Digital Time and Date

Welcome Note

Saturday, May 19, 2012

மூலிகை வளம் நிறைந்த குற்றால அருவிகள் !!!!குற்றாலம் என்றதும் நமது நினைவுக்கு வருவது அழகிய நீர்வீழ்ச்சி.
பசுமையான மலைத்தொடரும்,அடர்ந்த வனங்களும், மூலிகைப் புதர்களும், அரிய வன விலங்குகளும், பறவைகளும் நிறைந்த அற்புத பூமி குற்றாலம். தென்னாட்டின் மூலிகைக் குளியலறை அல்லது தென்னகத்து ஸ்பா என்று பெருமையோடு அழைக்கப்படும் இந்த குற்றாலம் ஏழைகளும் அனுபவிக்கும் இயற்கை சீதனம். குற்றாலத்தின் குளுமையை அனுபவிக்கவே ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மக்கள் இந்நகருக்கு வந்து செல்கின்றனர். தென் தமிழ்நாட்டில் உள்ள புகழ்மிக்க அருவி நகரான குற்றாலத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

குற்றால சீசன் காலம்

தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கிவிட்டாலே தமிழ் நாட்டு எல்லையில் கேராளாவுடன் உரசிக் கொண்டிருக்கும் மலைத்தொடர்களில் மழை பெய்ய ஆரம்பித்துவிடும். இந்த மழை நீர் நதியாக உருவெடுத்து, மூலிகைக் காடுகள் வழியாக தவழ்ந்து வந்து குற்றாலத்து மலைகளில் அருவியாக கொட்டுகிறது. இந்த அருவி நீர் உடலையும், மனதையும் ஒருங்கே குளிர்வித்துக் கொண்டிருக்கும் இயற்கை அதிசயம்.

தென்மேற்குப் பருவ மழை உச்சத்தில் இருக்கும் பொழுது ஓயாத சாரலுடனும், பெருத்த காற்றுடனும், மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளமாக வெள்ளியை உருக்கி விட்ட அருவிகளாகக் கொட்டுகிறது. அந்த உச்ச கட்ட பருவ காலத்தில் குற்றாலத்தில் தங்கியிருந்து அந்த இதமான சாரலை அனுபவிப்பது பொன்னான அனுபவம். ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் வரை அருவிகளில் தண்ணீர் கொட்டும் காலமே "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது.

இயற்கை மாற்றங்களினால் மே மாத பாதியிலேயே சீசன் ஆரம்பித்துவிடும். குற்றாலத்தில் பேரூராட்சி மற்றும் தனியாருக்கு சொந்தமான விடுதிகள் உள்ளன. முக்கிய அருவி எனப்படும் பேரருவியில் பெண்கள் குளிப்பதற்கு தனியான இடம் அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்கள் மிகவும் குளிர்ந்து காணப்படுவதால் அதற்கேற்ற உடைகளை எடுத்துச் செல்வது நல்லது.

மூலிகைகளும், பழவகைகளும்

இந்த அருவி நீர் பல்வேறு மூலிகை குணங்கள் உடையனவாகவும், பல நோய்களுக்கு குணமளிப்பதாகவும் ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மலையின் மேல் ஓடி வரும் மழைநீர் வெள்ளம், மூலிகைச் சாறுகளுடன் கலந்து தண்ணோடு பல்வேறு கனி மங்களையும் சேர்த்துக் கொண்டு, மலையின் பல பாகங்கள் வழியே கீழே பாய்கின்றன. பாக்கும், தெளிதேனும், பாகும், பலாவும் நிறைந்த மலை. இங்கு 2000 வகையான மலர்களும், செடிகளும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ரங்குஸ்தான், மலை வாழை, டொரியன், பலா, மங்குஸ்தான், சீதா, கொய்யா, சப்போட்டா, மா, நெல்லி, போன்ற எண்ணற்ற பழ வகைகள் இந்த மலைகளில் காய்க்கின்றன. பல அறிய மூலிகைகள் மலையின் மேலும் பண்ணைகளிலும் வளருகின்றன.

குற்றாலம் அருவியில் குளிப்பது என்பது குதூகலமான ஒன்று என்பதையும் விட, இந்த அருவிக்கு மருத்துவ குணம் இருப்பதும், பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் உள்ளது.

குற்றாலம் அருவி

குற்றாலம் அருவி
அமைவிடம் தென்காசி
ஆள்கூறு 8.9217° N 77.2786° E
மொத்த உயரம் 290 அடி

குற்றால அருவிகள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டகுற்றாலம் பேரூராட்சியில், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளவை. இது தென்னகத்தின் "ஸ்பா" என்றழைக்கப்படுகிறது.

இது சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆறுகளின் பிறப்பிடமாகும்.பல்வேறு மூலிகைகளில் கலந்து வரும் தண்ணீர் ஆதலால் இதில் நீராடுவது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.

ஒன்பது அருவிகள்

குற்றால அருவிகள் என மொத்தம் ஒன்பது அருவிகள் காணப்படுகின்றன.

1. பேரருவி - இது பொதுவாக குற்றால அருவி என அழைக்கப்படுகிறது. இது 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற ஆழமான ஒரு துறையில் விழுந்து பொங்கி பரந்து விரிந்து கீழே விழுகிறது.

2. சிற்றருவி - இது நடந்து செல்லும் தூரத்தில் பேரருவிக்கு மேல் அமைந்துள்ளது.

3. செண்பகாதேவி அருவி - பேரருவியில் இருந்து மலையில் 2 கி.மீ. தூரம் நடைப்பயணத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கி.மீ. கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து 30 அடி உயரத்தில் அருவியாக கொட்டுகிறது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்த கோவிலில் சிறப்பான விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

4. தேனருவி - செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் உள்ளது. இந்த அருவி அருகே பல தேன்கூடுகள் அமைந்துள்ளதால் இந்த இடம் அபாயகரமானது. இந்த அருவிக்கு சென்று குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

5. ஐந்தருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கி.மீ., தூரத்தில் உள்ளது. திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க ஒரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன. இங்கு சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது.

6. பழத்தோட்ட அருவி (வி.ஐ.பி. பால்ஸ்)- இது ஐந்தருவியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும்தான் குளிக்க அனுமதி உண்டு.


7. புலி அருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ளது. இந்த அருவிக்கு பாசுபத சாஸ்தா அருவி என்ற மற்றொரு பெயரும் உண்டு.

8. பழைய குற்றாலம் அருவி - குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 4 கி.மீ., தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது. சுமார் 100 அடி உயரத்திலிருந்து இந்த அருவியில் தண்ணீர் விழுகிறது.

9. பாலருவி - இது தேனருவி அருகே அமைந்துள்ளது


அமெரிக்காவின் ஒரு நாள் ஜனாதிபதி !!!
முதல்வன் படத்தில் பார்த்திருப்பீர்கள் அர்ஜுன் ஒரு நாள் முதல்வராக பொறுப்பேற்று பணியாற்றுகிற மாதிரி, உண்மையில் அது போல ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்திருக்கிறது தெரியுமா? ஆனால் இங்கு எந்த சவாலின் அடிப்படையிலும் பொறுப்பு கொடுக்கப்படவில்லை. அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜேம்ஸ் கே.போக் என்பவரின் பதவிக்காலம் 3.3.1849 அன்று முடிவடைந்து மறுநாள் 4.3.1849 புதிய ஜனாதிபதியாக ஜகேரி டைலர் என்பவர் பொறுப்பேற்கவேண்டும் ஆனால் அது ஞாயிற்றுக்கிழமை ஆதலால் அன்று பொறுப்பேற்க அவர் மறுத்துவிட்டார்.


அமெரிக்காவை பொருத்தமட்டில் ஒரு நாள் கூட ஜனாதிபதி இல்லாமல் இருக்கக்கூடாது, மேலும் பதவிகாலம் முடிந்தும் ஒரு நாள் கூட பழைய ஜனாதிபதி பொறுப்பில் நீடிக்கக் கூடாது. இந்நிலையில் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் செனட்டர் சபையின் தலைவர் பொறுப்பை ஏற்கலாம் என்பதை கருத்தில் கொண்டு டேவிட் ரைஸ் அட்சிசன் ஒரு நாள் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.


24 மணி நேரமே ஜனாதிபதியாக இருந்த இவருக்கு அவரின் சொந்த ஊரான பிளாட்ஸ்பர்கில் சிலை வைக்கப்பட்டு, சிலையின் அடியில் அமெரிக்காவின் ஒரு நாள் ஜனாதிபதி என்றும் பொறிக்கப்பட்டிருக்கிறது. வழக்குரைஞராக வாழ்கையை தொடங்கிய இவர் பின்பு அரசியலில் ஈடுபட்டார். அடிமை ஒழிப்பு முறையின் போது நிகழ்ந்த வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர்.

டைடானிக் கப்பல் பற்றிய தகவல் !!!டைடானிக் என்று சொன்னாலே டைடானிக் படம் தான் நமக்கு எல்லாம் நியபகதிர்க்கு வரும் .ஆனால் அந்த கப்பல் பற்றிய தகவல் அவளவாக நமக்கு தெரியாது . அதை பற்றிய சில தகவல் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

முதல் முதலாக கப்பல் கட்டுமானத்தில் டைடானிக் மூழ்காத (Unsinkable) ஒரு கப்பலாக மிகவும் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டது. டைடானிக் கப்பல் விபத்து முதலும் கடைசியுமாக மூழ்கிய கடல் பயணத்தின் சோகமான பதிவாக வரலாற்றில் பதிவாகியுள்ளது. டைடானிக் கப்பல் விபத்து நடைபெற்று நூறு ஆண்டுகளை 2012 ம் ஆண்டு கடக்கவுள்ளது.

டைடானிக் விபத்தின் பதிவுகள் இன்றுவரை பசுமையுடன் நினைவு கொள்ளப்படுகின்றது , இதனால் இது தொடர்பாக வெளியான புத்தகங்கள் , திரைப்படங்கள் எண்ணிக்கை வரலாற்றில் மிகப்பெரியது. இந்தவகையில் டைடானிக் கப்பல் விபத்தினை வெகு நேர்த்தியுடன் நிஜமாக மக்கள் கண்முன் 1997ம் வருடத்தில் வெளிவந்த "டைடானிக்" திரைப்படம் கொண்டுவந்தது. திரைப்படம் சொல்லிய காதல் கதை தவிர அனைத்து காட்சிகளும் சம்பவ தின நிகழ்வின் சாட்சியங்களின் அடிப்படையில் படமாக்கப்பட்டதாகும்.

பல நூறு பக்கங்களில் சொல்லமுடியாத சோக சம்பவத்தினை 194 நிமிடத்தில் தத்ரூபமாக காண்பித்து 11 ஆஸ்கார் விருதுகளை 1997 இல் மிகப்பெரிய சாதனை திரைப்படம் டைடானிக் பெற்றது . 200 மில்லியன் டாலர் செலவில் தயாரான டைடானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை பெற்ற சாதனை மட்டுமல்ல வசூலிலும் 1.85 பில்லியன் (1850 மில்லியன்) டாலர் மேலாக இதுவரை குவித்துள்ளது . மேலும் டைடானிக் கப்பல் விபத்து பற்றியதான 14 திரைப்படங்களும் , சின்ன திரைகளும் இதுவரை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மிகவும் சோகம் நிறைந்த டைடானிக் கப்பல் விபத்து தொடர்பான முக்கிய தகவல்கள் கீழ்வருமாறு.

டைடானிக்கின் முழு பெயர் RMS Titanic (Royal Mail Steamer Titanic).
அயர்லாந்து (Ireland) நாட்டின் பெல்பாஸ்ட் (Belfast) நகரில் கட்டப்பட்டது.

டைடானிக் கப்பல் கட்டுமானம் 1909 மார்ச் 31 ம் திகதி தொடங்கி 1911 மே 31ம் திகதி முடிவுற்றது.

3,000 வேலையாட்கள் 3 மில்லியன் தறையாணி (கடாவி) களை பாவித்து கப்பலை கட்டிமுடித்தனர்.

அன்றய காலத்தில் டைடானிக்கை கட்டிமுடிக்க 7.5 மில்லியன் டொலர் பணம் செலவிட்டனர், அதன் இன்றய பெறுமதி 4,000 மில்லியன் டொலர் என கணக்கிடப்படுகின்றது.

முதலாவது பயணம் (கன்னி) 1912 ஏப்பிரல் 10 ம் திகதி தொடங்கப்பட்டது.

கப்பலின் நீளம் 882 அடி (269.1 மீற்றர்) , உயரம் 175 அடி (53.3 மீற்றர்) , மொத்த எடை 46,328 தொன் , வேகம் 21 நொட் (39 கிலோமீற்றர்/மணி) இதன் அதிகவேகம் 23 நொட் (43 கிலோமீற்றர்/மணி).
டைடானிக் கப்பல் அதிகபட்சம் 3,547 பயணியளையும் சிப்பந்திகளையும் கொள்ளக்கூடியது.

டைடானிக் கப்பல் கட்டுமானத்தில் அன்று இருக்கக்கூடிய அனைத்து தொழில்நுட்பமும் அதிகபட்சம் பாவித்து கட்டப்பட்டது.
ஒருநாளைக்கு 825 தொன் நிலக்கரியை டைடானிக் இயந்திரம் இயக்க பயன்படுத்தப்பட்டது.

டைடானிகில் மொத்தம் 9 தட்டுக்கள் (மாடிகள்) , அத்துடன் ஆழம் 59.5 அடி எனவும் உயரம் 60.5 அடி எனவும் சொல்லப்படுகின்றது.
மொத்தமாக 4 புகை போக்கிகள் , இவற்றின் மொத்த உயரம் 175 அடி , இதில் 3 புகை போக்கவும் 1 காற்று போக்கியாகவும் பயன்பட்டது.
ஒருநாளைக்கு கப்பலுக்கு தேவைப்படும் சுத்தமான தண்ணீர் 14,000 கலன் கொள் அளவு.

டைடானிக்11 மாடி உயரமான கட்டிடதிற்கு சமமாக ஒப்பிடப்படுகின்றது , இந்த கப்பலை வர்ணமூட்ட பெருமளவில் கறுப்பு மையுடன் வெண் வர்ணமும் பாவிக்கப்பட்டது.
முதலாவது நீச்சல் தடாகம் உள்ள கப்பலாக டைடானிக் வடிவமைக்கப்பட்டது.
விபத்து நடந்த தினம்....................................

1912 ஏப்ரல் 10 ம் திகதி அயர்லாந்தில் இருந்து பிரான்ஸ் வழியாக2,228 பேருடன் (1,343 பயணிகள் , 885 மாலுமிகள்) மறுநாள் (1912 ஏப்பிரல் 13 ம் நாள்) நியூயோர்க் நோக்கி டைடானிக் புறப்பட்டது.

அமைதியான கடலில் கரும் இருட்டில் (அமாவாசை) 5 நொட்டுக்கள் வேகத்தில் டைடானிக் பயணித்துக் கொண்டிருந்தது.

அன்றய தினம் (1912 ஏப்பிரல் 14 ம் நாள்) பயணிகள் தகவல் பரிமாறும் வானொலி தொடர்பில் பனிப்பாறை பற்றிய முன் எச்சரிக்கை இரு முறை ஒலிக்கப்பட்டது

220 அடியிலிருந்து 240 அடி நீளமான பனிப்பாறையுடன் இரவு 11.40 மணிக்கு டைடானிக் மோதல் நடைபெற்றது.

டைடானிக் கப்பலின் கீழ் பகுதியில் உத்தேசமாக12 சதுர அடி துளை (வெடிப்பு) மோதல் காரணத்தினால் உண்டாகின்றது.
அன்றிரவு 12 மணி இலிருந்து மூழ்க ஆரம்பித்த கப்பல் காலை 2.20 மணி (15ம் ஏப்பிரல்) முழுமையாக மூழ்கியது.

அன்றய பனிப்பாறை விபத்தில் மாட்டிய டைடானிக் கப்பலில் இருந்த 20 உயிர்காப்பு படகுகளில் 705 சிறுவர்கள் , பெண்கள் மட்டும் உயிர் தப்பியதுடன் மிகுதி 1,523 பேர் கடலில் மாண்டனர்.

டைடானிக் மூழ்கும் வேளையில் இரு பெரிய பகுதிகளாக உடைந்து மூழ்கியது உயிர் தப்பிய பயணிகளால் அவதானிக்கப்பட்டது.
அன்று கடல் விபத்தில் பலியான 1,523 பேரில் (பயணிகள், மாலுமிகள்) 300 பேரின் உடல்கள் மட்டும் பின்னர் மீட்கப்பட்டது.
74 வருடங்களின் பின்................

அத்திலாந்திக் சமுத்திரத்தின் அடியில் (12,600 அடி அல்லது 3,925 மீற்றர் அல்லது இரண்டரை மைல் ஆழத்தில் ) இயந்திர நீர்மூழ்கி (Alvin,robot) உதவியுடன் டைடானிக் சிதைவு கண்டுபிடிக்கப்பட்டது.
டைடானிக் மூழ்கும் வேளையில் இரு பகுதிகளாக உடைந்த பாகங்கள் சமுத்திர அடியில் 1,970 அடி தூரத்தில் இருக்க காணப்பட்டது.

மேலும் சில தகவல்...

அன்றய பயணத்தில் முதல் வகுப்பில் மட்டும் 870 பயணிகள் பயணம் செய்தனர். முதல் வகுப்பிற்கு ஒவ்வொருவரும் 4,350 டொலர்களை அன்று செலுத்தினர் எனவும் இது இன்றய பெறுமதியில் 80,000 டொலருக்கு சமமானது எனவும் சொல்லப்படுகின்றது.

சுண்டக்காயின் மருத்துவ குணம் !!!!கசப்பான விசையங்கள் என்றும் வாழ்கையில் நல்ல விசையமாக இருக்கு ...

சுண்டைக்காய், கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என்று கசப்புடனும் கசப்பின்றியும் கிடைக்கின்றது. சுண்டக்காயை வாங்கி மோரில் ஊறவைத்து, வற்றலாகப் போட்டு வறுத்தும், குழம்பில் சேர்த்தும் சாப்பிடலாம். கசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளுக்கு நல்ல மருந்து ஒரு குடும்பத்தினருக்கு (5 பேர் அடங்கியது) வருடத்திற்கு 2 லிட்டர் கசப்பு சுண்டைக்காய் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, கிருமித் தொந்தரவு இருக்காது அமிபீயாஸிஸ் போன்ற கிருமிகளையும் சுண்டைக்காய் விரட்டி விடும். நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் சுண்டைக்காய் கிருமிகளை ஒழிக்கும் சுண்டைக்காய்

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது.

சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தில் உள்ள வைட்டமின்கள், குளுக்கோசைடுகள் போன்ற பல வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. டார்வோனின் ஏ, டார்வோனின் பி, பேனிகுனோஜெனின், டார்வோஜெனின் போன்றவை காணப்படுகின்றன.

சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.

சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.

சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இருவகை உண்டு. மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச்சுண்டை. இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகிறது.

வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக் காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்கள் இவற்றை போக்கும். மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும்.

சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். சுண்டைக்காயுடன், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வருவது நல்லது.

முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். இது மார்புச்சளியைப் போக்கும். குடலில் உள்ள அசடுகளை நீக்கும்.

சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.

சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும்.

இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.

மருத்துவக் குணங்கள்:

பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி வெளியேறும்.
சுண்டைக் காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து உணவில் இரவில் பயன்படுத்தி வர மார்புச் சளி, இரைப்பிருமல் (ஆஸ்துமா), காச நோய் குணமாகும். வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.

சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம் பருப்பு, கறிவேம்பு, சீரகம் சம அளவாக எடுத்து வறுத்து இடித்துப் பொடியாக்கி 2 வேளை ஒரு சிட்டிகையளவு 1 டம்ளர் மோரில் கலந்து குடித்து வர பேதி, மூலம், பசியின்மை, மார்புச் சளி குணமாகும்.

சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம், சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் 3 வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் குணமாகும்.
சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி எடுத்து உணவுடன் உண்டு வர நீரிழிவு நோய் தணியும்.

சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாங்கொட்டை பருப்பு, ஓமம், நெல்லி வற்றல், மாதுளை ஓடு, வெந்தயம் சம அளவாக எடுத்து தனித்தனியே இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து 5 கிராம் பொடியை 2 வேளை 1 டம்ளர் மோருடன் கலந்து சாப்பிட தீக்குற்றத்தால் உண்ட சுவையின்மை, வயிற்றுப் புழு, நிலைக் கழிச்சல், சீதக் கட்டு நீங்கும். இதையே மார்பு சளி செரியாக் கழிச்சல், மூலம், நீரிழிவு இவற்றிற்கும் சாப்பிட கட்டுப்படும்.

சுண்டைக் காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலம், மந்தம், செரியாமை குணமாகும்.
சுண்டைக்காய் வேர்ப் பட்டையை பொடி செய்து தேங்காய்க் குடுக்கையில் வைக்க வேண்டும். இதனை ஒரு சிட்டிகை மூக்கிழுக்க, தலை நோய், நீரேற்றம், மண்டைக் குடைச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர்ப்பாய்தல் நீங்கும்.

சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பை பிண்ணாக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடி செய்து முகர இழுப்பு நோய் தணியும்.
சுண்டை வேர் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாய்ச்சல் குணமாகும்.


உலக அழிவு பற்றிய மாயன்களின் கூற்று மற்றும் மாயன்களின் நாகரிகம் !!எகிப்திய நாகரீகம் நிலவிய காலப்பகுதியில், தென்னமெரிக்க பகுதியில் வாழ்ந்த உயர்ந்த நாகரீகத்தையுடைய மக்கள் கூட்டமாகும். அவர்களால் உருவாக்கப்பட்ட கலண்டர் உலகின் பல முக்கிய சம்பவங்களை எதிர்வுகூறத்தக்கதாக இருந்ததுடன், நவீன கலண்டருக்கு மிகவும் ஒத்துப்போகக்கூடிய ஒன்றாகவுமுள்ளதாம்.
அப்போதைய காலத்தில் என்னென்று இவ்வளவு துள்ளியமாக நாற்காட்டியை வடிவமைத்தார்கள், என்பது இன்னமும் விளங்கமுடியாத புதிராகவே இருக்கிறது.சரி… இந்த மாயன்களுக்கும் 2012 இக்கும் (உலக அழிவுக்கும்) என்ன சம்பந்தம் என்பதை பார்ப்போம்.மாயன்கலால் உருவாக்கப்பட்டு பாவிக்கப்பட்டதாக கருதப்படும் நாட்காட்டியில் இறுதி நாளாக 2012. 12. 21 குறிப்பிடப்பட்டுள்ளது. ( அதாவது அதோட கலண்டர் முடியிது.)

அதை முக்கியமாக வைத்துத்தான் 2012 ஓட உலகம் அழியப்போறதா சொல்லுறாங்க.ஆனால், அதுக்கு பின்னரும் ஒரு வேறு நாற்காட்டி இருக்கலாம்.அது இன்னமும் ஆய்வாலர்களால் கண்டுபிடிக்கப்படாமலிருக்கலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது.
முதலாவதாக… மாயன் நாகரீகம் நிலவிய காலத்தில் நிலவிய எகிப்திய நாகரீகத்தில் இது பற்றி எதாச்சும் இருக்கா என்று பார்த்தால்… இருக்கிறது.

எகிப்திய பிரமிட்களின் சுவர்களில் உள்ள சித்திர எழுத்துக்கள் பல எதிர்கால உலக நிகழ்வுகளைப்பற்றியவையாம்.
எகிப்திய பிரமிட்டுக்கள் கி.மு 10000 ம் தொடக்கம் 5000 ஆண்டளவில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. அப்போதே அவர்கள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம்… பூமியின் விட்டமெல்லாம் அறிந்து வைத்திருந்திருக்கிறார்கள்.அவ்வளவு அறிவை அந்தக்காலத்திலேயே பெற்றிருந்தவர்களுக்கு பூமியின் எதிர்கால மாற்றத்தை கணிக்கும் சூட்சுமமும் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.

அவர்களின் எழுத்துக்களை ஆராய்ந்ததின் படி 2007 இக்கும் 2023 இக்கும் இடைப்பட்ட காலத்தில் பூமிக்கு ஒரு மிகப்பெரிய ஆபத்து உள்ளது என்பதை மட்டுமே தெளிவாக கூறக்கூடியதாக உள்ளதாம்.
அந்த ஆபத்து என்னத்தால் ஏற்படப்போகிறது என்பதில் பல மாற்றுக்கருத்துக்கள் உள்ளன.

யுத்தம் (3ம் உலகயுத்தம்.) , சுனாமி, நில நடுக்கம், பாரிய கண்டப்பெயர்ச்சி, கடும் வறட்ச்சி, தொடர் மழை, புயல்… என பல காரணங்கள் அந்த எழுத்துக்களுக்கு கற்பிக்கப்படுகின்றன.
அடுத்து… நொஸ்ராடாமஸ் சொன்னதை பார்த்தால்…
அவரின் கணிப்பின் படி… ஃபீக்கஸ் எனும் நட்சத்திரம்… ( 13வது ராசி) 2012 இல் தோன்றுகிறதாம். அதன் பலனாக பாரிய அழிவுகள் ஏற்படுமாம்.

மேலும் அவரது கணிப்புக்களின் படி 3ம் உலகயுத்தம் இடம்பெறும்காலமாக 2007 தொடக்கம் 2023,30 என்று குறிப்பிட்டுள்ளார்.அவரின் கருத்துப்படி…“3ம் உலகயுத்தத்தில் கருவை அழிக்ககூடிய (அணு) ஆயுதங்களால் போர் கொரூரமாகும்… இந்த ஆய்தங்களின் தாக்கத்தால் கடல் அலைகள் 100 அடி உயரம் வரை எழும்… 100 கோடி பேர் சாவது என்பது ஆச்சரியப்படத்தக்கதல்ல. போரின் பாதிப்பு நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்கும்.”
இதுவும் 2012 ஓடு சம்பந்தப்படுத்தி பார்க்கப்படுகிறது.
அடுத்து… புவியியலாலர்களின் கருத்துப்படி
பூமியில் 2000,2100 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு சிறியலவிலான பனியுகம்உறைபனிக்காலம்ஏற்படுமாம்.

இப்படியேற்பட்ட ஒரு குறுகிய பனியுகமே நீண்ட காலமாக செழிப்போடிருந்த எகிப்திய ராஜ்யியம் திடீரென வீழ்ச்சியடைந்ததுக்கு காரணம்.அது ஏற்படக்கூடிய கால கட்டம் தற்போது நடந்துகொண்டிருக்கிறதாம்.அது 2012 இல் தான் ஏற்படுமென… ஊகித்து உலக அழிவுடன் ஒப்பிடுகிறார்கள்.

அடுத்து… சமயங்களுடன் ( மதங்களுடன்) இதை சம்பந்தப்படுத்தியும் பார்க்கிறார்கள்.பொதுவாக மதங்களில் உலகம் மீண்டும் புதுப்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதாம். அந்த புதுப்பிக்கப்படும் காலம் 2012 இலாக இருக்கலாம்… என்றும் கருதுகின்றார்கள்.

சமீபத்தில்… பூமியில் எதிர்பாராமல் ஏற்பட்டுக்கொண்டிருக்கும்… புயல், திடீர் வறட்சி, அதீத வெப்பம், அதீத குளிர், புவி நடுக்கம், எரிமலை வெடிப்பு, அண்டார்டிக்கா உருகல்… போன்றன… ஏதோ ஒரு ஆபத்து இருக்கு என்பதை காட்டுகிறது.

மாயன்களின் காலண்டரை அடிப்படையாக வைத்து பல புத்தகங்களும் பல சினிமாக்களும் கூட வந்துள்ள நிலையில் குவாதமாலாவில் மாயன்களின் பழைய காலண்டரை கண்டுபிடித்துள்ள அமெரிக்க அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் அப்படி 2012-ல் உலகம் அழியும் என்று அக்காலண்டரில் குறிப்பிடப்படவில்லை என்று கூறுகிறார்கள்.

9வது நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படும் அக்காலண்டரில் சந்திரனின் சுழற்சி காலங்களோடு, வீனஸ் மற்றும் மார்ஸ் போன்ற கிரகங்களின் சுழற்சியும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2012ல் உலகம் அழியும் என்று சொன்னவர்கள் மாயன்களின் காலண்டரில் 13 பக்தூன்கள் (1 பக்தூன் – 400 வருடங்கள்) வரை மட்டுமே உலகம் இருக்கும் என்று எழுதியுள்ளதாகவும் அது 2012ன் முடிவடைவதாகவும் கூறி வந்தனர்.

இச்சூழலில் தற்போது கிடைத்துள்ள காலண்டரில் 17 பக்தூன்கள் வரை காலண்டர் உள்ளதாகவும் அவற்றில் கூட 17 பக்தூன்களோடு உலகம் அழிந்து விடும் என்று சொல்லப்படவில்லை என்றும் கூறிய அகழ்வாராய்ச்சியாளர்கள் தற்போது ஏராளமாக கிடைத்துள்ள ஆவணங்களை முறைப்படுத்தி ஆராயும் போது நிறைய உண்மைகள் வெளிவரலாம் என்றும் கூறியுள்ளனர்.

ஏலக்காயின் மருத்துவ குணம் பற்றிய தகவல் !!!பல‌ர் சூ‌யி‌ங்க‌ம் சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள். இதனா‌ல் எ‌ந்த பலனு‌ம் இ‌ல்லை. ஆனா‌ல் அத‌ற்கு ப‌திலாக ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிடலா‌ம்.

ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம்.

நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் வ‌ந்து, அடி‌க்கடி இரு‌மி வ‌யி‌ற்றுவ‌லி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் கூட ஏல‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமையு‌ம். ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌‌ட்டாலே, கு‌த்‌திரு‌ம்ப‌ல், தொட‌ர் இரு‌ம‌ல் குறையு‌ம்.

வா‌‌ய் து‌ர்நா‌ற்ற‌ம் ஏ‌‌ற்படுவத‌ற்கு‌ம் ‌ஜீரண உ‌று‌ப்புக‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பி‌ர‌ச்‌சினை தா‌ன் காரண‌ம். எனவே வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தை‌ப் போ‌க்க ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம்.

சா‌ப்‌பிடு‌ம் உணவு வகைக‌ளி‌ல் ‌சி‌றிது ஏல‌க்காயை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது. அ‌திகமாக சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடாது.

ஏலக்காயை பொடியாக்கி தேனில் கலந்து சாபபிட்டால் நரம்பின் பலம் கூடும், கண் பார்வை அதிகரிக்கும். ஏலக்காயை பொடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உட்கொண்டால் வாந்தி நிற்கும். ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு இருமல் தொண்டை வலி தீரும். 4 ஏலக்காய், ஒரு கைப்பிடி நாவல் இலை சேர்த்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிட்டால் செரியாமை, சீதக்காதி தீரும். ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு ஆகியவை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்து போல் போட்டால் தலைவலி, சளி விளகும்.

வாசனைப் பொருட்களின் அரசி என்று வர்ணிக்கப்படுவது ஏலக்காய். சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது.

ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. அவை…

* குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.

* ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.

* மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், `ஏலக்காய் டீ’ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.

* நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.

* வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.

* விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.

* வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்

மின்சாரத்தை சிக்கனப்படுத்த சில ஐடியாக்கள்!
கடவுளைப் போல மின்சாரத்தை கொண்டாடும் ...காலம் இது. கிடைக்கும் சிறிதளவு மின்சாரத்தையும், வீணாக்காமல் எவ்வாறு மிச்சப்படுத்தலாம் என்று மின்சாரத்துறை அதிகாரிகள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

சுவிட்ச் ஆப்

ஒரு வீட்டின் அனைத்து அறைகளிலும் மின்சார விளக்கை எறிய விடாதீர்கள். எந்த அறைக்கு செல்கிறீர்களோ அப்பொழுது விளக்கை எரிய விடலாம். அதுவரை சுவிட்ச் ஆப் செய்யவும்.

ஒரு அறை‌யி‌ல் இரு‌ந்து ம‌ற்றொரு அறை‌க்கு செ‌‌ல்லு‌ம் போது, அ‌ந்த அறை‌யி‌ல் இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் பே‌ன், லை‌ட், டி‌வி ஆகியவற்றின் சு‌வி‌ட்களை அணை‌த்து‌வி‌ட்டு செ‌ல்லு‌ங்க‌ள்.

மி‌க்‌சி, ‌பி‌ரி‌ட்‌ஜ், அய‌‌ர்‌ன் பா‌க்‌ஸ்,‌கிரை‌ண்ட‌ர், வா‌‌ஷ‌ி‌ங் மெஷ‌ி‌ன் போ‌ன்ற ‌வீ‌ட்டு உபயோக‌‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் தேவை இ‌ல்லாதபோது அவ‌ற்‌றி‌ன் ‌பிள‌க்கை ‌பிடு‌ங்‌கி வை‌த்து ‌விடு‌ங்க‌ள் அ‌ல்லது சு‌வி‌ட்‌‌ச் ஆ‌ப் செ‌‌ய்யு‌ங்க‌ள்.

மஞ்சள் ஒளி உமிழும் குண்டு பல்புகளை ஏறக்கட்டுங்கள். மின்சார சிக்கனம் தரும் மின் விளக்குகளை பொருத்துங்கள். பகல் நேரத்தில் வெளிச்சம் தரக்கூடியவாறு அறைகளை வடிவமையுங்கள்.

பிரிட்ஜ் கவனம்

கோடை காலத்தில் அதிகம் உபயோகப்படுத்தப்படுவது ப்ரிட்ஜ்தான். எனவே ஒ‌வ்வொரு முறை ‌பி‌ரி‌ட்ஜை ‌திற‌க்கு‌ம் போது‌ம் அதிக அளவில் ‌மி‌ன்சார‌ம் ‌வீணா‌கிறது என்பதை கவனத்தில் கொ‌ள்ளு‌ங்க‌ள். எனவே பி‌ரி‌ட்ஜை அடி‌க்கடி ‌‌திற‌ந்து மூட வே‌ண்ட‌ம்.

ஏசியில் மின் சிக்கனம்

கோடை காலத்தில் ஏசியின் பயன்பாடு அதிகம் இருக்கும். ஏசி பொருத்தப்பட்டுள்ள அறையில் சூரிய ஒளி புகாதவாறு அடர்த்தியான திரைச்சீலைகளை தொங்க விட வேண்டும். தேவையற்ற பொருட்களை ஏசி அறையில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

கண்ணாடி ஜன்னல்கள் நன்கு மூடப்பட்டிருக்க வேண்டும். ஜன்னல், கதவுகளில் ஏதேனும் இடைவெளியோ, துளைகளோ இருந்தால் சரிசெய்துவிட வேண்டும். குளிர்ச்சி போதுமான அளவு ஏற்பட்ட பிறகு, ஏசியிலுள்ள விசிறியையோ, அறையிலுள்ள ஃபேனையோ பயன்படுத்தலாம்.

பழைய ஏசியெனில் குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸ் செய்ய மறக்க வேண்டாம். 5 ஸ்டார் ரேட்டிங் உள்ள ஏசியை பயன்படுத்துவது ஆற்றல் சேமிப்புக்கு உதவும்.

இந்த அலோசனைகளை பின்பற்றினால் மின்சாரம் சிக்கனம் ஏற்படுவதோடு வீட்டிற்கும், நாட்டிற்கும் பலன் கிடைக்கும். மின்சார சிக்கனத்தினால் பணமும் சேமிக்கப்படும்.

▂ ▃ ▅ ▆ █ பேரிக்காயும் அதன் நன்மைகளும்.... █ ▆ ▅ ▃ ▂

▂ ▃ ▅ ▆ █ பேரிக்காயும் அதன் நன்மைகளும்.... █ ▆ ▅ ▃ ▂
(¯`•¸•´¯) Nutrition Facts of Pear Fruit(¯`•¸•´¯)

இது உங்களுக்கு பிடித்திருந்தால் முடிந்தவரை மற்றவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் பிறருக்கும் உதுவுங்கள்
If u Agree With this Post Share to known others Also
...

பேரிக்காயும் அதன் நன்மைகளும்.........!

விளையக்கூடியது.

பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். இக்காலங்களில் இதை வாங்கி சாப்பிடுபவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள்.

சுவையான இந்தப் பழத்தில் ஏ, பி, பி2, என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது.

வளரும் குழந்தைகளுக்கு:

வளரும் குழந்தைகளுக்கு சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அவசியத் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன. பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் உதவுகிறது. பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பழம் வீதம் சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகள் நன்கு வளர்ச்சி பெறுவார்கள்.

இதயப் படபடப்பு நீங்க:

இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு:

கருவில் வளரும் குழந்தை நன்கு வளர பேரிக்காய் பெரிதும் உதவுகிறது. கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமை பெற பேரிக்காய் சிறந்த மருந்து.

தாய்ப்பால் சுரக்க:

பிறந்த இளம் குழந்தைக்கு தாய்ப்பாலே சிறந்த ஊட்டச் சத்து மிகுந்த உணவாகும். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். குழந்தை பிறந்தது முதல் தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம். ஆனால் தற்போது தாய்ப்பால் கொடுப்பது குறைந்து வருகிறது. சில பெண்களுக்கு தாய்ப்பால் சரியாக சுரப்பதில்லை. இவர்கள் காலையிலும் மாலையிலும் 1 பேரிக்காய் வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

வாய்ப்புண் குணமாக:

வயிற்றில் புண் இருந்தால்தான் வாயில் புண் ஏற்படும். இந்த வாய்ப் புண்ணையும், வயிற்றுப் புண்ணையும் ஆற்றும் சக்தி பேரிக்காய்க்கு உண்டு. தினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.

வயிற்றுப் போக்கு:

உண்ணும் உணவின் அலர்ஜி காரணமாக சிலருக்கு வயிற்றுப் போக்கு உண்டாகும். மேலும் சிலருக்கு பாக்டீரியாக்களால் வயிற்றுப் போக்கு உண்டாகும். தினமும் பேரிக்காய் ஒன்று சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு நீங்கும்.

சிறுநீரக கல்லடைப்பு நீங்க:

இரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து அவை கல்லாக மாறுகின்றன. இவற்றைப் உடைத்து வெளியேற்ற தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது.

* உடல் சூட்டைத் தணிக்கும்.

* கண்கள் ஒளிபெறும்.

* நரம்புகள் புத்துணர்வடையும்.

* தோலில் ஏற்பட்ட பாதிப்புகளை குணப்படுத்தும்.

* குடல், இரைப்பை இவைகளுக்கு நல்ல பலம் கிடைக்கும். உடலை வலுவாக்கும்.

பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் உண்டு அதன் மருத்துவப் பயன்களை முழுமையாகப் பெறுவோம்.

Nutrition Facts of Pear Fruit :

Pear is a very delicious fruit that is quite closely related to apples and quinces. The skin of the fruit can be yellow, green, brown or red in color, or even a combination of two or more of these colors. The inside flesh, on the other hand, is white to cream-colored and is very juicy and sweet. The flesh surrounds a core that comprises of seeds. Pears have a large, round bottom, which narrows down as we move towards its topmost portion. The fruit comes in large number of varieties, differing in terms of size, shape, color, taste and storage qualities. In the following lines, we have provided health and nutrition benefits of pears.

Nutritional Value of Pears
Given below is the amount of nutrients in 100 gm of pears:

Carbohydrates - 15.46 g
Sugars - 9.80 g
Dietary fiber - 3.1 g
Protein - 0.38 g
Thiamin (Vitamin B1) - 0.012 mg
Riboflavin (Vitamin B2) - 0.025 mg
Niacin (Vitamin B3) - 0.157 mg
Pantothenic acid (Vitamin B5) - 0.048 mg
Vitamin B6 - 0.028 mg
Folate (Vitamin B9) - 7 μg
Vitamin C - 4.2 mg
Calcium - 9 mg
Iron - 0.17 mg
Magnesium - 7 mg
Phosphorus - 11 mg
Potassium - 119 mg
Zinc - 0.10 mg

Health & Nutrition Benefits of Eating Pears

Being rich in vitamin C, pears have antioxidant properties and are said to protect body cells from oxygen-related damage caused by free radicals.
The presence of fiber in pears helps prevent constipation and also ensures regularity of bowel movement.
Studies have revealed that eating pears help protect women against postmenopausal breast cancer.
Pear is described as a hypoallergenic fruit that is less likely to produce an adverse response than other fruits.
Regular consumption of pears might lower the risk of age-related macular degeneration, the main cause of vision loss in older adults.
It has been seen that pears help lower blood pressure and also reduce the chances of a stroke.
The high content of pectin in pears makes them useful in lowering of cholesterol levels.
Pears have been found to be good for colon health.
Pear juice, being rich in fructose and glucose, serves as a very quick source of energy.
Drinking a glass of pear juice is believed to be helpful in bringing down fever.
The antioxidant properties of pears make them good for strengthening of the immune system.
Consumption of pear juice helps relieve pain in various inflammatory conditions.
The presence of boron in pears helps the body retain calcium and thus, reduces the risk of osteoporosis.
The foliate in pear prevents neural tube defects in infants.

Health benefits of pears

Pear fruit is packed with health benefiting nutrients such as dietary fiber, anti-oxidants, minerals and vitamins which are necessary for optimum health.

Pears provide about 3.1 g of dietary fiber per 100g. Regular eating of pears may offer protection against colon cancer. Most of the fiber is non soluble polysaccharide (NSP), making them a good bulk laxative. Also, the gritty fiber content binds to cancer causing toxins and chemicals in the colon, protecting its mucous membrane from contact with these compounds.

In addition, pear fruit is one of the very low calorie fruits, just provides 58 cal per 100g. Just a few sections a day in the diet can bring significant reduction in weight and blood LDL cholesterol levels.

It contains good quantities of vitamin C. Fresh fruits provide about 7% of RDA per 100 g.

They are rich in antioxidant flavonoids phyto-nutrients such as beta carotene, lutein and zea-xanthins. These compounds along with vitamin C and A help body protect from harmful free radicals.

The fruit is a good source of minerals such as copper, iron, potassium, manganese and magnesium as well as B-complex vitamins such as folates, riboflavin and pyridoxine (vitamin B-6).

Although not well documented, pears are among the least allergenic of all fruits and are therefore recommended by health practitioners as safe alternative in the preparation of food products for allergy sufferers.

Pears have suggested being useful in treating colitis, chronic gallbladder disorders, arthritis and gout.

★ ✩ ✮ ✯ பேரிக்காயும் அதன் நன்மைகளும்.... ✯ ✮ ✩ ★
(¯`•¸•´¯) Nutrition Facts of Pear Fruit(¯`•¸•´¯)

இது உங்களுக்கு பிடித்திருந்தால் முடிந்தவரை மற்றவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் பிறருக்கும் உதுவுங்கள்
If u Agree With this Post Share to known others Also
See More


Friday, May 18, 2012

பிறந்தநாள் விழாவும்- பெயர் சூட்டு விழாவும்.

 
பிறந்த குழந்தைக்கு 7 ஆம் நாள் ஆண் க...ுழந்தையாக இருப்பின் இரண்டு ஆடுகளும் பெண் குழந்தையாக இருப்பின் ஒரு ஆடும் அறுத்து அகீகா கொடுக்க வேண்டும். இது நபிவழி. ஆனால் இந்த சுன்னத் (நபி வழி) புறக்கணிக்கப்பட்டு ஒரு பித்அத் உருவாகிவிட்டது.
குழந்தை பிறந்த 40 ஆம் நாள் அன்று தடபுடலாக விருந்து வைத்துப் ‘பெயர் சூட்டு விழா’ என்று ‘அசரத்தைக’; கூப்பிட்டு பெயர் சூட்டப் படுகிறது.குழந்தை பிறந்தாலும் 40. திரு மணத்திலும் 40. இறந்தவர் வீட்டிலும் 40. சித்த மருத்துவத்தில் மருந்து சாப்பிட ஏற்பட்ட இந்த ‘மண்டலக்’ கணக்கிற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.

பெயர் சூட்டுவதற்கு ஒரு விழா வைத்து அசரத்தைக் கூப்பிட்டுத் தான் பெயர் வைக்க வேண்டும் என்பதில்லை. விருப்பமான பெயரைத் தேர்வு செய்து குழந்தைக்கு அதிக உரிமையுள்ள தாயோ தந்தையோ கூப்பிட வேண்டியது தான். இதற்கென்று எந்தச் சடங்கும் மார்க்கத்தில் இல்லை.

சிலர் வருடந்தோறும் குழந்தையின் பிறந்த நாளைர் கொண்டாடுகின்றனர். லீப் வருடத்தில் பிப்ரவரி 29 அன்று பிறந்த குழந்தைக்கு வருடந்தோறும் எப்படிக் கொண்டாடுவார்களோ? தெரியவில்லை.இன்னும் சிலர் அநாச்சாரத்தில் இன்னும் ஒரு படி மேலே சென்று குழந்தையின் வயதுக் கணக்குப்படி மெழுகுவர்த்தி ஏற்றி கேக் வெட்டி ‘ஹேப்பி பர்த் டே’ கொண்டாடுகின்றனர். இது முழுக்க முழுக்க ஓர் அந்நியக் கலாச்சாரம். இதற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதி இல்லை.

‘யார் அந்நிய கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்களோ அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல.‘ என்பது நபி மொழி.

இஸ்லாமியப் பெற்றோருக்குப் பிறந்த குழந்தையைச் சிறு வயது முதலே இஸ்லாமியக் கலாச்சாரத்தின் படி வளர்க்க வேண்டும். குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஐவேளையும் தொழப் பழக்க வேண்டும். முழுக்க முழுக்க முஸ்லிம் குழந்தையாகப் பழக்கவும் வளர்க்கவும் வேண்டும்.


Thursday, May 17, 2012

பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா?


நோய் எதிர்ப்பு சக்தி,உடல் சுறுசுறுப்பாக, பன்றிக் காய்ச்சல்,எந்தக் காய்ச்சலும் அணுகாது!, உடல் சூட்டைத் தணிப்பதோடு, குடல்புண், வயிற்று வலி குணப்பட, சிறு குடலுக்கு நன்மை, அலர்ஜி, அரிப்பு போன்றவை சரியாக, சட்டென்று இரத்த அழுத்தம் கட்டுக்குள் வர, உடல் எடையும் குறைய..
முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர்.

தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!

"காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்.

மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும். அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".

பழைய சாதத்தை எப்படி செய்வது? (அது சரி!)

பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது பிரெளன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான்.

ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும். மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும் (மிகவும் சூடாக இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.) மதிய உணவு நேரம் வரை டீ, காபி கேக்காது வயிறு!

உங்கள் மொபைலை நீங்கள் தொலைத்து விட்டீர்களா???????????


பயனுள்ள விஷயம்...

உங்கள் மொபைலை நீங்கள் தொலைத்து விட்டீர்களா அல்லது உங்கள் மொபை...லை களவாணிகள் களவாண்டு விட்டார்களா கவலை வேண்டாம்... தொலைந்த உங்கள் மொபைல் மீண்டும் உங்களுக்கு கிடைக்க..

கீழே உள்ள வழிமுறைகளை கையாளுங்கள்:>>>


உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா? அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா? இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது. இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும். எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இதுவரை குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமான ஓர் இடத்தில் பதிந்து வைக்கவும். மொபைல் போனில் *#06# என டைப் செய்து டயல் செய்திடவும். இப்போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண். இதனை ஆங்கிலத்தில் (IMEI International Mobile Equipment Identity) என அழைப்பார்கள். இனி, உங்கள் மொபைல் தொலைந்து போனால், காவல்துறைக்கு ஒரு மின்னஞ்சல் கடிதம் அனுப்பவும். அனுப்ப வேண்டிய முகவரி cop@vsnl.net. இதில் கீழ்க்காணும் தகவல்களைத் தர வேண்டும். பெயர், முகவரி, போன் மாடல், தயாரித்த நிறுவனப் பெயர், இறுதி யாக டயல் செய்த எண், தொடர்புக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைந்த தேதி மற்றும் மொபைல் போனின் அடையாள எண். காவல்துறை ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் இன்டர்நெட் இணைந்த திறன் கொண்ட வலுவான கட்டமைப்பினைக் கொண்டுள்ளது. அந்த மொபைல் போன் பயன் படுத்தப்படும் பட்சத்தில், அதன் இடம், தற்போது பயன்படுத்துபவரை அறிந்து நடவடிக்கையினை மேற்கொள்ளும். உங்களுக்கும் தெரியப்படுத்துவார்கள்
By: உங்கள்நண்பன் ரியாஸ் 

தினமும் ஒரு திடுக்கிடும் ஆதாரம்??????


தினமும் ஒரு திடுக்கிடும் ஆதாரம், அவ்வப்போது ஒரு போலீஸ் அதிகாரியின் வாக்குமூலம். என்று நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் குஜராத் இனப்படுகொலை வழக்குகளில் ஆதாரங்கள் குவிந்து கிடந்தும் நீதி என்பது, முஸ்லீம்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

நீதி தேடி காத்துக்கிடக்கும் அம்மக்களுக்கு ஏமாற்றமும், தடுமாற்றமும் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை. பொது வாழ்க்கையில் இருந்த...ு ஒதுக்குதல், அடிமைத்தனம், வேலையில்லாத் திண்டாட்டம், பசி, பட்டினி பஞ்சம், ஒடுக்குப்புரங்களில் ஒடுக்கப்பட்ட வாழ்க்கை என பாதிக்கப்பட்ட இவர்களின் இன்னல்களை பட்டியலிட்டு கொண்டே போகலாம். குஜராத் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு இன்று பத்தாண்டுகள் கழிந்து விட்ட நிலையில், மேலும் ஒரு குஜராத் போன்ற நிலைமையை நம் இந்தியா தாங்குமா? இந்த ஒடுக்கப்பட்ட சமூகம் தாங்குமா? அப்படி நிகழுமானால் அதன் விளைவு கற்பனைக் கூட பண்ண இயலாது...

சமீபகாலமாக தென் இந்திய மாவட்டமான சங்கபரிவாரங்களின் நடவடிக்கை அதிகரித்து வருவதை சமூக ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர். யில் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க இருக்கும் கர்நாடக பி.ஜே.பி. தடுமாறுகிறது. அதன் கடைசி ஆண்டாக இந்த ஆண்டு இருப்பதனாலேயே கர்நாடக மாநிலம் சங்க்பரிவார கோரத்தாண்டவத்தின் பிடியில் சிக்கித் தவிக்கிறது...

முதலில் மூட்டை நிறைய ஊழலில் சிக்கித்தவித்த கர்நாடக பி.ஜே.பி இப்போது பாலியல் வழக்குகளிலும் சிக்கித் தவிக்கின்றனர். இதனை முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேட்டதற்கு, நீங்களெல்லாம் ஆபாச வீடியோக்கள் பார்ப்பதில்லையா என்ற பதிலே வந்தது. இதனையெல்லாம் மூட்டைப் பையில் மறைக்க ஆர்.எஸ். எஸ்ஸின் நிகழ்ச்சியான ஹிந்து சக்தி சங்கமாவை மாநிலம் முழுதும் நடந்துக் கொண்டிருக்கிறது. இதில் இந்நாள் முதல்வரான சந்தான கவுடா ஆர். எஸ். எஸ்.இன் பிரத்யோக உடையில் இந்துத்துவ சக்திகளோடு கைகோர்த்து நின்றார்... ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கும் ஒருவர் நேர்முகாக இனவாத கும்பலுடன் கைகோர்ப்பது இதுவே முதல்முறை...

பி.ஜே.பி. யின் மூத்த தலைவர்களான எடியூரப்பா, சத்தானத கவுடாவுடன் நேரடி தொடர்பில் இருக்கும் ஆர். எஸ். எஸ். அமைப்பின் மூத்த தலைவர் பிரபாகர் பட ஜனவரி யில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது முஸ்லிம் பெண்களின் ஹஜிபாவை களையுங்கள் என்று மத வெறியுடன் பேசியுள்ளார். ஆனால் காவல்துறையோ அங்கு எதுவுமே நடக்காதது போல கண்டும் காணமல் நின்றது....முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க கிருஸ்துவர்கள் பலதடவை காவல் துறை படியை ஏறியதன் விளைவாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.. ஆனால் அவரை கைது செய்யவில்லை... அதன் சில நாட்களிலே முஸ்லிம் கமிட்டி தலைவர் மகம்மத் மசூத் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் புனையப்பட்டது... அவர் செய்த குற்றம் என்னவென்றால் பிராபகர் பட கூறிய வார்த்தையை கண்டிக்க பத்திரிக்கையாளர்களை கூட்டியது தான். பிராபகர் பட பேசியது தொடர்பான செய்திகள் கரவலி அலே என்ற பத்திரிக்கையில் மட்டுமே வந்தது. இதன் மூலம் சங்க்பரிவார சூழ்ச்சிகளை மீடியாக்கள் திட்டமிட்டு மறைக்கின்றன என்பது வெட்ட வெளிச்சமாகிறது...

கரவலி அலே என்ற பத்திரிக்கை, சிறுபான்மை சமூகத்தின் மீது கட்டவிழ்க்கப்படும் அநீதிகளை அப்பத்திரிக்கையின் மூலம் ஆவணமாக்கியுள்ளது. அதன் காரணமாக அதன் எடிட்டர் சீதாராமன் 2009 இல் கைது செய்யப்பட்டார்... அவர் செய்த குற்றம் பஜ்ராங்க்தல் தலைவர் ஒருவரை அவமானப்படுத்தியது தானாம். கடந்த சில மாதங்களாக கரவலி அலே பத்திரிக்கை செய்திகளை பார்த்தால் தினமும் ஏதாவது மசூதி இடிக்கப்பட்டது, தேவாலயங்கள் இடிக்கப்பட்டது, இசுலாமியப் பெண்கள் மானபங்கபடுத்தப்பட்டார்கள், கிருத்தவர்கள் தாக்கப்பட்டார்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஒடுக்குமுறை என்ற கட்டாயம் இடம் பெற்று இருக்கிறது. இந்துத்துவ வெறியர்கள் தாக்கதல்கள் நடத்தும் சமயத்தில் முதலில் பயன்படுத்தும் சொற்கள், முதலில் இசுலாமியர்கள், பிறகு கிருத்துவர்கள் என்பதே என்று சீத்தாராமன் சொல்லுகிறார். லவ் ஜிகாத், பசுவதை, தீவிரவாதம் போன்ற விஷயங்களில் காவல்துறை இந்துக்களுக்கு எதிராக நடந்து வருகிறது. முஸ்லிம்கள் எங்களை பகைத்துக் கொண்டால் பழைய கால படங்களை தருவோம் என்று ஹிந்து ஜாக்ரான் வேதிகா தலைவர் சத்யஜித் கரத்கள் பேசியுள்ளார். ஆம் ஆண்டும், அதனை தொடர்ந்து நடந்த கலவரத்திற்கு பிறகு மங்களூர், சூரட்கர், பட்கள், உள்ளல், போன்ற அமைதியான பகுதிகள் இப்போது பதட்டமான பகுதிகளாகி உள்ளன... ஸ்ரீராம் சேனா, ஹிந்து ஜாக்ரான் வேதிகா, சனாதன் சன்ஸ்தா, பஜ்ராங்க்தன் ஆகிய ஹிந்து அமைப்புகள் இனவெறியை தூண்டி விடுகின்றன. செட்டி, பிலாவா, மொகாவீரா, பந்தாறு, பல்லவா, மாதிகா, நாடாவா, காவீரா, பல்வேறு சமூகங்கள் வாழும் பகுதிகளில் ஹிந்து அமைப்புக்கள் மதக்கலவரத்தை தூண்ட போராடி வருகின்றன...

சங்கபரிவாரங்களின் கோரத்தண்டவங்கள் : 2008

ஆகஸ்ட் 9 யில் விவசாயி சத்தானத பூசாரி இந்தத்துவ வெறியர்களால் அடித்து படுகொலை செய்யப்பட்டார்.

செப்டம்பர் 7 யில் வீடிலாவில் ரூபஸ்ரீ மற்றும் விகார் அஹ்மத் கண்மூடித்தனாக படுகொலை செய்யப்பட்டனர். அதே நாளன்று சமூக ஆர்வலர் தீபா மற்றும் அவரது நண்பர் அப்துல் விஹாத் மங்களூர் பேருந்து நிலையத்தில் எறக்கி விடப்பட்டு தாக்கப்பட்டனர்.

15 டிசம்பர் இல் பட்களை சேர்ந்த முஸ்லிம்கள் 24 இளஞ்சர்கள் இந்துத்துவ வெறியர்களால் தாக்கப்பட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார்.

சங்கபரிவாரங்களின் கோரத்தண்டவங்கள் : 2009

ஜனவரி 24யில் மங்களூரில் முஸ்லிம் இளைஞ்சர்களுடன் ஹிந்து இளம்பெண்கள் காணப்பட்டதால் அவர்களும் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

16 ஆகஸ்ட் யில் பந்த்வால் என்ற இடத்தில் தாரூஸ்லாம் மதரசா ஒன்றில் பன்றியின் இறைச்சி வீசப்பட்டது.

3 நவம்பர் உப்பின்காடி அரசுக்கல்லூரியில் இந்து முஸ்லிம் மாணவர்களுக்கு இடையில் மோதல் வெடித்தது.

19 நவம்பர் ஹிந்து பெண்களுக்கு காதல் கடிதம் எழுதியதாக கூறி இரண்டு முஸ்லிம் வாலிபர்கள் தாக்கப்பட்டனர்.

சங்கபரிவாரங்களின் கோரத்தண்டவங்கள் : 2010

25 ஜனவரி உத்தர கன்னட என்ற இடத்தில் இரண்டு தேவாலயங்கள் சூறையாடப்பட்டன. அங்கிருந்த மேரியின் சிலைகள் உடைக்கப்பட்டன.

சங்கபரிவாரங்களின் கோரத்தண்டவங்கள் : 2011

25 ஜனவரி பஜ்ராங்க்தல் உறுப்பினர் கிஷோர் என்பவரை துணை இன்ஸ்பெக்டர் சந்தோஷ் ஷெட்டி தாக்கியதை தொடர்ந்து ஷெட்டி தர்க்காலிக பணிநீக்கம் செய்யப்படுகிறார்.

1 பிப்ரவரி அன்று புத்தூர் எ.எஸ்.பி. அமித் சிங்க் பந்த்வால் நகர வளர்ச்சி குழுமத்தலைவர் கோவித் பிரபுவை அவமதித்தாக கூறி இடமாற்றம் செய்யப்படுகிறார். அவரை பணிநீக்கம் செய்ய பி.ஜே.பி எம்.பி. நவீன் குமார் மற்றும் எம்.எல்.எ மல்லிகா பிரசாத் அதிகாரியின் வீட்டை முற்றுகையிட்டு தாக்குகின்றனர்.

16 மார்ச் கார் மெக்கானிக் பக்ருதீன் இந்து பெண்ணை காதலித்ததால் கொலை செய்யப்பட்டார். அடுத்து உள்ளல் என்ற இடத்தில் மைமூன என்ற பெண் தன தந்தை முகம்மத் அலி மற்றும் மகன் ஜாவித் அலியின் கைதை கண்டித்து சிபியை விசாரணை கோருகிறார். ஆனால் ஆர்.எஸ். எஸ்ஸின் கட்டளைக்கு இணங்க இவர்கள் மீது தீவிரவாத வழக்கு பதியப்பட்டது.

30 ஜூலை தன்னை கட்டாயப்படுத்தி பஜ்ராங்க்தல் உறுப்பினராக சேர்த்ததாக மன்கூலரை சேர்ந்த புஷ்ரா புகார் கொடுக்கிறார்.

22 ஆகஸ்ட் சுல்லியாவில் முஸ்லிம் பெண்களை கேலி செய்த இந்துத்துவ வெறியர்களை தட்டிக்கேட்ட முகம்மத் ரியாஸ் என்ற வாலிபர் தாக்கப்பட்டார்.

28 டிசம்பர் 20பேர் கொண்ட இந்துத்துவ கும்பல் மதமாற்றம் நடப்பதாக கூறி மங்களூரில் உள்ள ஹெப்ரோன் என்ற தேவாலயத்தை சூறையாடினர்.

ரூபினா (22) என்பவர் பிறப்பால் பிராமின சமூகத்தை சேர்ந்தவர் அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒரேக் காரணத்தினால் இன்று அவள் தன சொந்த மாநிலத்திலேயே தன பிஞ்சு குழைந்தைகளுடன் ஒரு அகதியைப்போல் வாழ்கிறாள். கல்யாணம் புதிதிலேயே அவள் கணவர் மீது தீவிரவாதி வழக்கு தொடரப்பட்டது.

ஆதாரம்: விடியல் மாத இதழ்

இப்படி அடுத்தடுத்து இசுலாமியர்கள் மீது வன்முறைகளும், பொய் வழக்குகளும் திணிக்கப்படுகின்றன. ஆட்சி பறிபோய்விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்க்காக இந்து உணர்வை தூண்டிவிட்டு ஓட்டுகளாக மாற்றத் துடித்து, சிறுபான்மை சமூகத்தை ஒடுக்க நினைக்கின்றனர். அடுத்த குஜராத்தாக மாற இருக்கும் கர்நாடகா மாநிலத்தை எப்படி காக்கப் போகிறோம்....

DONT IGNORE , PLEASE READ :

You can Save someone's life by sharing this.

STROKE: Remember The 1st Three Letters... S.T..R ...
... My friend sent this to me ...and encouraged me to post it and spread the word. I agree. If everyone can remember something this simple, we could save some folks.

STROKE IDENTIFICATION:
During a party, a friend stumbled and took a little fall - she assured everyone that she was fine and just tripped over a brick because of her new shoes. (they offered to call ambulance)

They got her cleaned up and got her a new plate of food - while she appeared a bit shaken up, Ingrid went about enjoying herself the rest of the evening. Ingrid's husband called later telling everyone that his wife had been taken to the hospital - (at 6:00pm , Ingrid passed away.)
She had suffered a stroke at the party . Had they known how to identify the signs of a stroke, perhaps Ingrid would be with us today.

Some don't die. They end up in a helpless, hopeless condition instead. It only takes a minute to read this...

STROKE IDENTIFICATION:

A neurologist says that if he can get to a stroke victim within 3 hours he can totally reverse the effects of a stroke...totally. He said the trick was getting a stroke recognized, diagnosed, and then getting the patient medically cared for within 3 hours, which is tough.

RECOGNIZING A STROKE

Remember the '3' steps, STR . Read and Learn!
Sometimes symptoms of a stroke are difficult to identify. Unfortunately, the lack of awareness spells disaster.
The stroke victim may suffer severe brain damage when people nearby fail to recognize the symptoms of a stroke.
Now doctors say a bystander can recognize a stroke by asking three simple questions :

S * Ask the individual to SMILE ..
T * = TALK. Ask the person to SPEAK A SIMPLE SENTENCE (Coherently) (eg 'It is sunny out today').
R * Ask him or her to RAISE BOTH ARMS .

If he or she has trouble with ANY ONE of these tasks, call the ambulance and describe the symptoms to the dispatcher.

NOTE : Another 'sign' of a stroke is
1. Ask the person to 'stick' out their tongue.
2. If the tongue is 'crooked', if it goes to one side or the other that is also an indication of a stroke.

A prominent cardiologist says if everyone who gets this status shares it; you can bet that at least one life will be saved

Join : Together Against Poverty
See More

Wednesday, May 16, 2012

அப்பாவிகள் சிறைச்சாலைகளில் வருடக்கணக்கில் இருந்தாலும்????????????

இன்று திராவிட முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளரும், உதகமண்டல தொகுதி பாராளுமன்ற... உறுப்பினரும், 2g அலைக்காற்றை ஊழலில்
கைது செய்யப்பட்டவருமான ஆ. ராசா அவர்கள் ஜாமீனில் வெளி வந்த செய்தி பத்திரிக்கை ஊடகங்களிலும், செய்தித்தாள்களையும் அலங்கரித்தன. சாதாரண அளவில் லஞ்சம் வாங்கும் தாசில்தார்களையே மக்கள் செருப்பால் அடிப்பார்கள் என்றால், இவர்களை போல் கோடிகளை மேய்ந்துவிட்டு ஏப்பம் விட்ட கேடிகளை மக்கள் என்ன செய்வார்களோ.
அவர் ஜாமீனில் வெளி வந்த செய்தியை பத்திரிக்கை ஊடகங்களில் படிக்கும் நேரத்தில் ஒரு வரி என் கண்ணில் பட்டது. அது என்னவென்றால், நீதிமன்றத்தில் ராசாவின் வழக்கறிஞர்
ரமேஷ் குப்தா ராசாவிற்கு ஜாமீன் வழங்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். குற்றம் சாட்டப்பட்ட மற்ற 13 பேருக்கும் ஜாமீன் கிடைத்திருக்கும்
பொழுது ராசாவிற்கு மட்டும் ஜாமீன் மறுப்பது நியாயமற்றது என வாதாடினார். அப்பொழுது அவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்.
"ஆயள் தண்டனை பெறும் அளவிற்கு குற்றம் புரிந்தவர்களுக்கும், கைதிகளுக்கு ஜாமீன் வழங்கலாம் என்பது சட்டத்தில் இடம் இருக்கிறது"
இந்த வரிகளை படித்த எனக்கு ஒன்று புரிந்தது, ஆட்சியையும் அதிகாரமும் கையில் வைத்திருப்பவர்களுக்கு நீதியை வளைத்து கொள்வதில் எந்த சிரமமும் இருக்காது என்று.
ஆம், எங்களை போன்ற அப்பாவிகள் சிறைச்சாலைகளில் வருடக்கணக்கில் இருந்தாலும், ஜாமீன் கோரி கீழ் நீதிமன்றமல்ல, உயர்நீதி மன்றமல்ல, உச்ச நீதிமன்றத்துக்கே சென்றாகிவிட்டது. ஆனால் நீதிபதிகளின் கண்கள் இன்னும் கட்டியேதான் உள்ளது.
அப்துல் நாசர் மதானி அவர்கள் தன ஒரு காலை இழந்து, நடக்க கூட முடியாமல் சர்கர நோயினால் மிகவும் பாதிக்கப்பட்டு, மருத்துவத்திற்காக கேரளா செல்ல அனுமதி கோரிய பொழுது அதை கூட அனுமதித்து இந்த நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்க முடியவில்லை. குற்றம் நிரூபிக்கப்படாமல் நிரபராதி என்ற பெயரோடு அவர் வெளியே வந்தபொழுது தங்களின் முகங்களை எங்கே வைத்து கொண்டார்கள் இந்த நீதிபதிகள். விடுதலை அடைந்தபொழுது அவர்க் அடைந்த மகிழ்ச்சியை பொருத்து கொள்ள முடியாத பாசிச வெறி பிடித்த கர்நாடக அரசாங்கம் அவரை மறுபடியும் பெங்களுரு குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்துள்ளது. இதிலும் அவர் விடுதலை ஆவார் என்பதில் என்பதில் எங்களுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால், மறுபடியும் நம் உச்ச நீதிமன்றம் மதானிக்கு ஜாமீனோ, பிணையோ வழங்க மறுத்து விட்டது. கோவை குண்டு வெடிப்பு வழக்கிலும் இதே போல் குற்றம் சுமத்தப்பட்டதையும் அதில் அவர் நிரபராதி என விடுவிக்கப்பட்டார் என்பதையும் நம் வழக்கறிஞர் எடுத்து கூறியும் பாசிச சிந்தனை கொண்ட நீதி அரசர்கள் ( ?) மதானிக்கு பிணை கொடுக்க தயாராக இல்லை. ஒரு மாநிலம் அல்ல, இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு மனிதனும் அவருக்காக கண்ணீர் வடித்திடும்பொழுது, நீதிபதிகள் யாரை திருப்தி படுத்த நினைக்கிறார்கள் என்பது எங்களுக்கு புரியவில்லை. இவ்வாறான நீதிபதிகளே எங்களுக்கு இந்த நாட்டின் சட்டத்தின் மேல் உள்ள மதிப்பை கெடுக்க முயல்கிறார்கள்.


Tuesday, May 15, 2012

இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!( Must Read And Share )


பெண்கள் கற்பழிக்க படுவதற்கு காரணம் என்ன என்று ஓட்டெடுப்பு நடத்தினோம் என்பது அனைவரும் அறிந்த விஷயம் ! ஓட்டளித்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் எமது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் . அதிகபட்ச நபர்கள் பெண்கள் அணியும் அரை குறை ஆடை தான் என்று ஓட்டு அளித்து இருந்தார்கள் இன்று நாம் நிறைய இடங்களில் பார்க்கிறோம் பெண்கள் அரை குறை ஆடை அணிந்து தான் ...வருகிறார்கள் .பார்க்கும் ஆண்களை சபலபடவைக்க இதவும் ஒரு காரணமாகவே அமைகிறது .அதற்க்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான் உன்னுடைய வீட்டை சுற்றமாக்கு நாடு தானாகவே சுற்றமாகும்

அப்படி அரை குறை ஆடை அணிவது நம் சகோதரியாக கூட இருக்கலாம் நாம் பிள்ளைகளாக கூட இருக்கலாம் . முதலில் அவர்களுக்கு வீட்டில் ஒழுக்க நெறிகளை சொல்லி கொடுத்து வளர்ப்பது நமது தலையா கடமை இருக்கிறது . வீட்டில் தந்தை அண்ணன் ,தம்பி , மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் இருக்கிறார்கள் அவர்களை மீறி எந்த பெண்ணும் அரை குறை ஆடை அணிவது இல்லை முதலில் நமது வீட்டில் உள்ள பெண்களின் ஆடை கொஞ்சம் ஆபாசமாக தெரிந்தால் கண்டிப்பாக கண்டிப்பது நமது கடமை .அதை விட்டு விட்டு அவர்களை நாம் அரை குறையாக ஆடை அணியவைத்து ஷாப்பிங் மாலுக்கும் பீசிக்கும் ,படத்திற்கும் அழைத்து கொண்டு திரியும் நிறைய தாய் தந்தை இருக்கிறார்கள் அவர்களை பார்க்கும் போது தான் அரை குறை ஆடை அணியும் பெண்கள் மீது தவறு இல்லை அவர்களின் தாய் தந்தை சகோதர்கள் மீது தான் தவறு என்று தெள்ள தெளிவாக தெரிகிறது . இவர்கள் தன்னுடைய சகோதிரிகளை அரை குறை ஆடை அணியவைத்து எப்படி அழைத்து வருகிறார்கள் என்று தெரியவில்லை ?உண்மையில் சிந்திக்க வேண்டிய விசையம் தான்

நம் தமிழ் நாட்டில் இன்று தாவணி என்று சொல்லுவார்கள் அப்படி என்றால் என்ன வென்று கேட்கும் அளவிற்கு போய் கொண்டு இருக்கிறது . இன்று நிறைய சகோதரிகள் சுடிதாருக்கு துப்பட்டா அணிவதே இல்லை கேட்டால் நாகரிகம் என்று சொல்லுகிறார்கள் எப்படி வேண்டுமானாலும் வாழ்வது வாழ்க்கை அல்ல இப்படி தான் வாழ்வது என்பது தான் வாழ்க்கை .

பெண்கள் அரைகுறை ஆடை ,இறைவனின் படைப்பில் பெண்கள் ஒரு அழகான படைப்பு ,இன்றோ பெண்களின் சுதந்திரம் என்ற போர்வையில் நாகரிகம் என்ற போர்வையில் பெண்களை போதை பொருளாக கண்பிப்பது இதற்கு பெண்களின் இயக்கங்கள் மௌனம் சாதிப்பது இது தான் பெண் சுதந்திரமா??? இதுவும் ஒரு பெணிற்கு எதிரான விபசாரமே அதுவும் corporate விபச்சாரம் !

இன்று இந்தியாவில் பெண்களின் நிலை என்ன நாகரிகம் வளர வளர பெண்கள் பாலியல் கொடுமைகளும் ,கற்பழிப்புகள் அதிகமானது என்று சொன்னால் மிகை ஆகாது ! இதிலிருந்து உடை கட்டுபாடும் இது போன்ற குற்றங்களை தடுபதற்கான ஒரு வழி என்பது நிதர்சனமான உண்மை . இன்று மத்திய பிரதேசத்தில் ஒரு சட்டம் இயற்ற பட்டது பெண்களின் மீது acid உற்றினால் 3 லட்சம் அபரதாமம் ! என்ன ஒரு கடுமையான சட்டம் ,இந்த சட்டத்தை இயற்றிவர்கள் மீது தான் முதலில் acid எரிய வேண்டும்.. பெண்கள் கற்பழிக்க படுவதக்க்கு அரைகுறை ஆடை மட்டும் காரணமாகவும் எடுத்து கொள்ள முடியாது .

இன்று நாம் தொலை காட்சிகளில் நாம் குடும்பத்தோடு பார்க்க முடிகிறதா முகம் சுளிக்கும் வனமாகவே இருகிறது .தந்தை பிள்ளைகளோடு தொலை காட்சியே பார்க்க முடியவில்லை இன்று சாதாரண விளம்பரத்தில் கூட ஆபாசம் தொலைகட்சியே திறந்தாலே ஆபாசமாக தான் இருக்கிறது . கிரிக்கெட் ஐ .பி .எள் . விளையாட்டிலும் கூட ஆபாசம் தேவை படுகிறது .பெண்களை போதை பொருளாகவே பயன்படுத்துகிறார்கள் இதை எல்லாம் பார்த்து மக்களின் மனம் மரத்து போய் விட்டது .உடை கட்டுப்பாடு இருந்தாலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் சில காமவெறி கொண்ட கயவர்களால் நடந்து கொண்டு தான் இருக்கிறது இவர்களை தண்டிக்க எப்படி பட்ட சட்டம் இயற்றலாம் ??? கடுமையான சட்டங்கள் வராதவரை இது போன்ற அனச்சாரங்களுக்கு முடிவிற்கே வராது

இதை படித்து விட்டு உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுகள் உங்களுடைய கருத்துகளையும் கம்மேன்ட்டில் தெரிவிக்கவும்
See More

ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌.நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான்
மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.

... இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது
பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.

இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில்
வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு
கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம்
சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள்
சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான்
அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.

மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை
சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால்,
அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும்
அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன்
ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும்,
வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு
தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

எனவே கூகுளிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற
ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை
வெளியிட்டிருந்தார்

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின்
பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்).


( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது )
`ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2
மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம்
கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால்
சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க
முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு
(அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே
தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு
சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர்
பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு,
சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,

பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் ,
சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,

அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும்.
கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து
ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.

அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை
போயே போயிந்தி.. இட்ஸ் கான்...

இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர்
வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணையதலத்தில் படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள்
உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக
அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும்
முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல்
உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும்
சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு
டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்(
குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை
தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு
மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம்
உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை
உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும்
2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம்
என்கிறார்கள்.

பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள்
மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது.

பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே
இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை
வராதவர்களும் பின்பற்றலாம்.
See More

20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய திருட்டு எது என்று உங்களுக்கு தெரியுமா ??

பிரிட்டிஷ் அடக்குமுறையே எதிர்த்து இந்தியா சுதந்திரம் அடைந்தது 20 நுற்றாண்டின் மாபெரும் வரலாறாக இருந்தது .இங்கிலாந்து
ஏகாதிபத்தியத்தின் அழிவை சந்தித்தது

65 ஆண்டுக்கு முன் இஸ்ரேல் என்ற நாடே இல்லை என்று நம்மில் சிலருக்கு தான் அந்த உண்மை தெரியும்

இருப்பதற்கு இடம் இல்லாமல் வந்து தஞ்சம் புகுந்து .தஞ்சம் கொடுத்தவர்களின் கருவை அறுக்கும் நிலை இன்று பலஸ்தினத்தில் !

அமெரிக்க ,இங்கிலாந்து இனைந்து எந்த ஒரு நெறிமுறையும் பார்க்காமல் இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை உருவாக்கினர்
ஹிட்லர் ஆறு மில்லியன் யூதர்களை கொன்றார் .அதற்க்கு அமெரிக்க பிரிட்டனும் சேர்ந்து ஜெர்மனியின் ஒரு ஒரு பகுதியே ஒதிக்கி கொடுக்க நடவடிக்கை எடுத்து இருந்தால் உலகமே பாராட்டி இருக்கும் இரண்ட்டு நாட்டையும் .அதற்க்கு மாறாக பாலஸ்தீனத்தை தங்கள் அதிகாரத்தால் ஆணவத்தால் அடக்குமுறையால் ஒரு சிறு பகுதியே ஆக்கிரமித்தனர் .

அன்று முதல் உலகம் தீவிரவாதத்தின் புதிய அத்தியததை உணர்ந்தது அங்கு உள்ள அப்பாவி மக்களை பச்சிளம் குழந்தைகள் என்று கூட பாராமல் கொன்று குவிக்க தொடங்கி நாளுக்கு நாள் இது பெருகி இன்று பாலஸ்தீனியம் முழுவதையும் இஸ்ரேல் ஆக்கிரமித்து உள்ளது கள்ள கூட்டாளிகள் அமெரிக்க மற்றும் பிரிட்டன் துணையோடு .

பாலஸ்தீனிய வரை படம் 1946 TO 2000 இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது .

இஸ்ரேல் பாலஸ்தீன் மீது நடத்தும் அட்டுழியங்கள் இனவெறி தாக்குதல் நாங்கள் செய்வது சரி தான் என்று வெட்க்கம் இல்லாமல் சொல்லி கொண்டு இருக்கிறது .அவர்களின் சுய மரியாதையே இழந்து வருவதை இந்த உலகமே அறியும் !

எத்தனையோ வல்லரசுகள் வீழ்ந்திருப்பதை இந்த உலகம் அறிந்ததே இவர்களுக்கு வெகுதுலைவில் இல்லை அழிவு

இஸ்ரேல் தங்களுடைய ஜனத்தொகையே பெருக்க உலகில் உள்ள யூதர்களை ஒன்று கூட்டி திட்டம் தீட்டி வருகிறது இருந்தும் என்ன பயன் .சட்டியில் இருந்தா தாண்ட ஆப்பையில் வரும்

இன்று யூதர்கள் மத்தியில் 27 சதிவீதம் ஓரினை சேர்க்கையாளர்கள் தான் இருக்கிறார்கள் ஆண்கள் ஆண்கள்கூட ,பெண்கள் பெண்கள்கூட உறவு வைத்து கொண்டு இருக்கும் சமூகமாகவே வாழ்ந்து வருகிறார்கள் .அதனால் அவர்களின் மக்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறதை நாம் கண்கூடவகவே பார்க்கிறோம் .என்னென்றால் முதியவர்களின் இறப்பு ஓரினை சேர்க்கையால் பிறப்பின்மை இல்லாமை .பார்த்திர்களா இவர்களின் நிலைமையை ? இறைவன் எல்லாருக்கும் எல்லாவற்றையும் கொடுத்திட மாட்டன்

மனித நேயமற்ற இஸ்ரேலர்களின் இந்த செயலை உலக நாடுகள் வேடிக்கை பார்த்து கொண்டு இருகின்றார்கள் . என்று தான் எதிர்த்து குரல் கொடுக்க போகிறார்கள் ????????

பாகிஸ்தானில் 60 ஆண்டுகளாக மூடிக்கிடந்த கோவில் இந்துகளிடம் ஒப்படைப்பு -நீதிமன்றம்....இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வடமேற்கு பகுதியில் பெஷாவர் நகரில் உள்ளது கோர் காத்ரி. இங்கு 160 ஆண்டு பழமையான கோரக்நாத் கோயில் உள்ளது. இந்த கோயில் இந்திய - பாக் பிரிவினைக்கு பின் மூடப்பட்டது. கடந்த 60 ஆண்டுகளாக கோயில் மூடியே கிடந்தது. இந்தக் கோயிலை மீண்டும் திறக்க வேண்டும் என்று கோரி பூல்வதி, இவரது மகன் கக்கா ராம் ஆகியோர் பெஷாவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவர்கள் தாக்கல் செய்த மனுவில், கோரக்நாத் கோயில் எங்கள் குடும்பத்துக்கு சொந்தமானது.

அந்த கோயில் பல ஆண்டுகளாக போலீஸ் மற்றும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, கோயிலை திறந்து நிர்வகிக்க உத்தரவிட வேண்டும்ÕÕ என்று கோரியிருந்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், Ôபூல்வதியின் குடும்பத்துக்கு கோயில் சொந்தமானது என்பதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. எனினும், மதரீதியான நடவடிக்கைகளை தடுப்பது சட்டப்படி தவறு. எனவே, வழிபாடு நடத்த கோயிலை திறக்க வேண்டும்Õ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து 60 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளியன்று கோயில் திறக்கப்பட்டது. பெண்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என ஏராளமான இந்துக்கள் கோயிலில் உற்சாகமாக தீபாவளி கொண்டாடி பிரார்த்தனை செய்தனர். கோயிலை திறக்க உதவிய பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு பூல்வதியின் மகள் கமலா ராணி மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட செய்தியை நாம் கவனிக்கும் போது பல உண்மைகள் வெளிப்படுவதைக் காணலாம். பாகிஸ்தானில் மிக மிக சிறுபான்மையாக வாழும் இந்துக்களின் வழிபாட்டுத்தலம், முஸ்லிம்கள் ஆட்சியாளர்களாக இருந்தும் கூட நீதி மறுக்கப்படவில்லை. அந்த கோயில் இடிக்கப்படவில்லை. அங்கே உடனடி மசூதி எழுப்பப் படவில்லை. அறுபது ஆண்டுகாலம் பூட்டியிருந்தும் அக்கோயிலுக்கு சிறு சேதாரமும் இழைக்கப்படவில்லை. மீண்டும் அந்த கோயில் சம்மந்தப்பட்ட சமுதாயத்திடம் ஒப்படைக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது. இது எதைக் காட்டுகிறது என்றால், ஒரு சாரார் சிறுபான்மையினர்-பலவீனர் என்பதற்காக இந்த நாட்டின் நீதிமன்றம் அநீதிஇழைக்காது என்பதைத்தான்.

Monday, May 14, 2012

வயிறு சுத்தமா இருந்தா ஜீரணம் ஈசியாகும்!


அஜீரணக்கோளாறு என்பதை இன்றைக்கு பெரும்பாலானவர்களை வாட்டி வதைக்கிறது. உண்ணும் உணவு ஜீரணமாகாவிட்டால் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படும். வயிறு வலி, புளித்த ஏப்பம் போன்றவை ஏற்பட்டு மனிதர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். எனவே வயிறு சுத்தம் என்பது அவசியம். அப்பொழுதுதான் ஜீரணமண்டலத்தின் இயக்கம் எளிதாக இருக்கும்.

வயிற்றை சுத்தமாக்கும் உணவுகள்
...
பச்சை காய்கறிகள் வயிற்றை சுத்தாக்கும். கீரைகள், செலரி, புருக்கோலி, பீன்ஸ் போன்ற உணவுகள் எளிதில் ஜீரணமாகும். அதேபோல் காரட், வெங்காயம், பச்சைபட்டாணி, உருளைக்கிழங்கு போன்ற உயர்தர கார்போஹைடிரேட் உணவுகள் வயிற்றுக்கு ஏற்றவை.

தினசரி 2 வாழைப்பழம்

சிட்ரஸ் பழங்கள் ஜீரணமண்டலத்தை எளிதாக வைக்கும். பழங்களில் உள்ள உயர்தர நார்ச்சத்து வயிற்றுக்கு ஏற்றது. எலுமிச்சை, ஆரஞ்ச், திராட்சை, ஸ்ட்ராபெர்ரீஸ் போன்றவை ஜீரணமண்டலத்திற்கு ஏற்ற உணவுகள். அதேபோல் தினசரி இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவதும் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.

தானிய உணவுகள்

தானிய உணவுகள், கோதுமை ப்ரெட், போன்றவை எளிதில் ஜீரணமாகும். தேவையற்ற கழிவுகள் வெளியேற உதவும். அதேபோல் தினசரி உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாக தண்ணீர் அவசியம் பருகவேண்டும். இது போல் பால், பழரசங்களை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். இந்த உணவுகளை தவறாமல் உட்கொள்வதன் மூலம் ஜீரணமண்டல கோளாறு ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். இதுபோன்ற எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளை உண்பதன் மூலம் தேவையற்ற கொழுப்புகள் சேர்வது தடுக்கப்படும் தொப்பை ஏற்படாது வயிறு ப்ளாட்டாக இருக்கும்.
See More

கொளுத்தும் வெயிலில் கலர், கலரான குளிர்பானங்கள் வேண்டாமே...!கொளுத்தும் வெயிலில் கலர், கலரான குளிர்பானங்கள் வேண்டாமே...!

வியர்வையும், உடலுக்...குள் வறட்சியும் என நம்மை வாட்டி வதைத்து விடும். இதில் முக்கியமாக தொண்டை வறட்சி... குளிராக எது கிடைத்தாலும் குடித்துவிடுவோம். கோடைகாலத்தில் கலர், கலரான குளிர்பானங்களை எல்லாக் கடைகளிலும் வைத்து விற்கிறார்கள். தாகம் அடங்க வேண்டும் என்பதற்காக, அவற்றை அதிக விலை கொடுத்து வாங்கி உபயோகிக்கிறோம்.

இந்த கலரான குளிர்பானங்களால் உடலில் தேவையற்ற கலோரிதான் சேருமே தவிர, வேறு எந்தவித பலன்களும் கிடையாது என்கிறார்கள் டாக்டர்கள். இப்போதெல்லாம் ஐஸ் காபி, ஐஸ் டீ ஆகியவையும் அமோகமாக விற்பனையாகின்றன. இவற்றை தவிர்ப்பதும் நல்லது.

எண்ணெயில் பொரித்து எடுக்கும் சைவ மற்றும் அசைவ உணவு வகைகளை இந்த கோடையில் முடிந்தவரை தவிர்ப்பதுதான் நல்லது.

வெளியில் சென்றால் கையோடு ஒரு பாட்டிலில் சுத்தமான குடிநீரை எடுத்து செல்லுங்கள். இல்லையென்றால், இயற்கை பானமான இளநீரை வாங்கி குடியுங்கள்.

மோர், எலுமிச்சை பழச்சாறு ஆகியவையும் நல்லதுதான். அதேநேரம், அவற்றில் சேர்க்கப்படும் தண்ணீர் சுத்தமானதாக இருக்க வேண்டும். முடிந்தவரை, அவற்றை நீங்களே வீட்டில் தயார் செய்து உட்கொள்வதுதான் சிறந்தது.

ஆரோக்கியமான உடல் நலத்திற்கு.மருத்துவ செய்தி.

ஆரோக்கியமான உடல் நலத்திற்கு.


... சரியான உணவுப்பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து சாப்பிட்டால் நாம் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை.

கீரை: கீரைகளை நீரில் நன்றாக கழுவிவிட்டு சமைக்க வேண்டும். பழங்காலத்தில் இரவில் கீரையை சாப்பிடக்கூடாது என்பார்கள்.

அதற்கு காரணம் இருந்தது. அதாவது கீரைகளில் சிறு சிறு பூச்சிகள் அதிகம். இரவு என்றால் நமக்கு தெரியாது என்பதால் அப்படி சொன்னார்கள். கீரைகள் அனைத்துமே ரத்த விருத்தியை உண்டாக்கும்.

தூதுவளை கீரையை சாப்பிட்டால் இருமல், சளி மாறும். அகத்திக்கீரையை சாப்பிட்டால் கடுப்பு மாறும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டால் கண்களுக்கு பலம் கிடைக்கும். சிறுகீரை சாப்பிட்டால் கண்புகைச்சல் குறையும். புதினா சாப்பிட்டால் பசியை தூண்டும். கீழா நெல்லியை சாப்பிட்டால் மஞ்சள் காமாலை நோய் மறையும்.

பால் மற்றும் பால் பொருட்கள்: இதேபோல் பால் மற்றும் பால் பொருட்களும் நமது உடலுக்கு பலவிதத்தில் பலன் தருகின்றன.

பசும் பால் தாதுக்கள் மற்றும் ஆண்மையை அதிகரிக்கும். எருமைப்பால் புத்தியை மந்தம் அடையச் செய்யும். ஆட்டின் பால் சாப்பிட்டால் ரத்தப் போக்கு நோய்கள் குறையும்.

மோர் சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். வெண்ணைய் ஆண்மையை பெருக்கும். நெய் சாப்பிட்டால் புத்தி, ஞாபக சக்தி, ஆயுள் ஆகியவை அதிகரிக்கும்.

தேன் கண்களுக்கு நல்லது. நல்லெண்ணைய் குளிர்த் தன்மை உடையது.

தண்ணீர்: நீர் மனிதனுக்கு இன்றியமையாதது. கொதிக்க வைத்து ஆறிய நீர் மிகவும் நல்லது.

குழந்தைகள், வாதநோயாளிகள், பத்தியமுள்ளவர்களுக்கு புழுங்கல் அரிசி நல்லது.

அவல் பலத்தை அதிகரிக்கும். கோதுமை ஆண்மையை பெருக்கும். வெந்தயம் கசப்பு சுவை உடையது.

எள் எலும்புகளுக்கு பலம் தரும். கூந்தலுக்கு வலுவை தரும். இதை சாப்பிட்ட பின் குளிர்ந்த நீரை அருந்த வேண்டும்.

உளுந்து உணவுப் பொருட்களில் சிறந்தது. ஆண்மையை பெருக்கும். பெண்களுக்கு இடுப்புக்கு வலிமை கொடுக்கும். மாதவிலக்கை சீராக்கும். இதை சாப்பிட்டால் உடல் பருக்கும்.

பயறு வகைகள்: பயறு வகைகள் உடலுக்கு நல்லது. தானியங்களில் பயறு சிறந்தது. பாசிப்பயறு நோயாளிகளுக்கு நல்லது. வேர்க்கடலையை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடல் வளரும், ஆண்மை உண்டாகும்.

பாதாம் பருப்பு உடலுக்கு புஷ்டியை தந்து, ஆண்மையைப் பெருக்கும். பெருஞ்சீரகம் பசியைத் தூண்டி, வயிற்று நோயை அகற்றும்.

பெருங்காயம் தேக வாயுவை குறைத்து வயிற்று நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகவும் அமைகிறது. மஞ்சள் ரத்ததை சுத்திகரிக்கும். புண்களை ஆற்றும். மிளகு இருமல், சளியை குறைக்கும். தினமும் இரண்டு மிளகை சாப்பிட்டால் இருதயநோய் வராது.

தடை செய்யப்பட்ட தீமைகள்..1.ஷிர்க் எனும் இணைவைத்தல்

2..சூன்யம், ஜோதிடம் மற்றும...் குறிபார்த்தல்

3..கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் நன்மை செய்வதாக நம்புதல்

4.பாதுகாப்பு வேண்டி தாயத்து, கயிறு, வளையம் அணிதல்

5.துர்ச்சகுனம் பார்த்தல்

6.முகஸ்துதி (பிறருக்கு காண்பிப்பதற்காக அமல் செய்தல்

7.காலத்தை ஏசுதல்8.அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்துப்பலியிடுதல்

9.கப்றுகளில் கட்டங்கள் எழுப்புதல்

10.கப்று…களுக்காக விழா நடத்துதல்

11.சமாதி வழிபாடு……………..

12.அல்லாஹ் அல்லாதவருக்காக நேர்ச்சை செய்தல்

13. இறைவனல்லாத பிறரை (அவுலியா, இறைநேசர்கள் போன்றவர்களை) அழைத்து உதவி தேடுதல்

14.அல்லாஹ் அல்லாதவர் ஹலாலை ஹராமாக்குவதையும் ஹராமை ஹலாலாக்குவதையும் ஏற்றுக்கொள்ளுதல்

15.தொழுகையை விட்டுவிடுதல்

16.தொழுகையில் பொடுபோக்காக, அலட்சியமாக இருத்தல்

17.அவசர அவசரமாக தொழுதல்

18.அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்தல்

19.வேண்டுமென்றே ஜமாஅத் தொழுகையை தவறவிடுதல்

20.தொழுகையில் இமாமை முந்துதல்

21.கொலை செய்தல்

22.விபச்சாரம் செய்தல்

23.வட்டி வாங்குதல், கொடுத்தல், வட்டி சம்பந்தமான தொழில்களில் பணிபுரிதல்………………..…

24.மது அருந்துதல்

25.சூதாட்டத்தில் ஈடுபடுதல்

26.பொய் பேசுதல்

27.திருடுதல்

28.லஞ்சம் கொடுத்தல், லஞ்சம் வாங்குதல்

29.பொய்சாட்சி கூறுதல்

30.அவதூறு கூறுதல்

31. அநாதைகளின் சொத்துக்களை அபகரித்தல்

32.கர்வம் கொள்ளுதல்33.தற்பெருமை, ஆணவம் கொள்ளுதல்

34.அளவு நிறுவையில் மோசடி செய்தல்35.அநீதி இழைத்தல்

36.புறம் பேசுதல்

மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்.......
மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார். பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை. சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.

...
ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து, "என்னுடைய சாவு நெருங்கி விட்டது. எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.


அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.


முதல் விருப்பமாக, "என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."


இரண்டாவது, 'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."


மூன்றாவதாக, "என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்."


வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன. என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.


அதில் ஒருவன் தைரியமாக முன் வந்து, "அரசே..! நாங்கள் தங்கள் ஆசையை கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம். ஆனால், இதற்கான காரணத்தை தாங்கள் விளக்க வேண்டும்" என்று கேட்க, அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.


1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள். மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது. மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.


2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை உன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. அது சவக்குழி வரை மட்டும் தான்..! மனிதர்கள் வீணாக அதன் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக..!


3. உலகையே வென்றவன் சாகும் போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக....!!!
See More

கம்ப்யூட்டர் பராமரிப்பு பற்றிய தகவல் !!!


1. தினந்தோறும் பைல்களை அறவே நீக்க வேண...்டும். இங்கு அறவே நீக்க வேண்டும் என்று சொல்வது, அவை ரீசைக்கிள் பின் என்னும் போல்டரில் கூட இருக்கக் கூடாது என்பதுதான். இதற்கு சி கிளீனர் போன்ற இலவச புரோகிராம்கள் நமக்கு உதவுகின்றன.

2. இன்டர்நெட் இணைப்பு பெற்று இணைய நெட்வொர்க்கில் உங்கள் கம்ப்யூட்டர் இணைந்து விட்டதா! உடனே உங்கள் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பை அப்டேட் செய்திடுங்கள். இதனைச் சில நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளலாம் என்றாலும், தினந்தோறும் நீங்கள் இன்டர்நெட் நெட்வொர்க்கில் பணியாற்றுபவர் என்றால் தினந்தோறும் கூட அப்டேட் செய்திடலாமே. இதற்கென ஓரிரு நிமிடங்கள் தானே ஆகும்.

3. கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கினை டிபிராக் (Defrag) செய்வது மிக அவசியம். இதற்கான கால அவகாசம் நீங்கள் புரோகிராம்களை இன்ஸ்டால் மற்றும் அன் இன்ஸ்டால் செய்வதனைப் பொறுத்துள்ளது. இருப்பினும் 10 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள்வது நல்லது.

4. சிகிளீனர் போல கிளீன் மை டிஸ்க் புரோகிராம்கள் இணையத்தில் நிறைய கிடைக்கின்றன. இவற்றை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். சிலர் வாரத்தில் மூன்று முறை இதனைப் பயன்படுத்துவார்கள். டெம்பரரி பைல்களை நீக்குகையில் ரீசைக்கிள் பின் மற்றும் இன்டர்நெட் டெம்பரரி பைல்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனவா என்று பார்க்கவும்.

5.இன்னொரு வழியும் உள்ளது. Start மெனு சென்று அங்கு கிடைக்கும் ரன் பாக்ஸ் (Start>Run) செல்லுங்கள். %temp% என டைப் செய்து ஓகே கிளிக் செய்திடுங்கள். உடனே தற்காலிக பைல்கள் உள்ள போல்டர்கள் அனைத்தும் கிடைக்கும். வேறு எந்த தயக்கமும் இன்றி அனைத்தும் டெலீட் செய்திடுங்கள். ஒரு சில பைல்கள் அல்லது போல்டர்கள் அழிக்கப்பட முடியவில்லை என்று செய்திகள் வரலாம். எவ்வளவு அழிக்க முடியுமோ அவ்வளவையும் அழித்திடுங்கள்.

6. விண்டோஸ் தரும் ஆட்/ரிமூவ் புரோகிராம் மூலம் புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்தால், அது அந்த புரோகிராம் சார்ந்த பைல்களை முழுமையாக நீக்குவதில்லை. எனவே இதற்கென உள்ள சில புரோகிராம்களை டவுண்லோட் செய்து பயன்படுத்தவும். [You must be registered and logged in to see this link.] uninstaller_free_download.html என்ற தளத்தில் இந்த புரோகிராம் ஒன்று கிடைக்கிறது.

7. நீங்கள் வைத்து அவ்வப்போது அப்டேட் செய்திடும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சில மால்வேர்கள் மற்றும் ஸ்பை வேர்களை நீக்கக் கூடிய திறன் இல்லாமல் இருக்கலாம். எனவே அவற்றை நீக்குவதற்கென உருவாக்கப்பட்ட புரோகிராம்களை தினந்தோறும் இயக்கவும்.

8. கம்ப்யூட்டரை கிளீன் செய்வதைப் போல அதில் உள்ள டேட்டாவினப் பாதுகாப்பதற்கும் சில நடவடிக்கைகளை குறிப்பிட்ட கால அவகாசத்தில் மேற்கொள்ள வேண்டும். எனவே தினந்தோறும் வேலை முடித்தவுடன் நாம் உருவாக்கிய மற்றும் திருத்திய பைல்கள் அனைத்தையும் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.
தினந்தோறும் பேக் அப் செய்தாலும், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் ஹார்ட் டிஸ்க் முழுவதையும் ஒரு இமேஜாக உருவாக்கி பேக் அப் டிஸ்க்கில் வைப்பது நல்லது. இந்த இமேஜ் இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆகி உங்களுக்கு உதவ முடியாத நிலையில் இந்த இமேஜ் விண்டோஸ் இயக்கம் முதல் உருவாக்கிய பைல்கள் வரை அனைத்தும் தரும்.

9. ரிஜிஸ்ட்ரி யை கிளீன் செய்திடுங்கள் என்று சில கட்டுரைகளில் படிக்கலாம். கம்ப்யூட்டர்களுக்குப் புதியவரா நீங்கள்? அப்படியானால் இந்த வேலையை மேற்கொள்ள வேண்டாம்.

காதின் பாதுகாப்பு பற்றிய தகவல் !!!காதின் பாதுகாப்பை காதினிடமே விட்டுவிடுங்கள்:

காதுக் குடுமியை அகற்றுவது எப்படி?' இப்படிக் கேட்பவர்கள் பலர். குப்பை வாளிக்குள் (Dustbin) இருக்கும் குப்பைகளை அகற்றுவதுபோல காதுக்குடுமியையும் அகற்ற வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். உண்மையில் காதுக் குடுமி என்பது காதையும் செவிப்பறையையும் பாதுகாப்பதற்காக எமது உடல் தானகவே உற்பத்தி செய்யும் பாதுகாப்புக் கவசம் போன்றது....

பொதுவாக இது ஒரு மென்படலம் போல காதுக் குழாயின் சுவரின் தோலில் படிந்திருக்கும். இதனால் கிருமிகள், சிறுகாயங்கள், நீர் போன்றவவை காதைத் தாக்காது பாதுகாக்கிறது. அத்துடன் காதை ஈரலிப்பாகவும் வைத்திருக்கவும் உதவுகிறது. அதிலுள்ள கிருமியெதிர்ப்பு
(antibacterial properties) பண்பானது வெளிக் கிருமிகள் தொற்றி, காதின் உட்புறத்தில் நோயை ஏற்படுத்துவதையும் தடுக்கிறது.

காதுக்குடுமி

(Cerumen) என்பது இயல்பாக எண்ணெய்த் தன்மை உள்ள ஒரு திரவமாகும். சருமத்தில் உள்ள சில சுரப்பிகளால்
(Sebaceous and Ceruminous glands) சுரக்கப்படுகிறது. ஒவ்வொருவரது உடல் நிலைக்கும் ஏற்ப இது நீர்த்தன்மையாகவோ, பாணிபோலவோ, திடமான கட்டியாகவோ இருக்கக் கூடும்.

காதின் சுவரிலிருந்து உதிரும் சருமத் துகள்கள், முடித் துண்டுகள், ஆகியவற்றுடன் கலந்து திடப் பொருளாக மாற்றமுறும். தலை முடியின் உதிர்ந்த கலங்கள் அதிகமாக இருப்பதும், எவ்வளவு நீண்ட காலம் வெளியேறாது காதினுள்ளே இருந்தது என்பதும் எந்தளவு இறுக்கமாகிறது என்பதற்கு முக்கிய காரணங்களாகச் சொல்லலாம். காதுக்குடுமி காதின் பாதுகாப்பிற்கு மிக அவசியமானது என்பதால் வழமையாக எவரும் அதனை அகற்ற வேண்டியதில்லை. தினமும் புதிது புதிதாக உற்பத்தியாகி வர பழையது எம்மையறியாது தானாகவே சிறிது சிறிதாக வெளியேறிவிடும்.

மென்மையான குடுமியானது முகம் கழுவும் அல்லது குளிக்கும் நீருடன் கலந்து வெளியேறிவிடும். அல்லது காய்ந்து உதிர்ந்துவிடும். சிலருக்கு, பல்வேறு காரணங்களால் வெளியேறாது உள்ளேயே தங்கி இறுகி விடுவதுண்டு. காதுக்குழாய் ஒடுங்கலாக இருப்பதும் சற்று வளைந்து இருப்பதும் காரணமாகலாம். சிலருக்கு அது இறுகி, கட்டியாகி வெளியேற மறுப்பதுண்டு. அது அதிகமாகி செவிக்குழாயின் விட்டத்தின் 80 சதவிகிதத்ததை அடைத்துக்கொண்டால் காது கேட்பது மந்தமாகும். ஒரு சிலருக்கு வலி ஏற்படலாம். வேறு சிலருக்கு கிருமித் தொற்றும் ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளது.

காதுக் குடுமிப் பிரச்சனை என மருத்துவர்களிடம் வருபவர்கள் அனேகர். வருடாந்தம் கிட்டத்தட்ட 12 மில்லியன் அமெரிக்க மக்கள் இப்பிரச்சனைக்காக மருத்துவ உதவியை நாடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 2/3 ருக்கு அதாவது 8 மில்லியன் பேருக்கு மருத்துவ ரீதியாக அதனை அகற்ற வேண்டிய தேவை ஏற்படுகிறது.

இதை அகற்றவது எப்படி?

1. பஞ்சு முனையுள்ள இயர் பட்ஸ் நல்லதா, சட்டைப் பின் நல்லதா, நெருப்புக் குச்சி நல்லதா?

2. இவற்றைக் காதுக்குள் விடுவதைப் போன்ற ஆபத்தான செயல் வேறெதுவும் கிடையாது. அவை காதிலுள்ள மென்மையான சருமத்தை உராசி புண்படுத்தக் கூடும். அல்லது அவை உராசிய இடத்தில் கிருமி தொற்றிச் சீழ்ப் பிடிக்கக் கூடும். அல்லது அவை காதுக் குடுமியை மேலும் உற்புறமாகத் தள்ளி செவிப்பறையைக காயப்படுத்தலாம். இதனால் நிரந்தரமாக காது கேட்காமல் செய்துவிடவும் கூடும். எனவே இவற்றை உபயோகிப்பது அறவே கூடாது.

3. காதுக் குடுமியை கரைத்து இளகவைத்தால் தானாகவே வெளியேறிவிடும். மிகவும் சுலபமானது குடுமி இளக்கி நீர்தான். உப்புத் தண்ணீர், சோடியம் பைகார்பனேட் கரைசல், ஒலிவ் ஓயில் போன்றவையும் உதவக் கூடும். அதற்கெனத் தயாரிக்கப்பட்ட விசேட
(Waxol, Cerumol)காதுத்துளி மருந்துகளும் உள்ளன. ஐந்து நாட்கள் காலை, மாலை அவ்வாறு விட்டபின் சுத்தமான வெள்ளைத் துணியை திரி போல உருட்டி அதனால் காதைச் சுத்தப்படுத்துங்கள். பட்ஸ், குச்சி போன்றவற்றைப் பாவிக்க வேண்டாம். அல்லது சுத்தமான நீரை காதினுள் விட்டும் சுத்தப்படுத்தலாம்.

இவ்வாறு வெளியேறாது விட்டால் மருத்துவர் சிறிய ஆயுதம் மூலம் அகற்றக் கூடும். அல்லதுஅதனை கழுவி வெளியேற்றுவார். இதற்கென விசேடமாகத் தயாரிக்கப்பட்ட ஊசி போன்ற குழாய்கள் மூலம் நீரைப் பாச்சி கழுவுவார்கள். இதன்போது எந்தவித வலியும் இருக்காது. சில விசேட சிறு ஆயுதங்கள் மூலம் அல்லது உறிஞ்சி எடுக்கும்
(Suction device) உபகரணம் மூலம் சுலபமாக அகற்றவும் முடியும்.தற்போதுள்ள குடுமி அகற்றப்பட்ட போதும் சிலருக்கு இது மீண்டும் மீண்டும் சேரக் கூடிய சாத்தியம் உண்டு.

மீண்டும் ஏற்படாமல் தடுக்க முடியுமா?

அதற்கென மருந்துகள் எதுவும் கிடையாது. வாரம் ஒரு முறை குளிக்கும் போது கையால் ஒரு சிரங்கை நீரை காதுக்குள் விட்டுக் கழுவுவது அதனை இறுகாமல் தடுக்கக் கூடும். ஆயினும் காதில் கிருமித் தொற்றுள்ளவர்களும், செவிப்பறை துவாரமடைந்தவர்களும் அவ்வாறு சுத்தம் செய்வது கூடாது.

அடிக்கடி குடுமித் தொல்லை ஏற்படுபவர்கள் 6 முதல் 12 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறவோ குடுமியை அகற்றவோ நேரலாம். ஆயினும் காதுக் குடுமியை நாமாக அகற்றுவதை விட, தன்னைத்தானே சுத்தம் செய்யும் படி காதின் பாதுகாப்பை அதனிடமே விட்டு விடுவதுதான் உசிதமானது.