Digital Time and Date

Welcome Note

Saturday, October 6, 2012

வெளிநாட்டு விலைமாதுக்களின் கூடாரம் இந்தியா ஒரு அதிர்ச்சி சுற்றுலா ரிப்போர்ட் !!!இந்தியர்கள் கலாச்சாரம், பண்பாட்டில் உயர்ந்தவர்கள் என்ற உயர்வான எண்ணம் உலக நாடுகள் மத்தியில் உள்ளது. அதேபோல் கோயில்,மசூதிகள்,சர்ச்,மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள், நம்மக்களின் வாழ்க்கை முறை, குடும்ப வாழ்வு, ஆன்மீகத்தை பற்றி வெளிநாடுகளில் இந்திய அரசு செய்யும் சுற்றுலா தொடர்பான விளம்பரங்கள் நம்நாட்டை நோக்கி அதிகள
விளவில் மக்களை வர வைத்துள்ளது.

இதன் மூலம் இந்தியாவுக்கு அந்நிய செலவாணியை வாரி வழங்கும் துறையாக சுற்றுலாத்துறை உள்ளது. ஆண்டு தோறும் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

2000- ல் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 22 லட்சம். அதுவே கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகமாகி 2009ல் 51,67,699 லட்சமாகவும், 2010ல் 55,83,746 லட்சம் வந்ததாக இந்திய சுற்றுலா துறை தகவல் தெரிவிக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் சுமார் 1 கோடி பேர் வருகை தருவார்கள் என இந்திய அரசின் புள்ளிவிவரம் மகிழ்ச்சி தெரிவிக்கிறது.

அதேபோல், இப்பயணிகளால் ஆண்டு தோறும் அந்நிய செலவாணியும் உயர்ந்து வருவதாக இந்திய பொருளாதார அறிக்கைகள் சொல்கின்றன. 2009ல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் நமது அரசுக்கு கிடைத்த வருமானம் 54,960 ஆயிரம் கோடி. 2010ல் 64,889 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

இப்படி இந்தியாவுக்கு கோடி கோடியாய் கொட்டும் வருமானம் ஒரு புறத்தில் வந்தால் சுற்றுலா பயணிகள் ரூபத்தில் இந்தியாவுக்குள் வரும் கால் கேள்ஸ் எனப்படும் விலைமாதுக்கள் தினமும் இந்தியாவில் லட்சங்களில் சம்பாதித்து அதை கறுப்பு பணமாக ஹவாலா முறையில் தங்களது நாடுகளுக்கு கொண்டும் போகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகிறது.

நமது நாட்டில் விபச்சாரம் என்பது சட்டப்படி தவறு. அதனால், சில ஆண்டுகள்க்கு முன்பு வரை இந்தியாவின் பெரும் பணக்காரர்கள், பணக்கார குடும்ப இளைஞர்கள், மிகப்பெரிய நிறுவன அதிகாரிகள், பன்னாட்டு நிறுவன ஊழியர்கள், உயர் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள் ஜாலியாக இருக்க பாங்காங், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், போலந்து, நெதர்லாந்து, பிரேசில், காங்கோ, சுஸர்லாந்து, க்யூபா மங்கோலியா, சாலமன் ஐஸ்லாந்து போன்ற செக்ஸ் டூரிஸ நாடுகளுக்கு போவார்கள். காரணம் இங்கு விரும்பியவர்களுடன் விரும்பும் வண்ணம் அனுபவித்துவிட்டு வரலாம், எந்த சட்ட தொந்தரவும் இல்லாத செக்ஸ் டூரிஸ்ட்டுக்கு சட்ட பாதுகாப்பு உள்ள நாடுகள். அதோடு வெளிநாட்டு பெண்கள் மீதான மோகம். அதனால் ஜாலியாக இருக்க நினைத்தவர்கள் இங்கு படையெடுத்தார்கள். அனுபவித்தார்கள்.

ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள். அப்படித்தான் ‘விளையாட்டு’ பிள்ளைகளான இவர்களால் சும்மா இருக்க முடியவில்லை. இவர்களுக்கு பணம் பிரச்சனையில்லை. ஆனால் இந்தியாவில் இருந்து அங்கு போய் வர நேரம் விரயமாகிறதே என கவலைப்பட்டனர். இவர்களின் கவலையை போக்க உள்ளுர் புரோக்கர்கள், இன்டர்நேஷனல் புரோக்கர்களாக உருமாறினார்கள். இன்டர்நேஷனல் தொடர்புகள் மூலம் பெண்களை டான்ஸ் ஷோ, மாடலிங் என்ற பெயரில் இந்தியாவுக்கு வர வைத்து தேவையானவர்களுக்கு தேவையான நேரத்தில் சப்ளை செய்தனர்.

கடந்த 2008 செப்டம்பர் மாதம் லண்டனில் இருந்து வெளிவரும் பிரபலமான நியூயார்க் டைம்ஸ் இதழ்க்கு அமெரிக்காவை சேர்ந்த ஸபா என்ற 25 வயது விலைமாது அளித்தபேட்டியில், எனக்கு ஒரு மணி நேரத்திற்கு இந்திய தொழிலதிபர்கள் தரும் விலை 5 லட்சம், வந்து போக டிக்கட் செலவு, விலை உயர்ந்த கார் பயணம், உயர்தரமான ஹோட்டலில் தங்கும் வசதி என செய்து தருகிறார்கள் என்றார்.

அந்த பேட்டி இந்தியாவுக்கு வெளிநாட்டு விலை மாதுக்காளை படையெடுக்க வைத்துவிட்டது. வெளிநாட்டு மாதுக்களுக்கு இந்தியாவில் பலரும் போட்டி போடுவதால் டிமாண்ட் அதிகமானது. இதனால் நிறைய வெளிநாட்டு மாதுக்கள் சுற்றுலா விசாவில் இங்கு வர வைக்கப்படுகின்றனர். அப்படி வர வைக்கப்பட்டவர்கள் இன்று இந்தியாவை செக்ஸ் நாடாக அறிவிக்கும் அளவுக்கு பெருகியுள்ளார்கள் என்கிறார்கள் இத்தொழிலை நன்கறிந்தவர்கள்.

இந்த பேட்டி மற்றும் இங்கு வந்து போகும் பெண்களால் பரவிய தகவல், ஐ.பி.எல் விளையாட்டு காண என்ற போர்வையில் இளம் விலைமாதுக்கள் இந்தியாவுக்கு அதிகளவில் வர தொடங்கியுள்ளார்கள்.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி ஆரம்பிக்கப்பட்ட 2008 ஆம் ஆண்டு முதல் இவ்வகை பெண்கள் இந்தியாவுக்குள் அதிகம் வருகின்றனறாம். கடந்த 2010 ஆம் ஆண்டு சுற்றுலா பயணிகளாக 56 லட்சம் பேர் வந்துள்ளனர். இதில் 20 – 35 வயதுக்குள்ளான பெண்கள் அதிகம். கிரிக்கெட் ரசிகைகள் என்ற போர்வையிலும், ஐ.பி.எல் போட்டிகளின் போது மைதானங்களில் ரசிகர்களை, வீரர்களை உற்சாகபடுத்த சியர்ஸ் கேர்ள்ஸ் எனப்படும் நடன பெண்கள் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுகின்றனர்.

மும்பையில் உள்ள பத்திரிக்கை நண்பர் போலந்து நாட்டை சேர்ந்த சியர்ஸ் கேர்ள் ஒருவரிடம் பேசியபோது, 2008 ஜனவரி மாதம் ஐ.பி.எல் ஆட்டத்தை பிரபலப்படுத்த வேண்டும் என்பற ஒப்பந்தத்தில் ஸ்காட்லாந்து சியர்ஸ் கேர்ள்ஸ் டீமில் உள்ள 150 பேர் கையெழுத்திட்டோம்.

ஸ்காட்லாந்து விமான நிலையத்தில் விமானம் ஏற சென்றபோது, என்னுடன் எனக்கு பணிப் பெண்ணாக, மேக்கப் வுமனாக, பிசியோதெரப்பிஸ்ட் என 5 பெண்கள் வந்தனர். இப்படி எனது குரூப்பில் 150 பேருடன் தலா 5 பேர் வந்தனர். மும்பை விமான நிலையத்தில் இறங்கியபோது, அவர்கள் எல்லாம் அங்கிருந்தே எங்களை விட்டு பிரிந்து போய்விட்டனர். அவர்கள் எதற்காக வந்தார்கள் என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் கண்டுக்கொள்ளவில்லை.

ஏன் எனில் எங்கள் குழு தலைமை எங்களுக்கு தரும் கமிஷன். அதோடு ஒரு நாள் இங்கு நாங்கள் நடனமாட எங்களுக்கு கிடைக்கும் தொகை 10 லட்சம். அதை இழக்க நான் விரும்பவில்லை. என்னை போல் தான் மற்றவர்களும். அதனால் நாங்கள் கண்டுகொள்வதில்லை. இது ஆண்டுதோறும் நடக்கிறது என பட்டவர்தமான தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியா வெளிநாட்டு செக்ஸ் பெண்களின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறது என்கிறார்கள் மும்பையில் இத்தொழிலை ஆய்வு செய்யும் நபர்கள். இதை நடத்துபவர்கள் எல்லாம் பெரும் பண முதலாளிகள், வெளிநாட்டு விலைமாதுக்களை வைத்து சம்பாதிக்கும் பணத்தில் 40 சதவிதம் புரோக்கர்களுக்கு, மீதி அப்பெண்ணுக்கு என்ற ஜென்டில்மேன் அக்ரிமெண்ட் உள்ளதாம்.

இந்த பணமெல்லாம் ஹவாலா முறையில் சம்மந்தப்பட்ட பெண்ணின் நாடுகளில் கொண்டும் போய் தரப்படுகிறது. இந்த பெண்கள் எல்லாம் 3 மாதம், 6 மாதம் சுற்றுலா விசாவில் வருபவர்கள். தேதி முடிந்தும் பல நூற்றுக்கணக்கான பெண்கள் மும்பை, டெல்லி மாநகரங்களில் உலா வருகிறார்கள். இந்தியாவில் தற்போது, தொழிலுக்காக 2 ஆயிரம் வெளிநாட்டு பெண்கள் உள்ளார்கள் என அதிர்ச்சி தருகிறார்கள்.

இவர்களை பற்றி பன்னாட்டு புலனாய்வு அமைப்புகள் இந்திய புலனாய்வு அமைப்புகள்க்கு தகவல் தெரிவித்தும் இதில் வரும் அந்நிய செலவாணியை கருத்தில் கொண்டு அரசும், புலனாய்வு அமைப்புகளும் இதை கண்டு கொள்வதில்லை.

தற்போது இந்த வெளிநாட்டு மாதுக்களின் புகலிடமாக கோவா, ராஜஸ்தான், புதுவை இருக்கின்றனவாம். அதோடு, தற்போது கார்ப்பரேட் அலுவலங்கள் போல் வெளிநாட்டு விலைமாதுக் களை வரவைக்க சென்னை, மும்பை, பெங்களுர், டெல்லி, ஐதராபாத் போன்ற நகரங்களில் புரோக்கர்கள் அலுவலகமே வைத்துள்ளதாக தெரிவிக்கறார் மும்பை சமுக சேவகர் ஒருவர்.

இதுப்பற்றி பல நாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்துள்ள மதிமுக வழக்கறிஞர் பிரிவின் மாவட்ட அமைப்பாளர் ரமேஷ்கிருஸ்டியிடம் பேசியபோது, சமீபத்தில் வெளிநாட்டு விலைமாதுக்கள் 5பேரை டெல்லி போலிஸ் கைது செய்தது. அவுங்கள தீவிரமா விசாரிச்சாலே நம் நாட்லயிருந்து ஹவாலா முறையில வெளிநாடுகளுக்கு பணம் போற வழிய இன்னும் நெருக்கமா அறியலாம். அதோட இவுங்க மூலமா தீவிரவாதிகளுக்கான தகவல் சப்ளையாகவும் வழியிருக்கு. ஆனா இவுங்களை விசாரிக்க முடியாதபடிக்கு அரசியல்வாதிகள், பெரும் தொழிலதிபர்கள் முட்டுக்கட்டை போட்டு வர்றதா தகவல் தெரியுது.

இந்த தொழில்ல இருக்கற அரசியல்தான் லலித்மோடி-சசிதரூர் இடையே போட்டி ஏற்பட்டு மத்திய இணையமைச்சர் பதவியிலிருந்து சசிதரூரை இறக்கனார் லலித். அவர் தன்பங்குக்கு விளையாட ஐ.பி.எல் தலைவர் லலித்மோடியை நாட்டை விட்டே துரத்திட்டார் இது கடந்த ஆண்டு விவகாரம்.

இந்த ஆண்டு ஆஸ்த்திரியா கிரிக்கெட் வீரர் லூக் மீது அமெரிக்கவில் இருந்து வந்த ஒரு மாடலிங் பெண் தந்த பாலியல் புகார் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையெல்லாம் தீவிரமா விசாரிக்கறதேயில்ல. இதை விசாரித்தால் இதுக்கு பின்னாடி இருக்கற பல உண்மைகள் வெளி வரும் என்றார்.

உண்மைகள் எப்போதும் வெளியே வரப்போவதில்லை. அதுதான் இந்தியா.

நன்றி
து. ராஜா

7 Dangerous acts after a meal~


1. Don’t smoke —- Experiments from experts proves that smoking a cigarette after meal is comparable to smoking 10 cigarettes (chances of cancer is higher)

2. Don’t eat fruits immediately — Immediately eating fruits after meals will cause stomach to be bloated with air. Thre fore take fruits 1 -2 hours after meal or 1 hour before meal.

3. Don’t drink tea—— Because tea leaves contain a high content of acid. This substance will cause the protein content in the food we consume to be hundred thus difficult to digest.

4. Don’t loosen your belt———- Loosening the belt after meal will easily cause the intestine to be twisted and blocked.

5. Don’t bathe———- ——- Bathing after meal will cause the increase of blood flow to the hands, legs and body thus the amount of blood around the stomach will therefore decrease, this will weaken the digestive system in our stomach.

6. Don’t walk about———- — People always say that after a meal walk a hundred steps and you will live till 99. In actual fact this is not true. Walking will cause the digestive system to be unable to absorb the nutrition from the food we intake.

7. Don’t sleep immediately—- ——– The food we intake will not be to digest properly. Thus will lead to gastric and infection in our intestine.

Please Share it to your friends let them be aware…

Friday, October 5, 2012

உலகின் அதிவேகமான பைக்கை கான்போம்....

ஜப்பான் நாட்டை சேர்ந்த கவாஸ்க்கி(Kawasaki)  மோட்டார் சைக்கிள்(motorcycle) தயாரிப்பு நிறுவனம். உலகின் அதிவேகமான பைக்கை உருவாக்கி உள்ளனர்..
கவாஸ்க்கி நிறுவனத்தின் உற்ப்த்தி பிரிவுகள் ஜப்பான், அமெரிக்கா,பிலிப்பைனஸ்,இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து.

கவாஸ்க்கின் அமெரிக்கா பிரிவு உலகின் அதிவேகமான பைக்கை உருவாக்கி உள்ளது. இதற்க்கு முன்பு ஹோண்டா  நிறுவனத்தின் Honda CBR 1100XX Super Blackbird 178mph (286 km/h) முதலிடத்தில் இருந்தது.


கவாஸ்க்கி ZZR வகைகள் 1990யில் அறிமுகம் செய்தனர். கவாஸ்க்கி ZZR வகைகளில் பல பைக்கள் வெளிவந்துள்ளன. தற்பொழுது வெளிவந்துள்ள

Kawasaki ZZR1400

world fastest car 2012
என்ஜின் மற்றும் அளவுகள்
 • Engine – Four-stroke, 1441cc ,liquid-cooled, DOHC, four valve per cylinder, Inline-Four
 • Bore x Stroke – 84.0 x 65.0mm
 • Compression Ratio – 12.3:1
 • Fuel Delivery – Fuel-injection
 • Transmission – 6-speed(கியர் பாக்ஸ்)
 • Final Drive – X-Ring chain
 • Front Wheel – 120/70 ZR17
 • Rear Wheel – 190/50 ZR17
 • Curb Weight – 584.3 lbs.
 • Wheelbase – 58.3 in.
 • Length – 85.4 in.
 • Rake – 23 deg. Trail: 3.7 in.
 • Seat Height – 31.5 in.
 • Fuel Capacity – 22 liters(எரிகலன்)
 • ABS


ZZR 1400 BACK
வண்ணங்கள்


ZZR 1400 colours

வேகம்: 186mph (299.3km/h)

விலை; 14 லட்சம் இருக்கலாம்.

கடன் இருந்தால் ஹஜ் செய்யலாமா???

கடன் இருந்தால் ஹஜ்ஜுக்குச் செல்லக் கூடாது என்று சிலர் கூறுகின்றார்கள். ஒருவர் வீட்டு
வகைக்காக லோன் வாங்கியிருந்தாலோ அல்லது வேறு எந்தக் கடன் இருந்தாலோ ஹஜ் செய்யலாமா?

கடன் என்பது இரண்டு வகைப்படும். வாழ்க்கைத் தேவைக்காக இல்லாமல் வசதி வாய்ப்புகளைப்
பெருக்குவதற்காக கடன் வாங்குவது ஒரு வகை. உதாரணமாக சொந்த வீடு இருப்பவர் மேலும் ஒரு
வீடு வேண்டும் என்பதற்காக கடன் வாங்கி மற்றொரு வீட்டை வாங்குகின்றார். அல்லது வியாபாரத்தைப்
பெருக்குவதற்காக கடன் வாங்கி அதை முதலீடு செய்கின்றார். இவருக்குக் கடன் இருப்பதால் ஹஜ்
செய்யத் தேவையில்லை என்று வாதிட முடியாது. ஏனென்றால் இவருடைய கடனை
நிறைவேற்றுவதற்குத் தேவையான சொத்து உபரியாக உள்ளது. இவருக்குக் கடன் இருந்தாலும் ஹஜ்
கடமை தான்.

அதேபோல் ஒருவர் ஒரு இலட்ச ரூபாய் கடன் வாங்கி வியாபாரம் செய்கின்றார். ஆனால் அவரிடம்
இரண்டு இலட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களோ, பொருட்களோ இருக்கின்றது என்றால் இவரும்
கடனாளி ஆக மாட்டார். இவருக்கு ஹஜ்ஜுக்குச் செல்லும் சக்தி இருந்தால் ஹஜ் செய்தாக வேண்டும்.
அதாவது வாங்கிய கடனை நிறைவேற்றுவதற்கும், ஹஜ் செய்வதற்கும் போதிய வசதி இருந்தால்
அவருக்கு ஹஜ் கடமையாகும்.

கடன் வாங்குவதில் மற்றொரு வகை வாழ்க்கைத் தேவைக்காக கடன் வாங்குவதாகும். உதாரணமாக சொந்த
வீடு இல்லாமல் வீடு வாங்குவதற்காக கடன் வாங்குவதைக் கூறலாம். இது போன்ற கடனாளிக்கு
முதலில் கடனை நிறைவேற்றுவது தான் கடமை.

கடன் இருந்தும் அதை நிறைவேற்றும் அளவுக்குப் பொருளாதாரமோ அல்லது இதர சொத்துக்களோ இல்லை
என்றால் அவருக்கு ஹஜ் கடமையில்லை.
ஹஜ்ஜைப் பொறுத்த வரை மற்ற கடமைகளைப் போலல்லாமல் யாருக்குச் சக்தியிருக்கின்றதோ அவருக்குத்
தான் கடமையாகும். இதை அல்லாஹ் கீழ்க்கண்ட வசனத்தில் தெரிவிக்கின்றான்.

அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம்
பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற
மனிதர்களுக்குக் கடமையாகும். யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை
விட்டும் தேவையற்றவன்.

(அல்குர்ஆன்3:97)

ஒருவர் வாழ்க்கைத் தேவைக்காக கடன் வாங்கியிருக்கும் நிலையில் ஹஜ் அவருக்குக் கடமையாகாது.
வாங்கிய கடனைச் செலுத்துவது தான் அவருக்கு முதல் கடமை.

"அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு எல்லாப் பாவங்களும்
மன்னிக்கப்படுகின்றன. கடனைத் தவிர!'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி),

நூல்: முஸ்லிம் 3498

இந்த ஹதீஸின் அடிப்படையில் கடன் என்பது இறைவனிடம் மன்னிக்க முடியாத பாவமாக உள்ளது.
எனவே கடனை முதலில் செலுத்தி விட்டு அதன் பிறகு ஹஜ்ஜுக்குச் சென்று வர சக்தி இருந்தால்
ஹஜ் செய்யச் செல்ல வேண்டும்.

கடனைச் செலுத்தினால் ஹஜ்ஜுக்குச் செல்ல முடியாது என்ற நிலை இருக்குமானால் அந்த நிலையில்
அவருக்கு ஹஜ் கடமையாகவில்லை என்று தான் அர்த்தம். இந்நிலையில் ஒருவர் ஹஜ்ஜுக்குச்
செல்லவில்லை என்றால் அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான். ஆனால் கடன் இருக்கும் நிலையில்
ஹஜ்ஜுக்குச் சென்று, கடனைச் செலுத்தாமலேயே மரணித்து விட்டால் அவர் இறைவனிடத்தில்
குற்றவாளியாகின்றார். எனவே வாழ்க்கைத் தேவைக்காக வாங்கிய கடனை நிறைவேற்றி விட்டுத் தான்
ஹஜ் செய்ய வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.

onlinepj.com

கணவன்மார்களே! இது உங்களுக்குத்தான் ..................


                              
ஒரு பெண்ணை திருமணம் செய்வது எதற்காக என்றால் அவளோடு மௌத்து (மரணம்) வரைக்கும் மட்டுமின்றி மறு உலகிலும் இருவரும் நிம்மதியாக சந்தோசமாக வாழ்வதற்கே…. ஆனால் சில கணவர்களின் தவறுகளினால் அந்த மனைவி அக்கணவனை வெறுக்க நேரிடுகிறது. சில சமயம் விவாகரத்தும் இடம்பெறுகின்றத

01) மனைவியை சந்திக்கும் போது எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருங்கள்.அது சதகாவகும்.

02) வீட்டினுள் நுழையும் போது ஸலாம் சொல்ல மறந்துவிட வேண்டாம். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும்கூட. அது ஷைத்தானை வீட்டிலிருந்து விரட்டிவிடும்.

03) நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். நாவைப் பேணுவது அவசியம்.அதன் தீய விளைவுகளே அதிகமானது.

04) எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள். விவாதம் வேண்டாம். அது திருமண வாழ்க்கைக்கு நஞ்சு போன்றது.

05) உங்களின் வார்த்தைகளுக்கு மனைவி பதில் கொடுக்கும்பொழுது செவிதாழ்த்துங்கள். மனைவியின் கருத்துக்களை செவிசாயுங்கள்.

06) தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.

07) மனைவியைச் செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழையுங்கள். நபியவர்கள் தனது மனைவி ஆயிஷா நாயகியை “ஆயிஷ்” என்று செல்லமாக அழைத்தார்கள்.

08) நல்ல விடயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

09) நகைச்சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவளின் பிரச்சினைகளை மறக்கடியுங்கள்.

10) அவளது இன்பத்தில் மட்டுமல்லாது துன்பத்திலும் பங்கு கொள்ளுங்கள்.

11) பிள்ளைகளை பராமரிக்கும் விடயங்களில் அவளுக்கு உதவியாய் இருங்கள்.சிலர் பிள்ளை பெறும்வரைதான் நமது கடமை அதன் பின் மனைவிதான் பொறுப்பு என அலட்சியமாய் இருக்கின்றனர். அதனால் நம் மீதும், பிள்ளை பெறுவதிலும் மனைவிக்கு வெறுப்பு ஏற்படலாம்.

12) இஸ்லாம் அனுமதித்த விடயங்களை பார்ப்பதற்கு வெளியில் அழைத்துச் செல்லுங்கள்.

13) அவள் நோயுற்று களைப்படைந்து இருந்தால் வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவுங்கள்.

14) குடும்ப விடயங்களை உங்கள் மனைவியின் ஆலோசனை பெற்ற பின்பே செய்யுங்கள்.

15) நீங்கள் வெளியில் இருக்கும் போது எந்நேரமும் மனைவியுடன் தொடர்பாகவே இருங்கள். (டெலிபோன், கடிதம், ஈமெயில் போன்றவற்றின் மூலமாக)

16) குடும்பச் செலவுக்குத் தேவையான பணத்தை ஓரளவேனும் அவளது கையில் கொடுத்துவிடுங்கள்.

17) திரும்பி வரும்பொழுது அவளுக்கு விருப்பமான பொருள்களை வாங்கிக் கொண்டு வாருங்கள்..

18) திருமணம் முடித்த பின் தனது மனைவியை அடிமை என நினைத்துக்கொண்டு அவளை துன்புறுத்தக்கூடாது. அவளது சிறந்த நண்பன் என கருத்திற்கொண்டு நெருக்கமாக பழகுங்கள். தனது கணவன் தனக்கு அல்லாஹ்வினால் கிடைத்த அருட்கொடை என நினைத்து அவள் மகிழ்ச்சியடைவாள்.

19) எல்லா காரியங்களிலும் அவளுக்கு முன்மாதிரியாக இருங்கள். அவள் மதிக்கும்படியாக நடந்துகொள்ளுங்கள்.

20) விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்துகொள்ளுங்கள். விவாதம் வேண்டாம் அது குடும்ப வாழ்க்கைக்கு நஞ்சாகும்.

21) அழகாக காட்சியளிக்கவும், சுத்தமாக இருக்கவும் முயற்சி செய்யுங்கள். அவை உங்கள் மீதான அன்பை அதிகரிக்கும்.

22) மனைவியை மிக்க கவனமாக கையாளுங்கள். அவள் ஒரு கண்ணாடி பாத்திரம் போன்றவள். அவள் மனது எளிதில் உடைந்துவிடக் கூடியது.

23) வீண் சந்தேகம் வேண்டாம். அது உங்கள் இருவரையும் தூரமாக்கிவிடும். அவளது குறைகளை துருவித்துருவி ஆராயாதீர்கள்.

24) அவளது குறைகளை ஏற்றுக்கொள்ளுங்கள். எல்லோரிடமும் குறைகள் உள்ளன.
நபியவர்கள் நவின்றார்கள் :(( பெண்கள் விலா எலும்பிலிருந்து படைக்கப் பட்டவர்கள்.அதன் மேற்பகுதி வளைந்திருக்கும். அதை நேராக்கப் போனால் உடைந்துவிடும், அவ்வாறே விட்டோம் என்றால் வளைந்ததாகவே இருக்கும். எனவே பெண்கள் விடயத்தில் நடுத்தரமாக நடந்து கொள்ளுங்கள்)).
By Shahul Trichy

Thursday, October 4, 2012

தரிசு நிலம்: டேராடூன் பெயர்க்காரணம்

தரிசு நிலம்: டேராடூன் பெயர்க்காரணம்: உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகர் டேராடூன் பாசுமதி அரிசிக்கும், லிச்சி பழங்களுக்கும் பெயர் பெற்றதாகும். டேரா என்றால் தற்காலிகமாக தங்கும் இடம்...

தரிசு நிலம்: பொது அறிவு புதையல்- 3

தரிசு நிலம்: பொது அறிவு புதையல்- 3: இந்தியத் தேர்தல்களில் பதிவான செல்லுபடியாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு பெற இயலாமல் தோற்கும் வேட்பாளர்கள், தங்கள் வைப்புத்தொகையை இழப்ப...

ஜும்ஆ நாளின் சிறப்புகள்


சூரியன் உதயமாகும் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அதில் தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப் பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் சொர்க்க(தோட்ட)த்தில் தங்க வைக்கப் பட்டார்கள். யுக முடிவு நாளும் வெள்ளிக்கிழமை தான் ஏற்படும்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹ
ு, நூல்: திர்மிதி

'இறுதிச் சமுதாயமான நாம் தான் மறுமையில் முந்தியவர்கள் ஆவோம். ஆயினும் சமுதாயங்கள் அனைத்திற்கும் நமக்கு முன்பே வேதம் வங்கப்பட்டு விட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப் பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபாடு கொண்ட நாளாகும். ஆகழவே நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கு அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்கு உரியதும் ஆகும்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்;) அவர்கள் கூறினார்கள்: 'வெள்ளிக்கிழமை நாளிலே மறுமை நிகழும்' ஆதாரம்: முஸ்லிம்

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: 'எவரொருவர் ஜும்ஆ தினத்தில் அல்லது அன்று இரவில் மரணிக்கின்றாரோ அவர் மண்ணறை வேதனையை விட்டும் காப்பாற்றப்டும்'(ஆதாரம்: அஹ்மத்)

நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. அல்குர்ஆன் 62:9.

'அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜும்ஆத் தொழுகை கடமையாகும்' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலியல்லாஹு அன்ஹு) நூல்: அபூதாவூத்

'உங்களில் எவரும் ஜும்ஆத் தொழுகைக்கு வந்தால் அவர் குளித்துக் கொள்ளட்டும்' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) நூல்: புகாரீ

எவரொருவர் வெள்ளிக்கிழமை தினத்தில் குளித்து, பல் துலக்கி, தன்னிடம் இருக்கின்ற வாசனை திரவியங்களை தடவிக்கொண்டு, தன்னிடம் இருக்கின்றவற்றில் நல்ல ஆடையை அணிந்து கொண்டு பள்ளிவாசலுக்கு சென்று, பள்ளியில் இருக்கின்ற மனிதர்களை கடந்து செல்லாமல் தன்னால் முடியுமான அளவு தொழுதுவிட்டு மௌனமாக இருந்து இமாம் சொல்வதை சிறந்த முறையில் செவிமெடுத்துவிட்டு தொழுகை முடியும் வரை இருக்கின்றாரோ அவருடைய முந்தைய வெள்ளிக்கிழமைக்கும் இந்த வெள்ளிக்கிழமைக்கும் இடைப்பட்ட சிறு பாவங்கள் மன்னிக்கப்படும்' (ஆதாரம்: அஹ்மத்)


'ஜும்ஆ நாள் வந்து விட்டால் வானவர்கள் பள்ளியின் நுழைவாயிலில் நின்று கொண்டு முதலில் வருபவரையும், அதைத் தொடர்ந்து வருபவர்களையும் வரிசைப்படி பதிவு செய்கிறார்கள். முதலில் வருபவர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவரைப் போன்றும், அதற்கடுத்து வருபவர் மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றும், அதன் பிறகு ஆடு, பிறகு கோழி, பிறகு முட்டை ஆகியவற்றைக் குர்பானி கொடுத்தவர் போன்றவரும் ஆவார்கள். இமாம் வந்து விட்டால் வானவர்கள் தங்கள் ஏடுகளைச் சுருட்டி விட்டுச் சொற்பொழிவைக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) நூல்கள்: புகாரீ, முஸ்லிம்

யார் (தலையை) கழுவி, குளித்து ஆரம்ப நேரத்திலேயே புறப்பட்டு முந்தியே (பள்ளிக்கு) வந்து, இமாமுக்கு நெருக்கமாக இருந்து உரையை செவியுற்று, ஜும்ஆவை வீணாக்காமல் இருக்கின்றரோ அவருக்கு அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஓர் ஆண்டு நோன்பு நோற்று, ஓர் ஆண்டு நின்று வணங்கிய கூலி உண்டு என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ் ரலியல்லாஹு அன்ஹு, நூல் : நஸயீ

'ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை நிகழும் பாவங்களுக்கு ஜும்ஆ தொழுகை பரிகாரமாகும். ஐவேளைத் தொழுகைகளும் அதற்கு இடைப்பட்ட நேரங்களில் நிகழும் பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஆனால் பெரும் பாவங்களாக அவை இருக்கலாகாது' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், திர்மிதி

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும் போது, 'ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு' என்று கூறி விட்டு அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். 'அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை' என்றும் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி


'ஒருவர் குளித்து விட்டு ஜும்ஆவிற்கு வந்து தனக்கு நிர்ணயிக்கப்ட்ட அளவைத் தொழுகின்றார். பிறகு இமாம் தன் உரையை முடிக்கும் வரை மவ்னமாக இருந்து பிறகு அவருடன் தொழுகின்றார் என்றால் அவருக்கு அவருடைய அந்த ஜும்ஆவிற்கும் மறு ஜும்ஆவிற்கும் இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன. மேலும் மூன்று நாட்கள் மன்னிக்கப்படுகின்றன' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்

வெள்ளிக்கிழமை கிழக்கு வெளுத்ததிலிருந்து மதியம் வரையிலுள்ள நேரத்தை ஆறு பகுதிகளாக பிரித்து அதன் முதல் பகுதியிலிருந்து இறுதி பகுதிவரைக்கும் ஜும்ஆவிற்கு வரும் நபர்களுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகளைப் பற்றி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'ஒருவர் ஜும்ஆ நாளில் கடமையான குளிப்பைப் போன்று குளித்து விட்டுப் பள்ளிக்கு வந்தால் ஒரு ஒட்டகத்தை அல்லாஹ்வின் பாதையில் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
இமாம் பள்ளிக்கு வந்து விட்டால் வானவர்கள் ஆஜராகிப் போதனையைக் கேட்கின்றார்கள்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி

'மூன்று பேர்கள் ஜும்ஆவிற்கு வருகின்றார்கள். ஒருவர் ஜும்ஆவிற்கு வந்து (குத்பாவின் போது பேசி) வீணாக்குகின்றார். இதுவே அவரது ஜும்ஆவில் கிடைத்த அவருடைய பங்காகும்.

இன்னொருவர் ஜும்ஆவிற்கு வந்து பிரார்த்திக்கின்றார். இவர் மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தவராவார். அவன் நாடினால் அவருக்கு வழங்குவான். அவன் நாடினால் அவருக்கு (கொடுக்காமல்) தடுக்கின்றான்.

மூன்றாமவர் ஜும்ஆவிற்கு வந்து மவுனத்துடன் வாய் பொத்தியுமிருந்தார். எந்த ஒரு முஸ்இமின் பிடரியையும் தாண்டவில்லை. யாருக்கும் தொந்தரவு கொடுக்கவில்லை. இந்த ஜும்ஆ அதை அடுத்து வரும் ஜும்ஆ வரையிலும் இன்னும் மூன்று நாட்கள் வரையிலும் (செய்த பாவங்களுக்கு) பரிகாரமாகும்.

கொசுங்கள விரட்ட நாம் என்னலா செய்வோம்?


கொசுங்கள விரட்ட நாம் என்னலா செய்வோம்? hit அல்லது beygon spray உபயோகிப்போம் இல்லனா allout liquid, goodknight liquid அப்படி எதாவ்து ஒரு இரசாயன பொருள உபயோகிப்போம், நம்ம கிட்ட இருக்குர இயற்கை பொருள வைச்சு எதாவது உபயோக படுத்தி இருக்கரோமானு? கேட்டா, பதில் வந்து இல்லை. ஏனா காசு இல்லாதவந்தா இயற்கையான் பொருள உபயோகிப்பா, காசு உல்லவங்க கஸ்ட்ட பட்ரதே இல்ல கடையிலேயே வாங்கிடலாம்,

இயற்கை பொருள உபயோகிசா கவுரவ க
ுறைவுனு நிரைய பேர் நினைச்சிட்டு இருக்காங்க, அதுனாலத்த ந்ம்ம நாட்டுல இயற்கையோட மகதுவமே நிரையப்பேருக்கு தெரியாம போய்டுச்சி...

கம்பம் ஆதிசுஞ்சனகிரி கல்லூரில M.Phil., படிக்கிர மாணவி கிருஷ்ணவேணி சில மாதங்களா கொசுவ விர்ட்ட வேப்பங்கோட்டை மூலம் மூலிகை மருந்து தயாரிக்கும் ஆய்வு பனியில இடுப்பட்டிருந்தாங்க, ஈரோட்ல நடந்த இளைஞர் அறிவியல் விழாவ்ல, கிருஷ்ணவேணி கண்டுபிடித்த கொசுவை விரட்டும் மூலிகை மருந்து ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டது, அதுக்கு அவங்களுக்கு முதல் பரிசும் கிடைச்சுது. இந்த விசியம் தமிழ்நாட்ல இருக்ர நமக்கு எத்தன பேருக்கு தெரியும்?

ந்ல்ல விசியங்கல தெரிஞ்சிக்கோங்க, புதுமைய கண்டுபிடிங்க, மத்தவங்களுக்கு உதவுங்க.

காபாவைக் கண்டதும் கேட்கும் துஆ அங்கீகரிக்கப்படுமா?


ஹஜ்ஜுக்கு செல்லும்போது கஅபத்துல்லாஹ்வை பார்த்து (முதல் பார்வையில்)கேட்கப்படும் துஆக்கள்
அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறுகின்றனர்இது சரியா?

அப்துன்னாசர், துபை

பதில் :

கஅபாவை காணும் போது துஆச் செய்ய வேண்டும் என்று வரக்கூடிய ஹதீஸ் பலவீனமானதாகும்.

المعجم الكبير - (ج 8 / ص 169)

7713 - حدثنا محمد بن العباس المؤدب ثنا الحكم بن موسى ثنا الوليد بن مسلم
عن *عفير بن معدان* عن سليم بن عامر عن أبي أمامة سمعه يحدث : عن رسول الله
صلى الله عليه و سلم قال : تفتح أبواب السماء ويستجاب الدعاء في أربعة
مواطن عند التقاء الصفوف في سبيل الله وعند نزول الغيث وعند إقامة الصلاة
وعند رؤية الكعبة

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான்கு இடங்களில் வானத்தின் கதவுகள்
திறக்கப்படுகின்றன. துஆ ஏற்றுக் கொள்ளப்படுகிறது. 1. அல்லாஹ்வுடைய பாதையில்
(போர்க்களத்தில்) அணிகள் சந்திக்கும் போது. 2. மழை பொழியும் போது. 3. தொழுகைக்கு
இகாமத் சொல்லும் போது 4. கஅபாவைக் காணும் போது.

அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)

நூற்கள் : தப்ரானீ அல்முஃஜமுல் கபீர்

(பாகம் 8 பக்கம் : 169 எண் : 7713)

“மஃரிஃபதுஸ் ஸூனன் வல் ஆஸார்” (2092)

சுனனுல் குப்ரா (6252)

இதன் அறிவிப்பாளர் தொடரில் *“உஃபைர் பின் மஃதான்*“ என்பவர் இடம் பெறுகிறார். இவரைப்
பற்றி விமர்சனம் செய்துள்ள அனைத்து அறிஞர்களும் இவரைப் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

ميزان الاعتدال - (ج 3 / ص 83)[ عفير ] 5679 - *عفير بن معدان* [ ق ] الحمصى المؤذن، أبو عائذ. عن عطاء،
وقتادة، وسليم بن عامر. وعنه أبو اليمان، والنفيلي، وجماعة. قال أبو داود:
شيخ صالح *_ضعيف الحديث_*. وقال أبو حاتم: *يكثر عن سليم، عن أبي أمامة
_بما لا أصل له_*_. _وقال يحيى: *_ليس بشئ. وقال - مرة: ليس بثقة._*_
_وقال أحمد: *_منكر الحديث، ضعيف._*இவர் ஹதீஸ்களில் பலவீனமானவர் என இமாம் அபூதாவூத் கூறியுள்ளார்.

அபூ உமாமாவிடமிருந்து ஸலீம் என்ற அறிவிப்பாளர் வழியாக அடிப்படை இல்லாத விசயங்களை
அதிகம் அறிவித்துள்ளார் என அபூ ஹாத்திம் அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.

இவர் ஒரு பொருட்டாகக் கொள்ளத் தக்கவரில்லை என்று்ம் இவர் நம்பகமானவர் இல்லை என்றும் யஹ்யா
பின் மயீன் அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.

இவர் ஹதீஸ்களில் நிராகரிக்கத்தக்கவர், பலவீனமானவர் என்று இமாம் அஹ்மத் கூறியுள்ளார்.

*(மீஸானுல் இஃதிதால் பாகம் : 3 பக்கம் : 83)*

எனவே மேற்கண்ட செய்தி மிகவும் பலவீனமாதாகும்.

கஅபாவைக் காணும் போது துஆச் செய்ய வேண்டும் என்பதற்கோ, குறிப்பிட்ட துஆக்களை ஓத வேண்டும்
என்பதற்கோ ஆதாரப்பூர்வமான எந்த ஹதீசும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஅபத்துல்லாஹ்வைப் பார்த்தால் இருகைகளையும் உயர்த்தி இறைவா!
இந்த ஆலயத்திற்கு கண்ணியத்தையும் மரியாதையையும்அதிகப்படுத்து. (எதிரிகளுக்கு)
அச்சத்தையும் அதிகப்படுத்து. இந்தஆலயத்தின் கண்ணியம், மரியாதையின் காரணத்தால் (இந்த
ஆலயத்தை) ஹஜ் செய்பவர்களுக்கும் உம்ரா செய்யபவர்களுக்கும் கண்ணியத்தையும்
மரியாதையையும்நன்மையையும் அதிகப்படுத்து என்று பிரார்த்தனை செய்வார்கள்.

அறிவிப்பவர் : இப்னு ஜுரைஜ்,

நூல் : முஸ்னத் ஷாஃபீ

இந்தஹதீஸை இப்னு ஜுரைஜ் என்பவர் அறிவித்துள்ளார். இவர் தாபியீ ஆவார்.(நபித்தோழர்கள் வாழ்ந்த
காலத்தில் இருந்தவர்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில்நடந்த சம்பவத்தைக் குறிப்பிட
வேண்டுமானால் அதை நபித்தோழர்கள் மட்டுமேகுறிப்பிட முடியும். இவர் அடுத்த காலத்தில்
வாழ்ந்தவர் என்பதால் இந்தச்செய்தியை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

அதே நேரத்தில் கஃபத்துல்லாஹ்விற்கு உள்ளே சென்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பிரார்த்தனை
செய்தார்கள் என்பதற்கு ஆதாரப்பூர்வமான செய்திகள் உள்ளன.

(மக்கா வெற்றிகொண்ட நாளில்) நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் இறையில்லம் கஅபாவிற்குள்
நுழைந்ததும் அதன் அனைத்து திசைகளிலும்பிராத்தனை புரிந்தார்கள். (கஅபாவிற்குள்)
தொழாமலேயே அதிலிருந்து வெளியேறிவிட்டார்கள். வெளியே வந்ததும் கஅபாவிற்கு முன்னே
(நின்று இரண்டு ரக்அத்கள்தொழுதுவிட்டு, "இதுதான் கிப்லா (தொழும் திசை) என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),

நூல் : புகாரி (398)

onlinepj.com

Wednesday, October 3, 2012

காந்திப் படுகொலையும் , கோட்ஸே சொல்லும் காரணங்களும்
சுதந்திர இந்தியா ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 2-ஆம் தேதியை காந்தி பிறந்த தினமாகவும், ஜனவரி 30-ஆம் தேதியை இரத்தசாட்சி தினமாகவும் அனுஷ்டித்து வருகிறது. ஆனால், காந்தி ஏன் கொல்லப்பட்டார்? என்பது மறந்துபோன ஒன்றாக மாறிவிட்டது.

காந்தி என்ற மகாத்மா, அவரைக் கொன்ற கொலைகாரன் கோட்ஸே, அவனது கும்பல் பரப்புரைச் செய்த அரசியல் சித்தாந்தம், அன்று நீடித்த தேசிய சூழல், சர்வதேச சூழல்கள், நீதிமன்றத்தில் கோட்ஸே வெளியிட்ட காரணங்கள்-ஆகியவற்றை இணைக்க முயன்றால் பல இடங்களில் பொருத்தமில்லாமையை நாம் உணரலாம். ஆகையால் காந்தி படுகொலை குறித்த மீளாய்வில் கூடுதலாக ஏதேனும் கூறவேண்டியது அவசியமாகும்.

1966-ஆம் ஆண்டுவரை காந்தி படுகொலை குறித்த ஆவணங்கள் மறைத்து வைக்கப்பட்டதற்கு மக்களின் மறதிக்கு நீண்ட ஆயுள் உண்டு என்பதுதான் காரணமா?

1948-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ஆம் தேதி மாலை 5.10 க்கு பிர்லா ஹவுஸிலிருந்து பிரார்த்தனை ஹாலிற்கு புறப்பட்டுச் சென்ற காந்தியடிகளை வினாயக் நாதுராம் கோட்ஸே என்பவன் வழியில் தடுத்து நிறுத்தி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். கோட்ஸேயை தவிர காந்தியடிகளுடன் வந்தவர்கள் அனைவரும் பயந்து ஓடினர். தப்பிக்க கூட முயலாமல் கோட்ஸே தனது இரு கரங்களையும் நீட்டி போலீசாரை அழைத்து தன்னை கைது செய்ய கோரினான்.

பின்னர் நடந்த விசாரணையில் கோட்ஸே நீதிமன்றத்தில் 5 மணிநேரம் கொலையை நியாயப்படுத்தி வாக்குமூலம் அளித்தான். காந்தியை கொலை செய்தது குறித்து பெருமைக் கொள்வதாகவும், இக்கொலை முன்னரே நிகழ்த்தியிருக்க வேண்டியது எனவும் கூறினான்.

கோட்ஸே காந்தியை கொலைச் செய்ய கூறிய முக்கிய காரணங்களை பார்ப்போம்:

1.‘ஹிந்து-முஸ்லிம் பிரச்சனைகளில் காந்தி முஸ்லிம்களை திருப்திப்படுத்துவதிலேயே குறியாக இருந்தார்.

2. ஜின்னாவின் தேசப் பிரிவினைக்கு ஆதரவளித்தார்.

3.பிரிவினைக்கு பிறகும் அரசு கருவூலத்திலிருந்து பங்குத் தொகையான 55 கோடி ரூபாயை பாகிஸ்தானுக்கு அளிக்கவேண்டும் என காந்தி இந்தியாவுக்கு நிர்பந்தம் அளித்தார்.

4. பிரிவினையை தொடர்ந்து உருவான கலவரத்தில் காந்தி ஹிந்துக்களை நிராயுதபாணிகளாக மாற்றினார்.

5.காந்தி பாகிஸ்தானின் தேசத் தந்தையாவார்.’

என்பதாகும்.

கோட்ஸேவின் இக்கூற்று உண்மைக்கு உகந்ததா?
என்பதை ஆராய நீதிமன்றம் தயாராகவில்லை. குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி நீதிமன்றம் தண்டனையை வழங்கியது.

கோட்ஸே, நாராயணன் ஆப்தே ஆகியோருக்கு மரணத் தண்டனையும், இதர நான்கு பேருக்கு ஆயுள்தண்டனையும் விதிக்கப்பட்டன. சாவர்க்கர் மீதான குற்றத்திற்கு ஆதாரமில்லை எனக்கூறி நீதிமன்றம் அவரை விடுவித்தது. காந்தி படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான சவர்க்கரை குற்றமற்றவர் என கூறி நீதிமன்றம் விடுதலைச் செய்தது விவாதத்தை கிளப்பியது.

பின்னர் காந்தி படுகொலையை குறித்து மறுவிசாரணை நடத்திய கபூர் கமிஷன் கண்டறிந்தது என்னவெனில் காந்தி படுகொலையில் சாவர்க்கர் முக்கிய சூத்திரதாரி என்பதாகும். இதுக்குறித்து மீண்டும் ஆய்வுச்செய்தால் மேலும் பல உண்மைகள் வெளிவரலாம். விசாரணையின் போது காந்திக்கு எதிராக கோட்ஸே முன்வைத்த குற்றச்சாட்டுகளின் உண்மை நிலையை குறித்து புரிந்துக் கொள்வதற்கான மீளாய்வை காந்தியிலிருந்தே நாம் துவங்குவோம்.


1947-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ‘ஹிந்துராஷ்ட்ரா’ என்ற நாளிதழில் கோட்ஸே இவ்வாறு எழுதினான்:

‘சகோதரர்களே! நமது தேசம் துண்டிக்கப்பட்டுவிட்டது!’

பின்னர் காந்திக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக எழுதுகிறான்,

‘பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்ததன் மூலம் நீங்கள் பாரதத்தின் நெஞ்சத்தை கோடாரியால் பிளந்து விட்டீர்கள். நீங்கள் உங்கள் கொள்கையை மாற்றவில்லையெனில் அதற்கு மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டிவரும்’.

ஆனால் நாடு பிரிவினையை குறித்து வரலாறு கூறுவது இதற்கு மாற்றமானதாகும். தேசப் பிரிவினையை கடுமையாக எதிர்த்தவர் காந்தியடிகள் ஆவார். காலனியாதிக்க ஹிந்துத்துவா சக்திகள் பல பத்தாண்டுகளுக்கு முன்பே பிரிவினைக்கு ஆதரவான சூழலை வளர்த்துக்கொண்டு வந்தனர்.

1921-ஆம் ஆண்டு சாவர்க்கர் எழுதிய ‘ஹிந்துத்துவா’ என்ற நூலில் இவ்வாறு கூறுகிறார், ’ஹிந்துவும், முஸ்லிமும் இரண்டு தேசங்கள் ஆவர்’.

1923-ஆம் ஆண்டு ஹிந்து மகாசபையின் மாநாட்டில் மதன்மோகன் மாளவியா உரை நிகழ்த்தினார். அதில் அவர்,’இந்தியா ஒருபோதும் ஒரு ஒன்றிணைந்த தேசம் அல்ல’ என தெரிவித்தார்.

1924-ஆம் ஆண்டு லாலா லஜபதிராய் ‘த ட்ரிப்யூன்’ பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டது என்னவெனில், ’இந்தியா தனி நாடல்ல’ என்பதாகும்.

1937-ஆம் ஆண்டு கோட்ஸேவின் சித்தாந்த குரு சவர்க்கர் அஹ்மதாபாத்தில் நடந்த ஹிந்து மகாசபை மாநாட்டில் கூறியது என்னவெனில், ’இந்தியாவால் ஒரு ஒன்றிணைந்த நாடாக மாற இயலாது’ என்பதாகும். இந்த கருத்துக்களையெல்லாம் காந்தி அங்கீகரிக்கவில்லை.

1940-ஆம் ஆண்டு லாகூர் தீர்மானத்தின் மூலம் முஸ்லிம் லீக் ’பாகிஸ்தான்’ என்ற வாதத்தை முன்வைத்தது. இதனையும் காந்தியடிகள் அங்கீகரிக்கவில்லை. ஆனால்,

1945-ஆம் ஆண்டு காங்கிரஸைச் சார்ந்த ஜவஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல் உள்ளிட்ட தலைவர்களும், கம்யூனிஸ்ட் கட்சியும் பிரிவினைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தனர். அப்பொழுது கூட காந்தி பிரிவினையை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்தார்.

ஒரு கட்டத்தில் ஜின்னாவை பிரதமராக்கி பிரிவினையை தவிர்க்கலாம் என ஆலோசனை தெரிவித்தார். அதேவேளையில், ஷியாம்பிரசாத் முகர்ஜி போன்ற காலனியாதிக்க ஹிந்துத்துவாவாதிகள் பிரிவினைக்கான ரகசிய செயல்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

முஸ்லிம்களும், தலித்துகளும் ஒன்றிணைந்தால் உயர் ஜாதியினர் அதிகாரத்தின் படிக்கட்டுகளுக்கு வெளியே சென்றுவிடக் கூடிய சூழல் ஏற்பட்டுவிடும் என ஷியாம் பிரசாத் முகர்ஜி அஞ்சினார். இறுதியாக தலைபோனாலும் பரவாயில்லை, தலைவலி மாறினால் போதும் என்ற முடிவை காங்கிரஸ் செயற்குழு எடுத்தது. அங்கேதான் காந்தி மெளனியாக மாறினார்.

கோட்ஸே நீதிமன்றத்தில் வரலாற்றை வளைத்ததற்கு காரணம் ஏதோ ஒன்றை மூடி மறைப்பதற்காகும். கோட்ஸே காந்தி படுகொலைக்கு கூறிய அடுத்த காரணம்,

அரசு கருவூலத்திலிருந்து பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டிய பங்கான 55 கோடி ரூபாயை இந்தியா முடக்கி வைத்தபோது காந்தி தலையிட்டு பாகிஸ்தானுக்கு அப்பணத்தை கொடுக்கவேண்டும் என கூறினார் என்பதாகும்.

இங்கே புரியாத காரணம் என்னவெனில், நாட்டை பிரிப்பதற்கான திட்டங்களை தீட்டிய சங்க்பரிவாரத்திற்கு நாடு துண்டாடப்பட்டதை விட பெரிதா 55 கோடி ரூபாய்? என்பதாகும்.

ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டிய 55 கோடி ரூபாயை அந்நாட்டிற்கு வழங்கவேண்டும் என காந்தி கூறியது அவரை கொலைச்செய்ய எவ்வாறு காரணமாகும்? அவ்வாறெனில் நானூறு ஆண்டுகள் இந்தியாவை காலனியாதிக்க நாடாக மாற்றி ஆட்சிபுரிந்த பிரிட்டீஷார் இந்தியாவின் பெரும் செல்வங்களை கொள்ளையடித்தனர். ஆனாலும், சங்க்பரிவாரத்திற்கு ஏன் பிரிட்டீஷாரின் மீது துவேசம் ஏற்படவில்லை? 55 கோடி ரூபாய் விவகாரத்தில் காந்தி யாரையும் திருப்திப்படுத்துவதற்காக செயல்படவில்லை. மாறாக, உண்மை என்று தான் கருதியதை ஆதரித்ததேயாகும்.

அடுத்த காரணமாக கோட்ஸே கூறியது, முஸ்லிம்களை திருப்திப்படுத்துவதிலேயே காந்தி குறியாக இருந்தார் என்பதாகும். “பிரிவினையைத் தொடர்ந்து நடந்த வகுப்பு கலவரத்தில் காந்தி ஒருதலைபட்சமாக ஹிந்துக்களிடம் கலவரத்திலிருந்து விலகுமாறு கோரி உண்ணாவிரதம் இருந்தார். இதன் காரணமாக ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் வன்புணர்வுக்கு பலியாகினர்”. இதிலும் உண்மை கோட்ஸேவிற்கு எதிராகவே அமைந்துள்ளது.

ஜவஹர்லால் நேரு 1947-ஆம் ஆண்டு வல்லபாய் பட்டேலுக்கு எழுதிய கடிதத்தில், “கலவரத்தின் பின்னணியில் அதிகமாக செயல்படுவது ஹிந்துக்களும், சீக்கியர்களும்தான்” என தெரிவித்துள்ளார்.

எந்த வன்முறையையும் எதிர்க்கவேண்டும் என்பது காந்தியின் அகிம்சை கொள்கையின் ஒரு பகுதியாகும். வன்முறை உருவானதன் காரணமாக ஒரு கட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தை கூட காந்தி நிறுத்தி வைத்தார்.

1921-ஆம் ஆண்டு ஒத்துழையாமை போராட்ட வேளையில் சவுரிசவ்ரா என்ற இடத்தில் வன்முறை வெடித்தபொழுது காந்தி போராட்டத்தை வாபஸ் பெற்றார். கிலாஃபத்தின் நிழலில் வளர்ந்துவந்த கேரளாவின் மாப்பிள்ளைகள் போராட்டத்தில் சில அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்ததாக கேள்விப்பட்ட வேளையில் மலபார் போராட்டத்தை காந்தி கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். இவ்விவகாரத்தில் கோட்ஸே உண்மையை மூடி மறைத்துள்ளார்.

இந்நிலையில், கோட்ஸே கூறிய காரணங்களெல்லாம் பொய்யானவையாக இருக்கும்போது ஒரு கேள்வி மட்டும் எஞ்சியிருக்கிறது. ஏன் காந்தி கொல்லப்பட்டார்? என்பதுதான் அக்கேள்வி.

இதனைப் புரிந்துக்கொள்ள வேண்டுமெனில் ஏகாதிபத்திய-சியோனிஷ்டுகளுடன் சங்க்பரிவார்களுக்கு இருந்த ரகசிய உறவை அடையாளம் காணவேண்டும்.

சாவர்க்கரும் அவரது கூட்டாளிகளும் வளர்த்தது தேசிய ஹிந்துத்துவ அரசியல் அல்ல. மாறாக ஏகாதிபத்திய-சியோனிஷ விருப்பங்களை பாதுகாக்கும் காலனியாதிக்க ஹிந்துத்துவா அரசியலாகும்.

அது ஒரு ஏகாதிபத்திய கொள்கையை அடிப்படையாக கொண்ட சித்தாந்தம். ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் கலாச்சாரத்தையும், நம்பிக்கையையும் மாற்றியமைத்து தங்களுக்கு சாதகமான காலனியாதிக்க மனோநிலையை உருவாக்குவதுதான் இவர்களது திட்டம். அதற்காக புதிய அமைப்புகள், மதங்கள், மனித தெய்வங்கள் என எதனையும் ஏகாதிபத்திய சக்திகள் உருவாக்கும்.

காங்கிரஸ் என்றதொரு இயக்கத்தை உருவாக்கியது ஏ.ஓ.ஹ்யூம் என்ற பிரிட்டீஷ் காரர் ஆவார் என்பது இங்கே சிந்திக்கவேண்டிய விஷயமாகும்.

இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து ‘காதியானிசம்’ என்றதொரு காலனியாதிக்க பிரிவை உருவாக்கினர்.

அதுபோலவே சங்க்பரிவார் என்ற காலனியாதிக்க ஹிந்துதுத்துவா இயக்கமும் உருவானது.

நாத்திகவாதியான சாவர்க்கர் தனது இளமைப் பருவத்தில் பிரிட்டீஷ் எதிர்ப்பு போராட்டங்களில் விருப்பங்காட்டினார்.

1857-ஆம் ஆண்டு நடந்த முதல் சுதந்திர போராட்டத்தைக் குறித்து சாவர்க்கர் 1909 ஆம் ஆண்டு ஒரு நூலை எழுதினார். அதில் ஹிந்துக்களும், முஸ்லிம்களும் ஐக்கியத்துடன் போராடியதை குறிப்பிடுகிறார். மேலும் முஸ்லிம்கள் செய்த தியாகத்தை தனியாக பாராட்டி எழுதியுள்ளார்.

பின்னர் உயர்கல்வியை கற்பதற்காக சவர்க்கர் பிரிட்டனுக்கு சென்றார். ஆனால், அங்கே அவர் சற்று தீவிரமாக இந்திய அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சாவர்க்கரின் நண்பர் ஒரு பிரிட்டீஷ்காரரை கொலைச்செய்த வழக்கில் சாவர்க்கரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். விசாரணையில் நீதிமன்றம் அவருக்கு ஆயுள்தண்டனையை விதித்தது. இதனைத் தொடர்ந்து அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் வைத்து அவரது அரசியல் சித்தாந்தம் மாற்றம் அடைந்தது.

வாழ்க்கை முழுவதையும் சிறையில் கழிப்பதை விரும்பாத சாவர்க்கர் பிரிட்டீஷ் அரசுடன் சமாதானமாக செல்லும் நோக்கில் மன்னிப்பு கடிதத்தை எழுதினார்.

பிரிட்டீஷ் எதிர்ப்பு செயல்பாடுகளிலிருந்து விலகுவதும், மீதமுள்ள காலத்தை பிரிட்டீஷாருக்கு சேவை புரிவதில் கழிப்பதும் அக்கடிதத்தின் உள்ளடக்கமாகும்.

1913-ஆம் ஆண்டு அந்தமான் சிறையை பார்வையிட சென்ற பிரிட்டீஷ் அதிகாரி ஸர் ரெஜினால்ட் க்ராடக்குடன் சாவர்க்கர் ரகசிய பேச்சுவார்த்தையை நடத்தினார். இதன் பலனாக, சிறையில் படிப்பு மற்றும் ஆய்வில் ஈடுபடவும், வெளி உலகத்துடன் தொடர்புக் கொள்ளவும் அதிக சுதந்திரம் அவருக்கு கிடைத்தது. இவ்வாறு அந்தமான் சிறையில் வைத்து

1921-ஆம் ஆண்டு சவர்க்கர் ‘ஹிந்துத்துவா’ என்ற நூலை எழுதினார். ’ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒரு தேசமல்ல’ என்ற வாதத்தை இந்நூலில் அவர் குறிப்பிடுகிறார்.

1925-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் உருவானபோது சாவர்க்கர் சிறையில் இருந்தார். அவ்வியக்கத்தின் துவக்க விழாவில் பங்கேற்க தனது பிரதிநிதியாக தனது சகோதரர் கோபால் கோட்ஸேவை அனுப்பி வைத்தார்.

சங்க்பரிவாரத்தின் ‘காந்தி எதிர்ப்பு’ கொள்கை பிரிவினையின் பிறகு உருவானதல்ல.

1926-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் ஹெட்கேவார், ”காந்தியின் அகிம்சை வழி நாட்டில் அதிகரித்துவரும் ஆவேசத்தை கெடுத்துவிடுகிறது. ஆகையால் காந்தியை ஆதரிக்க இயலாது” என தெரிவித்தார்.

ஆனால், மறுபுறம் நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் ஆயுத போராட்டத்தையும் ஆர்.எஸ்.எஸ் எதிர்த்தது. இதற்கான காரணத்தை ஆர்.எஸ்.எஸ் விளக்கவில்லை. காங்கிரஸ் நடத்திய அனைத்து போராட்டங்களையும் ஆர்.எஸ்.எஸ் எதிர்த்தது.

ஒத்துழையாமை இயக்கம், தண்டி யாத்திரை, சைமன் கமிஷனுக்கு எதிரான போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய போராட்டங்களில் "ஆர்.எஸ்.எஸ் முதுகில் குத்தியது."

இரண்டாவது உலகப்போர் நடைபெற்ற வேளையில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர்களில் ஒருவரான ஷியாம் பிரசாத் முகர்ஜி பிரிட்டீஷ் ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில், ”போர் உறுதியாகிவிட்டது. இக்கட்டத்தில் காங்கிரஸ் போராட்டத்தை வலுப்படுத்தினால் பிரிட்டீஷ் அரசு அதனை கடுமையாக எதிர்கொள்ளவேண்டும்” என தெரிவித்தார்.

1948-ஆம் ஆண்டு காந்தி படுகொலையின் விசாரணை வேளையில் கோட்ஸே கூறியவை 1947-ஆம் ஆண்டிற்கு பிறகு நடந்த நிகழ்வுகளுடன் தொடர்புடையவனவாகும். அவ்வாறெனில், 1944-ஆம் ஆண்டு காந்தியை கொல்ல ஏன் கோட்ஸே விரும்பினார்? சுருக்கமாக கூறவேண்டுமெனில், கோட்ஸே காந்தியை படுகொலைச் செய்ய தூண்டியதற்கு கூறிய காரணங்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவையாகும்.

மனிதர்களை நேசித்த காந்தியடிகளுக்கு ஹிந்து விரோதமோ, முஸ்லிம் விரோதமோ, பிரிட்டீஷ் விரோதமோ இல்லை.

பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் வேளையிலும் நெருக்கடியான காலக்கட்டங்களில் பிரிட்டீஷாருக்கு உதவியுள்ளார். பிரிட்டனுக்கும், டச்சுக்காரர்களுக்கும் (நெதர்லாந்து) இடையே நடந்த போவர் போர், முதல் உலகப்போர் ஆகியவற்றில் பிரிட்டீஷாருக்கு ஆதரவாக சேவை புரிந்தார்.

சமூகத்தில் காணப்படும் அநீதி, சுரண்டல் ஆகியவற்றை எதிர்ப்பை தனது வாழ்க்கை முறையாக கொண்டவர் காந்தியடிகள். ஆகையால்தான் இருபது ஆண்டுகளாக நீடித்த ஆப்பிரிக்க போராட்டம் முடிந்து இந்தியாவுக்கு திரும்பியதும் ஓய்வெடுக்காமல் பிரிட்டீஷாருக்கு எதிராக போராட துவங்கினார்.


இவ்வேளையில் உலகின் பல இடங்களில் நடந்த அநீதிக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.


அதில் முக்கியத்துவம் வாய்ந்தது 1938-ஆம் ஆண்டு "சியோனிஸ்டுகள் ஃபலஸ்தீனை ஆக்கிரமித்ததை எதிர்த்து, அரபுக்களின் உரிமைகளை ஆதரித்து குரல் கொடுத்ததாகும்."

காந்தியின் நிலைப்பாடு சியோனிஸ்டுகளுக்கு சர்வதேச தளத்தில் மிகப்பெரிய தலைவலியாக மாறியது.

அதேவேளையில் சாவர்க்கரும் அவரது கூட்டாளிகளும் சியோனிஸ்டுகளை ஆதரித்தனர். இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு காந்தி அதிகாரத்தில் பங்கேற்காமல், ஓய்வெடுக்காமல் மற்றொரு போராட்டத்திற்கு செல்வார் என்பதை சியோனிஸ்டுகள் புரிந்துக்கொண்டனர். ஆதலால் காந்திக்கு தடை விதிப்பது அவர்களது முக்கிய தேவையாக இருந்தது.

இந்த பணியை ஏற்றுக் கொண்டவர்கள் இந்தியாவில் சியோனிஸ்டுகளின் நம்பிக்கை பாத்திரமான காலனியாதிக்க ஹிந்துத்துவா சக்திகளாவர்.

காந்தி படுகொலையின் பலனை யார் அனுபவித்தார்கள் என்பதும், யாரெல்லாம் ஆதாயம் பெற்றார்கள் என்பதையும் ஆராயவேண்டும்.

முதலாவதாக, சர்வதேச தளத்தில் பெரும் சலனங்களை உருவாக்கிய காந்தியின் சியோனிஷ எதிர்ப்பு அணைந்து போனது.

இரண்டாவதாக ஆர்.எஸ்.எஸ்ஸின் காலனியாதிக்க ஹிந்துத்துவா சித்தாந்தத்தின் முகத்திற்கு தேசிய ஹிந்துத்துவா முக மூடியை அணியவும் சாத்தியமானது.

தொடர்ந்து உருவாக்கிய முஸ்லிம் எதிர்ப்பு அரசியல் கொள்கையின் மூலமாக தாங்கள்தாம் ஹிந்துக்களின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி என்ற உணர்வை சாமான்யர்களின் உள்ளங்களில் நிறுவுவதை முக்கிய பணியாக கொண்டு செயலாற்றி வரும் ஆர்.எஸ்.எஸ் இந்தியாவின் மிகப்பெரும் அழிவுசக்தியாக மாறிவருகிறது என்பதை அண்மையில் இந்த தேசத்தை உலுக்கிய குண்டுவெடிப்புகள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன.Reference By : விடியல் வெள்ளி அக்டோபர்-2011 & http://www.thoothuonline.com/

காமராஜர் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 25 தகவல் துளிகள் இவை...


                        
 இனம் காட்டும் நிறம். குணம் சொல்லும் உடை. தைரியம் அறிவிக்கும் உடல். வணங்கத் தோன்றும் முகம்... என நாலும் இணைந்த நல்லவர் காமராஜர்! 25 துளிகளுக்குள் அடக்கிவிட முடியாத மகா சமுத்திரமாக வாழ்ந்த கர்மவீரர்!

* காமாட்சி என்பது பெற்றோர் வைத்த பெயர். ராஜா என்றே உறவினர்கள் அழைத்தார்கள். காமாட்சியும் ராஜாவும் காலப் போக்கில் இணைந்து காமராஜ் ஆனது. டெல்லிக்காரர்களுக்கு 'காலா காந்தி', பெரியாருக்கு 'பச்சைத் தமிழர்', காங்கிரஸ்காரர்களுக்கு 'பெரியவர்'. இன்று வரை பெருந்தலைவர் என்றால் அவரே!

* 'இதெல்லாம் என்ன பேச்சுன்னேன்', 'அப்படி ஏன் சொல்றேன்னேன்', 'ரொம்ப தப்புன்னேன்', 'அப்பிடித்தானேங்கிறேன்', 'அப்ப பாப்போம்', 'ஆகட்டும் பார்க்கலாம்' போன்றவை அவர் அடிக்கடி பயன்படுத்தும் வாசகங்கள்!

* நிறையப் பேரிடம் வரிசையாக ஆலோசனை கேட்கும் பிரதமர் நேரு, கடைசியில் காமராஜர் சொன்னதை அறிவித்து முடிப்பார். உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைக்கக் கூடாது என்ற கொள்கை கொண்ட நேரு, அதை மீறித் திறந்த சிலை இவருடையதுதான்!

* அரசியலில் அவருக்கு குரு தீரர் சத்திய மூர்த்தி. ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக காமராஜ் இருக்க... செயலாளராகச் செயல்பட சத்தியமூர்த்தி மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டார்!

* தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், 'கொஞ்சம் நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், 'அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்!

* மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!

* சினிமா அவருக்குப் பிடிக்காது. 'ஒளவையார்' விரும்பிப் பார்த்திருக்கிறார். 'ராஜபார்ட் ரங்கதுரை' படத்தைப் போட்டுக் காண்பித்திருக்கிறார்கள். அவர் கடைசியாகப் பார்த்த படம் 'சினிமா பைத்தியம்'!

* சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், 'கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க' என்று வாங்க மறுப்பார்!

* மகன் முதலமைச்சரானதும் அம்மா சிவகாமிக்கு அவருடன் தங்க ஆசை. 'நீ இங்க வந்துட்டாஉன்னைப் பார்க்கச் சொந்தக்காரங்க வருவாங்க. அவங்களோட கெட்ட பேரும் சேர்ந்து வந்துடும். அதுனால விருது நகர்லயே இரு' என்று சொல்லிவிட்டார். அந்த வீட்டையாவது பெரிதாக்கி கட்டித் தரக் கேட்டபோதும் மறுத்துவிட்டார்!

* பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது தடுத்தார். 'நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க?' என்று கமென்ட் அடித்தார்!

* இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். 'கிங் மேக்கர்' என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்!

* பத்திரிகையாளர்களுக்கு அவரது அறிவுரை... 'ஒண்ணு, நீங்க பத்திரிகைக்காரனா இருங்க. அல்லது அரசியல்வாதியாவோ பிசினஸ்மேனாவோ இருங்க. மூணாகவும் இருக்க முயற்சி பண்ணாதீங்க!'

* மூத்தவர்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து விலகி, கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற 'கே.பிளான்' போட்டுக் கொடுத்த இவரே முதல் ஆளாகப் பதவி விலகினார். 'எனக்கு எந்தப் பற்றும் இல்லைன்னு காட்டினாதான் மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ண முடியும்' என்றார்!

* ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசுவார். பத்திரிகையாளர் சாவி ஒருமுறை சந்திக்கச் சென்றபோது ஜான் கன்டர் எழுதிய இன்சைட் ஆப்பிரிக்கா என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருந்தாராம்!

* அவரளவுக்குச் சுருக்கமாக யாராலும் பேச முடியாது. உ.பி-யில் ஒரு பிரஸ்மீட். 50 கேள்விகளுக்கு ஏழு நிமிடத்தில் பதில் சொன்னாராம். இரண்டரை மணி நேரத்தில் எட்டு ஊர்களில் கூட்டம் பேசியிருக்கிறார். இசை விழாவைத் தொடக்கிவைக்க அழைத்தார்கள். 'இசை விழாவைத் தொடக்கிவைப்பதில் பெருமைப்படுகிறேன்' என்று மட்டுமேசொல்லி விட்டு இறங்கினார்!

* நாற்காலியில் உட்காருவது அவருக்குப் பிடிக்காது. சோபாவில் இரண்டு பக்கமும் தனது நீளமான கைகளை விரித்தபடி உட்காரவே விரும்புவார். முதல்வராக இருந்தபோதும் தலைமைச் செயலகத்தில் பிரத்யேகமாக சோபா வைத்திருந்தார்!

* கடிகாரம் கட்ட மாட்டார். சின்ன டைம்பீஸைத் தனது பையில் வைத்திருப்பார். தேவைப்படும்போது எடுத்துப் பார்த்துக்கொள்வார்!

* 'ஆறாவது வரை படித்தவர்தானே! என்ற அலட்சியத்துடன் முதல்வர் காமராஜரின் அறைக்குள் அலட்சியமாக நுழைவார்கள் அதிகாரிகள். வெளியே வரும்போது அவர்களின் வால், கால்சட்டைக்குள் மடக்கிச் சொருகப்பட்டு இருந்தது!' என்று அவரது அறிவாற்றலை மெச்சினார் ஆர்.வெங்கட்ராமன்!

* தான் முதலமைச்சரானபோது தன்னை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக நின்ற சி.சுப்பிரமணியத்தையும் அவரது பெயரை முன் மொழிந்த பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் இணைத்துக்கொண்டார்!

* தனது வலதுகரமாக இருந்த ஜி.ராஜகோபாலன் இறந்தபோது மட்டும்தான் காமராஜரின் கண்கள் லேசாகக் கலங்கினவாம். தாய் சிவகாமி இறந்தபோதுகூட அழவில்லை அவர்!

* 'தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளோடுஒட்டோ, உறவோ இல்லை. இந்தக் கட்சிகளோடு உறவு வைத் துள்ள கட்சிகளோடும் உறவு இல்லை' - காமராஜர் கூட்டிய கடைசி நிர்வாகக் கமிட்டியில் நிறைவேற்றப்
பட்ட தீர்மானம் இது. இதை அவரது மரண சாசனம் என்பார்கள்!

* விருதுநகர் தொகுதியில் அவர் தோற்றபோது கட்சிக்காரர்கள் அழுதார்கள். 'இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!' என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னவர்.

* கோடை காலத்தில் இரண்டே இரண்டு நாட்கள் குற்றாலத்தில் போய் தங்கிவிட்டு வருவார். அவரது அதிகபட்ச சந்தோஷமாக அதுதான் இருந்திருக்கிறது!

* ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்!

* இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த காமராஜருக்கு 1975 அக்டோபர் 2-ம் தேதி அதிகமாக வியர்த்தது. டாக்டர் அண்ணாமலைக்கு அவரே போன் செய்துவிட்டு, 'டாக்டர் வந்தா எழுப்பு... விளக்கை அணைச்சிட்டுப் போ' என்றார். அதுவே அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை. டாக்டர் வரும்போது காமராஜர் அணைந்துவிட்டார்!

- ப.திருமாவேலன்

புனிதஹஜ்ஜுக்குப் புறப்படுவதற்கு முன்...........


                                                
புனித ஹஜ்ஜுக்குப் போய் வருவதற்கு- ஹலாலான முறையில் சம்பாதித்த பணத்தை மட்டுமே பயண்படுத்துங்கள். பல்வேறு சிரமங்களுக்குக் கிடையே செய்யும் புனிதப் பயணம், விழலுக்கு இறைத்த நீராக வீணாகி விடக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.

உற்றார் உறவினர், உடன் பிறந்தோர், அண்டை அயலார், அனைவரிடமும் விடை பெறும் போது- அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டு- பிராயச் சித்தம் தேடியவர்களாப் புறப்படுங்கள்.
கடன்கள் இருந்தால்- கொடுத்து முடித்து- அல்லது போய் வந்த பிறகு இன்ஷா அல்லாஹ் தருவதாக வாக்களித்து, கடன் கொடுத்தவுர் அதை மனமார ஏற்றுக் கொண்டால் மட்டுமே, ஹஜ்ஜுக்குப் புறப்பட ஆயத்தமாகுங்கள்.
புகழுக்காகவும், பெருமைக்காகவும், ஆடம்பரத்துக்காகவும் இல்லாமல் மெய்யாகவே இறைவனின் கட்டளையை நிறைவேற்றும் எண்ணத்தை இதயத்தில் வைத்துப் புறப்படுங்கள்.
வசதிக்காக அதிகமான உடமைகளை உடன் எடுத்துச் செல்லாதீர்கள். சென்று திரும்பும் வரையுள்ள சில தினங்கள், சின்னஞ்சிறு சிரமங்களை சகித்துக் கொள்ளுங்கள். குறைவான உடமைகள் உங்கள் பயணத்தை எளிதாக்கும்.
அவசரத்திற்கு தேவைப்படும் மருந்து வகைகளையும், முதலுதவி மருந்துகளையும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி முன் கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
பயணத்தின் போது, வகை வகையான உணவுகளுக்கு முக்கியத்துவம் தராமல், எளிமைளான உணவுப் பழக்கத்தைக் கடைப் பிடியுங்கள். வழிப் பயணம் இலகுவாக இருக்கும்.
குறிப்பாக, ஹஜ்ஜுடைய நாட்களில், மினா அரபாத், முஸ்தலிபா, ஆகிய இடங்களில் எளிமையான உணவுகளை உண்ணுங்கள். அதிக நெரிசல் மிகுந்த இடங்களில் உங்கள் அவசரத் தேவைகளை நிறைவேற்ற அதிக நேரம் காத்திருக்க வேண்டி வரும்.
புனித ஹஜ்ஜுக்குப் புறப்பட்டதிலிருந்து- திரும்பவும் உங்கள் இல்லம் வந்து சேரும் வரை- வழிப் பயணத்திலும், புனிதத் தலங்களில் தங்கியிருக்கும் போதும், சக ஹாஜிகளுடன் அன்பாகப் பழகி, ஒருவருக் கொருவர் உதவியாக இருங்கள். எந்த வகையிலும் பிறருக்கு இடையூறு ஏற்படாதவாறு உங்கள் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளுங்கள்.
பல்வேறு குண நலன்கள் கொண்ட பலருடன் சேர்ந்து பயணம் மேற் கொள்ளும் போது, எல்லா வகையிலும் அணுசரித்துப் போகப் பழகிக் கொள்ளுங்கள். பொறுமையைக் கடைப் பிடியுங்கள்.
உடன் வரும் சக ஹாஜிகள்- முதியவர்களாக இருப்பின், அனைத்து வகையிலும் அவர்களுக்கு முன்னுரிமைக் கொடுத்து, அரவணைத்துச் செல்லுங்கள். அப்படி ஒரு முதுமை நமக்கு ஏற்படும்போது- நமக்கு உதவ சிலரை அல்லாஹ் ஏற்படுத்துவான்.
புனிதப் பயணம் மேற்கொள்ளும் பொன்னான வாய்ப்பை அடையப் பெற்றிருக்கிறீர்கள். வீண் பேச்சுக்கள், விதண்டாவாதம், சண்டை சச்சரவுகள், ஆகியவற்றைத் தவிர்த்து, அதிகமதிகம் இறைவணக்கத்தில் பொழுதைக் கழியுங்கள்.
மக்காவில் தங்கியிருக்கும் நாட்களில், மஸ்ஜிதுல் ஹராமிலும், மதீனாவில் தங்கியிருக்கும் நாட்களில், மஸ்ஜிதுன்னபவியிலும், ஐவேளைத் தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுவதில் கவனம் செலுத்துங்கள். இப்படி ஒரு வாய்ப்பு மறுபடியும் எப்போது கிடைக்கும் என்று சொல்ல முடியாது.

யுனெஸ்கோ தூதராக சவூதி அரேபியா பெண் விஞ்ஞானி தேர்வு...............!!


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே...............!!

யுனெஸ்கோ தூதராக சவூதி அரேபியா பெண் விஞ்ஞானி தேர்வு...............!!

ஐ.நா சபையின் கல்வி, கலாச்சார, விஞ்ஞான கழகமான யுனெஸ்கோ தனது நல்லெண்ணத் தூதராக சவூதி அரேபிய பெண் விஞ்ஞானி முனைவர். ஹயாத் சிந்தியை தேர்வு செய்துள்ளது. இளைய சமுதாயத்தவரிடம் விஞ்ஞான ஆர்வத்தைத் தூண்டி, கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தவராக டாக்டர் ஹயாத் அறியப்படுகிறார். கல்வயில், குறிப்பாக
விஞ்ஞான கல்வி குறித்த விழிப்புணர்வை இளைஞர்களிடமும் பெண்களிடமும் ஏற்படுத்துவது இந்தப் பதவியின் நோக்கமாகும.

"இலட்சியங்களை அடைவதில் டாக்டர் ஹயாவின் உறுதியும், நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகளின் பக்கம் இளைய சமுதாயத்தை ஈர்த்த அவருடைய பங்களிப்பும் போற்றுதலுக்குரியது. என்று யுனெஸ்கோ தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. " மத்திய கிழக்கிலும், அதற்கப்பாலும் டாக்டர் ஹயாத் ஆற்றிய விஞ்ஞான சேவைகளுக்கு இஃதோர் அங்கிகாரம்" என்று யுனெஸ்கோ தலைவர் ஐரினா பொகோவா தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

"1967ல் மக்காவில் பிறந்த ஹயாத், மருத்துவ வசதியை எட்ட முடியாத நிலையிலிருக்கும் எளியவருக்கும் நோய் பகுப்பாய்வை செய்வதற்கான எளிமையைக் கண்டறிந்தவர்" என்று பாரிஸை தலைமையகமாகக் கொண்ட யுனெஸ்கோ மேலும் கூறியுள்ளது.

"ஒரு விஞ்ஞானியின் பணி என்பது அடையத்தக்க எளிய தீர்வுகளைக் கண்டறிந்து சாதாரண மனிதர்களுக்கு அதைக் கிடைக்கச் செய்வது தான்" என்று டாக்டர் ஹயாத் குறிப்பிட்டுள்ளார். "முஸ்லிம்கள் விஞ்ஞான கண்டுபிடிப்புகளைக் கொண்டு மனித குலத்திற்கு நற்பணி ஆற்றிட வேண்டும்" என்றும் சொன்ன ஹயாத் தனக்குப் பிடித்த அறிவியலாளர்களாக அவிசென்னா, அல் குவாரிஸ்மி, மேடம் கியூரி, ஐன்ஸ்டீன் ஆகியோரைக் குறிப்பிட்டார்.

இஸ்லாம் பெண்களின் முக்காடு அணிந்து காணப்பட்ட முனைவர் ஹயா, உயிரி தொழிற்நுட்பத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். "நாம் எங்கு சென்றாலும் நம்முடைய அடையாளங்களை; கலாச்சாரங்களை விட்டுவிடக்கூடாது. அவற்றுக்காகப் பெருமிதம் அடைய வேண்டும்" என்றார் முனைவர் ஹயாத் "இன்றைய இளம் சமுதாயத்தினரிடையே அறிவியல் விழிப்புணர்ச்சி பெருகவும் பணியாற்றுவேன்".

யுனெஸ்கோ கலாச்சார பொதுத் தூதர்களின் பட்டியலில் நோபல் பரிசு பெற்ற நெல்சன் மண்டேலா, அமெரிக்க ஜாஸ் இசை விற்பன்னர் ஹெர்பி ஹென்காக், துபாயில் இருக்கும் கொடையாளர் சன்னி வர்க்கி, கியூபாவின் நடன அமைப்பாளர் அலிசியா அலொன்சொ ஆகியோரும் உள்ளனர் என்பது அறியத்தக்கது.

அல்ஹம்துலில்லாஹ்..............!!

Tuesday, October 2, 2012

"10000 times stronger killer of CANCER than Chemo".. do share it.. can save many lives, fill up hopes and build confidence in the patients...


"10000 times stronger killer of CANCER than Chemo".. do share it.. can save many lives, fill up hopes and build confidence in the patients...

The Sour Sop or the fruit from the graviola tree is a miraculous natural cancer cell killer 10,000 times stronger than Chemo.

Why are we not aware of this? Its because some big corporation want to make back their money spent on years of research by trying to make a synthetic version of it for sale.

So, since you know it now you can help a friend in need by letting him know or just drink some sour sop juice yourself as prevention from time to time. The taste is not bad after all. It’s completely natural and definitely has no side effects. If you have the space, plant one in your garden.
The other parts of the tree are also useful.

The next time you have a fruit juice, ask for a sour sop.

How many people died in vain while this billion-dollar drug maker concealed the secret of the miraculous Graviola tree?

This tree is low and is called graviola ! in Brazi l, guanabana in Spanish and has the uninspiring name “soursop” in English. The fruit is very large and the subacid sweet white pulp is eaten out of hand or, more commonly, used to make fruit drinks, sherbets and such.

The principal interest in this plant is because of its strong anti-cancer effects. Although it is effective for a number of medical conditions, it is its anti tumor effect that is of most interest. This plant is a proven cancer remedy for cancers of all types.

Besides being a cancer remedy, graviola is a broad spectrum antimicrobial agent for both bacterial and fungal infections, is effective against internal parasites and worms, lowers high blood pressure and is used for depression, stress and nervous disorders.

If there ever was a single example that makes it dramatically clear why the existence of Health Sciences Institute is so vital to Americans like you, it’s the incredible story behind the Graviola tree..

The truth is stunningly simple: Deep within the Amazon Rainforest grows a tree that could literally revolutionize what you, your doctor, and the rest of the world thinks about cancer treatment and chances of survival. The future has never looked more promising.

Research shows that with extracts from this miraculous tree it now may be possible to:
* Attack cancer safely and effectively with an all-natural therapy that does not cause extreme nausea, weight loss and hair loss
* Protect your immune system and avoid deadly infections
* Feel stronger and healthier throughout the course of the treatment
* Boost your energy and improve your outlook on life

The source of this information is just as stunning: It comes from one of America ‘s largest drug manufacturers, th! e fruit of over 20 laboratory tests conducted since the 1970's! What those tests revealed was nothing short of mind numbing… Extracts from the tree were shown to:

* Effectively target and kill malignant cells in 12 types of cancer, including colon, breast, prostate, lung and pancreatic cancer..
* The tree compounds proved to be up to 10,000 times stronger in slowing the growth of cancer cells than Adriamycin, a commonly used chemotherapeutic drug!
* What’s more, unlike chemotherapy, the compound extracted from the Graviola tree selectivelyhunts
down and kills only cancer cells.. It does not harm healthy cells!

The amazing anti-cancer properties of the Graviola tree have been extensively researched–so why haven’t you heard anything about it? If Graviola extract is

One of America ‘s biggest billion-dollar drug makers began a search for a cancer cure and their research centered on Graviola, a legendary healing tree from the Amazon Rainforest.

Various parts of the Graviola tree–including the bark, leaves, roots, fruit and fruit-seeds–have been used for centuries by medicine men and native Indi! ans in S outh America to treat heart disease, asthma, liver problems and arthritis. Going on very little documented scientific evidence, the company poured money and resources into testing the tree’s anti-cancerous properties–and were shocked by the results. Graviola proved itself to be a cancer-killing dynamo.
But that’s where the Graviola story nearly ended.

The company had one huge problem with the Graviola tree–it’s completely natural, and so, under federal law, not patentable. There’s no way to make serious profits from it.

It turns out the drug company invested nearly seven years trying to synthesize two of the Graviola tree’s most powerful anti-cancer ingredients. If they could isolate and produce man-made clones of what makes the Graviola so potent, they’d be able to patent it and make their money back. Alas, they hit a brick wall. The original simply could not be replicated. There was no way the company could protect its profits–or even make back the millions it poured into research.

As the dream of huge profits evaporated, their testing on Graviola came to a screeching halt. Even worse, the company shelved the entire project and chose not to publish the findings of its research!

Luckily, however, there was one scientist from the Graviola research team whose conscience wouldn’t let him see such atrocity committed. Risking his career, he contacted a company that’s dedicated to harvesting medical plants from the Amazon Rainforest and blew the whistle.

Miracle unleashed
When researchers at the Health Sciences Institute were alerted to the news of Graviola,! they be gan tracking the research done on the cancer-killing tree. Evidence of the astounding effectiveness of Graviola–and its shocking cover-up–came in fast and furious….

….The National Cancer Institute performed the first scientific research in 1976. The results showed that Graviola’s “leaves and stems were found effective in attacking and destroying malignant cells.” Inexplicably, the results were published in an internal report and never released to the public…

….Since 1976, Graviola has proven to be an immensely potent cancer killer in 20 independent laboratory tests, yet no double-blind clinical trials–the typical benchmark mainstream doctors and journals use to judge a treatment’s value–were ever initiated….

….A study published in the Journal of Natural Products, following a recent study conducted at Catholic University of South Korea stated that one chemical in Graviola was found to selectively kill colon cancer cells at “10,000 times the potency of (the commonly used chemotherapy drug) Adriamycin…”

….The most significant part of the Catholic University of South Korea report is that Graviola was shown to selectively target the cancer cells, leaving healthy cells untouched. Unlike chemotherapy, which indiscriminately targets all actively reproducing cells (such as stomach and hair cells), causing the often devastating side effects of nausea and hair loss in cancer patients.

…A study at Purdue University recently found that leaves from the Graviola tree killed cancer cells among six human cell lines and were especially effective against prostate, pancreatic and lung cancers Seven years of silence broken–it’s finally here!

உலகக் கோப்பை கேரம் சாம்பியன். வாழ்க்கை வறுமைக் கோட்டுக்குக் கீழே இருந்தபோதே கேரம் போட்டிகளில் உச்சக் கோடு தொட்ட பெண்... சாதித்த கதை சொல்கிறார்...


    
''எங்கப்பா கேரம் பிளேயர். வீட்ல நாங்க மூணு பேரும் பொண்ணுங்கதான். அப்பாவோ, அம்மாவோ, என்னைப் 'படி... படி'ன்னு சொன்னதே கிடையாது. ஆனா, அப்பா தினமும் என்னை கேரம்போர்டு விளையாடச் சொல்வாரு. மத்த பசங்களோடு விளையாட முடியாததால, எனக்கு கேரம்னா கொஞ்சம் வெறுப்பு. ஆனா, எனக்கு கேரம் கத்துக் குடுக்குறப்போ அப்பா கண்ல சின்னதா ஒரு பளபள. 'பையன் பொறந்திருந்தா, பெரிய கேரம் பிளேயர் ஆக்கி இருக்கலாமே'னு நினைக்குறாரோனு தோணுச்சு.


'பையனா இருந்தாலும் அவனுக்கும் கையில பத்து விரல்தானே இருக்கும். அவனால முடியும்னா, நம்மால முடியாதா?'ன்னு நிஜமா எனக்குள்ள ஒரு வீம்பு. கேரம் போட்டிகள்ல நிச்சயம் ஜெயிக்கணும்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன். அதுவரை கேரம் விளையாட்டு மேல எனக்கு இருந்த சின்ன வெறுப்பைப் பெரிய வெறியா மாத்தினேன். அப்பெல்லாம் மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் 'டோர்னமென்ட் போர்டு'கள்லதான் நடக்கும். நல்லா வழுவழுன்னு போட்டிகளுக்காகவே தயாரிக்கப்படுற போர்டுகள். அது வாங்க வசதியில்லாம சாதாரண கட்டை போர்டுலதான் நான் பிராக்டீஸ் பண்ணிட்டு இருந்தேன். அப்பாவோட ஃப்ரெண்ட் ஒருத்தர் வீட்ல டோர்னமென்ட் போர்டு இருந்துச்சு. தினமும் அதிகாலை நாலு மணில இருந்து ஆறு மணி வரை அதுல பிராக்டீஸ் பண்ணிட்டு, ஸ்கூலுக்குப் போவேன். சாயங்காலம் சும்மா இருக்கப் பிடிக்காம வீட்டு கட்டை போர்டுல பிராக்டீஸ் பண்ணிட்டு இருப்பேன். காலைல டோர்னமென்ட் போர்டுல ஸ்மூத்தா விளையாடிட்டு கட்டை போர்டுல விரல் நோக ஸ்டிரைக்கர் சுண்டுறதுக்குக் கடுப்பா இருக் கும். தினமும் காலைல அத்தனை சீக்கிரம் எழுந் திரிக்குறதுக்கும் கடுப்பா இருக்கும். ஆனா, அந்த வலி இருந்துட்டே இருந்தாதான் ஏதாவது ஒரு வழி திறக்கும்னு பொறுத்துக்கிட்டேன். முதல் வெற்றி கிடைக்கிற வரை என்னை நானே வாட்டிக்கிட்ட அத்தனை நாளும் இப்பவும் எனக்குச் சுளீர்னு ஞாபகம் இருக்கு!''

''ஆறாவது படிக்கிறப்போ ஜூனியர் கேரம் ஸ்டேட் டோர்னமென்ட்ல என்னைக் கலந்துக்கச் சொன்னாங்க பி.டி. டீச்சர் கலாவதியும் ஹெச்.எம். சந்திரா மேடமும். அதுக்கு முன்னாடி நான் பெரிய போட்டிகள்ல கலந்துக்கிட்டது கிடையாது. எனக்கு எதிரா விளையாடியது அப்போ ஸ்டேட் பிளேயரா இருந்தவங்க. சரசரன்னு என்னை அடிச்சுக் காலி செஞ்சுரலாம்னு வந்து உக்காந்தாங்க. 4:45-க்குள்ள என்னைத் தோக்கடிச்சுட்டு 5 மணி பஸ்ஸைப் பிடிக்கப் போற மாதிரியே இருந்துச்சு அவங்க ஒவ்வொரு ஆக்ஷனும்.


ஜெயிச்சே ஆகணும்னு உள்ளுக்குள்ள வெறியாயிருச்சு. என்கிட்ட இழக்குறதுக்கு எதுவும் இல்லை. ஆனா, ஜெயிச்சா உலகமே இருக்குன்னு நினைச்சுக்கிட்டு ஸ்டிரைக் பண்ண ஆரம்பிச்சேன். அன்னிக்கு எனக்கு கேம் அட்டகாசமா கை வந்துச்சு. 4:50 பஸ்ஸையே அவங்க பிடிக்கலாம்கிற அளவுக்கு கேம் அவ்வளவு சீக்கிரம் முடிஞ்சுது. ஆனா, ஜெயிச்சது நான். யோசிச்சுப் பார்த்தா, அன்னிக்கு என் மேல எந்த எதிர்பார்ப்பும் இல்லை. எனக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அதனால, என்னால இயல்பா இருக்க முடிஞ்சது. அந்த இயல்பை எந்தச் சூழ்நிலையிலும் இருத் திக்கிற மனப்பக்குவத்தைக் கத்துக்கொடுத்த முதல் வெற்றி அது. அதோடு ஸ்கூல் சார்பா எனக்கு டோர்னமென்ட் கேரம்போர்டும் வாங் கிக் கொடுத்த நாள்!''

''அடுத்தடுத்து நிறையப் போட்டிகள்ல கலந் துக்க ஆரம்பிச்சேன். நிறைய ஜெயிச்சேன். கொஞ்சம் கொஞ்சம் தோற்கவும் செஞ்சேன். எத்தனையோ போட்டிகள். ஆனா, நான் கலந்துகிட்ட முதல் ஆசியக் கோப்பைப் போட்டியை மறக்க முடியாது. 2005-ல மாலத்தீவுகள்ல நடந் தது. முட்டி மோதி ஃபைனல்ஸ் வரை வந்துட்டேன். ஃபைனல்ஸ்ல எனக்கு எதிரே நிர்மலா. அவங்கதான் அப்போ உலகத்துலயே டாப் பிளேயர். தொடர்ச்சியா நாலு உலகக் கோப்பை போட்டி ஃபைனல்ஸூக்கு வந்த ரன்னர்அப் அவங்க. முதல் செட்ல நான் ஆறு பாயின்ட். அவங்க 45. ரெண்டாவது செட்லயும் அவங்க லீடிங்.


'அதுக்குள்ள ஏன் நாம தோத்துட்டோம்னு நினைக்கணும்? இன்னும் அவங்க ஜெயிக்கலைதானே... அவங்களைக் கடைசி வரை ஜெயிக்கவிடாம பண்ணுவோம். அதுக்கப்புறம் நாம ஜெயிக்க முடியுமான்னு பார்ப்போம்'னு நினைச்சுக்கிட்டு விளையாடினேன். அஞ்சு நிமிஷத்துல முடியிற மாதிரி இருந்த கேம், முழுசா முடிய ஏழு மணி நேரம் ஆச்சு. நான்தான் ஜெயிச்சேன். கடைசி பாயின்ட் வரை அவங்க போக, நான் புடிச்சு இழுத்துட்டு வர... என்னை முன்னாடி நகரவிடாம அவங்க முட்டுக்கட்டை போட... ஒவ்வொரு ஸ்டிரைக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர். ஏழு மணி நேரமும் மனசை விடாம இறுக்கிப்புடிச்சு வெச்சிருந்ததுதான் பெருசு. தோக்குறதுக்குக் கடைசி செகண்ட் வரைக்குமான நேரம் இருக்கே... அது நமக்கும் சொந்தம்தானேன்னு அந்த ஏழு மணி நேரம்தான் கத்துக்கொடுத்துச்சு!''


''2005-ல ஒரு நாள். அமெரிக்காவில் நடக்குற கேரம் போட்டியில் கலந்துக்க எனக்கு வாய்ப்பு. ஆனா, செலவெல்லாம் நான்தான் பார்த் துக்கணும். ஏர்போர்ட்டுக்கு பஸ் டிக்கெட் எடுக்கவே முடியாத எங்க ளால எப்படி ஏரோப்ளேன் டிக்கெட் எடுக்க முடியும்? 'உண்டு... இல்லை'னு சொல்றதுக்கு அன்னிக்குத்தான் கடைசி நாள். கடைசியா ஒரு முயற்சி பண்ணிப் பார்க்கலாமேன்னு தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரி டேவிதார் சாரைப் போய்ப் பார்த்தேன். 'கிறிஸ்துதாஸ் காந்தின்னு ஒரு ஐ.ஏ.எஸ். ஆபீஸர் இருக்காரு. அவர் உன்னை மாதிரி கஷ்டப்படுற திறமையான பிளேயர்களுக்கு உதவி பண்ணுவாரு'ன்னு அனுப்பிவெச்சார்.
கிறிஸ்துதாஸ் காந்தி சார் என் சர்ட்டிஃபிகேட்லாம் பார்த்தார். 'உன்னை மாதிரி ஒரு ஆளு எப்படி இந்தப் போட்டியில் கலந்துக்காம இருக்கலாம்..? நீ நிச்சயம் அமெரிக்கா போற. ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆபீஸ்ல இருந்து ஒரு என்.ஓ.சி. லெட்டர் மட்டும் வாங்கிட்டு வந்துரு'ன்னு சொன்னாரு. ஆச்சர்ய ஆனந்த அதிர்ச்சி. திரும்பவும் நேரு ஸ்டே டியத்துக்கு ஓடுறேன். அந்த லெட்டர் கிடைச்சாலும் பாஸ்போர்ட், விசான்னு ஏகப்பட்ட பஞ்சாயத்து இருக்கே. ரெண்டு, மூணு மணி நேரத்துல எப்படி எல்லாம் சரியாகும்னு எனக்குப் பதற்றம். ஆனா, நம்ப மாட்டீங்க... நான் நேரு ஸ்டேடியம் வர்ற துக்கு முன்னாடியே என்.ஓ.சி. லெட்டர் ரெடியா இருந்துச்சு. திரும்ப கிண்டி வர்றதுக் குள்ள பாஸ்போர்ட் அப்ளிகேஷன் தயார். அடுத்த அரை மணி நேரத்துல பாஸ்போர்ட் ரெடி! ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி திக்கு திசை தெரியாம நின்னவ, இப்போ அமெரிக்கா கிளம்பத் துணிமணி எடுத்துவைக்கணும். கிறிஸ்துதாஸ் காந்தி சாருக்குக் கோடிப் புண் ணியம்.
அதிர்ஷ்டம், லக், நல்ல நேரம்னுஎல்லாம் சொல்றாங்களே... அதுக் கெல்லாம் அப்பதான் எனக்கு அர்த்தம் புரிஞ்சுது. நம்ம வேலையை நாம ஒழுங்கா செஞ்சா, நம்மைச் சுத்தி இருக்குற நல்லவங்க நமக்காகச் செய்யுற நல்லதுதாங்க அதிர்ஷ்டம். நல்லவங்க எப்பவும் நல்லது செய்வாங்க. ஆனா, நம்ம வேலையை நாம ஒழுங்கா செஞ்சி ருந்தாதான் அந்த நல்லது அதிர்ஷ்டமா மாறும்!''

''2008-ல உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் பிரான்ஸ்ல நடக்குது. ஏர்போர்ட்ல நாங்க போய் இறங்கினா, என் லக்கேஜ் மட்டும் காணலை. இந்தியாவுல இருந்து கிளம்புறப்போ நான் போட்டிருந்த அந்த ஒரு டிராக் சூட் மட்டும்தான் என்கிட்ட இருந்த டிரெஸ். பகல் 12 மணிக்கே ஸ்வெட்டர் போட்டு நிக்கிற அளவுக்குக் குத்திக் கொல்லுற குளிர் பிரான்ஸ்ல விசேஷம். ஒரு மணி நேரம்கூட என்னால தாக்குப்பிடிக்க முடியலை. இந்தியாவுல இருந்து போன ஆறு பேர்ல என்னையும் சேர்த்து மூணு பொண்ணுங்க. அவங்களோட டிரெஸ்ஸை எனக்குக் கொடுத்து உதவுற அளவுக்கு அவங்க சூழ்நிலை இல்லை. காசு கொடுத்து புது டிரெஸ் வாங்கிப் போடுற அளவுக்கு என் சூழ்நிலை இல்லை. மொத்தமா ஏழு நாள் அங்கே தங்கியிருக்கணும்.
கேரம் ஒரு மைண்ட் கேம். மனசுல எந்தக் குழப்பமும் சஞ்சலமும் இல்லாம ரொம்ப ஃப்ரீயா உணர்ந் தாதான் நம்ம மனசு திட்டமிடுற திசையில விரல் ஸ்டிரைக்கரைச் செலுத்தும். ஆனா, என் வாழ்க்கை யிலயே முக்கியமான கட்டத்தின்போது என் மனசு ஃப்ரீயா உணரலை. அன்னிக்கு முழுக்க மகா குழப்பம். குளிர்ல அழுதா கண்ணீர்கூட வர மாட்டேங்குது. பயம், பதற்றம், குழப்பம்... அந்தளவுக்கு நான் அது வரை அரண்டு மிரண்டதில்லை. 'போட்டியிலகலந்துக் காம ஊருக்குத் திரும்பிடலாமா?', 'ஏழு நாளும் ஓட்டல் ரூம்லயே தங்கிட்டு போட்டியில கலந்துக்காம இருக்கலாமா?'ன்னு ஏகப்பட்ட சிந்தனைகள். 'இளவழகி, நீ இப்போ நீயா இல்லை. இப்போ நீ என்ன முடிவெடுத்தாலும் அது தப்பாதான் இருக்கும். பேசாம படுத்துத் தூங்கு'ன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு, மறுநாள் என்ன நடக்கும்னு தெரியாமலே கஷ்டப்பட்டு தூங்கிட்டேன். அன்னிக்கு நான் எந்த முடிவும் எடுக்காதது எவ்வளவு நல்லதுன்னு மறுநாள்தான் எனக்குப் புரிஞ்சுது!''

''மறுநாள் பிரான்ஸ்ல ரெண்டாவது நாள். எந்திரிக்கிறப்பவே பசி வயித்தைக் கிள்ளுது. சாப்பிடப் போனா நாம அதுவரை கண்ணால பாத்திருக்காத, கேள்வியேபட்டிருக்காத சங்கதிகளை எல்லாம் சாப்பிடக் கொடுக்குறாங்க. இன்னொரு இடி... போட்டுக்க டிரெஸ் இல்லை, சரியான சாப்பாடு இல்லை. ஆனா, என்கிட்ட இருக்குற அதிகபட்சத் திறமையை நான் வெளிக்காட்டியாகணும். அப்போ உலகம் முழுக்க இருந்து வந்திருந்த போட்டியாளர்கள் என் கண்ணுக்குத் தெரியலை. எனக்கு நானேதான் போட்டியாத் தெரிஞ்சேன். 'உடம்புக்கு உள்ளேயும் வெளியேயும் நார்மலா இல்லாம, இந்தப் போட்டியில் உன்னால எவ்வளவு தூரம் தாக்குப்பிடிக்க முடியும்?'கிற கேள்விக்குப் பதில் தேடுறதுதான் அப்போ எனக்குச் சவாலா இருந்துச்சு. 'எல்லாரும் நீ போட்டிருக்கிற டிரெஸ்ஸைப் பார்க்க இங்கே வரலை. உன் வேலை என்னவோ, அதை மட்டும் பாரு'ன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்.


முதல் கேம்ல எதிராளி என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்குறதுக்கு முன்னாடியே ஜெயிச்சேன். அதே வேகத்தோடு ஒவ்வொரு கேம்லயும் அடிச்சு ஃபைனல்ஸூக்கு வந்தேன். அங்கே காத்துட்டு இருந்தது, என் கூடவே வந்திருந்த நம்ம நாட்டு பிளேயர்தான். எதையும் மனசுல ஏத்திக்காம விளையாடினேன். ஜெயிச்சுட்டேன். உலக சாம்பியன்! மனதளவிலும் உடலளவிலும் நான் ரொம்ப உடைஞ்சுகிடந்த நேரத்துல நான் சந்திச்ச உச்சகட்ட வெற்றி!


சரியான சமயத்துல சரியான முடிவெடுக்குறது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் தப்பான சமயத்துல தப்பான முடிவு எடுக்காம இருக்குறதும்னு உணர்ந்த நாட்கள்!''

''எங்கப்பா மீன்பாடி வண்டி ஓட்டியே கஷ்டப்பட்டுட்டு இருந்தாரு. இப்ப கொஞ்ச நாளுக்கு முன்னாடி அவருக்கு டாடா ஏஸ்னு மினி லாரி வாங்கிக் குடுத்தேன். அன்னிக்கு அவர் கண்ணுல அவ்வளவு சந்தோஷம்! 'நீ பையனா பொறந்திருந்தாக்கூட இப்படி எல்லாம் செஞ்சிருப்பியா?'ங்கிற கேள்வி அவர் பார்வையில தெரிஞ்சது. அவரும் வாய்விட்டுக் கேக்கலை. நானும் பதில் சொல்லலை. இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கே!''