Digital Time and Date

Welcome Note

Tuesday, November 20, 2012

வரலாற்றில் இன்று

நவம்பர் 20
 


1789: உரிமைகள் சட்டத்தை அங்கீகரித்ததன் மூலம் நியூ ஜேர்ஸி, அமெரிக்காவின் முதலாவது மாநிலமாகியது.

1917: உக்ரைன் குடியரசாகியது.

1945: நாஸி போர்க் குற்றவாளிகள் 24 பேருக்கு எதிராக நியூரம்பேர்கில் விசாரணை ஆரம்பமாகியது.

1947: பிரிட்டனில் இளவரசி எலிஸபெத்துக்கும் (தற்போதைய ராணியார்) லெப்டினன்ட் பிலிப் மௌன்ட் பேட்டனுக்கும் திருமணம் நடைபெற்றது.


1969: அமெரிக்காவின் கிளீவர் பிளெய்ன் டீலர் பத்தரிகை வியட்நாமின் மை லாய் கிராம படுகொலைகள் குறித்த புகைப்படங்களை வெளியிட்டது.

1979: சவூதி அரேபியாவின் மக்கா நகரில் 6000 ஹஜ் யாத்திரிகள் தீவிரவாத குழுவொன்றினால் பணயக் கைதிகளாக்கப்பட்டனர். சவூதி அரேபிய அரசாங்கம் பிரான்ஸிடமிருந்து விசேட படைகளைப் பெற்று இதை முறியடித்தது.

1985: மைக்ரோசொப்ட் வேர்சன் 1.0 வெளியாகியது.

1995: இளவரசி டயானா தனது குதிரையோட்டப் பயிற்றுநர் ஜேம்ஸ் வெயிட்டுடன் முறையற்ற தொடர்பிருப்பதை பி.பி.சி. பேட்டியொன்றில் ஒப்புக்கொண்டார்.

1998: கென்யா, தான்ஸானியாவில் அமெரிக்க தூதரகங்கள் மீதான குண்டுத்தாக்குதல் தொடர்பான வழக்கில் ஒசாமா பின் லாடன் 'ஒரு பாவமும் செய்யாத மனிதர்' என தலிபான் கட்டுப்பாட்டிலிருந்த ஆப்கானிஸ்தான் நீதிமன்றமொன்று பிரகடனம் செய்தது.

1998: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான முதலாவது மாதிரி விண்ணுக்கு ஏவப்பட்டது.

No comments:

Post a Comment