இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வடமேற்கு பகுதியில் பெஷாவர் நகரில் உள்ளது கோர்
காத்ரி. இங்கு 160 ஆண்டு பழமையான கோரக்நாத் கோயில் உள்ளது. இந்த கோயில்
இந்திய - பாக் பிரிவினைக்கு பின் மூடப்பட்டது. கடந்த 60 ஆண்டுகளாக கோயில்
மூடியே கிடந்தது. இந்தக் கோயிலை மீண்டும் திறக்க வேண்டும் என்று கோரி
பூல்வதி, இவரது மகன் கக்கா ராம் ஆகியோர் பெஷாவர் உயர் நீதிமன்றத்தில்
வழக்கு தொடர்ந்தார். இவர்கள் தாக்கல் செய்த மனுவில், கோரக்நாத் கோயில்
எங்கள் குடும்பத்துக்கு சொந்தமானது.
அந்த கோயில் பல ஆண்டுகளாக
போலீஸ் மற்றும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, கோயிலை
திறந்து நிர்வகிக்க உத்தரவிட வேண்டும்ÕÕ என்று கோரியிருந்தனர். மனுவை
விசாரித்த நீதிமன்றம், Ôபூல்வதியின் குடும்பத்துக்கு கோயில் சொந்தமானது
என்பதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. எனினும், மதரீதியான
நடவடிக்கைகளை தடுப்பது சட்டப்படி தவறு. எனவே, வழிபாடு நடத்த கோயிலை திறக்க
வேண்டும்Õ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து 60
ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளியன்று கோயில் திறக்கப்பட்டது. பெண்கள்,
சிறுவர்கள், பெரியவர்கள் என ஏராளமான இந்துக்கள் கோயிலில் உற்சாகமாக தீபாவளி
கொண்டாடி பிரார்த்தனை செய்தனர். கோயிலை திறக்க உதவிய பாகிஸ்தான்
அதிகாரிகளுக்கு பூல்வதியின் மகள் கமலா ராணி மனப்பூர்வமாக நன்றி
தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட செய்தியை நாம் கவனிக்கும் போது பல
உண்மைகள் வெளிப்படுவதைக் காணலாம். பாகிஸ்தானில் மிக மிக சிறுபான்மையாக
வாழும் இந்துக்களின் வழிபாட்டுத்தலம், முஸ்லிம்கள் ஆட்சியாளர்களாக
இருந்தும் கூட நீதி மறுக்கப்படவில்லை. அந்த கோயில் இடிக்கப்படவில்லை. அங்கே
உடனடி மசூதி எழுப்பப் படவில்லை. அறுபது ஆண்டுகாலம் பூட்டியிருந்தும்
அக்கோயிலுக்கு சிறு சேதாரமும் இழைக்கப்படவில்லை. மீண்டும் அந்த கோயில்
சம்மந்தப்பட்ட சமுதாயத்திடம் ஒப்படைக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது. இது
எதைக் காட்டுகிறது என்றால், ஒரு சாரார் சிறுபான்மையினர்-பலவீனர் என்பதற்காக
இந்த நாட்டின் நீதிமன்றம் அநீதிஇழைக்காது என்பதைத்தான்.
No comments:
Post a Comment