Digital Time and Date

Welcome Note

Saturday, October 20, 2012

எங்க பாட்டியோட HEALTH TIPS...இந்தா புடிச்சிக்குங்கோ.காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள்!

சளி, இருமல், தொண்டை வலிக்கு நம்ம பாட்டியோட கை வைத்தியந்தான் இருக்கவே இருக்கே. பித்த வெடிப்புக்கும் நம்ம பாட்டியோட சூப்பரான க்ராக் க்ரீம் இதோ.....


பித்தவெடிப்பு மறைய

காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

தொண்டை வலிக்கு

பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்.

இருமல் தொல்லைக்கு

தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீ­ரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையையும் நீக்கும்.

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும்.

இருமல் சளிக்கு

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்­ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

கட்டிகள் உடைய

மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும்.

பேன் தொல்லை நீங்க

வசம்பு, வேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும்.

மேனி பளபளப்பு பெற

ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பு பெறும்.

தும்மல் வராமல் இருக்க

தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது.

கரும்புள்ளி மறைய

எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும்.

தொண்டை கரகரப்பு நீங்க

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.

கருத்தரிக்க உதவும்

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 - 100 கிராம் எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

இருமல் சளி குணமாக

சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.

மொபைல் போன் வாங்க போறிங்களா? கொஞ்சம் இத கவனிங்க பாஸ்?                      
 மோட்டோரோலா (Motorola) நிறுவனம் தான் 1973 ம் வருடம் முதன்முதலில் மொபைல் போனை தயாரித்தது. John F.Mitchell, Dr Martin Cooper இவர்கள் தான் கையளவு மொபைல் போனை தயாரித்தவர்கள். இதன் எடை ஒரு கிலோ 1 KG. ஆனால் விற்பனைக்கு வந்த முதல் மொபைல் போன் 1983 ம் ஆண்டு DynaTAC 8000x என்ற மாடல்.

1990 முதல் 2011 ம் ஆண்டு வரை புதிதாக மொபைல் போன் பயன்படுத்துவோர் எண

்ணிக்கை 12.4 மில்லியன். இன்றைய உலக மக்கள் தொகையில் 70 சதவிகிதம் மக்கள் மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். இப்பொழுது லேப்டாப் பயன்படுத்துவோரை விட மொபைல் போன் பயன்படுத்துவோர் சதவிகிதம் அதிகம். காரணம் இப்பொழுது உள்ள மொபைல் போனில் சகல வசதிகளும் அடங்கி உள்ளன. மொபைல் போன் இல்லை என்று சொல்லுவது கேவலம் என்கிற நிலைமையில் உள்ளது.

பேசுவதற்கும், குறுந்தகவல் அனுப்புவதற்கு மட்டும் போதும் என்று நினைப்பவர்கள் சாதாரன வசதிகள் கொண்ட மொபைல் போன் வாங்குவதே சிறந்தது. யாருங்க சாதாரணமாக பயன்படுதுரா? வயசு வித்தியாசம் இல்லாம எல்லோரும் இன்டர்நெட் வசதி கொண்ட மொபைல் போன் வாங்குவதை தான் விரும்புகிறார்கள்.

கவனிக்கவேண்டிய விஷயங்கள்

முதலில் எந்த வகை மொபைல் போன் என்று முடிவு செய்துகொள்ள வேண்டும்.

திரையின் அளவு (Display)

தட்டச்சு (Keyboard) உள்ள மொபைல் போன் அல்லது தொடு திரை (Touch Screen) இதில் எது என்று முடிவு செய்துகொள்ளுங்கள்.

இப்பொழுது பெரும்பாலும் தொடு திரை (Touch Screen) மொபைல் போன்கள் தான் மிக பிரபலம்.

தொடு திரை (Touch Screen) என்றால், பல வகையான அளவுகளில் (Inch) கிடைக்கின்றன. குறைந்தது4 Inch இருப்பது சிறந்தது.

குறிப்பு : எத்தனை எடை கொண்ட மொபைல் போன்கள் உள்ளன என்பதையும் மனதில் கொள்ளவேண்டும். ஸ்மார்ட் போன்கள் குறைந்தது 100 Gram எடை கொண்டதாகவே இருக்கும்.

கேமரா (Camera)


குறைந்தது 5 Mega Pixel கொண்ட மொபைல் போன்களே சிறந்தது.

முக்கியமாக முகப்பு கேமரா (Front Camera) கொண்ட மொபைல் போன்களே வாங்குங்கள். காரணம்Skype போன்ற வீடியோ கால் பேசுவதற்கு மிக அவசியம்.

முகப்பு கேமரா குறைந்தது 1 Mega Pixel இருப்பது சிறந்தது.

HD (High-Definition) என்று அழைக்கப்படும் அதிக தெரிவு கொண்ட மொபைல் போன்கள் மிகவும் பிரபலம். HD மொபைல் போன் வாங்குவதே சிறந்தது.

பேட்டரி (Battery)

ஸ்மார்ட் போன்கள் அனைத்தும் பேட்டரி திறன் குறைவானதே. காரணம் இதில் இன்டர்நெட் எப்பொழுதும் தொடர்பில் இருப்பதால் பேட்டரி குறைந்து கொண்டே இருக்கும்.

பழைய நோக்கியா போன் போல மூன்று நாளைக்கு நிற்கும் என்று கனவில் கூட காணவேண்டாம். ஒரு நாள் தான் அதிகபட்சம் இருக்கும். இன்டர்நெட் அதிகமாக உபயோகிக்காமல் இருந்தால் பேட்டரி திறன் அதிகரிக்கும்.

குறைந்தது Li-Ion Battery 1500 mAh அல்லது இதற்கு மேல் பேட்டரி திறன் கொண்டதை வாங்குவதே சிறந்தது.


பிராசெசர் (Processor)

இன்டர்நெட் பயன்பாடு என்று சொன்னால் முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம் மொபைல் போனின் வேகம். பிராசெசர் தான் மொபைல் போனின் வேகத்தை நிர்ணயக்க கூடியது.

இப்பொழுது (Quad-Core Processor) பல மடங்கு வேகம் கொண்ட மொபைல் போன்கள் விற்பனையில் முதலில் உள்ளன. ஆனால் இதன் விலை அதிகம்.

குறைந்தது (Dual-Core Processor) இருந்தால் இணையத்தை பயன்படுத்தும் போது மொபைல் போனின் வேகம் அதிகமாக இருக்கும்.

குறைந்தது 1 GHz வேகம் இருந்தால் நல்லது. பெரும்பாலான ஸ்மார்ட் போன்கள் இப்பொழுது 1.5 GHzவேகம் கொண்டதாகவே வருகின்றன.

ரேம் (RAM)

இன்டர்நெட் பயன்பாடு மற்றும் மொபைல் போனின் வேகத்திற்கு மிகவும் முக்கியம் ரேமின் (RAM)வேகம்.

குறைந்தது 1 GB அளவு இருந்தால் நன்றாக பயன்படுத்தலாம். 512 MB அளவும் மொபைல் போனின் வேகத்திற்கு போதுமானது.

மெமரி (Memory)

இன்டெர்னல் மெமரி (Phone Memory) எக்ஸ்டெர்னல் மெமரி (Memory Card) என இரண்டு வகை உண்டு.

இன்டெர்னல் என்பது மொபைல்களிலேயே உள்ளவை.

எக்ஸ்டெர்னல் (MicroSD Card) என்பது தனியாக நம்முடைய வசதிற்கு ஏற்ப போட்டுகொள்வது.

இன்டெர்னல் மெமரி என்பது போனிலேயே வருபவை. இதை நாம் அதிகரிக்க முடியாது. குறைந்தது 1 GB அளவு அவசியம்.

காரணம் மென்பொருள்கள் சில மெமரி கார்டிற்கு மாற்ற முடியாதவை உள்ளன. இதனால் போன் மெமரி குறைந்து பின்பு போனின் வேகம் குறைந்துவிடும்.

போன் மெமரி குறைந்தபட்சம் 2 GB அளவு சிறந்தது.

மெமரி கார்ட் போட முடியாத போன்களை வாங்கவேண்டாம். அப்படியே வாங்க வேண்டி வந்தால் போன் மெமரி 16 GB அல்லது 32 GB அளவு கொண்டவையை வாங்குவது சிறந்தது.

மெமரி கார்ட் நம்முடைய வசதிற்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம். அதிகபட்சமாக 32 GB அளவே சரியானவை.

MicroSD Card
இயங்குதளம் (Operating System)

மிக மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய விசயம். இயங்குதளம் தான் மொபைல் போனை இயக்க கூடியவை. (கம்ப்யூட்டர்க்கு Windows XP, Windows 7 போல)

மிக பிரபலான இயங்குதளம் இப்பொழுது Android ஆண்டிராய்டு இயங்குதளமே.

குறைந்த விலை போன் முதல் அதக விலை போன்கள் என அனைத்தும் ஆண்டிராய்டு இயங்குதளம் கொண்டவையே.

ஆண்டிராய்டு இயங்குதளத்தில் அதியாவிசயமான பெரும்பாலான மென்பொருள்கள் இலவசமாகவே கிடைக்கும். (என்னுடைய முந்தைய பதிவில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள், லிங்க் கடைசியில் உள்ளது)

ஆண்டிராய்டு இயங்குதளம் மிகவும் பயன்படுத்துவதற்கு சுலபமானவை.

Android Logoஆண்டிராய்டு இயங்குதளம் மொபைல்கள் வேகமாக இன்டர்நெட் பயன்படுத்துவதற்கு உதவுகின்றன.

கம்ப்யூட்டரில் பயன்படுத்த கூடிய பெரும்பாலான மென்பொருள்கள் ஆண்டிராய்டு இயங்குதளம் மொபைல்களிலும் உண்டு. (Skype, Yahoo Messenger, Gtalk, Team Viewer, Google Chrome, etc)

Sony, HTC, Samsung, Motorola, LG, etc.. போன்ற அனைத்து பிரபலமான மொபைல் கம்பெனிகள் ஆண்டிராய்டு இயங்குதளம் கொண்டவையே.

என்னடா நோக்கியா (Nokia) இல்லையேன்னு வருத்தபடுகிரிங்களா? என்ன பண்ண நோக்கியாவிற்கும் ஆண்டிராய்டு அதாவது கூகிள்க்கும் ஆகாது பாஸ்?? சண்டை??

Nokia நோக்கியா இப்போ வீழ்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணம் இது தான்??

நோக்கியா (Nokia) இப்போ Windows போன்களை விற்பனைக்கு விட்டுஇருக்கு.

பின் குறிப்பு : இதில் மொபைல் போனின் விலை பற்றி பதியவில்லை. உங்களுடைய வசதிற்கு தகுந்தாற்போல் முடிவு செய்து கொள்ளுங்கள். ஸ்மார்ட் போன் என அழைக்கப்படும் மொபைல் போன்கள் விலை கொஞ்சம் அதிகமே. குறைந்தது 10000 ரூபாய்க்கு மேல் தான் தரமான எல்லா வசதிகளும் கொண்ட ஸ்மார்ட் போன் கிடைக்கும்.

Thursday, October 18, 2012

மழையும் மாமறையும்


                      
நாம் சுவாசிக்கின்ற ஆக்ஸிஜன், நமக்குப் பலனளிக்கும் நைட்ரஜன், வெப்பத்தைத் தக்க வைக்கும் கார்பன் டை ஆக்ஸைடு ஆகியவற்றைத் தாங்கி நிற்பது வளி மண்டலம்! அந்த வளி மண்டலம் இண்டு இடுக்குகள் இல்லாமல் ஐந்து அடுக்குகளாக அமையப் பெற்று சூரியனின் புற ஊதாக் கதிர்களை உள்ளே ஊடுருவாமல், பிரமாண்டமான வால் நட்சத்திரங்களை உள்ளே நுழைய விடாமல் இந்தப் புவியைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது.

அந்த வளி மண்ட
லத்தைத் தன் கைவசம் வைத்திருப்பது புவி ஈர்ப்பு விசை என்பதை அறிந்தோம். இந்தப் புவி ஈர்ப்பு விசையின் இன்னொரு பயன் வானிலிருந்து மழையைப் பெற்றுத் தருவதாகும். அது எப்படி? என்ற கேள்விக்கு விடை காண்பதற்கு முன்னால் தாகம் தீர்க்கும் மேகத்தைப் பற்றி முதலில் பார்ப்போம்.

பென்னம் பெரும் மலைகளைப் போல் வானத்தில் திரண்டு நிற்கும் கன்னங்கருத்த மேகத்தை நாம் பார்க்கின்றோம். இந்த மேகம் இவ்வாறு திரள்வதற்கு முன்பாக இரண்டு கட்டங்களைச் சந்திக்கின்றன. மூன்றாவது கட்டமாகத் தான், சூழ் கொண்ட இந்தத் திரட்சி நிலையை அடைகின்றன.
பஞ்சுகளைப் போல் திட்டு திட்டாக தனித்தனியாக மிதந்து நிற்கும் குட்டி குட்டி மேகங்களைக் காற்று தள்ளிக் கொண்டு செல்கின்றது.

இவை அனைத்தும் ஒன்றிணைகின்றன.

இவ்வாறு ஒன்றிணைந்த மேகங்கள் செங்குத்தாக விண்ணை நோக்கி எழுகின்றன. குவியக் கூடிய இந்த மேகங்களின் மத்திய தொகுதி ஓர் இழுவை சக்தியாக செயல்பட ஆரம்பித்து தன் இரு பக்கவாட்டிலும் உள்ள மேக சகாக்களை அரவணைத்து விண்ணை நோக்கி செங்குத்தாக இழுத்துச் செல்கின்றது. விண்ணகத்தின் குளிர்ந்த பகுதியை நோக்கி இது இழுத்துச் செல்லப் படுகின்றது. அவ்வாறு இழுத்துச் செல்லும் போது அந்த மத்தியப் பகுதியான இழுவை சக்தி குளிரினால் பொழிந்து சிந்தி விடாமல் பக்கவாட்டிலுள்ள மேகங்கள் பார்த்துக் கொள்கின்றன.

விண்வெளியின் குளிர் பகுதியின் உச்சி நிலைக்குச் செல்லச் செல்ல மேகத்தின் வயிற்றில் ஆலங்கட்டிகள், நீர் திவளைகள் சூல் கொண்டு மேகத் தொகுப்பின் எடை கூடுகின்றது. ஆக, அந்தரத்தில் கன்னங்கருத்த கனமான இமயத்தை விஞ்சும் அளவுக்கு 25,000 முதல் 30,000 அடி வரை ஒரு பெரும் மலை உருவாகின்றது.

தனது எல்லைக்குள் இப்படி ஆலங்கட்டிகள் தொகுப்பாக கனமான ஒரு மலையாக ஏறுவதை அனுமதிக்காக புவி ஈர்ப்பு விசை அம்மலையை கீழ் நோக்கி இழுக்கின்றது. அது தான் நம் மீது அருளாகப் பொழிகின்ற மழை! இது மழையைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு! இப்போது விஷயத்திற்கு வருவோம்.

வானிலை ஆராய்ச்சியாளர்கள் இன்று இந்த மேகங்களை நாம் மேற்கண்டவாறு வகைப்படுத்துகின்றனர். இப்படி சூல் கொண்டு திரண்டெழுந்து நிற்கும் இந்த மேகக் கூட்டத்திற்கு ஈன்ம்ன்ப்ர்ய்ண்ம்க்ஷன்ள், ஈப்ர்ன்க் என்று குறிப்பிடுகின்றனர். இன்று வானியல் வல்லுநர்களால் வகைப்படுத்தப் பட்ட இந்த மேகத் திரட்சியை, மழைப் பொழிவை எந்தப் பல்கலைக் கழகத்திலும் போய் படித்து மேதையாகிடாத, ஏடெத்துப் படித்திராத முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் எப்படிச் சொல்ல முடிந்தது? மேற்கண்ட நவீன கண்டுபிடிப்புகளை அச்சுப் பிசகாமல் அப்படியே அல்குர்ஆன் சொல்வதைப் பாருங்கள்!

அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது. (அல்குர்ஆன் 24:43)

இதிலிருந்து புனித ரமளான் மாதத்தில் இறங்கத் தொடங்கிய இந்த வேதத்தின் வசனங்கள் படைத்த எல்லாம் வல்ல அல்லாஹ்வின் வார்த்தைகள் தான் என்று சான்று கூறி நிற்கின்றன! இந்த வசனத்தில் அல்லாஹ், மேகங்களுக்குப் (பனி) மலைகள் என்ற பதத்தைப் பயன்படுத்தியிருக்கின்றான். இன்று வானியல் ஆய்வாளர்கள் சொல்லும் இந்தக் கருத்தை அல்குர்ஆன் அன்றே சொல்லி முடித்திருக்கின்றது எனும் போது இது நூற்றுக்கு நூறு அல்லாஹ்வின் வேதம் தான் என்ற நம்பிக்கை மென்மேலும் அதிகரிக்கின்றது.

மேற்கண்ட வசனத்தை அல்லாஹ் முடிக்கும் போது, "அதன் மின்னொளி கண்ணைப் பறிக்கப் பார்க்கின்றது" என்று சொல்லி முடிக்கின்றான். அதன் மின்னொளி என்றால் எதன் மின்னொளி? இதற்கான விளக்கத்தை அடுத்து வரும் மின்னல்’ என்ற தலைப்பில் பார்ப்போம்.

மின்னல்

அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது. (அல்குர்ஆன் 24:43)

இந்த வசனத்தில் மின்னலைப் பற்றிக் குறிப்பிடும் போது, அதன் மின்னல் என்று மின்னலை ஏதோ ஒன்றுடன் இணைத்து அல்லாஹ் கூறுகின்றான். எதன் மின்னல்? என்ற கேள்விக்கு நாம் விடையைத் தேடினால் இந்த வசனத்திலேயே இதற்கு முன்பாக ஆலங்கட்டியைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுவதைப் பார்க்க முடிகின்றது. அதன் மின்னல்’ என்பது ஆலங்கட்டியின் மின்னல்’ என்று திருக்குர்ஆன் பதில் கூறுகின்றது.

அது சரி! ஆலங்கட்டிக்கும் மின்னலுக்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்வி இப்போது எழுகின்றது. எனவே இந்த மின்னலைப் பற்றி அறிவியல் உலகம் என்ன கூறுகின்றது என்று பார்ப்போம்.

ஒன்றாகத் திரண்டு நிற்கும் மேக மலையின் மேற்பகுதியில் உள்ள ஆலங்கட்டிகள், அதிகம் குளிர்ந்து போன நீர்ப்பகுதிகள் மற்றும் பனித்துகளின் மேல் விழும் போது மேகங்கள் மின் காந்தப் புலன்களைப் பெற்று விடுகின்றன. இந்த நேரத்தில் குளிர்ந்த நீர்பபகுதிகள் மற்றும் பனித்துகள்களிலிருந்து எலக்ட்ரான்கள் கிளம்பி சூடான ஆலங்கட்டிகளை நோக்கித் தாவுகின்றன. அதனால் ஆலங்கட்டி எதிர் மின்னூட்டத்தையும் குளிர்ந்த நீர்ப்பகுதிகள் மற்றும் பனித்துகள்கள் நேர் மின்னூட்டத்தையும் பெறுகின்றன.

இதன் விளைவாக நேர் மின்னூட்டம் பெற்ற சின்னஞ்சிறு பனித்துகள்கள் உடைந்து சிதறுகின்றன. சிதறிய சின்னஞ்சிறு சிதறல்கள் மேகத்தின் மேற்பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுகின்ற போது அங்கு ஏற்கனவே எதிர் மின்னூட்டத்தைப் பெற்றிருக்கின்ற ஆலங்கட்டிகள் மேகத்தின் அடிப்பாகத்தில் விழுகின்றன.

கீழே விழுந்த ஆலங்கட்டிகளின் எதிர் மின்னூட்டங்கள் தான் மின்னல் வெட்டுவதன் மூலம் வெளியேற்றப் படுகின்றன. இந்த மின் வெட்டு தன்னைச் சுற்றிலும் உள்ள காற்றை 30,0000 C அளவுக்கு வெப்பப் படுத்துகின்றது. இது சூரியனின் மேற்பரப்பிலுள்ள வெப்பத்தை விட 5 மடங்கு அதிகமாகும். (சூரியனின் மேற்பரப்பு வெப்பம் 60000 C) இந்த அளவுக்கு வெளியாகும் வெப்பம் காற்றை வெகு வேகமாக விரிவுபடுத்துகின்றது. இதில் உருவாவது தான் இடி முழக்கம்!

இங்கு நாம் கவனிக்க வேண்டிய அம்சம், அதன் மின்னல் என்று கூறியதன் மூலம் மின்னலுக்குக் காரணம் ஆலங்கட்டி தான் என்று அல்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன் சொன்ன உண்மையை இன்று வானிலை ஆய்வாளர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். இதுவும் அல்குர்ஆன் தூய நாயனான அல்லாஹ்வின் வேதம் என்பதற்கு ஓர் அற்புதமான அறிவியல் சான்றாகும்.

விண்ணகத்தில் வெப்பத்தைப் பிரசவித்து வெளிவரும் இந்த மின்னல் மண்ணகத்தில் என்ன சாதித்துக் கொண்டிருக்கின்றது? இதைப் பற்றியும் அல்லாஹ் திருக்குர்ஆனில் நாம் வியக்கும் வண்ணம் கூறுகின்றான்.

அச்சத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தக் கூடியதாக அவனே மின்னலை உங்களுக்குக் காட்டுகிறான். பளுவான மேகங்களையும் அவன் உருவாக்குகிறான். இடியும் அவனைப் புகழ்ந்து போற்றுகிறது. அவனைப் பற்றிய அச்சத்தினால் வானவர்களும் (புகழ்ந்து போற்றுகின்றனர்). இடி முழக்கங்களையும் அவனே அனுப்புகிறான். தான் நாடியோரை அவற்றின் மூலம் தண்டிக்கிறான். அவர்களோ அல்லாஹ்வைப் பற்றி தர்க்கம் செய்கின்றனர். அவன் வலிமை மிக்கவன். (அல்குர்ஆன் 13:12,13)

இவ்விரண்டு வசனங்களும் மின்னல், இடியைப் பற்றி விளக்குகின்றன. இடி, மின்னல் எவ்வாறு உருகின்றன என்பதை மேலே நாம் கண்டோம். எல்லாம் வல்ல அல்லாஹ் இவ்விரண்டில் மின்னலைப் பற்றி குறிப்பிடும் போது, அச்சத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தக் கூடியதாக அவனே மின்னலைக் காட்டுகின்றான் என்று கூறுகின்றான்.

மின்னல் பளிச்சென்று வெட்டி மறையும் போது நம்முடைய நாடி நரம்புகளில் அச்ச அலைகள் ஓடிப் பரவுகின்றன. 30,0000 ஈ வெப்பத்தை ஏற்படுத்தும் மின்னலைப் பற்றி அச்சம் தரக் கூடியது என்று அல்குர்ஆன் கூறுவதை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் மின்னலில் எதிர்பார்ப்பு, ஆதரவு உள்ளது என்று அல்லாஹ் கூறுவதிலிருந்து என்ன கருத்தை அவன் சொல்ல வருகின்றான் என்று எளிதில் புரிந்து கொள்ள முடிவதில்லை.

மின்னலுக்கு ஏன் எதிர்பார்ப்பு என்ற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்த வேண்டும்? என்ற விளக்கத்தைக் காண நாம் களமிறங்குவோம்.

வளி மண்டலத்தில் நைட்ரஜன் 78 சதவிகிதமும், ஆக்ஸிஜன் 21 சதவிகிதமும், கார்பன் டை ஆக்ஸைடு 0.033 சதவிகிதமும், ஆர்கான், நியான், ஹீலியம், மீதேன், ஹைட்ரஜன் ஆகிய வாயுக்கள் மிகக் குறைந்த அளவிலும் கலந்துள்ளன என்பதை வளி மண்லத்தில் கலந்திருக்கும் வாயுக்கள் என்ற தலைப்பில் முன்னர் கண்டோம்.

ஒரு தடவை மின் வெட்டி மறையும் போது, ஏதோ மின் வெட்டி மறைகின்றது என்று நாம் கண் சிமிட்டி விட்டு அதைக் கண்டு கொள்ளாது விட்டு விடுகின்றோம். ஆனால் ஒரு தடவை மின்னல் வெட்டுகின்ற போது அங்கு ஒரு கல்யாணமே நடந்து முடிகின்றது.

ஆம்! காற்றிலுள்ள 78 சதவிகித நைட்ரஜனும் 21 சதவிகித ஆக்ஸிஜனும் ஒன்றாகக் கலந்து கை கோர்க்கின்றன. இதனால் பிறக்கின்ற குழந்தை தான் நைட்ரேட்டுகள்! நைட்ரஜனும் ஆக்ஸிஜனும் ஒன்று சேர்ந்ததும் நைட்ரேட் உருவாகின்றது. இந்த நைட்ரேட்டுகள் மழை நீருடன் கலந்து நீர்த்த நைட்ரிக் அமிலமாக மாறி மழையாகப் பொழிகின்றது.

வளி மண்டலத்திலுள்ள இந்த நைட்ரஜனை ஏற்கனவே மண்ணில் உள்ள பாக்டீரியாக்கள் கவர்ந்து நைட்ரேட்டுகளாக மாற்றுகின்றன! இந்தப் பணியை மின்னல் வந்து பாய்ந்து வளி மண்டலத்தில் உள்ள நைட்ரஜன்களை உடைத்து அமிலமாக, சத்தாக, சாறாக மாற்றி மழை நீருடன் ஆறாக ஓடச் செய்கின்றது.

மண்ணுக்குள் கால்சியம், இரும்பு, அலுமினியம் போன்ற கனிமங்கள் இருக்கின்றன. அந்தக் கனிமங்களுடன் இது கலக்கும் போது அவற்றின் நைட்ரேட்டுகள் உருவாகின்றன. கால்சியத்துடன் கலக்கும் போது கால்சியம் நைட்ரேட்டு உருவாகின்றது. இவை தான் மண்ணில் விளைகின்ற தாவரங்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுகின்றன. இவற்றை நேரடியாக மனிதன் சாப்பிடுவதன் மூலமோ அல்லது இவற்றைச் சாப்பிடும் ஆடு, மாடுகளின் இறைச்சியைச் சாப்பிடுவதன் மூலமோ மனிதன் நைட்ரஜனைத் தன் உடலில் சேர்த்துக் கொள்கின்றான்.

மனிதனுடைய உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த நைட்ரஜன் அவன் இறந்தவுடன் மீண்டும் அது மண்ணிலேயே போய் சேர்ந்து விடுகின்றது. மனித உடலில் மட்டுமல்லாது மொத்த உயிரினங்களின் உடலிலும் நைட்ரஜன் கலந்து அந்த உயிரினங்கள் மடிந்ததும் மண்ணில் கலந்து விடுகின்றது. பின்னர் மீண்டும் காற்றிலேயே கலந்து விடுகின்றது. இதற்குப் பெயர் தான் நைட்ரஜன் சுழற்சி என்று வழங்கப் படுகின்றது.

சுப்ஹானல்லாஹ்! அல்லாஹ் மின்னலுக்கு ஏன் எதிர்பார்ப்பு என பெயர் வைத்தான் என்ற உண்மை நமக்கு மின்னல் போல் பளிச்சிடுகின்றதல்லவா? மிகப் பெரிய ஆற்றலாளனான அவன் நைட்ரஜன், ஆக்ஸிஜன் என்ற பின்னல்களில் மின்னலைப் பாய்ச்சி நம்மை வாழ வைக்கின்றான். நாம் எப்படி அவனுக்கு நன்றி செலுத்த மறந்தவர்களாக இருக்கின்றோம் என்பதை எண்ணிப் பார்ப்போம்!

மின்னலில் பொதிந்திருக்கும் இந்த ஆற்றலை அறிவியல் உலகம் கண்டு பிடிப்பதற்கு முன்னால் அன்றே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலம் குர்ஆனில் சொல்லி முடித்த அந்த நாயன் மிகப் பெரியவனே! அல்லாஹு அக்பர்!
எரிமலையும் இறைமறையும்

வானியல் ஆராய்ச்சியாளர்களிடம் மிகவும் பிரபலமானது பெரு வெடிப்புக் கொள்கை (Big bang theory) ஆகும். இந்தப் பிரபஞ்சத்தில் காணப்படும் பூமி உள்ளிட்ட அனைத்து கோள்களும் துணைக் கோள்களும் நட்சத்திரங்களும் ஒரே பொருளாகத் தான் இருந்தன.

இந்தப் பொருள் பூமியை விட 318.5 மடங்கு எடையைக் கொண்டதாகவும் மிக மிக அடர்த்தியானதாகவும் இருந்தது. அந்தப் பொருள் ஏதோ ஒரு வானியல் மாற்றத்தால் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் அண்டம் முழுவதும் ஒரே தூசுப் படலமாகப் பரவியது. இது சுமார் 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.

இதற்குப் பிறகு புகை மூட்டமாக இருந்த அந்தத் தூசுப் படலம் ஈர்ப்பு விசையின் காரணமாக சிறிது சிறிதாக இணைந்து பெரிதாகி இப்போதுள்ள கோள்கள், துணைக் கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவை தோன்றின. இவ்வாறு தூசுப் படலத்திலிருந்து பிரிந்து கோள்கள் உருவான நிகழ்வு சுமார் 500 கோடி முதல் 750 கோடி வருடங்களுக்கிடையில் நடைபெற்றது. இது தான் பெரு வெடிப்புக் கொள்கை (இண்ஞ் க்ஷஹய்ஞ் ற்ட்ங்ர்ழ்ஹ்) ஆகும்.

மனிதன் தன்னுடைய விஞ்ஞான அறிவையும் நவீன கருவிகளையும் கொண்டு இந்தப் பேரண்டம் எவ்வாறு தோன்றியது என்ற வரலாற்றை தற்போது கண்டறிந்துள்ளான். ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன் இதைப் பற்றி யாருக்காவது தெரிந்திருந்ததா? பூமி, சூரியன், சந்திரன் ஆகியவற்றைப் பற்றி வெறும் கதைகளையும் கற்பனைகளையும் நம்பிக் கொண்டிருந்த காலம். இன்று கூட மற்ற மதங்களின் வேதங்களில் இந்தக் கதைகள் தான் கூறப்படுகின்றன. பேரண்டத்தின் தோற்றம் குறித்து திருக்குர்ஆன் என்ன கூறுகின்றது என்று பார்ப்போம்.

வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் 21:30)

பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான். விரும்பியோ விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அதற்கும் பூமிக்கும் கூறினான். விரும்பியே கட்டுப்பட்டோம் என்று அவை கூறின. (அல்குர்ஆன் 41:11)

என்ன அற்புதமான வார்த்தைகள்! பூமியும் இதர கோள்களும் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒரே பொருளாக இருந்தன என்பதையும் அதன் பிறகு புகை போன்றிருந்த நிலையில் தான் அனைத்தும் உருவாயின என்பதையும் இவ்விரு வசனங்களும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. மேலே நாம் கூறியுள்ள பெரு வெடிப்புக் கொள்கையையும் இந்த இரு வசனங்களையும் படித்துப் பாருங்கள்! உண்மையிலேயே நமது உடலைப் புல்லரிக்கச் செய்கின்றதல்லவா? இந்தப் பேருண்மை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதருக்கு எப்படித் தெரியும்? படைத்த இறைவனின் வார்த்தையாக திருக்குர்ஆன் இருந்தால் மாத்திரமே இதைக் கூற முடியும். எனவே திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்திருக்கிறது.

அடுப்பிலிருந்து ஒரு தீக்கங்கை கிடுக்கியில் தனியாக எடுத்து ஓரிடத்தில் வைக்கின்றோம். நேரமாக நேரமாக அந்தத் தீக்கங்கின் மேற்பகுதி குளிர்ந்து விடுகின்றது. ஆனால் அதன் உட்பகுதியோ நெருப்புக் குழம்பாகக் கனன்று கொண்டிருக்கின்றது.

சூரியனிலிருந்து பிரிந்து வந்த பூமி மேற்பகுதியில் குளிர்ந்து, அதன் மீது தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் அதன் உட்பகுதியோ நெருப்புக் குழம்பாகக் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றது. அதனால் தான் அது அவ்வப்போது எரிமலைகளைக் கொப்பளிக்கின்றது. இந்தப் பூமி ஒரு காலத்தில் சூரியனுடன் ஒன்றாக இருந்தது என்பதற்கு இந்த எரிமலைகள் அக்கினி சாட்சிகளாகத் திகழ்கின்றன!

நெருப்பைப் பஞ்சு மெத்தையாக்கி எங்களை வாழ வைக்கும் இறைவா! நீ தூயவன்! என்று தினமும் அந்த வல்ல இறைவனைத் துதிப்போமாக!

source: http://www.tntj.net/?p=18707

Wow சொல்ல வைக்கும் ஓரு முதல்வர்.மக்களுடன் எளிமையாக பழகி குறைகளை தீர்க்கும் அகிலே...ஷ் யாதவ் இன் பண்பு.

உத்தரபிரதேச முதல்-மந்தியாக பதவி ஏற்றதில் இருந்தே அகிலேஷ் யாதவ் மக்களிடம் மிகவும் எளிமையாக பழகி வருகிறார். யார் என்றாலும் அவரை சந்திக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளார்.

மாயாவதி முதல்-மந்திரியாக இருந்தவரை முதல் மந்திரிக்கான அரசு வீட்டுக்குள் யாரும் அவ்வளவு எளிதாக நுழைந்துவிட முடியாது.பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாக இருக்கும்.

ஆனால் அகிலேஷ் யாதவ் பதவி ஏற்றதுமே போலீஸ் கெடுபிடிகள் அனைத்தையும் அகற்ற உத்தரவிட்டு விட்டார். தன்னை சந்திக்க யார் வந்தாலும் அவர்களை தாராளமாக அனுமதிக்க வேண்டும் என்று கூறி விட்டார்.

அகிலேஷின் தந்தை முலாயம் சிங் முதல் மந்திரியாக இருந்தபோது பொது மக்கள் தன்னை சந்திக்க வசதியாக ஜனதா தரிசனம் என்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்திருந்தார். குறிப்பிட்ட நாட்களில் ஜனதா தரிசனம் நடக்கும் அப்போது பொதுமக்கள் அவரை சந்திக்கலாம்.

ஆனால் அகிலேஷ் யாதவ் இந்த திட்டத்தை மாற்றி அமைத்து தினமும் மக்கள் சந்திக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்து உள்ளார். இதனால் தினமும் ஆயிரக்கணக்கானோர் அவரை சந்தித்து தங்கள் குறைகளை தெரிவித்து விட்டு செல்கின்றனர்.

தன்னை சந்திக்க வரும் பொதுமக்கள் குறைகளை தீர்ப்பதற்காகவே அதிகாரிகள் கொண்ட தனிக்குழுவையே நியமித்து உள்ளார். அகிலேசை சந்தித்து விட்டு சென்ற கிராமவாசி ராம்ஸ்வருப் என்பவர் கூறும்போது உத்தரபிரதேசத்தில் அதிகாரிகளைகூட அவ்வளவு எளிதாக சந்திக்க முடியாது ஆனால் முதல் -மந்திரியை எளிதாக சந்திக்க முடிகிறது என்று கூறினார்.

சீன வரலாற்றில், ஜப்பானிய வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஒரு தமிழனைப் பற்றிய வரலாறு !!!

போதி தருமன் என்பவர் 5ம் நூற்றாண்டை சார்ந்த ஒருபௌத்த மத துறவி ஆவார். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ அரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவதாக கருதப்படுகிறது. புத்த மத குருவாக மாறியபிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போத
ி தர்மா அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும் 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.சென் புத்தமதத்தை சீனாவிற்கு கொண்டு சென்ற புகழ் இவரையே சாரும். போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார்.

குங்ஃபூவும் போதி தருமனும்

போதி தருமன் ஷாலின் குங்ஃபூவை சீனத்துக்குக் கொண்டு சென்ற பல்லவ அரச குலத்தவர் என நிறுவுவோர் பின் வரும் சான்றுகளை முன் வைக்கின்றனர்.

1.கல்வெட்டு சான்று
சீனக்கோயிலில் (shoalin temple - kungfu school) உள்ள கல்வெட்டு, தென்னிந்திய புத்தத்துறவி போதிதர்மா உருவாக்கிய தற்காப்புக்கலையே குங்ஃபூ என்கிறது.

2.டான்லின் பதிவுகள் (Tánlín)
டான்லின் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவ பேரரசரின் மூன்றாம் மகன் என்கிறது.

3.டௌசுவான் பதிவுகள் Dàoxuān
டௌசுவான் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவன் என்கிறது.(南天竺婆羅門種 nán tiānzhú póluómén zhŏng).

4.பௌத்த காஞ்சி கோயில்
தற்போதும் பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்றுள்ளது.

5.ப்ராஃடன் கூறுவது
ப்ராஃடன் என்னும் ஆய்வாளர் போதிதர்மாவை காஞ்சியை தலைநகராகக்கொண்ட தமிழ்ப்பல்லவ பேரரசின் இளவரசர் என்கிறார்.

6.யொங்சியா பாட்டு yǒngjiā Xuánjué
யொங்சியா என்னும் பாட்டு 28 குருமார் வரிசையைக் கூறுகிறது. (சாக்கிய முனி முதல் போதிதர்மா வரை)

8.ப்ராஃடன் Yáng Xuànzhī பதிவை மறுப்பது. அக்காலச்சீனாவில் எந்த துறவி சீனா வந்தாலும் அவரை பெர்சியர் என்றெண்ணி விடுவதால், Yáng Xuànzhī ( bō-sī guó hú rén) போதி தர்மாவை பெர்சியரெனக் கூரியதை மறுக்கிறார்.

9. தற்போது பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்பதை சீன சப்பானிய தற்காப்புக்கலை ஆசிரியர்கள் பார்த்துச்செல்கின்றனர்

10. போதிதர்மா (பௌத்தவர்மப் பல்லவன்) கந்தவர்மன் IV-னின் மூன்றாம் மகனென அறியப்படுகிறது. அக்கால பல்லவ மரபினர் கடைமகனை புத்தமட தானம் அளித்துவிடுவர்.

கந்தவர்மன் IV-னின் மூன்று மகன்களென அறியப்படுவோர்
1.நந்திவர்மன் I
2.குமாரவிஷ்ணு II
3.புத்தவர்மன் (போதிதர்மா) (பௌத்தவர்மப் பல்லவன்)
11. கால ஒற்றுமை

1. போதிதர்மாவின் காலமென பதிவுகள் கூறுவது (கி.பி.475-550)

2.விஷ்ணுகோபனின் காலத்திலிருந்து (கி.பி. 340) கந்தவர்மன் IV-ன் காலமாக அறியப்படுவது (கி.பி.450-500).

3.28 குருமார் வரிசையின் காலமாக கருதப்படுவது (சாக்கியமுனி முதல் (கி.மு.563) போதிதர்மா வரை (கி.பி.550). மேற்கூரிய காலங்கள் அனைத்தும் கூடி வருவது கால ஒற்றுமை.
(THANKS WIKIPEDIA )
STORY : -

போதி தருமன் ஒரு தமிழன். கி.பி.5ஆம் நூற்றாண்டில், காஞ்சியைத் தலநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்த ஒரு பல்லவ அரசனின் 3வது மகன்.சிறந்த வீரன். தற்காப்புக் கலைகளை விசேஷமாக பயின்றவன். அரசு, ஆட்சியை விரும்பாமல் – மனம் சொல்லும் வழியில் செல்கிறான்.பிரஜ்னதரா என்கிற மஹாயான பௌத்த துறவியை தன் குருவாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு ஆன்மிகத்தில் தெளிவு பெறுகிறான்.

புத்த மதத்தை கிழக்கு நாடுகளுக்கு கொண்டு செல்ல விரும்பி, கடல் வழியே - இன்றைய – மலேசியா, இந்தோனேஷியா, வியட்னாம், தாய்லாந்து வழியாக 3 ஆண்டுகள் பயணத்திற்குப் பிறகு கி.பி.527ல் சீனா சென்றடைந்திருக்கிறான். சீனாவில் (போதி) தருமன் – தா மோ என்று அழைக்கப்பட்டிருக்கிறான். தா மோ வை தெற்கு சீனாவை ஆண்டுகொண்டிருந்த அப்போதைய சீன அரசன் வூ வரவேற்று உபசரித்திருக்கிறான். அந்த மன்னனின் தற்பெருமை, அகம்பாவம் ஆகியவற்றை தா மோ வால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விளைவு -மன்னனின் கோபம், விரோதம். அந்த ராஜ்ஜியத்தை விட்டு வெளியேற உத்திரவு. பின்னர் வட சீனாவிற்கு சென்ற தா மோ, யாங்ட்சி ஆற்றின் கரையில் இருந்த ஷாவோலின் கோயிலை அடைகிறான்.

கோயிலில் இருந்தவர்களின் அழைப்பை முதலில் ஏற்காமல் அருகில் இருந்த மலைக்குகை ஒன்றில் தவம் இருக்க ஆரம்பிக்கிறான். மலைக்குகையில் ஒன்பது ஆண்டுகள் ஒரு சுவற்றின் முன்னால் உட்கார்ந்து கடுமையான தவத்தை மேற்கொள்கிறான். தவத்தின் விளைவாக, புதிய உத்வேகத்தைப் பெற்று, ஷாவோலின் கோயிலில் தன்னை இணைத்துக் கொள்கிறான். ஷாவோலின் பள்ளியில், பிள்ளைகளுக்கு பௌத்தம், தியானம் மற்றும் தற்காப்புக் கலைகளைச் சொல்லிக் கொடுத்திருக்கிறான். (சீனாவில் தா மோ ) சீனாவில் புத்த மதம் பரவ, உறுதிப்பட முக்கிய காரணமாக இருந்தவன் இங்கிருந்து சென்ற தமிழன் போதி தருமன். போதி தருமன் என்கிற தமிழனால் உருவகம் பெற்றது தான் ஜென் புத்த மதம். புத்தரின் 28வது நேரடி சீடராக தருமனை சீனர்கள் ஏற்றுக்கொண்டார்கள். பின்னர் ஜப்பானிலும் -வேறு வடிவங்களில் தருமன் புகழ் பெற்றான்.ஜப்பானில், அவன் அதிருஷ்டத்தைத் தருபவனாகக் கொண்டாடப்பட்டான்.

சீனாவிலும், ஜப்பானிலும் இன்றும் தாமோ வுக்கு ஏகப்பட்ட கோயில்கள் இருக்கின்றன. தருமனது முடிவு பற்றி வெவ்வேறு கதைகள்

வழங்குகின்றன.அவன் 150 வயது வரை வாழ்ந்ததாகவும், இறந்த பிறகு ஜியாங் மலைச்சரிவில் புதைக்கப்பட்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது.ஆனால் அவனைப் புதைத்து 3 ஆண்டுகள் கழித்து, பாமியன் மலையருகே,கையில் ஒற்றைச் செருப்புடன் சென்று கொண்டிருந்த தருமாவைக் கண்டதாக, வெய் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கூறி இருக்கிறார். எங்கே போகிறீர்கள் என்று அவர் கேட்டதற்கு, தர்மா “என் வீட்டிற்கு செல்கிறேன்” என்று சொன்னாராம். சந்தேகப்பட்ட மற்றவர்கள் தருமனின் கல்லறையை திறந்து பார்த்தபோது, அங்கே ஒற்றைச் செருப்பு மட்டுமே இருந்ததாகவும், தர்மாவின் உடலைக் காணவில்லை என்றும் ஒரு வரலாறு கூறுகிறது. போதி தருமன் பற்றிய வரலாற்றுக்கு சீனாவிலும், ஜப்பானிலும் பல வடிவங்கள் இருந்தாலும், அடிப்படையில் அவன் தமிழ் நாட்டில் காஞ்சியிலிருந்து சென்றவன் என்பதும், சீனாவில் ஜென் புத்த மதமும், தற்காப்புக் கலையை சொல்லிக் கொடுக்கும் ஷாவோலின் பள்ளியும் உருவாக அவன் முக்கிய காரணமாக இருந்தான் என்பதும் வரலாற்றில் ஒரே மாதிரி தான் கூறப்பட்டுள்ளன. உண்மையில் மிகவும் பெருமையாக இருக்கிறது.

அதே சமயம் வருத்தமாகவும் இருக்கிறது. சீன வரலாற்றில், ஜப்பானிய வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஒரு தமிழனைப் பற்றிய வரலாறு - தமிழ் நாட்டின் வரலாற்றில் காணப்படவில்லையே.

நன்றி
ராஜன்

கஃபா பற்றி முன்னறிவிப்பு
உலகில் இறைவனை வணங்குவதற்காக முதன் முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் கஅபா. இந்த ஆலயம் மக்களின் அபய பூமியாகத் திகழும் எனத் திருக்குர்ஆன் கூறுகிறது.

அந்த ஆலயத்தை மக்களின் ஒன்று கூடுமிடமாகவும், பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை நினைவூட்டுவீராக! திருக்குர்ஆன் 2:125

அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன். திருக்குர்ஆன் 3:97

'இறைவா! இவ்வூரை அபயமளிக்கக் கூடியதாக ஆக்குவாயாக! என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதை விட்டும் காப்பாயாக!' என்று இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக! திருக்குர்ஆன் 14:35

இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இவர்களுக்கு) அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? வீணானதை நம்பி, அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி மறக்கிறார்களா? திருக்குர்ஆன் 29:67

அபயமளிக்கும் இவ்வூர் மீதும் சத்தியமாக! திருக்குர்ஆன் 95:3

கஅபா, அபய பூமி என அறிவிக்கப்பட்டு 14 நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபய பூமியாகவே அமைந்துள்ளது. 14 நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயமாகவும் அது இருந்து வருகிறது.

திருக்குர்ஆன் கூறியவாறு அது அபய பூமியாகவே நீடித்து வருவது திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தாம் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது. மக்கா நகரம், நபிகள் நாயகம் காலத்திலும், அதற்கு முன்னரும் எவ்விதக் கனி வர்க்கமும் முளைக்காத பாலைவனப் பெருவெளியாக இருந்தது.

இந்த பாலைவனப் பெருவெளிக்கு உலகத்தின் பல பாகங்களிலிருந்து கனிகள் கொண்டு வரப்படும் எனத் திருக்குர்ஆன் முன்னறிப்பு செய்கிறது.

'நாங்கள் உம்முடன் சேர்ந்து நேர் வழியைப் பின்பற்றினால் எங்களின் பூமியிலிருந்து வாரிச் செல்லப்பட்டு விடுவோம்' என்று அவர்கள் கூறுகின்றனர். அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்கவில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள். திருக்குர்ஆன் 28:57

இந்த முன்னறிவிப்பு நிறைவேறியதை ஹஜ்ஜுக்குச் செல்லும் ஒவ்வொருவரும் கண்கூடாகக் காண முடியும்.

உலகத்தில் உள்ள எல்லா விதமான கனி வகைகளும் அந்த மக்களை நோக்கிக் கொண்டு செல்லப்படுகின்ற காட்சியை உலகம் இன்றைக்கும் பார்த்துக் கொண்டிருக்கிறது. திருக்குர்ஆன் இறை வேதம் என்ற சான்றுகளில் இதுவும் ஒன்றாகும்.

இவனுக்கு என்ன தண்டனை....?


                                      
  
மின்வாரிய பொறியாளரின் காம களியாட்டம்: 100க்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசம்!

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து, அதை, "லேப்-டாப்' மற்றும் சி.டி.,யில் பதிவு செய்து, ரசித்து வந்த, 57 வயதான மின் வாரியப் பொறியாளரை, போலீசார் கைது செய்தனர். பொறியாளரின் காம லீலைகளை அறிந்த போலீசார், அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

மின் வாரிய அலுவலகத்தில், உதவியாளராக பணிபுரியும் கண்ணம்மாள், 44, என்பவருக்கு, "செக்ஸ் டார்ச்சர்' கொடுத்துள்ளார். சுப்பிரமணியத்தின் ஆசை வார்த்தைக்கு அடி பணியாத கண்ணம்மாள், வால்பாறை போலீசில் புகார் செய்தார்; மின்வாரிய அதிகாரி என்பதால், சுப்பிரமணியத்தை, போலீசார் எச்சரித்து அனுப்பினர். இதன் பிறகும் கண்ணம்மாளுக்கு, செக்ஸ் டார்ச்சரும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். அதிர்ச்சி அடைந்த கண்ணம்மாள், கோவை எஸ்.பி.,யிடம் புகார் மனு கொடுத்தார். எஸ்.பி., அலுவலகத்திலிருந்து வந்த உத்தரவை அடுத்து, கடந்த மாதம், 21ம் தேதி, சுப்பிரமணியத்தை கைது செய்த போலீசார், வழக்கு பதிந்தனர். இதையடுத்து அவர், பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். சுப்பிரமணியத்தின் பின்னணியை புரட்டிய போலீசாருக்கு, அதிர்ச்சி காத்திருந்தது

சுப்பிரமணியத்திடம் இருந்து, போலீசார் கைப்பற்றிய, அதிநவீன, "வீடியோ கேமரா' மற்றும் "லேப்-டாப்'பில், 13 வயது முதல், 50 வயது நிரம்பிய பெண்களுடன், பல்வேறு கோணங்களில், சுப்பிரமணியம் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள், பதிவாகி இருந்தன. மேட்டுப்பாளையம் அருகே உள்ள, பில்லூர் மின்சார வாரிய கட்டுமானப் பிரிவில், சுப்பிரமணியம் பணிபுரிந்தபோது, அங்குள்ள ஓய்வு விடுதியில், பல பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதுதவிர, அங்குள்ள மலைவாழ் மக்கள் வசிக்கும், "செட்டில்மென்ட்' பகுதிக்குச் சென்று, பெண்கள் குளிக்கும் பொது அறையில், ரகசிய கேமராவை பொருத்தி, அந்தக் காட்சிகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதை, வாடிக்கையாக வைத்துள்ளார். மேட்டுப்பாளையத்தில் இருந்து, புரோக்கர் மூலம், கல்லூரி மாணவியரை வர வழைத்து, உல்லாசமாக இருந்ததும், "லேப்-டாப்'பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரது, "காம வலையில்' பல குடும்ப பெண்களும் சிக்கி உள்ளனர். இதுகுறித்தும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்திய மக்களை அதிரவைக்கும் பயங்கர அதிர்ச்சி செய்தி!


                              
 
ஆற்றில் குளித்தால் நன்மை கிடைக்கும், மோட்சம் பெறலாம் என்று பல காலங்களாக ஊடகங்களால் மக்களை மூளைச்சலவை செய்யப்பட்ட கங்கை ஆறு குறித்து:

கங்கையில் குளித்தால் புற்றுநோய் வரும்: ஆய்வில் அதிர்ச்சி

புனித நதியாக கருதப்படும் கங்கை நதியின் நீரில் புற்றுநோயை உண்டாக்கும் மாசுக்கள் கலந்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கங்கை ஆற்றுப்படுகையில் வசிப்பவர்களுக்கு புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பலகோடி இந்தியர்களின் ஜீவநதி கங்கை. இந்த நதியில் நீராடினால் தீராத பாவமெல்லாம் தீர்ந்துவிடும் என்பது பலகோடி இந்துக்களின் நம்பிக்கை. இதற்காகவே தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் புனிதப்பயணம் மேற்கொண்டு கங்கையை தரிசித்து புனித நீராடுகின்றனர்.

கங்கையில் இறந்தாலே அங்கே இறந்தவர்களை எரியூட்டினாலோ சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்பது நம்பிக்கை. இதன்காரணமாக இறந்தவர்களின் உடலை கங்கை நதியில் விட்டுவிடுகின்றனர். இறந்தவர்களின் அஸ்தியை இங்கு கொண்டுவந்து கரைக்கின்றனர். இதனால் கங்கை நீர் பல ஆண்டுகளாக அழுக்கடைந்து,மாசுபட்டு வருகிறது.

புனிதநதியாம் கங்கை நதி மாசடைந்து பல ஆண்டு களாகி விட்டது. இந்த கங்கை நீரில் புற்று நோயை உண்டாக்கும் கார்சினோஜென்ஸ் (carcinogens)எனப்படும் புற்று நோயை உண்டாக்கக்கூடிய காரணிகள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கங்கையில் உள்ள மாசுக்கள் குறித்து தேசிய புற்றுநோய் பதிவு மையம் ஆய்வு மேற்கொண்டது. அதில் அதிர்ச்சிகரமான பல தகவல்கள் தெரியவந்தன.

கங்கை நீரில் மிக அதிக உலோகத்தன்மையும்,நச்சு ரசாயனம் காணப்படுகிறது. குறிப்பாக உத்தரப்பிரதேசம்,பீகார் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் உள்ள கங்கை நதி படுகை பகுதிகளில் இது அதிகமாக காணப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

கங்கை நதியையொட்டிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு,நாட்டின் பிறபகுதிகளில் வசிப்பவர்களை காட்டிலும் மிக எளிதில் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

புனித நதியாக போற்றப்படும் கங்கை நதியைப் பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர்கள் நாட்டில் உள்ள முக்கிய நதிகளை ஆய்வு செய்தால் என்னென்ன அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகுமோ?

பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது?


              
 நமது வீடுகளில் சிடி அல்லது டிவிடிக்கள் பழுதாகிவிட்டால் அதை பழுது பார்ப்பதற்கும் அதிக செலவாகும். ஆனால் வீட்டிலேயே அவற்றை குறைந்த செலவில் பற்பசை கொண்டு டிவிடிக்கள் அல்லது சிடிக்களின் பழுதுகளை நீக்க முடியும். பின்வரும் எளிய வழிகளைப் பின்பற்றினால் மிக எளிதாக சிடி மற்றும் டிவிடிக்களின் பழுதுகளை சரி செய்ய முடியும்.
முதலில் சிடி அல்லது டிவிடியை வெளியில் எடுக்க வேண

்டும். பின் அதன் பின்புறத்தைப் பார்க்க வேண்டும். ஏனெனில் பின்புறத்தில் ஏகப்பட்ட கீறல்கள் இருக்கலாம். மிகப் பெரிய கீறல்கள் இருந்தால் அந்த சிடிக்களை பழுது பாக்க முடியாது. கீறல்கள் சிறயதாக இருந்தால் அவற்றை எளிதாக சரி செய்ய முடியும்.
வெளியில் எடுத்த சிடியை சோப்பு தண்ணீரால் மென்மையாக கழுவ வேண்டும். அதன் மூலம் கீறல்களை ஏற்படுத்தும் சிறிய துகள்களைக்கூட நீகக முடியும்.
கழுவியபின் அந்த சிடியை சுத்தமாக இருக்கும் ஒரு துணியின் மீது வைக்க வேண்டும்.
பின் பற்பசையை எடுத்து சிடியின் முன்பகுதி முழுவதும் சிறிய சிறிய வட்ட வடிவில் விரல்களால் பரப்ப வேண்டும்.
பின் அந்த சிடியை ஒரு சமமான பகுதியில் வைக்க வேண்டும். பின் விரல்களால் மிகவும் மென்மையாக அந்த பற்பசையை சிடியில் தேய்க்க வேண்டும்.
அதன் பின் ஒரு ஐந்து நிமிடங்கள் பற்பசையை சிடி மீது அப்படியே வைத்திருக்க வேண்டும்.
ஐந்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் சிடியில் உள்ள பற்பசையை கழுவ வேண்டும். அதாவது சிறிதளவு பற்பசைகூட சிடியில் இல்லாத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும்.
பின் டிஷ்யு பேப்பரைக் கொண்டு சிடியை உலர்த்த வேண்டும். ஏனெனில் இந்த பேப்பர் மிகவும் மென்மையாக இருக்கும். அதோடு சிடியில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதோடு பற்பசையும் முழுமையாக நீங்கிவிடும்.
சிறிது நேரம் கழித்து முழுவதும் காய்ந்து போன சிடியை நாம் பயன்படுத்த முடியும்.

Tuesday, October 16, 2012

செவிப் ( காது ) பாதுகாப்பு! (மருத்துவ ஆலோசானை):- 
செவிப் ( காது ) பாதுகாப்பு! (மருத்துவ ஆலோசானை):-

காது பாதுகாப்பு:

1. காதின் வெளிப்பக்கத்தை சோப்பு மற்றும் தண்ணீர் விட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
 
2. காதில் இருக்கும் மெழுகு போன்ற பொருளை (குரும்பியை) எடுக்கக்கூடாது. அது செவிக்பாதுகாப்பிற்கு மிக முக்கியமானது. கசப்பாக இருக்கும் அதில் எந்த பூச்சியும் நுழையாது.
 
3. ஒரு வேளை பூச்சி ஏதாவது காதிற்குள் நுழைந்து விட்டால் சில சொட்டுகள் தேங்காய் எண்ணெய் அல்லது கடலை அல்லது நல்லெண்ணெய் அல்லது ஏதாவது ஒரு சுத்தமான எண்ணெய் காதில் விட்டால் அந்தப் பூச்சியைக் கொன்றுவிடும். பிறகு பீச்சான குழலைப் பயன்படுத்தி எடுத்துவிடலாம். பூச்சி கண்ணுக்கு தெரிந்தால் சாமணத்தால் அதை எடுத்து விடலாம். எல்லாவற்றிற்கும் மேலாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்வதே சிறந்ததாகும்.
 
4. காதில் குச்சிபோட்டுக் குடையக்கூடாது. குச்சியைப் பயன்படுத்தினால் செவிப்பறை கிழிந்துபோக வாய்பப்புண்டு. நலிவுக்கும் உள்ளாக்கும், காதில் சீழ் வழியக்கூடிய அபாயமும் ஏற்படக்கூடும்.
 
5. காதிலுள்ள உரோமங்கள் மிகவும் முக்கியமானவை, தூசியும், பூச்சியும் காதுக்குள் நுழையாமல் அவை தடுக்கின்றன. எனவே, இவற்றை வெட்டி எடுக்கக்கூடாது.
 
6. சொத்தைப்பல், கடைவாய்ப்பல் சரியான வெளிவராதிருந்தால், நாக்கு மற்றும் வாய்ப்புண்கள், டான்சில் சதை வளர்ச்சி , கழுத்து எலும்பு தேய்வு, புற்றுநோய் போன்ற நலிவுகள் மற்ற உறுப்புக்களை பாதிப்பதினால் காதில் வலி ஏற்படக்கூடும்.
 
7. காதில் வலி ஏற்பட்டால் கெட்டியான குறும்பியோ அல்லது புறச்செவியில் நலிவோ ஏற்பட்டிருக்கலாம். இதற்காக மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் காதில் சொட்டு மருந்தைப் போட்டுக் கொள்ளக்கூடாது. தவறான சொட்டு மருந்து காதை அதிகமாக, எதிர்பாராத வகையில் பாதிக்கக்கூடும்.
 
8. காது வலி தொண்டையில் அழற்சி காரணமாக இருக்கலாம். நோய்க்கிருமிகள் தாக்கத்தின் விளைவாகவும் இருக்கலாம். காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணரை அணுகி சிகிச்சைப் பெறுவது நல்லது.
 
9. காது திடீரெனக் கேட்கவில்லையென்றால் உடன் 48 மணி நேரத்திற்குள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். காலம் தாழ்த்துவது அல்லது உதாசீனமாக விட்டுவிடுவது விபரித விளைவுகளை ஏற்படுத்துக்கூடும்.

10. குடும்பத்தில் பிறவிச் செவிடர்கள் இருந்தால் இரத்த உறவில் திருமணம் செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் காது கேளாமலிக்க வாய்ப்புண்டு.
 
11. சிறு குழந்தைப் பருவத்தில் காது கேட்கவில்லை என்றால் அந்தக் குழந்தையின் பேச்சும் பாதிக்கக்கூடும். காலங் கடத்தாது மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதே சிறந்ததாகும்.
 
12. சில மருந்துகள் செவிட்டுத் தன்மையை ஏற்படுத்தும். ஆகையால் மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகளை உட்கொள்ள்க்கூடாது.
 
13. அதிக இரைச்சலான இடங்களில் வேலை செய்வோர் செவிப்பாதுகாப்பு அடைப்பான்களைப் போட்டுக் கொள்ள வேண்டும்.
 
14. சுவாசிப்பதில் தவறான முறையில் மூச்சு வெளியேற்றுவதும் காது வலிக்கு ஒரு காரணமாக இருக்கலாம். மூச்சு உறுப்புகளில் தொற்றுநோய் ஏற்பட்டிருந்தாலும் காதுவலி ஏற்படலாம்.
 
15. காது கேட்கவில்லையெனில் நீங்களாகவே கடைகளில் உள்ள பல ரகங்களிலான கேட்க உதவும் பொறியமைவுகளில் ஏதேனும் ஒன்றை வாங்கிப் பயன்படுத்துவது கூடாது. செவித்திறன் குறைவின் அளவைப் பொறுத்து அதற்கேற்ற அமைவினையே பயன்படுத்த வேண்டும்.
 
16. உணர்வு நரம்பின் செவிட்டுத் தன்மைக்கேற்ற பொறியை மருத்துவரின் பரிந்துரைப்படி பொருத்திக் கொள்ள வேண்டும்.
 
17. கேட்கும் தன்மைக்கேற்ப பேச்சுத்தன்மையும் அமைகிறது. எனவே செவிட்டுத்தன்மையை புறக்கணிக்கக்கூடாது.
 
18. அடிக்கடி சளி பிடித்தாலும் தொண்டை வலி ஏற்பட்டாலும் காதின் கேட்புத்திறன் பாதிக்கக்கூடும்.
 
19. மூக்கை, வேகமாகச் சிந்தக்கூடாது. சிந்தினால் முக்கிலும் தொண்டையிலும் உள்ள கிருமிகள் நடுச் செவிக்குள் புகுந்து காதைச் செவிடாக்கிவிடக்கூடும்.
 
20. குழந்தைகளின் காதில் ஒருபோதும் அறையக்கூடாது. அறைந்தால் காதுக்கு ஊறு ஏற்பட்டு கேளாமல் போனாலும் போய்விடும்.
 
21. தண்ணீரில் குதித்துக் குளிப்பதாலும், கடல் நீரல் குளிப்பதாலும் நோய்தொற்று நடுச்செவிக்குழல் மூலம் காதுக்குள் சென்று கடுமையான காது வலியை ஏற்படுத்தக்கூடும்.

பாங்கின் அர்த்தம்.


             
ASSALAMU ALLAIKUM TO ALL

பாங்கின் அர்த்தம்

அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்

அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்

அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்

அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்

அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் :
அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன்.

அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் :
அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன்.

அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் :
முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.

அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் :
முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.

ஹய்ய அலஸ் ஸலா(த்), ஹய்ய அலஸ் ஸலா(த்) :
தொழுகையின் பக்கம் வாருங்கள், தொழுகையின் பக்கம் வாருங்கள்

ஹய்ய அலல் ஃபலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ் :
வெற்றியின் பக்கம், வாருங்கள், வெற்றியின் பக்கம் வாருங்கள்

அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்

அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்

லா இலாஹ இல்லல்லாஹ் :
அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவனில்லைஅறிவிப்பவர் : அபூமஹ்தூரா(ரழி)
நூல் : முஸ்லிம்
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரழி)
நூல் : இப்னுமாஜா,அபூதாவூத்


ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள். அல்குர்ஆன் 23:1,2,9

காலையில் சிலர் காபி முகத்தில் தான் கண் விழிப்பார்கள்????????????????????


காலையில் சிலர் காபி முகத்தில் தான் கண் விழிப்பார்கள். இன்னும் சிலரோ டீ வாசனை முக்கைத் துளைக்கும் போதுதான் படுக்கையில் இருந்தே எழுவார்கள். இப்படி காபி, டீயுடன் அன்றைய நாளைத் தொடங்கும் சுவைப்பிரியர்களின் மனதில் கூட எப்போதாவது எட்டிப்பார்க்கும் கேள்வி: `எது நல்லது? காபியா? டீயா?’

முதலில் `டீ’க்கு வருவோமா? டீ குடித்தால் சில புற்று நோய்களும், இதயநோய்களும் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்கிறார்கள், மருத்து

வ நிபுணர்கள். அதோடு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க டீ உதவுகிறது.

ஒரு கப் டீயில் காபியை விட குறைவான `காபினே’ இருக்கிறது. அதனால் கொலஸ்ட்ரால் பற்றி கவலைப்பட அவசியமில்லை. உயர்ரத்த அழுத்தம் இருப்பவர்கள் ஒருநாளைக்கு ஒரு கப் டீயுடன்நிறுத்திக் கொள்வது நல்லது. இப்படிப்பட்டவர்கள் அதிகமாய் டீ குடிப்பது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து விடக்கூடும்.

சிலர் டீ கொதிக்க கொதிக்க இருக்கும்போதே அதே சூட்டில் தொண்டைக்குள் இறக்குவார்கள். இப்படியே தொடர்ந்தால் தொண்டையில் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று எச்சரிக்கிறது, சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று.

காபி கதைக்கு வருவோம். `டீ’யை விடவும் காபியில் `காபின்’ அதிகம் இருப்பதால் டீயை விட சிறப்பாகவும், வேகமாகவும், அதிக செயல்திறனை உணரமுடிகிறது. டீ குடிப்பவர் களுக்கு ஏற்படும் சுறுசுறுப்பை விட இது அதிகம். குறிப்பாக டிகாக்ஷன் காபிக்கு நகர்ப்புறத்தில் பிரியர்கள் அதிகம்.

வடி கட்டப்பட்ட `பிளாக் காபி’க்கு அல்சைமர்ஸ், பெருங்குடல் புற்றுநோய், டைப்-2 நீரிழிவு நோய் ஆகியவற்றை தடுக்கும் வாய்ப்பு அதிகம்.

சிலர் கையில் எப்போதும் காபிக்கோப்பை புகைந்து கொண்டிருக்கும். இப்படிப்பட்டவர்கள் பின்னாளில் மனக்கவலை சார்ந்த நோய்களுக்கு உள்ளாகக்கூடும். எனவே காபியானாலும் அளவோடு குடித்து ஆரோக்கியம் காக்கலாம். காபிக்கு அடிமையாகி விட்டதை உணர்ந்து திடுமென அதை நிறுத்த முயல்பவர்கள் ஒரேயடியாக சோர்ந்து போவார்கள். கவனம் செலுத்துதலில் குறைபாடு ஏற்படக்கூடும். கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கலாம்.

Monday, October 15, 2012

வடகரை தாரிக்: FaceBookல் உங்கள் நண்பர்களை மற்றவர்களிடம் இருந்து ...

வடகரை தாரிக்: FaceBookல் உங்கள் நண்பர்களை மற்றவர்களிடம் இருந்து ...: நம்முடைய நண்பர்களின் லிஸ்ட் நம் பேஸ்புக் கணக்கிற்கு வரும் மற்றவர்களுக்கும் தெரியும். இதனை எவ்வாறு மாற்றி நம்முடைய நண்பர்கள் பகுதியை மற்றவ...

வடகரை தாரிக்: FaceBookல் நமது Request ஐ ஏற்காதவர்களை அறிய, திரும...

வடகரை தாரிக்: FaceBookல் நமது Request ஐ ஏற்காதவர்களை அறிய, திரும...: நாம் FaceBookல் Friends Request அனுப்பியும்  இன்னும் எத்தனை நபர்கள் நமது Request ஐ ஏற்காமல் உள்ளார்கள். நமது Request   ஐ எப்படி திரும்ப ப...

வடகரை தாரிக்: Torrent தொழில்நுட்பம் அறிவோம் - மென்பொருள்கள், படங...

வடகரை தாரிக்: Torrent தொழில்நுட்பம் அறிவோம் - மென்பொருள்கள், படங...: Torrent ஐ பற்றி அறிவதற்கு முன்பு அதன் பயன்களை முதலில் அறிவோம். பணம் கொடுத்து வாங்கவேண்டிய எல்லா சாப்ட்வேர்களும் torrentல் இலவசமாக கிடைக...

கம்ப்யூட்டர், மொபைல், பிளாக்கர் டிப்ஸ்: பிளாக்கில் Back To Top பட்டன் இணைப்பது எப்படி?

கம்ப்யூட்டர், மொபைல், பிளாக்கர் டிப்ஸ்: பிளாக்கில் Back To Top பட்டன் இணைப்பது எப்படி?: நாம் வலைப்பதிவில் ஒரே பக்கத்தில் அதிகமான பதிவுகளை எழுதியிருந்தால் நம் வாசகர்கள் ஒருபக்கத்தை படித்துவிட்டு கிழிருந்து மேலே வருவதற்கு Mouse 'ன...

Sunday, October 14, 2012

இந்தியாவின் உளவு நிறுவனங்கள் பற்றிய தகவல் !!!
இந்தியாவின் மிக முக்கிய உளவு நிறுவனங்களாக 2 நிறுவனங்கள் இருக்கின்றன. ஒன்று, இன்டெலிஜென்ஸ் பீரோ. சுருக்கமாகஐ.பி. என்று அழைக்கிறார்கள். மற்றொன்று 'ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங்'. இதனை சுருக்கமாக 'ரா' என்று அழைக்கிறார்கள். இந்தியாவில் மத கலவரங்கள் நடைபெறாமல் இருப்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்கும் . சமிபத்தில் தாண்டவம் என்ற திரை படத்தில் கூட நடிகர்
விக்ரம் ரா வில் பனி புரிவது போன்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் .

உல் நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள், தீவிரவாத அமைப்புகள், மக்களின் மனநிலை போன்றவற்றை உளவு மூலம் கண்டுபிடித்து அரசுக்கு தகவல் தரும் வேலையை செய்து வருவது ஐ.பி.யின் கடமை. இது 1885 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகிலேயே மிகப்பழமையான உளவு நிறுவனம் இதுதான். உள்நாட்டில் தீவிரவாதம் தலைதூக்காமல் இருக்க உளவு பார்த்து தகவல்களை சேகரிப்பதும், அதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதும் இதன் முக்கிய வேலை. இந்தியாவின் மற்ற பாதுகாப்பு படை பிரிவுகளுக்கு தகவல்களை தந்து எச்சரிக்கை செய்யும்.

அடுத்த உளவு அமைப்பான ரா, 1968 -ல் உருவாக்கப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான மற்ற நாடுகளின் செயல்பாடுகளை கவனித்துக் கொள்வதுதான் இதன் பிரதான வேலை. உலக நாடுகளுக்கு தெரியாமல் பொக்ரானில் அணு ஆயுத சோதனைகளை நடத்தி முடிக்க இந்த இரு அமைப்புகளுமே உதவின.

நேபாளத்தில் இருந்து இந்தியா வந்த விமானம் 1999 -ம் ஆண்டு கடத்தப்பட்டதை தொடர்ந்து இந்தியாவுக்கு அருகில் உள்ள நாடுகளில் தனது பாதுகாப்பு குறைவாக இருப்பதை உணர்ந்த 'ரா' அதன்பிறகு இந்த நாடுகளில் வலுவாக காலூன்றி விட்டது. தற்போது இந்த இரு நாடுகளில் பாகிஸ்தானில் ஆதிக்கம் பெரும் அளவு குறைந்ததற்கு 'ரா' வின் உளவு வேலைகளே காரணம். தேவைப்படும் சமயங்களில் ஐ.பி. உளவாளிகளையும் இவர்களோடு சேர்த்துக் கொள்வார்கள்.

இவர்களுக்காக செலவு செய்யப்படும் பணத்துக்கு அரசு பெரும்பாலும் கணக்கு கேட்பதில்லை. நமக்காக உயிரை பணயம் வைத்து உளவு செய்பவர்கள் அவர்கள். பண விஷயத்திலேயே அவர்களை நம்பவில்லை என்றால் அவர்கள் தரும் தகவல்களை எப்படி நம்ப முடியும், என்கிறது அரசாங்கம். உண்மைதானே.