Digital Time and Date

Welcome Note

Wednesday, July 11, 2012

கள்ள நோட்டை எளிதில் கண்டுபிடிக்க ரிசர்வ வங்கியின் புதிய இணையதளம்




நாட்டில் அதிகரித்து வரும் கள்ளநோட்டை ஒழித்துக்கட்டவும் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும் ரிசர்வ வங்கி புதிய இணையதளத்தை துவக்கியுள்ளது.

இதன் மூலம் கள்ளநோட்டை முற்றிலும் ஒழித்துகட்டவும் கள்ளநோட்டை மக்கள் எளிதாக கண்டுபிடித்திடவும் முயற்சி செய்து வருகிறது.
கள்ள நோட்டு புழக்கம் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் செயல் ஆகும். எல்லைப்பகுதியில் ஊடுருவும் ப‌யங்கரவாதிகள் தான் இது போன்ற செயலகளில் ஈடுபட்டுவருகின்றனர். இந்திய கள்ள நோட்டுக்கள் பக்கத்து நாடான பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு இந்தியாவில் பயங்கரவாதிகள் மூலமாக புழக்கத்தில் விடப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்ந நிலையில் கள்ள நோட்டு புழக்கத்தை ஒழித்துகட்டவும், அவற்றை எளிதாக சாதாரண மக்கள் இனம் காணவும், விழப்புணர்வு ஏற்படுத்த ரிசர்வ் வங்கி,www.paisaboltahai.rbi.org.in என்ற புதிய இணையதளத்தை துவங்கியுள்ளது.
கடந்த 2010-2011-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் புழக்கத்தில் இருந்த 6.74 மில்லியன் கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்துள்ள விவரம் உள்ளிட்டவை இந்த இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளது.
ரூ. 10, 50,100, 500, 1000 ஆகிய கரன்சிகளின் வரிசைப்படி கள்ள நோட்டுகளுக்கும், ஒரிஜினல் கரன்சிகளுக்கும் உள்ள வித்தியாசத்தினை கண்டுபிடிக்க முடியும், மேலும் கள்ளநோட்டு பற்றிய விவரங்கள் அடங்கிய குறும்படமும் காட்சியாக இடம் பெற்றுள்ளன. இவற்றினை டவுன்‌லோடு செய்து கள்ள நோட்டினை எவ்வாறு இனம் காணலாம் என்பது குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment