Digital Time and Date

Welcome Note

Saturday, May 19, 2012

அமெரிக்காவின் ஒரு நாள் ஜனாதிபதி !!!




முதல்வன் படத்தில் பார்த்திருப்பீர்கள் அர்ஜுன் ஒரு நாள் முதல்வராக பொறுப்பேற்று பணியாற்றுகிற மாதிரி, உண்மையில் அது போல ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்திருக்கிறது தெரியுமா? ஆனால் இங்கு எந்த சவாலின் அடிப்படையிலும் பொறுப்பு கொடுக்கப்படவில்லை. அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜேம்ஸ் கே.போக் என்பவரின் பதவிக்காலம் 3.3.1849 அன்று முடிவடைந்து மறுநாள் 4.3.1849 புதிய ஜனாதிபதியாக ஜகேரி டைலர் என்பவர் பொறுப்பேற்கவேண்டும் ஆனால் அது ஞாயிற்றுக்கிழமை ஆதலால் அன்று பொறுப்பேற்க அவர் மறுத்துவிட்டார்.


அமெரிக்காவை பொருத்தமட்டில் ஒரு நாள் கூட ஜனாதிபதி இல்லாமல் இருக்கக்கூடாது, மேலும் பதவிகாலம் முடிந்தும் ஒரு நாள் கூட பழைய ஜனாதிபதி பொறுப்பில் நீடிக்கக் கூடாது. இந்நிலையில் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் செனட்டர் சபையின் தலைவர் பொறுப்பை ஏற்கலாம் என்பதை கருத்தில் கொண்டு டேவிட் ரைஸ் அட்சிசன் ஒரு நாள் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.


24 மணி நேரமே ஜனாதிபதியாக இருந்த இவருக்கு அவரின் சொந்த ஊரான பிளாட்ஸ்பர்கில் சிலை வைக்கப்பட்டு, சிலையின் அடியில் அமெரிக்காவின் ஒரு நாள் ஜனாதிபதி என்றும் பொறிக்கப்பட்டிருக்கிறது. வழக்குரைஞராக வாழ்கையை தொடங்கிய இவர் பின்பு அரசியலில் ஈடுபட்டார். அடிமை ஒழிப்பு முறையின் போது நிகழ்ந்த வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர்.

No comments:

Post a Comment