Digital Time and Date

Welcome Note

Wednesday, July 11, 2012

தாஜ்மகால் உட்பட 98 சுற்றுலா தலங்களை சுகாதாரமான இடங்களாக மாற்ற திட்டம்

தாஜ்மகால் உட்பட 98 சுற்றுலா தலங்களை சுகாதாரமான இடங்களாக மாற்ற திட்டம்

ஆக்ராவிலுள்ள தாஜ்மகால், டில்லி செங்கோட்டை, இந்தியா கேட், காஷ்மீர் தால் ஏரி உட்பட, 98 சுற்றுலாத் தலங்களை, சுத்தம் மற்றும் சுகாதாரம் நிறைந்த பகுதிகளாக மாற்ற, மத்திய சுற்றுலாத் துறை முடிவு செய்துள்ளது.பல்வேறு நாடுகளில் இருந்து, நம் நாட்டுக்கு, 60 லட்சம் சுற்றுலாப் பயணிகள், தற்போது வருகின்றனர். இதை, இரு மடங்காக அதிகரிக்க, மத்திய சுற்றுலாத் துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் சுபோத்காந்த் சகாய் கூறியதாவது:நடப்பு 12வது ஐந்தாண்டு திட்டத்தில், இரு திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளன. முதல் திட்டம், நம் நாட்டிற்கு வரும் வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிப்பது.இரண்டாவது, நாடு முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களில், சுற்றுலாப் பயணிகளுக்கு, தரமான சேவைகளை வழங்குவது என்பதாகும்.

இதன்படி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், அதிகளவில் வரும் இடங்களில், சுத்தம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவது, அப்பகுதிகளில் சுகாதாரம் நிறைந்த சூழலை உருவாக்குவது, 24 மணி நேரமும், அப்பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பது, வாகனங்கள் நிறுத்துமிடம், கழிப்பறைகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது ஆகியவற்றில், சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

தலைநகர் டில்லியில், இந்தியா கேட், கன்னாட் பிளேஸ், சாந்தினி சவுக், தாமரை கோவில், ஜந்தர்மந்தர், ராஜ்காட், புரானா குல்லா, சப்தர்ஜங் டோம்ப் என, 14 சுற்றுலாத் தலங்கள் உள்ளன.இவை தவிர, ஆக்ராவில், தாஜ்மகால், காஷ்மீரில் தால் ஏரி, ஒடிசாவில் கோனார்க், கேரளாவில் கோவளம் கடற்கரை என, 98 பகுதிகள் உள்ளன. இவற்றை எல்லாம், சுத்தம், சுகாதாரமாக வைத்திருக்க, நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பணியில், பொதுத் துறை நிறுவனங்கள், கம்பெனிகள் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகளும், சேர்த்துக் கொள்ளப்படும்.இவ்வாறு, மத்திய அமைச்சர் சுபோத்காந்த் சகாய் தெரிவித்தார்.

No comments:

Post a Comment