Digital Time and Date

Welcome Note

Wednesday, October 3, 2012

யுனெஸ்கோ தூதராக சவூதி அரேபியா பெண் விஞ்ஞானி தேர்வு...............!!


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே...............!!

யுனெஸ்கோ தூதராக சவூதி அரேபியா பெண் விஞ்ஞானி தேர்வு...............!!

ஐ.நா சபையின் கல்வி, கலாச்சார, விஞ்ஞான கழகமான யுனெஸ்கோ தனது நல்லெண்ணத் தூதராக சவூதி அரேபிய பெண் விஞ்ஞானி முனைவர். ஹயாத் சிந்தியை தேர்வு செய்துள்ளது. இளைய சமுதாயத்தவரிடம் விஞ்ஞான ஆர்வத்தைத் தூண்டி, கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தவராக டாக்டர் ஹயாத் அறியப்படுகிறார். கல்வயில், குறிப்பாக
விஞ்ஞான கல்வி குறித்த விழிப்புணர்வை இளைஞர்களிடமும் பெண்களிடமும் ஏற்படுத்துவது இந்தப் பதவியின் நோக்கமாகும.

"இலட்சியங்களை அடைவதில் டாக்டர் ஹயாவின் உறுதியும், நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகளின் பக்கம் இளைய சமுதாயத்தை ஈர்த்த அவருடைய பங்களிப்பும் போற்றுதலுக்குரியது. என்று யுனெஸ்கோ தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. " மத்திய கிழக்கிலும், அதற்கப்பாலும் டாக்டர் ஹயாத் ஆற்றிய விஞ்ஞான சேவைகளுக்கு இஃதோர் அங்கிகாரம்" என்று யுனெஸ்கோ தலைவர் ஐரினா பொகோவா தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

"1967ல் மக்காவில் பிறந்த ஹயாத், மருத்துவ வசதியை எட்ட முடியாத நிலையிலிருக்கும் எளியவருக்கும் நோய் பகுப்பாய்வை செய்வதற்கான எளிமையைக் கண்டறிந்தவர்" என்று பாரிஸை தலைமையகமாகக் கொண்ட யுனெஸ்கோ மேலும் கூறியுள்ளது.

"ஒரு விஞ்ஞானியின் பணி என்பது அடையத்தக்க எளிய தீர்வுகளைக் கண்டறிந்து சாதாரண மனிதர்களுக்கு அதைக் கிடைக்கச் செய்வது தான்" என்று டாக்டர் ஹயாத் குறிப்பிட்டுள்ளார். "முஸ்லிம்கள் விஞ்ஞான கண்டுபிடிப்புகளைக் கொண்டு மனித குலத்திற்கு நற்பணி ஆற்றிட வேண்டும்" என்றும் சொன்ன ஹயாத் தனக்குப் பிடித்த அறிவியலாளர்களாக அவிசென்னா, அல் குவாரிஸ்மி, மேடம் கியூரி, ஐன்ஸ்டீன் ஆகியோரைக் குறிப்பிட்டார்.

இஸ்லாம் பெண்களின் முக்காடு அணிந்து காணப்பட்ட முனைவர் ஹயா, உயிரி தொழிற்நுட்பத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். "நாம் எங்கு சென்றாலும் நம்முடைய அடையாளங்களை; கலாச்சாரங்களை விட்டுவிடக்கூடாது. அவற்றுக்காகப் பெருமிதம் அடைய வேண்டும்" என்றார் முனைவர் ஹயாத் "இன்றைய இளம் சமுதாயத்தினரிடையே அறிவியல் விழிப்புணர்ச்சி பெருகவும் பணியாற்றுவேன்".

யுனெஸ்கோ கலாச்சார பொதுத் தூதர்களின் பட்டியலில் நோபல் பரிசு பெற்ற நெல்சன் மண்டேலா, அமெரிக்க ஜாஸ் இசை விற்பன்னர் ஹெர்பி ஹென்காக், துபாயில் இருக்கும் கொடையாளர் சன்னி வர்க்கி, கியூபாவின் நடன அமைப்பாளர் அலிசியா அலொன்சொ ஆகியோரும் உள்ளனர் என்பது அறியத்தக்கது.

அல்ஹம்துலில்லாஹ்..............!!

No comments:

Post a Comment