Digital Time and Date

Welcome Note

Saturday, March 30, 2013

இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : அல்-குர்ஆன்

Q66) எந்த ஏழு நபர்களுக்கு மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் இடம் கிடைக்கும்?

A) 1) நீதமான ஆடசியாளர் 2) அல்லாஹ்வின் வணக்கத்திலேயே வளர்ந்த வாலிபன் 3) யாருடைய உள்ளம் அல்லாஹ்வின் பள்ளியை நினைத்த வண்ணம் இருக்கிறதோ அவர் 4) அல்லாஹ்வுக்காகவே விருப்பம் கொண்டு, சந்தித்து, பிரிந்த இருவர் 5) அழகும் அந்தஸ்தும் உள்ள பெண் தன் விருப்பத்திற்கு இணங்குமாறு அழைத்த போது, நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன் என்று கூறியவர் 6) வலக்கரம் என்ன கொடுத்தது என்று தன் இடக்கரம் அறியாத அளவுக்கு இரகசியமாக தர்மம் செய்தவர் 7) தனிமையில் அல்லாஹ்வின் அச்சத்தால் கண்ணீர் மல்க அல்லாஹ்வை நினைவு கூர்பவர். (புகாரி)

Q67) நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்தைக் கூறுக.

A) நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்து ஒன்று தான்.

அல்லாஹ் நபி (ஸல்) அவாகள் மீது ஸலவாத் கூறுமாறு திருக்குர்ஆனில் வசனம் 33:56 ல் கட்டளையிட்ட போது, நபி தோழாகள் நபி (ஸல்) அவர்களிடம் எப்படி ஸலவாத் கூறவேணடும் என கேட்டபோது, பின் வரும் ஸலவாத்தை ஓதிக்காட்டினார்கள்.

அல்லாஹும்ம ஸல்லிஅலா முஹம்மதின் வ-அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம, வ-அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலாமுஹம்மதின் வ-அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம, வ-அலா ஆலி இப்ராகீம இன்னக்க ஹமீதுன் மஜீத்

Q68) அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறை கூறிய நயவஞ்சகன் யார்?

A) அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு உபை ஸலூல் (புகாரி)

Q69) ஆயிஷா (ரலி) அவாகள் மீது கூறப்பட்ட அவதூறு சம்பந்தமாக இறங்கிய குர்ஆன் வசனம் எது?

A) எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது; மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு. (அல்-குர்ஆன் 24:11)

எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு. (அல்-குர்ஆன் 24:23)

Q70) என்ன காரணங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள் என நபி (ஸல) அவர்கள் கூறினார்கள்?

A) ‘ஒரு பெண் நான்கு காரணங்களுக்காக மணமுடிக்கப்படுகிறாள். அவளின் செல்வத்திற்காக, அவளின் அந்தஸ்திற்காக, அவளின் அழகிற்காக, அவளின் மார்க்கத்திற்காக. நீ மார்க்கப் பற்றுள்ளவளைத் தேர்ந்தெடுத்து அவளை மணமுடித்துக் கொள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)

Q71) குழந்தைகளின் எத்தனை வயதில் அவர்களை தொழுகைக்கு ஏவுமாறு நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள்?

A) ‘உங்களின் குழந்தைகளுக்கு எழு வயது ஆகும் போது தொழும்படி கட்டளையிடுங்கள்: அவர்கள் பத்து வயது ஆகும் போது (தொழ மறுத்தால்) அவர்களை அடியுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத்)

Q72) “நோன்பாளிக்கு இரு சந்தோஷங்கள் உள்ளன” என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் அந்த இரு சந்தோஷங்கள் யாவை?

A) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பாளிக்கு இரு சந்தோஷங்கள் உள்ளன. ஓன்று நோன்பு திறக்கும் போது. மற்றது தனது நாயனை (மறுமையில்) சந்திக்கும் போது ஏற்படுகின்ற சந்தோஷமாகும். (ஆதாரம் : திமிதி)

Q73) ஹிஜ்ரி எத்தனையாவது ஆண்டில் ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டது?

A) ஹிஜ்ரி இரண்டாவது ஆண்டில் நோன்பு கடமையாக்கப்பட்டது.

Q74) நெருப்பு விறகை அழித்து விடுவதைப் போல் எந்த செயல் நன்மையை அழித்து விடுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினாகள்?

A) நெருப்பு விறகை அழித்து விடுவதைப் போல் பொறாமை நன்மையை அழித்து விடுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: அபூதாவுத்)

Q75) மறுமை நாளில் முஃமினின் தராசில் எவற்றை விட வேறெதுவும் கணமானதாக இருக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

A) ‘மறுமையில் ஒரு அடியானின் தராசில் நற்குணங்களைத் தவிர வேறெதுவும் கணமானதாக இருக்காது. அசிங்கமான கெட்ட வார்த்தை பேசுபவனை அல்லாஹ் வெறுக்கிறான்’ (அறிவிப்பவர் : அபுதர்தா (ரலி), ஆதாரம் : திமிதி மற்றும் அஹ்மத்)

No comments:

Post a Comment