Digital Time and Date

Welcome Note

Friday, November 23, 2012

அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனைக் கொன்ற பின்னர் அவரை எப்படிக் கடலில் போட்டது அமெரிக்கா என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வெளியானது அமெரிக்காவின் ரகசிய இமெயில்கள். பின்லேடன் உடலைக் கழுவி, வெள்ளை ஷீட்டில் வைத்து பார்சல் கட்டி கடலில் கடலில் போட்ட அமெரிக்கா.

அமெரிக்காவின் பெட்எக்ஸ் பார்சல் நிறுவனத்தின் துணையுடன் பின்லேடனின் உடலை பார்சல் செய்து கடலில் போட்டுள்ளது அமெரிக்கா என்பது ரகசிய இமெயில்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

பின்லேடன் மரணத்திற்குப் பிந்தைய சம்பவங்கள் குறித்த முதல் பார்வையை இந்த ரகசிய இமெயில்கள் வெளிப்படுத்துவதாக உள்ளன. பின்லேடன் உடலை பார்சல் செய்வதில் பெட்எக்ஸ் பார்சல் நிறுவனம்தான் ஈடுபடுத்தப்பட்டதும் இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த இமெயில் பரிவர்த்தனை அமெரிக்க ராணுவ அதிகாரிகளுக்கிடையே நடந்ததாகும். தகவல் அறியும் சட்டத்தின் மூலம் இந்த தகவல்களை தற்போது பெற்று வெளியிட்டுள்ளனர்.

2011ம் ஆண்டு மே 1ம் தேதி பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க கடற்படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். ஆனால் பின்லேடனின் உடலை உலகின் கண்களுக்கு அமெரிக்கா காட்டவில்லை. மாறாக கடலில் புதைத்து விட்டதாக தெரிவித்தது. பின்லேனின் உடல் குறித்த புகைப்படங்களையும் கூட அது வெளியிட மறுத்து விட்டது.

இந்த நிலையில் சில ரகசிய இமெயில்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதில் ஒரு இமெயில் மே 2ம் தேதி ரியல் அட்மிரல் சார்லஸ் கோவட் என்ற மூத்த கடற்படை அதிகாரி அனுப்பியதாகும். அதில், எப்படி பின்லேடன் உடல் பார்சல் செய்யப்பட்டது, அடக்கம் செய்யப்பட்டது என்ற விவரம் உள்ளது.

அதாவது பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதும் அவனது உடலைக் கைப்பற்றிய கடற்படை வீரர்கள் உடலை முழுவதுமாக தண்ணீர் ஊற்றிக் கழுவித் துடைத்துள்ளனர். பின்னர் அதை ஒரு வெள்ளை ஷீட்டில் வைத்துக் கட்டியுள்ளனர். அதன் பின்னர் பெரிய பேக்கில் உடலைப் போட்டு பார்சலாக்கியுள்ளனர் என்று அந்த மெயிலில் கூறப்பட்டுள்ளது.

இன்னொரு மெயிலில், பின்லேடனின் உடல் அடக்கம் குறித்த விவரம் சிலருக்கு மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது.

அந்த மெயிலில் முற்றிலும் இஸ்லாமிய முறைப்படி பின்லேடன் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறுகையில், உடலை பேக்கிங் செய்த பின்னர் ஒரு ராணுவ அதிகாரி இஸ்லாமிய மத வாசகங்களை ஆங்கிலத்தில் படித்தார்.

அதை ஒரு உள்ளூர்க்காரர் உதவியுடன் அரபியில் மொழிபெயர்த்துச் சொல்லப்பட்டது. அதன் பின்னர் தயாராக வைக்கப்பட்டிருந்த சவப் பெட்டியில் உடலை வைத்து ஆணி அடித்து அதை கடலுக்குக் கொண்டு சென்றோம். அங்கு கடலில் அந்த சவப்பெட்டி போடப்பட்டது.

பின்லேடனின் உடல் அடங்கிய சவப்பெட்டி கடலில் போடப்பட்டபோது கடற்படை வீரர்கள் யாரும் அந்த இடத்தில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மெயில் அமெரிக்க பாதுகாப்புப் படை கூட்டு தலைமை அதிகாரி மைக் முல்லன், அமெரிக்க மத்திய கூட்டுப் பாதுகாப்புப் படை அதிகாரி ஜேம்ஸ் மேட்டிஸ் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பின்லேடன் உடலை பார்சல் செய்யும் பணியிலும், பின்னர் கடலுக்குக் கொண்டு செல்லும் பணியிலும் பெட்எக்ஸ் பார்சல் நிறுவனத்தை பயன்படுத்தியுள்ளனர். உடலைப் பார்சல் செய்த பின்னர் சாலை மார்க்கமாக லாரியில் வைத்து அமெரிக்க முகாமுக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனைக்
 கொன்ற பின்னர் அவரை எப்படிக் கடலில் போட்டது அமெரிக்கா என்ற தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment