத்தில் தோண்டிப் பார்க்க அனுமதி அளிப்பது என்றால், என்ன அர்த்தம்?

1967-ம் ஆண்டு யுத்தத்தின்போது ஜெருசலேம் நகரை முழுமையாக யூதர்கள் கைப்பற்றியபிறகுதான், இதெல்லாம் ஆரம்பமானது. யுத்தத்தில் வெற்றி கண்ட மறுநாளே, இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. முதலில் பள்ளிவாசலின் மேற்குப் பகுதியில் பதினான்கு மீட்டர் நீள, ஆழத்துக்குத் தோண்டினார்கள். அடுத்த ஒன்றரை ஆண்டு கால இடைவெளியில், அந்த இடத்தில் சுமார் எண்பது மீட்டர் நீளத்துக்குத் தோண்டி ஓர் அகழி போல் ஆக்கிவிட்டார்கள். பள்ளிவாசலின் மேற்குப் பகுதி வழியே, யாருமே உள்ளே போகமுடியாதவாறு ஆகிவிட்டது.

யுத்தத்தில் அரேபியர்கள் தோற்றிருந்ததால், ஜெருசலேம் நகரில் இருந்த முஸ்லிம்களில் பெரும்பாலானோர் அப்புறப்படுத்தப்பட்டிருந்தார்கள். ஆகவே, அல் அக்ஸாவில் என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்குத் தாமதமாகத்தான் தெரியவந்தது. உள்ளம் பதைத்தாலும் ஒன்றும் செய்யமுடியாத நிலையில், அவர்கள் இருந்தார்கள்.

1970-ம் ஆண்டு இந்த அகழ்வாய்வுப் பணியின் இரண்டாம் கட்ட வேலைகள் ஆரம்பமாயின. இம்முறை பள்ளிவாசலின் தென்மேற்கு மூலையிலிருந்து தோண்ட ஆரம்பித்தார்கள். அங்கிருந்து மேற்குத் திசை வாசல் வரை தோண்டிக்கொண்டே போனார்கள். இப்படி அகழ்வாய்ந்தபோது, மிகப் புராதனமான சில கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. (அடக்கஸ்தலம் என்பார்கள்.) அவை, முகம்மது நபியின் தோழர்களாக விளங்கிய சிலரின் கல்லறைகள் என்பது, முஸ்லிம்களின் நம்பிக்கை. இதற்கு ஆதாரமாக முஸ்லிம்கள் தரப்பில் சொல்லப்படுவது இதுதான்:

யூதர்களின் அகழ்வாராய்ச்சியில் தட்டுப்பட்ட ஒரு குறிப்பிட்ட கல்லறையில், அது முகம்மது நபியின் தோழர்களுள் ஒருவரான உபாதா இப்னு அல் ஸாமித் என்பவருடையது என்பதற்கான கல்வெட்டு ஆதாரம் இருந்திருக்கிறது! இதே போல இன்னொரு கல்லறையில், ஷத்தாத் இப்னு அவ்ஸ் என்கிற வேறொரு நபித்தோழரின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதும், கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

கல்லறைகளைக் கண்டுபிடித்ததோடு, யூதர்கள் நிறுத்தவில்லை. அதையும் உடைத்துப் பார்த்ததில் உள்ளே உடல்களையும் கண்டிருக்கிறார்கள். ஆனால், விஷயம் பெரிதாகிவிடக்கூடாது என்று, அதைச் சொல்லாமல் மறைத்துவிட்டார்கள். தோண்டப்பட்ட அந்த இடங்களில் யாரும் வந்து பார்த்துவிடாமலிருக்க, அந்தப் பகுதியைச் சுற்றிலும், மேலும் பதின்மூன்று மீட்டர் சுற்றளவுக்கு மிகப்பெரிய அகழியைத் தோண்டிவிட்டார்கள்.

இந்தச் சம்பவமெல்லாம், எழுபதுகளின் தொடக்கத்தில் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. துல்லியமான ஆதாரங்கள் ஏதும், அப்போது வெளியாகவில்லை. ஆனால், பள்ளிவாசலின் நுழைவாயிலுக்கு அருகே தோண்ட ஆரம்பித்து, சுமார் பத்து மீட்டர் ஆழத்துக்கு மிகப்பெரிய பள்ளம் உருவானபோது, விஷயம் வெளியே வந்துவிட்டது. இது நடந்தது 1976-ம் ஆண்டில்.

அந்த இடத்தின் அடிவாரம் வரை யூதர்கள் தோண்டிக்கொண்டே போக, எப்படியும் மசூதி இடிந்து விழத்தான் போகிறது என்று செய்தி பரவிவிட்டது. துடித்து எழுந்தார்கள், முஸ்லிம்கள். உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கி, பைத்துல் முகத்தஸ் வளாகமே வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமானது; அங்கே யூத ஆராய்ச்சியாளர்கள் தோண்டுவது சட்டவிரோதம் என்று ஆதாரங்களைக் காட்டி, படாதபாடுபட்டு ஆய்வை நிறுத்தினார்கள்.

நீதிமன்றத்தில் ஆண்டுக்கணக்கில் வழக்கு இழுத்தடித்தது. வழக்கு ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, 1981-ம் ஆண்டு யூதர்கள் மீண்டும் பள்ளிவாசலைத் தோண்டத் தொடங்கினார்கள். இம்முறை அவர்களுக்கு, ஒரு சுரங்கப்பாதை அங்கே இருந்தது தெரியவந்தது.

கி.பி. 636-ம் ஆண்டு கலீஃபா உமர் காலத்தில் கட்டப்பட்ட இந்தப் பள்ளிவாசலில், எதற்காக ஒரு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருக்கக்கூடும் என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இப்போது இல்லை. ஒரு சாரார் கருத்துப்படி, உமர் இந்தப் பள்ளிவாசலைக் கட்டிய காலத்தில் சுரங்கம் எதையும் அமைக்கவில்லை. மாறாக, கி.பி 690 - 691 ஆண்டுக் காலகட்டத்தில், அப்துல் மாலிக் இப்னு ஹிஷாம் என்பவர் அல் அக்ஸா மசூதியை விரிவுபடுத்தி, மேலும் அழகூட்டி, செப்பனிட்டபோதுதான் பள்ளிவாசலின் மேற்குப் பகுதியில், இந்தச் சுரங்கப்பாதையை அமைத்தார் என்று சொல்கிறார்கள்.

கி.பி. 1099-ம் ஆண்டு ஜெருசலேம் நகரைக் கிறிஸ்துவர்கள் கைப்பற்றியபோது பள்ளிவாசலையும் கைப்பற்றி, சுரங்கத்தை அடைத்துவிட்டார்கள். பின்னால் சார்லஸ் வார்ன் என்கிற ஒரு பிரிட்டிஷ் அகழ்வாய்வாளர், இந்த மூடிய சுரங்கத்தைக் கண்டுபிடித்ததாகத் தெரிகிறது. (இது நடந்தது கி.பி.1880-ம் ஆண்டு.) பயன்பாட்டில் இல்லாத காரணத்தால் மண்மூடிக் கிடந்த இந்தச் சுரங்கம்தான், 81-ம் ஆண்டு யூதர்களின் அகழ்வாய்வின்போது அகப்பட்டது.

செய்தி, மீடியாவுக்குப் போய்விட்டபோது, யூதர்கள் தரப்பில் 'இந்தச் சுரங்கப்பாதை சாலமன் ஆலயத்தின் ஒரு பகுதி. ஆலயக் கட்டுமானத்திலேயே சுரங்கமும் இருந்தது' என்று சொல்லப்பட்டது.

ஆனால், சாலமன் தேவாலயம் குறித்த வரலாற்றுத் தகவல்களைத் தரும் எந்த ஒரு ஆவணமும் எழுப்பப்பட்டபோது, சுரங்கம் இருந்தது பற்றிய குறிப்பு எதையும் தரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், யூதர்களின் அகழ்வாய்வின் விளைவாக, அல் அக்ஸா மசூதி இருந்த வளாகம் மிகப்பெரிய அகழி போலானதுதான் மிச்சமே தவிர, தேவாலயம் ஏதும் அங்கு இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

இது மிகவும் இயல்பானது. சாலமன் ஆலயம் கட்டப்பட்டு சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், நவீன காலத்தில் ஆதாரம் தேடி, இருக்கிற மசூதியை இடித்துப் பார்ப்பது என்பது வீண் வேலை. இது யூதர்களுக்குத் தெரியாததில்லை. ஆனால், அந்த ஓர் உடைந்த சுவர் மீது, அவர்களுக்கு உள்ள நம்பிக்கைதான் இக்காரியத்தை எவ்வித மன உறுத்தலும் இல்லாமல் அவர்களைச் செய்யவைத்தது. தவிரவும், அல் அக்ஸா மசூதியை முன்வைத்து முஸ்லிம்கள் ஜெருசலேம் நகரைச் சொந்தம் கொண்டாடிவிடக்கூடாது என்கிற எண்ணமும் இதற்கான முக்கியக் காரணங்களுள் ஒன்று.

இப்படித் தோண்டித்தோண்டி மண் எடுத்ததின் விளைவாக, இன்றைக்கு அல் அக்ஸா பள்ளிவாசலின் அடித்தளம் மிக அபாயகரமான நிலையில் காணக்கிடைக்கிறது. பள்ளிவாசலின் அஸ்திவாரங்கள் வெளியே தெரிகின்றன. மண் வாசனையே இல்லாமல் வெறும் கற்களின் மீது நிற்கிறது கட்டடம். ஒரு சிறு நில நடுக்கம் ஏற்பட்டால் கூட, மசூதி இடிந்து விழுந்துவிடும் அபாயம்.

யூத மதகுரு நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் துாதர் என ஏற்றுக் கொண்ட சம்பவம்.யூத மதகுரு நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் துாதர் என ஏற்றுக் கொண்ட சம்பவம்.
********************************************

நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும்
செய்தி அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி) அவர்களுக்கு (அவர்கள் யூத
மதத்திலிருந்தபோது) எட்டியது. உடனே அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து,
'தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர்
இறைதூதர் மட்டுமே அறிவார்" என்று கூறினாக்hள். பிறகு,

'1 இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது?

2. சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது?

3. குழந்தை தன் தந்தையை (சாயலில்) ஒத்திருப்பது எதனால்?) அது (சாயலில்)
தன் தாயின் சகோதரர்களை ஒத்திருப்பது எதனால்?' என்று கேட்டார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'சற்று முன்பு தான் (வானவர்) ஜிப்ரீல் எனக்கு
இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்" என்று கூறினார்கள். உடனே,
அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி), 'வானவர்களிலேயே ஜிப்ரீல் யூதர்களுக்குப்
பகைவராயிற்றே!" என்று கூறினார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள்,

# 'இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடைளாயம் ஒரு நெருப்பாகும். அது
மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திரைசயில்
ஒன்று திரட்டும்.

#சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும்.

#குழந்தையிடம் காணப்படும் (தாயின் அல்லது தந்தையின்) சாயலுக்கு காரணம்,
ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அவனுடைய நீர் (விந்து உயிரணு)
முந்தினால் குழந்தை அவனுடைய சாயலில் பிறக்கிறது. பெண்ணின் நீர் (கருமுட்டை
உயிரணு) முந்தினால் குழந்தை அவளுடைய சாயலில் பிறக்கிறது" என்று
பதிலளித்தார்கள்.

(உடனே) அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி), 'தாங்கள் இறைத்தூதர் தாம் என நான் சாட்சி கூறுகிறேன்" என்று கூறினார்கள்.

பிறகு, 'இறைத்தூதர் அவர்களே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த
சமுதாயத்தினர் ஆவர். தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்கும் முன்பாக,
அவர்கள் நான் இஸ்லாத்தை ஏற்றதை அறிந்தால் என்னைப் பற்றி (அவதூறு
கற்பித்துத்) தங்களிடம் பொய்யுரைப்பார்கள்" என்று கூறினார்கள்.

அப்போது யூதர்கள் நபி(ஸல்) அவர்களிடம்) வந்தார்கள். உடனே, அப்துல்லாஹ்
இப்னு ஸலாம்(ரலி) வீட்டினுள் புகுந்(து மறைந்)தார்கள். இறைத்தூதர்(ஸல்)
(யூதர்களிடம்), 'உங்களில் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் எத்தைகைய மனிதர்?' என்று
கேட்டார்கள்.

அதற்கு அவர்கள், 'அவர் எங்களில் (மார்க்க) அறிவு
மிக்கவரின் மகனும் ஆவார்; எங்களில் அனுபவமும் விவரமும் மிக்கவரும்,
அனுபவமும் விவரமும் மிக்கவரின் மகனும் ஆவார்" என்று பதிலளித்தார்கள்.

உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு ஸலாம்) இஸ்லாத்தை
ஏற்றார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?' என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள், 'அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக!" என்று கூறினார்கள்.

உடனே (வீட்டினுள் மறைந்து கேட்டுக் கொண்டிருந்த) அப்துல்லாஹ் இப்னு
ஸலாம்(ரலி) வெளியே வந்து, 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர
வேறெவருமில்லை என்று நான் சாட்சியம் கூறுகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்)
அவர்கள் அல்லாஹ்வின் தூதரவார்கள் என்றும் நான் சாட்சியம் கூறுகிறேன்" என்று
கூறினார்கள்.

உடனே யூதர்கள், 'இவர் எங்களில் கெட்ட வரும்
எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார்" என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து
(இல்லாத குற்றங்களைப் புனைந்து) அவதூறு பேசலானார்கள்.

அனஸ்(ரலி) அறிவித்தார்

ஸஹீஹ் புகாரி 3329.

Monday, March 25, 2013

இஸ்லாமிய மருத்துவம்...

இஸ்லாமிய மருத்துவம்...1. பேரிச்சம்பழம்

செய்வினை – விஷம் குணமாக! 
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் சொன்னதாக அபூசயீதுல் குத்ரி (ரலியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள்: அஜ்வா பேரீச்சம்பழம் சொர்க்கத்துப் பழமாகும். யார் 7 பேரீச்சம்பழத்தைச் சாப்பிடுகிறாரோஎந்தவிதமான விஷமோ, ய்வினையா அவரை அண்டாது. 
வாய்வுத் தொல்லை நீங்க! 
வாய்வுத் தொல்லை (கேஸ்ட்ரபிள்) யால் பலர் படாதபாடு படுகிறார்கள். அவர்கள் காலையில் பிஸ்கட், பன், ரொட்டி என்று எதையும் உண்ணாமல் 11 பேரீச்சம்பழம் வீதம் தினமும் அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் சில நாட்களில் வாய்வுத்தொல்லை நீங்கி நல்ல குணம் பெறலாம். 

2. ஜைத்தூன்

ஷைத்தான் நெருங்காதிருக்க 
“அலி! ஜைத்தூன் பழத்தைச் சாப்பிடுங்கள். அதன் எண்ணையைத் தேய்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வோரிடம்40 நாட்களுக்கு ஷைத்தான் நெருங்க மாட்டான்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் கூறினார்கள். 

வலி, வாதம், வீக்கம், மறுப்பு நீங்க 
இடுப்பு வலி, முதுகுவலி, கைகால் குடைச்சல், மூட்டுக்களில் வலி என்று இருப்பின் அந்த இடத்தில் ஜைத்தூன் எண்ணையைத் தடவி நன்றாகத் தேய்த்து விட்டால் வலி, குடைச்சல் எல்லாம் குணமாகிவிடும். கால் கைகள் அப்படியே சிலருக்கு மரத்து போய்விடும். அப்போது இந்த எண்ணையை லேசாக சூடாக்கி அந்த இடத்தில் தேய்த்தால்மறந்து போனது நீங்கி இரத்த ஓட்டம் சீராகி விடும். 

3. பேரிக்காய்

இதயம் வலுவடைய 
“அதிகாலையில் வெறும் வயிற்றில் பேரிக்காய் சாப்பிட்டால் நெஞ்சடைப்பு, இதயகனம், இதயபலஹீனம், மார்புவலி நீங்கி இதயம் பலப்படும்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியதாக அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். 

அழகான குழந்தை பிறக்க 
“கர்ப்பிணிப் பெண்களுக்கு பேரிக்காய் உண்ணக கொடுங்கள். அதனால் குழந்தை அழகாகப் பிறக்கும். இதய அழுத்தம்,இதயவலி (முதலிய நோய்கள்) ஏற்படாமல் இதயம் நன்கு செயல்படும்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள். 

4. கருஞ்சீரகம்

நினைவாற்றல் பெருகிட 
அதிகாலை நேரத்தில் வெறும் வயிற்றில் பத்துப் பதினைந்து கருஞ்சீரக விதைகளை மென்று தின்று வந்தால் நினைவாற்றல் பெருகும். 
குறிப்பு: கர்ப்பிணிப் பெண்கள் கருஞ்சீரகத்தை உபயோகிக்க கூடாது. 
சர்க்கரை வியாதி நீங்கிட 
இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி பரிபூரணமாக குணமாகி விடும். 

5. கோதுமை

இதய பலத்திற்கு 
இதயமும், மூளையும் வலுவடைவதற்கும், வயிற்றுக் கிருமிகள் மற்றும் வயிற்றிலுள்ள கசடுகள் எல்லாம் நீங்கி இரைப்பை சுத்தமாக இருப்பதற்கும் தப்னியா (அதாவது கோதுமை மாவில் பால் ஊற்றி பாயாசமாகக் காய்ச்சி இறக்கிய பின்பு தேவையான இனிப்புக்கு தேன் கலந்த உணவை) உண்ணுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள். 
சத்தான உணவு 
தொலிக் கோதுமை ரொட்டித்துண்டை எடுத்து, அதில் பேரீச்சம்பழம் வைத்து, இதுவே சிறந்த சாலன்: இதுவே சிறந்த சாலன் என்று இரண்டு தடவை நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் சொன்னார்கள் என்று யூசுப்பின் அப்துல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்: கோதுமையுடன் பேரீச்சம்பழம் சேர்த்த உணவை “எல்லா சத்துக்களும் நிறைந்த பரிபூரணமான உணவு” என்று மருத்துவ ஆராய்ச்சியின் மூலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

6. உப்பு

பைத்தியம் ஏற்படாதிருக்க 
கொஞ்சம் உப்பை உண்டு உணவை உண்ணத் தொடங்குங்கள். அவ்வாறே உண்டு முடிந்த உடனும் கொஞ்சம் உப்பை உண்ணுங்கள். அதனால் பைத்தியம், குஷ்டம், குடல் வியாதி, மற்றும் பல்வலி போன்ற எழுபது வியாதிகள் உங்களை அண்டாது என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியதாக அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். 
குளுமை குறைந்திட 
வெள்ளரிக்காயை உப்பில் தொட்டுத் தின்பார்கள், நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அன்னவர்கள். அதனால் வயிற்றுக் குளுமை குறைந்து விடும் என்பார்கள்.. இவ்வாறு தின்பதால் மார்புச்சளி, பித்தம் வெளியேறிவிடும். உண்ணும உணவு ஜீரனமாகவும் செய்யும் என்று திப்புன்னபவியில் குறிப்பிடுகிறார்கள்.
 
7. இறைச்சி

உடல் அழகு பெற 
இறைச்சி இவ்வுலக மக்களுக்கும், நாளைய சொர்க்கவாசிகளுக்கும் சிறந்த உணவாகும் என்றும், இறைச்சி உண்ணுங்கள். அதனால் உடல் வளர்ச்சியடைந்து அழகு பெரும். மேலும், மேனியின் நிறமும் மினுமினுப்பாகவும் இருக்கும் என்றும், இதை உண்ணுவதால் உள்ளத்திற்கு ஆனந்தமேற்படுகிறது என்றும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள். 
உடல் சதைபோட 
ஒருநாள் விட்டு ஒருநாள் இறைச்சி உண்ணுங்கள். அதனால் உடல் அழகுபெரும். உடலில் சதைபிடிப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியமாகும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். நாற்பது நாட்கள் இறைச்சி உண்ணாமலும் இருக்காதீர்கள். அதனால் குணம் கெட்டு விடும் என்று அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்.
 
8. முட்டை

ஆண்மைக் குறைவு நீங்க 
யா ரசூலஅல்லாஹ்! என்னுடைய ஆண்மை போதிய வலுவில்லாமல் இருக்கிறது. என்று ஒரு ஸஹாபி நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் முறையிட்டார்கள். அவருடைய ஆண்மைக் குறையை உணர்ந்து கொண்ட நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் “முட்டையை உண்ணுங்கள். ஆண்மை அதிகரிக்கும்” என்று ஏவினார்கள். 
தாது பலம் பெற 
எல்லாம் வல்ல இறைவா! எனக்கு தாதுபலம் மிக்க குறைவாக இருக்கிறது என்று ஒரு நபி அல்லாஹ்விடம் முறையிட்ட போது, “முட்டையை உண்ணுங்கள். தாது பலம் மிகும்” என்று அல்லாஹ் அந்த நபிக்குச் சொன்னான் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள். 

9. தேன்

பலஹீனமே இல்லாதிருக்க 
தேனைப்பற்றிய பழைய மருத்துவக் குறிப்பு இது. அதாவது அதிகாலையிலும், இரவில் நித்திரை செய்வதற்கு முன்பாகவும் ஒரு வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை எலும்பிச்சப்பழச்சாறையும், சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் 
1. உடல் எப்போதும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்
2. ஜலதோஷம், இளைப்பு, நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் நீங்கிவிடும்.
3. குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கி விடும். 
4. குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்து விடும். 
5. இதய பாதிப்புக்கள் நீங்கி இதயம் பலம்பெறும். 
6. புதிய இரத்தம் அதிகமாக உற்பத்தியாகும். 
ஜீரண சக்திக்கு 
நாம் உண்ணும உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பல சத்துக்களைத் தனித்தனியாக பிரித்து, பின்பு உடல் முழுவதும் அனுப்பப்படுகிறது. இந்தஇரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது. ஜீரண சத்து குறைந்திருப்பதால் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜீரண உறுப்புகள் பலம் பெற்று விடும். இரைப்பையின் பணி கெட்டு விடுமானால் பின்பு உடம்பு அவ்வளவுதான். 

10. பால்

நோய்கள் வராதிருக்க 
பாலில் தேவையான அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் எந்த நோய்களையும் எதிர்த்து நிற்கும் ஆற்றலை உடல் பெற்று விடும். இதன் மூலம் இதயபாதிப்பு நீங்கி இதயம் பழம்பெரும். மூளை சக்திபெரும். முகம் அழகாகவும், உடல் பளபளப்பாகவும் இருக்கும். ஜீரண சக்தி அதிகமாகும். 
நரம்புத்தளர்ச்சி நீங்க 
பசும்பாலில் முருங்கைப்பீசினை இடித்துக் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி, உடல் நடுக்கம் மற்றும் நரம்புக்கோளாறுகள் எல்லாம் குணமாகும். (142) முருங்கைக்காயின் உட்பகுதிச் சதையையும் பாதாம் பருப்பையும் சேர்த்து அரைத்து தினசரி காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் டி. பி நோய் வலிமை இழந்து நாளடைவில் குணமாகி விடும். (143) தலைவலி நீங்க மிளகைப் பசும்பாலில் அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் தலைவலி குணமாகிவிடும். 

11. தண்ணீர்

ஜீரண சக்திக்கு 
உணவில் இடையிலும், உணவு உண்டவுடனும் தண்ணீர் அருந்தினால் அஜீரணகோளாறுகள் ஏற்படும் என்றும் பழங்களைத் தின்றவுடன் தண்ணீர் அருந்தக்கூடாது அதனால் மரணம் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும், குளித்தவுடன் தண்ணீர் குடித்தால் ஜலதோஷம் உண்டாகும் என்றும், ஐஸ் நீரை பொதுவாக அருந்தினால்பற்கள் சீக்கிரம் ஆட்டம் கண்டுவிடும் என்றும், தொண்டைக்கட்டி வலி உண்டாகும், இரைப்பையில் ஊறும் ஜீரணநீர் குறைவாகவே சுரக்கும் என்றும், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் உடல் பலஹீனமடைந்துஇளைத்து விடும் என்றும், பூமிக்கு அடியில் ஓடும் தண்ணீரும் கிணற்றில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரும் கெடுதல் தரக்கூடியவை என்றும், கிணற்றுத் தண்ணீரையும், ஆற்றுத் தண்ணீரையும் கலந்து குடிப்பது உடல்நலத்தைக் கெடுத்துவிடும், அவ்வாறே வெந்நீரையும், தண்ணீரையும் கலந்து குடிப்பது உடல் நலத்தை பாதிக்கும் என்றும் ஜாலீனுஸ்,அப்கராத் அபூநயீம் போன்ற மருத்துவ மேதைகள் கூறுகிறார்கள்
. 
12. மழைத் தண்ணீர்

எல்லா நோய்களும் நீங்கிட 
“எனக்கு ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஒரு மருந்தை கற்றுத்தந்தார்கள். அம்மருந்து ஒன்றே போதும். வேறு எந்த மருந்தும் தேவை இல்லை. எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லா நோய்களையும் இந்த ஒரு மருந்தின் மூலமே குணப்படுத்தி விடுவான்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ஒரு சமயம் ஸஹாபாப் பெருமக்களிடம் கூறியபோது, அபூபக்கர், உமர், உஸ்மான், அலீ (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகிய நாற்பெறும் ஸஹாபாக்களும் அதை தத்தமக்குக் கற்றுத்தருமாறு வேண்டினார்கள். அப்போது “வேறு எதிலும் படாத சுத்தமான மழைத் தண்ணீரில் ஃபாத்திஹா, இக்லாஸ், ஃபலக், நாஸ் ஆகிய நான்கு சூராக்களையும் எழுபது எழுபது தடவை ஓதி அதில் ஊதி வைத்துக் கொண்டு, எப்படிப்பட்ட நோயால், செய்வினை மற்றும் கண்திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களும் காலையும், மாலையும் தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால் என்னை நபியாக அனுப்பியஅல்லாஹ்வின் மீது ஆணையாக் நிச்சயம் அந்த நோய் நீங்கிவிடும். மலட்டுத்தன்மை உடையவர் இவ்வாறு இதைக் குடித்து வந்தால் நிச்சயம் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பெறுவார்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அருளினார்கள். 

13. ஜம்ஜம்

நினைத்தது நிறைவேற 
“இந்த ஜம்ஜம் நீரை எந்த எண்ணத்துடன் யார் அருந்துகிறோமோ அது அவருக்கு நிறைவேறும். நான் மறு உலகில் தாகமில்லாதிருக்க இதை அருந்துகிறேன்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியதாக இப்னு முபாரக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். 

14. சுர்மா

கண்ணொளி பெருகிட
நீங்கள் தூங்கப்போகும் முன்பு சர்மாவை உங்களுடைய கண்களில் இட்டுக் கொள்ளுங்கள். நிச்சயமாக இது கண்களுக்கு கூடுதல் ஒளிதரும். இமை முடிகளை முளைப்பிக்கச் செய்யும் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியதாக ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்அறிவிக்கிறார்கள். 

15. பூண்டு

புண்கள் ஆறிட 
பூண்டை பால் விட்டு அரைத்து புண்கள், வெயில் கொப்பலங்களில் வைத்தால் விரைவில் ஆறிவிடும். புண் ஆணையைக் கூட வெளியாக்கிவிடும். இன்னும் அநேக மருத்துவ குணங்கள் பூண்டிற்கு உண்டு. ஆனால் மூல வியாதியஸ்தர்கள் பூண்டை உபயோகிக்ககூடாது. 
1. பக்காவாததிற்கு நல்லது. இதை வேகவைத்து வைகொப்பளித்தால் பல்வலி நீங்கி பற்கள் உறுதிப்படும். நவாச்சாரத்துடன் கலந்து வேன்குஷ்டத்திற்கு பத்துப் போட்டால் அது குணமாகும். 
2. பல தன்நீர்களை குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் பூண்டு சாப்பிட்டால் போதும். அந்தத் தண்ணீரால் எந்த தீமையும் ஏற்படாது. 
3. தேள், பின்பு கடித்து விடாத்ல் பூண்டைத் தட்டி கடிவாயில் பத்துப் போட்டால் குணமாகி விடும். 

16. மருதோன்றி இலை

வயிற்றுவலி, தலைவலி நீங்க 
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு தலைவலிக்குமானால் மருதொன்றியை அரைத்து தலைக்கு பத்து போடுவார்கள். மேலும் அல்லாஹ்வின் ஆணையால் இது நிச்சயம் பலன் தரும் என்றும் கூறுவார்கள். 

17. அத்திப்பழம்

உடல் அழகு பெற 
உடலை அழகாகவும், மினுமினுப்பாகவும், இளமையாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக வசதியுள்ளவர்களும்,இல்லாதவர்களும் எவ்வளவோ செலவு செய்து, எங்கெல்லாமோ சென்று, எதையெல்லாமோ செய்கிறார்கள். அதனால் நாளடைவில் உடல் அழகு குறைவதோடு ஆரோக்கியமும் கெட்டுவிடும். ஆனால் அதிகாலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத்தைச்சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், இளமையும் நாளுக்கு நாள் அதிகமாகும் என்று அரபிய மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
 
 18. முந்திரிப்பழம்

இரத்த சுத்திக்கு 
இரத்தத்தை சுத்தப்படுத்துவதில் முந்திரிப்பழம் முதன்மையானதும், கைக்கண்டதுமாகும். 
1. உடல் வளர்ச்சியடைவதற்கு தேவையான கொழுப்புச்சத்து இதில் தேவையான அளவிற்கு இருக்கிறது.
2. பித்த ராகத்தை போக்குவதற்கு தனிவல்லமை இதற்குண்டு.
3. முந்திரிப்பழம் ஒன்றை சாப்பிட்டாலே உடலில் பலஹீனமும், சோம்பலும் நீங்கி சுருசுருப்படைவதை உடனே காணலாம்.
மருத்துவம் பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்:

19. முள்ளங்கி

பசி உண்டாக 
முள்ளங்கியை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் நல்ல பசி ஏற்படும். 
1. தாதுபலம் மிகப்பலமாக இருக்கும்.
2. கிட்னியில் சேரும் கற்களைக் கரைத்து விடும். 
3. நரம்புத் தளர்ச்சியைப் போக்கி உடலுக்கு நல்ல வலுவேட்படுத்தும்.
4. முடி உதிர்வதைத் தடுத்து அது நன்கு வளர்ச்சியடையச் செய்யும்.
5. முள்ளங்கியை அவ்வப்போது சமைத்து உண்டுவந்தால் தொண்டை சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்கி விடும். குரல் இனிமையாகும். 
6. முள்ளங்கியைத் தட்டி தேள், பாம்பின் கடிவாயில் வைத்து கட்டினால் விஷம் இறங்கி விடும்.
7. இறைப்பைவலி, வயிற்றுவலி, வயிற்று எரிச்சல் ஏற்பட்டால் முள்ளங்கியைச் சாப்பிட்டால் குணமாகி விடும். 
8. முள்ளங்கியைத் தட்டிச்சாறெடுத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கல் அடைப்பு வியாதி குணமாகிவிடும்.
9. முள்ளங்கி விதையை வெயிலில் காய வைத்து நன்கு தட்டி தேன் கலந்து லேகியமாக்கி வைத்துக்கொண்டு திமமும் இரவில் தூங்கப்போகும் முன்பு கொஞ்சம் சாப்பிட்டு பால் அருந்தி வந்தால் நீண்ட நேரம் தாம்பத்திய சுகம் பெறுவதற்கு இதைவிடச் சிறந்த மருந்து 
இனியொன்று இல்லை. 

20. மாதுளம்பழம்

ஷைத்தான் விரண்டோட
எந்த வயிற்றில் மாதுளைப்பழத்தின் ஒரு விதைப்பட்டு விடுகிறதோ அதன் காரணம் அவருடைய இதயம் பிகாசிக்கும்.(அதாவது இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கி நன்கு செயல்படும்) மேலும் நாற்பது நாட்களுக்கு ஷைத்தான் அண்டுவதில்லை. விரன்டோடி விடுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அன்னவர்கள் கூறுகிறார்கள். 
கண்ணோய் நீங்கிட
மாதுளை மொட்டை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவிட்டால் ஒரு வருடத்திற்கு கண்வலி, கண்ணில் நீர் வடிதல், பூளை தள்ளுதல் போன்ற கண் சம்பந்தப்பட்ட எந்த வியாதியும் வராது என்றும், மூன்று மாதுளை வித்தை விழுங்கி விட்டால் ஒரு வருடத்திற்கு கண்ணில் பூளை தள்ளாது என்றும் திப்புன்னபவியில் கூறப்படுகிறது. 
இரத்தம் சுத்தமாக 
இரத்த நாளங்களில் கொழுப்பு, அல்லது ஒருவிதமான கரைபடித்து அடைத்துக் கொண்டால் இரத்த ஓட்டம் தடைபடும். அப்போது இதயபாதிப்பு ஏற்படும். இது அதிக உணவு உண்ணுவதால் ஏற்படுகிறது. இதற்கு அவ்வப்போது மாதுளைப்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டத்தைத் நீங்கி விடும். மேலும் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி நல்ல இரத்தம் நிறைய ஊற உதவும். 
1. வாதம், கபம், அஜீரணம், வீக்கம், வலி இவைகள் நீங்க மாதுளைப்பழம் சிறந்த உணவாகும்.
2. தாதுபுஷ்டிக்கு இது நிகரற்ற நல்ல மருந்தாகும்.
3. மேனியை மினுமினுப்பாக்கி உடலை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்திருக்க இது உதவுகிறது.
4. நெஞ்சு வலிக்கு இது நல்லது. மேலும் தொண்டை கரகரப்பை நீக்கி குரல் இனிமைபெற உதவும். மாதுளைப்பழத்தை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் விரும்பி உண்டிருக்கிறார்கள். 

21. சுரைக்காய்

மூளை பலத்திற்கு 
சுரைக்காய் சமைத்து விரும்பி உண்ணுங்கள். அது மூளைக்கு அதிக பலத்தைத் தரும். மேலும் அது வளர்ச்சி அடையும் ஒரு சமயம் அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் “ஆயிஷா! நீ சமைப்பது எனில் சுரைக்காயை (கறியுடன் சேர்த்து) அதிகமாக சமை. அது மனக்கவலையைப் போக்கி விடுவதோடு, நெஞ்சுக்குப் பலமும் தரும்” என்றும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள். 
மூத்திரம் கோளாறுகள் நீங்க 
பல காய்கறிகள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் பிரியமாக உண்டிருக்கிரார்கள் என்றாலும் சுரைக்காயின் மீது தனிப்பட்ட விருப்பம் கொண்டு பிரியமாக உண்டிருக்கிறார்கள். அதிலும் இறைச்சியில் சுரைக்காயைச் சேர்த்து சமைக்கப்பட்ட சால்னாவை கோதுமை ரொட்டியில் ஊற்றிச் சாப்பிடுவதில் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு அலாதிப் பிரியம் இருந்தது. சுரைக்காய் சிறுநீர் நன்கு வெளிப்படுத்தும். மேலும் மூத்திரக் கோளாறுகளை நீக்கும். 

22. வெள்ளரிக்காய்

உடல் பருமனாக 
ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறுகிறார்கள்: “நான் மிகவும் ஒல்லியாக இருந்தேன். நான் சதைபோட வேண்டும் என்பதற்காக எனக்கு என்னுடைய தாயார் பல மருந்துகளையும் செய்து பார்த்தார்கள். பலவிதமான பொருட்களை உண்ணக்கொடுத்தார்கள். அப்போதும் எனது உடலில் சதை பிடிப்பு ஏற்படவில்லை. பின்பு பேரீச்சப்பழத்தையும், வெள்ளரிக்காயையும் சேர்த்து எனக்கு உண்ணக கொடுத்தார்கள். அதனால் சில நாட்களில் நான் பருமனாகி விட்டேன். (பொதுவாக ஒல்லியாக உள்ள பெண்கள் சதைபோட இது சிறந்த 
உணவாகும்) 

23. இஞ்சி, சுக்கு

ஜலதோஷம் நீங்கிட 
கொஞ்சம் இஞ்சிச்சாறும், தேனும் சமஅளவு கலந்து மூன்று நாட்களுக்கு காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் பறந்து விடும். 
1. சுக்கு, வெள்ளைப்பூண்டு, குறுமிளகு இம்மூன்றையும் சமஅளவு எடுத்து, தட்டி பொடியாக்கி தேனில் குலைத்து சாப்பிட்டு வந்தால் மூலக்குரு நீங்கி விடும். அதன் வேர் அப்படியே அடியோடு அறுந்து விடும். 
2. சுக்கைத் தட்டி பாலில் கலந்து குடிக்க வேண்டும். அதையே மேனியில் தேய்க்கவும் செய்தால் பாம்புக்கடி விஷம் இறங்கி விடும். 
3. வாந்தி வருவது போன்று தோன்றினால் சுக்கை கொஞ்சம் வாயிலிட்டால் உடனே வாந்தி நின்று விடும்.
 
24. தயிர், மோர், வெண்ணை, நெய்

தாதுபுஷ்டிக்கு 
பேரீச்சம்பழமும், வெண்ணையையும் சேரத்துச் சாப்பிட்டால் தாதுபுஷ்டிக்கு நிகரற்றது என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள். குரல் இனிமை தருவதற்கும் இது நல்ல உணவாகும். 
1. தேனும் வெண்ணையும் சேர்த்துச் சாப்பிட்டால் விழ மூட்டுக்களில் உண்டாகும் வலி நீங்கிவிடும்.
2. தயிரும், அக்ரூட்டும் வெவ்வேறு குணங்களைக் கொண்டதாகும். இவற்றைத் தனித் தனியாகச் சாபிட்டால் உடல் நலம் கெட்டுவிடும். ஆனால் இரண்டையும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்றும் அதனால் இரண்டின் குணங்களும் சமநிலைப்பட்டு உடல் நலத்தையும், ஆரோக்கியத்தையும் பெற்றுத்தரும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அருளிய ஹதீஸை இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். 

25. காளான்

கண்ணோய் குணமாகிட 
ஹஸ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். ஒரு சமயம் சில ஸஹாபாக்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் வருகை தந்து “காளான் பூமியின் அம்மை நோய்”என்று முறையிட்டார்கள். அப்போது “காளான் (பாலைவனத்தில் பனூ இஸ்ராயீல் சமூகத்தாருக்கு அல்லாஹ் வழங்கிய மேலான உணவான) “மன்” எனும் உணவு வகையைச் சேர்ந்ததாகும். அதன் நீர் கன்னோயகளைகுணப்படுத்தும் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள். இதற்குப் பின்பு நான் நான்கு ஐந்து காளான்களை பிடுங்கி கசக்கி சாறெடுத்து ஒரு பாட்டிலில் எடுத்து வைத்திருந்தேன். எனது அடிமைப் பெண்ணுக்கு அடிக்கடி கண்களிலிருந்து நீர் வடிந்து கொண்டிருந்தது. அப்போது கண்கள் வலிக்கவும் செய்தன. அதற்கு இந்த காளான் நீரை கண்ணுக்கு இட்டு வந்தேன். குணமாகி விட்டது னென்று அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். 

26. எள்

தொண்டை வறட்சி நீங்கிட
எள் சாப்பிட்டால் வறட்சி, கரகரப்பு நீங்கி விடும். குரல் இனிமையாக இருக்கும் 
1. எள்ளுடன் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் இரைப்பை சுறுசுறுப்படையும்.
2. நரம்புத்தளர்ச்சி நீங்கி பலம் பெரும், மேனி மினுமினுப்பாக இருக்கும். 
3. முடி கருப்பாகவும் நீளமாகவும் வளர்ச்சி அடையும்.
4. நல்லெண்ணையை உணவில் ஊற்றிச் சாப்பிட்டால் குடல் புண்களை ஆற்றும். உடல் உஷ்ணத்தை தனித்து விடும்.
5. கர்ப்பம் தரிக்காதிருக்க எள் கைகண்ட மருந்தாகும். உடலுறவு கொண்ட பின்பு அதிகாலையில் வெறும் வயிற்றில் எள்ளும் சர்க்கரையும் சேர்த்து (எள்ளுருண்டை) சாப்பிட்டால் கர்ப்பறையில் சேர்ந்துள்ள விந்தின் ஜீவா அணுக்களை கலைத்து விடும். அதனால் கருத்தரிக்க மாட்டாது. மேலும் உடலுறவு கொள்ளும் போது ஆண் உறுப்பில் நல்லெண்ணையைத் தடவிக்கொண்டு உறவு கொண்டாலும் கருத்தரிக்காது
. 
27. திராட்சைப்பழம்

இரத்தம் சுத்தியாக
திராட்சைப்பழம் சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும். உடலில் பலமும் தைரியமும் ஏற்படும். உடலில் சதைப்பிடிப்பு உண்டாகும். பித்தக்கோளாறுகளைப் போக்கி விடும். ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்“திராட்சைப் பழத்தை உண்ணுங்கள். அதன் கொட்டையை வீசி எறிந்து விடுங்கள். ஏனெனில் திராட்சைப்பழம் (ஷிஃபா)நோய் நிவாரநியாகும். அதன் கொட்டை நோயாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அருளியதாக அறிவிக்கிறார்கள். 
அழகான தோற்றத்திற்கு 
உலர்ந்த திராட்சை அதிகமான நோய்களை நீக்கும் சிறந்த மருந்தும் உயர்ந்த உணவுப் போருளுமாகும். ஒரு சமயம் உலர்ந்த திராட்சையை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டு அது அவர்கள் முன்னால் வைக்கப்பட்டது. அப்போது அவர்கள் ஸஹாபாப் பெருமக்களிடம் “இதைச்சாப்பிடுங்கள். இது கோபத்தைத் தனித்து விடும். கபத்தை வெளியேற்றி விடும். நல்ல நிறத்தை உண்டு பண்ணி அழகான தோற்றத்தை தரும். வாய் நாற்றத்தை போக்கும், நரம்புத் தளர்ச்சியை நீக்கி பலப்படுத்தும்” என்று கூறினார்கள் என தமீமுத்தாரமீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். 

28. பழரசம்

உடல் பலத்திற்கு 
அன்னை ஆயிஷா ஸித்தீக்கா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் “நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்காக காலையில் பழங்களைப் பிழிந்து ஜூஸ் செய்து வைப்போம். அதை மாலையில் அவர்கள் சாப்பிடுவார்கள். அவ்வாறே மாலையில் ஜூஸ் செய்து வைப்போம், அதை அவர்கள் காலையில் சாப்பிடுவார்கள். ஆனால் ஒவ்வொரு தடவையும் காலையிலும், மாலையிலும் பழங்களை பிழிந்தபாத்திரத்தை அவசியம் கழுவி வைப்போம்” என்று கூரினார்கள். இம்முறைப் பிரகாரம் பழரசம் சாப்பிடுவது உடலுக்கு நல்ல வலுவைத் தரும். மேலும், ஒரு தடவை ஜூஸ் பிழிந்து விட்டப் பாத்திரத்தைக் கழுவிய பின்புதான் அடுத்த தடவை ஜூஸ் பிழிய வேண்டும். அதுவே சுகாதாரமாகும். கழுவாமல் வைத்திருந்தால் பழங்களிலுள்ள சர்க்கரையின் காரணம் ஈ, எறும்பு மற்றும் காற்றிலுள்ள கிருமிகள் வேகமாக அந்தப் பாத்திரத்தை தொடுகின்றன. அதனால் சுகாதாரக் கேடுகள் ஏற்பட்டு நோய் நொடிகள் விளைகின்றன.
 
29. சிர்க்கா

வயிற்றுக் கோளாறுகள் நீங்க 
ஆயிரக்கணக்கான வயிற்றுக் கோளாறுகளை நீக்குவதிலும், இரைப்பையை சுத்தப்படுத்தி வலுவூட்டி, ஜீரண சக்தியை விரைவில் ஏற்படுத்துவதில் சிர்க்கா வல்லதாகும். குறிப்பாக மழைக்காலத்திலும், குளிர்க்காலத்திலும் நல்ல பலனைத்தரும். கருஞ்ஜீரகத்தை தட்டி சிர்க்காவில் கலந்து தேமல், கருந்தேமல், படர்தாமரை, ஊறல் போன்ற தொல்சம்பந்தப்பட்ட வியாதிகளில் தேய்த்து வந்தால் அவை குணமாகி விடும். 
ஆறாத புண்கள் ஆற 
சிர்க்காவை பஞ்சு அல்லது துணியில் நன்கு நனைத்து ஆறாத புண்கள் நீண்ட நாட்களாக உள்ள புண்கள், புரையோடிய புண்களில் கட்டினால் வேதனை, வலி, வீக்கம் நீங்கி விரைவில் புண்கள் ஆறிவிடும். புண்களில் இருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தாள் அல்லது சிருமூக்கு உடைந்து இரத்தம் வடிந்தாலும் சிர்க்காவை தடவினால் இரத்தம் வடிவது நின்று விடும். 

30. கஸ்தூரி

மரத்த நிலை நீங்க 
சில நேரங்களில் இரத்த ஓட்டக் குறைவால் உடல் மரத்து விடும். அப்போதும் அந்த இடத்தில் கஸ்தூரியை கொஞ்சம் தேய்த்து விட்டால் மரத்துவிட்ட நிலை நீங்கி விடும். 
1. கஸ்தூரியை உபயோகிப்பது மற்றும் நுகர்வதால் நீர்த்துப்போன விந்து கட்டிப்பட்டு தாதுபலம் பெற்று நீண்ட நேர போக உகம் பெறலாம்.
2. மயக்கமுடையவருக்கு இதை நுகரச் செய்தால் உடனே மயக்கம் தெளிந்து எழுவார். இதயக் கோளாறுகளும் இதனால் நீங்கிவிடும். 
3. விஷ பொருட்களை உண்டுவிட்டாலோ, விஷ ஜந்துக்கள் தீண்டி விட்டாலோ கஸ்தூரியை நீரில் கலந்து கொஞ்சம் குடித்தால் கடுமை குறைந்து விஷம் இறங்கிவிடும். மேலும் இதனால் உள்ளுறுப்புகள் பழம் பெறும்.

31. ரோஜாப்பூ

குல்கந்து
நல்ல நிறமும், மலர்ந்து விரிந்த பெரிய தரமும் உள்ள ரோஜா பூக்களின் இதழ்களை ஆய்ந்து புழு பூச்சிகள் இருப்பின் அவற்றை நீக்கி சுத்தப்படுத்தி பின்பு ரோஜா இதழ்களின் எடையைப் போன்று மூன்று மடங்கு எடை கற்கண்டு சேர்த்து இரண்டையும் சுத்தமான கல் உறவில் கொஞ்ச கொஞ்சமாக இட்டு இடிக்க வேண்டும். நன்கு இடித்து லேகிய பக்குவமான பின்பு வாயகன்ற கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் இட்டு, அதில் மூன்றில் ஒரு பங்களவு சுத்தமான நல்ல தேன் ஊற்றி நன்றாக கிளறி விட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இதுவே குல்கந்து. கடைகளில்விற்பதை வாங்குவதை விட நாமே தயாரித்துக் கொள்ளும்போது சுத்தமாகவும், விலை குறைவாகவும் இருக்கும். இன்னும் ருசி வேண்டுமெனில் கசகசாவை இளஞ்சூட்டில் லேசாக வறுத்து அதில் சேர்த்துக் கொள்ளலாம். உடல் போஷாக்கிற்கு உன்னதமான டானிக்காகும் இது. இதை உண்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது. இரத்த விருத்திஏற்படும். உடல் நன்கு மினுமினுப்பாகவும், தளதள என்றும் இருக்கும். 

32. அரிசி

இந்திரிய உற்பத்திக்கு 
அரிசி உணவு இந்திரியத்தை நிறைய உற்பத்தி செய்வதோடு அதை நேர தாம்பத்திய சுகத்தைத்தரும். அரிசியில் தண்ணீருக்குப் பகரமாக பாலூற்றிச் சமைத்து சர்க்கரை அல்லது கல்கண்டு சேர்த்து பாயாசமாக வைத்துச் சாப்பிட்டால் முகவீக்கம் மற்றும் ஒற்றைத் தலைவலி குணமாகிவிடும். மூன்று நாட்களுக்கு சாப்பிட வேண்டும். அரிசி உணவு பரக்கத் பெற்ற உணவாகும். ஆதலால் அதை உண்ணுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள். 

33. பருப்பு

மூளை வளர்ச்சி 
பருப்பை உண்ணுங்கள்: அது பரக்கத் பெற்ற உணவாகும். அதனால் மூளை வளர்ச்சியடையும். இதயத்திற்கு மிகவும் நல்லது என்றும் 70 நபிமார்கள் பருப்பின் மூலம் பரக்கத் பெற்றிருக்கிறார்கள் அவர்களில் கடைசி (நபி) ஈசா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களாவார்கள் என்றும் அதனால் கண்வலி வராது என்றும் பெருமை எனும் கெட்ட குணம் பருப்பால் நீங்கி விடும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள். பருப்பை அதிகம் உண்டால் பார்வை மங்கிவிடும். பருப்பைத் தட்டி அம்மை புண்களுக்கு வைத்தால் அது ஆறிவிடும். 

34. மீன்

உடல் கொழுத்திட 
மீனை உண்டுவந்தால் உடல் கொழுத்துப் பெருத்து விடும். பொறித்த மீனை தின்று வந்தால் விந்து கெட்டிப்பட்டு தாது சக்தியை நிறைவாகப் பெறலாம். ஆனால் விரைவில் ஜீரணமேற்படாமல் தாமதமாகவே ஏற்படும். சேறும் சகதியும் உள்ள குட்டைகளிலுள்ள மீனை உன்னவது நல்லதல்ல. அதனால் உடல் கெட்டுவிடும். உப்பில்லாத நல்ல தண்ணீரிலுள்ள மீனே மிகவும் நல்லது. கருவாடு சூடானது. அதை அதிகம் உண்டால் அரிப்பும், சொறி சிரங்கும் ஏற்படும். அதிகம் முள் உள்ள மீனை உண்ணக்கூடாது. 

35. கரும்பு

கரும்பு சாப்பிடுங்கள்: அது வயிறு நிறைய உண்டவனுக்கு ஜீரணத்தை கொடுக்கும்! பசித்தவனுக்கு வயிறை நிரப்பும் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள். 
1. கரும்பு தாம்பத்திய சுகத்திற்கு நல்லது, நெஞ்சுவலிக்கும் நல்லது. மேலும் அதனால் இருமல் மற்றும் வயிற்றுக்கோளாறுகள் நீங்கிவிடும். ஆனால் அதனால் சிறுநீர் அதிகம் போகும் என்று கிதாபுல் பரக்கத் எனும் நூலில்கூறுகிறார்கள். 
2. மருந்தே இல்லாதவருக்கும் திராட்சை, கரும்பு, ஓட்டகைப்பால் ஆகிய மூன்று மருந்துகள் போதும். எல்லா நோய்களையும் இவை நீக்கிவிடும் என்று இமாம் ஷாஃபி (ரஹ்மாதுல்லாஹி அலைஹி) அவர்கள் கூறுகிறார்கள். 

36. தர்பூஜ் பழம்

1. கர்ப்பிணிப் பெண்கள் இந்தப் பழத்தை அதிகமாக சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை அழகாகவும், புஷ்டியாகவும் இருக்கும். 
2. இந்தப்பழம் பசி தீர்க்கும் உணவும், தாகம் தீர்க்கும் தண்ணீருமாகும். மூளைக்கு குளிர்ச்சியை கொடுத்து அதை பலப்படுத்தும். முதுகந்தண்டில் தேவையான அளவு நீரை உற்பத்தி செய்யும். வயிற்றுத் தொந்தரவுகளை நீக்கி விடும்.மேலும் தாம்பத்திய சுகத்தை அதிகப்படுத்தும் என்று இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். 

 அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
"அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை"
ஸஹீஹுல் புஹாரி - பாகம் 6 : அத்தியாயம் 76 : ஹதீஸ் எண் 5678

***இந்த நல்ல தகவலை நம் நண்பர்கள் மத்தியில் பரப்ப SHARE செய்யுங்கள்!!!!
இஸ்லாமிய மருத்துவம்...1. பேரிச்சம்பழம்

செய்வினை – விஷம் குணமாக!
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் சொன்னதாக அபூசயீதுல் குத்ரி (ரலியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள்: அஜ்வா பேரீச்சம்பழம் சொர்க்கத்துப் பழமாகும். யார் 7 பேரீச்சம்பழத்தைச் சாப்பிடுகிறாரோஎந்தவிதமான விஷமோ, ய்வினையா அவரை அண்டாது.
வாய்வுத் தொல்லை நீங்க!
வாய்வுத் தொல்லை (கேஸ்ட்ரபிள்) யால் பலர் படாதபாடு படுகிறார்கள். அவர்கள் காலையில் பிஸ்கட், பன், ரொட்டி என்று எதையும் உண்ணாமல் 11 பேரீச்சம்பழம் வீதம் தினமும் அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் சில நாட்களில் வாய்வுத்தொல்லை நீங்கி நல்ல குணம் பெறலாம்.

2. ஜைத்தூன்

ஷைத்தான் நெருங்காதிருக்க
“அலி! ஜைத்தூன் பழத்தைச் சாப்பிடுங்கள். அதன் எண்ணையைத் தேய்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வோரிடம்40 நாட்களுக்கு ஷைத்தான் நெருங்க மாட்டான்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் கூறினார்கள்.

வலி, வாதம், வீக்கம், மறுப்பு நீங்க
இடுப்பு வலி, முதுகுவலி, கைகால் குடைச்சல், மூட்டுக்களில் வலி என்று இருப்பின் அந்த இடத்தில் ஜைத்தூன் எண்ணையைத் தடவி நன்றாகத் தேய்த்து விட்டால் வலி, குடைச்சல் எல்லாம் குணமாகிவிடும். கால் கைகள் அப்படியே சிலருக்கு மரத்து போய்விடும். அப்போது இந்த எண்ணையை லேசாக சூடாக்கி அந்த இடத்தில் தேய்த்தால்மறந்து போனது நீங்கி இரத்த ஓட்டம் சீராகி விடும்.

3. பேரிக்காய்

இதயம் வலுவடைய
“அதிகாலையில் வெறும் வயிற்றில் பேரிக்காய் சாப்பிட்டால் நெஞ்சடைப்பு, இதயகனம், இதயபலஹீனம், மார்புவலி நீங்கி இதயம் பலப்படும்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியதாக அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்.

அழகான குழந்தை பிறக்க
“கர்ப்பிணிப் பெண்களுக்கு பேரிக்காய் உண்ணக கொடுங்கள். அதனால் குழந்தை அழகாகப் பிறக்கும். இதய அழுத்தம்,இதயவலி (முதலிய நோய்கள்) ஏற்படாமல் இதயம் நன்கு செயல்படும்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள்.

4. கருஞ்சீரகம்

நினைவாற்றல் பெருகிட
அதிகாலை நேரத்தில் வெறும் வயிற்றில் பத்துப் பதினைந்து கருஞ்சீரக விதைகளை மென்று தின்று வந்தால் நினைவாற்றல் பெருகும்.
குறிப்பு: கர்ப்பிணிப் பெண்கள் கருஞ்சீரகத்தை உபயோகிக்க கூடாது.
சர்க்கரை வியாதி நீங்கிட
இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி பரிபூரணமாக குணமாகி விடும்.

5. கோதுமை

இதய பலத்திற்கு இதயமும், மூளையும் வலுவடைவதற்கும், வயிற்றுக் கிருமிகள் மற்றும் வயிற்றிலுள்ள கசடுகள் எல்லாம் நீங்கி இரைப்பை சுத்தமாக இருப்பதற்கும் தப்னியா (அதாவது கோதுமை மாவில் பால் ஊற்றி பாயாசமாகக் காய்ச்சி இறக்கிய பின்பு தேவையான இனிப்புக்கு தேன் கலந்த உணவை) உண்ணுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்.
 
சத்தான உணவு தொலிக் கோதுமை ரொட்டித்துண்டை எடுத்து, அதில் பேரீச்சம்பழம் வைத்து, இதுவே சிறந்த சாலன்: இதுவே சிறந்த சாலன் என்று இரண்டு தடவை நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் சொன்னார்கள் என்று யூசுப்பின் அப்துல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்: கோதுமையுடன் பேரீச்சம்பழம் சேர்த்த உணவை “எல்லா சத்துக்களும் நிறைந்த பரிபூரணமான உணவு” என்று மருத்துவ ஆராய்ச்சியின் மூலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.