Q56) எந்த மூன்று இடங்களைத் தவிர நன்மையை நாடி பிரயாணம் செய்யாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
A) 1) மஸ்ஜிதுல் ஹரம் 2) மஸ்ஜிதுல் அக்ஸா 3) மஸ்ஜிதுன் நபவி. (புகாரி)
Q57) காலத்தைத் திட்டுவது குறித்து கூறப்படும் நபிமொழி எது?
A)
‘காலத்தைத் திட்டுவதன் மூலம் மனிதர்கள் எனக்கு தீங்கிழைக்கிறார்கள்.
காலத்திற்குச் சொந்தக்காரன் நானே! இரவையும் பகலையும் மாறி வரச்செய்பவனும்
நானே! என அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்’
(அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : புகாரி)
Q58) நீதிபதிகள் எத்தனை வகைப்படுவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
நீதிபதிகள்
மூன்று வகைப்படுவர்: அவர்களில் ஒரு வகையினர் சுவனத்திற்கும், இரு வகையினர்
நரகத்திற்கும் செல்வர்: உணமையை அறிந்து அதன் படி தீர்ப்பு வழங்கியவர்
சுவனம் செல்வர். உணமையை அறிந்திருந்தும் அநீதமாக தீர்ப்பு வழங்கியவரும்,
உணமையை அறியாமலேயே தீர்ப்பு வழங்கியவரும் நரகம் புகுவார். (அறிவிப்பவா :
புரைதா (ரலி), நூல் : அபூதாவுது)
Q59) ‘அஸ்ரத்துல் முபஸ்ஸரா’ என்று அழைக்கப்படக் கூடக் கூடிய சுவர்க்கத்திற்கு நன்மாராயங் கூறப்பட்ட நபித்தோழர்கள் யாவர்?
A)
(1) அபூபக்கர் (ரலி) (2) உமர் (ரலி) (3) உதுமான் (ரலி) (4) அலி (ரலி) (5)
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி) (6) ஜுபைர் இப்னு அவ்வாம் (ரலி) (7) அப்துர்
ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) (8) ஸஃது இப்னு அபீவக்காஸ் (ரலி) (9) ஸயித்
இப்னு ஜைத் (ரலி) (10) அபூ உபைதா இப்னு அல் ஜர்ராஹ் (ரலி) (ஆதாரம் :
திர்மிதி, இப்னு மாஜா)
Q60) மனிதன் மரணித்த பின்பும் பயன் தரக் கூடிய அமல்கள் யாவை?
A)
‘மனிதன் இறந்து விடடால் மூன்று விஷயங்களைத் தவிர அவனுடைய அமல்கள்
அனைத்தும் அவனை விட்டும் துண்டிக்கப்படுகின்றது’ என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அந்த மூன்று விஷயங்கள் 1) நிரந்தர தாமம் 2) பயன் தரும் கல்வி
3) இறந்தவருடைய சாலிஹான பிள்ளைகள் செய்யும் துஆ (அறிவிப்பவர் : அபூஹுரைரா
(ரலி), ஆதாரம் : முஸ்லிம்)
Q61) எந்த இரு விஷயங்கள் ஒருவரிடம் இருந்தால் அவனை நன்றி உள்ளவன் என்றும்,
பொறுமை உள்ளவன் என்றும் இறைவன் குறித்துக் கொள்வான் என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்?
A) 1) இறை நெறியை மேற்கொள்வதில் தன்னைவிட மேலானவரைப்
பார்த்தல் 2) உலக வசதிகளைப் பொருத்தவரை தன்னை விடக் கீழானவரைப் பார்த்து
இறைவனுக்கு நன்றி செலுத்துதல் (திர்மிதி)
Q62) எல்லாவற்றையும் விட சிறந்த செல்வங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியவை எவை?
A)
1) இறைவனை நினைவு கூறும் நாவு 2) இறைவனுக்கு நன்றி செலுத்தும் உள்ளம் 3)
இறை வழியில் நடந்திட கனவனுக்கு உதவிடும் நம்பிக்கையுள்ள மனைவி. (திர்மிதி)
Q63)
எந்த ஐந்து கேள்விகளுக்கு விடைதராமல் மனிதன் மறுமையில் இறைவனின் நீதி
மன்றத்திலிருந்து அகன்று செல்ல முடியாது என்று நபி (ஸல்) கூறினார்கள்?
A)
1) வாழ்நாளை எப்படி கழித்தான் 2) வாலிபத்தை எவ்வாறு கழித்தான் 3) எவ்வாறு
செல்வத்தை ஈட்டினான் 4) அந்த செல்வத்தை எவ்வாறு செலவழித்தான் 5) அவன்
அறிந்ததிலிருந்து எவ்வாறு செயல்பட்டான். (திர்மிதி)
Q64) முனாஃபிக்குகளின் அடையாளங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியவை எவை?
A) 1)பேசினால் பொய் கலந்து பேசுவான் 2) வாக்குறுதியை மீறுவான் 3) நம்பினால் மோசடி செய்வான் (புஹாரி)
Q65)
வாழ்நாள் அதிகரிக்கப்படவும், உணவு விஸ்தீரிக்கப்படவும் விரும்புகிறவர்கள்
என்ன செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
A)
‘வாழ்நாள் அதிகரிக்கப்படவும், உணவு விஸ்தீரிக்கப்படவும் விரும்புகிறவர்கள்
தம் சுற்றத்தினருடன் (உறவினர்களுடன்) நல்லுறவு பாராட்டுவாராக’
(அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி), ஆதாரம் :புகாரி)
No comments:
Post a Comment