Digital Time and Date

Welcome Note

Saturday, October 20, 2012

மொபைல் போன் வாங்க போறிங்களா? கொஞ்சம் இத கவனிங்க பாஸ்?



                      
 மோட்டோரோலா (Motorola) நிறுவனம் தான் 1973 ம் வருடம் முதன்முதலில் மொபைல் போனை தயாரித்தது. John F.Mitchell, Dr Martin Cooper இவர்கள் தான் கையளவு மொபைல் போனை தயாரித்தவர்கள். இதன் எடை ஒரு கிலோ 1 KG. ஆனால் விற்பனைக்கு வந்த முதல் மொபைல் போன் 1983 ம் ஆண்டு DynaTAC 8000x என்ற மாடல்.

1990 முதல் 2011 ம் ஆண்டு வரை புதிதாக மொபைல் போன் பயன்படுத்துவோர் எண

்ணிக்கை 12.4 மில்லியன். இன்றைய உலக மக்கள் தொகையில் 70 சதவிகிதம் மக்கள் மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். இப்பொழுது லேப்டாப் பயன்படுத்துவோரை விட மொபைல் போன் பயன்படுத்துவோர் சதவிகிதம் அதிகம். காரணம் இப்பொழுது உள்ள மொபைல் போனில் சகல வசதிகளும் அடங்கி உள்ளன. மொபைல் போன் இல்லை என்று சொல்லுவது கேவலம் என்கிற நிலைமையில் உள்ளது.

பேசுவதற்கும், குறுந்தகவல் அனுப்புவதற்கு மட்டும் போதும் என்று நினைப்பவர்கள் சாதாரன வசதிகள் கொண்ட மொபைல் போன் வாங்குவதே சிறந்தது. யாருங்க சாதாரணமாக பயன்படுதுரா? வயசு வித்தியாசம் இல்லாம எல்லோரும் இன்டர்நெட் வசதி கொண்ட மொபைல் போன் வாங்குவதை தான் விரும்புகிறார்கள்.

கவனிக்கவேண்டிய விஷயங்கள்

முதலில் எந்த வகை மொபைல் போன் என்று முடிவு செய்துகொள்ள வேண்டும்.

திரையின் அளவு (Display)

தட்டச்சு (Keyboard) உள்ள மொபைல் போன் அல்லது தொடு திரை (Touch Screen) இதில் எது என்று முடிவு செய்துகொள்ளுங்கள்.

இப்பொழுது பெரும்பாலும் தொடு திரை (Touch Screen) மொபைல் போன்கள் தான் மிக பிரபலம்.

தொடு திரை (Touch Screen) என்றால், பல வகையான அளவுகளில் (Inch) கிடைக்கின்றன. குறைந்தது4 Inch இருப்பது சிறந்தது.

குறிப்பு : எத்தனை எடை கொண்ட மொபைல் போன்கள் உள்ளன என்பதையும் மனதில் கொள்ளவேண்டும். ஸ்மார்ட் போன்கள் குறைந்தது 100 Gram எடை கொண்டதாகவே இருக்கும்.

கேமரா (Camera)


குறைந்தது 5 Mega Pixel கொண்ட மொபைல் போன்களே சிறந்தது.

முக்கியமாக முகப்பு கேமரா (Front Camera) கொண்ட மொபைல் போன்களே வாங்குங்கள். காரணம்Skype போன்ற வீடியோ கால் பேசுவதற்கு மிக அவசியம்.

முகப்பு கேமரா குறைந்தது 1 Mega Pixel இருப்பது சிறந்தது.

HD (High-Definition) என்று அழைக்கப்படும் அதிக தெரிவு கொண்ட மொபைல் போன்கள் மிகவும் பிரபலம். HD மொபைல் போன் வாங்குவதே சிறந்தது.

பேட்டரி (Battery)

ஸ்மார்ட் போன்கள் அனைத்தும் பேட்டரி திறன் குறைவானதே. காரணம் இதில் இன்டர்நெட் எப்பொழுதும் தொடர்பில் இருப்பதால் பேட்டரி குறைந்து கொண்டே இருக்கும்.

பழைய நோக்கியா போன் போல மூன்று நாளைக்கு நிற்கும் என்று கனவில் கூட காணவேண்டாம். ஒரு நாள் தான் அதிகபட்சம் இருக்கும். இன்டர்நெட் அதிகமாக உபயோகிக்காமல் இருந்தால் பேட்டரி திறன் அதிகரிக்கும்.

குறைந்தது Li-Ion Battery 1500 mAh அல்லது இதற்கு மேல் பேட்டரி திறன் கொண்டதை வாங்குவதே சிறந்தது.


பிராசெசர் (Processor)

இன்டர்நெட் பயன்பாடு என்று சொன்னால் முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம் மொபைல் போனின் வேகம். பிராசெசர் தான் மொபைல் போனின் வேகத்தை நிர்ணயக்க கூடியது.

இப்பொழுது (Quad-Core Processor) பல மடங்கு வேகம் கொண்ட மொபைல் போன்கள் விற்பனையில் முதலில் உள்ளன. ஆனால் இதன் விலை அதிகம்.

குறைந்தது (Dual-Core Processor) இருந்தால் இணையத்தை பயன்படுத்தும் போது மொபைல் போனின் வேகம் அதிகமாக இருக்கும்.

குறைந்தது 1 GHz வேகம் இருந்தால் நல்லது. பெரும்பாலான ஸ்மார்ட் போன்கள் இப்பொழுது 1.5 GHzவேகம் கொண்டதாகவே வருகின்றன.

ரேம் (RAM)

இன்டர்நெட் பயன்பாடு மற்றும் மொபைல் போனின் வேகத்திற்கு மிகவும் முக்கியம் ரேமின் (RAM)வேகம்.

குறைந்தது 1 GB அளவு இருந்தால் நன்றாக பயன்படுத்தலாம். 512 MB அளவும் மொபைல் போனின் வேகத்திற்கு போதுமானது.

மெமரி (Memory)

இன்டெர்னல் மெமரி (Phone Memory) எக்ஸ்டெர்னல் மெமரி (Memory Card) என இரண்டு வகை உண்டு.

இன்டெர்னல் என்பது மொபைல்களிலேயே உள்ளவை.

எக்ஸ்டெர்னல் (MicroSD Card) என்பது தனியாக நம்முடைய வசதிற்கு ஏற்ப போட்டுகொள்வது.

இன்டெர்னல் மெமரி என்பது போனிலேயே வருபவை. இதை நாம் அதிகரிக்க முடியாது. குறைந்தது 1 GB அளவு அவசியம்.

காரணம் மென்பொருள்கள் சில மெமரி கார்டிற்கு மாற்ற முடியாதவை உள்ளன. இதனால் போன் மெமரி குறைந்து பின்பு போனின் வேகம் குறைந்துவிடும்.

போன் மெமரி குறைந்தபட்சம் 2 GB அளவு சிறந்தது.

மெமரி கார்ட் போட முடியாத போன்களை வாங்கவேண்டாம். அப்படியே வாங்க வேண்டி வந்தால் போன் மெமரி 16 GB அல்லது 32 GB அளவு கொண்டவையை வாங்குவது சிறந்தது.

மெமரி கார்ட் நம்முடைய வசதிற்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம். அதிகபட்சமாக 32 GB அளவே சரியானவை.

MicroSD Card




இயங்குதளம் (Operating System)

மிக மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய விசயம். இயங்குதளம் தான் மொபைல் போனை இயக்க கூடியவை. (கம்ப்யூட்டர்க்கு Windows XP, Windows 7 போல)

மிக பிரபலான இயங்குதளம் இப்பொழுது Android ஆண்டிராய்டு இயங்குதளமே.

குறைந்த விலை போன் முதல் அதக விலை போன்கள் என அனைத்தும் ஆண்டிராய்டு இயங்குதளம் கொண்டவையே.

ஆண்டிராய்டு இயங்குதளத்தில் அதியாவிசயமான பெரும்பாலான மென்பொருள்கள் இலவசமாகவே கிடைக்கும். (என்னுடைய முந்தைய பதிவில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள், லிங்க் கடைசியில் உள்ளது)

ஆண்டிராய்டு இயங்குதளம் மிகவும் பயன்படுத்துவதற்கு சுலபமானவை.

Android Logo



ஆண்டிராய்டு இயங்குதளம் மொபைல்கள் வேகமாக இன்டர்நெட் பயன்படுத்துவதற்கு உதவுகின்றன.

கம்ப்யூட்டரில் பயன்படுத்த கூடிய பெரும்பாலான மென்பொருள்கள் ஆண்டிராய்டு இயங்குதளம் மொபைல்களிலும் உண்டு. (Skype, Yahoo Messenger, Gtalk, Team Viewer, Google Chrome, etc)

Sony, HTC, Samsung, Motorola, LG, etc.. போன்ற அனைத்து பிரபலமான மொபைல் கம்பெனிகள் ஆண்டிராய்டு இயங்குதளம் கொண்டவையே.

என்னடா நோக்கியா (Nokia) இல்லையேன்னு வருத்தபடுகிரிங்களா? என்ன பண்ண நோக்கியாவிற்கும் ஆண்டிராய்டு அதாவது கூகிள்க்கும் ஆகாது பாஸ்?? சண்டை??

Nokia நோக்கியா இப்போ வீழ்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணம் இது தான்??

நோக்கியா (Nokia) இப்போ Windows போன்களை விற்பனைக்கு விட்டுஇருக்கு.

பின் குறிப்பு : இதில் மொபைல் போனின் விலை பற்றி பதியவில்லை. உங்களுடைய வசதிற்கு தகுந்தாற்போல் முடிவு செய்து கொள்ளுங்கள். ஸ்மார்ட் போன் என அழைக்கப்படும் மொபைல் போன்கள் விலை கொஞ்சம் அதிகமே. குறைந்தது 10000 ரூபாய்க்கு மேல் தான் தரமான எல்லா வசதிகளும் கொண்ட ஸ்மார்ட் போன் கிடைக்கும்.

No comments:

Post a Comment