Digital Time and Date

Welcome Note

Saturday, November 24, 2012

வரலாற்றில் இன்று.

நவம்பர் 24

1639 - ஜெரிமையா ஹொரொக்ஸ் என்பவர் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார்.
 
1642 - டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியில் பணிபுரிந்த ஏபல் டாஸ்மான் வான் டீமனின் நிலம் என்ற தீவைக் கண்டுபிடித்தார். இது பின்னர் தாஸ்மானியா எனப் பெயர் பெற்றது.
 
1859 - சார்ல்ஸ் டார்வின் உயிரங்களின் தோற்றம் நூலை வெளியிட்டார். இதன் பிரதிகள் அனைத்தும் முதல் நாளிலேயே முழுவதுமாக விற்பனையாகின.
 
1914 - முசோலினி இத்தாலிய சோசலிசக் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்.
 
1926 - பாண்டிச்சேரியில் உள்ள ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தின் பொறுப்பை அன்னையிடம் ஒப்படைத்து விட்டு அரவிந்தர் இளைப்பாறினார்.
 
1940 - இரண்டாம் உலகப் போர்: சிலோவாக்கியா அச்சு அணி நாடுகள் அமைப்பில் இணைந்தது.
 
1944 - இரண்டாம் உலகப் போர்: டோக்கியோ நகர் மீது முதற்தடவையாக அமெரிக்க விமானங்கள் குண்டுகளைப் போட்டன.
 
1965 - ஜோசப் மொபுட்டு கொங்கோவின் குடியரசுத் தலைவர் பதவியை இரத்தம் சிந்தாப் புரட்சி மூலம் கைப்பற்றினார். இவர் 1971 இல் கொங்கோவின் பெயரை சாயீர் என மாற்றினார். 30 ஆண்டுகளின் பின் 1997 இல் இவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
 
1969 - சந்திரனுக்குச் சென்ற அப்பல்லோ 12 விண்கலம் 3 விண்வெளி வீரர்களுடன் பசிபிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.
 
1971 - வாஷிங்டனில் பெரும் சூறாவளி நாளன்று கடத்தப்பட்ட விமானம் ஒன்றிலிருந்து டான் கூப்பர் என்பவன் 200,000 அமெரிக்க டாலர்களுடன் பாரசூட்டுடன் கீழே குதித்தான். இவனோ பணமோ இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.
 
1977 - கிரீசில் கண்டுபிடிக்கப்பட்ட சமாதி மாசிடோனிய மன்னர் இரண்டாம் பிலிப்பினுடையது. அவர் கி.மு.336 ல் கொலை செய்யப்பட்டார்.
 
1992 - யாழ்ப்பாணம், பலாலி வான்படைத் தளத்தின் கிழக்குப் பகுதி இராணுவ வேலி விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
 
2002 - ரவி வர்மாவின் யசோதையும் கிருஷ்ணனும் ஓவியம் டில்லியில் 56 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
 
2006 - சிங்கள நாளிதழான `மௌபிம' பத்திரிகையின் தமிழ்ப் பத்திரிகையாளரான முனுசாமி பரமேஸ்வரி, பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.

கொடுக்காப்புளி!!

கொடுக்காப்புளி!!

விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களிலும் முக்கியமாகக் கிணற்று மேட்டிலும் இதை வளர்ப்பார்கள். இதற்குப் பாசனம் தேவை இல்லை. ஆனால் பாசன வாய்க்கால் ஓரங்களில் இருப்பவை நன்கு செழித்து வளரும்.

இந்த மரம் குட்டையான முட்கள் நிறைந்ததாக இருப்பதால் வேலிக்காகவும் அந்தக்காலத்தில் நடுவதுண்டு. இதன் இலை வெள்ளாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படும்.

ஐம்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் பாசனக் கிணறுகளில் மாடுகளைக் கொண்டு நீர் இறைக்கப்பட்டபோது வாரியில் நிழலுக்காக இந்தமரங்கள் நட்டு வளர்க்கப்படும்.

வேலிகளில் சிறியதாக வளரும் இது விட்டுவைத்தால் வேம்பு அல்லது புளியமரம்போல் பெரியதாக வளரும் இயல்படையது. நன்கு வளர்ந்து முற்றிய மரங்கள் பல்வகை மரச் சாமான்கள் செய்யயப் பயன்படும்.

எல்லாவற்றுக்கும் மேலாக அக்காலக் கிராமச் சிறுவர்களுடன் இது நெருங்கிய தொடர்புடையது. இதன் சுருள் சுருளான பசுமையான சிவப்பான அழகான காயும் பழங்களும் உண்ணப் பயன்படும். சில ரகங்கள் துவர்ப்புத் தன்மை மேலோங்கியும் சிலரகங்கள் தித்திக்கும் சுவையுடனும் பழங்களைக் கொண்டிருக்கும். வெடித்த பழங்கள் நல்ல சுவையாக இருக்கும். மருத்துவப் பயன்களும் உண்டு.

இதன் முற்றிய அடிமரத்தில் முட்கள் இருக்காது. அதனால் எட்டியவரை சல்லைகளால் காய் பறித்துவிட்டு எட்டாத உயரத்தில் இருப்பதை முள்ளில்லாத அடிமரத்தில் ஏறி பாதிமரத்தில் இருந்து மீண்டும் சல்லைகளால் காய் பறிப்பார்கள்.

எப்படி இருந்தாலும் நீளமான கொக்கிச் சல்லைகளுடன் சிறுவர்கள் இந்த மரம் இருக்கும் இடங்களைத் தேடி அலைவதும் கண்டும் காணாமலும் இதன் பழங்ளைப் பறித்துக்கொண்டு யாரேனும வந்துவிட்டால் ஓட்டம் பிடிப்பதும் வேடிக்கையான அனுபவங்கள். சிலநேரங்களில் இரக்கமற்ற ஆட்களிடம் மாட்டிக்கொண்டு சல்லைகளை இழப்பதும் உண்டு.

சிறுவர்கள் மேல் பாசம் கொண்டு பறித்துத் தருபவர்கள் கொஞ்சம் பேர். சிறுவர்களின் ஓயாத தொல்லைக்குப் பயந்துகொண்டு மரத்தையே வெட்டியவர்களும் உண்டு.

காக்கைகள் பறித்துச் சென்று வீடுகளின் கூரைமேல் வைத்துத் தின்னும். அப்போது அது கொடுக்காப்புளிப் பழத்தை கீழே வைப்பதைப் பார்த்துக்கொண்டே இருந்து திடீரெனப் பலமான சப்தம் கொடுத்து காக்கையை விரட்டிவிட்டு பழத்தை வீட்டின்மேல் ஏறி எடுத்துக் கொள்வார்கள். காக்கைகள் கொண்டுவரும் பழம் மிகவும் சவையாக இருக்கும்.

எப்படியோ எந்தப் பாசனமும் தேவைப்டாமல் எந்த வறட்சிக்காலத்திலும் உயிர் வாழ்வதுமட்டுமல்ல கனிகளையம் கொடுக்கக்கூடிய கொடுக்காப்புளி மரமும் பழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்டுவிட்டது. இப்போது சிலபகுதிகளில் மட்டும் காணலாம்.

வர்த்தக ரீதியில் லாபம் தராத எதையும் ஒழிப்பது என்ற மனித விதியின்படி இதுவும் ஒரு நாள் காணாமல் போகக்கூடும்..?!

நன்றி: ஜயா சுபாஷ் கிருஷ்ணசாமி

விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களிலும் முக்கியமாகக் கிணற்று மேட்டிலும் இதை வளர்ப்பார்கள். இதற்குப் பாசனம் தேவை இல்லை. ஆனால் பாசன வாய்க்கால் ஓரங்
களில் இருப்பவை நன்கு செழித்து வளரும்.

Friday, November 23, 2012

கிழிந்தது போலீசின் முகத்திரை : தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவிகள் விடுதலை..............!!

கிழிந்தது போலீசின் முகத்திரை : தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவிகள் விடுதலை..............!!

1996ல் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் 2 முஸ்லிம்களுக்கு கீழ்கோர்ட்டில் வழங்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்து செய்ததுடன் உடனடியாக விடுதலை செய்யவும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீர் இஸ்லாமிய முன்னணி "JAMMU KASHMEER ISLAMIC FRONT" (JKIF) இயக்கத்தை சேர்ந்த மிர்சா நிசார் ஹுசைன் மற்றும் முஹம்மத் அலி பட் ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் முஹம்மத் நௌஷாத் என்பவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டனர்,

அதேநேரம் முஹம்மத் ஜாவீத் என்பவருக்கு கீழ் கோர்ட்டில் வழங்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனையை குறைக்க மறுத்து விட்டனர்,

இந்த வழக்கில் 10 முஸ்லிம்களை சிக்கவைத்த டெல்லி போலீசின் தகிடு தத்தங்களை கடுமையாக சாடியது டெல்லி உயர்நீதிமன்றம்,

 நீதியரசர்கள் ரவீந்திர பட், ஜி.பி.மிட்டல் ஆகியோர் போலீசுக்கு எதிராக சொன்ன கருத்துக்கள்:-

 இந்த வழக்கில் சாதாரண நடைமுறைகள் கூட பின்பற்றப்படவில்லை,

இவர்கள் தான் தவறு செய்தவர்கள் என்று (பரேட் நடத்தி) அடையாளப்படுத்தவில்லை, வழக்கு சம்மந்தப்பட்ட டெய்லி டைரியை கூட முறையாக பராமரிக்கவில்லை,

முக்கிய சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவில்லை என்பது போன்ற குறைபாடுகளையும் சுட்டிக்காட்டினர்.

வழக்கின் விபரம் :-

1996 மே 21 ந்தேதி மாலை 6.45 மணிக்கு வெடித்த குண்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்,

105 சாட்சியங்கள் உள்ளதாக கூறிய போலீஸ் ஒரு பெண் உட்பட 10 முஸ்லிம்களை கைது செய்தது,

1996 ஆகஸ்ட் 26 ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது,

2009 செப்டம்பர் 1ந்தேதி அடிஷனல் செஷன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு செப்டம்பர் 7 ந்தேதி முதல் அங்கு விசாரணை ஆரம்பமானது,

2010 ஏப்ரல் 8 ந்தேதி 6 நபர்களுக்கு தண்டனை அறிவித்தும் 4 நபர்களை விடுதலை செய்தும் தீர்ப்பளிக்கப்பட்டது,

மிர்சா நிசார் ஹுசைன், முஹம்மத் அலி பட், முஹம்மத் நௌஷாத் ஆகிய 3 நபர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது,

முஹம்மத் ஜாவீத் என்பவருக்கு ஆயுள் தண்டனையும் மற்றொருவருக்கு 7 ஆண்டு தண்டனையும், வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த பெண்ணுக்கு 4 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்கள் என தண்டனை விதிக்கப்பட்டது.

1996ல் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் 2 முஸ்லிம்களுக்கு கீழ்கோர
்ட்டில் வழங்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்து செய்ததுடன் உடனடியாக விடுதலை செய்யவும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீர் இஸ்லாமிய முன்னணி "JAMMU KASHMEER ISLAMIC FRONT" (JKIF) இயக்கத்தை சேர்ந்த மிர்சா நிசார் ஹுசைன் மற்றும் முஹம்மத் அலி பட் ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் முஹம்மத் நௌஷாத் என்பவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டனர்,

அதேநேரம் முஹம்மத் ஜாவீத் என்பவருக்கு கீழ் கோர்ட்டில் வழங்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனையை குறைக்க மறுத்து விட்டனர்,

இந்த வழக்கில் 10 முஸ்லிம்களை சிக்கவைத்த டெல்லி போலீசின் தகிடு தத்தங்களை கடுமையாக சாடியது டெல்லி உயர்நீதிமன்றம்,

நீதியரசர்கள் ரவீந்திர பட், ஜி.பி.மிட்டல் ஆகியோர் போலீசுக்கு எதிராக சொன்ன கருத்துக்கள்:-

இந்த வழக்கில் சாதாரண நடைமுறைகள் கூட பின்பற்றப்படவில்லை,

இவர்கள் தான் தவறு செய்தவர்கள் என்று (பரேட் நடத்தி) அடையாளப்படுத்தவில்லை, வழக்கு சம்மந்தப்பட்ட டெய்லி டைரியை கூட முறையாக பராமரிக்கவில்லை,

முக்கிய சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவில்லை என்பது போன்ற குறைபாடுகளையும் சுட்டிக்காட்டினர்.

வழக்கின் விபரம் :-

1996 மே 21 ந்தேதி மாலை 6.45 மணிக்கு வெடித்த குண்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்,

105 சாட்சியங்கள் உள்ளதாக கூறிய போலீஸ் ஒரு பெண் உட்பட 10 முஸ்லிம்களை கைது செய்தது,

1996 ஆகஸ்ட் 26 ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது,

2009 செப்டம்பர் 1ந்தேதி அடிஷனல் செஷன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு செப்டம்பர் 7 ந்தேதி முதல் அங்கு விசாரணை ஆரம்பமானது,

2010 ஏப்ரல் 8 ந்தேதி 6 நபர்களுக்கு தண்டனை அறிவித்தும் 4 நபர்களை விடுதலை செய்தும் தீர்ப்பளிக்கப்பட்டது,

மிர்சா நிசார் ஹுசைன், முஹம்மத் அலி பட், முஹம்மத் நௌஷாத் ஆகிய 3 நபர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது,

முஹம்மத் ஜாவீத் என்பவருக்கு ஆயுள் தண்டனையும் மற்றொருவருக்கு 7 ஆண்டு தண்டனையும், வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த பெண்ணுக்கு 4 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்கள் என தண்டனை விதிக்கப்பட்டது.

அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனைக் கொன்ற பின்னர் அவரை எப்படிக் கடலில் போட்டது அமெரிக்கா என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வெளியானது அமெரிக்காவின் ரகசிய இமெயில்கள். பின்லேடன் உடலைக் கழுவி, வெள்ளை ஷீட்டில் வைத்து பார்சல் கட்டி கடலில் கடலில் போட்ட அமெரிக்கா.

அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனைக் கொன்ற பின்னர் அவரை எப்படிக் கடலில் போட்டது அமெரிக்கா என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் பெட்எக்ஸ் பார்சல் நிறுவனத்தின் துணையுடன் பின்லேடனின் உடலை பார்சல் செய்து கடலில் போட்டுள்ளது அமெரிக்கா என்பது ரகசிய இமெயில்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

பின்லேடன் மரணத்திற்குப் பிந்தைய சம்பவங்கள் குறித்த முதல் பார்வையை இந்த ரகசிய இமெயில்கள் வெளிப்படுத்துவதாக உள்ளன. பின்லேடன் உடலை பார்சல் செய்வதில் பெட்எக்ஸ் பார்சல் நிறுவனம்தான் ஈடுபடுத்தப்பட்டதும் இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த இமெயில் பரிவர்த்தனை அமெரிக்க ராணுவ அதிகாரிகளுக்கிடையே நடந்ததாகும். தகவல் அறியும் சட்டத்தின் மூலம் இந்த தகவல்களை தற்போது பெற்று வெளியிட்டுள்ளனர்.

2011ம் ஆண்டு மே 1ம் தேதி பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க கடற்படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். ஆனால் பின்லேடனின் உடலை உலகின் கண்களுக்கு அமெரிக்கா காட்டவில்லை. மாறாக கடலில் புதைத்து விட்டதாக தெரிவித்தது. பின்லேனின் உடல் குறித்த புகைப்படங்களையும் கூட அது வெளியிட மறுத்து விட்டது.

இந்த நிலையில் சில ரகசிய இமெயில்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதில் ஒரு இமெயில் மே 2ம் தேதி ரியல் அட்மிரல் சார்லஸ் கோவட் என்ற மூத்த கடற்படை அதிகாரி அனுப்பியதாகும். அதில், எப்படி பின்லேடன் உடல் பார்சல் செய்யப்பட்டது, அடக்கம் செய்யப்பட்டது என்ற விவரம் உள்ளது.

அதாவது பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதும் அவனது உடலைக் கைப்பற்றிய கடற்படை வீரர்கள் உடலை முழுவதுமாக தண்ணீர் ஊற்றிக் கழுவித் துடைத்துள்ளனர். பின்னர் அதை ஒரு வெள்ளை ஷீட்டில் வைத்துக் கட்டியுள்ளனர். அதன் பின்னர் பெரிய பேக்கில் உடலைப் போட்டு பார்சலாக்கியுள்ளனர் என்று அந்த மெயிலில் கூறப்பட்டுள்ளது.

இன்னொரு மெயிலில், பின்லேடனின் உடல் அடக்கம் குறித்த விவரம் சிலருக்கு மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது.

அந்த மெயிலில் முற்றிலும் இஸ்லாமிய முறைப்படி பின்லேடன் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறுகையில், உடலை பேக்கிங் செய்த பின்னர் ஒரு ராணுவ அதிகாரி இஸ்லாமிய மத வாசகங்களை ஆங்கிலத்தில் படித்தார்.

அதை ஒரு உள்ளூர்க்காரர் உதவியுடன் அரபியில் மொழிபெயர்த்துச் சொல்லப்பட்டது. அதன் பின்னர் தயாராக வைக்கப்பட்டிருந்த சவப் பெட்டியில் உடலை வைத்து ஆணி அடித்து அதை கடலுக்குக் கொண்டு சென்றோம். அங்கு கடலில் அந்த சவப்பெட்டி போடப்பட்டது.

பின்லேடனின் உடல் அடங்கிய சவப்பெட்டி கடலில் போடப்பட்டபோது கடற்படை வீரர்கள் யாரும் அந்த இடத்தில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மெயில் அமெரிக்க பாதுகாப்புப் படை கூட்டு தலைமை அதிகாரி மைக் முல்லன், அமெரிக்க மத்திய கூட்டுப் பாதுகாப்புப் படை அதிகாரி ஜேம்ஸ் மேட்டிஸ் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பின்லேடன் உடலை பார்சல் செய்யும் பணியிலும், பின்னர் கடலுக்குக் கொண்டு செல்லும் பணியிலும் பெட்எக்ஸ் பார்சல் நிறுவனத்தை பயன்படுத்தியுள்ளனர். உடலைப் பார்சல் செய்த பின்னர் சாலை மார்க்கமாக லாரியில் வைத்து அமெரிக்க முகாமுக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
வெளியானது அமெரிக்காவின் ரகசிய இமெயில்கள். பின்லேடன் உடலைக் கழுவி, வெள்ளை ஷீட்டில் வைத்து பார்சல் கட்டி கடலில் கடலில் போட்ட அமெரிக்கா.

அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனைக்
 கொன்ற பின்னர் அவரை எப்படிக் கடலில் போட்டது அமெரிக்கா என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நவம்பர் 23
 
800 - பாப்பரசர் மூன்றாம் லியோ இழைத்தாகக் கருதப்படும் குற்றங்களை விசாரணை செய்ய மன்னன் ஷார்லெமான் ரோம் வந்து சேர்ந்தான்.

1248 - காஸ்டிலின் மூன்றாம் பேர்டினண்ட் மன்னனின் படையினர் செவில் நகரைக் கைப்பற்றினர்.

1499 - இங்கிலாந்தின் அரசாட்சிக்கு உரிமை கோரிய பேர்க்கின் வோர்பெக் லண்டன் கோபுரத்தில் இருந்து தப்பியோட முயல்கையில் கைதாகி தூக்கிலிடப்பட்டான். இவன் 1497 இல் நான்காம் எட்வேர்ட்டின் மகன் என உரிமை கோரி இங்கிலாந்தை முற்றுகையிட்டான்.

1889 - Juke Box எனப்படும் இசைத்தட்டு இயந்திரத்தைப் முதன் முதலில் கண்டுபிடித்து நிறுவிக் காட்டியவர் லூயிஸ் கிளாஸ். சான்பிரான்சிஸ்கோவில் நிகழ்ந்தது
1890 - நெதர்லாந்து மன்னன் மூன்றாம் வில்லியம் ஆண் வாரிசு இல்லாமல் இறந்தான். அவனது மகள் இளவரசி வில்ஹெல்மினா அரசியாவதற்கு ஏதுவாக சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

1936 - முதலாவது லைஃப் இதழ் வெளியிடப்பட்டது.

1955 - கொக்கோஸ் தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கைமாறியது.

1971 - மக்கள் சீனக் குடியரசின் பிரதிநிதிகள் முதற்தடவையாக ஐக்கிய நாடுகள் அவையில் சீனாவுக்காகப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.

1979 - மவுண்ட்பேட்டன் பிரபுவைக் கொலை செய்த குற்றத்துக்காக ஐரிஷ் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த தொமஸ் மக்மாகன் என்பவருக்கு டப்ளினில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

1985 - எகிப்திய பயணிகள் விமானம் கிரேக்கத்தில் இருந்து புறப்படும்போது கடத்தப்பட்டு மால்ட்டாவில் தரையிறக்கப்பட்ட போது எகிப்தியப் படைகள் விமானத்தைச் சுற்றி வளைத்தனர். முடிவில் 60 பேர் கொல்லப்பட்டனர்.

1990 - ஈழப்போர்: தமிழீழ விடுதலைப் புலிகள் மாங்குளம் இராணுவ முகாம் மீது தாக்குதலை நடத்தி அதனை முழுமையாகக் கைப்பற்றினர்.

1998 - கம்போடியத் தலைவர் ஹுன் சென்னுக்கும் இளவரசர் நொரொடோம் ரனாரிட்டுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.

2003 - வாரக்கணக்கில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து ஜோர்ஜிய அதிபர் எடுவார்ட் ஷெவர்நாட்செ பதவி விலகினார்.

2005 - லைபீரியாவின் தலைவராக எலென் ஜோன்சன்-சேர்லீஃப் தெரிவு செய்யப்பட்டார். ஆபிரிக்க நாடொன்றிண் முதலாவது பெண் தலைவர் இவராவார்.

2007 - அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது

வரலாற்றில் இன்று.

நவம்பர் 22

1963: அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ்.கென்னடி டல்லாஸ் நகரில் காரொன்றில் பயணம் செய்யும்போது துப்பாக்கிதாரியொருவரினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1986: 20 வயதான மைக் டைசன், ட்ரேவர் பேர்பிக்கை தோற்கடித்து உலகின் மிக இளம் அதிபார குத்துச்சண்டை சம்பியன் எனும் பெருமைக்குரியவரானார்.

1990: பிரித்தானிய பிரதமர் பதவியிலிருந்து மார்கரெட் விலகினார்.

2002: நைஜீரியாவில் உலக அழகுராணிப்போட்டியில் பங்குபற்றுபவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டனர்.

2003: உலகக்கிண்ணத் றக்பி தொடரின் இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்து இங்கிலாந்து அணி சம்பியனாகியது.

2005: ஜேர்மனியின் முதலாவது பெண் சான்ஸ்லராக ஏஞ்சலா மார்கெல் பதவியேற்றார்.

1574 - சிலியின் ஜுவான் பெர்னாண்டஸ் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
 
1908 - அல்பேனிய எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
 
1922 - துட்டன்காமுன் என்ற எகிப்திய பாரோ வின் 3,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமாதி கண்டுபிடிக்கப்பட்டது.
 
1925 - காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் இராஜ்ய மாநாட்டிலிருந்து பெரியார் வெளியேறிய நாள்
 
1935 - பசிபிக் பெருங்கடலைத் தாண்டி முதன்முறையாக விமானத் தபால்களை விநியோகிக்கும் பணியில் சைனா கிளிப்பர் என்ற விமானம் கலிபோர்னியாவை விட்டுப் புறப்பட்டது. (இவ்விமானம் நவம்பர் 29 இல் 110,000 தபால்களுடன் மணிலாவை அடைந்தது.)
 
1942 - இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனிய தளபதி பிரீட்றிக் பவுலஸ், ஸ்டாலின்கிராட்டில் தாம் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதாக ஹிட்லருக்கு தந்தி மூலம் செய்தி அனுப்பினான்.
 
1943 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கத் தலைவர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட், பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில், சீனத் தலைவர் சியாங் காய்-செக் ஆகியோர் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் சந்தித்தனர்.
 
1943 - லெபனான், பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
 
1956 - பதினாறாவது ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் தொடங்கியது.
 
1963 - அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எப். கென்னடி கொல்லப்பட் அதே நாளில் டெக்சாஸ் மாநில ஆளுநர் "ஜோன் கொனலி" படுகாயமடைந்தார். உதவி-ஜனாதிபதி லிண்டன் ஜோன்சன் அமெரிக்காவின் 36வது அதிபராக ஆனார்.
 
1968 - மதராஸ் என்றிருந்த மாநிலத்தின் பெயரைத் தமிழ் நாடு என்று மாற்ற லோக்சபா அங்கீகாரம் அளித்தது
 
1974 - ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றது.
 
1975 - பிரான்சிஸ்கோ பிராங்கோவின் மறைவை அடுத்து ஜுவான் கார்லொஸ் ஸ்பெயின் மன்னனானார்.
 
1986 - உலக ஹெவி வெயிட் குத்துச்சண்டைப்போட்டியில் மைக் டைசன், டிரெவர் பெர்டிக் என்பவரை வீழ்த்தி விருதைப் பெற்றார்.
 
1990 - மார்கரட் தாட்சர் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் பதவியைத் துறந்தார்.
 
2002 - நைஜீரியாவில் உலக அழகிப் போட்டியாளர்கள் மீது இடம்பெற்ற தாக்குதலில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
 
2003 - ஜோர்ஜியாவில் அதிபர் எடுவார்ட் ஷெவர்நாட்சேயின் எதிராளிகள் நாடாளுமன்றத்தைத் தம் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து அதிபரைப் பதவி விலகுமாறு கோரினர்.
 
2005 - ஜேர்மனியின் முதலாவது பெண் அதிபராக (சான்சிலர்) ஏங்கலா மேர்க்கெல் தெரிவு செய்யப்பட்டார்.
 
2005 - எக்ஸ் பாக்ஸ் 360 நிகழ்பட விளையாட்டு இயந்திரம் வெளியிடப்பட்டது.
 
2007 - இலங்கை அரசாங்கம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்குத் தடை விதித்தது.

Thursday, November 22, 2012

தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல்ஜப்பானில், மொபைல் போன் தயாரிப்பதில், முதல் இடத்தில் இருந்து வரும் ப்யூஜிட்ஸு நிறுவனத்துடன் இணைந்து, தண்ணீர் புகாத ஆண்ட்ராய்ட் மொபைல் போன் ஒன்றை, டாடா டொகோமா நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. ப்யூஜிட்ஸு எப்074 என அழைக்கப்படும் இந்த மொபைல் போனில் ஆண்ட்ராய்ட் பதிப்பு 4 பதியப்பட்டு இயங்குகிறது. 4 அங்குல வண்ணத்திரை, AMOLED டிஸ்பிளே, 1.4 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்நாப் ட்ரேகன் ப்ராசசர், 5 மெகா பிக்ஸெல் கேமரா, 1400 mAh திறன் கொண்ட பேட்டரி, 512 எம்பி ராம் நினைவகம், 1 ஜிபி உள் நினைவகம், வைபி மற்றும் புளுடூத் ஆகியன இதன் இயக்க சிறப்புகளாகும்.

இவற்றைக் காட்டிலும் மிகச் சிறப்பான இதன் தன்மை, தண்ணீருள் சென்று இதனை இயக்கலாம் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது. நீருக்குள் இருந்தவாறே போட்டோ எடுக்கலாம். ஸ்கிராட்ச் எதுவும் விழாத வகையில் இதன் ஸ்கிரீன் அமைந்துள்ளது. இதன் பேட்டரி 1,400 mAh திறனுடன் உள்ளது. இதன் தடிமன் 6.7 மிமீ.; எடை 105 கிராம்.

சூரிய ஒளியில் இந்த போனின் திரை அதன் டிஸ்பிளே தன்மையை மாற்றிக் கொள்கிறது. இதில் இயங்கும் Motion Conscious Audio system என்னும் தொழில் நுட்பம், சுற்றுப்புறச் சூழ்நிலையை உணர்ந்து, வரும் அழைப்பின் ஒலியின் தன்மையை மாற்றுகிறது. இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூ.21,900.

தொடக்கத்தில் இது டாட்டா டொகோமோ நிறுவன வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இதனை வாங்கும் டாட்டா டொகோமோ வாடிக்கையாளர்களுக்கு பிரிமியம் எண் இலவசமாக வழங்கப்படுகிறது. 3ஜி டேட்டா வரையறை இன்றி 1ஜிபி வரை பயன்படுத்தலாம். ரூ. 899 ஜி.எஸ்.எம். போஸ்ட் பெய்ட் இணைப்பினை வாங்குவோருக்கு, எந்த நெட்வொர்க் இணைப்பில் உள்ள எண்களுக்கும் எஸ்.டி.டி. மற்றும் உள்ளூர் அழைப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

மற்ற திட்டத்தில் இணைபவர்களுக்கு, பிரிமியம் எண், மூன்று மாதத்திற்கு 3ஜி அலைவரிசையில் 1 ஜிபி டேட்டா இலவசம்.

ஜப்பான் நாட்டின் மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள், இது போல பல சிறப்புகள் கொண்ட போன்களைத் தயாரித்தாலும், சோனி தவிர மற்ற நிறுவனங்கள், வெளிநாடுகளில் விற்பனையில் வெற்றி பெற இயலவில்லை. ஷார்ப் மற்றும் பானாசோனிக் நிறுவனங்கள் என்ன முயன்றும் வெற்றி பெற இயலவில்லை. FujitsuF074/ujitsuF074Waterproof3GPhone

ஆனால், ப்யூஜிட்ஸு நிறுவனம், இங்கு மொபைல் போன் சேவை வழங்கும் டாட்டா டொகோமோ வழியாக நுழைந்துள்ளது. டாட்டா டொகோமோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை பெரிய அளவில் இல்லை என்றாலும், போனின் சிறப்பான அம்சங்கள், ப்யூஜிட்ஸு நிறுவனத்திற்கு பெயர் வாங்கித் தரலாம்.

மொபைல் மலர்

புறா வாழாத பகுதி எது?
-
41) புறா வாழாத பகுதி எது?
-
அண்டார்டிகா
————————————————-
-
42) பறக்கும் அணில் எங்கு காணப்படுகிறது?
-
வட இந்தியக்காடுகளில்
-
—————————————————–
-
43) உலகிலேயே மாடுகள் எங்கு அதிகம்
-
இந்தியாவில்
-
———————————————————
-
44) ஒட்டகத்தின் கர்ப்ப காலம் எவ்வளவு?
-
12 மாதங்கள்
-
————————————————————
-
45) தேசிய அறிவியில் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது..?
-
பிப்ரவரி 28
-
————————————————————

46) கொசு கடற்கரை என அழைக்கப்படும் நாடு எது?
-
நிகாரகூவா
-
=====================================
-
47) பாரத மாநில வங்கியின் முந்தைய பெயர் என்ன?
-
பாரத இம்பீரியல் வங்கி
-
=========================================
-
48) பாரதியாரின் நூல்களை முதன் முதலில் வெளியிட்டவர் யார்?
-
பரலி – சு.நெல்லையப்பர்
-
=========================================
-
49) சரிஸ்கா புலிப்பூங்கா எங்குள்ளது?
-
மத்தியப்பிரதேசம்
-
===========================================
-
50) கடற்படை தினமாக அனுசரிக்கப்படும் நாள் எது?
-
டிசம்பர் 4

மக்களின் திடுக்கிடும் சந்தேகங்கள்...............!!

மக்களின் திடுக்கிடும் சந்தேகங்கள்...............!!

விடை தெரியாத கேள்விகள்.............???

இன்றைய தினம் மகாராஷ்டிரா மாநிலத்தில் கூலிப்படை தீவிரவாதியான அஜ்மல் கசாபை தூக்கில் போடப்பட்டது...... இந்த தூக்கு தண்டனையை  காவல்துறையின் இரகசிய பிரிவு அதிகாரிகள் தூக்கிலிட்டதாக கூறப்படுகிறது.....

பாகிஸ்தானிலிருந்து வரவழைக்கப்பட்ட கூலிப்படை தீவிரவாதிகள் மும்பையிலுள்ள தாஜ் ஓட்டலை தாக்கினர் அந்த தாக்குதலில் 160 க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்,

அந்த தாக்குதலின் போது கூலிப்படை தீவிரவாதிகள் மீது எதிர்தாக்குதல் நடத்திய மகாராஷ்டிரா மாநில தீவிரவாத தடுப்பு பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்கரே அவர்களும் கொல்லப்பட்டார்கள்,

அந்த எதிர்த்தாக்குதலில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், சிலர் தப்பியோடினர்..... அந்த தீவிரவாதிகளில் சிக்கிய ஒருவன் தான் இந்த அஜ்மல் கசாப்    

அந்த அஜ்மல் கசாபிடம் 3 ஆண்டுகளாக விசாரணை செய்து இப்பொழுது தூக்கிலிடப்பட்டுள்ளது 

இந்நிலையில் இது பற்றிய திடுக்கிடும் சந்தேகங்கள் மக்கள் மனதில் எழுந்துள்ளது......   

அவைகளில் அது பற்றி விடை தெரியாத கேள்விகள் :-     

1) 3 ஆண்டுகளாக காவல்துறை விசாரணை மேற்கொண்டதே....  அவனையும், அவனது கூலிப்படை தீவிரவாதிகளையும் இந்தியாவிற்குள் கொண்டு வந்தது யார்..........?   

2) கடல் வழியாக வந்தார்கள் என்று கூறும் காவல்துறை கடல் பகுதிகளை பாதுகாக்க இந்தியாவில் கடற்படையே இல்லையா.......? 

3) காவல்துறையின் இரகசிய பிரிவு அதிகாரிகள் யாருக்கும் தெரியாமல் தூக்கிலிட்டார்கள் என்று கூறும் போது இன்றைய தினம் கருத்து தெரிவித்த சோ அவர்கள் இது ஒன்றும் புதிய செய்தி இல்லையே என கூறியுள்ளார், 

புதிய செய்தி இல்லையென்றால் தீவிரவாதி அஜ்மல் கசாபை இன்றைய தினம் தூக்கிலிடப்போகிறார்கள் என்ற இரகசியம் "சோ" வுக்கு எப்படி தெரிந்தது..........?

4) 3 ஆண்டுகளாக 30 கோடி ரூபாய் செலவு செய்து விசாரணை செய்து வந்த அஜ்மல் கசாபை அதே மும்பை நகரத்தின் முக்கிய புள்ளியான பால்தாக்கரே மரணித்து 3 நாட்களில் தூக்கிலிடும் மர்மம் என்ன...............? 

5) பால்தாக்கரே உயிருடன் இருக்கும் வரை அஜ்மல் கசாப் உண்மையை வெளியில் சொல்ல மாட்டான், பால்தாக்கரே மரணத்திற்கு பிறகு உண்மையை உளறிவிடுவானோ என்ற அச்சத்தின் காரணமாக அதிரடியாக தூக்கிலிட்டதன் மர்மம் என்ன...........?   

6) அந்த தாக்குதலின் போது முக்கிய அதிகாரியும், காவி பயங்கரவாதிகளின் உண்மை முகத்தை வெளிக்காட்டியவருமான மகாராஷ்டிரா மாநில தீவிரவாத தடுப்பு பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்கரே அவர்களை கொலை செய்துள்ளார்கள், அப்படிப்பட்ட உயரிய, நேர்மையான அதிகாரியை கொலை செய்தும் அது சம்பந்தமாக எந்த வித துப்பும் கிடைக்கவில்லை என்றால்.....   

அந்த அதிகாரி மும்பைக்கு தேவையில்லை.... அவரை விட்டு வைத்தால் நம்முடைய உண்மை முகத்தை வெளிக்காட்டிவிடுவார் என்ற நெருக்கடியின் காரணமாக ஒருவரை கொன்றால் கொலை, பலரை கொள்ளும் போது சேர்த்து ஹேமந்த் கர்கறேவை கொலை செய்தால் அந்த ஆவணங்களை இலகுவாக மூடிவிடலாம் என்ற எண்ணத்தின் அடிப்படியில் திட்டமிட்டு நடத்திய மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதலின் பின்னணியில் உள்ள பிரபல தாதா யார்.........?

7) ஹேமந்த் கர்கரே மரணித்து சில மாதங்கள் கழித்து அவரது மனைவிக்கு நரேந்திர மோடி அன்பளிப்பு தொகையாக 2 கோடி ருபாய் கொடுக்கும் போது அதை வாங்க மறுத்ததன் பின்னணி என்ன..........?

8) ஹேமந்த் கர்கரே அவர்கள் மரணிப்பதற்கும் ஒரு வாரத்திற்கும் பிறகு இந்தியாவை அச்சுறுத்தும் காவி பயங்கரவாதம் எனும் தலைப்பில் இந்துத்துவ காவி பயங்கரவாதிகளின் உண்மைகளை முக்கிய புள்ளிகளை வைத்து புத்தகம் வெளியிட முடிவு செய்து வைத்திருந்தார்,

அந்த புத்தகம் வெளியிடக்கூடாது அவ்வாறு புத்தகத்தை வெளியிட்டால் யாருக்கு ஆபத்து உள்ளதோ அவர்கள் தான் ஹேமந்த் கர்கரேயை திட்டம் தீட்டி கொலை செய்துள்ளார்கள், மேலும் அனைத்து உண்மைகளும் ஹேமந்த் கர்கரே அவர்களின் மனைவிக்கு தெரிந்திருப்பதால் நரேந்திர மோடி கொடுத்த 2 கோடி ரூபாயையும் முகத்திற்கு நேராகவே வாங்க மறுத்துள்ளதை மக்கள் சந்தேகிக்கின்றனர்

விடை தெரியாத கேள்விகள்.............???

இன்றைய தினம் மகாராஷ்டிரா மாநிலத்தில் கூலிப்படை தீவிரவாதியான அஜ்மல் க
சாபை தூக்கில் போடப்பட்டது...... இந்த தூக்கு தண்டனையை காவல்துறையின் இரகசிய பிரிவு அதிகாரிகள் தூக்கிலிட்டதாக கூறப்படுகிறது.....

மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது .(((இதை படிக்க 5து நிமிடம் ஒதுக்குங்கள்)))

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந
்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான்"நாவலன் தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்"குமரிக்கண்டம்".ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலைநாடு,ஏழுபின்பலைநாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர்"இறையனார் அகப்பொருள்"என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள"தென் மதுரையில்"கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து,"பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம்"கபாடபுரம்"நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன்"அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில்"தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய"மதுரையில்"கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன்"அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள்"ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!..இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.வரலாற்று தேடல் தொடரும்.........!!

தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே !

இது போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தயக்கம் வேண்டாம் தோழர்களே !
முடிந்தவரை அனைவரும் இதனைப் படித்துவிட்டு நண்பர்களுடன் உடனே பகிர்ந்து கொள்ளுங்கள் !
நம் பக்கத்தில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்களில் குறைந்தப்பட்சம்ஐம்பது பேராவது இதனைப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் !
தம்மைத் தமிழன் என்று எண்ணுபவன் எல்லாமே இதனைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் .

நன்றி !

Wednesday, November 21, 2012

முஹம்மதின் படை தோற்பதில்லை.

உன் ஆயுதங்களுக்கு போர் நாகரீகத்தைதை
கற்றுக்கொடுக்க தவறிவிட்டாய்
உன் அறிவில் குருதிவெறி நிரம்பிக்கிடக்கிறது
உன் இலக்கு எம் இனத்தை கொன்றொழிப்பதுதான்

நீ பெற்றது நிரந்தர வெற்றியுமல்ல
நாம் பெறுவது நிரந்தர தோல்வியுமல்ல
இது இறைவனால் நிர்ணயிக்கபட்ட ஆட்டம்
சிரம் பணியும் இடங்களை தகர்த்தெறிவதால்
அல்லாஹ் வெட்கித்து தலை குனிவதில்லை

விரோதிகளை அழிப்பது இறைவனுக்கு இமைபொழுது
மிக அதிகமானது
எம் இனத்தின் உலமாக்களுக்கும் உமறாக்களுக்கும்
ஒரு சோதனை

ஏகத்துவவாதியையும் உலகத்துவவாதியையும் பிரித்தறிய
இறைவனின் பலப்பரீட்சை
இஸ்லாம் தீவிரவாதம் என்றால் இன்று நீ இல்லை
உனக்கொரு தேசம் இல்லை

வீர வாரிசுகளால் பூமி நிரம்பியிருக்கும்
ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்னரே உமது சரித்திரம்
சமாதியாகி இருந்திருக்கும்

இஸ்லாம் என்பது சாந்தி
உன் அநாகரிகத்தை இதுதான் மிகைத்து நிர்க்கின்றது
ஆயினும் முஹம்மதின் படை தோற்பதில்லை

விரைவில் முஹம்மதின் படை நோக்கும்
இவர்களின் பாசையில் போராட்டம் என்பது
போரில் எதிரியை "ஆட்டம்" காண செய்வதுதான்

உன் அதிகார வெறியின் கடைசி மூச்சு தொலைவிலில்லை
அக்கினி குண்டுகளுக்கு அடிபணிய மறுத்து
அசத்திய சாம்ராஜியத்தை துகளாக்கும் வீரமுழக்கம்
உன் செவிகளைநோக்கி வருகிறது

முஹம்மதின் படைக்கு மரணம் சுவையானது
அணுகுண்டும் தீக்குச்சியின் புகை போலதான்
அங்கு வீசுவது உன் போன்று பிண வாடை அல்ல
சொர்க்கத்தின் மண வாடை

விளை நிலத்தில் களைகள் பிடுங்கப்படும்போது
சில பயிர்களும் சேதம் அடைவது போல
எம் இனத்தின் மரணத்தில் உன் வெற்றி தீர்ப்பை
எழுதிவிட முடியாது

இருதயம் நிலைகுலையாத முஹம்மதின் படைக்காய்
நீ தயாராகு
எமது கணத்தாக்கம் சோடியமும் பொட்டாசியமும் அல்ல
அல்லாஹுவும் முஹம்மதுமாகும்

இன்னும் அல்லாஹுவின் படைப்புக்கள்
அவன் கட்டளைக்கு செவி சாய்த்து கொண்டது
உலக வரைபடத்தில் உன் நேச தேசங்கள்
அழியும் நாட்களும் தூரம் இல்லை

உனது வரலாறு அழிக்கப்பட வேண்டியது அல்ல
திருத்தி எழுதப்படவேண்டியது
முதற்பக்கத்தில் எழுதிக்கொள் "முஹம்மதின் படை தோற்பதில்லை"

ஆவணங்கள் தொலைந்தால்… எப்படி திரும்பப் பெறுவது?

எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.இன்ஷூரன்ஸ் பாலிசி!யாரை அணுகுவது..?

பாலிசியை விநியோகம் செய்த கிளையை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.

எவ்வளவு கட்டணம்?

ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.நடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.
மதிப்பெண் பட்டியல்!
யாரை அணுகுவது..?

பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.

எவ்வளவு கட்டணம்?

உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.

மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.

கால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.நடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து ‘கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.
ரேஷன் கார்டு!
யாரை அணுகுவது..?

கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை

எவ்வளவு கட்டணம்?

புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.நடைமுறை: சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.
டிரைவிங் லைசென்ஸ்!
யாரை அணுகுவது?

மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.

எவ்வளவு கட்டணம்?

கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).

கால வரையறை: விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.நடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.
பான் கார்டு!
யாரை அணுகுவது?

பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.

எவ்வளவு கட்டணம்?

அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.

கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.நடைமுறை: பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
பங்குச் சந்தை ஆவணம்!
யாரை அணுகுவது?

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண்.

எவ்வளவு கட்டணம்? தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.நடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.
கிரயப் பத்திரம்!
யாரை அணுகுவது..?

பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்? ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.

கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.நடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.
டெபிட் கார்டு!
யாரை அணுகுவது..?

சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

கணக்குத் தொடர்பான விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.100.

கால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள்.நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.
மனைப் பட்டா!
யாரை அணுகுவது..?

வட்டாட்சியர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?

நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.20.

கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.நடைமுறை: முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.
பாஸ்போர்ட்!
யாரை அணுகுவது..?

மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.4,000.

கால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.நடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.

கிரெடிட் கார்டு!

யாரை அணுகுவது?

நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).

கால வரையறை: 15 வேலை நாட்கள்.நடைமுறை : கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும். தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்.

மன வேகத்தை அளந்த முதல் ஆய்வாளன் தமிழன் :

மன வேகத்தை அளந்த முதல் ஆய்வாளன் தமிழன் :

கணக்கதிகாரம் புத்தகம் 15 ஆம் நூற்றாண்டில் காரி என்பவரால் தோன்றிய நூல் இதை தமிழரின் கணித கோட்பாடுகள் என்றே உரைக்கலாம். இது தற்கால கணித முறைகளில் இருந்து முழுவதும் மாறுபட்டு விளக்கப்பட்டுள்ளது . தூரம், காலம், நேரம், எடை போன்ற அணைத்து அளவுகளும் மற்ற பொருட்களுடன் ஒப்பிட்டு அனைவருக்கும் புரியும்படி விளக்கப்பட்டுள்ளது .

இதில் நீட்டலளவை (தூரத்தை) அளக்கும் ஒரு அட்டவனையை கண்டேன், அதில் "யோசனை" என்ற ஒரு அளவை காணமுடிகிறது . அதைப் பற்றிச் சற்றே யோசித்த வாரே இருந்தேன். அந்த யோசனை அளவை பற்றி ஒரு யோசனை கிட்டியது. இந்த கணக்கதிகரத்தில் அணைத்து அளவுகளும் ஒரு புற பொருளுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றனர். ஆக, யோசனை என்று ஒரு அளவு எப்படி இருக்கும் என்று கணித்து பார்க்க எண்ணினேன்.

1850 ஆம் வருடம் "ஹெர்மன் வோன் ஹெல்ம்வோல்ட்ச" ( Hermann von Helmholtz ) என்ற புகழ் பெற்ற அறிவியலாளர் ஒரு தவளையின் கால்களில் மின்சாரத்தை அளக்கும் கருவியை பொருத்தி அதன் மனதின் வேகத்தை அளக்க முடியும் என்று நிருபித்தார்.

அதற்கு பின்பு வந்தவர்கள் அதன் சரியான மனதின் வேகத்தின் அளவை கண்டுபிடித்தனர் (Speed of Thought). அவை 50 மீட்டர் /நொடி என்று அளவிட பட்டது/ எனினும் வேகமாக கடக்கும் தசைகள் இதே தகவலை 100 மீட்டர் /நொடி என்ற அளவிலும் கடக்குமாம்.

சரி இவை ஒரு பக்கம் இருக்க அந்த யோசனை என்ற அளவையும் தற்போதிய கணித அளவையும் ஒப்பிட்டுப் பாப்போம்.

1 மொழம் = 46.6666 சென்டிமீட்டர் (Cm )
1 சிறுகோல் = 559.9992 சென்டிமீட்டர் (Cm )
1 கூப்பிடுதூரம் = 279999.6 சென்டிமீட்டர் (Cm )
1 காதம் = 1119998.4 சென்டிமீட்டர் (Cm )
1 யோசனை = 4479993.6 சென்டிமீட்டர் (Cm )

சென்டிமீட்டரை கிலோமீட்டராக மாற்றினால்

1 யோசனை = 44.799936 கிலோமீட்டர் (இது காலத்தை குறிக்காத அளவு)

இப்பொழுது அவர்கள் கூறியபடி 50 மீட்டர்/நொடி என்று கால அளவுடன் கணக்கிட்டால்

50 மீட்டர்/நொடி என்பதை கிலோமீட்டர் கணக்கில் பார்த்தல்

180 km/hr

எனினும் இவர்கள் அறிவித்த இந்த அளவு உணர்ந்து, சிந்தித்து, முடிவெடுத்து, செயல்படுதல் என்ற நான்கு செயல்பாட்டை ஒருகிணைந்த அளவே. இங்கு யோசனை என்ற அளவு சிந்தித்தல் என்ற பகுதியில் வரும். ஆகவே,

180 / 4 = 45 கிலோமீட்டர் / hr என்றே வருகிறது .

45 கிலோமீட்டர் / hr = 1 யோசனை

எனவே காலத்தைக் குறிக்காத ஒரு யோசனையின் அளவு இவர்கள் அறிவித்த அளவுடன் பொருந்துகிறது.

இதே போல்,

நூற்று ஐம்பதாயிரம் யோசனை = 1 கதிரவநியங்குகிற மட்டு (6719990.4 km)
இரண்டு கதிரவநியங்குகிற மட்டு = 1 விண்மீன் மண்டலம் (13439980.8 Km )

இந்த அளவுகளும், நவீன அறிவியலில் கண்டுபிடிக்கப்பட்ட அளவுகளிலும் வேறுபாடு இருந்தாலும். முதல் முயற்சி என்றும் தமிழனின் சொந்தமாக இருக்கிறது. இன்றளவும் ஆய்வாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளில் முதல் வெற்றி காண்பது கடினந்தான்.

இப்படி ஆயிரம் அதிசயங்களைப் புதைத்து வைத்துருக்கும் நம் தமிழரின் அறிவின் அதிசயத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லிப் பெருமிதம் கொள்வோம்.

நன்றி
கி.கோகுல கிருட்டிணன்

வரலாற்றில் இன்று

நவம்பர் 21

1272: இங்கிலாந்தில் மூன்றாம் ஹென்றி இறந்ததையடுத்து அவரின் மகன் எட்வர்ட்ஸ் மன்னரானார்.

1783: பாரிஸ் நகரில் ஜீன் பிரான்கோயிஸ் பிலாட்ரே டி ரோஸியரும் பிரான்ஸிஸ்கோ மார்கியூஸும் முதலாவது வெப்ப வாயு பலூன் பயணத்தை மேற்கொண்டனர்.

1877: தோமஸ் அல்வா எடிஸன் போர்னோகிராவ் ஒலிப்பதிவுக் கருவியை கண்டுபிடித்தமை குறித்து அறிவித்தார்.

1922: அமெரிக்காவில் ஜோர்ஜியா மாநிலத்தைச் சேர்ந்த ரெபேக்கா லடிமேர் பெல்டன் எனும் பெண் அந்நாட்டின் முதலாவது செனட்டராக பதவிப்பிரமாணம் செய்தார்.

1942: அமெரிக்கப் பெருநிலப்பரப்பையும் கனடாவுக் ஊடாக அலாஸ்கா மாநிலத்தையும் இணைக்கும் 2000 கிலோமீற்றருக்கும் அதிக நீளமான அலாஸ்கா நெடுஞ்சாலை நிர்hமாணித்து முடிக்கப்பட்டது.

1962: சீன - இந்திய யுத்தத்தில் சீனா ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்தம் செய்தது.

1971: பங்களாதேஷ் சுதந்திரப் போரில் முதல் சமர்களில் ஒனறான காரிபூர் சமரில் பாகிஸ்தான் படையினரை முக்திபாஹினி கெரில்லாக்களின் உதவியுடன் இந்திய படையினர் தோற்கடித்தனர்.

1979: பாகிஸ்தானில் அமெரிக்கத் தூதரகம் தீக்கிரையாக்கப்பட்டது. 5 பேர் பலி.

1980: அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாநிலத்தில் கேளிக்கை விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் 87 பேர் பலி.

1995: பொஸ்னியா - ஹேர்சகோவினா மோதல்களுக்கு சமாதான தீர்வுகாண சேர்பிய, குரோஷிய, பொஸ்னிய தலைவர்கள் அமெரிக்காவில் வைத்து இணங்கினர்.

1996: நேட்டோவில் இணையுமாறு பல்கேரியா,எஸ்டோனியா, லத்வியா, லிதுவேனியா, ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா ஆகியவற்றுக்கு நேட்டோ அழைப்பு விடுத்தது.

Tuesday, November 20, 2012

உடற்பயிற்சி தரும் உற்சாகம்.

உடற்பயிற்சியின்போது நம் உறுப்புகள் நம் கட்டுப்பாட்டிற்குள் இயங்குகின்றன, அதனால் உடலுக்கு நலமும் பலமும் வளமும் மிகுதியாக கிட்டுகின்றன.
பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக அமையும். இடை குறுகலாகவும், உடலில் பொலிவூட்டும் நிறம் அமையும். கண்களின் ஒளி மிகும். குரல் இனிமையாக, எடுப்பாக இருக்கும். செயலாற்றக் கூடிய சக்தியை உடல் பெறும். உடல் தசைகள் உருண்டு திரண்டு செழுமையுறும்; உள்ளூறுப்புகள் தூய்மைபட்டு வலிமை பெறும். நரம்புகள் வலிமை பெறும்; தொடைத் தசைகளும் கெண்டை கால்களும், தசைகளும் சீர்பட்டு ஒழுங்காகும்.
 
கை, கால், கணுக்கால், மார்பகம், இடுப்பு ஆகிய இடங்களில் தேவையான அளவு தசைகள் அமையும். கன்னத்திலேதொங்குகின்ற தசை, தோல்களிலேகனத்து தடித்திருக்கின்ற தசை, விலா எலும்புகளுக்குக்கீழே விரிந்து வளர்ந்து அடர்ந்திருக்கின்ற தசை ஆகியன மறையும். ஊளைச் சதையை ஒழிப்பது போலவே ஒல்லியாய் இருப்பவரின் உடலில் போதுமான தசைகள் அமைய உடற்பயிற்சி உறுதுணை செய்யும். உடல் எடை அளவோடு அமையும்.
 
மூங்கிலைப் போன்ற உருண்டு திரண்ட தோள்கள் உருவாகும்; நடையில் நளினம் மலச்சிக்கலைத் தவிர்க்கும்.மனத்தை மகிழ வைக்கும்; சுறுசுறுப்போடு இயங்கும் ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் தரும். இரத்த ஒட்டத்தை பெருக்கி உடலை வளம் பெறச் செய்யும். அடிக்கடி ஏற்படும் தலைவலி அறவே நீங்கும்.
 
இத்தனைக்கும் மேலாக எடுப்பும், சிறப்பும் மிகுந்த உடலமைப்பைத் தந்து,வாழ்வின் இன்பத்தை அனுபவிக்கத் தூண்டும்; நல்லஉடலில் நல்ல மனம் என்பார்கள், அந்த நல்ல மனம் அமைய வழி வகுக்கும். 
முத்தான மூன்று பயிற்சிகள் இதோ!
 
பயிற்சி 1
ஓரடி அகளம் இடைவெளி இருக்குமாறு கால்களை விறைப்பாக வைத்து, இடுப்பின் இருபுறமும் இருகைகளையும் ஊன்றி நிமிர்ந்து நிற்க வேண்டும்.மூச்சை நன்றாக உள்ளே இழுக்கவும், சற்று நேரம் கழித்து மூச்சினை வெளியே விட வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும்.
 
பயிற்சி 2
முதல் பயிற்சியை போல் நிற்கும் நிலையில் மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ளவேண்டும். கால்களை உயர்த்தி, முன் பாதங்களில் நிற்க வேண்டும். சற்று நேரம் கழித்து முன் நிலைக்கு வந்து மூச்சை விட வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும்

பயிற்சி 3
முதல் பயிற்சியை போல் இருகைகளையும் தொடையின் பக்கவாட்டில் தொங்க வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டும். கைகளை பக்கவாட்டில் தோள் அளவுக்கு உயர்த்த வேண்டும்.சற்று நேரம் கழித்து முன் நிலைக்கு வந்து மூச்சை விடவேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும்.மூச்சை இழுக்கும்முக்கியத்துவத்தை அறிவோம் அதனை முறையாக கற்று கொள்ளப்பயிற்சிகளைத் தெரிந்து கொள்ளவேண்டும். நிமிர்ந்த மார்பு வாய்க்கும். மார்பகங்கள் செழிப்பாய் இருக்கும் . இடை குறுகும், தோல் அழகிய நிறம் பெறும். கண்கள் ஒளியுடன் திகழும். உடலுக்கு மிகுந்த சக்தி கிட்டும்.
ஆகவே, பயிற்சியை செய்யும் போது மூச்சை இழுத்துவிட வெளிவிடுகின்ற முறையைச் சரிவரக் கற்றுக் கொள்ள வேண்டும்.

டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு! உணவே மருந்து

பெற்றோர் சொல்வதே வேதம்... வீடுதான் உலகம் என்றிருந்த பிள்ளைகளுக்கு, டீன் ஏஜில் அடியெடுத்து வைத்ததும், காட்சிகளும் கனவுகளும் மாற ஆரம்பிக்கின்றன. உடலும் மனதும் புரியாத புதிர்களாகின்றன. அந்தரங்கம் பற்றிய ஆர்வம் தலை தூக்குகிறது. அழகைப் பற்றிய தேடல் அதிகமாகிறது. டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கிற ஆண், பெண் பிள்ளைகளின் சிந்தனை, செயல், புறத்தோற்றம், ஆரோக்கியம் என எல்லாவற்றையும் தீர்மானிப்பதில், அந்த வயதில் அவர்கள் உட்கொள்கிற உணவுகளுக்கே முதலிடம்! அது மட்டுமில்லை... வாழ்நாள் முழுக்க அவர்களது ஆரோக்கியத்தைப் பேணி காப்பதற்கான அஸ்திவாரமும், இதுவே!
குழந்தைத்தன்மை கொஞ்சூண்டுமிச்சமிருக்கிற டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு, அந்தப் பருவத்தின் தொடக்கத்தில் முதலில் கொடுக்க வேண்டியது கால்சியமும் இரும்புச் சத்தும் நிறைந்த உணவுகள்.
கீரையின் மூலம் கிடைக்கிற இரும்பும் கால்சியமும் இவர்களுக்கு மிகச்சிறந்த பலன்களைக் கொடுக்கும். மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, வெந்தயக்கீரைகள் அடிக்கடி சேர்த்துக் கொள்ளப்பட வேண்டியவை. கீரையில் உள்ள குளோரோபில் சரும நிறத்தைக் கூட்டி, அழகைத் தரும். உடலில் கால்சியம் குறையும் போது, சோர்வு உண்டாகும். வியர்வை அதிகமாக வெளியேறினால் கூட, கால்சியம் வீணாவதாகவே அர்த்தம். அதை ஈடுகட்ட, பேரீச்சம்பழம், காய்ந்த திராட்சை, அத்தி, மாதுளை, சாத்துக்குடி போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
குழந்தைகளை வெயிலே படாமல், ஏசி-க்குள்ளேயே பொத்திப் பொத்தி வளர்க்கும் பெற்றோரும் உண்டு. டீன் ஏஜில் அதெல்லாம் சரிப்படாது. 13 வயதுக்குப் பிறகு வைட்டமின் டி என்கிற சத்து அவசியம் தேவை. எதிர்ப்புத் திறனுக்கு அதுதான் ஆதாரம். உடலில் கால்சியம் சேர்வதற்கும், வைட்டமின் டியின் பங்கு மகத்தானது.
என்னதான் உணவின் மூலம் கால்சியம் சேர்ந்தாலுமே, அதற்கு மூலமான வைட்டமின் டிஆனது, சூரிய வெளிச்சத்திலிருந்து மட்டும்தான் கிடைக்கும். ‘வெயில்ல போனா கருத்துடுவே...உடம்புக்கு ஆகாது’ என்றெல்லாம் பிள்ளைகளை நிழலோட்டமாக வளர்க்காமல், பள்ளி உள்பட வெளியிடங்களுக்கு சைக்கிளில் செல்லப் பழக்குங்கள். வெயில் பட விளையாட அனுமதியுங்கள்.
ஆஸ்தான நடிகை, நடிகரைப் பார்த்து, அவர்களைப் போலவே கட்டுக்கோப்பான உடல்வாகுக்கு ஆசைப்படுவதை இன்று டீன் ஏஜ் ஆண், பெண்களிடம் அதிகம் பார்க்கிறோம். 13 வயதுப் பெண் குழந்தைக்குக்கூட, எடையைக் குறைக்க வேண்டிய கட்டாயம்! அதற்காக டயட் என்கிற பெயரில் பட்டினி! ஆண் பிள்ளைகளுக்கோ 6 பேக், 8பேக் மோகத்தில் அதே கட்டாயம்! இது மிகவும் தவறு.உடலுக்குத் தேவையான சத்துகளைக் கொடுக்காமல், எடையைக் குறைக்கிற நோக்கத்தில், தவறான உணவுப் பழக்கங்களை மேற்கொள்வது உடலை பலவீனப்படுத்தி, வளர்ச்சியை பாதிக்குமே தவிர, வேறொன்றும் செய்யாது.
எல்லாவற்றிலும் நாகரிகத்தைவிரும்பும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு உணவிலும் அதே ஆர்வம். பீட்சாவும் பர்கரும் சாப்பிடுவதுதான் அவர்களை நாகரிகமானவர்களாகக் காட்டுவதாக நினைப்பு. அந்த மாதிரி உணவுகள் அழகு, ஆரோக்கியம் என இரண்டுக்குமே எதிரிகள். மிளகு, சீரகம், வெந்தயம், பூண்டு சேர்த்த உணவுகள் தினமுமே எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவை. மிளகு, நரம்புகளைப் பலப்படுத்தி, நினைவாற்றலுக்கு உதவும். சீரகம், உடலைக் குளிர வைத்து, முகப்பருவை விரட்டும். வெந்தயம், கடுகு, இஞ்சி, எள், கருஞ்சீரகம், பப்பாளி, அன்னாசி போன்றவை பூப்படைந்த பெண்களுக்கு அவசியமானவை. டீன் ஏஜில் இருந்தே எடுத்துக்கொள்ளப் பழகினால், பின்னாளில் கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகள் வராது. தைராய்டோ, முறையற்ற மாதவிடாயோ பாதிக்காது. பெண்குழந்தைகளுக்கு அடிக்கடி பசலைக்கீரை, பாகற்காய், வாழைப்பூ சேர்த்த உணவுகளைக் கொடுத்து வந்தால், இன்று விஸ்வரூபமெடுத்து பயமுறுத்தும் பிசிஓடி பிரச்னை பக்கத்தில் கூட நிற்காது. டீன் ஏஜ் பெண்களுக்கு மாதத்தில் 5 நாள்கள் நெல்லிக்காய் சாறும், ஆண் பிள்ளைகளுக்கு ஆப்பிள், அத்திப் பழங்களையும் கொடுத்தால், வயதுக்கேற்ற வாளிப்புடனும்வனப்புடனும் திகழ்வார்கள். ஆரோக்கியமாகவும் இருப்பார்கள். நோயில்லாத வாழ்க்கையை இங்கிருந்தே தொடங்குவோமே!
பசலைக் கீரை கடைசல்
என்னென்ன தேவை?
பசலைக்கீரை - 1 கட்டு, குடமிளகாய் - 1, பயத்தம் பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 4, தக்காளி - 2, வெங்காயம் - 1, பூண்டு - 10 பல், சீரகம் - அரை டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள் தூள், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
கீரையை ஆய்ந்து, சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி, குக்கரில் வேக வைக்கவும். அத்துடன் பயத்தம் பருப்பு, நறுக்கிய குடமிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து மறுபடி வேக விடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், மிளகுத்தூள், சீரகம், பூண்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு வேக வைத்துள்ள கீரை, பருப்புக் கலவையை அதில் கொட்டிக் கிளறி, இறக்கவும்.
* டீன் ஏஜில் உண்டாகும் முகப்பருக்களை விரட்டி, சருமத்துக்குப் பொலிவைக் கொடுக்கும். குடல் தொடர்பானபிரச்னைகளை விரட்டும்.
ரத்த விருத்தி மணப்பாகு என்னென்ன தேவை?
சுக்கு, தனியா, ஏலக்காய் - தலா 50 கிராம், மாதுளம் பழச்சாறு, திராட்சைச் சாறு, சாத்துக்குடி சாறு, ஆரஞ்சு சாறு, நெல்லிக்காய் சாறு, எலுமிச்சைச் சாறு - தலா 100 மி.லி., தேன் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
சுக்கு, ஏலக்காய், தனியாவை லேசாக வறுத்து, ஒன்றிரண்டாகப் பொடித்து, 1 லிட்டர் தண்ணீரில் கலந்து கொதிக்க விடவும். பாதியாக சுண்டியதும், அதை வடிகட்டி தனியே வைக்கவும். இன்னொரு பாத்திரத்தில் எல்லா சாறுகளையும் சேர்த்து, சிறுதீயில் சுண்ட வைக்கவும். அதில் வடிகட்டியதைச் சேர்த்து, மறுபடி சுண்டும் போது, தேன் சேர்த்துக் கலந்து, இறக்கவும்.
* இதை 2 மாதங்கள் வரை வைத்திருந்து உபயோகிக்கலாம். சாப்பாட்டுக்குப் பிறகு இதில் 1 டீஸ்பூன் அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து கொடுத்தால், பிள்ளைகளுக்கு இரும்புச்சத்து டானிக்கே தேவையிருக்காது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைக்கூட்டும். ரத்த சோகையை விரட்டும்.

வரலாற்றில் இன்று

நவம்பர் 20
 
1789: உரிமைகள் சட்டத்தை அங்கீகரித்ததன் மூலம் நியூ ஜேர்ஸி, அமெரிக்காவின் முதலாவது மாநிலமாகியது.

1917: உக்ரைன் குடியரசாகியது.

1945: நாஸி போர்க் குற்றவாளிகள் 24 பேருக்கு எதிராக நியூரம்பேர்கில் விசாரணை ஆரம்பமாகியது.

1947: பிரிட்டனில் இளவரசி எலிஸபெத்துக்கும் (தற்போதைய ராணியார்) லெப்டினன்ட் பிலிப் மௌன்ட் பேட்டனுக்கும் திருமணம் நடைபெற்றது.

1969: அமெரிக்காவின் கிளீவர் பிளெய்ன் டீலர் பத்தரிகை வியட்நாமின் மை லாய் கிராம படுகொலைகள் குறித்த புகைப்படங்களை வெளியிட்டது.

1979: சவூதி அரேபியாவின் மக்கா நகரில் 6000 ஹஜ் யாத்திரிகள் தீவிரவாத குழுவொன்றினால் பணயக் கைதிகளாக்கப்பட்டனர். சவூதி அரேபிய அரசாங்கம் பிரான்ஸிடமிருந்து விசேட படைகளைப் பெற்று இதை முறியடித்தது.

1985: மைக்ரோசொப்ட் வேர்சன் 1.0 வெளியாகியது.

1995: இளவரசி டயானா தனது குதிரையோட்டப் பயிற்றுநர் ஜேம்ஸ் வெயிட்டுடன் முறையற்ற தொடர்பிருப்பதை பி.பி.சி. பேட்டியொன்றில் ஒப்புக்கொண்டார்.

1998: கென்யா, தான்ஸானியாவில் அமெரிக்க தூதரகங்கள் மீதான குண்டுத்தாக்குதல் தொடர்பான வழக்கில் ஒசாமா பின் லாடன் 'ஒரு பாவமும் செய்யாத மனிதர்' என தலிபான் கட்டுப்பாட்டிலிருந்த ஆப்கானிஸ்தான் நீதிமன்றமொன்று பிரகடனம் செய்தது.

1998: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான முதலாவது மாதிரி விண்ணுக்கு ஏவப்பட்டது.