Digital Time and Date

Welcome Note

Thursday, November 22, 2012

தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல்



ஜப்பானில், மொபைல் போன் தயாரிப்பதில், முதல் இடத்தில் இருந்து வரும் ப்யூஜிட்ஸு நிறுவனத்துடன் இணைந்து, தண்ணீர் புகாத ஆண்ட்ராய்ட் மொபைல் போன் ஒன்றை, டாடா டொகோமா நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. ப்யூஜிட்ஸு எப்074 என அழைக்கப்படும் இந்த மொபைல் போனில் ஆண்ட்ராய்ட் பதிப்பு 4 பதியப்பட்டு இயங்குகிறது. 4 அங்குல வண்ணத்திரை, AMOLED டிஸ்பிளே, 1.4 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்நாப் ட்ரேகன் ப்ராசசர், 5 மெகா பிக்ஸெல் கேமரா, 1400 mAh திறன் கொண்ட பேட்டரி, 512 எம்பி ராம் நினைவகம், 1 ஜிபி உள் நினைவகம், வைபி மற்றும் புளுடூத் ஆகியன இதன் இயக்க சிறப்புகளாகும்.

இவற்றைக் காட்டிலும் மிகச் சிறப்பான இதன் தன்மை, தண்ணீருள் சென்று இதனை இயக்கலாம் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது. நீருக்குள் இருந்தவாறே போட்டோ எடுக்கலாம். ஸ்கிராட்ச் எதுவும் விழாத வகையில் இதன் ஸ்கிரீன் அமைந்துள்ளது. இதன் பேட்டரி 1,400 mAh திறனுடன் உள்ளது. இதன் தடிமன் 6.7 மிமீ.; எடை 105 கிராம்.

சூரிய ஒளியில் இந்த போனின் திரை அதன் டிஸ்பிளே தன்மையை மாற்றிக் கொள்கிறது. இதில் இயங்கும் Motion Conscious Audio system என்னும் தொழில் நுட்பம், சுற்றுப்புறச் சூழ்நிலையை உணர்ந்து, வரும் அழைப்பின் ஒலியின் தன்மையை மாற்றுகிறது. இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூ.21,900.

தொடக்கத்தில் இது டாட்டா டொகோமோ நிறுவன வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இதனை வாங்கும் டாட்டா டொகோமோ வாடிக்கையாளர்களுக்கு பிரிமியம் எண் இலவசமாக வழங்கப்படுகிறது. 3ஜி டேட்டா வரையறை இன்றி 1ஜிபி வரை பயன்படுத்தலாம். ரூ. 899 ஜி.எஸ்.எம். போஸ்ட் பெய்ட் இணைப்பினை வாங்குவோருக்கு, எந்த நெட்வொர்க் இணைப்பில் உள்ள எண்களுக்கும் எஸ்.டி.டி. மற்றும் உள்ளூர் அழைப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

மற்ற திட்டத்தில் இணைபவர்களுக்கு, பிரிமியம் எண், மூன்று மாதத்திற்கு 3ஜி அலைவரிசையில் 1 ஜிபி டேட்டா இலவசம்.

ஜப்பான் நாட்டின் மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள், இது போல பல சிறப்புகள் கொண்ட போன்களைத் தயாரித்தாலும், சோனி தவிர மற்ற நிறுவனங்கள், வெளிநாடுகளில் விற்பனையில் வெற்றி பெற இயலவில்லை. ஷார்ப் மற்றும் பானாசோனிக் நிறுவனங்கள் என்ன முயன்றும் வெற்றி பெற இயலவில்லை. FujitsuF074/ujitsuF074Waterproof3GPhone

ஆனால், ப்யூஜிட்ஸு நிறுவனம், இங்கு மொபைல் போன் சேவை வழங்கும் டாட்டா டொகோமோ வழியாக நுழைந்துள்ளது. டாட்டா டொகோமோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை பெரிய அளவில் இல்லை என்றாலும், போனின் சிறப்பான அம்சங்கள், ப்யூஜிட்ஸு நிறுவனத்திற்கு பெயர் வாங்கித் தரலாம்.

மொபைல் மலர்

No comments:

Post a Comment