Digital Time and Date

Welcome Note

Wednesday, May 16, 2012

அப்பாவிகள் சிறைச்சாலைகளில் வருடக்கணக்கில் இருந்தாலும்????????????

இன்று திராவிட முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளரும், உதகமண்டல தொகுதி பாராளுமன்ற... உறுப்பினரும், 2g அலைக்காற்றை ஊழலில்
கைது செய்யப்பட்டவருமான ஆ. ராசா அவர்கள் ஜாமீனில் வெளி வந்த செய்தி பத்திரிக்கை ஊடகங்களிலும், செய்தித்தாள்களையும் அலங்கரித்தன. சாதாரண அளவில் லஞ்சம் வாங்கும் தாசில்தார்களையே மக்கள் செருப்பால் அடிப்பார்கள் என்றால், இவர்களை போல் கோடிகளை மேய்ந்துவிட்டு ஏப்பம் விட்ட கேடிகளை மக்கள் என்ன செய்வார்களோ.
அவர் ஜாமீனில் வெளி வந்த செய்தியை பத்திரிக்கை ஊடகங்களில் படிக்கும் நேரத்தில் ஒரு வரி என் கண்ணில் பட்டது. அது என்னவென்றால், நீதிமன்றத்தில் ராசாவின் வழக்கறிஞர்
ரமேஷ் குப்தா ராசாவிற்கு ஜாமீன் வழங்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். குற்றம் சாட்டப்பட்ட மற்ற 13 பேருக்கும் ஜாமீன் கிடைத்திருக்கும்
பொழுது ராசாவிற்கு மட்டும் ஜாமீன் மறுப்பது நியாயமற்றது என வாதாடினார். அப்பொழுது அவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்.
"ஆயள் தண்டனை பெறும் அளவிற்கு குற்றம் புரிந்தவர்களுக்கும், கைதிகளுக்கு ஜாமீன் வழங்கலாம் என்பது சட்டத்தில் இடம் இருக்கிறது"
இந்த வரிகளை படித்த எனக்கு ஒன்று புரிந்தது, ஆட்சியையும் அதிகாரமும் கையில் வைத்திருப்பவர்களுக்கு நீதியை வளைத்து கொள்வதில் எந்த சிரமமும் இருக்காது என்று.
ஆம், எங்களை போன்ற அப்பாவிகள் சிறைச்சாலைகளில் வருடக்கணக்கில் இருந்தாலும், ஜாமீன் கோரி கீழ் நீதிமன்றமல்ல, உயர்நீதி மன்றமல்ல, உச்ச நீதிமன்றத்துக்கே சென்றாகிவிட்டது. ஆனால் நீதிபதிகளின் கண்கள் இன்னும் கட்டியேதான் உள்ளது.
அப்துல் நாசர் மதானி அவர்கள் தன ஒரு காலை இழந்து, நடக்க கூட முடியாமல் சர்கர நோயினால் மிகவும் பாதிக்கப்பட்டு, மருத்துவத்திற்காக கேரளா செல்ல அனுமதி கோரிய பொழுது அதை கூட அனுமதித்து இந்த நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்க முடியவில்லை. குற்றம் நிரூபிக்கப்படாமல் நிரபராதி என்ற பெயரோடு அவர் வெளியே வந்தபொழுது தங்களின் முகங்களை எங்கே வைத்து கொண்டார்கள் இந்த நீதிபதிகள். விடுதலை அடைந்தபொழுது அவர்க் அடைந்த மகிழ்ச்சியை பொருத்து கொள்ள முடியாத பாசிச வெறி பிடித்த கர்நாடக அரசாங்கம் அவரை மறுபடியும் பெங்களுரு குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்துள்ளது. இதிலும் அவர் விடுதலை ஆவார் என்பதில் என்பதில் எங்களுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால், மறுபடியும் நம் உச்ச நீதிமன்றம் மதானிக்கு ஜாமீனோ, பிணையோ வழங்க மறுத்து விட்டது. கோவை குண்டு வெடிப்பு வழக்கிலும் இதே போல் குற்றம் சுமத்தப்பட்டதையும் அதில் அவர் நிரபராதி என விடுவிக்கப்பட்டார் என்பதையும் நம் வழக்கறிஞர் எடுத்து கூறியும் பாசிச சிந்தனை கொண்ட நீதி அரசர்கள் ( ?) மதானிக்கு பிணை கொடுக்க தயாராக இல்லை. ஒரு மாநிலம் அல்ல, இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு மனிதனும் அவருக்காக கண்ணீர் வடித்திடும்பொழுது, நீதிபதிகள் யாரை திருப்தி படுத்த நினைக்கிறார்கள் என்பது எங்களுக்கு புரியவில்லை. இவ்வாறான நீதிபதிகளே எங்களுக்கு இந்த நாட்டின் சட்டத்தின் மேல் உள்ள மதிப்பை கெடுக்க முயல்கிறார்கள்.


No comments:

Post a Comment