Digital Time and Date

Welcome Note

Saturday, July 14, 2012

திருக்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியது என்பதற்கான ஆதாரம் என்ன?


 
அஸ்ஸலாமு அழைக்கும் ...... திருக்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியது என்பதற்கான ஆதாரம் என்ன?.........என்பது மற்ற மதத்தினர் முஸ்லிம் நண்பர்களை பார்த்து கேக்கும் கேள்வி ஆகும் அவர்களுக்கான பதில் இதோ.........................முஹம்மது நபியவர்கள் கற்காலத்தில் வாழ்ந்தவறல்ல . வரலாறுகள் எழுதபடுகிற காலத்தில் வாழ்ந்தவர் . முஹம்மது நபியவர்கள் வாழ்ந்த காலம், அவர்களது பிரச்சாரம், சாதனை யாவும் வரலாற்றில் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன . முஸ்லிமல்லாதவர்களும் இவ்வரலாற்றை பதிவு செய்துஉள்ளனர்................அந்த வரலாற்றின்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கி.பி. 571 ஆம் ஆண்டு பிறந்தார்கள். அவர்களின் நாற்பதாம் வயதில் (ஆங்கில வருடக் கணக்குப்படி 39 ஆம் வயதில்) தம்மை இறைத்தூதர் எனக் கூறினார்கள். அப்போது முதல் தமக்கு குர்ஆன் அருளப்பட்டதாகக் கூறினார்கள். எனேவ நபிகள் நாயகத்தின் காலம் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட திலிருந்து குர்ஆணுடைய காலத்தையும் அறிந்துகொள்ளலாம் ................நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின் 20 ஆண்டுகளுக்குள் இறைவனால் அருளப்பட்ட திருக்குர்ஆன் பிரதிகள் ரஷ்யாவின் தாஷ்கண்ட் நகரத்திலுள்ள அருங்காட்சியகத்திலும், துருக்கியின் இஸ்தான்பூல் நகரத்திலுள்ள அருங்காட்சியகத்திலும் இன்றைக்கும் காட்சிக்குக் கிடைகின்றன . திருக்குர்ஆணை சில வருடங்களுக்கு முன்னால் யாரோ எழுதி நபிகள் நாயகத்துடன் சம்பந்தப்படுத்தி விட்டார்கள் என்று கூற முடியாது. 1400 வருடங்களுக்கு முந்தைய பிரதிகள் பாதுகாக்கப்பட்டிருப்பைத விட வேறு என்ன சான்று வேண்டும் ?

இந்தியாவின் பூர்வக் குடிகள் திராவிடர்கள்.

இந்தியாவின் பூர்வக் குடிகள் திராவிடர்கள். இந்த திராவிட மக்களே சிந்து சமவெளி நாகரிகத்திற்கு உரிமையாளர்கள். பண்டைய இந்தியாவில் திராவிட இன மக்கள் வேளாண்மை, மட்பாண்டங்கள், நெசவு, மரவேலை, ஆபரணங்கள், வணிகம், மீன்பிடித்தல், தோல் பொருள், போர்வீரர்கள், என அனைத்து தொழில் செய்பவர்களாக, எவ்வித பிரிவினையுமின்றி வாழ்ந்தனர். அவர்களுக்கிடயே ஏற்றத்தாழ்வுகள் கிடையாது. உயர்ந்தவர் தாழ்ந்தவர்கள் இல்லை. இதற்கிடையே பண்டைய ஈரானிய இனமான ஆரியர்கள் (ஆரியர் என்பதன் பொருள் வெளிநாட்டார் என்பதாகும்) மத்திய ஆசியா பகுதியிலிருந்து கைபர், போலன் கணவாய் வழியே மேய்ச்சலுக்காக வந்தனர். திராவிட இன மக்களின் நாகரிகம், பண்பாடு, தொழில், ஆட்சியமைப்பு ஆகியவற்றை கண்டனர்.

இரண்டு இனங்கள் சந்திக்கும்போது எப்போதுமே ஒரு இனம் மற்றொரு இனத்தை அடக்கி ஆள முயலும். தோற்கும் இனத்தின் மொழி, சமயம், அரசு, பண்பாடு, வரலாறு என அனைத்தும் ஆதிக்க இனத்தால் பறிக்கப்படும் என்பது வரலாற்று உண்மை. அவ்வாறுதான் தென்னாப்ரிக்காவின் நீக்ரோக்கள், அமெரிக்காவின் செவ்விந்தியர்கள், ஆஸ்தி ரேலியாவின் டாஸ்மேனியர்கள், இலங்கையில் ஈழத்தமிழர்கள் என பல இனங்கள்  தங்களினத்தின் மண்ணையும் அடையாளங்களையும் இழந்தனர். அதே போலதான் திராவிடர்களின் அனைத்து அம்சங்களையும் ஆரியர்கள் பறித்துக் கொண்டனர்.

அடிமைபடுத்தப்படும் இனம் ஆளும் இனத்தை எதிர்த்து போராடுவதும் உலக வரலாற்று நிகழ்வுகளில் ஒன்று.  அவ்வாறு போராடும் இனமக்களை ஒன்று ஆதிக்கம் செலுத்தும் இனம் அழிக்க முற்படும், அல்லது இவ்வின மக்களில் பிளவினை உருவாக்கி, ஒற்றுமையை குலைத்து, மக்களில் சிறிய கூட்டத்தை நட்பாக்கிக் கொண்டு பெரிய கூட்டத்தை அடிமைபடுத்தும். அதுபோலவே ஆரியர் திரவிட இன மக்களை சாதிகளாக பிரித்தனர். தன் இனத்தை கடவுளின் தூதர்களாக கூறிகொண்டனர். வீரர்களை சத்திரியர்களாகவும், வனிகர்களை வைசியர்களாகவும், வேளாண்மை முதல் செருப்பு தைக்கும் தொழில் வரையுள்ள அனைத்து உழைக்கும் மக்களை சூத்திரர்களாகவும் பிரித்தனர். சூத்திரர்களைவிட வைசியர்கள் மேலானவர்க ளென்றும், வைசியர்களைவிட சத்திரியர்கள் மேலானவர்க ளென்றும், சத்திரியர்களைவிட கடவுளின் பிரதிநிதிகளான தாங்கள் (ஆரிய பிராமணர்கள்) மேலானவர்களென்றும் வர்ணாஸ்ரம தர்மத்தை கற்பித்தனர். இதனால் ஒவ்வொரு சாதியும் தனக்கு கீழ் உள்ள சாதியின் மீது இழிவும், தனக்கு மேல் உள்ள சாதியின் மீது பொறாமையும் கொண்டது. இதில் பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகியோர் இரு பிறப்பாளர்கள், சூத்திரர்கள் மட்டும் ஒரே பிறப்பாளர்கள் மற்றும் சண்டாளர்கள் (மனுதர்மம்,  அத்தியாயம் 8 சுலோகம் 415). ஏனெனில் பண்டைய இந்தியாவில் சத்திரியர்களிடம் படை வலிமையும், வைசியர்களிடம் பொருளாதார வலிமையும் இருந்ததால் அவர்களுக்கு முக்கித்துவம் தரப்பட்டன. சூத்திரர்கள் வெறும் உழைப்பாளிகள் என்பதால் சொத்துரிமை, கல்வி கற்கும் உரிமை, வழிப்பாட்டு உரிமை என அனைத்தும் மறுக்கப்பட்டது. அதேவேளையில் சத்திரியர்களை உயர்வு படுத்த இராமாயணம், மகாபாரதம் கதைகள் போதிக்கப் பட்டன. குறிப்பாக இராமாயணத்தில் இராமன் சத்திரியன் இராவணன் சூத்திரன். ஆக இதன் மூலம் புரிந்து கொள்ள வேண்டியது, ஒரு இனம் மற்றொறு இனத்தை அடக்கி ஆள அம்மக்களை (ஆதிக்கத்திற்கு எதிராக போராடும் மக்களை) சாதிரீதியாக பிரிக்கப்படுகிறது. சாதியமைப்பு வலிமைபடுத்தப்படுகிறது, மக்களிடையே உயர்வு தாழ்வுகள் கற்பிக்கப்படுகிறது. இத்தகைய சாதிப்பிரிவுகள் கொண்ட இந்திய சமூகத்தில் புத்தர், மகாவீரர் போன்ற மகான்கள் பிறந்தனர். இவர்கள் தான் சாதிமைப்பையும், பெண்ணடிமைத் தனத்தையும், வேதங்கள்-யாகங்களையும், ஆரியர்களின் புராணங்கள் மற்றும் வேள்விகளையும் கடுமையாக விமர்சித்தனர். பிராமணரல்லாத மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தியானம், அகிம்சை, ஒழுக்கம், கல்வி ஆகியவற்றை பிராமணரல்லாத மக்களுக்கு போதித்தனர். பொளத்தமும் சமணமும் ஆரியரின் வேதங்களை கடுமையாக விமர்சித்தன.

அடுத்து ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வணிகம் என்ற பெயரில் வந்தனர். 1806-இல் வேலூர் புரட்சி நடந்தது. 1857 -இல் முதல் இந்திய சுதந்திரப் போர் (ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்கள் இதை சிப்பாய் கலகம் என வர்ணித்தனர்)  நடைபெற்றது. இந்த இரண்டு போராட்டங் களும் மட்டுமல்லாமல் அதே காலக்கட்டத்தில் நாடெங்கும் பல பகுதிகளிலும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக பல போரட்டங்கள் நடந்தன. 1857 புரட்சி கடுமையாக அடக்கப் பட்ட பின்னர், நாடெங்கிலும் நடக்கும் போராட்டங்களை ஒடுக்கவும், மீண்டும் 1857 போல் ஒரு புரட்சி நடை பெறாமல் இருக்கவும் ஒரு ஆய்வு நடத்தினர் ஆங்கிலேயர்கள். அந்த ஆய்வில் ஐரோப்பியர் இனமான ஆங்கிலேயருக்கு ஈரானிய  இனமான ஆரிய இனத்தின் இரண்டாயிரம் ஆண்டு சூழ்ச்சி பிடித்துபோனது. அது மக்களை சாதிரீதியாக பிரித்து ஆள்வது. அதற்கு முதலில் இந்திய சமூகத்தில் உள்ள சாதிகளை அரசு ஆவணமாக்குவது. இதற்காக சாதியை உள்ளடக்கிய மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது என 1857 புரட்சியை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட ஆய்வுக் குழு அறிக்கையளித்தது. அதன்படி அதிகாரப்பூர்வமாக முதன் முதலாக 1860-ஆம் ஆண்டில் தொடங்கி 1871 வரை கணக்கெடுப்பு நடத்தப் பட்டது. ஒவ்வொரு பகுதியிலும் தனித்தனியாக நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பு, பின்னர் ஒன்றாக இணைக்கப்பட்டு 1872-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. பின்னர் பத்தாண்டு களுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்த திட்டம் வகுக்கப் பட்டது. 1931-ம் ஆண்டில் மட்டும் ஜாதிவாரியாக கணக் கெடுப்பு நடத்தப்பட்டது. பின்னர் அந்த மாதிரியான கணக் கெடுப்பு நடத்தப்படவில்லை.

ஆங்கிலேயரின் மக்கள் தொகை கணக்கெடுப்பை பற்றி தெரிவிக்கப்பட்ட கருத்துகள்.

* "மாவட்ட அளவிலான கையேடுகள் (manuals)  மற்றும் களஞ்சியம் (gazetteers)  ஆகியவற்றின் முழு அத்தியாயங்களும் சாதி தகவல்கள் உள்ளடக்கியது. பேரரசை சார்ந்த கணக்கெடுப்புகள் அனைத்தும் சாதி கண்டுபிடிக்கும் மைய்ய நோக்கத்தை கொண்டது. 1872 முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதன்மையான பொருள் சாதியை பற்றியதே ஆகும். மக்கள்தொகை கணக் கெடுப்பு ஆணையர் எச்.எச்.ரைஸ்லே சாதி உள்ளடக்கிய இந்திய சமூக கணக்கெடுப்பு ஆங்கில பேரரசின் அரசியல் நோக்கத்தை நிறைவேற்றுவதாக உள்ளது என்று மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெளிவாக கூறியுள்ளார்: (Nicholas B Dirks, Castes of Mind: Colonialism and the Making of Modern India (New Jersey: Princeton University Press), Page 15.) 

* "சிப்பாய் கலகத்திற்க்கு பின்னர் ஆங்கில ஆட்சி யாளர்கள் வலியுடன் ஒரு விஷயத்தை உணர்ந்தனர். அது இந்தியாவின் சமூகத்தில் புரையோடியுள்ள சாதி அமைப்பை கணக்கிலெடுத்துக் கொள்ளாதது. இந்த சாதிய அமைப்பு வருங்காலத்தில் இப்படியொரு போராட்டம் மீண்டும் நிகழாமல் தமது அரசை காத்துக்கொள்ள உதவும் என நம்பினர். இதனால் ஒரு சாதியை மற்றோறு சாதிக்கு எதிராக தங்களின் நகர்வை திட்டமிட்டு செய்தனர் (Sekhar Bandyopadhyay, Caste, Politics and the Raj: Bengal 1872-1937 (Calcutta: K P Bagchi & Company), Page 29)

*"சாதி தகவல்களை உள்ளடக்கிய இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆங்கில அரசின் நிர்வாகத்திற்க்கு மிகுந்த பயனுள்ள தேவையாக இருந்தது (B S Cohn, Colonialism and Its Forms of Knowledge (Princeton: Princeton University Press), Page 8.)

* "மக்களுக்குள் பிளவு ஏற்படுத்துவது ஆட்சியாளர் களின் ராஜதந்திரத்தில் மிக அவசியமாகும்.' (ரஜனி பாமி தத், இன்றைய இந்தியா, பக்கம்- 539, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)

ஆக ஆங்கிலேயரின் மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது இந்திய மக்களிடையே உள்ள சாதி பிரிவுகளை அங்கீகரித்தல், 1857 புரட்சியில் அதிக அளவில் ஈடுபட்ட உயர்சாதியினரின் ஆதிக்கத்தை குறைக்க சூத்திரர்கள் (பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்) மற்றும் பஞ்சமர் (தாழ்த்தப்பட்டவர்கள்) ஆகியோர்களுக்கு கல்வி, அரசு பணிகளில் முன்னுரிமை கொடுத்தல், ஆங்கில அரசு நிர்வாகத்தில் ஆதிக்கம் செத்தும் பார்ப்பனர்கள்களை கட்டுப்படுத்துதல் ஆகிய ஆங்கிலேயர்களின் முடிவுகளுக்கு அப்போதைய மக்கள்தொகை கணக்கெடுப்பு உதவியது.  அதேசமயம் இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆங்கிலேயர் எதிர்பார்த்தப்படியே இந்திய சமூகத்தில் சாதிய எழுச்சிகள் தோன்ற ஆரம்பித்தன. முக்கியமாக பிற்படுத்தப் பட்ட சாதியினர் பிராமணர் ஆதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுத்தனர். அது பின்னர் பிராமணரல்லாதோர் இயக்கம் உருவாக காரணமானது. தாழ்த்தப்பட்ட மக்கள்தொகை அம்மக்களை ஒன்று சேரவும், இயக்கங்கள் உருவாகவும், பின்னர் இடஒதுக்கீடு கேட்கவும் காரணமானது. ஆக ஆரியர்களின் வரணாசிரம கொள்கை மக்களை சாதிரீதியாக பிரிக்கவைத்து ஆதிக்கம் செலுத்த உதவியது. அதே பாதையில் பயணிக்க முயன்ற ஆங்கிலேயர், சாதிகளை  அங்கீகரித்து, நவீன வடிவம் கொடுத்து, ஆட்சியை சுமூக மாக நடத்தவும், மக்களை பிரித்து ஆளவும் உதவியது. அதே நேரத்தில் இந்திய சாதி அமைப்பில் கடைசி அடுக்கில் உள்ள சூத்திரர்களும், பஞ்சமர்களும் அரசியல் அதிகாரத்திற் காகவும், இடஒதுக்கீடுக்காகவும் குரல் கொடுத்துக் கொண்டிருத்த வேளையில் இந்தியா விடுதலை அடைந்தது.

இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர் இடஒதுக்கீட்டிற்கு முக்கியமாக பாடுபட்டவர்கள் மூவர்.  அவர்கள் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், சமூகநீதி காவலர் வி.பி.சிங். இந்த மூவர்தான் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் முப்பெரும் உண்மையான தலைவர்கள். இதில் அம்பேத்கரும் பெரியாரும் தோழர்கள். வி.பி.சிங் இரண்டு தலைவர்களையும் தமது வழிகாட்டிகளாக கொண்டவர். அதே சமயம் இந்த மூவரும் பார்ப்பனியத்தின் மிக முக்கிய எதிரிகளும்கூட.

சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் 1950 -இல் அமலுக்கு வந்தது. இதில் சாதி பற்றி நல்ல நோக்கோடு சேர்க்கப்பட்டிருந்த சில சரத்துக்களைப் பயன் படுத்தி, நீதிக்கட்சி ஆட்சியில் (1921-இல் நிறைவேற்றப்பட்ட வகுப்புவாரி ஆணை) சென்னை மாகாணத்தில் அளிக்கப் பட்டிருந்த பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இருந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்தது உச்சநீதி மன்றம். எனவே, அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டிய அவசியம் வந்தது. இப்படித் திருத்தம் கோரி சென்னை மாகாணத்தில் மாபெரும் இயக்கம் நடத்தினார் பெரியார். அப்போது ஜவஹர்லால் நேரு இந்தியாவின் பிரதமர். நேரு அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர், உடனடியாக தமிழகத்தில் பெரியார் கோரிவரும் திருத்தத்தை மசோதாவாக தயாரித்தார். அதனை அன்றைய அரசியல் நிர்ணய சபையில் (அதுவே நாடாளுமன்றமும் கூட) தாக்கல் செய்தார். அந்த சமயத்தில் அழுத்தமானதொரு உரையையும் நிகழ்த்தினார். இந்திய  அரசமைப்புச் சட்டத்தின் (முதல் திருத்த) சட்டவரைவு விவாதம் 18.5.1951 அன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றபோது அம்பேத்கர் ஆற்றிய உரை.

""அரசமைப்புச் சட்டத்தின் 15-வது பிரிவில் புதிய இணைப்பு (திருத்தம்) தேவை என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த விரும்பத்தகாத சூழலுக்கு மூலகாரணம், நீதிமன்றம் வழங்கியுள்ள இரண்டு தீர்ப்புகள்தான். இந்தத் தீர்ப்பை வழங்கியது, சென்னை உயர்நீதிமன்றம்.

""சென்னை (எதிர்) திருமதி செண்பகம் துரைராஜன் 2. வெங்கட்ராமன் (எதிர்) சென்னை அரசு. இந்த இருவரின் வழக்குகளால், அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்ற நிலை உருவாகியுள்ளது.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசுப் பணிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்ற கருத்தை மையமாகக் கொண்டு நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன் விளைவாக, சாதிரீதியான அரசாணை (Communal G.O.) உருவானது. இந்த அரசாணை செல்லாது என்று சட்ட வல்லுனர்களும், நமது மேதகு நாடாளுமன்ற அங்கத்தினர்களும் கூக்குரலி டுகின்றனர்.

அரசியல் அமைப்புச் சட்டம் 16(4) பிரிவு, மாநில அரசுகள் தங்கள் விருப்பப்படி அல்லது எழுந்துள்ள தேவை களின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு மற்றும் சிறப்பு ஒதுக்கீடு வழங்கும் அதிகாரத்தை முழுவதுமாக வழங்குகிறது. இந்த 16(4) பிரிவு, அரசமைப்புச் சட்டத்தின் 29-ஆம் பிரிவுடன் முரண் படுவதால், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு தரக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கருதுகிறது. மேலும், சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது கூடாது; அது முற்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர் களிடையே பாரபட்சத்தைத் தோற்றுவித்துவிடும்' என்று உச்ச நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் தெரிவித்துள்ளது. நான், உச்ச நீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகளையும் கூர்ந்து படித்தேன். இந்த இரண்டு தீர்ப்புகளும் மிகுந்த அதிருப்தியைத் தருகிறது.

இந்தத் தீர்ப்புகள், நமது அரசியல் சாசனத்தின் பிரிவுகளோடு ஒத்துப்போகவில்லை. இது, என்னுடைய வாதம். உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்புகளுக்காக நான் வருந்துகிறேன். (நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம். சபாநாயகர் இடைமறித்து, அம்பேத்கர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கிறார். ஆனால், அம்பேத்கர் அதைப் பொருட் படுத்தவில்லை. அதில் முக்கியமானவர் அன்றைய உள்துறை அமைச்சர் ராஜகோபாலாச்சாரி) அரசியல் சட்டப் பிரிவு 29(2)-இல், மட்டும்'' என்ற வார்த்தையை சரியாகப் புரிந்து கொள்ளாமல் வழங்கப்பட்ட தீர்ப்பாகவே இவற்றை நான் கருதுகிறேன். மதம், இனம் அல்லது ஆண், பெண் பேதம் ஆகியவற்றை மட்டும்' அடிப்படையாகக் கொள்ளக் கூடாது. இது 29(2)இன் பொருள். இங்கு ""மட்டும்'' என்ற வார்த்தை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவனிக்கவில்லை என்பது என்னுடைய வாதம். சாதியற்ற இந்துக்கள்' என்று இந்நாட்டில் எவரும் இல்லை. ஒவ்வொரு இந்துவுக்கும் சாதி உண்டு. பார்ப்பனர், மகராட்டா, குன்பி, கும்பார் அல்லது ஒரு தச்சன் இவர்களில் யாரும் சாதியைவிட்டு வாழும் இந்துவாக இல்லை. இந்த நாட்டில், பிற்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்ட சாதியினராக இந்து மதத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்து மதத்தின் பன்னெடுங்கால கொடுமைக்கு ஓர் இடைக் காலத்தீர்வாக, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு மூலம் சில உரிமைகள் வழங்குவது மிகவும் அவசியமாகிறது. இதைக் கருத்தில் கொள்ளும் போது, நமது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஓர் அதிருப்தியான தீர்ப்பாகும். நான், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்குக் கட்டுப் பட்டவனாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், அதே நேரத்தில் அந்தத் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இல்லை. இது, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உள்ள சுயேச்சையான உரிமை. இதை விட்டு விட நான் தயாராக இல்லை. இதுவே என்னுடைய அழுத்த மான முடிவாகும். மேலும், அரசமைப்புச் சட்டத்தின் 46-வது பிரிவு, பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தேவை யான அனைத்து வகையான நலன்களை உறுதிப்படுத்தவும் மேம்படுத்தவும் மாநில அரசுகளுக்கு போதிய அதிகாரத்தை நிர்ணயித்துள்ளது. இந்த அதிகாரத்தை உறுதிப்படுத்த வேண்டிய தேவை, நாடாளுமன்றத்திற்கு எழுந்துள்ளது. நாடாளுமன்றம் 16(4) மற்றும் 29 ஆகிய பிரிவுகளை விரிவாகப் புரிந்து கொள்ளும் வகையில் பிரிவு 15 போதிய விளக்க இணைப்பு (சட்டத் திருத்தம்) சேர்க்கப்பட வேண்டும். இது, ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான உயர்வை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க உதவும்.'' (பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 15 பக்கம் : 331). 1951 மே 19-ஆம் தேதியிட்ட விடுதலை ஏடு அவரது உரையை தலைப்புச் செய்தியாக இப்படி வெளியிட்டது : கம்யூனல் ஜி.ஓ. பற்றிய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு திருப்தியற்றது - பிற்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு உதவிபுரிவதே அரசாங்கத்தின் கடமை- பாராளுமன்றத்தில் டாக்டர் அம்பேத்கரின் முழக்கம். இன்னொரு நிகழ்வையும் இங்கே நினைவுபடுத்த வேண்டும். இந்தத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்து, நிறைவேற்றித் தந்து, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு உரிமையைப் பாதுகாத்துத் தந்த சில மாதங்களில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அம்பேத்கர்.

அரசியலமைப்புச் சட்டம் என்பது அம்பேத்கரின் தனி விருப்பத்துக்கு ஏற்பத் தயாரிக்கப்பட்ட ஒன்று அல்ல. அரசியல் நிர்ணயசபையில் நிறைய பார்ப்பனியவாதிகள் இருந்தார்கள். அவர்களை எதிர்த்து அவர் முடிந்த மட்டும் போராடினார். ஒரு சில உரிமைகளை தாழ்த்தப்பட்ட- பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் பெற்றுத்தந்தார். மற்றபடி அந்தச் சபையின் பெரும்பான்மை முடிவுக்கு ஏற்பவே   அரசியலமைப்புச் சட்டம் உருவானது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டு உரிமையை மூலச் சட்டம் கொண்டிருக்கவில்லை. அதனால்தான் சென்னை மாகாண இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்தது. அது ஒரு வழியாகத் தடுத்து நிறுத்தப்பட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக வாழ்நிலை பற்றி ஆராய ஓர் ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகள் அமுலாக்கப்பட வேண்டும் என்று அம்பேத்கர் கோரிக்கை வைத்தார். அதைக்கூடச் செய்யத் தயங்கி நின்றது மத்தியிலிருந்த காங்கிரஸ் அரசு. பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனில் அக்கறை காட்டவில்லையென கடுமையாகச் சாடினார்  அம்பேத்கர். பின்னர் காகா காலேகர் குழு, மண்டல் குழு என்றெல்லாம் பிற்காலத்தில் வந்து, பிற்படுத்தப்பட்டோருக்கு மத்தியில் இடஒதுக்கீடு என்பது வி.பி.சிங் பிரதமராக இருந்த காலத்தில்தான் வந்தது. அவ்வளவு காலத்திற்கு அதை வெற்றிகரமாக இழுத்தடித்தது பார்ப்பனியம்.

மண்டல் கமிஷன் ஜனதா கட்சி ஆட்சியின்போது (1977 - 79) அமைக்கப்பட்டது. அந்த கமிஷனின் அறிக்கை  ஜனதா கட்சி அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதற்குப் பிறகுதான் தாக்கல் செய்யப்பட்டது. ஜனதா கட்சி ஆட்சி வீழ்ச்சியடைந்த பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்த காங்கிரசின் இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி அரசாங்கங்கள் அந்த அறிக்கையைக் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் கிடப்பில் போட்டு வைத்திருந்தன. 1989-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வி.பி.சிங்கின் தலைமையிலிருந்த ஜனதா தளம், தி.மு.க., தெலுங்கு தேசம் கட்சி, அஸ்ஸாம் கண பரிஷத் முதலியன உள்ளிட்ட ""தேசிய முன்னணி' போட்டியிட்டது. தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கையில் இருந்த முக்கிய வாக்குறுதிகளிலொன்று, அது ஆட்சிக்கு வந்தால், மண்டல் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்பதாகும். வி.பி.சிங் பிரதமரானார். மண்டல் குழு பரிந்துரைகளை பலத்த எதிர்ப்புகளையும் மீறி நடைமுறைப் படுத்தினார். பா.ஜ.க.வின் எதிர்ப்பு, பொருளாதார அளவு கோலை மட்டுமே வலியுறுத்தும் இடதுசாரிகளின் போக்கு ஆகியவற்றின் காரணமாக, மத்திய அரசுப் பணிகளில் 27 இடவிழுக்காடு ஒதுக்கீடு (இதுவும்கூட சில துறைகளுக்குப் பொருந்தாது) முறையை நடைமுறைப்படுத்தினார். இதன் பின்னர் உச்ச நீதிமன்றம் மண்டல் கமிஷன் தொடர்பான தீர்ப்பு ஒன்றில் ஒட்டுமொத்த இடஒதுக்கீடு 50%-ஐத் தாண்டக்கூடாது என்று கூறியது.

அம்பேத்கரை தனது வழிகாட்டியென கூறிக்கொண்ட வி.பி.சிங், அம்பேத்கர் நூற்றாண்டு நிறைவையொட்டி, அவரது ஆக்கங்கள் அனைத்தும் இந்தியிலும் பிற மாநில மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு சாமானிய மனிதருக்கும்கூட கிடைக்க ஏற்பாடு செய்தார்.   அம்பேத்கருக்கு ""பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டதும், அவரது உருவப்படம் நாடாளுமன்றக் கட்டடத்திற்குள்  திறந்து வைக்கப்பட்டதும் வி.பி. சிங் ஆட்சிக் காலத்தில்தான். அம்பேத்கரின் அறைகூவலை ஏற்று, பவுத்தம் தழுவிய தலித் மக்களுக்கும் பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீடு உண்டு என்று அறிவித்தார் வி.பி.சிங்.

தமிழகத்திற்கு வருகை தரும் இந்தியப் பிரதமர்கள், சங்கராச்சாரிகளையும், மேல்மருவத்தூர் சாமியார்களையும் சந்தித்து ஆசி பெற்று வந்த அரசியல் - பண்பாட்டு மரபு உருவாக்கப்பட்டிருந்த சமயத்தில் அவர்களுக்கு மட்டு மல்லாது, பல ""சமயச்சார்பற்ற' அரசியல் தலைவர்களுக்கும் ""அலர்ஜியாக' இருந்து வரும் தந்தை பெரியாரின் சிலைக்கு மரியாதை செலுத்திய ஒரே ஒரு இந்தியப் பிரதமர் வி.பி.சிங்தான். இவ்வாறு மூன்று தலைவர்களும் (அம்பேத்கர்-பெரியார்-வி.பி.சிங்) ஒரே வழியில் பயணித்தவர்கள். அதேசமயத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட மக்களின் ஆதரவாளரான வி.பி.சிங்கை எதிர்த்த சக்திகளிலொன்றுதான் ஜெயலலிதா.

2011-இல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது பிற்படுத்தப்பட்ட இன தலைவர்கள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றனர். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய மத்திய அரசு 11 அமைச்சர்கள் கொண்ட குழுவை நியமித்தது. இந்தக் குழு தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் தவிர்த்து மற்ற சாதிகள் வாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த என்னென்ன நடைமுறைகளைக் கையாளுவது என்பது பற்றி ஆராய்ந்து பிரதமரிடம் அறிக்கை தாக்கல் செய்தது. இதன் அடிப்படையிலேயே சாதிவாரிக் கணக் கெடுப்புக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது என பொதுவாக கூறப்பட்டாலும், உண்மை வேறுவிதமானது.

கடந்த பத்தாண்டுகளாக அரசுக்கெதிரான வெகுஜன போராட்டங்கள் நாடு முழுவதும் நடந்துவருகிறது. அதிலும் குறிப்பாக ஜம்மு & காஷ்மீர், மேற்குவங்காளம், வடகிழக்கு மாநிலங்கள், ஆந்திர பிரதேசம், தமிழகம் போன்ற மாநிலங் களில் அதிகளவில் நடந்துவருகின்றன. மத்திய இந்தியாவில் பசுமை வேட்டை என்ற பெயரில் அறிவிக்கப்படாத உள்நாட்டு போர் (மத்தியப் பாதுகாப்பு படைக்கும் மாவோயிஸ்ட் அமைப்பிற்கும் இடையே) நடந்துவருகிறது. வருங்காலத்தில் அரேபிய நாடுகளிலும், ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளிலும் நடப்பதை போன்று பன்னாட்டு நிறுவனங் களுக்கு எதிராகவும், அன்னிய மூலதனத்திற்கு எதிராகவும் போராட்டம் நடைபெறும் நிலை வர அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளன. இவற்றையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டு, மீண்டும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை எடுப்பதன் மூலம், மக்களை சாதிவாரியாக பிரித்து (ஆரியர்-ஆங்கிலேயர்-வழியில்) ஆள மத்தியரசு திட்ட மிட்டுள்ளது. அதேசமயத்தில் இந்த கணக்கெடுப்பை நடத்துவதன் மூலம் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிவிட்டதாகவும் ஆகிவிடும். இந்த கருத்தை பலர் மறுத்து, இந்த கணக்கெடுப்பு மூலம் அந்தந்த சாதி மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு பெற முடியும் என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள். ஆனால் இனியும் இந்தியாவில் இடஒதுக்கீட்டை அதிகப்படுத்துவதற் கான வாய்ப்புகள் மிக குறைவு. உச்ச நீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு வழக்குகளின் தீர்ப்புகள், இடஒதுக்கீட்டிற்கு எதிரான காங்கிரஸ், பா.ஜ.க கட்சிகளின் அரசியல், வேகமாக உருவாகிவரும் தனியார் நிறுவனங்கள், பன்னாட்டு மூலதனம் இவற்றை கணக்கில் எடுத்து கொண்டால். மாறிவரும் சூழலில் சமூக நீதிக்கான வாய்ப்புகள் குறைந்துக் கொண்டே வருவது புரியும். அப்படி இருக்கும் போது இந்த சாதிவாரி கணக்கெடுப்பானது, அனைத்து சாதி கட்சிகளுக்கும் தங்கள் சாதி மக்களின் கணக்கை காட்டி அரசியல் செய்யவும், தேர்தலில் சீட் வாங்கவும் பயன்படும். அதே சமயத்தில் தமிழக அரசும் பெரும்பான்மை சாதியினருக்கு அதிகளவு திட்டங்களை வழங்கவும், சிறுபான்மை சாதியினரை கைவிடும் ஆபத்தும் உள்ளது. ஏனெனில் மக்கள் மட்டுமல்ல தமிழக அரசும் சாதி உணர்வு கொண்டதுதான்.   

கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து சாதி சங்க தலைவர்களின் சாதிய அறைகூவலும், தங்களின் சாதி பற்றிய பெருமிதங்களும் பெருமளவில் மிகைபடுத்தப்பட்டவை. ஒவ்வொரு சாதிகளும் போட்டிப்போட்டுக்கொண்டு மிகை படுத்தியவை வரலாற்றில் எந்த ஆதாரமில்லை. இன்று தமிழகத்தில் சிறந்த வரலாற்று ஆய்வாளர்களான தொ.பரமசிவன், ஆ.சிவசுப்பிரமணியம் ஆகியோரின் கருத்துகள் உண்மையை தெரிந்துக்கொள்ள உதவும்.

* "தமிழ்நாட்டில் அனைத்துச் சாதியினருமே நாங்கள்தான் ஆண்ட பரம்பரையினர் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இது எந்தளவிற்கு உண்மை? வரலாற்று ஆசிரியர்கள் வேடிக்கையாகச் சொல்வார்கள். "ராஜா என்பவன் சாதி கெட்டவன்'. ஏனென்றால் அரசியல் காரணங்களுக்காக எல்லா சாதியிலும் ஒரு பெண்ணை எடுத்துக்கொள்வார்கள். ஒரு அரசியல்வாதி அரசியல் செல்வாக்கு உள்ள சாதியிலே பெண் எடுத்துக் கட்டுவான். அந்த சாதியின் வாக்கெல்லாம் அவனுக்குக் கிடைக்கும். அதேபோல்தான் அப்போதும். எனவே ராஜாக்கள் ஒரே ஜாதி இல்லை என்பதைவிட உண்மை இருந்திருக்க முடியாது.  அந்த ராஜாக்கள் பெயரை, பெருவாரியாக உள்ள ஜாதிகள் சில பட்டப் பெயராக வைத்துக் கொண்டு "நாங்கள்தான் ஆண்டோம்' என்று சொல்கிறார்கள்.' (திராவிடக் கருத்தியல் - ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மை, தொ. பரமசிவன்)

* "வேந்தர்களின் மீது ஜாதிப் பெயரைச் சூட்டி இன்று அழைப்பதை அறியாமை. பாண்டியன் என்ற பட்டப் பெயர் பல ஜாதியிலே இட்டுக் கொள்கிறார்கள். பாண்டியன் என்று பெயர் இட்டுக்கொள்கிறவர்கள் எல்லாம் பாண்டியர்களா? ஆனால் சேரன், சோழன் என்று பெயர்கள் இட்டுக்கொள்ள வில்லை. பாண்டியன் பெயர் மட்டும் மக்கள் பெயராகத் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கிறது. ஏனென்றால் அந்த அரச மரபுதான் பதினேழாம் நூற்றாண்டு வரைக்கும் உயிரோடிருந்தது. சேர, சோழ மரபுகள் காணாமல் போய் விட்டன‌. வேந்தர்கள், இனக் குழுக்கள் காலத்தில் பிறந்தவர்கள். அவர்களை சாதியோடு தொடர்புபடுத்தவே முடியாது.' (திராவிடக் கருத்தியல்- ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மை, தொ.பரமசிவன்)

* "பல்லவர்கள் தமிழர்கள் அல்லர். ஏனென்றால் அவர்களின் தொடக்க கால செப்புப் பட்டயங்கள் - சாரு தேவி என்கிற ராணி வெளியிட்ட "கீரகடகல்', "குணபதேயம்' (இந்த நிலப்பகுதியெல்லாம் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ளன) பட்டயங்கள்- எல்லாம் வடமொழிப் பட்டயங்களாகவே இருந்தன‌. எனவே இவர்கள் எல்லாம் தமிழ் மன்னர்கள் இல்லை. தமிழ்நாட்டிற்கு வந்து, தங்களைத் தமிழர்களாக ஆக்கிக் கொண்டார்கள்' (திராவிடக் கருத்தியல் - ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மை, தொ.பரமசிவன்)

* "மூவேந்தர்கள் என்று பேசும்போது, அவர்களின் பூர்வீகமே சிக்கலுடையது. சோழ மன்னர்கள் ஆந்திரப் பகுதியிலுள்ள வேங்கி நாட்டுப் பெண்களை மணந்து கொண்டு அதன் பிறகு வந்த பெண்வழி வாரிசுகள்தான் பிற்காலத்தில் மன்னர்களாக வந்தனர். அப்படியானால் தமிழ் மரபே உடைந்து போகிறதல்லவா? நான் வேடிக்கையாகக்கூட சொல்வது உண்டு. தமிழ்நாட்டில் எல்லா சாதியிலும் ஏதோ ஒரு வகையில் ராஜரத்தம் ஓடிக்கொண்டிருக்கிறது. எல்லா சாதிப்பெண்களையும் மன்னர்கள் அப்படி வைத்திருந்திருந்த னர். சாதிக்காரர்கள் தங்களை மன்னர் பரம்பரையினர் என்று சொல்லுவதை மேல்நிலையாக்கம்' என்று சொல்லலாம். அதைத் தவிர வரலாறாக அதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதைப் பார்த்து சிரிக்கலாமே தவிர, எதிர்க்க வேண்டியதில்லை. இதில் என்ன முக்கியம் என்றால் ஒரு மன்னன் கூட இதற்கு விதிவிலக்கல்ல.  வரலாறு என்பது அறிவியல்பூர்வமான வரலாறாக இருந்திருக்குமேயானால், யாருமே தங்களை ராஜபரம்பரை' என்று சொல்ல வெட்கப்படுவார்கள். ராஜராஜ சோழன் நானூறுக்கும் மேற்பட்ட பெண்களை, அவர்களின் விருப்பம் பற்றி கவலைப்படாமல் அழைத்துக் கொண்டு வந்து சூடுபோட்டு "தேவரடி'யார்களாக மாற்றிய கொடுமைக்காரன். இத்தகைய வரலாறுகளையெல்லாம் சொன்னால், யாரும் மன்னர்களை சொந்தம் கொண்டாட மாட்டார்கள். இதற் கெல்லாம் வரலாற்று ஆவணம் உண்டு.' (ஆ.சிவசுப்பிரமணியம் அவர்களின் நேர்காணல், கீற்று).

எதிர்கால உலகில் எந்த பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும்?

திர்கால உலகில் எந்த பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்றொரு வினா எழுமாயின் அதற்கு பெட்ரோலியப் பொருட்கள் என்ற விடை தவறானதாக கூட போகலாம். ஏனென்றால் அதனைவிட பூதாகர மான தட்டுப்பாடு உயிர் திரவமாகிய தண்ணீருக்கு ஏற்படப்போகிறது. இந்த அபாயத்தினை வெகு வேகமாக உலகம் சந்திக்க விருக்கிறது. தற்போதே அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நீரை எதிர்கால தேவைக்கு சேமிக்க தயாராகிவிட்டன. சமீபத்தில் ஹிலாரிக் கிளிண்டனின் வார்த்தைகளில் இது தெளிவாக வெளிப்பட்டது.

புவியின் மேற்பரப்பில் 1400 ஷ் 106 கன கிலோமீட்டர் அளவுக்கு நீர் இருப்பினும் அவற்றுள் 3 சதவீத நீர் மட்டுமே நன்னீர் ஆகும். அதிலும் 5 சதவீதம் (மொத்த நீர் அளவில் 0. 15 சதவீதம்) மட்டுமே நேரடியாக குடிநீராக உபயோகிக்க வல்லது.  பாக்கி 95 சதவீத நீரை உபயோகிக்க இயலாது. கடல்நீரில் உப்பு அதிக அளவில் கலந்துள்ளது. மேலும் கால்சியம், மெக்னீசியம் போன்ற வேதிப்பொருட்களும் அதிக அளவில் கலந்திருப்பதனால் குடிநீராக மாற்றுவதற்கு நவீன தொழில்நுட்ப முறைகளை (தஞ) கையாள வேண்டியிருக்கிறது. புதிய தொழில்நுட்ப முறைகள் செலவு மிகுந்தவை.

நம்முடைய நாடு சுமார் 1850 கன கிலோமீட்டர் அளவுக்கு தண்ணீரைக் கொண்ட நாடு. மேலும் உலக நன்னீர் இருப்பில் 4 சதவீத நன்னீரினைக் கொண்டுள்ளது. இந்தியாவின் தென்பாகங்களை விட வட பாகங்கள் மிகப்பெரிய ஆறுகளைக் கொண்டுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் நடுத்தர (ஙங்க்ண்ன்ம்) ஆறு காவிரி மட்டுமே. மற்ற ஆறுகள் அனைத்தும் சிற்றாறுகள் இனத்தில் பட்டவை.

தமிழகத்தின் தண்ணீர் தேவை ஆறு, ஏரி, கிணறு ஆகியவற்றின் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. ஆற்று நீர் ஆறு உற்பத்தியாகும் உயர்ந்த மலைப் பகுதிகளில் மழை பெய்வதனாலும், அதன் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவதனாலும் கிடைப்பது. நிலப்பகுதிகளில் மழை பொழிவதனால் சிற்றோடை களில் வழிந்தோடும் நீர் ஏரிகளில் சேமித்து வைக்கப் படுகிறது. கிணற்றுநீர் மழை நீர் மண்ணின் பல அடுக்குகளை கடந்து நிலத்தடிநீராக சேமித்து வைக்கப்படுவது, ஆக எல்லாவற்றிற்கும் மூலமாக விளங்குவது மழைநீரே. மழைநீர் தூய்மையான நீரும்கூட.

இருவேறு பருவ காலங்களில் தமிழகம் மழைப் பொழிவினை பெறுகின்றது. ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான, தென்மேற்கு பருவக் காற்றால் கிடைக்கும் மழை. செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான வடகிழக்கு பருவக்காற்றால் கிடைக்கும் மழை. தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் உட்பகுதி களில் அவ்வளவாக பெய்வதில்லை. மேற்கு தொடர்ச்சி மலையினையொட்டிய பகுதிகளிலேயே பொழிகிறது. இதன் முக்கிய காரணம் இப்பருவ காலத்தில் வீசும் தென்மேற்கு பருவகாற்று மேற்கு தொடர்ச்சி மலை களினால் தடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் மேற்கு தொடர்ச்சியின் மேற்கு பகுதியிலுள்ள கேரள மாநிலத்திற்கு மழைப்பொழிவு கிடைக்கிறது. தமிழகம் மழை மறைவு பிரதேசமாக இயற்கையினால் ஆக்கப் பட்டது. இருப்பினும் மேற்கு தொடர்ச்சி மலையின் வால்பகுதியில் தென்மேற்கு பருவக்காற்றால் அதிகமழை பெறுகிறது. தென்மேற்கு பருவக்காற்றால் தமிழகம் ஆண்டிற்கு 322 மி.மீ. மழை (சராசரியாக) பெறுகிறது. ஆனால் இந்த அளவு எல்லா ஆண்டு களிலும் சரியாக கிடைப்பதில்லை. பல ஆண்டுகளில் குறைவாகவே கிடைத்து வருகிறது.

வடகிழக்கு பருவக்காற்றால் தமிழகம் சாதாரணமாக 470 மி.மீ. மழைப்பொழிவினைப் பெறுகிறது. இப்பருவ மழையால் குறிப்பாக தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகள் அதிக மழையினைப் பெறுகின்றன. தமிழகம் இவ்விரண்டு பருவங்களிலும் பெறும் மொத்த மழையளவு தேசிய சராசரி மழையளவான 1250 மி.மீ.க்கும் குறைவானதே.


அதேபோல் தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள நீர் இருப்பு 800 கனமீட்டர் அளவானது தேசிய நீர் இருப்பு (ஒரு குடிமகனுக்கு) அளவான 2300 கன மீட்டருக்கும் குறைவானதே. சுமார் 20 வருடங்களுக்கு முன்பு தமிழகத்திற்கு கிடைத்த மழையளவு தற்போது இல்லை. குறைந்து கொண்டே வருகின்றது. அதேசமயம் தமிழகத்தின் வெப்பநிலை அளவு உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் முக்கிய காரணம் கடந்த 25 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட மரங்களின் அழிவேயாகும். தமிழகத்தின் இயற்கை போர்வை வெட்டி யெறியப்பட்டது. சாலையோர மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. வேளாண்மை நிலங்களின் ஓரங்களில் வளர்க்கப்பட்ட மரங்கள், காடுகள் அழிக்கப்பட்டுவிட்டன. கிராமப்புறங்களில் வளர்க்கப்படும் சமூகக்காடுகளின் பயன் பலருக்கும் தெரிவதில்லை. அவ்வாறு வளர்க்கப்படும் மரங்களை அரசியல்வாதிகளும், ஆக்கிரமிப்பு செய்வோரும் விட்டுவைப்பதில்லை.

தமிழகத்தின் தண்ணீர் தேவையை சமன் செய்வதில் முக்கிய பங்காற்றும் நீர் ஆதாரங்களாக விளங்குவது நில மேற்பரப்பு நீர் (நன்ழ்ச்ஹஸ்ரீங் ஜ்ஹற்ங்ழ்) மற்றும் நிலத்தடிநீர் ஆகும். நில மேற்பரப்பு நீர் ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை ஆகிய நீர் ஆதாரங்கள் மூலம் கிடைப்பது. இவ்வினத்தில் தமிழகம் சுமார் 24864 மில்லியன் கன மீட்டர் நீர் அளவினைக் கொண்டுள்ளது.

தமிழகத்தின் 34 நதிகள், 89 நீர்த்தேக்கங்கள், 41948 சிறு நீர் தேக்கங்கள் (பஹய்ந்ள்) பாசனத்திற்கும், குடிநீருக்கும் தேவையான நீரை வழங்கி வருகின்றன. சுமார் 24 லட்சம் ஹெக்டேர் நிலம் இதனால் பயன்பெற்று வருகிறது.

தமிழகத்தின் வறண்ட உட்பகுதிகளில் கிணறுகள் வேளாண்மைக்கும் குடிநீருக்கும் பயன்பட்டு வருகின்றன. ஆங்காங்கே பூமிக்கடியில் பல மீட்டர் ஆழத்தில் துளையிட்டு நிலத்தடிநீர் உறிஞ்சப்பட்டு வருகின்றது. கிணறுகளிலிருந்தும், ஆழ்துளை குழாய்கள் மூலமும் பூமியிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் மழைநீராலேயே மீண்டும் நிரப்பப்பட்டு வருகின்றன. நிலத்தடிநீர் பூமியிலிருந்து உறிஞ்சப்படும் அளவிற்கு மழைநீர் கிடைக்காததால் நிலத்தடிநீர் மட்டம் தாழ்ந்துகொண்டே செல்கிறது. பருவமழையினால் வருடம் ஒன்றிற்கு 4. 91 பில்லியன் கன மீட்டர் நிலத்தடிநீர் கிடைக்கின்றது. இதர நீர் நிலைகளின் மூலம் (ஏரி, குளம், ஆறு) போன்றவற்றின் மூலம் கிடைக்கும் நிலத்தடிநீர் 11. 96 பில்லியன் மீட்டர் கனமீட்டர். அதே சமயம் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் புயல் ஆகியவற்றின் மூலம் தமிழகத்திற்கு கிடைக்கும் நிலத்தடிநீர் அளவு 4. 53 பில்லியன் கனமீட்டர் ஆகும். இத்துடன் இதர நீர் வளத்தையும் சேர்த்து மொத்தம் 23. 07 பில்லியன் கன மீட்டர் நீர் நிலத்தடி நீர் இனத்தில் தமிழகத்திற்கு கிடைக்கிறது. இந்த நீர் அளவிலிருந்து ஆறு மற்றும் கழிவு நீர் பாதைகளின் வழியாக கடலுக்கு சென்று சேரும் 2. 31 பில்லியன் கன மீட்டர் நீர் போக தமிழகத்திற்கு கிடைக்கும் மொத்த நிலத்தடிநீர் அளவு 20. 76 பில்லியன் கன மீட்டர் ஆகும். இதில் வேளாண்மைக்கும் குடிநீர் மற்றும் தொழிற்சாலைகளுக்கு உபயோகப்படுத்தப்படும் நிலத்தடிநீரின் அளவு 17. 65 பில்லியன் கன மீட்டர். ஆனால் இந்த நீர் சமநிலை எப்போதும் மிகச்சரியாக தமிழகத்தில் நிலவுவதில்லை. எல்லா வருடமும் சரியான அளவு பருவ மழை கிடைக்காத காரணத்தால் மண்ணிலிருந்து உறிஞ்சப்படும் நீரில் 85 சதவீத அளவே மண்ணிற்கு திரும்ப சென்றடைகிறது. எனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகின்றது. தமிழகம் மொத்தம் 385 நிலத்தடிநீர் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு நீர் அளவினை ஆராய்ந்ததில் 145 மண்டலங்கள் பாதுகாப்பானவை எனவும், 57 மண்டலங்கள் மோசமான அளவில் உறிஞ்சப்படுபவை எனவும், 33 மண்டலங்கள் மிக மோசமான அளவில் உறிஞ்சப்படுபவை எனவும், 142 மண்டலங்கள் அதி மோசமாக உறிஞ்சப்பட்டவை எனவும் தெரியவந்துள்ளது. நிலத்தடிநீர் அதிக அளவில் உறிஞ்சப்படுவதன் மூலம் நிலத்தடிநீர் மட்ட அளவு குறைந்துபோய் கடந்த 20 வருடங்களில் பல்லாயிரக்கணக்கான கிணறுகள் வற்றி வறண்டு போயின. கோவை மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவு பாசனக்கிணறுகள் வறண்டுபோனதன் பின்னணி இதுவே. தொழிற்சாலைகள், சாயப்பட்டறை கழிவுநீர் நிலத்தடிநீரை எட்டும்போது நிலத்தடிநீர் மாசுபட்டு பயனற்றதாகி விடுகிறது. எனவே நீரை மாசுபடுத்தும் பணி தமிழகத்தில் கண்மூடித்தனமாக நடந்தேறி வருகிறது.


தமிழகத்தின் மொத்த தண்ணீர் தேவை 1921 டி.எம்.சி. ஆனால் நமக்கு கிடைத்து வரும் நீரின் அளவு 1643 டி.எம்.சி. இது 2001- ஆம் ஆண்டின் புள்ளி விவரம். 2050-ஆம் ஆண்டுகளில் புதிய தொழிற்சாலைகளுக்கும் வேளாண்மை உற்பத்திக்கும் அதிகமாக நீர் தேவைப்படும். தமிழகத்தில் உயர்ந்துவரும் மக்கள்தொகை மற்றும் நகரமயமாதல் மூலம் சுமார் 4 முதல் 6 சதவீதம் வரை குடிநீர் தேவை உயர வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் 34 நதிகளில் 17 பெரிய நதிகளும் 17 துணை நதிகளும் அடங்கும். நதிகள் மூலம் தமிழகத்திற்கு கிடைக்கும் நில மேற்பரப்பு நீர் சுமார் 853 டி.எம்.சி. இதில் 261 டி.எம்.சி. தண்ணீர் நமது அண்டை மாநிலங்களிலிருந்து பெறப்படுகிறது. அதுவும் நீதிமன்றங்கள் சென்று போராடி பெறவேண்டிய நிலை. காவிரி நதிநீர் பிரச்சினை, பானாசுரசாகர் பாசனத்திட்டம், முல்லைப் பெரியார் நதிநீர் பிரச்சினை (கேரளா), பாலாறு நதி பிரச்சினை (ஆந்திரா), நெய்யாறு பாசனத்திட்டம் (கேரளா), செண்பகவள்ளி  அணைக்கட்டு (கேரளா), பரம்பிக்குளம்- ஆளியாறு திட்டம்- ஒப்பந்தம் (கேரளா), பம்பை- அச்சன் கோவில்- வைப்பாறு இணைப்பு ஆகிய நதிநீர் பிரச்சினைகளை தமிழகம் எதிர்நோக்கியுள்ளது. இவ்வனைத்து நதிநீர் பிரச்சினைகளிலும் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். என்றாலும் தமிழகத்தின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்வதென்பது கேள்விக்குறியே. நதிநீர் இணைப்பு திட்டங்கள் எதிர்காலத்தில் பயன்தரலாம். ஆனால் அந்தந்த மாநில மக்களின் எதிர்பார்ப்புகளையும் மீறி நடைமுறைக்கு வர விசால சிந்தனை கொண்ட, உறுதியான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். தமிழகத்தின் பல நதிநீர் இணைப்பு திட்டங்கள் இன்னும் திட்டமிடப்பட்ட நிலை யிலேயே உள்ளது. எனவே எதிர்கால நீர் தேவையை மனதில் கொண்டு நாமே முன்னோடியாக இருந்து நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். வெள்ளப்பெருக்கின்போது வீணாக கடலில் கலக்கும் நீரை பயன்படத்தக்க வகையில் செய்யமுடியும். மேலும் புயல் போன்ற இயற்கை சீற்றங்களின்போது விளைநிலங்கள் நீரினுள் மூழ்கி பயிர்சேதம் ஏற்படுகின்றது. அதனை தடுக்க கால்வாய்கள் அமைத்து வீணாகும் நீரை சேமித்து பயன் பெறலாம்.

தமிழகத்திற்கு தேவையான மழைநீர் பெற வீணாக கிடக்கும் தரிசு நிலங்கள், சிறு மற்றும் பெரிய மலைத்தொடர்கள் போன்ற புவி பரப்புகளில் திட்டமிடப்பட்ட சமூகக் காடுகளை வளர்ப்பதில் இன்னும் அதிக செயல்திறன் தேவைப்படுகிறது. பெயரளவில் இருக்கும் திட்டங்களை தூக்கி தூர எறிந்துவிட்டு செயல்திறன் கொண்ட திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மரம் வளர்ப்பதினால் விழையும் மழையினைப் பற்றி விழிப்புணர்வு குறிப்பாக தமிழக மக்களுக்கு அதிகமாகவே தேவைப்படுகிறது. என்றாலும் தமிழகத்திற்கு தண்ணீர் தேவையினை ஓரளவேணும் பூர்த்தி செய்ய இயலும்.

கிங்பிஷர் விமானிகளுக்கு விஜய் மல்லையா எழுதிய வேண்டுகோள் கடிதம்

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் கடந்த ஐந்து மாதங்களாக விமானிகளுக்கு சம்பளம் மற்றும் அலவன்ஸ்களை தராததால் மீண்டும் வேலைநிறுத்த் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் மும்பையிலிருந்து செல்லும் 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மற்ற பல பகுதிகளுக்கு செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
புதுடெல்லியிலிருந்து 11 விமான வருகைகளும், 14 விமானப்புறப்பாடு உள்ளிட்ட 25 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

குறிப்பிட்ட தொழிலாளர்கள் சம்பளம் கொடுக்கப் படாததை கண்டித்து பணிகளை புறக்கணித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் அவர்களின் அக்கவுண் டுகளில் நேற்று பணம் போடப்பட்டு விட்டது.

75 சதவிகித தொழிலாளர்கள் சம்பளம் பெற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, இந்நிறுவனத்தின் தலைவரான விஜய் மல்லையா, ’’நல்லது நடக்கும் என்று நான் நம்புகிறேன். என்னால் முடிந்த நல்லதை செய்திருக்கிறேன்.

விமானங்களை ரத்து செய்தல், செய்தியாளர்களிடம் பேசுதல், நிறுவனத்தை அவமதித்தல் போன்றவற்றை செய்ததால்தான் நமக்கு சம்பளம் தந்துள்ளனர் என்று சிலர் நினைக்கலாம். அது தவறு. நமது நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்களின் நம்பிக்கையை வைத்து நான் மறுமுதலீடுக்கு முயற்சி எடுத்ததன் பலனாக இவை நடைபெற்றன’’ என்று தனது நிறுவனத்தின் ஊழியர்களுக்கு விஜய் மல்லையா இன்று கடிதம் எழுதியிருக்கிறார். 

Azhagu Kurippukal

20 ஆண்களிடம் சிக்கிக்கொண்ட ஒரு பெண் : டிவி சேனல் விளக்கம்

மது விடுதியில் இருந்து வீது திரும்பிய இளம்பெண்ணை 20 பேர் நடு ரோட்டில் மானபங்கம் செய்தனர்.
அசாமின் கவுகாத்தி நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த 9ம் தேதி இரவில், தன் தோழியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க, மது விடுதிக்கு சென்றார். அங்கு, அவருக்கும், அங்கிருந்த மற்றும் சிலருக்கும் இடையே, தகராறு ஏற்பட்டது. 

மது விடுதி ஊழியர்கள், அவர்களை வெளியேற்றினர்.  இதையடுத்து, அந்த இளம்பெண், மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் வந்து கொண்டிருந்தார்.

மது விடுதியில், அந்த பெண்ணுடன் தகராறில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரும், அவரை பின் தொடர்ந்து வந்தார். அந்த வழியாக சென்ற மேலும் சிலரும், அவரை பின் தொடர்ந்தனர். அவர்களில் பெரும்பாலானோர், மது குடித்திருந்தனர். இளம்பெண்ணை, கேலி, கிண்டல்கள் செய்து கொண்டே, பின் தொடர்ந்து வந்தனர். ஆபா சமாகவும் பேசினர்.

திடீரென, அந்த கும்பலில் இருந்தவர்கள், வெறி கொண்டு, அந்த பெண்ணை, கையை பிடித்தும், உடலைத் தொட்டும், தரக்குறைவான நடவடிக்கைகளில் ஈடுபட் டனர். அந்த பெண் கதறி அழுதும், அவர்கள் விடவில்லை. உடைகளை கிழித்து, விரட்டி விரட்டி மானபங்கப்படுத்தினர்.


  
அரை மணி நேரம், இந்த கொடுமை நீடித்தது. இதற்கு பின்பே, போலீசார் அங்கு வந்தனர். அந்த வெறிக் கும்பல் தப்பி ஓடிவிட்டது. போலீசார், அந்த பெண்ணை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.


இந்த சம்பவம் நடந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த உள்ளூர் "டிவி' சேனலின் கேமராமேன், அனைத்து கட்சிகளையும் படம்பிடித்தார். இந்த காட்சிகள், உள்ளூர் சேனலில் தொடர்ந்து ஒளிபரப் பப்பட்டது. "யூ டியூப்' தளத்திலும், இந்த காட்சி ஒளிபரப்பானது.
இந்த கொடுமையான சம்பவம், தற்போது, நாடு முழுவதும், பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப் பையும் ஏற்படுத்தியுள்ளது.


சம்பவம் நடந்து நான்கு நாட்கள் ஆகியும், குற்றம் செய்த 20 பேரில், நான்கு பேர் மட்டுமே, இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர்.
"டிவி' சேனல் விளக்கம்,  ‘’இந்த சம்பவத்தை ஒளிபரப்பிய உள்ளூர் சேனலின் நிர்வாகி செய்யது ஷாகிர் கூறுகையில், "இளம்பெண் ஒருவரை, ஒரு வெறிக்கும்பல் மானபங்கம் செய்தபோது, அவரை காப் பாற்ற நடவடிக்கை எடுக்காமல், கேமராவில் படம் பிடித்தது ஏன் என, எங்களை சிலர் கேட் கின்றனர்.

20க்கும் மேற்பட்டோரை, கேமராமேன் ஒருவரால் எப்படி சமாளிக்க முடியும்? மேலும், இளம்பெண் ணை மானபங்கம் செய்தவர்களின் முகங்களை மட்டுமே, தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறோம். பாதிக்கப்பட்ட பெண்ணின் முகத்தை மறைத்துத் தான் ஒளிபரப்புகிறோம்’’ என்றார்.

Friday, July 13, 2012

நோன்பு இருந்தால் மூளைக்கு பாதிப்பில்லை – ஆய்வில் தகவல்

லண்டன்:நோன்பு அல்லது விரதம் இருப்பதால் உடலில் சர்க்கரை குறைந்துவிடும், வயிற்றில் அமிலம் சுரந்து அல்சர்(குடல் புண்) வந்துவிடும் என்று பலருக்கு சந்தேகம் ஏற்படுவதுண்டு. ஆனால், முஸ்லிம்கள் 14 நூற்றாண்டுகளுக்கும் மேலாக தங்களது மார்க்கத்தின் அடிப்படை கடமைகளில் ஒன்றாக நோன்பை வருடந்தோறும் ரமலான் மாதத்தில் கடைப்பிடித்து வருகின்றனர். அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் வருவதில்லை. மேலும் மாதந்தோறும் 3 நோன்புகள், திங்கள், வியாழன் கிழமைகளில் நோன்புகள், வருடத்தில் சில குறிப்பிட்ட தினங்களில் நோன்புகள் ஆகிய உபரியான(கட்டாயக் கடமை அல்ல) குறித்து இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்…)அவர்களுடைய நடைமுறையிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

நோன்பை முஸ்லிம்கள் கடைப்பிடிப்பதற்கான காரணம் ஆன்மீக வாழ்வில் இறைவன் மீதான அச்சம் ஏற்படுவதற்காகும். இதன் காரணமாக ஒரு மனிதனின் ஆன்மீக வாழ்வு பரிசுத்தமடைகிறது.

இந்நிலையில் லண்டனில் நடந்த மருத்துவ ஆய்வில் நோன்பின் மகிமையை குறித்து தெரியவந்துள்ளது. அல்சமீர், பார்க்கின்சன் நோய்கள் முதியோருக்கு வருவதை தடுப்பது எப்படி? என்ற ஆராய்ச்சின்போதுதான் நோன்பின் மகிமை மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு தெரியவந்துள்ளது.

வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரு நாளோ உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு மூளையில் பாதிப்பு ஏற்படுவது இல்லை என்று தெரியவந்துள்ளது. சாப்பாடு அதிகம் இருந்தால் ஏராளமான கலோரி உடலுக்குள் செல்கிறது. அதை ஜீரணிக்க செரிமான உறுப்புகள்தான் உதவுகின்றன, மூளையை அது எப்படி வலுப்படுத்தும் என்று நீங்கள் கேட்கலாம்.

சாப்பிடாமல் இருக்கும்போது மூளையில் சுரக்கும் ஒரு திரவம் மூளையின் செயல்திறனைக் கூட்டுகிறதாம். இதனால் மூளைக்கு எந்தக் கேடும் வருவதில்லையாம். இதை முதலில் எலிகளிடத்திலிருந்து அறிந்தார்கள். பிறகு சில முதியவர்களிடமும் சோதித்ததில் உறுதி செய்துகொண்டார்கள்.

நோன்பு ஆன்மீக பயிற்சியுடன் மூளையின் திறனையும் வலுப்படுத்துகிறது.

படுவேகத்தில் பைக்கை பறக்க விடுபவரா நீங்கள் : உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்!

படுவேகத்தில் பைக்கை பறக்க விடுபவரா நீங்கள் : உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்!


படுவேகத்தில் டூவீலர்களை ஓட்டுவோருக்கு மதுரையில் நடந்த விபத்து ஒரு பாடம்.

இப்போதெல்லாம், டூவீலரை 'ஸ்டார்ட்' செய்து விட்டாலே, பலருக்கு ராக்கெட்டில் பறக்கும் நினைப்பு வந்து விடுகிறது. 'கட்' அடித்து, பஸ்களுக்கு இடையேயும், பிளாட் பாரத்திற்கு மேலேயும் பாய்ந்து சென்று, மற்றவர்களை கவர அல்லது மிரட்ட நினைக்கின்றனர். 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தான், இதை சாகசமாக நினைத்து, இப்படி ஓட்டுகின்றனர்.'பெண்கள் நம்மை பார்க்க வேண்டும். ஹீரோவாக நினைக்க வேண்டும்' என்பது இந்த இளைஞர்களின் எதிர்பார்ப்பு. அதிலும், வாகனத்தின் பின்னால் காதலி அமர்ந்தி ருந் தால், இளைஞர்களுக்கு இன்னும் கொஞ்சம் வீரம் 'பொத்துக்கொண்டு' வந்து விடும். வண்டியின் வேகம் அதிகரிக்கும். தரையில் படுமாறு வண்டியை சாய்த்து, ரொம்ப அதிகமாகவே 'கட்' அடித்து, ஹீரோத்தனத்தை வெளிப்படுத்துவர்.எப்போதுமே இந்த 'ஹீரோத்தனம்' வெற்றி பெறாது என்பதை இவர்கள் புரிந்து கொள்வதில்லை. சில நேரங்களில் விபத்துகளுக்கு 'ஓவர் ஸ்பீடு' காரணமாகி, வாழ்க்கையையே தொலைக்க வேண்டி வரும் என நினைப்பதில்லை.

இதற்கு உதாரணம், மதுரை பை-பாஸ் ரோட்டில் நடந்த விபத்து.ஆரப்பாளையத்தில் இருந்து ஒரு அரசு டவுன் பஸ், திருமங்கலத்திற்கு புறப்பட்டது. பை-பாஸ் ரோடு ராம் நகர் காலனி பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு இருந்தது. அப்போது அதே திசையில் ஒரு டூவீலரில் இருவர் (ஹெல்மெட் அணியவில்லை), படுவேகத்தில் பறந்து வந்தனர். பஸ்சை முந்த நினைத்த பைக்கை ஓட்டி வந்தவர், பஸ்சிற்கும் ரோடு மீடியனுக்கும் இடையே புக முயன்றார்.இவர் வருவதை எதிர்பாராத டிரைவர், பஸ்சை லேசாக நகர்த்தினார். அவ்வளவு தான், வந்த வேகத்தில் பஸ்சின் பின்பக்க ஓரத்தில் பைக்காரர் மோதி, கீழே உருண்டார். 'ஐயோ, அம்மா' என கத்தியபடி மயங்கினார். முழங்காலுக்கு கீழ், இடது கால் எலும்பு உடைந்து கால் வளைந்தது. பைக்கின் பின்னால் அமர்ந்திருந்தவரும் கீழே விழுந்து, எழுந்தார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் இல்லை. இருப்பினும், அவரால் எழுந்து, பைக் ஓட்டி வந்தவரை தூக்க முடியவில்லை.

ஏனென்றால் பரிதாபம்... அவர் கால்கள் ஊனமுற்றவர். அவரது ஊன்றுகோல்கள் விழுந்து கிடந்தன. பைக்கின் பின்னால் அமர வைத்து, ஓட்டி வந்தவரை தன்னால் காப்பாற்ற முடியவில்லையே என்ற ஆதங்கத்தில், ரோட்டில் அமர்ந்தபடி, தரையை அடித்து, அடித்து அழுதுகொண்டு இருந்தார். பார்த்தவர்கள் கண்கள் கலங்கின. அங்கிருந்தவர்கள், விபத்தில் சிக்கியவரை, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கால்களை இழந்தவரை அமர வைத்து ஓட்டும்போது கூட, உடல் உறுப்புகளின் அருமை தெரியாமல் இருந்திருக்கிறாரே அந்த இளைஞர் என்பது தான் கொடுமையிலும் கொடுமை. இளைஞர்களே... பைக்கின் வேகத்தை 'முறுக்கும்' முன், 'இந்த வேகம் தேவையா' என சிந்தியுங்கள். உங்களை நம்பி பெற்றோர், உடன்பிறந்தோர், மனைவி, குழந்தைகள் உள்ளனர் என்பதை மறக்காதீர்கள்.

Thursday, July 12, 2012

பித்அத் என்றால் என்ன?

இஸ்லாமிய மார்க்கத்தில் அல்லாஹ்வோ அல்லது நபி (ஸல்) அவர்களோ கற்றுத் தராத புதிய அமல்களை செய்வதற்கு பித்அத் என்று பெயர். மார்க்கத்தில் உருவாக்கப்படும் அல்லது நுழைக்கப்படும் இந்த புதிய அமல்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள்.

இன்று நமது இஸ்லாமிய சமுதாயம் இத்தனைக் கூறுகளாக பிரிந்து சிதறுண்டுக் கிடப்பதற்கு மூலக்காரணம் புதிய பித்அத்களை மார்க்கம் என்ற பெயரில் செய்வதேயாகும்.

அல்லாஹ் தனது மார்க்கத்தை முழுமைப்படுத்திவிட்டதாகக் தன்னுடைய திருமறையில் கூறுகிறான். நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ் சென்றிருந்த போது அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கினான்.

“இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்” (அல் குர்ஆன் 5:3)

நபி (ஸல்) அவர்கள் ஓரு சொற்பொழிவில் கண்கள் சிவக்க குரலை உயர்த்தி கூறினார்கள்: -

“…செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். நேர்வழியில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களின் நேர்வழியாகும். விஷயங்களில் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டது (பித்அத்) ஆகும். ஓவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்.” அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

“நமது அனுமதியில்லாமல் ஓர் அமலை எவரேனும் செய்தால் அது நிராகரிக்கப்படும” அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம் :புகாரி, முஸ்லிம்.

இன்று நமது சமுதாய மக்களிடையே பரவலாகக் காணப்படும் மிக மோசமான பித்அத்கள் சிலவற்றைக் காண்போம்.

இறைவனால் மன்னிக்கப்படாத ஷிர்க் என்னும் இணைவைத்தல் அடங்கிய மவ்லிது பாடல்களை பக்திப் பரவசத்துடன் நன்மையை நாடி பாடுவது
மீலாது விழா, பிறந்த நாள் விழா போன்ற விழாக்களைக் கொண்டாடுவது
நபி (ஸல்) அவர்களால் புனித நாட்கள் என்று கூறப்படாத நாட்களை புனித நாட்களாகக் கருதி அந்த நாட்களில் நோன்பு நோற்பது. உதாரணங்கள் மிஹ்ராஜ் இரவு மற்றும் பராஅத் இரவு
16 நோன்பு நோற்பது
திக்ர் செய்கிறோம் என்ற பெயரில் ஆடல், பாடலுடன் கூடிய திக்ரு (ஹல்கா) செய்வது. இதில் இறைவனை அழைப்பதாகக் கூறிக்கொண்டு இறைவனின் அழகிய திருநாமங்களை திரித்துக் கூறுவதோடு, அவர்கள் புதிதாக வெளிவந்த சினிமாவின் பாடலுக்கேற்ற இசையில் இராகங்களை வடிவமைத்துக் கொண்டு ஆடிப்பாடுகின்றனர். இவ்வாறு செய்வதல் இறந்தவாகளின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று கருதி இறந்தவர்களின் 7 ஆம் நாள் மற்றும் வருட பாத்திஹாக்களில் இந்தக் பித்அத்களை நிறைவேற்றுகின்றனர்
இறந்தவர்களுக்காக 3,7,40 ஆம் நாள் மற்றும் வருடாந்திர பாத்திஹாக்கள் ஓதுவது
நபி (ஸல்) அவர்களால் கற்றுத்தரப்படாத ஸலவாத்து நாரியா என்ற ஷிர்க் வாத்தைகள் அடங்கியதை 4444 தடவை ஓதுவது
இவைகளைச் செய்யக்கூடிய நமது சகோதர, சகோதரிகள், பின்வரும் காரணங்களையோ அல்லது அவற்றில் சிலவற்றையோ கூறுகிறார்கள்: -

நன்மைகளைத்தானே செய்கிறோம்! இதை ஏன் தடுக்கிறீர்கள்? இவைகளைச் செய்தால் அதிக நன்மைகள் கிடைக்குமே!
பித்அத் பற்றி நபி (ஸல்) அவர்கள் எச்சரித்திருப்பது உண்மைதான்; ஆனால் நாங்கள் செய்வது நன்மையான காரியங்களைத்தான்; எனவே இவைகள் பித்அத்துல் ஹஸனா எனப்படும் நற்கருமங்களாகும்
பித்அத்தே கூடாது என்னும் நீங்கள் நபி (ஸல்) அவர்கள் பயன்னடுத்தாத கார், விமானம், பேண்ட் சர்ட் போன்றவற்றைப் பயன்படுத்துகிறீர்களே! அவைகள் பித்அத் இல்லையா?
நன்மையைத்தானே செய்கிறோம்; அதை ஏன் தடுக்கிறீர்கள் என்று கேட்கும் சகோதர சகோதரிகள் ஒன்றைப் புரிந்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் மற்றும் நபி (ஸல்) அவர்களால் பரிபூரணமாக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தில் புதிதாக ஒரு அமலைச் சேர்ப்பது என்பது, அல்லாஹ்வுக்கோ, நபி (ஸல்) அவர்களுக்கோ தெரியாத ஒன்றை நாம் கற்றுத்தருவது போன்றதாகும். ஏனென்றால் அதிக நன்மையை பெற்றுத்தரும் இத்தகைய நல்ல அமல்களை அல்லாஹ்வோ அல்லது நபி (ஸல்) அவர்களோ கூற மறந்து விட்டனர் அல்லது கூறாமல் விட்டுச் சென்று விட்டார்கள். அதை நான் செய்து முழுமைப் படுத்துகிறேன் என்று கருதுவது போலதாகும். (நவூது பில்லாஹ் மின்ஹா) அல்லாஹ் நம்மை அத்தகைய தீய எண்ணங்களிலிருந்து காப்பாற்றுவானாகவும். நாம் செய்ய வேண்டிய அனைத்து வகையான அமல்களைப் பற்றியும் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் தெளிவாக விளக்கப்பட்டு மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டிருக்கும் போது நாம் புதிய அமல்களைச் சேர்ப்பதற்கு வேண்டிய அவசியம் எதற்கு?

“பித்அத்துகள் அனைத்துமே நரகத்திற்கு இட்டுச் செல்லும் வழிகேடுகள்” என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்க நாம் எவ்வாறு பித்அத்துகளை நல்ல பித்அத் என்றும் தீயவை என்றும் தரம் பிரிப்பது?. நமது சமுதாயத்திற்கு மார்க்கத்தை போதிக்கும் அறிஞர்களும் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைக்கு மாற்றமாக மார்க்கத்தில் உருவாக்கப்பட்ட புதிய அமல்களுக்கு ஆதரவு தந்து அவைகள் நடைபெறும் இடங்களுக்கும் சென்று அவற்றில் கலந்து கொள்கின்றனர். உண்மை பேசினால் எதிப்பு வரும், ஆதாயம, வருமானம் தேயும் என அறிந்து சிலர் அசட்டுத் தையத்துடன் மார்க்கத்தில் புதிது புதிதாக உருவானவைகளை பித்அத்துல் ஹஸனா (அழகான பித்அத்) என்று பெயரிட்டு அனுமதி வழங்கி ஆதரிக்கின்றனர். நபி (ஸல்) அவர்களோ நல்ல பித்அத், கெட்ட பித்அத் என பித்அத்களை வேறுபடுத்திக் காட்ட வில்லை. பித்அத்கள் அனைத்தும் வழிகேடுகள் என்று தான் சொன்னார்கள்.

முதலில் நாம் ஒன்றைப் புரிந்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் தன் திருமறையில் மார்க்கத்தை பரிபூரணப்படுத்திவிட்டதாக கூறுகிறானே தவிர இந்த உலக வாழ்க்கை வசதிகளை இல்லை. அல்லாஹ் கூறுகிறான்: -

“இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்;) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்” (அல் குர்ஆன் 16:8)

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த குதிரைகள், கோவேறு கழுதைககள் மற்றும் கழுதைகளை வாகனங்களாக படைத்திருப்பதாக் கூறியதோடு இன்னும் நீங்கள் அறியாத வாகனங்களைப்படைத்திருப்பதாக கூறுகிறான். இதிலிருந்து நாம் விளங்குவது என்னவென்றால் இன்று நாம் பயன் படுத்திக் கொண்டிருக்கும் கார், விமானம் போன்ற வாகனங்களை மட்டுமல்லாமல் இன்னும் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படக் கூடிய பிற வாகனங்களைப் பற்றியும் முன்னறிவிப்பு செய்துள்ளான் என்பதாகும்.

எனவே அவர்கள் எடுத்துவைக்கும் நாம் பயன்படுத்தும் கார், விமானம் போன்றவையும் பித்அத் ஆகாதா? என்ற கேள்வியும் அர்த்தமற்றதாகும். பித்அத் என்பது அமல்களில் புதிதாக உருவாக்குவது தானே தவிர உலக காரியங்களின் நடைமுறைகளில் அல்ல.

எனவே சகோதர சகோதரிகளே! சற்று சிந்தித்துப் பாருங்கள். அல்லாஹ்வும் அவனது தூதரும் பித்அத்களைப் பற்றி கடுமையாக எச்சரித்திருக்க நாம் மேலே கூறிய மவ்லிது, ஹத்தம், பாத்திஹா போன்ற நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தராத செயல்களை பித்அத்துல் ஹஸனா என்ற பெயரிலும், நம்முடைய முன்னோர்கள் செய்து வந்தார்கள் என்றும் செய்தோமேயானால் அது நிச்சயமாக வழிகேடேயாகும்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள் ‘நமது அனுமதியில்லாமல் ஓர் அமலை எவரேனும்செய்தால் அது நிராகரிக்கப்படும்’

“(அமலில்) ஒவ்வொரு புதுமைப் பழக்கமும் வழிகேடு தான்: வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு உரியவை தான் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்’ ஆதாரம்: அஹ்மத்

“பித்அத் புரியும் ஒருவரது தொழுகை, நோன்பு, தர்மம், உம்ரா, குர்பானி, தீனுக்கான முயற்சிகள், தீனில் செலவழித்தல், அனைத்தும் அல்லாஹ்விடத்தில் ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. குழைத்த மாவில் இருந்து தலைமுடி எவ்வளவு இலகுவாக வெளியேற்றப்படுமோ, அதுபோல் பித்அத் செய்யும் ஒருவன் இஸ்லாத்தில் இருந்து வெளியேறுவான்” அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி), ஆதாரம்: இப்னு மாஜா

எனவே சகோதர சகோதரிகளே நபி (ஸல்) அவர்களால் கடுமையாக எச்சரிக்கபட்ட இந்த பித்அத்களை நாம் தவிர்த்துக் கொள்வதோடு, மற்றவர்களுக்கும் இத்தீமைகளைப் பற்றி எடுத்துக் கூற வல்ல இறைவன் நமக்கு அருள்பாலிக்க இறைவனிம் பிரார்த்திப்போம்.

நன்றி: சுவனத்தென்றல்

Wednesday, July 11, 2012

நீங்கள் கைதானால், போலீஸ் காவலிலிருந்து உடனடியாக விடுதலை பெறுவது எப்படி?

பிடிப்பாணை வழக்குகளில், பிடிப்பாணையில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளைப் பார்த்து, அதற்கேற்ப பிணையாளிகளுடன் பிணைமுறி எழுதித்தர வேண்டும் (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு. 71).
சுமத்தப்பட்டுள்ள குற்றம் பிணையில் விடுவிக்கப்படக் கூடியதாகவும், பிடிப்பாணை இல்லாமல் கைது செய்யப்பட்டிருந்தாலும், பிணைமுறி எழுதிக்கொடுத்த பின்பு உங்களை பிணையில் விடுவிக்கும் படி காவல் நிலையப் பொறுப்பில் உள்ள காவல்துறை அதிகாரியிடம் கேட்கலாம்.
ஒரு நபரிடம் பிணையாளிகள் இல்லாமல் பிணைமுறிவு எழுதி வாங்கிக் கொண்டு, பிணையில் விடுவிப்பதற்கு காவல்துறை அதிகாரிக்கு தன் விருப்புரிமை அதிகாரம் உண்டு (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 436).
உடனடியாக உங்களை பிணையில் விடுவிக்காவிட்டால் உங்களது வழக்கறிஞருக்கோ, நண்பர் அல்லது உறவினருக்கோ தொலைபேசியில் தகவல் கூற உங்களுக்கு உரிமை உண்டு. உங்களது வழக்கறிஞரிடம் பிணையாளிகளாக வரக்கூடிய நபர்களின் பெயர், முகவரிகளைத் தரவும், உங்களுக்கு வழக்கறிஞர் இல்லாவிட்டால், நண்பர் அல்லது உறவினருக்கு கீழ்கண்ட விவரங்களைத் தெரிவிக்கவும்.

நீங்கள் ஆஜராகப் போகும் குற்றவியல் நீதிமன்றம்.
நீதிமன்றம் துவங்கும் நேரம்.
உங்களுக்காக பிணையாளிகளாக வரத்தயாராக உள்ளவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரச்செய்வது.
முடிந்தால், ஒரு வழக்கறிஞரை தொடர்புக் கொள்ளச் சொல்வது.
நீதிமன்றத்திற்குச் செல்லும் முன்பாக, இத்தகையவற்றைக் கவனித்துக் கொண்டால், தேவையில்லாமல் காவலில் வைக்கப்படுவதிலிருந்து நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள்.
குற்றவியல் நீதித்துறை நடுவரால் பிணையில் விடுவிக்கப்படல்:
பிணையில் விடுவிக்கப்பட முடியாத குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டு, அவர் குற்றம் புரிந்திருக்கக் கூடும் என்பதற்கு நியாயமான காரணங்களிருந்தால் காவல்துறை அதிகாரி அவரை பிணையில் விடுவிக்க மறுத்துவிடலாம். அவ்வாறான நிலைமையில், பிணையில் விடுவிக்கும் படி நீதிமன்றத்தில் எழுத்து மூலமான மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். மரணதண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கக் கூடிய குற்றங்களாக இருந்தாலன்றி, நீதிமன்றம் அவரைப் பிணையில் விடுவிக்க வேண்டும். அவ்வாறான குற்றங்களுக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றம் அல்லது உயர்நீதி மன்றம் மட்டுமே பிணையில் விடுவிக்க முடியும்.
பிணையில் விடுவிப்பதை எதிர்த்து காவல் துறையினர் கூறும் பொதுவான காரணங்கள்:
குற்றவாளி, விசாரணையின் போது ஆஜராகமாட்டார்.
சாட்சிகள் அல்லது முக்கிய சாட்சியங்களில் அவர் குறுக்கிடுவார்.
பிணையில் விடுவிக்கப்பட்ட பிறகு, மேலும் குற்றம் புரிவார்.
காவல்துறையினரின் புலன் விசாரணை முடியவில்லை.
மேலும் குற்றச்சாட்டுகள் தொடர வேண்டியுள்ளது.
களவு போன பொருட்கள் கைப்பற்றப்படவில்லை.
சக குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர்.
குற்றம் புரிவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் கைப்பற்றப் படவில்லை.
பொதுவாக, குற்றவாளியை காவலில் வைக்கும்படி, காவல் துறையினர் மனுச் செய்வார்கள். அத்தகைய மனுவில், குற்றவாளியை மேலும் காவலில் வைக்க வேண்டியதற்கான காரணங்களை அவர்கள் அளித்திருப்பார்கள். கூடுமான அளவிற்கு, காவல் துறையினர் கூறும் காரணங்களை மறுத்துரைக்க வேண்டும்.
பிணையில் விடுவிக்க மனு:
குற்றவாளியால் ஒரு வழக்கறிஞரை அமர்த்திக் கொள்ள முடியுமென்றால், அவர் நீதிபதியின் முன்பாக குற்றவாளிக்காக மனுக் கொடுத்து ஆஜராகலாம்.
வழக்கறிஞரை அமர்த்திக் கொள்ள இயலாதென்றால், குற்றவாளியே நீதிபதிக்கு மனுச் செய்து கொள்ளலாம். இதற்காக சிறை அலுவலரிடமிருந்து மனுவைப்பெற்று, பூர்த்தி செய்து, நீதிபதியைத் திருப்திப்படுத்தும் வகையில், தான் பிணையில் விடுவிக்கப்பட வேண்டியதற்கு தகுந்த காரணங்களைக் கூற வேண்டும்.
அம்மனுவில், தாம் விடுவிக்கப்படுவதற்காக, கீழ்க்கண்ட சிறப்பு காரணங்களைச் சுட்டிக் காட்ட வேண்டும்.
நிபந்தனையும் தங்குமிடத்தின் நிலைமையும் பிணையில் விடுவிக்கப்படாவிட்டால் வெளியேற்றபட நேரிடுமா?
பணியை இழக்க நேரிடுமா?
பிணையில் விடுவிக்க மறுக்கப்பட்டால், தன்னைச் சார்ந்துள்ள குடும்பத்தினருக்கு எத்தகைய துன்பம் ஏற்படும்?
காவலில் வைத்திருப்பதால் நலிவுற்ற உடல் நிலையும், சிகிச்சையும் எவ்வாறு பாதிக்கப்படும்?
குற்றவியல் நீதித் துறை நடுவர் பிணையில் விடுவிக்க மறுத்தல்:
பிணையில் விடுவிக்க மறுத்தால், குற்றவியல் நீதித் துறை நடுவர், அதற்கான காரணங்களைப் பதிவு செய்ய வேண்டும். உயர்நீதி மன்றங்களில் மேல் முறையீடு செய்வதற்கு அத்தகைய பதிவுக் குறிப்பு அவசியமாகும்.
மேல் முறையீடு:
பிணையில் விடுவிக்கக் கோரும் மனுவானது குற்றவியல் நீதித்துறை நடுவரால் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டால், குற்றவாளி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து கொள்ளலாம். பிணையில் விடுவிப்பதற்கு மறுப்பு அல்லது நீதிமன்றத்தில் ஆட்சேபணை தெரிவிக்கப்படவில்லை என்பதையும் பிணை விடுவிப்பு மனுவில் குறிப்பிட வேண்டும். ஒருவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டால், மீண்டும் அடுத்த முறை மனுச் செய்து முயற்சிக்கலாம்.
பிணையில் விடுவிப்பதற்கான நிபந்தனைகள்:
குற்றவியல் நீதித்துறை நடுவர்,
நிபந்தனை எதுவும் இல்லாமல்
சிறப்பு நிபந்தனைகளுக்கு உட்பட்டு
பிணையாளிகளுடன் அல்லது பிணையாளிகளின்றி பிணை முறி எழுதிக் கொடுத்தால் பிணையில் விடுவிக்கலாம்.
சிறப்பு நிபந்தனைகளில், குறிப்பிட்ட நேரங்களில் காவல் நிலையத்தில் குற்றவாளி ஆஜராக வேண்டும் அல்லது அவரது பாஸ் போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்பது போன்று கூறப்பட்டிருக்கும். குற்றவியல் நீதித்துறை நடுவரால் விதிக்கப்பட்டுள்ள நியாயமற்ற நிபந்தனைகள் நீதிமன்றத்தில் ஆட்சேபிக்கலாம். நிபந்தனைகளை மாற்ற நீதிமன்றம் மறுத்தால், குற்றவாளி அதை மறுத்துவிடலாம். ஆனால். அவ்வாறான நிலைமையில், மேல் முறையீடு விசாரிக்கப்பட்டு. அவருக்குச் சாதகமான முடிவு செய்யப்படும் வரையில் அவர் விடுதலை செய்யப்படமாட்டார்.
பிணை முறிவும், பிணையாளிகளும்:
பிணையாளிகளுடனோ அல்லது பிணையாளிகள் இல்லாமலோ சொந்தப் பிணையில் ஒரு குற்றவாளியை இல்லாமலோ சொந்தப் பிணையில் ஒரு குற்றவாளியை விடுவிக்கலாம்.
குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் நீதிமன்றத்தில் குற்றவாளி ஆஜராவதற்கு, குறிப்பிட்ட தொகையைப் பிணையாக உத்திரவாதம் அளிக்கும் நபர்களே பிணையாளிகள் ஆவர்.
பிணையாளிகளாக உள்ளவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். கேட்கப்பட்டால் பிணையாளியாக இருக்கத் தயார் என்பதையும் போதிய நிதிவசதி உண்டு என்பதையும் பிரமாணத்தின்பேரில் நீதி மன்றத்திற்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும்.
அவர்களுக்குப் பிணை அளிப்பதற்குப் போதிய நிதிவசதி உள்ளது என்பதோடு வேறு வகையிலும் பிணையாளிகளாக இருக்கத் தகுதியுடையவர்கள் என்பதை எடுத்துக்காட்டி, நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்யலாம்.
எந்தவிதக் காரணமும் கூறாமல். பிணையாளியை ஏற்க மறுத்துவிடக் குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு அதிகாரம் உண்டு. பிணையாளிகள் நீதிமன்றத்தில் இல்லாவிட்டால், காவல் துறையினர் அவர்களை விசாரித்து, ஏற்றுக் கொள்ளத்தக்கவர்கள் எனத் தீர்மானிக்கும் வரை, கைது செய்யப்பட்ட நபர் காவலில் வைக்கப்பட்டிருப்பார்.
பிணையாளிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், நிரந்தர முகவரியும், பிணையளிப்ப தற்கு அவர்களது கடன்கள் நீக்கி, போதுமான அளவிற்கு நிதி வசதியும் இருக்க வேண்டும். பிணையாளிகள் தங்களது ரேஷன் கார்டு, வாடகை ரசீது, வைப்பீட்டு நிதி அட்டை, சம்பளப் பட்டியல். வருமான வரி ரசீது போன்ற ஆவணங்கள் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
தொழில் முறையில் பிணையாளிகளாக இருந்தலன்றி, அவர்களது தனிப்பட்ட குண இயல்பு, அரசியல் கருத்துக்கள், பழைய குற்றவாளியா, ஆணா, பெண்ணா என்பதைக் காரணங்காட்டி பிணையாளிகளைத் தள்ளுபடி செய்யும் அதிகாரம் காவல் துறைக்கும், குற்றவியல் நீதித்துறை நடுவருக்கும் இல்லை.

How to insert images in Facebook Chat box? | My Blogger Tricks

How to insert images in Facebook Chat box? | My Blogger Tricks

பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க...

சில நேரம் பென் டிரைவில் எதாவது கோப்புகளை ஏற்றும் போது

"Cannot copy files and folders, drive is Write protected . Remove
write protection or use another disk " என்று பிழைச்செய்தியைக்காட்டும்.
நாம் என்ன தான் போராடினாலும் காப்பி செய்ய இயலாது. இது போல Format
செய்யும் போதும் கோப்புகளை நீக்கும் போதும் இதே தொல்லையை கொடுக்கும். இது
போல மெமரி கார்ட்களிலும் இந்த பிழைச்செய்தி வரும். இதற்க்கு காரணம்
வைரஸ்கள் Registry இல் மாற்றம் செய்து விடுவது தான். இதை எப்படி
நீக்குவது என்று பார்ப்போம்.

எளிமையான வழி:

Start - Run செல்லவும். பின் கீழே உள்ள வரியை காப்பி செய்து Ok கொடுக்கவும்.reg add "
HKLMSystemCurrentControlSetControlStorageDevicePolicies" /t
Reg_dword /v WriteProtect /f /d 0

பின்னர் பென் டிரைவை எடுத்து விட்டு மறுபடியும் நுழைக்கவும்.

இப்பொழுது நீங்கள் விரும்பியபடி வேலை செய்யலாம். சரி

உங்களுடைய பென் டிரைவை Write Protected செய்ய விரும்பினால் கீழே உள்ள வரி
பயன்படும்.

reg add "HKLMSystemCurrentControlSetControlStorageDevicePolicies" /t
Reg_dword /v WriteProtect /f /d 1

சில நேரங்களில் இதை அடித்தும் உடனே மாறாவிட்டால் கணினியை ரீ ஸ்டார்ட்
செய்து விட்டு பென் டிரைவை செருகவும்

திருக் குர்ஆனில் சில குறிப்பிட்ட வசனங்களை ஓதும்போதோ, அல்லது ஓதக் கேட்கும் போதோ, ஸஜ்தா செய்ய வேண்டுமென்பது

திருக் குர்ஆனில் சில குறிப்பிட்ட வசனங்களை ஓதும்போதோ, அல்லது ஓதக் கேட்கும் போதோ, ஸஜ்தா செய்ய வேண்டுமென்பது (-சிரம் பணிந்து வணங்க வேண்டுமென்பது) நம் மார்க்க விதி. இவ்வாறு சிரம் பணிய வேண்டிய வசனங்கள் 14 இருக்கின்றன.
-----------------------------------------

 
வாசிப்பதற்கு முன்

திருக்குர்ஆன், குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் செய்திகள் வடிவமைக்கப்பட்ட நூல் அல்ல. மாறாக 23 ஆண்டுகளில் பல்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப இறைவனால் கூறப்பட்ட அறிவுரைகளின் தொகுப்பு என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நல்லொழுக்கமுள்ள அறிவுள்ள தந்தை தன் மகனுக்குப் பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவுரை கூறுகிறார். இவ்வாறு அவர் பத்து ஆண்டுகளில் கூறிய அறிவுரைகளை நாம் தொகுத்தால் அது எவ்வாறு அமைந்நிருக்கும்?

இதில் முதல் வருடம் கூறிய அறிவுரைகளில் சிலவற்றை மறு வருடமும் அவர் கூறியிருப்பார்.

சில அறிவுரைகளை ஏழெட்டு தடவை கூட கூறியிருப்பார்.

சில அறிவுரைகளை ஒரே ஒரு தடவை தான் கூறியிருப்பார்.

செய்தியின் முக்கியத்துவத்தின் காரணமாக இவ்வாறு திரும்பத் திரும்பக் கூறியிருக்கலாம். அல்லது கூறப்பட்ட அறிவுரையை மகன் சரியாகக் கடைபிடிக்காத போதும் மறுபடியும் கூறியிருப்பார்.

இதே போன்ற காரணங்களால் தான் திருக்குர்ஆனிலும் சில விஷயங்கள் திரும்பத் திரும்பக் கூறப்பட்டுள்ளன.

தந்தை மகனுக்குக் கூறிய பத்து வருட அறிவுரைகளைத் தொகுத்துப் பார்த்தால் அது எந்தத் தலைப்பின் கீழும் வரிசைப்படுத்திக் கூறப்பட்டதாக இருக்காது.

முதல் நாளில் மகன் கோபமாக இருப்பதைக் கண்டு பொறுமையைப் பற்றிப் பேசுவார். அடுத்த நாளில் பரீட்சை என்றால் படிப்பதன் அவசியம் பற்றிக் கூறுவார். மறுநாள் மகன் சரியாக சாப்பிடவில்லையானால் உணவு உட்கொள்வது பற்றிப் போதனை செய்வார். அதற்கும் மறுநாள் தாயை மகன் எதிர்த்துப் பேசுவதைக் காணும் போது அது பற்றி அறிவுரை கூறுவார்.

இந்த அறிவுரைகள் எந்தத் தலைப்பின் கீழும் வரிசைப்படுத்திக் கூறப்பட்டிருக்காது. முதலில் இந்தத் தலைப்பிலான விஷயங்களைக் கூறிவிட்டு, அடுத்து வேறு தலைப்பை எடுத்துக் கொள்வோம் என்றெல்லாம் திட்டமிட்டு தந்தை மகனுக்குத் அறிவுரை கூறுவதில்லை. மகனுக்கு தேவைப்படும் செய்திகளைத் தேவையான அளவுக்குக் கூற வேண்டும் என்பது மட்டுமே அவரது திட்டமாக இருக்கும்.

இது போலவே திருக்குர்ஆனும் பல அறிவுரைகளைக் கூறியுள்ளது.

எனவே திருக்குர்ஆனில் சில செய்திகள் திரும்பத் திரும்ப கூறப்படுவதையும், குறிப்பிட்ட ஒரு தலைப்பின் கீழ் அதன் செய்திகள் அமையாமல் இருப்பதையும் முன்னர் கூறப்பட்டது பிறகு மாற்றப்பட்டதையும் காணலாம்.

பொதுவாக எழுத்துக்களுக்கும் பேச்சுக்களுக்கும் இடையே பல வேறுபாடுகளைக் காணலாம்.

எந்த ஒரு தலைவரின் மேடைப் பேச்சையாவது கவனியுங்கள்! “இவருடைய ஆட்சி மோசமான ஆட்சி. ஊழல் மலிந்து விட்டது. உன்னை ஆட்சியை விட்டு அகற்றுவதே எனது முதல் வேலை” எனப் பேசுவார். இவருடைய ஆட்சி என்று படர்க்கையாகப் பேசியவர் திடீரென உன்னை என்று முன்னிலைக்கு மாறுவார். ‘இவர்' என்பதும் ‘உன்னை’ என்பதும் ஒருவரைத் தான் குறிக்கிறது என்றாலும் பேச்சுக்களில் இத்தகைய முறை உலக மொழிகள் அனைத்திலும் காணப்படுகிறது.

இது மேடைப் பேச்சக்களில் மட்டும் இல்லை வீட்டில் ஒருவர் தன் குடும்பத்தில் பேசும் பேச்சுக்களிலும் இந்தப் போக்கைக் காணலாம்.

“உனக்குத் திமிர் அதிகமாகி விட்டது” என்று முன்னிலையாகப் பேசிக் கொண்டே வருபவர் திடீரென்று “இவனை வீட்டை விட்டு வெளியேற்றினால் தான் நிம்மதி” எனக் கூறுவார். முன்னிலையிலிருந்து படர்க்கைக்கு மாறுவதை சர்வ சாதாரணமாகப் பேச்சு வழக்கில் காணலாம்.

ஆனால் எழுத்தில் இவ்வாறு யாரும் எழுத மாட்டோம். திருக்குர்ஆனைப் பொருத்த வரை அது எழுத்து வடிவில் அருளப்படவில்லை. மக்களை நோக்கிப் பேசும் ஒலி வடிவமாகவே அருளப்பட்டது. எனவே தான் திருக்குர்ஆளிலும் இது போன்ற போக்கை அதிக அளவில் காணலாம்.

‘நீங்கள்’ என்று முன்னிலையாகப் பேசிக் கொண்டே வந்து ‘அவர்கள்’ என்று படர்க்கைக்கு மாறும்.

பேச்சாக அருளப்பட்டு, எழுத்து வடிவமாக்கப்பட்டதே குர்ஆன் என்பதே இதற்குக் காரணம்.

அதே போல் தந்தை மகனுக்குக் கூறும் அறிவுரையில் சூழ்நிலைக்கு ஏற்ப சில அறிவுரைகளை மாற்றிக் கூறுவதுண்டு.

நான்கு வயதுச் சிறுவனாக இருக்கும் போது வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று கூறிய தந்தை பதினைந்து வயதுப் பையன் வீட்டுக்குள்ளே அடைந்து கிடந்தால் “வெளியே போய் மற்றவர்களைப் போல விளையாடினால் என்ன” என்று கூறுவார். முன்பு கூறியதற்கு இது மாற்றமானது என்றாலும் இரண்டுமே இரண்டு நிலைகளில் கூறப்பட்டவை.

இது போலவே குர்ஆனும் பல்வேறு கால கட்டங்களில் கூறப்பட்ட அறிவுரை என்பதால் இரு வேறு சூழ்நிலைகளில் கூறப்பட்ட இருவேறு அறிவுரைகள் முரண் போல தோற்றமளிக்கலாம். அவை வெவ்வேறு நிலைகளில் கூறப்பட்டவை.

குர்ஆனில் இறைவன் தன்னைப் பற்றி தன்னிலையாகக் கூறும் போது மிகச் சில இடங்களில் மட்டுமே ‘நான்‘ எனக் கூறுகிறான். பெரும்பலான இடங்களில் ‘நாம்‘ என்றே கூறுகிறான்.

தனி நபர்களும் தம்மைப் பற்றி இவ்வாறு கூறும் வழக்கம் பல மொழிகளில் உள்ளது போல் அரபு மொழியிலும் உள்ளது.

‘இது என் வீடு’ என்று கூறும் இடத்தில் ‘இது நம்ம வீடு‘ என்று கூறுகிறோம். இதை மற்றவர்களுக்கும் பங்கு உண்டு எனப் புரிந்து கொள்ள மாட்டோம்.

சொந்த மகனைக் கூட மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தும் போது ‘நம்ம பையன்’ என்று கூறுவதுண்டு. இதை நேரடியான பொருளில் யாரும் கூறுவதுமில்லை. புரிந்து கொள்வதுமில்லை. இது போல் தான் ‘நாம்’ ‘நம்மை’ ‘நம்மிடம்’ என்பன போன்ற சொற்கள் குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

35 Guru Tips To Make Your Blog Popular! | My Blogger Tricks

35 Guru Tips To Make Your Blog Popular! | My Blogger Tricks

கள்ள நோட்டை எளிதில் கண்டுபிடிக்க ரிசர்வ வங்கியின் புதிய இணையதளம்
நாட்டில் அதிகரித்து வரும் கள்ளநோட்டை ஒழித்துக்கட்டவும் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும் ரிசர்வ வங்கி புதிய இணையதளத்தை துவக்கியுள்ளது.

இதன் மூலம் கள்ளநோட்டை முற்றிலும் ஒழித்துகட்டவும் கள்ளநோட்டை மக்கள் எளிதாக கண்டுபிடித்திடவும் முயற்சி செய்து வருகிறது.
கள்ள நோட்டு புழக்கம் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் செயல் ஆகும். எல்லைப்பகுதியில் ஊடுருவும் ப‌யங்கரவாதிகள் தான் இது போன்ற செயலகளில் ஈடுபட்டுவருகின்றனர். இந்திய கள்ள நோட்டுக்கள் பக்கத்து நாடான பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு இந்தியாவில் பயங்கரவாதிகள் மூலமாக புழக்கத்தில் விடப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்ந நிலையில் கள்ள நோட்டு புழக்கத்தை ஒழித்துகட்டவும், அவற்றை எளிதாக சாதாரண மக்கள் இனம் காணவும், விழப்புணர்வு ஏற்படுத்த ரிசர்வ் வங்கி,www.paisaboltahai.rbi.org.in என்ற புதிய இணையதளத்தை துவங்கியுள்ளது.
கடந்த 2010-2011-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் புழக்கத்தில் இருந்த 6.74 மில்லியன் கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்துள்ள விவரம் உள்ளிட்டவை இந்த இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளது.
ரூ. 10, 50,100, 500, 1000 ஆகிய கரன்சிகளின் வரிசைப்படி கள்ள நோட்டுகளுக்கும், ஒரிஜினல் கரன்சிகளுக்கும் உள்ள வித்தியாசத்தினை கண்டுபிடிக்க முடியும், மேலும் கள்ளநோட்டு பற்றிய விவரங்கள் அடங்கிய குறும்படமும் காட்சியாக இடம் பெற்றுள்ளன. இவற்றினை டவுன்‌லோடு செய்து கள்ள நோட்டினை எவ்வாறு இனம் காணலாம் என்பது குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ரமளான் மாதத்தின் சிறப்பு !


ரமளான் மாதத்தின் சிறப்பு !

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், 


அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! நாம் வெகு விரைவில் புனிதமிக்க ரமளான்மாதத்தை அடைய இருக்கிறோம்.அந்த மாதத்தை அடைவதற்கு முன் அதன் சிறப்பையும் கண்ணியத்தையும் , நம் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டு நடப்பது அவசியம்.  அல்லாஹ் ரமளான் மாதத்தை சிறப்புமிக்க மாதமாக ஆக்கியிருக்கிறான் காரணம் நமக்கு நேர்வழி காட்டும் சங்கைமிக்க திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதமாக ரமளான் மாதம் திகழ்கிறது.  

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.(அல்குர்ஆன் 2:185)

ரமளான் மாதத்திற்கு சிறப்பாக அமைந்த திருக்குர்ஆனை அதிகமாக இந்த மாதத்தில் ஓதவேண்டும் குறிப்பாக அதன் பொருளோடு ஓதுவது சிறந்தது.


நோன்பு

ரமளான் மாதத்தின் மிகப் பெரும் பரிசாக அல்லாஹ் நோன்பை நமக்கு கடமையாக்கி இருக்கிறான்.நோன்பின் நன்மைகளை பற்றி நபி(ஸல்) அவர்கள் பல இடங்களில்  கூறி இருக்கிறார்கள்.

                   
ஒவ்வொரு நன்மையும் அது போன்ற பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குகளுக்கு நிகரானது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி),நூல்: முஸ்லிம் 1945)
 என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி),நூல்: புகாரி 1894, 1904)


 சாதாரணமாக நோன்பிற்கு அதிக நன்மை இருந்தாலும் ரமாளான் மாதத்தின் நோன்பிற்கு வேறு எந்த வணக்கத்திற்கும் இல்லாத அளவு சிறப்பு இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.ரமளான் மாதத்தில் நம்பிக்கை கொண்டு எதிர்பார்த்து நோன்பு நோர்பவர்களுக்கு நாம் செய்த முன் பாவங்களை மண்ணிப்பதாக அல்லாஹ் வாக்களிக்கிறான்.நோன்பு எனும் சிறிய அமலுக்காக இவ்வளவு பெரிய பரிசை,நன்மையை விட்டுவிடக் கூடாது.


யார் நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமளான் மாதம் நோன்பு நோற்பாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்.(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி),நூல்: புகாரி 38, 1901, 2014)

இந்த ஹதீஸில் நாம் மேலும் கவனிக்க வேண்டியது ,நோன்பை நோற்கும் முன் அல்லாஹ் மேல் அதிக நம்பிக்கை கொண்டு இந்த செயலுக்காக அல்லாஹ் மிகப் பெரிய கூலியை நமக்கு வழங்க இருக்கிறான் என்று உறுதியாக நம்புபவருக்கே முன் பாவங்களை மன்னிப்பதாக அல்லாஹ் வாக்களிக்கிறான்.


லைலதுல் கத்ர்

இந்த ரமளான் மாதத்தில் நோன்பை தவிர்த்து இன்னொரு அருட்கொடையாக திருக்குர்ஆன் இறக்கப்பட்ட லைலதுல் கத்ர் எனும் பரக்கத் நிறைந்த இரவை அல்லாஹ் பொக்கிஷமாக கொடுத்திருக்கிறான்.ஆயிரம் மாதங்களை விட இந்த ஒரு இரவு சிறப்பு மிக்கதாக அல்லாஹ் தன் திருமறையில் தெரிவிக்கிறான்.
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (அல்குரான் 97:1-5)


இந்த இரவின் புனிதத்தை அறியாத பலர், இதை ஒரு அலட்சியமாக கருதி இந்த இரவை வீண் காரியம் செய்வதில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கின்றனர்.இப்படிப் பட்ட ஒரு வாய்ப்பை நாம் தழுவ விடக் கூடாது.வெறும் 10 இரவுகள் கண் விழிப்பதற்கு 1000 மாதங்களை விட அதிகமான நன்மைகளை பெற்றுத் தரும் இந்த தொழுகையை நாமும் தொழுது நமது குடும்பத்தினரையும்,நண்பர்களையும் தொழுமாறு வலியுறுத்த வேண்டும்.

 பிரார்த்தனை 


நோன்பு நோர்கும்போது நம் பிரார்த்தனைகளை அதிகப் படுத்திக் கொள்ளவேண்டும்.நம்முடைய தேவைகளையும் ,செய்த பாவங்களுக்கு மன்னிப்பையும் அதிகமாக இறைவனிடம் கேட்டு அழுது மன்றாட வேண்டும் ஏனெனில் நோன்பாளியின் துஆ நிராகரிக்கப் படுவதில்லை என்று நபிகள் நாயகம்(ஸல்) கூறி இருக்கிறார்கள். 'மூவரின் பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை. தனது நோன்பைத் துறக்கும் நோன்பாளியின் பிரார்த்தனை, நேர்மையான அரசனின் பிரார்த்தனை, (அநீதி இழைக்கப்பட்ட) பாதிக்கப்பட்டவரின் பிரார்த்தனை ஆகியவைதாம் அவை" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), திர்மிதி 3668).

தர்மம்

ரமளான் மாதத்தில் நம்முடைய தர்மத்தை அதிகப் படுத்திக் கொள்ளவேண்டும்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் வாரி வழங்கியதை ஜிப்ரில்(அலை) அவர்களே சிறப்பித்து கூறி இருப்பதை புகாரியில் நாம் பார்க்க முடிகிறது.
நபி(ஸல்)அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரீல்(அலை) ரமளான் மாதத்தில் நபி(ஸல்)அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி(ஸல்) அதிகமதிகம் வாரி,வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை)ரமலானின் ஒவ்வொரு இரவும் -ரமளான் முடியும்வரை நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பார். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள். ஜிப்ரீல்(அலை) தம்மைச் சந்திக்கும்போது மழைக்காற்றை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள். என்று இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள். நூல் புகாரி. 1902

அனைத்து தரப்பு மக்களும் நல்ல விதத்தில் பெருநாளை கொண்டாட வேண்டும் என்பதற்காக இஸ்லாம் ஸதகத்துல் ஃபித்ர் எனும் தர்மத்தை கடமையாக்கி உள்ளது.ஒரு ஆளுக்கு 10 ரூபாயை மோதினாருக்கு கொடுத்து நம் கடமையை செய்து விட்டோம் என்று இல்லாமல் வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு ஸாவு அளவு அருசி(தானியம்) அல்லது அதற்குண்டான தொகையை கொடுக்க வேண்டும்.இரு கைகள் கொள்ளுமளவுக்கு அரிசியை நான்கு தடவை அள்ளினானால் எவ்வளவு வருமோ அது தான் ஒரு ஸாவு எனப்படும்.
முஸ்லிம்களிடையேயுள்ள ஆண், பெண், சிறியவர், பெரியவர், அடிமை, சுதந்திரமானவர் அனைவருக்காகவும் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் வெளியே செல்வதற்கு முன்னால் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),நூல்: புகாரி 1503)


ஒழுக்கம்

ஒரு முஸ்லிம் எல்லா நேரத்திலும் எல்லா இடத்திலும் ஒழுக்கத்தை பேணுவதை தான் இஸ்லாம் வலியுறுத்துகிறது.ஆயினும் இந்த ரமளான் மாதத்தில் கூடுதல் பேணுதலாக இருப்பது அவசியம்.கஷ்டப்பட்டு 30 நாட்கள் நோன்பு நோற்று இரவு நின்று வணங்கியும் எந்த பயனும் இல்லாமல் போய்விடக் கூடாது. தீய செயல் செய்யக் கூடியவர் பசியாக இருந்து நோன்பு நோற்பது எனக்கு தேவையில்லாதது என்று கடுமையாக அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.
பொய்யான பேச்சையும், பொய்யான (தீய) நடவடிக்கையையும் யார் கைவிடவில்லையோ அவர் பசித்திருப்பதும், தாகமாக இருப்பதும் அல்லாஹ்வுக்குத் தேவையில்லாத ஒன்று என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி),நூல்: புகாரி 1903, 6057

பொய் சொல்வதை நாம் சிறிய பாவம் என்றே எண்ணி வருகிறோம் ஆனால் பொய் பேச்சு நோன்பை நிராகரிக்கக் கூடிய அளவுக்கு தீய செயலாக அல்லாஹ் குறிப்பிடுகிறான்.வியாபாபாரிகள் தங்களுடைய வியாபாரம் பெருக வேண்டும் என்பதற்காக சர்வ சாதாரணமாக பொய் சொல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளட்டும் ! தங்களுடைய நோன்பின் நன்மையை பாதுகாத்துக் கொள்ளட்டும்.நம் சமுதாயத்தில் அவதூறு பரப்புவதும் மிக சாதாரணமாக நடைப் பெற்றுக் கொண்டு இருக்கிறது குறிப்பாக பெண்கள் அவதூறு பரப்புவதில் அதிகமாக ஈடுபடுகின்றனர்.இவர்களும் தங்கள் நாவை பாதுகாத்து நல்ல விஷயங்களை பேசி நன்மையை தேடிக் கொள்ளவேண்டும்.

இன்றைய கால கட்டத்தில் கூற வேண்டிய முக்கியமான ஒன்று தொலைகாட்சி.தொலைகாட்சியில் நல்ல விஷயங்களும் இருந்தாலும் கெட்ட விஷயங்களே அதிகமாக இருக்கிறது.ஷைத்தான் தன் வேலையை சுலபமாக செய்ய ஒரு கருவி.இஸ்லாமிய நிகழ்ச்சி,செய்திகள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தொலைகாட்சியை பயன்படுத்தி விட்டு ஆட்டம் பாட்டம் ,சினிமா போன்ற மார்க்கம் தடை செய்த நிகழ்ச்சிகளை விட்டு பாதுகாத்துக் கொள்ளுங்கள்.உங்கள் வீட்டில் உள்ளவர்களையும் தொலைக்காட்சி பக்கம் நெருங்க அனுமதிக்காதீர்கள்.

எனவே அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே ! வர இருக்கும் ரமளான் மதத்தில் இருந்தாவது பொய் சொல்வதை விட்டும் ,அவதூறு பரப்புவதை விட்டும்,மார்க்க முரனான காரியங்களில் கலந்து கொள்வதை விட்டும் இன்னும் பிற தீய காரியங்களை விட்டும் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.இது போன்ற தீய காரியங்களை தவிர்த்து விட்டு திருக் குர்ஆனை ஓதுதல்,தொழுகை மற்றும் பிரார்த்தனைகளை அதிககப்படுத்திக் கொள்ளுங்கள்.நாம் மேற் கூறிய காரியம் ரமளான் மாதத்திற்கு மட்டும் உள்ளது அல்ல மாறாக மற்ற அனைத்து மாதத்திற்கும் நாம் பேணுதலாக இருப்பதற்கு இது ஒரு பயிற்சி காலமாக இருக்கிறது என்பதாக புரிந்து கொள்ளவேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 2:184)

 நாம் இறைவனை அஞ்சுவதர்காகவே நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளதாக நம்மை படைத்த ரப்புல் ஆலமீன் கூறுகிறான்.இறைவனை அதிகமாக அஞ்சி நற்காரியங்களில் அதிகமாக ஈடுபட்டு தீமையான காரியங்களில் இருந்து விலகி ,வர இருக்கும் ரமளான் மாதத்தை பயனுள்ளதாகவும் அதிக நன்மை பெற்றுத் தரக்கூடியதாகவும் ஆக்கிக் கொள்வோம் இன்ஷா அல்லாஹ்.

தாஜ்மகால் உட்பட 98 சுற்றுலா தலங்களை சுகாதாரமான இடங்களாக மாற்ற திட்டம்

தாஜ்மகால் உட்பட 98 சுற்றுலா தலங்களை சுகாதாரமான இடங்களாக மாற்ற திட்டம்

ஆக்ராவிலுள்ள தாஜ்மகால், டில்லி செங்கோட்டை, இந்தியா கேட், காஷ்மீர் தால் ஏரி உட்பட, 98 சுற்றுலாத் தலங்களை, சுத்தம் மற்றும் சுகாதாரம் நிறைந்த பகுதிகளாக மாற்ற, மத்திய சுற்றுலாத் துறை முடிவு செய்துள்ளது.பல்வேறு நாடுகளில் இருந்து, நம் நாட்டுக்கு, 60 லட்சம் சுற்றுலாப் பயணிகள், தற்போது வருகின்றனர். இதை, இரு மடங்காக அதிகரிக்க, மத்திய சுற்றுலாத் துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் சுபோத்காந்த் சகாய் கூறியதாவது:நடப்பு 12வது ஐந்தாண்டு திட்டத்தில், இரு திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளன. முதல் திட்டம், நம் நாட்டிற்கு வரும் வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிப்பது.இரண்டாவது, நாடு முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களில், சுற்றுலாப் பயணிகளுக்கு, தரமான சேவைகளை வழங்குவது என்பதாகும்.

இதன்படி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், அதிகளவில் வரும் இடங்களில், சுத்தம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவது, அப்பகுதிகளில் சுகாதாரம் நிறைந்த சூழலை உருவாக்குவது, 24 மணி நேரமும், அப்பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பது, வாகனங்கள் நிறுத்துமிடம், கழிப்பறைகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது ஆகியவற்றில், சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

தலைநகர் டில்லியில், இந்தியா கேட், கன்னாட் பிளேஸ், சாந்தினி சவுக், தாமரை கோவில், ஜந்தர்மந்தர், ராஜ்காட், புரானா குல்லா, சப்தர்ஜங் டோம்ப் என, 14 சுற்றுலாத் தலங்கள் உள்ளன.இவை தவிர, ஆக்ராவில், தாஜ்மகால், காஷ்மீரில் தால் ஏரி, ஒடிசாவில் கோனார்க், கேரளாவில் கோவளம் கடற்கரை என, 98 பகுதிகள் உள்ளன. இவற்றை எல்லாம், சுத்தம், சுகாதாரமாக வைத்திருக்க, நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பணியில், பொதுத் துறை நிறுவனங்கள், கம்பெனிகள் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகளும், சேர்த்துக் கொள்ளப்படும்.இவ்வாறு, மத்திய அமைச்சர் சுபோத்காந்த் சகாய் தெரிவித்தார்.

Tuesday, July 10, 2012

யுகானாவாக இருந்து முஹம்மது யூஸுஃப் ஆக மாறிய பிரபல கிரிக்கெட் வீரரின் பேட்டி


யுகானாவாக இருந்து முஹம்மது யூஸுஃப் ஆக மாறிய பிரபல கிரிக்கெட் வீரரின் பேட்டி

''ட்ரூ கால்'' islam.thetruecall இணையதளம் முன்னால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், கேப்டனுமான ''முஹம்மது யூஃஸுப்''பிடம் நேருக்கு நேர் கண்ட ''பேட்டி''

உலகில் இஸ்லாம் தவறாக விளங்கிக்கொள்ளப்பட்ட மார்க்கமாக இருக்கிறது. அதனால் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது முஸ்லிமல்லாதவர்களுக்கு அலட்சியம் மற்றும் அவமரியாதை உள்ளது. அவர்கள் மனதில் இஸ்லாம் பற்றிய தவறான எண்ணங்களே ஊட்டப்படுகிறது. இருந்த போதிலும் இஸ்லாத்தை நோக்கி பலதரப்பட்ட மக்களும் வந்த வண்ணமாகவே இருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவரான பாகிஸ்தானின் முன்னால் கிரிக்கெட் வீரர் ஒருவரை இங்கு நாம் சந்திக்கின்றோம்.

அவர் பிறப்பால் ஒரு முஸ்லீம் அல்ல. ஆனால் தற்போது ஒரு முஸ்லீம்.
ஆமாம்! பாகிஸ்தானின் கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளைப்புரிந்த பிரபல கிரிக்கெட் வீரர் முஹம்மது யூஃஸுப் தான் அவர்.

ட்ரூ கால்: அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் யூஃஸுப்.

முஹம்மது யூஃஸுப்: வஅலைக்கும் ஸலாம்.

ட்ரூ கால்: உங்கள் குழந்தை பருவம் பற்றி எங்களுக்கு சொல்ல முடியுமா? எங்கு எப்படி அதை கழித்தீர்கள்?

முஹம்மது யூஃஸுப்: நான் குழந்தை பருவத்தில் ரயில்வே காலனியில் வசித்து வந்தேன், சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். இப்போது நான் அதையே தான் செய்கிறேன்.

ட்ரூ கால்: உங்கள் ஆரம்ப நாட்களில் மதம் பற்றிய முக்கியத்துவம் எப்படி இருந்தது? உங்கள் மத கல்வியை எங்கே பெற்றுக்கொண்டீர்கள்?

முஹம்மது யூஃஸுப்: அப்பொழுதெல்லாம் மத கல்வி போன்ற ஒன்று இருந்தது இல்லை. ஞாயியிற்றுக்கிழமைகளில் சர்ச்சுக்கு செல்லும் பழக்கமுடையவனாக இருந்தேன். ஆனாலும் தொடர்ந்தார்ப்போல் செல்லும் பழக்கமுடையவனாக இருக்கவில்லை. பிற்பாடு மதத்தைப்பற்றி ஓரளவுக்கு புரிந்து கொண்ட பின்னரே ஒவ்வொரு ஞாயியிற்றுக்கிழமைகளிலும் சர்ச்சுக்கு செல்ல ஆரம்பித்தேன்.

ட்ரூ கால்: இதெல்லாம் எப்படி ஆரம்பித்தது? எது உங்களை இஸ்லாத்தின்பால் ஈர்த்தது?

முஹம்மது யூஃஸுப்: சிறு வயது முதலே எனது எல்லா நண்பர்களுமே முஸ்லிம்கள்தான். அது மட்டுமின்றி நாங்கள் வசித்துவந்த இடமும் முஸ்லிம்கள் வாழும் பகுதியில்தான். நீங்கள் முதலில் கூறியது போல், இந்த உலகில் இஸ்லாம் பற்றி தவறான எண்ணம் நிறைய உள்ளது. ஆனால் அது முஸ்லிமல்லாதவர்களின் தவறல்ல. முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வின் கட்டளைகளையும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதலான ''சுன்னா''வையும் சரிவர பின்பற்றாததன் காரணமாகவே பின் தள்ளப்பட்டுள்ளோம்.

ஆரம்ப நாட்களில் நான் பழகிய முஸ்லிம் நண்பர்களின் வாழ்க்கை முறைக்கும் எனக்கும் எந்த வித்தியாசத்தையும் என்னால் காண முடியவில்லை. அந்த அளவுக்கு அவர்கள் பெயரளவு முஸ்லிம்களாகவே இருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நான் என்ன செய்து கொண்டிருந்தேனோ அதைத்தான் அவர்களும் செய்துகொண்டிருந்தார்கள். (பாகிஸ்தானில் இன்றும்கூட 'தர்ஹா' வாசிகளே அதிகம் என்பது வெள்ளிடை மலை. அங்குள்ள முஸ்லிம்களில் பெரும்பாலோர் கப்ருகளை தரிசிக்கிறார்கள் மற்ற மதத்தவர்கள் சிலைகளை தரிசிக்கிறார்கள்; அதைத்தான் குறிப்பிடுகிறாரோ!)

ட்ரூ கால்: சரி உங்களது இந்த திடீர் மாற்றம் பற்றி...?

முஹம்மது யூஃஸுப்: அது திடீரென்று நடக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே என்னுள் ஒரு மாற்றம் தோன்றிருந்தது. முஸ்லிம் ஜமாத்தின் தொடர்பு எனக்கு இருந்தாலும் அவர்கள் இஸ்லாத்தைத் தழுவுமாறு கூறவில்லை. அதேசமயம் அவர்களை பின்பற்றி நிறைய பேர் இஸ்லாத்தைத் தழுவுவதை நான் பார்த்தேன். அந்த நேரத்தில் ''ஒருநாள் கிரிக்கெட் விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியாவில் ஒரு யூத முஸ்லிமை சந்தித்தேன். 70 - 75 களில் ஜமாத்தின் செயல்முறைகளினால் கவரப்பட்டு இஸ்லாத்தைத்தழுவியிருந்தவர் அவர்.

ட்ரூ கால்: இஸ்லாத்திற்கு எதிராக மோசமான பிரச்சாரத்தால் மக்கள் இன்னும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுகிறார்கள்... இல்லையா?

முஹம்மது யூஃஸுப்: ஆம்! ஆனால், இது அவர்களுடைய தவறு அல்ல. நம்முடைய தவறு. முஸ்லிம்கள் தவறு. இது அவர்களுடைய தவறு அல்ல இது நம்முடைய தவறு தான என்று உறுதியாக சொல்லலாம்.. இது ஒரு இஸ்லாமிய நாடு. (பாகிஸ்தனைத்தான் குறிப்பிடுகிறார்). ஆனால் வெளியிலிருந்து வருபவர்கள் இதை இஸ்லாமிய நாடு என்று எடைபோடவே முடியாது. அது நமது தவறுதான். (அந்த அளவுக்கு முஸ்லிம் பெயர்தாங்கிகளாக மட்டுமே வாழ்ந்து வருகிறோம்.) நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாவை நாம் பின்பற்றினால் நமக்கு வேறு ஒரு வழிகாட்டுதலே தேவையில்லை.

ட்ரூ கால்: இஸ்லாத்தைப்பற்றி சிறப்பாக என்ன தெரிந்து கொண்டீர்கள்? இந்த மிகப்பெரிய (இஸ்லாத்தை தழுவிய) முடிவை எடுக்க காரணமென்ன?

முஹம்மது யூஃஸுப்: நான் இன்னும் இஸ்லாம் மற்றும் கற்றல் விஷயங்களில் புதியவன் தான். ஆனால் எனக்கு ஊக்கம் கொடுத்த மக்கள் என்னை; ''இஸ்லாமிய வாழ்க்கை ஒரு முழு வழி'' என்று உணரச் செய்துள்ளார்கள். வாழ்நாள் முழுவதும் அழைப்புப்பணியை மேற்கொள்ள வேண்டும் எனும் ஆர்வத்தை ஊட்டியுள்ளனர். இது நபிமார்களின் வேலையாகும். முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறுதி நபி. அவர்களுக்குப்பிறகு வேறு நபி எவரும் கிடையாது. எனவே அவர்கள் விட்டுச்சென்ற இந்த 'அழைப்புப்பணி'யை செய்ய வேண்டியது நமது கடமையாக உள்ளது. ஆகவே முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வின் வழியில் மற்றவர்களை அழைக்க வேண்டும். ஆனால் நாம் வீடுகளிலேயே உட்கார்ந்து விடுகிறோம். அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கையில்லை. நமது எண்ணப்படியே செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். நமது நஃப்ஸின் விருப்பப்படியே வாழ்கிறோம். நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைக்கின்றோம். ஆனால் உண்மை எதுவெனில் அல்லாஹ் நாடாமல் எதுவும் நடக்காது.

ட்ரூ கால்: குழப்பங்கள், வேலை நிறுத்தங்கள், எதிர்ப்புகள் போன்ற இன்றைய குழப்பமான சூழ்நிலையை முஸ்லிம்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று கருதுகிறிர்கள்?

முஹம்மது யூஃஸுப்: நாம் அமைதியை பராமரிக்க வேண்டும். எதிர்ப்புகள் அமைதியாக மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் நாம் முதலில் நம்மை திருத்தி கொள்ள வேண்டும். நாம் உண்மையான முஸ்லிம்களாக வாழ்கிறோமா? நாம் அல்லாஹ் அமைத்த விதிகள் மற்றும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்பித்த வழிகளில் வாழ்கிறோமா? முதலில் இந்த மதிப்பீட்டை நாம் செய்ய வேண்டும். நாம் நம்மை திருத்திக் கொள்ளாவிட்டால் மற்றவர்கள் நம்மை கேலி செய்யத்தான் செய்வார்கள்.

ட்ரூ கால்: (இஸ்லாத்தைத்தழுவிய) உங்கள் முடிவு உங்களுக்கு கடினமாக இருந்திருக்குமே! குடும்பத்தார்களின் எதிர்ப்பு எப்படி இருந்தது?

என்னுடைய மன (மத) மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார்கள். கடுமையான கோபம் கொண்டார்கள். ஆனால் பரந்த நோக்குடன் சிந்தித்தால் ''இந்த உலகம் நமது முக்கிய குறிக்கோள் அல்ல'' என்று விளங்கும். இந்த உலகில் வெற்றி உண்மையான வெற்றி அல்ல, இந்த உலகில் தோல்வி உண்மையான தோல்வி அல்ல. எல்லோருமே இந்த உலகைவிட்டு பிரியக்கூடியவர்களாகவே இருக்கிறோம். இவ்வுலகின் மிகப்பெரும் உண்மை மரணமாகும். நமது வாழ்க்கை மிகப்பெரும் துரோகமாகும். (இறைவனுக்கு மனிதர்கள் செய்யும் துரோகத்தை சொல்கிறாரோ!)

ட்ரூ கால்: உங்கள் மன (மத) மாற்றதை நீங்கள் தெரிவித்தபோது உங்கள் மனைவியின் ரியேக்ஷன் என்னவாக இருந்தது?

முஹம்மது யூஃஸுப்: நான் முஸ்லிமானதை முதலில் என் மனைவியிடம் சொல்லவில்லை. என் மன அமைதிக்காக சில காரியங்களை நான் செய்கிறேன், அது எனக்கு நிம்மதியைத்தருவதாகவும் சொன்னேன். இஸ்லாமியக் கல்வி போதிக்கப்படும் இடங்களுக்கு செல்லுமாறு அவளை கேட்டுக்கொண்டேன். அதுமட்டுமின்றி அதில் ஏதேனும் நல்ல விஷயங்களை அவள் கண்டுகொண்டால் இஸ்லாத்தைத் தழுவும்படியும் கேட்டுக்கொண்டேன். ஏனெனில் இஸ்லாத்தில் எதையும் கட்டாயப்படுத்துவது கூடாது. இஸ்லாம் வன்முறையால் பரவாமல், அன்பு மற்றும் பாசம் மூலமே பரவியுள்ளது. இது மனித இனத்தின் நன்மைக்காக பரவியுள்ளது. இது அவர்களின் எண்ணங்களை தூய்மைப்படுத்தவும் அல்லாஹ்வை நெருங்கவும் உதவுகிறது.

ட்ரூ கால்: நீங்கள் உண்மையை உணர, உதவி செய்த பெருமை யாரைச்சார்ந்தது?

முஹம்மது யூஃஸுப்: அல்லாஹ்வின் கட்டளைகளை, திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைகளை பேணக்கூடியர்களால் இது சாத்தியமானது. (பாகிஸ்தானின் முன்னால் கிரிக்கெட் வீரர்) ஸயீத் அன்வர் போன்றவர்களிடம் இவ்வழிமுறைகளை நான் கண்டேன்.

ட்ரூ கால்: நீங்கள் என்ன ஆலோசனைகளை இஸ்லாம் பற்றிய உண்மையை அறிய விரும்பும் மக்களுக்கு, இஸ்லாம் என்றாலே அழுத்தம் என்று அஞ்சும் மக்களுக்கு சொல்ல விரும்புகிறீர்கள்?

முஹம்மது யூஃஸுப்: ஒரு முஸ்லிமை முஸ்லிமல்லதவராக மாற்றுவதுதான் கடினம். முஸ்லிமல்லாதவரை முஸ்லிமாக மாற்றுவது கடினமல்ல. காரணம் மற்ற நம்பிக்கைகளில் இஸ்லாத்தில் கிடைக்கக்கூடிய அமைதியை காணமுடியாது. எனவே இஸ்லாத்திற்குள் நுழைவது எனக்கு எளிதாகவே இருந்தது. குடும்பத்தில் சில தடைகள் இருந்தது உண்மையே! ஆனால் உண்மையாகப் பார்த்தால் இஸ்லாம் உண்மையானது. உண்மையான மார்க்கம் இஸ்லாமே.

ஒரு முஸ்லிமல்லாதவரை முஸ்லிமாக வாழச்செய்வது கடினமல்ல. ஆனால் ஒரு முஸ்லிமை உண்மையான முஸ்லிமாக வாழச்செய்வதுதான் கடினமான காரியமாகத்தெரிகிறது. என்னுடைய சகோதரர்களுக்கு நான் தெரிவிக்கும் செய்தி என்னவெனில் அல்லாஹ்வின் ஆணைகளை மற்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ''சுன்னா''வை கடைப்பிடியுங்கள். முஸ்லிமல்லாதோரை முஸ்லிமாக்குவது கடிணமான காரியமல்ல.

ட்ரூ கால்: நீங்கள் ஒரு கிறிஸ்துவராக இருந்தபோது, முஸ்லிம்களைப்பற்றிய உங்களது எண்ணம் எதுவாக இருந்தது?

முஹம்மது யூஃஸுப்: ஒரு உண்மையான முஸ்லிமை காணும்பொழுது இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம் என்று தோன்றும். எவர் அல்லாஹ்வின் உத்தரவுகளை பின்பற்றுவோராகவும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையான ''சுன்னா'' வை கடைப்பிடிக்கக்கூடியவராகவும் இருப்பாரோ அப்படிப்பட்டவர்தான் உண்மையான முஸ்லிம்.

ட்ரூ கால்: உங்கள் எதிர்கால திட்டங்கள் என்ன?

முஹம்மது யூஃஸுப்: இஸ்லாத்தை மதிப்பவராக இருந்தால்; எவருக்கும் எதிர்காலத்தைப்பற்றி தெரியாது. என்னை இஸ்லாத்தில் ஐக்கியமானவனாகவே பார்க்க விரும்புகிறேன். என்னுடைய வாழ்க்கை அல்லாஹ்வால் வழங்கப்பட்டது. எதுவரை அல்லாஹ் வாழ்நாளைத் தருகிறானோ அதுவரை அல்லாஹ்வின் பாதையிலேயே செலவிட விரும்புகிறேன்.

ட்ரூ கால்: உங்களின் பரபரப்பாக நேரத்தில் ''பேட்டி'' அளித்தமைக்கு மிக்க நன்றி.

முஹம்மது யூஃஸுப்: جَزَاكَ اللَّهُ خَيْرًا - Jazaakallaahu khairan
தமிழ் மொழியாக்கம்: எம்.ஏ.முஹம்மது அலீ