கிங்பிஷர் ஏர்லைன்ஸ்
நிறுவனத்தில் கடந்த ஐந்து மாதங்களாக விமானிகளுக்கு சம்பளம் மற்றும்
அலவன்ஸ்களை தராததால் மீண்டும் வேலைநிறுத்த் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் மும்பையிலிருந்து செல்லும் 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மற்ற பல பகுதிகளுக்கு செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
புதுடெல்லியிலிருந்து 11
விமான வருகைகளும், 14 விமானப்புறப்பாடு உள்ளிட்ட 25 விமானங்களும் ரத்து
செய்யப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மும்பையிலிருந்து செல்லும் 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மற்ற பல பகுதிகளுக்கு செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
குறிப்பிட்ட தொழிலாளர்கள் சம்பளம் கொடுக்கப் படாததை கண்டித்து பணிகளை புறக்கணித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் அவர்களின் அக்கவுண் டுகளில் நேற்று பணம் போடப்பட்டு விட்டது.
75 சதவிகித தொழிலாளர்கள் சம்பளம் பெற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, இந்நிறுவனத்தின் தலைவரான விஜய் மல்லையா, ’’நல்லது நடக்கும் என்று நான் நம்புகிறேன். என்னால் முடிந்த நல்லதை செய்திருக்கிறேன்.
விமானங்களை ரத்து செய்தல், செய்தியாளர்களிடம் பேசுதல், நிறுவனத்தை அவமதித்தல் போன்றவற்றை செய்ததால்தான் நமக்கு சம்பளம் தந்துள்ளனர் என்று சிலர் நினைக்கலாம். அது தவறு. நமது நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்களின் நம்பிக்கையை வைத்து நான் மறுமுதலீடுக்கு முயற்சி எடுத்ததன் பலனாக இவை நடைபெற்றன’’ என்று தனது நிறுவனத்தின் ஊழியர்களுக்கு விஜய் மல்லையா இன்று கடிதம் எழுதியிருக்கிறார்.
No comments:
Post a Comment